Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஊடகவியலாளர் தராகி சிவராமின் (Taraki Sivaram) கொலைக்கும் புளொட்டுக்கும் எந்தவிதமான தொடர்பும் இல்லை என புளொட்டின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் (Dharmalingam Sitharthan) தெரிவித்துள்ளார்.

சிவராமின் கொலை வழக்கு தொடர்பில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், சிவராமினுடைய கொலையானது 20 வருடங்களுக்கு முன்னர் இடம்பெற்றது. அது சம்பந்தமாக சிலர் கைது செய்யப்பட்டனர்.

நீதிமன்றத்தில் வழக்கு நிலுவை

உயர் நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று அந்த வழக்கிலிருந்து அவர்கள் முழுமையாக விடுதலை செய்யப்பட்டிருக்கிறார்கள்.

ஊடகவியலாளர் தராகி சிவராம் படுகொலையுடன் புளொட் தொடர்பா..! மறுக்கும் சித்தார்த்தன் | Plote Leader Reject Journalist Sivaram Murder Case

அதனுடைய அர்த்தம் இனிமேல் அந்த வழக்கை விசாரிக்க முடியாது என்பதாகும். நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருந்தபோது கூட என்னிடம் விசாரணைகள் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை.

அந்தக் கொலைக்கும் புளொட்டுக்கும் எந்தவிதத் தொடர்பும் இல்லை என்பதும், வேறு நபர்களே அந்தக் கொலையோடு சம்பந்தப்பட்டவர்கள் என்பதும் விசாரணையில் ஈடுபட்ட காவல்துறையினருக்கு மிகத் தெளிவாகத் தெரியும்.

அரசியல் நோக்கம்

அது தொடர்பில் அரசும் இப்போது அது பற்றி கூறியிருப்பது அரசியல் நோக்கம் கொண்டதாகவே கருதுகின்றேன். ஜே.வி.பியினரும் வடக்கு, கிழக்கிலே போட்டியிடுகின்றார்கள்.

ஊடகவியலாளர் தராகி சிவராம் படுகொலையுடன் புளொட் தொடர்பா..! மறுக்கும் சித்தார்த்தன் | Plote Leader Reject Journalist Sivaram Murder Case 

தங்கள் அரசியல் நலன்களுக்காகவே இந்த வழக்குகளைப் பற்றி அவர்கள் பேசியிருக்கின்றார்கள். அதுபோல ஏனைய தமிழ்க் கட்சிகளும் தங்கள் அரசியல் நோக்கத்துக்காகவே தராகி சிவராமையும் எங்களையும் தொடர்புபடுத்தி பேசிக் கொண்டிருக்கின்றன.

தராகி சிவராம் கொலை வழக்கை மீள விசாரிப்பது தொடர்பில் அரசு தெரிவித்த கருத்தை நான் ஒரு விடயமாகவே கருதவில்லை.

கடந்த காலங்களிலே எத்தனையோ கொலைகள் இடம்பெற்றிருக்கின்றன. அது சம்பந்தமாக எந்தவிதமான நடவடிக்கைகளும் இதுவரை எடுக்கப்படவில்லை. தராகி சிவராம் கொலை வழக்குத்தான் மீள விசாரணைக்கு எடுக்கப்படவுள்ளது என்று சொல்லப்படுகின்றது.

ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணிக்கு மக்கள் மத்தியில் ஆதரவு பெருகுகின்றது. அதனைப் பார்த்து அரசு உட்பட அனைவருமே பயமடைந்து தான் தராகி சிவராம் கொலை வழக்கையும் புளொட்டையும் தொடர்புபடுத்திக் கருத்தைச் சொல்லி வருகின்றார்கள் என்றார்.

https://ibctamil.com/article/plote-leader-reject-journalist-sivaram-murder-case-1729133992#google_vignette

  • கருத்துக்கள உறவுகள்

""ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணிக்கு மக்கள் மத்தியில் ஆதரவு பெருகுகின்றது. அதனைப் பார்த்து அரசு உட்பட அனைவருமே பயமடைந்து தான் தராகி சிவராம் கொலை வழக்கையும் புளொட்டையும் தொடர்புபடுத்திக் கருத்தைச் சொல்லி வருகின்றார்கள் என்றார்""

நடுங்கத் தொடங்கிவிட்டாரோ,.. 😁

  • கருத்துக்கள உறவுகள்

நம்ம ராஜபக்சவே அனுரவின் வெருட்டலுக்கு பயப்படவில்லை ...நான் எப்படி போனேனோ அப்படியே திரும்பி வந்திட்டன் என்று சொல்லு என டயலாக் பேசுகிறார்

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, putthan said:

நம்ம ராஜபக்சவே அனுரவின் வெருட்டலுக்கு பயப்படவில்லை ...

அநுரகுமார திசாநாயகாவின் அதிரடிநடவடிக்கை   துல்லியமான நடவடிக்கை   என்று தமிழ்  யுரியுப்பர்களும் அவரது  புலம்பெயர் தமிழ் ஆதரவாளர்களும் அடித்து விடுவதை இவர் உண்மை என்று நம்பிவிட்டார்

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, ஏராளன் said:

அந்தக் கொலைக்கும் புளொட்டுக்கும் எந்தவிதத் தொடர்பும் இல்லை என்பதும், வேறு நபர்களே அந்தக் கொலையோடு சம்பந்தப்பட்டவர்கள் என்பதும் விசாரணையில் ஈடுபட்ட காவல்துறையினருக்கு மிகத் தெளிவாகத் தெரியும்.

வேறு நபர்கள் என்றால் யார் அவர்கள்?

வவுனியாவில் செய்த கொலை,களவு,பாலியல் வல்லுறவு என்று யாராவது கிண்டாமல் இருக்க வேண்டுங்க.

அப்படியே அந்த கொலைக்கு எப்படி தன்னுடைய வாகனங்களில் ஒன்று பயன்படுத்தப்பட்டது என்றும் சொல்லலாமே சித்து?

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, நிழலி said:

அப்படியே அந்த கொலைக்கு எப்படி தன்னுடைய வாகனங்களில் ஒன்று பயன்படுத்தப்பட்டது என்றும் சொல்லலாமே சித்து?

அண்ணச்சியின் காலை பாம்பு சுத்துதோ....

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, நிழலி said:

அப்படியே அந்த கொலைக்கு எப்படி தன்னுடைய வாகனங்களில் ஒன்று பயன்படுத்தப்பட்டது என்றும் சொல்லலாமே சித்து?

தராகி சிவராமின் கொலையில்… கருணா, புளொட், ஶ்ரீலங்கா புலனாய்வுத்துறை என்று… பல குழுக்கள் ஒற்றுமையாக செயல் பட்டிருக்குது போலுள்ளதே.
நல்ல விடயத்துக்கு… ஒன்று சேராதவர்கள், ஒரு பிரபலமான தமிழனை கொலை செய்ய ஒன்று சேர்ந்த கேவலம் மிக்க இனம். 😥

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, தமிழ் சிறி said:

தராகி சிவராமின் கொலையில்… கருணா, புளொட், ஶ்ரீலங்கா புலனாய்வுத்துறை என்று… பல குழுக்கள் ஒற்றுமையாக செயல் பட்டிருக்குது போலுள்ளதே.
நல்ல விடயத்துக்கு… ஒன்று சேராதவர்கள், ஒரு பிரபலமான தமிழனை கொலை செய்ய ஒன்று சேர்ந்த கேவலம் மிக்க இனம். 😥

புலிகளை வீழ்த்துவதற்கு

இந்தியா பாகிஸ்தான் சீனா அமெரிக்கா ரசியா என்று சேர்ந்த மாதிரி.

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, தமிழ் சிறி said:

தராகி சிவராமின் கொலையில்… கருணா, புளொட், ஶ்ரீலங்கா புலனாய்வுத்துறை என்று… பல குழுக்கள் ஒற்றுமையாக செயல் பட்டிருக்குது போலுள்ளதே.
நல்ல விடயத்துக்கு… ஒன்று சேராதவர்கள், ஒரு பிரபலமான தமிழனை கொலை செய்ய ஒன்று சேர்ந்த கேவலம் மிக்க இனம். 😥

கருத்து முரண்பாடுகள் இருந்தபோதும் தூர நோக்கோடு புலிகள் இவரை அரவணைத்துக்கொள்ள மற்றவர்கள் அனைவரும் இதற்காக மட்டும் ஒன்று சேர்ந்து அவரை போட முடிவெடுத்தார்கள் என்றால் சிவராமின் ஆளுமையை நாம் உணரலாம். 

3 minutes ago, ஈழப்பிரியன் said:

புலிகளை வீழ்த்துவதற்கு

இந்தியா பாகிஸ்தான் சீனா அமெரிக்கா ரசியா என்று சேர்ந்த மாதிரி.

சரியான உதாரணம். 

  • கருத்துக்கள உறவுகள்
38 minutes ago, விசுகு said:

கருத்து முரண்பாடுகள் இருந்தபோதும் தூர நோக்கோடு புலிகள் இவரை அரவணைத்துக்கொள்ள மற்றவர்கள் அனைவரும் இதற்காக மட்டும் ஒன்று சேர்ந்து அவரை போட முடிவெடுத்தார்கள் என்றால் சிவராமின் ஆளுமையை நாம் உணரலாம். 

ஆம் விசுகு. அதுகும்... இவரின்  கொலைக்காக கருணாவும், புளொட்டும் கைகோர்த்தது என்றால், தமிழருக்கு பலன் கொடுக்கக் கூடிய  எப்படியான ஆளுமை அவர்  என்பதை புரிந்து கொள்ளலாம். 
தமிழன் நன்மை பெறுவதை இந்தத் தீய சக்திகள் விரும்பவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, தமிழ் சிறி said:

ஆம் விசுகு. அதுகும்... இவரின்  கொலைக்காக கருணாவும், புளொட்டும் கைகோர்த்தது என்றால், தமிழருக்கு பலன் கொடுக்கக் கூடிய  எப்படியான ஆளுமை அவர்  என்பதை புரிந்து கொள்ளலாம். 
தமிழன் நன்மை பெறுவதை இந்தத் தீய சக்திகள் விரும்பவில்லை.

போராட்ட பின்னனி கொண்ட மொழித்திறன் உடைய,எழுத்தாளன் ....
ஆங்கில பத்திரிகைக்கு எழுதும் பொழுது அதை தூதரக அதிகாரிகள் வாசிப்பார்கள்...
ஜோசப் பரராஜ சிங்கம் ,ரவிராஜ் போன்றவ்ர்கள் கொலை செய்தமைக்கும் இதே காரணம் தான் ...அவர்கள் ஏனைய பா.உ. (முன்னாள் ஆயுதமேந்திய் பா.உ உட்பட ) அரசுடன் சேர்ந்து அரசுக்கு ஆமா போட்டு  பேசிகொண்டிருந்தமையால் உயிர்  தப்பி வாழ்கின்றனர்...

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, விளங்க நினைப்பவன் said:

அநுரகுமார திசாநாயகாவின் அதிரடிநடவடிக்கை   துல்லியமான நடவடிக்கை   என்று தமிழ்  யுரியுப்பர்களும் அவரது  புலம்பெயர் தமிழ் ஆதரவாளர்களும் அடித்து விடுவதை இவர் உண்மை என்று நம்பிவிட்டார்

அரசியல்வாதிகளை கைது செய்வது இலகுவான விடயமல்ல ...அரச அதிகரிகளை கைது செய்து இலகுவான விடயம் ...இன்னும் ஒர் அரசியல்வாதியும் கைது செய்யப்படவில்லை...ஆனால் மத்தியவங்கி வரிகட்டாடஹ் தனியார் துறை அதிகாரி கைது செய்யப்பட்டுள்ளார்...

சில சமயம் அரசியல்வாதிகளின் குடியுரிமை ரத்து செய்யலாம்...

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, putthan said:

நம்ம ராஜபக்சவே அனுரவின் வெருட்டலுக்கு பயப்படவில்லை ...நான் எப்படி போனேனோ அப்படியே திரும்பி வந்திட்டன் என்று சொல்லு என டயலாக் பேசுகிறார்

அதுதான் ஏ.கே. டியும் கட்ட பொம்மன் வசனம் பேசுகிறார்..அதுவும் சிவாஜி படத்தில் வேசம் போட்டதுபோலதான்.. நாட்டின் நிலமை அதள பாதாளத்தில் இருக்கிறது..இவர் அதுக்கு முன் நின்றுதான் வீர வசனம் பேசுகிறார்...தேர்தல் நெருங்க நெருங்க...இவரின் வெற்றி வாய்ப்பு தன்மையும் சுருங்குகிறத் என்பதுதான் உண்மை...தமிழ் யூ டியூபர்களும் ...கனடா பென்சனியர்களும்..யாழிலும் ஒரு 10 பேர் ..ஏ.கே டி யை ஊதி பெருப்பிக்கினம்...மற்ரும்படி அணில் தான் ...அப்பம் பிட்ட குரங்குபோல அதிர்ச்டத்தில் மீளவும் ஆட்ட்சியைப் பிடிக்கும்போல் இருக்கிறது...

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, alvayan said:

சில புலம் பெயர் பென்சனியர் சொல்லுயினம் இவ்வளவு நாளும் சிங்களவர்களுடன் பழகவில்லை..."உங்களது யூ டியுப்பை பார்த்து போய் பழகினேன்  அவர்களை போல தேவலோக மனிதர்கள் பூமியில் இல்லை" என செர்டிவிக்கேட் கொடுக்கினம்  (இளனீர்,கவுன்கொண்டை ,இடியப்ப ஜோதி எல்லாம் கொடுத்தவையலாம்..

அப்படியே அவர் இன்னுமோரு டயலக் விட்டார்...சிறிலங்காவில் தமிழர் என்ற தனித்துவத்துடன் வாழ நினைக்க கூடாதாம் ...அப்படி நினைத்தால் தமிழர்கள் அழிந்து விடுவார்களாம்...
இதிலிருந்து அவரின் கருத்துருவாக்க மையம் யாருடையது என்பது புரிகின்றதல்லவா?

இன்னும் சில புலம்பெயர்ஸ்...(மருத்துவர்கள்,பொரியியளாலர்கள்...சிலர் மட்டுமே)இவ்வளவு காலமும் அரசியல் பேசாமல் இப்ப அவர்களது வட்சப் குறூப்பில் சிங்கள தோழர்கள் அனுப்பும் கிளிப்புக்களை வொர்ட்பண்ணி கொண்டிருக்கினம் ....(முக்கியமாக தமிழ் தேசிய விரோத கருத்துக்களை)

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, putthan said:

சில புலம் பெயர் பென்சனியர் சொல்லுயினம் இவ்வளவு நாளும் சிங்களவர்களுடன் பழகவில்லை.

17 minutes ago, putthan said:

இன்னும் சில புலம்பெயர்ஸ்...(மருத்துவர்கள்,பொரியியளாலர்கள்...சிலர் மட்டுமே)

தமிழினம் அரசியலை முழுமையாக அறியாவிடினும், அங்கிடுதத்தி அரசியலை அறிந்துகொள்ள வைக்கும் தேர்தலாக இந்தத் தேர்தல் இருக்கப்போகிறது. இதன் பின்னர்தான் தமக்கான அரசியல் எது என்பதை அடையாளம் காணவும்கூடும். முந்தி நான் படித்தகாலத்தில் இலங்கையிலை பெஞ்சன் எடுக்கிறவையே ஒரு பெருமையோடைதான் வருவினம். இதிலை மேற்கலக பெஞ்சனியர்மாரென்றால் சொல்லவும் வேண்டுமா? இனிப் படித்த பெருமக்களாகிவிட்டால்,அவைக்கு சிங்களம் நல்லதாவே தெரியும். ஏனென்றால் என்ன சுழி சுழித்து ஓடியிருப்பார்கள். எனவே எல்லாம் தெளிவுபெற ஒரு கால அவகாசம் தேவையல்லவா? அப்போது சிலவேளை ஒவ்வொரு வீட்டுவாசலில் புத்தர்சிலை வைக்கப்பட்டடிருக்கும். 
நட்பார்ந்த நன்றியுடன். 
நன்றி

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, nochchi said:

உண்மைதான் ...படிச்ச வரி செலுத்தாமல் சுழிச்சு ஒடி போய்யிருந்து சகல வசதிகலையும் அனுபவித்து போட்டு இப்ப அனுரா அலைக்கு முண்டு கொடுக்கினம் ...புலம் பெயர்ந்த பட்டதாரிகள் யாவரும் பல்கலைகழக்த்துக்கு செலுத்த வேண்டிய பணத்தை செலுத்த வேணும் என்று சொன்னால் ஒரு டமிழ்ஸும் தாயக் பக்கம் திரும்பியும்படுக்க மாட்டான் 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, putthan said:

சில புலம் பெயர் பென்சனியர் சொல்லுயினம் இவ்வளவு நாளும் சிங்களவர்களுடன் பழகவில்லை..."உங்களது யூ டியுப்பை பார்த்து போய் பழகினேன்  அவர்களை போல தேவலோக மனிதர்கள் பூமியில் இல்லை" என செர்டிவிக்கேட் கொடுக்கினம்  (இளனீர்,கவுன்கொண்டை ,இடியப்ப ஜோதி எல்லாம் கொடுத்தவையலாம்..

இன்னும் சில புலம்பெயர்ஸ்...(மருத்துவர்கள்,பொரியியளாலர்கள்...சிலர் மட்டுமே)இவ்வளவு காலமும் அரசியல் பேசாமல் இப்ப அவர்களது வட்சப் குறூப்பில் சிங்கள தோழர்கள் அனுப்பும் கிளிப்புக்களை வொர்ட்பண்ணி கொண்டிருக்கினம் ....

புலம் பெயர் பென்சனியர் சிலர் சொல்கின்றார்கள் சரி ஆனால் பல புலம் பெயர் வேலை செய்து கொண்டிருக்கின்ற அண்ணாமாரும் அப்படி அவர் (அனுரகுமார திஸ்ஸநாயக்க) வந்துவிட்டர் இனி எல்லாமே நல்லம் தான்  என்று தானே  சொல்லுகினம்🙄
தாயகத்தில் தமிழ் கட்சிகள் தமிழ் மக்களுக்கு நல்லது செய்யகூடாது தமிழர்களை முன்னேற விடக்கூடாது என்ற தமிழ்தேசிய கொள்கையில் உறுதியுடன் இருந்த காரணத்தால்  அங்கே உள்ள மக்கள் அனுரகுமார திஸ்ஸநாயக்க பக்கம் செல்கின்றனர் சரி  வெளிநாடுகளில் வசதியாக வாழ்கின்ற புலம் பெயர் தமிழர்களுக்கு என்ன நடந்தது ?
சிங்களவருடன் ஒரு போதும் ஒன்றாக வாழ முடியாது தமிழீழம் தான் வழி என்று சொன்ன புலம் பெயர் தமிழர்களும்  அனுரகுமார திஸ்ஸநாயக்க புகழ் பாட்டு பாடுவது அவர் கொள்கைகாக பிரசாரம் செய்வது தான் விசித்திரம்.இவ்வளவு நாளும் தமிழீழம் தான் தீர்வு என்று பொய் சொல்லி மற்ற தமிழர்களை பேய்காட்டினார்களா

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, விளங்க நினைப்பவன் said:

வெளிநாடுகளில் வசதியாக வாழ்கின்ற புலம் பெயர் தமிழர்களுக்கு என்ன நடந்தது ?

1)அதில அதிகமானவர்கள் அரசியலே பேசாதவர்கள்/தெரியாதவர்கள்  ...விடுமுறைக்கு சிறிலன்கா சென்றால் கதிர்காமம்,தென்னிலங்கை கடற்கரை என சுற்றுலா செல்பவர்கள் அந்த அழகையும் ,அங்கு ஹொட்டல்களில் சிப்பந்திகள் இவர்களுக்கு கொடுக்கும் மரியாதையை பார்த்து மயங்கி ஐயோ சிறிலங்கா மக்கள் புனிதமானவர்கள் என்ற மாயை ...
கொட்டியும் சிங்கள அரசியல்வாதியும் தான் நாட்டை குட்டிசுவராக்கியவர்கள் என பிரச்சாரம் செய்தால் அதை நம்புபவர்கள் 

2)"சிங்களவர்கள் அதிகமாக இந்த நாட்டில் வாழ்கின்றனர் அவர்கள் விருப்பிய்படி தமிழர்கள் வாழ்வதுதானே நியாயம்....புலம் பெயர்ந்த நாடுகளில் அப்படி தானே நீங்கள் வாழ்கின்றீர்கள் அவர்களுடைய மொழியை படிக்கிறீங்கள் அவர்களுடன் இரண்டர கலந்து  அந்த நாட்டவர்களாக மாறிவிட்டிர்கள் தானே ஏன் சிரிலங்கனாக மாறமாட்டீர்கள் என அடம் பிடிக்கின்றீர்கள்" என சிங்களவ்ர்கள் பாடம் எடுத்தவுடன் இந்த புலம்பெயர்ஸ் அதையும் நம்பி "ஆமால்ல" என்பார்கள் 

3)3) புது ரென்ட் புலம் பெயர் நாடுகளில் ஏசியன்(இந்து,இந்தியன்,சிறிலங்கன்) என்ற அடையாளத்துடன் வாழ வேணும் என்ற‌ ஒர் நப்பாசை வந்திருக்கு சில ஈழத்தமிழருக்கு 

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.