Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவுக்கு(Ramanathan Archchuna) எதிராக குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு ஒன்று பதிவு செய்யப்பட்டுள்ளது.

குறித்த முறைப்பாடானது இன்றையதினம்(20.11.2024) சமூக செயற்பாட்டாளர் எல். எம்.ஏ.ஜி அதிகாரி என்பவரால் பதிவு செய்யப்பட்டுள்ளது.

முகப்புத்தக நேரலை

நேற்றைய நாடாளுமன்ற அமர்வில் அவர் வெளியிட்ட முகப்புத்தக நேரலை தொடர்பில் இந்த முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

அர்ச்சுனாவுக்கு எதிராக குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு | Complaint Filed Against Dr Archuna At The Cid

குறித்த காணொளியில், விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் தொடர்பான கருத்தை தெரிவித்ததாகவும், மேலும் அவரது முக நூலில் பதிவேற்றப்பட்டுள்ள ஒரு புகைப்படம் ஆகியவை தொடர்பாகவே வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

https://tamilwin.com/article/complaint-filed-against-dr-archuna-at-the-cid-1732270650#google_vignette

  • கருத்துக்கள உறவுகள்
Posted

நாடாளுமன்ற முதலாவது அமர்வில் அர்ச்சுனாவின் அட்டகாசங்கள் தொடர்பாக பல செய்திகள் வெளிவந்துள்ளன. அதில் அவர் எதிர்க்கட்சித் தலைவரின் ஆசனத்தில் அமர்ந்துகொண்டு எலும்பமாட்டேன் என்று அடம் பிடித்தது, இருக்கையில் அமர்ந்தபடியே தனது தோழிக்கு காற்றில் முத்தமிட்டது, (கில்லி படத்தில் பிரகாஸ்ராஜின் அட்டகாசத்தை பிரதிபலிக்கும் வகையில் 😁) செல்லம் இன்னும் ஒரு வருடத்தில் நீ கீழே நான் மேலே நீ கீழே என்று வசனங்களை அடுக்கி விட்டது என பட்டியல் நீண்டுகொண்டே செல்கிறது. 

நாடாளுமன்ற ஒழுக்காற்று நடவடிக்கையின் கீழ் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படுவதற்கான  சாத்தியக் கூறுகள் மிகவும் அதிகம். 

வாக்களித்த சனம் தலையில் கைவைக்கப் போகிறது. 

🥺

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

சாதாரண விடயங்களை நம்மவர்களே மிகைப்படுத்துகின்றார்கள். இதற்கான காரணங்கள் எரிச்சல், பொறாமை, பழிவாங்குதல் என பல வகைப்படலாம்.

மருத்துவர் அர்ச்சனாவின் விழிப்புணர்வின் பின் முன்புபோல் வைத்தியசாலைகளில் ஐஸ் அடிக்க முடியவில்லை, நேரத்திற்கு தனிப்பட்ட வேலைகளுக்கு கிளம்ப முடியவில்லை என எனது மருத்துவ நண்பர் ஒருவர் கூறினார். இப்போது கொஞ்சம் பயம் ஏற்பட்டுள்ளது. முன்பை விட கொஞ்சம் அவதானமாக மருத்துவர்கள் வேலை பார்க்கின்றார்கள். 

மருத்துவர், பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சனா சிறப்பாக செயற்படுவார் என எதிர்பார்ப்போம்.

  • Like 4
  • Thanks 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted
12 minutes ago, நியாயம் said:

சாதாரண விடயங்களை நம்மவர்களே மிகைப்படுத்துகின்றார்கள். இதற்கான காரணங்கள் எரிச்சல், பொறாமை, பழிவாங்குதல் என பல வகைப்படலாம்.

சுமந்திரனை விட... அர்ச்சுனாவும், கௌசல்யாவும் சுயேச்சையில் நின்று 
அதிக வாக்கு எடுத்து விட்டார்களே என்ற அவமானம், பொறாண்மை, வயித்தெரிச்சல்... 
இருக்கத்தானே செய்யும். 

சுமந்திரன்கள் ஒழுங்காக இருந்திருந்தால்... அர்ச்சுனாவுக்கும், கௌசல்யாவுக்கும் 
மக்கள் ஏன் வாக்களிக்கப் போகிறார்கள். 

கடந்த  பாராளுமன்ற தேர்தலில், அகில   இலங்கையில் போட்டியிட்ட... 
அத்தனை சுயேட்சை வேட்பாளர்களில்... வென்ற ஒரேயொருவர்  அர்ச்சுனா மட்டும் தானாம்.

  • Like 4
  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

அருச்சுனா எதிர்கட்சி தலைவர் இருக்கையில் இருந்தது பாராளுமன்ற விதிகளின் படி தப்பே இல்லையாமே 👇

@satan @தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்
Posted

 அர்ச்சுனாவிற்கு உண்மையாகவே புலிகளின்மீதும், புலிகள் தலைமைமீதும் தீவிர காதல்  இருந்தால் தேவையில்லாமல் அவர்கள் பெயர்களை தேவையற்ற இடங்களில் பாவிப்பதை தவிர்க்கவேண்டும்.

தமது பதவியையும் அதிகாரத்தையும் தொகுதிக்கான நிதி ஒதுக்கீட்டையும்  வைத்து மெளனமாக முன்னாள் போராளிகள், அங்கவீனமடைந்த போராளிகள், அடிப்படை வசதிகளையே இழந்த பெண் போராளிகள் குடும்பங்களுக்கு உதவுவதை அவர்களையும் அவர்கள் வாரிசுகளையும் , கல்வி பொருளாதார ரீதியாக முன்னேற்றுவதையும்   முதற் செயற்பாடாக வைத்திருங்கள்.

அதைவிட்டு புலிகள், தலைவர் என்றுபோய் பழையபடி சிங்களவனை கடுப்பாக்கி மஹிந்த கோட்டபாய கோஷ்டிகளில் தப்பில்லை தமிழர்கள்மேல்தான் தவறு என்றொரு மாயையை உருவாக்காதீர்கள்.

புலிகளையும் தலைவரையும் பற்றி  நீங்கள் சமூக ஊடகங்களிலும் சபைகளிலும் பேசி ஏதாவது சாதிக்க முடியுமென்றால் தாராளமாக பேசுங்கள், இல்லையென்றால் இது உங்களின் வெறும் வெட்டி விளம்பரம் பாந்தாவாகவே பார்க்கப்படும்.

மாறாக தேவையற்ற முறையில் புலிகளின் பெயரை போற வாற இடமெல்லாம் இழுத்து எம்மண்ணில் சிங்கள படைமுகாம்களின் இருப்பையும், தேசிய பாதுகாப்பு மண்ணாங்கட்டி பாதுகாப்பு என்று நாமல் பழையபடி துவேசத்தை சிங்களவர்களுக்கு ஊட்ட முயற்சிக்கிறானே அதை மட்டுமே அதிகரிக்க உதவும்.

76 வருடகால அரசியலில் இப்போதான் முதற் தடவையாக வடபகுதியில் சிங்கள தலைமை ஒன்றை வடக்கில் ஆதிக்கம் செலுத்த வாய்ப்பு கொடுத்திருக்கிறோம்ம், அடுத்த ஐந்து வருடங்களில் ஆட்சியாளர்கள்  என்ன செய்கிறார்கள் என்று பார்க்கலாம், முடியாவிட்டால் அடுத்த தேர்தலில் ஒட்டுமொத்தமாக எம்மண்ணில் இருந்து அவர்களை அகற்றிவிடலாம்.

யாழ்மண் அதை கண்டிப்பாக செய்யும் ஏனெனின் எவருக்கு வாக்கு போட்டாலும் எம் இனம் என்பதை எவருக்கும் விட்டுக்கொடுக்காத மண் அது, அது எம்மைவிட சிங்களவர்களுக்கு நன்றே தெரியும், அதனால்தான் என்பிபி வடபகுதியில் எப்படி  வென்றது என்ற அதிர்ச்சியிலிருந்து இன்னமும் அவர்கள் மீளவில்லை.

எமக்கு தற்போதைய தேவை கிடைத்த வாய்ப்புகளை எப்படி எம் மக்களுக்கு சார்பாக பயன்படுத்தலாம் என்பது மட்டுமே, அதை உங்களின்  அர்த்தமற்ற குறளி வித்தைகளுக்கு பயன்படுத்தி சபையை குழப்பாதீர்கள் திருவாளர் அர்ச்சுனா அவர்களே.

படித்தவராக இருக்கின்றீர்கள், ஆனால் உங்களின் பல செயற்பாடுகள் ஐந்து வயசு குழந்தைபோல் சிரிப்புக்கிடமானதாக இருக்கிறது.

  • Like 11
  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
33 minutes ago, goshan_che said:

அருச்சுனா எதிர்கட்சி தலைவர் இருக்கையில் இருந்தது பாராளுமன்ற விதிகளின் படி தப்பே இல்லையாமே 👇

@satan @தமிழ் சிறி

May be an image of 2 people and people smiling

cc45aff8-ffc8-43c3-bda9-aa11d2d93b92.jpg

முதல் நாள் எவரும்... விரும்பிய இருக்கையில் அமரலாம் என்று முன்பே சொல்லப் பட்டதாம்.
அப்படி அவர், பிழை என்றால்... அன்றே சபாநாயகர்  ஒழுங்கு நடவடிக்கை எடுத்திருப்பாராம்,
அப்படி நடவடிக்கை  எடுக்காத படியால்... அர்ச்சுனாவில் தவறு இல்லை என்று சொல்கிறார்கள்.

ஆனால்... என்ன இருந்தாலும்... பிரதம மந்திரிக்கு சமமான அந்தஸ்து உடைய  எதிர்க்கட்சி தலைவரின் கதிரையில் இருந்து, முதல் நாளே  பிரச்சினை பட்டது  சரி அல்ல என்பது எனது நிலைப்பாடு. 

தமிழர்களுக்கு ஒரு பண்பு உள்ளது. அதனை காவலித்தனமாகவோ, கோமாளித்தனமாகவோ செய்வது அருவருப்பை எனக்கு  ஏற்படுத்துக்கின்றது. எத்தனையோ... பிரச்சினைகள் இருக்க, எதிர்க்கட்சி  தலைவரின் கதிரையில் இருந்துதான் தனது அடையாளத்தை காட்ட  வேண்டும் என்று இல்லை. 

நேற்று முற்பகல்  சஜித்தின் கதிரையில் இருந்து விட்டு, தேனீர் இடைவேளையில்... 
சஜித்துடன் நின்று ஒரு செல்ஃபியும் எடுத்துள்ளார்.

அத்துடன் அவர் தனது மதம் இந்து என்று பாராளுமன்ற பதிவில் கொடுத்தவராம், அதனை புத்த சமயம் என  பதிந்து விட்டார்களாம் என்று இன்னொரு பஞ்சாயத்து போய்க் கொண்டு இருக்குது.

Edited by தமிழ் சிறி
  • Like 4
  • கருத்துக்கள உறவுகள்
Posted
18 minutes ago, தமிழ் சிறி said:

உங்கள் கருத்துத்தான் என் கருத்தும்.

  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, நியாயம் said:

சாதாரண விடயங்களை நம்மவர்களே மிகைப்படுத்துகின்றார்கள். இதற்கான காரணங்கள் எரிச்சல், பொறாமை, பழிவாங்குதல் என பல வகைப்படலாம்.

மருத்துவர் அர்ச்சனாவின் விழிப்புணர்வின் பின் முன்புபோல் வைத்தியசாலைகளில் ஐஸ் அடிக்க முடியவில்லை, நேரத்திற்கு தனிப்பட்ட வேலைகளுக்கு கிளம்ப முடியவில்லை என எனது மருத்துவ நண்பர் ஒருவர் கூறினார். இப்போது கொஞ்சம் பயம் ஏற்பட்டுள்ளது. முன்பை விட கொஞ்சம் அவதானமாக மருத்துவர்கள் வேலை பார்க்கின்றார்கள். 

மருத்துவர், பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சனா சிறப்பாக செயற்படுவார் என எதிர்பார்ப்போம்.

Dr. அர்ச்சுனா ஒரு சாதாரண நபர்  அல்ல. அவர் ஒரு வைத்தியர், ஒரு நாடாளுமன்ற உறுப்பினர். பல நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் ஒப்பிடும்போது இவருக்கு இன்னும் மேலதிக பொறுப்புள்ளது. எனவே அவர் மற்றவர்களை விடவும் இன்னும் பொறுப்புசெயற்பட வேண்டும். 

  • Like 4
  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
18 minutes ago, goshan_che said:

உங்கள் கருத்துத்தான் என் கருத்தும்.

அவர்கள்... நல்லெண்ண சமிக்ஞை காட்ட ஆரம்பிக்கும் போது...
நாம் பொறுமையாக இருந்து பெறவேண்டியதை பெற்றுக் கொள்ள வேண்டும்.

இப்பவே... ஒன்றுக்கும் உதவாத, வறட்டு வீரத்தை காட்டி...
ஆரம்பத்திலேயே குழப்பி அடித்தால், அடுத்த  ஐந்து வருடம் தமிழர்களுக்கு நரகமாக இருக்கும்.

நேற்றைய காணொளி...  சிங்களப் பகுதிகளை வடிவாக போய்ச் சேரவில்லை என நினைக்கின்றேன்.
அதன் பின்... புத்த பிக்குகளில் இருந்து, கடைமட்ட  கிராமத்து சிங்களவன் வரை... 
இதன் எதிர்வினை கடுமையையாக வரும் என நினைக்கின்றேன். 

போதாக் குறைக்கு.... முஸ்லீம்களும் எரியும் நெருப்பில் எண்ணை ஊற்ற தயாராகவே இருக்கின்றார்கள். பிறகு தமிழர்களை  காப்பாற்ற யாரும் இல்லை.

Edited by தமிழ் சிறி
  • Like 3
  • கருத்துக்கள உறவுகள்
Posted

https://x.com/MKSL2024/status/1859960137454342194/mediaViewer?currentTweet=1859960137454342194&currentTweetUser=MKSL2024
 
எமக்காக போராடிய பிரபாகரனை நாம் தெய்வம் என்றே கருதுகிறோம்…..

சிங்களத்தில் அருச்சுனா….

சரியோ….

பிழையோ….

யாழ்பாணம் 3 எம்பிக்களை தந்தது / தமிழ் தேசியத்தின் கதை முடிந்தது என்ற பிரச்சாரத்தை ஒரு வீடியோவில் பீஸ் பீஸ் ஆக்கிவிட்டார்.

may be there is a method behind his madness? 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
5 hours ago, valavan said:

எமக்கு தற்போதைய தேவை கிடைத்த வாய்ப்புகளை எப்படி எம் மக்களுக்கு சார்பாக பயன்படுத்தலாம் என்பது மட்டுமே, அதை உங்களின்  அர்த்தமற்ற குறளி வித்தைகளுக்கு பயன்படுத்தி சபையை குழப்பாதீர்கள் திருவாளர் அர்ச்சுனா அவர்களே.

படித்தவராக இருக்கின்றீர்கள், ஆனால் உங்களின் பல செயற்பாடுகள் ஐந்து வயசு குழந்தைபோல் சிரிப்புக்கிடமானதாக இருக்கிறது.

DR. அர்ச்சுனா அவர்கள்  சிங்கள மக்களுக்கு இன்னும் பல செய்திகளைக் கூறிவிட்டுத்தான் தமிழ் மக்களின் அபிவிருத்தியில் கவனம் எடுப்பார் என்று நினைக்கிறேன் .

முதலில் எல்லோரும் ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும்
எதிர் கட்சித் தலைவர் எங்கே இருப்பார் என்று முதன் முதலாகப் பாராளுமன்றத்திற்குச் சென்றவர் யாருக்காவது தெரியுமா ?
 
அப்படி இருக்கும் பொது ஒருவர் அமர்ந்த இடத்திலிருந்து அவரை அகற்றுவதற்கான முயற்சி ஒரு சாதாரண அரச ஊழியரால் முன்னெடுக்கப்படுவது சரியா ?

அப்படியான நிலைமையில் யாரும் இடத்தைவிட்டு அகல்வதற்கு
முன்வரமாட்டார்கள்

குறைந்தது சஜித் அவர்கள் கூட இதைப்பற்றி வாய் திறக்காத நிலையில்  ஊடகங்களும் ஒட்டுண்ணிகளும் இந்த நிகழ்வைப் பெரிதாக்க முயல்வதில் இருந்து    அவர்களின் நோக்கம் மக்களுக்கு தெளிவாகத் தெரிகின்றது
 
  • Like 1
  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

எல்லாம் வரும் புதன்கிழமை தெரிந்து விடும் சிங்களம் உண்மையிலே தமிழரை நம்புகிறார்களா என்று ?

Posted

அர்ச்சுனா பக்கம் திரும்பும் சிங்கள ஊடகங்கள் -தமிழாக்கம்

  • கருத்துக்கள உறவுகள்
Posted
7 minutes ago, வாத்தியார் said:

DR. அர்ச்சுனா அவர்கள்  சிங்கள மக்களுக்கு இன்னும் பல செய்திகளைக் கூறிவிட்டுத்தான் தமிழ் மக்களின் அபிவிருத்தியில் கவனம் எடுப்பார் என்று நினைக்கிறேன் .

முதலில் எல்லோரும் ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும்
எதிர் கட்சித் தலைவர் எங்கே இருப்பார் என்று முதன் முதலாகப் பாராளுமன்றத்திற்குச் சென்றவர் யாருக்காவது தெரியுமா ?
 
அப்படி இருக்கும் பொது ஒருவர் அமர்ந்த இடத்திலிருந்து அவரை அகற்றுவதற்கான முயற்சி ஒரு சாதாரண அரச ஊழியரால் முன்னெடுக்கப்படுவது சரியா ?

அப்படியான நிலைமையில் யாரும் இடத்தைவிட்டு அகல்வதற்கு
முன்வரமாட்டார்கள்

குறைந்தது சஜித் அவர்கள் கூட இதைப்பற்றி வாய் திறக்காத நிலையில்  ஊடகங்களும் ஒட்டுண்ணிகளும் இந்த நிகழ்வைப் பெரிதாக்க முயல்வதில் இருந்து    அவர்களின் நோக்கம் மக்களுக்கு தெளிவாகத் தெரிகின்றது
 
இது தான் எனது எண்ணமும்.

கொடுத்த கடிதத்தில் இன்று எங்கு வேணுமானாலும் இருக்கலாம் என்று எழுதிக் கொடுத்துள்ளார்கள்.

டாக்ரர் இருந்த கதிரையில் எந்த ஒருவருக்கான இருப்பு என்று பொறிக்கப்படவுமில்லை.

இதில் டாக்ரர் கேட்டது நிஞாயமே.

காலம் காலமாக அடிமையாக இருந்ததால் வேற்று இனத்தவர்கள் எது சொன்னாலும் செய்ய வேண்டும் என்ற எண்ணம் பதிந்துவிட்டது.

15 minutes ago, வாத்தியார் said:

குறைந்தது சஜித் அவர்கள் கூட இதைப்பற்றி வாய் திறக்காத நிலையில்  ஊடகங்களும் ஒட்டுண்ணிகளும் இந்த நிகழ்வைப் பெரிதாக்க முயல்வதில் இருந்து    அவர்களின் நோக்கம் மக்களுக்கு தெளிவாகத் தெரிகின்றது

இதன் பிற்பாடு சயித்துடன் சேர்ந்து செல்பியும் எடுத்துள்ளாராம்.

  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 minutes ago, ஈழப்பிரியன் said:

காலம் காலமாக அடிமையாக இருந்ததால் வேற்று இனத்தவர்கள் எது சொன்னாலும் செய்ய வேண்டும் என்ற எண்ணம் பதிந்துவிட்டது

இதைத்தான்  DR. அர்ச்சுனா  அவர்கள்

"மாற்றத்தானே வந்தகிருக்கின்றோம்" !

என்று கூறியுள்ளார்

  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 minutes ago, வாத்தியார் said:

இதைத்தான்  DR. அர்ச்சுனா  அவர்கள்

"மாற்றத்தானே வந்தகிருக்கின்றோம்" !

என்று கூறியுள்ளார்

அத்தோடு மற்ற பாராளுமன்ற உறுப்பினர்கள் போல அல்லாது எங்கெங்கே மக்களுக்கு சேவை செய்யக் கூடிய வசதிகள் உள்ளன என்று ஓய்வு நேரங்களில் தேடியெடுத்து மக்களுக்கு ஏதாவது செய்ய வேண்டுமென்று துடிக்கிறார்.

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
9 hours ago, Kapithan said:

நாடாளுமன்ற முதலாவது அமர்வில் அர்ச்சுனாவின் அட்டகாசங்கள் தொடர்பாக பல செய்திகள் வெளிவந்துள்ளன. அதில் அவர் எதிர்க்கட்சித் தலைவரின் ஆசனத்தில் அமர்ந்துகொண்டு எலும்பமாட்டேன் என்று அடம் பிடித்தது,

இன்னுமொரு விடயம்
பல ஊடகங்கள் தமிழ்  மற்றும் சிங்கள ஊடகங்கள் உட்பட சில்லறை ஊடகங்களும் அனைத்தும் உண்மைக்குப் புறம்பான செய்தியை பரப்பி வருகின்றனர்.

எதிர்க்கட்சியினர் அமரும் வரியையில் 8 ஆம் இலக்க இருக்கை எதிர்க்கட்சித் தலைவருக்கானது தானா  என்பதே முதலாவது கேள்வி

அப்படியானால் வரலாற்றில் இடம்பெற்ற எல்லா எதிர்க்கட்சித் தலைவர்களும் பாராளுமன்றத்தில்  அதே இலக்க இருக்கையில் தான் அமர்ந்திருந்தார்களா  ?

சென்ற அரசாங்கத்தில் ரணில் அவர்கள் ஜனாதிபதியாக இருந்த காலத்தில் இருந்த எதிக் கட்சித் தலைவரான சஜித் அவர்கள் பாராளுமன்றத்திற்குச் சென்ற  காலத்தில் இருந்து அந்த இருக்கையில் தானாம் அமர்ந்திருப்பார்

  • கருத்துக்கள உறவுகள்
Posted
33 minutes ago, வாத்தியார் said:

ஓம்….

இதைவிட முக்கியமாக சபாநாயகர் தேர்வு, எதிர்கட்சி தலைவர் தேர்வு வரைக்கும் ….எவரும் எங்கேயும் உட்காரலாம் என்பதே விதி. எனும் போது அருச்சுனா எதையும் தவறாக செய்யவில்லை.

அருச்சுனா வென்றதும் வெளியே வந்து யாழில் நாங்கள் மூன்று பேரும்தான்….நான் வென்ற மகிழ்சியில் இல்லை…இதுதான் கடைசி சந்தர்ப்பம் என்று சொல்லியது ஒரு மிக பெரிய விடயம்……

அருச்சுனா, “நாம் எல்லோரும் இலங்கையர்” என்ற என் பி பி யின் ஈரச்சாக்கு இனவாதத்தை தன் பாணியில் அருச்சுனா மூக்குடைப்பார் என்றே நினைக்கிறேன்.

மாவீரர் தினத்தை அனுர நடத்த அனுமதித்தார் எனவே அவர் ஹீரோ என காட்ட பார் சிறியும் அவரின் புலம்பெயர் அடிப்பொடிகளும் ஒரு நாடகத்தை ஆடுகிறார்கள்.

ஆனால் இதே அனுரவின் ஆட்கள்தான் தலைவருக்கு நன்றி சொன்னமைக்கு அருச்சுனாவை போட்டு வாங்குகிறார்கள்.

இதில், கோட்டா வெல்லட்டும் அப்போதான் மக்கள் மேலும் அடிவாங்கி அதன் மூலம் எமக்கு விடுதலை விரைவாகும் என்ற நிலைப்பாட்டை எடுத்த நாம் - அருச்சுனாவினால் மக்களுக்கு ஆபத்து என அதிகம் கவலைபட தேவையில்லை எண்டே நினைக்கிறேன்.

  • Like 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted
53 minutes ago, வாத்தியார் said:

இன்னுமொரு விடயம்

வாத்தியார் இந்த டாக்ரரை பைத்தியம் என்பவர்கள்

75 வருடமாக மக்களை பைத்தியமாக்கிய பாராளுமன்ற உறுப்பினர்களைப் பற்றி பேசுவதே இல்லை.

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
21 minutes ago, goshan_che said:

புலம்பெயர் அடிப்பொடிகளும்

நீங்கள்  புலம்பெயர் அடிப்பொடி என்றதும் நினைவுக்கு வருகின்றது லண்டன் தமிழ் அடியான் என்ற ஒரு யுரியுப்பர்  அனுரகுமார திசநாயக்க  செம்பு இலங்கை  தவகரன் மாதிரி அவர் லண்டனிலாம்😆

  • கருத்துக்கள உறவுகள்
Posted
15 minutes ago, விளங்க நினைப்பவன் said:

நீங்கள்  புலம்பெயர் அடிப்பொடி என்றதும் நினைவுக்கு வருகின்றது லண்டன் தமிழ் அடியான் என்ற ஒரு யுரியுப்பர்  அனுரகுமார திசநாயக்க  செம்பு இலங்கை  தவகரன் மாதிரி அவர் லண்டனிலாம்😆

வாங்குன காசுக்கு மேலாலயே கூவும் கொய்யா என கேள்விப்பட்டிருப்பீர்கள். 

அதுதான் இது 😀

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
2 hours ago, வாத்தியார் said:

DR. அர்ச்சுனா அவர்கள்  சிங்கள மக்களுக்கு இன்னும் பல செய்திகளைக் கூறிவிட்டுத்தான் தமிழ் மக்களின் அபிவிருத்தியில் கவனம் எடுப்பார் என்று நினைக்கிறேன் .

முதலில் எல்லோரும் ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும்
எதிர் கட்சித் தலைவர் எங்கே இருப்பார் என்று முதன் முதலாகப் பாராளுமன்றத்திற்குச் சென்றவர் யாருக்காவது தெரியுமா ?
 
அப்படி இருக்கும் பொது ஒருவர் அமர்ந்த இடத்திலிருந்து அவரை அகற்றுவதற்கான முயற்சி ஒரு சாதாரண அரச ஊழியரால் முன்னெடுக்கப்படுவது சரியா ?

அப்படியான நிலைமையில் யாரும் இடத்தைவிட்டு அகல்வதற்கு
முன்வரமாட்டார்கள்

குறைந்தது சஜித் அவர்கள் கூட இதைப்பற்றி வாய் திறக்காத நிலையில்  ஊடகங்களும் ஒட்டுண்ணிகளும் இந்த நிகழ்வைப் பெரிதாக்க முயல்வதில் இருந்து    அவர்களின் நோக்கம் மக்களுக்கு தெளிவாகத் தெரிகின்றது
 
பாலர் பாடசாலைகளிலேயே ஒழுங்கைக் கடைப்பிடிக்கப் போதிக்கும் பின்னணியைக் கொண்ட கல்விப்புலத்தைக் கொண்ட ஒரு நாட்டின் அதி உயர் சபையில் ஒரு ஒழுங்கு இருக்கும் என்பதை குழந்தைகள் கூட புரிந்துகொள்ளும்.

அர்ச்சுனாVன் முதிர்ச்சியற்ற செயல்களை ஆதரித்துக் பேசுதல் ஏற்கக்கூடியது அல்ல. 

Edited by Kapithan
  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
4 hours ago, வாத்தியார் said:

இன்னுமொரு விடயம்
பல ஊடகங்கள் தமிழ்  மற்றும் சிங்கள ஊடகங்கள் உட்பட சில்லறை ஊடகங்களும் அனைத்தும் உண்மைக்குப் புறம்பான செய்தியை பரப்பி வருகின்றனர்.

எதிர்க்கட்சியினர் அமரும் வரியையில் 8 ஆம் இலக்க இருக்கை எதிர்க்கட்சித் தலைவருக்கானது தானா  என்பதே முதலாவது கேள்வி

அப்படியானால் வரலாற்றில் இடம்பெற்ற எல்லா எதிர்க்கட்சித் தலைவர்களும் பாராளுமன்றத்தில்  அதே இலக்க இருக்கையில் தான் அமர்ந்திருந்தார்களா  ?

சென்ற அரசாங்கத்தில் ரணில் அவர்கள் ஜனாதிபதியாக இருந்த காலத்தில் இருந்த எதிக் கட்சித் தலைவரான சஜித் அவர்கள் பாராளுமன்றத்திற்குச் சென்ற  காலத்தில் இருந்து அந்த இருக்கையில் தானாம் அமர்ந்திருப்பார்

இங்கே அர்ச்சுனா எதிர்க்கட்சித் தலைவரின் கதிரையில் இருந்தது அல்ல விடயம். நாடாளுமன்றத்திற்கென்று ஒரு ஒழுங்கு அல்லது தொடர்ச்சி அல்லது மரபு இருக்கும் என்பதை ஏற்றுக்கொள்ளுதலும் அதைத் தொடர்ச்சியாகக்  கடைப்பிடித்தலும் ஆகும். 

இதைப் புரிந்துகொள்ளுதல் கடினம் அல்ல. 

5 hours ago, பெருமாள் said:

எல்லாம் வரும் புதன்கிழமை தெரிந்து விடும் சிங்களம் உண்மையிலே தமிழரை நம்புகிறார்களா என்று ?

ஏன் இந்த அவசரம்? 

Edited by Kapithan

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.