Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

சுமந்திரன் அரசியலுக்கு தகுதியற்றவர்

Vhg நவம்பர் 07, 2024
1000371836.jpg

சுமந்திரனால் என் மீது வழக்கு தொடரட்டும் என சிவசேனை அமைப்பின் தலைவர் மறவன்புலவு கணபதிப்பிள்ளை சச்சிதானந்தன் தெரிவித்துள்ளார்.

யாழ் . ஊடக அமையத்தில் இன்றைய தினம் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில்,

சுமந்திரன் அரசியலுக்கு பொருத்தமற்றவர். அவர் ஒரு மதமாற்றி. இது தொடர்பில் ஏழாண்டுகளுக்கு முன்பே நான் புத்தகம் அடித்து வெளியிட்டுள்ளேன்.

மதமாற்றத்திற்காக அவரது மனைவியின் பெயரில் மாதாந்தம் 1100 டொலர்ஸ் வருகிறது. மனைவியின் பெயரில் சுமந்திரனுக்கே அந்த பணம் வருகிறது.

சுமந்திரன் மெதடிஸ் திருச்சபையில் துணை ஆயராக இருந்தவர். அவர் 54 மதமாற்றிகளை சம்பளம் கொடுத்து வைத்திருந்தார் இந்த மண்ணின் மரபுகளை மாற்ற முற்படுபவர்.

ஆகவே அவர் தேர்தலில் போட்டியிட தகுதியற்றவர். மத மாற்ற செல்லும் போது சிவசேனையினர் கற்கள் வீசுகின்றனர், தடிகளால் அடிக்கின்றனர் என கூறப்பட்ட விடயம் மெதடிஸ் திருச்சபையின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இவற்றை எல்லாம் உள்ளடக்கி ஏழாண்டுகளுக்கு முன்பே புத்தகங்கள். அடித்து பெரும்பாலான மக்களிடம் கையளித்துள்ளேன்.

இதுவரையில் சுமந்திரன் என் மீது வழக்கு தொடரவில்லை. முடிந்தால் வழக்கு தொடரட்டும் என மேலும் தெரிவித்தார்.
 
https://www.battinatham.com/2024/11/blog-post_28.html

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

கரடியே… காறித் துப்பிய தருணம்.   😂 🤣

Edited by தமிழ் சிறி
  • Like 2
  • Haha 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted

சூடு சொரணை இல்லாத யென்மம் தான் சுமா ......

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இதென்ன புதுசா மறவன்புலவு சங்கி-ஆனந்தம் ஐயா பஞ்சாப் சிங் கெட்டப்பில வந்திருக்கார்🤣

Posted

இவரே வடக்கு காவிகளின் சொற் கேட்டு ஆடுபவர். இதற்குள் மற்றவர்களை பார்த்து கருத்து வேறு. 
அம்பி காலம் கெட்டு கிடக்குது.🙂

  • கருத்துக்கள உறவுகள்
Posted

""எழுத்தறிவித்தவன் இறைவன் ஆவான்"" என்பது உந்தக் கரடிக்குத் தெரியாதோ? 

😁

  • கருத்துக்கள உறவுகள்
Posted

சங்கி ஆனந்தம் சொன்னது சம்பந்தமாக,

மெதடிஸ்ட் (CSA, CoE, American Mission) இப்படி ஊருக்குள் போய் மதம் மாற்றுகிறார்களா?

நான் அறிய 5ம் வேதம் என கூறப்படும், யெஹோவா சாட்சிகள், பெந்திகோஸ்த் ஆட்கள்தான் இப்படி செய்வது.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
6 hours ago, கிருபன் said:

மதமாற்றத்திற்காக அவரது மனைவியின் பெயரில் மாதாந்தம் 1100 டொலர்ஸ் வருகிறது. மனைவியின் பெயரில் சுமந்திரனுக்கே அந்த பணம் வருகிறது.

சுமந்திரன் மெதடிஸ் திருச்சபையில் துணை ஆயராக இருந்தவர். அவர் 54 மதமாற்றிகளை சம்பளம் கொடுத்து வைத்திருந்தார் இந்த மண்ணின் மரபுகளை மாற்ற முற்படுபவர்.

அண்மையில் இதுபற்றி எனது மிக நெருங்கிய நண்பரொருவர் கூறினார்.ஆதாரங்கள் இல்லாத செய்தி என்றேன்.

பாதிக்கப்பட்டவர்களுடன் முல்லைத்தீவுப் பிரதேசத்தில் பேசிய போது அடுத்தநேர சாப்பாட்டுக்கு வழிதெரியாமல் இருந்த போது இவர்கள் தான் இப்போதுவரை கிழமைக்கு கிழமை இவ்வளவு இவ்வளவு சாப்பாட்டு சாமானும் செலவுக்கும் ஏதாவது தருகிறார்கள்.

உங்களால் எப்படி தர முடியுமா என்று கேட்கிறார்கள்.

இதைச்சமன் செய்வதற்கு யாருமே முன்வருவதில்லை என்று ஆதங்கப்பட்டார்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
3 hours ago, goshan_che said:

இதென்ன புதுசா மறவன்புலவு சங்கி-ஆனந்தம் ஐயா பஞ்சாப் சிங் கெட்டப்பில வந்திருக்கார்🤣

Portrait of Sir Ponnambalam Ramanathan   

arunachalam-stamp.jpg?fit=473,475&ssl=1  

  220px-Subramanya_Bharathi.jpg

சேர் பொன் இராமநாதன், சேர் பொன் அருணாசலம், மகாகவி  பாரதியார்  எல்லாரும் 
தலைப்பாகை  கட்டிய படியால்... பஞ்சாப்  சீக்கியர்களாக  இருப்பார்களோ.... 😂
இருக்கும், இருக்கும். 🤣

Edited by தமிழ் சிறி
  • Thanks 1
  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
1 hour ago, தமிழ் சிறி said:

Portrait of Sir Ponnambalam Ramanathan   

arunachalam-stamp.jpg?fit=473,475&ssl=1  

  220px-Subramanya_Bharathi.jpg

சேர் பொன் இராமநாதன், சேர் பொன் அருணாசலம், மகாகவி  பாரதியார்  எல்லாரும் 
தலைப்பாகை  கட்டிய படியால்... பஞ்சாப்  சீக்கியர்களாக  இருப்பார்களோ.... 😂
இருக்கும், இருக்கும். 🤣

உங்களுக்கு தெரியாதா?

சேர் பி - லூதியானா

அருணாச்சலம் - ஜலந்தர்

பாரதியார் - ஹைபர் -போலான் 🤣

#வந்தேறி🤣

——-

அண்ணை நான் சொன்னது சங்கி-ஆனத்தத்தின் தலைப்பாகை இந்தியாவில் மடாதிபதிகள் கட்டும் ஸ்டைலில் இருப்பதை.

பிகு

பாரதியார் காசிக்கு போய் வந்த பின் தான் தலைப்பாகை கட்ட தொடங்கினார் என நினைக்கிறேன். வட இந்திய தழுவலாக இருக்கலாம்.

Edited by goshan_che
  • கருத்துக்கள உறவுகள்
Posted
19 minutes ago, goshan_che said:

அண்ணை நான் சொன்னது சங்கி-ஆனத்தத்தின் தலைப்பாகை இந்தியாவில் மடாதிபதிகள் கட்டும் ஸ்டைலில் இருப்பதை.

பிகு

பாரதியார் காசிக்கு போய் வந்த பின் தான் தலைப்பாகை கட்ட தொடங்கினார் என நினைக்கிறேன். வட இந்திய தழுவலாக இருக்கலாம்.

நீங்கள் சொன்னது புரிந்தது.
ஆனால்... விளங்காத மாதிரி, நூல் விட்டுப் பார்த்தேன். 😂

  • கருத்துக்கள உறவுகள்
Posted
3 hours ago, goshan_che said:

சங்கி ஆனந்தம் சொன்னது சம்பந்தமாக,

மெதடிஸ்ட் (CSA, CoE, American Mission) இப்படி ஊருக்குள் போய் மதம் மாற்றுகிறார்களா?

நான் அறிய 5ம் வேதம் என கூறப்படும், யெஹோவா சாட்சிகள், பெந்திகோஸ்த் ஆட்கள்தான் இப்படி செய்வது.

சச்சியருக்கு எல்லாக் கிறிஸ்தவர்களும் "மதமாற்றிகள்". அதே போல இங்கே யாழிலும் கத்தோலிக்கர், அங்கிலிக்கன், யெஹோவா எல்லாரும் மதமாற்றிகள் என்று நம்புவோர்  இருக்கிறார்கள். இந்த கிறிஸ்தவ சபைகளிடையேயான வேறு பாடு தெரியாத அறியாமை தான் முதன்மைக் காரணம்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

லூசுப்பயல்….  

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, தமிழ் சிறி said:

நீங்கள் சொன்னது புரிந்தது.
ஆனால்... விளங்காத மாதிரி, நூல் விட்டுப் பார்த்தேன். 😂

நூல் பந்தையே விட்டாலும்🤣

  • கருத்துக்கள உறவுகள்
Posted
59 minutes ago, Justin said:

சச்சியருக்கு எல்லாக் கிறிஸ்தவர்களும் "மதமாற்றிகள்". அதே போல இங்கே யாழிலும் கத்தோலிக்கர், அங்கிலிக்கன், யெஹோவா எல்லாரும் மதமாற்றிகள் என்று நம்புவோர்  இருக்கிறார்கள். இந்த கிறிஸ்தவ சபைகளிடையேயான வேறு பாடு தெரியாத அறியாமை தான் முதன்மைக் காரணம்.

ம்ம்ம்…கத்தோலிக்கர்கள் உதவி செய்வதாக, அதன் மூலம் மக்கள் சுய விருப்பில் மதம் மாறுவதாக தன்னும் கேள்விப்பட்டுள்ளேன்.

தமிழ் கத்தோலிகரிடையே கலியாணம் முடிப்பதாயினும் இந்து மட்டும் அல்ல, பிற கிறிஸ்தவ சபைகளில் கூட இருப்பது அரிது.

ஆனால்…

தமிழ் புரொட்டொஸ்தாந்தினர் கொஞ்சம் மேட்டிமை மிக்கவர்களாக, வந்தா வா வா, வரலன்னா போ, கம் ஓ கோ சிக்காகோ என்று இருப்பவர்கள்.

சுமனை எப்படியிம் அடிக்க வேண்டும் என்ற ஆதங்கத்தில் சங்கி ஆனந்தம் பேசுவதாகவே எனக்கு படுகிறது.

ஆனால் இந்த, மாதம் 1100 டொலர் வருவது விசாரிக்க படல் வேண்டும். பொய் என்றால் சங்கி ஆனந்தத்தை வங்குரோத்து ஆக்கும் அளவுக்கு வழக்கு போட வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
37 minutes ago, goshan_che said:

சுமனை எப்படியிம் அடிக்க வேண்டும் என்ற ஆதங்கத்தில் சங்கி ஆனந்தம் பேசுவதாகவே எனக்கு படுகிறது.

ஆனால் இந்த, மாதம் 1100 டொலர் வருவது விசாரிக்க படல் வேண்டும். பொய் என்றால் சங்கி ஆனந்தத்தை வங்குரோத்து ஆக்கும் அளவுக்கு வழக்கு போட வேண்டும்.

சுமந்திரனும், அவர் மனைவியும் தென்னிந்திய திருச்சபையின் யாழ் மாவட்டப் பிரிவில் (Diocese)பதவிகளில் இருக்கிறார்கள். இப்போதும் சுமந்திரன் அந்தப் பதவிகளில் இருக்கிறாரா தெரியவில்லை, ஆனால் மனைவி இருக்கக் கூடும். அப்படி இருக்கும் ஒருவருக்கு வெளிநாட்டில் இருந்து மாதாந்தம் அங்கிலிக்கன் மிஷன் பணம் அனுப்பினால் அது அதிசயம் இல்லை.

இங்கே சச்சியர் சொல்வது, அது "சுமந்திரனுக்கு மனைவி பெயரில் வருகிறது, அதை சுமந்திரன் மதம் மாற்றப் பாவிக்கிறார்" என. ஏற்கனவே குடியேறிகள் மீது காண்டில் இருந்த அமெரிக்கக் குடிகளை நோக்கி , ட்ரம்ப் குடியேறிகள் பற்றி பொய்களை அவிழ்த்து விட்டது போல இதுவும் "சுமந்திரன் லவ்வர்ஸ்"😎 என்ற சிறுகுழுவை நோக்கி எறியப் பட்ட red meat மட்டுமே.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, Justin said:

இது உண்மையாயின் திருமதி சுமந்திரன் வழக்கு போட வேண்டும்.

திருச்சபைக்கு வருவதை ஒருவருக்கு வருவதாக சொல்வதும் - அதை அவர்கள் சட்டவிரோதமாக பாவிப்பதாக சொல்வதும் - பொய்யாயின் பாரிய பொய்கள்.

ஆனால் இப்படி வழக்கு போட்டால் அதை வைத்து ஒரு சைவ-கத்தோலிக்க முறுகலை உருவாக்கி குளிர்காயலாம் என சங்கி ஆனந்தம் நினைப்பதாகவும் இருக்க கூடும்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
5 hours ago, MEERA said:

லூசுப்பயல்….  

யூ ரூ மீர?  🤣

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இருக்கிற பிரிவுகள் பிரச்சினைகள் காணாது என்று இந்தாள் வேற மதவெறியோட திரியுது. வேற ஒன்றுமில்லை குளிர் விட்டுப் போய்ச்சு. 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

கடைசியில், தோத்துப்போன எல்லாப்பிரிவினரும் மதத்துக்கு சேறடித்து தம்மை மறைக்க முனைகிறார்கள். அந்த மதத்துக்குரிய பெயரை வைத்துவிட்டால் மட்டும் அந்த மதத்துக்கு உரியவர்கள் ஆகிவிட மாட்டார்கள். அதன் போதனையின்படி, அவர்களின் கடவுளை மட்டும் நம்பி வழிபடவேண்டும்,  தன்னைப்போல தன் அயலானையும் நேசிக்க வேண்டும், பணம் புகழ் பொருள் பதவியை கடவுளாக நேசித்து மற்றவரை விரட்டி, அவர்களின் உரிமைகளை பறித்து  வாழ்வது கிறிஸ்தவம் கிடையாது. ஆகவே சுமந்திரனை மதத்தின் பேரால் தூற்றுவதும் அல்லது போற்றுவதும் அவரின் தவறுகளை மறைப்பதும்  ஏற்புடையதல்ல, அது கிறிஸ்தவத்தை பழித்துரைப்பது போலாகும். தங்கள் சுயநலத்திற்க்கு மதத்தை பாவிக்கிறார்கள். சில வருடங்களுக்கு முன்  உடுவில் கிறிஸ்தவ பெண்கள் கல்லூரியில் அதிபர் மாற்ற பிரச்சனை ஏற்பட்டு, அக்கல்லூரியின் மாணவிகளை தெருவில் விட்டு கதவுகளை மூடிய சம்பவத்தின் பின்னால்   சுமந்திரன்தான் என குற்றச்சாட்டு இருக்கிறது. அவருக்கு மதம், சமாதானம், ஒற்றுமை என்பது எட்டாப்பொருத்தம். தயவு செய்து  உங்களின் காழ்ப்புணர்ச்சியில் சுமந்திரனை புனிதனாக்க முயற்சிக்க   வேண்டாம். சுமந்திரன் எங்கே போனாலும் பிரச்சனை ஏற்படுத்தாமல் திரும்ப மாட்டார். அது அவரின் கூடப்பிறந்த இயல்பு. அவரை குற்றம் சாட்டுவதை விடுத்து அவரை விட்டு விலத்தி நடத்துவதே புத்திசாலித்தனம்.  ஒருவரை எல்லோரும் பேசுகின்றனரென்றால்; அவர் ஒரு சமூக நலன் கொண்டவராக அதற்காக உழைப்பவராக இருப்பார் அல்லது சமூகத்தை தன் சுயநலனுக்காக சீரழிப்பவராக இருப்பார்     

  • கருத்துக்கள உறவுகள்
Posted
8 hours ago, MEERA said:

லூசுப்பயல்….  

2 hours ago, Kapithan said:

யூ ரூ மீர?  🤣

மீரா… “லூசுப் பயல்” என்றது சுமந்திரனை. 😂 🤣

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
21 minutes ago, தமிழ் சிறி said:

மீரா… “லூசுப் பயல்” என்றது சுமந்திரனை. 😂 🤣

இன்றைக்கு களம் சூடு பிடிக்கப்போகுது. மீராவின், கோத்துவிட்ட  சிறியரின் தலையும் சேர்ந்து  உருளப்போகுது. விபரீதம் புரியாமல் சிங்கத்தின் வாலை பிடித்து இழுத்து விட்டார்கள். பாவம் மீரா! சுட்டிக்காட்டியது சச்சியரை.

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 minute ago, satan said:

இன்றைக்கு களம் சூடு பிடிக்கப்போகுது. மீராவின், கோத்துவிட்ட  சிறியரின் தலையும் சேர்ந்து  உருளப்போகுது. விபரீதம் புரியாமல் சிங்கத்தின் வாலை பிடித்து இழுத்து விட்டார்கள். பாவம் மீரா! சுட்டிக்காட்டியது சச்சியரை.

எதுக்கும்… @MEERA வரும் மட்டும், உன்னிப்பாக அவதானிப்போம். 😂

  • கருத்துக்கள உறவுகள்
Posted
43 minutes ago, தமிழ் சிறி said:

மீரா… “லூசுப் பயல்” என்றது சுமந்திரனை. 😂 🤣

இல்லை... 😎

  • Haha 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted
Just now, குமாரசாமி said:

இல்லை... 😎

மீரா… இதுவரை  ஒரு நாளும் சச்சியரை பேசியது இல்லை.
ஆன படியால்… இப்பவும் சுமந்திரனைத்தான், “லூசுப் பயல்” என்று சொல்லி உள்ளார். 😂
சச்சியரை விட,  சுமந்திரன் தான்…. பெரிய லூசு. 🤣

  • Haha 1

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.