Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கூடுதலான மொழியறிவு எம்மை மேம்படுத்த உதவும் என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்துள்ளார்.

சூரிய நிறுவகத்தின் ஏற்பாட்டில், இரண்டாம் மொழி சிங்கள கற்கைநெறியை பூர்த்தி செய்த யாழ்ப்பாணம் - கிளிநொச்சி மாவட்டங்களை சேர்ந்த மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

அத்துடன், இன ஐக்கியத்துக்காகவும், தேசிய ஒருமைப்பாட்டுக்காகவும், சிங்கள மக்கள் தமிழ் மொழியையும், தமிழ் மக்கள் சிங்கள மொழியையும் கற்கும் வகையில் இலவசமாக வகுப்புக்களை நடத்திவரும் சூரிய நிறுவகத்தையும், அதன் நிறுவுனர் முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரியவையும் ஆளுநர் பாராட்டியுள்ளார்.

இரண்டாம் மொழி

இங்கு சிங்கள மொழியை இரண்டாம் மொழியாக கற்பது இந்த நாட்டில் எங்கும் சென்று சேவையாற்றக் கூடிய வாய்பை உருவாக்கும் எனவும் ஆளுநர் குறிப்பிட்டுள்ளார்.

சிங்கள மொழி கற்கை குறித்து வடக்கு ஆளுநரின் கருத்து! | Northern Governor S Comment On Second Language

மேலும், எமது திறன் மற்றும் ஆற்றலை வளர்த்துக்கொள்ள இன்னொரு மொழியைக் கற்பது அவசியமானது என ஆளுநர் வலியுறுத்தியுள்ளார்.

இந்த நிகழ்வில் மாணவர்களுக்கு சான்றிதழ்கள்கள் வழங்கி வைக்கப்பட்டதுடன் பல்வேறு கலை நிகழ்வுகள் இடம்பெற்றுள்ளன.

சிங்கள மொழி கற்கை குறித்து வடக்கு ஆளுநரின் கருத்து! - ஐபிசி தமிழ்

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையில் உள்ள தமிழர்கள் எல்லோருக்கும் சிங்கள மொழி கட்டாயம் தெரிய வேண்டும். இல்லாவிட்டால் பாதிப்பு அவர்களுக்குத்தான்.

  • கருத்துக்கள உறவுகள்

இன்னும் ஐந்து வருடங்களில் இரண்டாவது மொழியை கற்க தேவயற்று போகும் அந்தளவுக்கு a1 தொழில் நுட்பம் தலைவிரித்து ஆடுகிறது .

  • கருத்துக்கள உறவுகள்

இன்னொரு மொழியைக் கற்பதால் நாம் குறைந்துவிடப்போவதில்லை.

adminDecember 15, 2024
IMG-20241215-WA0056-1170x702.jpg

இன்னொரு மொழியைக் கற்பதால் நாம் குறைந்துவிடப்போவதில்லை. மாறாக நாம் வளர்வோம். எமது திறனை – ஆற்றலை வளர்த்துக்கொள்ள இன்னொரு மொழியைக் கற்பது அவசியமானது என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்துள்ளார்.

சூரிய நிறுவகத்தின் ஏற்பாட்டில் இரண்டாம் மொழி சிங்கள கற்கை நெறியைப் பூர்த்தி செய்த மாணவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு சுதுமலை குபேரமஹாலில் இன்று ஞாயிற்றுக்கிழமை  இடம்பெற்றது.

இந்த நிகழ்வில் சூரிய நிறுவகத்தின் ஸ்தாபகரும் முன்னாள் சபாநாயகருமான கரு ஜயசூரியவும் கலந்துகொண்டார்.

அத்துடன் சுவிஸர்லாந்து தூதரகத்தின் பிரதித் தூதுவர் ஒலிவர் கௌரவ விருந்தினராகப் பங்கேற்றிருந்தார். மாணவர்களுக்கான சான்றிதழ்களை வழங்கிய பின்னர் பிரதம விருந்தினர் உரையாற்றும் போதே ஆளுநர் அவ்வாறு தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில்,

கிளிநொச்சி மாவட்டச் செயராக பணியாற்றிய காலத்தில் பொதுநிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சராக இருந்தவர் கரு ஜயசூரிய. அவர் சிறப்பான தலைமைத்துவத்தை வழங்கிய ஒருவர் கரு ஜயசூரியவைப்போன்று  நினைவுகூரப்படும் மற்றொருவராக மறைந்த முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர இருக்கின்றார் என்

 யாழ். மாவட்டச் செயலராக பணியாற்றியபோது நிதி அமைச்சராக இருந்த அவர் பல்வேறு வகைகளிலும் உதவினார்.

இன ஐக்கியத்துக்காகவும் தேசிய ஒருமைப்பாட்டுக்காகவும் சிங்கள மக்கள் தமிழ் மொழியையும், தமிழ் மக்கள் சிங்கள மொழியையும் கற்கும் வகையில் இலவசமாக வகுப்புக்களை நடத்திவரும் சூரிய நிறுவகத்தையும் அதன் நிறுவுனர் முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரியவிற்கும் பாராட்டுக்கள்.

சிங்கள மொழியை இரண்டாம் மொழியாக கற்பது இந்த நாட்டில் எங்கும் சென்று சேவையாற்றக் கூடிய வாய்பை உருவாக்கும். கூடுதலான மொழியறிவு எங்களை மேம்படுத்த உதவும். இதன் ஊடகாக ஆய்வுக்கான திறன் உள்ளிட்ட பல்வேறு ஆளுமைகளை வளர்க்க அது உதவும் என மேலும் தெரிவித்தார்.  இந்த நிகழ்வில் மாணவர்களால் பல்வேறு கலை நிகழ்வுகள் சிங்கள மொழியிலும் நடத்தப்பட்டன.

IMG-20241215-WA0058-800x446.jpgIMG-20241215-WA0059-800x483.jpgIMG-20241215-WA0060-800x424.jpg
 
  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, பெருமாள் said:

இன்னும் ஐந்து வருடங்களில் இரண்டாவது மொழியை கற்க தேவயற்று போகும் அந்தளவுக்கு a1 தொழில் நுட்பம் தலைவிரித்து ஆடுகிறது .

அந்த ஐந்த ஆண்டுகளுக்காக நீங்க சின்னவயசில் இருந்து வெயிற்றிங் போல. 😂

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, island said:

அந்த ஐந்த ஆண்டுகளுக்காக நீங்க சின்னவயசில் இருந்து வெயிற்றிங் போல. 😂

உங்களின் புலி எதிர்ப்பு வாதம் தமிழ்தேசிய எதிர்ப்பு இப்படி எழுத வைக்குது என்று நினைக்கிறேன்  கொஞ்சம் வெளியாலையும் எட்டிபாருங்க உலகம் வெகு வேகமாய் போய் கொண்டு இருக்கு .

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இனவாதம் இல்லாத மக்களின் மொழியை கற்பதில் தவறில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, பெருமாள் said:

உங்களின் புலி எதிர்ப்பு வாதம் தமிழ்தேசிய எதிர்ப்பு இப்படி எழுத வைக்குது என்று நினைக்கிறேன்  கொஞ்சம் வெளியாலையும் எட்டிபாருங்க உலகம் வெகு வேகமாய் போய் கொண்டு இருக்கு .

மும்மொழிகளையும் கற்றிருந்தால் இவ்வளவு இரத்தம் சிந்தியிருக்க வேண்டி வந்திராது. 

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, Kapithan said:

மும்மொழிகளையும் கற்றிருந்தால் இவ்வளவு இரத்தம் சிந்தியிருக்க வேண்டி வந்திராது. 

தவறு, தனிச்சிங்களச் சட்டம் கொண்டுவரப்படாது இருந்திருந்தால் எந்த இரத்தமும் சிந்தப்பட்டிருக்காது.

 ஒரு சிலர் எப்போது பார்த்தாலும் பாதிக்கப்பட்டவன் மீதே குற்றம் காண விழைவது ஏனென்று கேட்கத் தோன்றுகிறது? 
 
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ரஞ்சித் said:

தவறு, தனிச்சிங்களச் சட்டம் கொண்டுவரப்படாது இருந்திருந்தால் எந்த இரத்தமும் சிந்தப்பட்டிருக்காது.

 ஒரு சிலர் எப்போது பார்த்தாலும் பாதிக்கப்பட்டவன் மீதே குற்றம் காண விழைவது ஏனென்று கேட்கத் தோன்றுகிறது? 
 
சொந்தமாக யோசித்துப் பழகவும். 

பாதிக்கப்பட்டவன் மீது யார் குற்றம் கண்டது?  இதுக்கு ❤️ வேறு,..

🤦🏼‍♂️

😏

Edited by Kapithan

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, Kapithan said:

மும்மொழிகளையும் கற்றிருந்தால் இவ்வளவு இரத்தம் சிந்தியிருக்க வேண்டி வந்திராது. 

2 hours ago, Kapithan said:

சொந்தமாக யோசித்துப் பழகவும். 

பாதிக்கப்பட்டவன் மீது யார் குற்றம் கண்டது?  இதுக்கு ❤️ வேறு,..

🤦🏼‍♂️

😏

அதென்ன வேறு ?

  • கருத்துக்கள உறவுகள்+

வரவேற்கத் தக்க கருத்து... 

இலங்கையில் வேலை வாய்ப்புப் பெற இம்மொழி கற்கை அவசியம்.  

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
5 hours ago, Kapithan said:

மும்மொழிகளையும் கற்றிருந்தால் இவ்வளவு இரத்தம் சிந்தியிருக்க வேண்டி வந்திராது. 

தமிழர்கள் சிங்களம் கதைக்கும் அளவிற்கு சிங்களவர்கள் தமிழ் கதைப்பார்களா சார்?

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, கிருபன் said:

எமது திறனை – ஆற்றலை வளர்த்துக்கொள்ள இன்னொரு மொழியைக் கற்பது அவசியமானது என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்துள்ளார்.

நான் தொழில்பார்த்த ஆலையில் பல சிங்களவர்களின் நட்புக் கிடைத்தது, “தனக்கெடா சிங்களம் தன்பிடரிக்குச் சேதம்” என்ற கூற்றை நான் அறிந்திருந்தாலும் அவர்களுடன் சிங்களம் கதைப்பதில் ஒரு ஆர்வமும், ஈர்ப்பும் ஏற்பட்டது உண்மை. என் கொச்சைச் சிங்களத்தை அவர்களும் ரசித்தார்கள், ஆனால் எனக்குக் கிடைக்கவேண்டிய என் பதவி உயர்வுக்கு அந்தச் சிங்கள மொழி என்மீது திணிக்கப்பட்டதால் நான் இலங்கையை விட்டு நீங்கவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டேன்.😢

  • கருத்துக்கள உறவுகள்
On 15/12/2024 at 07:38, RishiK said:

கூடுதலான மொழியறிவு எம்மை மேம்படுத்த உதவும் என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்துள்ளார்.

👍..............

நல்ல ஒரு செய்தியும், முயற்சியும். எந்த மொழியை தெரிந்து கொள்வதும் அந்த மனிதர்களுக்குகிடையேயான உறவுகளை மேம்படுத்தும்.  

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, குமாரசாமி said:

தமிழர்கள் சிங்களம் கதைக்கும் அளவிற்கு சிங்களவர்கள் தமிழ் கதைப்பார்களா சார்?

கதைப்பார்களய்யா அதுவும் தமிழில் கிண்டலும் அடிப்பார்கள். என் மேலதிகாரி ஒரு சிங்களவர், அவரின்கீழ் வேலைபார்க்கும் ஒரு தமிழர், அவரும் ஒரு அதிகாரி, ஏதோ சந்தேகம் கேட்டார்.

“அதுங் நான் என் மீசை பத்துதுங் கென்று கவலைப் படுறேங் நீங்க சுருட்டுப் பத்த நெருப்புங் கேக்கிறது”.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
26 minutes ago, குமாரசாமி said:

தமிழர்கள் சிங்களம் கதைக்கும் அளவிற்கு சிங்களவர்கள் தமிழ் கதைப்பார்களா சார்?

எல்லோரும் வடக்கில் தமிழிலும் தெற்கில் சிங்களத்திலும் கதைத்தாலே இனப்பிரச்சனை இல்லாது போயிருக்கும்.

ஹிந்தி மொழியைப் போல் தமிழ், சிங்களம் மற்றும் ஆங்கிலம் கலந்த ஒரு புதிய மொழியை உருவாக்க முடியாதா?

  • கருத்துக்கள உறவுகள்

நானும் 70 களின் தொடக்கத்தில் சிங்களம் தெரியாவிட்டால் வேலைகள் எடுப்பது கஸ்டம் என்று சிங்களம் படித்தேன்.

அது ஒரு பெரியகதை.கதையாகவே எழுதப் போகிறேன்.இப்பவல்ல ஓரிரு மாதங்கள் போகட்டும்.

இலங்கையில் தமிழ் பாடசாலைகளில் சிங்களம் ஒரு பாடமாக்கியுள்ளார்கள் என்று எண்ணுகிறேன்.

சிங்கள பாடசாலைகளில் தமிழ் எப்படியோ தெரியவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, குமாரசாமி said:

தமிழர்கள் சிங்களம் கதைக்கும் அளவிற்கு சிங்களவர்கள் தமிழ் கதைப்பார்களா சார்?

சிங்களவர்களும் கட்டாயம் தமிழ் படிக்க வேண்டும் ...அரச வேலைகளுக்கு அவசியம் 

  • கருத்துக்கள உறவுகள்

மிக சொற்ப நாள்கள் கிழக்காசிய நாடொன்றில் சிங்களவர்களுடன் வசிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது, அவர்கள் அனைவரும் தமிழ் நன்றாக தெரியும், அதே போல வெவ்வேறு நாடுகளில் வசிக்கும் போது அந்தந்த நாடுகளின் மொழி வேகமாக கற்று கொள்ள முடிந்தது (3 மாதத்திற்குள்ளாகவே) ஆனால் தற்போது ஒரிரு வார்த்தைகள் தவிர்த்து அந்த மொழிகள் நினைவில் இல்லை.

10 வருடங்களுக்கு முன்னர் சில சிங்கள பெண்களுடன் வேலை செய்யும் நிலையில் அவர்களது எதிர்பார்ப்பு அனைத்து தமிழர்களுக்கும் சிங்களம் தெரிந்திருக்கும் என்பதாக இருந்த்து.

ஒரு மொழியினை கற்பதால் அடிப்படை பிரச்சினை தீர்ந்துவிடாது, இரண்டும் வேறு வேறு விடயங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
44 minutes ago, vasee said:

ஒரு மொழியினை கற்பதால் அடிப்படை பிரச்சினை தீர்ந்துவிடாது, இரண்டும் வேறு வேறு விடயங்கள்.

👆76 வருடங்களின் பின் இதை எழுதி விளங்கப்படுத்த வேண்டி இருக்கிறது.

👇

10 hours ago, ரஞ்சித் said:

தனிச்சிங்களச் சட்டம் கொண்டுவரப்படாது இருந்திருந்தால் எந்த இரத்தமும் சிந்தப்பட்டிருக்காது

பிகு

எனக்கு அடித்தட்டு சிங்களம் சரளமாக வரும். தமிழ் நெடியே இல்லாமல்.

என்னை சூழ பலரும் எழுத படித்தார்கள். நடக்கும் அத்தனை கொடுமையும் இந்த மொழியின் திணிப்பில்தான் ஆரம்பமாகியது எனும் போது, பதின்மவயதினான என்னால் அதை படிக்க முடியவில்லை.

இப்போ படித்திருக்கலாம் என என்ணுகிறேன்.

இலங்கையில் அனைவரும் மும்மொழி தேர்ச்சி பெறுவதே நல்லது.

ஆனால் உங்களுக்கு சிங்களம் தெரிந்தபடியால் குடியேற்றம் நிற்காது. புத்தர் சிலையும் முளைக்காது விடாது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, ரதி said:

சிங்களவர்களும் கட்டாயம் தமிழ் படிக்க வேண்டும் ...அரச வேலைகளுக்கு அவசியம் 

இங்கிருந்துதான் பல பிரச்சனைகள் ஆரம்பமாகின்றது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
4 hours ago, RishiK said:

எல்லோரும் வடக்கில் தமிழிலும் தெற்கில் சிங்களத்திலும் கதைத்தாலே இனப்பிரச்சனை இல்லாது போயிருக்கும்.

இனிவரும் சமுதாயம் கதைக்காத சமுதாயமாக மாறும் என உளவியல் வல்லுனர்கள் கூறுகின்றார்களாம். ஜப்பானில்  இந்த பிரச்சனை ஆரம்பமாகியுள்ளதாக கூறுகின்றார்கள்.

எனவே மொழிகளுக்கு முக்கியத்துவம் இல்லாத ஒரு காலம் வரும். 😃

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
4 hours ago, ஈழப்பிரியன் said:

நானும் 70 களின் தொடக்கத்தில் சிங்களம் தெரியாவிட்டால் வேலைகள் எடுப்பது கஸ்டம் என்று சிங்களம் படித்தேன்.

அது ஒரு பெரியகதை.கதையாகவே எழுதப் போகிறேன்.இப்பவல்ல ஓரிரு மாதங்கள் போகட்டும்.

இலங்கையில் தமிழ் பாடசாலைகளில் சிங்களம் ஒரு பாடமாக்கியுள்ளார்கள் என்று எண்ணுகிறேன்.

சிங்கள பாடசாலைகளில் தமிழ் எப்படியோ தெரியவில்லை.

ஓம் எழுதுங்கோ....குமாரசூரியர் காலத்து ஆக்களின்ர கதை கொஞ்சம் வித்தியாசமானது 😂

  • கருத்துக்கள உறவுகள்
27 minutes ago, குமாரசாமி said:

ஓம் எழுதுங்கோ....குமாரசூரியர் காலத்து ஆக்களின்ர கதை கொஞ்சம் வித்தியாசமானது 😂

அவர் எழுதமாட்டார்   

அங்கே சூறாவளி   இங்கே நிலநடுக்கம்   இப்ப வெள்ளம்  

என்றுவார். ஒழிய   சிங்களம் படித்த கதை வரவே வாராது   😂😂😂

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.