Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையில் பாராளுமன்ற உணவு விடுதி மூடப்படப் போகின்றது என்று ஒரு தகவல் வந்தது. பின்னர், தாங்கள் அதை மூட மாட்டோம் என்று ஜேவிபியினர் உறுதியளித்திருப்பதாகத் தெரிகின்றது.

இந்தக் கூட்டம் எங்கே போனாலும் அங்கே காண்டீனில் கைவைத்து, சமூகநீதியை நிலைநாட்டாமல் விடமாட்டார்கள் போல.....................🤣.

https://www.dailymirror.lk/breaking-news/NPP-MP-assures-Parliament-canteen-will-not-be-closed-Harsha/108-296557#

  • கருத்துக்கள உறவுகள்

பாதிக்கப்பட்டவரின் ஆதங்கம்!!

  • கருத்துக்கள உறவுகள்

இந்த பாராளுமன்றக் "கன்ரீன்"  என்பது நம் அக்பர், அருணாசலம், ஹில்டா கன்ரீன் போல ஏழை மாணவர்கள் "அடு" எடுத்துச் சாப்பிடும் இடமல்ல! உண்மையில் இது கன்ரீனே அல்ல. இலங்கையில் ஐந்து நட்சத்திர ஓட்டலில் வழங்கப் படும் பிளேட்டுக்கு ஆயிரக்கணக்கில் செலவாகும் உணவை, மிகக் குறைந்த விலையில் பா.உக்களுக்கு வழங்கும் ஒரு சொகுசு உணவகம் இது. ஆனால், உணவிற்கான மிகுதி விலையை பொது மக்களின் வரிப் பணமும், வெளிநாடுகள் வழங்கும் பிச்சைப் பணமும் செலுத்துகின்றன. ஒரு பா.உவை சந்திக்கப் போகும் ஆட்களையும் பா.உ இந்த சலுகை விலையில் சாப்பிட அனுமதிக்கும் சலுகை முன்னர் இருந்தது, இப்போதும் இருக்கிறதா தெரியவில்லை.

நிதி விரயத்தில் உண்மையிலேயே NPP அக்கறை செலுத்தினால், இந்த குறைந்த விலை சலுகையை நீக்க வேண்டும். பா.உக்கள் தம் நண்பர்களை கூட்டிச் சென்று ஏறத்தாழ இலவசமாக சாப்பிட அனுமதிக்கும் சலுகையை நீக்க வேண்டும்.

மிக முக்கியமாக, "கொட்டுக்கொள" போன்ற ஆரோக்கியமான உள்ளூர் உணவுகளை அதிகரித்தால், பா.உக்கள் ஒரு வருடத்திலேயே "நிரந்தரக் கர்ப்பவதிகள்" போல  தொந்தி வளர்ப்பதைத் தடுத்து அவர்களை ஆரோக்கியமாகவும் வைத்திருக்கலாம்😂!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, Justin said:

👍...................

நிதி விரய விடயத்தில் மிகவும் அக்கறையுடன் இருப்பார்கள் என்றே தோன்றுகின்றது..........

இன்று வெள்ளிக்கிழமை, நீங்கள் கொட்டுக்கொளவை ஞாபகப்படுத்தி விட்டீர்கள், இன்றைக்கு விரதமாகவே போகட்டும்............🤣.

  • கருத்துக்கள உறவுகள்

சோறு முக்கியம் அமைச்சரே...

  • கருத்துக்கள உறவுகள்
23 minutes ago, ரசோதரன் said:

இன்று வெள்ளிக்கிழமை, நீங்கள் கொட்டுக்கொளவை ஞாபகப்படுத்தி விட்டீர்கள், இன்றைக்கு விரதமாகவே போகட்டும்............🤣.

🤣 சரி. உங்களுக்கு வாரம் முழுக்க விரதம் இருக்க வைக்கும் இன்னொரு விசயத்தையும் நினைவு படுத்தி விடுவம்.

மத்திய நூலகத்திற்கு அருகில், கூட்டுறவுக் கடைக்கு முன்னால் இருக்கும் WUS கன்ரீன் நினைவிருக்கிறதா? காலா காலமாக முஸ்லிம் முதலாளிகளால் நடத்தப் பட்ட இந்த கன்ரீனில் மதிய நேரத்தில் கூட்டம் அலை  மோதும். "குடல் கறி" என்று ஒன்று விற்பார்கள். பிளேட்டில் குடல் கறியைப் போட்டதும், அதில் இருக்கும் எண்ணை தனியாகப் பிரிந்து பிளேட்டில் நிற்கும். இதைத் தொடர்ந்து சாப்பிட்டு வந்த என் வகுப்புத் தோழர்கள் பலர் இன்று உயிருடன் இல்லை!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, Justin said:

இதைத் தொடர்ந்து சாப்பிட்டு வந்த என் வகுப்புத் தோழர்கள் பலர் இன்று உயிருடன் இல்லை!

😮...............

அந்த இடம் நன்றாகவே ஞாபகத்தில் இருக்கின்றது, ஜஸ்டின். ஆனால் நான் இந்தக் குடல் கறியை ஒரு நாளேனும் சாப்பிட்டதில்லை.

ஒரு நாள் இந்த இடத்தில் தான் என்னுடைய வகுப்பு தமிழ் மாணவர்கள் இருவருக்கு அடி விழுந்தது. ஜேவிபியினரின் பகிஷ்கரிப்பையும் மீறி எங்களில் சிலர் வகுப்பிற்கு போனதாகச் சொல்லியே அந்தப் பக்கமாக போய்க் கொண்டிருந்த இருவரை போட்டுத் தாக்கினார்கள்.............

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ரசோதரன் said:

பல்கலை மட்ட ஜேவிபி அடிப்படையில் உசார் மடையர்கள் தான். உடனே கை வைத்து விடுவார்கள். பின்னர் கை நீட்டியவன் மீது பல்கலை ஒழுக்க நடவடிக்கை எடுத்தால், மூன்று வேளையும் கன்ரீன் உணவைச் சாப்பிட்டு விட்டு வந்து வகுப்பிற்குப் போகாமல் ஆர்ப்பாட்டம் செய்வார்கள். மறந்தும் கூட "உண்ணாவிரதம்" போன்ற சுய ஒறுத்தல் போராட்டங்களில் ஈடு பட மாட்டார்கள்😂.

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, Justin said:

🤣 சரி. உங்களுக்கு வாரம் முழுக்க விரதம் இருக்க வைக்கும் இன்னொரு விசயத்தையும் நினைவு படுத்தி விடுவம்.

மத்திய நூலகத்திற்கு அருகில், கூட்டுறவுக் கடைக்கு முன்னால் இருக்கும் WUS கன்ரீன் நினைவிருக்கிறதா? காலா காலமாக முஸ்லிம் முதலாளிகளால் நடத்தப் பட்ட இந்த கன்ரீனில் மதிய நேரத்தில் கூட்டம் அலை  மோதும். "குடல் கறி" என்று ஒன்று விற்பார்கள். பிளேட்டில் குடல் கறியைப் போட்டதும், அதில் இருக்கும் எண்ணை தனியாகப் பிரிந்து பிளேட்டில் நிற்கும். இதைத் தொடர்ந்து சாப்பிட்டு வந்த என் வகுப்புத் தோழர்கள் பலர் இன்று உயிருடன் இல்லை!

அக்பரில் மட்டும் தான் சாப்பிடுறது. WUZ இல் பிளேன்டீ மட்டும்தான் சாப்பிட்ட ஞாபகம்… ( போதுவாக அந்தபக்கம் போவதே இல்லை). குடல் கறி ஒருநாளும் தொடக்கூட இல்லை. அதை  மணத்தை நனைச்சாலே வாந்தி வரும்

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, Justin said:

இந்த பாராளுமன்றக் "கன்ரீன்"  என்பது நம் அக்பர், அருணாசலம், ஹில்டா கன்ரீன் போல ஏழை மாணவர்கள் "அடு" எடுத்துச் சாப்பிடும் இடமல்ல! உண்மையில் இது கன்ரீனே அல்ல. இலங்கையில் ஐந்து நட்சத்திர ஓட்டலில் வழங்கப் படும் பிளேட்டுக்கு ஆயிரக்கணக்கில் செலவாகும் உணவை, மிகக் குறைந்த விலையில் பா.உக்களுக்கு வழங்கும் ஒரு சொகுசு உணவகம் இது. ஆனால், உணவிற்கான மிகுதி விலையை பொது மக்களின் வரிப் பணமும், வெளிநாடுகள் வழங்கும் பிச்சைப் பணமும் செலுத்துகின்றன. ஒரு பா.உவை சந்திக்கப் போகும் ஆட்களையும் பா.உ இந்த சலுகை விலையில் சாப்பிட அனுமதிக்கும் சலுகை முன்னர் இருந்தது, இப்போதும் இருக்கிறதா தெரியவில்லை.

நிதி விரயத்தில் உண்மையிலேயே NPP அக்கறை செலுத்தினால், இந்த குறைந்த விலை சலுகையை நீக்க வேண்டும். பா.உக்கள் தம் நண்பர்களை கூட்டிச் சென்று ஏறத்தாழ இலவசமாக சாப்பிட அனுமதிக்கும் சலுகையை நீக்க வேண்டும்.

மிக முக்கியமாக, "கொட்டுக்கொள" போன்ற ஆரோக்கியமான உள்ளூர் உணவுகளை அதிகரித்தால், பா.உக்கள் ஒரு வருடத்திலேயே "நிரந்தரக் கர்ப்பவதிகள்" போல  தொந்தி வளர்ப்பதைத் தடுத்து அவர்களை ஆரோக்கியமாகவும் வைத்திருக்கலாம்😂!

நான் சாதாரண தரம் படிக்கும்போது சித்தார்த்தன் எம்பி யுடன் போயிருந்தேன். அருமையான சாப்பாடு. யாழ்ப்பாணப் பெண்கள் சமைக்கும் சாப்பாடு எல்லாம் கிட்டவே வாராது. 

  • கருத்துக்கள உறவுகள்

@Justin @ரசோதரன் @ragaa

என்ன இங்கே ஒரே “அடு பத்” கூட்டமாக இருக்கிறது🤣.

நான் முன்பு ஒரு பாடசாலை அணியில் இருந்தேன் - போட்டிகள் முடிந்ததும் அருகில் உள்ள ஒரு முஸ்லிம் ஹோட்டல் போய் சாப்பிடுவது வழமை. அதில் ஒருவருக்கு பெயரே அடு பத் தான்🤣. வஞ்சகமில்லாமல் அடுவுக்கு அடு வுக்கு அடு எடுத்து சாப்பிடுவார்🤣

இந்த குடல்கறியை பாபத் என்பார்கள் - உவேக்…..🤮

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, goshan_che said:

🤣..................

யாழ் களத்தில் இந்த அடு பத் கூட்டத்திலிருந்து இன்னும் பலர் இருக்கின்றார்கள்............. நீர்வேலியான், வாதவூரான்,............ எங்கள் எல்லோருக்கும் மேலே தில்லை ஐயா............

ஊரில் வீட்டில் குடல்கறி சமைத்திருக்கின்றார்கள். ஏதோ ஒரு பத்தியக்கறி போல பக்குவமாக கழுவிச் சமைப்பதாக ஒரு ஞாபகம். ஆடு அடிக்கும் நாட்களில் இது நடந்திருக்கின்றது. இங்கும் நண்பர்கள் சிலர் சேர்ந்து ஆடு அடிக்கும் போது, இந்தக் குடல்கறி சமைப்பார்கள்.

ஒவ்வொரு வகுப்பிலும் அடுவுக்கு மேல் அடு எடுத்துச் சாப்பிடும் சிலர் இருப்பார்கள். அப்பொழுது ஒரு அடு ரூபா 1.50 என்று நினைக்கின்றேன். என்னுடைய வகுப்பிலும் இருந்தார்கள். அதில் ஓரிருவர் இப்பொழுது அடிக்கடி டயட்டில் இருக்கின்றார்கள்.......................🤣. நாங்கள் சிலர் அப்பவே டயட்டில் இருந்தோம்................🤣.  

  • கருத்துக்கள உறவுகள்
36 minutes ago, goshan_che said:

@Justin @ரசோதரன் @ragaa

என்ன இங்கே ஒரே “அடு பத்” கூட்டமாக இருக்கிறது🤣.

நான் முன்பு ஒரு பாடசாலை அணியில் இருந்தேன் - போட்டிகள் முடிந்ததும் அருகில் உள்ள ஒரு முஸ்லிம் ஹோட்டல் போய் சாப்பிடுவது வழமை. அதில் ஒருவருக்கு பெயரே அடு பத் தான்🤣. வஞ்சகமில்லாமல் அடுவுக்கு அடு வுக்கு அடு எடுத்து சாப்பிடுவார்🤣

இந்த குடல்கறியை பாபத் என்பார்கள் - உவேக்…..🤮

ஓம், பாபத் என்று தான் நினைவு.

மிருகவைத்திய பீடத்தில் இரண்டாம் ஆண்டிலேயே இறந்த ஆடு, மாடு, பன்றி, கோழி, யானை ஆகியவற்றை சிரேஷ்ட அணி வெட்டி மேய்ந்து பிரேத பரிசோதனை செய்யும் போது, சுற்றி நின்று பார்க்க வைப்பார்கள். இந்த விலங்குகளின் குடலைத் திறக்கும் போது உள்ளே வகை வகையாக ஒட்டுண்ணிப் புழுக்கள் இருக்கும். இதைப் பார்த்த பின்னர் எப்படி பாபத் சாப்பிட மனம் வரும்?😂 பெரும்பாலும் பொறியியல் பீட நண்பர்கள் உண்ணும் போது ஒன்றும் பேசாமல் அந்த "குட்டிப் பிளாஸ்ரிக் கப்பில்" ரீயை உறிஞ்சிக் கொண்டிருப்பது தான்! 

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, Justin said:

மேலே ரசோதரன் சொல்லுவது போல மஞ்சளில் கழுவி சமைத்தது என இங்கே இலண்டனிலும் தந்தார்கள் - அடியோடு மறுத்துவிட்டேன்.

எவ்வள்வு நல்ல பார்ட்ஸ் எல்லாம் இருக்கு, exhaust pipe தான் வேணும் என்பது சிலரின் ரசனை போலும்🤣

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, ரசோதரன் said:

ஒரு நாள் இந்த இடத்தில் தான் என்னுடைய வகுப்பு தமிழ் மாணவர்கள் இருவருக்கு அடி விழுந்தது. ஜேவிபியினரின் பகிஷ்கரிப்பையும் மீறி எங்களில் சிலர் வகுப்பிற்கு போனதாகச் சொல்லியே அந்தப் பக்கமாக போய்க் கொண்டிருந்த இருவரை போட்டுத் தாக்கினார்கள்.............

விளங்குது ஜேவிபியின் பதிய தமிழ் ஆதரவாளர்கள் என்ன சொல்கிறார்கள் அனுரகுமார திசநாயக்க அன்பின் மறு உருவம் என்கின்றார்கள்🙆‍♂️

  • கருத்துக்கள உறவுகள்
52 minutes ago, goshan_che said:

பாபத்

கொம்பனித்தெருவில் இருந்த காலங்களில் பாபத் சூப் விரும்பி குடிப்பேன்.

கப்பலிலும் கிழமைக்கொரு தடவை இந்த சூப் கிடைக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கும் குடல் கறி ஒரு பொக்கிசம் மாதிரி சொல்லி அன்பாக உபசரித்தவர்கள் நான் பயத்தில் அன்பாக மறுத்துவிட்டேன் ஆசையும் இல்லை ஈரல் சாப்பிடவே எனக்கு ஒத்துவராது

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, விளங்க நினைப்பவன் said:

எனக்கும் குடல் கறி ஒரு பொக்கிசம் மாதிரி சொல்லி அன்பாக உபசரித்தவர்கள் நான் பயத்தில் அன்பாக மறுத்துவிட்டேன் ஆசையும் இல்லை ஈரல் சாப்பிடவே எனக்கு ஒத்துவராது

பழக்கம் இல்லாவிட்டால் இவற்றை சாப்பிடுவது முடியாத ஒரு காரியம் தான்........... அருவருப்பும், ஒவ்வாமையும் இருக்கும்................👍.

25 minutes ago, goshan_che said:

மேலே ரசோதரன் சொல்லுவது போல மஞ்சளில் கழுவி சமைத்தது என இங்கே இலண்டனிலும் தந்தார்கள் - அடியோடு மறுத்துவிட்டேன்.

மஞ்சள் என்றவுடன் ஞாபகத்தில் வந்த ஒரு நிகழ்வு.

நாங்கள் பல நண்பர்கள் ஒரு ஒன்றுகூடலை திருகோணமலைப் பகுதியில் ஏற்பாடு செய்திருந்தோம். அங்கே முதல் நாள் மட்டி வறுவல் செய்து கொடுத்திருந்தார்கள். எக்கச்சக்கமான மஞ்சள் மற்றும் மசாலாக்களும் போட்டு.

யாழ்ப்பாணத்தில் நாங்கள் மட்டி அவ்வளவாக சாப்பிடுவதில்லை. கடலோரம் பிறந்து வளர்ந்த நான் கூட சும்மா விளையாட்டாக சில மட்டிகளை சுட்டுச் சாப்பிட்டிருக்கின்றேனே தவிர கறியாகவோ அல்லது வறுத்தோ சாப்பிட்டதில்லை.

ஆனாலும் எங்களில் சிலர் 'நாங்கள் பார்க்காத மட்டியா..............' என்று அள்ளி அள்ளிச் சாப்பிட்டனர். அவர்கள் வெளிநாடுகளில் பார்க்கும் மட்டியும், அந்தச் சூப்பும் வேறு, எங்களூர் மட்டியும், எங்கள் சமையலும் வேறு என்று நான் சொல்ல முயன்றும் பலனில்லை.

அதன் பின்னர் சிலர் அறைக்கு ஓடினவர்கள் ஓடினவர்கள் தான்................ மூன்று நாட்களின் பின்னரே ஓட்டம் நின்றது.................🤣.

அதில் ஒரு நண்பன் மூன்று நாட்களாக அறைக்குள் அடைப்பட்டுக் கிடந்ததில், எங்கள் எல்லோருக்கும் பலத்த சந்தோசம்...............🤣.

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, ரசோதரன் said:

பழக்கம் இல்லாவிட்டால் இவற்றை சாப்பிடுவது முடியாத ஒரு காரியம் தான்........... அருவருப்பும், ஒவ்வாமையும் இருக்கும்................👍.

மஞ்சள் என்றவுடன் ஞாபகத்தில் வந்த ஒரு நிகழ்வு.

நாங்கள் பல நண்பர்கள் ஒரு ஒன்றுகூடலை திருகோணமலைப் பகுதியில் ஏற்பாடு செய்திருந்தோம். அங்கே முதல் நாள் மட்டி வறுவல் செய்து கொடுத்திருந்தார்கள். எக்கச்சக்கமான மஞ்சள் மற்றும் மசாலாக்களும் போட்டு.

யாழ்ப்பாணத்தில் நாங்கள் மட்டி அவ்வளவாக சாப்பிடுவதில்லை. கடலோரம் பிறந்து வளர்ந்த நான் கூட சும்மா விளையாட்டாக சில மட்டிகளை சுட்டுச் சாப்பிட்டிருக்கின்றேனே தவிர கறியாகவோ அல்லது வறுத்தோ சாப்பிட்டதில்லை.

ஆனாலும் எங்களில் சிலர் 'நாங்கள் பார்க்காத மட்டியா..............' என்று அள்ளி அள்ளிச் சாப்பிட்டனர். அவர்கள் வெளிநாடுகளில் பார்க்கும் மட்டியும், அந்தச் சூப்பும் வேறு, எங்களூர் மட்டியும், எங்கள் சமையலும் வேறு என்று நான் சொல்ல முயன்றும் பலனில்லை.

அதன் பின்னர் சிலர் அறைக்கு ஓடினவர்கள் ஓடினவர்கள் தான்................ மூன்று நாட்களின் பின்னரே ஓட்டம் நின்றது.................🤣.

அதில் ஒரு நண்பன் மூன்று நாட்களாக அறைக்குள் அடைப்பட்டுக் கிடந்ததில், எங்கள் எல்லோருக்கும் பலத்த சந்தோசம்...............🤣.

🤣 ஒயாமல் போனால்தான் அது ஓய்ஸ்டர்  போலும் 🤣.

சிறுவயதில் முல்லைதீவு சிலாவத்துறை கடற்கரைக்கு விளையாட என்னை கூட்டிப்போன அப்பா, அங்கே யாரோ வித்தார்கள் என ஒரு சொப்பிங் பாக் நிறைய மட்டியை வாங்கி வந்து அம்மாவிடம் கொடுத்தார்.

அவவுக்கு அதை என்ன செய்வது என்றே தெரியவில்லை🤣. அவருக்கோ முட்டை அவிக்கவே தெரியாது🤣.

ஒரு வழியாக அயலவர் உதவியோடு வறுத்து சாப்பிட்டோம்.

38 minutes ago, ஈழப்பிரியன் said:

கொம்பனித்தெருவில் இருந்த காலங்களில் பாபத் சூப் விரும்பி குடிப்பேன்.

கப்பலிலும் கிழமைக்கொரு தடவை இந்த சூப் கிடைக்கும்.

நீங்கள் கப்பலில் வேலை பார்தீர்களா. வாவ்.

ரிட்டையர் ஆகி விட்டு ஒரு கிரூஸ் கப்பலில் வேலை செய்தால் நல்லா இருக்கும் என யோசிப்பேன்.

சின்னதில் ராபின்சன் குருசோ கதை படித்த தாக்கமோ என்னமோ….கப்பல் பயணத்தில் ஒரு நாட்டம்.

இப்போதைக்கு யூகே-பிரான்ஸ் ferry, பருத்தித்துறை-திருமலை ஐ சி ஆர் சி கப்பல் பயணம் மட்டுமே செய்துள்ளேன். 

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, ரசோதரன் said:

அங்கே முதல் நாள் மட்டி வறுவல் செய்து கொடுத்திருந்தார்கள். எக்கச்சக்கமான மஞ்சள் மற்றும் மசாலாக்களும் போட்டு.

கடற்கரையில் ஒதுங்கும் இந்த மட்டிகளை
 மணலுக்குள் இருந்து தேடி பொறுக்கி எடுத்து வீட்டிற்கு கொண்டு   வந்து  கிட்டத்தட்ட இறைச்சிக்கறி போல சமைத்து  சாப்பிடுபவர்களும் உள்ளனர்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நான் குடலை உருவி மாலையாய் போட்டிருக்கிறனே ஒழிய கடல்கறி சாப்பிட்டதே இல்லை. 😂
அயல்வீட்டு எனது பாஷையுர் நண்பன் சொல்வான் குடல் கறி கிட்டத்தட்ட கணவாய்க்கறி மாதிரி இருக்குமாம்.😎

Edited by குமாரசாமி
தவறவிட்ட எழுத்து இணைப்பு.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, வாத்தியார் said:

கடற்கரையில் ஒதுங்கும் இந்த மட்டிகளை
 மணலுக்குள் இருந்து தேடி பொறுக்கி எடுத்து வீட்டிற்கு கொண்டு   வந்து  கிட்டத்தட்ட இறைச்சிக்கறி போல சமைத்து  சாப்பிடுபவர்களும் உள்ளனர்

👍..............

சில இடங்களில் சமைப்பார்கள் என்று தான் கேள்விப்பட்டிருக்கின்றேன்.

எங்கள் ஊரில் கடல் ஓரமாக அலை அடித்து ஈரமாக இருக்கும் மண்ணை காலால் சலித்தாலே உள்ளிருந்து மட்டிகள் வரும். சில மட்டிகள் பெரிதாகவே இருக்கும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

Grünschalenmuscheln mit Chipotlebutter

ஐரோப்பிய நாடுகளில் மட்டி பிரத்தியேக உணவு.

  • கருத்துக்கள உறவுகள்
52 minutes ago, goshan_che said:

நீங்கள் கப்பலில் வேலை பார்தீர்களா. வாவ்.

இதை ஒரு வரமாகவே எண்ணுகிறேன்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.