Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்ப்பாணம் - குருநகர் பகுதியை சேர்ந்த 25 வயது இளைஞர் சுற்றுலா விண்ணப்பத்தின் ஊடாக பிரான்ஸ் நாட்டிற்கு சென்றவேளை கட்டாயமாக ரஷ்ய இராணுவத்தில் இணைக்கப்பட்டுள்ளார். 

கடந்த 04.10.2024 அன்று பயணித்த குறித்த இளைஞர் அவரது சகோதரி பிரான்ஸ் நாட்டில் இருப்பதால் அங்கு தொழில் நிமித்தமாக செல்ல முயற்சித்துள்ளார்.

அந்த இளைஞனுக்கு ரஷ்ய விமான நிலையத்தில் தரை இறங்கி அங்கிருந்து முகவர் ஊடாக பிரான்ஸ் நாட்டுக்கு செல்ல வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

தமிழ் இளைஞர்கள் 

இந்நிலையில், ரஷ்ய விமான நிலையத்தில் தரையிறங்கிய இளைஞனுடன் முல்லைத்தீவை சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தை ஒருவரும் யாழ்ப்பாணத்தை சேர்ந்த 20 வயதுடைய இளைஞர் ஒருவரும் குருநகர் பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவரும் பயணித்துள்ளனர். 

இவர்கள் அனைவரையும் ரஷ்ய விமான நிலையத்தில் இராணுவ அதிகாரி ஒருவர் ஊடாக பிரான்ஸ் நாட்டிற்கு செல்ல வேண்டுமென இவர்களை கூட்டிச் சென்ற முகவர் தெரிவித்துள்ளார்.

அதனை அடுத்து அங்குள்ள இராணுவ முகாமில் இவர்களைத் தங்க வைத்து இவர்களுக்கு ரஷ்ய இராணுவத்தின் சீருடைகள் வழங்கி 15 நாட்கள் கட்டாயமாக பயிற்சியின் பின்னர் உக்ரைனின் எல்லையில் போருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

ஜனாதிபதிக்கு மனு 

இவ்விடயம் தொடர்பாக குருநகர் பகுதியை சேர்ந்த கோமஸ் அதிஸ்ரராஜா மிதுர்ஷன் என்ற 25 வயது இளைஞன் தாயாருக்கு தனது புகைப்படங்களைத் பகிர்ந்து நிலைப்பாட்டைத் தெரிவித்துள்ளார்.

வலுக்கட்டாயமாக ரஸ்ய இராணுவத்தில் இணைக்கப்பட்டுள்ள யாழ். இளைஞன் | Jaffna Guy Forced To Involved In Russian Army

இதனை அடுத்து தாயார் தனது மகனையும் ஏனையவர்களை மீட்பதற்கு ஆளுநர் ஊடாக ஜனாதிபதிக்கு மனு அனுப்புவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர்.

இந்த பயணத்திற்காக முகவர் ஒருவருக்கு ஒவ்வொருவரும் தலா 60 இலட்சம் ரூபாய் வரையான பணத்தை செலுத்தியுள்ளனர். இது தொடர்பாக யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

  • Replies 71
  • Views 4.1k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Most Popular Posts

  • ரசோதரன்
    ரசோதரன்

    😌................... ஒரு பக்கம் இந்தா, இப்பவே ஏவுகணையை ஏவுகின்றோம், அணுகுண்டை அமுக்குகின்றோம் என்பது. மற்றம் பக்கம் இப்படி அப்பாவி அந்நியர்களை பிடித்து போர்க்களத்திற்கு அனுப்புவது............. ரஷ

  • ரசோதரன்
    ரசோதரன்

    'உன் இஷ்டத்திற்கு எழுது தம்பி.................' என்று நீங்கள் ஆரம்பத்திலிருந்து கொடுத்த உற்சாகம் தான் இங்கே வரை கொண்டுவந்து விட்டிருக்கின்றது...................... என்ன கிடைக்குதோ அதில் அரைவாசி உங்களு

  • வாலி
    வாலி

    நீங்கள் பேசக்கூடாத பக்கத்தை புரட்டிவிட்டீர்கள். இனி உங்களுக்கு இருக்கு கச்சேரி!😂

  • கருத்துக்கள உறவுகள்

கட்டாயமாக ரஷ்ய இராணுவத்தில் இணைப்பு!

கட்டாயமாக ரஷ்ய இராணுவத்தில் இணைப்பு!

யாழ்ப்பாணம், குருநகர் பகுதியை சேர்ந்த 25 வயது இளைஞர்  சுற்றுலா விண்ணப்பத்தின் ஊடாக பிரான்ஸ் நாட்டிற்கு சென்ற வேளை கட்டாயமாக ரஷ்ய இராணுவத்தில் இணைக்கப்பட்டுள்ளார்.

கடந்த 04.10.2024 அன்று பயணித்த குறித்த இளைஞர் அவரது சகோதரி பிரான்ஸ் நாட்டில் இருப்பதால் அவரது இடத்திற்கு தொழில் நிமித்தமாக செல்ல முயர்ச்சித்துள்ளார்.

குறித்த இளைஞனுக்கு ரஷ்ய விமான நிலையத்தில் தரை இறங்கி அங்கிருந்து முகவர் ஊடாக பிரான்ஸ் நாட்டுக்கு செல்ல வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

ரஷ்ய விமான நிலையத்தில் தரையிறங்கிய இளைஞனுடன் முல்லைத்தீவை சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தை ஒருவரும் யாழ்ப்பாணம் மெல்லியடைய சேர்ந்த 20 வயதுடைய இளைஞர் ஒருவரும் குருநகர் பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவரும் பயணித்துள்ளனர். இவர்கள் அனைவரையும் ரஷ்ய விமான நிலையத்தில் இராணுவ அதிகாரி ஒருவர் ஊடாக பிரான்ஸ் நாட்டிற்கு செல்ல வேண்டுமென இவர்களை கூட்டிச் சென்ற முகவர் தெரிவித்துள்ளார்.

அதனை அடுத்து அங்குள்ள இராணுவ முகாமில் இவர்களைத் தங்க வைத்து இவர்களுக்கு ரஷ்ய இராணுவத்தின் சீருடைகள் வழங்கி 15 நாட்கள் கட்டாயமாக பயிற்சியின் பின்னர் உக்ரையின் எல்லையில் போருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

குறித்த விடயம் தொடர்பாக குருநகர் பகுதியை சேர்ந்த கோமஸ் அதிஸ்ரராஜா மிதுர்ஷன் 25 வயது இளைஞன் தாயாருக்கு தனது புகைப்படங்களைத் பகிர்ந்து  நிலைப்பாட்டைத் தெரிவித்துள்ளார்.

இதனை அடுத்து தாயார் தனது மகனையும் ஏனையவர்களை மீட்பதற்கு ஆளுநர் ஊடாக ஜனாதிபதிக்கு மகேந்திரன் அனுப்புவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர்.

குறித்த பயணத்திற்காக முகவர் ஒருவருக்கு ஒவ்வொருவரும் தலா 60 லட்சம் ரூபாய் வரையான பணத்தை செலுத்தியுள்ளனர். இது தொடர்பாக யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

-யாழ். நிருபர் பிரதீபன்-

https://tamil.adaderana.lk/news.php?nid=196405

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, ஏராளன் said:

அதனை அடுத்து அங்குள்ள இராணுவ முகாமில் இவர்களைத் தங்க வைத்து இவர்களுக்கு ரஷ்ய இராணுவத்தின் சீருடைகள் வழங்கி 15 நாட்கள் கட்டாயமாக பயிற்சியின் பின்னர் உக்ரையின் எல்லையில் போருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

😌...................

ஒரு பக்கம் இந்தா, இப்பவே ஏவுகணையை ஏவுகின்றோம், அணுகுண்டை அமுக்குகின்றோம் என்பது. மற்றம் பக்கம் இப்படி அப்பாவி அந்நியர்களை பிடித்து போர்க்களத்திற்கு அனுப்புவது............. ரஷ்ய தலைவரை 'செத்த கிளி' என்று சொல்வது சரிதான்....................

அந்த நாட்களில் எங்கள் ஊரில் வலுக்கட்டாயமாக ஆட்களைப் பிடித்து மொட்டை அடித்து பயிற்சி கொடுத்தது போல..............

நேட்டோவை பிளக்கின்றோம், லண்டனை தொலைத்துக் கட்டுகின்றோம் என்று கங்குவா படத்திற்கு வந்த விளம்பரங்கள் போல இதுக்கு மேலயும் கதை விட்டுக் கொண்டிருக்கின்றார்கள்.............🫣.  

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, ரசோதரன் said:

😌...................

ஒரு பக்கம் இந்தா, இப்பவே ஏவுகணையை ஏவுகின்றோம், அணுகுண்டை அமுக்குகின்றோம் என்பது. மற்றம் பக்கம் இப்படி அப்பாவி அந்நியர்களை பிடித்து போர்க்களத்திற்கு அனுப்புவது............. ரஷ்ய தலைவரை 'செத்த கிளி' என்று சொல்வது சரிதான்....................

அந்த நாட்களில் எங்கள் ஊரில் வலுக்கட்டாயமாக ஆட்களைப் பிடித்து மொட்டை அடித்து பயிற்சி கொடுத்தது போல..............

நேட்டோவை பிளக்கின்றோம், லண்டனை தொலைத்துக் கட்டுகின்றோம் என்று கங்குவா படத்திற்கு வந்த விளம்பரங்கள் போல இதுக்கு மேலயும் கதை விட்டுக் கொண்டிருக்கின்றார்கள்.............🫣.  

நீங்கள் பேசக்கூடாத பக்கத்தை புரட்டிவிட்டீர்கள். இனி உங்களுக்கு இருக்கு கச்சேரி!😂

  • கருத்துக்கள உறவுகள்

இப்பொழுதும் வெளிநாடு என்று அலையும் ஈழத்தமிழர்களை என்ன சொல்லி திட்டுவது? 

யாழ்ப்பாணத்தில் படித்து முன்னேற முடியாதா என்ன?

பிரான்ஸ் இல் இருக்கும் எங்கள் மக்களின் நிலையை விட யாழ்ப்பாண வாழ்வு மிகவும் சிறந்தது.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ரசோதரன் said:

😌...................

ஒரு பக்கம் இந்தா, இப்பவே ஏவுகணையை ஏவுகின்றோம், அணுகுண்டை அமுக்குகின்றோம் என்பது. மற்றம் பக்கம் இப்படி அப்பாவி அந்நியர்களை பிடித்து போர்க்களத்திற்கு அனுப்புவது............. ரஷ்ய தலைவரை 'செத்த கிளி' என்று சொல்வது சரிதான்....................

அந்த நாட்களில் எங்கள் ஊரில் வலுக்கட்டாயமாக ஆட்களைப் பிடித்து மொட்டை அடித்து பயிற்சி கொடுத்தது போல..............

நேட்டோவை பிளக்கின்றோம், லண்டனை தொலைத்துக் கட்டுகின்றோம் என்று கங்குவா படத்திற்கு வந்த விளம்பரங்கள் போல இதுக்கு மேலயும் கதை விட்டுக் கொண்டிருக்கின்றார்கள்.............🫣.  

இதென்ன ரசோ சார்?🤣 நீண்ட விடுமுறை வரும் வாரத்தில் இப்படி "புரின் புரியன்மாரையும்" தமிழ் தேசிய தீகக்கும் dragon களையும் ஒரே நேரத்தில் கோபப் படுத்தி? றிஸ்க் எடுப்பது உங்களுக்கு றஸ்க் சாப்பிடுவது போலுள்ளதோ😎?

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, Justin said:

இதென்ன ரசோ சார்?🤣 நீண்ட விடுமுறை வரும் வாரத்தில் இப்படி "புரின் புரியன்மாரையும்" தமிழ் தேசிய தீகக்கும் dragon களையும் ஒரே நேரத்தில் கோபப் படுத்தி? றிஸ்க் எடுப்பது உங்களுக்கு றஸ்க் சாப்பிடுவது போலுள்ளதோ😎?

🤣...............

இது நீங்களே என்னை தனித்தனியாக அந்த இரண்டு பக்கங்களிடமும் பிடித்துக் கொடுப்பது போலிருக்கின்றதே................

அமிலமும் காரமும் இல்லாத பச்சைத் தண்ணீர் சார் நான்..................

நாங்களே ஒரு நிரந்தர இடம் இல்லாமல் பரதேசங்களாக அலைந்து கொண்டிருக்கின்றோம்.......... எங்களைப் பிடித்து உங்கள் ஆணவப் போர்களுக்கு ஏன் அனுப்புகிறீர்கள் என்ற ஒரு ஆதங்கம் தான்........

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, ரசோதரன் said:

இது நீங்களே என்னை தனித்தனியாக அந்த இரண்டு பக்கங்களிடமும் பிடித்துக் கொடுப்பது போலிருக்கின்றதே..

தம்பிக்கு இருட்டடி இருக்கு.

  • கருத்துக்கள உறவுகள்
49 minutes ago, பகிடி said:

இப்பொழுதும் வெளிநாடு என்று அலையும் ஈழத்தமிழர்களை என்ன சொல்லி திட்டுவது? 

யாழ்ப்பாணத்தில் படித்து முன்னேற முடியாதா என்ன?

பிரான்ஸ் இல் இருக்கும் எங்கள் மக்களின் நிலையை விட யாழ்ப்பாண வாழ்வு மிகவும் சிறந்தது.

நீங்கள் தற்போது யாழ்ப்பாணத்திலா இருக்கிறீர்கள்? ஒரு தகவலுக்காக கேட்கிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, ஈழப்பிரியன் said:

தம்பிக்கு இருட்டடி இருக்கு.

'உன் இஷ்டத்திற்கு எழுது தம்பி.................' என்று நீங்கள் ஆரம்பத்திலிருந்து கொடுத்த உற்சாகம் தான் இங்கே வரை கொண்டுவந்து விட்டிருக்கின்றது...................... என்ன கிடைக்குதோ அதில் அரைவாசி உங்களுக்கு.................🤣.

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ரசோதரன் said:

அந்த நாட்களில் எங்கள் ஊரில் வலுக்கட்டாயமாக ஆட்களைப் பிடித்து மொட்டை அடித்து பயிற்சி கொடுத்தது போல..............

அரசியல் பிரிவு போரிற்கு ஆட் திரட்டலில் ஈடுபடுவர், வீதியால் செல்பவர்கலை பிடித்து வைத்து பேசி ஒரு வழி பண்ணி விடுவார்கள்,

அதே போல் உக்கிரேனில் TRC  என்பவர்கள் வீதியால் போற வாறவர்களையெல்லாம் பிடித்து வாகனத்தில் ஏற்றிக்கொண்டிருந்தார்கள், தற்போது அந்த TRC சேர்ந்த 36000 பேரையும் (அவர்கள் ஆட் திரட்டலில் திறமையாக செயற்படவில்லை) இராணுவத்தில் சேர்ப்பதுடன், இராணுவத்தில் இருப்பவர்களே நேரடியாக ஆட் திரட்டலில் ஈடுபட உக்கிரேன் இராணுவத்தளபதி திட்டமிட்டுள்ளாராம்.

இது வரை காலமும் மற்றவர்களை பிடித்து போருக்கு அனுப்பி கொண்டிருந்தவர்களையே அந்த பாவம் பிடித்து அவர்களையும் போருக்கு அனுப்ப போகிறது.

இரு தரப்பு போரில் ஈடுபட்டு அழிகிறது அதில் எரிகிற வீட்டில் கிடைப்பது இலாபம் என நினைத்து போரை ஊக்குவித்த 3 ஆம் தரப்புகள் ஒரு காலத்தில் இந்த போரினால் பாதிப்படையும் நிலை வரவுள்ளது, இதனைதான் கர்ம வினை என்பார்கள்.

பிரான்ஸ் மற்றும் இங்கிலாந்து உக்கிரேன் போரிற்கு ஆட் திரட்ட உள்ளதாக கூறுகிறார்கள் உண்மையா?

  • கருத்துக்கள உறவுகள்

இனியுந்தான் ஏஜென்சிகாரனிட்ட காசு கொடுத்து வெளிநாடு வரப்பார்ப்பார்கள் நம்ம ஆட்கள்?

அவுஸ்திரேலியா அரசாங்கம் எங்கட ஆட்கள் களவாக அங்கு வரவேண்டாம் என்பதை மெத்த கஸ்டப்பட்டு பிரச்சாரம் செய்யிது. இனி இவ்வளவு கஸ்டம் வேணாம். களவாக வர வெளிக்கிட்டால் உக்ரைனுக்கு பிடிச்சு அடிபட அனுப்பி போடுவாங்கள் என்று சொல்லிவிட்டால் போதும். 

  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்காவின் நிச்சயமற்ற நிலைக்கு மத்தியில் உக்ரைனுக்கு துருப்புக்களை அனுப்புவதை ஐரோப்பா எடைபோடுகிறது

நவம்பர் 25, 2024, இரவு 10:14
 1142
 
பகிர்:
 
பிரிட்டிஷ் பிரதம மந்திரி கெய்ர் ஸ்டார்மர் மற்றும் பிரெஞ்சு ஜனாதிபதி இம்மானுவேல் மேக்ரான் (புகைப்படம்: LUDOVIC MARIN/Pool மூலம் REUTERS)

பிரிட்டிஷ் பிரதம மந்திரி கெய்ர் ஸ்டார்மர் மற்றும் பிரெஞ்சு ஜனாதிபதி இம்மானுவேல் மேக்ரான் (புகைப்படம்: LUDOVIC MARIN/Pool மூலம் REUTERS)

அமெரிக்க ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட டொனால்ட் ட்ரம்ப் பதவியேற்ற பிறகு, கெய்விற்கு அமெரிக்க ஆதரவு நிறுத்தப்படும் சாத்தியம் பற்றிய கவலைகளுக்கு மத்தியில், மேற்கத்திய துருப்புக்கள் அல்லது தனியார் இராணுவ நிறுவனங்களிலிருந்து (PMC) கூலிப்படைகளை உக்ரைனுக்கு அனுப்புவது பற்றிய விவாதங்கள் ஐரோப்பாவில் தீவிரமடைந்துள்ளன என்று பிரெஞ்சு செய்தித்தாள் Le Monde நவ. 25.

பிரித்தானியப் பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் அண்மையில் பிரான்ஸ் சென்றிருந்தபோது இந்தச் சூழல் விவாதிக்கப்பட்டது .

லண்டனும் பாரிசும் பாதுகாப்பு ஒத்துழைப்பு மற்றும் உக்ரைன் மற்றும் ஐரோப்பிய பாதுகாப்பில் கவனம் செலுத்தி ஐரோப்பாவில் நட்பு நாடுகளின் முக்கிய குழுவை உருவாக்குவது குறித்து இரகசிய பேச்சுவார்த்தைகளை நடத்தி வருவதாக ஒரு பிரிட்டிஷ் இராணுவ ஆதாரம் Le Monde இடம் தெரிவித்தது.

முன்னதாக, பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மக்ரோன், உக்ரைன் போர்முனைகளை ரஷ்யா மீறினால், உக்ரைன் அத்தகைய உதவியை கோரினால், மேற்கத்திய துருப்புக்களை உக்ரைனுக்கு அனுப்புவது பரிசீலிக்கப்படும் என்று கூறினார்.

"ரஷ்யா வெற்றி பெறுவதைத் தடுப்பது மற்றும் நிலையான அமைதியை மீட்டெடுப்பதே எங்கள் குறிக்கோள். இது உக்ரைன் தனது பிராந்திய ஒருமைப்பாடு, இறையாண்மை மற்றும் சர்வதேச சட்டத்தை முழுமையாக மீட்டெடுக்க அனுமதிக்கும் ஒரு சமாதானமாகும், இது அனைத்து உக்ரைனியர்களின் பாதுகாப்பிற்கும் உத்தரவாதம் அளிக்கும், ”என்று அவர் கூறினார்.

மார்ச் மாதம் லு பிகாரோவின் கூற்றுப்படி,  உக்ரைனுக்கு துருப்புக்களை அனுப்ப ஐந்து காட்சிகளை மக்ரோன் பரிசீலித்து வந்தார் , இருப்பினும், அவர்களில் சிலர் "நேரடியான போரின் செயல்" என்று விளக்கப்படலாம்.

உக்ரைனின் கதையை உலகிற்கு சொல்ல உதவுவீர்களா?

இருபது ஆண்டுகளுக்கு முன்பு, பெரும்பாலான மக்கள் உக்ரைனைப் பற்றி கேள்விப்பட்டிருக்க மாட்டார்கள். இன்று, நாடு அனைவரின் உதடுகளிலும், அனைவரின் தலைப்புச் செய்திகளிலும் உள்ளது. போர் எங்களை முதல் பக்கத்தில் தள்ளியது. ஆனால் இசை மற்றும் கலாச்சாரம் முதல் தொழில்நுட்பம் வரை - நாம் பெருமைப்படும் பல விஷயங்கள் உள்ளன.

நெகிழ்ச்சி, மகிழ்ச்சி மற்றும் உயிர்வாழ்வதற்கான உக்ரேனியக் கதையை உலகிற்குச் சொல்ல உங்கள் உதவி எங்களுக்குத் தேவை. எங்கள் முயற்சியை ஆதரிக்க நீங்கள் விரும்பினால், மாதத்திற்கு 5$ முதல் Patreon இல் எங்களுக்கு ஆதரவளிக்கவும் . நாங்கள் மிகவும் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம்.

உக்கிரேனின் புதிய குரல் தளத்தில் இருந்து கூகிள் மொழி பெயர்பினூடாக.

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ரசோதரன் said:

அந்த நாட்களில் எங்கள் ஊரில் வலுக்கட்டாயமாக ஆட்களைப் பிடித்து மொட்டை அடித்து பயிற்சி கொடுத்தது போல.

🙈🙉🙊...🙃.

10 minutes ago, vasee said:

அரசியல் பிரிவு போரிற்கு ஆட் திரட்டலில் ஈடுபடுவர், வீதியால் செல்பவர்கலை பிடித்து வைத்து பேசி ஒரு வழி பண்ணி விடுவார்கள்

அதெல்லாம் 2006க்கு முன்னம்.

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, vasee said:

இது வரை காலமும் மற்றவர்களை பிடித்து போருக்கு அனுப்பி கொண்டிருந்தவர்களையே அந்த பாவம் பிடித்து அவர்களையும் போருக்கு அனுப்ப போகிறது.

இரு தரப்பு போரில் ஈடுபட்டு அழிகிறது அதில் எரிகிற வீட்டில் கிடைப்பது இலாபம் என நினைத்து போரை ஊக்குவித்த 3 ஆம் தரப்புகள் ஒரு காலத்தில் இந்த போரினால் பாதிப்படையும் நிலை வரவுள்ளது, இதனைதான் கர்ம வினை என்பார்கள்.

🤣.....................

கமலின் 'குரு' படம் கொன்கோட் தியேட்டரில் ஓடிக் கொண்டேயிருந்தது. நானும் தினமும் அது இன்னமும் ஓடுகின்றதா என்று பத்திரிகையைப் பார்த்து உறுதி செய்து கொண்டேயிருந்தேன். அது போலவே இப்பொழுது இந்தச் சண்டையும் ஆகிவிட்டது.

எந்த மூன்றாம் தரப்பையும் ஒரு வேலி அடைப்பதற்குக் கூட நம்பக்கூடாது. நம்பினோர் நட்டாற்றில் நிச்சயம் ஒரு நாள் விடப்படுவார்...................

'கர்மா' என்று ஒன்று இந்த உலகில் உண்மையில் இருக்குதா என்று தெரியவில்லை. ஆனால் இந்தச் சொல்லை நேற்று என் மகள் ஒரு தடவை சொன்னார். அப்பொழுது நான் 'ஹலோ, ஹலோ...........இது ஒன்றும் ஆங்கிலச் சொல் கிடையாது. இது எங்களின் சொல்............' என்று வம்பிழுத்தேன். 'ஆ.........., தெரியும் தெரியும்.....' என்று அந்தக் கதை தொடர்ந்தது.

பின்னர் ஊழ்வினை என்று இப்பொழுது ஜெயமோகன் அடிக்கடி எழுதுவது நினைவில் வந்தது. அவர் இது சம்பந்தமாக எழுதும் பல விடயங்களை என்னால் இப்போதைக்கு ஏற்றுக்கொள்ள முடியாதிருக்கின்றது.

இன்று நீங்கள் கர்மா என்கிறீர்கள்................. 'கர்மா நாட்கள்' என்ற தலைப்பும் நல்லாவே இருக்கின்றது............🤣.    

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, ரசோதரன் said:

ரஷ்ய தலைவரை 'செத்த கிளி' என்று சொல்வது சரிதான்....................

அந்த நாட்களில் எங்கள் ஊரில் வலுக்கட்டாயமாக ஆட்களைப் பிடித்து மொட்டை அடித்து பயிற்சி கொடுத்தது போல.

ஏழை நாட்டு இளைஞர்களை பிடிக்கும் ஆக்கிரமிப்பு போர் வன்முறை  வெறியராக விளாடிமிர் புடின் இருக்கின்றார்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
5 hours ago, ரசோதரன் said:

ஒரு பக்கம் இந்தா, இப்பவே ஏவுகணையை ஏவுகின்றோம், அணுகுண்டை அமுக்குகின்றோம் என்பது. மற்றம் பக்கம் இப்படி அப்பாவி அந்நியர்களை பிடித்து போர்க்களத்திற்கு அனுப்புவது............. ரஷ்ய தலைவரை 'செத்த கிளி' என்று சொல்வது சரிதான்....................

அந்த நாட்களில் எங்கள் ஊரில் வலுக்கட்டாயமாக ஆட்களைப் பிடித்து மொட்டை அடித்து பயிற்சி கொடுத்தது போல..............

நேட்டோவை பிளக்கின்றோம், லண்டனை தொலைத்துக் கட்டுகின்றோம் என்று கங்குவா படத்திற்கு வந்த விளம்பரங்கள் போல இதுக்கு மேலயும் கதை விட்டுக் கொண்டிருக்கின்றார்கள்.............🫣.  

ரஷ்யாவின் நடவடிக்கைகளை  எப்படியெல்லாம் வெளியே கொண்டுவந்து நாறடிக்கலாம் என காத்திருக்கும் மேற்குலக ஊடகங்களுக்கு இப்படியான செய்திகள் காதுக்கும் எட்டாதது கவலைக்குரிய விடயம்.

500 கிலோ மீற்றர் பாயக்கூடிய ஏவுகணைகளையே ரஷ்ய நிலப்பரப்பின் மீது ஏவ பயப்படும் மேற்குலகு நிலை மிக கவலைக்கிடம். 😀

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ரசோதரன் said:

'கர்மா' என்று ஒன்று இந்த உலகில் உண்மையில் இருக்குதா என்று தெரியவில்லை. ஆனால் இந்தச் சொல்லை நேற்று என் மகள் ஒரு தடவை சொன்னார். அப்பொழுது நான் 'ஹலோ, ஹலோ...........இது ஒன்றும் ஆங்கிலச் சொல் கிடையாது. இது எங்களின் சொல்............' என்று வம்பிழுத்தேன். 'ஆ.........., தெரியும் தெரியும்.....' என்று அந்தக் கதை தொடர்ந்தது.

பின்னர் ஊழ்வினை என்று இப்பொழுது ஜெயமோகன் அடிக்கடி எழுதுவது நினைவில் வந்தது. அவர் இது சம்பந்தமாக எழுதும் பல விடயங்களை என்னால் இப்போதைக்கு ஏற்றுக்கொள்ள முடியாதிருக்கின்றது.

இன்று நீங்கள் கர்மா என்கிறீர்கள்................. 'கர்மா நாட்கள்' என்ற தலைப்பும் நல்லாவே இருக்கின்றது............🤣.    

உக்கிரேனிய இராணுவத்தரப்பின் கருத்தினடிப்படையில் தற்போதுள்ள பெருமளவானவர்கள் 45 வயர்கிற்கு மேற்பட்டவர்களாக உள்ளார்கள் (எவ்வளவு கொடுமையாக இருக்கிறது) என்றும் அதனால் போர் முனையில் பல நெருக்கடி  நிலவுகிறது என கூறுகிறார்கள்.

நிலமை ஒன்றும் நன்றாக இல்லை அங்குள்ளவர்களுக்கு, ஆனால் மேற்கு ஊடகங்களில் அவர்கல் வெல்வது போல ஒரு பிரமை ஏற்படுத்தப்படுகிறது அதன் மூலம் ஆயுத வியாபாரத்தினை நடத்தவும் அதனால் வரும் இலாபங்களை அரசியல்வாதிகள் நன்மை அடைவார்கள் சாமானிய மக்கள் அந்த அழிவுகளுக்கு வரி கட்டுவார்கள் அங்குள்ள மக்கள் தமது  வாழ்க்கையினை தேவையற்ற போரிற்காக இழப்பார்கள்.

முதலில் மக்கள் என்றிருந்தாலே நிலம் ஒன்று இருக்க வேண்டும் இவர்கல் அங்குள்ள மக்களை அழித்து அந்த நிலங்கலையும் வழங்களையும் கொள்லை அடிக்க நினைக்கிறார்கள், ஆனால் இது புரியாத சாமானிய மனிதர்கள் இந்த போருக்கு ஆதரவு வழங்குகிறார்கள்  ஊடக பரப்புரைகளை பார்த்து.

அதற்கு கூறப்படும் கருத்து இரஸ்சியா பலவீனமானது என 3 வருடமாக கூறி மக்களிடம் தொஅட்ர்ந்து போருக்கு ஆதரவினை திரட்டுகிறார்கள் நடைமுறையில் இந்த பணம் உயிர்கள் எல்லாம் சில சுய நலமிகளுக்கு இலாபமாக செல்வது மட்டுமே, 
 
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, ரசோதரன் said:

அந்த நாட்களில் எங்கள் ஊரில் வலுக்கட்டாயமாக ஆட்களைப் பிடித்து மொட்டை அடித்து பயிற்சி கொடுத்தது போல..............

அப்படி எந்த இயக்கம் பயிற்சி கொடுத்தது ?

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, பெருமாள் said:

அப்படி எந்த இயக்கம் பயிற்சி கொடுத்தது ?

ஈபிடிபி என்று தான் என் நினைவில் இருந்தது. ஆனால் போன வாரம் கோஷான் அது சுரேஷ் பிரேமச்சந்திரனின் ஆட்கள் என்று சரியான கால விபரத்துடன் என்னுடைய தகவலை சரிப்படுத்தியிருந்தார். என்னையும் ஒரு தடவை பிடித்திருந்தார்கள். பின்னர் பல்கலைக் கழக அனுமதி இருந்த காரணத்தால் விட்டுவிட்டனர்................

Edited by ரசோதரன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் ஊர் எது ?

  • கருத்துக்கள உறவுகள்
Just now, பெருமாள் said:

உங்கள் ஊர் எது ?

இது என்ன கேள்வி............... பயணக்கட்டுரையில் ஒழுங்கை வரை சொல்லியிருந்தேனே......... வல்வெட்டித்துறை தான் என்னுடைய ஊர்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
Just now, ரசோதரன் said:

இது என்ன கேள்வி............... பயணக்கட்டுரையில் ஒழுங்கை வரை சொல்லியிருந்தேனே......... வல்வெட்டித்துறை தான் என்னுடைய ஊர்.

தெரியும் ஆனால் ஒரு விடயத்தை சொல்லும்போது ஈபிடிபி என்று விபரமாய் சொல்லியிருந்தால் நல்லது நன்றி உங்கள் விளக்கத்துக்கு .

  • கருத்துக்கள உறவுகள்

😬 [இதை சொல்லி கலவரம் வராது எண்டுநினைக்கிறன்.]

2006 க்கு பிறகு வன்னியில் விமரிசையாகநடந்தது. அதற்கு செல்லப் பெயர் அமுக்/பிள்ளை பிடி...

  • கருத்துக்கள உறவுகள்
47 minutes ago, vasee said:

ஊடகங்களில் அவர்கல் வெல்வது போல ஒரு பிரமை ஏற்படுத்தப்படுகிறது அதன் மூலம் ஆயுத வியாபாரத்தினை நடத்தவும் அதனால் வரும் இலாபங்களை அரசியல்வாதிகள் நன்மை அடைவார்கள் சாமானிய மக்கள் அந்த அழிவுகளுக்கு வரி கட்டுவார்கள் அங்குள்ள மக்கள் தமது  வாழ்க்கையினை தேவையற்ற போரிற்காக இழப்பார்கள்.

தோற்று முடியும் அந்தக் கடைசிக் கணம் மட்டும் நாங்கள் வென்று கொண்டேயிருக்கின்றோம் என்று சொல்வது போரில் ஒரு விதி போல, வசீ.

பொதுவாக இந்த அணுகுமுறையை விளையாட்டுகளில் பார்க்கலாம்.................. It is not over until it is over என்று திரும்ப திரும்ப சொல்லுவோம். நான் பல வருடங்கள் இங்கு சிறுவர்களுக்கு பயிற்சியாளராக இருந்திருக்கின்றேன். எத்தனையோ போட்டிகள் எங்களால் வெல்ல முடியாதவை என்று இடையிலேயே தெரிந்துவிடும், ஆனாலும் பிள்ளைகளை உற்சாகப்படுத்திக் கொண்டேயிருப்போம்.

இதே அணுகுமுறை போர்களில் எதிர்மறையாக பயன்படுத்தப்படுகின்றது. 

ஆமாம், இதைச் செய்பவர்கள் அதனால் இலாபம் அடைபவர்களே. பெரும்பாலும் இந்த இலாபம் அடைபவர்கள் போர்களில் நேரடியாக ஈடுபடுவதும் இல்லை, எதுவும் இழப்பதும் இல்லை............😌.   

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.