Jump to content
இணைய வழங்கி மாற்றம் காரணமாக இன்று  (17/11/2024) ஐரோப்பிய நேரம் 20:00 மணிமுதல் இணைய வழங்கியில் தடங்கல் ஏற்படும் என்பதை அறியத்தருகின்றோம்.

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Posted
29 minutes ago, தமிழ் சிறி said:

May be an image of 16 people and text

தேர்தலில் தோல்வியுற்ற பிரபலங்கள்.

சுமந்திரன் தோல்வியைத் தழுவி அரசியல் தொழிலை விட்டுவிட்டு  
தனது அப்புக்காத்து வேலையை
மட்டுமே செய்ய   உள்ளதால் 

மோகன் அண்ணை சேர்வரை மாத்தும் போது செலவைக் கட்டுப்படுத்தலாம். உறவுகளுக்குள் பெரிதாக உரசல் வராது😂

  • Replies 831
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

நிழலி

வெறும் சமூகவலைத்தளங்களில் லூசு ஆட்டம் போட்டால் கூட ஒரு பாராளுமன்ற உறுப்பினர் பதவியைக் கொடுக்கும் அளவுக்கு எம் மக்களில் 10 வீதத்தினர் உள்ளார்கள். மிகவும் வெட்ககேடான, கவலைக்குரிய விடயம் 

ரஞ்சித்

அருச்சுணாவைச் சொல்கிறீர்களா? தமிழர்களின் சுயநிர்ணய உரிமைக்கும், அரசியல் பிரச்சினைக்கும், தாயக கோட்பாட்டிற்கும் எதிராக இன்றுவரை இயங்கிவரும் அநுர எனும் சிங்கள இனவாதியின் கட்சிக்கு வாக்களித்ததைக் காட்டில

பாலபத்ர ஓணாண்டி

லூசுமாதிரி கத்திக்கொண்டிருக்காதை அண்ணை சுமந்திரன் சுமந்திரன் எண்டு.. அடிக்கிற அனுர அலையில சுமந்திரனாவது மயிராவது.. ஆனாலும் இவ்வளவு ஆவது தாக்குப்பிடிக்கிறது அந்தகட்சிதான்.. ஓரளவாவது தமிழற்ற மானத்தை காத

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
28 minutes ago, வாத்தியார் said:

சுமந்திரன் தோல்வியைத் தழுவி அரசியல் தொழிலை விட்டுவிட்டு  
தனது அப்புக்காத்து வேலையை
மட்டுமே செய்ய   உள்ளதால் 

மோகன் அண்ணை சேர்வரை மாத்தும் போது செலவைக் கட்டுப்படுத்தலாம். உறவுகளுக்குள் பெரிதாக உரசல் வராது😂

உண்மைதான்....  சுமந்திரனின் பஞ்சாயத்து பார்க்கிறதாலேயே 
பலரின் நேரங்கள், யாழில் பல பக்கங்கள்  வீணாகி உள்ளது. 😂

சுமந்திரன் தோற்றதுடன்,  இனி... உந்த தொல்லை, புடுங்குப்பாடு ஒன்றும் இராது. 🤣

ஆபிரஹாம்  சுமந்திரனை... தோல்வி அடையச் செய்த, யாழ்.மாவட்ட மக்களுக்கு நன்றி. 🙏

Edited by தமிழ் சிறி
  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 hours ago, ஏராளன் said:

முதன் முறையாக இலங்கை நாடாளுமன்றத்தில் நிறையும் கல்விமான்கள்

எனக்கு என்னமோ கொல்வின் ஆர்டி செல்வா, பீட்டர் கெனமன், போன்ற படித்த பெருந்தகைகள் எல்லாம் 1972 தேர்தல் வெற்றிக்கு பின், பாராளுமன்றுக்கு வெளியே நவரங்க ஹலவில் கூடி….

சிறுபான்மைக்கு பாதுகாப்பை கொடுத்த, ஆங்கிலேயர் விட்டு சென்ற சோல்பரி யாப்பை தூக்கி வீசி, நாம் இலண்டனில் உள்ள பிரிவி கவுன்சிலுக்கு முறைப்பாடு அணுகும் உரிமையை பறித்து, மீறப்பட முடியாது என சோல்பரி யாப்பு கூறிய சிறுபான்மையின பாதுகாப்பு சரத்துகளை எல்லாம் கடாசி எமக்கு பொறுத்த ஆப்பை சொருகிய தருணம்தான் நினைவுக்கு வருகிறது.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
30 minutes ago, வாத்தியார் said:

சுமந்திரன் தோல்வியைத் தழுவி அரசியல் தொழிலை விட்டுவிட்டு  
தனது அப்புக்காத்து வேலையை
மட்டுமே செய்ய   உள்ளதால் 

மோகன் அண்ணை சேர்வரை மாத்தும் போது செலவைக் கட்டுப்படுத்தலாம். உறவுகளுக்குள் பெரிதாக உரசல் வராது😂

பெரும்பாலானோருக்கு சுமந்திரன் காய்ச்சல் விட்டுவிட்டாலும். ஒரு சிலருக்கு குறிப்பாக சுமந்திரனுக்கெதிரான விடுதலைப் போர்த் தளபதிகளுக்கு இந்தக் காய்ச்சல் விடாமல் தொடரும். ஒவ்வாமையும் இருக்கும். எனவே சொறிந்துகொண்டே இருப்பார்கள்!😂

  • கருத்துக்கள உறவுகள்
Posted
  2 hours ago, ஏராளன் said:

முதன் முறையாக இலங்கை நாடாளுமன்றத்தில் நிறையும் கல்விமான்கள்

இவர்களின் கோரமுகத்தை விரைவில் காண்பீர்கள்....

  • கருத்துக்கள உறவுகள்
Posted
3 hours ago, island said:

@goshan_che  ஒரு உதாரணம் மட்டுமே. இப்படியான தமிழ

 தேசியத்தை விட அநுரவுக்கு வாக்களிப்பது தவறா? 

 

 

செல்வத்தின் முகத்தில் காணும் அந்த acceptance அய்யும் மலர்ச்சியையும் காணக் கண்கள் கோடி வேண்டும்.

பாட்டுப்பாடும் திருவாளர் முன்னாள் விடுதலைப் புகளின் ஆதாரவாளராக இருந்திருக்க வாப்புண்டு. பாடலின் ஒவ்வொரு வரியினையும் நன்கு உள்வாங்கிப் பாடுகின்றார்! 

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, வாலி said:

செல்வத்தின் முகத்தில் காணும் அந்த acceptance அய்யும் மலர்ச்சியையும் காணக் கண்கள் கோடி வேண்டும்.

பாட்டுப்பாடும் திருவாளர் முன்னாள் விடுதலைப் புகளின் ஆதாரவாளராக இருந்திருக்க வாப்புண்டு. பாடலின் ஒவ்வொரு வரியினையும் நன்கு உள்வாங்கிப் பாடுகின்றார்! 

 

 

உறவினர்கள், ஆதரவாளர்கள் எல்லோரும் கைதட்டி என் ஜாய் பண்ணுகின்றார்கள். தவறு என சொல்வதற்கில்லை. ஐ பி சி இந்த காணொளியை வெளியிட்டு உள்ளது. ஐபிசி காரரின் எதிர்பார்ப்பு என்னவோ?




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஜனவரி 20க்கு இடையில் போர் நிறுத்தங்கள் ஏற்படலாம் என பலர் கதைக்கின்றார்கள். 😂
    • ஏனப்பா திராவிட அன்னை என்று கண்ணதாசன் எழுதவில்லை. பாடல் எழுதப்பட்ட போது திராவிட இயக்கத்தில் இருந்தாலும் எம்ஜியாருக்கே பாட்டு எழுதினாலும் உண்மைகளை மறைக்க முடியாது.திராவிடம் என்று ஒரு சொல்லை மட்டும் தான் அப்போது சார்ந்திருந்த திராவிட இயக்கத்துக்காகப்  போட்டுவிட்டு தமிழ்மன்னர்களையும் தமிழ் அன்னையையும் பாடியிருக்கிறார்.தானாடாவிட்டாலும் தசையாடும்.கண்ணதாசன் கண்ணதாசன்தான். blood is thicker than water.
    • அதுமட்டுமல்லாது...அடுத்த பொது தேர்தலில் நீங்கள் போட்டியிடாமல் உங்க்ள் கட்சிக்கு இளைஞர்களை  அடுத்த தேர்தலில் நிற்க வைக்க வேண்டும்..அவர்கள் தலமைத்துவத்தை எடுத்து செல்ல வழிவகுக்க வேண்டும்.. தமிழரசுகட்சி புது யாப்பை உருவாக்க வேண்டும் 60 வயதுக்கு பிறகு எம்.பி யாக வருவதற்கு தடை போட் வேணும் ..ஒரு எம்பி மூன்று தடவைகளுக்கு மேல் பாராளுமன்றம் செல்வதை அனுமதிக்க கூடாது....இதை உங்கள் கட்சி செய்து அணுராவுக்கு பாடம் எடுக்கலாம்...ஆனால் அனுரா இதை இனி வரும் காலங்களில் அமுல்படுத்துவார் இதை உங்கள் கட்சி செய்து அணுராவுக்கு பாடம் எடுக்கலாம்...ஆனால் அனுரா இதை இனி வரும் காலங்களில் அமுல்படுத்துவார்   அர்ஜுனா ராமநாதன்(சுயேட்சை) தனது பதவிக்காலத்தில் அரைவாசியை தனது கட்சியில் போட்டியிட்ட சக வேட்பாளருக்கு கொடுப்பதாக் கூறியிருந்தார் ...அந்ததெளிவு கூட உங்கன்ட கட்சிகாரர்களுக்கு இல்லை    
    • கஸ்தூரி தேவதாசி முறைபற்றி மறைமுகமாக பேசியிருக்கிறார் என்று நினைக்கிறேன், கோவில் தொண்டு செய்யவும், நடன மாதுக்களாகவும், பெற்றோரால் நேர்ந்து விடப்பட்டவர்களாகவும் நித்ய சுமங்கலிகளாகவுமென பிரிவுகள் ஆந்திரா ஒடிசா கர்நாடகா உத்தர பிரதேசம் என பல மாநிலங்களிலும் 1947 வரை  ஒவ்வொரு மாநிலத்துக்கும் ஒவ்வொரு பெயரில் இருந்ததாகவும் பின்னரே அது படிப்படியாக ஒழிக்கப்பட்டதாகவும், இன்றும் கர்நாடகாவில் சில இடத்தில் நடைமுறையிலிருப்பதாகவும் சொல்கிறார்கள். அந்நாளில் மன்னர்கள் ,சிற்றரசர்கள், பண்ணையார்கள் அவர்களை ஜமீன்தார்கள் தமது அந்தப்புரநாயகிகளாக பயன்படுத்தியதாகவும் சொல்கிறார்கள்  தமிழகத்தில் பிராமணர் வேளாளர், மறவர்என அனைத்து  குலங்களிலிருந்தும் தேவதாசிகள் கோவிலுக்கு நேர்ந்து விடப்பட்டனர் என்று தகவல்கள் கூறுகின்றன, அப்படியிருக்க தெலுங்கர்கள் மட்டும் தேவதாசிகள் என்று பிராமண பிரிவை சேர்ந்த ’ஆச்சாரமான’’ கஸ்தூரி எவ்வாறு கூறினார் என்பது ஆண்டவனுக்கே வெளிச்சம். முதலில் கஸ்தூரி எனும் பெயர் ஆச்சாராமானதா? இமயமலை  பகுதிகளீல் வாழும் ஒருவகை மானின் ஆணுறுப்பிலிருந்து சுரக்கும் திரவத்தின் பெயரே கஸ்தூரி என்கிறார்கள் , அதிலிருந்துதான் வாசனை திரவியம் தயாரிக்கப்படுகிறது என்கிறார்கள், மனிதர்களில் ஆச்சாரமாக நிறம் பார்க்கும் கஸ்தூரி தன் பெயரிலும் ஆச்சாரம் பார்க்கவேண்டும். கஸ்தூரிக்கு இரண்டு குழந்தைகள், ஒரு குழந்தை பிறக்கும்போதே புற்றுநோயால் பாதிக்கப்பட்டதாகவும் அதன் சிகிச்சைக்காகவே அமெரிக்காவிலிருந்து இந்தியாவுக்கு இடம் பெயர்ந்ததாகவும் சொல்கிறார்கள், தனது குழந்தையை வெளியே காண்பிக்காது கவனமாயிருப்பார் கஸ்தூரி, அதனால்தான் பிக்பாஸ் போனபோதுகூட குழந்தைகளின் குரலை மட்டும் ஒலிபரப்பியதாக நினைவிலுண்டு. கஸ்தூரி தலைவர் பிரபாகரனின் வெறிதனமான ஆதரவாளர், ஆனால் மனிதரில் நிறம்பார்க்காத என் தலைவனின் ஆதரவாளராயிருந்துகொண்டு மனிதரில் குலம் பார்க்கும் கஸ்தூரியின் செயல் மன்னிக்கப்பட முடியாத குற்றமே.
    • அடுத்த பொது தேர்தல் நடைபெறும்போது மாவையர் இருப்பாரோ தெரியாது. பெருந்தலைவர் சம்பந்தர் போல் மாவையருக்கு பாராளுமன்ற உறப்பினர் எனும் கெளரவ பட்டத்துடன் சாவை அணைக்க ஆர்வமோ யார் அறிவார். ஆசை யாரை விட்டது.
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.