Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது
ஜஸ்டின் ட்ரூடோ மற்றும் நரேந்திர மோதி

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, இந்தியா மற்றும் கனடா இடையே ராஜ்ஜிய ரீதியில் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது.
14 அக்டோபர் 2024
புதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர்

ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலை வழக்கில் இந்தியாவுக்கும் கனடாவுக்கும் இடையே இருந்த ராஜதந்திரச் சிக்கல் மீண்டும் தலைதூக்கியுள்ளது. இம்முறை இன்னும் வலுவாக. கனடாவில் இருந்து இந்திய தூதர் சஞ்சய் குமார் வர்மா மற்றும் மற்ற அதிகாரிகளை திரும்பப் பெற இந்தியா தீர்மானித்துள்ளது. அத்துடன், டெல்லியில் உள்ள கனடா தூதுரகத்திற்கும் இந்தியா சம்மன் அனுப்பியுள்ளது.

இந்தியாவுக்கான கனடா தூதர் ஸ்டீவர்ட் ராஸ் வீலர் உள்ளிட்ட 6 பேரை வெளியேற்ற இந்தியா முடிவு செய்துள்ளது. அக்டோபர் 19-ம் தேதி இரவு 11.59 மணிக்குள் இந்தியாவை விட்டு வெளியேற வேண்டும் எனறு அவர்களை இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் கேட்டுக் கொண்டுள்ளது.

இந்தியா - கனடா இடையே என்ன நடக்கிறது?

கனடாவுக்கான தூதரை திரும்பப் பெற இந்தியா முடிவு

2023-ஆம் ஆண்டு ஜூன் மாதம் நடந்த, காலிஸ்தானுக்கு ஆதரவான ஆர்வலர் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலை வழக்கில் கனடாவுக்கான இந்திய தூதர் சஞ்சய் குமார் வர்மா மற்றும் பிற இந்திய தூதரக அதிகாரிகளுக்கு தொடர்பு இருப்பதாக கனடா குற்றம் சாட்டியது.

கனடாவின் இந்த குற்றச்சாட்டுகள் அபத்தமானது என இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ பல சவால்களை எதிர்கொள்வதால் இந்த விவகாரம் இப்போது அரசியல் ரீதியாக இணைக்கப்பட்டுள்ளது என்று இந்தியா கூறியுள்ளது.

"ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் 13) அன்று கனடா தூதரகத்தில் இருந்து தகவல் ஒன்று வந்தது. கனடாவில் நடைபெற்று வரும் விசாரணையில் இந்தியாவின் தூதரக உயர் அதிகாரி மற்றும் பிற இந்திய தூதரக அதிகாரிகளுக்கு தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது என்று அதில் குறிப்பிடப்பட்டு இருந்தது. இந்த அபத்தமான குற்றச்சாட்டுகளை இந்திய அரசு திட்டவட்டமாக மறுக்கிறது. கனடாவில் ட்ரூடோ அரசாங்கம் மக்கள் வாக்குகளைப் பெறுவதற்காக இதைச் செய்கிறது,” என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டு இருந்தது.

இந்நிலையில், இந்தியா தனது தூதர் சஞ்சய் குமார் வர்மா மற்றும் கனடாவில் உள்ள பிற தூதரக அதிகாரிகளைத் திரும்பப் பெற முடிவு செய்துள்ளது. மேலும், இது குறித்து கனடா தூதரக ஆணையத்திற்கு இந்தியா சம்மன் அனுப்பியுள்ளது.

திங்கட்கிழமை (அக்டோபர் 14) அன்று கனடாவின் ராஜ்ஜிய தொடர்பை நிராகரித்து, இந்தியா மிகவும் வலுவான பதிலை அளித்துள்ளது.

 

இந்தியாவின் கடும் எதிர்ப்பு

இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் கனடாவில் உள்ள இந்தியாவின் தூதரக உயர் அதிகாரியான சஞ்சய் குமார் வர்மாவை ஆதரித்து, "வர்மா ஒரு மூத்த தூதரக அதிகாரி. அவர் 36 ஆண்டுகளாக தூதரக பணியில் உள்ளார். ஜப்பான் மற்றும் சூடான் ஆகிய நாடுகளில் இந்தியத் தூதரக அதிகாரியாகப் பணிபுரிந்துள்ளார். மேலும் அவர் இத்தாலி, துருக்கி, வியட்நாம், மற்றும் சீனாவிலும் பணியாற்றியுள்ளார். அவர் மீது இதுபோன்ற குற்றச்சாட்டை சுமத்துவது அபத்தமானது மற்றும் அவரை அவமதிப்பதற்கு சமம்," என்று தெரிவித்தது.

2023-ஆம் ஆண்டு, ஜூன் 18-ஆம் தேதி அன்று, காலிஸ்தான் ஆதரவாளர் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் அடையாளம் தெரியாத நபர்களால் படுகொலை செய்யப்பட்டார். கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம், புதுடெல்லியில் நடைபெற்ற ஜி20 உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்கு முன்பு, நிஜ்ஜாரின் கொலையில் இந்தியத் தூதரக அதிகாரிகளுக்குத் தொடர்பு இருப்பதாக கனடா பிரதமர் ட்ரூடோ நாடாளுமன்றத்தில் தெரிவித்திருந்தார்.

ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலையில் ஈடுபட்டதாகக் கூறப்படும் இந்தியாவின் தூதரக உயர் அதிகாரியை அவர் பணி நீக்கம் செய்தார். இதற்குப் பதிலடியாக, கனடாவின் தூதரக உயர் அதிகாரியை ஐந்து நாட்களுக்குள் நாட்டை விட்டு வெளியேறுமாறு இந்தியா கூறியது.

கனடா குடிமக்களுக்கு விசா வழங்குவதையும் இந்தியா நிறுத்தியது. இந்தியாவில், 41 தூதரக அதிகாரிகள் கனடாவின் தூதரகத்தை விட்டு வெளியேற வேண்டியிருந்தது. 2023-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் வரை கனடாவில் இருந்து வருபவர்களுக்கு விசா வழங்குவதை இந்தியா நிறுத்தியது.

நிஜ்ஜார் கொலை வழக்கில் கனடா குற்றச்சாட்டுகளை மட்டுமே முன்வைக்கின்றது, அதற்கான உரிய ஆதாரங்களை எதுவும் வழங்கவில்லை என்று இந்தியா இது குறித்து ஆரம்பத்தில் இருந்தே கூறி வருகிறது. கனடாவின் விசாரணையை ஒரு சாக்குப்போக்கு என்றும் அரசியல் பலங்களுக்காக கனடா அரசாங்கம் வேண்டுமென்றே இந்தியாவைக் குற்றம் சாட்டுகிறது என்றும் இந்தியா தெரிவித்தது.

 
ஜஸ்டின் ட்ரூடோ மற்றும் நரேந்திர மோதி

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, ஜஸ்டின் ட்ரூடோ

கனடாவிலிருந்து திரும்பிப் பெறப்படும் இந்திய அதிகாரிகள்

இந்நிலையில், கனடாவில் இருந்து, இந்த விஷயத்தில் ‘இலக்கு வைக்கப்பட்ட’ இந்திய தூதரக உயர் அதிகாரி மற்றும் பிற தூதரக அதிகாரிகளைத் திரும்பப் பெற இந்திய அரசு முடிவு செய்துள்ளது என்று ஏ.என்.ஐ செய்தி முகமை தெரிவித்துள்ளது.

இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் அறிக்கையை மேற்கோள் காட்டி, எக்ஸ் சமூக வலைதளத்தில் பதிவிட்டுருக்கும் ஏ.என்.ஐ செய்தி முகமை, அந்த அறிக்கையில் ‘தீவிரவாதம் மற்றும் வன்முறைச் சூழலில், ட்ரூடோ அரசாங்கத்தின் நடவடிக்கைகள் அவர்களின் பாதுகாப்பை ஆபத்தில் ஆழ்த்தியுள்ளன என்பது அடிக்கோடிட்டுக் காட்டப்பட்டது’ என்று கூறப்பட்டிருப்பதாகத் தெரிவித்திருக்கிறது.

“அவர்களது பாதுகாப்பை உறுதி செய்வதற்கான தற்போதைய கனடா அரசாங்கத்தின் உறுதிப்பாட்டில் எங்களுக்கு நம்பிக்கை இல்லை. எனவே, இந்திய அரசு ‘இலக்கு வைக்கப்பட்ட’ தூதரக உயர் அதிகாரி மற்றும் பிற தூதரக அதிகாரிகளை திரும்பப் பெற முடிவு செய்துள்ளது," என்று இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் அறிக்கை சொல்வதாக ஏ.என்.ஐ-இன் பதிவு சொல்கிறது.

 
ஜஸ்டின் ட்ரூடோ மற்றும் நரேந்திர மோதி

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, ஜஸ்டின் ட்ரூடோ 2018 ஆம் ஆண்டு இந்தியாவிற்கு வருகை தந்தபோது, அமிர்தசரஸில் உள்ள பொற்கோயிலை பார்வையிட்டார்.

'சீக்கிய வாக்கு வங்கியை வைத்து அரசியல் செய்யும் கனடா'

"கனடாவில் உள்ள இந்தியத் தூதரக அதிகாரிகள் மற்றும் சமூகத் தலைவர்களை அச்சுறுத்தும் தீவிரவாதிகள் மற்றும் பயங்கரவாதிகளுக்கு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அடைக்கலம் அளித்து வருகிறார். கருத்து சுதந்திரம் என்ற பெயரில் கனடா அரசு இதை அனுமதிக்கிறது," என்று இந்திய அரசு கூறியது.

"சட்டவிரோதமாக கனடாவுக்குள் நுழைந்த சில நபர்களுக்கு குடியுரிமை வழங்குவதில் தாமதம் இல்லை. கனடாவில் வாழும் பயங்கரவாதிகளை, இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டும் என்ற கோரிக்கையை கனடா பலமுறை நிராகரித்து உள்ளது," என்றும் இந்தியா குற்றம் சாட்டியுள்ளது.

"பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ இந்தியாவுடன் பகைமை பாராட்டுவதை குறிக்கும் பல ஆதாரங்கள் உள்ளன. 2018-ஆம் ஆண்டு அவர் இந்தியா வந்தபோது, அவரது வாக்கு வங்கியை வளர்ப்பதே அவரது நோக்கமாக இருந்தது. அவரது அமைச்சரவையில் இந்தியாவை தீவிரவாத மற்றும் பிரிவினைவாதக் கருத்துக்களுடன் தொடர்புபடுத்தும் நபர்கள் இடம்பெற்றுள்ளனர். ட்ரூடோவின் அரசாங்கம் இந்தியாவுக்கு எதிரான பிரிவினைவாதத்தை வெளிப்படையாக ஆதரிக்கும் ஒரு கட்சியைச் சார்ந்து இருக்கின்றது," என்றும் இந்தியா கூறியிருந்தது.

செப்டம்பர் 4-ஆம் தேதி, ஜஸ்டின் ட்ரூடோவின் அரசாங்கத்திற்கு அளித்த ஆதரவை வாபஸ் பெறுவதாக புதிய ஜனநாயக கட்சியின் (NDP) தலைவர் ஜக்மீத் சிங் அறிவித்தார்.

புதிய ஜனநாயகக் கட்சியின் ஆதரவுடன் ட்ரூடோ அரசாங்கம் இயங்கி வந்தது. அக்கட்சி வாபஸ் பெற்ற போதிலும், நாடாளுமன்றத்தில் நம்பிக்கைத் தீர்மானத்தை ட்ரூடோ வென்றார்.

கனடாவில் அக்டோபர் 2025 -ஆம் ஆண்டு பிரதமர் தேர்தல் நடைபெற இருக்கிறது. அங்குள்ள சீக்கியர்களின் ஆதரவை பெற வேண்டும் என்று ட்ரூடோ விரும்புகிறார். ஜஸ்டின் ட்ரூடோ 2015-ஆம் ஆண்டு முதல் ஆட்சியில் உள்ளார். 2019 மற்றும் 2021-ஆம் ஆண்டுகளில் ட்ரூடோவின் கட்சி பெரும்பான்மை பெற முடியாமல் வேறு கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சியில் இருக்கிறது.

 
ஜஸ்டின் ட்ரூடோ மற்றும் நரேந்திர மோதி

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, ஜக்மீத் சிங்

இந்திய அரசாங்கத்தின் பார்வையில் ஜக்மீத் சிங்

ஜக்மீத் சிங்கின் ஆதரவுடன் ட்ரூடோவின் ஆட்சி நடப்பதை இந்தியா நல்ல முறையில் பார்க்கவில்லை.

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஜக்மீத் சிங்கின் கட்சி கடந்த பொதுத் தேர்தலில் 24 இடங்களில் வெற்றி பெற்று, ஆட்சி அமைப்பதை முடிவு செய்யும் பொறுப்பில் இருந்தது.

இந்தியாவைப் பல சந்தர்ப்பங்களில் ஜக்மீத் சிங் விமர்சித்து வருகிறார்.

2022-ஆம் ஆண்டு, ஏப்ரல் மாதம், ஜக்மீத் சிங், "இந்தியாவில் இஸ்லாமியர்களைக் குறிவைக்கும் வன்முறையின் படங்கள், வீடியோக்களைப் பார்த்து நான் கவலைப்படுகிறேன். மோதி அரசாங்கம் இஸ்லாமியர்களுக்கு எதிரான உணர்வுகளைத் தூண்டுவதை நிறுத்த வேண்டும். மனித உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும்," என்று கூறியிருந்தார்.

ஜக்மீத் சிங்கின் வம்சாவளி பஞ்சாபின் பர்னாலா மாவட்டத்தில் உள்ள திக்ரிவால் கிராமத்துடன் தொடர்பு கொண்டது. அவரது குடும்பம் 1993-ஆம் ஆண்டு கனடாவுக்குக் குடிபெயர்ந்தது.

இந்தியாவில் 1984-ஆம் ஆண்டு நடந்த சீக்கியர்களுக்கு எதிரான கலவரம் குறித்து ஜக்மீத் சிங் எப்போதும் குரல் கொடுத்து வருகிறார். இந்திரா காந்தியின் உருவ பொம்மையைச் சுடுவது போன்ற கனடாவில் நடந்த பல நிகழ்வுகளுக்கு இந்தியா எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

2013-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம், ஜக்மீத் சிங்கிற்கு அம்ரித்சர் செல்ல விசா வழங்க இந்திய அரசு மறுத்தது.

இதனை அடுத்து அவர் 'தி டைம்ஸ் ஆஃப் இந்தியா' நாளிதழுக்கு அளித்த பேட்டியில், "1984 கலவரத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கான நீதி குறித்து நான் பேசுகிறேன், அதனால் இந்திய அரசாங்கம் என் மீது கோபமாக உள்ளது. 1984 கலவரங்கள் இரண்டு சமூகங்களுக்கிடையில் நடந்த ஒரு கலவரம் அல்ல, அது அரசின் ஆதரவில் நடந்த ஒரு இனப்படுகொலை," என்று அவர் கூறினார்.

'தி வாஷிங்டன் போஸ்ட்' செய்தித்தாளின்படி, ஜக்மீத் சிங் அக்கட்சியின் தலைவராவதற்கு முன்பு காலிஸ்தான் பேரணிகளில் கலந்துகொள்வார் என்பது தெரியவந்தது.

பரப்பளவில் உலகின் இரண்டாவது பெரிய நாடான கனடாவில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்கள் அதிக அளவில் உள்ளனர்.

கனடாவின் மக்கள் தொகையில் சீக்கியர்கள் 2.1% உள்ளனர். கடந்த 20 ஆண்டுகளில், கனடாவில் சீக்கிய மக்கள் தொகை இரட்டிப்பாகியுள்ளது. இவர்களில் பெரும்பாலானோர் கல்வி, தொழில், வேலை போன்ற காரணங்களுக்காகப் பஞ்சாபிலிருந்து கனடாவிற்கு இடம்பெயர்ந்தவர்கள்.

வான்கூவர், டொராண்டோ, கேல்கரி உட்பட கனடாவில் உள்ள பல பகுதிகளில் அவர்கள் வசித்து வருகின்றனர்.

சீக்கியர்களின் முக்கியத்துவத்தை ஜஸ்டின் ட்ரூடோ நன்கு அறிந்தவர் என்று அவரது முதல் பதவிக் காலத்தில் இருந்தே அறியலாம். அப்போது அவரது அமைச்சரவையில் நான்கு சீக்கிய அமைச்சர்கள் இருந்தனர்.

சீக்கியர்களிடம் தாராள மனப்பான்மை கொண்ட கனடா பிரதமர் ஜஸ்டின் சிங் ட்ரூடோ என்றும் அவர் அழைக்கப்படுகிறார்.

2015-ஆம் ஆண்டு, ஜஸ்டின் ட்ரூடோ, இந்திய அமைச்சரவையில் இல்லாத அளவிற்குச் சீக்கியர்கள் தனது அமைச்சரவையில் இருப்பதாகக் கூறியிருந்தார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

New-Project-17-3.jpg?resize=750,375&ssl=

6 இந்திய தூதுவர்களை வெளியேற்ற கனடா உத்தரவு!

இந்தியாவின் உயர் ஆணையர் மற்றும் ஐந்து தூதுவர்களை கனடா திங்களன்று (14) வெளியேற்ற உத்தரவிட்டது.

கனேடிய மண்ணில் பல கொலைகள் மற்றும் பிற வன்முறைச் செயல்களுக்கு இந்திய அரசாங்கத்தின் உறுப்பினர்களை தொடர்புபடுத்துவதற்கான ஆதாரங்கள் தங்களிடம் இருப்பதாக கனடாவின் தேசிய காவல்துறை தெரிவித்ததை அடுத்து இந்த உத்தரவு வந்துள்ளது.

இதற்குப் பதிலளித்த இந்தியா, கனடாவில் உள்ள தனது உயர்மட்ட தூதரக அதிகாரியை திரும்பப் பெறுவதாகக் கூறியதுடன், ஆறு கனேடிய தூதர்களை வெளியேற்றும் திட்டத்தை அறிவித்தது.

திங்கட் கிழமை (14) பிற்பகல் ஊடகவியலாளர்களிடம் இது குறித்து பேசிய கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ,

கனடாவில் பொதுப் பாதுகாப்பை அச்சுறுத்தும் நடவடிக்கைகளில் இந்திய அரசு முகவர்கள் ஈடுபட்டதற்கான “தெளிவான மற்றும் நம்பகத் தகுந்த ஆதாரங்களை” ரோயல் கனடியன் மவுண்டட் பொலிஸார் (RCMP) கண்டுபிடித்துள்ளனர்.
இதில் இரகசிய தகவல் சேகரிக்கும் நுட்பங்கள், தெற்காசிய கனேடியர்களை குறிவைத்து பலவந்தமான நடத்தை மற்றும் கொலை உட்பட பல அச்சுறுத்தல் மற்றும் வன்முறை செயல்களில் ஈடுபடுதல் ஆகியவை அடங்கும் என்று கூறினார்.

2023 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் கனேடிய மண்ணில் சீக்கிய பிரிவினைவாதத் தலைவர் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் படுகொலை செய்யப்பட்டதில் இந்திய முகவர்களைத் தொடர்புபடுத்துவதற்கான நம்பகமான ஆதாரங்கள் கனடாவிடம் இருப்பதாகப் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கூறியதிலிருந்து, 2023 செப்டெம்பர் முதல் இந்தியா-கனடா உறவுகள் பதட்டமாக உள்ளன.

ஹர்தீப் சிங் நிஜ்ஜார் காலிஸ்தான் இயக்கத்துக்கு ஆதரவாகப் பல வழக்குகளில் இந்திய அரசால் தேடப்பட்டு வந்தவர் ஆவார். இவர் ஒரு சீக்கிய தாயகத்தை ஆதரித்தார் மற்றும் 2020 ஜூலையில் இந்திய அரசால் “பயங்கரவாதி” என்று அடையாளமிடப்படார்.

https://athavannews.com/2024/1404136

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இந்தியா தவறு செய்துவிட்டது: கனடா பிரதமர் தெரிவிப்பு

October 15, 2024

இந்தியா தவறு செய்துவிட்டது என கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார். இது இரு நாடுகளுக்கு இடையிலான உறவில் விரிசலை அதிகரித்துள்ளது.

கனடா நாட்டில் வசித்து வந்த தலைவர் ஹர்தீப் சிங் நிஜார் கடந்த ஆண்டு ஜூன் மாதம் சுட்டுக் கொல்லப்பட்டார். இதில் இந்தியாவுக்கு தொடர்பு இருப்பதாக அந்நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ குற்றம் சாட்டியிருந்தார். இதை இந்தியா மறுத்தது.

இந்த சூழலில் டெல்லியில் உள்ள கனடா தூதரக பொறுப்பு அதிகாரி ஸ்டூவர்ட் வீலருக்கு மத்திய வெளியுறவு அமைச்சக செயலாளர் (கிழக்கு) நேற்று மாலை சம்மன் அனுப்பினார். இதன் அடிப்படையில் ஆஜரான வீலரிடம் கனடா அரசின் நடவடிக்கைக்கு கடும் கண்டனம் தெரிவிக்கப் பட்டது.

இந்நிலையில் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, “கனடா நாட்டு மண்ணில் கனடா மக்களை அச்சுறுத்தும் மற்றும் கொல்லும் வெளிநாட்டு அரசாங்கத்தின் செயலை ஒருபோதும் எங்களால் பொறுத்துக்கொள்ள முடியாது. இது கனடாவின் இறையாண்மை மற்றும் சர்வதேச சட்டத்தின் கீழ் ஏற்றுக்கொள்ள முடியாத அத்துமீறல். கடந்த கோடை காலத்தின் தொடக்கம் முதலே எங்களது ‘ஃபைவ் ஐஸ் பார்ட்னர்ஸ்’ (ஆஸ்திரேலியா, கனடா, நியூஸிலாந்து, பிரிட்டன் மற்றும் அமெரிக்கா) உடன் இணைந்து நெருக்கமாக பணியாற்றி வருகிறோம். குறிப்பாக இந்தியாவின் இது மாதிரியான செயலை எதிர்கொண்ட அமெரிக்காவுடன் சேர்ந்து இந்த விவகாரத்தில் கவனம் செலுத்துகிறோம்” எனக் கூறியுள்ளார்.

முன்னதாக, இது தொடர்பாக இந்திய  மத்திய வெளியுறவு துறை அமைச்சகம் நேற்று வெளியிட்ட அறிக்கையில்: கனடாவில் உள்ள இந்திய தூதர் மற்றும் பிற தூதரக அதிகாரிகள் மீது ஆதாரமின்றி குற்றம் சாட்டி இருப்பதை முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாது என்று அந்நாட்டு தூதரக பொறுப்பாளரிடம் தெரிவிக்கப்பட்டது.

தீவிரவாதம் மற்றும் வன்முறை சூழலில், ட்ரூடோ அரசின் நடவடிக்கைகள் இந்திய அதிகாரிகளின் பாதுகாப்புக்கு ஆபத்தை விளைவித்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டது. அவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதில் தற்போதைய கனடா அரசின் மீது எங்களுக்கு நம்பிக்கை இல்லை. எனவே, அங்குள்ள இந்திய தூதர் மற்றும் பிற அதிகாரிகளை திரும்பப் பெற முடிவு செய்துள்ளோம் என அவரிடம் தெரிவிக்கப்பட்டது.

கனடா அரசிடமிருந்து ஒரு தகவல் வந்துள்ளது. அதில் ஒரு வழக்கு விசாரணையில் இந்திய தூதர் மற்றும் இதர தூதரக அதிகாரிகளுக்கு தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது என கூறப்பட்டுள்ளது. இந்திய அரசு இந்த அபத்தமான குற்றச்சாட்டுகளை கடுமையாக நிராகரிக்கிறது. ட்ரூடோ தலைமையிலான அரசு, வாக்கு வங்கி அரசியலை கருத்தில் கொண்டு இதுபோன்ற குற்றச்சாட்டை சுமத்தி உள்ளது.

இந்தியாவுடன் கனடா பிரதமர் ட்ரூடோ நீண்ட காலமாகவே விரோதப் போக்கை கடைபிடித்து வருகிறார் என்பதற்கு ஆதாரம் உள்ளது. கடந்த 2018-ம் ஆண்டு வாக்கு வங்கியை அதிகரித்துக் கொள்வதற்காகவே அவர் இந்தியா வந்திருந்தார். மேலும் இந்தியாவுக்கு எதிராக செயல்படும் பிரிவினைவாத மற்றும் தீவிரவாத இயக்கங்களுடன் தொடர்பில் இருந்தவர்களை அமைச்சர்களாக நியமித்தார். இது தவிர, கடந்த 2020-ம் ஆண்டு இந்தியாவின் உள்நாட்டு விவகாரத்தில் (விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவு) தலையிட்டார். இதுவே அவரது இந்தியாவுக்கு எதிரான மனநிலையை பிரதிபலித்தது.

இந்தியாவுக்கு எதிராக பிரிவினைவாத செயலை வெளிப்படையாக ஆதரிக்கும் ஒரு அரசியல் கட்சியை ட்ரூடோ அரசு நம்பி இருக்கிறது. இந்நிலையில், உள்நாட்டு அரசியலில் வெளிநாட்டு தலையீடு இருப்பதை ட்ரூடோ கண்டுகொள்வதில்லை என்ற விமர்சனம் எழுந்துள்ளது. இதையடுத்து, வெளிநாட்டு தலையீடு தொடர்பான கமிஷன் முன்பு ட்ரூடோ ஆஜராகி விளக்கமளிக்க இருக்கிறார். இந்நிலையில் இதை திசை திருப்புவதற்காகவே அவர் இந்தியா மீது குற்றம் சுமத்துகிறார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

 

https://www.ilakku.org/india-has-made-a-mistake-canadian-prime-ministers-statement/

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இரு நாடுகளுக்கும் என்ன பிரச்னை?

 

நாடுகளுக்கு பிரச்சனை என பத்திரிகை எழுதலாம் ....ஆனால் இது காளிஸ்தான் தேசியத்தின் பயம் காரணமாக இந்தியா வின் எல்லை தாண்டிய அரச பயங்கர்வாதம்....இந்த விடயத்தில் சிறிலன்கா அரசும் ஐந்தியா அரசும் நண்பேன்கடா...

தமிழ் தேசியத்துக்கு சிறிலங்கா பயப்படுவது போல இந்தியா காளீஸ்தான் தேசியத்துக்கு பயப்ப்படுகிறது 

  • Like 2
  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
20 minutes ago, putthan said:

இரு நாடுகளுக்கும் என்ன பிரச்னை?

 

நாடுகளுக்கு பிரச்சனை என பத்திரிகை எழுதலாம் ....ஆனால் இது காளிஸ்தான் தேசியத்தின் பயம் காரணமாக இந்தியா வின் எல்லை தாண்டிய அரச பயங்கர்வாதம்....இந்த விடயத்தில் சிறிலன்கா அரசும் ஐந்தியா அரசும் நண்பேன்கடா...

தமிழ் தேசியத்துக்கு சிறிலங்கா பயப்படுவது போல இந்தியா காளீஸ்தான் தேசியத்துக்கு பயப்ப்படுகிறது 

//கனேடிய மண்ணில் பல கொலைகள் மற்றும் பிற வன்முறைச் செயல்களுக்கு இந்திய அரசாங்கத்தின் உறுப்பினர்களை தொடர்புபடுத்துவதற்கான ஆதாரங்கள் தங்களிடம் இருப்பதாக கனடாவின் தேசிய காவல்துறை தெரிவித்ததை அடுத்து இந்த உத்தரவு வந்துள்ளது.//

 கனடிய தூதரகத்தில் இருந்து கொண்டு.... கொலைகளையும், வன்முறை சம்பவங்களையும் தூண்டிக் கொண்டிருக்கும் இந்திய கூலிப் படைகள்... ஸ்ரீலங்காவிலுள்ள இந்திய தூதரகம், யாழ்ப்பாணத்தில் உள்ள துணைத் தூதரகங்களில்  இருந்து கொண்டு எத்தனை தில்லு முல்லுகளை செய்து கொண்டிருப்பார்கள்.

உலகத்திற்கு உதவாத நாடு இந்தியா.

  • Like 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted
4 minutes ago, தமிழ் சிறி said:

//கனேடிய மண்ணில் பல கொலைகள் மற்றும் பிற வன்முறைச் செயல்களுக்கு இந்திய அரசாங்கத்தின் உறுப்பினர்களை தொடர்புபடுத்துவதற்கான ஆதாரங்கள் தங்களிடம் இருப்பதாக கனடாவின் தேசிய காவல்துறை தெரிவித்ததை அடுத்து இந்த உத்தரவு வந்துள்ளது.//

 கனடிய தூதரகத்தில் இருந்து கொண்டு.... கொலைகளையும், வன்முறை சம்பவங்களையும் தூண்டிக் கொண்டிருக்கும் இந்திய கூலிப் படைகள்... ஸ்ரீலங்காவிலுள்ள இந்திய தூதரகம், யாழ்ப்பாணத்தில் உள்ள துணைத் தூதரகங்களில்  இருந்து கொண்டு எத்தனை தில்லு முல்லுகளை செய்து கொண்டிருப்பார்கள்.

உலகத்திற்கு உதவாத நாடு இந்தியா.

இவங்களுக்கு வேற காந்திய முக மூடி....இன்னும் வசதியா போய்விட்டது 

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
5 minutes ago, putthan said:

இவங்களுக்கு வேற காந்திய முக மூடி....இன்னும் வசதியா போய்விட்டது 

ஓம்... காந்திய முகமூடி, புத்தர் பிறந்த பூமி என்று சொல்லியே.. 
பக்கா... "கிரிமினல்" வேலை பார்ப்பார்கள். 

பிற்குறிப்பு: புத்தர் பிறந்த இடம் நேபாளத்தில் உள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
3 minutes ago, putthan said:

இவங்களுக்கு வேற காந்திய முக மூடி....இன்னும் வசதியா போய்விட்டது 

ஒரு பாகிஸ்தான்காரர் சொன்னார், பாகிஸ்தானில் நடக்கும் 70% குண்டுவெடிப்புகள் கொலைகளுக்கு பின்னாலிருப்பது இந்திய உளவு பிரிவு றோ என்றும், தமது நாட்டில் ஏதாவது ஒரு சர்வதேச பொருளாதார ஒப்பந்தம் போடப்பட்டால், அடுத்த வாரமே சர்வதேசத்தின் கவனத்தை பெறும் அளவிற்கு தற்கொலை குண்டுதாக்குதல்களோ, அல்லது துப்பாக்கி சூடுகளோ நடந்து அனைத்தும் கெடுக்கப்படுகிறது என்றும் சொன்னார். தற்போது தலீபான்களுடன் இந்தியா கூட்டு சேர்ந்து ஆப்கான் பக்கமிருந்தும் தங்களுக்கு நெருக்கடியை தருவதாகவும் சொன்னார்.

அதற்காக பாகிஸ்தானியர்கள் பெரிய யோக்கியம் என்று சொல்லவரவில்லை, ஆனால் இந்தியாவைபற்றி அறியவேண்டுமென்றால்  ஈழதமிழர்களிடம்தான் தான் யாரும் கதை கதையாக கேட்கவேண்டும்

பங்களாதேஷத்திலும் றோவின் உளவு பிரிவின் ஆதிக்கத்தால்  அரசியல் நெருக்கடிகள் பொருளாதார சீர்குலைவுகள் உட்பட்ட பல  உண்டு என்றும் மேலும் சொன்னார் .

ஆனால் இந்தியர்களை கேட்டால் நாங்கள் காந்தியவாதிகள்  பாகிஸ்தான் தான் இந்தியாவிற்குள்  தீவிரவாதிகளை அனுப்பி எங்களது ‘’அப்பாவி’’ ராணுவவீரர்களை கொல்கிறது என்கின்றனர்.

உண்மை பொய் பற்றி யாரறிவார் ஆனாலும் 

அந்த அப்பாவி இந்திய வீரர்கள் மற்றும் றோ பற்றி எம்மையன்றி யார் அதிகம் அறிவார்?.

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
5 minutes ago, தமிழ் சிறி said:

ஓம்... காந்திய முகமூடி, புத்தர் பிறந்த பூமி என்று சொல்லியே.. 
பக்கா... "கிரிமினல்" வேலை பார்ப்பார்கள். 

பிற்குறிப்பு: புத்தர் பிறந்த இடம் நேபாளத்தில் உள்ளது.

எல்லை நாடுகள் ஒன்பதும் இவர்களுடன் பகை.....

  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 minutes ago, putthan said:

எல்லை நாடுகள் ஒன்பதும் இவர்களுடன் பகை.....

இந்தியா வந்து கிட்டத்தடட, சுமந்திரன் மாதிரி.... 😂 🤣
ஒருவரையும் அனுசரித்து போகத் தெரியாது. 
சொல்லும், செயலும், சிந்தனையும்.... மற்றவர்களுக்கு குழி பறிப்பதிலேயே இருக்கும். 😎

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, தமிழ் சிறி said:

உலகத்திற்கு உதவாத நாடு இந்தியா.

ஒவ்வொரு கிந்தியனுக்கும் தாங்கள் உலகம் முழுக்க  பெரிய பதவிகளில இருந்து கோலோச்சுகிறம் எண்ட தலைக்கனம்.
அதை விட கனடாவில கிந்தியன்ர இராச்சியம் எக்கச்சக்கமாம்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
5 minutes ago, குமாரசாமி said:

ஒவ்வொரு கிந்தியனுக்கும் தாங்கள் உலகம் முழுக்க  பெரிய பதவிகளில இருந்து கோலோச்சுகிறம் எண்ட தலைக்கனம்.
அதை விட கனடாவில கிந்தியன்ர இராச்சியம் எக்கச்சக்கமாம்.

நேற்று பிரான்ஸ் பாரிசில் உள்ள, ஈபிள் கோபுரத்துக்கு அருகில் உள்ள புல்  வெளியில்... 
ஹிந்தி எழுத்துக்களுடன் உள்ள பான்பராக் பையும், சிவப்பாக எச்சில்  துப்பியிருந்த படத்தையும் போட்டிருந்தார்கள். 😂
அகலக் கால் பதிக்கும் இந்தியா. 🤣 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
6 minutes ago, valavan said:

ஒரு பாகிஸ்தான்காரர் சொன்னார், பாகிஸ்தானில் நடக்கும் 70% குண்டுவெடிப்புகள் கொலைகளுக்கு பின்னாலிருப்பது இந்திய உளவு பிரிவு றோ என்றும், தமது நாட்டில் ஏதாவது ஒரு சர்வதேச பொருளாதார ஒப்பந்தம் போடப்பட்டால், அடுத்த வாரமே சர்வதேசத்தின் கவனத்தை பெறும் அளவிற்கு தற்கொலை குண்டுதாக்குதல்களோ, அல்லது துப்பாக்கி சூடுகளோ நடந்து அனைத்தும் கெடுக்கப்படுகிறது என்றும் சொன்னார். தற்போது தலீபான்களுடன் இந்தியா கூட்டு சேர்ந்து ஆப்கான் பக்கமிருந்தும் தங்களுக்கு நெருக்கடியை தருவதாகவும் சொன்னார்.

அதற்காக பாகிஸ்தானியர்கள் பெரிய யோக்கியம் என்று சொல்லவரவில்லை, ஆனால் இந்தியாவைபற்றி அறியவேண்டுமென்றால்  ஈழதமிழர்களிடம்தான் தான் யாரும் கதை கதையாக கேட்கவேண்டும்

பங்களாதேஷத்திலும் றோவின் உளவு பிரிவின் ஆதிக்கத்தால்  அரசியல் நெருக்கடிகள் பொருளாதார சீர்குலைவுகள் உட்பட்ட பல  உண்டு என்றும் மேலும் சொன்னார் .

ஆனால் இந்தியர்களை கேட்டால் நாங்கள் காந்தியவாதிகள்  பாகிஸ்தான் தான் இந்தியாவிற்குள்  தீவிரவாதிகளை அனுப்பி எங்களது ‘’அப்பாவி’’ ராணுவவீரர்களை கொல்கிறது என்கின்றனர்.

உண்மை பொய் பற்றி யாரறிவார் ஆனாலும் 

அந்த அப்பாவி இந்திய வீரர்கள் மற்றும் றோ பற்றி எம்மையன்றி யார் அதிகம் அறிவார்?.

பாக்கி இவங்களை வென்டவன்.....
தற்பொழுது பாக்கிஸ்தானில் பாலுகிஸ்தான் தேசிய போராட்டத்தை அமெரிக்காவும் ,இந்தியாவும் ஊக்கிவிக்கினம்......சீனாக்காரன் பாதை போடப்போறான் எண்ட பயம்

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இந்தியா - கனடா உறவை மிக மோசமாக்கிய ஜஸ்டின் ட்ரூடோவின் குற்றச்சாட்டுகள் - எதை நோக்கிச் செல்கிறது?

இந்தியா, கனடா, ஹர்தீப் சிங் நிஜ்ஜர், காலிஸ்தான்

பட மூலாதாரம்,REUTERS

படக்குறிப்பு, கனடா தலைநகர் ஒட்டாவாவில் செய்தியாளர்களை சந்தித்த பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ
15 அக்டோபர் 2024, 07:41 GMT
புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர்

சீக்கிய பிரிவினைவாத தலைவர் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலை சம்பவம் தொடர்பாக இந்தியாவுக்கும் கனடாவுக்கும் இடையேயான உறவு மோசமாகி வருகிறது.

கனடாவில் இருந்து இந்திய தூதர் சஞ்சய் வர்மா மற்றும் தூதரக அதிகாரிகளை திரும்ப அழைத்துக்கொள்வதாக இந்தியா திங்களன்று கூறியது. கூடவே ஆறு கனேடிய தூதரக அதிகாரிகளை இந்தியா நாட்டிலிருந்து வெளியேற்றியது.

ஆனால் கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, தலைநகர் ஒட்டாவாவில் செய்தியாளர் சந்திப்பில், தனது அரசு ஆறு இந்திய தூதரக அதிகாரிகளை நாட்டை விட்டு வெளியேற்றியதாகக் கூறினார்.

ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலை வழக்கு விசாரணையில் இந்திய அரசு போதுமான ஒத்துழைப்பை அளிக்காததே இதற்கு காரணம் என பிரதமர் ட்ரூடோ குற்றம் சாட்டியுள்ளார். விசாரணையில் இணையுமாறும், திசை திருப்பும் அறிக்கைகளை நிறுத்துமாறும் ட்ரூடோ கடுமையான தொனியில் இந்தியாவை கேட்டுக் கொண்டார்.

ட்ரூடோ முன்வைக்கும் குற்றச்சாட்டுகள் என்ன?

வன்முறை தொடர்பான நடவடிக்கைகளில் இந்திய அரசு ஏஜெண்டுள் ஈடுபட்டதாக கூறப்படும் குற்றவியல் விசாரணையில் ஒத்துழைக்க இந்தியா மறுத்துவிட்டதாக கனேடியப் பிரதமர் கூறுகிறார்.

"கனேடிய மண்ணில் கனேடியர்களுக்கு எதிரான குற்றச் செயல்களை ஆதரிக்கும் செயலில் ஈடுபடலாம் என்று எண்ணி இந்திய அரசு ஒரு அடிப்படைத் தவறைச் செய்தது," என்று அவர் கூறினார்.

கனேடிய காவல்துறையான ராயல் கனேடியன் மவுண்டட் போலீஸ் அமைப்பின் (RCMP) தலைவர் அறிக்கை வெளியிட்டதை தொடர்ந்து ஜஸ்டின் ட்ரூடோ இந்த செய்தியாளர் சந்திப்பை நடத்தினார்.

கனடாவில் கொலைகள் உட்பட ‘பெரிய அளவிலான வன்முறைகளில்’ இந்திய அரசு பங்கு வகித்துள்ளது மற்றும் பொது பாதுகாப்புக்கு கடுமையான அச்சுறுத்தலை ஏற்படுத்துகிறது என்று RCMP தலைவர் மைக் டுஹெம் திங்களன்று, குற்றம் சாட்டினார்.

கனேடிய சீக்கியப் பிரிவினைவாதத் தலைவர் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலையில் இந்திய ஏஜெண்டுகளுக்குத் தொடர்பு இருப்பதற்கான ஆதாரங்கள் இருப்பதாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கடந்த ஆண்டு குற்றம் சாட்டியிருந்தார்.

இந்தக் குற்றச்சாட்டுகளை இந்தியா நிராகரித்தது. இதைத் தொடர்ந்து இரு நாடுகளுக்கும் இடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டது.

இந்தியா, கனடா, ஹர்தீப் சிங் நிஜ்ஜர், காலிஸ்தான்

பட மூலாதாரம்,REUTERS

படக்குறிப்பு, கனேடிய வெளியுறவு அமைச்சர் மெலனி ஜோலி

கனடா இதுவரை என்ன சொன்னது?

  • கனேடிய மண்ணில் நடக்கும் வன்முறையைக் கண்டித்த ட்ரூடோ, அது கொலை, மிரட்டி பணம் பறித்தல் அல்லது வேறு எந்த வன்முறைச் செயலாக இருந்தாலும் அது ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது என்று கூறினார்.
  • "எந்தவொரு நாடும், குறிப்பாக சட்டத்தின் ஆட்சியை நிலைநாட்டும் ஜனநாயகம் அதன் இறையாண்மையின் மீதான இந்த அடிப்படை மீறலை ஏற்க முடியாது," என்று அவர் கூறினார்.
  • "இந்திய தூதரக அதிகாரிகள் கனேடிய குடிமக்கள் பற்றிய தகவல்களை சேகரிக்கும் நடவடிக்கையை நிறுத்துவதற்கு RCMP இன்று முடிவு செய்தது" என்று ஜஸ்டின் ட்ரூடோ செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.
  • "இந்த தகவல் குற்றவியல் அமைப்புகளுக்கு கொடுக்கப்பட்டது. இது 'மிரட்டி பணம் பறித்தல் முதல் கொலை வரையிலான வன்முறை நடவடிக்கைகளுக்கு' வழிவகுத்தது,” என்றார் அவர்.
  • ஆயினும் எந்தவொரு தூதரக அதிகாரி அல்லது தூதரக பணியாளர்களின் பங்கு பற்றி ட்ரூடோ எந்த தகவலையும் வழங்கவில்லை. மேலும் இந்த விஷயங்கள் நீதிமன்றத்தின் முன் நிலுவையில் இருப்பதாகவும் அவர் கூறினார்.
  • சட்ட விசாரணை முடிவடைந்ததும் மேலும் பல தகவல்கள் தெரியவரும் என்று அவர் உறுதிபடக் கூறியுள்ளார்.
 
இந்தியா, கனடா, ஹர்தீப் சிங் நிஜ்ஜர், காலிஸ்தான்

பட மூலாதாரம்,REUTERS

படக்குறிப்பு, ட்ரூடோ, இந்திய அரசிடம் மீண்டும் முறையிட்டுள்ளார்
  • செய்தியாளர் சந்திப்புடன் கூடவே கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தனது அலுவலகத்தில் இருந்து அறிக்கை ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.
  • "RCMP மற்றும் தேசிய பாதுகாப்பு அதிகாரிகள் இந்திய அரசு மற்றும் இந்திய சட்ட அமைப்புகளுடன் இணைந்து பணியாற்ற பல முயற்சிகளை மேற்கொண்டனர். ஆனால் அவர்கள் தொடர்ந்து அதற்கு மறுப்பு தெரிவித்தனர்,” என்று அவர் தனது அறிக்கையில் கூறியுள்ளார். ”அதனால்தான் இந்த வாரம் கனேடிய அதிகாரிகள் முன்னெப்போதும் நடந்திராத நடவடிக்கையை எடுத்தனர்" என்றும் அவர் தெரிவித்தார்.
  • “ஆறு இந்திய அரசு ஏஜெண்டுகள் குற்றச் செயல்களில் ஈடுபட்டதற்கான RCMP யின் ஆதாரங்களை பகிர்ந்து கொள்வதற்காக இந்திய அதிகாரிகளுடன் சந்திப்பு நடத்த முயற்சி செய்யப்பட்டது. பலமுறை கோரிக்கை விடுத்தும் பலன் இல்லை. ஒத்துழைப்பதில்லை என்று இந்திய அரசு முடிவு செய்துள்ளது. இந்திய அரசு ஒத்துழைக்க மறுத்து வருவதால் எனது வெளியுறவு அமைச்சர் மெலனி ஜோலிக்கு ஒரே ஒரு வழிதான் இருந்தது.” என்றார் அவர்.
  • “இன்று (திங்கட்கிழமை) இந்த ஆறு பேரையும் நாட்டை விட்டு வெளியேற்றுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அவர்கள் கனடாவை விட்டு வெளியேற வேண்டும். அவர்கள் இனி கனடாவில் தூதாண்மை அதிகாரிகளாக பணியாற்ற முடியாது அல்லது எக்காரணம் கொண்டும் மீண்டும் கனடாவிற்குள் நுழைய முடியாது. RCMP வழங்கிய ஆதாரங்களை புறக்கணிக்க முடியாது என்பதை நான் தெளிவுபடுத்த விரும்புகிறேன்," என்று ட்ரூடோ கூறியுள்ளார்.
  • விசாரணையில் ஒத்துழைக்குமாறு கனேடிய பிரதமர் இந்திய அரசிடம் மீண்டும் வேண்டுகோள் விடுத்தார்.
  • ட்ரூடோ தனது அறிக்கையில் இந்திய அரசு விசாரணையில் சேர வேண்டும், தனது பயனற்ற மற்றும் திசை திருப்பும் அறிக்கைகளுக்கு முடிவு கட்ட வேண்டும் என்று கடுமையான தொனியில் கூறியுள்ளார்.
இந்தியா, கனடா, ஹர்தீப் சிங் நிஜ்ஜர், காலிஸ்தான்

பட மூலாதாரம்,REUTERS

படக்குறிப்பு, 2023 செப்டம்பரில் நடந்த ஜி20 மாநாட்டில் கலந்து கொள்ள ட்ரூடோ இந்தியா வந்தார்

இந்தியா இதுவரை என்ன சொன்னது?

  • தனது தூதர் சஞ்சய் குமார் வர்மா மற்றும் கனடாவில் இருக்கும் மற்ற அதிகாரிகளை திரும்ப அழைக்க முடிவு செய்துள்ளதாக இந்தியா திங்களன்று அறிவித்தது. இதனுடன், ஆறு கனேடிய தூதரக அதிகாரிகளை வெளியேற்றவும் இந்தியா முடிவு செய்துள்ளது.
  • இந்த கனேடிய தூதரக அதிகாரிகள் பின்வருமாறு- ஸ்டீவர்ட் ரோஸ் வீலர் (தற்காலிக தூதர்), பேட்ரிக் ஹெபர்ட் (துணை தூதர்), மேரி கேத்தரின் ஜாலி (முதன்மை செயலர்), இயன் ராஸ் டேவிட் ட்ரைட்ஸ் (முதன்மை செயலர்), ஆடம் ஜேம்ஸ் சூப்கா (முதன்மை செயலர்), பெளலா ஓர்ஜூலா ( முதன்மை செயலர்).
  • அக்டோபர் 19 அன்று இரவு 11:59 மணிக்கு முன் இந்தியாவை விட்டு வெளியேறுமாறு இந்திய வெளியுறவு அமைச்சகம் அவர்களை கேட்டுக் கொண்டுள்ளது.
  • கனடாவின் நிலைப்பாட்டிற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்தியா, டெல்லியில் உள்ள கனேடிய தூதரகத்தின் மூத்த தூதரக அதிகாரியை அழைத்துப் பேசியது. கனடாவில் உள்ள இந்திய ஹைகமிஷன் மற்றும் இதர தூதரக அதிகாரிகளை ஆதாரமற்ற முறையில் குறிவைப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது என்று வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
  • "ட்ரூடோ அரசின் அணுகுமுறையால் இந்திய தூதரக அதிகாரிகளின் பாதுகாப்பு ஆபத்தில் உள்ளது. தற்போதைய அரசு மீது எங்களுக்கு நம்பிக்கை இல்லை. இதனைக் கருத்தில் கொண்டு கனடாவில் உள்ள தூதர் உட்பட இதர தூதரக அதிகாரிகளை திரும்ப அழைக்க இந்திய அரசு முடிவு செய்துள்ளது. இந்தியாவுக்கு எதிரான பிரிவினைவாதம் மற்றும் தீவிரவாதத்தை ட்ரூடோ அரசு ஆதரிக்கும் விதத்திற்கு எதிராக பதிலளிக்க இந்தியாவுக்கு உரிமை உள்ளது என்று கனடாவிடம் தெரிவித்துள்ளோம்,” என்று திங்கள்கிழமை மாலை இந்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்தது.
  • நிஜ்ஜார் கொலை வழக்கில் இந்திய தூதரின் பெயர் குறிப்பிடப்பட்டதற்கு இந்தியாவின் வெளியுறவு அமைச்சகம் கடும் ஆட்சேபம் தெரிவித்துள்ளது. கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ பல சவால்களை எதிர்கொள்வதால் இந்த விவகாரம் தற்போது அரசியலுடன் இணைக்கப்பட்டுள்ளது என்று இந்தியா கூறியது.
  • “கனடாவிலிருந்து எங்களுக்கு ஞாயிற்றுக்கிழமை தூதரக தகவல் கிடைத்தது. கனடாவில் நடைபெற்று வரும் விசாரணையில் இந்திய தூதர் மற்றும் இதர தூதரக அதிகாரிகளின் தொடர்பு அம்பலமாகியுள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அபத்தமான குற்றச்சாட்டுகளை இந்திய அரசு கடுமையாக மறுக்கிறது. கனடாவின் ட்ரூடோ அரசு வாக்கு வங்கியை உருவாக்குவதற்காக இதைச் செய்கிறது,” என்று இந்திய வெளியுறவு அமைச்சகம் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
 
இந்தியா, கனடா, ஹர்தீப் சிங் நிஜ்ஜர், காலிஸ்தான்

பட மூலாதாரம்,X/VIRSA SINGH VALTOHA

படக்குறிப்பு, சீக்கிய பிரிவினைவாத தலைவர் ஹர்தீப் சிங் நிஜ்ஜர்

உறவுகள் எவ்வாறு மோசமடைந்தன?

  • ஹர்தீப் சிங் நிஜ்ஜார் 2023 ஜூன் 18 ஆம் தேதி குருத்வாராவின் வாகன நிறுத்துமிடத்தில் சில அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். நிஜ்ஜார் கனடாவின் வான்கூவரில் உள்ள குருநானக் சீக்கிய குருத்வாராவின் தலைவராகவும் இருந்தார்.
  • ஹர்தீப் சிங் நிஜ்ஜார் ஜலந்தரின் பார் சிங் புரா கிராமத்தை சேர்ந்தவர். காலிஸ்தான் புலிப் படையின் தலைவராக நிஜ்ஜார் இருந்தார் மற்றும் காலிஸ்தான் புலிப் படையின் உறுப்பினர்களுக்கு செயல்பாடுகள், நெட்வொர்க்கிங், பயிற்சி மற்றும் நிதி உதவி வழங்குவதில் தீவிரமாக ஈடுபட்டார் என்று இந்திய அரசு தெரிவிக்கிறது.
  • நிஜ்ஜார் கொலையில் இந்திய அரசின் தொடர்பு இருப்பதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் விசாரிக்கப்பட்டு வருவதாக செப்டம்பர் 18 ஆம் தேதி கனேடிய நாடாளுமன்றத்தில் பிரதம மந்திரி ஜஸ்டின் ட்ரூடோ அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.
  • 2023 அக்டோபரில் இந்தியா 40 கனேடிய தூதரக பணியாளர்களின் சிறப்புரிமையை (Diplomatic immunity) ரத்து செய்தது. இதன் காரணமாக கனேடிய தூதரகத்தின் மூன்றில் இரண்டு பங்கு ஊழியர்கள் இந்தியாவை விட்டு வெளியேறி நாடு திரும்ப வேண்டிய நிலை ஏற்பட்டது.
  • சீக்கிய பிரிவினைவாதிகளிடம் கனடா காட்டும் நெகிழ்வுத்தன்மை இந்தியாவுக்கு மட்டுமல்ல, கனடாவுக்கும் நல்லது அல்ல என்று இந்தியா கூறியிருந்தது.
  • 2024 மே மாத முதல் வாரத்தில் கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, நிஜ்ஜார் கொலையைப் பற்றியும் அதனுடன் இந்தியாவுக்கு இருக்கும் தொடர்பு பற்றியும் மீண்டும் ஒருமுறை குறிப்பிட்டார். இந்தியா இதற்கு கடும் ஆட்சேபம் தெரிவித்தது.
 

இந்தியா - கனடா உறவு எதை நோக்கிச் செல்கிறது?

  • ஆறு கனேடிய தூதரக பணியாளர்களை வெளியேற்றிய பின்னர் மேலதிக நடவடிக்கைகள் தொடரும் என்று இந்திய வெளியுறவு அமைச்சகம் திங்கள்கிழமை தெரிவித்தது. இவை என்ன மாதிரியான நடவடிக்கைகள் என்பதை அமைச்சகம் தெளிவுபடுத்தவில்லை.
  • 2025 அக்டோபரில் கனடாவில் நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் ஜஸ்டின் ட்ரூடோ தோல்வியடைவார் என்றும் பின்னர் புதிய தொடக்கத்திற்கான வாய்ப்பு கிடைக்கும் என்றும் இந்திய அதிகாரிகள் கருதுகின்றனர் என்று வெளிவிவகார நிபுணர் ஆனந்த் சஹாய் குறிப்பிட்டார்.
  • தற்போது இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகள் மிகவும் மோசமான கட்டத்தில் இருப்பதாக எழுத்தாளரும் வெளி விவகார ஆய்வாளருமான பிரம்ம செல்லானி கருதுகிறார். ”கனடா தன் கடந்த காலத்திலிருந்து எதையும் கற்றுக் கொள்ளவில்லை என்று தோன்றுகிறது,” என்று செல்லானி எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். 1985-ஆம் ஆண்டு ஏர் இந்தியா விமான குண்டுவெடிப்பை அவர் கோடிட்டுக் காட்டுகிறார். இந்த சம்பவத்தில் 331 பேர் உயிரிழந்தனர்.
  • கனடாவின் சமீபத்திய குற்றச்சாட்டுகள் மிகவும் தீவிரமானவை. இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகள் மேலும் மோசமடையக் கூடும் என்று கனடாவில் உள்ள கார்ல்ட்டன் பல்கலைக் கழகத்தில் கற்பிக்கும் ஸ்டெபானி கார்வின், அல்-ஜசீரா தொலைகாட்சி சேனலிடம் கூறினார். இதன் காரணமாக கனடாவும் கடினமான சூழ்நிலையில் சிக்கக்கூடும் என்று அவர் கருதுகிறார்.
  • திங்களன்று கனேடிய அரசு வெளியிட்ட அறிவிப்புகளை கனடா உலக சீக்கிய அமைப்பு வரவேற்றது.
  • கனடாவில் இந்தியாவின் தலையீடு இன்றுதான் உலகுக்கு தெரிய வந்துள்ளது. ஆனால் இந்த அனுபவம் கடந்த நான்கு தசாப்த காலமாக தங்களுக்கு உள்ளதாக அந்த அமைப்பு கூறியுள்ளது.

இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
4 hours ago, putthan said:

இரு நாடுகளுக்கும் என்ன பிரச்னை?

இந்தியா கனடாவில் விட்டதை அமெரிக்காவிலும் விட நினைத்து கையும்களவுமாக மாட்டிக் கொண்டது.

இப்போ அதைப்பற்றி மூச்சே விடுவதில்லை.

  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, ஈழப்பிரியன் said:

இந்தியா கனடாவில் விட்டதை அமெரிக்காவிலும் விட நினைத்து கையும்களவுமாக மாட்டிக் கொண்டது.

இப்போ அதைப்பற்றி மூச்சே விடுவதில்லை.

உவங்கள் விட்டுப் பிடிச்சிருக்கிறாங்கள். 🤣

இந்தியாவை உலக அரங்கில் வைத்து சேறடிக்கும் வேலையை கனகச்சிதமாகச் செய்கிறார்கள். 

வந்தே பாரத்,.... சாரி, ரங் ஸ்லிப்பாயிடிச்சு ........வந்தே மாதரம்,... .🤣

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
6 hours ago, தமிழ் சிறி said:

ஓம்... காந்திய முகமூடி, புத்தர் பிறந்த பூமி என்று சொல்லியே.. 
பக்கா... "கிரிமினல்" வேலை பார்ப்பார்கள். 

பிற்குறிப்பு: புத்தர் பிறந்த இடம் நேபாளத்தில் உள்ளது.

நேதாஜி ஆயுத‌ம் தூக்கி போராட‌ம‌ல் விட்டு இருந்தால்

 

காந்தின்ட‌ அகிம்சை காற்றில் ப‌ற‌ந்து இருக்கும்..................காந்திய‌ தூக்கி போட்டு மிதிச்சு இருப்பாங்க‌ள் பிரிடிஷ் இராணுவ‌ம்

 

போலி அகிம்சை நாடு......................

சிறு முன்னேற்ற‌ம் கூட‌ இல்லை இதுவ‌ரை . 

க‌ழிவ‌றை வ‌ச‌தி இல்லை . 

ம‌னித‌க் க‌ழிவை ம‌னித‌னே கையால் அள்ளும் நாடு 

 

பிரிடிஷ் கார‌ன் துப்பின‌ துப்ப‌ல்ல‌ உருவாகின‌ நாடு தான் இந்தியா..................................

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

கனடாவிற்கான தூதரக அதிகாரிகளை திரும்பப் பெற்றது இந்தியா

image

கனடாவுக்கான இந்திய தூதரையும், இதர தூதரக அதிகாரிகளையும் திரும்பப் பெறுவதாக  மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

கனடாவில் சீக்கிய தலைவரான ஹர்தீப் சிங், கடந்த ஆண்டு 2023 ஜூன் மாதம் கனடாவில் கொல்லப்பட்டார். இக்கொலை சம்பவம் இந்தியா – கனடா இடையேயான உறவில் விரிசலை ஏற்படுத்தியது. இந்த விவகாரத்தை மையமாக வைத்து இரு நாடுகளுக்கும் இடையே அவ்வப்போது கருத்து மோதல்கள் நிலவி வந்தன. இந்நிலையில், கனடாவுக்கான இந்திய தூதரையும், இதர தூதரக அதிகாரிகளையும் திரும்பப் பெறுவதென மத்திய அரசு முடிவு செய்துள்ளது. 

இது தொடர்பாக இந்திய மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

“பிரிவினைவாதம் மற்றும் வன்முறை நிலவும் சூழ்நிலையில், கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அரசின் நடவடிக்கைகள் இந்திய தூதர் மற்றும் குறிப்பிட்ட சில அதிகாரிகளின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தி உள்ளது. அவர்களின் பாதுகாப்பை தற்போதைய கனடா அரசு உறுதி செய்யும் என்ற நம்பிக்கை எங்களுக்கு இல்லை. எனவே, இந்திய தூதர் மற்றும் தூதரக அதிகாரிகளை திரும்ப பெற்றுக் கொள்வதாக முடிவு செய்துள்ளோம். இந்தியாவிற்கு எதிரான பயங்கரவாதம் மற்றும் வன்முறை சம்பவங்களுக்கு ஆதரவு அளிக்கும் ட்ரூடோ அரசு மீது நடவடிக்கை எடுக்க இந்திய அரசுக்கு உரிமை உள்ளது” இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

https://www.virakesari.lk/article/196345

  • கருத்துக்கள உறவுகள்
Posted

சஞ்சய் குமார் வர்மா: கனடா குற்றம் சாட்டிய, இந்தியா திரும்பப் பெறும் தூதரின் பின்புலம் என்ன?

இந்தியா, கனடா

பட மூலாதாரம்,HCI_OTTAWA

படக்குறிப்பு, கனடாவுக்கான இந்திய தூதர் சஞ்சய் வர்மா
2 மணி நேரங்களுக்கு முன்னர்

கடந்த ஆண்டு கனடாவில் காலிஸ்தான் ஆதரவாளர் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொல்லப்பட்டது தொடர்பான சர்ச்சை மீண்டும் தலைதூக்கியுள்ளது. இது இந்தியாவுக்கும் கனடாவுக்கும் இடையே ராஜதந்திரச் சிக்கலை உருவாக்கியுள்ளது.

இம்முறை, நிஜ்ஜார் கொலை வழக்கில், கனடாவுக்கான இந்தியத் தூதர் சஞ்சய் வர்மாவின் பெயரையும் மற்ற இந்தியத் தூதரக அதிகாரிகளின் பெயரையும் கனடா தொடர்புபடுத்தியுள்ளது.

கனடாவின் குற்றச்சாட்டுகளை நிராகரித்த இந்தியா, டெல்லியில் இருக்கும் இந்தியாவுக்கான கனடா தூதர் ஸ்டீவர்ட் ராஸ் வீலர் உள்ளிட்ட 6 பேரை வெளியேற்ற முடிவு செய்துள்ளது.

இந்தியா கனடாவுக்கான தனது தூதர் சஞ்சய் குமார் வர்மா மற்றும் பிற தூதரக அதிகாரிகளை நாடு திரும்புமாறு கேட்டுக் கொண்டதாகக் கூறியிருக்கிறது. ஆனால் கனடா அவர்களை வெளியேற்றியதாகக் கூறியுள்ளது.

கனடாவில் உள்ள இந்தியத் தூதரகத்தின் மீதும் தூதரக அதிகாரிகள் மீதும் குறிவைத்து குற்றம் சாட்டியிருப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது என இந்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

திரும்ப அழைக்கப்பட்ட ஆறு அதிகாரிகள்

இரு நாடுகளுக்கும் இடையே நிலவும் இந்தப் பதற்றத்திற்கு மத்தியில், ஒருவரது பெயர் அடிக்கடி தலைப்புச் செய்திகளில் அடிபடுகிறது. அவர்தான் கனடாவுக்கான இந்திய தூதரான சஞ்சய் வர்மா.

கனடாவிலிருந்து இந்தியாவால் திரும்ப அழைக்கப்பட்ட ஆறு அதிகாரிகளில் இந்தியத் தூதர் சஞ்சய் வர்மாவும் ஒருவர்.

இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம், சஞ்சய் வர்மா இந்தியாவின் மூத்த ராஜதந்திரி என்றும், அவர் 36 ஆண்டுகளாகப் பணியாற்றி வருகிறார் என்றும் கூறியிருக்கிறது.

அதேநேரம், தூதரக அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டப் ராஜாங்கச் சட்ட விலக்கினை (diplomatic immunity) நீக்கவும், விசாரணைக்கு ஒத்துழைக்கவும் இந்தியா மறுத்துவிட்டதாகவும், அதன் பின்னரே அவர்களை வெளியேற்ற முடிவு எடுக்கப்பட்டதாகவும் கனடா கூறுகிறது.

 
இந்தியா, கனடா

பட மூலாதாரம்,HCI_OTTAWA

படக்குறிப்பு, 2019-ஆம் ஆண்டு மே மாதம், அவர் ஜப்பானுக்கான இந்தியத் தூதரானார் சஞ்சய் வர்மா

யார் இந்த சஞ்சய் குமார் வர்மா?

இந்திய வெளியுறவு அமைச்சகத்தின் தகவலின்படி, 1965-ஆம் ஆண்டு பிறந்த சஞ்சய் குமார் வர்மா, பாட்னா பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பை முடித்தார்.

அதன் பிறகு டெல்லி ஐ.ஐ.டி-யில் இயற்பியலில் முதுகலைப் பட்டம் பெற்றார்.

1988-ஆம் ஆண்டு இந்திய வெளியுறவுத் துறைப் பணிக்குத் தேர்வானார்.

30 ஆண்டுகளுக்கும் மேலான சஞ்சய் வர்மாவின் ராஜதந்திரப் பணி ஹாங்காங்கில் உள்ள இந்திய உயர் ஆணையத்தில் இருந்து துவங்கியது. அதன் பிறகு சீனா, வியட்நாம், மற்றும் துருக்கி ஆகிய நாடுகளில் உள்ள இந்திய தூதரகங்களில் பணியாற்றினார்.

இத்தாலியில் இந்தியத் துணைத் தூதரக அதிகாரியாகப் பணியாற்றுவதற்கு முன்பு, அவர் சூடானுக்கான இந்திய தூதராக இருந்தார்.

சூடானில் இருந்து இந்தியா திரும்பிய அவரை, இந்திய அரசு முதலில் வெளியுறவு அமைச்சகத்தின் இணைச் செயலாளராகவும், பின்னர் கூடுதல் செயலாளராகவும் நியமித்தது.

இதன் பிறகு, 2019-ஆம் ஆண்டு மே மாதம், அவர் ஜப்பானுக்கான இந்தியத் தூதரானார். 2022-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் வரை அப்பணியில் இருந்தார்.

அதன் பிறகு, கனடாவுக்கான இந்திய உயர் ஆணையராக வர்மா நியமிக்கப்பட்டார்.

பெங்காலி பேசும் சஞ்சய் வர்மா, இந்தி, ஆங்கிலம், மற்றும் சீன மொழிகளில் தேர்ச்சி பெற்றவர்.

சஞ்சய் வர்மாவின் மனைவியின் பெயர் குஞ்சன் வர்மா. இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர்.

 
இந்தியா, கனடா

பட மூலாதாரம்,HCI_OTTAWA

படக்குறிப்பு, நியாயமான விசாரணைக்கு இந்தியாவுக்கு கனடா வாய்ப்பு வழங்கப்படவில்லை என்று சஞ்சய் வர்மா கூறியிருந்தார்

இந்தியா-கனடா பிரச்னை குறித்து சஞ்சய் வர்மா என்ன கூறினார்?

இந்த ஆண்டு ஜூன் மாதம், கனடா நாடாளுமன்றக் குழு அறிக்கை ஒன்று, கனடாவின் ஜனநாயகத்திற்கு சீனா மிகப்பெரிய அச்சுறுத்தல் என்றும், இரண்டாவது பெரிய வெளிநாட்டு அச்சுறுத்தல் இந்தியா என்றும் விவரித்திருந்தது.

கனடா தேசியப் பாதுகாப்பு மற்றும் புலனாய்வுக் குழுவின் நாடாளுமன்ற அறிக்கையில், கனடாவில் இந்தியாவின் தலையீடு படிப்படியாக அதிகரித்து வருவதாகக் கூறப்பட்டிருந்தது.

கனடா தலைவர்கள், ஊடகங்கள் மற்றும் இந்திய - கனடா கலாசார சமூகங்களை இந்தியா குறிவைப்பதாக அந்த அறிக்கை குற்றம் சாட்டியிருந்தது.

அப்போது ராய்ட்டர்ஸ் செய்தி முகமையிடம் பேசிய கனடாவுக்கான இந்தியத் தூதர் சஞ்சய் வர்மா அந்தச் செய்தியை நிராகரித்திருந்தார்.

நியாயமான விசாரணைக்கு இந்தியாவுக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை என்றும், சாட்சிகளைக் குறுக்கு விசாரணைக்குக் கூட அனுமதிக்கவில்லை என்றும் அவர் அதில் கூறியிருந்தார்.

“இந்த அறிக்கை இந்தியாவுக்கு எதிரான சக்திகளின் தூண்டுதலால் வெளியிடப்பட்டது. நீங்கள் ஆதாரத்தை வழங்க வேண்டும். ஆனால் இதில் நான் அப்படி எதையும் பார்க்கவில்லை,” என்று கூறியிருந்தார்.

இந்தக் குற்றச்சாட்டுகள் அனைத்தும் அரசியல் உள்நோக்கம் கொண்டவை என்றும், கனடாவின் அமைப்புகள் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவைச் சேதப்படுத்த விரும்புவதாகவும் அவர் கூறியிருந்தார்.

ராய்ட்டர்ஸ் செய்தி முகமையிடம் பேசிய வர்மா, “காலிஸ்தான் பயங்கரவாதிகளுக்கு நிறைய அரசியல் இடத்தை கனடா வழங்கியுள்ளது. எனவே அவர்கள் தங்கள் பினாமிகள் மூலம் இந்த முழுச் செயல்முறையையும் தூண்டியிருக்கலாம் என்று நான் நினைக்கிறேன்,” என்று கூறியிருந்தார்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
11 hours ago, தமிழ் சிறி said:

இந்தியா வந்து கிட்டத்தடட, சுமந்திரன் மாதிரி.... 😂 🤣
ஒருவரையும் அனுசரித்து போகத் தெரியாது. 
சொல்லும், செயலும், சிந்தனையும்.... மற்றவர்களுக்கு குழி பறிப்பதிலேயே இருக்கும். 😎

சுயநல (வட இந்தியர்கள்) குழிபறிப்புவாதிகள்

  • கருத்துக்கள உறவுகள்
Posted
7 hours ago, ஈழப்பிரியன் said:

இந்தியா கனடாவில் விட்டதை அமெரிக்காவிலும் விட நினைத்து கையும்களவுமாக மாட்டிக் கொண்டது.

இப்போ அதைப்பற்றி மூச்சே விடுவதில்லை.

உண்மை... அதுவும் அவர்களை பிடித்தது கிழக்கு ஐரோப்பாவில் வைத்து என நினைக்கிறேன்....அமெரிகன் இந்தியாவை கையாள்வது கனடாவின் ஊடாக ... 
அமெரிக்காவின்ட சின்ன தம்பி கன்டா 

3 hours ago, ஏராளன் said:

கனடா தலைவர்கள், ஊடகங்கள் மற்றும் இந்திய - கனடா கலாசார சமூகங்களை இந்தியா குறிவைப்பதாக அந்த அறிக்கை குற்றம் சாட்டியிருந்தது.

இதை தானேயடா நீங்கள் உலகம் பூரா செய்யிறீயல் ...கண்ணை மூடி தியானம் பண்ணுங்கோ பிரபஞ்சம் தெரியும் என சொல்லி கொண்டு ....நீங்கள் வெற்றியடைய ஆயுதம் தூக்கிற ஆட்கள் தானே ...

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
3 hours ago, ஏராளன் said:

“காலிஸ்தான் பயங்கரவாதிகளுக்கு நிறைய அரசியல் இடத்தை கனடா வழங்கியுள்ளது. எனவே அவர்கள் தங்கள் பினாமிகள் மூலம் இந்த முழுச் செயல்முறையையும் தூண்டியிருக்கலாம் என்று நான் நினைக்கிறேன்,” என்று கூறியிருந்தார்.

காலிஸ்தான் தேசியவாதிகளுக்கு ஜெய் ஹிந்😅

5 hours ago, வீரப் பையன்26 said:

 

 

பிரிடிஷ் கார‌ன் துப்பின‌ துப்ப‌ல்ல‌ உருவாகின‌ நாடு தான் இந்தியா..................................

அந்த துப்பலில் தெறித்து உருவானது தான் சிறிலங்கா தேசியமும் ...அதை சிங்கள தேசியமாயக்க 72 வருடமாக் சிங்கள அரசியல்வாதிகள் போராடுகிறார்கள் பார்ப்போம்.புது தலமை என்ன செய்கின்றது செய்யப் போகின்றது எண்டு

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
11 hours ago, valavan said:

ஒரு பாகிஸ்தான்காரர் சொன்னார், பாகிஸ்தானில் நடக்கும் 70% குண்டுவெடிப்புகள் கொலைகளுக்கு பின்னாலிருப்பது இந்திய உளவு பிரிவு றோ என்றும், தமது நாட்டில் ஏதாவது ஒரு சர்வதேச பொருளாதார ஒப்பந்தம் போடப்பட்டால், அடுத்த வாரமே சர்வதேசத்தின் கவனத்தை பெறும் அளவிற்கு தற்கொலை குண்டுதாக்குதல்களோ, அல்லது துப்பாக்கி சூடுகளோ நடந்து அனைத்தும் கெடுக்கப்படுகிறது என்றும் சொன்னார். தற்போது தலீபான்களுடன் இந்தியா கூட்டு சேர்ந்து ஆப்கான் பக்கமிருந்தும் தங்களுக்கு நெருக்கடியை தருவதாகவும் சொன்னார்.

அதற்காக பாகிஸ்தானியர்கள் பெரிய யோக்கியம் என்று சொல்லவரவில்லை, ஆனால் இந்தியாவைபற்றி அறியவேண்டுமென்றால்  ஈழதமிழர்களிடம்தான் தான் யாரும் கதை கதையாக கேட்கவேண்டும்

பங்களாதேஷத்திலும் றோவின் உளவு பிரிவின் ஆதிக்கத்தால்  அரசியல் நெருக்கடிகள் பொருளாதார சீர்குலைவுகள் உட்பட்ட பல  உண்டு என்றும் மேலும் சொன்னார் .

ஆனால் இந்தியர்களை கேட்டால் நாங்கள் காந்தியவாதிகள்  பாகிஸ்தான் தான் இந்தியாவிற்குள்  தீவிரவாதிகளை அனுப்பி எங்களது ‘’அப்பாவி’’ ராணுவவீரர்களை கொல்கிறது என்கின்றனர்.

உண்மை பொய் பற்றி யாரறிவார் ஆனாலும் 

அந்த அப்பாவி இந்திய வீரர்கள் மற்றும் றோ பற்றி எம்மையன்றி யார் அதிகம் அறிவார்?.

2009ம் ஆண்டு இல‌ங்கை வீர‌ர்க‌ளை பாக்கிஸ்தானில் வைச்சு சுட்ட‌து இந்தியா றோ

அதுக்கு பிற‌க்கு தான் பாக்கிஸ்தானில் ச‌ர்வ‌தேச‌ கிரிக்கேட் விளையாட‌ கூடாது என்று த‌டை போட்ட‌வை

 

ப‌ல‌ வ‌ருட‌ம் க‌ழித்து மீண்டும் இல‌ங்கை அணி பாக்கிஸ்தானில் போய் விளையாடி பாக்கிஸ்தானில் பாதுகாப்பு எல்லாம் ப‌ல‌மாய் இருக்கு வீர‌ர்க‌ளுக்கு ந‌ல்ல‌ பாதுகாப்பை பாக்கிஸ்தான் கிரிக்கேட் வாரிய‌ம் கொடுக்குது என்று சொன்ன‌ பிற‌க்கும் இந்தியா ச‌தி செய்து ம‌ற்ற‌ நாடுக‌ளை பாக்கிஸ்தானில் விளையாட‌ விடாம‌ ப‌ண்ணிவை

கிட்ட‌ த‌ட்ட‌ 10 வ‌ருட‌த்துக்கு மேல் பாக்கிஸ்தானில் ச‌ர்வ‌தேச‌ போட்டிக‌ள் ந‌ட‌க்க‌ வில்லை

ஜ‌ந்து வ‌ருட‌த்துக்கு முத‌ல் தான் ப‌ழைய‌ நிலைக்கு பாக்கிஸ்தான் திரும்பி இருக்கு.................இப்ப‌ எல்லா நாடுக‌ளும் பாக்கிஸ்தான் போய் விளையாடுகின‌ம்.................

 

இந்தியா போக‌ விட்டு பின்னால் குத்தும் நாடு அது அர‌சிய‌ல் என்றாலும் ச‌ரி விளையாட்டு என்றாலும் ச‌ரி😡

 

2009 இந்தியாவுக்கு மிக‌வும் ம‌கிழ்ச்சியான‌ ஆண்டு

 

எம் உற‌வுக‌ளை ப‌டுகொலை செய்து எம் போராட்ட‌த்தையும் அழித்த‌து 

 

பாக்கிஸ்தானில் துப்பாக்கி சூடு ந‌ட‌த்தி பாக்கிஸ்தான் பாதுகாப்பில்லாத‌ நாடு போல் சித்த‌ரித்த‌தில் இந்தியாவின் ப‌ங்கு பெரிது 2009க‌ளில்

 

 

இவ‌ர்க‌ள் செய்த‌ அட்டூழிய‌ங்க‌ள் 

கொடுமைக‌ளுக்கு இவ‌ர்க‌ளின் நாடு உல‌க‌வ‌ரை ப‌ட‌த்தில் இருந்து காண‌ம‌ல் போகும்...............................

  • Like 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted

எல்லா மாடுகளும் ஓடுகின்றன என சோமனின் சோத்தி மாடும் ஓடியதாம் எனும் ஒரு பேச்சு வழக்கு எம்மிடையே உள்ளது, எப்படி இஸ்ரேல் மத்திய கிழக்கில் அமெரிக்க முகவராக செயற்பட்டு பிராந்திய கட்டுப்பாட்டிற்கு முக்கியத்துவம் வாய்ந்த நாடாக இருந்த வண்ணம் தான் தோன்றித்தனமாக செயற்படுவதனை போல இந்தியாவும் அவ்வாறு செயற்பட விளைகிறது, ஆனால் அமெரிக்க முகவராகமல்

இது அண்மைக்காலத்தில் ஏற்பட்ட மாற்றம், இதற்கான காரணம் சீனாவின் மேலாதிக்கம் ஆசிய பகுதியில் காலூன்றி வருகின்ற நிலையில் ஆசிய நேட்டோ எனும் கருதுகோள் ஒன்றினை ஜப்பானின் ஊடாக ஏற்படுத்த ஆரம்ப முயற்சியினை இந்திய வெளிவிவககார அமைச்சர் இந்தியா அதில் ஈடுபட விருப்பம் இல்லை என ஆரம்பத்திலேயே அதற்கு முடிவுரை போட்டு விட்டார், ஏற்கனவே உள்ள ஓக்கஸ் இலும் இந்தியா பெரிதாக ஆர்வம் காட்டவில்லை.

 கனடாவில் நிகழ்த்தப்பட்ட இந்த இந்திய பயங்கரவாத செயலை வைத்து இந்தியாவைனை வழிக்கு கொண்டுவர அமெரிக்க தரப்பு செய்யும் முயற்சியாக இதனை கொள்ளலாம், ஏற்கனவே அமெரிக்காவின் செத்த கிளி MQ 9 ரீப்பரை இந்தியாவிற்கு அமெரிக்கா விற்பதற்கு அனுமதியழித்துள்ளது இவ்வாறு இந்தியாவை ஆசிய பகுதியில் உருவாக்கப்படவுள்ள நேட்டோ அமைப்பில் எப்பாடுபட்டாவது கொண்டுவர முயற்சிக்கும் அமெரிக்க தரப்பின் ஒரு அங்கமாக இந்த கனடிய இந்திய பிரச்சினை உள்ளது.

ஆசிய நேட்டோ  விடயத்தில் இந்தியா மிக கவனமாக உள்ளது, ஆனாலும் இதுவரை சீன எல்லையில் சீனாவினால் ஏற்படுத்தப்படும் ஆத்திரமூட்டும் நடவடிக்கைகளை கூட கண்டும் காணாமல் இருக்கும் இந்தியா, சும்மாவே மற்ற நாடுகளில் வலிந்து ஆக்கிரமிப்பு போரினை ஏற்படுத்தும் நேட்டோவில் இணைந்தால் சீனா நடாத்தும் சீண்டல்கள் ஆக்கிரமிப்புக்கள் நேட்டோவின் ஆர்டிக்கல் 5 தூண்டி (வரலாற்றில் இதுவரை இந்த ஆர்டிகல் 5 மீறல் நடைபெறவில்லை) இந்திய சீன எல்லையில் ஒரு போர் உருவாகி பின்னர் உக்கிரேனிய இரஸ்சிய போரினால் ஐரோப்பா போல ஆசிய பிராந்தியமும் உக்கிரேனை போல இந்தியாவும் இரஸ்சியாவை போல சீனாவும் மாறும் நிலை உருவாகும் என்பதனை இந்தியா நன்றாக உணர்ந்துள்ளதால் இந்த இந்தோ பசுபிக் நேட்டோ விளையாட்டிற்கு இந்தியா வராது.

அமெரிக்க உறுதித்தன்மை குலையும் கால கட்டத்தில் இவ்வாறான குழப்பங்களை உருவாக்கி பல தரப்புக்களிடையே போரினை உருவாக்கி ஊர் இரண்டுபட்டால் கூத்தாடிக்கு கொண்ட்டாட்டம் எனும் நிலையில் இருக்கும் அமெரிக்காவிற்கு சந்தர்ப்பம் வழங்காத இந்தியாவினை பாராட்டத்தான் வேண்டும் இல்லாவிட்டால் இந்த பிராந்தியத்திலும்  அமைதியின்மை ஏற்பட்டுவிடும்.

ஆனால் ஒரு நாட்டின் இறைமையினை மீறி இந்தியா அதுவும் அமெரிக்காவின் நேச நாட்டில் இவ்வாறான தாக்குதலை செய்வது அமெரிக்காவின் பலவீனத்தினை காட்டுகிறது (இந்தியாவினை விட்டால் அமெரிக்காவிற்கு வேறு கதியில்லை என்பதனை).

  • கருத்துக்கள உறவுகள்
Posted
13 hours ago, valavan said:

ஒரு பாகிஸ்தான்காரர் சொன்னார், பாகிஸ்தானில் நடக்கும் 70% குண்டுவெடிப்புகள் கொலைகளுக்கு பின்னாலிருப்பது இந்திய உளவு பிரிவு றோ என்றும், தமது நாட்டில் ஏதாவது ஒரு சர்வதேச பொருளாதார ஒப்பந்தம் போடப்பட்டால், அடுத்த வாரமே சர்வதேசத்தின் கவனத்தை பெறும் அளவிற்கு தற்கொலை குண்டுதாக்குதல்களோ, அல்லது துப்பாக்கி சூடுகளோ நடந்து அனைத்தும் கெடுக்கப்படுகிறது என்றும் சொன்னார். தற்போது தலீபான்களுடன் இந்தியா கூட்டு சேர்ந்து ஆப்கான் பக்கமிருந்தும் தங்களுக்கு நெருக்கடியை தருவதாகவும் சொன்னார்.

அதற்காக பாகிஸ்தானியர்கள் பெரிய யோக்கியம் என்று சொல்லவரவில்லை, ஆனால் இந்தியாவைபற்றி அறியவேண்டுமென்றால்  ஈழதமிழர்களிடம்தான் தான் யாரும் கதை கதையாக கேட்கவேண்டும்

பங்களாதேஷத்திலும் றோவின் உளவு பிரிவின் ஆதிக்கத்தால்  அரசியல் நெருக்கடிகள் பொருளாதார சீர்குலைவுகள் உட்பட்ட பல  உண்டு என்றும் மேலும் சொன்னார் .

ஆனால் இந்தியர்களை கேட்டால் நாங்கள் காந்தியவாதிகள்  பாகிஸ்தான் தான் இந்தியாவிற்குள்  தீவிரவாதிகளை அனுப்பி எங்களது ‘’அப்பாவி’’ ராணுவவீரர்களை கொல்கிறது என்கின்றனர்.

உண்மை பொய் பற்றி யாரறிவார் ஆனாலும் 

அந்த அப்பாவி இந்திய வீரர்கள் மற்றும் றோ பற்றி எம்மையன்றி யார் அதிகம் அறிவார்?.

பாக்கி இவங்களை வென்டவன்.....
தற்பொழுது பாக்கிஸ்தானில் பாலுகிஸ்தான் தேசிய போராட்டத்தை அமெரிக்காவும் ,இந்தியாவும் ஊக்கிவிக்கினம்......சீனாக்காரன் பாதை போடப்போறான் எண்ட பயம்

வீரப்பையா 
பாகிஸ்தான்காரன் உத்தமனில்லை ...இரண்டு பேரும் ஒரே தராசில் வைக்க வேண்டிய ஆட்கள் .

 



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • மர்ம காய்ச்சல் காரணமாக 44 பேர் வைத்தியசாலைகளில் அனுமதி Digital News Team     யாழ்ப்பாண மாவட்டத்தில் தற்போது பரவிவரும் ஒருவிதமான காய்ச்சல் காரணமாக இதுவரை 44 பேர் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தற்போது இக்காய்ச்சல் காரணமாக பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையிலும் யாழ். போதனா வைத்தியசாலயிலும் 32 பேர் சிகிச்சைபெற்று வருகின்றனர் என யாழ். பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் மற்றும் வைத்தியகலாநிதி. ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், மேலும் இக்காய்ச்சல் காரணமாக இதுவரை 7 இறப்புக்கள் ஏற்பட்டுள்ளன. நோயாளர்களிடமிருந்து கொழும்பு மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்திற்கு அனுப்பப்பட்ட மாதிரிகளில் இருவருக்கு எலிக்காய்ச்சல் (Leptospirosis) இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. எனவே தற்போது மேற்படி காய்ச்சலை எலிக்காய்ச்சலாக கருதி சிகிச்சைகளும் தடுப்பு நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இக்காய்ச்சல் தற்போது பரவிவரும் பருத்தித்துறை, கரவெட்டி, சாவகச்சேரி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளில் ஒருநாள் காய்ச்சலாக இருந்தாலும் உடனடியாக அருகிலுள்ள அரச வைத்தியசாலையை நாடும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. இப்பிரதேசத்திலுள்ள வைத்தியசாலைகளில் இந்நோய்க்கு சிகிச்சை வழங்குவதற்கான மருந்துகள் வழங்கப்பட்டுள்ளன. இவ்விடயம் சம்பந்தமாக சுகாதார வைத்திய அதிகாரிகளால் ஒலிபெருக்கி மூலம் பொதுமக்களுக்கு அறிவிக்கப்படுகின்றது. மேலும் பிரதேச செயலாளர்களின் உதவியுடன் கிராமமட்ட உத்தியோகத்தர்கள் மூலமாக பொதுமக்களுக்கு இவ்விடயம் சம்பந்தமாக விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகின்றது. எலிக்காய்ச்சல் நோய் ஏற்படக்கூடிய ஆபத்து இலக்கினர்களான விவசாயிகள், மீன்பிடித் தொழிலாளர்கள், துப்பரவுப் பணியாளர்கள் போன்றவர்களுக்கு இந்நோய்க்கான தடுப்பு மருந்து வழங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. விவசாயத் திணைக்களத்தின் பிரதேசமட்ட உத்தியோகத்தர்களின் உதவியுடன் கிராமமட்டத்தில் விவசாயிகளுக்கு தடுப்பு மருந்துகளை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்நோய்ப்பரம்பலை ஆய்வுசெய்து ஆலோசனை வழங்குவதற்காக மத்திய சுகாதார அமைச்சின் தொற்றுநோய்த் தடுப்பு பிரிவிலிருந்து வைத்திய நிபுணர்கள் குழுவொன்று யாழ்ப்பாண மாவட்டத்திற்கு வருகைதந்துள்ளது. அவர்கள் வைத்தியசாலைகளிலும் சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைகளிலும் களத்திலும் ஆய்வுகளை மேற்கொண்டு உரிய ஆலோசனைகளை வழங்கவுள்ளனர். மேலும் இந்நோய்க்கு சிகிச்சை அளிப்பதற்கான ஒருதொகுதி மருந்துகள் சுகாதார அமைச்சின் மருத்துவ வழங்கல் பிரிவினால் யாழ்ப்பாணம் மாவட்டத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார். https://thinakkural.lk/article/313646  
    • Chesswithlokesh  ·  Suivre 16 h  ·  Anand passing it to Gukesh ! 2 world champions
    • இதுவரை கூறப்பட்ட காரணங்கள் 1. குரங்கு 2. வெப்பநிலை  ஆனால் உண்மை இன்னமும் வெளிவரவில்லையே??? $$$ உள்ளூர்ச் சந்தையை புறக்கணித்து ஏற்றுமதியை ஊக்குவித்ததன் பலன்.  பாரிய தென்னந்தோட்டங்கள் ஏற்றுமதி நிறுவனங்களுடன் ஏற்படுத்தப்பட்ட ஒப்பந்தத்திற்கு இணங்க தமது உற்பத்திகளை ஏற்றுமதி நோக்கி திருப்பியதால் டாலர் இருக்கு தின்ன தேங்காய் இல்லையே…..! யாழ் உறவுகளுக்கு ஞாபகம் இருக்கும் “தேங்காய் தண்ணீர் ஏற்றுமதி”
    • இவர்கள் எல்லோரும் ஒன்று சேர்ந்து புதிய கட்சி யாப்பை உருவாக்க வேண்டும்.அதன் பிரகாரம் கொள்கைகள் நிமித்தம் அனைத்து உறுப்பினர்களும் சிறந்த சட்டத்தரணி முன் சத்தியபிரமாணம் எடுத்து கையொப்பமிட வேண்டும். சட்டத்தரணி என்றவுடன் உழவன் சுமந்திரன் நினைவில் வருவதற்கு தடை செய்யப்பட்டுள்ளது. 🤣
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.