Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
ரஜினிகாந்த்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, நடிகர் ரஜினிகாந்திற்கு உடம்பில் எந்த இடத்தில் உள்ள ரத்தக் குழாயில் வீக்கம் ஏற்பட்டது என்பது மருத்துவ அறிக்கையில் குறிப்பிடப்படவில்லை.
ஒரு மணி நேரத்துக்கு முன்னர்

நடிகர் ரஜினிகாந்தின் இதயத்திலிருந்து செல்லும் பிரதான ரத்தக் குழாயில் ஏற்பட்ட வீக்கத்திற்கு சிகிச்சை முடிவடைந்துள்ளதாகவும் அவர் இரு நாட்களில் வீடு திரும்புவார் என்றும் அவர் சிகிச்சை பெற்றுவரும் மருத்துவமனை தெரிவித்துள்ளது.

நடிகர் ரஜினிகாந்த் நேற்று (செப்டம்பர் 30) இரவு சென்னை க்ரீம்ஸ் சாலையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டார்.

அவருடைய இதயத்திலிருந்து ரத்தத்தை கொண்டு செல்லும் பிரதான ரத்தக் குழாயில் வீக்கம் ஏற்பட்டிருந்தது. இந்தப் பிரச்னைக்கான சிகிச்சை இன்று அளிக்கப்பட்டது.

இதயவியல் நிபுணரான மருத்துவர் சாய் சதீஷ் உள்ளிட்ட ஐந்து பேரைக் கொண்ட மருத்துவக் குழு ரஜினிகாந்திற்கு சிகிச்சை அளித்தனர். ரத்தக் குழாய்க்குள் அனுப்பப்பட்ட சிறு குழாய் மூலம் (கேதீட்டர்) வீக்கம் ஏற்பட்டிருந்த பகுதியில் ஒரு 'ஸ்டென்ட்' பொருத்தப்பட்டிருப்பதாக அந்த மருத்துவமனை தெரிவித்துள்ளது.

"திட்டமிட்டபடி சிகிச்சை நடைபெற்றது. அவரது உடல்நிலை சீராக இருக்கிறது. இன்னும் இரு நாட்களில் அவர் வீடு திரும்புவார்" என அவர் சிகிச்சைபெற்றுவந்த தனியார் மருத்துவமனை அளித்த செய்திக் குறிப்பில் கூறப்பட்டிருக்கிறது.

ரஜினிகாந்திற்கு ஏற்பட்ட பிரச்னை என்ன?

இதயத்திலிருந்து ரத்தத்தை எடுத்துச் செல்லும் பிரதான ரத்தக் குழாயான aorta-வில் சில சமயங்களில் வீக்கம் ஏற்படுவதுண்டு. இந்த வீக்கம் எந்த இடத்தில் வேண்டுமானாலும் ஏற்படலாம் என்றாலும், பெரும்பாலும் வயிற்றுப் பகுதியிலோ நெஞ்சுப் பகுதியிலோதான் ஏற்படும்.

வயிற்றுப் பகுதியில் உள்ள ரத்தக் குழாயில் வீக்கம் ஏற்பட்டால் அது Abdominal Aortic Aneurysm என்றும் நெஞ்சகப் பகுதியில் வீக்கம் ஏற்பட்டால் அது Thoracic Aortic Aneurysm என்றும் குறிப்பிடப்படுகிறது.

இந்த வீக்கத்தை அப்படியே விட்டுவிட்டால், ரத்தக் குழாய் வெடித்து உயிருக்கு ஆபத்தாக முடியலாம். ஆனால், முன்கூட்டியே சிகிச்சை அளிக்கப்படும் பட்சத்தில், பெரிய பிரச்னையின்றி வாழ்வைத் தொடர முடியும்.

உயர் ரத்த அழுத்தம், ரத்தக் குழாயில் கொழுப்பு படிவது, புகைபிடிக்கும் பழக்கம் என இந்தப் பிரச்னைக்கு பல காரணங்கள் உள்ளன.

நடிகர் ரஜினிகாந்திற்கு உடம்பில் எந்த இடத்தில் உள்ள ரத்தக் குழாயில் வீக்கம் ஏற்பட்டது என்பது மருத்துவ அறிக்கையில் குறிப்பிடப்படவில்லை.

ரஜினிகாந்த் குறித்து அவரது மருத்துவமனை வெளியிட்ட மருத்துவ அறிக்கை
படக்குறிப்பு, ரஜினிகாந்த் உடல் நிலை குறித்து மருத்துவமனை வெளியிட்ட அறிக்கை

ரஜினிகாந்த்தின் உடல் நல பிரச்னைகள்

2011-ஆம் ஆண்டிலிருந்தே ரஜினிகாந்த்தின் உடல்நலம் குறித்த தகவல்கள் வெளியாகி வருகின்றன. 2011-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் தனது மகள் சவுந்தர்யா இயக்கத்தில் அவர் நடிக்கும் 'ராணா' என்ற படத்திற்கான புகைப்படங்கள் எடுக்கும் பணிகள் நடந்துகொண்டிருந்த போது ரஜினிகாந்திற்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டது.

முதலில் சென்னையில் சிகிச்சை பெற்ற ரஜினிகாந்த் பிறகு, சிங்கப்பூருக்கு அழைத்துச் செல்லப்பட்டார். சிங்கப்பூரில் உள்ள மவுண்ட் எலிசபெத் மருத்துவமனையில் சிகிச்சைபெற்ற அவர், இரு வாரங்களுக்குப் பிறகு வீடு திரும்பினார். ஆனால், அவருடைய உடல் நலத்தில் என்ன பிரச்னை, என்ன சிகிச்சை அளிக்கப்பட்டது என்ற விவரங்கள் வெளியிடப்படவில்லை.

2016-ஆம் ஆண்டில் ரஜினிகாந்த் 'கபாலி' படத்தில் நடித்துக் கொண்டிருந்தார். அந்தப் படத்தின் படப்பிடிப்பு உள்ளிட்ட பணிகள் முடிந்த பிறகு, அவர் குடும்பத்தினருடன் அமெரிக்காவுக்குச் சென்றார். அங்கு சில பரிசோதனைகளைச் செய்து கொண்டதாகவே அப்போது தகவல்கள் வெளியாயின.

அங்கிருந்து திரும்பியவுடன் ஷங்கர் இயக்கத்தில் '2.0' படத்தின் படப்பிடிப்பில் நடித்தார். அந்தத் தருணத்தில் என்ன பரிசோதனைகள் செய்யப்பட்டன என்பது போன்ற தகவல்களும் வெளியாகவில்லை.

இந்நிலையில், ரஜினிகாந்த் தான் புதிய அரசியல் கட்சி துவங்கவிருப்பதாக 2017-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் அறிவித்தார். 2020-ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் தமிழ்நாடு முழுவதும் ரஜினிகாந்த் சுற்றுப்பயணம் மேற்கொள்வார் எனவும் அதற்குப் பிறகு அக்டோபர் 2-ஆம் தேதி புதிய கட்சி பற்றிய அறிவிப்பு வெளியாகுமெனவும் கூறப்பட்டது.

ஆனால், கொரோனா பரவல் காரணமாக அப்படி ஏதும் நடக்கவில்லை. இந்நிலையில் அந்த ஆண்டு இறுதியில், சமூக வலைதளங்களில் ரஜினிகாந்த் வெளியிட்ட அறிக்கை எனக் கூறப்பட்டு, ஒரு அறிக்கை வெளியானது.

ரஜினி

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, ரஜினி மக்கள் மன்றம் 2021 ஜூலை மாதம் கலைக்கப்பட்டது

அதில் அவரது உடல் நலம் குறித்த பல தகவல்கள் இடம்பெற்றிருந்தன. அதாவது, "2011ஆம் ஆண்டு எனக்கு சிறுநீரக பாதிப்பு ஏற்பட்டு சிங்கப்பூரில் சிகிச்சைபெற்று உயிர் பிழைத்து வந்தேன். அது அனைவருக்கும் தெரியும். 2016ஆம் ஆண்டு மே மாதத்தில் மறுபடியும் எனக்கு சிறுநீரக பாதிப்பு தீவிரமாக ஏற்பட்டு அமெரிக்காவின் ராசெஸ்டர் நகரில் உள்ள மயோ க்ளீனிக்கில் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை அளிக்கப்பட்டது. இது ஒரு சிலருக்கே தெரியும்" என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.

ரஜினி வெளியிட்டதாகக் கூறப்பட்ட அறிக்கையில், அவர் அரசியலில் ஈடுபடுவதைத் தவிர்க்க வேண்டுமென மருத்துவர்கள் கூறிவிட்டதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

"கொரோனா தொற்று எப்போது முடியும் என தெரியாத இந்த தருணத்தில் எனது அரசியல் பிரவேசம் குறித்து எனக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்களிடம் ஆலோசனை நடத்தினேன். அதற்கு மருத்துவர்கள் கொரோனாவிற்கு ஒரே தீர்வு தடுப்பூசி. அது எப்போது வரும் என்று தெரியாது. வந்தாலும் அந்த தடுப்பூசியை உங்களுக்கு செலுத்தினால் அதை உங்கள் உடல்நிலை ஏற்றுக்கொள்ளுமா என்பது அந்த மருந்து வந்த பிறகுதான் தெரியும். இப்போது உங்களுக்கு வயது 70. மேலும் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்திருப்பதால் எதிர்ப்பு சக்தி மிகவும் குறைவு எனவே கொரோனா காலத்தில் மக்களை தொடர்பு கொண்டு அரசியலில் ஈடுபடுவதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும் என திட்டவட்டமாகக் கூறிவிட்டார்கள்" என்று அறிக்கை கூறியது.

இந்த அறிக்கையை தான் வெளியிடவில்லையெனக் கூறிய ரஜினிகாந்த், அந்த அறிக்கையில் இருந்த தகவல்கள் உண்மைதான் எனத் தெரிவித்தார்.

இதற்குப் பிறகு, உடல் நிலை காரணமாக, தான் அரசியல் கட்சி எதையும் துவங்கப்போவதில்லை என ரஜினிகாந்த் அறிவித்தார். அவரது ரஜினி மக்கள் மன்றம் 2021 ஜூலை மாதம் கலைக்கப்பட்டது.

இதற்குப் பிறகு ரஜினிகாந்த் தீவிரமாக படங்களில் நடிக்க ஆரம்பித்தார். இப்போது அவர் நடித்து, த.ச. ஞானவேல் இயக்கத்தில் உருவாகியுள்ள வேட்டையன் திரைப்படம் அக்டோபர் 10ஆம் தேதி வெளியாகவிருக்கிறது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.

  • கருத்துக்கள உறவுகள்

இனி ரஜனி…. இட்லி சாப்பிட்டார், இடியப்பம் சாப்பிட்டார் என்று எல்லாம் ஆராய்ச்சி கட்டுரைகள் எழுதப் போறதை நினைக்கத்தான் வயித்தை கலக்குது. 😂

இன்னும் ஒரு கோஷ்டி… ரஜனி நலம் வேண்டி மண்சோறு சாப்பிடும். கொஞ்சக் காலத்துக்கு பெரிய தலையிடியாய் இருக்கப் போகுது. 🤣

  • கருத்துக்கள உறவுகள்
42 minutes ago, ஏராளன் said:
இப்போது அவர் நடித்து, த.ச. ஞானவேல் இயக்கத்தில் உருவாகியுள்ள வேட்டையன் திரைப்படம் அக்டோபர் 10ஆம் தேதி வெளியாகவிருக்கிறது.

முக்கியமாக கவனிக்கப்பட வேண்டியது, இதுவரை நான் கண்ட அனுபவத்திலிருந்து, 'வேட்டையன்' படம் 10ம் திகதி வெளிவருகின்றது என்பதே. இவரது ஒவ்வொரு படம் வெளியாகும் போது, இப்படித்தான் ஏதாவது சின்ன விடயத்தை நல்லாக ஊதிவிடுவார்கள். 

இவர்கள் குறிப்பிட்டிருக்கும் இந்த வீக்கத்திற்கான சிகிச்சை என் குடும்பத்தில் ஒருவருக்கு சில வருடங்களின் முன் செய்யப்பட்டது. அவருக்கு 80 வயதுகள் அப்பொழுது. இப்பொழுது நன்றாக இருக்கின்றார்.  

Edited by ரசோதரன்

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, ரசோதரன் said:

முக்கியமாக கவனிக்கப்பட வேண்டியது, இதுவரை நான் கண்ட அனுபவத்திலிருந்து, 'வேட்டையன்' படம் 10ம் திகதி வெளிவருகின்றது என்பதே. இவரது ஒவ்வொரு படம் வெளியாகும் போது, இப்படித்தான் ஏதாவது சின்ன விடயத்தை நல்லாக ஊதிவிடுவார்கள்.  

ஓ…. ரஜனியின் படம் வேறை வருகுதா….?
 அது தானே… எலி ஏன் ஜட்டி போட்டுக் கொண்டு ஓடுது என நினைத்தேன்.
இவங்கள்…. அந்தக் காலத்தில் இருந்து, இப்ப மட்டும் படத்தை ஓட வைக்க எவ்வளவு கஸ்ரப் பட வேண்டி இருக்கு. 

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, தமிழ் சிறி said:

ஓ…. ரஜனியின் படம் வேறை வருகுதா….?
 அது தானே… எலி ஏன் ஜட்டி போட்டுக் கொண்டு ஓடுது என நினைத்தேன்.
இவங்கள்…. அந்தக் காலத்தில் இருந்து, இப்ப மட்டும் படத்தை ஓட வைக்க எவ்வளவு கஸ்ரப் பட வேண்டி இருக்கு. 

இது பெரிய மானம் மரியாதைப் போட்டி, சிறி அண்ணா. 

இந்த இருவரும், ரஜனியும் விஜய்யும், நானா நீயா 'நம்பர் ஒண்ணு' என்று போட்டி போட்டுக் கொண்டிருக்கின்றார்கள். இவர்களின் ரசிகர்களும் அப்படியே. இதில் ஈழத்தவர்களும் உண்டு........🫣.

விஜய்யின்  GOAT நல்லா ஓடியதா, இப்ப 'வேட்டையன்' அதைத் தாண்டிப் போக வேணும் என்று தலைகீழாக நிற்பார்கள் ரஜனியும், அவரது ரசிகர்களும். 

120 ரூபாய் டிக்கட்டை 2000 ரூபாய்க்கு விற்பதை, 5 ரூபாய் பாப்கோர்னை 25 ரூபாய்க்கு விற்பதை இருவரும் கண்டுகொள்ளமாட்டார்கள். ஆனால் ஊழலை அழித்து, ஒரு புதுச் சமூகத்தை இருவரும் உருவாக்குவோம் என்பார்கள்..........🤣.

கருட புராணத்தில் பாப்கோர்ன் மெஷினுக்குள் ஆட்கள் போடுவது மாதிரியும் ஏதும் தண்டணை இருக்குதோ என்று தேடிப் பார்க்கவேண்டும்................  

  • கருத்துக்கள உறவுகள்

எண்ணைச் சட்டியில் வறுக்கிறமாதிரி தண்டனை உண்டு ரசோதரன்  . ..........! 😂

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, suvy said:

எண்ணைச் சட்டியில் வறுக்கிறமாதிரி தண்டனை உண்டு ரசோதரன்  . ..........! 😂

கருட புராணம் எழுதின காலத்தில் பாப்கோர்ன் மெஷின் இருந்திருக்காது போல, சுவி ஐயா...........

இப்படி நாங்கள் எழுதினோம் என்று தெரிந்தால், இரண்டு ரசிகர்கள் கூட்டங்களும் எங்களை எண்ணெய்ச் சட்டிக்குள் போட்டு விட்டுவிடுவார்கள்............🤣.

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, ரசோதரன் said:

இது பெரிய மானம் மரியாதைப் போட்டி, சிறி அண்ணா. 

இந்த இருவரும், ரஜனியும் விஜய்யும், நானா நீயா 'நம்பர் ஒண்ணு' என்று போட்டி போட்டுக் கொண்டிருக்கின்றார்கள். இவர்களின் ரசிகர்களும் அப்படியே. இதில் ஈழத்தவர்களும் உண்டு........🫣.

விஜய்யின்  GOAT நல்லா ஓடியதா, இப்ப 'வேட்டையன்' அதைத் தாண்டிப் போக வேணும் என்று தலைகீழாக நிற்பார்கள் ரஜனியும், அவரது ரசிகர்களும். 

120 ரூபாய் டிக்கட்டை 2000 ரூபாய்க்கு விற்பதை, 5 ரூபாய் பாப்கோர்னை 25 ரூபாய்க்கு விற்பதை இருவரும் கண்டுகொள்ளமாட்டார்கள். ஆனால் ஊழலை அழித்து, ஒரு புதுச் சமூகத்தை இருவரும் உருவாக்குவோம் என்பார்கள்..........🤣.

கருட புராணத்தில் பாப்கோர்ன் மெஷினுக்குள் ஆட்கள் போடுவது மாதிரியும் ஏதும் தண்டணை இருக்குதோ என்று தேடிப் பார்க்கவேண்டும்................  

ரசோதரன்…. உண்மையில் இந்தியாவிலேயே அதிக சினிமா பைத்தியங்கள் உள்ள மாநிலம் தமிழ் நாடுதான். இந்த வியாதி இப்போ தொலைக்காட்சிகளின் புண்ணியத்தில் ஈழத்திலும் பரவி விட்டது சோகம்.

  • கருத்துக்கள உறவுகள்

ரஜினி மீண்டும் வரவேண்டும். ராஷ்மிகா மந்தனாவுடன் டூயட் பாடி ஆடவேண்டும்!❤️

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, வாலி said:

ரஜினி மீண்டும் வரவேண்டும். ராஷ்மிகா மந்தனாவுடன் டூயட் பாடி ஆடவேண்டும்!❤️

🤣.........

ரஜனி நிற்க வேண்டும், மற்றவர்கள் சுற்றிச் சுற்றி ஆட வேண்டும் என்கிறீர்கள்...........

உங்கள் எண்ணப்படியே நடக்கும். மூவரின் சீவன்கள் போக அவர்களின் குடும்பம் இலேசில் விடமாட்டார்கள் என்று பல வருடங்களின் முன் எங்கேயோ எழுதியிருந்தேன். அந்த மூவர் - கருணாநிதி, விஜய்காந்த், ரஜனி.

இருவர் ஊசலாடி, ஒரு மாதிரி போய்ச் சேர்ந்துவிட்டனர்..........   

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ரசோதரன் said:

ஏன் நீங்கள் ரஜனி சார் அம்பானி வீட்டுக் கலியாணத்தில் ஆடின ஆட்டத்தைப் பாக்கேல்லையா? இப்ப கிழடு கட்டையள் தானே டூயட்பாடி ஆடிக்கொண்டு திரியுதுகள்😂

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, வாலி said:

ஏன் நீங்கள் ரஜனி சார் அம்பானி வீட்டுக் கலியாணத்தில் ஆடின ஆட்டத்தைப் பாக்கேல்லையா? இப்ப கிழடு கட்டையள் தானே டூயட்பாடி ஆடிக்கொண்டு திரியுதுகள்😂

பார்த்தம்.........பார்த்தம்........ அம்பானி கைலாயத்தையும், வைகுண்டத்தையும் ஒன்றாக பூமியில் கொண்டு வந்து விட்டார் என்று அவர் சொன்னதையும் கேட்டோம்.....🫣.

எங்களின் தலைக்கு வந்து கொண்டிருந்தது.... ஏதோ ஒரு தெய்வச் செயலால் வழியிலேயே நின்று விட்டது....... அவரின் அரசியல் பிரவேசத்தைப் பற்றிச் சொன்னேன்..........🤣

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ரசோதரன் said:

🤣.........

ரஜனி நிற்க வேண்டும், மற்றவர்கள் சுற்றிச் சுற்றி ஆட வேண்டும் என்கிறீர்கள்...........

உங்கள் எண்ணப்படியே நடக்கும். மூவரின் சீவன்கள் போக அவர்களின் குடும்பம் இலேசில் விடமாட்டார்கள் என்று பல வருடங்களின் முன் எங்கேயோ எழுதியிருந்தேன். அந்த மூவர் - கருணாநிதி, விஜய்காந்த், ரஜனி.

இருவர் ஊசலாடி, ஒரு மாதிரி போய்ச் சேர்ந்துவிட்டனர்..........   

பல் இருப்பவன் பகோடா சாப்பிடுகிறான் உங்களுக்கு ஏன் ராசா எரியுது??😋

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, விசுகு said:

பல் இருப்பவன் பகோடா சாப்பிடுகிறான் உங்களுக்கு ஏன் ராசா எரியுது??😋

🤣.........

பகிடி: விசுகு ஐயாவும் ரஜனி ரசிகரோ..........

நிஜம்: திரைத்துறை மட்டும் இல்லை, இவரால் சமூகமும் தேங்கி நின்றது.

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, ரசோதரன் said:

🤣.........

பகிடி: விசுகு ஐயாவும் ரஜனி ரசிகரோ..........

நிஜம்: திரைத்துறை மட்டும் இல்லை, இவரால் சமூகமும் தேங்கி நின்றது.

நான் சொன்னது பகோடா பகோடா. ..🤪

  • கருத்துக்கள உறவுகள்

rajinik.jpg?resize=665,375

ரஜினியின் உடல் நிலைக்கு என்ன நேர்ந்தது ?

ரஜினிகாந்திற்கு ரத்த நாளத்தில் அடைப்பு கண்டறியப்பட்ட நிலையில், ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளதாகவும் ரத்த நாளத்தில் ஏற்பட்ட அடைப்பு சரி செய்யப்பட்ட நிலையில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பின்னர் மருத்துவ கண்காணிப்பிற்கு பின் இன்று மாலை பொது வார்ட்க்கு  மாற்றப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

அவர் நாளை வெளியேற்றம் செய்யப்படுவார் என கூறப்படுகிறது. டாக்டர்கள் சாய் சதீஷ், விஜய் சந்திரன் மற்றும் பாலாஜி ஆகியோர் அடங்கிய குழுவினர் நடிகர் ரஜினிகாந்தின் உடல்நிலையை கண்காணித்து வருகின்றனர்.

உடல்நலக் குறைவால் சிகிச்சை பெறும் நடிகர் ரஜினிகாந்த், கண்விழித்த பின்னர் தனக்கு சிகிச்சையளித்த டாக்டர்களுக்கு நன்றி தெரிவித்தாகவும் கண்விழித்து பேசுவதாகவும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

நடிகர் ரஜினிகாந்திற்கு நேற்று மாலை திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதையடுத்து அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். செரிமானம் பிரச்சினை, சீரற்ற ரத்த ஓட்டம் மற்றும் வயிற்று வலி காரணமாக அனுமதிக்கப்பட்டதாகவும், பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு விரைவில் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்றும் தெரிவிக்கப்பட்டது.

https://athavannews.com/2024/1402022

ஏதோ.. நம்மால் முடிந்தது.  😂 🤣

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ரஜனிகாந்த் திரையுலகிற்கு கிடைத்த சாபம்.

இவருக்கும் நடிப்புக்கும் எட்டாப்பொருத்தம். தனிய ஆக்சன்/கை அசைப்புகள் மட்டுமே இவர் மூலதனம் . இவரின் திரையுலக பிரவேசத்தின் பின்னரே தரமுள்ள கதையம்சம் உள்ள படங்கள் காணாமல் போய் தொலைந்தது. கதை கருத்தம்சம் இல்லாமெலே சோக்கு போக்கு காட்டி மக்களை ஏமாற்றலாம் என்பதின் முன்னோடி இவர்.

இவர் வருகையின் பின்னரே நடிப்பு முக பாவனை இல்லாமல் திரையுலகில் கோலோச்சமுடியும் என பல பட்டாளாங்கள் இறங்கின. யாரோ  ஒரு  அறிவாளி எழுதிய வசனங்களை திரையில் ஒப்பவித்து தன்னை ஒரு அறிவாளியாக காட்டிய இவரை மற்றவர்கள் கொண்டாடுகின்றார்கள் என்பதற்காக நாமும் அதே குட்டையில் விழக்கூடாது

  • கருத்துக்கள உறவுகள்

70, 80 களில் சிறுவனாக இருந்தபோது நான் இவரின் தீவிர ரசிகன். இவருடைய அனேக‌ படங்கள அக்காலத்தில் வீடியோவில் (VHS)  பார்த்துள்ளேன். (சண்டை காட்சிகளை பார்த்துவிடடு அதேபோல் பாடசாலையில் சென்று அடிபடுவது) பல படங்கள் இன்னும் மனதில் நிற்கின்றன. மூன்று முடிச்சு,காளி,தீ, மூன்று முகம், கர்ஜனை,  தனிக்காட்டு ராஜா, தர்ம யுத்தம், அன்புக்கு நான் அடிமை.. புவனா ஒரு கேள்விக்குறி என பல.. கழுகு ஒரு நல்ல திரில்லர் படம். 90 களுக்கு பிறகு எனோ இவரை பிடிப்பதில்லை. இப்பொழுது யாருடைய ரசிகனும் அல்ல அஜித் படங்களை சற்று விரும்பி பார்ப்பேன். வயது போக போக மனம் இவற்றில் பெரியளவு நாட்டம் கொள்வதில்லை. 

சீக்கிரம் குணம் பெற்று வர வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்
On 2/10/2024 at 00:59, தமிழ் சிறி said:

இனி ரஜனி…. இட்லி சாப்பிட்டார், இடியப்பம் சாப்பிட்டார் என்று எல்லாம் ஆராய்ச்சி கட்டுரைகள் எழுதப் போறதை நினைக்கத்தான் வயித்தை கலக்குது. 😂

இன்னும் ஒரு கோஷ்டி… ரஜனி நலம் வேண்டி மண்சோறு சாப்பிடும். கொஞ்சக் காலத்துக்கு பெரிய தலையிடியாய் இருக்கப் போகுது. 🤣

அது அவர்களின் கலாச்சாரம்!

  • கருத்துக்கள உறவுகள்

சீக்கிரம் குணம் பெற்று வர வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்
On 1/10/2024 at 19:43, தமிழ் சிறி said:

உடல்நலக் குறைவால் சிகிச்சை பெறும் நடிகர் ரஜினிகாந்த், கண்விழித்த பின்னர் தனக்கு சிகிச்சையளித்த டாக்டர்களுக்கு நன்றி தெரிவித்தாகவும் கண்விழித்து பேசுவதாகவும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதுவும் இட்லி சாப்பிட்ட கதைமாதிரியோ. அங்காலை சத்தமில்லாமல் உதயநிதியை துணைமுதல்வராக்கியதற்கு எழுத்து எதிர்ப்பு சலசலப்புகளை மடைமாற்றவும் ரஜனியின் வேட்டையன் நன்றாக ஓடவும் பிளான் பண்ணி ஊடகங்கள் செயற்படுகின்றன.

  • கருத்துக்கள உறவுகள்

New-Project-2-2.jpg?resize=750,375&ssl=1

வீடு திரும்பினார் ரஜினி!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சிகிச்சைகளின் பின்னர், நேற்றிரவு (03) 11.00 மணியளவில் சென்னை அப்பல்லோ வைத்தியசாலையில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளார்.

இருதயத்தில் இருந்து வெளியேறும் ரத்த நாளத்தில் ஏற்பட்ட வீக்கத்திற்காக ரஜினிகாந்த்துக்கு, அதனை அறுவைச் சிகிச்சை செய்து அகற்றாமல், டிரான்ஸ்கேட்டர் முறையில் இரத்த நாளத்தில் ஸ்டென்ட் பொருத்தப்பட்டது.

ஒக்டோபர் 1 ஆம் திகதி வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்ட சிகிச்சைக்குப் பிறகு, அவர் வைத்தியசாலையில் இரண்டு நாட்கள் கண்காணிப்பில் இருந்தார்.

இந்த நிலையில் அவரது உடல் நிலையில் முன்னேற்றம் அடைந்ததால் நேற்றிரவு வைத்தியாசலையில் இருந்து வெளியேற்றப்பட்டார்.

எனினும், ரஜினிகாந்தை ஓரிரு வாரங்கள் ஓய்வில் இருக்குமாறு வைத்தியர்கள் அறிவுறுத்தியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அவரது உடல் நிலை முன்னேறியவுடன் இயக்குனர் லோகேஷ் கனகராஜின் கூலி திரைப்படத்தின் பணியை மீண்டும் தொடங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

https://athavannews.com/2024/1402581

#############   ##############   ##############

அப்பாடா.... ஆபரேஷன் சக்ஸஸ். 🙂

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.