Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, வீரப் பையன்26 said:

உந்த‌ உள‌வுத்துறை ரிப்போட் எல்லாம் க‌ட‌ந்த‌ கால‌த்தில் பொய்த்து குருநாதா😒.......................

👍...........

பையன் சார், பொய்த்தும் போகும் என்பதற்கு முன்னால், கசியவிடப்பட்ட பல தகவல்கள் பொய்யானதாகவும் இருக்கக்கூடும். உளவுத்துறை அரசின், ஆளும் கட்சியின் கட்டுப்பாட்டில் தான் இருக்கும். திமுகவிற்கு பாதகமான தகவல்களை வெளியே விடாமல் வைத்திருந்து கொண்டு, கற்களை வேறு பக்கம் எறிந்தும் இருப்பார்கள்.

35 வயதிற்கு உட்பட்டவர்கள் என்ற தகவல் சரியானதாக இருக்கக்கூடும்.............. என்னுடைய வயதுக்கு நான் அந்த கூட்டம் நடந்த ஊரில் இருந்தால், ஒரு மூன்று நாட்கள் வீட்டை விட்டு கிளம்பி வேறு ஊரில் போய் இருந்திருப்பேன்.................🤣............ 

  • Replies 306
  • Views 15.6k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Most Popular Posts

  • பாலபத்ர ஓணாண்டி
    பாலபத்ர ஓணாண்டி

    இதுவரை தமிழ்த்தேசியம் சிறு சிறு குழுக்கள் பேசி வந்தது.. பெரும்பான்மை தமிழ்மக்களுக்கு அதை மறைத்து திராவிட மாயைக்குள் இரண்டு பெரிய கட்சிகளும் மூடி தமிழர்களை விழிப்படைய விடாமல் வைத்திருந்தனர்.. அதன் பின்

  • பிரபா,  மபொசி  இந்திய அமைதிகாக்கும் படையை வரவேற்ற செய்தி  உண்மையேயெனினும் அது தொடர்காக நான் வாசித்த இணைய தளத்தை தேடிக்கண்டுபிடிக்க முடியவில்லை. ஆனால் தமிழ் தேசியவாதியான  மபொசி எப்போதுமே விடுதலைப்புலிக

  • பாலபத்ர ஓணாண்டி
    பாலபத்ர ஓணாண்டி

    கோசான் உங்களுக்கு சீமான் பிரச்சினையா இல்லை தமிழ் தேசியம் பிரச்சினையா இல்லை ரெண்டுமே பிரச்சினையா..? நான் தமிழ்தேசியத்தை பற்றித்தான் எழுதி இருந்தேன்.. அதை விஜை எடுத்து கையாள்வது குறித்து எழுதி இருந

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, ரசோதரன் said:

👍...........

பையன் சார், பொய்த்தும் போகும் என்பதற்கு முன்னால், கசியவிடப்பட்ட பல தகவல்கள் பொய்யானதாகவும் இருக்கக்கூடும். உளவுத்துறை அரசின், ஆளும் கட்சியின் கட்டுப்பாட்டில் தான் இருக்கும். திமுகவிற்கு பாதகமான தகவல்களை வெளியே விடாமல் வைத்திருந்து கொண்டு, கற்களை வேறு பக்கம் எறிந்தும் இருப்பார்கள்.

35 வயதிற்கு உட்பட்டவர்கள் என்ற தகவல் சரியானதாக இருக்கக்கூடும்.............. என்னுடைய வயதுக்கு நான் அந்த கூட்டம் நடந்த ஊரில் இருந்தால், ஒரு மூன்று நாட்கள் வீட்டை விட்டு கிளம்பி வேறு ஊரில் போய் இருந்திருப்பேன்.................🤣............ 

ந‌ட‌ந்து முடிந்த‌ பாராள‌ம‌ன்ற‌ தேர்த‌லில் சீமானுக்கு 16 ச‌த‌ வீத‌ம்  பெறுவார் என்று உள‌வுத்துறை சொன்ன‌தாக‌ ப‌ல‌ த‌க‌வ‌ல்க‌ள் க‌சிந்த‌ன‌...............அப்பேக்க‌ கூட‌ என‌க்கு தெரிந்த‌து இது முற்றிலும் பொய் என்று

அதோட‌ க‌ருத்து க‌ணிப்பு என்று த‌ந்தி ஊட‌க‌ம் நாம் த‌மிழ‌ருக்கு 5ச‌த‌ வீத‌ம் தான் கிடைக்கும் என்று வெளியிட்ட‌வை

இர‌ண்டும் பொய்த்து போன‌து குருநாதா😁............................

நேற்று காவ‌ல்துறை விஜேயின் கூட்ட‌த்துக்கு வ‌ந்த‌வைய‌ க‌ண‌க்கெடுத்த‌வை...................சில‌து நீங்க‌ள் எழுதின‌து உண்மையா கூட‌ இருக்க‌லாம்👍......................

Edited by வீரப் பையன்26

  • கருத்துக்கள உறவுகள்

மீள வரவேற்றோர் அனைவருக்கும் நன்றி. தனித்தனியே எழுதி பக்கத்தை நீட்ட விரும்பவில்லை 🙏.

———

History doesn’t repeat itself but it often rhymes என்கிறார் மார்க் டுவைன்.

அதாவது வரலாறு அச்சொட்டாக அப்படியே மீளாது ஆனால் அது அதே சந்தத்தில் மீள ஒலிக்கும்.

விஜயகாந்த் - சீமான் - விஜை ஒப்பீடும் இதை ஒத்த ஒன்றே.

விஜயகாந்த் விட்ட மிகப்பெரிய பிழை பிரேமலதா, சுதீசை அரசியலில் இறக்கியது. அவர்கள் பணம், ராஜ்யசபா சீட்டுக்கு விஜயகாந்தை அடகு வைத்தார்கள்.

அதேபோல் ஒரு தேர்தல் முடிந்து அடுத்த தேர்தல் காண முன்னமே அவரின் குடிக்கு எடுத்த சிகிச்சை அவரின் மூளையை பாதித்து விட்டது, அத்தோடு அவர் அரசியல் வாழ்க்கை எழ வழியே இருக்கவில்லை.

சீமான் விட்ட மிகப்பெரிய பிழை பெரியாரில் கை வைத்தது.  அடுத்து நொடிக்கு ஒரு நிலை மாறுவது, மூன்றாவதாக கொள்கை அளவில் பிஜேபி சொல்லும் ஒவ்வொரு விடயத்தையும் கொஞ்சம் வித்தியாசமான கோணத்தில் அப்படியே ஒப்புவிப்பது. பிஜேபி ஸ ரி க ம ப த நி ஸ என்றால், சீமான் ஸ நி த ப ம க ரி ஸ என்பார். இவை எல்லாம் இவர் பிஜேபி ஏஜெண்ட் என்பதை மக்கள் பிரித்தறிய உதவின.

இருவரும் விட்ட பிழை கூட்டணி வைக்காமல் வீம்பு காட்டியது.

இவற்றை பலதை விஜை இப்போதே விலக்கி நடப்பதாக எனக்குப்படுகிறது.

விஜை முன் இருக்கும் மிகப்பெரிய சவால் திமுக எதிர் கூட்டணி ஒன்றை உருவாக்கி வாக்குகளை சிந்தாமல் சிதறாமல் அள்ளுவதே.

திருமாவுக்கு துணை முதல்வர், கம்யூனிஸ்டுகளுக்கு அவர்கள் கொள்கைகள் சிலதை அமல் படுத்தல் போன்ற நியாயமான விட்டு கொடுப்புகளை செய்தால் - முதலில் திமுக கூட்டணியை உடைக்கலாம்.

காங்கிரஸ் தலைவர் ஒருவர் ஸ்டாலினுக்கு இப்போதே விஜை பேசியதை மேற்கோள் காட்டி ஆட்சியில் பங்கு கேட்டு கடிதம் எழுதி விட்டார். அதே போல் விசிக நிர்வாகி ஒருவரும் டிவீட்டியுள்ளார்.

திமுக கூடாரத்தை இத்தனை வருடத்தில் சீமான் இப்படி ஒரு போதும் கதற விட்டதே இல்லை.

ஒரு பேச்சில் விஜே அதை சாதித்துள்ளார்.

இப்படி விஜைக்கு சாதமாக பலது இருக்கிறது.

ஆனால் அவர் முன்னாள் உள்ள பெரிய சவால் அதிமுக. அவர்கள் விஜே தலைமைய ஏற்க மாட்டார்கள். அவர்கள் வராமல் திமுககவை வெல்வது கடினம்.

அதே போல் நிர்வாகிகள் மரணத்தில் விஜை காட்டிய சுணக்கம், நேரில் போகாமை தொடர்ந்தால் அவரும் சீமானை போல் அவர் கட்சிகாராராலேயே தூக்கி எறியப்படுவார்.  இந்த விடயத்தில் உதய்யை பார்த்து விஜை கற்று கொல்ல வேணும்.

2 hours ago, பகிடி said:

கொள்கைத் தெளிவு  இங்கே உண்டு

ஆச்சரியமான உண்மை.

  • கருத்துக்கள உறவுகள்

பிகு

விஜை செய்ய வேண்டியதில் மிக முக்கியமானது திமுகவை எந்தளவு அடிக்கிறாரோ அதை விட ஒரு படி மேலாக பிஜேபியை அடிக்க வேண்டும்.

நேற்று திமுகவை சாடிய அளவுக்கு பிஜேபியை சாடவில்லை. இது மாற வேண்டும்.

குறிப்பாக கொள்கை விடயங்களில் - போட்டு வெளுக்க வேண்டும். இல்லா விட்டால் இலகுவாக திமுககாரர் இவரை பிஜேபி பி டீம் என பிரச்சாரம் செய்து விடுவார்கள். 

சீமான் உண்மையிலே பி டீம் போல கொள்கை விளக்கம் கொடுத்தமையால் அவருக்கு அது சரியான பெயர்தான் - ஆனால் இதையே விஜைக்கு பாவிக்க இம்மியளவும் விஜை இடம் கொடுக்க கூடாது.

அதற்கு ஒரே வழி பிஜேபியை மிதிப்பதுதான். குறிப்பாக கொள்கைகளை.

Edited by goshan_che

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, goshan_che said:

சீமான் உண்மையிலே பி டீம் போல கொள்கை விளக்கம் கொடுத்தமையால் அவருக்கு அது சரியான பெயர்தான் - ஆனால் இதையே விஜைக்கு பாவிக்க இம்மியளவும் விஜை இடம் கொடுக்க கூடாது.

அதற்கு ஒரே வழி பிஜேபியை மிதிப்பதுதான். குறிப்பாக கொள்கைகளை.

👍.........

இந்த விடயத்தில் தான் முதலாவது உரசல் காத்திருக்கின்றது போல, கோஷான். புஸ்ஸி ஆனந்த் பாஜக மற்றும் அமித் ஷாவுடன் நெருங்கிய உறவில், தொடர்பில் இருப்பவர். இவரை மீறித்தான் பாஜக எதிர்ப்பு காட்டப்படவேண்டும். விஜய்யின் 'சிறுபான்மை, பெரும்பான்மை என்ற பிளவுகளே இல்லை...........' என்ற கொள்கை பாஜகவின் அதே கொள்கை ( இது இலங்கையில் ஜேவிபியின் கொள்கையும் கூட...). இந்தக் கொள்கையை வைத்தே பாஜக சிறுபான்மையினருக்கு எதிரான நிகழ்ச்சி நிரலை முன்னெடுத்துக் கொண்டிருக்கின்றது.

விஜய் தமிழ்நாட்டில் பொருட்படுத்தப்பட வேண்டும் என்றால், பாஜகவினருக்கு எதிராக தீவிரமான ஒரு நிலைப்பாட்டை இப்பொழுது வெளிப்படுத்தியே ஆகவேண்டும். ஆனால் மத்திய அரசின் அமலாக்கத்துறை விஜய்யின் வீட்டிற்கு வரும்............... அது நாளடைவில் நல்ல ஒரு விடயமே.............  

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, ரசோதரன் said:

👆👌

ஓம்…

பிஜேபியை எதிர்க்காதவனுக்கும், பெரியாரை எதிர்த்தவனுக்கும் தமிழ் நாட்டில் அரசியல் எதிர்காலம் இல்லை.

இதை விஜை உணர்ந்து நடப்தில்தான் அவரின் வெற்றி உள்ளது.

அமலாக்க துறை, உளவு துறைக்கெல்லாம் பயப்பட்டால் சீமான் போல விலை போக வேண்டியதே.

களவு எடுத்தாலும் ஜெகத் ரட்சகன், பாலாஜி நிற்பது போல் தைரியமாக நிற்க வேண்டும்.

Edited by goshan_che

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எல்லாரும் புதுக்க புதுக்க வெளுத்து வாங்குவார்கள். போகப்போகத்தான் எல்லா வெளிச்சமும் தெரியும். சத்தம் போட்டு ஒலிவாங்கி முன் பேசுவதால் எல்லோரும் அரசியல்வாதியாக முடியாது.

தம்பி விஜய் நேரடியாக சினிமாகாட்சி போல் முதல்வர் கதிரையை நோக்குகின்றார். அது சரிவராத காரியம் ராசா.....😁

அரசியல் என்பது கரடுமுரடான நெடிய பாதை. அதில் பயணிப்பது சுலபமில்லை.😎

நடிகர் விஜய்ய பார்த்து பரிதாபப்படுகின்றேன். 😂

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
10 hours ago, Justin said:

வாங்கோ, நல் மீள்வரவு! அப்ப நான் நீண்ட விடுமுறையில் போகலாம் இனி😂!

அடேங்கப்பா!

உங்கள் குழுவாதத்திற்கு என் பாராட்டுக்கள்.😄

உங்கள் கருத்திற்கு நன்றி செலுத்தியவர் யாழ் களத்தை கண்ணியமாகவும் கலங்காமலும் பார்த்துக்கொள்வார் என நான் நம்புகின்றேன்.🤣

நீங்கள் உங்கள் மனதை சிதறிடிக்காமல் நீண்ட  விடுமுறையை கழிக்க என் வாள்த்துக்கள்.😎

  • கருத்துக்கள உறவுகள்

மானஸ்தன்…

அநேகமா இப்போதைக்கு பாதி மீசையோடத்தான் இருப்பார்🤣.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

அடேங்கப்பா!

உங்கள் குழுவாதத்திற்கு என் பாராட்டுக்கள்.😄

உங்கள் கருத்திற்கு நன்றி செலுத்தியவர் யாழ் களத்தை கண்ணியமாகவும் கலங்காமலும் பார்த்துக்கொள்வார் என நான் நம்புகின்றேன்.🤣

நீங்கள் உங்கள் மனதை சிதறிடிக்காமல் நீண்ட  விடுமுறையை கழிக்க என் வாள்த்துக்கள்.😎

🤣ஆசை தோசை அப்பளம் வடை..! தேர்தல் வருகுது, இந்த நேரம் விடுமுறையாவது உரோமவாவது? இதுக்குத் தான் இரட்டைத் திரை கம்பியூட்டர் பாவிக்கிறது😎!

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, Justin said:

🤣ஆசை தோசை அப்பளம் வடை..! தேர்தல் வருகுது, இந்த நேரம் விடுமுறையாவது உரோமவாவது? இதுக்குத் தான் இரட்டைத் திரை கம்பியூட்டர் பாவிக்கிறது😎!

யாரோ சொல்லிகொடுத்து போட்டாங்க யாரா இருக்கும் ?

54 minutes ago, goshan_che said:

மானஸ்தன்…

அநேகமா இப்போதைக்கு பாதி மீசையோடத்தான் இருப்பார்🤣.

வந்தமா கருத்துக்களை எழுதினமா என்று போவது எல்லோருக்கும் நல்லது வந்த உடனே மற்றவரை சீண்டுவதுக்கே என்றால் நாமும் சேட்டை விடுவம் ஆனால் மறுபடியும் ஓடக்கூடாது ஓகேயா ?

  • கருத்துக்கள உறவுகள்
On 27/10/2024 at 20:42, தமிழ் சிறி said:

ஈழத்தின் மருமகன், தங்கத் தமிழன், வருங்கால முதல்வர்... விஜய் வாழ்க. 🙂

 தவெகவின் மாநாட்டில் இரண்டு ஈழத்துக் கலைஞர்கள் பயன்படுத்தப்பட்டுள்ளார்கள்.

தமிழ்த்தாய் வாழ்த்தை பாடிய பவதாஜினி நாகராஜன் 
ஆயிரக்கணக்கான தமிழீழ விடுதலைப் பாடல்களுக்கு இசையமைத்த கண்ணன் மாஸ்ரர் அவர்களின் பேத்தியார்.

அடுத்தவர் ஈழத்து எழுத்தாளரும் பாடலாசிரியருமான தன. ரஜீவன் அவர்கள். நேற்று அந்த அரங்கிலே ஒலிபரப்பி வெளியிடப்பட்ட தவெகத்தின் கழகப் பாடலை இவரே எழுதியிருந்தார்.

முதற் தடவையாக தமிழக அரசியல் மேடையில் பயன்படுத்தப்பட்ட ஈழத்துக் கலைஞர்கள் இவர்களே.

#இணுவையூர்_மயூரன்
(முக நூல்) 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, கந்தப்பு said:

இந்தச் செய்தியை கேட்க மிகவும் மகிழ்ச்சியாகவும், பெருமையாகவும் உள்ளது கந்தப்பு.

விஜய்… தனது அரசியல் பிரவேசத்தின் முக்கியமான தமிழ்த்தாய் வாழ்த்திற்கும், கழகப் பாடலை எழுதவும் ஈழத்து கலைஞர்களை பயன் படுத்திக் கொண்டமை எமக்கு பெருமை சேர்க்கும் விடயம்.

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, குமாரசாமி said:

எல்லாரும் புதுக்க புதுக்க வெளுத்து வாங்குவார்கள். போகப்போகத்தான் எல்லா வெளிச்சமும் தெரியும். சத்தம் போட்டு ஒலிவாங்கி முன் பேசுவதால் எல்லோரும் அரசியல்வாதியாக முடியாது.

தம்பி விஜய் நேரடியாக சினிமாகாட்சி போல் முதல்வர் கதிரையை நோக்குகின்றார். அது சரிவராத காரியம் ராசா.....😁

அரசியல் என்பது கரடுமுரடான நெடிய பாதை. அதில் பயணிப்பது சுலபமில்லை.😎

நடிகர் விஜய்ய பார்த்து பரிதாபப்படுகின்றேன். 😂

ச‌ரிங்க‌ தாத்தா😁.....................

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, பிரபா said:

ஆதாரம்?

Copilot  இடம் கேள்வி : Did Ma.Po.Si. welcome Indian peace keeping force when it returned?

விடை: I couldn't find any specific information about M. P. Sivagnanam (Ma.Po.Si.) welcoming the Indian Peace Keeping Force (IPKF) upon its return.

பிரபா,  மபொசி  இந்திய அமைதிகாக்கும் படையை வரவேற்ற செய்தி  உண்மையேயெனினும் அது தொடர்காக நான் வாசித்த இணைய தளத்தை தேடிக்கண்டுபிடிக்க முடியவில்லை. ஆனால் தமிழ் தேசியவாதியான  மபொசி எப்போதுமே விடுதலைப்புலிகளுக்கு எதிரான கருத்தையே கொண்டிருந்தார்.  அவரது பத்திரிகையான செங்கோல் இதழில் “ஈழத்தமிழரும் நானும்” என்ற தொடரில் புலிகளை பயங்கரவாத இயக்கம் என்று  வர்ணித்து அவர் எழுதியுள்ளார். அந்த தொடர் பின்பு நூலாக வெளிவந்து இன்றும் விற்பனை செய்யப்படுகிறது. 

1992 ல் வெளிவந்த செங்கோல் இதழில் மபோசி எழுதிய பத்திரிகை முன்பக்கத்தை இங்கு இணைத்துள்ளேன்.   தமிழ் தேசியவாதி என்று சீமானால் சிலாகிக்கப்படும் மபொசி இதை எழுதிய நேரத்தில் திமுக உட்பட திராவிட இயக்கங்களின் தொண்டர்கள் பொடா சட்டதின் கீழ் பாரிய நெருக்குவரங்களுக்கு உள்ளாக்கப்பட்டார்கள். பல திராவிட இயக்க உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டார்கள்.  பெரியார் திடல் புலனாய்வுப்பிரிவின் முழுமையான கண்காணிப்பில் இருந்தது.

மபொசியின் கருத்தில் நான் தலையிடவில்லை. அவரின் கருத்தை தனது பத்திரிகையில் வெளியிடும் உரிமை அவருக்கு உண்டு.

ஆனால், தமது சுயநல அரசியலுக்காக வரலாறு எவ்வாறு திரிக்கப்பட்டு ஈழத்தமிழருக்கு  ஆதரவாக இருந்த அமைப்புக்கள் எதிரிகளாகவும், உண்மையிலே ஈழத்தமிழருக்கு  எதிரிகளாக இருந்தவர்கள்  நல்லவர்கள் போலவும் காட்டப்படுகிறார்கள் என்பதை கீழ் இணைக்கப்பட்ட பத்திரிகையில் பார்தது அறிந்து கொள்ளுங்கள்.

large.Sengolmaposi.jpeg.85387622b026a8bae702def4703769a7.jpeg 

Edited by island

  • கருத்துக்கள உறவுகள்

இப்ப எங்கட செந்தமிழன் சீமான் அண்ணாவுக்கு 2025 சட்டசபைத் தேர்தலில் அவர் நிற்கும் தொகுதியில் கட்டுக்காசு கிடைக்குமா இல்லையா என்பதுதான் எனது கவலை👀

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, வாலி said:

இப்ப எங்கட செந்தமிழன் சீமான் அண்ணாவுக்கு 2025 சட்டசபைத் தேர்தலில் அவர் நிற்கும் தொகுதியில் கட்டுக்காசு கிடைக்குமா இல்லையா என்பதுதான் எனது கவலை👀

ந‌க்க‌ல் நையாண்டி...................

இப்ப‌டி ப‌ல‌ ந‌க்க‌ல் கேலி கிண்ட‌ல்க‌ளை எல்லாம் க‌ட‌ந்து வ‌ந்து தான் . திராவிட‌த்தின் ப‌ண‌ ம‌ழைய‌ தாண்டி 35ல‌ச்ச‌ ம‌க்க‌ள் ஓட்டு போட்ட‌வை

சீமான் மீது நீங்க‌ள் உங்க‌ட‌ விருப்பப் ப‌டி க‌ல் எறிய‌லாம் உங்க‌ட‌ க‌ல்ல‌ கூட‌ ஓட்டாய் மாற்றும் திற‌மை சீமானிட‌ம் இருக்கு

இது என் பொதுவான‌ க‌ருத்து😁👍.......................... 

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, island said:

ஆனால், தமது சுயநல அரசியலுக்காக வரலாறு எவ்வாறு திரிக்கப்பட்டு ஈழத்தமிழருக்கு  ஆதரவாக இருந்த அமைப்புக்கள் எதிரிகளாகவும், உண்மையிலே ஈழத்தமிழருக்கு  எதிரிகளாக இருந்தவர்கள்  நல்லவர்கள் போலவும் காட்டப்படுகிறார்கள் என்பதை கீழ் இணைக்கப்பட்ட பத்திரிகையில் பார்தது அறிந்து கொள்ளுங்கள்.

நயவஞ்சகன்(ர்) சீமான்.

எமது எதிரிகளை எம்மிடமே எம் கொள்கையின் பிதாமகர்கள் என நிறுவ முற்பட்ட கயவன்(ர்). மிக கேவலமான எதிர்புரட்சியாளர்.

மபொசி மட்டும் அல்ல, புலிகள் அழிக்கப்பட வேண்டிய தீய சக்தி, போர் என்றால் மக்கள் சாவார்கள் என கூறிய ஜெ, புலிகளை பயங்கரவாத அமைப்பு என சட்டமன்ற தீர்மானம் நிறைவேற்றிய மாமா காளிமுத்து என பலரை இப்படி வரலாற்று திரிபு செய்துள்ளார். 

புலி அனுதாபியாக இல்லாத போதும் உண்மையை ஆதாரத்தோடு வெளிக்கொணர்தமைக்கு நன்றி.

இதை தமிழ் நாட்டு இளசுகளும், நேற்று பெய்த மழையில் இன்று காலையில் முளைத்த புலம்பெயர் காளான்களும் நம்பியது கூட பரவாயில்லை, என் வயதை ஒத்த, ஈழநாதத்தில் நடப்பதை 90களில் தினமும் வாசித்து வளர்ந்த ஏழு குதிரை வயசான பூமர் அங்கிள்கள் கூட நம்பியதுதான் சோகம்.

1 hour ago, வாலி said:

இப்ப எங்கட செந்தமிழன் சீமான் அண்ணாவுக்கு 2025 சட்டசபைத் தேர்தலில் அவர் நிற்கும் தொகுதியில் கட்டுக்காசு கிடைக்குமா இல்லையா என்பதுதான் எனது கவலை👀

இதுவரைக்கும் நாம் கட்டு காசு மீட்டதாக வரலாறு, பெளதீகம், பொருளியல் எதுவுமில்லையே.

Edited by goshan_che

  • கருத்துக்கள உறவுகள்

சீமான் என்ன சொல்கிறார் என்றால் சினிமா நடிகரை விஜயை பார்க்க வந்த கூட்டம் எல்லாம் அவருக்கு வாக்கு அளிக்க மாட்டுது அவரின் இரசிகர்களில் பலர் தனக்கு தான் வாக்கு அளிப்பார்கள்

  • கருத்துக்கள உறவுகள்

படப்பிடிப்பு முடிந்து விட்டது............ இனிமேல் விஜய் தான் ஊர் ஊராக போக வேண்டும், கமல் டார்ச் லைட்டுடன் ஊர் ஊராக போனது போல...............

தமிழ்நாட்டு மக்களின் மீது நம்பிக்கை நல்லாவே இருக்கின்றது............. எல்லாம் முடிய, உதயசூரியனிலோ அல்லது இரட்டை இலையிலோ நிற்கும் 'அவர்களின் ஆட்கள்' பார்த்து வாக்குப் போடுவார்கள்............ 

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, goshan_che said:

நயவஞ்சகன்(ர்) சீமான்.

எமது எதிரிகளை எம்மிடமே எம் கொள்கையின் பிதாமகர்கள் என நிறுவ முற்பட்ட கயவன்(ர்). மிக கேவலமான எதிர்புரட்சியாளர்.

உங்க‌ள் பார்வைக்கு அவ‌ர் எப்ப‌டியும் இருந்து விட்டு போக‌ட்டும்......................திராவிட கூட்ட‌ம் 2009க‌ளில் ச‌ரியா செய‌ல் ப‌ட்டு இருந்தால் இன்று சீமானை பெரிதாக‌ யாருக்கும் தெரிந்து இருக்காது 👍

சீமான் அப்ப‌டி என்ன‌ ந‌ய‌வ‌ஞ்ச‌க‌ செய‌லை எம் இன‌த்துக்கு செய்தார்................அதுக்கான‌ ஆதார‌ம் இருந்தால் இணையுங்கோ என்னாலான‌ ப‌திலை த‌ருகிறேன்👍

ஒரு இன‌ம் அழிந்து கொண்டு இருக்கையில் க‌ருணாநிதியிட‌ம் இன‌ அழிப்பை ப‌ற்றி கேட்க்க‌ ம‌ழை விட்டாலும் தூவான‌ம் விடுவ‌தில்லை என்று ந‌க்க‌ல் அடிச்ச‌தை ம‌ற‌ந்து விட்டிங்க‌ளா😉😒....................

சீமானுக்கு எதிராக‌ எழுத‌ த‌ங்க‌ளை புக‌ழ் பாட‌ திமுக்கா ப‌ல‌ ஆயிர‌ம் பேருக்கு 200 கொடுத்து இணைய‌ கைகூலிக‌ளாய் வைத்து இருக்கு😡

சீமான் பிசுறு என்பார் ம‌சுறு என்பார் அது அவேண்ட‌ உள் க‌ட்சி பிர‌ச்ச‌னை அதை அவ‌ர்ளே பேசி ச‌ரி செய்து விட்டின‌ம்...........ஆனாலும் நீங்க‌ள் இப்ப‌வும் அதையே பிடித்து தொங்கி கிட்டு இருக்கிறீங்க‌ள்👎👎👎👎👎👎👎👎

திமுக்காவில் ந‌ட‌க்கும் உள் க‌ட்சி ச‌ண்டைக‌ள் ஊழ‌ல்க‌ள் முறைகேடுக‌ள் உங்க‌ளுக்கு வேணும் என்றால் தெரியாம‌ இருக்க‌லாம் என‌க்கு ந‌ல்லாவே தெரியும் அவேன்ட‌ உள் க‌ட்சி ச‌ண்டைக‌ள்😉

ம‌ன்ன‌ர் ஆட்சிக்கு முட்டு கொடுப்ப‌வ‌ர்க‌ளுட‌ன் விவாதிப்ப‌து ந‌ம்ம‌ட‌ நேர‌த்தை வீன் அடிப்ப‌துக்கு ச‌ம‌ம்👎👎👎👎👎👎👎

என‌க்கு க‌ம‌ல‌ பிடிக்காது விஜேயை பிடிக்கும் ஆனால் திராவிட‌ சாய‌ம் என‌க்கு அவ‌ரில் பிடிக்க‌ வில்லை

சீமான் என்ர‌ ந‌ப‌ர் இருந்த‌ ப‌டியால் தான் பிர‌பாக‌ர‌ன் என்ர‌ மாபெரும் த‌லைவ‌ரின் தியாக‌ம் த‌மிழ‌க‌மெங்கும் தெரிய‌ வ‌ந்த‌து🙏🥰👍

க‌ழிவிட‌ மாட‌ல் அர‌சு பாவாடைய‌ திற‌ந்து பார் திராவிட‌ நாடு தெரியும் என்று  சொன்ன‌ க‌ருணாநிதிய‌ பெரிய‌ ந‌ல்ல‌ ம‌னித‌ர் போல் காட்ட‌ முய‌ன்ரு சீமானின் எதிர்ப்பால் ப‌லத‌ கை விட்ட‌வை 😁 இப்ப‌ தெரியுதா சீமானின் ப‌ல‌ம் 👍

க‌ருணாநிதி நாக‌ரிக‌ம் தெரியாத‌ அல்ப்ப‌ ம‌னித‌ர் இந்திரா காந்தி அம்மையாரின் உட‌ம்பில் இருந்து வ‌ந்த‌ ர‌த்த‌த்தை எப்ப‌டி எல்லாம் கொச்சை ப‌டுத்தினார்😡

இப்ப‌டி ப‌ட்ட‌ அசிங்க‌மான‌ ந‌ப‌ரை தான் க‌ழிவிட‌ மாட‌ல் அர‌சு புனித‌ர் ஆக்க‌ துடிக்கின‌ம் அது பேனா சிலையில் தொட‌ங்கி சீமானின் க‌டும் எதிர்ப்பால் கை விட்ட‌வை👍

2009க்கு பிற‌க்கு ஈழ‌த்து அர‌சிய‌ல் வாதிக‌ளும் ச‌ரி புல‌ம்பெய‌ர் நாட்ட‌வ‌ர்க‌ளும் ச‌ரி எம‌க்கான‌ த‌னி நாட்டு கோரிக்கைய‌ ஏன் ச‌ரியா எடுத்து செல்ல‌ வில்லை

இதில‌ சீமானை குறை சொல்லிக் கிட்டு

அண்ண‌ன் திலீப‌னின் நினைவு நாளை நாம் த‌மிழ‌ர் க‌ட்சி தொண்ட‌ர்க‌ள் க‌ட்சியின் த‌லைமை வ‌ருட‌ம் வ‌ருட‌ம் சிற‌ப்பாக‌ கொண்டாடுகின‌ம்

இந்த‌ வ‌ருட‌ம் அண்ண‌ன் திலீப‌னின் நினைவு நாளை புல‌ம்பெய‌ர் தேச‌த்தில் யார் எல்லாம் முன்னெடுத்தார்க‌ள்😢..................

சீமான் மீது இருக்கும் குறைக‌ள் த‌வ‌றுக‌ளை க‌தைச்சு ச‌ரி செய்ய‌லாம்.....................பொழுது போக்கு இணைய‌த்தில் கிறுக்கும் ந‌ப‌ர்க‌ளை திருத்த‌வே முடியாது👎......................

நாம் த‌மிழ‌ர் முன்ன‌னி பொருப்பாள‌ர்க‌ள் கூட‌ ம‌ன‌சில் ப‌ட்ட‌தை நேர‌டியாக‌ கேட்டு இருக்கிறேன் சாட்டை துரைமுருக‌னின் செய‌ல்க‌ள் வெறுப்பை வ‌ர‌ வைக்குது என்று எல்லாம் குறைக‌ளை சொல்லி இருக்கிறேன்👍......................

புல‌ம்பெயர் நாட்டில் காசை கொள்ளை அடித்த‌ கூட்ட‌ங்க‌ள் தான் இப்ப‌வும் ப‌ல‌ தீர்வுக்கு த‌ட‌ங்க‌ளாய் இருக்கின‌ம்

த‌லைவ‌ரின் குடும்ப தியாக‌த்தை கொச்சை ப‌டுத்துவ‌து 

த‌லைவ‌ரின் ம‌க‌ள் மாவிர‌ நாள் உரை ஆற்ற‌ போகிறா என்று யாரோ மேக்க‌ப் பையித்திய‌த்தை காட்டி உல‌க‌ த‌மிழ‌ரை ஏமாற்ற‌ பார்க்குதுக‌ள்.........................

புல‌ம்பெய‌ர் நாட்டு விச‌ச் செடிக‌ளை விட்டு விட்டு சீமானை நோண்டி கொண்டு இருப்ப‌தன் உங்க‌ள் நோக்கம் என‌க்கு புரிய வில்லை😉.................... 

  • கருத்துக்கள உறவுகள்
43 minutes ago, ரசோதரன் said:

படப்பிடிப்பு முடிந்து விட்டது............ இனிமேல் விஜய் தான் ஊர் ஊராக போக வேண்டும், கமல் டார்ச் லைட்டுடன் ஊர் ஊராக போனது போல...............

தமிழ்நாட்டு மக்களின் மீது நம்பிக்கை நல்லாவே இருக்கின்றது............. எல்லாம் முடிய, உதயசூரியனிலோ அல்லது இரட்டை இலையிலோ நிற்கும் 'அவர்களின் ஆட்கள்' பார்த்து வாக்குப் போடுவார்கள்............ 

குருநாதா

விஜேய்க்கும் ம‌க்க‌ள் செல்வாக்கு இருக்கு ம‌றுப்ப‌துக்கு இல்லை

என்ன‌ இனி திமுக்கா தேர்த‌ல் நேரம் ஓட்டுக்கு க‌ட‌ந்த‌ கால‌ங்க‌ளில் ஒரு ஆளுக்கு 1000ரூபாய் இனி வ‌ரும் கால‌ங்க‌ளில் ஒரு ஆளுக்கு 3000ரூபாயும் கொடுப்பின‌ம் அந்த காசை வேண்டிட்டு போய் உத‌ய‌ சூரிய‌ன் சின்ன‌த்தில‌ வ‌ட்டின‌ அமுக்கி போட்டு வ‌ருவின‌ம்

அந்த‌ 3000ரூபாயும் ஒரு கிழ‌மையில் பாவித்து விடுவின‌ம்😁👍................

டாஸ்மார்க்கில் இர‌ண்டு நாள் போனால் அதிலையே 1000ரூபாய் போய் விடும் மீதி 2000ரூபாயும் மீதி 4 நாளில் முடிந்து விடும்😁

சீமானுக்கு விஜேய்க்கு ஓட்டு போட‌ போர‌வ‌ர்க‌ள் கூட‌ இளைய‌த‌லைமுறை பிள்ளைக‌ள்

முதிய‌வ‌ர்க‌ளின் ஓட்டு சீமானுக்கும் ச‌ரி விஜேய்க்கும் பெரிசா கிடைக்க‌ போவ‌து கிடையாது

18வ‌ய‌தில் இருந்து 50வ‌ய‌துக்கு உள் ப‌ட்ட‌வ‌ர்க‌ள் தான் சீமான் விஜேய்க்கு ஓட்டு போடுவின‌ம்

விஜேய் குறைந்த‌து 16ச‌த‌வீத‌ம் எடுப்பார்.சில‌து கூட‌வும் எடுக்க‌ கூடும்.................தேர்த‌ல் நேர‌ம் ப‌டித்த‌ பிள்ளைக‌ள் எடுக்கும் முடிவில் தான் மாற்ற‌ம் இருக்கும்🙏🥰...............................

  • கருத்துக்கள உறவுகள்
59 minutes ago, ரசோதரன் said:

படப்பிடிப்பு முடிந்து விட்டது............ இனிமேல் விஜய் தான் ஊர் ஊராக போக வேண்டும், கமல் டார்ச் லைட்டுடன் ஊர் ஊராக போனது போல...............

தமிழ்நாட்டு மக்களின் மீது நம்பிக்கை நல்லாவே இருக்கின்றது............. எல்லாம் முடிய, உதயசூரியனிலோ அல்லது இரட்டை இலையிலோ நிற்கும் 'அவர்களின் ஆட்கள்' பார்த்து வாக்குப் போடுவார்கள்............ 

அது ச‌ரி குருநாதா

உங்க‌ட‌ க‌ன‌வு க‌ன்னி விஜேன்ட‌ அர‌சிய‌ல் வ‌ருகைய‌ ப‌ற்றி ஊட‌க‌ம் முன்ன‌ள் சில‌த‌ சொல்லி இருந்தா அந்த‌ காணொளி பார்த்திங்க‌ளா ஹா ஹா

நான் பார்க்க‌ முத‌ல் நீங்க‌ள் பார்த்து இருப்பீங்க‌ள் என்று என் உள் ம‌ன‌ம் சொல்லுது லொள்😁👍................................

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, வீரப் பையன்26 said:

அது ச‌ரி குருநாதா

உங்க‌ட‌ க‌ன‌வு க‌ன்னி விஜேன்ட‌ அர‌சிய‌ல் வ‌ருகைய‌ ப‌ற்றி ஊட‌க‌ம் முன்ன‌ள் சில‌த‌ சொல்லி இருந்தா அந்த‌ காணொளி பார்த்திங்க‌ளா ஹா ஹா

நான் பார்க்க‌ முத‌ல் நீங்க‌ள் பார்த்து இருப்பீங்க‌ள் என்று என் உள் ம‌ன‌ம் சொல்லுது லொள்😁👍................................

🤣..............

ஆ........ பார்த்தன்...........பார்த்தன்.......

அந்த அபிநயம் பிடிக்கிற பிள்ளைக்கு தான் நான் ரசிகன்.............😜. ஆனால் அந்தப் பிள்ளையை இப்ப அவர்கள் வெளியில் கொண்டு வருகிறதே இல்லையே............

மன்னார்குடிக்கு எதிராக ஒரு போராட்டம் அறிவிக்க வேண்டும், அந்த பிள்ளையை அடுத்த முதலமைச்சர் வேட்பாளாராக அறிவியுங்கள் என்று..........

40 minutes ago, வீரப் பையன்26 said:

விஜேய் குறைந்த‌து 16ச‌த‌வீத‌ம் எடுப்பார்.சில‌து கூட‌வும் எடுக்க‌ கூடும்.................தேர்த‌ல் நேர‌ம் ப‌டித்த‌ பிள்ளைக‌ள் எடுக்கும் முடிவில் தான் மாற்ற‌ம் இருக்கும்🙏🥰...............................

பையன் சார், எவ்வளவு நேர்மறையாக இருக்க முடியுமோ அவ்வளவு நேர்மறையாக இருக்கின்றீர்கள். நம்பிக்கை தான் ஒரே பலம் என்பது போல.  உங்கள் எண்ணப்படியே நடந்தால் எனக்கும் மிக்க மகிழ்ச்சியே...............👍.

  • கருத்துக்கள உறவுகள்

உறவாடிக் கெடுக்கவேண்டும் அல்லது சேலையில் முள்விழுந்தால் சேலை கிழியாமல் எடுக்கவேணும் முள்ளை..

விஜய் திராவிடம் பேசி திராவிட விசுவாசிகளையும் தம் பக்கம் இழுக்கவேண்டும்.. பின் வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவதுபோல் மெதுவாக தமிழ்தேசியத்தை ஊட்டவேண்டும் அவர்களுக்கும்.. அவர் அதை செய்வார்.. ஏனெனில் விஜய் இயல்பில் ஒரு தமிழ்தேசியவாதி திராவிட சித்தாந்தங்களை உள்வாங்கியவர் அல்ல.. அது அவருக்கு ஒத்தும் வராது.. தேர்தலுக்காக அதை பேசுகிறார்.. பேசி ஆட்களை சேர்க்கட்டும் பின் தமிழ்தேசியத்தை ஊட்டட்டும்.. அதை செய்வார்.. அதை செய்யவைப்பதும் ஈசி.. ஏனெனில் விஜை பின்னால் இருந்து இயக்குபவர்களும் திராவிட சிந்தனையாளர்கள் அல்ல பூரா தமிழ்தேசியவாதிகள்..

வெல்லும் தமிழ்..💪

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.