Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கஜேந்திரகுமார் பொன்னம்பலம்-சிறீதரன் சந்திப்பு; தீர்வு விடயத்தை ஒரு பொதுவேலைத்திட்டத்தின் ஊடாக அணுகுவதற்கும் இணக்கம்

நாடாளுமன்ற உறுப்பினர்களான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் சிவஞானம் சிறீதரன் ஆகியோருக்கு இடையில் சிநேகபூர்வ சந்திப்பு ஒன்று ஞாயிற்றுக்கிழமை மாலை இடம்பெற்றுள்ளது.

நடைபெற்று முடிந்த பொதுத்தேர்தல் முடிவுகளை அடுத்து, எதிர்வரும் காலங்களிலாவது தமிழ்த் தேசிய அரசியல் கட்சிகள் தமிழ் மக்களின் நலனை முன்னிறுத்தி ஒன்றுபட்டு பயணிக்க வேண்டும் என்ற விடயம் பல்வேறு தரப்பினராலும் வலியுறுத்தப்பட்டு வருகின்ற நிலையில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

அரசாங்கத்தினால் கொண்டுவரப்படும் புதிய அரசியலமைப்பில் தமிழ் மக்களின் அபிலாஷைகளைப் பூர்த்திசெய்யக்கூடிய வகையில் சமஷ்டி அடிப்படையிலான தீர்வு உள்வாங்கப்பட வேண்டியதன் அவசியம் குறித்தும், அதனை இலக்காகக் கொண்டு அடுத்தகட்டமாக முன்னெடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் இருதரப்பினரும் இதன்போது ஆராய்ந்துள்ளனர்.

அதேபோன்று தமிழ் மக்கள் பேரவையினால் தயாரிக்கப்பட்ட தீர்வுத்திட்டத்தை கஜேந்திரகுமார் சிறீதரனிடம் கையளித்தார். அத்தோடு ரொமேஷ் டி சில்வா தலைமையிலான குழுவிடம் தமிழ்த்தேசிய கூட்டமைப்பினால் முன்வைக்கப்பட்ட யோசனைகள் பற்றி இதன்போது சிறீதரன் எடுத்துரைத்தார்.

அது மாத்திரமன்றி, தமிழர்களுக்கான தீர்வு விடயத்தை ஒரு பொதுவேலைத்திட்டத்தின் ஊடாக அணுகவேண்டும் என்ற கொள்கை ரீதியான நிலைப்பாடு தொடர்பில் இருதரப்பினரும் தமது இணக்கத்தை வெளிப்படுத்தினர்.

https://thinakkural.lk/article/313035

  • Replies 103
  • Views 5.8k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Most Popular Posts

  • என்னைக் கேட்டால் (அவர் கேட்கப் போவதில்லை😂), சுமந்திரன் இவையெதுவும் செய்யாமல் விலகி இருப்பது தான் அவர் செய்ய வேண்டியதென்பேன். ஏனெனில், சுமந்திரனைக் கவனிக்காமல் விட்டிருந்தால் கூட பரவாயில்லை.  பொய்ச் செ

  • தமிழ் சிறி
    தமிழ் சிறி

    நீங்கள், கண்ணாடிக்கு முன் நின்று பேசிக் கொண்டு இருக்கின்றீர்கள். 🤣

  • ஒட்டு மொத்த தேசியம் பேசிய கட்சிகளை மக்கள் நிராகரித்துள்ளார்கள்.  அதிலும் வரட்டு தமிழ் தேசியம் பேசும் சைக்கிள் கட்சி  பெற்ற வாக்குகள் ஒட்டு மொத்தமாக அகில இலங்கை ரீதியாக 39894 மட்டுமே.  படு தோல்வி. 

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல விடயம். அனைவரும் இது குறித்து சிந்திக்கவேண்டும். 

  • கருத்துக்கள உறவுகள்

சந்தோசம்.

இதை வரவேற்று இப்போதைக்கு பொதுவெளியில் இவர்கள் இருவரையும் கடுமையாக விமர்சிப்பதை தவிர்கிறேன்.

டில்வின் மா.சபை முறை கலைக்கப்படும் என கூறியதற்கு,  சபையில் விளக்கம் கேட்ட சாணாக்ஸ்.

விளக்கம் ஏதும் கொடாமல், சிறிதரனுடன் சாணக்கியனும் அனுர வை சந்தித்து கேட்கலாம் என பதில் சொன்ன பிமால் ரத்நாயக்க.

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, goshan_che said:

சந்தோசம்.

இதை வரவேற்று இப்போதைக்கு பொதுவெளியில் இவர்கள் இருவரையும் கடுமையாக விமர்சிப்பதை தவிர்கிறேன்.

இதனை பார்க்கும்போது மக்களின் தீர்ப்பு சுட்ட பாடமாக இருந்தாலும் சுமந்திரன் ஒரு தடையாக இதுவரை இருந்திருக்கலாம் என்றும் பார்க்கலாம் அல்லவா. (உண்மையில் இதை விவாதத்திற்காக திசை திருப்ப முயலவில்லை) 

சுமந்திரனும் இதற்குள் கொண்டு வரப் படவேண்டும் என்பது தான் எனது தனிப்பட்ட கருத்து. 

Edited by விசுகு
எழுத்துப்பிழை

  • கருத்துக்கள உறவுகள்
Just now, விசுகு said:

இதனை பார்க்கும்போது மக்களின் தீர்ப்பு சுட்ட பாடமாக இருந்தாலும் சுமந்திரன் ஒரு தடையாக இருந்திருக்கலாம் என்றும் பார்க்கலாம் அல்லவா. (உண்மையில் இதை விவாதத்திற்காக திசை திருப்ப முயலவில்லை) 

சுமந்திரனும் இதற்குள் கொண்டு வரப் படவேண்டும் என்பது தான் எனது தனிப்பட்ட கருத்து. 

இரெண்டுமே காரணங்கள்.

மேலும் இரு காரணங்கள்:

தன் அதி தீவிர அரசியல் இன நலனை பாதிப்பதை கஜன் காலம் தாழ்தியாவது உணர்ந்திருக்கலாம் (மாற்றம் எப்போதும் நல்லதே). 

தான் இயலுமைக்கு அப்பாலான, சுமக்க முடியாத ஒரு சுமையை வாண்டடாக தலையில் ஏற்றி கொண்டேன் என்பதை சிறி உணர்ந்திருக்கலாம்.

இதில் சுமந்திரன் இப்போதைக்கு தேவையில்லை என நினைக்கிறேன்.

அவரது personality அரசியலுக்கு சரிவராது.

சாணாக்ஸ் உள்ளே வரவேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்
55 minutes ago, goshan_che said:

இந்த உறவு அல்லது அரவணைப்பு இனம் சார்ந்து தூர நோக்கோடு இருக்கும் என்று நம்புகிறேன். மாறாக அரசியல் வஞ்சத்தை (சுமந்திரனுக்கு எதிராக எதிரிக்கு எதிரி நண்பன்) என்பதாக இருந்து விடக்கூடாது என்றும் நம்புகிறேன். 

Edited by விசுகு
எழுத்துப்பிழை

  • கருத்துக்கள உறவுகள்
57 minutes ago, விசுகு said:

சுமந்திரனும் இதற்குள் கொண்டு வரப் படவேண்டும் என்பது தான் எனது தனிப்பட்ட கருத்து. 

இவ்வளவு காலமும்...  சம்பந்தன்  சுமந்திரன் இருந்த படியால்தான்... 
கஜேந்திரக்குமார் இதில் ஆர்வம் காட்டவில்லை என்பது ஊரறிந்த ரகசியம். 🙂

சுமந்திரன் வந்தால்.... கஜேந்திரகுமார் வெளியேறுவார்.
எது உங்களுக்கு விருப்பம் என்று, ஒரு முடிவுக்கு வாங்கோ விசுகர். 😂

வேலியிலை போன  ஓணானை, திரும்பவும் பிடித்து வேட்டிக்குள் விடாதீங்க. 😜
பட்டது போதும், பட்டினத்தாரே...  🤣

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்
40 minutes ago, விசுகு said:

இந்த உறவு அல்லது அரவணைப்பு இனம் சார்ந்து தூர நோக்கோடு இருக்கும் என்று நம்புகிறேன். மாறாக அரசியல் லஞ்சத்தை (சுமந்திரனுக்கு எதிராக எதிரிக்கு எதிரி நண்பன்) என்பதாக இருந்து விடக்கூடாது என்றும் நம்புகிறேன். 

தமிழினத்தின் ஒரு பகுதி வீசிய வாக்குச்சாட்டையடியின் பின்னாவது சிந்திக்காவிடின் இவர்கள் தமிழருக்கான அரசியல்வாதிகளல்ல என்பதை உறுதிப்படுத்தும்.
நட்பார்ந்த நன்றியுடன்
நொச்சி    
 
  • கருத்துக்கள உறவுகள்

சிச்சுவேசன் சாங்  

🤣

Edited by Kapithan

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, தமிழ் சிறி said:

இவ்வளவு காலமும்...  சம்பந்தன்  சுமந்திரன் இருந்த படியால்தான்... 
கஜேந்திரக்குமார் இதில் ஆர்வம் காட்டவில்லை என்பது ஊரறிந்த ரகசியம். 🙂

சுமந்திரன் வந்தால்.... கஜேந்திரகுமார் வெளியேறுவார்.
எது உங்களுக்கு விருப்பம் என்று, ஒரு முடிவுக்கு வாங்கோ விசுகர். 😂

வேலியிலை போன  ஓணானை, திரும்பவும் பிடித்து வேட்டிக்குள் விடாதீங்க. 😜
பட்டது போதும், பட்டினத்தாரே...  🤣

பொறுமை பொறுமை ராசா 

என்ன நடக்கிறது என்று பார்ப்போம். 

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, தமிழ் சிறி said:

இவ்வளவு காலமும்...  சம்பந்தன்  சுமந்திரன் இருந்த படியால்தான்... 
கஜேந்திரக்குமார் இதில் ஆர்வம் காட்டவில்லை என்பது ஊரறிந்த ரகசியம். 🙂

சுமந்திரன் வந்தால்.... கஜேந்திரகுமார் வெளியேறுவார்.
எது உங்களுக்கு விருப்பம் என்று, ஒரு முடிவுக்கு வாங்கோ விசுகர். 😂

கஜேந்திரகுமார் ஊருக்காக உழைக்கும் உத்தமர் என்கிறீர்கள்? 

🤣

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, Kapithan said:

கஜேந்திரகுமார் ஊருக்காக உழைக்கும் உத்தமர் என்கிறீர்கள்? 

🤣

ஆம். அதில் என்ன சந்தேகம்.    😂
சுமந்திரனை விட... பத்தாயிரம் மடங்கு திறம். 🤣

இதற்குள் சுமந்திரன் வந்தால்.... நான் திரும்பவும் அரசியலில் குதிக்க வேண்டி வரும். animiertes-gefuehl-smilies-bild-0090

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, தமிழ் சிறி said:

இவ்வளவு காலமும்...  சம்பந்தன்  சுமந்திரன் இருந்த படியால்தான்... 
கஜேந்திரக்குமார் இதில் ஆர்வம் காட்டவில்லை என்பது ஊரறிந்த ரகசியம். 🙂

சுமந்திரன் வந்தால்.... கஜேந்திரகுமார் வெளியேறுவார்.
எது உங்களுக்கு விருப்பம் என்று, ஒரு முடிவுக்கு வாங்கோ விசுகர். 😂

வேலியிலை போன  ஓணானை, திரும்பவும் பிடித்து வேட்டிக்குள் விடாதீங்க. 😜
பட்டது போதும், பட்டினத்தாரே...  🤣

இவர்கள் 

சந்திப்பது = சந்திக்கமால். இருப்பது 

இதனாலெல்லாம் எந்தவொரு மாற்றங்களும் ஏறபட்டுவிடாது   

இவர்கள் பதவியை விட்டுட்டு  ஓய்வெடுத்தாலல். பற்றி கதைத்திருந்தால். பிரயோஜனமானது    புதியவர்கள்  வரட்டும். புதிய சிந்தனைகளுடன்.  இவர்களுக்கு கால மாற்றங்களுக்கு எற்ப. சிந்திக்க தெரியாது   பழைய கதைகளை பாராளுமன்றத்தில் கதைப்பவர்கள்   என்னத்த சாதிக்க முடியும்?? 🙏

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, தமிழ் சிறி said:

ஆம். அதில் என்ன சந்தேகம்.    😂
சுமந்திரனை விட... பத்தாயிரம் மடங்கு திறம். 🤣

இதற்குள் சுமந்திரன் வந்தால்.... நான் திரும்பவும் அரசியலில் குதிக்க வேண்டி வரும். animiertes-gefuehl-smilies-bild-0090

சுமந்திரனின் புலமை தீர்வுத் திட்டத்திற்கு உதவலாம் என்று சிலர் கூறும்போது தாங்களோ சும் வந்தால் கஜன் வெளியேறுவார் (தனிப்பட்ட விருப்பின் அடைப்படையில் ),  அதனால் சுமந்திரனது புலமை மக்களுக்குப்  பயன்படாவிட்டாலும் பிரச்சனை இல்லை,  சும் உள்ளே வரக் கூடாது என்கிறீர்கள். 

உங்களைப் போன்ற டமில் தேசியவாதிகள்தான் இன்று எமக்குத் தேவை,.....🤣

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, விசுகு said:

இந்த உறவு அல்லது அரவணைப்பு இனம் சார்ந்து தூர நோக்கோடு இருக்கும் என்று நம்புகிறேன். மாறாக அரசியல் வஞ்சத்தை (சுமந்திரனுக்கு எதிராக எதிரிக்கு எதிரி நண்பன்) என்பதாக இருந்து விடக்கூடாது என்றும் நம்புகிறேன். 

கூட இருக்கும் எல்லோரையும் மட்டம் தட்டி கொண்டே இருக்கும் குணம்தான் சுமந்திரனை இந்த நிலைக்கு இறக்கி விட்டுள்ளது.

உண்மையில் மக்கள் இப்படி நிராகரித்தது அவருக்கு பலத்த பின்னடைவுதான்.

தோல்வியின் பின் அவர் தனியே இருந்து reflection செய்வாராயின், தன் குணவியல்பு அரசியலுக்கு ஏற்றதல்ல என்பதை விளங்கி விலகி கொள்வார் என எதிர்பார்க்கிறேன்.

குறுக்குசால் ஓட்டாமல், ஜனநாயகத்தை மதித்து, மக்கள் தேர்ந்த இருவர் இணைந்து அரசியலை முன்னெடுக்க சுமந்திரன் வழி விட்டு விலக வேண்டும்.

அரசியல்சட்ட விவகாரம் என்பது ஒன்றும் ராக்கெட் விஞ்ஞானம் அல்ல, திம்பு கோரிக்கை நேரம் இயக்கங்கள், அறிஞர் குழுக்களை அமைத்து ஒரு தெளிவான நிலைப்பாட்டை கண்டன.

அதில் சிவா பசுபதி போன்றோர் உதவினர் என நினைக்கிறேன்.

சுமந்திரனை தூக்கி சாப்பிடும் அளவுக்கு அரசியல் சட்டத்தை தனித்துறையாக எடுத்து படித்தவர்கள் எல்லாம் புலம்பெயர்தேசத்தில் இருக்கிறார்கள். தமிழ் நாடு, மலேசியா, சிங்கபூரிலும் உள்ளனர்.

ஆனால் எமக்கு இப்போ தேவை ஒரு நல்ல diplomat ஒரு நல்ல negotiator. 
இதை செய்பவர் கட்டாயம் எம்பியாக இருக்க வேண்டியதில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, கிருபன் said:

கஜேந்திரகுமார் பொன்னம்பலம்-சிறீதரன் சந்திப்பு

இரு மாபெரும் புத்திஜீவிகள் சந்திப்பு. இனி தமிழ் மக்களுக்கு விடிவுகாலம்தான் போங்கோ! 

தமிழ்க் கூட்டமைப்பை முதலில் பாராளுமன்ற கதிரைகளுக்காக உடைத்துக்கொண்டு முதலில் வெளியேறியவர் இந்த கஜே-கயே குழுத்தலைவர் கஜேந்திரகுமார். இது சுமந்திரன் வருவதற்கு முன் நிகழ்ந்தது. 

மக்களால் நிராகரிக்கப்பட்ட சுமந்திரன் அரசியலில் இருந்து ஒதுங்கிக்கொள்ளவேண்டும். மக்கள் தமக்குத் தேவையானவர்களைத் தெரிவுசெய்வார்கள். குறிப்பாக அர்ச்சுனா இராமநாதன் போன்றவர்களை அனுப்பியுள்ளார்கள். பிக்பாஸ் அதிகம் பார்ப்பதன் விளைவாகக் கூட இது இருக்கலாம்.  அநுர அரசு சமர்ப்பிக்கப் போகின்ற புதிய அரசிலமைபுத்தொடர்பாக  கஜே, பார் சிறீதரன், அருச்சுனா போன்ற புத்திஜீவிகள் மக்களுக்குப் போதிய விளக்கம் அளிப்பார்கள் அல்லது புரியவைப்பார்கள் என நம்பலாம். எனவே சுமந்திரன் தன்னை நிராகரித்த மக்களின் ஆணையைக் கருத்திற்கொண்டு இதுபற்றி வாளாதிருப்பதே சாலச் சிறந்தது!

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, வாலி said:

நோ நோ நோ,..... புலம்பெயர்ஸ் டமில்  புத்திய சீவினதுகள் பலரும் தற்போது சுமந்திரன் வேணும் எண்டு நிக்கினம். நீங்கள்  என்ன  விசர்க் கத கதைக்கிறியள்,..... அவங்கள் வேண்டாம் எண்டேக்க வரக் கூடாது. வேணும் எண்டேக்க வரவேணும் கண்டியளோ,....🤣

அதுக்குள்ள ஒரு கூக்குரல் வருகுது  புலம்பெயர் டமிலருக்குள்ளே சட்டத்துறையில் கலக்கிக் குடிச்ச ஆட்கள் பலர் இருக்கினமாம் எண்டு. 

கூரையேறிக் கோழி பிடிக்க முடியாத புலம்பெயர்ஸ் முட்டாள் டமில் தேசியவாதிகளைக் கொண்டு,  வானம் ஏறி வைகுண்டம் போகப் போற கனவை என்ன எண்டு சொல்லுறது ? 

போராட்ட ஆரம்ப காலம் தொடக்கம்,  புத்திசீவிகளை ஒதுக்கியும்,  கொலை செய்தும் வந்ததன் பலனை அறுவடை செய்யும் நாட்கள் நெருங்கி வருகின்றன என்பதைப் பலரும் உணரத் தலைப்படுகின்றனர். 

காலத்தே பயிர் செய் என்று காரணம் இன்றிக் கூறவில்லையே,.......

😏

Edited by Kapithan

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

உண்மையில் மக்கள் இப்படி நிராகரித்தது அவருக்கு பலத்த பின்னடைவுதான்.

தோல்வியின் பின் அவர் தனியே இருந்து reflection செய்வாராயின், தன் குணவியல்பு அரசியலுக்கு ஏற்றதல்ல என்பதை விளங்கி விலகி கொள்வார் என எதிர்பார்க்கிறேன்.

அவரும் தனது தவறுகளை உணர்ந்திருப்பார் என்றே நினைக்கிறேன். மீண்டும் எல்லோரும் ஒன்றாக கூட்டமைப்பை பலப்படுத்த வேண்டும் என்பதே எனது நிலைப்பாடு. நன்றி சகோ. (பச்சை கைவசம் இல்லை)

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

கூட இருக்கும் எல்லோரையும் மட்டம் தட்டி கொண்டே இருக்கும் குணம்தான் சுமந்திரனை இந்த நிலைக்கு இறக்கி விட்டுள்ளது.

உண்மையில் மக்கள் இப்படி நிராகரித்தது அவருக்கு பலத்த பின்னடைவுதான்.

தோல்வியின் பின் அவர் தனியே இருந்து reflection செய்வாராயின், தன் குணவியல்பு அரசியலுக்கு ஏற்றதல்ல என்பதை விளங்கி விலகி கொள்வார் என எதிர்பார்க்கிறேன்.

குறுக்குசால் ஓட்டாமல், ஜனநாயகத்தை மதித்து, மக்கள் தேர்ந்த இருவர் இணைந்து அரசியலை முன்னெடுக்க சுமந்திரன் வழி விட்டு விலக வேண்டும்.

அரசியல்சட்ட விவகாரம் என்பது ஒன்றும் ராக்கெட் விஞ்ஞானம் அல்ல, திம்பு கோரிக்கை நேரம் இயக்கங்கள், அறிஞர் குழுக்களை அமைத்து ஒரு தெளிவான நிலைப்பாட்டை கண்டன.

அதில் சிவா பசுபதி போன்றோர் உதவினர் என நினைக்கிறேன்.

சுமந்திரனை தூக்கி சாப்பிடும் அளவுக்கு அரசியல் சட்டத்தை தனித்துறையாக எடுத்து படித்தவர்கள் எல்லாம் புலம்பெயர்தேசத்தில் இருக்கிறார்கள். தமிழ் நாடு, மலேசியா, சிங்கபூரிலும் உள்ளனர்.

ஆனால் எமக்கு இப்போ தேவை ஒரு நல்ல diplomat ஒரு நல்ல negotiator. 
இதை செய்பவர் கட்டாயம் எம்பியாக இருக்க வேண்டியதில்லை.

இந்த வருடம்.... கோசான் எழுதிய கருத்துக்களில்,  மேலே உள்ளதுதான்... மிகச் சிறந்த கருத்து. 👍
இருக்கின்ற சூழ்நிலையை யதார்த்தமாக அணுகும் மனநிலை,  பலருக்கு இல்லை என்பது கவலையான விடயம். 

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, தமிழ் சிறி said:

இந்த வருடம்.... கோசான் எழுதிய கருத்துக்களில்,  மேலே உள்ளதுதான்... மிகச் சிறந்த கருத்து. 👍
இருக்கின்ற சூழ்நிலையை யதார்த்தமாக அணுகும் மனநிலை,  பலருக்கு இல்லை என்பது கவலையான விடயம். 

சாத்தான் வேதம் ஓதுதல் என்பது இதுதானோ,..🤣

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, Kapithan said:

சாத்தான் வேதம் ஓதுதல் என்பது இதுதானோ,..🤣

Spiegel GIF - Auf GIFER finden

நீங்கள், கண்ணாடிக்கு முன் நின்று பேசிக் கொண்டு இருக்கின்றீர்கள். 🤣

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, தமிழ் சிறி said:

Spiegel GIF - Auf GIFER finden

நீங்கள், கண்ணாடிக்கு முன் நின்று பேசிக் கொண்டு இருக்கின்றீர்கள். 🤣

தேர்தல் நேரம் தாங்கள் குத்தி முறிந்ததை மறைக்க முடியாது சிறியர். 

மாவீரர் வாரத்திற்குக் கூட தாங்கள் எட்டிப் பார்த்துவிட்டு ஓடி ஒழிந்துவிட்டீர்கள். உங்கள் உண்மை முகத்தை தாங்களே வெளிக்காட்டினீர்கள். யாம் அல்ல. 

நான்  மட்டுமல்ல இங்குள்ள எல்லோரும் எல்லாவற்றையும்  கவனித்துக்கொண்டே இருக்கிறார்கள். 

பூசணிக்காயைச் சோற்றிற்குள் அமுக்க முடியாது. 

😁

Edited by Kapithan

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, goshan_che said:

இதில் சுமந்திரன் இப்போதைக்கு தேவையில்லை என நினைக்கிறேன்.

அவரது personality அரசியலுக்கு சரிவராது.

சுமந்திரன் வெளியில் இருந்து பத்திரிகைகளுக்கு பேட்டிகள் கொடுக்காமல் தீர்வு முயற்சிக்கு உதவலாம்.

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, goshan_che said:

சாணாக்ஸ் உள்ளே வரவேண்டும்.

சாணக்ஸ்  உண்மையாகவா😇 .... நீங்கள் இப்படித் தான் சும்முக்கும் முந்தி முட்டுக் கொடுத்தனீங்கள் 
 
  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, goshan_che said:

சந்தோசம்.

இதை வரவேற்று இப்போதைக்கு பொதுவெளியில் இவர்கள் இருவரையும் கடுமையாக விமர்சிப்

8 hours ago, goshan_che said:

சந்தோசம்.

இதை வரவேற்று இப்போதைக்கு பொதுவெளியில் இவர்கள் இருவரையும் கடுமையாக விமர்சிப்பதை தவிர்கிறேன்.

எனக்கு அவர்கள் இணைந்து பேசுவதை விட நீங்கள் கூறிய இந்த விடயம் இரட்டிப்பு மகிழ்ச்சியை தருகிறது..நல்ல விடயம் விமர்சனம் என்ற போர்வையில் நானும் எனக்கே தெரியாமல் தமிழ் தேசியத்திற்கு விரோத கருத்துக்களை எழுதியிருக்கலாம்..

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.