Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

தன்னை வைத்து சமூக வலைத்தளங்களில் பரப்பப்படும் அவதூறு பிரசாரங்களுக்கு எதிராக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரனால் பொலிஸ் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

சிறீதரன் மதுபான சாலை உரிமங்களை பெற்றுக்கொண்டதாக முகநுால் மற்றும் டிக்டொக் போன்ற சமூகவலைத்தளங்களில் அவதூறான செய்திகள் பரப்பப்படுவதாக அவர் முறைப்பாடு செய்துள்ளார்.

இவ்வாறான அவதூறுகள் தொடர்ச்சியாக பரப்பப்பட்டு வந்த நிலையில், அவதூறு பரப்பிய நபர்களுக்கு எதிராக கிளிநொச்சி பொலிஸிலும், ஒட்டுசுட்டான் 'சைபர் க்ரைம்' பிரிவிலும், கொழும்பு 'சைபர் க்ரைம்' தலைமையகத்திலும் கடந்த 24.09.2024ஆம் திகதி முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இறுக்கமான நிலைப்பாட்டில் சிறீதரன்

பொலிஸார் ஆரம்பித்த முதற்கட்ட விசாரணையில் ஒருவர் தாம் பதிவிட்ட செய்தி பொய்யானது என்பதை ஏற்றுக்கொண்டுள்ளார்.

சிறீதரன் தொடர்பாக திடீரென பரவிய அவதூறு தகவல்: விசாரணையில் வெளிவந்த உண்மை | Fake Newses Spread In The Name Of Sri Tharan

மற்றுமொரு நபர் அதிக மதுபான பாவனையால் தனக்கு மனநிலை குழம்பிவிட்டதாகவும் தற்போது மருத்துவ கண்காணிப்பில் இருப்பதாகவும் கூறி சிறீதரனிடம் தொலைபேசி ஊடாக மன்னிப்பு கேட்டுள்ளார்.

சிறீதரன் தொடர்பாக திடீரென பரவிய அவதூறு தகவல்: விசாரணையில் வெளிவந்த உண்மை | Fake Newses Spread In The Name Of Sri Tharan

ஆனால், சட்ட நடவடிக்கை தொடர்பாக சிறீதரன் இறுக்கமான நிலைப்பாட்டில் இருப்பதால் இந்த விடயத்தை மறுப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

https://tamilwin.com/article/fake-newses-spread-in-the-name-of-sri-tharan-1728035378

பத்தரை மாற்றுத் தங்கம் சிறிதரனைப் பற்றி அவதூறு பரப்பியவர்களை இன்ரபோல் தேடுகிறது.

இன்று அனேகமாக மோகன் வீட்டுக்கதவு தட்டப்படும்.

அதுக்கிடையில் நீங்களாகவே அவதூறுகளை ஒப்புக் கொண்டு மன்னிப்புக் கேளுங்கள்.

  • Haha 4
  • கருத்துக்கள உறவுகள்
Posted

உண்மை வெளிவரட்டும். சுமந்திரனின் பாதையில் சட்டம்???? பார்க்கலாம். 

Posted
3 hours ago, ஈழப்பிரியன் said:

இவ்வாறான அவதூறுகள் தொடர்ச்சியாக பரப்பப்பட்டு வந்த நிலையில், அவதூறு பரப்பிய நபர்களுக்கு எதிராக கிளிநொச்சி பொலிஸிலும், ஒட்டுசுட்டான் 'சைபர் க்ரைம்' பிரிவிலும், கொழும்பு 'சைபர் க்ரைம்' தலைமையகத்திலும் கடந்த 24.09.2024ஆம் திகதி முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஒட்டிசுட்டானில் கூட இப்படி ஒரு பிரிவு இருக்கின்றதா? 

27 minutes ago, ஈழப்பிரியன் said:

முதலாவதாக தேடப்படுவபர் @தமிழ் சிறி,

இப்ப விளங்குதா, ஏன் நாலைந்து நாதளுக்கு தான் காணாமல் போகப் போகின்றேன் என்றவர்?

ஆள் எஸ்கேப்! 

  • Haha 3
  • கருத்துக்கள உறவுகள்
Posted
8 minutes ago, நிழலி said:

இப்ப விளங்குதா, ஏன் நாலைந்து நாதளுக்கு தான் காணாமல் போகப் போகின்றேன் என்றவர்?

ஆள் எஸ்கேப்! 

அண்ணை செய்தி இணைக்க முடியாது எனவும், போனூடாக பின்னூட்டமிடுவதாகவும் குறிப்பிட்டிருந்தவர் சிறி அண்ணை.

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

"பெட்டி வாங்குறார், கஞ்சா விற்கிறார், கஞ்சா விற்பவர்களை பொலிசில் இருந்து பாதுகாக்கிறார்" என்று ஒரு பெரிய போலி அவதூறுப் பட்டியல் இருக்கும் சுமந்திரனே சும்மா இருக்க, இந்த ஒரு மேட்டருக்கு சிறிதரன் ரென்சனாகியிருக்கிறார்😂!  

சீரியசாக: நான் இதையே விக்கி ஐயா தொடர்பான செய்தியில்  கேள்வியாகக் கேட்டிருந்தேன்: விற்பனை அனுமதி எடுக்க, என்ன நடைமுறை, யார் பெயரில் அனுமதி கொடுக்கப் படுகிறது என்ற எந்த விளக்கமும் இல்லாமல் சும்மா யூ ரியூபில் வடை சுட்டவர்கள் கொஞ்சம் கோர்ட்டுக்கும் வீட்டுக்கும் அலைந்தால் நல்லது தான்😎!

  • Thanks 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, Justin said:

தனக்கு தனக்கு என்றால் சுளகு படக்கு படக்கு 😁

  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 hours ago, நிழலி said:
2 hours ago, ஈழப்பிரியன் said:

முதலாவதாக தேடப்படுவபர் @தமிழ் சிறி,

இப்ப விளங்குதா, ஏன் நாலைந்து நாதளுக்கு தான் காணாமல் போகப் போகின்றேன் என்றவர்?

ஆள் எஸ்கேப்

இவரைத் தேடித்தான் இன்ரபோல் போகுது.

1 hour ago, ஏராளன் said:

அண்ணை செய்தி இணைக்க முடியாது எனவும், போனூடாக பின்னூட்டமிடுவதாகவும் குறிப்பிட்டிருந்தவர் சிறி அண்ணை.

அது தான் எல்லோரும் தொப்பு தொப்பென்று கால்ல விழுகிறாங்களாமே?

1 hour ago, Justin said:

"பெட்டி வாங்குறார், கஞ்சா விற்கிறார், கஞ்சா விற்பவர்களை பொலிசில் இருந்து பாதுகாக்கிறார்" என்று ஒரு பெரிய போலி அவதூறுப் பட்டியல் இருக்கும் சுமந்திரனே சும்மா இருக்க, இந்த ஒரு மேட்டருக்கு சிறிதரன் ரென்சனாகியிருக்கிறார்😂!  

சீரியசாக: நான் இதையே விக்கி ஐயா தொடர்பான செய்தியில்  கேள்வியாகக் கேட்டிருந்தேன்: விற்பனை அனுமதி எடுக்க, என்ன நடைமுறை, யார் பெயரில் அனுமதி கொடுக்கப் படுகிறது என்ற எந்த விளக்கமும் இல்லாமல் சும்மா யூ ரியூபில் வடை சுட்டவர்கள் கொஞ்சம் கோர்ட்டுக்கும் வீட்டுக்கும் அலைந்தால் நல்லது தான்😎!

கோடுவரை போகாது.

ஒரு மன்னிப்பு அவ்வளவு தான்.

இனிமேல் கையூட்டு வாங்கினாலும் பிரச்சனையே இல்லை.

மூச்சுவிட மாட்டானுகள்.

  • Haha 1
Posted
1 hour ago, ஏராளன் said:

அண்ணை செய்தி இணைக்க முடியாது எனவும், போனூடாக பின்னூட்டமிடுவதாகவும் குறிப்பிட்டிருந்தவர் சிறி அண்ணை.

தம்பி, ஜோக்கடிச்சா சிரிக்க வேணும், ஆராயக் கூடாது

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
3 hours ago, ஈழப்பிரியன் said:

முதலாவதாக தேடப்படுவபர் @தமிழ் சிறி,

3 hours ago, நிழலி said:

இப்ப விளங்குதா, ஏன் நாலைந்து நாதளுக்கு தான் காணாமல் போகப் போகின்றேன் என்றவர்?

ஆள் எஸ்கேப்! 

54 minutes ago, ஈழப்பிரியன் said:

இவரைத் தேடித்தான் இன்ரபோல் போகுது.

நான் எங்கே என்று… அடித்தும் கேட்பாங்க,
ஒன்றும் சொல்லிப் போடாதீங்க. 😂 🤣
 
  • Haha 7
  • கருத்துக்கள உறவுகள்
Posted

அனுராவின் வெற்றியில் சமுக ஊடகங்கள் முக்கிய பங்காற்றியுள்ளது,அரகலய போராட்டம் வெற்றியடைய இந்த யூப்டியுப் போராளிகள் முக்கிய பங்கு வகித்துள்ளார்கள்...சில தமிழ் யூ டியுப் போராளிகள் தற்பொழுது தமிழ் தேசியத்தை கொச்சைப்படுத்துவதில் அதிக கவனம் செலுத்துகின்றனர் ...பின்பு ஊழல் பற்றி பேசுகின்றனர்... லணடனிலிருந்தும் ஒர் யூ டியுப்பர் செயல்படுகிறார் போல தெரிகின்றது ...

அரச அதிகாரிகளின் கட‌மை யாருக்கு பார் பெர்மிட் கொடுக்க வேணும் என விசாரிப்பது... 

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

தமிழ் அரசியல்வாதிகள்  இலங்கை அரசிடம் மது கடைகள் திறக்க அனுமதி பெற்று பல மது கடைகள் திறந்து தமிழர்கள் குடித்து கொண்டு திரிகின்றனர் ஹீரோ அநுரகுமார திசாநாயக இதற்கு முடிவுகட்ட போகின்றார் என்கின்ற மாதிரி  தானே தமிழில் செய்திகள் வந்தன

  • கருத்துக்கள உறவுகள்
Posted
11 hours ago, ஈழப்பிரியன் said:

இவ்வாறான அவதூறுகள் தொடர்ச்சியாக பரப்பப்பட்டு வந்த நிலையில், அவதூறு பரப்பிய நபர்களுக்கு எதிராக கிளிநொச்சி பொலிஸிலும், ஒட்டுசுட்டான் 'சைபர் க்ரைம்' பிரிவிலும், கொழும்பு 'சைபர் க்ரைம்' தலைமையகத்திலும் கடந்த 24.09.2024ஆம் திகதி முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஹி ஹி .... தொடர்ச்சியாக பரப்பப்பட்டு வந்த நிலையில் காட்டிய மௌனம் ஏன்? திடுதிப்பென்று காட்டும் அவசரம் என்ன? ஆளாளுக்கு அவசரம், அக்கறை,  கோரிக்கை மதுபான  அனுமதிப்பத்திரம் பற்றி காட்டுபவர்கள் இதன் மூலம் சொல்ல வருவது என்ன? தாங்கள் சமூக அக்கறை கொண்ட நல்ல தலைவர்கள் எனக்காட்டி ஒருவரை விழுத்தி தம்மை உயர்த்தி வாக்கு சேர்க்க அதிரடி காட்டுகிறார்களா? கண்கெட்ட பின் சூரிய நமஸ்காரம் செய்ய முனைவது எல்லாம் தேர்தல் திருவிழா கூட்டத்தில் தம்மை புனிதர்களாக்க  விழைகிறார்கள்.

இப்பவொரு கலாச்சாரம்! எது வேண்டுமானாலும் செய்துவிட்டு, நான் மனநிலை பாதிக்கப்பட்டவன், போதைப்பொருளுக்கு அடிமை என்று சொல்லி தப்பித்துக்கொள்வது. மனநிலை பாதிக்கப்பட்டவர் தானாக அதை சொல்ல முடியுமா?  எல்லாம் சரியாக செய்கிறார்கள், யார் யாருக்கு எதிராக, சாதகமாக, என்ன, எங்கே செய்தால் இலகுவாக மக்களை போய்ச்சேருமென கணித்து செய்கிறார்கள். அகப்பட்டவுடன் என்ன சொல்லி தப்பலாமெனவும் தெரிகிறது. அப்படியான நோய் உள்ளவர்கள் தகுந்த சிகிச்சை ஏன் பெறவில்லை? அகப்பட்டவர்களை சும்மா விடாது, அதற்குரிய இடங்களுக்கு அனுப்பி வைத்தால்; இந்த கலாச்சாரம் தானாக மறையும். தான் செய்த தவறை ஏற்றுக்கொள்ள 'தில்' இல்லாதவனெல்லாம் இந்த வேலையில் இறங்கக்கூடாது. 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
6 hours ago, தமிழ் சிறி said:

நான் எங்கே என்று… அடித்தும் கேட்பாங்க,
ஒன்றும் சொல்லிப் போடாதீங்க. 😂 🤣
 
நீங்கள் எவ்வளவுதான் அடிச்சுக்கேட்டாலும், சிறியர் ஜேர்மனியிற்தான் இருக்கிறார் என்கிற உண்மையை உங்களுக்கு சொல்ல மாட்டேன் என்று சொல்லுவேன். போதுமா  சிறியர்? 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
19 hours ago, ஈழப்பிரியன் said:

தன்னை வைத்து சமூக வலைத்தளங்களில் பரப்பப்படும் அவதூறு பிரசாரங்களுக்கு எதிராக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரனால் பொலிஸ் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

large.IMG_7160.jpeg.5fc060ca1817d11aa97c

  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஶ்ரீதரன் தான் குற்றம் அற்றவர் என்று மறுப்பு தெரிவித்து விட்டார்.
விக்னேஸ்வரன் குற்றத்தை ஒப்புக் கொண்டு விட்டார்.

சுத்துமாத்து கோஷ்டிகளான சுமந்திரனும், சாணக்கியனும் ஏன் இன்னும் பம்மிக் கொண்டு இருக்கின்றார்கள்.
அடுத்த சில நாட்களில்… இவர்கள் மறுப்பு தெரிவிக்கவில்லை என்றால்…. சுமந்திரன் எடுத்ததாக சொல்லப்படும் மூன்று மதுபானசாலை அனுமதிப் பத்திரமும், சாணக்கியன் எடுத்ததாக சொல்லப்படும் கல்லடியில் இயங்கும் மதுபான பத்திரமும் உண்மை என்றே கருதப்படும். பதுங்கிக் கொண்டு இருக்காமல், உண்மையை சொல்ல துணிவு இவர்களிடம் உள்ளதா என்பதே, பலரின் எதிர்பார்ப்பு. சீக்கிரம் வெளியே வாங்க. 

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
57 minutes ago, தமிழ் சிறி said:

வெள்ளையடிக்க் குத்தகையையும் சாணியடிக்கும் குத்தகையையும் ஒன்றுசேரக் குத்தகை எடுத்துள்ளார் திருவாளர் சிறியவர்கள். 🤣

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
1 hour ago, Kapithan said:

வெள்ளையடிக்க் குத்தகையையும் சாணியடிக்கும் குத்தகையையும் ஒன்றுசேரக் குத்தகை எடுத்துள்ளார் திருவாளர் சிறியவர்கள். 🤣

கபிதன்…. கெதியாக உங்கள் “Boss” மாரிடம் சொல்லி, 
அவர்களின் கை சுத்தம் என்று நிரூபிக்க சொல்லுங்கள்.

இல்லையேல்…. சுமந்திரனின் வல்வெட்டித்துறை சாராயக் கடையும், சாணக்கியனின் கல்லடி சாராயக்கடையும் உண்மையாகி விடும். 

சுமந்திரன், இவ்வளவு காலமும் மௌனமாக இருப்பதை பார்க்க…. ஆள் எக்கச் சக்கமாக மாட்டு பட்டுப் போனார் என்றே கருதுகின்றோம். 😂

Edited by தமிழ் சிறி
  • கருத்துக்கள உறவுகள்
Posted

பொல்லுக்கொடுத்து அடி வாங்கபோறார்களென நினைக்கிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 hours ago, தமிழ் சிறி said:

கபிதன்…. கெதியாக உங்கள் “Boss” மாரிடம் சொல்லி, 
அவர்களின் கை சுத்தம் என்று நிரூபிக்க சொல்லுங்கள்.

இல்லையேல்…. சுமந்திரனின் வல்வெட்டித்துறை சாராயக் கடையும், சாணக்கியனின் கல்லடி சாராயக்கடையும் உண்மையாகி விடும். 

சுமந்திரன், இவ்வளவு காலமும் மௌனமாக இருப்பதை பார்க்க…. ஆள் எக்கச் சக்கமாக மாட்டு பட்டுப் போனார் என்றே கருதுகின்றோம். 😂

யாழ் களத்தில் எல்லோருடைய சாயமும் வெளுக்கிற நேரம்  சிறியர்.  

கொஞ்சக் காலம்தான் விட்டுப் பார்ப்போமே,... 😁

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 4/10/2024 at 22:53, putthan said:

அனுராவின் வெற்றியில் சமுக ஊடகங்கள் முக்கிய பங்காற்றியுள்ளது,அரகலய போராட்டம் வெற்றியடைய இந்த யூப்டியுப் போராளிகள் முக்கிய பங்கு வகித்துள்ளார்கள்...சில தமிழ் யூ டியுப் போராளிகள் தற்பொழுது தமிழ் தேசியத்தை கொச்சைப்படுத்துவதில் அதிக கவனம் செலுத்துகின்றனர் ...பின்பு ஊழல் பற்றி பேசுகின்றனர்... லணடனிலிருந்தும் ஒர் யூ டியுப்பர் செயல்படுகிறார் போல தெரிகின்றது ...

அநுரகுமார திசாநாயக்க வெற்றிக்கு சிங்கல சமுக ஊடகங்கள் முக்கிய பங்காற்றியிருக்கும்.
தமிழ் சமுக ஊடகங்கள்பற்றி  விபரம் தெரிந்த சிலர் சொல்வது பல தமிழ் யூரியுப்பர்கள் அநுரகுமார திசாநாயக்கவை அவர் வெற்றி பெற்ற பின்பு ஆதரிக்கின்றனர். புதிதாக பல தமிழ்  யூரியுப்பர்களும் திடீர் என்று அவருக்கு பிரசாரம் செய்ய இப்போது  தோன்றியுள்ளனர்.

  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

இனப்பிரச்சனை தீர்க்கப்படாவிட்டால் தரகர்களுக்கும் சகுனிகளுக்கும் கொண்டாட்டம். சிறீதரன், சுமந்திரன் அரசியல் தாதாக்கள்! அவர்கள் விலக மாட்டார்கள், மற்றவர்களை விரட்டுவார்கள். தங்களுக்குள் சந்தர்பத்திற்கேற்ப உடன் படிக்கை செய்து விட்டுக்கொடுத்தும் வாங்கியும் கொள்வார்கள். 

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.