Jump to content

2015 ஆம் ஆண்டின் மைத்திரியின் அரசு மீது அன்று வைத்த அதே கண்மூடித்தனமான விசுவாசத்தை இன்று அநுர மீதும் வைத்திருக்கிறார்களா தமிழர்கள்?  

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Posted
10 hours ago, சுவைப்பிரியன் said:

குடும்பத்தில் ஒருவரை வெளி நாட்டுக்கு அனுப்புவம் என்று கட்ச்சி தொடங்கினால்( சும்மா ஒரு கற்படபனைக்கு சாத்தியம் எனடால்)  அனுராவும் இல்லை தேசியம் பேசும் கட்ச்சிகளும் கட்டுக்காசு கூடக் கிடைக்காது.

யூகே யில் ஒவ்வொரு வாக்காளருக்கும் ஒரு பிட்காயின் தருவோம் என யாரும் கூறினால் (அது நம்பும்படியாக இருந்தால்) ஸ்டாமரும் இல்லை, லேபரும் இல்லை, கன்சேவேடிவும் இல்லை.

உலகமும் முழுதும் இதுதான் நியதி.

  • Replies 55
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

Justin

கடந்த ஜனாதிபதித் தேர்தலில், தமிழ் பொது வேட்பாளர் வாக்குகளைப் பிரித்து விட்டால், இலங்கையின் பொருளாதாரத்திற்கு பாதகமான NPP வென்று விடலாம் என்று நான் சொன்ன போது, "அவர்கள் ஆட்சிக்கு வந்து பொருளாதாரம் சரிந

ரஞ்சித்

ரணில் விக்கிரமசிங்கவை தமிழ் மக்கள் ஒரு காலத்தில் இனவாதிகளிடமிருந்து வேறுபட்டவராக, மேம்பட்டவராக, முற்போக்குச் சிந்தனையுடையவராக நம்பியிருந்தனர். ஆனால் தானும் மற்றைய சிங்கள பெளத்த இனவாதிகளைப் போன்றே தமிழ

Justin

நான் எழுதியதைத் தவறாகப் புரிந்திருக்கிறீர்கள் அல்லது அதற்கு உங்கள் optimistic முலாமைப் பூசியிருக்கிறீர்கள். புலம் வாழ் தீவிர தேசியர்களின் அச்சம் தாயக மக்கள் பாதிக்கப் படுவர் என்ற பொது நல நோக்கு,

  • கருத்துக்கள உறவுகள்
Posted
6 hours ago, Justin said:

ஏனெனில், புலத்தில் இருக்கும் தீவிர தமிழ் தேசியர்கள் பலர் எதிர்பார்க்காத ஒரு புதிய வகையான ஆபத்து அனுர அரசிடமிருந்து வந்திருக்கிறது. தமிழ் மக்களின் தேர்ந்தெடுத்த சில பிரச்சினைகளை அவர்கள் உணரக் கூடிய வகையில் தீர்ப்பதன் மூலம், அனுர அரசை நோக்கி ஒரு soft corner ஐ உருவாக்குவது. அந்த நட்புணர்வை வைத்து தீவிர தேசியம் மட்டுமல்ல, தீ கக்காத தேசிய உணர்வின் பக்கமிருந்து கூட தமிழர்களை இழுத்தெடுப்பது, என இந்த மென் முயற்சிகள் தான் அந்த ஆபத்து.

வடமாராட்சியில், யுத்த காலத்தில் சிங்கள இராணுவ அதிகாரி ஒருவர் இப்படித் தான் மக்கள் "அங்கிள்" என்று அழைக்கக் கூடிய வகையில் மக்களோடு நட்பாக இருந்தாராம். "இதயத்தை வெல்லுதல்" என்ற புதிய அணுகுமுறையைக் கைக்கொண்ட அந்த சிங்கள அதிகாரி மாற்றலாகிச் செல்லும் வழியில் தற்கொலைத் தாக்குதலில் கொல்லப் பட்டார்.

தமிழ் மக்களின் சில பிரச்சினைகளை கொஞ்சம் பரிவோடு ஒரு சிங்களத் தரப்பு அணுகினாலே தமிழ் மக்களின் தரப்பில் இருக்கும் தீவிர தரப்பிற்கு தங்கள் இருப்புப் பறிபோய் விடுமென்ற அச்சம் வந்து விடும். இந்த அச்சத்தையும், படபடப்பையும் மேலே இருக்கும் கட்டுரையிலும், யாழுக்கு வெளியே கேள்விப் படும் உரையாடல்களிலும் காணக்கூடியதாக இருக்கிறது.

உதாரணமாக, நேற்று உள்ளூர் மாவீரர் தினம் இங்கே. இந்த தேர்தலைப் பற்றியும், தமக்கு உவப்பானோர் பலர் ஓரங்கட்டப் பட்டதைப் பற்றியும் விரக்தியோடு பேசினார்கள். அச்சம் அப்படியே வெளித்தெரிந்தது - palpable fear! 

மேலே உள்ள தீ கக்காத தமிழ் தேசியவாதியில் என்னையும் அடக்கலாம் என நினைக்கிறேன்.

ஏற்றுகொள்கிறேன் வடமாகாணத்தில் 5 சீட் என் பி பி க்கு போனது முதல் எனக்கு palpable fear தான்.

இது என் எம்பி சீட் போய்விடும் என்றோ, அல்லது என் வருவாய் பாதிக்கும் என்றோ வரும் பயம் அல்ல.

பிரிந்து போன வாக்குகளை கூட்டினால் எமது மக்கள் இன்னும் சுயநிர்ணயம் வேண்டியே நிற்கிறனர். கிழக்கில் சந்தேகமே இல்லை 4 சீட் எடுக்க வேண்டிய இடத்தில் 5 சீட்டை தமிழரசுக்கு கொடுத்துள்ளனர்.

இந்த நிலையில் அவர்களை அனுர தன் மனங்களை வெல்லும் அதாவது ஈரச்சாக்கு அரசியல் மூலம் ஒற்றை இலங்கைக்குள் அமிழ்த்தி விடுவாரா என்ற பயம் எனக்கு தொற்றியுள்ளது கண்கூடு.

ஆனால் வடமராட்சி அங்கிள் போல, அனுரவும் ஒரு temporary relief ஐ மட்டுமே தருவார். அதுவும் ஒரு அளவில்தான். அங்கிள் நாளைக்கு ரிடையர் ஆகி போனபின் வரும் அடுத்த ஆள் நம்மை அடிமை செய்வார் என்கிறது நம் பட்டறிவு. 

எனது மட்டும் அல்ல பலரின் பயமும் இதுதான். இது எமது சுயநலம் சம்பந்தபட்டது அல்ல.

யாழ்பாணம், மட்டகளப்பு,  கொழும்பை போல் சிங்களமகமாகினால் எனக்கு அது தனிப்பட்டு வசதியாகவே இருக்கும்.

ஆனால் நம் சுயநிர்ணய கோரிக்கை அறம் மிக்கது, நியாயமானது, இதற்க்காக நாம் கொடுத்த விலை அதிகம்.

வெற்று தற்காலிக சலுகைகள், அனுர என்ற ஒருவரின் இமேஜை வைத்து எம்மை காலாகாலத்துக்கும் சுய உரிமை அற்றவர்களா மாற்றப்போகிறார்கள் என்பதே நீங்கள் காணும் palpable fear.

———-

தண்ணீர் விட்டா வளர்த்தோம் சர்வேசா,

இப்பயிரை கண்ணீரால் காத்தோம், கருக திருவுளமோ.

6 hours ago, ஈழப்பிரியன் said:

ரஞ்சித் உங்கள் பதிவுக்கு நன்றி.

இன்னமும் முழுமையாக வாசிக்கவில்லை.

ஆனாலும் 2015 இல் மைத்திரிக்கு நிபந்தனையில்லாத ஆதரவையும் 

எமது மக்களைக் கொன்று குவித்த சரத் பொன்சேகாவுக்கு ஜனாதிபதி தேர்தலில் ஆதரவு வழங்கியதையும் எதிராக எழுதியபோது

@பாலபத்ர ஓணாண்டி   @நிழலி ஆகியோரிடமிருந்து எதிர்ப்பு வந்தது.

இங்கு வெள்ளை வான் இல்லை கிரீஸ்பூதம் இல்லை. ஒரு துண்டு பாணுக்காக வரிசையில் நிற்கத் தேவையில்லை என்று பலதையும் சொன்னார்கள்.அங்குள்ளவர்களின் நிலமையைப் புரிந்து கொண்டேன்.

இப்போது தமிழர்கள் கேட்காமலேயே பல விட்டுக்கொடுப்புக்களை செய்கிறார்கள்.பாதையைத் திறந்து விடுகிறார்கள்.அமைச்சருக்கு முறைப்பாடு செய்த அடுத்த அரைமணி நேரத்திலேயே களத்தில் அதுவும் எதுவித பந்தோபஸ்தும் இல்லாமல்(சுமந்திரன் போகும்போதே 4 அதிரடிப்படையாட்கள் போவார்கள்)போய் தோழில் கைபோட்டு கதைக்கிறார்.மழை பெய்தவுடன் பாதிக்கப்பட்ட மக்களுடன் அமைச்சர் நிற்கிறார்.

எமக்கு ஏமாற்றமாக இருந்தாலும் தாயகத்து மக்கள் சந்தோசப்படுகிறார்கள்.

இதுதான் மேலே ஜஸ்டின் அண்ணா சொன்ன மனங்களை வெல்லும் “வடமராட்சி அங்கிள் பொலிடிக்ஸ்” , நான் எழுதிய 75 வருட யுத்தத்தின் 3ம் அத்தியாயம்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
30 minutes ago, putthan said:

ஆகவே தமிழருக்கு அரசியல் பிரச்சனை இல்லை என சொல்லி காலம் கடத்தி மாகாணசபையை நடைமுறை சாத்தியமாக்க முயல்வார்கள் .மாகாணசபை நடை முறைக்கு வந்த பின்பு ....இந்தியா இலங்கை ஒப்பந்தம் கிழித்து எறியப்படும் .. 

மாகாணசபையை ஒழிக்கப் போவதாக இன்று எங்கோ வாசித்த ஞாபகம்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
14 hours ago, vasee said:

தமிழ் அடியான் 🤣
இவர் லண்டன் தவகரன் என்று அழைக்கபடுவாராம்

  • Like 1
  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
8 minutes ago, ஈழப்பிரியன் said:

மாகாணசபையை ஒழிக்கப் போவதாக இன்று எங்கோ வாசித்த ஞாபகம்.

இதை நான் தேர்தலுக்கு முன் நடக்கும் என கூறிய போது நீங்கள் சங்தேகப்பட்டீர்கள்.

8 minutes ago, விளங்க நினைப்பவன் said:

தமிழ் அடியான் 🤣
இவர் லண்டன் தவகரன் என்று அழைக்கபடுவாராம்

ஒரு அனுரசார்பு வீடியோவுக்கு 2.5 இலட்சம் என சொல்லிகிறனர்.

ஆனால் நான் நம்பவில்லை. இவர்கள் லைக்ஸ் மூலம் உழைக்கவே இப்படி நட்ச்க்கிறனர்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
6 minutes ago, goshan_che said:

ஒரு அனுரசார்பு வீடியோவுக்கு 2.5 இலட்சம் என சொல்லிகிறனர்.

ஆனால் நான் நம்பவில்லை. இவர்கள் லைக்ஸ் மூலம் உழைக்கவே இப்படி நட்ச்க்கிறனர்.

ஓம் தவகரன் இப்போது கோடிஸ்வரனாம்

15 minutes ago, goshan_che said:

இப்போது தமிழர்கள் கேட்காமலேயே பல விட்டுக்கொடுப்புக்களை செய்கிறார்கள்.பாதையைத் திறந்து விடுகிறார்கள்.அமைச்சருக்கு முறைப்பாடு செய்த அடுத்த அரைமணி நேரத்திலேயே களத்தில்

வெளிநாட்டில் உள்ள தமிழர்கள் பலர் இப்படி தான் சொல்கின்றார்கள். பல விட்டுக்கொடுப்புக்களை அநுரகுமார திசாநாயக்க தமிழர்களுக்காக செய்து கொண்டிருப்பதால் சிங்கல மக்கள் ஏழைகள் ஆகிவிட்டனரா 😭

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
30 minutes ago, goshan_che said:

மேலே உள்ள தீ கக்காத தமிழ் தேசியவாதியில் என்னையும் அடக்கலாம் என நினைக்கிறேன்.

ஏற்றுகொள்கிறேன் வடமாகாணத்தில் 5 சீட் என் பி பி க்கு போனது முதல் எனக்கு palpable fear தான்.

இது என் எம்பி சீட் போய்விடும் என்றோ, அல்லது என் வருவாய் பாதிக்கும் என்றோ வரும் பயம் அல்ல.

பிரிந்து போன வாக்குகளை கூட்டினால் எமது மக்கள் இன்னும் சுயநிர்ணயம் வேண்டியே நிற்கிறனர். கிழக்கில் சந்தேகமே இல்லை 4 சீட் எடுக்க வேண்டிய இடத்தில் 5 சீட்டை தமிழரசுக்கு கொடுத்துள்ளனர்.

இந்த நிலையில் அவர்களை அனுர தன் மனங்களை வெல்லும் அதாவது ஈரச்சாக்கு அரசியல் மூலம் ஒற்றை இலங்கைக்குள் அமிழ்த்தி விடுவாரா என்ற பயம் எனக்கு தொற்றியுள்ளது கண்கூடு.

ஆனால் வடமராட்சி அங்கிள் போல, அனுரவும் ஒரு temporary relief ஐ மட்டுமே தருவார். அதுவும் ஒரு அளவில்தான். அங்கிள் நாளைக்கு ரிடையர் ஆகி போனபின் வரும் அடுத்த ஆள் நம்மை அடிமை செய்வார் என்கிறது நம் பட்டறிவு. 

எனது மட்டும் அல்ல பலரின் பயமும் இதுதான். இது எமது சுயநலம் சம்பந்தபட்டது அல்ல.

யாழ்பாணம், மட்டகளப்பு,  கொழும்பை போல் சிங்களமகமாகினால் எனக்கு அது தனிப்பட்டு வசதியாகவே இருக்கும்.

ஆனால் நம் சுயநிர்ணய கோரிக்கை அறம் மிக்கது, நியாயமானது, இதற்க்காக நாம் கொடுத்த விலை அதிகம்.

வெற்று தற்காலிக சலுகைகள், அனுர என்ற ஒருவரின் இமேஜை வைத்து எம்மை காலாகாலத்துக்கும் சுய உரிமை அற்றவர்களா மாற்றப்போகிறார்கள் என்பதே நீங்கள் காணும் palpable fear.

———-

தண்ணீர் விட்டா வளர்த்தோம் சர்வேசா,

இப்பயிரை கண்ணீரால் காத்தோம், கருக திருவுளமோ.

இதுதான் மேலே ஜஸ்டின் அண்ணா சொன்ன மனங்களை வெல்லும் “வடமராட்சி அங்கிள் பொலிடிக்ஸ்” , நான் எழுதிய 75 வருட யுத்தத்தின் 3ம் அத்தியாயம்.

உண்மை 

ஆதாரம் மற்றும் புள்ளி விவரங்களுடன் வாழ்பவர்களுக்கு அநுராவுக்கு விழுந்த வாக்குகள் டக்லஸ் மற்றும் ஐங்கரன் சார்ந்த வேலை மற்றும் உதவி எதிர்பார்ப்பு வாக்குகள் என்பது தெரியாமலா இருக்கும்???? மற்றும் எமது அரசியல்வாதிகளின் செயற்பாடற்ற நிலை மற்றும் பொருளாதார நெருக்கடிகள் தொடரும் போது அதன் வீரியம் அதிகரிக்குமே தவிர குறையாது என்பது பொது நலம் சார்ந்து சிந்திப்போருக்கு புதியதல்லவே....

Edited by விசுகு
எழுத்துப்பிழை
  • கருத்துக்கள உறவுகள்
Posted
19 hours ago, பகிடி said:

அனுராவின் பிளான் இது தான்.

இப்போதைக்கு தமிழ் இனப்பிரச்னை பற்றி கதைக்காமல் விடுவது, அல்லது இதே போக்கில் இன்னும் 4 வருடங்களுக்கு இழுத்தடிப்பது. அதே நேரத்தில் ஏனைய மக்கள் பிரச்சனைகளைக் கையாளும் விஷயத்தில் தமிழ் மக்களின் நம்பிக்கையைப் பெறுவது.இப்படியே நாளைக் கடத்தி தமிழ் மக்களின் இனப் பிரச்னை குறித்த கொதிக்கும் மனப்பாங்கினை ஓரளவுக்கு குளிர் நிலைக்கு கொண்டு வருவது. பின்னர் சிங்கள மக்களும் விரும்பும் தீர்வை வழங்குவது. 83 ம் ஆண்டில் பிரச்சனையை பார்த்த தமிழ் மக்களின் பெரும் எண்ணிக்கை 2014 இல் 70 வயதைக் கடந்து இருக்கும். புதிய தலைமுறை தமிழர்களிடம் பழைய தலைமுறைத் தமிழர்களின் எதிர்பார்ப்பு இல்லை. கிட்டத்தட்ட கொழும்பு தமிழ் லிபரலுக்கும் வடக்கு தமிழர்களுக்கும் உள்ள வித்தியாசம் போல..

நீங்கள் சொல்வது போல் நடக்க அதிக சாத்தியமுண்டு.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 hours ago, goshan_che said:

வெற்று தற்காலிக சலுகைகள், அனுர என்ற ஒருவரின் இமேஜை வைத்து எம்மை காலாகாலத்துக்கும் சுய உரிமை அற்றவர்களா மாற்றப்போகிறார்கள் என்பதே நீங்கள் காணும் palpable fear.

———-

நான் எழுதியதைத் தவறாகப் புரிந்திருக்கிறீர்கள் அல்லது அதற்கு உங்கள் optimistic முலாமைப் பூசியிருக்கிறீர்கள்.

புலம் வாழ் தீவிர தேசியர்களின் அச்சம் தாயக மக்கள் பாதிக்கப் படுவர் என்ற பொது நல நோக்கு, நீண்டகாலத் தீர்வு பற்றியெல்லாம் அல்ல. இவர்களது தொடர்ந்த இருப்பு தொடர்பானது. நான் இப்படி அபிப்பிராயப் படக் காரணம், அவர்களே பல தடவைகள் வெளிப்படையாகச் சொல்லியிருப்பது போல, அவர்களுக்கு ஒரே தீர்வு தான். அந்த தீர்வைத் தவிர மிகுதி எதையும் ஆராயவோ, பேசவோ முற்படும் தரப்புகள் எல்லாம் துரோகிகள். இந்த வரட்டுக் கொள்கையினால், போர்க்காலத்தின் பின்னர் கூட தாயக மக்களை இங்கே இருந்த படி ரிமோட் கொன்ட்ரோல் வழி கட்டுப் படுத்த முயன்றனர்.

இப்போது "சிறிலங்கா" என்ற ஒரே சாக்கில் அனுர போட்டு அடிக்க முயல்வது போல, எங்கள் தீவிர தேசியர்களும் மிதவாதம், இணக்கம், என்று பேசிய அனைவரையுமே "துரோகி" என்ற ஒரே சாக்கில் போட்டு இன்றும் கூட அடித்து வருகின்றனர்.

இதைச் செய்ய, ஒன்று இவர்கள் முட்டாள்களாக இருக்க வேண்டும், அல்லது "செத்த வீடானாலும் நான் தான் பிணமாக இருக்க வேணும்" என்று நினைக்கும் சுயநலமிகளாக இருக்க வேண்டும். இவர்கள் முட்டாள்கள் அல்ல, நன்கு தம் வாழ்க்கை முறைக்குப் பழக்கப் பட்டு விட்ட சுயநலமிகளாகத் தான் இருக்க வேண்டுமென நான் கருதுகிறேன். இவர்களுக்கே பேரச்சம். மக்களில் அக்கறை கொண்டோர் "எது வரை போகிறதெனப் பார்க்கலாம்" என்று இருக்கிறார்கள்.

யாழ் களத்திலே இந்த இரு வகையான போக்கு நன்கு வெளிப்படுவதைக் காண்கிறேன். 

  • Like 4
  • கருத்துக்கள உறவுகள்
Posted
6 minutes ago, Justin said:

அவர்கள் எல்லாரையும் துரோகி பைக்குள் போட்டு வெளுத்தது உண்மை.

தனிநாடே தீர்வு என நாண்டு கொண்டு நிண்டதும் உண்மை.

ஆனால் இவர்கள்தான் இப்போ….பொறுப்பம்…பாப்பம் என்கிறவர்களாக அதிகம் இருக்கிறார்கள்.

சிலர் அடுத்த படிக்கு போய்…ஜனாதிபதி தேர்தலின் பின் என் பி பிக்கு ஆதரவு வீடியோ செய்திகள் கூட வெளியிடுகிறார்கள்.

நீங்கள் வேறு ஏதும் யாழ்களத்தை பார்கிறீர்களோ தெரியாது அண்ணா, நான், வாத்தியார் அண்ணா, ஓணாண்டி போல நடைமுறை சாத்தியமான தமிழ் தேசியம் பேசியோரே இன்று அனுரவை எதிர்கிறோம்.

மற்றைய பக்கம் பார்த்தீர்களானால் அனுர பிரிகேட்டில் நிற்பவர்கள் எல்லாம் 24 கரட் தமிழ் தேசியவாதிகள் என தம்மை சொல்லிகொண்டோர்.

இதில் விசுகு அண்ணா, புலவர் இருவர் மட்டுமே விதிவிலக்குகள்.

இதில் ஆக சிறந்த நகைசுவை என்னவென்றால் ….இந்த பார்ப்போம், பொறுப்போம் மறைமுக அனுர ஆதரவாளரும், நேரடியாக அனுரவை ஆதரிப்போரும் - பலர் மானசீக யாழ்கள தேர்தலில் சாத்தியமே இல்லாத ஒரு நாடு, இரு தேசத்தை கோரும் சைக்கிளுக்கு வாக்கு போட்டவர்கள்.

முடியை பிச்சு கொள்ளாத குறைதான்🤣.

இன்னுமொரு விடயம்.

அவர்கள் எல்லோரையும் துரோகி பைக்குள் போட்டு வெளுத்ததை போலவே, அனுரவை எதிர்க்கும், இது அதே பழைய இனவாதம் தான் என கூறும் அனைவரையும், நீங்களும் “தமது இருப்புக்கு குந்தகம் விளைகிறது என அஞ்சும் தரப்பு” என்ற பைக்குள் போட்டு அடிக்க முனைவதாக எனக்குப்படுகிறது.

நிச்சயம் இப்படி பயப்படும் சுயநலமிகள் இருக்கவே செய்வார்கள்.

ஆனால் பெரும்பாலானோரின் அனுர மீதான சந்தேகம் - கொள்கையின் பால்பட்டதே.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
5 hours ago, goshan_che said:
5 hours ago, ஈழப்பிரியன் said:

மாகாணசபையை ஒழிக்கப் போவதாக இன்று எங்கோ வாசித்த ஞாபகம்.

இதை நான் தேர்தலுக்கு முன் நடக்கும் என கூறிய போது நீங்கள் சங்தேகப்பட்டீர்கள்

இந்தியாவோடு பிரச்சனை வரலாம் என எண்ணினேன்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
12 hours ago, goshan_che said:

இங்கேதான் நீங்களும் சுமந்திரனும் பிழை விட்டீர்கள்.

நீங்களோ, நானோ, சுமந்திரனோ புலிகளின் பிரதிநிதிகள் அல்ல. நாம் எம்மக்களின் பிரதிநிதிகள்.

நாம் கோருவது எம் மக்களுக்கு இலங்கை அரசு இழைத்த அநீதிக்கான விசராணையை. அதை நாம் கோருவது அதனை ஒரு துரும்பாக பாவித்து ஒரு நியாயமான தீர்வை எட்ட.

புலிகள் செய்தவை பற்றி எமக்கு கவலை இல்லை. அதை பாவித்து இப்போ எம் மக்களுக்கு நாம் ஒரு தீர்வை பெற முடியாது. ஆகவே அதை பற்றி நாம் கதைக்க வேண்டியதில்லை (நமக்குள் வரலாற்றில் இருந்து கற்று கொள்வதற்காக கதைப்பது அல்ல).

இலங்கை அதை பேச விரும்பினால் போய், புலிகள் இருந்தால் அவர்களுடன், அல்லது அவர்களின் பிரதிநிதிகள் என யாரும் இருந்தால் அவர்களுடன் பேசட்டும், விசாரிக்கட்டும்.

நாம் புலிகள் அல்ல. தமிழர்.

புலிகள் செய்தவற்றுக்கு பொதுமக்களாகிய நாம் ஒரு போதும் பொறுப்பு கூற வேண்டியதில்லை.

ஆனால் இலங்கை படைகள் செய்தமைக்கு, யார் ஆட்சிக்கு வந்தால் இலங்கை அரசே பொறுப்பு.

நாம் கோருவது எமக்கான நியாயமான விசாரணையை.

இதில் சுமந்திரன் தன் வகிபாகத்தை மீறி, எமது மக்களின் பிரதிநிதியாக அல்லாமல் - தானே ஐ சி சி நீதிபதிபோல் கதைக்க வெளிகிட்டுத்தான், சகலதையும் கவிழ்த்து கொட்டினார்.

நான் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் இந்த கருத்தை கூறவில்லை கோஷான்.  இலங்கை அரசின் யுத்த குற்றங்களைப் பேசிக்கொண்டு   தமிழரிடையே  உசுப்பேற்றும் கருத்துக்களை பேசுவோரிடை மட்டுமே  இதைக் கூறுகிறேன். “ஶ்ரீலங்கா அரசு மட்டுமே நேர்மையற்றது,  நாம் மிக நேர்மையாக அறத்துடன் எமது போர் நடவடிக்கைகளை மேற்கொண்டோம்”,  என்று வரலாற்று உண்மைகளைத் திரித்து  மக்களையும் அடுத்த தலைமுறையையும் உணர்சசிவசப்படுத்துபவர்களை நோக்கியே, அப்படியில்லை நம் பக்கமும் யுத்த நடவடிக்கையில் நேர்மை இருக்கவில்லை, அவர்களுக்கு இணையாக பல சம்பவங்களை எமது தரப்பும் செய்தது என்ற உண்மையை  சுட்டிக்காட்டவே அதைக் குறிப்பிட்டேன்.  இதை தமிழரிடையே சுட்டிக் காட்டுவதால் அது தமிழருக்கு தீர்வு கிடைப்பதில் இடைஞ்சலை உண்டாக்கும் என்ற உங்களது கருத்தை நான் ஏற்கவில்லை. 

நிற்க, புலிகள் செய்த குற்றங்களை தமிழ் மக்கள் செய்ததாக எடுத்து கொள்ள வேண்டியதில்லை, தமிழ்  மக்களுக்கும் இதற்கும் ஒரு தொடர்பும் இல்லை. புலிகளின் தவறுகளை தூக்கி சுமக்க வேண்டிய தேவை தமிழ் மக்களுக்கு இல்லை என்ற உங்களுடைய கருத்தை வரவேற்கிறேன்.  உண்மையில் மிக சிறந்த உலக அரசியல் தெளிவு கொண்ட பாரவை அது.  ஆனால், உங்களுடைய இந்த தெளிவு ஐநாவில் மனித உரிமை கூட்டங்களில் அரசு சார்பற்ற  தமிழர் அமைப்புகள்  சார்பாக யுத்தக்குற்றங்கள் பற்றி சர்வதேச ராஜதந்திரிகளுடன்  கடந்த 15 வருடங்களாக பேசுவதாக கூறிவரும் தமிழர் அமைப்புகளுக்கு உள்ளதா?   நான் பார்த்தளவில் ஐநாவில் தமிழர் சார்பாக செல்வோர் எல்லாம் நீங்கள் கூறியதைப் போல் தெளிவான சிந்தனையுடன் குறைந்தது வெளிப்பார்வைக்காவது தம்மை மக்களின் பிரதிநிதிகளாக  நடந்து கொள்வதில்லை. கிட்டத்தட்ட புலிகளின்  பேச்சாளர்கள் போலவே அவர்கள் நடந்து கொள்ளும் போது இங்கு  நீங்கள் கூறியது எப்படி சாத்தியமாகும்?

ஜநா மனித உரிமை அமர்வுகளிலோ அல்லது சர்வதேச நாடுகளின் பிரதிநிதிகளுக்கோ, சர்வதேச பத்தியாளருக்கோ  சுமந்திரன்  தன்னிச்சையாக இவ்வாறு கூறியிருந்தால் அது தவறான செயல்.  ஆனால், அப்படி தன்னிச்சையாக சர்வதேச அரங்கில் கூறியிருந்தாரா அல்லது பத்திரிகையாளர் சந்திப்பில் அவர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கையில் அப்படி கூறியிருந்தாரோ,  அல்லது தமிழர் அமைப்புகளுடன் பேசும் போது  மட்டும் அதைக் கூறினாரோ   என்பது குறித்த எந்த தெளிவான செய்தியோ ஆதாரங்களோ இல்லை.  மக்களின் பணத்தை சுருட்டிய புலம் பெயர் திருட்டு தேசியவாதிகளினது கூற்றுகளை மட்டும் வைத்து இதை எடை போட முடியாது. 

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
9 hours ago, goshan_che said:

ஆனால் பெரும்பாலானோரின் அனுர மீதான சந்தேகம் - கொள்கையின் பால்பட்டதே.

நீங்கள் கூறியது உண்மையானால், நடைமுறை சாத்தியமான தீர்வுகளைப்  பற்றி பேசிய மென்போக்கு த்திழ் தேசியம் பேசிய  அரசியல்வாதிகளை துரோகிகள் பட்டம் சூட்டி ஒதுக்கி விட்டு  வரட்டு தேசியம் பேசிய சைக்கிள் தரப்பை புலம் பெயர் தேசியவாதிகள் ஆதரித்தது ஏன்?  

ஶ்ரீலங்காவில் கடும் போக்கு மகிந்த, கோட்டபாய போன்றோர் பதவிக்கு வருவதை விரும்பியது ஏன்?   ஒப்பீட்டு ரீதியில் சற்றே மென்போக்கு கொண்ட,  ஆனால் அநுரா போல் அல்லாமல் தமிழரின் அடையாளத்தை ஏற்றுக்கொண்ட ஶ்ரீலங்கா அரச  தரப்புகளைக் கூட  கடுமையாக எதிர்தத்துடன்   கடும்போக்கு தரப்புகள் வந்து தமிழ்  மக்களை அடக்குவதே தேசியத்துக்கு நல்லது என்று புலம் பெயர் தரப்புகள் விரும்பியது  ஏன்? ( யாழில் கூட  அது  எழுதப்பட்டது ஞாபகம் உள்ளது.) 

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

காத்திரமான கேள்விகள் @island. இரவு பதில் போடுகிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
15 hours ago, island said:

நான் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் இந்த கருத்தை கூறவில்லை கோஷான்.  இலங்கை அரசின் யுத்த குற்றங்களைப் பேசிக்கொண்டு   தமிழரிடையே  உசுப்பேற்றும் கருத்துக்களை பேசுவோரிடை மட்டுமே  இதைக் கூறுகிறேன். “ஶ்ரீலங்கா அரசு மட்டுமே நேர்மையற்றது,  நாம் மிக நேர்மையாக அறத்துடன் எமது போர் நடவடிக்கைகளை மேற்கொண்டோம்”,  என்று வரலாற்று உண்மைகளைத் திரித்து  மக்களையும் அடுத்த தலைமுறையையும் உணர்சசிவசப்படுத்துபவர்களை நோக்கியே, அப்படியில்லை நம் பக்கமும் யுத்த நடவடிக்கையில் நேர்மை இருக்கவில்லை, அவர்களுக்கு இணையாக பல சம்பவங்களை எமது தரப்பும் செய்தது என்ற உண்மையை  சுட்டிக்காட்டவே அதைக் குறிப்பிட்டேன்.  இதை தமிழரிடையே சுட்டிக் காட்டுவதால் அது தமிழருக்கு தீர்வு கிடைப்பதில் இடைஞ்சலை உண்டாக்கும் என்ற உங்களது கருத்தை நான் ஏற்கவில்லை. 

இல்லை நீங்கள் யாழில் தமிழரிடையே எழுதுவதால் அதை வெளியார் காண்பார்கள் என நான் எழுதவில்லை.

ஆனால் குறைந்தது 60% எமது மக்கள் புலிகளின் ஆதரவாளர்கள்.

புலிகளின் தவறுகளை மீள, மீள உரைப்பது அவர்களோடு நீங்கள் சேர்ந்தியங்கும் வாய்ப்பை பாதிக்கும். இது அடிப்படை மனித மனோவியல்.

60% இன் உதவி இல்லாமல் தீர்வை அடைய முடியாது.

இந்தவகையில் இந்த மீள, மீள, மீள உரைத்தல், இந்த இனத்தின் ஒற்றுமைக்கு, தீர்வுக்கு ஒரு இடைஞ்சல்தான்.

16 hours ago, island said:

நிற்க, புலிகள் செய்த குற்றங்களை தமிழ் மக்கள் செய்ததாக எடுத்து கொள்ள வேண்டியதில்லை, தமிழ்  மக்களுக்கும் இதற்கும் ஒரு தொடர்பும் இல்லை. புலிகளின் தவறுகளை தூக்கி சுமக்க வேண்டிய தேவை தமிழ் மக்களுக்கு இல்லை என்ற உங்களுடைய கருத்தை வரவேற்கிறேன்.  உண்மையில் மிக சிறந்த உலக அரசியல் தெளிவு கொண்ட பாரவை அது.  ஆனால், உங்களுடைய இந்த தெளிவு ஐநாவில் மனித உரிமை கூட்டங்களில் அரசு சார்பற்ற  தமிழர் அமைப்புகள்  சார்பாக யுத்தக்குற்றங்கள் பற்றி சர்வதேச ராஜதந்திரிகளுடன்  கடந்த 15 வருடங்களாக பேசுவதாக கூறிவரும் தமிழர் அமைப்புகளுக்கு உள்ளதா?   நான் பார்த்தளவில் ஐநாவில் தமிழர் சார்பாக செல்வோர் எல்லாம் நீங்கள் கூறியதைப் போல் தெளிவான சிந்தனையுடன் குறைந்தது வெளிப்பார்வைக்காவது தம்மை மக்களின் பிரதிநிதிகளாக  நடந்து கொள்வதில்லை. கிட்டத்தட்ட புலிகளின்  பேச்சாளர்கள் போலவே அவர்கள் நடந்து கொள்ளும் போது இங்கு  நீங்கள் கூறியது எப்படி சாத்தியமாகும்?

ஜெனிவாவில் புலிக்கொடியோடு போகாமல் விடலாம் என 2017 வாக்கில் நான் எழுதி, நெடுக்ஸ் தலைமையில் என்னை பலர் சேர்ந்து மொங்கியது நினைவிருக்கலாம்.

ஆனால் அப்போ என்னை மொங்கிய பலர்…இப்போ அனுர அனுதாபிகள்.

இவர்களை அனுரவால் தம்பக்கம் இழுக்க முடியும் எனில், எம்மாலும் முடியும்.

இவர்கள் உணர்ச்சி பிழம்புகள். வைத்தால் குடுமி, வழித்தால் மொட்டை அப்ரோச் எடுப்பவர்கள்.

இப்போ சொல்லி பாருங்கள்…ஜெனிவா போன்ற இடங்களில் தடை செய்யபட்ட விடயங்களை தூக்கி பிடியாமல் - நாம் ஒரு சிவில் அமைப்பாக இதை அணுக வேண்டும் என - அப்போ என்னை வெளுத்த பலர் இப்போ இதை ஏற்பார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
16 hours ago, island said:

ஜநா மனித உரிமை அமர்வுகளிலோ அல்லது சர்வதேச நாடுகளின் பிரதிநிதிகளுக்கோ, சர்வதேச பத்தியாளருக்கோ  சுமந்திரன்  தன்னிச்சையாக இவ்வாறு கூறியிருந்தால் அது தவறான செயல்.  ஆனால், அப்படி தன்னிச்சையாக சர்வதேச அரங்கில் கூறியிருந்தாரா அல்லது பத்திரிகையாளர் சந்திப்பில் அவர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கையில் அப்படி கூறியிருந்தாரோ,  அல்லது தமிழர் அமைப்புகளுடன் பேசும் போது  மட்டும் அதைக் கூறினாரோ   என்பது குறித்த எந்த தெளிவான செய்தியோ ஆதாரங்களோ இல்லை.  மக்களின் பணத்தை சுருட்டிய புலம் பெயர் திருட்டு தேசியவாதிகளினது கூற்றுகளை மட்டும் வைத்து இதை எடை போட முடியாது. 

உங்களை போல் சாதாரண கருத்தாளர் இல்லை சுமந்திரன். அவர் தன் மனைவியிடம் கூட ஒரு அரசியல் விடயத்தை பொதுவெளியில் வைத்து கூறினால் - அது எல்லோரு காதுக்கும் போகும்.

சுமந்திரன் பல பொதுவெளிகளில் இப்படியான பேய்கதைகளை கதைத்துள்ளமைக்கு போதிய ஆதராம் உள்ளது. யாழில் திரிகளே ஓடியுள்ளது.

வேறொன்றும் இல்லை - சுமந்திரனுக்கு தான் ஒரு player, commentator அல்ல என்பது கடைசிவரை புரியவில்லை.

கொமெண்டேட்டர் போல் வாயைவிட்டு தன் டீமுக்கு ஆப்பை செருகிகொண்டார்.

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
16 hours ago, island said:

நீங்கள் கூறியது உண்மையானால், நடைமுறை சாத்தியமான தீர்வுகளைப்  பற்றி பேசிய மென்போக்கு த்திழ் தேசியம் பேசிய  அரசியல்வாதிகளை துரோகிகள் பட்டம் சூட்டி ஒதுக்கி விட்டு  வரட்டு தேசியம் பேசிய சைக்கிள் தரப்பை புலம் பெயர் தேசியவாதிகள் ஆதரித்தது ஏன்?  

ஶ்ரீலங்காவில் கடும் போக்கு மகிந்த, கோட்டபாய போன்றோர் பதவிக்கு வருவதை விரும்பியது ஏன்?   ஒப்பீட்டு ரீதியில் சற்றே மென்போக்கு கொண்ட,  ஆனால் அநுரா போல் அல்லாமல் தமிழரின் அடையாளத்தை ஏற்றுக்கொண்ட ஶ்ரீலங்கா அரச  தரப்புகளைக் கூட  கடுமையாக எதிர்தத்துடன்   கடும்போக்கு தரப்புகள் வந்து தமிழ்  மக்களை அடக்குவதே தேசியத்துக்கு நல்லது என்று புலம் பெயர் தரப்புகள் விரும்பியது  ஏன்? ( யாழில் கூட  அது  எழுதப்பட்டது ஞாபகம் உள்ளது.) 

அட ஏன் அங்கே எல்லாம் போகிறீர்கள்…பலர் யாழில் மானசீக தேர்தலில் சைக்கிளுக்கு போட்டு விட்டு, இப்போ அனுரவுக்கு அவகாசம் கொடுக்கலாம் என எழுதுகிறனர்.

ஆனால் இதுவரை அழிவை தரும் தேர்வுகளை (கோட்டா 2019 நியாபகம் இருக்கலாம்) தேடி, தேடி ஆதரித்த இவர்கள், இப்போ அனுரவை தேர்தலின் பின் ஆதரிப்பது, ஒரு வழியாக சைக்கிள் கோஸ்டி டைப், கிடைக்கவே முடியாத வன் தமிழ் தேசியத்தில் இருந்து இவர்கள் விடுபடுவதற்கான அறிகுறி என்றே நான் கருதுகிறேன்.

ஆனால் என்ன வன்-தமிழ் தேசியத்தில் இருந்து நேராக இண்டர் சிட்டியை பிடித்து பிக்கு காலில் போய் விழப்பார்கிறார்கள்.

இடையில் ரயில நிப்பாட்டி இவர்களை மென்- தமிழ் தேசிய பஸ்சில் ஏற்றலாம் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது.

இது யாழ்களத்தில் மட்டும் அல்ல, வெளியிலும். 

Edited by goshan_che
  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
16 hours ago, goshan_che said:

இல்லை நீங்கள் யாழில் தமிழரிடையே எழுதுவதால் அதை வெளியார் காண்பார்கள் என நான் எழுதவில்லை.

ஆனால் குறைந்தது 60% எமது மக்கள் புலிகளின் ஆதரவாளர்கள்.

புலிகளின் தவறுகளை மீள, மீள உரைப்பது அவர்களோடு நீங்கள் சேர்ந்தியங்கும் வாய்ப்பை பாதிக்கும். இது அடிப்படை மனித மனோவியல்.

60% இன் உதவி இல்லாமல் தீர்வை அடைய முடியாது.

இந்தவகையில் இந்த மீள, மீள, மீள உரைத்தல், இந்த இனத்தின் ஒற்றுமைக்கு, தீர்வுக்கு ஒரு இடைஞ்சல்தான்.

நீங்கள் கூறிய இந்த Supporters கள்   போற்றிப் புகழுவது போல் பாசாங்கு செய்து  தமது சுயநல அரசியலை வளர்தது கொள்கிறார்களே தவிர நீங்கள் கூறியதைப் போல் அரசியல் தீர்வு முயற்சியில் கிஞ்சித்தும் முன் நகரவில்லை. அதை செய்யும் திறமையும் இவர்களுக்கு இல்லை. 

இந்த Supports தங்களது  அரசியல் கொள்கைகளுடனும்,  அவர்கள் தற்போது செய்துவரும் அரசியல் மூலமோ இவர்களால் இலங்கையில் எந்த அரசியல் தீர்வையும் காணமுடியாது மட்டுமல்ல அதை நெருங்கக் கூட முடியாது.    அரசியலமைப்பு மூலமான எந்த தீர்வும் இலங்கையில் வாழும் பெரும்பான்மை சமூகமான சிங்கள மக்களின் ஒத்துழைப்புடன் மட்டுமே சாத்தியம். உலக நாடுகள் கூட அதையே வலியுறுத்தும். புலிகள் பலமாக இருக்கும் போதே உலக நாடுகள் அதையே வலியுறுத்தின என்பது உங்களுக்கும் தெரியும். அப்படி இருக்கும் போது இன்றைய டுபாக்கூர் அமைப்புகளின் நிலை எப்படி இருக்கும்.  நாம் விரும்புகிறோமோ இல்லையோ அதுவே reality. 

இதற்கு தமிழர் சார்பில் Neutral ஆன தமிழ் அமைப்புகள் மூலம் மக்களின் அபிலாசைகள் நியாயப்பாடுகள்,  பாதிப்புக்கள் குறித்த தெளிவான  பரப்புரைகளை பெரும்பான்மை  மக்கள் மத்தியிலும் செய்து அவர்களின் ஆதரவுடனேயே நிரந்தரமான  அரசியல் தீர்வை காண முடியும். இந்த Supporters  களுக்கு தமிழ் மக்களின் நல்வாழ்வில் உண்மையான அக்கறை இருந்தால் தங்கள் லூசுத்தனமான அரசியலை விடுத்து  இப்படியான  neutral அமைப்புகளுடன்  இணைந்து வேலை செய்து மக்களின் நன்மைக்கான பங்களிப்பினை வழங்கலாம். 

மற்றப்படி  Supports இன் சொந்த  அரசியல் என்பது குண்டு சட்டிக்குள் குதிரையோட்டும் பயன்றற அரசியலே.  

2009 க்கு முன்னரான Supporters என்பது புலிகளை இராணுவரீதியில்  பலப்படுத்துவதன் மூலம் தமிழரின் அரசியல் பலத்தை உயர்த்தி ஓரு நியாயமான அரசியல் தீர்வை காணவேண்டும் என்ற அவாவின் அடிப்படையில் பரவலாக  உருவானது. அது புலிகளுக்கு பலத்தை வழங்கியது.  ஆனால்,   இன்றைய Supporters இன் நோக்கம், “ போற்றிப் பாடடி பெண்ணே தேவர் காலடி மண்ணே” என்ற ரேஞ்சில் மட்டுமே உள்ளதேயொழிய  எந்த தெளிவான அறிவுசார் அரசியல் மயப்பட்டதல்ல. அவ்வாறான அறிவுசார் அரசியலில் அவர்களில் பெரும்பான்மையினர் வளர்தெடுக்கப்படவும் இல்லை. அவர்களும் என்ன செய்வார்கள் வச்சுக்கோண்டா வஞ்சகம் செய்கிறார்கள்.  

  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 2/12/2024 at 09:49, island said:

நிற்க, புலிகள் செய்த குற்றங்களை தமிழ் மக்கள் செய்ததாக எடுத்து கொள்ள வேண்டியதில்லை, தமிழ்  மக்களுக்கும் இதற்கும் ஒரு தொடர்பும் இல்லை. புலிகளின் தவறுகளை தூக்கி சுமக்க வேண்டிய தேவை தமிழ் மக்களுக்கு இல்லை என்ற உங்களுடைய கருத்தை வரவேற்கிறேன்.  உண்மையில் மிக சிறந்த உலக அரசியல் தெளிவு கொண்ட பாரவை அது.  ஆனால், உங்களுடைய இந்த தெளிவு ஐநாவில் மனித உரிமை கூட்டங்களில் அரசு சார்பற்ற  தமிழர் அமைப்புகள்  சார்பாக யுத்தக்குற்றங்கள் பற்றி சர்வதேச ராஜதந்திரிகளுடன்  கடந்த 15 வருடங்களாக பேசுவதாக கூறிவரும் தமிழர் அமைப்புகளுக்கு உள்ளதா?   நான் பார்த்தளவில் ஐநாவில் தமிழர் சார்பாக செல்வோர் எல்லாம் நீங்கள் கூறியதைப் போல் தெளிவான சிந்தனையுடன் குறைந்தது வெளிப்பார்வைக்காவது தம்மை மக்களின் பிரதிநிதிகளாக  நடந்து கொள்வதில்லை. கிட்டத்தட்ட புலிகளின்  பேச்சாளர்கள் போலவே அவர்கள் நடந்து கொள்ளும் போது இங்கு  நீங்கள் கூறியது எப்படி சாத்தியமாகும்?

இதை எப்படி கோசான் சொல்லுவார் ..நீங்கள் எப்படி அதை ஆதரிக்கிறீர்கள்?....யுத்தம் நடக்கும் போது நிதியுதவி முதல் கொண்டு அனைத்து உதவிகளும் புலிகளுக்கு செய்து விட்டு ,சகல நாடுகளிலும் உள்ள பாராளுமன்றம் போய் நின்று நாங்கள் தான் புலிகள் ,புலிகள் தான் நாங்கள் என்று கத்தி விட்டு எல்லாம் முடிந்த பின் நாங்கள் பொறுப்பேற்கத் தேவையில்லை  என்றால் அது எப்படி சரியாகும்?

முதலாவது பந்தி சரியாய்த் தான் எழுதி இருக்கிறீர்கள் 
 
  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 minute ago, ரதி said:

மீண்டும் க‌ண்ட‌து ம‌கிழ்ச்சி அக்கா.............................

  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
11 minutes ago, ரதி said:

இதை எப்படி கோசான் சொல்லுவார் ..நீங்கள் எப்படி அதை ஆதரிக்கிறீர்கள்?....யுத்தம் நடக்கும் போது நிதியுதவி முதல் கொண்டு அனைத்து உதவிகளும் புலிகளுக்கு செய்து விட்டு ,சகல நாடுகளிலும் உள்ள பாராளுமன்றம் போய் நின்று நாங்கள் தான் புலிகள் ,புலிகள் தான் நாங்கள் என்று கத்தி விட்டு எல்லாம் முடிந்த பின் நாங்கள் பொறுப்பேற்கத் தேவையில்லை  என்றால் அது எப்படி சரியாகும்?

முதலாவது பந்தி சரியாய்த் தான் எழுதி இருக்கிறீர்கள் 
 
மீள் வரவுக்கும் கருத்துக்கும் நன்றிகள். 

  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
56 minutes ago, ரதி said:

இதை எப்படி கோசான் சொல்லுவார் ..நீங்கள் எப்படி அதை ஆதரிக்கிறீர்கள்?....யுத்தம் நடக்கும் போது நிதியுதவி முதல் கொண்டு அனைத்து உதவிகளும் புலிகளுக்கு செய்து விட்டு ,சகல நாடுகளிலும் உள்ள பாராளுமன்றம் போய் நின்று நாங்கள் தான் புலிகள் ,புலிகள் தான் நாங்கள் என்று கத்தி விட்டு எல்லாம் முடிந்த பின் நாங்கள் பொறுப்பேற்கத் தேவையில்லை  என்றால் அது எப்படி சரியாகும்?

முதலாவது பந்தி சரியாய்த் தான் எழுதி இருக்கிறீர்கள் 
 
ஏன் முடியாது?

முரளிதரன் கட்டளை தளபதியாக இருந்து விட்டு….இப்போ நடந்ததுக்கும் எனக்கும் சம்பந்தம் இல்லை என நழுவ முடியும் எண்டால்….

கொடி பிடித்தவர்கள் அதை ஈசியாக விலத்தி நடக்கலாம்.

கூடவே என்போன்ற கொடிபிடிக்காதோரும் அந்த இடங்களில் நிண்டோம் அல்லாவா. 

ஆகவே அதில் ஈடுபட்ட அனைவரும் புலி ஆதரவாளர் அல்ல.

புலிகளின் ஆதரவாளர் கூட போர் ஓய்வின் பின் நாம் வேறு பதாகையின் கீழ், சமஸ்டி நோக்கி போராடுகிறோம் என சொல்லி, நிலைப்பாட்டை மாற்றலாம்.

இது ஒன்றும் பெரிய விடயமல்ல. உலகில் பல இடங்களில் நடப்பதுதான்.

ஐ ஆர் ஏ செய்த அத்தனைக்கும் தமக்கும் சம்பந்தமே இல்லை என் சின்பெயின் கூறவில்லையா? அதுதான் எடுபடவில்லையா?

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
1 hour ago, island said:

நீங்கள் கூறிய இந்த Supporters கள்   போற்றிப் புகழுவது போல் பாசாங்கு செய்து  தமது சுயநல அரசியலை வளர்தது கொள்கிறார்களே தவிர நீங்கள் கூறியதைப் போல் அரசியல் தீர்வு முயற்சியில் கிஞ்சித்தும் முன் நகரவில்லை. அதை செய்யும் திறமையும் இவர்களுக்கு இல்லை. 

இந்த Supports தங்களது  அரசியல் கொள்கைகளுடனும்,  அவர்கள் தற்போது செய்துவரும் அரசியல் மூலமோ இவர்களால் இலங்கையில் எந்த அரசியல் தீர்வையும் காணமுடியாது மட்டுமல்ல அதை நெருங்கக் கூட முடியாது.    அரசியலமைப்பு மூலமான எந்த தீர்வும் இலங்கையில் வாழும் பெரும்பான்மை சமூகமான சிங்கள மக்களின் ஒத்துழைப்புடன் மட்டுமே சாத்தியம். உலக நாடுகள் கூட அதையே வலியுறுத்தும். புலிகள் பலமாக இருக்கும் போதே உலக நாடுகள் அதையே வலியுறுத்தின என்பது உங்களுக்கும் தெரியும். அப்படி இருக்கும் போது இன்றைய டுபாக்கூர் அமைப்புகளின் நிலை எப்படி இருக்கும்.  நாம் விரும்புகிறோமோ இல்லையோ அதுவே reality. 

இதற்கு தமிழர் சார்பில் Neutral ஆன தமிழ் அமைப்புகள் மூலம் மக்களின் அபிலாசைகள் நியாயப்பாடுகள்,  பாதிப்புக்கள் குறித்த தெளிவான  பரப்புரைகளை பெரும்பான்மை  மக்கள் மத்தியிலும் செய்து அவர்களின் ஆதரவுடனேயே நிரந்தரமான  அரசியல் தீர்வை காண முடியும். இந்த Supporters  களுக்கு தமிழ் மக்களின் நல்வாழ்வில் உண்மையான அக்கறை இருந்தால் தங்கள் லூசுத்தனமான அரசியலை விடுத்து  இப்படியான  neutral அமைப்புகளுடன்  இணைந்து வேலை செய்து மக்களின் நன்மைக்கான பங்களிப்பினை வழங்கலாம். 

மற்றப்படி  Supports இன் சொந்த  அரசியல் என்பது குண்டு சட்டிக்குள் குதிரையோட்டும் பயன்றற அரசியலே.  

2009 க்கு முன்னரான Supporters என்பது புலிகளை இராணுவரீதியில்  பலப்படுத்துவதன் மூலம் தமிழரின் அரசியல் பலத்தை உயர்த்தி ஓரு நியாயமான அரசியல் தீர்வை காணவேண்டும் என்ற அவாவின் அடிப்படையில் பரவலாக  உருவானது. அது புலிகளுக்கு பலத்தை வழங்கியது.  ஆனால்,   இன்றைய Supporters இன் நோக்கம், “ போற்றிப் பாடடி பெண்ணே தேவர் காலடி மண்ணே” என்ற ரேஞ்சில் மட்டுமே உள்ளதேயொழிய  எந்த தெளிவான அறிவுசார் அரசியல் மயப்பட்டதல்ல. அவ்வாறான அறிவுசார் அரசியலில் அவர்களில் பெரும்பான்மையினர் வளர்தெடுக்கப்படவும் இல்லை. அவர்களும் என்ன செய்வார்கள் வச்சுக்கோண்டா வஞ்சகம் செய்கிறார்கள்.  

எப்படி சிங்களவர் (மட்டும் அல்ல முஸ்லிம்களும்) ஓம்படாமல் தீர்வை நாட்டில் எட்ட முடியாது என்பது உண்மையோ…

அதே போல் புலத்தில் இருக்கும் நீங்கள் சொல்லும் சப்போர்டசை விலத்தி இங்கே ஒரு பெரிய அளுத்தத்தை பெற முடியாது.

மேலும் அவர்களை போலவே நீங்களும் prisoner of your past அதாவது கடந்த கால கசப்பான அனுபவங்களின் கைதியாக இருக்கிறீர்கள்.

அருச்சுனா சொன்னது போல் இதுதான் கடைசி சந்தர்ப்பம்.

இதை கஜனும் சிறியும் விழங்கிகொண்டது போல்…

ஒவ்வொரு புலம்பெயர் ஐலண்ட்டும், குமாரசாமியும், தமிழ் சிறியும் விளங்கி ஒரே முகமாக செயல்பட்டால் எதையாவது முயலாலாம்.

இல்லை, இனம் உரிமையோடு வாழாவிட்டாலும் பரவாயில்லை பழைய கறளைத்தீர்ப்பதே இலக்கு என்றால் - உங்கள் இஸ்டம்.

Edited by goshan_che
  • Thanks 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 minutes ago, goshan_che said:

எப்படி சிங்களவர் (மட்டும் அல்ல முஸ்லிம்களும்) ஓம்படாமல் தீர்வை நாட்டில் எட்ட முடியாது என்பது உண்மையோ…

அதே போல் புலத்தில் இருக்கும் நீங்கள் சொல்லும் சப்போர்டசை விலத்தி இங்கே ஒரு பெரிய அளுத்தத்தை பெற முடியாது.

மேலும் அவர்களை போலவே நீங்களும் prisoner of your past அதாவது கடந்த கால கசப்பான அனுபவங்களின் கைதியாக இருக்கிறீர்கள்.

அருச்சுனா சொன்னது போல் இதுதான் கடைசி சந்தர்ப்பம்.

இதை கஜனும் சிறியும் விழங்கிகொண்டது போல்

ஒவ்வொரு புலம்பெயர் ஐலண்ட்டும், குமாரசாமியும், தமிழ் சிறியும் விளங்கி ஒரே முகமாக செயல்பட்டால் எதையாவது முயலாலாம்.

இல்லை, இனம் உரிமையோடு வாழாவிட்டாலும் பரவாயில்லை பழைய கறளைத்தீர்ப்பதே இலக்கு என்றால் - உங்கள் இஸ்டம்.

ஒரு செயற்பாட்டாளனின் முதல் அடி, முதல் கரிசனை அல்லது முதல் யுக்தி இது தான். நன்றி சகோ. 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
18 minutes ago, goshan_che said:

எப்படி சிங்களவர் (மட்டும் அல்ல முஸ்லிம்களும்) ஓம்படாமல் தீர்வை நாட்டில் எட்ட முடியாது என்பது உண்மையோ…

அதே போல் புலத்தில் இருக்கும் நீங்கள் சொல்லும் சப்போர்டசை விலத்தி இங்கே ஒரு பெரிய அளுத்தத்தை பெற முடியாது.

மேலும் அவர்களை போலவே நீங்களும் prisoner of your past அதாவது கடந்த கால கசப்பான அனுபவங்களின் கைதியாக இருக்கிறீர்கள்.

அருச்சுனா சொன்னது போல் இதுதான் கடைசி சந்தர்ப்பம்.

இதை கஜனும் சிறியும் விழங்கிகொண்டது போல்…

ஒவ்வொரு புலம்பெயர் ஐலண்ட்டும், குமாரசாமியும், தமிழ் சிறியும் விளங்கி ஒரே முகமாக செயல்பட்டால் எதையாவது முயலாலாம்.

இல்லை, இனம் உரிமையோடு வாழாவிட்டாலும் பரவாயில்லை பழைய கறளைத்தீர்ப்பதே இலக்கு என்றால் - உங்கள் இஸ்டம்.

இதில் எழுதி ஒரு பயனுமில்லையானாலும், உங்கள் புலத்தமிழர் ஒற்றுமை பற்றிய வியாக்கியானம் கொஞ்சம் திசை மாறிப் போகும் போது சொல்ல வேண்டியிருக்கிறது. இந்த தீவிரமான புலிகளின் ஆதரவாளர்களை விலக்கி விட்டு புலத்தில் பெரிதாக ஒன்றும் செய்ய முடியாது என்பது உண்மையாக இருக்கலாம் (செய்வது என்ன, பேசினாலே குடும்பம், பிள்ளை குட்டிகளை இழுத்துப் பேசி நமக்கேன் வம்பு என பேசாமல் விலகிப் போக வைத்து விடுவர்😂).

இத்தகைய தீவிரவாத போக்கு என்பது புலிகள் மீதான அதீத பற்றினால் அன்றி ஒரு சுய இருத்தல் பற்றிய பயத்தினால் வருகிறது என ஐலண்ட் சொல்வது என் அனுபவத்தில் சரியாகப் படுகிறது. இதனால் தான் தீவிர தமிழ் தேசியர்கள் என்றாலே பலர் விலகிச் செல்கிறார்கள். இப்படியானவர்களை வைத்துக் கொண்டு ஒரு சுயாட்சி கிடைத்தால் கூட, அந்த ஆட்சி சுதந்திரம் பெற்ற  எரித்திரியாவில் தற்போது நடக்கும் கடும்போக்கு/பிற்போக்கு வாத ஆட்சியாகத் தான் இருக்கும் என்ற அச்சமும் எனக்கு தனிப்பட இருக்கிறது.

எனவே, என்னைப் பொறுத்தவரை தீவிர தமிழ் தேசியர்களின் பங்கு தாயக அரசியலிலும் சரி, புலத் தமிழர் பரப்பிலும் சரி குறைக்கப் பட வேண்டும். இது கறள் தீர்க்கும் மன நிலை அல்ல, எதிர்காலம் பற்றிய அச்சமும், அதை இப்பவே களையும் முயற்சியும் என்று தான் நான் கருதுகிறேன்.

  • Like 1

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.