Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Posted
4 hours ago, குமாரசாமி said:

காவோலையை நிமிர்த்துவதற்கும் படிமனவாக்குவதற்கும் வேறு வழிகள் உள்ளது.:cool:

குழைக்காட்டார் இல்லையென்றால் நகரத்தாரின் வண்டியும் குண்டியும் வற்றிப்போகும்😎

குழைக்காட்டார் என்பதன் உண்மையான அர்த்தம் என்ன? அது ஒரு வசைச் சொல்/குறைத்து மதிப்பிடும் சொல்லாக எப்படி அர்த்தப்படுத்தப்படுகிறது? 

(காவோலையை நிமிர்த்துவதற்கு உழக்குதல்/மிதித்தல் என்றும் கூறுவர். 1995 இடம்பெயர்வு நேரம்  வன்னியில் தென்னோலை  அல்லது கிடுகு மிகவும் தட்டுப்பாடான நேரம், பூநகரி ஜெயபுரம்  முழங்காவில்  பகுதியில் ஒரு  இளைஞனூடாக காட்டின் நடுவேயிருந்த பனைகளில் ஓலைகளை வெட்டி அந்த இளைஞரே அவற்றினை மிதித்தும் தந்தார். அதனைக் கொண்டே கொட்டில் களை வேய்ந்தோம். வேதனையான ஆனால் மகிழ்வாக வாழ்ந்த நாட்கள் அவை.

ஊரோடு உறவு போம். உறவோடு சொந்தம் போம்,.......... .😭)

  • கருத்துக்கள உறவுகள்
Posted

2-5-1170x878.jpg

2-1-1-800x600.jpg

2-2-1-800x450.jpg

2-3-1-800x600.jpg

யாழ்ப்பாணத்தில்... குடிசை கைத்தொழில் மாதிரி, You Tube நடாத்தும் அன்பர்களே....
இந்த...
"காவோலைகளுக்கு மேல் காப்பற்   வீதியை" போட்ட... 
எஞ்சினியரையும், ஓவசியரையும்  ஒருக்கால் பேட்டி எடுத்து போடுங்கோப்பா... 😀
உங்களுக்கு புண்ணியமாக போகும். 
அவர்கள் என்ன சொல்ல வருகின்றார்கள் என்று எங்களுக்கும் கேட்க ஆசையாக உள்ளது. 😂

நீங்கள் அந்த "யூ ரியூப்" காணொளியை போட்டால்...   
நான்  உங்களுக்கு...
பெல் பட்டனை அமத்தி, சப்ஸ்கிரைப் பண்ணி, "லைக்".. பண்ணி விடுவன்.  🤣

  • Thanks 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted
10 minutes ago, தமிழ் சிறி said:

நான்  உங்களுக்கு... பெல் பட்டனை அமத்தி, சப்ஸ்கிரைப் பண்ணி, "லைக்".. பண்ணி விடுவன்.  🤣

இதனால் என்ன வருமானம் வரும்  ??? 🤣🙏 அவங்களை ஏமாற்ற முடியாது தம்பி   பச்சை நீல சிவப்பு   எழுத்தில் எழுதுவதை விட்டுட்டு   

பச்சை தாள்கள் நீல தாள்களை   எடுத்து விடுங்கள்   அலுவல்கள் நெடிப்பொழுதில்.  நடக்கும் 🤣

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
23 minutes ago, Kandiah57 said:

இதனால் என்ன வருமானம் வரும்  ??? 🤣🙏 அவங்களை ஏமாற்ற முடியாது தம்பி   பச்சை நீல சிவப்பு   எழுத்தில் எழுதுவதை விட்டுட்டு   

பச்சை தாள்கள் நீல தாள்களை   எடுத்து விடுங்கள்   அலுவல்கள் நெடிப்பொழுதில்.  நடக்கும் 🤣

என்ன இப்படி சொல்லிப் போட்டீங்கள்.
இலங்கையில்... இதன் மூலம், மாதம்   40 லட்ச ரூபாய் வரை வருமானம் பெரும் தமிழ் "யூ ரியூப்" நடத்துபவர்களும் இருக்கின்றார்கள்.
தமிழ் நாட்டில்... ஒரு கிராமிய சமையல்  யூ ரியூப்  நடத்துபவர்கள் 
இந்திய ரூபாயில் 80 லட்ச ரூபாய் வரை ஒரு காணொளிக்கு,  வருமானம் பெறுவதாக சொன்னார்கள். அவர்கள் கிழமைக்கு ஒரு காணொளியை வெளியிடுவார்கள். வயல் வரப்பில் இருந்து சமைத்து 
ஒரு
 கிழமைக்கு 80 லட்ச ரூபாய்  பெறுவது எவ்வளவு பெரிய வருமானம்.

  • Like 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted
8 minutes ago, தமிழ் சிறி said:

என்ன இப்படி சொல்லிப் போட்டீங்கள்.
இலங்கையில்... இதன் மூலம், மாதம்   40 லட்ச ரூபாய் வரை வருமானம் பெரும் தமிழ் "யூ ரியூப்" நடத்துபவர்களும் இருக்கின்றார்கள்.
 
பருத்திதுறையில் ... ஒரு ஊரே ...முழுவதும் சொந்தக்காரர்...யூ டுயுப்தான் தொழில்...இன்றைக்கு கத்தரிக்காய் சமைத்தலும் காணொளி வரும்...அந்தப் பக்கம் போகவே மனமில்லை....

அண்மையில் ஊரில் நின்றபோது..நயினாதீவு போனேன்...யாழ்ப்பாண்த்தில் இருந்து ..போட்யாட் மட்டும் அருமையான காப்பெட்ரோட்...பஞ்சு மெத்தையிலை போனமாதிரி இருந்தது...அப்ப் பார்க்கையில் ரோட்டுக்கரையில் இருந்த பனைமரமெல்லாம் மொட்டையாக இருந்தது....அட இந்த தியைப் பார்த்தபின்தான்...விளங்கிட்டுது...பனையோலை எங்கை போனது...ரோட்டு ஏன் மெத்தென இருந்தது என்றூ... எப்படியும் இந்த ரோட்டும் ...சாவகச்சேரி ரோட்டும் ..யாழ்ப்பாண பொறியியலாளர்தானே போட்டிருப்பினம்..😁

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 minute ago, alvayan said:

சில யூ ரியூப் காரர் கடைகளில் போய் சாப்பிட்டு அதனைப் பற்றி காணொளி தயாரிப்பார்கள்.
அப்படி அவர்கள் சாப்பிடுவதை கண் கொண்டு பார்க்க முடியாது.
நாகரீகமாக சாப்பிட வேண்டும் என்ற பண்பு அறவே  தெரியாது, 
அவர்கள் பிசைந்து சாப்பிடுவதையும்... மீசை, தாடியில்  சாப்பாடு  "அப்பி" இருப்பதையும் 
பார்க்க எங்களுக்கும்  வயித்தை  குமட்டிக் கொண்டு வரும்.

இதனைப் பார்க்கும் இளம் தலைமுறையும்.... 
இதுகளை பார்த்து பழக்க வழக்கம் இல்லாமல் திரியப் போகுதுகள். 

யாழ்ப்பாண எஞ்சினியர்மார் கண்டுபிடித்த "காவோலை ரெக்னிக்குக்கு" 
நோபல் பரிசு கிடைக்க வாய்ப்பு இருப்பதாக, இங்கு பேசிக் கொள்கின்றார்கள்.   😂

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 minute ago, தமிழ் சிறி said:

யாழ்ப்பாண எஞ்சினியர்மார் கண்டுபிடித்த "காவோலை ரெக்னிக்குக்கு" 
நோபல் பரிசு கிடைக்க வாய்ப்பு இருப்பதாக, இங்கு பேசிக் கொள்கின்றார்கள்.   😂

இந்தப் போட்டோக்🤣களே  காணும் ...நாங்களே   அனுப்பிவிடுவம் சிறியர்..

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

இந்தப் பதிவுக்கு பின்னூட்டம் செய்த யாழ் உறவுகளுக்கு  ஒரு வேண்டுதல்…….

காவோலை என்றால் பொருள் என்ன? “காக்கின்ற ஓலை”. என்றும் பொருள்படும், அது றோட்டையம் காப்பாற்றும்.🙌

Edited by Paanch
  • கருத்துக்கள உறவுகள்
Posted
9 minutes ago, Paanch said:

இந்தப் பதிவுக்கு பின்னூட்டம் செய்த யாழ் உறவுகளுக்கு  ஒரு வேண்டுதல்…….

காவோலை என்றால் பொருள் என்ன? “காக்கின்ற ஓலை”. என்றும் பொருள்படும், அது றோட்டையம் காப்பாற்றும்.🙌

எஞ்சினியர் தியரியில்...இப்படி ஒன்றும் இருக்கென்று இப்பதான் தெரியும் அய்யா..

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

மணல்தறையள் தண்ணீர் நிக்கக்கூடிய இடங்களிற்கு தடிப்பான பொலித்தீன் போட்டு வீதி போடவேணுமாம். அது விலை கூட என்றபடியால் மாற்றுவழியாக ஓலைகள் போடுவார்களாம்! தொழில்நுட்ப உத்தியோகத்தர் தம்பி சொன்னதைக் கேட்டு பகிர்ந்துகொண்டேன்.

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
8 minutes ago, ஏராளன் said:

மணல்தறையள் தண்ணீர் நிக்கக்கூடிய இடங்களிற்கு தடிப்பான பொலித்தீன் போட்டு வீதி போடவேணுமாம். அது விலை கூட என்றபடியால் மாற்றுவழியாக ஓலைகள் போடுவார்களாம்! தொழில்நுட்ப உத்தியோகத்தர் தம்பி சொன்னதைக் கேட்டு பகிர்ந்துகொண்டேன்.

தம்பிநல்லாப் படிச்சிருக்கிறார் (what an innovation and sustainable technique)எனதுநிறுவனத்தில் பகிர்ந்து கொல்லுவம் (கொள்ளுவம்)

  • கருத்துக்கள உறவுகள்
Posted
4 minutes ago, வாதவூரான் said:

தம்பிநல்லாப் படிச்சிருக்கிறார் (what an innovation and sustainable technique)எனதுநிறுவனத்தில் பகிர்ந்து கொல்லுவம் (கொள்ளுவம்)

இதுவும் ஒரு உண்மையான சம்பவம்...கிளினொச்சியில் அபிவிருத்திநடைபெற்றகாலம் எல்லாம் வெளிநாட்டு உதவி...எந்திரி மாருக்கு படு குசி.. எனக்குதெரிந்த..எந்திரி கட்டின  பாலம் உடைந்துவிட்டது...

காரணமின்றித் தவித்த அவருக்கு..முல்லத்தீவில் சுனாமி அழிவு ..திடீர் யோசனையை கொடுத்தது...கிளிநொச்சியில் சுனாமியால் பாலம் உடைந்துவிட்டது.....இதனை நம்பிய வெள்ளைக்கார துரை ..பேமண்டை கொடுத்து நம்ம எந்திரியை..தூக்கி விட்டார்...இப்படி பல இருக்கு🙃..இது எப்படியிருக்கு

  • கருத்துக்கள உறவுகள்
Posted
23 minutes ago, ஏராளன் said:

மணல்தறையள் தண்ணீர் நிக்கக்கூடிய இடங்களிற்கு தடிப்பான பொலித்தீன் போட்டு வீதி போடவேணுமாம். அது விலை கூட என்றபடியால் மாற்றுவழியாக ஓலைகள் போடுவார்களாம்! தொழில்நுட்ப உத்தியோகத்தர் தம்பி சொன்னதைக் கேட்டு பகிர்ந்துகொண்டேன்.

இந்த படங்களில் இருப்பதெல்லாம் sub-base course  (compaction test) மட்டுமே அதற்குபின் base course, prime coat, bitumen 2 coat.. . ... 

18 minutes ago, வாதவூரான் said:

தம்பிநல்லாப் படிச்சிருக்கிறார் (what an innovation and sustainable technique)எனதுநிறுவனத்தில் பகிர்ந்து கொல்லுவம் (கொள்ளுவம்)

படிந்தவர்களை விட , அனுபவசாலிகள் பலர்

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.