Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Posted
53 minutes ago, Kapithan said:

பாலர் பாடசாலைகளிலேயே ஒழுங்கைக் கடைப்பிடிக்கப் போதிக்கும் பின்னணியைக் கொண்ட கல்விப்புலத்தைக் கொண்ட ஒரு நாட்டின் அதி உயர் சபையில் ஒரு ஒழுங்கு இருக்கும் என்பதை குழந்தைகள் கூட புரிந்துகொள்ளும்.

அர்ச்சுனாVன் முதிர்ச்சியற்ற செயல்களை ஆதரித்துக் பேசுதல் ஏற்கக்கூடியது அல்ல. 

ஓஓஓஓஓ நீங்க இதையா சொல்கிறீர்கள்?

  • கருத்துக்கள உறவுகள்
Posted
29 minutes ago, ஈழப்பிரியன் said:

ஓஓஓஓஓ நீங்க இதையா சொல்கிறீர்கள்?

உதென்ன பிரமாதம்… இதைப் பாருங்கள்,.🤣

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

அர்ச்சுனாவை வைத்து தமிழர்களும் தவறான இருக்கையில் அமரகூடியவர்கள் என்ற முடிவுக்கு யாரும் வரக்கூடாது.விமானத்தில் தியோட்டரில் நீங்கள் தவறான இருக்கையில் இருக்கின்றீர்கள் என்பதை சுட்டிகாட்டினால்  தமிழர்கள் உடனே sorry சொல்லிவிட்டு சரியான இடத்துக்கு சென்றுவிடுவார்கள் .எனது விமான தியோட்டர் அனுபவத்தில் மற்றய இன மக்களும் அப்படியே.  அர்ச்சுனாவின்  கோமாளி தனங்களை நியாயபடுத்தவே யாழ்கள உறவுகளுக்கு இனி பெருமளவு நேரம் தேவைபடும்.

பாராளுமன்றத்தில் எனக்கு நடந்தது  என்று அவர் அழுது ஒரு வீடியோ போடாமல் இருக்க வேண்டும்🙏

  • கருத்துக்கள உறவுகள்
Posted

அர்ச்சுனா :  கற்றுக்கொள்ள வேண்டியது!

Oruvan

இலங்கைத்தீவின் நாடாளுமன்றம் 225 அங்கத்தவர்களைக் கொண்ட ஓரவைச் சட்டமன்றமாகும். இது பிரித்தானிய நாடாளுமன்றத்தின் தன்மையைக் கொண்டது.

சபாநாயகர் அல்லது அவர் சமூகமளிக்காத போது பிரதி சபாநாயகர் அல்லது குழுக்களின் தலைவர் அல்லது குழுக்களின் பிரதித் தலைவர் சபைக்கு தலைமை தாங்குவார் என்பது மரபு.

1972 மார்ச் 22 ஆம் ஆண்டு இலங்கை பிரித்தானியாவிடம் இருந்து முற்று முழுதான இறைமை கொண்ட நாடாகியது. அதாவது குடியரசானது. அதனையடுத்து பிரதிநிதிகள் சபைக்குப் பதிலாக தேசிய அரசுப் பேரவை உருவாக்கப்பட்டது.

இதற்கு 168 பேர் தேர்தல்கள் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டனர். 1977 ஆம் ஆண்டில் புதிய அரசியலமைப்பு அறிமுகப்படுத்தப்பட்டதன் விளைவாக தேசிய அரசுப் பேரவை கலைக்கப்பட்டு இலங்கை நாடாளுமன்றம் அமைக்கப்பட்டது.

இந்த நாடாளுமன்ற உறுப்பினர்களின் நடத்தை மற்றும் மரபுகள் சம்பிரதாயங்கள் ஆகியவற்றைப் பேணும் வகையில் நிலையியற் கட்டளைச் சட்டமும் உண்டு. ஜனாதிபதி, பிரதமர், சபை முதல்வர், எதிர்க்கட்சித் தலைவர் ஆகியோருக்கு நிரந்தரமான இடத்தில் ஆசனங்கள்கள் ஒதுக்கப்பட்டிருக்கும். ஏனைய உறுப்பினர்களின் ஆசன இடங்கள் அவ்வப்போது மாறுபடும்.

ஒரு உறுப்பினர் இன்னுமொரு உறுப்பினரின் ஆசனத்தில் அமர்ந்திருக்கலாம். ஆனால் குறித்த உறுப்பினர் உரையாற்றும் நேரம் வரும்போது அவருக்குரிய ஆசனத்தில் இருக்க வேண்டும். அந்த ஆசனத்துக்குரிய ஒலிவாங்கியில் தான் அந்த உறுப்பினர் பேசவும் வேண்டும்.

ஆக வரவுசெலவுத் திட்ட விவாதத்தில் நடைபெறும் அமைச்சுக்களுக்கான குழு நிலை விவாத்தின்போது மாத்திரம் எந்த ஒரு உறுப்பினரும் வேறு ஆசனங்களில் இருந்து உரையாற்ற முடியும்.

ஆகவே இந்த மரபுசார்ந்த நடைமுறைகள் உறுப்பினர்களுக்குரிய ஒழுக்கங்கள். மற்றும் சிறப்புரிமை என்பது விசேடமானது. நாடாளுமன்றத்தில் ஒரு உறுப்பினர் எந்த விடயத்தையும் துணிந்து பேசலாம். சுட்டிக்காட்டலாம்.

ஆனால் தகவல்கள் தவறாக இருக்கக்கூடாது. தகவல்கள் தவறு என்று வேறு யாராவது ஒரு உறுப்பினர் ஒழுங்குப் பிரச்சிஜனை எழுப்பினால் குறித்த அந்த உரையின் சில பகுதிகள் ஹன்சாட் பதிவுப் புத்தகத்தில் இருந்து நீக்கப்படும் சபாநாயகர் அதற்கு அனுமதி வழங்குவார்.

ஆகவே நாடாளுமன்ற நிலையியற் கட்டளை விதிகள் அவற்றின் கீழ் உள்ள நடைமுறைகள், விவாதம் மற்றும் சபையினுள் உறுப்பினர்களது நடத்தை என்பன சீரமைக்கப்பட்டுள்ளன.

நிலையியற் கட்டளைகளின் பிரதான நோக்கமானது, நாடாளுமன்றத்தின் ஒழுங்கமைதியுடைய, காத்திரபூர்வமான செயற்பாட்டுக்குத் தேவையான நடவடிக்கைகளை வரையறுப்பதாகும்

நிலையியற் கட்டளைகள் நாடாளுமன்ற நடவடிக்கைகளின் முக்கியமான மூல ஆதார ஏடாகவும் மற்றும் விவாதங்களுக்கு அதிக சந்தர்ப்பம் அளிப்பனவாகவும், பரிசீலனையின் பின்பு தீர்மானங்களை மேற்கொள்வதற்கான வாய்ப்பையும் வழங்குகின்றன.

இலங்கை ஒற்றையாட்சி அரசியல் யாப்பு தமிழ் மக்களுக்கான அதிகாரங்கள் - உரிமைகளை வழங்க மறுக்கலாம். ஆட்சி அதிகாரத்தில் அதன் கொள்கைத் தீர்மானங்களில் தமிழர்கள் பங்குகொள்ளக்கூடிய ஏற்பாடுகள் இந்த அரசியல் யாப்பில் இல்லை என்பதும் பகிரங்கமானதுதான்.

ஆனால் நாடாளுமன்றம் என்பது ஒரு 'அரச சபை' அதற்குரிய 'மாண்புகள்' 'மரபுகள்' பேணப்பட வேண்டும். எந்த ஒரு எதிர்க் கருத்துள்ள நாடாளுமன்றத்திற்குச் சென்றாலும் அங்குள்ள மரபுகளை பேண வேண்டியது கட்டாயம். அது ஒரு அரசியல் பண்புடன் கூடிய நாகரிகம்.

எதிர்த்தரப்பு உறுப்பினர்களுடன் வாதிடும்போதுகூட நாகரிகம் உண்டு. வார்த்தைகள் ஏற்புடையதாக இருக்க வேண்டும். ஒருவர் சபைக்குச் சமூகமளிக்காத நேரத்தில் அவரைப் பற்றிப் பேசுவதுகூட நாடாளுமன்ற மரபல்ல. இவ்வாறானதொரு கட்டமைப்பு உள்ள நிலையில் புதிதாகத் தெரிவான உறுப்பினர் அர்ச்சுனா 10 ஆவது நாடாளுமன்றத்தின் முதலாவது அமர்வு கூடியபோது எதிர்க்கட்சித் தலைவரின் ஆசனத்தில் அமர்ந்திருக்கிறார்.

அது முதலாவது அமர்வுதான். புதிய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான பயிற்சிகள் வழங்கப்பட முன்னரே ஜனாதிபதியின் கொள்கை விளக்கவுரைக்காக முதலாவது அமர்வு கூடிய முறையும் கேள்விக்குரியதுதான்.

ஆனாலும் மரபு பற்றிய புரிதல் என்பது மிக முக்கியமானது. 'அரச சபை' என்றால் நிச்சியமாக ஆசன ஒதுக்கீடுகள் இருக்கும் அதுவும் எதிர்க்கட்சித் தலைவரின் ஆசனம் பிரத்தியேகமானது என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று.

அதுவும் அனுபவமுள்ள நாடாளுமன்ற படைக்கல உதவி சேவிதர்கள் அது பற்றி விளக்கமளித்தபோதும் அதனை மறுத்துரைத்த அந்த உறுப்பினர், அதற்கு வழங்கிய விளக்கம் அரசியல் பண்பல்ல. பல மூத்த உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தின் மாண்புக்கு மாறாகச் செயற்பட்டிருக்கின்றனர் என்பது வேறு.

ஆனால் போரினால் பாதிக்கப்பட்டு இன்றுவரை அரசியல் விடுதலை கோரி மெதுமெதுவாகச் சிதைவடைந்து வரும் ஒரு சமூகத்தின் புதிய பிரதிநிதியாக சபைக்குள் வந்த ஒரு புதிய உறுப்பினர் அநாகரிகமாக நடந்துகொள்வது அச் சமூகத்தை மேலும் தலைகுனிய வைக்கிறது.

1883 ஆம் ஆண்டு பிரித்தானியர் ஆட்சிக்காலத்தில் இருந்து உருவாக்கப்பட்ட சட்ட சபைகள் மற்றும் 1948 இன் பின்னரான நாடாளுமன்றங்களில் மாபெரும் தமிழ் சட்ட மேதைகள் உறுப்பினர்களாக இருந்த இடத்தில் சில தமிழ் உறுப்பனர்கள் நடந்துகொள்ளும் முறை அரசியல் பண்பல்ல.

2004 ஆம் ஆண்டு ஈழவேந்தன் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தபோது தனது எதிர்க்கட்சி ஆசனத்தை விட்டு அரச தரப்பு ஆசனங்களிலும் மாறி அமர்ந்த கதைகள் உண்டு. ஆனால் ஈழவேந்தனை அறிவுசார் உறுப்பினராக ஏனைய சிங்கள உறுப்பினர்கள் மதிப்புக் கொடுத்திருந்தனர்.

ஈழவேந்தன் வயது மூப்பினால் அவ்வாறு செயற்படுகிறார் என்ற வாதங்கள் அன்று இருந்தன. அப்போது சபாநாயகராக இருந்த வி.ஜே.மு லொக்குபண்டார ஈழவேந்தனின் ஆங்கில மொழி உரைகளை செவிமடுத்து அதற்கு மேலும் பொருள் விளக்கம் கேட்டதையும் மறுப்பதற்கில்லை.

நாடாளுமன்றத்தில் வரப்பிரசாதங்கள் உண்டு. சிறப்புரிமைகள் உண்டு என்பதற்காக ஒவ்வொரு உறுப்பினர்களும் தமக்கு வாக்களித்த மக்களின் சுயமரியாதையை அவமதிக்க முடியாது.

அதுவும் புதிய தமிழ் உறுப்பினர்களின் செயற்பாடுகள் முற்போக்கான மற்றும் அரசியல் அபிலாஷை நோக்கில் இயங்க வேண்டியது அவசியமானது. இது ஒவ்வொரு தமிழ் உறுப்பினர்களுக்கும் சமர்ப்பணம்.

”ஒருவன்” ஞாயிறு வார இதழின் ஆசிரியர் தலையங்கம்

https://oruvan.com/sri-lanka/2024/11/23/what-archuna-mp-needs-to-learn

  • Like 1
  • Thanks 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted
3 hours ago, கிருபன் said:

நாடாளுமன்றத்தில் வரப்பிரசாதங்கள் உண்டு. சிறப்புரிமைகள் உண்டு என்பதற்காக ஒவ்வொரு உறுப்பினர்களும் தமக்கு வாக்களித்த மக்களின் சுயமரியாதையை அவமதிக்க முடியாது.

large.IMG_7806.jpeg.ec76ef07077031504ee8

  • Like 1
  • Haha 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted
5 hours ago, விளங்க நினைப்பவன் said:

அர்ச்சுனாவை வைத்து தமிழர்களும் தவறான இருக்கையில் அமரகூடியவர்கள் என்ற முடிவுக்கு யாரும் வரக்கூடாது.

யார் சொன்னது அர்ச்சுனா தவறான இருக்கையில் உட்காந்தார் என்று?

எவருக்குமே எந்தக் கதிரையும் ஒதுக்குப்படவே இல்லையே.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
48 minutes ago, Kavi arunasalam said:

large.IMG_7806.jpeg.ec76ef07077031504ee8

தேர்தலின் பின் வானரமாக அங்கும், இங்கும்..🤔

  • கருத்துக்கள உறவுகள்
Posted
22 minutes ago, ஈழப்பிரியன் said:

யார் சொன்னது அர்ச்சுனா தவறான இருக்கையில் உட்காந்தார் என்று?

எவருக்குமே எந்தக் கதிரையும் ஒதுக்குப்படவே இல்லையே.

உண்மை தான் அண்ணா 

ஆனால் சொன்னதும் எழுந்து அதற்குரிய மரியாதையை கொடுத்து இருக்கலாம்.

இது ஒருவகை புதிய வரலாற்றினை எழுதப் போகும் பாதை பாராளுமன்றம் என்கிறார்கள். அதில் நமது தவறுகள்,  முரண்பாடுகள் மற்றும் குளறுபடிகளை தவிர்ப்பது இனத்தின் வரலாற்றை தவறாக புரிந்து கொள்வதை தடுக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
3 minutes ago, விசுகு said:

உண்மை தான் அண்ணா 

ஆனால் சொன்னதும் எழுந்து அதற்குரிய மரியாதையை கொடுத்து இருக்கலாம்.

இது ஒருவகை புதிய வரலாற்றினை எழுதப் போகும் பாதை பாராளுமன்றம் என்கிறார்கள். அதில் நமது தவறுகள்,  முரண்பாடுகள் மற்றும் குளறுபடிகளை தவிர்ப்பது இனத்தின் வரலாற்றை தவறாக புரிந்து கொள்வதை தடுக்கும்.

இதை அவர்கள் ஏன் முதலே செய்திருக்கக் கூடாது?

வழமையைவிட கூடிய புதுமுகங்கள் வரப் போகுது என்று முதலே தெரியும் தானே?

கொடுத்த கடிதத்தில் இன்னஇன்ன இலக்க கதிரைகளை தவிர்த்து இருக்கும்படி அவர்கள் அல்லவா முதலே அறிவுறுத்தியிருக்க வேண்டும்.

முதல்நாள் எங்கேயும் அமரலாம் என்று சொல்லிப்போட்டு இடையில் வந்து எழுப்புவது எவ்வளவு அவமானம்?

சில படங்களில் சபையில் சாப்பிட்டுக் கொண்டிருப்பவரை எழுப்பி கலைப்பார்கள்.

அதுபோலவல்லவா இருக்கிறது.

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
3 minutes ago, ஈழப்பிரியன் said:

தவறு நடக்கவில்லை என்று நான் குறிப்பிடவில்லை. குழப்பவாதிகளாக எம்மை காட்ட நாம் காரணமாகிவிடக் கூடாது என்று மட்டுமே எழுதுகிறேன். நன்றி அண்ணா.

Edited by விசுகு
  • கருத்துக்கள உறவுகள்
Posted
7 hours ago, விளங்க நினைப்பவன் said:

அர்ச்சுனாவை வைத்து தமிழர்களும் தவறான இருக்கையில் அமரகூடியவர்கள் என்ற முடிவுக்கு யாரும் வரக்கூடாது.விமானத்தில் தியோட்டரில் நீங்கள் தவறான இருக்கையில் இருக்கின்றீர்கள் என்பதை சுட்டிகாட்டினால்  தமிழர்கள் உடனே sorry சொல்லிவிட்டு சரியான இடத்துக்கு சென்றுவிடுவார்கள் .எனது விமான தியோட்டர் அனுபவத்தில் மற்றய இன மக்களும் அப்படியே.  அர்ச்சுனாவின்  கோமாளி தனங்களை நியாயபடுத்தவே யாழ்கள உறவுகளுக்கு இனி பெருமளவு நேரம் தேவைபடும்.

பாராளுமன்றத்தில் எனக்கு நடந்தது  என்று அவர் அழுது ஒரு வீடியோ போடாமல் இருக்க வேண்டும்🙏

நீங்கள் கூறியபடி... பாராளுமன்றத்தில் "எனக்கு நடந்தது  என்று... 
அவர் அழுது ஒரு வீடியோ போடும் நாள் வரும்" என்றே நினைக்கின்றேன்.
(அப்படி எதுவும் நடக்கக் கூடாது என்பதே.. எனது பிரார்த்தனை.)

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
4 hours ago, ஈழப்பிரியன் said:

யார் சொன்னது அர்ச்சுனா தவறான இருக்கையில் உட்காந்தார் என்று?

எவருக்குமே எந்தக் கதிரையும் ஒதுக்குப்படவே இல்லையே.

அதற்காக வகுப்பறையில் ஆசிரியரின் இருக்கையிலோ அல்லது பிரசவ ஆஸ்பத்திரியில் கர்ப்பிணிப் பெண்ணின் கட்டிலில் படுக்கலாமோ?,....😁

Edited by Kapithan
  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 minutes ago, Kapithan said:

அதற்காக வகுப்பறையில் ஆசிரியரின் இருக்கையிலோ அல்லது பிரசவ ஆஸ்பத்திரியில் கர்ப்பிணிப் பெண்ணின் கட்டிலில் படுக்கலாமோ?,....😁

இது விதண்டாவாதம்.உறுப்பினர்களுக்கு என ஒதுக்கப்பட்ட கதிரையிலேயே அவர் உட்கார்ந்திருக்கிறார்.

மேடை மேல் இருந்த சபாநாயகரின் இடத்திலா அவர் இருந்தார்.

வகுப்பறையில் ஆசிரியரின் கதிரை எங்கே இருக்கும் என்று

பாடசாலை போகாத எனக்கே தெரியுது.

பட்டதாரி உங்களுக்குத் தெரியலையே?

  • கருத்துக்கள உறவுகள்
Posted
3 hours ago, ஈழப்பிரியன் said:

இதை அவர்கள் ஏன் முதலே செய்திருக்கக் கூடாது?

வழமையைவிட கூடிய புதுமுகங்கள் வரப் போகுது என்று முதலே தெரியும் தானே?

கொடுத்த கடிதத்தில் இன்னஇன்ன இலக்க கதிரைகளை தவிர்த்து இருக்கும்படி அவர்கள் அல்லவா முதலே அறிவுறுத்தியிருக்க வேண்டும்.

முதல்நாள் எங்கேயும் அமரலாம் என்று சொல்லிப்போட்டு இடையில் வந்து எழுப்புவது எவ்வளவு அவமானம்?

சில படங்களில் சபையில் சாப்பிட்டுக் கொண்டிருப்பவரை எழுப்பி கலைப்பார்கள்.

அதுபோலவல்லவா இருக்கிறது.

சொல்லும்போது சாதாரணமாக அந்த இடத்தை விட்டு நகர்ந்திருந்தால் இது ஒரு விடயமாகவே வந்திருக்காது. அதையும் வீடியோ எடுத்து வெளியிட்டு,.......🥶

சபை குழப்பி என்று ஒரு சொல்லடை ஒன்று எங்கள் வழக்கில்  உண்டு,...🥺

Just now, ஈழப்பிரியன் said:

இது விதண்டாவாதம்.உறுப்பினர்களுக்கு என ஒதுக்கப்பட்ட கதிரையிலேயே அவர் உட்கார்ந்திருக்கிறார்.

மேடை மேல் இருந்த சபாநாயகரின் இடத்திலா அவர் இருந்தார்.

வகுப்பறையில் ஆசிரியரின் கதிரை எங்கே இருக்கும் என்று

பாடசாலை போகாத எனக்கே தெரியுது.

பட்டதாரி உங்களுக்குத் தெரியலையே?

கூள்ட்வுண் பிறதர், ஒரு நையாண்டிக்காக எழுதப்பட்டதையிட்டு கோபப்படுகிறீர்கள். ...😁

  • கருத்துக்கள உறவுகள்
Posted

அர்சு;சுனா!நீங்க நல்லார?கெட்வரா?
பைத்தியமா?தெளிவானவரா?இந்த வீடியோவில் தெளிவாகப் பேசுகிறார்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 hours ago, புலவர் said:

அர்சு;சுனா!நீங்க நல்லார?கெட்வரா?
பைத்தியமா?தெளிவானவரா?இந்த வீடியோவில் தெளிவாகப் பேசுகிறார்.

அந்த சுமந்திரன் கெட்டதும் வாயால்,  உந்த அர்ச்சுனா கெடுவதும் வாயால்,..😁

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
21 minutes ago, Kapithan said:

அந்த சுமந்திரன் கெட்டதும் வாயால்,  உந்த அர்ச்சுனா கெடுவதும் வாயால்,..😁

இது OK

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 minute ago, புலவர் said:

இது OK

என்னால் இதை நம்ப முடியவில்லை…

நம்ம கப்ஸ் ஆ எழுதியது 🤔

25 minutes ago, Kapithan said:

அந்த சுமந்திரன் கெட்டதும் வாயால்,  உந்த அர்ச்சுனா கெடுவதும் வாயால்,..😁

  • Haha 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted
3 hours ago, புலவர் said:

அர்சு;சுனா!நீங்க நல்லார?கெட்வரா?
பைத்தியமா?தெளிவானவரா?இந்த வீடியோவில் தெளிவாகப் பேசுகிறார்.

இது ஒரு சைக்கோ தெரிந்தும் பத்து பேரை  வோட்டு இதுக்கு போடவேண்டி வந்தது சுமத்திரன் எனும் கோடாலி காம்பை அரசியலில் இருந்து அகற்றவே ஆனால் அந்த பேயை விட இந்த வந்த பேயை வாயை அடக்க சொல்லுங்க பார்லி மென்டில் வந்த முதல் நாளிலே குரங்கு சேட்டை விடுது இதுக்கெல்லாம் யார் டாக்டர் பட்டம் கொடுத்தார்கள் ?

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
9 hours ago, விசுகு said:

ஆனால் சொன்னதும் எழுந்து அதற்குரிய மரியாதையை கொடுத்து இருக்கலாம்.

ஏன்?

யாரும் எங்கேயும் அமரலாம் எனும் போது…அங்கே எதிர்கட்சி தலைவருக்குரிய கதிரை என்பதே இல்லை….

இன்னொரு விடயம் பாராளுமன்ற சிறப்புரிமை என கேள்விப்பட்டிருப்பீர்கள்….எம்பிக்களை சபாநாயகர் மட்டுமே ஒழுங்கு படுத்த முடியும்.

இந்த ஊழியர் யார் ஒரு எம்பியை ஒழுங்கு படுத்த?

8 hours ago, விசுகு said:

குழப்பவாதிகளாக எம்மை காட்ட நாம் காரணமாகிவிடக் கூடாது

இதில் முழு உடன்பாடே.

Edited by goshan_che
  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
17 hours ago, விளங்க நினைப்பவன் said:

அர்ச்சுனாவை வைத்து தமிழர்களும் தவறான இருக்கையில் அமரகூடியவர்கள் என்ற முடிவுக்கு யாரும் வரக்கூடாது.விமானத்தில் தியோட்டரில் நீங்கள் தவறான இருக்கையில் இருக்கின்றீர்கள் என்பதை சுட்டிகாட்டினால்  தமிழர்கள் உடனே sorry சொல்லிவிட்டு சரியான இடத்துக்கு சென்றுவிடுவார்கள் .எனது விமான தியோட்டர் அனுபவத்தில் மற்றய இன மக்களும் அப்படியே.  அர்ச்சுனாவின்  கோமாளி தனங்களை நியாயபடுத்தவே யாழ்கள உறவுகளுக்கு இனி பெருமளவு நேரம் தேவைபடும்.

பாராளுமன்றத்தில் எனக்கு நடந்தது  என்று அவர் அழுது ஒரு வீடியோ போடாமல் இருக்க வேண்டும்🙏

மருத்துவர் அர்ச்சனா என்னதான் செய்கின்றார் என தொடந்து அவதானிப்போம். மற்றைய தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் பாராளுமன்றம் சென்றார்களா என்னன்செய்தார்கள் என்று ஒரு செய்தியும் எனது கண்களில் படவில்லை. ஆனால், இவர் போகும் இடம் எல்லாம் அதிர்கின்றது. சரி பார்ப்போம்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

  சாவகச்சேரி வைத்தியசாலையில் என்ன நடக்கிறது! -வைத்தியர் அர்ச்சுனா – குறியீடு

முருகேசு என்பவர் உயரமான மரத்தில் இருந்து தவறி விழுந்தார்.
உடனே அருகில் இருந்தவர்கள் அவரை வீட்டிற்கு தூக்கிச் சென்றனர்.
அங்கு வந்த டாக்டர் அவரை பரிசோதித்து பார்த்துவிட்டு... 
“ முருகேசு இறந்து விட்டார்” என்று கூறினார்.

ஆனால் அடிபட்ட முருகேசு கண்ணை விழித்து... 
“ நான் இறக்கவில்லை டாக்டர். உயிரோடுதான் இருக்கிறேன்” என்றார்.

உடனே அருகில் இருந்த முருகேசு மனைவி 
“ வாயை மூடுங்கள். உங்களுக்கு என்ன தெரியும்? 
டாக்டருக்கு தெரியாததா” என்று அதட்டினாள்.
😂😂

குறிப்பு:  நம்புங்கள்! 
இந்த பதிவிற்கும் மேலே உள்ள படத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை.  🤣

தோழர் பாலன்

  • கருத்துக்கள உறவுகள்
Posted

👇 தமிழ் அரசியலில்... ஒரு மிஸ்டர் பீன்ஸ்!!!  - நிலாந்தன். -  

  • கருத்துக்கள உறவுகள்
Posted
21 hours ago, நியாயம் said:

இவர் போகும் இடம் எல்லாம் அதிர்கின்றது.

😂

அந்த அதிர்வு ஏற்பட தான் கோமாளிதனங்கள்.

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • வீட்டில் செயற்கையாக தேனீ/தேன்கூடு வளர்ப்பவர்கள் தேனீக்கு சீனிப்பாணி கொடுக்கின்றார்கள் என கேள்விப்பட்டேன். கடையில் விற்பனை செய்யப்படும் தேன் எப்படிப்பட்ட தேனீக்களால் உற்பத்தி செய்யப்பட்டதோ யார் அறிவார். உண்மையான தேன் குளிர்காலத்தில் கட்டியாகாது என நினைக்கின்றேன்.
    • இசை அரசனும்..... நடிப்பு அரசனும்....  
    • திண்ணையில் ஒரு நாளைக்கு பத்து கருக்கு மட்டைக்கு மேல் வைக்க முடியாது என்ற கட்டுப்பாடுடன் திண்ணையை துறப்பதில் எந்த ஆட்சேபமும் இல்லை 😄
    • பாவம் அந்த தாதியர், அவர் உங்களின் உறவினராகவும் உண்மையை பேசியதாலும் சத்திய மூர்த்தியின் உளவுத்துறையால் பின்தொடரப்பட்டு பழிவாங்கப்படும் சாத்தியமுண்டு.  
    • முன்னர் திண்ணையில் பாய் விரித்து படுத்த ஒருவர் என்றால் அது நீங்களாய்த்தான் இருக்கும்....அடுத்தது நாதமுனி..😂திண்ணை இல்லாததின் பின் அவரும் இல்லை. நாதமுனி   நல்ல மனிதர். அவரை பல தடவைகள் சந்தித்திருக்கின்றேன். கருத்துக்களம் இருக்க திண்ணையில்  பிரயோசனமான உரையாடல்களை ஏன் நிர்வாகம் விரும்புகின்றது என தெரியவில்லை. பல தடவைகள் என்னையும் திண்ணையில் தடை செய்திருந்தார்கள். அது போல் மட்டுறுத்தப்பட்ட உறவுகளை திண்ணை தடையுடன் திண்ணையை ஏனைய உறவுகளுக்கு திறந்து விடலாம் என்பது என் கருத்து. இது நாதமுனிக்காக.....😂🙂  
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்

      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.