Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, குமாரசாமி said:

சொந்தம் கொண்டாடுறதுக்கு எங்கடை ஆக்களை கேட்டுத்தான்...🤣

ஆனால் சும்மா ஆடுமா நம்ம குடும்பி??🤣

  • Replies 306
  • Views 15.6k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Most Popular Posts

  • பாலபத்ர ஓணாண்டி
    பாலபத்ர ஓணாண்டி

    இதுவரை தமிழ்த்தேசியம் சிறு சிறு குழுக்கள் பேசி வந்தது.. பெரும்பான்மை தமிழ்மக்களுக்கு அதை மறைத்து திராவிட மாயைக்குள் இரண்டு பெரிய கட்சிகளும் மூடி தமிழர்களை விழிப்படைய விடாமல் வைத்திருந்தனர்.. அதன் பின்

  • பிரபா,  மபொசி  இந்திய அமைதிகாக்கும் படையை வரவேற்ற செய்தி  உண்மையேயெனினும் அது தொடர்காக நான் வாசித்த இணைய தளத்தை தேடிக்கண்டுபிடிக்க முடியவில்லை. ஆனால் தமிழ் தேசியவாதியான  மபொசி எப்போதுமே விடுதலைப்புலிக

  • பாலபத்ர ஓணாண்டி
    பாலபத்ர ஓணாண்டி

    கோசான் உங்களுக்கு சீமான் பிரச்சினையா இல்லை தமிழ் தேசியம் பிரச்சினையா இல்லை ரெண்டுமே பிரச்சினையா..? நான் தமிழ்தேசியத்தை பற்றித்தான் எழுதி இருந்தேன்.. அதை விஜை எடுத்து கையாள்வது குறித்து எழுதி இருந

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, சுவைப்பிரியன் said:

எல்லாம் சரி சங்கீதாவின் சிலமனைக் கானவில்லை.

விஜைக்கும் ஸ்டாலின், சீமான் போன்றோருக்கும் உள்ள இன்னொரு வரவேற்க வேண்டிய வேறுபாடு.

அரசியல் வாழ்க்கைக்காக குடும்ப உறுப்பினர்களை வைத்து பேஷன் ஷோ நடத்துவதில்லை.

அதே போல் பலமாதங்களாக விஜை-சங்கீதா உறவு பற்றி ஊகம் பலவாறு பறந்த போதும் விஜை அலட்டி கொள்ளவில்லை. ஆனால் முரசொலி செல்வம் மரணத்துக்கு தன் சார்பில் அவரை அனுப்பி இருந்தார் என அறிகிறேன்.

சங்கீதாவோ, திரிசாவோ, எவரோ விஜயலச்சு அண்ணி மாதிரி பொது மேடை ஏறி புகார் கொடுக்காத வரை அது அவர்கள் தனிப்பட்ட விடயம்.

ஆனால் இப்போ திமுக எதையாவது கிண்டிவிட தலையால் மண் எடுப்பார்கள்🤣.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, goshan_che said:

சங்கீதாவோ, திரிசாவோ, எவரோ விஜயலச்சு அண்ணி மாதிரி பொது மேடை ஏறி புகார் கொடுக்காத வரை அது அவர்கள் தனிப்பட்ட விடயம்.

அப்பழுக்கற்ற செல்லம் திரிஷாவ இங்கே தேவையில்லாமல் உதாரணம் காட்டியமைக்கு என் கண்டனங்கள்🤣

திரிஷா கிருஷ்ணன் - தமிழ் விக்கிப்பீடியா

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, பாலபத்ர ஓணாண்டி said:

 

என் கேள்விக்கென்ன பதில் 🤣

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துகள்!

வாழ்த்துகள்!மேலும் வாய்ப்புகள் கிடைக்க வாழ்த்துகள்!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அல்வாவிற்கு பதிலாக பாயாசமா : விஜய் அண்ணனுக்கு ஒரு கடிதம்!

1331865.jpg

த.வெ.க தலைவர் அண்ணன் விஜய் அவர்களுக்கு!

அன்பு நிறைந்த வணக்கம்.

          வயதாகி அரசியலுக்கு வந்த நடிகர்கள், தன் படங்களின் வெளியீட்டின் போதெல்லாம் அரசியலுக்கு வருவேன் என பூச்சி காட்டி, தள்ளாத வயதானதும் அரசியலுக்கு வரவில்லை என அறிவித்த நடிகர், அரசியலுக்கு வந்தும் குழப்பமாய் அலையும் நடிகர்களுக்கு மத்தியில் ஒப்பீட்டளவில் இளம் வயதில், புகழின் உச்சத்தில் இருக்கும் போது அரசியல் கட்சியை துவக்கிய உங்களுக்கு முதலில் வாழ்த்துக்கள்!

          'பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்' என்று சொன்னபோதே நாம் நம் எதிரியை முடிவுசெய்துவிட்டோம். நாட்டைப் பாழ்படுத்தும் பிளவுவாத அரசியல் செய்வோர்தான் தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கை ரீதியான முதல் எதிரி, ”திராவிட மாடல் ஆட்சி என்று பெரியார், அண்ணா பெயரை வைத்து தமிழ்நாட்டைச் சுரண்டிக் கொள்ளையடிக்கும் ஒரு குடும்ப சுயநலக் கூட்டம்தான் அடுத்த எதிரி” என்ற வார்த்தைகளும்,

          ”கொள்கை கோட்பாட்டளவில் திராவிடம், தமிழ் தேசியம் ஆகிய இரண்டும் நமது இரண்டு கண்கள், நம்மோடு கூட்டணி வைப்பவர்களுக்கு ஆட்சி அதிகாரத்தில் பங்கீடு” என நீங்கள் விடுத்த அழைப்பும், அதிகாரப் பகிர்வு, சாதிவாரி கணக்கெடுப்பு ஆதரவு,  சாதி, மதம், இனம், மொழி, பாலினம், பணம் என்று பிரிக்கும் பிளவுவாத அரசியலையும், ஊழல் மலிந்த அரசியல் கலாசாரத்தையும் எதிர்ப்பது என்று சிறப்பாக பேசினீர்கள். வாழ்த்துக்கள்.

          ஆனால் உங்கள் குழப்பம் எங்கு துவங்கியது? “ஒரு கூட்டம் யார் அரசியலுக்கு வந்தாலும் அவர்கள் மீது குறிப்பிட்ட ‘கலரைப்’ பூசி, ‘ஃபாசிசம்’ என்று பேசிக்கொண்டு, சிறுபான்மை, பெரும்பான்மை பயத்தைக் காட்டுகிறார்கள்” என்பதில்தான் துவங்கியது.

          திருமலை படத்தில் வாழ்க்கை ஒரு வட்டம்டா எனும் போதும், போக்கிரி படத்தில் கஞ்சா பிடிக்க போலிஸ் வரும் கைப்பந்தாட்ட காட்சியிலும், பிகில் படத்தில் ”பிகிலு கப்பு முக்கியம் பிகிலு” என அப்பா விஜய் சொல்லும் போது மகனாக நீங்கள் தோன்றும் காட்சியிலும், சர்கார் படத்தில் பழ.கருப்பையாவை மேடையில் வைத்துக்கொண்டு பேசும் காட்சியிலும் இருந்த அந்த அபாரமான நடிப்பாற்றலை விக்கிரவாண்டி மேடையிலும் கண்டு உங்கள் ரசிகர்களை போல நானும் பிரமித்தேன்.

          அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் “திமுகவுக்கு எதிராக எடப்பாடி பழனிசாமி முதல் நிலையில் நின்று போராடிக் கொண்டிருக்கிறார். எங்கள் போராட்டக் களத்தின் மறு வடிவமாகத்தான் தவெக மாநாட்டை பார்க்கிறோம். எங்களின் எண்ணங்கள் ஒன்றாக இருக்கின்றன. எங்களுடைய எதிரிகள் ஒன்றாக இருக்கிறார்கள்” என்று சொன்னது கொஞ்சம் குழப்பமாகதான் இருக்கிறது. எனெனில் நீங்கள் திமுக மட்டுமே ஊழல் கட்சி என குறிப்பிட்டது, அவரை உற்சாகபடுத்தி இருக்கக்கூடும்.

          நேற்று வரை என் தம்பி விஜய் என் அரசியலைத்தான் பேசுகிறார் என வழக்கம்போல உளறிக் கொட்டிக் கொண்டிருக்கும் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் ”திராவிடமும் தமிழ் தேசியமும் ஒன்று இல்லை. அது இரண்டும் கண்களாக இருக்க முடியாது, கொடிய புண்ணாகத்தான் இருக்கும்” என்று பொரிந்து தள்ளி இருப்பதும் கவனத்தில் கொள்ள தக்கதுதான். அது இருக்கட்டும்,

          மாநாடு நடைபெறும் இடத்தில் அமைக்கப்பட்டுள்ள கட்-அவுட்கள் குறித்து சமூக ஊடகங்களிலும் அரசியல் அரங்கிலும் பரவலாக விவாதிக்கப்படுகிறது. ஒருபுறம் வேலுநாச்சியார், காமராஜர், பெரியார், மறுபுறம் அம்பேத்கர், சுதந்திர போராட்டர் வீரர் அஞ்சலை அம்மாள் ஆகியோருக்கு நடுவே நீங்கள் நிற்பது போன்று கட்-அவுட் அமைக்கப்பட்டுள்ளது. அண்ணா, இந்தா கட் அவுட்டுகளுக்கு பின்னால் இருக்கும் சாதிய கணக்கீடு தெரியாத அப்பாவிகள் அல்ல தமிழக மக்கள்!

          அதுவல்லாமல், ஜனநாயகத்தில் மன்னர்களுக்கு எந்த வேலையும் இல்லை, ஆனாலும் சேர, சோழர், பாண்டிய மன்னர்களுக்கும் கட் - அவுட் வைத்தது அபத்ததின் உச்சத்தை தொட்டுள்ளீர்கள்! இருக்கட்டும் உங்களுக்கு உள்ள குழப்பத்தை எப்படியும் பேசி தீர்கலாம்.

          ஆனால் உங்கள் மாநாடு உரையில் நீங்கள் திட்டமிட்டு தவிர்த்த மூன்று  பிரச்சினையின் தீவிரத்தை சுட்டிகாட்ட விரும்புகிறேன்.

1.  உங்கள் உரையில் எங்கும்  இந்திய நாட்டை சுரண்டி கொழுக்கும் கார்ப்ரேட் சக்திகள் குறித்த வார்த்தைகளை தப்பி தவறியும் சொல்லவில்லை.  கத்தி படம் முழுக்க முழுக்க விவசாயத்தில் கார்ப்ரேட் கம்பெனிகள் அடிக்கும் கொள்ளையை பற்றி வசனங்களுக்கு வாய் அசைத்தது நீங்கள்தான். ஆனால் உழைப்பாளி மக்களின் சொத்துக்களையெல்லாம் கார்ப்ரேட் கம்பெனிகளுக்கு தாரைவார்க்கும் அரசியலை நீங்கள் தொடவே இல்லை.  நூறு நாள் வேலைக்கு  இரண்டு லட்சம் கோடியை வெட்டி சுருக்கிய ஒன்றிய பிஜேபி அரசு, அதானிகளுக்கும் அம்பானிகளுக்கும் பல லட்சம் கோடிகளை வரி சலுகையாக வழகுவது உங்களுக்கு பெரிய பிரச்சினையாக தெரியவில்லை போலும்.

2. ஊழலுக்கு எதிராக சிலம்பாட்டம் ஆட தயார் என அறிவித்த நீங்கள் ஊழல் வழக்கால் தண்டனை பெற்ற ஒரு கட்சி குறித்து எதுவும் பேசாததும், தேர்தல் பத்திரங்கள் மூலம் கோடி கோடியாய் வாரி சுருட்டியவர்களையும், கொடுமையான கொரோனா நோய் தொற்று காலத்தில் பி.எம் கேர்ஸ் மூலம் பல்லாயிரம் கோடி கொள்ளை அடித்தவர்கள் குறித்தும் வாய் திறக்காததும் உங்கள் ஊழல் எதிர்ப்பை பல் இளிக்க வைக்கிறது என்பதை புரிந்து கொள்வீர்களா?

3. இறுதியாக பாசிசம் குறித்த உங்கள் பேச்சு எத்தனை புரிதல் அற்றது என்பதை அறிவீர்களா? பாசிசம் என்பது மதத்தின் பெயரால், சாதியின் பெயரால், இனத்தின் பெயாரால் அல்லது ஏதோ ஒரு அடையாளத்தின் பெயரால் எதிரிகளை கட்டமைத்து அவர்களை வெறுத்தொதுக்குவது. அரசியல் அதிகாரத்திற்காக படுகொலைகளை செய்வது. சிறுபான்மையினரை குறிவைத்து அழிப்பது. இந்த அம்சங்கள் அனைத்து பொருந்துகிற பாசிச பாஜக குறித்து ஒரு வார்த்தைகூட பேசாமல் உங்களால் ஒரு மாநாடு நடத்த முடியும் என்றால், தமிழக மக்களுக்கு அல்வாவுக்கு பாயாசம் கொடுப்பது நீங்கள் தான் என்பதை உணர்ந்து கொள்ளுங்கள்! 

          இதுவரை தமிழக மக்களுக்கு பல கட்சிகள் அல்வா கொடுத்தனர், புதிதாக நீங்கள் பயாசம் கொடுக்க கிளம்பி உள்ளீர்கள் என்பதை தவிர வேறென்ன உங்களிடம்  வித்தியாசம் உள்ளது. சமதர்மம் என்பது வார்த்தைகளில் இல்லை அண்ணா, அது கொள்கையின் வெளிப்பாடு. உங்கள் கொள்ளை பிரகடனம் வெற்று வார்த்தைகளாய் காற்றில் கரையாமல் இருக்க வேண்டுமெனில் சமூகத்தின் உண்மையாக பிரச்சினைகளை கண் கொண்டு பாருங்கள்! நன்றி!

அன்புடன்

எஸ்.ஜி.ரமேஷ்பாபு

https://natputanramesh.blogspot.com/2024/11/blog-post.html

Edited by ஏராளன்
வெளிப்பாடு

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, goshan_che said:

என் கேள்விக்கென்ன பதில் 🤣

நேரம் இல்லை.. கொஞ்சம் பர்சனல் வேலையாக லண்டன் வந்து போயிருக்கிறன்..நம்மூரு எலெக்சன் வேறு.. பிசி.. 

பதில் எழுதி விவாதிச்சு சில்லறையை சிதறவிடுற அளவுக்கு ஈழத்தமிழருக்கு ரெம்ப முக்கிமான மேட்டர் இது இல்லை.. இல்லை என்றால் எவ்வளவு பிசி என்றாலும் பதில் எழுதி இருப்பன்..

இந்த விடயத்தில் கருத்துதான் முக்கியம். அதை ஏற்கனவே எழுதிவிட்டேன்..

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, பாலபத்ர ஓணாண்டி said:

நேரம் இல்லை.. கொஞ்சம் பர்சனல் வேலையாக லண்டன் வந்து போயிருக்கிறன்..நம்மூரு எலெக்சன் வேறு.. பிசி.. 

பதில் எழுதி விவாதிச்சு சில்லறையை சிதறவிடுற அளவுக்கு ஈழத்தமிழருக்கு ரெம்ப முக்கிமான மேட்டர் இது இல்லை.. இல்லை என்றால் எவ்வளவு பிசி என்றாலும் பதில் எழுதி இருப்பன்..

இந்த விடயத்தில் கருத்துதான் முக்கியம். அதை ஏற்கனவே எழுதிவிட்டேன்..

நல்லது….

இனியாவது யாழ்களத்தில் இப்போ எல்லாம் முன்னர் போல குறுக்கு கேள்வி கேட்க யாரும் இல்லை என்ற நினைப்பில் மனம் போனபோக்கில் ஆதாரமற்ற கட்டுகதைகளை அவிழ்து விடலாம் என நினைக்கும் எவருக்கும் இது ஒரு பாடமாக இருக்கட்டும்.

பிகு.

உங்கள் கருத்து முக்கியம் மறுக்கவில்லை.

ஆனால் நீங்கள் கூறிய

1. விஜை பின்னால் இருந்து தமிழ் தேசியவாதிகள் இயக்குகிறனர்

2. விஜை திராவிடத்தை உறவாடி கெடுக்க நினைக்கிறார் 

இவை இரண்டும் கருத்துக்கள் அல்ல. 

நீங்கள் இதை ஊகமாக கூட சொல்லவில்லை.

தரவு போல் அடித்து விட்டீர்கள்.

அதை நம்பி இரு அப்பாவிகள் லைக் வேறு போட்டார்கள்.

உங்கள் நேரம் போலவே வாசகர் நேரமும் பொன்னானதே. அதை ஆதாரமற்ற தகவல்கள் கூறி வீணடிக்க வேண்டாமே🙏.

கனவு காண எல்லாருக்கும் உரிமை உள்ளது, ஆனால் நாம் காணும் கனவை நிஜம் என பொதுவெளியில் எழுதும் போது கேள்விகள் வரத்தான் செய்யும்.

பதில் சொல்லமுடியாவிட்டால் பம்மலாம் அல்லது நேரத்தை சாட்டலாம். வேறு வழியில்லை.

இலண்டன் பயணம் சிறப்புற வாழ்த்து.

  • கருத்துக்கள உறவுகள்
On 28/10/2024 at 19:12, Justin said:

இப்ப உதாரணமாக ஒருவர் உங்களை நோக்கி "இறுதிப் போருக்கு சேர்த்த காசை ஆட்டையப் போட்ட கூட்டம்"😎 என்று சுட்டினால் நீங்கள் அப்படியான ஒருவரில்லையானால் உங்களைத் தாக்குமல்லவா? 

எனக்குத்தெரியும் நான் அந்த கூட்டத்தை சேர்ந்தவனில்லை என்று. நானிருக்கும் இடத்தில் அப்படியொரு நிதி சேகரிப்பு நடைபெறவும் இல்லை. அதனால் அதை கூறிவிட்டு கடந்து சென்றுவிடுவேன். அதற்காக ஒருவர் எதற்கெடுத்தாலும் போராட்டத்த்தையும் தலைவரையும் கொச்சைப்படுத்துவதை எப்படி நியாயப்படுத்துகிறீர்கள்??

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, Eppothum Thamizhan said:

எனக்குத்தெரியும் நான் அந்த கூட்டத்தை சேர்ந்தவனில்லை என்று. நானிருக்கும் இடத்தில் அப்படியொரு நிதி சேகரிப்பு நடைபெறவும் இல்லை. அதனால் அதை கூறிவிட்டு கடந்து சென்றுவிடுவேன். அதற்காக ஒருவர் எதற்கெடுத்தாலும் போராட்டத்த்தையும் தலைவரையும் கொச்சைப்படுத்துவதை எப்படி நியாயப்படுத்துகிறீர்கள்??

நியாயப் படுத்துவதும், கண்டிப்பதும் ஒரு பக்கம் இருக்கட்டும் - இதைச் செய்ய வழிகள் உண்டு. இன்னொருவரைப் பற்றித் தெரியாமல், எப்படி கீழ்த்தரமாக "நக்கிப் பிழைப்பவர்" என்று சும்மா எழுதுகிறீர்கள்😂? இது மட்டும் தான் என் கேள்வி.

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, Justin said:

நியாயப் படுத்துவதும், கண்டிப்பதும் ஒரு பக்கம் இருக்கட்டும் - இதைச் செய்ய வழிகள் உண்டு. இன்னொருவரைப் பற்றித் தெரியாமல், எப்படி கீழ்த்தரமாக "நக்கிப் பிழைப்பவர்" என்று சும்மா எழுதுகிறீர்கள்😂? இது மட்டும் தான் என் கேள்வி.

நான் தனிநபரை குறிப்பிடவில்லையே. கூட்டம் என்றுதான் குறிப்பிட்டேன். ஸ்ரீலங்காவில் யார் ஆட்சிக்கு வந்தாலும் உடனே சரணாகதியடைந்து கொடுப்பதை பெற்றுக்கொள்ளும் கூட்டம் யாரென்று உங்களுக்கு தெரியாதா என்ன!!

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, Eppothum Thamizhan said:

நான் தனிநபரை குறிப்பிடவில்லையே. கூட்டம் என்றுதான் குறிப்பிட்டேன். ஸ்ரீலங்காவில் யார் ஆட்சிக்கு வந்தாலும் உடனே சரணாகதியடைந்து கொடுப்பதை பெற்றுக்கொள்ளும் கூட்டம் யாரென்று உங்களுக்கு தெரியாதா என்ன!!

இங்கே "கூட்டங்கள், குழுக்கள்" தான் அவதாராக யாழில் இருக்கிறார்களா? இது நான் அறியாத விடயம்😎. நான் நினைத்தேன், தனி நபர்கள் தான் உறுப்பினர்களாக இருக்கிறார்கள், எனவே அந்த தனி நபர் நோக்கி நீங்கள் செய்வது போன்ற வசவுகளை வீசும் போது அது தனி நபர் தாக்குதலாக இருக்கிறதென.

இன்னொரு கேள்வி, ஐலண்ட் எந்தக் "கூட்டம்" என்று எப்படிக் கண்டு பிடித்தீர்கள்?

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, goshan_che said:

நல்லது….

இனியாவது யாழ்களத்தில் இப்போ எல்லாம் முன்னர் போல குறுக்கு கேள்வி கேட்க யாரும் இல்லை என்ற நினைப்பில் மனம் போனபோக்கில் ஆதாரமற்ற கட்டுகதைகளை அவிழ்து விடலாம் என நினைக்கும் எவருக்கும் இது ஒரு பாடமாக இருக்கட்டும்.

பிகு.

உங்கள் கருத்து முக்கியம் மறுக்கவில்லை.

ஆனால் நீங்கள் கூறிய

1. விஜை பின்னால் இருந்து தமிழ் தேசியவாதிகள் இயக்குகிறனர்

2. விஜை திராவிடத்தை உறவாடி கெடுக்க நினைக்கிறார் 

இவை இரண்டும் கருத்துக்கள் அல்ல. 

நீங்கள் இதை ஊகமாக கூட சொல்லவில்லை.

தரவு போல் அடித்து விட்டீர்கள்.

அதை நம்பி இரு அப்பாவிகள் லைக் வேறு போட்டார்கள்.

உங்கள் நேரம் போலவே வாசகர் நேரமும் பொன்னானதே. அதை ஆதாரமற்ற தகவல்கள் கூறி வீணடிக்க வேண்டாமே🙏.

கனவு காண எல்லாருக்கும் உரிமை உள்ளது, ஆனால் நாம் காணும் கனவை நிஜம் என பொதுவெளியில் எழுதும் போது கேள்விகள் வரத்தான் செய்யும்.

பதில் சொல்லமுடியாவிட்டால் பம்மலாம் அல்லது நேரத்தை சாட்டலாம். வேறு வழியில்லை.

இலண்டன் பயணம் சிறப்புற வாழ்த்து.

உங்களுக்கு என்னப்பா காசை உழைச்சு செயார் மார்க்கெற்றில போட்டிட்டு காலாட்டிக்கொண்டு இருந்து பந்தி பந்தியா எழுதிவியள்.. 😂நமக்கு உழைக்கபோனாதான் சோறு.. எப்படியாவது நேரம் ஒதுக்கி பதில் எழுதுறன்..

  • கருத்துக்கள உறவுகள்
44 minutes ago, Justin said:

இன்னொரு கேள்வி, ஐலண்ட் எந்தக் "கூட்டம்" என்று எப்படிக் கண்டு பிடித்தீர்கள்?

இதுகூட தெரியாமல்தான் யாழில் கருத்தெழுதுகிறீர்களா? நம்பீட்டன்!

  • கருத்துக்கள உறவுகள்
23 minutes ago, Eppothum Thamizhan said:

இதுகூட தெரியாமல்தான் யாழில் கருத்தெழுதுகிறீர்களா? நம்பீட்டன்!

நீங்கள் அவரை நோக்கி "தொப்பி பிரட்டி" என்று இஸ்லாமியரைக் குறிக்கும் வசைச் சொல் பாவிப்பதைக் கண்டிருக்கிறேன். "இங்கே நிற்கும் மூவரையும் உற்றுக் கவனித்தால் ஒரு ஒற்றுமை தெரியும் பாருங்கள்" என்று ஒரு இடத்தில் dog whistle விட்டிருந்ததையும் கவனித்திருந்தேன்😂! உங்கள் அளவுக்கு ஏழாம் அறிவு எனக்கு இல்லை!

ஆனால், எப்படி அறிந்தீர்கள், எப்படி உறுதிப் படுத்திக் கொண்டீர்கள்? ஒரு பேச்சுக்கு உங்கள் ஊகம் உண்மையாக இருந்தால் கூட, கருத்துகளுக்குப் பதில் எழுதாமல் அவர் சார்ந்த மதக் குழுவைக் குறி வைத்து வசவுகளை எறிவதும் விதி மீறல் அல்லவா?  

Edited by Justin

  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, Eppothum Thamizhan said:

இதுகூட தெரியாமல்தான் யாழில் கருத்தெழுதுகிறீர்களா? நம்பீட்டன்!

க‌ட‌ந்து செல் ந‌ண்பா

ஈழ‌ ம‌ண்ணில் ம‌க்க‌ள் இப்போதைக்கு நின்ம‌தியாய் இருப்ப‌தையே விரும்புகிறேன்

 

க‌த்தி இன்றி யுத்த‌ம் இன்றி த‌னி நாடு அட‌ந்த‌வ‌ர்க‌ளும் இருக்கின‌ம்......................கால‌ம் ஏதோ ஒரு நாள் ச‌ரியான‌ தீர்ப்பை சொல்லும் அது ந‌ம‌க்கு பெரும் ம‌கிழ்ச்சியா இருக்கும்🙏🥰.........................

  • கருத்துக்கள உறவுகள்
36 minutes ago, பாலபத்ர ஓணாண்டி said:

உங்களுக்கு என்னப்பா காசை உழைச்சு செயார் மார்க்கெற்றில போட்டிட்டு காலாட்டிக்கொண்டு இருந்து பந்தி பந்தியா எழுதிவியள்.. 😂நமக்கு உழைக்கபோனாதான் சோறு.. எப்படியாவது நேரம் ஒதுக்கி பதில் எழுதுறன்..

நான் இன்னும் டிரைவர் வைக்கும் அளவுக்கு உயரவில்லை ப்ரோ…

அதுக்கு அப்பறம் வேலைக்காரி வேற வைக்கணும்🤣.

சரி நேரம் கிடைக்கும் போது ஆதாரத்தை பாகிரவும்.🤣.

பிகு

நீங்கள் எனக்கு பதில் எழுதி செலவழித்த நேரத்துக்கு இரெண்டு ஆதாரத்தை தட்டி விட்டிருக்கலாம் என யாரும் நினைச்சால் நான் பொறுப்பல்ல👻

  • கருத்துக்கள உறவுகள்

தமிழக நாளை தமிழ்நாட்டில் இரண்டுகட்சிகள் கொண்டாடுகின்றன.. ரெண்டும் தமிழ்தேசியம் பேசும் கட்சிகள்.. நாம் தமிழர் மற்றும் தமிழக வெற்றிக்கழம்.. திமுக உடன் பிறப்புகள் இதற்கு எதிராக களமாடுகின்றனர்..  உலகெங்கும் உள்ள தமிழ்தேசியவாதிகளுக்கு தமிழக வெற்றிக்கழகம் இன்னுமொரு பலமாக வந்து சேர்ந்ந்திருக்கிறது..

——-

1956இல் மொழிவாரி மாகாணங்கள் அமைக்கப்பட்டதன் மூலம், நம்முடைய மாநிலம் நிலப்பரப்பு அளவில், தனி மாநிலமாக உருவெடுத்த தினமே நவம்பர் 1.

மதராஸ் மாகாணமாக இருந்த நமது மாநிலத்திற்குத் தமிழ்நாடு என்று பெயர் சூட்டக் கோரி, தியாகி சங்கரலிங்கனார் உண்ணாவிரதம் இருந்து உயிரும் துறந்தார். இதைத் தன் இதயத்தில் தாங்கிய, கனிவின் திருவுருவம் பேரறிஞர் பெருந்தகை அண்ணா, தான் ஆட்சிக்கு வந்ததும் சட்டமன்றத்தில் தீர்மானம் இயற்றி, தமிழ்நாடு என்று பெயர் சூட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழர் பகுதிகளைத் தமிழ்நாட்டுடன் இணைக்கப் போராட்டம் நடத்திய எல்லைப் போராளிகளின் தியாகங்களையும் இன்னாளில் நினைவு கூருவோம்.

தியாகப் பெரும் பின்னணியில் தமிழர்களுக்கு என்று ஒரு தனி மாநிலம் பிறந்த இந்த நாளை (நவம்பர் 1) வரலாற்று நினைவுகளுடன் தமிழ்நாடு தினமாகப் போற்றி மகிழ்வோம்.

- தமிழக வெற்றிக்கழகம்

———-

———-

 

01.11.1956 அன்று மொழிவாரி மாநிலம் பிரிக்கப்பட்ட போது தமிழ்நாட்டின் முதலமைச்சர் திரு.காமராசர். அப்போது தமிழ்நாடு என்ற பெயர் கிடையாது.  மெட்ராஸ் மாநிலம் அல்லது மெட்ராஸ் மாகாணம்(Madras Presidency)  என்று பெயர். 14.01.1969 அன்று அண்ணா அவர்கள் தமிழ்நாடு என்று சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றி பெயர் மாற்றினார். 

மொழிவாரி மாநிலம் அமைக்கப்பட்ட போது தமிழ்நாட்டின் பலப்பகுதிகளை கேரளா கர்நாடகா ஆந்திரா மாநிலங்களுக்கு காமராசர் விட்டுக் கொடுத்தார். தேசியவாதியான காமராசர் இந்தப் பகுதிகள் இந்தியாவிற்குள்தானே இருக்கிறதென்று மற்ற மாநிலங்களுக்கு விட்டுக் கொடுத்தார். ஆனால் நம் பகுதிகளை பெற்றுக் கொண்ட மாநிலங்கள் நம்மை அவர்களின் சகோதரரர்களாக நினைக்கவில்லை. 

காமராசர் தமிழ்நாடு பகுதிகளை விட்டுக் கொடுத்ததை தமிழ்த் தேசியர்கள் பேசாமல் நைசாக கடந்துவிடுவார்கள். தமிழ்தேசியர்களின் பிரதானப் பணி சாதிகளை உயர்த்திபிடிப்பது. அதற்கு இடைஞ்சலாக வரும் எதைப்பற்றியும் பேசமாட்டார்கள். 

உண்மையில் 01.11.1956 அன்று நாம் நம் பகுதிகளை இழந்த நாள். அதை எப்படி தமிழ்நாடு நாள் என கொண்டாட முடியும்?

- திமுக உடன் பிறப்புகள்

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு மாநிலத்தின் பெயரில் ஒரு  கொண்டப்படும் “தமிழ் நாடு நாள்” எப்போது என்பதிலேயே ஒரு பொதுவான புரிந்துணர்வுக்கு வரமுடியாத அளவுக்கு அரசியல் காழ்புணர்வுக்கு ஆட்பட்டிருக்கிறார்கள் என்றால் இதை என்னவென்று சொல்வது.  

அன்று  பேரறிஞர் அண்ணா உத்தியோகபூர்வமாக தமிழ் நாடு  என்ற பெயரை சூட்டியிருக்காமல் விட்டிருந்தால் எந்தக் கலத்திலும் அந்த பெயரை வைக்க முடியாமல் போயிருக்கும். ஏனென்றால் தமிழ் நாடு என்ற பெயரைப் பார்தது எரிச்சலடைந்த சங்கிகள் அதனை  மாற்றி தமிழகம் என்று வைக்க அல்லது  முடிந்தால் தக்‌ஷனபிரதேசம் என்றை வைக்கவேண்டும் என று சங்கிகள் துடியாய் துடித்துக்கொண்டிருக்கிறார்கள். 

Edited by island

  • கருத்துக்கள உறவுகள்

இன்று தமிழ்நாடு நாள் இல்லை.. தமிழக பகுதிகளை இழந்த நாள்.! விஜய்க்கு போட்டியாக பேசிய திருமாவளவன்? மொழிவாரி மாகாணங்களாக பிரிக்கப்பட்டு தமிழர்களுக்கு தனி மாநிலம் உருவாக்கப்பட்ட நாளான இன்று தமிழ்நாடு தின வாழ்த்து தெரிவித்துள்ளார் தவெக தலைவர் விஜய். ஆனால், இன்று தமிழ்நாடு நாள் இல்லை, நாள் நமக்கு இழப்பு ஏற்பட்ட நாள் என கூறியுள்ளார் விசிக தலைவர் திருமாவளவன். கடந்த 1956 ஆம் ஆண்டு நவம்பர் 1ஆம் தேதி இந்தியாவில் மொழிவாரி மாநிலங்கள் உருவாக்கப்பட்டன. அதன் அடிப்படையில் ஆந்திரா, கர்நாடகா, கேரளா உள்ளிட்ட மாநிலங்கள் நவம்பர் 1ஆம் தேதியை தத்தமது மாநில தினமாக கொண்டாடி வருகின்றன. கடந்த 2019 ஆம் ஆண்டு, நவம்பர் 1 ஆம் தேதி தமிழ்நாடு நாளாக கொண்டாடப்படும் என அன்றைய முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்து அரசாணை வெளியிட்டார். "2026 இல் 5 முனைப் போட்டி? விஜய்யின் மைனஸ் பாயிண்ட்ஸ் : திருமா டிகோட் " ஆனால், சென்னை மாகாணம் என்ற பெயரை தமிழ்நாடு என பெயர் மாற்ற 1968 ஜூலை 18 ஆம் தேதி அன்றைய முதல்வர் அண்ணா சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றினார். அதன்படி ஜூலை 18 ஆம் தேதியே தமிழ்நாடு நாளாக கொண்டாடப்படும் என 2022 ஆம் ஆண்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். அதன்படி, ஜூலை 18 ஆம் தேதியன்று தமிழ்நாடு அரசு சார்பில் தமிழ்நாடு நாள் கொண்டாடப்பட்டு வருகிறது. எனினும், அதிமுக, பாஜக, நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட கட்சிகள் இன்றே தமிழ்நாடு நாளை கொண்டாடி வருகின்றன. இந்நிலையில் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், இன்று தமிழ்நாடு நாள் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். ஆனால் இன்று தமிழக பகுதிகளை இழந்த நாள் என கூறியுள்ளார் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவரான திருமாவளவன்.  இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்," 1956 ஆம் ஆண்டு நவம்பர் 01ஆம் நாள் மொழி அடிப்படையில் மாநிலங்கள் பிரிக்கப்பட்டன. எனவே ஆண்டுதோறும் நவம்பர் முதல் நாளை நமது அண்டை மாநில அரசுகளும் அம்மாநில மக்களும் 'மாநிலம் உருவான நாளாக' மகிழ்ச்சியோடு கொண்டாடி வருகின்றனர். தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில், இந்நாளை மகிழ்ச்சியாகக் கொண்டாட இயலாத நிலை. ஏனெனில், நிலபரப்பு அடிப்படையில் தமிழ்நாடு புதிதாக உருவான மாநிலம் அல்ல. "தமிழ்நாட்டில் விஜய் உரை மெய்சிலிர்க்க வைத்தது.. துணிச்சல் பேச்சு.. பாரிவேந்தர் கருத்து" தமிழ்நாட்டை மையமாகக் கொண்ட சென்னை மாகாணத்திலிருந்து மொழிவழி மாநிலங்கள் பிரிக்கப்பட்டபோது பல பகுதிகளை நாம் அண்டை மாநிலங்களுக்கு இழக்க நேர்ந்துவிட்டது. எனவே, இந்த நாள் நமக்கு இழப்பு ஏற்பட்ட நாளாகும். எனினும் தமிழர்களின் அதிகாரப்பூர்வமான 'உரிமை நிலமாக' எல்லை வரையறைகளைப் பெற்றது. எனவே, இந்த நாளை "தமிழர் இறையாண்மை நாளாக" விடுதலைச் சிறுத்தைகள் கட்சி கருதுகிறது. கடந்த 1956 ஆம் ஆண்டு மொழிவாரி மாநிலங்கள் உருவாக்கப்பட்டதையொட்டி மாநிலம் உருவான பொன்விழா 2006 ஆம் ஆண்டு நடந்தது. அதற்கு முன்பாக அன்றைய முதலமைச்சர் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் சந்தித்து இனியாவது ஒவ்வொரு ஆண்டும் நாமும் நவம்பர் 01ஆம் நாளை நமது அண்டை மாநிலங்களைப் போல "மாநில நாளைக்" கடைபிடிக்கலாம் என்று கேட்டோம். "நாம் நமது நிலப்பகுதிகளை இழந்திருக்கிறோம். அதை எப்படிக் கொண்டாடுவது? அதனால் தான் அந்த நாளை எல்லைப் போராட்ட ஈகியர் நாளாக நாம் கடைப்பிடிக்கிறோம்" என்று அவர் விளக்கம் அளித்தார். அவர் கூறியது உண்மைதான் எனினும் இனிமேல் தமிழ்நாட்டிலிருந்து பறிபோன நிலப் பகுதிகளை மீட்பதற்கு வாய்ப்பில்லை; நம்மிடமிருந்து பறிக்கப்பட்ட உரிமைகளை மீட்போம் என்கிற அடிப்படையில் இந்நாளை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் 'தமிழர் இறையாண்மை நாள்' என அறிவித்து அதனைக் கடைப்பிடித்து வருகிறோம். அதாவது, ஒன்றிய அரசால் பறிக்கப்பட்ட தமிழ்நாட்டு மக்களின் உரிமைகளை மீட்பதற்கு உறுதி ஏற்கும் நாளே இந்தத் தமிழர் இறையாண்மை நாளாகும். "அரசியலுக்கு போன விஜய்.. அஜித் ’சாருக்கு’ வாழ்த்து சொன்ன உதயநிதி! இணைந்து செயல்பட ‘திடீர்’ அழைப்பு! " தமக்கென அதிகாரங்களைக் கொண்ட மாநில அரசுகள், அவை சேர்ந்த ஒரு கூட்டரசுதான் இந்தியா - அதுதான் அரசியலமைப்புச் சட்டத்தை இயற்றித்தந்த புரட்சியாளர் அம்பேத்கர் அவர்கள் உள்ளிட்ட நம்முடைய முன்னோர்களுடைய முடிவு. ஆனால், அந்த முடிவுக்கு மாறாக இந்திய ஒன்றிய அரசுக்கென அதிகாரப்பட்டியலில் குறிப்பிடப்பட்ட அதிகாரங்களை மீறி, மாநிலப் பட்டியலில் இருக்கின்ற அதிகாரங்களில் தலையிடுகின்ற நிலை 1950 -களிலேயே துவங்கிவிட்டது. 1951ஆம் ஆண்டிலே இயற்றப்பட்ட தொழிற் சாலைகள் சட்டம், மாநில அரசுகளின் அதிகாரப் பட்டியலில் 23 ஆவதாக வைக்கப்பட்டிருந்த அதிகாரங்களைக் குறைத்தது.1955ஆம் ஆண்டில் இயற்றப்பட்ட 'அத்தியாவசிய பண்டங்கள் சட்டம்' மாநில அரசுகள் என்னென்ன பண்டங்களின்மீது வரிவிதிக்கலாம், அவற்றை எப்படிக் கையாளலாம் என்பதை தடுத்துச் சுருக்கியது. 1957இல் இயற்றப்பட்ட 'கனிமவளங்கள் சட்டம்' மாநில அரசுகளின் பொருளாதாரத் தற்சார்புக்கு வேட்டுவைத்தது. இப்படி தொடர்ந்து மாநில உரிமைகள் குறுக்கப்பட்டதால், பறிக்கப்பட்டதால் நெருக்கடிக்கு ஆளான மாநிலக் கட்சிகள் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டன. அந்தக் குரல் முதலில் தமிழ் நாட்டிலிருந்துதான் எழுந்தது. Advertisement நாடு சுதந்திரம் அடைந்து பத்து ஆண்டுகள் வரை ஒன்றிய அரசை ஆண்ட கட்சியும், மாநிலங்களில் ஆண்ட கட்சியும் ஒரே கட்சியாக இருந்த காரணத்தினால் 'மாநில உரிமைகள்' என்கிற பிரச்சினை உட்கட்சிப் பிரச்சினையாக மட்டுமே முதலில் பார்க்கப்பட்டது. 1967ஆம் ஆண்டு தேர்தலில்தான் காங்கிரஸ் அல்லாத கட்சிகள் பல மாநிலங்களில் வெற்றிப்பெற்று ஆட்சி அமைத்தன. அதன் விளைவாகத்தான் 'மாநில சுயாட்சி' முழக்கம் தமிழ் நாட்டிலிருந்து வீறுகொண்டு எழுந்தது . அதுமட்டுமல்ல 1980க்குப் பிறகு ஒன்றிய அரசைக் கைப்பற்றி ஆட்சி செய்தவர்கள் பின்பற்றிய தாராளமய பொருளாதாரக் கொள்கை, அதனடிப்படையில் அவர்கள் மேற்கொண்ட ஒப்பந்தங்கள், அதனால் மாநில அரசுகளும், மக்களும் பாதிக்கப்பட்டார்கள். அந்த ஒப்பந்தங்களின் சுமை மாநில அரசுகளின் தலையில் விழுந்தது. தாராளமய, தனியார்மயப் பொருளாதாரக் கொள்கைகளும், இந்திய ஒன்றிய அரசாங்கத்தில் இருக்கின்றவர்கள் தொடர்ந்து அதிகாரங்களைத் தம்வசம் குவித்துக்கொண்ட போக்கும்; மாநில இறையாண்மை குறித்து வலியுறுத்த வேண்டியதன் தேவையை அதிகரித்துள்ளன. ஒரே நாடு, ஒரே மதம் , ஒரே மொழி என இதுவரைப் பேசிவந்த பாஜகவினர் இப்போது 'ஒரே நாடு ஒரே தேர்தல்' எனப் பேசத் தொடங்கியுள்ளனர். இந்தத் திட்டம் ஒட்டுமொத்தமாக மாநில அளவிலான அரசியல் கட்சிகளை ஒழித்துவிட்டு மாநில அரசுகளை ஒன்றிய அரசின் பிடிக்குள் கொண்டுவருவதாகும். இந்நிலையில், இதுவரை ஒன்றிய அரசால் பறிக்கப்பட்ட தமிழ்நாட்டின் உரிமைகளை மீட்டெடுப்பதும், அதற்குத் தமிழர் இறையாண்மை குறித்த விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்துவதும் இன்றியமையாததாகும். அதன்மூலம் தமிழர் இறையாண்மையைப் பாதுகாக்கவும் தமிழ்நாட்டின் உரிமைகளை மீட்டெடுக்கவும் இந்நாளில் உறுதியேற்போம்!" என கூறியுள்ளார்

Read more at: https://tamil.oneindia.com/news/chennai/vijay-and-thirumavalavan-offer-contrasting-views-on-tamil-nadu-day-celebrations-651249.html

  • கருத்துக்கள உறவுகள்
On 29/10/2024 at 11:55, goshan_che said:

இதை தமிழ் நாட்டு இளசுகளும், நேற்று பெய்த மழையில் இன்று காலையில் முளைத்த புலம்பெயர் காளான்களும் நம்பியது கூட பரவாயில்லை, என் வயதை ஒத்த, ஈழநாதத்தில் நடப்பதை 90களில் தினமும் வாசித்து வளர்ந்த ஏழு குதிரை வயசான பூமர் அங்கிள்கள் கூட நம்பியதுதான் சோகம்.

வெறித்தனமாகப் பேசினால் நம்பி விடும் கூட்டம்.

நான் முகநூலில் பல வருடங்களுக்கு முன்னமே சீமான் போக்கு பிழை என்றும் அறிஞர் அண்ணாவை தெலுக்கர் என்று சொல்பது பிழை என்றும் சொன்னப்பொழுது கடிக்க வந்ததால் facebook கையே இழுத்து மூடி விட்டேன் 

  • கருத்துக்கள உறவுகள்
52 minutes ago, island said:

ஒரு மாநிலத்தின் பெயரில் ஒரு  கொண்டப்படும் “தமிழ் நாடு நாள்” எப்போது என்பதிலேயே ஒரு பொதுவான புரிந்துணர்வுக்கு வரமுடியாத அளவுக்கு அரசியல் காழ்புணர்வுக்கு ஆட்பட்டிருக்கிறார்கள் என்றால் இதை என்னவென்று சொல்வது.  

அன்று  பேரறிஞர் அண்ணா உத்தியோகபூர்வமாக தமிழ் நாடு  என்ற பெயரை சூட்டியிருக்காமல் விட்டிருந்தால் எந்தக் கலத்திலும் அந்த பெயரை வைக்க முடியாமல் போயிருக்கும். ஏனென்றால் தமிழ் நாடு என்ற பெயரைப் பார்தது எரிச்சலடைந்த சங்கிகள் அதனை  மாற்றி தமிழகம் என்று வைக்க அல்லது  முடிந்தால் தக்‌ஷனபிரதேசம் என்றை வைக்கவேண்டும் என று சங்கிகள் துடியாய் துடித்துக்கொண்டிருக்கிறார்கள். 

அப்பேக்க‌ த‌மிழ‌க‌த்தில்

தொகுதிக்கு 300 பேரும் இருந்து இருக்க‌ மாட்டார்க‌ள் ச‌ங்கி கூட்ட‌ம் 

ச‌ங்கிய‌ த‌மிழ‌க‌த்தில் வ‌ள‌த்து விட்ட‌தே கொலைஞ‌ர் என்ர‌ க‌ருணாநிதி

 

க‌ருணாநிதியின்  செய‌லால் இப்போது ச‌ங்கி கூட்ட‌ம் 10ச‌த‌ வீத‌த்தை தொடும் அள‌வுக்கு வ‌ள‌ந்து விட்டார்க‌ள்........................

 

த‌மிழ் நாட்டின் அனைத்து நாச‌கார திட்ட‌த்துக்கு துணை போன‌தே திமுக்கா தான் 

பிற‌க்கு தாங்க‌ள் தெரியாம‌ செய்து விட்டோம் என்று மான‌ம் ரோச‌ம் இல்லாம‌ ம‌க்க‌ள் இட‌த்தில் ம‌ன்னிப்பு கேக்கிற‌து..............................

  • கருத்துக்கள உறவுகள்
43 minutes ago, பகிடி said:

வெறித்தனமாகப் பேசினால் நம்பி விடும் கூட்டம்.

நான் முகநூலில் பல வருடங்களுக்கு முன்னமே சீமான் போக்கு பிழை என்றும் அறிஞர் அண்ணாவை தெலுக்கர் என்று சொல்பது பிழை என்றும் சொன்னப்பொழுது கடிக்க வந்ததால் facebook கையே இழுத்து மூடி விட்டேன் 

ரேபீஸ் ஊசி போட்டு கொள்ள வேண்டிய அளவுக்கு இருக்கும் தம்பிகளின் கடிப்பு.

நீங்கள் சொன்னதை யாழில் எழுதப்போய்த்தான் என்னை கடித்து குதறினார்கள்.

வாங்கும் கடியை அப்படியே மனதில் நிறுத்தி - சீமானை துவைக்க தேவைப்படும் சக்தியாக மாற்றிக்கொண்டேன்🤣.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, island said:

ஏனென்றால் தமிழ் நாடு என்ற பெயரைப் பார்தது எரிச்சலடைந்த சங்கிகள் அதனை  மாற்றி தமிழகம் என்று வைக்க அல்லது  முடிந்தால் தக்‌ஷனபிரதேசம் என்றை வைக்கவேண்டும் என று சங்கிகள் துடியாய் துடித்துக்கொண்டிருக்கிறார்கள். 

தமிழ்நாடு வெற்றிக் கழகம் என்று பெயர் வைக்காமல் தமிழக வெற்றிக் கழகம் என்று பெயர் வைக்கப்பட்டதன் பின்னணியே இது தான் என்றும் சொல்கின்றனர்............ புஸ்ஸிக்குத்தான் வெளிச்சம்.....

ஆனாலும் அந்த சாத்திரியார் (கடலூர் சந்திரசேகரர்) தேசியம், திராவிடம் இரண்டுக்கும் அப்பாற்பட்டவர்.... கட்சியின் பெயரிலிருந்து  'க்' குற்று எழுத்தை முதலில் தூக்கியவரும் அவரே என்கின்றனர். கடைசியில் தமிழ் இலக்கணமாவது இவர்களிடமிருந்து தப்பியது.........

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.