Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
38 minutes ago, ஈழப்பிரியன் said:

தொடர்ந்து கட்டிப் பிடித்து உருண்டு பிரண்டால் விரைவில் குணமாகும்.

ரசோதரன் இல்லாத நேரம் நான்தான் டாக்ரர்.

நீங்கள் வேற

அவர் இதெல்லாம் செய்து கரை கண்டபின் தான் கதவே சீ யாழையே திறந்திருப்பார். 🤩

  • Replies 106
  • Views 5.8k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Most Popular Posts

  • ரசோதரன்
    ரசோதரன்

    சிறி அண்ணா, நீங்கள் கபிதனையும், கந்தையா அண்ணாவையும் ஒன்றாக்கிவிட்டீர்கள்................. இருவரும் களத்திற்கு தனித்தனியே வேண்டும்....................🤣.

  • ஏராளன்
    ஏராளன்

    யாழ். போதனா வைத்தியசாலையில் இருந்து நீக்கப்பட்ட தொண்டர் ஊழியர்களை காதார அமைச்சிற்கு அழைத்துச் சென்ற அர்ச்சுனா எம்.பி. யாழ். போதனா வைத்தியசாலையில் இருந்து வேலை நீக்கம் செய்யப்பட்டதாக கூறப்பட

  • எனக்கொரு டவுட்டு சிறியர்...கபிதனும் ,கந்தையாவும் ஒரே ஆளோ... ஆளுக்காள்  புடுங்குப்படுவது..நாடகமா ....

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, கிருபன் said:

எனக்கு flu jab வேலையிடம் மூலமாகக் கிடைத்த தைரியத்தில் பல பார்ட்டிகளைக் கொண்டாடி, பப்ளிக் ட்றான்ஸ்போர்ட் எல்லாம் ஏறி இறங்கி 8 நாள் விடுமுறையை சந்தோஷமாகக் கழிக்கலாம் என்றால், தடிமன், இருமல், காய்ச்சல் எல்லாம் வந்து நிற்கின்றது!  ஆனால் நிழலிக்கு வந்ததுபோல கடுமையாக இல்லை! 

இன்றே நாடுங்கள் டாக்ரர் @ரசோதரன்

  • கருத்துக்கள உறவுகள்
29 minutes ago, ஈழப்பிரியன் said:

இன்றே நாடுங்கள் டாக்ரர் @ரசோதரன்

🤣...............

யாராவது சர்ட்டிபிகேட் கேட்டால்................... கலாநிதி 'டாக்டர்' என்றால் அடித்து பிடித்து இங்கேயே தயார் செய்யலாம், ஆனால் மருத்துவ டாக்டர் என்றால் இந்தியா போய்த்தான் வரவேண்டும் போல...............😁.

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, நிழலி said:

நிறையப் பேரை கட்டிப்பிடிச்சு, உருண்டு, பிரண்டு பார்ட்டி செய்ததில், எவரிடமோ இருந்து எனக்கு காச்சல் தொற்றி 5 நாட்களாக கடும் காச்சல்... இதுக்கு ஏதாவது மருந்து கிருந்து சொல்ல முடியுமோ?

2 hours ago, கிருபன் said:

பல பார்ட்டிகளைக் கொண்டாடி, பப்ளிக் ட்றான்ஸ்போர்ட் எல்லாம் ஏறி இறங்கி 8 நாள் விடுமுறையை சந்தோஷமாகக் கழிக்கலாம் என்றால், தடிமன், இருமல், காய்ச்சல் எல்லாம் வந்து நிற்கின்றது!  

இதுக்கெல்லாம் நல்ல மருந்து, புளிக்கஞ்சியும், கீரைக்கஞ்சியும் (இறால், முருங்கை இலை, தேங்காய்ப்பாலும்   போடவேண்டும்)

  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, யாயினி said:
புலம்பெயர் தமிழர்களின் உதவியுடன் பாதிக்கப்பட்ட சுகாதார தொழிலாளர்களுக்கு இன்னும் மூன்று மாதத்தில் 30,000 மாதாந்த சம்பளத்துடன் நான் வேலை தருகிறேன்!
இது அரசியலுக்கான பதிவு அல்ல..
ஏழைகளுக்கான எனது முதலாவது திட்டம்!
பல பேருடன் கதைத்து இருக்கிறேன்..
இந்த மாதம் முடிவில் அதற்குரிய முதற்கட்ட வேலைகளை ஆரம்பிக்கிறேன்..
இந்தத் திட்டத்தால் வருகின்ற ஒரு ரூபாய் வருமானம் கூட என் தனிப்பட்ட நிகழ்ச்சி நிரலுக்கோ அல்லது எனது அரசியல் பயணத்துக்கோ பாவிக்கப்பட மாட்டாது!
சற்று பொறுமையாக காத்திருக்கவும்! ❤️🙏
 
All r

வைத்தியர் அர்ச்சுணா இன்று காலையில் பதிந்த பதிவு இது..இன்னும் 3 மாத்தில் சுகாதாரப் பணியாளர்களுக்கு புலம் பெயர் உறவுகளின் உதவியோடு சம்பளம் குடுப்பதாக சொல்கிறார்..இது எவ்வளவு காவத்திற்கு நடக்கும் சொல்ல முடியுமா...?

அர்ச்சுனாவை யாரோ பப்பாவில் ஏற்றி விட்டு இருக்கிறார்கள்; கூத்து பார்க்கிறார்கள்.

அனால் , அர்ச்சுனாவின் horizon (அறிவு, அனுபவப் புலம், தமிழ் சரி என்று நினைக்கிறன், வர வர ஆங்கிலச் சொல்லுக்கு தமிழ் தேட அல்லது ஆக்க வேண்டி உள்ளது, என் தமிழ் தேய்கிறதோ?)   அவ்வளவு விரிவடையவில்லையா?

அல்லது, அர்ச்சுனவின் ஆர்வ அவசரத்தை, சிங்கள அரசு அர்ச்சுனவுக்கு தெரியாமல் பாவிக்கிறதா?

புலம்பெயர் தமிழர்களை குறிவைத்து. 

Edited by Kadancha
add info.

  • கருத்துக்கள உறவுகள்
On 24/12/2024 at 01:17, யாயினி said:

வைத்தியர் அர்ச்சுணா இன்று காலையில் பதிந்த பதிவு இது..இன்னும் 3 மாத்தில் சுகாதாரப் பணியாளர்களுக்கு புலம் பெயர் உறவுகளின் உதவியோடு சம்பளம் குடுப்பதாக சொல்கிறார்..இது எவ்வளவு காவத்திற்கு நடக்கும் சொல்ல முடியுமா...?எல்லாவ்ற்றுக்கும் புலம் பெயர்ந்தவர்களை இழுத்தால் அங்குள்ள அரசாங்கம் என்ன செய்ய இருக்கிறது...இவரது இந்த விழையாட்டால் எதிர்காலத்தில் அரசாங்கம் செய்ய வேண்டிய வேலை திட்டங்களை கூட புலம் பெயர் சமுகம் செய்யட்டும் என்று சொல்லும் நிலையும் ஏற்படலாம்.

இது தவிர அர்ச்சுனா தான் போகின்ற இடங்களில் எல்லாம் சொல்கின்றாராம் புலம் பெயர்ந்த தமிழர்களை கொண்டு  உங்களுக்கு இங்கே தொழில்சாலை தொடங்கி உங்களுக்கு சம்பளம் கிடைக்க ஏற்பாடு செய்கின்றேன்.
வெளிநாட்டு தமிழர்களோ ரஷ்யதலைவர் புதினின் உக்ரைன் மீதான ஆக்கிரமிப்பு போர் பாதிப்பால் தங்கள் வீட்டு மின்சார அடுப்பில் பூனையும் நாயும் படுத்திருப்பாதாக அழுது கொண்டு திரிகின்றனர்.

  • கருத்துக்கள உறவுகள்
On 24/12/2024 at 03:49, Kandiah57 said:

ஒரு வயதை   கூட   இன்னும் சில நாட்கள்  மட்டுமே உண்டு  என்பதை   மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன் 🙏🙏🙏🙏🙏

இதை மகிழ்ச்சியுடன் தெரிவிக்கும் அற்புத மனிதர் நீங்களாகத்தானிருக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்

இவர்கள் அனைவரும் 35.000 தொடக்கம் 40.000 வரையான ஊதியத்துடன் வேலையில் இணையலாம் என்ற செய்தி வைத்தியர் அர்ச்சனாவின் முகப் புத்தக பக்கத்தில் பகிரப்பட்டு இருக்கிறது.

  • கருத்துக்கள உறவுகள்
On 24/12/2024 at 01:28, Kadancha said:

வேலையில்-பயிற்சி இல்லாது  வேலை பழக்க எத்தனிப்போர்.

அது தான் பயிற்சி   ......மட்டுமல்ல படிப்பும்கூட.  

பத்தாவது வகுப்பு படித்து விட்டு  தாதிகள்கள் வேலையில. நேரடியாக இணைந்து   படிப்படியாக   சொல்வதை கேட்டு கேட்டு   படிக்கவும் பழகவும். முடியும்   

இப்படி வேலை செய்பவர்களை  படிக்கதாவர்கள்   ..என்று எப்படி கூற முடியும்  ??  அவர்கள் பார்த்து கேட்டு படித்து உள்ளார்கள் இல்லையா  ??  

இவர்களுக்கும்     ஒரு தொழில்நுட்ப கல்லுரியில்.  படித்து வேலையில்.  அமர்பவர்களுக்கும்.  என்ன வித்தியாசம் உண்டு?? பெரிய   வித்தியாசம் இல்லை    இல்லையா???  

1975,...1980   ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் ஏதாவது வேலைவாய்ப்பு கிடைக்குமா   ??   என்று தேடியபடியே இருந்தேன்   அந்த நேரத்தில் என்னிடத்தில் செல்வம் செல்வாக்கு இல்லை,...ஒரு நாள் விளம்பரம்  தாதி வேலைக்கு விண்ணப்பங்கள் கேட்டிருந்தார்கள்   

திருநெல்வேலியில்    ஒரு  புதிய வைத்தியசாலை   யாழ்ப்பாணம் தொழில் அதிப்ர்    சாமி   அன் கோ.   உடன் சிலர் சேர்ந்து திறந்தார்கள். எனது   தங்கச்சிக்கு   கட்டி விண்ணப்பிக்க சொன்னேன்  .....தெரிவு செய்யப்பட்டாள். பத்தாவது வகுப்பு உடன் 

இரண்டு வருடங்களில்   கொழும்பில் யூனியன் பிளேஸ்.   இரத்தினம்.  வைத்தியசாலையில் இணைத்து வேலை செய்தாள்.  சகல வேலைகளும். தாதிக்குரிய. சகல வேலைகளும். செய்வாள். 

இன்று கனடாவில் வன்குவார். நகரில்   வயோதிபகள். தங்கும் நேசிங் கேம்   இல். வேலை செய்கிறாள். அதுவும் ஒரு வைத்தியசாலை தான் என்பாள்.  

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Kandiah57 said:

அது தான் பயிற்சி   ......மட்டுமல்ல படிப்பும்கூட.  

எல்லாத் துறைக்கும் சரிவராது.

நாங்கள் மட்டக்கிளப்பில் பார்த்தோம்.

மன்னாரில், அந்த பிரசவித்து, சில  நாளில் அனுமதிக்கப்பட்ட பெண்ணின் இறப்பைப் கண்டோம் - அகிலும் தாதி நிலைமையின் அவசரத்தை, விபரீதத்தை உணரவில்லை என்பதே. 

இதை வெளியில் தெரிந்தவை.

அப்போது ஏன் (மருத்துவ துறை), தாதி  துறை என்று விழுந்து, விழுந்து படிக்கச் வேண்டும் முதலில், பின் அதை அடிப்படையாக வைத்து பயிற்சி  எடுக்க வேண்டும்.

3 hours ago, Kandiah57 said:

பத்தாவது வகுப்பு படித்து விட்டு  தாதிகள்கள் வேலையில. நேரடியாக இணைந்து   படிப்படியாக   சொல்வதை கேட்டு கேட்டு   படிக்கவும் பழகவும். முடியும்   

இப்படி வேலை செய்பவர்களை  படிக்கதாவர்கள்   ..என்று எப்படி கூற முடியும்  ??  அவர்கள் பார்த்து கேட்டு படித்து உள்ளார்கள் இல்லையா  ??  

கனக்க வேண்டாம்.

நீங்கள் சொல்லுவது போல பயிற்சி எடுத்தார்களா?

அனால், தொழில்முனில்லையாக பயிற்றுவிக்கப்படும் தாதி பயிற்சியில்  அதில் உள்ள நுணுக்கங்களை  அறியாது நீங்கள் சொல்வது. 

அதில் உண்மையில் அவர்கள் பகுதி நேரம் படிப்பு, பின் படித்தது எவ்வாறு யதார்த்த மருத்துவ நிலைமைகளில் பாவிக்கப்படுகிறது என்பதெல்லாம் பயிற்சி. எல்லாம் பரீட்சைக்கு உட்படும் - எழுத்து, வாய்மொழி என்று எல்லா முறையிலும்.

குறிப்பாக கட்டமைக்கப்பட்ட கற்கை நெறி வழியே அளிக்கப்படும் பயிற்சி.

ஒரு nurse ஆக பணி புரிவதற்கு license தேவை. எந்த முறையில் படித்தாலும்..

உங்கள் தங்கை செய்த நீங்கள் சொல்லும் பயிற்சி -  nurse ஆக register செய்வதத்தில் உரிய தகமை என்று எடுத்துக்கொள்ளப்பட்டதா?

(10ம்  வகுப்பில் வகுப்பில் இருந்து தாதி துறை பயிற்சி  , இது எங்கு நடக்கிறது என்று  சொல்ல முடியுமா, ஐரோப்பாவில்?)

3 hours ago, Kandiah57 said:

இவர்களுக்கும்     ஒரு தொழில்நுட்ப கல்லுரியில்.  படித்து வேலையில்.  அமர்பவர்களுக்கும்.  என்ன வித்தியாசம் உண்டு?? பெரிய   வித்தியாசம் இல்லை    இல்லையா???

மனித உயிர்களை கையாளுவதை, வேறு தொழில்நுட்ப பயிற்சியுடன் எவ்வாறு  ஒப்பிடுகிறீர்கள் 

நான் இதை சொல்ல வேண்டும் என்று இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்

மருத்துவர் அர்ச்சுனா அவர்கள் பாராளுமன்றத்துக்கு தேர்வாகி அங்கே போனதும், குழந்தைபிள்ளைபோல் எதிர்கட்சி சிங்களவன் கதிரையில் குந்தபோயி அவங்களோட புடுங்குபட்டதும்,  தேவையற்ற முறையில் தலைவரையும் போராளிகளையும் இழுத்து பேசியும் சிங்களவனுக்கு  பேட்டிகள் கொடுத்தும் எந்த திட்டங்களும் ஆரம்பிக்காமலே ஏகப்பட்ட சர்ச்சைகளில் சிக்கியதும், இவருக்கெல்லாம் எதுக்கு அரசியல், வாக்குப்போட்ட மக்களின் கோபத்தை சம்பாதிக்கபோகிறார், இவரெல்லாம் பாராளுமன்றத்துக்கு போனதே தவறு என்று பதிவிட்டதுண்டு, விசனப்பட்டதுண்டு.

ஆனால் வெள்ளநிலவரத்தில் வீடுவீடாக சென்று பார்வையிட்டதும், தெருவில் நின்று போராடிய வேலையில்லா பட்டதாரிகளை சந்தித்து குறை கேட்டதும் அவர்களுக்கு ஆதரவா குரல் கொடுத்ததும், இப்போது மருத்துவ பணியாளர்களுக்கு ஆதரவா அவர்களை கொழும்புவரை அழைத்து சென்று நீதி கேட்டதும்  மெச்சத்தக்க விஷயங்கள்.

அப்படியே முன்னாள் போராளிகள் நிலவரம் பற்றியும் கவனம் எடுங்கள் மாறிவரும் உங்கள் போக்கு மிகவும் சிறப்பாக அமையும். அப்படியே எது பேசினாலும் பத்துவினாடி யோசித்துவிட்டு பேசுங்கள், அர்த்தமற்ற ஆக்ரோசங்கள், ஆக்கபூர்வமாக அமையாது கோமாளிதனமாக மாறிவிடும்.

தவறு செய்யும்போது தவறென்று சுட்டிக்காட்டுவதும், சரியாக செயல்படும்போது பாராட்டுவதும், மீண்டும் தவறு செய்யும்போது மறுபடியும் திட்டுவதுமே உண்மையான விமர்சனம், இல்லாமல் ஒரு பக்கம் மட்டுமே சார்ந்த கருத்துக்கள் என்றால் அது விமர்சனம் அல்ல காழ்ப்புணர்ச்சி என்றாகிவிடும்.

மருத்துவ தொண்டர் பணியாளர்கள் விடையத்தில் அவர்களுக்கு வேலை வாய்ப்பு ஏற்படுத்திக்கொடுத்தால் மகிழ்ச்சியானதே.

பெரும்பாலும் பெண்கள் தலைமையேற்று நடத்தும் குடும்பங்களை சேர்ந்தவர்கள் வறுமை, குடும்ப சுமை, வயிற்று பசி என்பவற்றுடன் எவ்வளவு தூரம் போராடுவார்களென்பது யாரும் சொல்லி யாரும் அறியவேண்டியதில்லை, அவர்களுக்கு ஏதாவது ஒரு சிறு ஒளியை புலம்பெயர் உறவுகளின் உதவியுடன் உண்மையாகவே இவரால் ஏற்படுத்தி கொடுக்க முடியுமென்றால் அது என்ன நடக்க போகிறதென்று பார்க்காமலே ஏகப்பட்ட விசனங்கள் தெரிவிப்பது முறையல்ல.

அது உதவும் உறவுகளுக்கும் அர்ச்சுனாவுக்கும் இடையிலுள்ள தகராறு, நாம் எதுக்கு முண்டியடிக்கணும்?  புலம்பெயர் உறவுகளிடம் காசுவாங்கி பொதுமக்களுக்கு உதவுகிறோம் என்று சொல்லி ஒன்றுக்கு இரண்டு மூன்று வீடுகளும், கார்,அயல்நாட்டு பயணங்கள்  உயர்தர பைக்குகள் என்று கொடிகட்டி பறக்கும் யூடியூபர்களுடன் ஒப்பிடும்போது அர்ச்சுனா அப்படியொன்றும் பெரிய தப்பான காரியங்களில் இறங்குவதாய் தெரியவில்லை.

மக்களிடம் வாக்கை வாங்கிக்கொண்டு மக்கள் பணியாற்றவில்லையென்றே முன்பிருந்த தமிழரசியல்வாதிகளை திட்டி தீர்த்து வீட்டுக்கு துரத்தினோம், இப்போ மக்கள் பிரச்சனைகளில் கரிசனம் காண்பிப்பவர்களையும் திட்டினால், குழப்பம் அவர்களிடமில்லை, நம்மிடம்தான்.

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, Kandiah57 said:

அது தான் பயிற்சி   ......மட்டுமல்ல படிப்பும்கூட.  

பத்தாவது வகுப்பு படித்து விட்டு  தாதிகள்கள் வேலையில. நேரடியாக இணைந்து   படிப்படியாக   சொல்வதை கேட்டு கேட்டு   படிக்கவும் பழகவும். முடியும்   

இப்படி வேலை செய்பவர்களை  படிக்கதாவர்கள்   ..என்று எப்படி கூற முடியும்  ??  அவர்கள் பார்த்து கேட்டு படித்து உள்ளார்கள் இல்லையா  ??  

இவர்களுக்கும்     ஒரு தொழில்நுட்ப கல்லுரியில்.  படித்து வேலையில்.  அமர்பவர்களுக்கும்.  என்ன வித்தியாசம் உண்டு?? பெரிய   வித்தியாசம் இல்லை    இல்லையா???  

1975,...1980   ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் ஏதாவது வேலைவாய்ப்பு கிடைக்குமா   ??   என்று தேடியபடியே இருந்தேன்   அந்த நேரத்தில் என்னிடத்தில் செல்வம் செல்வாக்கு இல்லை,...ஒரு நாள் விளம்பரம்  தாதி வேலைக்கு விண்ணப்பங்கள் கேட்டிருந்தார்கள்   

திருநெல்வேலியில்    ஒரு  புதிய வைத்தியசாலை   யாழ்ப்பாணம் தொழில் அதிப்ர்    சாமி   அன் கோ.   உடன் சிலர் சேர்ந்து திறந்தார்கள். எனது   தங்கச்சிக்கு   கட்டி விண்ணப்பிக்க சொன்னேன்  .....தெரிவு செய்யப்பட்டாள். பத்தாவது வகுப்பு உடன் 

இரண்டு வருடங்களில்   கொழும்பில் யூனியன் பிளேஸ்.   இரத்தினம்.  வைத்தியசாலையில் இணைத்து வேலை செய்தாள்.  சகல வேலைகளும். தாதிக்குரிய. சகல வேலைகளும். செய்வாள். 

இன்று கனடாவில் வன்குவார். நகரில்   வயோதிபகள். தங்கும் நேசிங் கேம்   இல். வேலை செய்கிறாள். அதுவும் ஒரு வைத்தியசாலை தான் என்பாள்.  

உங்களின் தங்கை முதியோர் பராமரிப்பு நிலையத்தில் வேலை செய்பவராக இருக்கலாம் அல்லது அதன் நடத்துணராக இருக்கலாம்..தற்போதைய காலத்தில் எந்த விதமான சான்றிதழ்களும் இல்லாமல் இப்படியான பணிகளை செய்ய முடியாது..சட்டப்படி அவர் ஒரு பயிற்றபட்ட தாதியாக இருக்க வேணும்.பத்து வயோதிபர்களை மற்றும் நோயாளர்களை வைத்திருந்தால் அதுவும் ஒரு மருத்துவமனை மாதிரியே தான்.

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, valavan said:

அப்படியே எது பேசினாலும் பத்துவினாடி யோசித்துவிட்டு பேசுங்கள், அர்த்தமற்ற ஆக்ரோசங்கள், ஆக்கபூர்வமாக அமையாது கோமாளிதனமாக மாறிவிடும்.

👍................

இதையே தான் நாங்கள் பலரும் சொல்லுகின்றோம்................

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, Kandiah57 said:

அது தான் பயிற்சி   ......மட்டுமல்ல படிப்பும்கூட.  

பத்தாவது வகுப்பு படித்து விட்டு  தாதிகள்கள் வேலையில. நேரடியாக இணைந்து   படிப்படியாக   சொல்வதை கேட்டு கேட்டு   படிக்கவும் பழகவும். முடியும்   

இப்படி வேலை செய்பவர்களை  படிக்கதாவர்கள்   ..என்று எப்படி கூற முடியும்  ??  அவர்கள் பார்த்து கேட்டு படித்து உள்ளார்கள் இல்லையா  ??  

இவர்களுக்கும்     ஒரு தொழில்நுட்ப கல்லுரியில்.  படித்து வேலையில்.  அமர்பவர்களுக்கும்.  என்ன வித்தியாசம் உண்டு?? பெரிய   வித்தியாசம் இல்லை    இல்லையா???  

1975,...1980   ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் ஏதாவது வேலைவாய்ப்பு கிடைக்குமா   ??   என்று தேடியபடியே இருந்தேன்   அந்த நேரத்தில் என்னிடத்தில் செல்வம் செல்வாக்கு இல்லை,...ஒரு நாள் விளம்பரம்  தாதி வேலைக்கு விண்ணப்பங்கள் கேட்டிருந்தார்கள்   

திருநெல்வேலியில்    ஒரு  புதிய வைத்தியசாலை   யாழ்ப்பாணம் தொழில் அதிப்ர்    சாமி   அன் கோ.   உடன் சிலர் சேர்ந்து திறந்தார்கள். எனது   தங்கச்சிக்கு   கட்டி விண்ணப்பிக்க சொன்னேன்  .....தெரிவு செய்யப்பட்டாள். பத்தாவது வகுப்பு உடன் 

இரண்டு வருடங்களில்   கொழும்பில் யூனியன் பிளேஸ்.   இரத்தினம்.  வைத்தியசாலையில் இணைத்து வேலை செய்தாள்.  சகல வேலைகளும். தாதிக்குரிய. சகல வேலைகளும். செய்வாள். 

இன்று கனடாவில் வன்குவார். நகரில்   வயோதிபகள். தங்கும் நேசிங் கேம்   இல். வேலை செய்கிறாள். அதுவும் ஒரு வைத்தியசாலை தான் என்பாள்.  

தொழில்நுட்பக் கல்லூரிகளில் படித்து விட்டுவரும் மெக்கானிக்கையும்

ஊரிலே 5ம் வகுப்புவரை படித்துவிட்டு மெக்கானிக்காக வேலை செய்பவரையும்

பார்க்க வேண்டும்.யாரில் கெட்டித்தனம் இருக்குதென்று.

பல்கலை முடிக்காமல் எத்தனையோ பேர் ஐரியாக வேலை செய்கிறார்கள்.

குறைய படித்தவனெல்லாம் முட்டாள் என்று எண்ணுவது தவறு.

3 hours ago, Kadancha said:

எல்லாத் துறைக்கும் சரிவராது.

நாங்கள் மட்டக்கிளப்பில் பார்த்தோம்.

மன்னாரில், அந்த பிரசவித்து, சில  நாளில் அனுமதிக்கப்பட்ட பெண்ணின் இறப்பைப் கண்டோம் - அகிலும் தாதி நிலைமையின் அவசரத்தை, விபரீதத்தை உணரவில்லை என்பதே. 

அங்கே வேலை செய்ய வேண்டிய டாக்ரர் இல்லாததாலேயே அந்த அனர்த்தம்.

இது எந்தநாளும் நடப்பதால் தாதிகளும் பெரிதாக எடுப்பதில்லை.

முன்னர் ஊரிலே பிள்ளைபேறு பார்த்த அம்மம்மாக்கள் எந்த சேர்டிபிக்கற்றுகள் வைத்திருந்தார்கள்.

எனது அம்மம்மாவின் அண்ணன் மிருகவைத்தியர்.ஆனால் 5ம் வகுப்புவரையாவது படித்தாரோ தெரியவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

பில் கேட் படிப்பை முடிக்காமலேயே சாதனை செய்தாரே.

எனவே படிப்பு மிகமிக முக்கியம்.அதற்காக குறைய படித்தவர்களைத் தாழ்த்தாதீர்கள்.

4 minutes ago, ஈழப்பிரியன் said:

பில் கேட் படிப்பை முடிக்காமலேயே சாதனை செய்தாரே.

எனவே படிப்பு மிகமிக முக்கியம்.அதற்காக குறைய படித்தவர்களைத் தாழ்த்தாதீர்கள்.

இதை கடஞ்சாவும் மேலே எழுதியிருக்கிறார், ஆனால் நீளமாக இருப்பதால் யாரும் வாசிக்கவில்லை.

வீட்டுக் கராஜில் வைத்துக் கம்பியூட்டர் தயாரித்த பில் கேட்ஸ், ஸ்ரிவ் ஜொப்ஸ், ஸ்ரிவ் வொஸ்னியாக் ஆகியோர் தான் கம்பியூட்டர் உலகின் ஜாம்பவான்களானார்கள். அதே போல கார் மெக்கானிக்குகளும் இருக்கலாம். இவர்களெல்லாம் முட்டாள்கள் அல்ல, அதீத புத்திசாலிகள்.

ஆனால்..இது வரை நான் மருத்துவத் துறையில் இப்படி முறைசார் பயிற்சியைக் கடாசி விட்டு மருத்துவ சேவையில் முன்னணி வகித்த எவரையும் பற்றி அறியவில்லை. இதற்குக் காரணம், கார், கம்பியூட்டர் போல அல்ல மனித உடல். சரியான அடிப்படை இல்லாமல் பிழையான நோயை நிர்ணயித்து, பிழையான மருந்தைக் கொடுத்தால் விளைவு பாரதூரமானது. இதனால் தான் தாதிகளும், மருத்துவர்களும், மருந்தாளர்களும் பயிற்சியை தவிர்த்து விட்டு தொழில் அங்கீகாரத்தை எதிர்பார்க்க முடியாத படி அரசுகள் licensing system வைத்திருக்கின்றன.

மேலே கந்தையா, தாதிய உத்தியோகத்தருக்கும், காயத்திற்கு மருந்து கட்டுபவருக்கும் இடையேயான வேறுபாடு தெரியாமல் பதிவிட்டிருக்கிறார் என ஊகிக்கிறேன். எந்த வகுப்புப் படித்த ஒருவரையும் காய்ச்சல் மானியைப் பாவிக்க, காயத்திற்கு மருந்து கட்டப் பழக்கலாம். ஆனால், அவர் healthcare provider அல்ல. இப்படிப் பழக்கப் பட்டவர் பிழை விட்டால், அதனால் ஏதும் அனர்த்தம் நிகழந்தால் மருத்துவரின் லைசென்ஸின் கீழ் தான் அந்தத் தவறு சேர்க்கப் படும்.  

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, Justin said:

மேலே கந்தையா, தாதிய உத்தியோகத்தருக்கும், காயத்திற்கு மருந்து கட்டுபவருக்கும் இடையேயான வேறுபாடு தெரியாமல் பதிவிட்டிருக்கிறார்

இல்லை   ...தெரியும்      75,..80,.இடையில் நடந்த உண்மை கதைகள் 

நிகழ்வுகள்   

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, ஈழப்பிரியன் said:

தொழில்நுட்பக் கல்லூரிகளில் படித்து விட்டுவரும் மெக்கானிக்கையும்

ஊரிலே 5ம் வகுப்புவரை படித்துவிட்டு மெக்கானிக்காக வேலை செய்பவரையும்

பார்க்க வேண்டும்.யாரில் கெட்டித்தனம் இருக்குதென்று.

பல்கலை முடிக்காமல் எத்தனையோ பேர் ஐரியாக வேலை செய்கிறார்கள்.

குறைய படித்தவனெல்லாம் முட்டாள் என்று எண்ணுவது தவறு.

அங்கே வேலை செய்ய வேண்டிய டாக்ரர் இல்லாததாலேயே அந்த அனர்த்தம்.

இது எந்தநாளும் நடப்பதால் தாதிகளும் பெரிதாக எடுப்பதில்லை.

முன்னர் ஊரிலே பிள்ளைபேறு பார்த்த அம்மம்மாக்கள் எந்த சேர்டிபிக்கற்றுகள் வைத்திருந்தார்கள்.

எனது அம்மம்மாவின் அண்ணன் மிருகவைத்தியர்.ஆனால் 5ம் வகுப்புவரையாவது படித்தாரோ தெரியவில்லை.

உண்மை,....புன்னாலைக்கட்டுவன் ஆக இருக்க வேண்டும்  எலும்பு முறிவுகளுக்கு   புக்கை கட்டும்  சிறந்த வைத்தியர் இருந்தார் சிறந்த வைத்தியர்   முறிவு தறிவுகளுக்கு    பலரும் கூற கேட்டு இருக்கிறேன்   புக்கை கட்டி   வருத்தத்தை மாற்றி விடுவார்  இப்ப படம் எடுத்து வெட்டி கொத்தி கத்தரிக்கோலை   ஊள்ளுக்கு வைத்து தைத்துவிடுவார்கள்.  ......நோகிறாது   என்று போனால் திரும்ப படமெடுத்து   ஊள்ளே கத்தரிக்கோல்.  கிடக்கிறது என்பதை கண்டு பிடிப்பார்கள். 🤣.

பிறகு என்ன ?? திருமபவும்.  வெட்டு. தான்  இது பிழை இல்லையா??    

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, Kadancha said:

10ம்  வகுப்பில் வகுப்பில் இருந்து தாதி துறை பயிற்சி  , இது எங்கு நடக்கிறது என்று  சொல்ல முடியுமா, ஐரோப்பாவில்?)

இலங்கையில் 1975,1980. இடையில்   நடந்தது    

ஐரோப்பா பற்றியும்   2024  பற்றியும் நான்  கதைக்கவில்லை   

நீங்கள் சொன்ன தகவல்களை நானும் அறிவேன்.  

1975,.1980.  இல் இலங்கையில்   ஒருவர் தாதியர் ஆக. வேலை செய்ய. தாதியர் படிப்பு படித்து சான்றிதழ் பெற்றுக் கொள்ள வேண்டும்  அல்லது வைத்திருக்க. வேண்டும் என்று ஏதாவது சட்டம் உண்டா?? இருந்தாத.   ??  

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, Kadancha said:

உங்கள் தங்கை செய்த நீங்கள் சொல்லும் பயிற்சி -  nurse ஆக register செய்வதத்தில் உரிய தகமை என்று எடுத்துக்கொள்ளப்பட்டதா?

கொழும்பில்  இரத்தினம். மருத்துவமனை ஒரு பெரிய  பிரபலமான தனியார் மருத்துவமனை ஆகும்    எனது சகோதரி. எந்தவொரு தாதியர் பயிற்சி கல்லுரிக்கும். செல்லவில்லை  ஆனால் மருத்துவமனை பயிற்றுவித்தது   வேலையும் செய்தார்   சோதனைகள் செய்தாரா என்பது பற்றி தெரியாது   

நன்றி வணக்கம்    🙏. வாழ்க்கை… ஒரு கல்லுரி தான்   நாங்கள் ஒவ்வொரு நாளும் படித்து கொண்டு தான் இருக்கிறோம்   வெவ்வேறு விடயங்கள் பற்றி   இங்கே படிக்காமல் எவருமில்லை  🤣

16 hours ago, யாயினி said:

உங்களின் தங்கை முதியோர் பராமரிப்பு நிலையத்தில் வேலை செய்பவராக இருக்கலாம் அல்லது அதன் நடத்துணராக இருக்கலாம்..தற்போதைய காலத்தில் எந்த விதமான சான்றிதழ்களும் இல்லாமல் இப்படியான பணிகளை செய்ய முடியாது..சட்டப்படி அவர் ஒரு பயிற்றபட்ட தாதியாக இருக்க வேணும்.பத்து வயோதிபர்களை மற்றும் நோயாளர்களை வைத்திருந்தால் அதுவும் ஒரு மருத்துவமனை மாதிரியே தான்.

சரி சகோதரி.  நீங்கள் சொல்வது சரி தான்   

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, ஈழப்பிரியன் said:

முன்னர் ஊரிலே பிள்ளைபேறு பார்த்த அம்மம்மாக்கள் எந்த சேர்டிபிக்கற்றுகள் வைத்திருந்தார்கள்.

அப்போது இருந்த, இப்போது இருக்கும் infant mortality rate ஐ (
சிசு மரண வீதம்)ஒப்பிட முடியுமா?

சரி, அப்போது ஏன் அம்மாக்கள் / அம்மம்மாக்கள் மகப்பேறு பார்ப்பது அருகி, இல்லாமல் போய், இப்பொது சொந்த தாய் பார்க்க விருப்பம் என்றாலும், அதை தவிர்த்து, தொழில்சார் சிறப்பு தேர்ச்சி  அடிப்படையில் பயிற்றுவிக்கப்பட்ட  வைத்தியர், தாதியர் சிசுவை சிக்கல் இன்றி, தாய்  பிரசவிக்க பண்ணிய பின்பே, பிரசவித்த பெண்ணின் தயார் பராமரிப்பு இடது வந்து இருக்கிறார்?

18 hours ago, ஈழப்பிரியன் said:

எனது அம்மம்மாவின் அண்ணன் மிருகவைத்தியர்.ஆனால் 5ம் வகுப்புவரையாவது படித்தாரோ தெரியவில்லை.

இதன்  நிலையும் இப்பொது மனிதர்களுக்கு பெலே சொல்லிய நிலைக்கே வந்துள்ளது.

நீங்கள் தேவை இல்லாததை ஒப்பிடுகிறீர்கள்.

18 hours ago, ஈழப்பிரியன் said:

அங்கே வேலை செய்ய வேண்டிய டாக்ரர் இல்லாததாலேயே அந்த அனர்த்தம்.

இது எந்தநாளும் நடப்பதால் தாதிகளும் பெரிதாக எடுப்பதில்லை.

வைத்தியர் இல்லாதது உண்மை ஆயினும், தாதிக்கு பொறுப்பு இருக்கிறது தானே?

அந்த நிலையில் தாதிக்கு  இருக்கும் பொறுப்பு எவ்வாறு நோயாளியை தக்க வைத்து  இருப்பது, இந்த நிலைக்கு தான்  படிப்பு, பயிற்சி  வேண்டும்.

நீங்கள் சொல்லுவது பொறுப்பற்ற கதை

அனால், வைத்தியசாலையில் அவ்வளவு நேரம் ஒரு மருத்துவரும் இல்லை (first inspection) என்பது உண்மையானால், அது மருத்துவ சேவையில் உள்ள பெரும்  குறைபாடு (இந்த சொல்ல மிகவும் மென்மையானது நிலையை குறிக்க).  

18 hours ago, ஈழப்பிரியன் said:

பில் கேட் படிப்பை முடிக்காமலேயே சாதனை செய்தாரே.

மருத்துவ அல்லது தாதி  துறையிலா செய்தார்?

3-4 மணித்தியாலத்தில் சாதனை செய்தார்? 

எவ்வாறு சாதனை செய்தார் - பில் கேட்ஸ் , ஸ்டீவ் ஜாப்ஸ், எலன் ... இப்படி எல்லோரும் risk ஐ எடுத்து, (அனால் அவர்களுக்கு இல்லாமல் மற்றவர்களுக்கு கொடுத்து , ஆனால்  risk பொதுவாக  நேரடியாக  உயிரோடு அல்ல  ), தான் சாதானை செய்தார்கள், அதுவும் வேறு பணமுதலைகளின் காசை (opm - other peoples' money)  பாவித்து.

இப்படி மருந்து கண்டுபிடிப்பது இருக்கிறது (அனால், மருத்துவ கண்டு பிடிப்பு இல்லை).

(இதை விடயம் அறிந்த எல்லோரும் try பண்ணலாம். அனால், அப்படி அல்ல மருத்துவம், அதன் கண்டுபிடிப்புக்கள்)

அப்படியா, மருத்துவ, தாதி துறை? 

பல சந்தர்ப்பங்களில்  இவ்வளவு நேரம் கூட, 3-4 மணித்தியால கிடைக்காது உயிர் பிழைப்பதற்கு. 

மொட்டந்தலைக்கும் முழங்காலுக்கும் ஏன்  தெரிந்தும் முடிச்சு போடுகிறீர்கள்?

Edited by Kadancha

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, ஈழப்பிரியன் said:

பில் கேட் படிப்பை முடிக்காமலேயே சாதனை செய்தாரே.

எனவே படிப்பு மிகமிக முக்கியம்.அதற்காக குறைய படித்தவர்களைத் தாழ்த்தாதீர்கள்.

அய்யா மனித உடல் இயந்திரமல்ல..வைத்தியர்களோ, தாதிகளோ ஒரு சின்னப் பிழை விட்டாலும் உயிருக்கு உத்தரவாதமில்லை...பில்கேட்சின் தொழில்நுட்ப செயல்பாடுகளுக்கும் ..மருத்துவத்திற்கும் நிறைய வேறுபாடுகள் இருக்கிறது..சோ.. கொஞ்சம் காலத்திற்கு ஏற்றால்,நாம் வாழும் நாடுகளுக்கு ஏற்றால் போல்  சிந்தியுங்கள்..நன்றி.

  • கருத்துக்கள உறவுகள்
On 28/12/2024 at 12:07, Kandiah57 said:

இலங்கையில் 1975,1980. இடையில்   நடந்தது    

ஐரோப்பா பற்றியும்   2024  பற்றியும் நான்  கதைக்கவில்லை   

நீங்கள் சொன்ன தகவல்களை நானும் அறிவேன்.  

1975,.1980.  இல் இலங்கையில்   ஒருவர் தாதியர் ஆக. வேலை செய்ய. தாதியர் படிப்பு படித்து சான்றிதழ் பெற்றுக் கொள்ள வேண்டும்  அல்லது வைத்திருக்க. வேண்டும் என்று ஏதாவது சட்டம் உண்டா?? இருந்தாத.   ??

சிறிய, நான் அறிந்த சமகால வரலாறை (இது எங்கும் இணையத்தில் இருக்காது என்றே நினைக்கிறன்) சொல்லி விட்டு, வேறு நடந்த சுவாரசியமான விடயத்தையும் சொல்லி விட்டு, இதன் பதிலை சொல்கிறேன்.

(இதை சொல்வதால் உங்கள் தங்கையை, அவர் பயின்றதாக நீங்கள் சொல்லுவதில் எந்தவொரு விமர்சனமும் இல்லை, அனால், மருத்துவ அமைப்பு, சேவை எங்கே சென்று இருக்கிறது என்பது)
 
நீங்கள் சொல்வது, நான் அறிந்த வரலாறோடு பொருந்தி  வருகிறது.

இலங்கையில் கடைசியாக சரத்வத்தேச தரத்தில் இருந்த மருத்துவ படிப்பு, பயிற்சிகன நுழையும் வருடமாக  1964 இருந்தது. 

( அதாவது 1964 பின் நுழைவோரின் மருத்துவ படிப்பு சர்வதேச தரத்தில் இல்லை) 

அப்போதுவரை, இலங்கையில் மருத்துவம் படித்த ஒருவர், படித்த பின் 3-4 வருட அனுபவத்துடன் எந்த ஆங்கிலோ பின்னணி கொண்ட நாட்டிலும் சென்று, வைத்தியராக இணைய முடியும், அந்த நாட்டு வைத்திய துறைக்கும்  வைத்தியர் தேவை, எடுக்கிறாரக்ள் என்றால்.

இந்த நாடுகள் - எல்லா பிரித்தானிய, காலனித்துவ பின்னணி நாடுகள், common wealth நாடுகள்.

மற்ற ஐரோப்பிய , மற்றும் ஐரோப்பிய காலனித்துவ பின்னணி கொண்ட நாடுகளிலும் இலங்கை மருத்துவ படிப்பு ஏற்றுக் கொள்ளப்பட்டது, ஆனால் வேலை செய்வதில் மொழி பிரதான தடையாக இருந்தது.

(1964 இல் படிப்பு தொடங்கினால் , 6 வருட படிப்பு, 1970 படிப்பு முடிவு  , 3-4 வருட அனுபவம் - 1974  வரைக்கும் வருகிறது.)

சிறிமா 2ம் தடவை ஆட்சி ஏறிய  கட்டத்தில் இந்த சர்வதேச அங்கீகாரம் இழக்கப்படுகிறது.

எல்லாரும் சொன்னது, ஸ்ரீமாவின் டொமினியன் (ceylon) இல் இருந்து குடியரசாக மாற்றியதே காரணம் என்று.

அனால், அது முக்கிய காரணம் அல்ல என்பது நீங்கள்  சொல்லிய 10ம் வகுப்பில் இருந்து தாதிக்கு பயிற்சிக்கு தெரிவாகியது.   
  
அனால், அதுவல்ல முக்கிய காரணம், சிறிமா  அறிமுகப்படுத்திய HNC என்ற உயர்தர படிப்பு.  மருத்துவ படிப்புக்கு எவ்வாறு அனுமதிக்கப்படுகிறார்கள் என்பது. மற்றது, தரப்படுத்தல் வழியாக, மிகப் புள்ளிகள் குறைந்தோர் மருத்துவம் போன்ற உணர்திறன் உள்ள துறைக்கு தெரிவாகியது (ஆனால் இதில் பின்தங்கிய மாவட்டத்தில் உள்ள தமிழர்களும் உள்ளடக்கம்). 

அனால், எதுவென்றாலும், நிகரவிளைவு, இலங்கை மருத்துவ மற்றும் அதனுடன் நேரடி தொடர்பு உள்ள தாதி துறை தரம் இறங்கியது சர்வதேச பார்வையில்.

அனால் நான் கேட்பது உங்கள் தங்கை தாதி  பயிற்சி செய்தார் என்பதற்கு எதாவது உறுதிப்படுத்தும் ஆவணங்கள் வழங்கப்பட்டதா? 

இது உங்களையோ, நீங்கள் சொல்லுவதையோ, தங்கை  கேள்வி கேட்பது, குறை சொல்லுவது  அல்ல.

(நீங்கள் சொல்லுவதை பார்த்தல், அப்படி ஒன்றும் வழங்கப்படவில்லை என்பதே தோற்றம்.)

இலங்கை அந்த நேரத்தில் எதை தரச் சுட்டியாக பாவித்தது , அதாவது குறிப்பிட்ட காலம் தாதி பயிற்சி என்ற குறியீட்டுடன் (அந்த தனியார் வைத்திய சாலையில்) வந்த அனுபவத்தையா?

அப்படி நடந்து இருந்தால், பயிற்சியால் வந்த தொழில்சார் நுட்ப அறிவு, புரிதல்கள், பிரக்ஞைகள், உள்ளுணர்வால் உருவாகும் அறிவு போன்றவை சரிபார்க்கப்படவிலைத்தானே?  

(அப்படி இருந்தால், அதை பயிற்சி என்று எப்படி எடுப்பது?, குறிப்பாக மனித உயிர்களை கையாள வேண்டிய தொழில்  துறைக்கு).

மாறாக, அப்போது (1975 - 1980) களில் மிகவும் குறுகிய மனப்பான்மை, மற்றும் மதி நிலையை உள்ள சிங்கள தலைமை எடுத்த முடிவுகளால் நடந்ததை, (அதே சிங்களவர் சரி செய்து  விட, முற்றாக இலை விட்டாலும்), நாம் அதை இப்பொது செய்ய வேண்டும் என்று நீங்கள் ஏற்றுக்கொள்கிறீர்களா?

(

இன்னொரு சுவாரசியமான சம்பவம் , சிறிமா ஆட்சியில், சிறிமா (விஞ்ஞானம்), பொருளாதாரம், சமூகம் என்பதில் அறிந்த நிலை எங்கு இருந்தது என்பதை அறிவதகு 

ஒரு கூட்டத்தில், சிறிமாவிடம் அமைச்சர்கள், அதிகாரிகள், அவர்களின் மூத்த இலிகிதர்கள் என்று பிரசன்னமாகி இருந்தனர்,  முறையிட்டனர் பாணுக்கு கண்ணுக்கு எட்டிய தூரம் வரை வரிசை இருப்பதாக.

சிறிமா  அப்போது சொல்லியது , பாண் இல்லவிட்டால் என்ன, cake சாப்பிடலாம் தானே, cake க்கும் பஞ்சமா என்று 

)

  • கருத்துக்கள உறவுகள்
On 27/12/2024 at 21:15, ஈழப்பிரியன் said:

குறைய படித்தவனெல்லாம் முட்டாள் என்று எண்ணுவது தவறு.

On 27/12/2024 at 21:26, ஈழப்பிரியன் said:

அதற்காக குறைய படித்தவர்களைத் தாழ்த்தாதீர்கள்.

 ஒரு போதும், எந்த திரியானாலும்,  நான் எண்ணுவதும் இல்லை, தாழ்த்துவதும் இல்லை, அதேவேளை படித்தவர் என்று (ஒப்பிட்டு) உயர்த்துவதும் இல்லை.

ஆனால், ஒளவையருக்கு உங்களின் பதில் என்ன?

"ஞானமும், கல்வியும் நயத்தல் அரிது" 
 
Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.