Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

Published By: VISHNU

21 DEC, 2024 | 01:59 AM
image

இந்தியாவுக்கும் இலங்கைக்குமான நோர்வே தூதுவரை H.E. May-Elin Stener, 20ஆம் திகதி வெள்ளிக்கிழமை சந்தித்து எமது மக்களின் பல முக்கிய விடயங்கள் மற்றும் சமகால அரசியல் தொடர்பாக தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியனும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான ம. சுமந்திரனுடன் சந்தித்து கலந்துரையாடினர்.

https://www.virakesari.lk/article/201775

  • கருத்துக்கள உறவுகள்
Posted

சிறியரிடம் தூது போகச்சொல்லிக் கேட்டவையோ...

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
58 minutes ago, alvayan said:

சிறியரிடம் தூது போகச்சொல்லிக் கேட்டவையோ...

சிறியரிடம் நோர்வே தூதுவர்  தூது போய்,  அவர் சொல்வதை சிறியர்,  “என்னவாம்” என்று முழுச அதை  மொழிபெயர்கக சாணக்கியன் கூட போகவேண்டிவரும். 😂

Edited by island
  • Haha 2
  • Downvote 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

வெளிநாட்டுத் தூதுவர்களுடன் தனிச்சந்திப்புகளை எப்படி நடத்துவதென பயிற்சியளிக்கப்படுகிறது.  மல்லுக்கு நிற்பவர்கள் போலிருக்கிறது இருவரையும் பார்க்க.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

நோர்வேயும் சரி சுமத்ரனும் சரி சாணக்கி இந்த மூன்றும் இதுவரை தமிழர்களுக்கு துன்பமே விளைவித்து உள்ளார்கள் அதை உணர்ந்த வடகிழக்கு தமிழர்கள்  சுமத்தினுக்கும் தேர்தலில் தோல்வியை கொடுத்து உள்ளார்கள் 14வருடம் ஒன்றும் செய்ய முடியாத கூட்டம் தோல்வியை மறக்க மது அருந்த கூடிய கூட்டம் கலந்துரையாடல் என்று அடித்து விட்டு இருக்கினம் 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
5 minutes ago, பெருமாள் said:

நோர்வே தமிழ் மக்களுக்கு  ஒரு துன்பமும் விளைவிக்க வில்லை. யானை தன் தலையில் மண் அள்ளிப் போட்டது தான் நடந்தது. 

14 வருட அரசியல்வாதிகளின் காலத்தை  விட தமிழ் மக்களுக்கு மிக மிக  அதிக துன்பங்களை அதற்கு முன்னரே அனுபவித்துவிட்டார்கள்.  அதை மறைக்கவே 14 வருட அரசியல்வாதிகள் மீது முழுப்பழியும் போடப்படுகிறது.  தமிழ் மக்களின் அரசியலுக்கு  தலைமை தாங்கியவர்கள் ஏற்படுத்திய அவல நிலையை போக்க பெருமாள் போன்ற ஜாம்பவான்களாலே முடியாத போது இந்த அரசியல்வாதிகள் எம்மாத்திரம். 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 minute ago, island said:

நோர்வே தமிழ் மக்களுக்கு  ஒரு துன்பமும் விளைவிக்க வில்லை. யானை தன் தலையில் மண் அள்ளிப் போட்டது தான் நடந்தது. 

நோர்வேயின் உறுதிப்பாட்டில் தான் புலிகளின் அரசியல் குழு முக்கியஸ்த்தர்கள்  சரணடைந்தவர்கள் கடைசியில் என்ன நடந்தது ? அந்த நீண்ட அரசியலின் தாக்கத்தை உருவாக்கியவர்கள் யார் ? இதை புரிந்து கொள்ளாமல் வழமையான தமிழ் தேசிய எதிர்ப்பை காட்டுவதில் நீங்க கில்லாடி பாஸ் .

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 hours ago, பெருமாள் said:

நோர்வேயின் உறுதிப்பாட்டில் தான் புலிகளின் அரசியல் குழு முக்கியஸ்த்தர்கள்  சரணடைந்தவர்கள் கடைசியில் என்ன நடந்தது ? அந்த நீண்ட அரசியலின் தாக்கத்தை உருவாக்கியவர்கள் யார் ? இதை புரிந்து கொள்ளாமல் வழமையான தமிழ் தேசிய எதிர்ப்பை காட்டுவதில் நீங்க கில்லாடி பாஸ் .

எங்கள் தவறுகளை அடையாளம் காணும்வரை பிறரை நாம் குற்றம் சொல்ல முடியாது. 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
35 minutes ago, Kapithan said:

எங்கள் தவறுகளை அடையாளம் காணும்வரை பிறரை நாம் குற்றம் சொல்ல முடியாது. 

அப்ப நோர்வேயை நம்பாமல் புலிகளின்  அரசியல் முக்கியஸ்த்தர்கள் தொடர்ந்து இறுதிவரை சண்டை போட்டு இருக்கணும் என்கிறிர்கள் அப்படியா?

  • கருத்துக்கள உறவுகள்
Posted
37 minutes ago, பெருமாள் said:

அப்ப நோர்வேயை நம்பாமல் புலிகளின்  அரசியல் முக்கியஸ்த்தர்கள் தொடர்ந்து இறுதிவரை சண்டை போட்டு இருக்கணும் என்கிறிர்கள் அப்படியா?

சண்டையை ஆரம்பிக்க வேண்டாம் என்றுதான் நோர்வே  சொன்னது. ஆரம்பித்த சண்டைய நிறுத்தும்படி சொன்னதும் நோர்வேதான். இல்லை, நாங்கள் சண்டைதான் பிடிப்போம் என்று ஒற்றைக்காலில் நின்றது நாம்தான். இப்போது தட்டை மாற்றிப்போடுகிறீர்கள். 

சொல்ஹெய்ம் மீது எனக்கும் கோவம் இருந்தது. ஆனால் அவரின் பல கூற்றுக்களின் அர்த்தம்  காலப்போக்கில்தான் புரிந்துகொள்ள முடிகிறது. 

தவறுகளில் இருந்து பாடம் படிக்காத இனம் விடுதலைக்குத்  தகுதியற்றது. 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

கசங்கின சட்டையுடன் சுமந்திரன் நிற்கின்றாரே என்று இன்னொரு சந்திப்பை பற்றி இங்கு களத்தில் கருத்து எழுதும் போது நாங்கள் எழுதியிருந்தோம்.................... உடனேயே எங்களின் குறை தீர்க்கப்பட்டுவிட்டது.............🤣.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
28 minutes ago, ரசோதரன் said:

கசங்கின சட்டையுடன் சுமந்திரன் நிற்கின்றாரே என்று இன்னொரு சந்திப்பை பற்றி இங்கு களத்தில் கருத்து எழுதும் போது நாங்கள் எழுதியிருந்தோம்.................... உடனேயே எங்களின் குறை தீர்க்கப்பட்டுவிட்டது.............🤣.

சாணக் +சுமந் VS சிறீதரன் கூட்டு. 

யார் யாரை அதிகம் சந்திப்பது என்பதில் போட்டி.  

  • கருத்துக்கள உறவுகள்
Posted
58 minutes ago, பெருமாள் said:

அப்ப நோர்வேயை நம்பாமல் புலிகளின்  அரசியல் முக்கியஸ்த்தர்கள் தொடர்ந்து இறுதிவரை சண்டை போட்டு இருக்கணும் என்கிறிர்கள் அப்படியா?

இனக்கலவரம் என்றபோர்வையில் தமிழினப் படுகொலைகள் நடந்தபோதெல்லாம் எங்களுக்கு எதுவும் நடக்கவில்லையே என்று தப்பிக் கண்களை மூடிக்கொண்டு இருந்தவர்கள் இன்று கண்விழித்துவிட்டார்கள்.😳

  • கருத்துக்கள உறவுகள்
Posted
4 hours ago, பெருமாள் said:

நோர்வேயின் உறுதிப்பாட்டில் தான் புலிகளின் அரசியல் குழு முக்கியஸ்த்தர்கள்  சரணடைந்தவர்கள் கடைசியில் என்ன நடந்தது ? அந்த நீண்ட அரசியலின் தாக்கத்தை உருவாக்கியவர்கள் யார் ? இதை புரிந்து கொள்ளாமல் வழமையான தமிழ் தேசிய எதிர்ப்பை காட்டுவதில் நீங்க கில்லாடி பாஸ் .

உரிய நேரத்தில் முடிவெடுத்து அறிவிக்காமல் தலைக்கு மேல் வெள்ளம் போனபின் நள்ளிரவில் அறிவித்தால் உலகில் எவராலும் இந்த Guarntee, warranty எல்லாம்  கொடுக்க முடியாது. அதற்கு நேரமும் கிடைத்திருக்காது.  ( கடைசி ஆறு மாதங்களில்  இணைத்தலைமை நாடுகள் அதை பல முறை வலியுறுத்தின. அப்போது அதை செய்திருந்தால் கோட்டாவால் அதை செய்திருக்க முடியாது. 

சரணடைந்தது நோர்வேயிடம் அல்ல. மிக மோசமான  கோட்டாவின் படையிடம்.  சரண்டைந்தவர்களை கொல்லும் மகா பாதகத்தை செய்தவர் அவரே. 

ஆனால் அதற்கும் தமிழரின் உரிமை போர் தோல்வியடைந்ததற்கும் எந்த சம்பந்தமும்  இல்லை. 

ஆகவே நோர்வே தமிழருக்கு துன்பம் விளைவித்தனர் என்ற உங்கள் கூற்று தவறானது. யாரையோ காப்பாற்ற  மீண்டும் மீண்டும் தமிழருக்குள் மட்டும் பேசப்படும் பொய் அது. 

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
9 hours ago, island said:

சிறியரிடம் நோர்வே தூதுவர்  தூது போய்,  அவர் சொல்வதை சிறியர்,  “என்னவாம்” என்று முழுச அதை  மொழிபெயர்கக சாணக்கியன் கூட போகவேண்டிவரும். 😂

அனுரா சிங்களத்திலயும்,மோடி ஹிந்தியிலயும் பேசி பல்லாயிரம் மக்களின் கைதட்டலை பெறும் பொழுது நம்ம சிறியர் நோர்வே காரனுடன் பேசுவதற்கு நோர்வே பாசை தேவையோ ...😅

8 hours ago, island said:

நோர்வே தமிழ் மக்களுக்கு  ஒரு துன்பமும் விளைவிக்க வில்லை. யானை தன் தலையில் மண் அள்ளிப் போட்டது தான் நடந்தது. 

14 வருட அரசியல்வாதிகளின் காலத்தை  விட தமிழ் மக்களுக்கு மிக மிக  அதிக துன்பங்களை அதற்கு முன்னரே அனுபவித்துவிட்டார்கள்.  அதை மறைக்கவே 14 வருட அரசியல்வாதிகள் மீது முழுப்பழியும் போடப்படுகிறது.  தமிழ் மக்களின் அரசியலுக்கு  தலைமை தாங்கியவர்கள் ஏற்படுத்திய அவல நிலையை போக்க பெருமாள் போன்ற ஜாம்பவான்களாலே முடியாத போது இந்த அரசியல்வாதிகள் எம்மாத்திரம். 

நோர்வே பலஸ்தீன மக்களுக்கே துன்பம் விளைவிக்கவில்லை பிறகு எப்படி எங்கன்ட மக்களுக்கு துன்பம் விளைவிப்பினம் ....யாசீர் அரபாத்துக்கு சமாதனத்திற்கான நோபல் பரிசு கொடுத்து அந்த அமைப்பை ...விலாசம் இல்லாமல் பண்ணிய பெருமை அவர்களுக்கு உண்டு என நான் நம்புகிறேன்

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இறையாண்மை உடைய ஒர் அரசாங்கத்தினாலயே  இந்தியாவின் அனுசாரணை இன்றி ஆட்சி செய்ய முடியாமல் இருக்கின்றது இதில எங்கயோ இருக்கும் (சமாதான வெடிகுண்டை மடியில் வைத்திருக்கும் )நோர்வேயினால் என்ன தான் செய்ய முடியும் ...ஏதாவது மீன் பிடி உபகர்ணங்களை வழங்குவதை தவிர வேறு எதையும் செய்ய முடியாது ..உலக அரசியலில் ...

Posted
10 hours ago, island said:

சிறியரிடம் நோர்வே தூதுவர்  தூது போய்,  அவர் சொல்வதை சிறியர்,  “என்னவாம்” என்று முழுச அதை  மொழிபெயர்கக சாணக்கியன் கூட போகவேண்டிவரும். 😂

இல்லாவிட்டால் ட்ரம்ப் கிந்தி பேசினது போல் பேச வேண்டும். பறவாயில்லையா??😁

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, putthan said:

அனுரா சிங்களத்திலயும்,மோடி ஹிந்தியிலயும் பேசி பல்லாயிரம் மக்களின் கைதட்டலை பெறும் பொழுது நம்ம சிறியர் நோர்வே காரனுடன் பேசுவதற்கு நோர்வே பாசை தேவையோ .

 சிறியரிடம்  நோர்வே தூதுவரே தூது போவார் என்ற ஜோக்கை ரசித்து விட்டு மெளனமாக  கடந்து வந்தால்,  அந்த ஜோக்கிற்கு  பதிலான   எனது ஜோக்கையும் ரசித்து விட்டு செல்ல வேண்டியது தான். 

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

தற்போது இலங்கையிலுள்ள சிறுபான்மையினருக்கு ஏற்பதான உலக புறச்சூழல் ஏற்பட்டு வருகிறது, இதனை தமிழ் தரப்பு சரியாக பயன்படுத்துவது போலவே தெரிகிறது (Campaign positioning), ஒரு புறம் இந்தியாவிற்கு கஜேந்திரன் கடிதம், மறுபுறம் சாணக்கியன் நோர்வே, என பலதரப்புடனும் எமது பிரச்சினையினை பேசுவதற்கான புறச்சூழல் உருவாகி உள்ளது, இதில் சீன தரப்புடனும் நாம் பேச வேண்டும் சீனத்தரப்பும் தற்காலத்தில் தமிழ் மக்களுடன் பேசுவதற்கு ஆரவம் காட்டி வருகின்றனர் ( இதனை முன்பு கோசான் குறிப்பிட்டதாக நினைவுள்ளது).

இந்த Campaign position  ஒரு ஒழுங்குபடுத்த பட்டதாக இருக்க வேண்டும் என கருதுகிறேன் ஒரு ஜெனரல் போரை திட்டமிட்டு அதனை நெறிப்படுத்தி அதனை நிறைவேற்றுவது போல.

இந்த நிலையினை ஏற்படுத்துவதற்கு அனைத்து தமிழ்க்கட்சிகளும் ஒரு பொது திட்டத்துடன் செயற்பட வேண்டும், இது தமிழர்களின் பேரம் பேசும் நிலையினை ஏற்படுத்தும் என கருதுகிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, putthan said:

நோர்வே பலஸ்தீன மக்களுக்கே துன்பம் விளைவிக்கவில்லை பிறகு எப்படி எங்கன்ட மக்களுக்கு துன்பம் விளைவிப்பினம் ....யாசீர் அரபாத்துக்கு சமாதனத்திற்கான நோபல் பரிசு கொடுத்து அந்த அமைப்பை ...விலாசம் இல்லாமல் பண்ணிய பெருமை அவர்களுக்கு உண்டு என நான் நம்புகிறேன்

நோர்வே பாலஸ்தீன மக்களுக்கு எந்த தீமையும் விளைவிக்க வில்லை. அதை விளைவித்தவர்கள் ஹமாஸ் பயங்கரவாதிகளும், இஸ்ரேல் கடும்போக்குவாதிகளுமே. நோர்வே வெறும் அனுசரணையாளர் மட்டுமே.   இருபகுதியும் யுத்தத்தை விரும்பினால் அவர்களால் எதுவும் செய்ய முடியாது.

அதுவே இலங்கையிலும் நடந்தது.  அங்கும் இரு பகுதியும் யுத்தத்தே விரும்பியது உண்மை.  தலைவர் எப்ப அடிக்கபோறார் என்று 2005 ல் இருந்து எதிர்பார்த்து காந்திருந்து  யுத்தத்திற்கு தூபமிட்ட புலம் பெயர் தேசிக்காய் குஞ்சுளுக்கு நன்கு தெரியும் நோர்வே தமிழ் மக்களுக்கு எந்த தீமையும் விளைவிக்க வில்லை என. இருப்பினும் தமது குற்றத்தை மறைக்க இந்த பொய்யை தமிழர்களிடையே மட்டும் பரப்ப வேண்டிய துர்பாக்கிய நிலை.  

  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

மக்கள் நிராகரித்தாலும் சாணக்கியனுக்கு மொழிபெயர்ப்பாளராகச் சென்று படம் பிடிக்கலாம்

  • கருத்துக்கள உறவுகள்
Posted

நோர்வே தூதுவருடன் பிரதமர் ஹரிணி அமரசூரிய சந்திப்பு!

நோர்வே தூதுவருடன் பிரதமர் ஹரிணி அமரசூரிய சந்திப்பு!

இலங்கைக்கான நோர்வேயின் தூதுவர் ஹெச்.இ.மே-எலின் ஸ்டெனர் (H.E.May-Elin Stener) உடன் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய சந்திப்பினை மேற்கொண்டுள்ளார்.

இந்த சந்திப்பானது நேற்றைய தினம் கொழும்பில் அமைந்துள்ள பிரதமர் அலுவலகத்தில் மரியாதை நிமித்தம் இடம்பெற்றுள்ளதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

சந்திப்பின் போது, வறுமை ஒழிப்பு, சமூகப் பாதுகாப்பு நடவடிக்கைகள், வரிச் சீர்திருத்தங்கள், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மற்றும் வேலைவாய்ப்பு உருவாக்கம் உள்ளிட்ட முக்கிய விடயங்களுடன் இரு நாடுகளுக்கும் இடையே கூட்டுப் பங்காளித்துவ மேம்பாடு தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டது.

இதன்போது பிரதமர் கலாநிதி அமரசூரிய, இலங்கையின் கல்வி முறையை மாற்றியமைப்பதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தியதுடன், மேம்பட்ட பொதுச் சேவை வழங்கலுக்காக ஆட்சியை டிஜிட்டல் மயமாக்குவதற்கான தொடர்ச்சியான முயற்சிகளை எடுத்துரைத்தார்.

பிரதமரின் செயலாளர் பிரதீப் சபுதந்திரி, பிரதமரின் மேலதிக செயலாளர் திருமதி.சகரிகா போகஹவத்த மற்றும் பணிப்பாளர் நாயகம் திருமதி ஷோபினி குணசேகர உட்பட நோர்வே தூதரகம் மற்றும் இலங்கை அரசாங்கத்தின் உயர் அதிகாரிகள் இந்த சந்திப்பில் கலந்துகொண்டனர்.

https://athavannews.com/2024/1413421

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

New-Project-7-17.jpg?resize=750,375&ssl=

image

நோர்வே  தூதுவருடனான ஒரு  சந்திப்பு... அலுவலகத்திலும்,
மற்றது... குசினி கொல்லைப்புறத்திலும் நடந்ததாக, ஊர்க்கிழவி சொல்லுது. 😂 🤣

Edited by தமிழ் சிறி
  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, தமிழ் சிறி said:

New-Project-7-17.jpg?resize=750,375&ssl=

image

நோர்வே  தூதுவருடனான ஒரு  சந்திப்பு... அலுவலகத்திலும்,
மற்றது... குசினி கொல்லைப்புறத்திலும் நடந்ததாக, ஊர்க்கிழவி சொல்லுது. 😂 🤣

இதிலை பாருங்கோ...சாணக்கியன் காலில் பாட்டா செருப்பு...சுமந்து  டிப்  டொப் உடுப்பு...காலில் சப்பாத்து...என்னெண்டு சொன்னால் .. பழைய படத்திற்கு பிரதியீடு செய்யுறாரா சுமந்திரன்..

17 hours ago, ரசோதரன் said:

கசங்கின சட்டையுடன் சுமந்திரன் நிற்கின்றாரே என்று இன்னொரு சந்திப்பை பற்றி இங்கு களத்தில் கருத்து எழுதும் போது நாங்கள் எழுதியிருந்தோம்.................... உடனேயே எங்களின் குறை தீர்க்கப்பட்டுவிட்டது.............🤣.

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
12 minutes ago, alvayan said:

இதிலை பாருங்கோ...சாணக்கியன் காலில் பாட்டா செருப்பு...சுமந்து  டிப்  டொப் உடுப்பு...காலில் சப்பாத்து...என்னெண்டு சொன்னால் .. பழைய படத்திற்கு பிரதியீடு செய்யுறாரா சுமந்திரன்..

சுமந்திரன், சாணக்கியனை... "பாட்டா பாத்ரூம்" செருப்பு போட வைத்து, பழி வாங்கிவிட்டார்.
கட்சியாலும், மக்களாலும் நிராகரிக்கப் பட்ட  ஒருவரை... அருகில் வைத்திருப்பதால்,  
ஓட்டகத்துக்கு இடம் கொடுத்த நிலை... சாணக்கியனுக்கு ஏற்படப் போகுது. 

Edited by தமிழ் சிறி
  • Like 1

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • பகுதியளவு புனரமைக்கப்பட்டுள்ளது. AB21 என்ற வீதியிலக்கமிடப்பட்ட போக்குவரத்துப் பாதையானது யாழ்ப்பாணம் பண்ணைச் சந்தியில் ஆரம்பித்து வட்டுக்கோட்டை ஊடாக பொன்னாலைச் சந்தியை அடைந்து திருவடிநிலை➡️ மாதகல்➡️ கீரிமலை➡️ காங்கேசன்துறை➡️ மயிலிட்டி➡️ பலாலி➡️ தொண்டைமானாறு➡️ வல்வெட்டித்துறை ஊடாக பருத்தித்துறை முனையை அடைகிறது. யாழ்ப்பாணத்தில் உள்ள நீண்ட AB தர வீதி இதுவென நினைக்கிறேன்.
    • அத்திலான்திக் சமுத்திரத்தில் என்னை முடிக்கிறதென்றே குமாரசாமி திட்டம் போட்டுட்டார்.
    • யாழ். போதனா வைத்தியசாலையில் தற்போது 1350 படுக்கைகள் உள்ளன. எனினும் படுக்கை வசதிகள் போதாமையாக உள்ளன. சில சமயங்களில் நோயாளிகள் நிலத்திலும் படுக்கவேண்டிய துர்ப்பாக்கிய நிலை காணப்படுகின்றது. எதிர்வரும் நாட்களில் மேலும் மூன்று விடுதிகளை திறக்க உள்ளோம்.  இதன்மூலம் இந்த படுக்கை வசதிகள் ஓரளவு மேம்படும் என நினைக்கின்றேன். மகப்பேற்று கட்டட தொகுதி மற்றும் இருதய நோய் கட்டட தொகுதி அமைக்கப்படவேண்டும். யாழ்.போதனா வைத்தியசாலையில் பணிபுரியும் தொண்டர்களுக்கு நாம் நியமனங்களை வழங்க முடியாது. சுகாதார அமைச்சே அதனை செய்யவேண்டும். யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சையை பெறுபவர்கள் பூரணமான நம்பிக்கையை கொண்டுள்ளனர். ஆனால் சமூக வலைத்தளங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருப்பவர்களுக்கு இந்த வைத்தியசாலையில் என்ன நடைபெறுகின்றது என்பது தெரியாது என்ற வகையில் வைத்தியசாலையின் சேவையை சிதறடிக்கும் வகையில் சொல்லப்படும் காரணங்கள் பூதாகரமாக வெளியில் கொண்டு செல்லப்படும். ஆகவே உண்மையை அறிந்து கொள்ளுங்கள் என்பதே எனது வேண்டுகோள் இவ்வாறு தெரிவித்தார். யாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளர் வைத்தியர் சத்தியமூர்த்தி  யாழ் போதனா வைத்தியசாலையின் சேவைகள், அவர் தொடர்பில் அண்மைக்காலமாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்கள் நாடாளுமன்ற உறுப்பினர் வைத்தியர் அர்ச்சுனாவின் வைத்தியசாலை தொடர்பான நடத்தைகள் தொடர்பில் ஐபிசி தமிழ் சக்கரவியூகம் நிகழ்ச்சிக்கு அவர் அளித்த பிரத்தியேக நேர்காணலில் தெரிவித்த மேலதிக விடயங்கள் காணொளியில்... https://ibctamil.com/article/jaffna-teaching-hospital-director-breaks-the-truth-1734797306
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்

      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.