Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
இஸ்ரேல் - ஹெஸ்பொலா, நஸ்ரல்லா

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, இஸ்ரேல் தாக்குதலால் சேதமடைந்த கட்டடத்தின் இடிபாடுகளில் ஹெஸ்பொலா தலைவர் நஸ்ரல்லாவின் புகைப்படம்
28 செப்டெம்பர் 2024, 05:20 GMT
புதுப்பிக்கப்பட்டது 56 நிமிடங்களுக்கு முன்னர்

லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஹெஸ்பொலா தலைவர் ஷேக் ஹசன் நஸ்ரல்லா கொல்லப்பட்டுவிட்டதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது. இதனைத் தொடர்ந்தும், லெபனானில் ஹெஸ்பொலா இலக்குகளை குறிவைத்து தாக்கி வருவதாக இஸ்ரேல் ராணுவம் கூறியுள்ளது. அதேநேரத்தில், ஹெஸ்பொலா தரப்பும் இஸ்ரேலுக்கு எதிராக ராக்கெட்டுகளை வீசி தாக்குதல் நடத்தி வருகிறது.

ஹஸன் நஸ்ரல்லா கொல்லப்பட்டுவிட்டார் என்ற இஸ்ரேல் ராணுவத்தின் அறிவிப்பை இதுவரை ஹெஸ்பொலா உறுதி செய்யவோ அல்லது மறுக்கவோ, வேறு ஏதேனும் கருத்து சொல்லவோ இல்லை.

மத்திய கிழக்கில் என்ன நடக்கிறது? அந்த பிராந்தியத்தில் உள்ள அமெரிக்க துருப்புகளுக்கு பைடன் பிறப்பித்துள்ள உத்தரவு என்ன?

ஹெஸ்பொலா தலைவருக்கு இஸ்ரேல் குறி

முன்னதாக, வெள்ளிக்கிழமை மாலையில் ஹெஸ்பொலா தலைமையகத்தை குறிவைத்து துல்லிய தாக்குதல் நடத்தியதாக இஸ்ரேல் ராணுவ செய்தி தொடர்பாளர் டேனியல் ஹகாரி தெரிவித்திருந்தார். இந்த தாக்குதலால் என்ன பலன் கிடைத்தது என்பது குறித்து ஆய்வு செய்து வருவதாக அவர் கூறினார்.

இஸ்ரேல் நடத்திய இந்த தாக்குதலின் இலக்கு ஹெஸ்பொலா தலைவர் ஹஸன் நஸ்ரல்லா என்ற பிபிசியின் அமெரிக்க கூட்டாளியான சிபிஎஸ் உள்ளிட்ட அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன. இருப்பினும், இஸ்ரேல் தாக்குதலுக்கு இலக்கான கட்டடத்தில் நஸ்ரல்லா இருந்தாரா என்பது குறித்து எந்தவொரு உறுதியான தகவலும் இல்லாமல் இருந்தது.

ஹெஸ்பொலா இயக்கத்தின் மற்ற மூத்த தலைவர்கள் கொல்லப்பட்டதாக லெபனான் ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியை உறுதி செய்ய முடியவில்லை என்று அமெரிக்க அதிகாரி தெரிவித்துள்ளார்.

இந்த தாக்குதல் குறித்து இஸ்ரேல் தரப்பில் முன்கூட்டியே தங்களுக்கு எதுவும் தெரிவிக்கப்படவில்லை என்றும், இந்த மோதல் மேலும் தீவிரமாகும் வாய்ப்பு இருப்பது குறித்து அமெரிக்கா கவலை கொண்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

இஸ்ரேல் - ஹெஸ்பொலா, நஸ்ரல்லா

பட மூலாதாரம்,REUTERS

ஹஸன் நஸ்ரல்லா கொல்லப்பட்டதாக இஸ்ரேல் அறிவிப்பு

இந்நிலையில் ஹெஸ்பொலா தலைவர் ஷேக் ஹசன் நஸ்ரல்லா கொல்லப்பட்டதாக இஸ்ரேல் பாதுகாப்புப் படை (IDF-ஐடிஎப்) தெரிவித்துள்ளது.

ஐடிஎப்-இன் எக்ஸ் பக்கத்தில் பகிரப்பட்ட ஒரு அறிக்கையில், "ஹசன் நஸ்ரல்லா இனி உலகத்தை அச்சுறுத்த முடியாது." என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெய்ரூட்டில் ஒரே இரவில் நடந்த தொடர்ச்சியான இஸ்ரேலிய தாக்குதல்களைத் தொடர்ந்து இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. நஸ்ரல்லா மற்றும் பிற ஹெஸ்பொலா தளபதிகளை குறிவைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக இஸ்ரேல் கூறியது.

ஹெஸ்பொலாவின் மத்திய தலைமையகத்தின் மீது இஸ்ரேலிய போர் விமானங்கள் குறிவைத்து தாக்குதல் நடத்தியதாகவும், ஹெஸ்பொலாவின் இந்த தளம் பெய்ரூட்டின் தாஹிஹ் பகுதியில் உள்ள குடியிருப்பு கட்டிடத்தின் கீழே செயல்பட்டு வந்ததாகவும் ஐடிஎப் கூறியது.

Twitter பதிவை கடந்து செல்ல

Hassan Nasrallah will no longer be able to terrorize the world.

— Israel Defense Forces (@IDF) September 28, 2024
எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

Twitter பதிவின் முடிவு

 

‘இஸ்ரேலை யார் அச்சுறுத்தினாலும் விடமாட்டோம்’

ஹெர்சி ஹலேவி

பட மூலாதாரம்,IDF

படக்குறிப்பு, ஐடிஎப் லெப்டினன்ட் ஜெனரல் ஹெர்சி ஹலேவி

இஸ்ரேலிய பாதுகாப்பு படையின் (ஐடிஎப்) தலைமை அதிகாரி, லெப்டினன்ட் ஜெனரல் ஹெர்சி ஹலேவி, ஒரு காணொளியை வெளியிட்டுள்ளார்.

"நாங்கள் கூற வரும் செய்தி மிகவும் தெளிவானது. இஸ்ரேலிய குடிமக்களை யார் அச்சுறுத்தினாலும், அவர்களை எப்படி பிடிப்பது என எங்களுக்கு தெரியும். வடக்கு, தெற்கு அல்லது அதற்கு அப்பால் என அவர்கள் எங்கு சென்றாலும் சரி" என்று அதில் அவர் கூறியுள்ளார்.

ஹெஸ்பொலா தலைவர் ஹசன் நஸ்ரல்லா கொல்லப்பட்டதாக அறிக்கை வெளியிட்ட சிறிது நேரத்திலேயே இந்த காணொளி ஐடிஎப்-இன் சமூக வலைதளப் பக்கங்களில் வெளியிடப்பட்டது.

"பல்வேறு கட்ட ஆயத்தப்பணிகளுக்கு பிறகு, இஸ்ரேலிய ராணுவம், நஸ்ரல்லா மற்றும் ஹெஸ்பொலாவின் தலைமையகத்தை குறிவைத்து தாக்குதல் திட்டத்தை செயல்படுத்தியது" என்று லெப்டினன்ட் ஜெனரல் ஹெர்சி ஹலேவி கூறியுள்ளார்.

"மிகச்சரியான நேரத்தில், மிகவும் துல்லியமான முறையில் அந்தத் தாக்குதலை நாங்கள் மேற்கொண்டோம். ஆனால் இது முடிவல்ல என்பதில் தெளிவாக இருக்கிறோம். முன்னோக்கிச் செல்லும் திறன் எங்களிடம் அதிகமாகவே உள்ளது" என்றும் அவர் கூறினார்.

‘தாக்குதலில் ஹெஸ்பொலாவின் தளபதி கொலை’- இஸ்ரேல்

பட மூலாதாரம்,REUTERS

‘ஹெஸ்பொலாவின் தளபதி கொலை’- இஸ்ரேல்

தெற்கு லெபனானில், ஹெஸ்பொலாவின் ஏவுகணைப் பிரிவு தளபதி முஹம்மது அலி இஸ்மாயில் மற்றும் துணைத் தலைவர் ஹுசைன் அஹ்மத் இஸ்மாயில் ஆகியோர் டிரோன் தாக்குதலில் கொல்லப்பட்டதாக இஸ்ரேலிய ராணுவம் தெரிவித்துள்ளது.

இஸ்ரேலிய பிரதேசத்தை நோக்கி ராக்கெட்டுகளை ஏவியது மற்றும் மத்திய இஸ்ரேலை நோக்கி புதன்கிழமை அன்று ஏவுகணைகளைக் கொண்டு தாக்கியது உட்பட இஸ்ரேல் மீதான ஏராளமான தாக்குதல்களின் பின்னணியில் அலி இஸ்மாயில் இருந்தார் என்று இஸ்ரேலிய ராணுவம் கூறியது.

தாக்குதலைப் பற்றிய கூடுதல் விவரங்கள் எதுவும் தெரிவிக்கப்படவில்லை.

இஸ்ரேல் - ஹெஸ்பொலா, நஸ்ரல்லா

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, சித்தரிப்புப் படம்

அமெரிக்கப் படைகளுக்கு புதிய உத்தரவு

மத்திய கிழக்கில் நிலைமையை ஆய்வு செய்து அதற்கேற்ப, அங்குள்ள அமெரிக்கப் படையினரை உஷாராக இருக்கச் செய்யுமாறு அமெரிக்க ராணுவ தலைமையகமான பென்டகனை அதிபர் பைடன் உத்தரவிட்டிருப்பதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

"மத்திய கிழக்கில் நிலைமையை முழுமையாக ஆராய்ந்து, அந்த பிராந்தியத்தில் அமெரிக்காவின் நலன்களை காக்கவும், தற்காப்பை உறதிப்படுத்தவும் தேவைக்கேற்ப அமெரிக்கப் படைகளை உஷார் நிலையில் வைத்திருக்க பென்டகனுக்கு பைடன் உத்தரவிட்டுள்ளார்" என்கிறது வெள்ளை மாளிகை அறிக்கை.

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் உள்ள அமெரிக்க தூதரகங்களும் தேவையான தற்காப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பைடன் உத்தரவிட்டுள்ளார்.

‘எந்த சக்தியாலும் இஸ்ரேலைத் தடுக்க முடியாது’

ஜோசப் பொரெல்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளியுறவுத் தலைவர் ஜோசப் பொரெல்

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை அமெரிக்கா உட்பட எந்த சக்தியாலும் ‘தடுக்க முடியாது’ என்று ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளியுறவுத் தலைவர் ஜோசப் பொரெல் தெரிவித்துள்ளார்.

ஜோசப் பொரெல் நியூயார்க்கில் செய்தியாளர்களிடம் பேசியபோது, "நாங்கள் செய்வது போர்நிறுத்தத்திற்கு தேவையான அனைத்து அழுத்தங்களையும் கொடுப்பது தான். ஆனால் காஸாவில் அல்லது மேற்குக் கரையில் நெதன்யாகுவின் நடவடிக்கைகளை யாராலும் தடுக்க முடியாது என்று தான் தெரிகிறது" என்றார்.

“ஹெஸ்பொலா அழிக்கப்படும் வரை இஸ்ரேலிய ராணுவம் தனது நடவடிக்கைகளை நிறுத்தாது” என்று நெதன்யாகு தெளிவுபடுத்தியதாக பொரெல் கூறினார்.

21 நாள் போர் நிறுத்தத்திற்கான அமெரிக்கா மற்றும் பிரான்ஸின் அழைப்பையும் அவர் ஆதரித்து பேசினார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

தம் தலைவர் கொல்லப்பட்டதை ஹிஸ்புல்லா இயக்கம் உத்தியோகபூர்வமாக உறுதிப்படுத்தி உள்ளது.

ஹமாஸ் இற்காக ஹிஸ்புல்லா இஸ்ரேலை தாக்கப் போய் இன்று தன் தலைவரைக் கூட காப்பாற்ற முடியாமல் போய் கிடக்கிறது.

  • கருத்துக்கள உறவுகள்

மிகபெரும் போர் நடந்துகொண்டிருக்கும்போது, இஸ்ரேலையே அழித்துவிடுவோம் என்று வீரவசனம் பேசிக்கொண்டு,

லெபனானில் ஒவ்வொருநாளும் ஒவ்வொரு தலைவரா இஸ்ரேல் தூக்கி கொண்டிருக்கும்போது,

பேஜர் வாக்கி டாக்கி என்று கற்பனைக்கெட்டாத தொழில்நுட்ப தாக்குதல்  செய்துகொண்டு,

பெய்ரூட்வரை போய் விமானதாக்குதல் செய்துகொண்டு இருக்கும்போது  எந்தவித பாதுகாப்பு எச்சரிக்கை உணர்வுமில்லாமல்

மிக இலகுவாக இலக்கு வைக்க கூடிய நகரத்தின் நடுவே உள்ள அவர்களின் தலைமையகத்தில் போய் இருந்திருக்காரே இந்த மூளையை வைச்சுக்கொண்டு எப்படி இஸ்ரேலை வெல்ல போகிறார்கள்?

வெறும் அல்லாஹ் அல்லாஹ் என்றால் எதிரிகளை எதிர்கொள்ள முடியாது என்பதை ஹிஸ்புல்லா கமாஸ் தலமைகளின் ஒட்டுமொத்த அழிவு காண்பிக்கிறது.

இத்தனைக்கும் காரணம் ஈரான்.

பயிற்சிகளும் ஆயுதங்களும் கொடுத்து இவர்களை உருவாக்கி ரத்தத்தை சூடாக்கி உசுப்பேத்திவிட்டு  இஸ்ரேலை அழிக்கபோகிறோம் என்று பிலிம் காட்டிவிட்டு இவர்களை முன்னே தள்ளிவிட்டு  தலைபோகும் நேரங்களில் சத்தம் போடாமல் தான் ஒதுங்கி கொள்கிறது,

தற்போது ஈரானிய ஆன்மீக தலைவரிலிருந்து அனைவரையும் பாதுகாப்பான இடத்திற்கு ஈரான் நகர்த்திவிட்டது என்றும் செய்தி வருகிறது.

கமாஸ் ஹிஸ்புல்லா வரிசையில் இனிமே ஹுத்திகள்மேலே இஸ்ரேல் தனது கவனத்தை திருப்பும் என்று எதிர்பார்க்கலாம்.

இஸ்ரேலை வெல்ல அல்லாஹ் போதாது இஸ்ரேல்போல அறிவுகூர்மை வேண்டுமென்பதை காலம் இஸ்ரேலிய எதிர்ப்பு இஸ்லாமிய இயக்கங்களுக்கு உணர்த்திக்கிட்டே இருக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்

புலனாய்வு, ஆயுதங்கள், தொழில்நுட்பம், நிதியுதவி.. சகல வளங்களையும் இஸ்ரேலுக்கு வழங்கிவிட்டு அமெரிக்கா வேடிக்கை பார்க்கின்றது.

தற்போது அமெரிக்காவின் சொல்லையே இஸ்ரேல் காது கொடுத்து கேட்பதாக இல்லை. அமெரிக்காவின் ஸ்திரமற்ற அரசியல் நிலவரத்தை இஸ்ரேல் தனக்கு சாதகமாக பாவிக்கின்றது. இங்கே அமெரிக்காவுக்கு தேவை இல்லாத நேரத்தில் மத்திய கிழக்கில் போரில் நுழையவேண்டிய ஆபத்து ஒருபுறம். 

மறுபுறம் செலன்ஸ்கி அரித்து எடுக்கின்றார். உக்ரைனுக்கு வளங்களை கொட்டவேண்டிய நிர்ப்பந்தம் அமெரிக்காவிற்கு.

அமெரிக்கா வங்குரோத்து அடிக்கும் காலமும் வரலாம்.

மறுபுறம் சீனா, ரஷ்யா, வட கொரியா தமது கத்திகளை கூர்மைப்படுத்துகின்றன.

மிக வேகமாக பல மாற்றங்கள் உலகில் நடந்தேறுகின்றன.

தொடர்ந்து அவதானிப்போம்.

பெரும் போர்ஏற்படுமாயின் வெளிநாட்டு சீவியத்தை விட இலங்கை பாதுகாப்பான நாடோ என எண்ணத்தோன்றுகின்றது.

  • கருத்துக்கள உறவுகள்

https://avia-pro.net/news/armiya-izrailya-za-nedelyu-unichtozhila-vsyo-vysshee-rukovodstvo-hezboll

11_746.jpg

 

இஸ்ரேலின் புலனாய்வுத் திறனைப் பார்க்க ஆச்சரியமாயும் பிரமிப்பாயும் இருக்கிறது. 
 

 

Edited by Kapithan

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இஸ்ரேலின் தாக்குதலில் ஹசன் நஸ்ரல்லா பலி- உறுதி செய்தது ஹெஸ்புல்லா அமைப்பு

28 SEP, 2024 | 07:08 PM
image

ஹெஸ்புல்லா அமைப்பு இஸ்ரேலின் வான்தாக்குதலில் தனது தலைவர் கொல்லப்பட்டதை உறுதி செய்துள்ளது.

லெபனான் தலைநகரின் தென்புறநகர் பகுதியில் சியோனிஸ்ட்கள் மேற்கொண்ட துரோகத்தனமான நடவடிக்கையில் ஹசன் நஸ்ரல்லா கொல்லப்பட்டார் என ஹெஸ்புல்லா அமைப்பு தெரிவித்துள்ளது.

இஸ்ரேலிற்கு எதிராக தொடர்ந்தும் போராடப்போவதாக உறுதியளித்துள்ள ஹெஸ்புல்லா அமைப்பு காசாவிற்கும் பாலஸ்தீனத்திற்கும் தொடர்ந்தும் ஆதரவளிக்கப்போவதாக தெரிவித்துள்ளது.

https://www.virakesari.lk/article/195018

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நஸ்ரல்லாவை சாய்த்த இஸ்ரேல்: நிலை தடுமாறி அமைதியாய் நிற்கும் ஈரான்

ஈரான் (Iran) ஆதரவு ஹிஸ்புல்லா அமைப்பின் தலைவர் நஸ்ரல்லா (Nasrallah)படுகொலை செய்யப்பட்டுள்ளதாக இஸ்ரேல் (Israel) அறிவித்தும், ஈரான் அமைதி காத்து வருவது அந்நாட்டில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இஸ்ரேலின் அறிவிப்பிற்கு ஹிஸ்புல்லா, லெபனான் தரப்பிலிருந்தும் எவ்வித உறுதிபடுத்தப்பட்ட தகவல்களும் வெளியிடப்படவில்லை.

இந்த நிலையில், லெபனானில் இஸ்ரேலின் தாக்குதல்களில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர், இதற்கு எதிராக ஈரான் மற்றும் ஏமன் நாடுகளில் பொதுமக்கள் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

ஈரானின் செயற்பாடு

எவ்வாறானெதொரு பின்னணியில், இஸ்ரேலின் தாக்குதல்களுக்கு எதிராக ஈரான் அமைதியாக இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பொதுவாக, இத்தகைய சூழலில் ஈரான் கடுமையான பதிலடிகளை வழங்கும், ஆனால் இப்போது மிதவாதம் காட்டுவதாக உள்ளதாக ஈரானின் செயற்பாடுகள் அமைந்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

நஸ்ரல்லாவை சாய்த்த இஸ்ரேல்: நிலை தடுமாறி அமைதியாய் நிற்கும் ஈரான் | Death Of Hassan Nasrallah Pressure On Iran

அத்துடன், இது ஈரானில் உள்ள பழமைவாதிகள் மத்தியில் பாரிய கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளதுடன், எதிர்காலத்தில் இது அரசியல் மாற்றங்களுக்கு காரணமாக இருக்க வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது.

இறுதி இலக்கு

லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் நேற்றிரவு நடத்தப்பட்ட தொடர் வான்வழி தாக்குதலில் ஹிஸ்புல்லா அமைப்பின் தலைவர் ஹசன் நஸ்ரல்லா கொல்லப்பட்டுள்ளதாக இஸ்ரேல் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

நஸ்ரல்லாவை சாய்த்த இஸ்ரேல்: நிலை தடுமாறி அமைதியாய் நிற்கும் ஈரான் | Death Of Hassan Nasrallah Pressure On Iran

ஹிஸ்புல்லா அமைப்பின் மொத்தம் 18 பேர் முக்கிய தளபதிகள் இருந்த நிலையில்,17 பேரை இஸ்ரேல் ஏற்கனவே படுகொலை செய்தது. இறுதியாக நஸ்ரல்லா மட்டுமே உயிருடன் இருந்த நிலையில் தற்போது அவரும் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக இஸ்ரேல் இராணுவம் அறிவித்துள்ளது. 

https://ibctamil.com/article/death-of-hassan-nasrallah-pressure-on-iran-1727524484#google_vignette

  • கருத்துக்கள உறவுகள்
Quote

நஸ்ரல்லாவை சாய்த்த இஸ்ரேல்: நிலை தடுமாறி அமைதியாய் நிற்கும் ஈரான்

இரானை விட செத்தகிளியின் நிலைதான் பரிதாபம்!😂

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஹெஸ்பொலாவுக்கு எதிராக இஸ்ரேலின் மிகப்பெரிய வெற்றி - புறக்கணிக்கப்பட்ட அமெரிக்காவின் ஆலோசனைகள்

ஹெஸ்பொலாவுக்கு எதிராக இஸ்ரேலின் மிகப்பெரிய வெற்றி - புறக்கணிக்கப்பட்ட அமெரிக்காவின் ஆலோசனைகள்

பட மூலாதாரம்,GETTY/AFP

கட்டுரை தகவல்
  • எழுதியவர், ஜெரிமி போவன்
  • பதவி, பிபிசி செய்தியாளர்
  • 41 நிமிடங்களுக்கு முன்னர்

மத்திய கிழக்கில் மிகவும் கடுமையான போர் மூளும் அபாயம் இருப்பதைப் பற்றிப் பேசுவதை நிறுத்த வேண்டிய நேரம் இது. அதை நிறுத்துவதற்கான செயலில் இறங்க வேண்டிய நேரம் வந்துவிட்டது.

லெபனான் மீதான இஸ்ரேல் நடத்திய பேரழிவுகரமான தாக்குதலைத் தொடர்ந்து, ஹெஸ்பொலா தலைவர் ஹசன் நஸ்ரல்லாவை கொன்றதாக இஸ்ரேல் அறிக்கை வெளியிட்டது. ஹெஸ்பொலாவும் தனது டெலிகிராம் பதிவில் இந்தத் தகவலை உறுதி செய்தது.

லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் இருந்தவர்களின் கூற்றுப்படி, அதுவொரு பெரிய தொடர் குண்டுவெடிப்பு தாக்குதல்.

இதுவரை நான் லெபனான் மோதல்கள் பற்றிக் கேள்விப்பட்டதில் இதுதான் மிகவும் சக்தி வாய்ந்த குண்டுவெடிப்பு என்று நகரத்தில் உள்ள எனது நண்பர் ஒருவர் கூறினார்.

தாக்குதல் நடந்த இடங்களில், மீட்புப் பணியாளர்கள் இடிபாடுகளுக்கு மத்தியில் தேடுதல் பணிகளை மேற்கொண்டுள்ளனர்.

முன்னேற்றிச் செல்ல முடிவெடுத்த இஸ்ரேல்

ஹெஸ்பொலாவுக்கு எதிராக இஸ்ரேலின் மிகப்பெரிய வெற்றி :  மேற்கத்திய நாடுகளின் வாதங்கள் புறக்கணிக்கப்பட்டது ஏன்?

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, ஹெஸ்பொலாவின் தலைவரைக் குறிவைத்து இந்தக் குண்டுவெடிப்பு நடத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது

ஹஸன் நஸ்ரல்லா கொல்லப்பட்டது, இஸ்ரேலின் மிகப்பெரிய வெற்றியைக் குறிக்கிறது. இஸ்ரேலின் 'பெரிய எதிரி' எனக் கருதப்பட்ட ஓர் அமைப்புக்கு எதிராக அவர்கள் பெற்றுள்ள இந்த மிகப்பெரிய வெற்றி அவர்களுக்கு மேலும் நம்பிக்கையூட்டும்.

இஸ்ரேல் மேலும் பல வீரர்களைத் திரட்டியுள்ளது. லெபனான் மீது தரைவழித் தாக்குதலைக்கூட மேற்கொள்ள அவர்கள் பரிசீலித்துக் கொண்டிருக்க வாய்ப்புகள் அதிகமுள்ளது.

லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதல் மிகப்பெரிய தீவிரத்தை எட்டக்கூடிய நடவடிக்கை இது. கடந்த 11 மாதங்களாக இரு தரப்பினருக்கும் இடையே மாறி மாறி மோதல்கள் இருந்து வருகின்றன. இருப்பினும் இஸ்ரேல் தரப்பு லெபனானுக்கு அதிக அழுத்தம் கொடுத்து வருகிறது.

இந்த மோதலில் முன்னேறிச் செல்ல இஸ்ரேல் முடிவெடுத்துள்ளது.

ஹமாஸுக்கு எதிரான போரைப் போலன்றி, இஸ்ரேல் 2006இல் இருந்து இந்தப் போரைத் திட்டமிடுகிறது. ஹமாஸ் உடனான மோதலை அவர்கள் எதிர்பார்க்கவில்லை. ஆனால் ஹெஸ்பொலாவுக்கு எதிரான போரை நீண்ட காலமாகத் திட்டமிட்டு வருகின்றனர். இப்போது அந்தத் திட்டங்களைச் செயல்படுத்துகிறார்கள்.

ஹெஸ்பொலாவிற்கு முன்னால் பெரிய சவால்கள் உள்ளன, இஸ்ரேலிய ராணுவம் ஹெஸ்பொலாவின் தலைவர் கொல்லப்பட்டு விட்டார் என்று சொல்வது உண்மையாக இருந்தாலும், இல்லாவிட்டாலும் இஸ்ரேல் அவர்களுக்கு முன் பெரிய சவால்களை ஏற்படுத்தியுள்ளது.

ஹெஸ்பொலா முன்பாகப் பெரிய சவால்கள் உள்ளன. இஸ்ரேலிய ராணுவம் தொடர்ந்து தனது தாக்குதல்களை நடத்தி வருகிறது. ஹெஸ்பொலா நிலைகள் மீது தொடர்ந்து குண்டுவீசி வருவதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.

 

நெதன்யாகுவின் அச்சுறுத்தல்

ஹெஸ்பொலாவுக்கு எதிராக இஸ்ரேலின் மிகப்பெரிய வெற்றி - புறக்கணிக்கப்பட்ட அமெரிக்காவின் ஆலோசனைகள்

பட மூலாதாரம்,GETTY IMAGES

முன்னதாக வெள்ளியன்று, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு குறைந்தபட்சம் 21 நாள் போர் நிறுத்தத்திற்கான முன்மொழிவு பற்றி விவாதிக்கத் தயாராக இருக்கிறார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அந்த நம்பிக்கை பொய்த்துப் போனது.

இந்த முன்மொழிவு இஸ்ரேலின் மிக முக்கியமான மேற்கத்திய நட்பு நாடுகளால் ஆதரிக்கப்பட்டது. அமெரிக்கா மற்றும் பிரான்ஸ் மூலம் முன்மொழியப்பட்டது.

ஆனால் நியூயார்க்கில் உள்ள ஐ.நா பொதுச் சபையில் நெதன்யாகு முன்வைத்த பிடிவாதமான மற்றும் ஆக்ரோஷமான உரையில், ராஜதந்திரம் பற்றி எதுவும் குறிப்பிடவில்லை.

இஸ்ரேலை "அழிக்க விரும்பும் மூர்க்கமான எதிரியுடன் போரிடுவதைத் தவிர இஸ்ரேலுக்கு வேறு வழியில்லை" என்றார் நெதன்யாகு.

ஹெஸ்பொலாவை தோற்கடித்து காஸாவில் ஹமாஸ் மீது முழுமையான வெற்றி கிடைத்தால் மட்டுமே இஸ்ரேலிய பணயக் கைதிகள் நாடு திரும்புவது உறுதி செய்யப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

நெதன்யாகு, படுகொலை செய்யப்படவிருக்கும் ஆட்டுக்குட்டியாக இருப்பதற்குப் பதிலாக, இஸ்ரேல் வெற்றியை நோக்கிச் சென்றுகொண்டிருப்பதாகக் கூறினார். இது நாஜி இனப்படுகொலையைக் குறிக்கும் இஸ்ரேலிய பழமொழி.

நெதன்யாகு உரை முடிந்ததும், லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் பெரிய தாக்குதல்கள் நடத்தப்பட்டன. எனவே, லெபனானில் போர் நிறுத்தம் பற்றிய விவாதம் இஸ்ரேலின் திட்டத்தில் இல்லை என்பதற்கான அறிகுறி இது.

எதிரிகள் எங்கிருந்தாலும், இஸ்ரேல் அவர்களைக் குறிவைத்துத் தாக்கும் என்ற நெதன்யாகுவின் அச்சுறுத்தலுக்குப் பிறகு உடனடியாக இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாகத் தெரிகிறது.

மறுபுறம், இந்தப் பெரிய தாக்குதல் குறித்து இஸ்ரேல் தங்களுக்கு எந்த முன் தகவலும் தெரிவிக்கவில்லை என்று பென்டகன் தெரிவித்துள்ளது.

 

தாக்குதலுக்கு ஒப்புதல் அளித்த நெதன்யாகு

ஹெஸ்பொலாவுக்கு எதிராக இஸ்ரேலின் மிகப்பெரிய வெற்றி - புறக்கணிக்கப்பட்ட அமெரிக்காவின் ஆலோசனைகள்

பட மூலாதாரம்,ISRAEL PRIME MINISTER'S OFFICE

படக்குறிப்பு, நியூயார்க்கில் உள்ள தனது ஹோட்டல் அறையில் இருந்து வான்வழித் தாக்குதலை நடத்த நெதன்யாகு அனுமதி அளித்ததாககக் கூறப்படுகிறது

ஜெருசலேமில் உள்ள பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள புகைப்படத்தில், பல தகவல் தொடர்பு சாதனங்களுக்கு மத்தியில் நெதன்யாகு அமர்ந்திருப்பதைக் காண முடிகிறது.

மேலும் அந்தப் புகைப்படம் நியூயார்க் நகரில் உள்ள ஹோட்டலில் இருந்து எடுக்கப்பட்டதாகத் தெரிகிறது. தாக்குதலுக்கு அவர் அனுமதி வழங்கிய தருணத்தின் படம் இது என்று அந்தப் படத்தின் தலைப்பில் எழுதப்பட்டுள்ளது.

அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆண்டனி பிளிங்கன் தான் பல மாதங்களாக முன்னிறுத்த முயன்று வரும் கொள்கையின் பக்கமே நிற்கிறார். அவர் பேச்சுவார்த்தைக்கு இன்னும் கால அவகாசம் இருப்பதாக நம்புகிறார். இருப்பினும், அந்தக் கூற்று நம்ப முடியாத ஒன்றாகத் தெரிகிறது.

இரு தரப்புக்கும் அழுத்தம் கொடுக்கும் வாய்ப்பு அமெரிக்காவுக்கு இல்லை. ஹெஸ்பொலா மற்றும் ஹமாஸ் அமைப்புகளை வெளிநாட்டு தீவிரவாத அமைப்புகளாக அறிவித்துள்ளதால் சட்டரீதியாக அவர்களுடன் பேச முடியாது.

மேலும், அமெரிக்க அதிபர் தேர்தலுக்கு சில வாரங்களே எஞ்சியிருக்கும் நிலையில், கடந்த ஆண்டைப் போல் இஸ்ரேலுக்கு அமெரிக்கா அழுத்தம் கொடுப்பதற்கான வாய்ப்புகள் மிகக் குறைவு.

 

அமெரிக்காவின் ஆலோசனைகளைப் புறக்கணித்த இஸ்ரேல்

ஹெஸ்பொலாவுக்கு எதிராக இஸ்ரேலின் மிகப்பெரிய வெற்றி :  மேற்கத்திய நாடுகளின் வாதங்கள் புறக்கணிக்கப்பட்டது ஏன்?

பட மூலாதாரம்,REUTERS

படக்குறிப்பு, சமீபத்திய தாக்குதலைத் தொடர்ந்து இடிபாடுகளில் மீட்புப் பணிகள் நடந்து வருகின்றன.

கடந்த 2023 அக்டோபரில் ஹமாஸ் தாக்குதல் நடத்திய அடுத்த சில நாட்களிலேயே, ஹெஸ்பொலா தாக்கப்பட வேண்டுமென்று இஸ்ரேல் அரசாங்கத்திலும் ராணுவத்திலும் உள்ள சக்திவாய்ந்த நபர்கள் வாதிட்டனர்.

இருப்பினும், அமெரிக்கா அவ்வாறு செய்ய வேண்டாம் என்று அவர்களை வற்புறுத்தியது. முழு பிராந்தியத்திலும் ஒரு போர் வெடிப்பது இஸ்ரேலின் பாதுகாப்பிற்குப் பயனளிக்காது என்று அமெரிக்கர்கள் வாதிட்டனர்.

ஆனால், கடந்த ஆண்டிலிருந்து இஸ்ரேல் போரிடும் விதம் குறித்த அமெரிக்க அதிபர் பைடனின் அறிவுறுத்தல்களை மீறுவதை நெதன்யாகு வழக்கமாக்கிக் கொண்டுள்ளார்.

பெய்ரூட் மீதான தாக்குதலில் பயன்படுத்தப்பட்ட போர் விமானங்கள் மற்றும் குண்டுகளை இஸ்ரேலுக்கு வழங்கிய போதிலும், அதிபர் பைடனும் அவரது குழுவினரும் வெறும் பார்வையாளர்களாகவே இருந்து வருகின்றனர்.

ஆதரவளிப்பது, ஆயுதங்களை வழங்குவது, ராஜதந்திர பாதுகாப்பு ஆகியவற்றின் மூலம் நெதன்யாகு மீது செல்வாக்கு செலுத்த வேண்டும் என்பதாகவே, இஸ்ரேலின் வாழ்நாள் ஆதரவாளராக கடந்த ஆண்டு முதல் அதிபர் பைடனின் கொள்கை இருந்தது.

இஸ்ரேல் போர்புரியும் விதத்தை மாற்றுவது மட்டுமின்றி, அதனுடன் இணைந்து சுதந்திர பாலத்தீனிய அரசை உருவாக்க வேண்டுமென்ற அமெரிக்காவின் திட்டத்தை நெதன்யாகு ஏற்றுக்கொள்வார் என்று ஜோ பைடன் நம்பினார்.

இந்தப் போரில் பல பாலத்தீன மக்கள் கொல்லப்படுவதாகவும், இந்தப் போர் மக்களுக்குப் பெரும் துன்பத்தை அளிப்பதாகவும் அதிபர் பைடன் தொடர்ந்து வலியுறுத்தினார். ஆனாலும், நெதன்யாகு பைடனின் ஆலோசனைகளை முற்றிலுமாக நிராகரித்தார்.

 

ஹெஸ்பொலாவின் நிலை என்ன?

ஹெஸ்பொலாவுக்கு எதிராக இஸ்ரேலின் மிகப்பெரிய வெற்றி - புறக்கணிக்கப்பட்ட அமெரிக்காவின் ஆலோசனைகள்

பட மூலாதாரம்,GETTY IMAGES

பெய்ரூட் மீதான தாக்குதலைத் தொடர்ந்து, மத்தியக் கிழக்கில் பெரியளவிலான போரைத் தவிர்ப்பதற்கு ஆதரவு மற்றும் ராஜதந்திரத்தின் கலவை தேவை என்று பிளிங்கன் தனது கருத்தை மீண்டும் வலியுறுத்தினார்.

ஆனால், நிலைமை அமெரிக்காவின் கையை மீறிவிட்டதால், அவர்களின் பார்வை நம்பத்தகுந்ததாகத் தெரியவில்லை.

இனி வரும் காலங்களில் மிகப்பெரிய முடிவுகள் எடுக்கப்படும்.

முதலில், ஹெஸ்பொலா தனது ஆயுதங்களை எவ்வாறு பயன்படுத்தப் போகிறது என்பதைத் தீர்மானிக்க வேண்டும். அதைப் பயன்படுத்தி இஸ்ரேல் மீது பெரிய தாக்குதலை நடத்துவார்களா? மீதமுள்ள ராக்கெட்டுகள் மற்றும் ஏவுகணைகளைப் பயன்படுத்தாவிட்டால், இஸ்ரேல் அவற்றை அழித்துவிடும் என்று அவர்கள் நினைக்கலாம்.

இஸ்ரேல் தரப்பு அதன் முடிவுகளின் மோசமான விளைவுகளைச் சந்திக்க வேண்டியிருக்கும். அவர்கள் ஏற்கெனவே லெபனானில் தரைவழி ராணுவ நடவடிக்கையைத் தொடங்குவது பற்றிப் பேசியுள்ளனர். மேலும் அவர்கள் இன்னும் தேவையான படைகளை நிலைநிறுத்தவில்லை என்றாலும், அவர்களின் ராணுவம் சனிக்கிழமையன்று "ஒரு பெரியளவிலான நடவடிக்கைக்குத் தயாராக இருப்பதாக” கூறியது.

லெபனானில் உள்ள சிலர் தரைவழித் தாக்குதலில் இஸ்ரேலிய ராணுவத்திற்குப் பெருமளவிலான சேதத்தை ஹெஸ்பொலா ஏற்படுத்தக்கூடும் என்று நம்புகின்றனர்.

மேற்கத்திய ராஜ்ஜீய அதிகாரிகள் ராஜதந்திர தீர்வை ஏற்றுக்கொள்ளுமாறு இஸ்ரேலுக்கு வேண்டுகோள் விடுப்பதன் மூலம் பிரச்னையைச் சரிசெய்ய நம்புகின்றனர். இந்த ராஜ்ஜீய அதிகாரிகளில் சிலர் இஸ்ரேலின் உறுதியான நட்பு நாடுகளாகவும் உள்ளனர்.

இப்போது இந்த அதிகாரிகள் பெரும் ஏமாற்றத்துடனும், ஆதரவற்ற உணர்வுடனும் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, நியாயம் said:

அமெரிக்கா வங்குரோத்து அடிக்கும் காலமும் வரலாம்.

🤣................

அமெரிக்கா வங்குரோத்து அடிக்கக் கூடாது என்று தான் உலகம் முழுக்க அங்கங்கே இப்படி ஆள் வைத்து அடித்துக் கொண்டு திரிகிறது போல. எத்தனை கையாட்கள்.............

நிலைமை கை மீறினால், இரகசியமாக அச்சடிக்க வேண்டியது தான்......... அதை வாங்கிப் பதுக்கத் தான் எத்தனை பேர்கள் இருக்கின்றார்கள்........  

43 minutes ago, வாலி said:

இரானை விட செத்தகிளியின் நிலைதான் பரிதாபம்!😂

அந்த ஆள் சண்டையில் சாகாது, நஞ்சூட்டிச் சாகாது.......... இது தெரிந்து தான் சாகப் போகுது...........🤣.

  • கருத்துக்கள உறவுகள்+

ஐயோ மாமா... போய்ட்டாரே ....

🤣🤣

"புதிய ஒழுங்கு" வீசுது....

 

Edited by நன்னிச் சோழன்

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, நியாயம் said:

 

பெரும் போர்ஏற்படுமாயின் வெளிநாட்டு சீவியத்தை விட இலங்கை பாதுகாப்பான நாடோ என எண்ணத்தோன்றுகின்றது.

ஹா ஹா😁....................

  • கருத்துக்கள உறவுகள்

ஹமாஸோ ஹிஸ்புள்ளாவோ உருவாக்கப்பட்டது பலஸ்த்தீன மக்களின் விடுதலை ஒன்றை நோக்கமாகக் கொண்டே. இஸ்ரேலை முற்றாக அழிப்பதென்பது அவர்களின் இன்னொரு நோக்கமாக இருந்தாலும் பலஸ்த்தீன மக்களின் விடுதலையும், சுமூக வாழ்வும் இவ் அமைப்புக்களின் முக்கிய நோக்கமாகும். இப்போது ஹிஸ்புள்ளாவின் தலைவரையும், ஹமாஸின் தலைவரையும் இஸ்ரேலும் கொன்றிருக்கிறது. இஸ்ரேலைப் பொறுத்தவரையில் தனது முக்கிய எதிரிகளில் இருவரை அது கொன்றிருப்பதாக ஆனந்தம் அடையலாம். ஆனால், பலஸ்த்தீன மக்களுக்கு? தென் லெபனானை இஸ்ரேலின் ஆக்கிரமிப்பில் இருந்து ஹிஸ்புள்ளா காத்துக்கொள்ளும் என்று நம்பியிருந்த லெபனானிய மக்களுக்கு? உலகெங்கும் பரந்து வாழும் பலஸ்த்தீன, லெபனான் புலம்பெயர் மக்களுக்கு? இது ஒரு பாரிய இழப்புத்தான். தமது பெருத்த நம்பிக்கைகளில் பல ஒரே நேரத்தில் சாய்க்கப்பட்டது தாங்கொணாத் துயர்தான்.

இவர்களின் இழப்போடு எமது தலைவரும் போராளிகளும் நினைவில் வருகிறார்கள். ஏனென்றால், பலஸ்த்தீனர்களும் எம்மைப்போன்றே ஆக்கிரமிப்பை எதிர்கொண்டு நிற்கும் ஒரு இனம்தான். 

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, நியாயம் said:

 

பெரும் போர்ஏற்படுமாயின் வெளிநாட்டு சீவியத்தை விட இலங்கை பாதுகாப்பான நாடோ என எண்ணத்தோன்றுகின்றது.

அங்கேயும் சிவப்பு ஆட்சி  எங்கன்ட காலகஸ்டத்திற்😅கு அமெரிக்காரனை தேடி சீனா வந்திட்டால்

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ரஞ்சித் said:

பலஸ்த்தீன மக்களின் விடுதலையும், சுமூக வாழ்வும் இவ் அமைப்புக்களின் முக்கிய நோக்கமாகும்

உலகம் பூராவும் இஸ்லாம் பரவ வேணும் என்ற அவர்களின் இன்னொரு நோக்கமும் அடங்கும்.

 

2 hours ago, ரஞ்சித் said:

இவர்களின் இழப்போடு எமது தலைவரும் போராளிகளும் நினைவில் வருகிறார்கள். ஏனென்றால், பலஸ்த்தீனர்களும் எம்மைப்போன்றே ஆக்கிரமிப்பை எதிர்கொண்டு நிற்கும் ஒரு இனம்தான்

இதில் ஒர் வித்தியாசம் உண்டு பலஸ்தீனருக்காக ஏனைய முஸ்லீம்கள் போராடினார்கள் ஆனால் எமது மண்ணில் எமது போராளிகள் மட்டுமே போராடினார்கள்....நாம் இனத்திற்காக போராடியவ்ர்கள் அவர்கள் மதத்திற்காக போராடுகிறார்கள் 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
8 hours ago, நன்னிச் சோழன் said:

ஐயோ மாமா... போய்ட்டாரே ....

🤣🤣

"புதிய ஒழுங்கு" வீசுது....

 

எமக்கு/உலகிற்கு தடையாக இருந்த மாமா போய் விட்டார்.
இனி உலமெங்கும்  வசந்த காலம்.

எமக்கு/உலகிற்கு தடையாக இருந்த மாமா போய் விட்டார்.
இனி உலகமெங்கும்  வசந்த காலம்.

  • கருத்துக்கள உறவுகள்

உலகம் பல பயங்கரவாதிகளைத் தொடர்ச்சியாக இழந்து வருகின்றது! கவலைதான் என்ன செய்வது?! செத்தகிளி தான் பாவம்!

Edited by வாலி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஹெஸ்பொலா தலைவர் மரணம்: இஸ்ரேலை பழிவாங்க இரான் சூளுரை - மத்திய கிழக்கில் என்ன நடக்கிறது?

இஸ்ரேல் - ஹெஸ்பொலா, நஸ்ரல்லா

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, ஹஸன் நஸ்ரல்லா
28 செப்டெம்பர் 2024
புதுப்பிக்கப்பட்டது 51 நிமிடங்களுக்கு முன்னர்

லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஹெஸ்பொலா தலைவர் ஷேக் ஹசன் நஸ்ரல்லா கொல்லப்பட்டுவிட்டதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது. இதைத் தனது டெலிகிராம் பதிவில் ஹெஸ்பொலா உறுதி செய்துள்ளது.

இதைத் தொடர்ந்தும், லெபனானில் ஹெஸ்பொலா இலக்குகளைக் குறிவைத்து தாக்கி வருவதாக இஸ்ரேல் ராணுவம் கூறியுள்ளது. அதேநேரத்தில், ஹெஸ்பொலா தரப்பும் இஸ்ரேலுக்கு எதிராக ராக்கெட்டுகளை வீசி தாக்குதல் நடத்தி வருகிறது.

மறுபுறம், நஸ்ரல்லா மரணத்திற்காக, இஸ்ரேலை பழிவாங்குவோம் என்று இரான் மிரட்டல் விடுத்துள்ளது.

மத்திய கிழக்கில் என்ன நடக்கிறது? அந்த பிராந்தியத்தில் உள்ள அமெரிக்க துருப்புகளுக்கு பைடன் பிறப்பித்துள்ள உத்தரவு என்ன?

ரகசிய இடத்தில் காமனெயி

ஹெஸ்பொலா தலைவர் ஹசன் நஸ்ரல்லா மரணத்திற்கு பழிவாங்குவோம் என்று இரான் உச்ச தலைவர் ஆயதுல்லா அலி காமனெயி சூளுரைத்துள்ளார். நஸ்ரல்லா மறைவை முன்னிட்டு இரானில் 5 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படுகிறது.

நஸ்ரல்லா கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, ஆயதுல்லா அலி காமனெயி பாதுகாப்பான இடத்திற்கு சென்றுவிட்டதாக ராய்ட்டர்ஸ் முகமை செய்தி வெளியிட்டுள்ளது. காமனெயி ரகசிய இடத்திற்கு சென்றுவிட்டதாக 2 அதிகாரிகளை மேற்கோள் காட்டி ராய்ட்டர்ஸ் குறிப்பிட்டுள்ளது. ஹசன் நஸ்ரல்லா மரணத்தைத் தொடர்ந்து அடுத்தக்கட்டமாக என்ன செய்யலாம் என்பது குறித்து ஹெஸ்பொலாவுடன் இரான் ஆலோசித்து வருவதாகவும் அந்த செய்தி கூறுகிறது.

இஸ்ரேல் - இரான், ஹெஸ்பொலா

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, ஆயதுல்லா அலி காமனெயி, இரான் உச்ச தலைவர்

ஐநா பாதுகாப்பு அவை கூட்டத்திற்கு இரான் அழைப்பு

ஹெஸ்பொலா தலைவர் ஹசன் நஸ்ரல்லா கொல்லப்பட்டதையடுத்து, ஐ.நா பாதுகாப்புச் சபையின் அவசரக் கூட்டத்திற்கு இரான் அழைப்பு விடுத்துள்ளது. அதுதொடர்பாக, ஐ.நா. பாதுகாப்பு அவையின் 15 உறுப்பினர்களுக்கும் ஐ.நா.வுக்கான இரான் தூதர் அமீர் இரவானி கடிதம் எழுதியுள்ளார்.

ஹசன் நஸ்ரல்லா கொல்லப்பட்டதை உறுதி செய்த ஹெஸ்பொலா

ஹசன் நஸ்ரல்லா கொல்லப்பட்டதை ஹெஸ்பொலா உறுதி செய்துள்ளது. அதுகுறித்த அதன் நீண்ட டெலிகிராம் பதிவில், இஸ்ரேலுக்கு எதிரான சண்டையைத் தொடரப் போவதாகவும் கூறியுள்ளது.

அவர் பெய்ரூட்டில் வான்வழித் தாக்குதல்களின்போது இறந்துவிட்டார் என்று ஹெஸ்பொலா தனது டெலிகிராம் பதிவில் உறுதி செய்துள்ளது. “தெற்கு புறநகர்ப் பகுதியில் நடந்த தாக்குதலில்” அவர் உயிரிழந்ததாகத் தெரிவித்துள்ளது.

அதோடு, இஸ்ரேலுக்கு எதிரான அதன் சண்டையைத் தொடரப் போவதாகவும் ஹெஸ்பொலா “உறுதிமொழி அளித்துள்ளது” மற்றும் “காஸா, பாலத்தீனத்திற்குத் தொடர்ந்து ஆதரவளிப்பதாகவும், லெபனான் மற்றும் அதன் உறுதியான, மரியாதைக்குரிய மக்களைப் பாதுகாப்பதாகவும்” உறுதியளித்துள்ளது.

ஹெஸ்பொலா தலைவருக்கு இஸ்ரேல் குறி

முன்னதாக, வெள்ளிக்கிழமை மாலையில் ஹெஸ்பொலா தலைமையகத்தை குறிவைத்து துல்லிய தாக்குதல் நடத்தியதாக இஸ்ரேல் ராணுவ செய்தி தொடர்பாளர் டேனியல் ஹகாரி தெரிவித்திருந்தார். இந்த தாக்குதலால் என்ன பலன் கிடைத்தது என்பது குறித்து ஆய்வு செய்து வருவதாக அவர் கூறினார்.

இஸ்ரேல் நடத்திய இந்த தாக்குதலின் இலக்கு ஹெஸ்பொலா தலைவர் ஹஸன் நஸ்ரல்லா என்ற பிபிசியின் அமெரிக்க கூட்டாளியான சிபிஎஸ் உள்ளிட்ட அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன. இருப்பினும், இஸ்ரேல் தாக்குதலுக்கு இலக்கான கட்டடத்தில் நஸ்ரல்லா இருந்தாரா என்பது குறித்து எந்தவொரு உறுதியான தகவலும் இல்லாமல் இருந்தது.

ஹெஸ்பொலா இயக்கத்தின் மற்ற மூத்த தலைவர்கள் கொல்லப்பட்டதாக லெபனான் ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியை உறுதி செய்ய முடியவில்லை என்று அமெரிக்க அதிகாரி தெரிவித்துள்ளார்.

இந்த தாக்குதல் குறித்து இஸ்ரேல் தரப்பில் முன்கூட்டியே தங்களுக்கு எதுவும் தெரிவிக்கப்படவில்லை என்றும், இந்த மோதல் மேலும் தீவிரமாகும் வாய்ப்பு இருப்பது குறித்து அமெரிக்கா கவலை கொண்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

 
இஸ்ரேல் - ஹெஸ்பொலா, நஸ்ரல்லா

பட மூலாதாரம்,REUTERS

ஹஸன் நஸ்ரல்லா கொல்லப்பட்டதாக இஸ்ரேல் அறிவிப்பு

இந்நிலையில் ஹெஸ்பொலா தலைவர் ஷேக் ஹசன் நஸ்ரல்லா கொல்லப்பட்டதாக இஸ்ரேல் பாதுகாப்புப் படை (IDF-ஐடிஎப்) தெரிவித்துள்ளது.

ஐடிஎப்-இன் எக்ஸ் பக்கத்தில் பகிரப்பட்ட ஒரு அறிக்கையில், "ஹசன் நஸ்ரல்லா இனி உலகத்தை அச்சுறுத்த முடியாது." என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெய்ரூட்டில் ஒரே இரவில் நடந்த தொடர்ச்சியான இஸ்ரேலிய தாக்குதல்களைத் தொடர்ந்து இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. நஸ்ரல்லா மற்றும் பிற ஹெஸ்பொலா தளபதிகளை குறிவைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக இஸ்ரேல் கூறியது.

ஹெஸ்பொலாவின் மத்திய தலைமையகத்தின் மீது இஸ்ரேலிய போர் விமானங்கள் குறிவைத்து தாக்குதல் நடத்தியதாகவும், ஹெஸ்பொலாவின் இந்த தளம் பெய்ரூட்டின் தாஹிஹ் பகுதியில் உள்ள குடியிருப்பு கட்டிடத்தின் கீழே செயல்பட்டு வந்ததாகவும் ஐடிஎப் கூறியது.

Twitter பதிவை கடந்து செல்ல
எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

Twitter பதிவின் முடிவு

 

‘இஸ்ரேலை யார் அச்சுறுத்தினாலும் விடமாட்டோம்’

ஹெர்சி ஹலேவி

பட மூலாதாரம்,IDF

படக்குறிப்பு, ஐடிஎப் லெப்டினன்ட் ஜெனரல் ஹெர்சி ஹலேவி

இஸ்ரேலிய பாதுகாப்பு படையின் (ஐடிஎப்) தலைமை அதிகாரி, லெப்டினன்ட் ஜெனரல் ஹெர்சி ஹலேவி, ஒரு காணொளியை வெளியிட்டுள்ளார்.

"நாங்கள் கூற வரும் செய்தி மிகவும் தெளிவானது. இஸ்ரேலிய குடிமக்களை யார் அச்சுறுத்தினாலும், அவர்களை எப்படி பிடிப்பது என எங்களுக்கு தெரியும். வடக்கு, தெற்கு அல்லது அதற்கு அப்பால் என அவர்கள் எங்கு சென்றாலும் சரி" என்று அதில் அவர் கூறியுள்ளார்.

ஹெஸ்பொலா தலைவர் ஹசன் நஸ்ரல்லா கொல்லப்பட்டதாக அறிக்கை வெளியிட்ட சிறிது நேரத்திலேயே இந்த காணொளி ஐடிஎப்-இன் சமூக வலைதளப் பக்கங்களில் வெளியிடப்பட்டது.

"பல்வேறு கட்ட ஆயுத்தப்பணிகளுக்கு பிறகு, இஸ்ரேலிய ராணுவம், நஸ்ரல்லா மற்றும் ஹெஸ்பொலாவின் தலைமையகத்தை குறிவைத்து தாக்குதல் திட்டத்தை செயல்படுத்தியது" என்று லெப்டினன்ட் ஜெனரல் ஹெர்சி ஹலேவி கூறியுள்ளார்.

"மிகச்சரியான நேரத்தில், மிகவும் துல்லியமான முறையில் அந்தத் தாக்குதலை நாங்கள் மேற்கொண்டோம். ஆனால் இது முடிவல்ல என்பதில் தெளிவாக இருக்கிறோம். முன்னோக்கிச் செல்லும் திறன் எங்களிடம் அதிகமாகவே உள்ளது" என்றும் அவர் கூறினார்.

‘தாக்குதலில் ஹெஸ்பொலாவின் தளபதி கொலை’- இஸ்ரேல்

பட மூலாதாரம்,REUTERS

‘ஹெஸ்பொலாவின் தளபதி கொலை’- இஸ்ரேல்

தெற்கு லெபனானில், ஹெஸ்பொலாவின் ஏவுகணைப் பிரிவு தளபதி முஹம்மது அலி இஸ்மாயில் மற்றும் துணைத் தலைவர் ஹுசைன் அஹ்மத் இஸ்மாயில் ஆகியோர் டிரோன் தாக்குதலில் கொல்லப்பட்டதாக இஸ்ரேலிய ராணுவம் தெரிவித்துள்ளது.

இஸ்ரேலிய பிரதேசத்தை நோக்கி ராக்கெட்டுகளை ஏவியது மற்றும் மத்திய இஸ்ரேலை நோக்கி புதன்கிழமை அன்று ஏவுகணைகளைக் கொண்டு தாக்கியது உட்பட இஸ்ரேல் மீதான ஏராளமான தாக்குதல்களின் பின்னணியில் அலி இஸ்மாயில் இருந்தார் என்று இஸ்ரேலிய ராணுவம் கூறியது.

தாக்குதலைப் பற்றிய கூடுதல் விவரங்கள் எதுவும் தெரிவிக்கப்படவில்லை.

இரான் கூறியது என்ன?

ஆயத்துல்லா அலி காமனெயி

பட மூலாதாரம்,REUTERS

படக்குறிப்பு,இரானின் உச்ச தலைவர் ஆயத்துல்லா அலி காமனெயி

லெபனானின் பெய்ரூட்டில் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலுக்கு இரானின் உச்ச தலைவர் ஆயத்துல்லா அலி காமனெயி கண்டனம் தெரிவித்துள்ளார்.

இரானின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்ட அறிக்கையில் அவர் இதை தெரிவித்துள்ளார். ஆனால் தனது அறிக்கையில் நஸ்ரல்லாவை குறித்து அவர் ஏதும் குறிப்பிடவில்லை.

லெபனானின் அப்பாவி மக்கள் கொல்லப்பட்டதைக் கண்டித்த அவர், "இது இஸ்ரேல் தலைவர்களின் குறுகிய பார்வை மற்றும் முட்டாள்தனமான கொள்கைகளை நிரூபிக்கிறது" என்று கூறினார்.

“லெபனானில் உள்ள ஹெஸ்பொலாவின் தளங்களில் குறிப்பிடத்தக்க சேதத்தை ஏற்படுத்தும் அளவுக்கு தங்களுக்கு வலிமையில்லை என்பதை இஸ்ரேலிய குற்றவாளிகள் அறிந்திருக்க வேண்டும்" என்றும் அவர் கூறினார்.

பிராந்தியத்தில் உள்ள அனைத்து சக்திகளும் ஹெஸ்பொலாவை ஆதரித்து, உடன் நிற்க வேண்டும் என்று ஆயத்துல்லா அலி காமனெயி தெரிவித்தார்.

 
இஸ்ரேல் - ஹெஸ்பொலா, நஸ்ரல்லா

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, சித்தரிப்புப் படம்

அமெரிக்கப் படைகளுக்கு புதிய உத்தரவு

மத்திய கிழக்கில் நிலைமையை ஆய்வு செய்து அதற்கேற்ப, அங்குள்ள அமெரிக்கப் படையினரை உஷாராக இருக்கச் செய்யுமாறு அமெரிக்க ராணுவ தலைமையகமான பென்டகனை அதிபர் பைடன் உத்தரவிட்டிருப்பதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

"மத்திய கிழக்கில் நிலைமையை முழுமையாக ஆராய்ந்து, அந்த பிராந்தியத்தில் அமெரிக்காவின் நலன்களை காக்கவும், தற்காப்பை உறதிப்படுத்தவும் தேவைக்கேற்ப அமெரிக்கப் படைகளை உஷார் நிலையில் வைத்திருக்க பென்டகனுக்கு பைடன் உத்தரவிட்டுள்ளார்" என்கிறது வெள்ளை மாளிகை அறிக்கை.

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் உள்ள அமெரிக்க தூதரகங்களும் தேவையான தற்காப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பைடன் உத்தரவிட்டுள்ளார்.

‘எந்த சக்தியாலும் இஸ்ரேலைத் தடுக்க முடியாது’

ஜோசப் பொரெல்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளியுறவுத் தலைவர் ஜோசப் பொரெல்

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை அமெரிக்கா உட்பட எந்த சக்தியாலும் ‘தடுக்க முடியாது’ என்று ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளியுறவுத் தலைவர் ஜோசப் பொரெல் தெரிவித்துள்ளார்.

ஜோசப் பொரெல் நியூயார்க்கில் செய்தியாளர்களிடம் பேசியபோது, "நாங்கள் செய்வது போர்நிறுத்தத்திற்கு தேவையான அனைத்து அழுத்தங்களையும் கொடுப்பது தான். ஆனால் காஸாவில் அல்லது மேற்குக் கரையில் நெதன்யாகுவின் நடவடிக்கைகளை யாராலும் தடுக்க முடியாது என்று தான் தெரிகிறது" என்றார்.

“ஹெஸ்பொலா அழிக்கப்படும் வரை இஸ்ரேலிய ராணுவம் தனது நடவடிக்கைகளை நிறுத்தாது” என்று நெதன்யாகு தெளிவுபடுத்தியதாக பொரெல் கூறினார்.

21 நாள் போர் நிறுத்தத்திற்கான அமெரிக்கா மற்றும் பிரான்ஸின் அழைப்பையும் அவர் ஆதரித்து பேசினார்.

 

மத்திய கிழக்கில் என்ன நடக்கிறது?

ஹியூகோ பச்சேகா

பிபிசி நிருபர், பெய்ரூட்டில் இருந்து

பெய்ரூட்டில் நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில், ஹெஸ்பொலாவின் செல்வாக்கு மிக்க நீண்டகால தலைவர் ஹசன் நஸ்ரல்லா கொல்லப்பட்டார் என்ற இஸ்ரேலிய ராணுவத்தின் செய்தியை லெபனான் இன்னும் முழுமையாக ஏற்றுக்கொள்ளவில்லை, ஹெஸ்பொலாவிடமிருந்தும் அதிகாரப்பூர்வ அறிக்கை எதுவும் வரவில்லை.

இது மிகவும் குறிப்பிடத்தக்கது.

இங்கிலாந்து, அமெரிக்கா மற்றும் பிற நாடுகளால் பயங்கரவாத அமைப்பாகக் கருதப்படும் ஹெஸ்பொலா, வெறும் ஒரு போராளி இயக்கம் மட்டுமல்ல அதுவொரு அரசியல் கட்சியும் கூட. இந்த அமைப்புக்கு லெபனான் நாடாளுமன்றத்தில் பிரதிநிதித்துவம் உள்ளது மற்றும் அரசாங்கத்தின் ஒரு அங்கமாகவும் உள்ளது.

ஒரு குறிப்பிடத்தக்க ஆதரவுடன், லெபனான் சமூகத்தின் ஒரு பகுதியாக ஹெஸ்பொலா விளங்குகிறது.

ஹெஸ்பொலா இந்த தாக்குதலுக்கு எவ்வாறு பதிலளிக்கப் போகிறது என்பது தெரியாது. இஸ்ரேலுக்குள் ஊடுருவி சென்று தாக்கக்கூடிய துல்லியமான ஏவுகணைகள் உட்பட, தங்களிடம் இருக்கும் அதிநவீன ஏவுகணைகளை ஹெஸ்பொலா இன்னும் பயன்படுத்தவில்லை.

இஸ்ரேலுடனான ஒரு பெரிய போருக்கு அக்குழு இதுவரை ஆர்வம் காட்டாமல் இருந்தது, அத்தகைய ஒரு போர் அதன் உள்கட்டமைப்பை அழிக்க வழிவகுக்கும் மற்றும் அதன் முக்கிய தலைவர்களின் படுகொலைக்கு வழிவகுக்கும் என்பதால். ஆனால் இப்போதும் அதுதான் நடந்துள்ளது எனும்போது, அடுத்து என்ன என்ற மிகப்பெரிய கேள்வி உள்ளது.

இஸ்ரேலுக்கும் ஹெஸ்பொலாவுக்கும் இடையே ஏதேனும் மிகப்பெரிய மோதல் வெடித்தால், அத்தகைய சூழ்நிலை பிராந்தியத்தில் உள்ள மற்ற இரானிய ஆதரவு குழுக்களையும் இந்த சண்டையில் ஹெஸ்பொலாவுடன் சேர கட்டாயப்படுத்தலாம் என்ற கவலையும் உள்ளது.

கணிக்க முடியாத விளைவுகளுடன் கூடிய மிகவும் ஆபத்தான தருணம் மத்திய கிழக்கில் நிலவுகிறது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, ரஞ்சித் said:

ஹமாஸோ ஹிஸ்புள்ளாவோ உருவாக்கப்பட்டது பலஸ்த்தீன மக்களின் விடுதலை ஒன்றை நோக்கமாகக் கொண்டே. இஸ்ரேலை முற்றாக அழிப்பதென்பது அவர்களின் இன்னொரு நோக்கமாக இருந்தாலும் பலஸ்த்தீன மக்களின் விடுதலையும், சுமூக வாழ்வும் இவ் அமைப்புக்களின் முக்கிய நோக்கமாகும். இப்போது ஹிஸ்புள்ளாவின் தலைவரையும், ஹமாஸின் தலைவரையும் இஸ்ரேலும் கொன்றிருக்கிறது. இஸ்ரேலைப் பொறுத்தவரையில் தனது முக்கிய எதிரிகளில் இருவரை அது கொன்றிருப்பதாக ஆனந்தம் அடையலாம். ஆனால், பலஸ்த்தீன மக்களுக்கு? தென் லெபனானை இஸ்ரேலின் ஆக்கிரமிப்பில் இருந்து ஹிஸ்புள்ளா காத்துக்கொள்ளும் என்று நம்பியிருந்த லெபனானிய மக்களுக்கு? உலகெங்கும் பரந்து வாழும் பலஸ்த்தீன, லெபனான் புலம்பெயர் மக்களுக்கு? இது ஒரு பாரிய இழப்புத்தான். தமது பெருத்த நம்பிக்கைகளில் பல ஒரே நேரத்தில் சாய்க்கப்பட்டது தாங்கொணாத் துயர்தான்.

இவர்களின் இழப்போடு எமது தலைவரும் போராளிகளும் நினைவில் வருகிறார்கள். ஏனென்றால், பலஸ்த்தீனர்களும் எம்மைப்போன்றே ஆக்கிரமிப்பை எதிர்கொண்டு நிற்கும் ஒரு இனம்தான். 

 

இங்கு பெரியதொரு வித்தியாசம் என்ன என்றால் ஹமாஸ்/ஹிஸ்புல்லா ஆயுதங்களை மெளனிக்கபோவது இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, நியாயம் said:

 

இங்கு பெரியதொரு வித்தியாசம் என்ன என்றால் ஹமாஸ்/ஹிஸ்புல்லா ஆயுதங்களை மெளனிக்கபோவது இல்லை.

அவர்கள் அடம் பிடிச்சாலும் இஸ்ரேல் மெளனிக்க வைக்கும் என்கிறீர்களா?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நஸ்ரல்லா மரணம்: ஹெஸ்பொலா, இஸ்ரேல், இரான் அடுத்து என்ன செய்யக் கூடும்?

இஸ்ரேல் - ஹெஸ்பொலா, இரான், அமெரிக்கா

பட மூலாதாரம்,REUTERS

படக்குறிப்பு, ஹெஸ்பொலா தலைவர் ஹசன் நஸ்ரல்லா, இஸ்ரேலிய தாக்குதலில் கொல்லப்பட்டார் கட்டுரை தகவல்
  • எழுதியவர், பிராங்க் கார்ட்னர்
  • பதவி, பிபிசி நிருபர்
  • 29 செப்டெம்பர் 2024, 06:13 GMT
    புதுப்பிக்கப்பட்டது 33 நிமிடங்களுக்கு முன்னர்

ஹெஸ்பொலா தலைவர் ஹசன் நஸ்ரல்லா உயிரிழந்திருப்பது, லெபனானில் அந்த அமைப்பை குறிவைத்து இஸ்ரேல் நடத்திவரும் தாக்குதலில் ஒரு குறிப்பிடத்தக்க நிகழ்வாகும்.

பேரழிவை ஏற்படுத்தக் கூடிய முழு அளவிலான மோதலுக்கு அருகே இந்தப் பிராந்தியத்தை அது கொண்டுவந்துள்ளது. இந்த மோதலுக்குள் இரானும், அமெரிக்காவும் குதிக்கவும் வாய்ப்பு உள்ளது.

லெபனானின் சக்தி வாய்ந்த ஆயுத அமைப்பான 'ஹெஸ்பொலா' வின் தலைவர் ஹசன் நஸ்ரல்லா இஸ்ரேலிய தாக்குதலில் உயிரிழந்தார்.

வெள்ளிக்கிழமை இரவு நடந்த தாக்குதலில் நஸ்ரல்லா உட்பட பல ஹெஸ்பொலா தளபதிகள் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் கூறியுள்ளது.

 

நீண்ட நேரத்திற்குப் பிறகு ஹெஸ்பொலா இந்த செய்தியை உறுதிப்படுத்தியது. "இந்தப் பிராந்தியத்தின் தெற்கில் நிகழ்ந்த ஒரு துரோக சியோனிச தாக்குதலில் நஸ்ரல்லா இறந்தார்" என்று அது கூறியது.

இஸ்ரேலுக்கு எதிரான தனது போராட்டம் தொடரும் என்றும் அந்த அமைப்பு தெளிவுபடுத்தியுள்ளது.

இஸ்ரேலுக்கும் ஹெஸ்பொலாவுக்கும் இடையே நடந்து வரும் மோதலில் அடுத்து என்ன நடக்கும் என்பது மூன்று முக்கியமாக அடிப்படைக் கேள்விகளை சார்ந்துள்ளது.

இஸ்ரேல் - ஹெஸ்பொலா, இரான், அமெரிக்கா

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, தென்கிழக்கு பெய்ரூட்டில் இஸ்ரேலிய வான்வழித் தாக்குதலுக்குப் பிறகான காட்சியை பார்வையிடும் ஒரு நபர்

ஹெஸ்பொலா என்ன செய்யும்?

இதில் முதல் கேள்வி ஹெஸ்பொலா தொடர்பானது. இனி அந்த அமைப்பு என்ன செய்யும்?

இஸ்ரேலுடனான சமீபத்திய மோதலில், ஹெஸ்பொலா ஒன்றன்பின் ஒன்றாக பெரும் இழப்பை சந்தித்து வருகிறது.

பத்துக்கும் மேற்பட்ட தளபதிகள் கொல்லப்பட்டது அதன் உயர்மட்ட கட்டமைப்பை அழித்துவிட்டது. சமீப நாட்களில் நிகழ்ந்த, பேஜர் மற்றும் வாக்கி-டாக்கி வெடிப்புகள் அதன் தகவல் தொடர்பு அமைப்பை சேதப்படுத்தியுள்ளன.

இது தவிர இஸ்ரேலிய விமானத் தாக்குதலில் ஹெஸ்பொலாவின் பெருமளவு ஆயுதங்கள் அழிக்கப்பட்டுள்ளன.

"ஹசன் நஸ்ரல்லாவின் மரணம் குறிப்பிடத்தக்க விளைவுகளை ஏற்படுத்தும். இது அந்த அமைப்பின் ஸ்திரத்தன்மையை சீர்குலைக்கக் கூடும். சிறிது காலத்திற்கு அதன் அரசியல் மற்றும் ராணுவ உத்திகளில் மாற்றம் ஏற்படக்கூடும்,” என்று அமெரிக்காவைச் சேர்ந்த மத்திய கிழக்கு பாதுகாப்பு நிபுணர் முகமது அல்-பாஷா கூறுகிறார்.

ஆனால் இஸ்ரேலை கடுமையாக எதிர்க்கும் இந்த அமைப்பு திடீரென தோல்வியை ஏற்றுக்கொண்டு இஸ்ரேலின் நிபந்தனைகளின்படி சமாதானத்திற்காக முன்னேறும் என்று எதிர்பார்ப்பது தவறாக இருக்கலாம்.

போராட்டத்தை தொடரப் போவதாக ஹெஸ்பொலா ஏற்கனவே சூளுரைத்துள்ளது. இந்த அமைப்பில் இன்னும் ஆயிரக்கணக்கான போராளிகள் உள்ளனர். அவர்களில் பலருக்கு சமீபத்தில் சிரியாவில் சண்டையிட்ட அனுபவம் உள்ளது. பழிவாங்க வேண்டும் என்றும் அவர்கள் கூறி வருகின்றனர்.

இஸ்ரேல் - ஹெஸ்பொலா, இரான், அமெரிக்கா

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, ஜூலை மாதம் தெஹ்ரானில் உள்ள விருந்தினர் மாளிகையில் ஹமாஸ் அரசியல் தலைவர் இஸ்மாயில் ஹனியே படுகொலை செய்யப்பட்டார்

அவர்களிடம் இன்னும் ஏவுகணைகளின் பெரிய கையிருப்பு உள்ளது. டெல் அவிவ் மற்றும் இஸ்ரேலின் பிற முக்கிய நகரங்களை தாக்கக் கூடிய துல்லியமான வழிகாட்டுதல் கொண்ட நீண்ட தூர ஏவுகணைகளும் இதில் அடங்கும்.

இஸ்ரேலிய தாக்குதல்களில் அவை அழிக்கப்படுவதற்கு முன்னர் அவற்றை விரைவாகப் பயன்படுத்துமாறு அமைப்பிற்குள் இருந்து ஹெஸ்பொலா அழுத்தத்தை எதிர்கொள்ளக் கூடும்.

ஆனால் அந்த அமைப்பு இஸ்ரேலின் வான் பாதுகாப்பை முறியடித்து பெரிய தாக்குதலை நடத்தி அதில் பெரும் எண்ணிக்கையில் பொதுமக்கள் கொன்றால், அதற்கான இஸ்ரேலின் எதிர்வினை பேரழிவை ஏற்படுத்துவதாக இருக்கும்.

அதன் பிறகு இஸ்ரேல் லெபனானின் உள்கட்டமைப்பை முற்றிலுமாக அழிக்க வாய்ப்புள்ளது. அது இரான் வரை பரவக்கூடும்.

 

இரான் சென்ன செய்யும்?

ஹசன் நஸ்ரல்லாவின் படுகொலை ஹெஸ்பொலாவுக்கு எவ்வளவு பெரிய அடியாக இருக்கிறதோ அதே அளவு அது இரானுக்கும் பெரிய அடியாகும். நஸ்ரல்லாவின் மறைவுக்கு 5 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என்று இரான் ஏற்கனவே அறிவித்துள்ளது.

இரானும் பல அவசர முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துள்ளது. இரானின் உச்ச தலைவர் ஆயதுல்லா அலி காமனெயி ஒரு ரகசிய இடத்தில் மறைத்து வைக்கப்பட்டுள்ளார்.

இஸ்ரேல் - ஹெஸ்பொலா, இரான், அமெரிக்கா

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, சனிக்கிழமையன்று காஸாவில் நடந்த இஸ்ரேலிய வான்வழித் தாக்குதல்களுக்குப் பிறகு தனது வீட்டை பார்வையிடும் ஒரு பாலத்தீனர்

ஜூலை மாதம் டெஹ்ரானில் உள்ள விருந்தினர் மாளிகையில் ஹமாஸ் அரசியல் தலைவர் இஸ்மாயில் ஹனியே படுகொலை செய்யப்பட்ட பின்னர் இரான் இதுவரை எந்த பழிவாங்கும் நடவடிக்கையையும் எடுக்கவில்லை.

இப்போது நஸ்ரல்லாவின் படுகொலைக்குப் பிறகு, இரானில் ஆட்சியில் இருக்கும் அடிப்படைவாதிகள் சில வகையான எதிர்வினைகளை கருத்தில் கொள்ளலாம்.

மத்திய கிழக்கில் உள்ள தனது நட்பு நாடுகளில் பெருமளவு ஆயுத வலு கொண்ட போராளிகளின் முழு அமைப்பும் இரானிடம் உள்ளது. இது ’ஆக்ஸிஸ் ஆஃப் ரெஸிஸ்டென்ஸ்' (Axis of Resistance) என்று அழைக்கப்படுகிறது.

ஹெஸ்பொலாவைத் தவிர, ஏமனில் ஹூதி, சிரியா மற்றும் இராக்கில் பல அமைப்புகளும் உள்ளன. மத்திய கிழக்கு பிராந்தியத்தில் இஸ்ரேல் மற்றும் அமெரிக்க இலக்குகள் மீதான தாக்குதல்களை அதிகரிக்குமாறு இரான் அவைகளிடம் சொல்லலாம்.

ஆனால் இரான் எந்த விருப்பத்தை தேர்வு செய்தாலும் அது ஒரு பெரிய போரைத் தூண்டிவிடும். அதில் வெற்றி கிடைக்கும் என்று உறுதியாக சொல்லமுடியாது.

 
இஸ்ரேலிய ராணுவ பீரங்கிகள்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, வடக்கு இஸ்ரேலில் நிற்கும் இஸ்ரேலிய ராணுவ பீரங்கிகள்

இஸ்ரேல் என்ன செய்யும்?

ஹசன் நஸ்ரல்லாவின் படுகொலைக்கு முன்னர் இஸ்ரேலின் நோக்கம் குறித்து யாருக்காவது சந்தேகம் இருந்திருந்தால் அது இப்போது முற்றிலுமாக தீர்ந்திருக்கும்.

தனது நெருங்கிய நட்பு நாடான அமெரிக்கா உட்பட 12 நாடுகளால் முன்மொழியப்பட்ட 21 நாள் போர் நிறுத்த யோசனைக்கு இணங்க தனது ராணுவ நடவடிக்கையை நிறுத்தும் எண்ணம் இஸ்ரேலுக்கு இல்லை.

ஹெஸ்பொலா பதில் தாக்குதல் தொடுக்கும் என்று இஸ்ரேலிய ராணுவம் உறுதியாக நம்புகிறது. எனவே ஏவுகணைகளின் அச்சுறுத்தல் அகற்றப்படும் வரை தாக்குதலைத் தொடர அது விரும்புகிறது.

இந்த நேரத்தில் ஹெஸ்பொலா சரணடையும் சாத்தியக்கூறும் தென்படவில்லை. எனவே தன் படைகளை அனுப்பாமல் ஹெஸ்பொலாவின் அச்சுறுத்தலை இஸ்ரேல் எவ்வாறு சமாளிக்க முடியும்? ஹெஸ்பொலாவை முழுமையாக அழிப்பதே இஸ்ரேலின் நோக்கம்.

இதற்காக எல்லைக்கு அருகில் தனது தரைப்படைகள் பயிற்சி செய்து கொண்டிருக்கும் வீடியோ காட்சிகளை இஸ்ரேல் ராணுவம் வெளியிட்டுள்ளது.

ஆனால் ஹெஸ்பொலா அமைப்பு முந்தைய போர் முடிவடைந்த பிறகு கடந்த 18 வருடங்களாக போர் பயிற்சியை தொடர்ந்து மேற்கொண்டுவருகிறது. இதன் பொருள் என்னவென்றால் நிலத்தில் போரை நடத்துவது இஸ்ரேலுக்கு அவ்வளவு எளிதானதாகத் தெரியவில்லை.

ஹசன் நஸ்ரல்லா தான் இறப்பதற்கு முன் தனது ஆதரவாளர்களிடையே ஆற்றிய உரையில், தெற்கு லெபனானில் இஸ்ரேல் தாக்குதல் நடத்தினால் அது ‘ஒரு வரலாற்று வாய்ப்பு’ என்று கூறினார்.

அதாவது இஸ்ரேலிய பாதுகாப்பு படைகள் லெபனானுக்குள் நுழைவது எளிதாக இருக்கும். ஆனால் காஸாவைப் போல அல்லாமல், அங்கிருந்து அவர்கள் வெளியேறுவதற்கு பல மாதங்கள் ஆகலாம்.

-இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, valavan said:

அவர்கள் அடம் பிடிச்சாலும் இஸ்ரேல் மெளனிக்க வைக்கும் என்கிறீர்களா?

 

இஸ்ரேல் மூலம் ஆயுதங்களை மெளனிக்க வைக்கமுடியாது. ஆனால், ஆயுதரீதியான பலத்தை பெருமளவில் பலவீனம் செய்யமுடியும். வழங்கல்களையும் பெருமளவில் கட்டுப்படுத்தமுடியும். இவ்வாறே ஆளனிகளையும் குறிப்பிட்டளவு பலவீனம் செய்யமுடியும்.

ஈரான் விமானங்கள் பேரூட்டில் தரை இறங்குவதற்கு தடை விதித்துள்ளார்கள். மீறினால் பேரூட் விமானநிலையத்தை தாக்குவோம் என எச்சரிக்கை செய்துள்ளார்கள். இவ்வாறே ஒரு பகுதி லெபனான்-சிரியா எல்லையிலும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டு உள்ளது. இவை எல்லாம் கூறுவன என்ன என்றால் ஹிஸ்புல்லாவிற்கு முன்புபோல் இனி ஆயுதங்கள் கிடைக்கப்போவது இல்லை.

ஏற்கனவே உள்ள ஹிஸ்புல்லாவின் ஏவுகணைகள், ஆயுத கிடங்குகள்/களஞ்சியங்களை தேடித்தேடி மோப்பம் பிடித்து அழித்துவிடுவார்கள்.

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வச்ச குறி தப்பாமல் நஸ்ரல்லாவை எப்படி வீழ்த்தியது இஸ்ரேல் ..!

கடந்த வெள்ளிக்கிழமை லெபனான்(lebanon) தலைநகர் பெய்ரூட்டிற்கு தெற்கே இஸ்ரேல்(israel) நடத்திய வான்வெளித் தாக்குதலில் ஹிஸ்புல்லா தலைவர் நஸ்ரல்லா கொல்லப்பட்டார்.

இவ்வாறு ஹிஸ்புல்லா தலைவர் இருக்கும் இடத்தை அறிந்து கொண்டு துல்லியமான தாக்குதலை இஸ்ரேல் எப்படி நடத்தியது என்ற தகவல் தற்போது வெளியாகி உள்ளது.

ஈரான் நாட்டு உளவாளியின் துல்லியமான தகவல்

இதன்படி ஈரான்(iran) நாட்டைச் சேர்ந்த தமது உளவாளி அளித்த உறுதியான தகவலை வைத்துக் கொண்டே இஸ்ரேல் இந்த தாக்குதலை நடத்தியுள்ளது.

வச்ச குறி தப்பாமல் நஸ்ரல்லாவை எப்படி வீழ்த்தியது இஸ்ரேல் ..! | Assassination Of Hezbollah Leader Nasrallah

முன்னதாக ஈரானில் ஹமாஸ் அமைப்பின் அரசியல் பிரிவு தலைவர் இஸ்மாயில் ஹனியே மீதான தாக்குதலுக்கும் ஈரானிய உளவாளியே காரணமென தகவல்கள் தெரிவித்த நிலையில் தற்போது ஹிஸ்புல்லா அமைப்பின் தலைவர் மீதான தாக்குதலுக்கும் ஈரானிய உளவாளியே தகவலை வழங்கியுள்ளமை தெரியவந்துள்ளது.

கூட்டமொன்றில் பங்கேற்கவுள்ள நஸ்ரல்லா

இதன்படி பெய்ரூட்டில் ஹிஸ்புல்லா படைகளின் கட்டளை மையத்தில் கடந்த வெள்ளிக்கிழமை ஹஸன் நஸ்ரல்லா கூட்டம் ஒன்றில் கலந்துகொள்ளவுள்ளார் என்பதை ஈரானிய உளவாளி இஸ்ரேல் தரப்புக்கு தெரிவித்துள்ளார்.

வச்ச குறி தப்பாமல் நஸ்ரல்லாவை எப்படி வீழ்த்தியது இஸ்ரேல் ..! | Assassination Of Hezbollah Leader Nasrallah

குறித்த கூட்டத்தில் ஹிஸ்புல்லா உட்பட முன்னணி தலைவர்கள் பலர் கலந்துகொள்ள இருப்பதையும் அந்த உளவாளி இஸ்ரேலிடம் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்தே இஸ்ரேல் இந்த துல்லிய தாக்குதலை நடத்தி நஸ்ரல்லா உட்பட ஹிஸ்புல்லா அமைப்பின் முக்கிய தலைவர்களை கொன்று குவித்துள்ளது.

https://ibctamil.com/article/assassination-of-hezbollah-leader-nasrallah-1727617278#google_vignette

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஹிஸ்புல்லாவிற்கு தொடரும் பேரிழப்பு : பல முக்கிய தலைவர்கள் பலி : நஸ்ரல்லாவின் உடல் மீட்பு

ஹிஸ்புல்லா அமைப்பு தனது மூத்த உறுப்பினர்களில் ஒருவர் சனிக்கிழமை(28) இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதல்களில் கொல்லப்பட்டதை உறுதிப்படுத்தியுள்ளது.

ஹிஸ்புல்லாவின் தடுப்பு பாதுகாப்பு சபையின் தலைவரும் அதன் மத்திய குழுவின் முக்கிய உறுப்பினருமான நபில் கௌக் (Nabil Qaouk)நேற்று தமது விமான தாக்குதலில் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் படைத்துறை முன்னதாக கூறியது.

முக்கிய தலைவர்கள் பலி

இதேவேளை கடந்த வெள்ளிக்கிழமை ஹிஸ்புல்லா அமைப்பின் தலைமையகத்தில் ஹசன் நஸ்ரல்லாவைக் கொன்றபோது, பல்வேறு நிலைகளில் உள்ள 20 ஹிஸ்புல்லா தலைவர்களும் உயிரிழந்ததாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

ஹிஸ்புல்லாவிற்கு தொடரும் பேரிழப்பு : பல முக்கிய தலைவர்கள் பலி : நஸ்ரல்லாவின் உடல் மீட்பு | 20 Other Senior Hezbollah Figures Killed

அதன்படி அமைப்பின் தெற்கு முன்னணியின் தலைவரான அலி கராக்கியும்(Ali Karaki) கொல்லப்பட்டவர்களில் அடங்குவார்.

அத்துடன் நஸ்ரல்லாவின் பாதுகாப்புப் பிரிவின் தலைவரான இப்ராஹிம் ஹுசைன் ஜாஜினி(Ibrahim Hussein Jazini) மற்றும் "நஸ்ரல்லாவின் நீண்டகால நம்பிக்கைக்குரியவர் மற்றும் ஆலோசகர்" என்று இஸ்ரேல் படைத்துறை விவரிக்கும் சமீர் தவ்பிக் திப்(Samir Tawfiq Dib) ஆகியோரையும் கொன்றதாக இஸ்ரேல் படைத்தரப்பு தெரிவித்துள்ளது.

நஸ்ரல்லாவின் உடல் மீட்பு

ஹிஸ்புல்லாவின் தலைமையகம் பொதுமக்களின் கட்டிடங்களுக்கு நடுவில் அமைந்திருந்ததாக இஸ்ரேல் இராணுவம் குறிப்பிட்டுள்ளது.

ஹிஸ்புல்லாவிற்கு தொடரும் பேரிழப்பு : பல முக்கிய தலைவர்கள் பலி : நஸ்ரல்லாவின் உடல் மீட்பு | 20 Other Senior Hezbollah Figures Killed

இதேவேளை பெய்ரூட்டின் தெற்கு புறநகர் பகுதியில் வான் தாக்குதல் நடத்தப்பட்ட இடத்தில் இருந்து ஹசன் நஸ்ரல்லாவின் உடல் மீட்கப்பட்டுள்ளதாக ரொய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

மருத்துவ ஆதாரம் மற்றும் பாதுகாப்பு ஆதாரத்தை மேற்கோள் காட்டி, அவரது உடலில் "நேரடி காயங்கள்" இல்லை என்று ரொய்ட்டர்ஸ் மேலும் தெரிவித்துள்ளது.

https://ibctamil.com/article/20-other-senior-hezbollah-figures-killed-1727622067

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, valavan said:

அவர்கள் அடம் பிடிச்சாலும் இஸ்ரேல் மெளனிக்க வைக்கும் என்கிறீர்களா?

இஸ்ரேல் மெளனிக்க வைத்தாலும் இஸ்லாமிய நாடுகள் விடமாட்டுது ...தொடர்ந்து ஊக்கமளிப்பார்கள் 

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.