Jump to content

தென்னிலங்கைத் தரப்புக்களை தமிழ் அரசியலிற்கு மாற்றாக முன்னிறுத்துவது அரசியல் தற்கொலைக்குச் சமமாகுமம் - யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

மாற்றம் : தென்னிலங்கையிலிருந்து வருவதில்லை; தென்னிலங்கைத் தரப்புக்களை தமிழ் அரசியலிற்கு மாற்றாக முன்னிறுத்துவது அரசியல் தற்கொலைக்குச் சமமாகுமம் - யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம்

image

தமிழ் மக்களின் அரசியல் விடுதலைக்கும் அரசியற் பண்பாட்டிற்கும் முற்றிலும் எதிரான அரசியலை முன்னெடுத்த தமிழ்த் தேசியப் போலிகளை இந்த மண்ணிலிருந்து துடைத்தெறிந்து புதிய தமிழ்த் தேசிய அரசியற் பண்பாட்டை தோற்றுவிப்பதே உண்மையான மாற்றமாகும். மாறாக ஊழல் எதிர்ப்பு கவர்ச்சி அரசியலினால் தென்னிலங்கைத் தரப்புக்களை தமிழ் அரசியலிற்கு மாற்றாக முன்னிறுத்துவது அரசியல் தற்கொலைக்குச் சமமாகுமம்.

என யாழ்பல்கலைகழக மாணவர் ஒன்றியம் தெரிவித்துள்ளது.

ஊடகவியலாளர் சந்திப்பில் யாழ்ப்பாண பல்கலைகழக மாணவர்கள் ஒன்றிய பிரதிநிதிகள் மேலும் தெரிவித்துள்ளதாவது,

சிங்கள – பௌத்த பேரினவாதம் முழுவீச்சில் செயற்படுவதற்கான வாய்ப்புக்களைப் பொருளாதார நெருக்கடி தற்காலிகமாக மட்டுப்படுத்தியுள்ள நிலையில் சிங்கள மக்கள் மாற்றமொன்றினை எதிர்பார்த்து வாக்களித்துள்ளனர். எனினும் சிங்கள மக்களின் வாக்களிப்பு முறைக்கு நேர்மாறாக வாக்களித்ததன் மூலம் எம்மிடையே நிலவுவது பொருளாதார நெருக்கடி மட்டுமல்ல என்பதை தமிழ் மக்கள் தெளிவாக எடுத்துரைத்துள்ளனர். 

15 ஆண்டுகளாக தலைமைத்துவ வெற்றிடம் நிலவும் வடக்கு – கிழக்கு தமிழர் தாயகத்தில் தெற்கில் ஏற்பட்டுள்ள ஊழலற்ற ஆட்சி, இளையோர்களின் அரசியற் பங்கேற்பு உள்ளிட்டவைகளின் தாக்கம் உணரப்படாமலுமில்லை. தமிழ்த் தேசிய சித்தாந்தத்தை சமூக, பொருண்மிய, பண்பாட்டுத் தளங்களில் மக்களுக்கானதாகக் கொண்டு போய்ச் சேர்ப்பதில் எந்த முனைப்பையும் காட்டாத தமிழ்த் தேசிய முலாம் பூசிய அரசியல்வாதிகள், அரசியற் கட்சிகள் மீதான பெரும் அதிருப்தி வெகுவாக மக்கள் மத்தியில் உணரப்பட்டு வருகின்றது.

e8df527c-c953-42f5-b1ca-7463c9530cc8.jpg

தென்னிலங்கையில் ஏற்பட்ட அரசியல் மாற்றத்தால் ஏற்பட்ட அலையில் தமிழ் மக்களிடையே குறிப்பாக இளையோர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள மாற்றம் குறித்த கரிசனை தமிழ்த் தேசிய அரசியற்பரப்பில் தவிர்த்துப் புறமொதுக்க முடியாதவொன்றாகும். தமிழ் மக்களின் அரசியல் விடுதலைக்கும், அரசியற் பண்பாட்டிற்கும் முற்றிலும் எதிரான அரசியலை முன்னெடுத்த தமிழ்த் தேசியப் போலிகளை இந்த மண்ணிலிருந்து துடைத்தெறிந்து புதிய தமிழ்த் தேசிய அரசியற் பண்பாட்டை தோற்றுவிப்பதே உண்மையான மாற்றமாகும். மாறாக ஊழல் எதிர்ப்பு, கவர்ச்சி அரசியலினால் தென்னிலங்கைத் தரப்புக்களை தமிழ் அரசியலிற்கு மாற்றாக முன்னிறுத்துவது அரசியல் தற்கொலைக்குச் சமமாகுமம் என்று யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினர் தெரிவித்தனர். 

மேலும், மாற்றம், ஊழல் இளையோர்கள் தான் அரசியலுக்கு வரவேண்டும் எனும் தென்னிலங்கையின் கவர்ச்சி அரசியலினால் வடக்கு – கிழக்கில் நடைபெறும் தொடர் ஆக்கிரமிப்புக்களை மழுங்கடிக்கப்படுவதும் அதன் மூலம் தென்னிலங்கைத் தரப்புக்களிற்கும், அரசியல் வேலைத்திட்டங்கள் ஏதுமின்றிய சுயேட்சைகளிற்கு வாக்களிப்பதும் தமிழ் மக்களின்  அரசியல் விடுதலைக்கான பயணத்தை சீர்குலைக்கும் ஒன்றாகும்.

திம்புக் கோட்பாடுகளைப் புறமொதுக்கி தமிழ் மக்களின் அரசியல் வேணவாக்களிற்கு முற்றிலும் முரணான “இமயமலைப் பிரடகணம்” எனும் பெயரில் தமிழ் மக்களை அரசியல் சூழ்ச்சியொன்றினுள் தள்ளும் முயற்சியென்றும் இடம்பெறுகின்றதென்றும், அது சிறிலங்காவின் ஒற்றையாட்சி அரசியலமைப்பை ஏற்றுக் கொண்டு, 13ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தை தமிழ் மக்களுக்கான தீர்வாக ஆக்குவதற்கு முயற்சிப்பதோடு, தமிழ் மக்களின் இறைமை அரசியலை தனியே அடையாள அரசியலினுள் சுருக்குவதற்கான கபட முயற்சியென்றும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினர் கண்டனம் தெரிவித்தனர்.

https://www.virakesari.lk/article/196626

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

போருக்குப் பின்.... தமிழ் அரசியல் கட்சிகள் விட்ட பிழைகளால் தானே...
மக்கள் தென்னிலங்கை அரசியலை நாட வேண்டி வந்தது.

மக்கள் அதனை விரும்பி  ஏற்கவில்லை, மாறாக….  
தென்னிலங்கை அரசியலை நோக்கி தள்ளப் பட்டார்கள் என்பதே உண்மை.

நிலைமை கட்டுமீறி போனபின்பும்... தம்மை சுய பரிசோதனை செய்யத் தயார் இல்லாத தமிழ் அரசியல் தலைமைகளை  என்ன வென்று சொல்வது. தாமாக திருந்த மாட்டார்கள் எனும் போது... முதலில் பதவி ஆசை, கதிரை ஆசை பிடித்த சுயநல கும்பல்களை துடைத்து எறிய வேண்டும்.

Edited by தமிழ் சிறி
  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

திம்புக் கோட்பாட்டில் எந்தவித விட்டுக்கொடுபபையும் செய்யாத ஊழலற்ற தரப்பாக தமிழ்த் தேசிய இளம் வேட்பாளர்களைக் கொண்ட தரப்பாக தமிழ்த்தேசிய முன்ணணியே உள்ளது. அவர்களுக்கு அதிக ஆசனங்களைக் கொடுத்து பலமான தரப்பாக இம்முறை பாராளுமன்றத்திற்கு அனுப்பிவைப்போம். அவர்கள் பிழைவிட்டால் அடுத்த தேர்தலில் தண்டிப்போம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தேர்தலில் பொதுமக்கள் யாருக்கு வாக்களிப்பது| பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் வெளியிட்ட...

திரியோடு தொடர்புடைய காணொளி என்பதால் இணைத்துள்ளேன்.

நன்றி - யூரூப்

நட்பார்ந்த நன்றியுடன்
நொச்சி

  • Like 1
Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "மரணம் என்றால் உண்மையில் என்ன?" / பகுதி : 02     மரணம் மிக முக்கியமானது. தவிர்க்க முடியாதது. நிச்சயமானது. மனிதனிடம் மிகப் பெரிய அச்சத்தை விளைவிப்பது. மனிதன் மறக்க விரும்புவது, ஆனால் அவனுக்கு நிகழ்ந்து கொண்டிருப்பது. பிறந்த கணத்திலிருந்து பயணம் அதை நோக்கித்தான் நகர்கிறது. எதிர்காலத்தில், அடுத்த வினாடியில் எதுவெல்லாம் நடக்க வேண்டும் மென்று ஆசைப் படுகிறோமோ, திட்டமிடுகிறோமோ, உழைக்கிறோமோ, அவையெல்லாம் நடக்கலாம், நடக்காமல் போகலாம். ஆனால் நம்மைக் கேட்காமலேயே நமக்கு நிச்சயமாக நடக்கப்போவது மரணம் மட்டுமே! அது மட்டுமல்ல, அது எப்போது வரும், எப்படி வரும் என்பது கூட நமது அறிவிற்கு எட்டாததாகவே எப்போதும் இருக்கிறது.   2000 ஆம் ஆண்டில் புட்டபர்த்தியில் நடந்த ஒரு கூட்டத்தில் கடவுளின் அவதாரமாகவும் சித்தரித்துக் கொள்ளும் சாய்பாபா, "நான் 96 வயதில்தான் இந்த அவதாரத்தை முடித்துக் கொள்வேன்" என்று உறுதிபட ஆருடம் கூறினார். அதன் பின் பலமுறை அவர் ஆருடம் கூறி வந்துள்ளார். ஆயினும் அவரும் வெறும் மனிதப் பிறவிதான் என்பதை குறிக்கும் வகையில் 85 வயதிலேயே பல வார காலம் கடும் நோய்வாய்பட்டு, தீவிர சிகிச்சை பலனளிக்காமல், ஏப்ரல் 24 , 2011 இயற்கை எய்தினார். கடவுள் அவதாரம் எடுத்தவருக்கே தன் 'இறப்பு' அல்லது அவர் பாணியில் 'அவதாரத்தை முடித்துக் கொள்ளும் நாள்' தெரியவில்லை என்பது குறிப்பிடத் தக்கது. கடவுளின் அவதாரம் என சந்தேகத்திற்கு இடமின்றி நம்பிய அவர் ஏன் இந்த உலகை விட்டு மறையப்போகிறோம் என்பதை முன் கூட்டியே சரியாக கூற முடியவில்லை? மற்றும் வேடிக்கை என்னவென்றால், அவரது கை பட்டு மற்றவரின் நோய் தீர்க்க தெரிந்த அவருக்கு அவரது உடல்நலம் பேண நவீன மருத்துவ வசதி தான் வேண்டியிருந்தது என்பதே ? எனவே, உண்மையில் இறப்பு என்றால் என்ன?   மூச்சு நிற்பது இறப்பா ? இல்லை, இதயத் துடிப்பு நிற்பது இறப்பா ? இல்லை, மூளை சிந்திக்காமல் நிற்பது இறப்பா ? இல்லை, இரத்த ஓட்டம் நிற்பது இறப்பா ? இல்லை, மேற்கூறியவற்றில் ஏதாவது, ஒன்றுக்கு மேற்பட்டவை நிற்பது இறப்பா ? அல்லது எல்லாமே நிற்பது இறப்பா ? இல்லை, இவற்றை விட வேறு பல காரணங்கள் இருக்கின்றனவா? பொதுவாக இதய‌ம் துடி‌ப்பது ‌‌நி‌ன்று‌வி‌ட்டா‌ல் அதை, சாதாரண மக்களாகிய‌ நாம், மரண‌‌ம் எ‌ன்று கு‌றி‌ப்‌பிடுவோ‌ம். ஆனா‌ல் மருத்துவ உலக‌ம் எ‌ன்ன சொ‌ல்‌கிறது தெ‌ரியுமா?   மருத்துவ அறிவியலின் படி, மரணம் என்பது உடலிலுள்ள உயிர்ச் செல்களின் இயக்கமின்மை என்று வரையறுக்கலாம். முக்கிய உறுப்புக்கள் இயக்கமின்றி செயலற்றுப் போவதையே நாம் மரணம் என்று கூறுகின்றோம். மருத்துவ அறிவியலில் மரணத்தை இரு வகையாக விவரிக்கின்றார்கள். அதை நாம் "மருத்துவச் சாவு" (Cardiac death / Clinical death) என்றும், "மூளைச் சாவு"(brain death / Cerebral death) என்றும் குறிப்பிடுகின்றோம்.   மருத்துவச் சாவுக்கும் [கி‌ளி‌னி‌க்க‌ல் டெ‌த்] மூளைச் சாவுக்கும் [செ‌ரிபர‌ல் டெ‌த்] உள்ள வித்தியாசம் மிக மிக சிறிதே. உண்மையில், ஒரு சில முக்கியமான, தீர்மானிக்கிற நிமிடங்களே இவை இரண்டுக்கும் இடையில் உள்ள இடைவெளிகள் ஆகும். மருத்துவச் சாவு என்பது பல்வேறு காரணங்களினால் இதயம் இயங்காது நின்று போவதாகும். அப்பொழுது சுவாசித்தலும் இரத்த ஓட்டமும் நின்றுவிடுகின்றன. இதயம் நின்று போய்விட்டாலும், ஒரு சில நிமிடங்கள் வரை இந்த மூளை தொடர்ந்து இயக்கிக் கொண்டிருக்கிறது. இக் கால வரம்பிற்குப் பிறகு, ஆக்ஸிஜன் [பிராணவாயு] பற்றாக் குறையால் மூளையும் இயக்கமற்று செயலிழந்து விடுகிறது. இதையே மூளைச் சாவு என்கிறோம். மூளைச் சாவே ஒரு மனிதனின் முடிவான சாவாகும். ஏனெனில் இதற்குப் பிறகு உயிரை மீட்டுப் பெறவே முடியாது. இ‌ப்போது தா‌ன் ஒருவ‌ர் உ‌ண்மை‌யிலேயே மரண‌ம் அடை‌ந்ததாக கருத‌ப்படு‌கிறது. எனவே, மூளையு‌ம், இதயமு‌ம் த‌ங்களது இய‌க்க‌த்தை ‌நிறு‌த்துவதே மரணமாகு‌ம்.   சராசரியாக ஒரு மனிதனின் ஆயுள் காலம் 30,000 நாளாகும். நீங்கள் அதிர்ஷ்டசாலியாக இருந்தால் 40,000 நாள் வாழமுடியும். எனினும் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் இது சுமார் சராசரியாக 7000 நாட்களே. அதாவது 20 வருடங்களிலும் குறைவே என்பது குறிப்பிடத் தக்கது. மூப்படைதல் ஒரு உயிர் வேதியியல் செயன்முறையாகும் [biochemical process].அதனால் மனிதன் அதனை குறுக்கிடு செய்து எப்படி அதை இன்னும் தாமதமாக்கலாம் என்பதை வருங்காலத்தில் அறிவான் என நாம் நம்பலாம்.   பிரித்தானிக்கா கலைக்களஞ்சியத்தின் [Encyclopedia Britannica] முதல் பதிப்பில் இறப்பு என்பது "உயர் உடலில் இருந்து பிரிவது" என சமய நம்பிக்கையை பிரதிபலிக்கிறது. மனித உடலைப் பற்றிய எமது இன்றைய மேலதிக அறிவால், பதினைந்து பதிப்பின் பின், அது முப்பது தடவை நீளமாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. வெளி அடையாளங்களான மூச்சு விடுதல், இதய துடிப்பு போன்றவை நின்றாலும் அல்லது இல்லாமல் போனாலும், இன்னும் அந்த நபர் சாகாமல் இருபதற்கு சந்தர்ப்பம் உண்டு என இப்ப மனிதர்கள் உணர்ந்து கொண்டார்கள். செயற்கை இதயம் [mechanical heart], சுவாசிபதற்கான கருவி [breathing aids] மற்றும் நரம்பு வழி உணவு செலுத்துதல் [intravenous feedings] போன்றவற்றால், மருத்துவர் ஒருவர் நோயாளியை, அவர் ஆழமான எல்லா உணர்ச்சியும் இழந்த முழு மயக்க நிலையில் [deep coma] இருந்தாலும், அவரை பல மாதங்களுக்கோ அல்லது வருடங்களுக்கோ உயிர் உடன் வைத்திருக்க முடியும் என்பதால். இன்று, இறப்பு என்ற சொல்லின் சொற்பொருள் விளக்கத்திற்கு மேலும் சில சேர்க்க வேண்டி உள்ளன. எனவே, இவை எல்லாவற்றையும் கருத்தில் கொண்டு மரணம் என்பதற்கு எம்மால் ஒரு விளக்கம் கட்டாயம் இன்று கொடுக்க முடியும். ஆனால், உண்மையான கேள்வி என்னவென்றால், இறந்த பின் எமக்கு என்ன நடக்கிறது? மற்றும் எம்மை விட்டு பிரிந்த அன்பு உயிர்களை, நாம் மீண்டும் காண, சந்திக்க முடியுமா? உதாரணமாக, ஆன்மீக நூலான பகவத் கீதை என்ன கூறுகிறது என்பதை பார்ப்போம்.     देहिनोऽस्मिन्यथा देहे कौमारं यौवनं जरा॥ तथा देहान्तरप्राप्तिर्धीरस्तत्र न मुह्यति॥१३॥ dehino ’smin yathā dehe kaumāraṁ yauvanaṁ jarā tathā dehāntara-prāptir dhīras tatra na muhyati   "ஆத்மாவிற்கு இவ்வுடலில் எங்ஙனம் குழந்தைப் பருவமும், இளமை பருவமும், முதுமை பருவமும் தோன்றுகின்றனவோ, அங்ஙனமே, ஆத்மாவிற்கு மற்றொரு உடல் பிறப்பும் இந்த உடல் இறந்த பின் தோன்றுகிறது. எனவே, தீரன் [வீரன்] அதில் கலங்கமாட்டான்" என்று பகவத் கீதை 2.13 அறிவுரை கூறுகிறது. அதாவது, உடல் எப்படி மாறி மாறி வந்தாலும், இந்த மூன்று நிலைகளிலும் எவ்விதம் ஆத்மா மாறாததாக உள்ளதோ, அவ்விதமே உடல் மரணித்து வேறு உடல் கிடைக்கும் போதும் அது எவ்வித மாற்றாத்தையும் அடைவதில்லை என்கிறது.     जातस्य हि ध्रुवो मृत्युर्ध्रुवं जन्म मृतस्य च। तस्मादपरिहार्येऽर्थे न त्वं शोचितुमर्हसि॥२७॥ jātasya hi dhruvo mṛityur dhruvaṁ janma mṛitasya cha tasmād aparihārye ’rthe na tvaṁ śhochitum arhasi   "பிறந்தவன் எவனுக்கும் மரணம் நிச்சயம், மரண மடைந்தவன் மீண்டும் பிறப்பதும் நிச்சயமே. எனவே, தவிர்க்க முடியாத உன் கடமைகளைச் செயலாற்றுவதில், நீ கவலைப்படக் கூடாது." என்று பகவத் கீதை 2.27 மீண்டும் அறிவுரை கூறுகிறது. ஆகவே, இறப்பு ஒரு துக்கம் தரும் நிகழ்வு அல்ல. இது எமது இந்த உடலின் பயணத்தின் முடிவு ஆகும். இது ஒரு மாயை, அவ்வளவுதான்.   பொதுவாக, மரணத்தில் இருந்து எவருமே தப்ப முடியாது என்பதை எல்லா சமயங்களும் ஏற்று கொண்டதுடன் அதற்கு பதிலாக நல்ல மாற்று வழியாக மறுமை (இறப்புக்கு பின் உள்ள வாழ்க்கை / afterlife) நம்பிக்கையை கொடுத்துள்ளது. இந்த எண்ணம், தமது அன்புக்கு உரியவர்களை இழந்த பலருக்கும், மரணத்தை எதிர்பார்த்து இருப்பவர்களுக்கும் ஒரு ஆறுதல் கொடுப்பதுடன், ஆனால் மற்றவர்களுக்கு: "ஏன், எதற்கு மரணம் இருக்கிறது?", "எல்லாம் வல்ல கடவுளால் மரணத்தை இல்லாமல் செய்ய முடியாதா?", "எல்லா உயிர்களும் இயற்கையாக ஏன் சதாகாலமும் வாழமுடியாது?" போன்ற கேள்விகளுடன் ஆச்சரியமடைய வைக்கிறது.     [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]      
    • உண்மையில் சனாதிபதியின் பயிற்சிப்பட்டறை அப்படி. எப்படி எதிரிகளைச் சாய்த்து ஓரங்கட்டுவது என்பதற்கான வியூகங்கள் வியக்க வைக்கிறது. எல்லாம் 14ஆம் திகதிவரை மட்டுமே. அதன்பின்னர் அரசியலில் இதெல்லாம் சாதாரணமென்று போட்டுவிடுவார்.  நட்பார்ந்த நன்றியுடன் நொச்சி
    • நீங்கள் கேட்ட காணொளி இந்தத் திரியிலே உள்ளதா? நட்பார்ந்த நன்றியுடன் நொச்சி
    • அனுரவின் இப்படியான வெருட்டல்கள் இல்லாவிட்டால்…. இவர்கள், பெரிய கொம்பு முழைத்த ஆட்கள் மாதிரி நாட்டாண்மை செய்து கொண்டு இருப்பார்கள். இப்ப பெட்டிப் பாம்பாக அடங்கி இருக்கின்றார்கள். 🤣
  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
      • 1 reply
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.