Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பார் போமிட் வழங்கச் சிபார்சு செய்தவர்களும் சபாநாயகரைப் போல் பதவி விலக வேண்டும் – சுமந்திரன்

பார் போமிட் வழங்கச் சிபார்சு செய்தவர்களும் சபாநாயகரைப் போல் பதவி விலக வேண்டும் – சுமந்திரன்

பார் போமிட் வழங்குவதற்குச் சிபார்சு செய்தவர்களும் சபாநாயகர் பதவி விலகியது போன்று பதவி விலக வேண்டும் என்று இலங்கைத் தமிழரசுக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

சபாநாயகர் பதவி விலகியமை தொடர்பில் ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“சபாநாயகர் கலாநிதிப் பட்டம் தனக்கு இருக்கின்றது, அதனை தற்போது நிரூபிக்க முடியாது என்பதால் பதவி விலகுவதாக அறிவித்துள்ளார். அது நல்லதொரு விடயம். அதை நான் வரவேற்கின்றேன். இதேபோன்று மற்றவர்களும் மற்ற மற்ற விடயங்களுக்காக விலகுவார்களாக இருந்தால் அதுவும் நல்ல விடயம்தான்.

பார் போமிட் எடுத்தவர்களும் தாமாகவே விலகுவார்களாக இருந்தால் அதுவும் நல்ல விடயம்.

விக்னேஸ்வரன் ஐயா தான் பார் போமிட் கொடுத்து விட்டேன் எனத் தெரிவித்து அவர் தேர்தலில் போட்டியிடமால் கொழும்புக்குப் போய் விட்டார்.

ஒவ்வொரு இடங்களிலும் நிறையப் பார் போமிட் கொடுக்கப்பட்டுள்ளது என்று அரசு அறிவித்துள்ளது.

அதைச் சிபார்சு செய்தவர்கள் யார் என்ற தகவல் இன்னும் வரவில்லை. அந்தத் தகவல் வருகின்றபோது சிபார்சு செய்தவர்களும் சபாநாயகர் பதவி விலகியமை போன்று விலக வேண்டும். அதனைச் சந்தோசமாக வரவேற்போம்.” – என்றார்.
 
https://oruvan.com/those-who-recommended-granting-of-parole-should-also-resign-like-the-speaker-sumanthiran/

  • கருத்துக்கள உறவுகள்

சுமந்திரன் எப்படியும் நாடாளமன்றம் வரத்தான் நிற்கிறார். 

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of 7 people, temple and hospital

May be an image of text

மானிப்பாயில்... "பார்" திறந்து வைத்த சுமந்திரனுக்கு, 
இதை சொல்ல, எந்த யோக்கியதையும் கிடையாது. 

முதலில்... உங்கள் முதுகில் உள்ள  அழுக்குகளை சுத்தம் செய்து  கொள்ளவும். 
மக்களிடம் வாங்கிய அடி காணாது என்று, ஊருக்கு உபதேசம் பண்ண வந்திட்டார்கள்.  

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழ் சிறி said:

பாவம் அவர் வேட்டி நுணி றோட்டைக் கூட்டுவது தெரியாத அளவுக்கு குடித்துவிட்டார் போலிருக்கிறது.🧐😂

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, RishiK said:

சுமந்திரன் எப்படியும் நாடாளமன்றம் வரத்தான் நிற்கிறார். 

அவருக்கு அனுராவோடை சப்போட்டு இருக்கல்லே....ரணிலுக்கும் ,சுமதிரனுக்கும் பிரதமர் பதவிமீது கண்ணெல்லே...

Edited by alvayan

  • கருத்துக்கள உறவுகள்
24 minutes ago, Paanch said:

பாவம் அவர் வேட்டி நுணி றோட்டைக் கூட்டுவது தெரியாத அளவுக்கு குடித்துவிட்டார் போலிருக்கிறது.🧐😂

May be an image of 7 people, temple and hospital

கோவிலுக்குப் போகும் போது... வேட்டியை அழகாக கட்டிக் கொண்டு போக வேண்டும்.
தவறணைக்கு போகும் போது... வேட்டியால், றோட்டு... கூட்டிக் கொண்டு போக வேணும். 😂
முன்னாள் பா.உ. சுமந்திரன்... சரியாய்த்தான் செய்திருக்கிறார். 🤣

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, தமிழ் சிறி said:

May be an image of 7 people, temple and hospital

May be an image of text

மானிப்பாயில்... "பார்" திறந்து வைத்த சுமந்திரனுக்கு, 
இதை சொல்ல, எந்த யோக்கியதையும் கிடையாது. 

முதலில்... உங்கள் முதுகில் உள்ள  அழுக்குகளை சுத்தம் செய்து  கொள்ளவும். 
மக்களிடம் வாங்கிய அடி காணாது என்று, ஊருக்கு உபதேசம் பண்ண வந்திட்டார்கள்.  

பாவம் சிறியரும் அவர் புள்ளிங்கோவும், 

Hotel and Restaurant க்கும் தெருவோர சாராயக் கடைக்கும் வித்தியாசம் தெரியாத நிலையில் சிறியர் & Co. இருக்கிறார்கள். 

இதற்காகத்தான் படியுங்கோ , பள்ளிக்கூடம் போங்கோ என்று பிள்ளைகளைப் பெற்றவர்கள் கத்துவது. 

😏

Edited by Kapithan

  • கருத்துக்கள உறவுகள்

யாழப்பாணம் பாசையூரில் இருக்கும் கோட்டல்களில் ஒன்று அதற்கு “கிரான்கோட்டல்” என்று பெயர். அங்கு மது அருந்துவதற்காகவே அதிகமானவர்கள் வருவார்கள், நானும் போயிருக்கிறேன்.🤪

  • கருத்துக்கள உறவுகள்
52 minutes ago, Paanch said:

யாழப்பாணம் பாசையூரில் இருக்கும் கோட்டல்களில் ஒன்று அதற்கு “கிரான்கோட்டல்” என்று பெயர். அங்கு மது அருந்துவதற்காகவே அதிகமானவர்கள் வருவார்கள், நானும் போயிருக்கிறேன்.🤪

Paanch உங்களுக்கு Hotel & Restaurant க்கும்  தெருவோர சாராயக் கடைக்கும் வித்தியாசம் தெரியும் அதனால் தாங்கள் சிறியர் &  Co. விற்குள் இல்லை என்கிறீர்களா?,.... நம்பிட்டோம்,...🤣

  • கருத்துக்கள உறவுகள்

இவருக்கு இப்போ என்னதான் பிரச்சனை? ரணில் மைத்திரி நல்லாட்சி அரசாங்கத்தின்கீழ் ஒரு வருடத்துக்குள்  ஏக்கய  ராஜ்ய அரசியல் யாப்பு ரீதியான தீர்வு காணப்படும், இல்லையேல் நான் பதவி விலகுவேன் என்று சவால் விட்ட அய்யாத்துரை பதவி விலகினால் தமிழ் மக்கள் சந்தோசமாக இருப்பார்கள், தமிழரசுக்கட்சியும் தமிழ்தேசியக்கட்சியாய்  குடைச்சல் இல்லாமல் ஒன்றாய் இயங்கும். நாட்டில இப்போ நல்ல நிகழ்வுகள் நடக்க இருக்கின்றன, இதில நானுந்தான் என்று சொல்லிக்கொண்டு தலையை நீட்ட முடியவில்லையே என்கிற கவலை அவருக்கு. போற இடமெல்லாம் பதவி விலக வேண்டும், பதவி விலக வேண்டுமென்று கூவித்திரிகிறார். தான் இல்லாத பாராளுமன்றில் தமிழர் யாரும் இருக்கக்கூடாது என்பது அவர் எண்ணம். அதிலும் இப்போ சிறீதரனிலை கடுப்பான கடுப்பு. அன்று மாவைக்கு எதிராக சிறிதரனை தலைவராக்க ஓடுப்பட்டவர். இப்போ, அவர் தலைவரானது பொறுக்கவில்லை. நாளை சி. வி. கே. சிவஞானத்துக்கும் சத்தியலிங்கத்துக்கும் நடக்காது என்கிறது என்ன உத்தரவாதம்? சணம் பித்தம் சணம் வாதம் சுமந்திரனுக்கு, இவரை நம்பி கொஞ்சம் பின்னாலை அலையுதுகள்.

  • கருத்துக்கள உறவுகள்
39 minutes ago, satan said:

யார்  யார் சிபாரிசு செய்தார்கள் என்கிற விடயம் வெளிவர வேண்டுமா இல்லையா? 

அப்பூ,... அதைச் சொல்லுங்க,...

😁

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kapithan said:

யார்  யார் சிபாரிசு செய்தார்கள் என்கிற விடயம் வெளிவர வேண்டுமா இல்லையா? 

அப்பூ,... அதைச் சொல்லுங்க,...

😁

அதை அனுரா ஐயாதான் வெளிப்படுத்த வேண்டும். 

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Kapithan said:

Hotel and Restaurant க்கும் தெருவோர சாராயக் கடைக்கும் வித்தியாசம் தெரியாத நிலையில்

என்ன வித்தியாசம் ? படிச்ச மேதாவி நீங்கள் கொஞ்சம் விளங்கபடுத்துங்க 😄

Edited by பெருமாள்

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, satan said:

இவருக்கு இப்போ என்னதான் பிரச்சனை?

தமிழரசுக் கட்சியில் இருந்து தெரிவாகி பாராளுமன்றம் போன யாராவது பதவி விலகினால் அந்த இடத்துக்கு பின்னால் உள்ளவர்கள் உள்நுழையலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

பார் பெர்மிட் வழங்கச் சிபாரிசு செய்த சமுக விரோதிகள் பாராளுமன்ற உறுப்பினராக இருக்கத் தகுதியற்றவர்கள். இந்தச் சமூகவிரோதிகளும் அவர்களது துதிபாடிகளும் மக்களால் இனங்கணப்பட்டு அவர்களது முகத்தில் காறி தூவென உமிழவேண்டும். அத்துடன் இக் கயவர்களின் கல்வித் தகைமைகளும் சரி பார்க்கப்படவேண்டும்!

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, வாலி said:

பார் பெர்மிட் வழங்கச் சிபாரிசு செய்த சமுக விரோதிகள் பாராளுமன்ற உறுப்பினராக இருக்கத் தகுதியற்றவர்கள். இந்தச் சமூகவிரோதிகளும் அவர்களது துதிபாடிகளும் மக்களால் இனங்கணப்பட்டு அவர்களது முகத்தில் காறி தூவென உமிழவேண்டும்..................

உண்மையே.............. 

சமூகமாவது, நலமாவது, ஒருவர் என்ன விரோதச் செயல்கள் செய்தாலும் கண்டுகொள்ளமாட்டோம், ஆனால் இன்னொருவரை விடாமல் அடிப்போம் ........... என்ற அணுகுமுறை வியக்கவைக்கின்றது..........🫢.   

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, ரசோதரன் said:

உண்மையே.............. 

சமூகமாவது, நலமாவது, ஒருவர் என்ன விரோதச் செயல்கள் செய்தாலும் கண்டுகொள்ளமாட்டோம், ஆனால் இன்னொருவரை விடாமல் அடிப்போம் ........... என்ற அணுகுமுறை வியக்கவைக்கின்றது..........🫢.   

எய்தவன் இருக்க அம்பை நோகலாமா? அனுமதியளித்தவர் ரணில், அவரின் தோஸ்து சுமந்திரன். அப்பவே தடுத்திருக்க வேண்டுமே சுமந்திரன்? ஏன் அதை செய்யவில்லை சமூகத்தில் அக்கறையிருந்தால்? இப்போ தேர்தல், பாராளுமன்ற கதிரை ஆசை வந்தவுடன் தனது பதவிக்காக தூக்கிப்பிடித்தால்; அது சமூக நலன் கிடையாது, சுத்த சுயநலம். அனுமதியளித்தவர் நாட்டின் ஜனாதிபதி! இங்கே ரணிலை குற்றம் சொல்ல பயம், வாங்கியவர்களை பதவிவிலக வேண்டுமாம். அது அவர்களுக்கு வாக்களித்தவர்கள் பிரச்சனை. அதை தெரிந்துகொண்டேதான் மக்கள் இவரை நிராகரித்து அவர்களை தெரிந்தெடுத்துள்ளனர். தனது தோல்வியையும், அவர்களின் வெற்றியையும் தாங்க முடியாமல் வயிற்றெரிச்சலில் தவிக்கிறார். இவரின் வாக்கு, செயல்களில் மக்களுக்கு நம்பிக்கையில்லை. இவர் இதை தேர்தலுக்கு முன்பு சொல்லி தடுத்திருந்தால் மக்களிடத்தில்  இவரின் சொல்லுக்கு ஒரு மதிப்பு இருந்திருக்கும். மக்களுக்கு நன்றாகவே தெரியும் இவர் ஒரு பொறாமைக்காரன் என்று. இந்தபசாசு கட்சிக்குள் நுழைந்தபின்தான் இத்தனை குழப்பங்கள் விரிசல்கள்.

இத்தனை பாராளுமன்ற உறுப்பினர்கள் இருக்கும்போது, இவரை மட்டும் ஏன் விமர்சிக்கிறார்கள் என்று யோசித்தால். உண்மை விளங்குமுங்களுக்கு!

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, Kapithan said:

யார்  யார் சிபாரிசு செய்தார்கள் என்கிற விடயம் வெளிவர வேண்டுமா இல்லையா? 

8 hours ago, RishiK said:

அதை அனுரா ஐயாதான் வெளிப்படுத்த வேண்டும். 

அதை சுமந்திரனே வெளிப்படுத்தி, அவர்கள் பதவி விலக வேண்டுமென்கிறார், கொழும்புக்கு ஓடி விட்டார் என்கிறார். யாரை சாடுகிறார் என்று தெரியவில்லையா உங்களுக்கு? விக்கினேஸ்வரன் அதற்கு பொறுப்பேற்று தேர்தலில் போட்டியிடவில்லை. அவர் கொழுப்புக்கு போனாலென்ன, லண்டனுக்கு போனால்த்தான் இவருக்கென்ன? அவரை விமர்ச்சிக்க இவர் யார்? ஏன் அடுத்த கட்சிக்குள் மூக்கை நுழைக்கிறார்? இது அநாகரீகமில்லையா? தன் தோல்விக்கு பொறுப்பெடுத்து கட்சியின் சகல நடவடிக்கையிலும் இருந்து விலக துப்பில்லை, போனதடவை மாவையரை விரட்ட பத்திரிகை அறிக்கைகளும் கூட்டங்களும் நடத்தியவருக்கு தெரியாதா தனது நிலை? எதுக்கெடுத்தாலும் பதவி விலக வேண்டுமென்ற கூப்பாடு, இதை தவிர வேறேதும் உருப்படியா செய்ததில்லை. அதுதான் மக்கள் ஓய்வெடுக்கும்படி அனுப்பியுள்ளனர். அடங்குதா மனிசன்? யாரை பதவி விலத்துவேன் என்று கூவித்திரியுது.

  • கருத்துக்கள உறவுகள்
42 minutes ago, satan said:

இத்தனை பாராளுமன்ற உறுப்பினர்கள் இருக்கும்போது, இவரை மட்டும் ஏன் விமர்சிக்கிறார்கள் என்று யோசித்தால். உண்மை விளங்குமுங்களுக்கு!

நான் இதை யோசித்துப் பார்த்துக் கொண்டேயிருக்கின்றேன், சாத்தான்.

இங்கு நான் இருக்கும் இடத்தில் நாங்கள் ஒரு ஐம்பது பேர் வரையில் மிகவும் நெருக்கமாக இருக்கின்றோம். இன்னும் ஏராளமான நம்மவர்கள் இருக்கின்றனர், ஆனால் ஐம்பது பேர்கள் ஒரு நெருங்கிய நட்பில் இருக்கின்றோம். அதில் நால்வர் சுமந்திரனை தீவிரமாக எதிர்ப்பவர்கள் என்று சொல்லலாம், இன்னுமொரு நால்வர் அவரை ஆதரிக்கின்றனர். மிகுதியானவர்கள், நான் உட்பட, சுமந்திரனுக்கும் மற்றவர்களுக்கும் அப்படி என்ன தான் வித்தியாசம் இருக்கின்றது என்று நம்பகமான தகவல்களை, செயல்களை தேடிக் கொண்டிருக்கின்றோம்.

ஆகவே ஒட்டுமொத்தமாக எல்லோரும் இவரை விமர்சிக்கின்றார்கள் என்றில்லை. டக்ளஸ் போன்றோரைத் தான் ஒட்டுமொத்தமாக எல்லோரும் விமர்சிக்கின்றார்கள். 

சுமந்திரனிற்கு தலைக்கனம், எடுத்தெறிந்து நடப்பவர், தான்தோன்றித்தனமானவர் என்று சொன்னால், அவை ஓரளவிற்கு ஏற்றுக் கொள்ளப்படக் கூடியவையே என்றே அவரின் பொதுவெளி நடவடிக்கைகளை வைத்துச் சொல்லலாம்.

ஆனால் அவர் மீது சொல்லப்படும் வேறு தீவிரமான குற்றச்சாட்டுகளை என்னாலும், என் போன்றோர்களாலும் ஏற்றுக்கொள்வது, சான்றுகள் இல்லாமல் அல்லது ஊடக தர்மம் அறவே அற்ற ஊடகங்களின் சாட்சியங்களுடன், சிரமமே.

சுமந்திரனில் இருக்கும் அதே அளவு சந்தேகம், ஒவ்வாமையே என் போன்றோருக்கு சிறீதரனிலும் இருக்கின்றது. அதனாலேயே இதில் ஒருவரை அடித்து, மற்றவரை அணைக்கும் போக்கு ஏன் என்று கேட்கத் தோன்றுகின்றது.    

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, தமிழ் சிறி said:

May be an image of 7 people, temple and hospital

May be an image of text

மானிப்பாயில்... "பார்" திறந்து வைத்த சுமந்திரனுக்கு, 
இதை சொல்ல, எந்த யோக்கியதையும் கிடையாது. 

முதலில்... உங்கள் முதுகில் உள்ள  அழுக்குகளை சுத்தம் செய்து  கொள்ளவும். 
மக்களிடம் வாங்கிய அடி காணாது என்று, ஊருக்கு உபதேசம் பண்ண வந்திட்டார்கள்.  

அண்ணையான சொல்லுறன்…

உந்த ஹோட்டல் காரன் ரூபவாகினியில மணிக்கொரு தரம் விளம்பரம் போட்டாலும் உங்கள் அளவுக்கு அவர்கள் வியாபாரத்தை பிரபல்ய படுத்தி இருக்க முடியாது🤣

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, வாலி said:

பார் பெர்மிட் வழங்கச் சிபாரிசு செய்த சமுக விரோதிகள் பாராளுமன்ற உறுப்பினராக இருக்கத் தகுதியற்றவர்கள். இந்தச் சமூகவிரோதிகளும் அவர்களது துதிபாடிகளும் மக்களால் இனங்கணப்பட்டு அவர்களது முகத்தில் காறி தூவென உமிழவேண்டும். 

அருமையான, சம்பளம் கொடுக்க கூடிய  அளவு சிறப்பான கருத்து👏

  • கருத்துக்கள உறவுகள்
39 minutes ago, ரசோதரன் said:

சுமந்திரனில் இருக்கும் அதே அளவு சந்தேகம், ஒவ்வாமையே என் போன்றோருக்கு சிறீதரனிலும் இருக்கின்றது. அதனாலேயே இதில் ஒருவரை அடித்து, மற்றவரை அணைக்கும் போக்கு ஏன் என்று கேட்கத் தோன்றுகின்றது.    

காரணங்கள் பல

1. சுமந்திரனின் வாய்.

இனப்படுகொலை வரைவிலக்கணம் முதல், புலிகள் மீது அவர் பொதுவெளியில் முன் வைத்த பல விமர்சனங்கள். 

இதுதான் புலம்பெயர் தேசத்தில் பலர் சுமனை மூர்க்கமாக எதிர்க்க காரணம். 

இன்று வரை கோஷானை சிலருக்கு யாழ் களத்தில் கண்ணில் காட்ட ஏலாது.

காரணம் புலிகளை விமர்சிப்பது.

ஆனால் கோஷான் கருத்தாளர். சுமந்திரன் மக்கள் பிரதிநிதி.

கோஷானை போல் சுமந்திரன் வாயை விட முடியாது, கூடாது.

2. சுமனின் ஈகோ, நடக்கும் பாங்கு - நீங்களே எழுதியதுதான். கூடவே மாறி மாறி ஆட்களை கவிழ்ப்பது. கட்சிக்குளே சில்லறை பொலிடிக்ஸ் செய்வது.

3. சுமன் ரணில் உள்ளே அனுப்பிய ஐந்தாம் படை என்ற சந்தேகம்.  மேலே சொன்ன சில்லறை பொலிடிக்ஸ் மூலம், தமிழர் ஒற்றுமையை ரணிலின் ஏஜெண்ட்டாக இவர் குலைக்கிறார் என்ற சந்தேகம்.

4. மதம் - மிக சிலருக்கு இது ஒரு பிரச்சனை. கேட்டால் இல்லை என்பார்கள். ஆனால் இதே ஆட்கள் சாணாக்கியனையும் கட்டம் கட்டுவார்கள். சிலவேளை அவர்களே அறியா unconscious bias ஆக இருக்கலாம் 

5. எம்மை போல் அல்லாதவர் - கோட் சூட், நல்ல ஆங்கிலம், கொழும்பு வளர்ப்பு, மீசை இல்லை - இதை ஒரு typical முதல் தலைமுறை புலம்பெயர் தமிழ் மனிதனோடு ஒப்பிட்டால் - பலத்த வித்தியாசம் இருக்கும். இந்த வேற்றுமை சந்தேகத்தை கொடுக்கிறது.

6. ஶ்ரீயின் அடிப்பொடிகள் - அவர் மீதான அட்டென்சனை திசை திருப்ப சுமனை அடிப்பது.

7.மேலே சொன்ன பலதில் ஶ்ரீ அமசடக்கியாக இருப்பதால், சுமன் அளவு மோசமானவராக இருப்பினும் அவர் வாங்குல் அடி குறைவு.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ரசோதரன் said:

நாங்கள் ஒரு ஐம்பது பேர் வரையில் மிகவும் நெருக்கமாக இருக்கின்றோம். இன்னும் ஏராளமான நம்மவர்கள் இருக்கின்றனர், ஆனால் ஐம்பது பேர்கள் ஒரு நெருங்கிய நட்பில் இருக்கின்றோம்.

கொடுத்து வைத்தவர் நீங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ரசோதரன் said:

அவர் மீது சொல்லப்படும் வேறு தீவிரமான குற்றச்சாட்டுகளை என்னாலும், என் போன்றோர்களாலும் ஏற்றுக்கொள்வது, சான்றுகள் இல்லாமல் அல்லது ஊடக தர்மம் அறவே அற்ற ஊடகங்களின் சாட்சியங்களுடன், சிரமமே.

அந்த தீவிரமான குற்றச்சாட்டுக்கள் என்னவென்று வெளியில் எடுத்து வையுங்கள், சான்றுகள் இல்லையா இருக்கா என்று பார்க்கலாம்!

1 hour ago, ரசோதரன் said:

சுமந்திரனிற்கு தலைக்கனம், எடுத்தெறிந்து நடப்பவர், தான்தோன்றித்தனமானவர் என்று சொன்னால், அவை ஓரளவிற்கு ஏற்றுக் கொள்ளப்படக் கூடியவையே

ஒரு கட்சி அங்கத்தவர், மற்ற அங்கத்தவர்களைப்போல் இயங்குகிறாரா? மற்ற உறுப்பினர்களை பாதுகாக்கிறாரா? மதிக்கிறாரா? மற்ற உறுப்பினர்களை கடைத்தெரு வியாபாரிகள்போல் பொது இடத்தில தூற்றுகிறார், பதவி விலக வேண்டுமென்கிறார், தன்னிச்சையாக முடிவெடுக்கிறார், சந்திக்கிறார், கருத்து அறிக்கை விடுகிறார், அநாகரிக வார்த்தைப்பிரயோகம். மற்றவர் ஏதாவது ஒன்று செய்தாலே பதவி விலகு, இடை நிறுத்து, நீதிமன்றம் என்று இழுத்தடித்து மற்றவர்களின் செயற்பாடுகளுக்கு இடையூறு விளைவிக்கிறார். இதை யாராவது உங்களுக்கு செய்தால்; பரவாயில்லை என்று ஏற்றுக்கொள்வீர்களா? சிறிதரனையும் சாடுகிறோம்.  தவறு செய்பவர் எல்லோரையும் விமர்ச்சிக்கிறோம். காரணம்; இது மக்களின் பிரச்சினை, அதற்காக மக்கள் இழந்தவை ஈடு செய்ய முடியாதவை! இவர்களின் ஈனச்செயலால் பாதிக்கப்படுவது, சாதாரண ஏழை மக்கள். இதற்காகவா மக்கள் இவர்களை தெரிந்தெடுத்தனர்?  

  • கருத்துக்கள உறவுகள்

சுமாவை யாரும் சும்மா வெறுக்கவில்லை , அதனால் என்ன பயன் .... ரணில் செய்யும் நரி வேலையை அவரின் வழி வந்தவர் நன்றாக செய்துவிடடார் .....சுக்கு நூறாகிவிட்டார் ....இதனை விட இந்த நரியை சிறப்பிக்க வேறு என்ன வேண்டும் ....நல்ல வார்த்தைகளில் இவரை சொல்வது கடினம் ....இது பொது வெளி   

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.