Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மட்டக்களப்பில் சரவணபவனுக்கு வாக்களித்தாலும் யாழ்ப்பாணத்தில் சுமந்திரனே வெல்லுவார்!

Vhg அக்டோபர் 14, 2024
1000355053.jpg

சரவணபவானுக்கு வாக்களித்தால் எப்படி சுமந்திரன் வெல்லுவார் என்று நீங்கள் எழுப்புகின்ற கேள்வி புரிகின்றது.

ஆனால் அதுதான் உண்மை.

மட்டக்களப்பு மாநகரசபையின் முன்னாள் மேயர் தான் இந்த சரவணபவன். தமிழரசுக் சின்னத்தில் மட்டக்களப்பில் போட்டியிட்டு மிகக் குறைவான வாக்கைப் பெறுவார் என்று கூறப்படுகின்ற ஒரு வேட்பாளர்.

ஆனால் மட்டக்களப்பில் நிச்சயம் தோற்பார் என்று கருதப்படுகின்ற இந்த வேட்பாளருக்கு நீங்கள் யாராவது வாக்களித்தால்கூட, அந்த வாக்கில் யாழ்ப்பாணத்தில் போட்டிபோடுகின்ற சுமந்திரன் வெற்றிபெற வாய்ப்பிருக்கின்றது.

எப்படி என்று பார்ப்போம். 

'யாழ்ப்பாணத்தில் இம்முறை சுமந்திரனை தோற்கடித்தே தீருவது' என்று கங்கணம் கட்டி நின்றுகொண்டிருக்கின்றார்கள் தமிழ் மக்கள். வாக்குகளின் அடிப்படையில் இம்முறை சுமந்திரன் வெல்லுவது என்பது மிக மிகக் கடினம் என்றுதான் பலரும் கூறுகின்றார்கள்.

ஆனால் அவர் தேசியப் பட்டியலின் மூலம் நாடாளுமன்றம் செல்லமுடியும்.

தமிழரசுக் கட்சியின் வீட்டுச் சின்னத்துக்கு நீங்கள் அளிக்கக்கூடிய ஒவ்வொரு வாக்கும் சுமந்திரனின் என்கின்ற தமிழ் மக்கள் பெரிதாக விரும்பாத ஒரு நபரை தேசியப் பட்டியல் மூலம் நாடாளுமன்றம் அனுப்பி விடக்கூடிய அபாயத்துக்கு வித்திட்டுவிடும்.

ஒரு கட்சியின் தேசியப் பட்டியல் நியமனம் என்பது, ஒரு கட்சிக்கு  இலங்கை முழுவதும் விழக்கூடிய ஒட்டுமொத்த வாக்குகளில் இருந்து கிடைக்கக்கூடிய ஆசனம். அதனால் அந்தத் தேசியப் பட்டியல் ஆசனத்தின் மூலம் சுமந்திரன் தெரிவாகுவதற்கு சாத்தியம் இருக்கின்றது.

உதாரணத்திற்கு, வீட்டுச் சின்னத்தில் போட்டியிரும் எந்த ஒரு வேட்பாளருக்கும் நீங்கள் அம்பாறையில் வாக்களித்தாலும் சரி, மட்டக்களப்பில் வாக்களித்தாலும் சரி, யாழ்ப்பாணத்தில் வாக்களித்தாலும் சரி, சுமந்திரன் தேசியப்பட்டியல் மூலம் உங்கள் பிரதிநிதியாக நாடாளுமன்றம் செல்வதற்கு மறைமுகமாக நீங்கள் வாக்களிக்கின்றீர்கள் என்பது தான் உண்மை.

எனவே சுமந்திரன் இம்முறை தமிழ் மக்கள் பிரதிநிதியாக நாடாளுமன்றம் செல்வதை நீங்கள் விரும்பவில்லை என்றால், வீட்டுச் சின்னத்தில் போட்டிபோடுகின்ற எந்த ஒரு வேட்பாளரையும் நீங்கள் ஆதரிக்க முடியாது என்பதுதான் சமன்பாடு.

https://www.battinatham.com/2024/10/blog-post_873.html

  • கருத்துக்கள உறவுகள்

சுமத்திரனை தமிழ்தேசிய அரசியலில் இருந்து அகற்ற வேண்டுமெனறால் சிறிதரனுக்கும் வாக்குப் போடக் கூடாது. 2020 இல் கை;கிய தேசியக்கட்சியை முற்றாகத் தோற்கடித்தது போல் தமிழரசுக்கட்சியை அரசியல் அரங்கிலிருந்து முற்றாகத் தோற்கடிக்க வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

சுமந்திரன்... முதலில்  தமிழ் அரசியலில் இருந்து, 
விரட்டி அடிக்கப் பட வேண்டியது காலத்தின் கட்டாயம். 💪
வரும் தேர்தலுடன்... சுமந்திரனை,  பல்லுப் புடுங்கின பாம்பாக...
பெட்டிக்குள் சுருண்டு படுக்க விட வேணும். 😂

  • கருத்துக்கள உறவுகள்
34 minutes ago, தமிழ் சிறி said:

சுமந்திரன்... முதலில்  தமிழ் அரசியலில் இருந்து, 
விரட்டி அடிக்கப் பட வேண்டியது காலத்தின் கட்டாயம். 💪
வரும் தேர்தலுடன்... சுமந்திரனை,  பல்லுப் புடுங்கின பாம்பாக...
பெட்டிக்குள் சுருண்டு படுக்க விட வேணும். 😂

30 ,40 வருசமாச்சு டக்ளசையே விரட்டி அடிக்க முடியலையாம் இதுல சுகந்திரன்.. மண்டையன்குழு சுரேஸ் டக்ளஸ் பிள்ளையான் கருணா முன்னாடி சுமந்திரன் ஒரு புள்ளபூச்சி… இடி அமீனும் டக்ளஸ் பிள்ளையான் கருணா மண்டயன் குழுவும் ஒன்னு.. அவனுங்க கால்தூசுக்கு கூட பெறுமதி இல்ல சுமந்திரன்.. சுமந்திரனுக்கு பெட்டி அடிக்கிற நேரத்தில இவனுங்களுக்கு பெட்டி அடிச்சு முதல்ல ஊரைவிட்டு விரட்டலாமான்னு சிந்திக்கணும் தமிழர்கள்..

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, கிருபன் said:

ஆனால் மட்டக்களப்பில் நிச்சயம் தோற்பார் என்று கருதப்படுகின்ற இந்த வேட்பாளருக்கு நீங்கள் யாராவது வாக்களித்தால்கூட, அந்த வாக்கில் யாழ்ப்பாணத்தில் போட்டிபோடுகின்ற சுமந்திரன் வெற்றிபெற வாய்ப்பிருக்கின்றது.

4-3-1170x780.jpg

நீங்கள் எல்லாரும்... உங்கடை ஊரிலை இருக்கிற வாக்குகளை எடுத்துக் கொண்டு வந்து  எனக்கு தருவீங்களாம், நான் அதை எடுத்துக் கொண்டு "பின் கதவாலை பாராளுமன்ற கன்ரீனுக்குப் போய்"... "கொத்து ரொட்டி"  சாப்பிடுவனாம். உங்களுக்கு நான்  "அல்வா" வாங்கிக் கொண்டு வந்து தருவனாம். எப்பிடி டீல்... ஓகே தானே...
- ஆபிரகாம் சுமந்திரன்.- 

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

ம. ஆ. சுமந்திரன் - தமிழ் விக்கிப்பீடியா

நான், "உமி" கொண்டு வாறன்.
நீங்கள், "அரிசி" கொண்டு வாங்கோ.
இரண்டையும் ஒன்றாக கலந்து... ஊதி, ஊதித் தின்போம். 
animiertes-gefuehl-smilies-bild-0011  
- ஆபிரஹாம் சுமந்திரன்.- animiertes-gefuehl-smilies-bild-0119.gif  

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

மனோகரன் வெற்றிவேல் கட்டட ஒப்பந்தகாரரின் மகள் ( சுண்டிக்குளி மகளிர் கல்லூரி உயர்தரம் 95 ) கிட்டு (கிருஷ்ணவேணியும்) ஒரு வேட்பாளரா?

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, ragaa said:

மனோகரன் வெற்றிவேல் கட்டட ஒப்பந்தகாரரின் மகள் ( சுண்டிக்குளி மகளிர் கல்லூரி உயர்தரம் 95 ) கிட்டு (கிருஷ்ணவேணியும்) ஒரு வேட்பாளரா?

சி. கிருஷ்ணவேணி என்பவர் தமிழரசு கட்சி சார்பில் போட்டியிடுகின்றார்.

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, ragaa said:

மனோகரன் வெற்றிவேல் கட்டட ஒப்பந்தகாரரின் மகள் ( சுண்டிக்குளி மகளிர் கல்லூரி உயர்தரம் 95 ) கிட்டு (கிருஷ்ணவேணியும்) ஒரு வேட்பாளரா?

யே யே யே,..... அவரும் ஒரு வேட்பாளரே  

ஒட்டுமொத்த புலம்பெயர் ஸ் வியாபாரிகளும் சுமந்திரனை எதிர்க்கக் காரணம் என்ன? 

பதில் இதோ,...👉 

""ஆபிரஹாம்"" சுமந்திரன்

எத்தனை காலத்திற்குத்தான் ஊரை ஏமாற்ற முடியும்?  டமில் தேசியவாதிகளின் வேட்டி கழன்று அம்மணமாகக் காட்சி தருகிறார்கள். 

🤣

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, புலவர் said:

சுமத்திரனை தமிழ்தேசிய அரசியலில் இருந்து அகற்ற வேண்டுமெனறால் சிறிதரனுக்கும் வாக்குப் போடக் கூடாது. 2020 இல் கை;கிய தேசியக்கட்சியை முற்றாகத் தோற்கடித்தது போல் தமிழரசுக்கட்சியை அரசியல் அரங்கிலிருந்து முற்றாகத் தோற்கடிக்க வேண்டும்.

செய்தி  புலம்பெயர்ஸ்  டமில் தேசியவாதிகள் அனுரவைச் சந்திக்க இப்போதே போட்டிபோடத் தொடங்கிவிட்டார்களாம். யார் முதலில் அனுரவைச் சந்திப்பது என்பதில் அவர்களுக்கிடையே போட்டியாம் .....🤣

  • கருத்துக்கள உறவுகள்
35 minutes ago, Kapithan said:

செய்தி  புலம்பெயர்ஸ்  டமில் தேசியவாதிகள் அனுரவைச் சந்திக்க இப்போதே போட்டிபோடத் தொடங்கிவிட்டார்களாம். யார் முதலில் அனுரவைச் சந்திப்பது என்பதில் அவர்களுக்கிடையே போட்டியாம் .....🤣

அவர்களுக்கு முன் சுமந்திரன் சந்தித்து, மூக்குடைபட்டு வந்து,  பிரச்சார மேடைகளில் மற்றையவரை கேலிபண்ணுவதும் சேறடிப்பதும் அதோடுஅனுராவுக்கும் சவால் விடுகிறார். 

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, satan said:

அவர்களுக்கு முன் சுமந்திரன் சந்தித்து, மூக்குடைபட்டு வந்து,  பிரச்சார மேடைகளில் மற்றையவரை கேலிபண்ணுவதும் சேறடிப்பதும் அதோடுஅனுராவுக்கும் சவால் விடுகிறார். 

இலங்கையில் ஏற்பட்ட திடீர் அரசியல்  மாற்றத்தில் முதலில்  அதிர்ச்சி அடைந்தது இந்த புலம்பெயர்ஸ் டமில்ஸ் வியாபாரிகள்தானாம். என்ன செய்வது என்று தெரியாமல்  திகைத்து விட்டார்களாம். இப்போது புலம்பெயர்ஸ் களிடையேதான் அனுரவை யார் முதலில் சந்திப்பது என்பதில்  போட்டியாம், .........🤣 

இவர்கள்தான் வியாபாரிகளாச்சே,..😏

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, தமிழ் சிறி said:

4-3-1170x780.jpg

நீங்கள் எல்லாரும்... உங்கடை ஊரிலை இருக்கிற வாக்குகளை எடுத்துக் கொண்டு வந்து  எனக்கு தருவீங்களாம், நான் அதை எடுத்துக் கொண்டு "பின் கதவாலை பாராளுமன்ற கன்ரீனுக்குப் போய்"... "கொத்து ரொட்டி"  சாப்பிடுவனாம். உங்களுக்கு நான்  "அல்வா" வாங்கிக் கொண்டு வந்து தருவனாம். எப்பிடி டீல்... ஓகே தானே...
- ஆபிரகாம் சுமந்திரன்.- 

சிறி இவர்களுள் மூக்கைப் பிடித்தால் ஆஆஆஆ வென்று வாயைத் திறக்ககக் கூடியவர் சுமந்திரன் தான்.

7 minutes ago, Kapithan said:

இலங்கையில் ஏற்பட்ட திடீர் அரசியல்  மாற்றத்தில் முதலில்  அதிர்ச்சி அடைந்தது இந்த புலம்பெயர்ஸ் டமில்ஸ் வியாபாரிகள்தானாம். என்ன செய்வது என்று தெரியாமல்  திகைத்து விட்டார்களாம். இப்போது புலம்பெயர்ஸ் களிடையேதான் அனுரவை யார் முதலில் சந்திப்பது என்பதில்  போட்டியாம், .........🤣 

இவர்கள்தான் வியாபாரிகளாச்சே,..😏

இது தவறான செய்தி கப்பிதான்.

புலம் பெயர்ந்த பலர் இலங்கையில் தொழில் புரிவதற்கு விரும்பிய போதும் அளவுக்கு மீறிய கமிசன் காரணமாகவும் ஒவ்வொருவருக்கும் கொடுக்க வேண்டிய லஞ்சம் காரணமாகவும் பலர் பின் வாங்கியிருந்தனர்.

இனிமேல் முதலீடு செய்பவர்களுக்கு இந்தப் பிரச்சனைகள் இருக்காது என்றே எண்ணுகிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, தமிழ் சிறி said:

நீங்கள் எல்லாரும்... உங்கடை ஊரிலை இருக்கிற வாக்குகளை எடுத்துக் கொண்டு வந்து  எனக்கு தருவீங்களாம், நான் அதை எடுத்துக் கொண்டு "பின் கதவாலை பாராளுமன்ற கன்ரீனுக்குப் போய்"... "கொத்து ரொட்டி"  சாப்பிடுவனாம். உங்களுக்கு நான்  "அல்வா" வாங்கிக் கொண்டு வந்து தருவனாம். எப்பிடி டீல்... ஓகே தானே...
- ஆபிரகாம் சுமந்திரன்.- 

தேர்தலில் போட்டியிட்டு தோல்வியுற்றவர்கள் போனஸ் ஆசனம் கூடாக பாராளுமன்றம் போகக் கூடாது.

ஏற்கனவே ஒரு போனஸ் ஆசனத்துக்கான பட்டியலில் உள்ளவர்களையே பாராளுமன்றம் அனுப்ப வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, ஈழப்பிரியன் said:

தேர்தலில் போட்டியிட்டு தோல்வியுற்றவர்கள் போனஸ் ஆசனம் கூடாக பாராளுமன்றம் போகக் கூடாது.

ஏற்கனவே ஒரு போனஸ் ஆசனத்துக்கான பட்டியலில் உள்ளவர்களையே பாராளுமன்றம் அனுப்ப வேண்டும்.

ஆனால் என்ன செய்வது….
வெட்கம், சூடு, சுரணை, மானம், மரியாதை இல்லாததுகள்…
பின் கதவாலைதான் பாராளுமன்றத்துக்குள்ளை போகப் பார்க்கும்.
இந்த முறையாவது திருந்தி இருக்கின்றார்களா என பார்ப்போம்.

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, தமிழ் சிறி said:

ஆனால் என்ன செய்வது….
வெட்கம், சூடு, சுரணை, மானம், மரியாதை இல்லாததுகள்
பின் கதவாலைதான் பாராளுமன்றத்துக்குள்ளை போகப் பார்க்கும்.
இந்த முறையாவது திருந்தி இருக்கின்றார்களா என பார்ப்போம்.

அரசியலுக்கு வந்துவிட்டால் இவை எதுவுமே இருக்கக் கூடாது.

5 hours ago, தமிழ் சிறி said:

சி. கிருஷ்ணவேணி என்பவர் தமிழரசு கட்சி சார்பில் போட்டியிடுகின்றார்.

இவரது கணவர் ஒரு மருத்துவர், பரியோவான் கல்லூரியில் படித்தவர். கிருஷ்ணவேணி என் நெருங்கிய நண்பர் ஒருவரின் மனைவியின் சகோதரி.

அரசியலுக்கு வரக் கூடியளவுக்கு எந்த திறமையும் அற்றவர் இவர்.

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, நிழலி said:

அரசியலுக்கு வரக் கூடியளவுக்கு எந்த திறமையும் அற்றவர் இவர்.

தமிழரசு கட்சி… வேட்பாளர் தெரிவில் கோட்டை விட்டு விட்டார்கள் போலுள்ளது. 
ஏற்கெனவே பல பிரச்சினைகளில் சிக்கியுள்ள இவர்கள், இதிலாவது கூடுதல் கவனம் செலுத்தி இருக்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, நிழலி said:

அரசியலுக்கு வரக் கூடியளவுக்கு எந்த திறமையும் அற்றவர் இவர்.

இந்த ஒரு தகுதியே போதும்….

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பல இளைய சட்டத்தரணிகள் தேர்தலில் போட்டியிடுகின்றார்கள். இவர்கள் சட்டக்கல்லூரிக்குப் போய் பட்டம் எடுப்பது எம்பியாக வரவேண்டும் என்ற நோக்கில் போலத்தான் உள்ளது (இந்தியாவில் கலக்டர் ஆகவேண்டும் என்ற கனவு போல)😄

மக்கள் சேவை என்றால் என்னவென்று தெரியாத சுயநலம் பிடித்த விளம்பரப் பிரியர்களுக்கு பாடம் புகட்டுமளவிற்கு தமிழ் வாக்காளர்கள் உள்ளனரா என்று தெரியவில்லை!

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, தமிழ் சிறி said:

தமிழரசு கட்சி… வேட்பாளர் தெரிவில் கோட்டை விட்டு விட்டார்கள் போலுள்ளது. 
ஏற்கெனவே பல பிரச்சினைகளில் சிக்கியுள்ள இவர்கள், இதிலாவது கூடுதல் கவனம் செலுத்தி இருக்கலாம்.

செலுத்தி தான் உள்ளார்கள்   தகுதி என்ன என்றால் 

சரியோ பிழையோ   சுமத்திரனை எதிர்த்து கதைக்கக்கூடாது   அவர் சொல்வதை எற்றுக்கொண்டு நடக்க வேண்டும்    அதாவது நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டவர்கள்.  அல்லது சாட்சிகளை  ஒரு கூண்டில்   வைத்து இருப்பார்கள்   அப்படி ஒவ்வொருவரும் சுமத்திரனுக்கு. முன்னர் நிற்க வேண்டும்   🤣.  இந்த தகுதி இருந்தால்  சீற். கிடைக்கும்     

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, MEERA said:

இந்த ஒரு தகுதியே போதும்….

சுமந்திரனின் பிரசங்கத்திற்கு கைதட்ட தெரிந்தால் போதும், கேள்வி ஏதும் கேட்கக்கூடாது. அவர்களையே தேடி எடுத்திருப்பார். இவருடன் கூட்டு வைப்பவர்களின்  திறமையை  இலகுவில் கணக்கிட்டு விடலாம்

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, தமிழ் சிறி said:

தமிழரசு கட்சி… வேட்பாளர் தெரிவில் கோட்டை விட்டு விட்டார்கள் போலுள்ளது. 
ஏற்கெனவே பல பிரச்சினைகளில் சிக்கியுள்ள இவர்கள், இதிலாவது கூடுதல் கவனம் செலுத்தி இருக்கலாம்.

எதிர்பார்க்கப்பட்ட ஒரே ஒரு தகுதி, சும்முக்கு யால்ரா போடத்தெரிதல் வேண்டும். அது தெரிந்தால் போதுமானது. வேறு விடயங்களைக் கிளறக்கூடாது. அது பிறகு சும்முக்கு பிடிக்காமல் ஐரீ அணியால் சைபர் தாக்குதல் செய்தால் பிறகு எப்படி எழுதுவீர்கள்? 

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, nochchi said:

எதிர்பார்க்கப்பட்ட ஒரே ஒரு தகுதி, சும்முக்கு யால்ரா போடத்தெரிதல் வேண்டும். அது தெரிந்தால் போதுமானது. வேறு விடயங்களைக் கிளறக்கூடாது. அது பிறகு சும்முக்கு பிடிக்காமல் ஐரீ அணியால் சைபர் தாக்குதல் செய்தால் பிறகு எப்படி எழுதுவீர்கள்? 

சுமந்திரனிடம் எந்த ஒரு நிரந்தர கொள்கையும் இல்லை.
தனது பெயர் தினமும் பத்திரிகைகளில் வர வேணும் என்பதற்காக தினமும் உளறிக் கொண்டிருக்கும் மனோ வியாதி கொண்ட ஆள். அவர் இருக்க வேண்டிய இடம் அங்கோடை வைத்தியசாலை.

😂

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழ் சிறி said:

சுமந்திரனிடம் எந்த ஒரு நிரந்தர கொள்கையும் இல்லை.
தனது பெயர் தினமும் பத்திரிகைகளில் வர வேணும் என்பதற்காக தினமும் உளறிக் கொண்டிருக்கும் மனோ வியாதி கொண்ட ஆள். அவர் இருக்க வேண்டிய இடம் அங்கோடை வைத்தியசாலை.

😂

இண்டைக்கு தொலைஞ்சசீங்க போங்கோ!

காலையில் சொன்னதை மாலையில் மறுப்பது,  தனக்கு பிடிக்காதவர்களை திட்டம் போட்டு தாக்கும் தந்திரம்,  திறமை, பொருத்தமானவர்களையும் அவர்களின் செயற்பாடுகளையும் முடக்குவது, ஓரங்கட்டுவது, மற்றவர் அவர்களை தொடர்வதை தடுத்து தன்னை முன்னிலைப்படுத்துவது இன்னும் பல....  

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.