Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மதுபான விற்பனை நிலையங்களுக்கு வழங்கப்பட்ட அனுமதி பத்திரங்கள் உடன் நடைமுறைக்கு வரும் வகையில் இரத்துச் செய்யப்பட்டுள்ளது.அநுர அதிரடி உத்தரவு - தமிழ் அரசியல்வாதிகள் உட்பட பலர் அதிர்ச்சி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
24 minutes ago, ஈழப்பிரியன் said:

இந்தாளின் கை ரொம்பவும் சுத்தமாக இருக்கும் என்று நம்பிவிட்டேன்.

வரும் போது அமைதிப்புறா போலத்தான் வருகிறார்கள் கொஞ்ச காலம் போன பிறகு டைனோசர மாறுகிறார்கள் .

அது சரி மாற்றய தமிழ் அரசியல்  கொள்ளைகாரர்கள் பெயர் வருமா வராதா ......

  • Replies 75
  • Views 3.6k
  • Created
  • Last Reply

Most Popular Posts

  • சுவைப்பிரியன்
    சுவைப்பிரியன்

    அப்பாடா பாலை வாத்தீங்கள் சிறியர்.😆

  • நிழலி
    நிழலி

    அண்மையில் ஒரு தமிழ் பாராளுமன்ற உறுப்பினருடன் கதைக்கும் வாய்ப்பு கிடைத்தது. அவர் எம் நண்பர் குலாமில் உள்ள ஒருவரின் நெருங்கிய உறவு.  அவர் கூறியது இது: ஒவ்வொரு பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் அவர்களி

  • தமிழ் சிறி
    தமிழ் சிறி

    சுமந்திரனுக்கு கிடைத்த மூன்று  மதுபான அனுமதி பத்திரங்களில்...  ஒன்று, வல்வெட்டித்துறையில் இயங்கிக் கொண்டு உள்ளது.  சாணக்கியனுக்கு கிடைத்த ஒரு மதுபான அனுமதி, கல்லடியில் இயங்கிக் கொண்டுள்ளது.  கிளிந

  • கருத்துக்கள உறவுகள்

த‌மிழ் தேசிய‌த்துக்காக‌ பேசின‌ இள‌ம் யாழ்ப்பாண‌த்து யூடுப்ப‌ர்க‌ள்........................த‌மிழ்தேசிய‌ போர்வேக்க‌ இருந்து கொண்டு செய்த‌ ஊழ‌ல் குள‌று ப‌டிக‌ள் வெளிச்ச‌த்துக்கு வ‌ர‌ 😁

அவ‌ர்க‌ள் அனுரா ப‌க்க‌ம் போய் விட்டின‌ம்😁😛........................

அனுரா வ‌ந்த‌தும் உண‌வு விலைக‌ள் குறைக்க‌ ப‌ட்டு இருக்காம்....................இனி த‌மிழ் இளைஞ‌ர்க‌ள் அர‌சிய‌லில் ஈடு ப‌ட‌னும் 

ஊழ‌ல் முறைகேடு செய்த‌ அத்த‌னை பேரையும் த‌மிழ் ம‌க்க‌ள் புர‌க்க‌னிக்க‌னும்...................த‌மிழ் ம‌க்க‌ளிட‌ம் ஓட்டு பெற்று சொகுசு வாழ்க்கை வாழ்ந்த‌ கூட்ட‌ம் அதிக‌ம்...........................ம‌கிந்தாக்கு கொடுக்க‌ ப‌ட்ட‌ பாதுகாப்பு எல்லாம் நீக்க‌ம்

இப்போது ம‌கிந்த‌ ட‌ம்ம்பி பீஸ்

அதே போல் த‌மிழ் தேசிய‌ வாதிக‌ள் ப‌ல‌ரையும் எம் ம‌க்க‌ள் ட‌ம்மி பீஸ் ஆக்க‌னும்.................................

  • கருத்துக்கள உறவுகள்
On 25/9/2024 at 10:23, தமிழ் சிறி said:

ஒன்று, வல்வெட்டித்துறையில் இயங்கிக் கொண்டு உள்ளது. 

இந்த முறை ஊருக்கு போயிருந்த போது நான் கவனித்த ஒரு விடயம், அந்த நாட்களில் மதுபானக்கடை இருந்த இடத்தில் ஒரு தேத்தண்ணிக் கடை தான் இருந்தது. எப்படியும் ஒன்றாவது இங்கு இருக்காமல் இருக்காதே என்று நினைத்தனான். ஆனால் என் கண்ணில் ஒன்றும் அகப்படவில்லை. பக்கத்து ஊர்களில் எங்கும் இருக்கின்றதோ தெரியவில்லை............

On 25/9/2024 at 16:17, Kandiah57 said:

இலங்கையில் எத்தனை மதுபானகடைகள் உண்டு”??

வடக்கில் எத்தனை உண்டு” ???

கிழக்கில் எத்தனை உண்டு???

யாழ்ப்பாணம். ரவுணுக்குள். நிறைய பார்கள்.   பார்த்த ஞாபகம் 🤣🙏.    கேள்விகள் கடினமில்லை    இலகுவானது    இல்லையா?? 😂

கந்தையா அண்ணை, இந்த தகவல்கள் எல்லாம் ஒரு வாட்ஸ்அப் பதிவாக இப்பொழுது சுற்றிக் கொண்டிருக்கின்றது. உண்மை பொய் தெரியாது. இங்கே முதலில் யாராவது இதை இணைத்தார்களா என்றும்  தெரியவில்லை.

----------------

கிளிநொச்சியில் சந்திரகுமாரும் அங்கயனும் டக்ளசும் சாராயக்கடை வைத்திருக்கிறார்கள். இதை யாரும் கதைக்க தயார் இல்லை. தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் மூலம் உரிமையாளர் யார் என்று யாரும் அறிந்துகொள்ளலாம். 
 
சந்திரகுமாரின் மனைவியின் பெயரில் கரடிப்போக்கு சந்தியில் இரண்டு பார்கள் உள்ளன. 
 
பரந்தனில் இருக்கும் இரண்டு பார்கள் அங்கயனின் தம்பியின் பெயரில் இருக்கும் நிறுவனத்தின் பெயரில் உள்ளது. 
 
கனகபுரம் வீதியில் உள்ளது தான் கிளிநொச்சியில் அதிகவிலைக்கு விற்கப்பட்ட பாராம். இது டக்ளசின் தம்பி தயானந்தாவின் பெயரில் உள்ளது. 
 
பூநகரி சந்தியில் உள்ள ஒன்று Rockland சாராய நிறுவனத்தின் பெயரில் உள்ளது. 
 
கிளிநொச்சி கந்தசுவாமி கோவிலுக்கு பக்கத்தில் உள்ள பார் புலம்பெயர் வாழ் பிரபல தமிழ் வர்த்தகர் பெயரில் உள்ளது. அதுவும் ஒரு சாராய நிறுவனத்தின் பெயரில் தான் பதிவு உள்ளது.
 
6.5 லட்சம் மக்கள் உள்ள யாழில் 67 பார்கள் உள்ளன. 2 லட்சம் மக்கள் உள்ள கிளிநொச்சியில் 6 பார்கள் உள்ளன. 2.5 லட்சம் மக்கள் உள்ள வவுனியாவில் 39 பார்கள் உள்ளனவாம். 1.8 லட்சம் மக்கள் உள்ள முல்லைத்தீவில் 11 பார்கள் உள்ளனவாம்.

Edited by ரசோதரன்

  • கருத்துக்கள உறவுகள்

ஏழை குடும்ப‌த்தில் இருந்து ஒரு பெண் பிள்ளை அனுராவிட‌ம் அன்பான‌ வேண்டு கோல்

இந்த‌ ச‌கோத‌ரியின் ஆசைய‌ அனுரா க‌ண்டிப்பாய் நிறைவேற்றுவார்🙏....................... 

  • கருத்துக்கள உறவுகள்
43 minutes ago, ரசோதரன் said:

இந்த முறை ஊருக்கு போயிருந்த போது நான் கவனித்த ஒரு விடயம், அந்த நாட்களில் மதுபானக்கடை இருந்த இடத்தில் ஒரு தேத்தண்ணிக் கடை தான் இருந்தது. எப்படியும் ஒன்றாவது இங்கு இருக்காமல் இருக்காதே என்று நினைத்தனான். ஆனால் என் கண்ணில் ஒன்றும் அகப்படவில்லை. பக்கத்து ஊர்களில் எங்கும் இருக்கின்றதோ தெரியவில்லை............

கந்தையா அண்ணை, இந்த தகவல்கள் எல்லாம் ஒரு வாட்ஸ்அப் பதிவாக இப்பொழுது சுற்றிக் கொண்டிருக்கின்றது. உண்மை பொய் தெரியாது. இங்கே முதலில் யாராவது இதை இணைத்தார்களா என்றும்  தெரியவில்லை.

----------------

கிளிநொச்சியில் சந்திரகுமாரும் அங்கயனும் டக்ளசும் சாராயக்கடை வைத்திருக்கிறார்கள். இதை யாரும் கதைக்க தயார் இல்லை. தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் மூலம் உரிமையாளர் யார் என்று யாரும் அறிந்துகொள்ளலாம். 
 
சந்திரகுமாரின் மனைவியின் பெயரில் கரடிப்போக்கு சந்தியில் இரண்டு பார்கள் உள்ளன. 
 
பரந்தனில் இருக்கும் இரண்டு பார்கள் அங்கயனின் தம்பியின் பெயரில் இருக்கும் நிறுவனத்தின் பெயரில் உள்ளது. 
 
கனகபுரம் வீதியில் உள்ளது தான் கிளிநொச்சியில் அதிகவிலைக்கு விற்கப்பட்ட பாராம். இது டக்ளசின் தம்பி தயானந்தாவின் பெயரில் உள்ளது. 
 
பூநகரி சந்தியில் உள்ள ஒன்று Rockland சாராய நிறுவனத்தின் பெயரில் உள்ளது. 
 
கிளிநொச்சி கந்தசுவாமி கோவிலுக்கு பக்கத்தில் உள்ள பார் புலம்பெயர் வாழ் பிரபல தமிழ் வர்த்தகர் பெயரில் உள்ளது. அதுவும் ஒரு சாராய நிறுவனத்தின் பெயரில் தான் பதிவு உள்ளது.
 
6.5 லட்சம் மக்கள் உள்ள யாழில் 67 பார்கள் உள்ளன. 2 லட்சம் மக்கள் உள்ள கிளிநொச்சியில் 6 பார்கள் உள்ளன. 2.5 லட்சம் மக்கள் உள்ள வவுனியாவில் 39 பார்கள் உள்ளனவாம். 1.8 லட்சம் மக்கள் உள்ள முல்லைத்தீவில் 11 பார்கள் உள்ளனவாம்.

நீங்கள் மேலே பதிந்த தகவலின்படி.. வெளிவந்தது 10 மதுபானசாலைகள்.
கடந்த நான்கு மாதத்தில்  மாத்திரம் 172 மதுபான அனுமதி பத்திரங்கள் கொடுக்கப் பட்டுள்ளதாம். இன்னும்... வெளிவரும். 
லோயர்...  பழம்  தின்று,  கொட்டை போட்ட ஆள் 😂.  எப்படியும், இந்த விசயத்தை அமுசடக்கமாக... இடது  கைக்கு தெரியாமல்  சாதுரியமாகத்தான்  கையாண்டு இருப்பார். நெருப்பு இல்லாமல்... புகை வராது.    அது வரை பொறுமை காப்போம். 🤣

2 hours ago, ஈழப்பிரியன் said:

இந்தாளின் கை ரொம்பவும் சுத்தமாக இருக்கும் என்று நம்பிவிட்டேன்.

தொடக்கத்தில் இவர் மீது கொஞ்சம் நம்பிக்கையும் மதிப்பும் எனக்கு இருந்தது. என்று பாலியல் வல்லுறவு வழக்கில் இரட்டை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட பிரேமானந்தாவுக்கு ஆதரவாக, அவரை விடுதலை செய்யுமாறு தமிழ் நாட்டு அரசுக்கு கோரிக்கை வைத்தாரோ, அன்றே இவர் பற்றிய தெளிவு கிடைத்தது.

ஒரு பக்கா கிரிமனலுக்கு, அதுவும் பாலியல் வல்லுறவு + கொலையாளிக்கு வக்காலத்து வாங்கும் நீதியரசர் இவர்.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ஈழப்பிரியன் said:

இந்தாளின் கை ரொம்பவும் சுத்தமாக இருக்கும் என்று நம்பிவிட்டேன்.

உண்மையில் இது பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் சலுகை என்று நினைக்கிறேன். இதன் மூலம் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் பயன் அடைந்து அதனை மக்களுக்காக பாவித்திருந்தால் எத்தனை வாகனங்களை வாங்கி இருந்தாலும் தகும். ஆனால் இங்கே அப்படி எதுவும் நடந்ததாக தெரியவில்லை.  (நான் எழுதியது கார் இறக்குமதிக்கு)

Edited by விசுகு
ஒரு வரிகள் சேர்க்க

  • கருத்துக்கள உறவுகள்

இப்ப‌வே ம‌துவுக்கு முடிவு க‌ட்ட‌னும் இல்லையேன்

த‌மிழ் நாட்டை போல் இல‌ங்கைய‌ர்க‌ளும் குடி போதைக்கு அடிமையாகி போய் குடும்ப‌ பிர‌ச்ச‌னை அதிக‌ம் வ‌ரும் 

பிள்ளைக‌ளின் எதிர் கால‌ம் எல்லாம் பாதிக்கும்

யூடுப்பை திற‌ந்தால் க‌ண‌வ‌ர் ச‌ரியான‌ குடி போதை என்று தான் த‌மிழ் அன்ரி மார் இள‌ம் பிள்ளைக‌ள் சொல்லுகின‌ம்

அனுரா இதுக்கு ந‌ல்ல‌ முடிவு எடுப்பார் என்று ந‌ம்புகிறேன்.......................இப்போது புல‌ம்பெய‌ர் த‌மிழ‌ர்க‌ள் தொட்டு வெளி நாட்ட‌வ‌ர்க‌ள் அடிக்க‌டி இல‌ங்கை போய் வ‌ருகின‌ம் சுற்றுலா மூல‌ம் அதிக‌ வ‌ருமான‌ம் கிடைக்கும் அதோட‌ க‌ட‌ல் உண‌வுக‌ள் ப‌ழ‌ங்க‌ள் ஏற்றும‌திய‌ கூட்டினால் நாடு முன்னேரும்........................

40 minutes ago, விசுகு said:

உண்மையில் இது பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் சலுகை என்று நினைக்கிறேன். இதன் மூலம் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் பயன் அடைந்து அதனை மக்களுக்காக பாவித்திருந்தால் எத்தனை வாகனங்களை வாங்கி இருந்தாலும் தகும். ஆனால் இங்கே அப்படி எதுவும் நடந்ததாக தெரியவில்லை.  (நான் எழுதியது கார் இறக்குமதிக்கு)

அண்மையில் ஒரு தமிழ் பாராளுமன்ற உறுப்பினருடன் கதைக்கும் வாய்ப்பு கிடைத்தது. அவர் எம் நண்பர் குலாமில் உள்ள ஒருவரின் நெருங்கிய உறவு. 

அவர் கூறியது இது: ஒவ்வொரு பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் அவர்களின் தொகுதியை அபிவிருத்தி செய்யவும் முன்னேற்றவும் ஒரு தொகை பணம் திறைசேரியில் இருந்து (பாராளுமன்றத்தினூடாக) ஒதுக்கப்படும்.  டக்கியை தவிர வேறு எந்த தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களும் அதை செலவழிப்பது இல்லை என்று. ஏனெனில் அவ்வாறு செலவழித்தால், சிங்கள அரசிடம் இருந்து பணத்தை பெற்றார்கள் என்று சொல்லி, துரோகி என்று முத்திரை குத்தி விடுவார்கள் என்ற பயத்தினாலாம். எனவே ஒவ்வொரு முறையும் இவ்வாறு ஒதுக்கப்படும் நிதி, மீண்டும் திறைசேரிக்கே சென்று விடுமாம்.

அவர் சொன்னதில் எத்தனை வீதம் உண்மை என்று தெரியாது.

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, நிழலி said:

முன்னாள் பா.உ சொல்வது தவறு அண்ணை.

எமது கிராமத்தில் முன்னாள் பா.உ சித்தார்த்தன் அவர்களின் நிதி ஒதுக்கீட்டில் வாசிகசாலைக் கூரை புனரமைப்பு நடைபெற்றது.

முன்னாள் பா.உ கஜேந்திரகுமாரின் நிதி ஒதுக்கீட்டில் விளையாட்டுக் கழக மதிற்சுவர் கட்ட கோரிக்கை அனுப்பி இருக்கிறார்கள். 

1 minute ago, ஏராளன் said:

தகவலுக்கு நன்றி ஏராளன்.

சொன்னது தமிழ் எம் பி என்பதால் தான் எனக்கு ஒரு டவுட் இருந்தது. 

  • கருத்துக்கள உறவுகள்
Just now, நிழலி said:

தகவலுக்கு நன்றி ஏராளன்.

சொன்னது தமிழ் எம் பி என்பதால் தான் எனக்கு ஒரு டவுட் இருந்தது. 

தமக்கு வாக்களித்த அல்லது வாக்களிக்கக் கூடிய பகுதிகளை தேர்ந்தெடுத்து அல்லது அங்குள்ள பிரதேச சபை(அவர்களது கட்சி) உறுப்பினர் ஊடாக வைக்கப்படும் கோரிக்கைக்கு அமைவாக நிதி ஒதுக்கீடுகள் இருக்கும்.

அமைச்சர்கள் அரசு சார்ந்த பா.உ களுக்கு அதிக நிதி ஒதுக்கீடுகள் அல்லது பெரிய திட்டங்களைப் போட்டு அதிக நிதியை ஒதுக்குவார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, ஏராளன் said:

முன்னாள் பா.உ சொல்வது தவறு அண்ணை.

எமது கிராமத்தில் முன்னாள் பா.உ சித்தார்த்தன் அவர்களின் நிதி ஒதுக்கீட்டில் வாசிகசாலைக் கூரை புனரமைப்பு நடைபெற்றது.

முன்னாள் பா.உ கஜேந்திரகுமாரின் நிதி ஒதுக்கீட்டில் விளையாட்டுக் கழக மதிற்சுவர் கட்ட கோரிக்கை அனுப்பி இருக்கிறார்கள். 

உண்மை, சித்தார்த்தன் மற்றும் புளாட் உறுப்பினர்கள் வவுனியாவில் செய்த சிலர் அபிவிருத்திக்களுக்கு நிதி பாராளுமன்ற ஒதுக்கீட்டில் இருந்தே பெற்றார்கள். 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழ் சிறி said:

லோயர்...  பழம்  தின்று,  கொட்டை போட்ட ஆள் 😂.  

‘பழம் தின்று’ என்று  எழுதி கொமா போட்டுவிட்டு சற்று இடைவெளி விட்டுவிட்டீர்கள். அதனால் முதலில்  நான் தப்பாக  விளங்கிக் கொண்டுவிட்டேன்.

large.IMG_7136.jpeg.cb7639d37158614f95e7

  • கருத்துக்கள உறவுகள்

மது பழக்கத்தால் இலங்கை தமிழர்கள் சிரமபடுகின்றனரா மது அடிமை தனத்தில் இருந்து விடுதலையாவதற்கு தங்களது தலைவன் அனுரகுமார திசாநாயக்கரின் உதவியை வேண்டிநிற்கின்றனரா

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, விளங்க நினைப்பவன் said:

மது பழக்கத்தால் இலங்கை தமிழர்கள் சிரமபடுகின்றனரா மது அடிமை தனத்தில் இருந்து விடுதலையாவதற்கு தங்களது தலைவன் அனுரகுமார திசாநாயக்கரின் உதவியை வேண்டிநிற்கின்றனரா

உந்த‌ ம‌துவால்

எத்த‌னையோ குடும்ப‌ங்க‌ள் பிரிந்து

பிள்ளைக‌ளின் எதிர் கால‌ம் எல்லாம் நாச‌மாய் போச்சு

நாட்டுக்கு போய் ம‌ட்ட‌க்க‌ள‌ப்பு ப‌க்க‌ம் போய் பாருங்கோ ம‌துவின் விலைவு எப்ப‌டி என்று

அனுரா ம‌துவை இல்லாம‌ செய்வேன் என்று சொன்ன‌தோட‌ நிக்காம‌ 50 ம‌து க‌டைக‌ளை மூடி விட்டார்.........................

யாழ்ப்பாண‌த்து இளைஞ‌ர்க‌ள் ப‌ல‌ர் ம‌துவுக்கு க‌ஞ்சாவுக்கு அடிமையாய் போய் விட்டின‌ம்

இவ‌ர்க‌ளை இதில் இருந்து மீட்டு ந‌ல்ல‌ வ‌ழியில் ப‌ய‌ணிக்க‌ வைப்ப‌வ‌னே உண்மையான‌ அர‌சிய‌ல் வாதியா இருக்க‌ த‌குதியான‌வ‌ர்.........................அனுராவின் நோக்க‌ம் நாட்டை க‌ட்டி எழுப்புத‌ல் அதோடு ஊழ‌ல் போதை பொருட்க‌ளை த‌டை செய்த‌ல்........................

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஏராளன் said:

முன்னாள் பா.உ சொல்வது தவறு அண்ணை.

எமது கிராமத்தில் முன்னாள் பா.உ சித்தார்த்தன் அவர்களின் நிதி ஒதுக்கீட்டில் வாசிகசாலைக் கூரை புனரமைப்பு நடைபெற்றது.

முன்னாள் பா.உ கஜேந்திரகுமாரின் நிதி ஒதுக்கீட்டில் விளையாட்டுக் கழக மதிற்சுவர் கட்ட கோரிக்கை அனுப்பி இருக்கிறார்கள். 

இந்த நிதி எப்படி செலவு செய்யப்படுகிறது என்று  கண்காணிப்பபடுகிறதா ?? இப்பணத்தை   பாராளுமன்ற உறுப்பினர்கள் சுருட்ட முடியும் அல்லவா??   

திணைக்களங்களின் ஊடாக அரசாங்கம் அபிவிருத்தி பணிகளை செய்யலாம்   தனி நபர்களு. ஏன் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும்??  

ஒரு. திட்டம் சமர்பிக்கப்பட்டுள்ளது என்றால்  அதன் செலவீடு. முழுமையாக நிபுணர்களால். [துறைசார்] கணிக்கப்பட்டுத் தான்  நிதி ஒதுக்கீடு செய்யப்படும்

இந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் இப்படி ஏன்  நிதியை பெறுகிறார்கள்  ??  அந்த நிதியை  முழுவதும் பாராளுமன்ற உறுப்பினரின்.  தனிக்  கையெழுத்தால் எடுக்க முடியும்    இது ஒரு பகல் கொள்ளை ஆகும்   

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, Kandiah57 said:

இந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் இப்படி ஏன்  நிதியை பெறுகிறார்கள்  ??  அந்த நிதியை  முழுவதும் பாராளுமன்ற உறுப்பினரின்.  தனிக்  கையெழுத்தால் எடுக்க முடியும்    இது ஒரு பகல் கொள்ளை ஆகும்   

ஏதோ என்னால் முடிந்தது, அண்ணை................

spacer.png

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, ரசோதரன் said:

ஏதோ என்னால் முடிந்தது, அண்ணை................

spacer.png

👍

என்ன நக்கல் 

இது கூடாது 🤣🤪

ஒரு உதாரணம் 

கைதடியில்  வயோதிபர்  இல்லம் கட்டப்பட்டது

ஆயுர்வேத வைத்தியசாலை கட்டப்பட்டது  

நவரெட்ணம் பாராளுமன்ற உறுப்பினர் அவர்களின் பரித்துரை. ஆல்.   அவருக்கு நிதி ஒதுக்கப்படவில்லை   கட்டிடத் திணைக்களம் தான் கட்டியது     ஊரிலுள்ள பல இளைஞர்கள் வேலைவாய்ப்பு பெற்றார்கள்.பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு நிதி பல பில்லியன் ஒதுக்கீடு செய்வது அண்மைக் காலத்தில் அறிந்த புதினம்   பிரதமர்  ஐனதிபதி  பதவிகளில். தொடர. ஆதரவு பெற  இப்படி ஒரு. செயலை நடைமுறை படுத்துவது கூடாது     நம்ம ஐனதிபதி   மாற்றுவார். பார்ப்போம் 🤣👍😂

  • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, Kandiah57 said:

நம்ம ஐனதிபதி

நீங்க எங்கேயோ போயிட்டீங்க.

ஜேர்மனியில் இப்ப சாமம்.
இன்னும் தூங்கலையோ?

மனைவி பேசலையோ?

எனக்கு இரவு 11 மணியின் பின் அனுமதியில்லை.
 
  • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, Kandiah57 said:

👍

என்ன நக்கல் 

இது கூடாது 🤣🤪

🤣....

இந்த மீம்ஸை இங்கே போட்டதிற்கு நீங்கள் இன்னுமொரு திரியில் 'அநுர பதவிக்கு வந்ததிற்கு புலிகளே காரணம்...........' என்று எழுதி, அதற்கு ஒரு விளக்கமும் கொடுத்திருந்ததும் ஒரு காரணம். அது கொஞ்சம் சூடான திரி, அங்கே மீம்ஸ் எல்லாம் போடமுடியாது............😜.

நீங்கள் எல்லாவற்றையும் சுற்றிச் சுற்றி யோசிப்பீர்கள். உங்களையே போலவே எனக்கு ஒரு நண்பன் இருக்கின்றான். அவன் ஒரு விஞ்ஞானி போல, ஆனால் அவன் சோதனையில் நல்ல மார்க் எடுத்தது குறைவு.  

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, ஈழப்பிரியன் said:

நீங்க எங்கேயோ போயிட்டீங்க.

ஜேர்மனியில் இப்ப சாமம்.
இன்னும் தூங்கலையோ?

மனைவி பேசலையோ?

எனக்கு இரவு 11 மணியின் பின் அனுமதியில்லை.
 
அவ ஏற்கனவே தூங்கி விட்டார் ...நித்திரை.  ஆகி விட்டார்     

மற்ற அறையில் இருந்து பார்க்கிறேன் 😂🙏.   நித்திரை. வரும் வரை இப்படி ஏதாவது வாசிப்பதுண்டு     

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, நிழலி said:

விக்கினேஸ்வரன் ஐயாவுக்கு ஒன்றுமே தெரியாதாம். பாவம் நீதியரசருக்கு ஒன்றும் தெரியாமல் இருக்கு

https://fb.watch/uWwixBWHOw/

விக்கி பார் லைசன்ஸ் வாங்கிக் குடுத்த அபலைப் பெண் சுன்னாகத்தைச் சேர்ந்த பார் நடராஜாவின் மகள். இவவுக்கு யாழ்ப்பாணத்தில் முதலே 2 பார் தகப்பன் வழிச் சீதனமாக இருக்கு. இந்த பார் நடராஜா வேறு யாருமல்லர் பிரேமானந்தாவின் சுன்னாகம் ஆச்சிரமத்தை நடத்திய நபர்.

இந்த விக்கியத் தான் விக்கி அய்யா விக்கி அய்யா எண்டு கொஞ்சப்பேர் காவடி எடுத்துத் திரிஞ்சிச்சினம்.

கையோட இன்னொரு தகவல் நான் முன்னமும் சொன்னதுதான், விக்கி இப்ப இளையோருக்கு வழிவிட்டு ஒதுங்கிறன் எண்டவரல்லோ அது ஏன் தெரியுமோ? விக்கிட மகன் நண்பர் யௌவனனை பாராளுமன்றம் அனுப்பிற பிளான் விக்கி அய்யாக்கு!

Edited by வாலி

  • கருத்துக்கள உறவுகள்
52 minutes ago, வாலி said:

விக்கி பார் லைசன்ஸ் வாங்கிக் குடுத்த அபலைப் பெண் சுன்னாகத்தைச் சேர்ந்த பார் நடராஜாவின் மகள். இவவுக்கு யாழ்ப்பாணத்தில் முதலே 2 பார் தகப்பன் வழிச் சீதனமாக இருக்கு. இந்த பார் நடராஜா வேறு யாருமல்லர் பிரேமானந்தாவின் சுன்னாகம் ஆச்சிரமத்தை நடத்திய நபர்.

விக்கியர் முகத்திரையை  கிழிக்க ஒரு அனுரா வரவேண்டி உள்ளது இவ்வளவு காலமும் எங்கை போயிருந்தின்கா ? அப்ப மற்ற கள்ளர் சுமத்திரன் ஸ்ரீதரன்  மாவை எல்லாம் காந்தியம் பேசிக்கொண்டு இருக்கினமா ? இன்னமும் ? அவர் வரும்  தேர்தலில் போட்டியிடவில்லை வரும் தலைமுறைக்கு வழி விட்டு கொடுக்கிறேன் என்ற சொல் அங்கிருக்கும் பல தமிழ் அரசியல்வாதிகளை கோப படுத்தி விட்டது அதுதான் காரணம் என்கிறார்களே உண்மையா ?

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, பெருமாள் said:

விக்கியர் முகத்திரையை  கிழிக்க ஒரு அனுரா வரவேண்டி உள்ளது இவ்வளவு காலமும் எங்கை போயிருந்தின்கா ? அப்ப மற்ற கள்ளர் சுமத்திரன் ஸ்ரீதரன்  மாவை எல்லாம் காந்தியம் பேசிக்கொண்டு இருக்கினமா ? இன்னமும் ? அவர் வரும்  தேர்தலில் போட்டியிடவில்லை வரும் தலைமுறைக்கு வழி விட்டு கொடுக்கிறேன் என்ற சொல் அங்கிருக்கும் பல தமிழ் அரசியல்வாதிகளை கோப படுத்தி விட்டது அதுதான் காரணம் என்கிறார்களே உண்மையா ?

ஒம் உண்மை. விக்கி ஓர் அரிச்சந்திரன்!

https://yarl.com/forum3/topic/295316-%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%85%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%A4%E0%AF%81%E0%AE%85%E0%AE%A8%E0%AF%81%E0%AE%B0-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%89%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F-%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF/

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.