Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

நெறியாளர் பார்த்துப் பல்லுப்படாமல் கேட்கும் கேள்விகளுக்கு சுமத்திரன் தனது சட்டத்தனமான பதில்களைக் கொடுத்து தன்னை நியாயப்படுத்துகிறார். ஆனால் இநதக் காணொளியின் கீழே உள்ள பின்னூட்டங்கள்  எதுவும சுமத்திரனுக்குத் சாதகமாக இல்லை. 

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

இவர் தமிழ் மக்களிடம் கல்லெறி வாங்கி அடிபட்டு சாகுமுன் அவராகவே அரசியலில் இருந்து விலகி செல்வது அவருக்கு நல்லது .

இந்த காணொளியை பார்த்து நேர விரயம் செய்ய மனம் விரும்பவில்லை .

  • கருத்துக்கள உறவுகள்
Posted
43 minutes ago, பெருமாள் said:

இந்த காணொளியை பார்த்து நேர விரயம் செய்ய மனம் விரும்பவில்லை .

ஏன்  மூன்றாம் தரப்புச் செய்திகளைத்தான் நம்புவீர்களா? 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

சுமந்தரனின்  இந்தக் காணொளிக்கு... வாசகர் கொடுத்த பின்னூட்டங்கள்.
ஒரு பானை சோற்றுக்கு... ஒரு சோறு பதம் என்பார்கள்.
ஆனபடியால்.... மேலதிகமாக சுமந்திரனைப்  பற்றி சொல்ல எதுவும் இல்லை.

பிரித்தது சுமந்திரனேதான்.எனிமேல் உள்ள காலங்களில் சுமந்திரனை வெளியேற்றி நல்ல ஒரு கட்சியாக வலம் வரும் என நினைக்கிறேன்.
@varansinna807

கரு நாகத்தை விட அதிகம் நஞ்சு கொண்டவன் இந்த சுமந்திரன்.
@airportlimo3582

யாழ்மாவட்டமக்கள் இம்முறை தக்கபாடம் கற்பிப்பார்கள்
@ponniahsanthakumar9428

நேரத்தை வீணாக்கும் பேட்டி
@lfcmanwearemighty1495

வணக்கம் நெறியாளர் அவர்களே முதற்கண் சமந்திரனிடம் பேட்டி எடுத்தற்கு நன்றி 
1 நீங்கள் கேட்ட கேள்விக்கான  பதிலை சுமந்திரன் சொல்லாமல் வேறுவிதமாக  பதில் சொல்லி தன்னை நல்ல வராக காட்ட முயல்கின்றார்.
2 நீங்கள் கேட்ட கேள்விக்கான பதிலை சு -ம  வழங்காது விட்டால் அதனை சுட்டிக்காட்ட வேண்டும் . அதைவிட அவரை தொடர்ந்து பேச அனுமதிக்க விட கூடாது.
3 இந்த பேட்டியை பார்க்கும் புதிய கேள்விகள் கேட்கப்பட்ட இல்லை 
4 இன்னும் நிறைய  காத்திரமான கேள்விகளை கேட்டு இருகலாம்
5.இந்த பேட்டியை பார்க்கும் போது சு -ம  தெரிவு செய்த கேள்விகளை தான் உங்களுடைய கேள்விகளாக கேட்டது   போல  இருந்தது .
6 ஒரு நெறியாளர் என்றால் பேட்டியளித்தவரிடம் எந்தவிதமான  சமரசம் இல்லாமல் உங்களுக்கு சரி  நினைத்ததை கேட்ட வேண்டும்.🎉🎉🎉🎉
@umepathyvalu926

இவர்களின் தூரநோக்கு அரசியல் சிந்தனை இல்லாமல் போனதால் இன்று திரிகோணமலை அம்பாறை போன்ற இடங்களில் பிரதிநிதித்துவம் பறிபோகும் நிலையில் உள்ளது.
@abicreations2130

இவ்வளவு காலமும் கிழித்தது கானும் நடையை கட்டு ராசா..
@thambysiva1217

புடுங்கின ஆணி எல்லாம் காணும் ,யாருக்கு கம்பு சுத்துறிங்க.
@louiesbasti4606

தம்பி பூவன் நீர் பெரிய வீராப்பு கதைச்சிட்டு சுமந்திரனை நேரில் கண்டதும் பம்மிற மாதிரி இருக்கே? ஏன் மக்களின் கேள்விகளை நாகரீகமான முறையில் கேட்க என்ன தயக்கம் இதைப்பார்த்தால் நேர்காணல் நேர்காணல்மாதிரி தெரியவில்லை சுமந்திரனுக்கு விளம்பரம் செய்தமாதிரி இருக்கு!!
@selliahsooriyapragasam3325

சுமந்திரன் ஐயா அவர்களே ஏதோ உங்களின் முகத்தில் பயம் தெரிகிறது.. எதுவாக இருந்தாலும் நீங்கள் அரசியலில் நன்றாக கதைக்கக் கூடியவர் தான் ...ஆனால் இந்தத் தேர்தலில் வெல்லக் கூடியவர் அல்ல...
@Thegodisbes

அது என்ன திருகோணமலையில் சேர்ந்து போட்டியிட முடியும் மற்ற மாவட்டம் மட்டும் முடியாது எல்லாம் பதவியை தக்க வைப்பது தான் திட்டம் இவர்களை எல்லாம் நம்பவே கூடாது என்பதே உண்மை 💯💯💯💯
@Piratheep1985

கேள்வியும் பதிலும் இழுவையாக இருக்கு இருவரின் வீராப்பும் எங்கே போனது என்று மக்கள் கண்டுபிடித்து விட்டார்கள்.
@keethanchalijegarajah5278

அண்ணா மன்னிக்கவும் உங்கள் கேள்வியில் தலம்பல் தெரிகிறது அவரை நீங்கள்தான் கேள்வி கேட்க வேண்டும். அவரல்ல இவர் உங்கள் கேள்விகளுக்கு சரியான பதிலளிக்கவில்லை.இது நேரத்தை வீணடித்த பேட்டி
@thiyathiya4435

தம்பி பூவன், ஏன் பதுங்கி பதுங்கி பயந்து கேள்விகளை  கேட்கின்றீர்கள்?
கெட்டவனிடம் பேசும் போது இன்னும் துணிவாக கேள்விகளை கேட்க வேண்டும். இல்லாது போனால் ஊடக  துறையும் ஒரு நாள் அழிந்து போகும். இவ்வளவுதான் உங்கள் வீராப்பு?
@sutharsundar2192

கூட்டாச்சியில் ஒன்றும் கிழிக்க முடியல இனிப்போய் கிழிப்பிகள் என்பது உருட்டு. 
நீர் ஆர் தலைவருக்கு கட்டளை இட உமது கட்சிப் பதவி என்ன ??? த. கட்சியில் பொதுக்குழு கூடி முடிவு எடுக்க எடுக்க முடியாத???? எல்லா தீர்மானங்களையும் மத்திய குழுவும் நீரும் தான் எடுப்பீர்கள்???
@sivakumaranutharsan2301

  • Like 1
  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
35 minutes ago, தமிழ் சிறி said:

பின்னூட்டங்கள், பெயர்கள் இலக்கங்கள் எல்லாம் ஏறக்குறைய ஒரேமாதிரி இருக்கிறது.....🤣

(பெருமாளும் பேட்டியைக் கேட்கவில்லை, சிறியரும் பேட்டியைப் பார்க்கவில்லை,.....ஆனால் பின்னூட்டங்களில் பின்னிப் பெடலெடுக்கிறீர்கள்,...🤣)

Edited by Kapithan
  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, தமிழ் சிறி said:

பிரித்தது சுமந்திரனேதான்.எனிமேல் உள்ள காலங்களில் சுமந்திரனை வெளியேற்றி நல்ல ஒரு கட்சியாக வலம் வரும் என நினைக்கிறேன்.

சுமந்திரனின் கைக்குள் போய்விட்டது.

யார்யாரை வெளியேற்ற வேண்டும் என்பதை சுமந்திரனே தீர்மானிக்க வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

முடிந்தால்; தமிழ்தேசியக்கூட்டணியை விட்டு வெளியேறி வேறு கட்சியில் போட்டியிட்டு வென்று காட்டட்டும் என்று சவால் விட்டு விக்கினேஸ்வரனை விரட்டியது யார்? அவர் பதவி விலகவேண்டுமென வெளிநாடுகளில் பிரச்சாரம் செய்தது யார்? அவர் சாராயக்கடைக்கு அனுமதி பெற்ற போது ரணிலுக்கு பின்னால சுற்றிய தனிமையில் பேசிய இவர் ஏன் அதை தடுக்கவில்லை? சிறீதரனை பதவியை ஏற்கச்சொல்ல இவர் யார்? கட்சியின் தலைவரா இவர்? அப்போ ஏன் தமிழரசுக்கட்சி நீதிமன்றத்திற்கு போனது? இவர் கட்சியை விட்டு வெளியேறியிருந்தால் வீடு அமைதியாக இருந்திருக்கும். எல்லோரையும் விரட்டி விட்டு தான் ஆட்சி செய்கிறார். வடக்கின் வசந்தம், தனது சிபாரிசில் எடுத்த திட்டம், ஆரம்பிக்கப்பட்ட திட்டம், என்று சொல்லிக்கொண்டு போனார். இவரோ, நான் அரசியல்  திட்ட வரைபை செய்தவன், ஆகவே நான் பாராளுமன்றம் போக வேண்டுமாம். திட்ட வரைபை செய்தேன் என்று இவர் சொல்கிறாரே தவிர வேறு யாரும் சொல்லவில்லை. அதோடு முன்னைய அரசாங்கம் செய்ததோ இல்லையோ அதற்கு அனுரா அரசாங்கம் முக்கியத்துவம் கொடுக்கப்போவதுமில்லை. அவர்கள் என்ன செய்ய வேண்டுமென நினைக்கிறார்களோ அதை தமது கட்சியுடன் பேசி ஏனைய சிங்கள கட்சிகளும் அனுமதித்தால் மாத்திரமே நடைபெறும். இவர் அரசியலுக்கு வந்து இவ்வளவு காலமும் ஒட்டியிருந்த அரசாங்கங்களால் செய்விக்க முடியவில்லை, இனி அனுராவை கொண்டு செய்விக்கப்போறாராம். அதற்கு இவர் பாராளுமன்றம் போக வேண்டுமே? அப்படித்தான் போனாலும் இவரால் ஒன்றும் செய்ய முடியாது. முயல் பிடிக்கிறதின் மூஞ்சியை பாத்தாலே புரியுமாம். இவர் முகத்தில் கலக்கம் தெரிகிறது, வலிந்து சிரிக்க முயற்சிக்கிறார், அத்தனை வஞ்சகம். "அகத்தின் அழகு முகத்திற் தெரியுது." 

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, Kapithan said:

பின்னூட்டங்கள், பெயர்கள் இலக்கங்கள் எல்லாம் ஏறக்குறைய ஒரேமாதிரி இருக்கிறது.....🤣

நல்ல கண். வைத்தியரைப். கூடிய விரைவில் பாருங்கள்  🤣🤣

அதுவரை கருத்துகள் பதிய வேண்டாம் 

குறிப்பு,....வைத்தியரிடம் பெற்றுக் கொண்ட சான்றிதழ்களை யாழில் இணைக்கவும். 🙏

  • Haha 3
  • கருத்துக்கள உறவுகள்
Posted

திட்டுபவர்கள் இதையும் பார்த்து விடவும்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
54 minutes ago, பகிடி said:

திட்டுபவர்கள் இதையும் பார்த்து விடவும்.

இணைப்புக்கு நன்றி பகிடி.  சந்திரிகா காலத்தில் உருவாகிய  தீர்வு திட்டத்துடன் கூடிய அரசியலமைப்பு மாற்றம் பாலாளுமன்றத்துக்கு வந்த போது   2/3 பெரும்பான்மைக்கு  7 வாக்குகளே தேவையான நிலையில் அந்த ஏழு வாக்குகள் இருந்தும் உயிர்ப்பயத்தில்  தமிழர் விடுதலை கூட்டணி அதற்கு ஆதரவு கொடுக்காமல் விட்டது மாபெரும் தவறு.  அந்த தீர்வை உருவாக்கிய நீலன் திருச்செல்வத்தையும்  படுகொலை செய்து இன்று ஒன்று மில்லாமல் நிற்கிறது மோட்டு  தமிழினம்.  

 வந்து மைனஸ் புள்ளியை இட்டு செல்ல விசுகுவை அன்பாக அழைக்கிறேன். வருக வருக. 

  • Like 1
  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
5 hours ago, island said:

தமிழினம்

தமிழினம்  என்பது  அனைத்து தமிழர்களையும். குறிக்கும்  நீங்களும் தமிழர் என்றால் உங்களையும். குறிக்கும்  

ஒரு தமிழன் தன்னை மோடன்.  என்று அறிவான் எனில் அவனுடைய கருத்துகள்  மோட்டு கருத்துகளே ஆகும் 

அதில் மிகச்சிறந்த மோட்டுக் கருத்து  சிங்களவன். தீர்வு தருவான்

தமிழனால். தான் தரப்படவில்லை என்பது  இரண்டாவது மிகச்சிறந்த மோட்டு கருத்து  தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் பாராளுமன்றம் போய் தீர்வு எடுத்து தருவார்கள் என்று நம்புவது  🙏

  • கருத்துக்கள உறவுகள்
Posted

தமிழ் மக்கள் பிரச்சனையின் தீர்வு முயற்சிக்கு இரு வகை சிந்தனைகள் உண்டு

1)இரத்தம் சிந்தித் தான் விடுதலை என்பது ஒரு சிந்தனை 

2)சிங்கள மக்களோடு இணைந்து ஒரு தீர்வுக்கு இரத்தம் சிந்தாமல் வர முடியும் என்பது இன்னொரு வகையான சிந்தனை 

இப்போது சுமத்திரனை எதிர்பவர்கள் இதில் எந்த நிலைப்பாட்டில் இருக்கிறார்கள்?

இரத்தம் சிந்தி போராடுவது தான் முதல் நிலைப்பாடு என்றால் அதில் ஒரு நேர்மை உண்டு. மதிக்கவேண்டும். ஆனால் அப்படி ஒரு சூழல் இல்லாத பொழுது இரண்டாவது சிந்தனை தான் சரி என்றாகும் பொழுது அப்பொழுதும் சுமந்திரன் வெறுப்பு என்பதற்கு காரணம் பின்வருமாறு

1) தமிழ் இனத்தை இப்படியே ஒரு பதை பதைப்பில் வைத்துக்கொண்டு பெரிய கனவுகளை காண சொல்லி நலிவடைந்த இனமாக எம்மை மாற்றுவது. 

2) புலிகள் பெயரில் கொள்ளை அடித்த பணத்தை மக்கள் கேட்டு விடக்கூடாது என்ற பயம். 

3) சரியாக பேசி விட்டால் நண்பகளை இழக்க வேண்டும் என்ற பயம்.அதனால் நாலு பேர் சொல்வதை வழிமொழிகிறேன் கூட்டம் 

4) புலிகள், மாவீரர்கள் அவர்களின் தியாகம் ஆகியவற்றில் உள்ள பெரும் மதிப்பு. இவர்கள் மாவீரர் குடும்பங்களை சேர்ந்தவர்களாகவும் இருக்கலாம். இவர்கள் நிலை புரிந்து கொள்ளத் தக்கது. ஆனாலும் காலம் இவர்களின் சிந்தனையை மாற்றி விடும்.

இது புதிய அரசியல் அமைப்பு சாசன மாற்றத்தில் திரு சம்பந்தன் சுமந்திரன் ஆகியோரோடு சேர்த்து இயங்கிய திரு ஜெயம்பதி விக்ரமரட்ண வின் செவ்வி. 

சிங்கள மக்களிலும் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் மிதவாதிகள் உண்டு. 

 நம்பிக்கையோடு பயணம் செய்தால் நல்ல வளமான இலங்கையை கட்டி எழுப்பலாம். 

  • Like 2
  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
24 minutes ago, பகிடி said:

🤣😁

2) ம் 3) ம் பகுதியினர் 4) வகைக்குள் தங்களை ஒழித்துக் கொள்வார்கள். 

🤣

  • Haha 1
Posted
Quote

இப்போது சுமத்திரனை எதிர்பவர்கள் இதில் எந்த நிலைப்பாட்டில் இருக்கிறார்கள்?

கட்சிக்குள் தனக்கு  எதிரானவர்களை நாசுக்காகவும், நேரடியாகவும் வெளியேற்றி தனது வழிக்கு ஆதரவானவர்களை வைத்து கட்சி நடாத்துவது எந்த வகை நியாயம் என நீங்கள் நினைக்கிறீர்கள்??
கட்சியில் இருந்து நீங்கியவர்களின் பட்டியல் கட்சியில் இருப்பவர்களை விட அதிகம் என்பதே இதற்கு சாட்சி.இது சம்பந்தர் காலத்தில்  தொடங்கிய போதும் இப்போதும் தொடர்கிறதே? ஏன்?
தந்தை செல்வா காலத்தில் அவர் கட்சியை ஒருங்கிணைத்தது போல் ஏன் சம்பந்தராலோ அல்லது சுமந்திரன்  போன்றோரால் முடியவில்லை?? 
இதை தாண்டாமல் சிங்களவரையோ, இந்தியனையோ, மேற்கு நாடுகளையோ வெல்வதை கனவிலும் நினைக்காதீர்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
47 minutes ago, பகிடி said:

இரண்டாவது சிந்தனை தான் சரி என்றாகும் பொழுது

அதனை ஏன் செய்யவில்லை???    காரணம் 

சுமத்திரனால். செய்ய முடியாது   

எவராலும் செய்ய முடியாது   ஆனால்  இது தான் வழி    

இப்படி தான் செய்யலாம்   அதற்கு பாராளுமன்றம் போக வேண்டும்   எனவே… உங்கள் வாக்குகளை   எனக்கு போடுங்கள்      என்று  ஒவ்வொரு தேர்தலிலும்   புலுடா  விட்டு  உயிர் உள்ளவரை பாராளுமன்றம் போவது    இப்படியே வாழ்க்கையை நடத்துவது  ஒவ்வொரு முறையும் பாராளுமன்றம் போய் என்ன செய்கிறாய் என்று தட்டி கேட்டால்  ...சமத்திரனை ஏன் வெறுக்கிறார்கள்  என ஆராய்ச்சி வேறு நடத்தப்படுகிறது?? உண்மையில் சுமததிரனை அல்லது வேறு பாராளுமன்ற உறுப்பினர்களை   வெறுக்கவில்லை  

எங்களை தமிழ் மக்களை  இந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் திட்டமிட்டவகையில் ஏமாற்றுவதை வெறுக்கிறோம்.  ஒருமுறை அல்லது 

இரண்டு முறை   பாராளுமன்றம் போய் செய்ய முடியவில்லை என்றால்  மீண்டும் மீண்டும்  பாராளுமன்றம் போகதீர்கள்.  மற்றவருக்கு சந்தர்ப்பம் வழங்குங்கள்   அவர்கள் முயன்று பார்க்கட்டும்.   அவையாலும். ஏலாது விடில்  மீண்டும் புதியவர்களை அனுப்புங்கள்.  

சுமத்திரன்.  போன்றோர் பாராளுமன்றம் போவதையோ   வாழ்க்கையாக.  கொண்டிருக்கவேண்டும்.  ?? இதை தான் வெறுக்கிறோம்.  மாறாக 

சுமத்திரன்.  போன்ற தனிமனிதர்களை இல்லை  🙏🤣🙏

  • Like 1
  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
36 minutes ago, nunavilan said:

கட்சிக்குள் தனக்கு  எதிரானவர்களை நாசுக்காகவும், நேரடியாகவும் வெளியேற்றி தனது வழிக்கு ஆதரவானவர்களை வைத்து கட்சி நடாத்துவது எந்த வகை நியாயம் என நீங்கள் நினைக்கிறீர்கள்??
கட்சியில் இருந்து நீங்கியவர்களின் பட்டியல் கட்சியில் இருப்பவர்களை விட அதிகம் என்பதே இதற்கு சாட்சி.இது சம்பந்தர் காலத்தில்  தொடங்கிய போதும் இப்போதும் தொடர்கிறதே? ஏன்?
தந்தை செல்வா காலத்தில் அவர் கட்சியை ஒருங்கிணைத்தது போல் ஏன் சம்பந்தராலோ அல்லது சுமந்திரன்  போன்றோரால் முடியவில்லை?? 
இதை தாண்டாமல் சிங்களவரையோ, இந்தியனையோ, மேற்கு நாடுகளையோ வெல்வதை கனவிலும் நினைக்காதீர்கள்.

75% சிங்கள மக்களோடு சேர்ந்து வாழும் தீர்வு என்று வரும்பொழுது அங்கு விட்டுக்கொடுப்புக்கள் இரண்டு பக்கமும் தேவைப்படுகிறது. சிங்கள இனவாதிகளின் ஆதிக்கம் குறைக்கப்பட்டு அங்கு சிங்கள மக்களில் உள்ள மிதவாதிகள் அரசை அமைக்கும் நிலை வரும் பொழுது இங்கே எமது பக்கத்தில் சீமான் வகையறாக்களை, இந்திய அருவருடிகளை, புலிகளின் பணத்தை கொள்ளையடித்த கூட்டத்தின் சொல் கேட்டு நடக்கும் ஆட்களை வைத்துக்கொண்டு ஒரு தீர்வு நோக்கி நகர முடியாது. அதற்கு அப்படிப்பட்டவர்களை மண்டையில் போடவும் கூடாது. ஆகவே தான் மெதுவாக கட்சியில் இருந்ததை அகற்றப்பட வேண்டியவர்கள் ஆகின்றார்கள். 

16 minutes ago, Kandiah57 said:

ஒருமுறை அல்லது 

இரண்டு முறை   பாராளுமன்றம் போய் செய்ய முடியவில்லை என்றால்  மீண்டும் மீண்டும்  பாராளுமன்றம் போகதீர்கள்.

நீங்கள் சொல்வது சரிதான், ஆனால் அரசியல் அமைப்பு சீர்திருத்தங்கள், தீர்வு என்று வரும் பொழுது குதிரை கஜேந்திரன்கள் , மருத்துவம் மட்டுமே படித்த சட்ட நுணுக்கங்கள் தெரியாதவர்கள், பள்ளிக்கூட அதிபர்கள், முன்னாள் கொலையாளிகளை எல்லாம் அனுப்பலாமா? 

இதே பதிலை நீங்கள் செல்வம் அடைக்கலன்நாதனுக்கும், விக்கிக்கும், கஜேந்திர குமார் பொன்னம்பலதுக்கும் சொல்வீர்கள் என்று நம்புகிறேன்.

Posted

இந்த தேர்தல் முடிந்து அடுத்த தேர்தலுக்கு வந்து  அப்படி செய்வோம் இப்படி  செய்வோம் எனும் ஆட் கள் தான் எம்மக்களுக்கு தேவை என்கிறீர்கள்.

கடந்த 15 வருடத்தில் சுமந்திரனின் சாதனைகள் எவை?

5 minutes ago, பகிடி said:

சீமான் வகையறாக்களை, இந்திய அருவருடிகளை, புலிகளின் பணத்தை கொள்ளையடித்த கூட்டத்தின் சொல் கேட்டு நடக்கும் ஆட்களை வைத்துக்கொண்டு ஒரு தீர்வு நோக்கி நகர முடியாது. அதற்கு அப்படிப்பட்டவர்களை மண்டையில் போடவும் கூடாது. ஆகவே தான் மெதுவாக கட்சியில் இருந்ததை அகற்றப்பட வேண்டியவர்கள் ஆகின்றார்கள்.

ஓகோ. தற்போது கட்சியில் உள்ளவர்கள் சொக்க தங்கங்கள். அப்படித்தானே??

இதனை எப்படி மக்கள் அறியாமல் ஏனைய கட்சிகளின் உறுப்பினர்கள் பலரையும் பாராளுமன்றம் அனுப்பி உள்ளார்களே. அப்போ மக்கள் மூடர்களா??

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 minute ago, nunavilan said:

இந்த தேர்தல் முடிந்து அடுத்த தேர்தலுக்கு வந்து  அப்படி செய்வோம் இப்படி  செய்வோம் எனும் ஆட் கள் தான் எம்மக்களுக்கு தேவை என்கிறீர்கள் 

நான் அப்படி எங்கும் சொல்லவில்லை @nunavilan. நீங்கள் ஏன் அப்படி விளங்கிக் கொண்டீர்கள் என்று தெரியவில்லை. நான் சொல்ல வந்தது சட்ட நுணுக்கம் அறிந்தவர்கள் தீர்வு கிடைக்கும் வரைக்கும் பாராளுமன்றம் செல்லட்டும் என்பது தான். 

தவிர திரு சம்பந்தன் , நீலன், சுமந்திரன் ஆகியோருக்கு வழக்கறிஞர் தொழில் வருமானமே அதிகம். வேறு வழியின்றி அரசியலுக்கு இவர்கள் வரவில்லை. 

7 minutes ago, nunavilan said:

ஓகோ. தற்போது கட்சியில் உள்ளவர்கள் சொக்க தங்கங்கள். அப்படித்தானே??

சரி இப்பொழுது கூட்டமைப்பு சார்பில் போட்டி இடும் எந்த நபர் பிரச்சனைக்கு உரியவர்? கந்தையா பாஸ்கரன் முதலாளியாக இருக்கும் ஊடகங்கள் சொல்வதை மட்டுமே கேட்டால் எப்படி? 

9 minutes ago, nunavilan said:

அப்போ மக்கள் மூடர்களா??

ஆமாம், மக்கள் மூடர்கள் ஆக்கப் படுகின்றனர். உணர்ச்சிவசப்படுத்தலை ஊடகங்கள் திருப்ப திரும்ப செய்வதால் மக்கள் முடிவுகளை எடுக்கும் பொழுது உணர்ச்சி தூண்டுதலால் எடுக்கின்றார்களே ஒழிய தீர சிந்தித்து நிதானமாக எடுப்பதில்லை அல்லது எடுக்க அனுமதிக்கப் படுவதில்லை.

Posted

நீங்கள் பாராளமன்றத்துக்கு தெரிவுசெய்யப்படுமிடத்து அநுரக்குமாரவின் கட்சி பெரும்பான்மை பெற்று ஆட்சியளிக்கும் என்றால், நீங்கள் எவ்வாறு அவர்களுடன் பயணிப்பீர்கள்? சிறப்பாக தமிழ் மக்களின் உரிமைசார் விடயங்களை எப்படி பெற்றுக்கொள்ள முயற்சிப்பீர்கள்? என்ற கேள்விக்கு இலங்கை தமிழரசுக்கட்சியின் வேட்பாளர் திரு. சுமந்திரன் கூறிய பதில்

https://www.facebook.com/watch?v=953980420084192

எப்படி சஜித்தை ஆதரித்து இருப்பார்??

  • கருத்துக்கள உறவுகள்
Posted
6 hours ago, பகிடி said:

கந்தையா பாஸ்கரன் முதலாளியாக இருக்கும் ஊடகங்கள் சொல்வதை மட்டுமே கேட்டால் எப்படி? 

large.IMG_7356.jpeg.70478cb4789012bce173

  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
8 hours ago, பகிடி said:

இதே பதிலை நீங்கள் செல்வம் அடைக்கலன்நாதனுக்கும், விக்கிக்கும், கஜேந்திர குமார் பொன்னம்பலதுக்கும் சொல்வீர்கள் என்று நம்புகிறேன்.

கண்டிப்பாக  எந்தவொரு நபரும் இரண்டு தடவைகளு மேல் பாராளுமன்றம் போகப்படாது ...விலத்தி புதியவர்களுக்கு இடமளிக்க வேண்டும் 

7 hours ago, பகிடி said:

தவிர திரு சம்பந்தன் , நீலன், சுமந்திரன் ஆகியோருக்கு வழக்கறிஞர் தொழில் வருமானமே அதிகம். வேறு வழியின்றி அரசியலுக்கு இவர்கள் வரவில்லை. 

உழைக்க   வேறு வழியில்லாமல் அரசியலுக்கு வந்தார்கள்   இரண்டு வருமானம் வரும் இல்லையா??   இப்படி இரண்டு வேலை செய்தபடியால்.  பாராளுமன்றம் சரியான முறையில் பயன்படுத்தவில்லை 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
7 hours ago, பகிடி said:

நான் சொல்ல வந்தது சட்ட நுணுக்கம் அறிந்தவர்கள் தீர்வு கிடைக்கும் வரைக்கும் பாராளுமன்றம் செல்லட்டும் என்பது தான். 

ஜே.ஆர் அரசாங்கத்தில்  கூடுதல் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் பாராளுமன்றம் அனுப்பி வைக்கபபட்டார்கள் அனைவரும் சட்டத்தரணிகள்   

என்ன செய்தார்கள்??? 

எம் ஜி ஆர்   காமராஜர்    அமெரிக்காவில் றீகன்.      படிக்கவில்லை ஆனால் நல்லாட்சி வழஙகினார்கள்  அனுபவம் உள்ள படிக்காதவர்களும சிறந்த ஆட்சியை வழஙக முடியும்    

படிக்காதவர்களின்.  கண்டு பிடிப்புகளைத்.  விதிகளை தான் ஆராய்வுகளைத் தான் படித்து பட்டம் பெறுகிறோம. 

சட்டம் தெரியாதவர்கள்.  சட்டம் படிக்கதவர்கள் இயற்றிய. சட்டங்களை படித்து தான்   சட்டத்தரணி ஆகிறார்கள்

  • கருத்துக்கள உறவுகள்
Posted
17 minutes ago, Kandiah57 said:

அபின், கஞ்சா கடத்தி பிடிபடுகிறவனை... பிணை எடுக்கிறவன்  எல்லாம், 
சட்டத்தரணி என்ற போர்வையில்... பாராளுமன்றம் போக நினைப்பது கடைந்து எடுத்த முள்ளமாரித்தனம்.😂 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
20 hours ago, Kandiah57 said:

நல்ல கண். வைத்தியரைப். கூடிய விரைவில் பாருங்கள்  🤣🤣

அதுவரை கருத்துகள் பதிய வேண்டாம் 

குறிப்பு,....வைத்தியரிடம் பெற்றுக் கொண்ட சான்றிதழ்களை யாழில் இணைக்கவும். 🙏

patient-annoyed.gif  animiertes-augen-bild-0074.gif  

@Kapithan கனடாவில் உள்ள கண் வைத்தியரிடம்  கண்ணை காட்டி பரிசோதிப்பதற்குரிய செலவை
கந்தையா அண்ணையின் அக்கவுண்டில் இருந்து அனுப்பி வைக்கப்படும். 😂

  • கருத்துக்கள உறவுகள்
Posted
8 minutes ago, தமிழ் சிறி said:

patient-annoyed.gif  animiertes-augen-bild-0074.gif  

@Kapithan கனடாவில் உள்ள கண் வைத்தியரிடம்  கண்ணை காட்டி பரிசோதிப்பதற்குரிய செலவை
கந்தையா அண்ணையின் அக்கவுண்டில் இருந்து அனுப்பி வைக்கப்படும். 😂

மிஸ்ரர் கந்தையரின் சங்காத்தமே வேண்டாமென்றுதான் நான் ஒதுங்கியிருக்கிறேன் . உந்தப் பயபுள்ள கோத்துவிடுது பார்,......🤣

  • Haha 1

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.