Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

இலங்கை தொடர்பான ஐநா தீர்மானம்: அநுர அரசாங்கமும் நிராகரித்தது

Oruvan

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் தற்போதைய அமர்வில் முன்மொழியப்பட்ட தீர்மான வரைவை இலங்கை நிராகரித்துள்ளது.

51/1 தீர்மானத்திற்கு நாடு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருவதாகவும் யுத்த குற்றங்கள் குறித்த ஆதாரங்களை சேகரிக்கும் வெளிப்புற பொறிமுறைக்கான அதிகாரங்களை நீடிக்கும் எந்த தீர்மானத்தை இலங்கை ஏற்றுக்கொள்ளவில்லை எனவும் அமைச்சரவைப் பேச்சாளர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு பேசிய அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் தற்போதைய அமர்வில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள தீர்மானத்தின் நகல்வடிவை நிராகரிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.

எனினும், உள்நாட்டு நடைமுறைகள் மூலம் நல்லிணக்கம் உள்ளிட்ட முக்கிய மனித உரிமைப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு இலங்கை அரசாங்கம் அர்ப்பணிப்புடன் இருப்பதாகவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

இந்நிலையில், இலங்கை அரசாங்கத்தின் நிலைப்பாட்டை ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவைக்கு அறிவிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

மனித உரிமைகள் பேரவை மற்றும் ஏனைய மனித உரிமைப் பொறிமுறைகளுடன் ஒத்துழைப்புடன் அர்த்தமுள்ள கலந்துரையாடல்களில் இலங்கை ஈடுபடும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

https://oruvan.com/sri-lanka/2024/10/08/the-anura-government-rejected-the-un-human-rights-resolution-regarding-sri-lanka

  • கருத்துக்கள உறவுகள்
Posted

மனித உரிமைகள் பேரவையின் 51ஃ1 தீர்மானத்திற்கு எதிர்ப்பு 

புதிய ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க தலைமையிலான அரசாங்கமும், மனித உரிமைகள் பேரவையின் 51ஃ1 தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்க முடிவு செய்துள்ளது. ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க தலைமையில், திங்கட்கிழமை (07) நடைபெற்ற வாராந்த அமைச்சரவை கூட்டத்திலேயே இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.

  •      நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையின் 57 ஆவது கூட்டத்தொடர் எனும் தலைப்பில் அரசாங்க தகவல் திணைக்களத்தால் அனுப்பிவைக்கப்பட்டுள்ள ஊடக அறிக்கையில்  தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

2024.09.09 தொடக்கம் 2024.10.11 ஆம் திகதி வரை ஜெனீவா நகரில் இடம்பெறும் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையின் 57 ஆவது கூட்டத்தொடருக்கு அமைவாக, வெளிவிவகார அமைச்சர் கலாநிதி ஹரினி அமரசூரிய சமர்ப்பித்த விடயங்கள் அமைச்சரவையின் கவனத்திற்கு எடுக்கப்பட்டு, இலங்கை அரசின் நிலைப்பாட்டை கீழ்க்காணும் வகையில் சமர்ப்பிப்பதற்காக அமைச்சரவை உடன்பாடு தெரிவித்துள்ளது.

  • நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையின் சமகாலக் கூட்டத்தொடரில் முன்மொழியப்பட்டுள்ள பிரேரணை வரைபை இலங்கை நிராகரிப்பதாகவும், மனித உரிமைகள் பேரவையின் 51ஃ1 தீர்மானத்திற்கு இலங்கை தொடர்ச்;சியாக எதிர்ப்புத் தெரிவித்து வருவதுடன், சாட்சிகளைத் திரட்டுகின்ற பொறிமுறைக்கான அதிகாரங்களை நீடிக்கின்ற எந்தவொரு தீர்மானத்திற்கும் உடன்படாததுடன்,
  • தீர்மானத்தை நிராகரித்திருப்பினும், உள்நாட்டுச் செயன்முறை மூலம் நல்லிணக்கம் உள்ளிட்ட முக்கிய மனித உரிமைகள் பிரச்சினைகள் தொடர்பாக நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கும், இலங்கை அரசு உறுதிபூண்டுள்ளது.
  • மனித உரிமைகள் பேரவை மற்றும் நிரந்தர மனித உரிமைகள் பொறிமுறைகளுடன் ஒத்துழைப்புடனும், மற்றும் ஆக்கபூர்வமான உரையாடல் மூலம் நடவடிக்கைகளை மேற்கொள்வதாகும்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இலங்கை தொடர்பான எந்தவொரு ஜெனீவா தீர்மானத்திற்கும் அனுர அரசாங்கம் எதிர்ப்பு - யுத்த குற்ற ஆதாரங்களை சேகரிக்கும் பொறிமுறையையும் ஏற்றுக்கொள்ளாது - விஜித ஹேரத்

08 OCT, 2024 | 12:21 PM
image
 
ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் அமர்வில் சமர்ப்பிக்கப்படும் எந்த தீர்மானத்தின் 51/1 நகல் வடிவையும் இலங்கை தொடர்ந்து எதிர்க்கும் என அமைச்சரவை பேச்சாளர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் இடம்பெற்ற யுத்த குற்றங்கள் குறித்த ஆதாரங்களை சேகரிக்கும் வெளிப்புற  பொறிமுறைக்கான அதிகாரங்களை நீடிக்கும் எந்த தீர்மானத்தையும் இலங்கை ஏற்றுக்கொள்ளவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

அமைச்சரவையின் தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் தற்போதைய அமர்வில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள தீர்மானத்தின் நகல் வடிவை நிராகரிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது என  அவர் தெரிவித்துள்ளார்.

எனினும் உள்நாட்டு பொறிமுறை மூலம் நல்லிணக்கம் உட்பட மனித உரிமை பிரச்சினைகளிற்கு  தீர்வை காண்பது குறித்து அரசாங்கம் அர்ப்பணிப்புடன் உள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கை மனித உரிமை பேரவையுடனும், வழமையான மனித உரிமை பொறிமுறையுடனும், தொடர்ந்தும் ஒத்துழைப்பு அர்த்தபூர்வமான பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்கின்றது என அவர் தெரிவித்துள்ளார்.

புதிய ஜனாதிபதி தெரிவு செய்யப்பட்டுள்ளார், தேர்தலின் பின்னர் புதிய அரசாங்கம் தெரிவு செய்யப்படும் என தெரிவித்துள்ள வெளிவிவகார அமைச்சரும் அமைச்சரவை பேச்சாளருமான விஜித ஹேரத் நாங்கள் எங்கள் நிலைப்பாட்டை ஜெனீவாவிற்கு தெரியப்படுத்துவோம் என  குறிப்பிட்டுள்ளார்.

இந்த தீர்மானத்தில் உள்ள பல விடயங்களை எங்களால் ஏற்றுக்கொள்ள முடியாது, மனித உரிமைகளை பாதுகாப்பதற்கு இலங்கை அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் எனினும் இதற்கு காலம் தேவை, நாளை ஜெனீவாவில் இந்த நிலைப்பாட்டை தெரியப்படுத்துவோம் என விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

https://www.virakesari.lk/article/195746

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

ஐக்கிய நாடுகள் சபையின் மனிதவுரிமைகள் பேரவையின் புதிய தீர்மானத்திற்கான வரைபினை முற்றாக நிராகரித்திருக்கும் அநுர குமாரவின் அரசாங்கம்

புதன்கிழமை, 9 ஐப்பசி 2024

2024-04-11%20-%20AKD.jpg

னாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் தலைமையில் சிறிலங்காவில் பதவியில் அமர்த்தப்பட்டிருக்கும் புதிய மக்கள் விடுதலை முன்னணி அரசாங்கம் இன்று ஐக்கிய நாடுகள் சபையின் மனிதவுரிமைகள் அவையில் போர்க்குற்றங்களுக்கான சாட்சியங்களை சேகரிக்கும் காலத்தினை இன்னொரு வருடத்தினால் நீட்டிக்க கேட்கும் ஆணையினை முற்றான நிறைவேற்று அதிகாரத்துடன் நிராகரித்திருக்கின்றது.

 அமைச்சரவையில் எடுக்கப்பட்ட இத்தீர்மானத்தினை தகவல் திணைக்கள‌ம் அறிவித்தபோது, "மனிதவுரிமைகள் ஆணையத்தின் தீர்மானத்தின் வரைபினை நிராகரிப்பதென்று முடிவெடுத்திருக்கிறது" என்று தெரிவித்தது. 

"மனிதவுரிமை ஆணையத்தினால் தற்போது  முன்வைக்கப்பட்டிருக்கும் தீர்மானத்திற்கான வரைபினை சிறிலங்கா அரசாங்கம் உறுதியாக நிராகரித்திருக்கின்றது, அத்துடன் தீர்மானம் 51/1 இற்கான தனது எதிர்ப்பினையும் சிறிலங்கா அரசாங்கம் தொடரும்" என்று கூறப்பட்டிருக்கிறது. "வெளிநாடுகளிலிருந்து போர்க்குற்றங்கள் நடைபெற்றதற்கான ஆதாரங்களைத் தேடும் பொறிமுறைக்கான அதிகாரத்தினை இன்னுமொரு வருடத்தினால் நீட்டிக்கும் தீர்மானத்தின் வரைபை சிறிலங்கார அரசு ஏற்றுக்கொள்ளவில்லை" என்று அது மேலும் கூறியது. 

மக்கள் விடுதலை முன்னணியின் மந்திரிசபை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, பிரத மந்திரி கலாநிதி ஹரினி அமரசூரிய மற்றும் வெளிவிவகார அமைச்சர் விஜித்த ஹேரத் ஆகிய மூவரை உள்ளடக்கியது. மனிதவுரிமை அவையின் தீர்மானத்தை உறுதியாக எதிர்ப்பதாகத் தெரிவித்த இம்மூவரும், மனிதவுரிமை மீறல்களுக்கெதிரான உறுதியான நடவடிக்கைகளை உள்ளூர் பொறிமுறைகளைப் பாவித்து தம்மால் எடுக்கமுடியும் என்றும் கூறியிருக்கின்றனர்.

Cabinet.jpg

இத்தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பு இம்மாதத்தில் நடைபெறவிருக்கிறது என்பது குறிப்பிடத் தக்கது.

மனிதவுரிமைகள் ஆணையத்தின் தீர்மானத்தின் வரைபின் முழு வடிவமும் கீழே

https://www.tamilguardian.com/content/draft-un-resolution-extend-mandate-war-crimes-evidence-gathering-mechanism-12-months

திசாநாயக்கவும், மக்கள் விடுதலை முன்னணியும் இவ்வாறான ஒரு தீர்மானத்தை உறுதியாக எதிர்ப்பார்கள் என்பது எதிர்ப்பார்க்கப்பட்டதுதான். ஏனென்றால், கடந்த மாதம் சிங்களவர்கள் மத்தியில் உரையாற்றும்போது ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க "மனிதவுரிமை மீறல்களிலும் போர்க்குற்றங்களிலும் ஈடுபட்டவர்கள் என்று குற்றஞ்சாட்டப்பட்ட எவரையும் தண்டிக்கும் எண்ணம் எனது அரசாங்கத்திற்குக் கிடையாது" என்று உறுதி வழங்கியிருந்தார்.   

தமிழ் மக்கள் தம்மீது நடத்தப்பட்ட போர்க்குற்றங்களுக்காகவும், மனித நாகரீகத்திற்கெதிரான குற்றங்களுக்காகவும் சிறிலங்காப் போர்க்குற்றவாளிகளை சர்வதேச‌ நீதி விசாரணை ஒன்றின் மூலம் பொறுப்புக்கூற வைக்கவும், அவர்களைச் சர்வதேசக் குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்தவும் தொடர்ச்சியாகக் கோரிக்கை விடுத்து வரும்  நிலையில், "போர்க்குற்றங்களால் பாதிக்கப்பட்ட தமிழர்கள் கூட அக்குற்றவாளிகளைத் தண்டியுங்கள் என்று ஒருபோதும் கேட்டதில்லை" என்று அநுரகுமார திசாநாயக்க வெளிப்படையாகவே பொய்கூறியிருக்கிறார். 

GZDHHgNbQAAufZs.jpeg

அதேநேரம், அநுரவின் கட்சி இறுதிப்போரில் போர்க்குற்றங்களில் ஈடுபட்டார்கள் என்று நன்கு அறியப்பட்ட போர்க்குற்றவாளிகளை அரவணைத்து வருகிறது. உதாரணத்திற்கு போர்க்குற்றவாளியான ஜெனரல் அருண ஜயசேக்கரவை அநுர குமார திசாநாயக்க தனது பாதுகாப்புத்துறை ஆலோசகராக நியமித்து அழகுபார்த்திருக்கிறார். இதனைவிடவும் முன்னாள் விமானப்பட்ட தளபதியும், இறுதியுத்த காலத்தில் பெருமளவு படுகொலைகளில் ஈடுபட்டவனுமாகிய சம்பத் தூயகொந்தாவை தனது பாதுகாப்புச் செயலாளராகவும் நியமித்து மகிழ்ந்திருக்கிறார். இதைவிடவும், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க பங்கேற்கும் பல நிகழ்வுகளில் பேர்பெற்ற போர்க்குற்றவாளியும், இறுதியுத்த காலத்தில் கொடூரமான 55 ஆவது படைப்பிரிவிற்குத் தலைமை தாங்கியவனுமான ஜெனரல் சவேந்திர சில்வாவும் தவறாது அழைக்கப்பட்டு வருகிறான்.  

20240923_50.jpg

சிறிலங்காவின் புதிய ஜானதிபதி ஐ நா மனிதவுரிமைத் தீர்மானத்தை நிராகரித்திருந்தாலும், பல சர்வதேச மனிதவுரிமை அமைப்புக்கள் இலங்கையில் நடைபெற்ற போர்க்குற்றங்களுக்கான சாட்சியங்களைத் தேட இதுவரை இருக்கும் ஆணையினைத் தொடர்ந்து பாவித்து மேலதிக சாட்சியங்களைத் தேடுவதன் மூலம் போர்க்குற்றவாளிகளை நீதியின் முன் நிறுத்த வேண்டும் என்று ஐ நா மனிதவுரிமைச் சபைக்கு வேண்டுகோள் விடுத்திருக்கின்றன. 

"சாட்சியங்களைத் தேடுவதற்கான ஆணை நீட்டிக்கப்படாதவிடத்து, உள்நாட்டு விசாரணைப்பொறிமுறையில் நம்பிக்கையிழந்த , ஏமாற்றப்பட்ட‌ தமிழர்களும், அவர்களது உறவுளும் தமக்கான நீதியையும், உண்மையினையும், பரிகாரத்தினையும் தேடி ஐக்கிய நாடுகள் சபையிடம் வருவதை இது ஊக்குவிக்கும்" என்று இந்த அமைப்புக்கள் கூறியிருக்கின்றன. 

Edited by ரஞ்சித்
  • கருத்துக்கள உறவுகள்
Posted

தேர்தல் 

பதவி 

இனவாதத்தை விட்டு வெளியே வர அச்சம். (வெளியே வர நினைக்கவே இல்லை என்பது தான் உண்மை)

  • Like 4
  • கருத்துக்கள உறவுகள்
Posted

இது சார்ந்த செய்தி என்பதால்.....

95காலப்பகுதியில்

#சந்திரிக்கா_சாறி

#சந்திரிக்கா_bag

#சந்திரிக்கா_காப்பு எண்டு எங்கட சனம் கொண்டாடி தீர்த்தது கொஞ்ச நாள்ளையே #சந்திரிக்கா பூரா யாழ்பாணீஸ்சையும் மூட்டை முடிச்சோட கிளபினதும் தான் கண்ணுக்கு முன்னால வந்து போகுது..

இப்ப அதே போலதான் #AKD நம்ம மீட்பர் ரேஞ்சுக்கு வச்சு கொண்டாடுறியள் பாத்து கவவனம் 

https://www.facebook.com/share/v/3nrnLJoeod7EfSWc/

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, விசுகு said:

சமாதான புறாவாக புறாவையும் பறக்க விட்டார்களாமே?

கடைசியில் கண்டது சந்திரிகாவின் புதைகுழி கலாசாரத்தையே.

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, விசுகு said:

தேர்தல் 

பதவி 

இனவாதத்தை விட்டு வெளியே வர அச்சம். (வெளியே வர நினைக்கவே இல்லை என்பது தான் உண்மை)

தலைவர் இருந்தால் அனுரவுடன். பேச்சுவார்த்தை நடத்துவாரா??   இவன் இனவாதி  ஆகவே பேச முடியாது என்பாரா?? 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 minute ago, Kandiah57 said:

தலைவர் இருந்தால் அனுரவுடன். பேச்சுவார்த்தை நடத்துவாரா??   இவன் இனவாதி  ஆகவே பேச முடியாது என்பாரா?? 

பலமாக இருந்தால் அவர்களாகவே வருவார்கள்.

இப்போ எங்கே பலம்?

ஜனாதிபதியை சந்தித்த இரு தமிழ் தலைவர்களைப் பாருங்கள்.

ஒருவர் என்ன கதைத்ததென்றே தெரியாது.காலில் விழுந்ததாகவும் சொல்கிறார்கள்.

அடுத்தவர் தமிழர் பிரச்சனை பற்றி கதைக்கவில்லை.மாறாக மற்றைய தலைவர்களை எப்படி வீழ்த்தலாம் என்று யார்யார் பார் லைசன்ஸ் எடுத்தார்கள் என்பதை வெளியிட வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

Posted
8 minutes ago, Kandiah57 said:

தலைவர் இருந்தால் அனுரவுடன். பேச்சுவார்த்தை நடத்துவாரா??   இவன் இனவாதி  ஆகவே பேச முடியாது என்பாரா?? 

தலைவர் இனவாதி மகிந்தவை வெல்ல வைப்பதற்காக மக்களை தேர்தலைப் புறக்கணிக்கச் சொல்லி, இன்னொரு இனவாதி ரணிலை தோற்கடித்தவர் என்பதால், கண்டிப்பாக அனுரவை நோக்கி நேசக்கரத்தை நீட்டி இருப்பார். 

அவர் ஒவ்வொரு முறையும், இலங்கை தேர்தல்களின் மூலம் ஒரு சில இலக்குகளை எட்டும் வண்ணம், முடிவுகளை எடுத்தவர். பிரேமதாசாவில் இருந்து மகிந்தவரைக்கும் அப்படித்தான் முடிவுகள் எடுத்தார். ஆனால் கடைசி முடிவு, எதிர்பார்த்த விளைவுக்கு பதிலாக எதிர் விளைவைக் கொடுத்தது.

  • Thanks 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted
8 minutes ago, Kandiah57 said:

தலைவர் இருந்தால் அனுரவுடன். பேச்சுவார்த்தை நடத்துவாரா??   இவன் இனவாதி  ஆகவே பேச முடியாது என்பாரா?? 

நிச்சயமாக நடாத்துவார். எமது ஆயுதங்களுடன் எம்மை பாதுகாத்த படி கொழும்பில் நின்று. ...

  • கருத்துக்கள உறவுகள்
Posted
3 minutes ago, விசுகு said:

நிச்சயமாக நடாத்துவார். எமது ஆயுதங்களுடன் எம்மை பாதுகாத்த படி கொழும்பில் நின்று. ...

நிச்சயமாக அது தான் சரியான வழியும் ஆகும். நாங்கள் இலங்கையின் ஒவ்வொரு அரசாங்கத்துடனும். பேச வேண்டி இருக்கிறது  விரும்பினாலும். விரும்பவிட்டாலும் 

இது எமது தலைவிதி ஆகும்   மாற்ற முடியாது   

நல்ல விடயங்களை பாராட்டவும் வேண்டும்   மகேசன்.   வேதநாயகம்    பாஸ்கரன்,........போன்றோரின். அரசியல் செல்வாக்கு   லஞ்சம்  அற்ற.  திறமைக்கு மதிப்பு அளித்த நியமனங்கள் பாராட்டுக்கு உரியவை  

அடிபடுவதை விட. பாராட்டு பகழ்ந்து  காரியங்களை செய்யலாம்  

நான் அனுரவின். ஆதரவுக்கரம் இல்லை  ஆனால் நல்ல செயல்களை வரவேற்றேன். சில உறுப்பினர்கள் நக்கல் நளினம்.  செய்தார்கள்  கவலையளித்தது 🙏🙏🙏

பாறுவாயில்லை. அவர்கள் மகிழ்ச்சியாக இருப்பது எனக்கும் மகிழ்ச்சி தான்  🤣😂

  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
20 minutes ago, ஈழப்பிரியன் said:

பலமாக இருந்தால் அவர்களாகவே வருவார்கள்.

இப்போ எங்கே பலம்?

ஜனாதிபதியை சந்தித்த இரு தமிழ் தலைவர்களைப் பாருங்கள்.

ஒருவர் என்ன கதைத்ததென்றே தெரியாது.காலில் விழுந்ததாகவும் சொல்கிறார்கள்.

அடுத்தவர் தமிழர் பிரச்சனை பற்றி கதைக்கவில்லை.மாறாக மற்றைய தலைவர்களை எப்படி வீழ்த்தலாம் என்று யார்யார் பார் லைசன்ஸ் எடுத்தார்கள் என்பதை வெளியிட வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

எங்களுக்கு இலங்கை தமிழர்களுக்கு ஒரு நல்ல அரசியல் கட்சி இன்று இல்லை   இந்த தமிழருசு கட்சியின் தலைவர்கள் சிறிதரன்  சுமததிரன். மாவை,.........போன்றோர் ஒத்த கருத்துகள் உடைய ஒற்றுமையான தலைவர்கள் இல்லை  தேர்தலில் பின் இன்னும் உடைவரகள்   இப்போது நடித்து  பாராளுமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கையை அதிகரிக்க விருமபுகிறார்கள். அவ்வளவு தான்   என்னைப்பொறுத்தவரை இவர்களை ஒழுங்குப்படுத்தும் ஒரே வழி   இந்த முறை அனுரவுக்கு வாக்கு போடுவது தான்   இதன் மூலம்  இரண்டு நன்மைகள் உண்டு 

இவரகளை ஒழுங்குப்படுத்தும் 

அனுர என்ன செய்வார் என்று பார்க்கலாம் 

நான் அனுரவின் ஆதரவு இல்லை 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
3 minutes ago, Kandiah57 said:

முடிவு எங்கள் கையில் இல்லையே.

எல்லாம் மக்கள் கையில்.

இன்னும் ஒரு மாதம்.

  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
54 minutes ago, Kandiah57 said:

எங்களுக்கு இலங்கை தமிழர்களுக்கு ஒரு நல்ல அரசியல் கட்சி இன்று இல்லை   இந்த தமிழருசு கட்சியின் தலைவர்கள் சிறிதரன்  சுமததிரன். மாவை,.........போன்றோர் ஒத்த கருத்துகள் உடைய ஒற்றுமையான தலைவர்கள் இல்லை  தேர்தலில் பின் இன்னும் உடைவரகள்   இப்போது நடித்து  பாராளுமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கையை அதிகரிக்க விருமபுகிறார்கள். அவ்வளவு தான்   என்னைப்பொறுத்தவரை இவர்களை ஒழுங்குப்படுத்தும் ஒரே வழி   இந்த முறை அனுரவுக்கு வாக்கு போடுவது தான்   இதன் மூலம்  இரண்டு நன்மைகள் உண்டு 

இவரகளை ஒழுங்குப்படுத்தும் 

அனுர என்ன செய்வார் என்று பார்க்கலாம் 

நான் அனுரவின் ஆதரவு இல்லை 

நமக்குள் ஒற்றுமை இல்லை 

நமக்கு நல்ல கட்சி இல்லை 

நாங்க சரியில்லை 

நாங்க உதவாக்கரைகள்

நாங்க 

நாங்க....???

என்ன இது??

எங்கே போகிறோம்?? என்னவாகப்போகிறோம்??😭

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

இலங்கையில் எந்த ஜனாதிபதி பதவிக்கு வந்தாலும்  இந்த முடிவை தான் எடுப்பார்.  இதே நிலைப்பாட்டில் தான் அவரால் இருக்க முடியும். தலைவர் பிரபாகரன் அநுர குமாரவின் இடத்தில் இருந்திருந்தாலும் இதே நிலைப்பாட்டிலேயே இருப்பார். தனது போராளிகளை அனைத்துலக நீதிமன்றம் விசாரிப்பதற்கு ஒரு போதும் அனுமதித்திருக்க மாட்டார்.

ராஜீவ் கொலை தொடர்பாக இன்ரபோல் உங்களை  தேடுகிறதே, அது தொடர்பாக உங்கள் நிலை என்ன என்று ஒரு நிருபர் கேட்ட போது,  “நடக்கிற காரியங்களை கதைப்போம்” என்று கொடுப்புக்குள் சிரித்தவறே கூறிக் கடந்து சென்றவர் அவர். 

தர்ம நியாயங்களுக்கு அப்பால்,  இது தான் உலக நியதி.  உலக நாடுகளும் இலங்கையை கட்டுக்குள் வைத்திருக்க  தமக்கான துரும்பு சீட்டாக மட்டுமே இதை பயன்படுத்துமேயொழிய  எந்த விசாரணையையும் நடத்த போவதில்லை. 

ஆகவே  தலைவர் பிரபாகரன் கூறியபடி,  நடக்கிற காரியங்களை கதைத்து தமிழரின் இருப்பை வட கிழக்கில் பாதுகாப்பதே உடனடித்தேவை. 

  • Like 8
  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
39 minutes ago, விசுகு said:

நமக்குள் ஒற்றுமை இல்லை 

நமக்கு நல்ல கட்சி இல்லை 

நாங்க சரியில்லை 

நாங்க உதவாக்கரைகள்

நாங்க 

நாங்க....???

என்ன இது??

எங்கே போகிறோம்?? என்னவாகப்போகிறோம்??😭

விசுகர். உண்மையை  மூடி மறைக்க முடியாது  மறைத்தால் எங்களுக்கு தான்  நஸ்டம்.  

மக்கள் வாக்கு யாருக்கு போடுவது என்பதை  அரசியல் கட்சிகள் தான் முடிவு செய்கிறது     

இதுவரை தமிழன்  தமிழரசு உறுப்பினர்களை  தான் பாராளுமன்றம் அனுப்பினார்கள்  

என்ன பிரயோஜனம் கணடோம்???  

என்னுடையதும். உங்களதும் விருப்பம் முக்கியம் இல்லை இந்த முறை இலங்கையில் தமிழர்கள்  வழங்க போகும் தீர்ப்பை எற்றுக்கொள்வோம். 🙏

  • கருத்துக்கள உறவுகள்
Posted
3 hours ago, விசுகு said:

இது சார்ந்த செய்தி என்பதால்.....

95காலப்பகுதியில்

#சந்திரிக்கா_சாறி

#சந்திரிக்கா_bag

#சந்திரிக்கா_காப்பு எண்டு எங்கட சனம் கொண்டாடி தீர்த்தது கொஞ்ச நாள்ளையே #சந்திரிக்கா பூரா யாழ்பாணீஸ்சையும் மூட்டை முடிச்சோட கிளபினதும் தான் கண்ணுக்கு முன்னால வந்து போகுது..

இப்ப அதே போலதான் #AKD நம்ம மீட்பர் ரேஞ்சுக்கு வச்சு கொண்டாடுறியள் பாத்து கவவனம் 

https://www.facebook.com/share/v/3nrnLJoeod7EfSWc/

இதேதான்...பெயர்தான் அவரே தவிர மற்றையவை அவரவர் முடிவுபோல்தான் நடக்கிறது...மைத்திரி வந்தவுடன் கோவில் கட்டுகிற ரேஞ்சிலை நம்ம சனம் கொண்டாடினமாதிரித்தான்....செவ்வாய்தான் இங்கு வந்தேன்..நிண்ட காலத்தில் அனுரவுக்கு கொடிபிடித்து சப்போட்டு பண்ணினனான்..கூப்பிட்டு குசுகுசுக்கையில்...யாழில் உள்ள தனது சப்போட்டர்ஸ் பற்றியும் கேட்டவர்🙃😛...ஆறுதலா கதைப்பம்

  • கருத்துக்கள உறவுகள்
Posted
21 minutes ago, island said:

இலங்கையில் எந்த ஜனாதிபதி பதவிக்கு வந்தாலும்  இந்த முடிவை தான் எடுப்பார்.  இதே நிலைப்பாட்டில் தான் அவரால் இருக்க முடியும். தலைவர் பிரபாகரன் அநுர குமாரவின் இடத்தில் இருந்திருந்தாலும் இதே நிலைப்பாட்டிலேயே இருப்பார். தனது போராளிகளை அனைத்துலக நீதிமன்றம் விசாரிப்பதற்கு ஒரு போதும் அனுமதித்திருக்க மாட்டார்.

இதை வாசிக்கும்போது 2009 சனவரி மாதத்திலிருந்து மே 18 வரை தமிழர்களால் தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளை பேசக்கூட நாங்கள் தயாரில்லை, அப்படி பேசமுற்பட்ட நேரடிச் சாட்சியங்கள் கூட துரோகிகளாக்கப்பட்டு அடக்கப்பட்டுவிட்டனர். மற்றையோர் துரொகப்பட்டத்துக்கஞ்சி அடங்கிவிட்டனர். நிலமை இவ்வாறு இருக்கும்போது தனது இராணுவத்தைக் காட்டிக்கொடுத்து சிங்கள இனவாதிகளிடமிருந்து துரோகிப் பட்டத்தைப்பெற அநுர குமார ஒன்றும் சாலிய குமார அல்ல. பெரும்பான்மை சிங்களவர்கள் இனவாதிகளே.

குறிப்பு: சாலிய குமார துட்டகெமுனுவின் மகன் பட்டத்து இளவரசன். சண்டாள சாதியைச் சேர்ந்த அசோகமாலாவின் மேல்கொண்ட காதலினால் அரசபதவியை துறந்தவன்.

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
4 hours ago, விசுகு said:

இது சார்ந்த செய்தி என்பதால்.....

95காலப்பகுதியில்

#சந்திரிக்கா_சாறி

#சந்திரிக்கா_bag

#சந்திரிக்கா_காப்பு எண்டு எங்கட சனம் கொண்டாடி தீர்த்தது கொஞ்ச நாள்ளையே #சந்திரிக்கா பூரா யாழ்பாணீஸ்சையும் மூட்டை முடிச்சோட கிளபினதும் தான் கண்ணுக்கு முன்னால வந்து போகுது..

இப்ப அதே போலதான் #AKD நம்ம மீட்பர் ரேஞ்சுக்கு வச்சு கொண்டாடுறியள் பாத்து கவவனம் 

https://www.facebook.com/share/v/3nrnLJoeod7EfSWc/

சந்திரிக்கா ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட போது வன்னியிலிருந்து வாழ்த்துச்செய்தி தொலைநகல் மூலம் சென்றதாக அறிந்திருந்தேன்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
20 minutes ago, குமாரசாமி said:

சந்திரிக்கா ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட போது வன்னியிலிருந்து வாழ்த்துச்செய்தி தொலைநகல் மூலம் சென்றதாக அறிந்திருந்தேன்.

அது தமிழனின் பண்பாடு 

வெற்றி பெற்றேரை வாழ்த்துவது 🙏

  • கருத்துக்கள உறவுகள்
Posted

எந்த சிங்கள ஜனாதிபதி தனது இனமும் படைகளும் போர் குற்றமிழைத்தது என்று ஒப்புக்கொள்வார் அவர்களை ஐநா விசாரணையின் முன் நிறுத்துவார் என்று எதிர் பார்க்கிறோம்?

ஒரு சிங்கள தேச தலைவர் தமிழர் பக்கம் நின்று தீர்வுக்கு ஒத்துழைப்பார் என்று நாம் எதிர்பார்ப்பை கொண்டிருந்தால் அநுர அல்ல நாம்தான் ஏமாளிகள்.

சர்வதேச அழுத்தத்தின் மூலமே தமிழர் தீர்வு சாத்தியம் அப்படி ஒரு தீர்வை ஐநா கொண்டுவந்தாலும் வீட்டோ அதிகாரத்தை பாவித்து சீனாவும் ரஷ்யாவும் இலங்கையை காப்பாத்தும்,

உலகத்தையே நெருக்கடிக்கு உள்ளாக்கும் உக்ரேன் ரஷ்ய போர் விவகாரத்திலேயே வீட்டோ நாடுகளால் ஒன்றுமே செய்ய முடியவில்லை, வீட்டோ அதிகாரமுள்ள ஒரு நாடு எதிர்த்தாலும் எந்த முடிவையும் எட்ட முடியாது என்ற நிலையில் ஏறக்குறைய அனைத்து வீட்டோ நாடுகளுடனும் நல்லுறவை கொண்டுள்ள இலங்கையை  எவர் சிறைக்கு அனுப்புவார் என்ற எதிர்பார்ப்பு கொண்டுள்ளோம்?

சிங்களவனை தீர்வை நோக்கி தள்ள உறுதியான தமிழ் தலைமை ஒன்றும் ஒருத்தர் சொன்னால் எல்லோரும் கேட்கும் தலைவனும்  உள்ளூரில் இருக்கவேண்டும் அப்படி யார் இருக்கிறார்கள்?

மஹிந்த வந்தால் அவனுடன் சேர்ந்து சிங்ககொடி பிடிக்கிறார்கள், மைத்திரி வந்தால் அவனிடமே சிங்கள அதிரடிபடை பாதுகாப்பு கேட்கிறார்கள், ரணில் வந்தால் பங்களா கவுஸ்  சொகுசு கார்கள் , சாராய அனுமதிபத்திரம் என்று கையேந்துகிறார்கள்  பின்பு தேர்தல் வரும்போது சிங்கள தலைமைகளை சர்வதேசத்தின் முன் நிறுத்துவோம் என்று தமிழர் பகுதிகளில் ரீல் விடுகிறார்கள்.

இங்கே எம்மை ஏமாற்றுவது அதிகம் சிங்கள தலைமைகளா தமிழ் தலைமைகளா?

அநுர  சாமானியமக்களின் அடிப்படை தேவைகளையும் அதிகாரமிக்கவர்கள் பொதுமக்கள்மேல் செலுத்தும் ஆதிக்கத்தையும் இன மதம் பாராது வாட்டும் ஊழலையும் தடுத்து  வேலை வாய்ப்பு விலைவாசி குறைப்பு , மொழி தொடர்பாடல்  என்று  பூர்த்தி செய்தால் அனைவரும் அவனவன் வேலையை பார்க்கபோய்விடுவான் இனபிரச்சனை அது இது என்று குரலெழுப்பமாட்டான் , அப்படி குரலெழுப்பினால் குட்டையை குழப்புகிறீர்கள் என்று சொல்லி அவர்களுக்கெதிராக சொந்த இனமே திரும்பும் என்ற கொள்கை முன்னெடுப்பில் மிக சாதுரியமாக காய் நகர்த்துகிறான், 

அதில் அவர் வெற்றிபெறும் வாய்ப்பும் அதிகமாக இருப்பதாகவே தெரிகிறது, தமிழர்கள் அநுரவை ஆதரிப்பது ஒருபுறம் இருக்கட்டும், தமிழர்களின் வாக்குகளை பெற்று பாராளுமன்ற பதவியை பிடிக்க துடிக்கும் தமிழ்தலைமைகள் அநுரவின் ஆதரவை எப்படி பெறலாம் என்பதற்கு ஓடி திரிகிறார்கள் என்பதே தற்போதுள்ள யதார்த்தம். 

பொது தேர்தலின் பின்னர் எப்படி அநுரவின் கடை கண் பார்வையை பெறலாம் என்ற சிந்தனையிலேயே ஐயாக்கள் ஆளுக்கொரு பைல்களுடன் ஓடியோடி கட்சிகூட்டம் நடத்திக்கொண்டிருக்கிறார்கள் 

அதனால்தான் அநுர ஜனாதிபதியான பின்னர் அவருக்கு வளர்ந்துவரும் செல்வாக்கை பார்த்து எந்த தமிழ்கட்சியும் அவர் ஆட்சிக்கெதிராக எந்த கடும் வார்த்தைகளையும் இன்றுவரை உச்சரிக்கவில்லை.

எமது பிரதிநிதிகள் தமிழர்களிடம் வாக்குகளை வாங்கி சிங்களவனை ஆதரிப்பதைவிட சிங்களவனுக்கு நேரடியாக அந்த வாக்கை போட்டு அவனை ஆதரித்தால் இரண்டுக்குமிடையில் என்ன வித்தியாசம் உள்ளது என்பதை புரிந்தவர்கள் கூறவும்.

இதனால் சிங்கள ஆதரவு கோஷம் என்று பொருள் கொள்ளவேண்டாம், எம்மிடம் எமது அரசியல்பற்றி என்ன தெளிவுள்ளது  என்பதை அறியவே அவா.

இனப்பிரச்சனையின் குரலாக எம் தரப்பிலிருந்து கடைசிவரை போர் வடுவின் ஆதாரமாக ஒலிக்கபோவது காணாமல் ஆக்கப்பட்ட குடும்பங்களின் அழுகுரல்கள் மட்டுமே,

அந்த குடும்பங்களுடன் ஒன்றிணந்து அனைத்து தமிழர்தரப்பும் போராட்டம் நடத்தினால் ஓரளவாவது நெருக்கடி கொடுக்கலாம்,அதுமட்டுமே போர்குற்றத்தின் முன் சிங்களத்தை நிறுத்த உதவகூடிய பெரும் துருப்பு சீட்டு, ஆனால் எவனாவது அவர்கள் பக்கம் திரும்பிகிறார்களா என்று பாருங்கள்?

சிங்களவன் கொடுத்த சொகுசுகாரில்   கண்ணாடியை உயர்த்திவிட்டு போராட்டம் நடத்தும் அவர்களை கடந்துபோகிறார்கள் அந்த அளவில்தான் இருக்கிறது நிலமை.

காலம் முழுவதும் எமக்கான தீர்ப்பை வாங்கி தாருங்கள் என்று சொல்லி தமிழர்கள்  வாக்களித்து தமிழர் பிரதிநிதிகளை கொழும்பு நோக்கி அனுப்பினார்கள், இந்த தேர்தலில் , தமிழர் பிரதிநிதிகள் என்று சொல்லிக்கொண்டு திரிந்தவர்களுக்கு தீர்ப்பெழுதி வீட்டுக்கு அனுப்ப போகிறார்கள் என்ற நிலமையே நிலவுவதாக தெரிகிறது.

சிங்கள அரசியலும் தமிழ் அரசியலும் கொள்கையளவில் ஒன்றேதான் ,

அது ஏமாற்றுவது.

  • Like 3
  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
31 minutes ago, valavan said:

ஜயா

இதெல்லாம் தெரிந்தது தான்.

எனவே  தமிழர் நிலம் மற்றும் தமிழ்தேசியம் என்பதை உதறித் தள்ளிவிட்டு சிறீலங்கன் என்று எல்லோரும் ஜேவிபியில் கலந்து விடலாம் என்கிறீர்களா?  சுத்தி வளைக்காமல் ஆம் இல்லை என்று மட்டும் பதில் சொல்லுங்கள். 

Edited by விசுகு
ஒரு வரிகள் சேர்க்க
  • கருத்துக்கள உறவுகள்
Posted
5 minutes ago, விசுகு said:

ஜயா

இதெல்லாம் தெரிந்தது தான்.

எனவே  தமிழர் நிலம் மற்றும் தமிழ்தேசியம் என்பதை உதறித் தள்ளிவிட்டு சிறீலங்கன் என்று எல்லோரும் ஜேவிபியில் கலந்து விடலாம் என்கிறீர்களா?  சுத்தி வளைக்காமல் ஆம் இல்லை என்று மட்டும் பதில் சொல்லுங்கள். 

ஆக நான் முக்கி முக்கி எழுதினதில் நீங்கள் புரிந்து கொண்டது ஜேவிபியுடன் தமிழர்களை இணைய சொல்கிறேன் என்பதா விசுகு அண்ணா?

சிங்களவனுடன் நான் இணைய சொல்லவில்லை சிங்களவர்களுடன் தமிழர்களை இணைக்கும் வேலையை தமிழர் கட்சிகளே செய்து கொண்டிருக்கின்றன என்ற கள யாதார்த்தத்தை தட்டிவிட்டிருக்கிறேன்.

சரி என்னிடம் நீங்கள் ஒரு கேள்வி கேட்டதால் உங்களிடமும் நான் ஒரு கேள்வி கேட்கிறேன் ஒரேவரியில் சொல்லிவிடுங்கள்.

தமிழர்தேசத்தில் தற்கால தமிழர் அரசியலில் தமிழ் தேசியத்தையும் தமிழர் நிலப்பரப்பையும் அடையாளமாய் விசுவாசமாய் விட்டுக்கொடுப்பில்லாமல்  தாங்கி நிற்கும் தமிழ் கட்சியும் தலைவரும் எது & யார்?

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
8 minutes ago, valavan said:

ஆக நான் முக்கி முக்கி எழுதினதில் நீங்கள் புரிந்து கொண்டது ஜேவிபியுடன் தமிழர்களை இணைய சொல்கிறேன் என்பதா விசுகு அண்ணா?

சிங்களவனுடன் நான் இணைய சொல்லவில்லை சிங்களவர்களுடன் தமிழர்களை இணைக்கும் வேலையை தமிழர் கட்சிகளே செய்து கொண்டிருக்கின்றன என்ற கள யாதார்த்தத்தை தட்டிவிட்டிருக்கிறேன்.

சரி என்னிடம் நீங்கள் ஒரு கேள்வி கேட்டதால் உங்களிடமும் நான் ஒரு கேள்வி கேட்கிறேன் ஒரேவரியில் சொல்லிவிடுங்கள்.

தமிழர்தேசத்தில் தற்கால தமிழர் அரசியலில் தமிழ் தேசியத்தையும் தமிழர் நிலப்பரப்பையும் அடையாளமாய் விசுவாசமாய் விட்டுக்கொடுப்பில்லாமல்  தாங்கி நிற்கும் தமிழ் கட்சியும் தலைவரும் எது & யார்?

எவரும் இல்லை 

ஆனால் இங்கே தான் நாம் தவறு விடுகின்றோம். நாங்க சரியில்லை எனவே....??

இங்கே நீங்கள் எழுதியதாக நான் சொல்லவில்லை. அதை தான் மக்கள் முன் ஒரேயொரு தெரிவாக விடுகின்றோம்.  மிக மிக ஆபத்தான மீளமுடியாத குழி இது.

எம் தவறுகள் திருத்தப்பட வேண்டும் என்பது தான் நான் சொல்வது. அதற்காக நாம் ஒவ்வொருவரும் என்ன செய்தோம் செய்கிறோம். பதில் பூச்சியம் தானே? அப்படியானால் அந்த அரசியல்வாதிகளை மட்டும் கை நீட்டி என்ன பிரயோஜனம்???

Edited by விசுகு
எழுத்துப்பிழை

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • குரங்குகளை பிடித்து சைனாவுக்கு அனுப்புற கையோட என்கடைவெத்து வேட்டு தமிழ் அரசியல்வாதி கள் எனும் குரங்கு கூட்டத்தையும் முக்கியமாய் சுமத்திரன் என்ற குரங்கையும் அனுப்பினால் புண்ணியமாய் போகும் .😄
    • மர்ம காய்ச்சல் காரணமாக 44 பேர் வைத்தியசாலைகளில் அனுமதி Digital News Team     யாழ்ப்பாண மாவட்டத்தில் தற்போது பரவிவரும் ஒருவிதமான காய்ச்சல் காரணமாக இதுவரை 44 பேர் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தற்போது இக்காய்ச்சல் காரணமாக பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையிலும் யாழ். போதனா வைத்தியசாலயிலும் 32 பேர் சிகிச்சைபெற்று வருகின்றனர் என யாழ். பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் மற்றும் வைத்தியகலாநிதி. ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், மேலும் இக்காய்ச்சல் காரணமாக இதுவரை 7 இறப்புக்கள் ஏற்பட்டுள்ளன. நோயாளர்களிடமிருந்து கொழும்பு மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்திற்கு அனுப்பப்பட்ட மாதிரிகளில் இருவருக்கு எலிக்காய்ச்சல் (Leptospirosis) இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. எனவே தற்போது மேற்படி காய்ச்சலை எலிக்காய்ச்சலாக கருதி சிகிச்சைகளும் தடுப்பு நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இக்காய்ச்சல் தற்போது பரவிவரும் பருத்தித்துறை, கரவெட்டி, சாவகச்சேரி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளில் ஒருநாள் காய்ச்சலாக இருந்தாலும் உடனடியாக அருகிலுள்ள அரச வைத்தியசாலையை நாடும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. இப்பிரதேசத்திலுள்ள வைத்தியசாலைகளில் இந்நோய்க்கு சிகிச்சை வழங்குவதற்கான மருந்துகள் வழங்கப்பட்டுள்ளன. இவ்விடயம் சம்பந்தமாக சுகாதார வைத்திய அதிகாரிகளால் ஒலிபெருக்கி மூலம் பொதுமக்களுக்கு அறிவிக்கப்படுகின்றது. மேலும் பிரதேச செயலாளர்களின் உதவியுடன் கிராமமட்ட உத்தியோகத்தர்கள் மூலமாக பொதுமக்களுக்கு இவ்விடயம் சம்பந்தமாக விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகின்றது. எலிக்காய்ச்சல் நோய் ஏற்படக்கூடிய ஆபத்து இலக்கினர்களான விவசாயிகள், மீன்பிடித் தொழிலாளர்கள், துப்பரவுப் பணியாளர்கள் போன்றவர்களுக்கு இந்நோய்க்கான தடுப்பு மருந்து வழங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. விவசாயத் திணைக்களத்தின் பிரதேசமட்ட உத்தியோகத்தர்களின் உதவியுடன் கிராமமட்டத்தில் விவசாயிகளுக்கு தடுப்பு மருந்துகளை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்நோய்ப்பரம்பலை ஆய்வுசெய்து ஆலோசனை வழங்குவதற்காக மத்திய சுகாதார அமைச்சின் தொற்றுநோய்த் தடுப்பு பிரிவிலிருந்து வைத்திய நிபுணர்கள் குழுவொன்று யாழ்ப்பாண மாவட்டத்திற்கு வருகைதந்துள்ளது. அவர்கள் வைத்தியசாலைகளிலும் சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைகளிலும் களத்திலும் ஆய்வுகளை மேற்கொண்டு உரிய ஆலோசனைகளை வழங்கவுள்ளனர். மேலும் இந்நோய்க்கு சிகிச்சை அளிப்பதற்கான ஒருதொகுதி மருந்துகள் சுகாதார அமைச்சின் மருத்துவ வழங்கல் பிரிவினால் யாழ்ப்பாணம் மாவட்டத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார். https://thinakkural.lk/article/313646  
    • Chesswithlokesh  ·  Suivre 16 h  ·  Anand passing it to Gukesh ! 2 world champions
    • இதுவரை கூறப்பட்ட காரணங்கள் 1. குரங்கு 2. வெப்பநிலை  ஆனால் உண்மை இன்னமும் வெளிவரவில்லையே??? $$$ உள்ளூர்ச் சந்தையை புறக்கணித்து ஏற்றுமதியை ஊக்குவித்ததன் பலன்.  பாரிய தென்னந்தோட்டங்கள் ஏற்றுமதி நிறுவனங்களுடன் ஏற்படுத்தப்பட்ட ஒப்பந்தத்திற்கு இணங்க தமது உற்பத்திகளை ஏற்றுமதி நோக்கி திருப்பியதால் டாலர் இருக்கு தின்ன தேங்காய் இல்லையே…..! யாழ் உறவுகளுக்கு ஞாபகம் இருக்கும் “தேங்காய் தண்ணீர் ஏற்றுமதி”
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்

      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.