Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஜேர்மனியில் நத்தார் கடைகளுள் வாகனம் புகுந்ததால் பலர் படுகாயம்.

ஒரு குழந்தை மரணமானதாகவும் 15 பேர்வரை படுகாயமடைந்ததாகவும் 68 பேர்வரை காயமடைந்துள்ளனர் என்றும் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

தாக்குதலில் ஈடுபட்டவர் சவுதி அரேபியாவைச் சேர்ந்த ஒரு டாக்ரர் என சந்தேகிக்கப்படுகிறது.

https://www.cnn.com/world/live-news/magdeburg-germany-christmas-market-deaths-12-20-24/index.html

 

  • கருத்துக்கள உறவுகள்

சவுதி அரேபியா 50 வயதான டொக்டரின் ஜிஹாத் தாக்குதல். 2006 தொடக்கம் இவர்  யேர்மனியில் வசிக்கின்றாராம் டொக்டர் கருப்பு நிற பிஎம்டபிள்யு யேர்மன் காரினால் மக்களை தாக்கினாராம். 2016 லும் இது மாதிரி நத்தார் கடை வாகன தாக்குதல் யேர்மனியில் ஒரு முஸ்லிம் மதத்தவரால் நடத்தபட்டு 12 பேர் கொல்லபட்டனரராம்
கந்தையா அண்ணா நத்தார் கடைபக்கம் போகாமல் சாதாரண சுப்பமாக்கெட்டில்  தேவையான பொருட்களை வாங்க வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

சிறியர், சாமியார், கந்தையர், பாஞ் மற்றும் ஜெர்மன் வாழும் கள  உறவுகள் பாதுகாப்பாக இருக்கிறீர்களா?

  • கருத்துக்கள உறவுகள்

ஜேர்மனியில் கிறிஸ்மஸ் சந்தையில் பொதுமக்கள் மீது வாகனத்தால் மோதிய நபர் – சவுதிமருத்துவர்- தனித்து செயற்பட்டுள்ளார்

21 DEC, 2024 | 08:15 AM
image

ஜேர்மனியில் கிறிஸ்மஸ் சந்தையில் பொதுமக்கள் மீது காரை செலுத்தி உயிரிழப்புகளை ஏற்படுத்திய நபர் தனியாக செயற்பட்டுள்ளார் என சம்பவம் இடம்பெற்ற சக்சனி அல்ஹாட் மாநிலத்தின் உள்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இது மாநிலத்திற்கும் அதன் தலைநகரிற்கும் துயரமான நாள்,இருவர் உயிரிழந்துள்ளனர் பலர் காயமடைந்துள்ளனர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

குற்றவாளி கைதுசெய்யப்பட்டுள்ளார் இவர் சவுதி அரேபியாவை சேர்ந்த 50 வயது நபர்,2006 இல் ஜேர்மனிக்கு வந்த இவர் நிரந்தர வதிவிட ஆவணத்தை பெற்றவர் என தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் இவர் மக்டர்பேர்க்கிலிருந்து 35 கிலோமீற்றர் தொலைவில் உள்ள பேர்ன்பேர்க்கில் மருத்துவராக பணிபுரிந்திருந்தார்.

எங்களிற்கு கிடைத்த தகவலின்படி அவர் தனியாக இந்த வன்முறையில் ஈடுபட்டுள்ளார்,வேறு எவரும் இணைந்து செயற்பட்டதாக தகவல் இல்லை,என சம்பவம் இடம்பெற்ற மாநிலத்தின் உள்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

https://www.virakesari.lk/article/201779

  • கருத்துக்கள உறவுகள்

ஜேர்மனிக்கென்று ஒரு குணமுண்டு ,

அகதியென்று வந்து அமைதியாக அந்தநாட்டு மக்களை எந்த தொந்தரவும் பண்ணாமல் தானுண்டு தன் வேலையுண்டு என்று அமைதியாக வாழ்கிறவர்களை நிரந்தர வதிவிட அனுமதி வழங்காமல் ஓட ஓட குடும்பம் குடும்பமாக நாட்டைவிட்டு விரட்டுவார்கள்,

ஆளுக்கு பத்து பிள்ளை பெத்துக்கொண்டு, அகதி காசில் வண்டியோட்டிக்கொண்டு, அல்லாவின் பெயரால் குண்டு,கத்தி குத்து, லொறி கார் ஏத்தி நசுக்கு, சரமாரி துப்பாக்கிசூடு என்று  ஜேர்மன்காரனுக்கே ஆப்படிக்குறவர்களுக்கு நிரந்தர அனுமதியை கொத்து கொத்தாக அள்ளி வழங்குவார்கள்.

இது ஜேர்மனி பெற்ற வரமா இல்லை வேண்டி பெற்ற சாபமா ஜேர்மனிக்கே வெளிச்சம்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஏராளன் said:

குற்றவாளி கைதுசெய்யப்பட்டுள்ளார் இவர் சவுதி அரேபியாவை சேர்ந்த 50 வயது நபர்,2006 இல் ஜேர்மனிக்கு வந்த இவர் நிரந்தர வதிவிட ஆவணத்தை பெற்றவர் என தெரிவித்துள்ளார்.

இது அவர்களது இரத்தத்தில் ஊறிய குணமாக இருக்கலாம். தமது நாட்டிலேயே சிறு சிறு குற்றங்களுக்கெல்லாம் கையை துண்டிப்பது, காலை வெட்டுவது, தலையை கொய்வது. வீட்டுப்பழக்கந்தான் போகிற இடத்திலும் வரும்.  

  • கருத்துக்கள உறவுகள்

ஜேர்மனியில் கிறிஸ்மஸ் சந்தையில் பொதுமக்கள் மீது காரை செலுத்தி உயிரிழப்புகளை ஏற்படுத்திய நபர் தனியாக செயற்பட்டுள்ளார் என சம்பவம் இடம்பெற்ற சக்சனி அல்ஹாட் மாநிலத்தின் உள்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். ]

தனி தனி நபர்களாக ஜிஹாத் நடத்தி காபீர்களின் பிரதேசமான மாநிலத்தை சக்சனி அல்ஹாட் என்று மாற்றி விட்டனர் 😟

  • கருத்துக்கள உறவுகள்
44 minutes ago, விளங்க நினைப்பவன் said:

தனி தனி நபர்களாக ஜிஹாத் நடத்தி காபீர்களின் பிரதேசமான மாநிலத்தை சக்சனி அல்ஹாட் என்று மாற்றி விட்டனர் 😟

ஒவ்வொரு தனி இசுலாமியர்களும் ஒவ்வொரு ஜிஹாத் தானே. 

  • கருத்துக்கள உறவுகள்

இவர் தன்னை சவூதி அரேபியாவில் நடக்கும்  முஸ்லிம் மதத்தின் அடக்கு முறைக்கு எதிரானவராகவும் பெண்கள் உரிமையை அனுமதிப்பவராகவும் யேர்மனியில் காட்டி கொண்டாராம். அதன் மூலம் யேர்மனியர் கவனத்தை பெற்றாராம்

அநுரகுமார திசாநாயக்கவும் தமிழர்களுக்கு இப்படி தான் காட்டபடுகின்றார்

  • கருத்துக்கள உறவுகள்

IMG-7912.webp
அவனது பெயர்
ராலெப் (Taleb A). சவுதி அரேபியாவில் 1974ம் ஆண்டு பிறந்தவன். 50 வயதான ராலெப் யேர்மனியில் நிரந்தர வதிவிட அனுமதி பெற்று, யேர்மனியில் பேர்ன்பர்க்கில்  Bernburg உள்ள வைத்தியசாலையில் மனநல மருத்துவம் மற்றும் உளவியல் சிகிச்சையில் நிபுணராக பணியாற்றுகிறான்.

யேர்மனி சமூக ஊடகங்களில் இஸ்லாத்திற்கு எதிராக ராலெப் தன்னை வெளிக்காட்டிக் கொண்டிருந்தான். அத்துடன் வளைகுடா நாடுகள் மீதான தனது எதிர்ப்பையும் சமூக ஊடகங்களில் பகிர்ந்து கொண்டிருந்தான்.

‘நல்ல இஸ்லாம் என்று எதுவும் இல்லைஎன்பது ராலெப்பின் வாதமாக இருந்தது. 2019 யூன் மாதம், பிராங்பேர்ட் நகரத்தில் இருந்து வரும் பத்திரிகை   (Frankfurter Allgemeine Zeitung) இஸ்லாம் மற்றும் சவுதி அரேபியாவில் பெண்களின் நிலைமை பற்றி  ராலெப்புடன் ஒரு நீண்ட நேர்காணலை நடத்தியது, இஸ்லாத்தை மிகவும் கடுமையாக விமர்சித்து தான் இஸ்லாத்தை விட்டு  எப்பொழுதோ விலகி விட்டேன் என்று அந்த நேர்காணலில் ராலெப் சொல்லியிருந்தான்.

சவுதியில் இருந்து வந்த புலம்பெயர் சமூகத்தில் யேரமனியில் ஒரு முக்கியமான ஆளாக ராலெப் இருந்தான். சவூதி அரேபியாவைச் சேர்ந்த பெண்களுக்கான விழிப்புணர்வு அவர்களது உரிமைகள் பற்றி அதிகம் பேசினான். அவர்கள் நாட்டை விட்டு வெளியேறுவதற்கான தேவைகளை பற்றி பெரிதாக அக்கறை கொண்டிருந்தான்.

ராலெப் பற்றிய தகவல்கள் இப்படியாக இருக்கையில் அவன் 21.12.2024 சனிக்கிழமை காலை ஒரு வாடகைக் காரில் ஏறி, மாக்டேபர்க்  (Magdeburg) கிறிஸ்துமஸ் சந்தையில் மக்கள் கூட்டத்திற்குள் வேகமாகக் காரை ஓட்டி ஒரு சிறு குழந்தை உட்பட குறைந்தது நான்கு பேர்களைக் கொன்றிருக்கின்றான். 200 பேர்களுக்கு மேல் காயப் படுத்தியிருக்கின்றான். போலீசார் அவனது காரைத்  தடுத்து நிறுத்தி அவனைக் கைது செய்திருக்கின்றார்கள். ராலெப் மீது நடத்தப்பட்ட சோதணையில் அவன் போதை மருந்து உட்கொண்டிருப்பதாக வைத்திய அறிக்கை வெளிவந்திருக்கின்றது.

இன்று நடந்த  இந்த அனர்த்தத்தால், யேர்மனியில் இந்த வருட கிறிஸ்மஸ் சந்தை இன்றுடன் நிறைவுக்கு வருகிறது. இந்தச் சம்பவம் சம்பந்தமாக பொது மக்களோடான நேர்காணலில், அதிகளவான இஸ்லாமியர்களுக்கு அன்று புகலிடம் தந்த அன்றைய கன்ஸிலர் அஞ்சலா மேர்க்கலை பலர் திட்டித் தீர்ப்பதைக் காண முடிகிறது.   

யேர்மனியில் இந்த வாரம்தான்  நம்பிக்கையில்லாத தீர்மானத்தில் நடந்த வாக்கெடுப்பில் ஆட்சி கலைக்கப்பட்டு பெப்ரவரி 23ந் திகதி தேர்தல் நடத்தத் தீர்மானிக்கப்பட்டிருந்தது. இன்று நடந்த இந்தச் சம்பவம் தேர்தலில் கண்டிப்பாக எதிரொலிக்கும்.

 

 

  • கருத்துக்கள உறவுகள்

Associated Press (AP)  ன் வெள்ளையடிப்பைக் கண்டித்திருக்கும் எலோன் மஸ்க். 

🤣

ஜேர்மனி அதிபரை பதவி விலகச் சொல்லும் எலன் மஸ்க் 

Edited by Kapithan

  • கருத்துக்கள உறவுகள்

சவுதிஅரேபியா   ஏற்கனவே ஜேர்மனியை எச்சரிக்கை செய்திருக்கிறதாகத் தகவல்கள் வெளிவந்துள்ளன. 

Saudi Arabia warned Germany ahead of Christmas market ramming, source claims

 

https://m.jpost.com/breaking-news/article-834294

  • கருத்துக்கள உறவுகள்

ஜேர்மனியின் கிறிஸ்துமஸ் சந்தையில் கார் தாக்குதல்!

ஜேர்மனியின் கிறிஸ்துமஸ் சந்தையில் கார் தாக்குதல்!

ஜேர்மனியின் கிழக்குப் பகுதியில் உள்ள மாக்டேபர்க் (Magdeburg) நகரில் கிறிஸ்துமஸ் சந்தையில் மக்கள் கூட்டத்தின் மீது கார் மோதியதில் ஒன்பது வயது மற்றும் நான்கு வயோதிபர்கள் உயிரிழந்துள்ளனர்.

வெள்ளிக்கிழமை (20) மாலை வேண்டுமென்றே மேற்கொள்ளப்பட்ட இந்த தாக்குதலில் குறைந்தது 200க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர், அவர்களில் குறைந்தது 41 பேர் ஆபத்தான நிலையில் உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

தாக்குதலையடுத்து வெள்ளிக்கிழமை அந் நாட்டு நேரப்படி இரவு 07:00 மணிக்குப் பின்னர் சுமார் 100 பொலிஸார், வைத்தியர்கள், தீயணைப்பு வீரர்கள் மற்றும் 50 மீட்புப் பணியாளர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்ததாக நகர அதிகாரிகள் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் சவூதி அரேபியாவைச் சேர்ந்த 50 வயதுடையவர் என்றும் அவர் 2006 ஆம் ஆண்டு முதல் ஜேர்மனியில் வசித்து வருவதாகவும் அருகிலுள்ள நகரமொன்றில் வைத்தியராக பணியாற்றி வருவதாகவும் ஜேர்மன் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சந்தேக நபர் ஒரு மனநல மருத்துவர் ஆவார், அவர் மாக்டேபர்க்கிற்கு தெற்கே 40 கிலோ மீற்றர் தொலைவில் உள்ள பேர்ன்பர்க்கில் வசித்து வந்தார்.

2006 இல் ஜெர்மனிக்கு வருதை கதந்த அவர் 2016 இல் அகதியாக அங்கீகரிக்கப்பட்டார்.

மேலும், ஜேர்மன் அதிகாரிகளின் கூற்றுப்படி சந்தேக நபர் தனியாகவே இந்த தாக்குதலை நடத்தியுள்ளார்.

எனினும், தாக்குதலின் பின்னணியில் உள்ள சாத்தியமான நோக்கம் குறித்து அதிகாரிகள் எந்த தகவலையும் வெளியிடவில்லை.

மேலும், அவருக்கு இஸ்லாமிய தீவிரவாதத்துடன் எந்த தொடர்பும் இல்லை எனவும், அவர் கடந்த காலத்தில் சமூக ஊடகங்களில் இஸ்லாத்தை விமர்சித்துள்ளதாகவும் கண்டறியப்பட்டுள்ளது.

https://athavannews.com/2024/1413409

  • கருத்துக்கள உறவுகள்

திடீரென பாரிய சத்தத்தையும் கண்ணாடிகள் நொருங்கும் சத்தத்தையும் கேட்டேன் - ஜேர்மனியின் கிறிஸ்மஸ் சந்தை கார் தாக்குதலை நேரில்பார்த்தவர்கள்

23 DEC, 2024 | 01:13 PM
image

bbc

ஜேர்மனியின் மக்டெபேர்க் கிறிஸ்மஸ் சந்தையில் பெருமளவில் திரண்டிருந்த மக்களை இலக்குவைத்து நபர் ஒருவர் தனது காரால் மோதிய தருணம் குறித்தும் அதன் பின்னர் அங்கு காணப்பட்ட நிலைமை குறித்தும் சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் ஊடகங்களிற்கு தெரிவித்துள்ளனர்.

ஜேர்மனியின்மக்டெபேர்க் சந்தையில் பொதுமக்கள் மீது நபர் ஒருவர் காரால் மோதிய தருணம் குறித்து 32 வயது பெண்ணொருவர் விபரித்துள்ளார்.

தனது ஆண் நண்பருடன் அந்த பகுதியில் நடமாடிக்கொண்டிருந்தவேளை கார் தங்களை நோக்கி வேகமாக வந்தது என அந்த நபர்தெரிவித்துள்ளார்.

JoQH17p.jpg

அவரின் மீது கார் மோதியது எனது கரங்களில் இருந்து இழுத்துச்சென்றது  அது பயங்கரமான நிமிடம் என 32 வயது நடின் ஜேர்மனியின் பில்ட் செய்தித்தாளிற்கு தெரிவித்துள்ளார்.

நடினின் ஆண் நண்பரிற்கு காலிலும் தலையிலும் காயங்கள் ஏற்பட்டுள்ளன.

நான்; கிறிஸ்மஸ் கீதங்களை எனது சினேகிதியின் குடும்பத்தவர்களுடன்  செவிமடுத்துக்கொண்டிருந்தவேளை பாரிய சத்தமும் கண்ணாடிகள் சிதறும் சத்தமும் கேட்டது என கியானி வார்சேச்சா என்பவர் பிபிசிக்கு தெரிவித்துள்ளார்.

நான் மக்கள் பதற்றமடைவதை பார்த்தேன்,காரையும் மக்கள் இரத்தக்காயங்களுடன் வீழ்;ந்து கிடப்பதையும் பார்த்தேன் காயமடைந்தவர்களில் சிறுவர்கள் காணப்பட்டனர் என அவர் தெரிவித்துள்ளார்.

நான் காயப்பட்டவர்களிற்கு முதலுதவியை வழங்குவதில் கவனம் செலுத்தினேன்,ஒரு சில நிமிடங்களில் மருத்துவ உதவிக்குழுக்கள் வந்துவிட்டன ஆனால் அது போதுமானதல்ல 200 பேர் வரை காயமடைந்திருந்தனர் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

காயமடைந்தவர்களிற்கு பொதுமக்களே அதிகளவில் முதலுதவியை வழங்கினார்கள் என அவர் பிபிசிக்குதெரிவித்துள்ளார்.

Gfdfy9TXgAAdWKi.jpg

எங்கும் அம்புலன்ஸ்கள் காணப்பட்டன பொலிஸார் காணப்பட்டனர் தீயணைப்பு வீரர்கள் காணப்பட்டனர்,பெரும் குழப்பநிலை காணப்பட்டது நிலத்தில் இரத்தத்தை கண்டேன்,என எம்டிஆர் நிருபர் லார்ஸ் ப்ரோமுல்லர் தெரிவித்துள்ளார்.

பெரும் குழப்பநிலை காணப்பட்டது,நாங்கள் தரையில் இரத்தத்தை பார்த்தோம் மக்கள் ஒருவருக்கொருவர் சுற்றி அமர்ந்திருப்பதையும்,மருத்துவர்கள் முதலுதவி வழங்குவதையும்,நாங்கள் பார்த்தோம் என அவர் தெரிவித்துள்ளார்.

இது பெரும் அதிர்ச்சி மிகப்பெரும் அதிர்ச்சி  மக்டபேர்க்கிற்கும்  சக்சனி அன்ஹால்டில் உள்ள அனைவருக்கும் பெரும் அதிர்ச்சி என அவர் தெரிவித்துள்ளார்.

https://www.virakesari.lk/article/201954

  • கருத்துக்கள உறவுகள்
On 21/12/2024 at 14:37, Kapithan said:

ஜேர்மனி அதிபரை பதவி விலகச் சொல்லும் எலன் மஸ்க் 

ஜேர்மனிக்கான மாற்று என்று ஜேர்மனியில் தீவிர வலதுசாரிக் கட்சியாக இருக்கும் கட்சிதன் AfD. எலன் மஸ்க்  இந்தக் கட்சிக்கு ஆதரவாகக் குரல் கொடுக்கிறார். 

எலன் மஸ்க் ஜேர்மனிய அரசியலில் மூக்கை நுளைப்பதால், டிரம்பின் அமைச்சரவையில் உள்ள ஆலோசனைப் பதவி அவருக்குப் போதுமானதாக இல்லையோ தெரியவில்லை

 அவர் யேர்மன் கன்ஸிலர் ஸ்கோல்ஸை "திறமையற்ற முட்டாள்" என்று அழைக்கிறார். AfD இல் உள்ள பலர் Gruenheide இல் உள்ள எலன் மஸ்க்கின் (Tesla )டெஸ்லா தொழிற்சாலைக்கு எதிராக இருப்பது கூட அவருக்குத் தெரியவில்லை.  இங்கே யார் முட்டாள்?

எலன் மஸ்க், டிரம்ப் இருவரையும் மாஸுக்கு கொண்டே விட்டு விட்டு வந்தால் நல்லது.

 

43 minutes ago, Kavi arunasalam said:

எலன் மஸ்க் ஜேர்மனிய அரசியலில் மூக்கை நுளைப்பதால், டிரம்பின் அமைச்சரவையில் உள்ள ஆலோசனைப் பதவி அவருக்குப் போதுமானதாக இல்லையோ தெரியவில்லை

 

எலன் மஸ்க் பணத் திமிரில் ஜேர்மன் விடயத்தில் மட்டுமலாமல் பல நாட்டு அரசியலுக்குள் மூக்கை நுளைக்கிறார். இந்த மாத ஆரம்பத்தில் பரிசில் நடைபெற்ற தேவாலையத் திறப்பு விழாவுக்கு ஏறத்தாள அழையா விருந்தாளியாக நுளைந்திருந்தார். டிரம்ப் சீனாவுடனான வர்த்தகச் சச்சரவில் இவர் எதிரான நிலைப்பாடுள்ளவராக உள்ளார். பார்க்கலாம், யானைக்கும் அடிசறுக்கும். இல்லாவிட்டால் இன்னும் நான்கு வருடங்களுக்கு இவரது தொல்லை தொடரும்.

  • கருத்துக்கள உறவுகள்
On 20/12/2024 at 23:38, விளங்க நினைப்பவன் said:

சவுதி அரேபியா 50 வயதான டொக்டரின் ஜிஹாத் தாக்குதல். 2006 தொடக்கம் இவர்  யேர்மனியில் வசிக்கின்றாராம் டொக்டர் கருப்பு நிற பிஎம்டபிள்யு யேர்மன் காரினால் மக்களை தாக்கினாராம். 2016 லும் இது மாதிரி நத்தார் கடை வாகன தாக்குதல் யேர்மனியில் ஒரு முஸ்லிம் மதத்தவரால் நடத்தபட்டு 12 பேர் கொல்லபட்டனரராம்
கந்தையா அண்ணா நத்தார் கடைபக்கம் போகாமல் சாதாரண சுப்பமாக்கெட்டில்  தேவையான பொருட்களை வாங்க வேண்டும்.

நான் இருப்பது  இந்த இடத்திலிருந்து  400. கிலோமீட்டர் அப்பால்.   

நன்றிகள் பல.  .    ...🙏.     

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Kandiah57 said:

நான் இருப்பது  இந்த இடத்திலிருந்து  400. கிலோமீட்டர் அப்பால்.   

🙏

12 hours ago, Kavi arunasalam said:

அவர் யேர்மன் கன்ஸிலர் ஸ்கோல்ஸை "திறமையற்ற முட்டாள்" என்று அழைக்கிறார்.

11 hours ago, இணையவன் said:

எலன் மஸ்க் பணத் திமிரில் ஜேர்மன் விடயத்தில் மட்டுமலாமல் பல நாட்டு அரசியலுக்குள் மூக்கை நுளைக்கிறார்.

எலன் மஸ்க்கின் மோசமான செயல்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.