Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மதுபான விற்பனை நிலையங்களுக்கு வழங்கப்பட்ட அனுமதி பத்திரங்கள் உடன் நடைமுறைக்கு வரும் வகையில் இரத்துச் செய்யப்பட்டுள்ளது.அநுர அதிரடி உத்தரவு - தமிழ் அரசியல்வாதிகள் உட்பட பலர் அதிர்ச்சி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, வாலி said:

ஒம் உண்மை. விக்கி ஓர் !

அவர் அரிச்சந்திரன் இல்லை என்பது எல்லாருக்கும்  தெரியுது  ஆனால் உங்க ஆட்கள் அரிச்சந்திரன் கூட்டமா கொள்ளை கார கூட்டம் அதை ஒத்து கொள்கிறிர்களா ?

  • Replies 75
  • Views 3.6k
  • Created
  • Last Reply

Most Popular Posts

  • சுவைப்பிரியன்
    சுவைப்பிரியன்

    அப்பாடா பாலை வாத்தீங்கள் சிறியர்.😆

  • நிழலி
    நிழலி

    அண்மையில் ஒரு தமிழ் பாராளுமன்ற உறுப்பினருடன் கதைக்கும் வாய்ப்பு கிடைத்தது. அவர் எம் நண்பர் குலாமில் உள்ள ஒருவரின் நெருங்கிய உறவு.  அவர் கூறியது இது: ஒவ்வொரு பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் அவர்களி

  • தமிழ் சிறி
    தமிழ் சிறி

    சுமந்திரனுக்கு கிடைத்த மூன்று  மதுபான அனுமதி பத்திரங்களில்...  ஒன்று, வல்வெட்டித்துறையில் இயங்கிக் கொண்டு உள்ளது.  சாணக்கியனுக்கு கிடைத்த ஒரு மதுபான அனுமதி, கல்லடியில் இயங்கிக் கொண்டுள்ளது.  கிளிந

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, பெருமாள் said:

அவர் அரிச்சந்திரன் இல்லை என்பது எல்லாருக்கும்  தெரியுது  ஆனால் உங்க ஆட்கள் அரிச்சந்திரன் கூட்டமா கொள்ளை கார கூட்டம் அதை ஒத்து கொள்கிறிர்களா ?

எங்கடை ஆக்களைப் பற்றி செய்திவரடும் அப்ப ஒத்துக்கொள்ளலாம்!

Edited by வாலி

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, வாலி said:

எங்கடை ஆக்கலளைப் பற்றிச் செய்திவரடும் அப்ப ஒத்துக்கொள்ளலாம்!

அதுகள் பற்றி செய்தி வராது ஏனென்றால் அவைகள் மலை முழுங்கி மகாதேவங்கள் ஆட்சே.................

  • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, பெருமாள் said:

அதுகள் பற்றி செய்தி வராது ஏனென்றால் அவைகள் மலை முழுங்கி மகாதேவங்கள் ஆட்சே.................

அப்ப கதைய விடுங்க. எனக்குத் தெரிந்ததைத் தான் நான் எழுதலாம்!

  • கருத்துக்கள உறவுகள்

விக்கியின் நிலைமை பரிதாபமாக உள்ளது, பெயரை நல்லா டேமேஜ் பண்ணீட்டாங்கள். சந்தானத்தின் நகைசுவை மாதிரி போய்விட்டது " அவனவன் பத்து பதினைந்து பார்களை வைத்துக்கொண்டு நிம்மதியாக இருக்கிறாங்கள், ஒரேயொரு பார் லைசென்ஸ் ஐ கொடுத்துவிட்டு நான் படுகிற பாடு இருக்கே" என்பதுபோல அவரின் நிலைமை .

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, Kandiah57 said:

இந்த நிதி எப்படி செலவு செய்யப்படுகிறது என்று  கண்காணிப்பபடுகிறதா ?? இப்பணத்தை   பாராளுமன்ற உறுப்பினர்கள் சுருட்ட முடியும் அல்லவா??   

திணைக்களங்களின் ஊடாக அரசாங்கம் அபிவிருத்தி பணிகளை செய்யலாம்   தனி நபர்களு. ஏன் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும்??  

ஒரு. திட்டம் சமர்பிக்கப்பட்டுள்ளது என்றால்  அதன் செலவீடு. முழுமையாக நிபுணர்களால். [துறைசார்] கணிக்கப்பட்டுத் தான்  நிதி ஒதுக்கீடு செய்யப்படும்

இந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் இப்படி ஏன்  நிதியை பெறுகிறார்கள்  ??  அந்த நிதியை  முழுவதும் பாராளுமன்ற உறுப்பினரின்.  தனிக்  கையெழுத்தால் எடுக்க முடியும்    இது ஒரு பகல் கொள்ளை ஆகும்   

அண்ணை இந்த நிதி பெரும்பாலும் பிரதேச செயலகம் அல்லது பிரதேச சபை ஊடாகத் தான் செலவழிக்கப்படுகிறது. அவர்களுடைய உத்தியோகத்தர்கள் நேரடியாகப் பார்த்து உறுதிப்படுத்திய பின்னரே நிதி விடுவிக்கப்படும். இதில் பா.உ கள் கையாடல் செய்வது கடினம்.

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்ப்பாணத்தில் காலை 7:50 மணிக்கே மதுபானசாலை திறந்து வியாபாரம் களை கட்டுதாம். 😮
திராவிடத்தை பார்த்து, தொழில் கற்றுக் கொண்ட…. வடக்கு / கிழக்கு  தமிழ் அரசியல் வாதிகள். 🧐
தமிழர் உரிமைக்காக போராடப் போகின்றோம் என்றவர்கள்… கனக்க “Bar Licence“ எடுக்க உயிரை கொடுத்து போராடி இருக்கின்றார்கள். 😂 🤣

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

461611325_837838151876722_11484221736311

வன்னியில் Bar பொமிட் எடுத்தவர்களின் List வெளிவந்திருக்கிறது.
1) EPDP வன்னி எம்பி திலீபன் புதுக்குடியிருப்பு, ஆனந்தபுரம் பகுதியில் இரண்டு Bar பொமிட் எடுத்துள்ளார். 
2) ரணிலின் செயலாளர் சாகல ரட்ணாயக்க நெடுங்கேணியில் பாலநாயகம் என்ற பெயரில் ஒரு Bar பொமிட் எடுத்திருக்கிறார். 
யாழ் அங்கயனின் சித்தப்பா ராஜன், தனது மகன் விதுர்சனின் பெயரில் ஒரு Bar பொமிட் எடுத்திருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. கண்டாவளை பிரதேச செயலகத்தில் விதுர்சனின் பெயரிலேயே பணம் செலுத்தியிருக்கிறார்.

Kilinochchi Podiyan

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழ் சிறி said:

யாழ்ப்பாணத்தில் காலை 7:50 மணிக்கே மதுபானசாலை திறந்து வியாபாரம் களை கட்டுதாம். 😮
திராவிடத்தை பார்த்து, தொழில் கற்றுக் கொண்ட…. வடக்கு / கிழக்கு  தமிழ் அரசியல் வாதிகள். 🧐
தமிழர் உரிமைக்காக போராடப் போகின்றோம் என்றவர்கள்… கனக்க “Bar Licence“ எடுக்க உயிரை கொடுத்து போராடி இருக்கின்றார்கள். 😂 🤣

இனி இவ‌ர்க‌ளை ப‌ற்றி சொல்ல‌ என்ன‌ இருக்கு..............செந்தில் பாலாஜி போல் 10ரூபாய் கூட்டி விற்ப‌னை செய்யுங்கோ என்றாலும் குடிக்கு அடிமையாய் போன‌வ‌ர்க‌ள் வேண்டி குடிக்க‌ தான் செய்வின‌ம்....................ப‌ல‌ பெண்க‌ளின் தாலி அறுத்த‌ பாவ‌ம் ஈழ‌த்து அர‌சிய‌ல் வாதிக‌ளையே சேரும்...................அன்மையில் ஒரு காணொளி பார்த்தேன் க‌ன‌வ‌ர் குடி போதையில் வ‌ந்து வீட்டையே கொழுத்தி போட்டார் ம‌ட்ட‌க்க‌ள‌ப்பில்...................இன்னும் எவ‌ள‌வு கொடுமைக‌ள் ந‌ட‌ந்து இருக்க‌ கூடும் ஆனால் வெளி வ‌ருவ‌தில்லை..........................

  • கருத்துக்கள உறவுகள்

461660975_8691174307571503_9113039527485

வடக்கில்  மூவாயிரம் வாக்குகள் மாத்திரம் எடுத்த ஈ.பி.டி.பி. முன்னாள் எம்.பி. திலீபன் உட்பட மூவருக்கு மதுபானச்சாலை பெர்மிட்!

ஈ.பி.டி.பி கட்சியின் முன்னாள் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்  கு.திலீபன் உள்ளிட்ட மூவருக்கு வடக்கில் மதுபானசாலை பெர்மிட்டுகள் வழங்கியமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு மாவட்டத்தில் இரு மது பானசாலைகளுக்கான அனுமதியைப் பெற்று வவுனியா மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான கு.திலீபன் அவற்றைக் கை மாற்றியுள்ளார்.

இந்த இரு மதுபானசாலை களையும் திறப்பதற்காக பிரதேச செயலகத்திற்கான கட்டணத்தை செலுத்த முயன்றபோதும் பிரதேச செயலகம்அதை ஏற்க மறுத்தமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் பிரிவில் புதுக்குடியிருப்பு மற்றும் ஆனந்தபுரம் பகுதிகளில் அமைப்பதற்கான அனுமதிகளே நாடாளுமன்ற உறுப்பினரால் வழங்கப்பட்டுள்ளன.

இந்த இரு அனுமதிப் பத்திரங்களும் விநியோகிக்கப்பட்டு உள்ள நிலையில் அந்த இடங்களில் மதுபான சாலைகளை திறப்பதற்கான முயற்சிகள் தீவிரமாக இடம்பெறுகின்றன எனத் தெரிகின்றது.

இதேபோன்று முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பிரதானியான சாகல ரட்ணாயக்காவின் சிபார்சில் வழங்கப்பட்ட ஒரு மது பாடசாலைக்கான பெர்மிட்டின் அடிப்படையில் வவுனியா நெடுங்கேணியில் ஒரு பார் அமைக்க முயற்சிக்கப்படுகின்றது.

வவுனியா மாவட்டத்தின் நெடுங்கேணிச் சந்தியில் ஓர் மது பானசாலைக்கான அனுமதி சாகல ரட்ணாயக்க ஊடாக பெறப்பட்டமை உறுதி செய்யப்பட்டுள்ளது. சாகல ரட்ணாயக்க எழுத்து மூலக் கடிதம் வழங்கியே இந்த மது பானசாலைக்கான அனுமதி அப்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரம சிங்காவின் ஊடாக வழங்கப்பட்டுள்ளது. பாலநாயகம் என்னும் பெயரில் இந்த மதுபான சாலைக்காகன அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரின் சிறிய தந்தையின்
மகனின்  பெயரில் பரந்தன், கண்டாவளை பிரதேச செயலகத்தில் 2024-06-11 அன்று பணம் செலுத்தப்பட்டு மதுபானச்சாலைக்கான அனுமதி பெறப்பட்டுள்ளது.

Kunalan Karunagaran is with தமிழரசுக் கட்சி ஊர்காவற்றுறை தொகுதி and  11 others

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, தமிழ் சிறி said:

461660975_8691174307571503_9113039527485

வடக்கில்  மூவாயிரம் வாக்குகள் மாத்திரம் எடுத்த ஈ.பி.டி.பி. முன்னாள் எம்.பி. திலீபன் உட்பட மூவருக்கு மதுபானச்சாலை பெர்மிட்!

ஈ.பி.டி.பி கட்சியின் முன்னாள் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்  கு.திலீபன் உள்ளிட்ட மூவருக்கு வடக்கில் மதுபானசாலை பெர்மிட்டுகள் வழங்கியமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு மாவட்டத்தில் இரு மது பானசாலைகளுக்கான அனுமதியைப் பெற்று வவுனியா மாவட்ட
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான கு.திலீபன் அவற்றைக் கை மாற்றியுள்ளார்.

இந்த இரு மதுபானசாலை களையும் திறப்பதற்காக பிரதேச செயலகத்திற்கான கட்டணத்தை செலுத்த முயன்றபோதும் பிரதேச செயலகம்அதை ஏற்க மறுத்தமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் பிரிவில் புதுக்குடியிருப்பு மற்றும் ஆனந்தபுரம் பகுதிகளில் அமைப்பதற்கான அனுமதிகளே நாடாளுமன்ற உறுப்பினரால் வழங்கப்பட்டுள்ளன.

இந்த இரு அனுமதிப் பத்திரங்களும் விநியோகிக்கப்பட்டு உள்ள நிலையில் அந்த இடங்களில் மதுபான
சாலைகளை திறப்பதற்கான முயற்சிகள் தீவிரமாக இடம்பெறுகின்றன எனத் தெரிகின்றது.

இதேபோன்று முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பிரதானியான சாகல ரட்ணாயக்காவின் சிபார்சில் வழங்கப்பட்ட ஒரு மது பாடசாலைக்கான பெர்மிட்டின் அடிப்படையில் வவுனியா நெடுங்கேணியில் ஒரு பார் அமைக்க முயற்சிக்கப்படுகின்றது.

வவுனியா மாவட்டத்தின் நெடுங்கேணிச் சந்தியில் ஓர் மது பானசாலைக்கான அனுமதி சாகல ரட்ணா
யக்க ஊடாக பெறப்பட்டமை உறுதி செய்யப்பட்டுள்ளது.சாகல ரட்ணாயக்க எழுத்து மூலக் கடிதம் வழங்கியே இந்த மது பானசாலைக்கான அனுமதி அப்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரம சிங்காவின் ஊடாக வழங்கப்பட்டுள்ளது. பாலநாயகம் என்னும் பெயரில் இந்த மதுபான சாலைக்காகன அனுமதி
வழங்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரின் சிறிய தந்தையின்
மகனின்  பெயரில் பரந்தன், கண்டாவளை பிரதேச செயலகத்தில் 2024-06-11 அன்று பணம் செலுத்தப்பட்டு மதுபானச்சாலைக்கான அனுமதி பெறப்பட்டுள்ளது.

Kunalan Karunagaran is with தமிழரசுக் கட்சி ஊர்காவற்றுறை தொகுதி and  11 others

இவ‌ர் கெட்ட‌ கேட்டுக்கு

பெய‌ர் வேர‌ திலீப‌னா /

அந்த‌ பெய‌ர் அகிம்சை போராளியின் புனித‌மான‌ பெய‌ர்🥰😍.........................

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, வீரப் பையன்26 said:

இவ‌ர் கெட்ட‌ கேட்டுக்கு

பெய‌ர் வேர‌ திலீப‌னா /

அந்த‌ பெய‌ர் அகிம்சை போராளியின் புனித‌மான‌ பெய‌ர்🥰😍.........................

பையா.... அந்தப் பெயரை வைத்தால்தான்,  சந்தேகப் பட மாட்டார்கள்.
"படிக்கிறது தேவாரம், இடிக்கிறது சிவன் கோவில்" என்ற மாதிரி இருக்கு இவர்களின் செயல்கள். 😂

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, தமிழ் சிறி said:

யாழ்ப்பாணத்தில் காலை 7:50 மணிக்கே மதுபானசாலை திறந்து வியாபாரம் களை கட்டுதாம். 😮
திராவிடத்தை பார்த்து, தொழில் கற்றுக் கொண்ட…. வடக்கு / கிழக்கு  தமிழ் அரசியல் வாதிகள். 🧐
தமிழர் உரிமைக்காக போராடப் போகின்றோம் என்றவர்கள்… கனக்க “Bar Licence“ எடுக்க உயிரை கொடுத்து போராடி இருக்கின்றார்கள். 😂 🤣

இந்தியாவை முன்னுதாரணமாகக் கொண்டால் Switzerland போலவா வடக்கு கிழக்கு வரும்? 

காக்கா கறி சாப்பிட்டால்  காக்கா குரல் வராமல்  உன்னிகிருஸ்ணன் குரலா வரும்,....🤨

  • கருத்துக்கள உறவுகள்

ரணில் ஆட்சியில் பார் லைசன்ஸ் பெற்றவர்களில் வெளி நாட்டில் வாழும் தமிழ் வர்த்தகர் ஒருவர் பெயரும் இருந்தது என்று ஆரம்பத்தில் செய்தி வந்தது. யார் அந்த தமிழ் வர்த்தகர்? 

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, vanangaamudi said:

ரணில் ஆட்சியில் பார் லைசன்ஸ் பெற்றவர்களில் வெளி நாட்டில் வாழும் தமிழ் வர்த்தகர் ஒருவர் பெயரும் இருந்தது என்று ஆரம்பத்தில் செய்தி வந்தது. யார் அந்த தமிழ் வர்த்தகர்? 

பிரான்ஸ் வர்த்தகர் @விசுகு  அவர்களை மேடைக்கு வந்து,

விளக்கம் தரும்படி அன்புடன் அழைக்கின்றோம்.  😂 🤣

  • கருத்துக்கள உறவுகள்
43 minutes ago, Kapithan said:

இந்தியாவை முன்னுதாரணமாகக் கொண்டால் Switzerland போலவா வடக்கு கிழக்கு வரும்? 

காக்கா கறி சாப்பிட்டால்  காக்கா குரல் வராமல்  உன்னிகிருஸ்ணன் குரலா வரும்,....🤨

அதுகும் சரிதான். 😂
பன்றியுடன் சேர்ந்த கன்றும்.... "பீ " தின்னும். 🤣

  • கருத்துக்கள உறவுகள்

Bar Licence டீலில் ஈடுபட்ட எம்.பி.க்களின் பெயர்கள் நாளை மறு தினம் 03.10.24 அன்று, வெளியிடப் படும் என NPP யின் பிரதான செயற்பாட்டாளர் வசந்த சமரசிங்க அறிவித்துள்ளதாக ஒரு தகவல் தெரிவிக்கின்றது.

இதன் உண்மைத் தன்மையை உறுதிப் படுத்த முடியவில்லை.

2015 முதல் 2019 வரை  நல்ல ஆட்சியில்   என்ன நடந்தது   என்பதையும் விலாவாரியாக. வெளியிட்டால் சிறந்தது 

🤣🙏

  • கருத்துக்கள உறவுகள்

இந்த சாராய அனுமதிப் பத்திரம் பற்றிய செய்திகளை சற்று அவதானமாகக் கையாளா விட்டால் சுன்னாகம் எண்ணைப் படிவுக் கேஸ் போல ஆகி விடுமென நினைக்கிறேன் (கடைசியில் தண்ணீரின் கழிவெண்ணை கலந்ததா அல்லது நீரிறைக்கும் பம்பியின் மண்ணெண்ணை கலந்ததா என்ற தெளிவே கிடைக்காமல் அந்த விடயம் முடிந்தது).

சும்மா வட்சப்பிலும், முகநூலிலும் வரும் செய்திகளையெல்லாம் உண்மையென்று நம்பிப் பின்னால் போகாமல், இந்த அனுமதிப் பத்திரம் பெற உண்மையில் என்ன மாதிரியான விண்ணப்பம் கோரப் படுகிறது என்ற தகவலை யாராவது சீரியசாக எழுதுவோர் இங்கே பதிவிடுங்கள். விக்கி ஐயா சொன்ன தகவல் படி, அவர் சிபார்சு கொடுத்திருக்கிறார் சாராய அனுமதி பெற்ற ஒருவருக்கு. இது அரசு கோரும் ஒரு நிபந்தனையா அல்லது பா.உ வலிந்து போய் செய்வதா என்று யாருக்காவது தெரியுமா? அப்படி சிபார்சு செய்ததாலேயே "இந்த பா.உ பெயரில் சாராயக் கடை" என்று கூற முடியுமா?

தாயகத்தில் இருக்கும் யாராவது இங்கே அலட்டிக் கொண்டிருக்கும் "ஜோக்கர்களை" ஒதுக்கி விட்டுப் பதில் தாருங்கள். @ஏராளன்?

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, Justin said:

இந்த சாராய அனுமதிப் பத்திரம் பற்றிய செய்திகளை சற்று அவதானமாகக் கையாளா விட்டால் சுன்னாகம் எண்ணைப் படிவுக் கேஸ் போல ஆகி விடுமென நினைக்கிறேன் (கடைசியில் தண்ணீரின் கழிவெண்ணை கலந்ததா அல்லது நீரிறைக்கும் பம்பியின் மண்ணெண்ணை கலந்ததா என்ற தெளிவே கிடைக்காமல் அந்த விடயம் முடிந்தது).

சுன்னாகத்திலுள்ள மின்னுற்பத்தி இயந்திரங்களுக்கு பாவித்து மாற்றிய கழிவு ஒயில் பாதுகாப்பான முறையில் சேமித்து(நேரடியாக மண்ணுக்குள் சேரவிடப்பட்டதாக) அகற்றப்படவில்லை என்பது தான் நான் அறிந்த செய்திகள்.
 
23 minutes ago, Justin said:

விக்கி ஐயா சொன்ன தகவல் படி, அவர் சிபார்சு கொடுத்திருக்கிறார் சாராய அனுமதி பெற்ற ஒருவருக்கு. இது அரசு கோரும் ஒரு நிபந்தனையா அல்லது பா.உ வலிந்து போய் செய்வதா என்று யாருக்காவது தெரியுமா? அப்படி சிபார்சு செய்ததாலேயே "இந்த பா.உ பெயரில் சாராயக் கடை" என்று கூற முடியுமா?

பதில் தாருங்கள். @ஏராளன்?

இது நாடாளுமன்ற உறுப்பினர்கள் விரும்பினால் வழங்கப்படும் சலுகை என நினைக்கிறேன் அண்ணை. மேலதிக விபரங்கள் தேடிப் பார்க்கிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, ஏராளன் said:

சுன்னாகத்திலுள்ள மின்னுற்பத்தி இயந்திரங்களுக்கு பாவித்து மாற்றிய கழிவு ஒயில் பாதுகாப்பான முறையில் சேமித்து(நேரடியாக மண்ணுக்குள் சேரவிடப்பட்டதாக) அகற்றப்படவில்லை என்பது தான் நான் அறிந்த செய்திகள்.
 
இது நாடாளுமன்ற உறுப்பினர்கள் விரும்பினால் வழங்கப்படும் சலுகை என நினைக்கிறேன் அண்ணை. மேலதிக விபரங்கள் தேடிப் பார்க்கிறேன்.

சுன்னாகம் எண்ணையை மண்ணுக்குள் அனுப்பியதாக செய்தி வந்தது. கிணற்று நீரில் எண்ணை மிதக்கும் படங்கள் வந்தன. ஆனால், கிணற்று நீரை எடுத்து அரச பகுப்பாய்வாளரிடம் (Govt. Analyst) அனுப்பிய போது எண்ணைக் கலப்பைக் கண்டு பிடிக்கவில்லை, அளவுக்கதிமான நைதரசன் உரமாசு இருப்பதாகத் தான் கண்டறிந்தார்கள். நான் குறிப்பிட்டது, பேராதனையில் எண்ணைப் படிவு மாசு பற்றிய நிபுணத்துவம் உடைய ஒரு பேராசிரியர் இருந்த போதும், அப்படியான ஒருவரையும் அணுகாமல் சும்மா அரசியல்வாதிகள் தங்கள் அலட்டல்களால் கழிவெண்ணை தண்ணீரில் வந்ததா என்பது இன்னும் தெரியாது என்பதைத் தான்.

நன்றி. கிராமசேவகர், பிரதேச செயலாளர் போல பா.உ வும் ஏதும் சாராய விற்பனை அனுமதிக்கு அத்தாட்சி வழங்கும் நடைமுறை இருக்கிறதா தெரியவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, தமிழ் சிறி said:

Bar Licence டீலில் ஈடுபட்ட எம்.பி.க்களின் பெயர்கள் நாளை மறு தினம் 03.10.24 அன்று, வெளியிடப் படும் என NPP யின் பிரதான செயற்பாட்டாளர் வசந்த சமரசிங்க அறிவித்துள்ளதாக ஒரு தகவல் தெரிவிக்கின்றது.

இதன் உண்மைத் தன்மையை உறுதிப் படுத்த முடியவில்லை.

வெளியில் வ‌ரும் த‌மிழ்சிறி அண்ணா...........................

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Justin said:

நன்றி. கிராமசேவகர், பிரதேச செயலாளர் போல பா.உ வும் ஏதும் சாராய விற்பனை அனுமதிக்கு அத்தாட்சி வழங்கும் நடைமுறை இருக்கிறதா தெரியவில்லை.

மதுபான விற்பனை உரிமத்திற்கு சிபார்சுக் கடிதம் வழங்கியதாகவும் அதற்காக பணம் எதனையும் பெற்றுக்கொள்ளவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

  • கருத்துக்கள உறவுகள்

அரசாங்கம் உத்தியேகபூர்மாக மதுபான உரிமை பட்டியலை அறிவிக்க வில்லை, ஆனால் ஜனாதிபதி தேர்தல் காலத்தில் வழங்கப்பட்டு, திறக்கப்படாத சகல மதுபான உரிமை பத்திரங்களும் தற்காலிகமாக இரத்து செய்யப்பட்டதாக அமைச்சரவை பேச்சாளர் விஜித ஹேரத் அறிவித்துள்ளார்.

உத்தியோகபூர்வமற்ற செய்திகளின் படி டக்ளஸ், விக்னேஸ்வரன், அங்கயன் என்பவர்கள் பெற்றுள்ளதாக அறிய முடிகின்றது.

உண்மையாக பார் லைசென்ஸ் பெற்ற இந்துக்கள் மீது மென்போக்கையும், சுமந்திரன் பார் லைசென்ஸ் பெற்றார் என்ற பொய்யை கோயபல்ஸ் ( goebbels ) போல் திரும்ப திரும்ப செல்லுவது யாழ் மைய்யவாத இந்துவா துவேசமே ஆகும்.

23 minutes ago, ஏராளன் said:

மதுபான விற்பனை உரிமத்திற்கு சிபார்சுக் கடிதம் வழங்கியதாகவும் அதற்காக பணம் எதனையும் பெற்றுக்கொள்ளவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

எங்கப்பன் குதுருக்குள்ளே இல்லை யென்றானாம், இதைத்தான் பினாமி கொடுக்கல் வாங்கல் என்று செல்லுவது.

  • கருத்துக்கள உறவுகள்
49 minutes ago, வீரப் பையன்26 said:

வெளியில் வ‌ரும் த‌மிழ்சிறி அண்ணா...........................

ஓம்... பையன், அநேகமாக இந்தக் கிழமைக்குள் வந்து விடும் என எதிர் பார்க்கின்றார்கள்.
இல்லையேல்... மது அனுமதி பாத்திரம் பெற்றவர்கள், பாராளுமன்ற தேர்தல் வேட்பு மனு தாக்கல் செய்தபின்.... அவர்களின் வாக்கு வீதத்தில் சரிவை ஏற்படுத்தி அந்த வாக்குகளை தமக்கு  அறுவடை  செய்ய  NPP  காத்திருக்கலாம்.  

தமிழரசு கட்சி   இதோடை... நடையை கட்ட வேண்டியதுதான்.
தேர்தலுக்குப் பின்... அவர்கள்  வேறு தொழில் தேட வேண்டி வரும். 😂

https://yarl.com/forum3/topic/295316-%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%85%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%A4%E0%AF%81%E0%AE%85%E0%AE%A8%E0%AF%81%E0%AE%B0-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%89%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F-%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF/

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.