Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கலிபோர்னியாவில் காட்டுத்தீ: 30 ஆயிரம் பேர் பாதிப்பு

image_478fc0ebb3.jpg

அமெரிக்காவின் தெற்கு கலிபோர்னியாவில், செவ்வாய்க்கிழமை (7) இரவு கடுமையான காட்டுத்தீ ஏற்பட்டுள்ளது. 

இந்த காட்டுத்தீ லாஸ் ஏஞ்சல்சின் மலைப்பகுதிகளுக்கு வேகமாக பரவி வருகிறது. இதனால் அங்கு கடும் புகைமூட்டம் நிலவி வருகிறது. 

ஏராளமான வீடுகள், வாகனங்கள் தீயில் எரிந்து நாசமாகின. காட்டுத்தீயை அணைக்க தீயணைப்பு வீரர்கள் கடுமையாக போராடி வருகிறார்கள்.

ஹெலிகாப்டர்கள் மூலம் தண்ணீர் ஊற்றப்பட்டு வருகிறது. 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகளில் வசித்துவந்த 26 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தீயினால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், சுமார் 30 ஆயிரம் பேர் வெளியேற்றப்பட்டுள்ளதாகவும், அந்நாட்டு தீயணைப்புத்துறை தெரிவித்துள்ளது. 

இதையடுத்து,மக்கள் தங்களது கார்களை ஆங்காங்கே நிறுத்தி விட்டு வேறு இடங்களுக்கு குடிபெயர்ந்து வருகின்றனர்.

காற்றின் வேகம் அதிகமாக இருப்பதால், தீ பரவல் வேகமாக பரவி வருகிறது. இதனால் தீயை கட்டுப்படுத்துவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. லாஸ் ஏஞ்சல்ஸ் - கவுண்டியில், 46 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் மின்சாரம் இல்லாமல் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து கலிபோர்னியா ஆளுநர் கவின் நியூசோம் கூறுகையில்,

“காட்டுத்தீயில் பல கட்டமைப்புகள் அழிந்துள்ளன. ஆனால் சரியான எண்ணிக்கை கொடுக்கப்படவில்லை. 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகள் மற்றும் 13 ஆயிரம் கட்டிடங்கள் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்” என்றார். 

புதன்கிழமை (8) இரவு, காற்றின் வேகம் மேலும் அதிகரிக்கும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால் காட்டுத்தீ இன்னும் வேகமாக பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.AN

image_84fb37de6e.jpgimage_0cc90e2c41.jpgimage_b91d1959ea.jpgimage_1a34d68c45.jpgimage_bc918643a3.jpg 
 
https://www.tamilmirror.lk/உலக-செய்திகள்/கலிபோர்னியாவில்-காட்டுத்தீ-30-ஆயிரம்-பேர்-பாதிப்பு/50-349977

  • Replies 105
  • Views 4.8k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Most Popular Posts

  • விசாரித்தமைக்கு நன்றி! நான் கிழக்குக் கரையில் (எங்களுக்கு வேற பிரச்சினை, கடுங்குளிர், கூதல் காற்று, ஆனால், பழகிய காலநிலை தான்). மருதர், தியா, நிகே ஆகியோரும் ஆபத்தில்லாத "பனிவனத்தில்" ! யூட் எங்கே

  • ஈழப்பிரியன்
    ஈழப்பிரியன்

    இப்போது தீ பிடித்திருக்கும் இடங்கள் மிகவும் பணக்கார இடம் என்கிறார்கள். இப்போது தான் மகளுடன் கதைத்தேன்.அவர்களது இடத்திலிருந்து வேறு இடங்களுக்கு நகருமாறு அறிவுறுத்தியுள்ளனர். அவசர அவசரமாக தே

  • ஈழப்பிரியன்
    ஈழப்பிரியன்

    அடிக் கணக்காக பனி கொட்டிக்கிடக்க நீச்சல் தடாகத்தில் ஈழப்பிரியன் குடும்பம். இதுவும்  கலிபோர்ணியா தான்.

  • கருத்துக்கள உறவுகள்

உலகின் எல்லாப்பகுதியும் ஏதோ ஒரு வகையில் அழிவை சந்தித்துக்கொண்டு வருகிறது.

  • கருத்துக்கள உறவுகள்

கலிஃபோர்னிய காட்டுத் தீயால் மில்லியன் கணக்கானோர் பாதிப்பு!

கலிஃபோர்னிய காட்டுத் தீயால் மில்லியன் கணக்கானோர் பாதிப்பு!

13,000 க்கும் மேற்பட்ட குடியிருப்பு மற்றும் கட்டிடங்களை அச்சுறுத்திய கடுமையான காட்டுத் தீ காரணமாக லாஸ் ஏஞ்சல்ஸ் குடியிருப்பாளர்கள் சுமார் 30,000 பேர் செவ்வாய்க்கிழமை (08) வெளியேற்ற உத்தரவுகளைப் பெற்றனர்.

கடற்கரை நகரங்களான சாண்டா மோனிகா மற்றும் மலிபு ஆகியவற்றுக்கு இடையே பசுபிக் பாலிசேட்ஸ் பகுதியில் குறைந்தது 2,921 ஏக்கர் (1,182 ஹெக்டேர்) தீக்கிரையாகியுள்ளதாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்தனர்.

நீட்டிக்கப்பட்ட வறண்ட காலநிலையைத் தொடர்ந்து வலுப்பெற்றுள்ள பலத்த காற்றானது தீப்பரவலை மேலும் அதிகரிக்கலாம் என்ற எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

இதனிடையே தீப்பரவலை கட்டுப்படுத்து முயற்சியில் விமானப் படை வீரர்களும், தீயணைப்பு வீரர்களும் ஈடுபட்டு வருகின்றனர்.

காயங்கள் எதுவும் இதுவரை பதிவாகவில்லை என கூறிய கலிபோர்னியாவின் ஆளுனர் கவின் நியூசோம், எனினும் பல கட்டிடங்கள் ஏற்கனவே தீக்கிரையாகிவிட்டதாக குறிப்பிட்டர்.

அதேரேநம், அரை மில்லியன் மக்கள் மின் வெட்டு பாதிப்பினை எதிர்கொண்டுள்ளதாக அதிகாரிகள் கூறினர்.

பல மாதங்களாக கணிசமான மழை பெய்யாத மலைப்பாங்கான பகுதிகளில் மணிக்கு 100 மைல் (மணிக்கு 160 கி.மீ.) வேகத்தில் வீசும் சூறாவளி காற்று பல நாட்களுக்கு நீடிக்கும் என்று வானிலை முன்னறிவிப்பாளர்கள் கணித்துள்ளனர்.

இதனிடையே பசுபிக் பாலிசேட்ஸ் பகுதியில் வீடுகள் தீப்பிடித்து எரிவதையும், குடியிருப்பாளர்கள் தீயில் இருந்து தப்பிக்க தங்கள் செல்ல பிராணிகளுடன் வெளியேறும் காட்சிகளும் சமூக தளங்களில் வெளியாகியுள்ளது.

Sunset Boulevard engulfed in smoke from the California wildfires

https://athavannews.com/2025/1415624

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, தமிழ் சிறி said:

யசோதரன்.   கவனம் இது உங்கள் பகுதியா???     மற்றும்  நீர்வேலியன்  இருபாலையன்.  ......பிரபா      சுகமாக இருக்கிறீர்களா??    இதை ஒழுங்காக கையாள தெரியவில்லை  வருடாந்தம்.  நடைபெறுகிறது தடுக்க வழிமுறைகள் இல்லையா??   

இதுக்கை   கனடா  வேண்டும்  கீறிஸ்லான்ட  வேண்டும் பனாமா. வேண்டும்   ....  முதலில் அமெரிக்காவை ஒழுங்காக ஆளுங்கள் 

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Kandiah57 said:

இது வருடாவருடம் திருவிழா மாதிரி வந்து போகிறது.

எனது மகளும் மிக அருகிலேயே இருக்கிறார்.வேறு இடத்துக்கு போகவே எண்ணுகிறார்.

@நீர்வேலியான் @ரசோதரன்  உங்கள் நிலமை எப்படி?

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, ஈழப்பிரியன் said:

இது வருடாவருடம் திருவிழா மாதிரி வந்து போகிறது.

எனது மகளும் மிக அருகிலேயே இருக்கிறார்.வேறு இடத்துக்கு போகவே எண்ணுகிறார்.

@நீர்வேலியான் @ரசோதரன்  உங்கள் நிலமை எப்படி?

எப்படி சமாளிக்க முடிகிறது  ??   100%  இழப்பீடு கிடைக்குமா  ???  

  • கருத்துக்கள உறவுகள்
37 minutes ago, Kandiah57 said:

எப்படி சமாளிக்க முடிகிறது  ??   100%  இழப்பீடு கிடைக்குமா  ???  

இப்போது தீ பிடித்திருக்கும் இடங்கள் மிகவும் பணக்கார இடம் என்கிறார்கள்.

இப்போது தான் மகளுடன் கதைத்தேன்.அவர்களது இடத்திலிருந்து வேறு இடங்களுக்கு நகருமாறு அறிவுறுத்தியுள்ளனர்.

அவசர அவசரமாக தேவையானதை எடுத்துக் கொண்டிருக்கிறா.

கிட்டக்கிட்ட இருங்கோ என்றால் கேட்பதில்லை.இப்போ விசர் வருகிறது.

  • கருத்துக்கள உறவுகள்
37 minutes ago, ஈழப்பிரியன் said:

இப்போது தீ பிடித்திருக்கும் இடங்கள் மிகவும் பணக்கார இடம் என்கிறார்கள்.

இப்போது தான் மகளுடன் கதைத்தேன்.அவர்களது இடத்திலிருந்து வேறு இடங்களுக்கு நகருமாறு அறிவுறுத்தியுள்ளனர்.

அவசர அவசரமாக தேவையானதை எடுத்துக் கொண்டிருக்கிறா.

கிட்டக்கிட்ட இருங்கோ என்றால் கேட்பதில்லை.இப்போ விசர் வருகிறது.

அமெரிக்கா வாழ் உறவுகள் முடிந்தவரை பாதுகாப்பாக இருங்கள்..🖐️

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, Kandiah57 said:

யசோதரன்.   கவனம் இது உங்கள் பகுதியா???     மற்றும்  நீர்வேலியன்  இருபாலையன்.  ......பிரபா      சுகமாக இருக்கிறீர்களா??    இதை ஒழுங்காக கையாள தெரியவில்லை  வருடாந்தம்.  நடைபெறுகிறது தடுக்க வழிமுறைகள் இல்லையா??   

இதுக்கை   கனடா  வேண்டும்  கீறிஸ்லான்ட  வேண்டும் பனாமா. வேண்டும்   ....  முதலில் அமெரிக்காவை ஒழுங்காக ஆளுங்கள் 

இது என்னுடைய பகுதி இல்லை, இது அமெரிக்காவின் பகுதி, அண்ணா.............🤣.

ஆமாம், லாஸ் ஏஞ்சல்ஸ் பகுதியைச் சுற்றித்தான் எரிந்து கொண்டிருக்கின்றது. மலைப்பகுதிகளிலும், அடிவாரங்களிலும் எரிகின்றது. இது எப்போதும், வருடா வருடம், நடக்கும். எந்த வருடம், எந்த மலைகள் எரியும் என்பது தான் நடந்த பின்பே தெரிகின்றது.

என்னுடைய வீடு மலையிலோ அல்லது அடிவாரத்திலோ இல்லை. கடற்கரைப் பக்கமாக உள்ளது. தேவைப்பட்டால், ஓடிப் போய் கடலுக்குள் விழும் திட்டம் ஒன்று கைவசம் இருக்கின்றது.

ஃபயர் வந்ததால் பனாமாக் கால்வாய் கிடையாது என்று நீங்கள் சொல்வது கொஞ்சமும் நியாயம் இல்லை, அண்ணா................ பனாமாவிலும் ஃபயர் வரும்....................🤣.  

  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்கா வாழ் உறவுகள் முடிந்தவரை பாதுகாப்பாக இருங்கள்..🖐️

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஈழப்பிரியன் said:

இது வருடாவருடம் திருவிழா மாதிரி வந்து போகிறது.

எனது மகளும் மிக அருகிலேயே இருக்கிறார்.வேறு இடத்துக்கு போகவே எண்ணுகிறார்.

@நீர்வேலியான் @ரசோதரன்  உங்கள் நிலமை எப்படி?

என்னுடைய பகுதியில் நெருப்பு வருவதில்லை, அண்ணா...........

உங்கள் மகள் இருக்கும் இடத்திலிருந்து கொஞ்ச தொலைவில் ஒன்று எரிந்து கொண்டிருக்கின்றது. ஆனால் அது உங்கள் மகள் இருக்கும் இடத்திற்கு பரவாது. பயப்படாதீர்கள், அண்ணா...............

  • கருத்துக்கள உறவுகள்

எல்லோரும் பாதுகாப்பான இடங்களுக்கு நகர்ந்து இருங்கள் ........ நெருப்போடு விளையாடக் கூடாது . .....! 

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, ரசோதரன் said:

என்னுடைய வீடு மலையிலோ அல்லது அடிவாரத்திலோ இல்லை. கடற்கரைப் பக்கமாக உள்ளது. தேவைப்பட்டால், ஓடிப் போய் கடலுக்குள் விழும் திட்டம் ஒன்று கைவசம் இருக்கின்றது.

அப்படியே கொஞ்சதூரம் நடந்தியள்  என்றால் ..உங்கடை ஊர் வந்திடும்...அன்னபூரணி வந்த பாதைதானே

Edited by alvayan

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kandiah57 said:

எப்படி சமாளிக்க முடிகிறது  ??   100%  இழப்பீடு கிடைக்குமா  ???  

இழப்பீடுகள் கிடைத்து விடும்

1 hour ago, ஈழப்பிரியன் said:

இப்போது தீ பிடித்திருக்கும் இடங்கள் மிகவும் பணக்கார இடம் என்கிறார்கள்.

இப்போது தான் மகளுடன் கதைத்தேன்.அவர்களது இடத்திலிருந்து வேறு இடங்களுக்கு நகருமாறு அறிவுறுத்தியுள்ளனர்.

அவசர அவசரமாக தேவையானதை எடுத்துக் கொண்டிருக்கிறா.

கிட்டக்கிட்ட இருங்கோ என்றால் கேட்பதில்லை.இப்போ விசர் வருகிறது.

பயப்படாதீர்கள், அண்ணா............ அந்தப் பகுதியில் இருப்பவர்களை ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அவர்களின் சம்மதத்துடன் ஓரிரு நாட்கள் வேறு இடத்திற்கு போய் தங்கச் சொல்வார்கள். இன்றுடன் கடும் காற்று நின்றுவிடும்..................... அதன் பின்னால் எரிவது கட்டுப்பாட்டிற்குள் வந்துவிடும்..................

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, alvayan said:

அப்படியே கொஞ்சதூரம் நடந்தியள்  என்றால் ..உங்கடை ஊர் வந்திடும்...அன்னபூரணி வந்த பாதைதானே

அது தான் என்னுடைய திட்டமும்.................😜.

ஒரு நெருப்பு எரிவது Malibu  என்னும் இடத்தில். அது பெரும் பணக்காரர்கள் வாழும் கடலுடன் கூடிய மலைப்பகுதியான இடம் அது.

இந்தப் பாதை தான் சரி என்று நினைக்கின்றேன்...........

spacer.png

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, suvy said:

எல்லோரும் பாதுகாப்பான இடங்களுக்கு நகர்ந்து இருங்கள் ........ நெருப்போடு விளையாடக் கூடாது . .....! 

🙏............

ஆபத்து என்று தெரிந்தால் வலுக்கட்டாயமாக வெளியேற்றி விடுவார்கள், சுவி ஐயா.  Mandatory evacuation. இன்னமும் மற்ற இடங்களுக்கு பரவவில்லை. இன்றுடன் காலநிலையும், காற்றும் மீண்டும் மிதமாவதால், இது இத்துடன் நின்றுவிடும் என்றே நினைக்கின்றேன்.....................

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, Kandiah57 said:

 தடுக்க வழிமுறைகள் இல்லையா??   

காட்டோர ஊருக்குள் யானைகளும், காட்டு மிருகங்களும் வருவது போலத்தான் இதுவும். காடுகளை ஊர்களாக்கினால் காட்டு மிருகங்கள் வேறு எங்குதான் போவது................

லாஸ் ஏஞ்சலீஸ் கடற்கரையை அண்டிய பகுதிகளில் மக்கள் தொகை மிக அதிகமாக அதிகரித்த பின், மக்கள் நகரிலிருந்து வெளியே அடிவாரங்களையும், மலைகளையும் நோக்கிப் போனார்கள். அத்துடன் வசதி படைத்தவர்கள் மலை உச்சிகளில் குடியேறினர்.

புதிய வீடுகள், மிகப் பெரிய வீடுகள் அத்துடன் ஆரம்பத்தில் நகர்ப் பகுதிகளில் இருப்பதை விட இவற்றின் விலை குறைவாக இருந்தது. ஆகவே மக்கள் அதிகமாக இந்த இடங்களை நோக்கிப் போனார்கள். இன்று இந்தப் பகுதிகளும் நகர்களாகி விட்டது, அத்துடன் இன்று விலைகளும் எல்லா இடங்களிலும் ஒன்றே.

மிக உலர்ந்த காலநிலை, அதிக வெப்பம், எளிதில் தீப்பற்றும் இந்த மண்ணின் மரங்கள் மற்றும் புதர்கள் இவற்றுடன் சேர்த்து மிக வேகத்துடன் வீசும், மிக உலர்ந்த காற்றும் வருடத்தில் சில நாட்கள் வீசும். இவையே தான் மலைகளிலும், அதையொட்டிய பகுதிகளிலும் தீ ஆரம்பிப்பதற்கும், பரவுவதற்கும் மூல காரணங்கள். 

இது இயற்கையின் ஒரு சுற்று தான். இப்படித்தான் மலைக்காடுகளில் இருக்கும் முதிய மரங்கள் அழிவதும், புதிய மரங்கள் உண்டாவதும் ஆயிரக்கணக்கான வருடங்களாக நடந்து கொண்டிருக்கின்றது. இப்பொழுது, புதிதாக மனிதர்கள் போய் இடையில் மாட்டுப்பட்டுவிட்டார்கள். 

அத்துடன் மனிதர்களின் புதிய நடவடிக்கைகளால் மண் அரிப்பு, நிலச்சரிவு என்பனவும் இன்று நடந்து கொண்டிருக்கின்றது. 

ஒரு துவாரத்தை நாங்கள் அடைக்க முற்பட்டால், இன்னுமொரு துவாரத்தை இயற்கை உண்டாக்கும் போல.....................

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, ரசோதரன் said:

ஒரு துவாரத்தை நாங்கள் அடைக்க முற்பட்டால், இன்னுமொரு துவாரத்தை இயற்கை உண்டாக்கும் போல.....................

நம்மூரிலும்... தண்ணீர் போகும் பாதையை மறித்து மதில்களை கட்டி விட்டு,
ஊருக்குள் வெள்ளம் வந்து விட்டது என்று, மாரி  மழையில் கோவிக்கிற மாதிரிதான் இதுவும். 😂 🤣

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ஈழப்பிரியன் said:

இது வருடாவருடம் திருவிழா மாதிரி வந்து போகிறது.

எனது மகளும் மிக அருகிலேயே இருக்கிறார்.வேறு இடத்துக்கு போகவே எண்ணுகிறார்.

@நீர்வேலியான் @ரசோதரன்  உங்கள் நிலமை எப்படி?

இது எங்களுக்கு சிறிது தொலைவு, நான் பாதுகாப்பாக இருக்கிறேன், போன வருடம் மிகவும் பக்கத்தில் எரிந்தது, நாங்கள் மலைப்பகுதியில் இல்லாதபடியால் தப்பி விட்டோம்

  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்கா வாழ் உறவுகள் முடிந்தவரை பாதுகாப்பாக இருங்கள்..🖐️

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, Kandiah57 said:

மற்றும்  நீர்வேலியன்  இருபாலையன்.  ......பிரபா      சுகமாக இருக்கிறீர்களா??  

 அமெரிக்கா வாழ் உறவுகள் முடிந்தவரை பாதுகாப்பாக இருங்கள்..🖐️

நான் சுகமாகவுள்ளேன். உங்கள் அக்கறைக்கு நன்றிகள்.
எமது பகுதியில் எந்த நேரமும் மின்சாரம் தடைப்படலாம் என அறிவித்துள்ளார்கள்.
மின்சாரம் நிப்பாட்டினால் அகதி தான் 😪. நண்பர்கள் வீடுகள் அல்லது விடுதிகளை தேடிச் செல்ல வேண்டும்.

Edited by பிரபா

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ரசோதரன் said:

என்னுடைய பகுதியில் நெருப்பு வருவதில்லை, அண்ணா...........

உங்கள் மகள் இருக்கும் இடத்திலிருந்து கொஞ்ச தொலைவில் ஒன்று எரிந்து கொண்டிருக்கின்றது. ஆனால் அது உங்கள் மகள் இருக்கும் இடத்திற்கு பரவாது. பயப்படாதீர்கள், அண்ணா...............

37 minutes ago, நீர்வேலியான் said:

இது எங்களுக்கு சிறிது தொலைவு, நான் பாதுகாப்பாக இருக்கிறேன், போன வருடம் மிகவும் பக்கத்தில் எரிந்தது, நாங்கள் மலைப்பகுதியில் இல்லாதபடியால் தப்பி விட்டோம்

மகள் இன்று காலை இடம் பெயர்ந்து விட்டா.

5 minutes ago, பிரபா said:

நான் சுகமாகவுள்ளேன். உங்கள் அக்கறைக்கு நன்றிகள்.
எமது பகுதியில் எந்த நேரமும் மின்சாரம் தடைப்படலாம் என அறிவித்துள்ளார்கள்.
மின்சாரம் நிப்பாட்டினால் அகதி தான் 😪. நண்பர்கள் வீடுகள் அல்லது விடுதிகளை தேடிச் செல்ல வேண்டும்.

நீங்கள் இன்னும் கீழே இருக்கிறபடியால் பிரச்சனை இல்லை.

எப்போதும் இல்லாதவாறு காற்று அசுர வேகத்தில் வீசுகிறது.

  • கருத்துக்கள உறவுகள்
31 minutes ago, ஈழப்பிரியன் said:

மகள் இன்று காலை இடம் பெயர்ந்து விட்டா.

நீங்கள் இன்னும் கீழே இருக்கிறபடியால் பிரச்சனை இல்லை.

எப்போதும் இல்லாதவாறு காற்று அசுர வேகத்தில் வீசுகிறது.

கடவுள்  கைவிடமாட்டார்...நம்பிக்கையுடன் இருங்கள்..

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
2 hours ago, ஈழப்பிரியன் said:

மகள் இன்று காலை இடம் பெயர்ந்து விட்டா.

நல்ல விடயம்.

  • கருத்துக்கள உறவுகள்

பொதுமக்களில் இருவர் இறந்துள்ளதாக கூறுகிறார்கள்.

Raging wildfires in Los Angeles area kill at least 2 and destroy 1,000 structures

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.