Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Published By: VISHNU   08 JAN, 2025 | 09:12 PM

image
 
08ஆம் திகதி புதன்கிழமை இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பாரளுமன்ற உறுப்பினர்களுக்கும் அமெரிக்க தூதுவர் யூலி சங் அவர்களுக்குமிடையிலான சந்திப்பு இடம்பெற்றது.

இலங்கையில் வாழும் தமிழ் மக்கள் குறிப்பாக வடக்கு கிழக்கு மாகாணங்களில் வாழும் மக்கள் எதிர்கொள்ளும் அரசியல் பொருளாதார சவால்கள் தொடர்பாக இதன் போது கலந்துரையாடப்பட்டது.

இலங்கையில் நிரந்தரமான அரசியல் தீர்வு ஏற்பட அமெரிக்காவின் தொடர்சியான பங்களிப்பின் முக்கியத்துவம் தேவையென எடுத்துரைக்கப்பட்டது. அதனுடன் பொருளாதார மேம்பாட்டுக்கான திட்டங்கள் தொடர்பிலும் ஆராயப்பட்டது. 

https://www.virakesari.lk/article/203353

  • Replies 78
  • Views 3.2k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Most Popular Posts

  • அமெரிக்காவின் இன்னொரு மாநிலமாக அங்கீகரிக்க முடியுமா என்று கேட்டால் என்ன? 

  • தமிழ் சிறி
    தமிழ் சிறி

    சுமந்திரனின்  அந்த வேதனையை…  வார்த்தைகளால் வர்ணிக்க முடியாது. அமைச்சர் கனவில் இருந்தவருக்கு இப்படி ஒரு நிலைமை வந்தால், தாங்க முடியாதுதானே. 😂 எல்லாம் அவரே தனது தலையில் அள்ளிப் போட்டுக் கொண்ட மண். 👍🏽

  • இந்த படம் வீரகேசரியினால் அண்மையில் இணைப்பட்டது.   இது @Kapithan குறிப்பிடும் 2017 சம்பவத்தின் போது.     இது வீரகேசரியின் இணைப்பு December 2024

  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்காவின் இன்னொரு மாநிலமாக அங்கீகரிக்க முடியுமா என்று கேட்டால் என்ன? 

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, ஏராளன் said:

இலங்கையில் வாழும் தமிழ் மக்கள் குறிப்பாக வடக்கு கிழக்கு மாகாணங்களில் வாழும் மக்கள் எதிர்கொள்ளும் அரசியல் பொருளாதார சவால்கள் தொடர்பாக இதன் போது கலந்துரையாடப்பட்டது.

அப்ப பார் லைசன்ஸ் பற்றியும் கலந்துரையாடியிருப்பினம்!😂

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, RishiK said:

அமெரிக்காவின் இன்னொரு மாநிலமாக அங்கீகரிக்க முடியுமா என்று கேட்டால் என்ன? 

புவோர்தோ ரிக்கோ போல திரிசங்கு சொர்க்கம் கூட கிடைக்காது எமக்கு🤣

  • கருத்துக்கள உறவுகள்

 இந்த சங்  அம்மா மாற்றலாகிறார் என்று ..ரணிலு வந்தவுடன் கதை வந்ததே...இன்னும் மாறவில்லையா..அல்லது ..இன்னும் பெரிய..அசைன்ட்மென்ட் ஏத்ஹவது இருக்கோ... அதிலை ஒன்றுதான் இந்த  சந்திப்போ..

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ஏராளன் said:

இலங்கையில் நிரந்தரமான அரசியல் தீர்வு ஏற்பட அமெரிக்காவின் தொடர்சியான பங்களிப்பின் முக்கியத்துவம் தேவையென எடுத்துரைக்கப்பட்டது.

இலங்கையில் நிரந்தரமான அரசியல் தீர்வுக்கு அமெரிக்காவை நீதிபதியாக்க முயலும்…. குரங்கு ஆப்பம் பகிர்ந்த கதை மறந்த ஈழத்துப் பூனைகள்.!!

  • கருத்துக்கள உறவுகள்

படத்தை பார்க்க மகிழ்ச்சியாக உள்ளது.

சாணக்கியனின் மொழி பெயர்ப்பாளரை கமெராக்கு பின்னால நிக்கிறாரோ???😝

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, MEERA said:

படத்தை பார்க்க மகிழ்ச்சியாக உள்ளது.

சாணக்கியனின் மொழி பெயர்ப்பாளரை கமெராக்கு பின்னால நிக்கிறாரோ???😝

நானும் பார்த்திட்டன்...அந்த கசங்கிய சிவப்புகலர் சேர்ட்தானே

  • கருத்துக்கள உறவுகள்

அவரே, யூலி சங்கோடு தனியாய் சந்திக்க முடியலையே என்றாலும் இந்த படத்தில தலையை கூட காட்ட முடியலையே என்கிற கடுப்பிலும் வருத்தத்திலும் இருக்கிறார். நீங்கள் வேற.

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, MEERA said:

படத்தை பார்க்க மகிழ்ச்சியாக உள்ளது.

சாணக்கியனின் மொழி பெயர்ப்பாளரை கமெராக்கு பின்னால நிக்கிறாரோ???😝

2 hours ago, alvayan said:

நானும் பார்த்திட்டன்...அந்த கசங்கிய சிவப்புகலர் சேர்ட்தானே

1 hour ago, satan said:

அவரே, யூலி சங்கோடு தனியாய் சந்திக்க முடியலையே என்றாலும் இந்த படத்தில தலையை கூட காட்ட முடியலையே என்கிற கடுப்பிலும் வருத்தத்திலும் இருக்கிறார். நீங்கள் வேற.

நிரந்தரமான அரசியல் தீர்வு ஏற்பட அமெரிக்கா தொடர்சியான பங்களிப்பு!

சுமந்திரனின்  அந்த வேதனையை…  வார்த்தைகளால் வர்ணிக்க முடியாது. அமைச்சர் கனவில் இருந்தவருக்கு இப்படி ஒரு நிலைமை வந்தால், தாங்க முடியாதுதானே. 😂
எல்லாம் அவரே தனது தலையில் அள்ளிப் போட்டுக் கொண்ட மண்.
👍🏽 🤣

சுமந்திரன் இல்லாத படம்… வேறை லெவல். 😁 😂 🤣 💪

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்
34 minutes ago, தமிழ் சிறி said:

சுமந்திரனின்  அந்த வேதனையை…  வார்த்தைகளால் வர்ணிக்க முடியாது. அமைச்சர் கனவில் இருந்தவருக்கு இப்படி ஒரு நிலைமை வந்தால், தாங்க முடியாதுதானே. 😂
எல்லாம் அவரே தனது தலையில் அள்ளிப் போட்டுக் கொண்ட மண். 👍🏽 🤣

சுமந்திரன் இல்லாத படம்… வேறை லெவல். 😁 😂 🤣 💪

போச்சுடா...கண்டுபிடிச்சிட்டிங்களே....

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, alvayan said:

போச்சுடா...கண்டுபிடிச்சிட்டிங்களே....

image

கசங்கின சிவப்பு சேர்ட்டு... வாழ்க்கையில் மறக்க முடியாத படம் அது.  😂 🤣

  • கருத்துக்கள உறவுகள்

இந்தப்படத்தை பாத்தபோது  நான் நினைச்சேன், அனுராவுக்கு சாரதிவேலைக்கு நேர்முகத்தேர்வுக்கு வந்திருக்கிறார், வழியில் இவரையும் சந்தித்திருப்பார் என்று.

2 hours ago, தமிழ் சிறி said:

அமைச்சர் கனவில் இருந்தவருக்கு இப்படி ஒரு நிலைமை வந்தால்,

பிரதமர்..... பிரதமர்!

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, தமிழ் சிறி said:

நிரந்தரமான அரசியல் தீர்வு ஏற்பட அமெரிக்கா தொடர்சியான பங்களிப்பு!

சுமந்திரனின்  அந்த வேதனையை…  வார்த்தைகளால் வர்ணிக்க முடியாது. அமைச்சர் கனவில் இருந்தவருக்கு இப்படி ஒரு நிலைமை வந்தால், தாங்க முடியாதுதானே. 😂
எல்லாம் அவரே தனது தலையில் அள்ளிப் போட்டுக் கொண்ட மண்.
👍🏽 🤣

சுமந்திரன் இல்லாத படம்… வேறை லெவல். 😁 😂 🤣 💪

51 minutes ago, satan said:

பிரதமர்..... பிரதமர்!

அது தானே….!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
4 hours ago, தமிழ் சிறி said:

கசங்கின சிவப்பு சேர்ட்டு... வாழ்க்கையில் மறக்க முடியாத படம் அது.  😂 🤣

சிவப்பு சேர்ட்டு போட்டு  ஆருக்கோ சிக்னல் குடுக்கிறார்..😎

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, satan said:

இந்தப்படத்தை பாத்தபோது  நான் நினைச்சேன், அனுராவுக்கு சாரதிவேலைக்கு நேர்முகத்தேர்வுக்கு வந்திருக்கிறார், வழியில் இவரையும் சந்தித்திருப்பார் என்று.

பிரதமர்..... பிரதமர்!

1 hour ago, குமாரசாமி said:

சிவப்பு சேர்ட்டு போட்டு  ஆருக்கோ சிக்னல் குடுக்கிறார்..😎

ஜனாதிபதி தேர்தல் அறிவிப்பின் பின்னர் அனுர தரப்பின் முதல் நகர்வு - ஐபிசி  தமிழ்   M._A._Sumanthiran.jpg 

ஆளும் கட்சியான  தேசிய மக்கள் சக்திக்குதான்.. சுமந்திரன், சிக்னல் கொடுக்கிறார்.
ஏற்கெனவே மகிந்த, கோத்தா, மைத்திரி,  ரணில் எல்லாரையும் பின்கதவாலை 
போய் சந்தித்தவருக்கு,
இப்ப பாராளுமன்ற பதவி இல்லாததாலை, 
அனுரவை சந்திக்க ஒரு சாட்டும் இல்லை. 
அதுதான்... சிவப்பு சட்டையை மாட்டிக் கொண்டு கிளம்பி விட்டார். 

"கிளீன் ஸ்ரீலங்கா"விலை இவரையும் தூக்கி, குப்பை வாளிக்குள் போட்டு விட வேண்டும். 🤣

Edited by தமிழ் சிறி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சமஷ்டிக்கு உதவ வேண்டும்; தமிழரசு கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் அமெரிக்காவிடம் வலியுறுத்தல்

உலகின் பல நாடுகளில் இருக்கின்ற மிக உன்னதமான அரசியல் தீர்வாக பார்க்கப்படும் சமஷ்டி அடிப்படையிலான ஒரு தீர்வுக்காகவே தமிழ் மக்கள் காத்துக்கொண்டிருக்கிறார்கள். நாங்கள் கோரி நிற்கும் சமஷ்டி அடிப்படையிலான தீர்வு என்பது நாட்டை பிரிக்கும் நோக்கம் கொண்டதல்ல. எனவே புதிய ஆட்சியாளர்கள் ஒரு அரசியல் சாசனத்தை கொண்டுவரும்பொழுது அதில் இணைந்த வடக்கு – கிழக்கில் அர்த்தபுஷ்டியான -கௌரவமான -நீடித்து நிலைத்துநிற்கக்கூடிய சமஷ்டி அடிப்படையிலான அரசியல் தீர்வு வழங்கப்பட வேண்டுமென்பதே தமிழ் மக்களின் எதிர்பார்ப்பு என தமிழரசு கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலிசங்கிடம் எடுத்துக் கூறியுள்ளனர்.

இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலிசங் மற்றும் தமிழரசு கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கிடையிலான சந்திப்பொன்று நேற்று புதன்கிழமை மாலை கொழும்பில் நடைபெற்றது. பாராளுமன்ற உறுப்பினரும் பாராளுமன்ற குழுக்களின் தலைவருமான சிவஞானம் சிறீதரன் தலைமையில் எட்டு பாராளுமன்ற உறுப்பினர்களும் இந்த சந்திப்பில் கலந்து கொண்டிருந்தனர்.

மேற்படி சந்திப்பில் பேசும்போதே தமிழரசு கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் மேற்படி விடயத்தை ஒரே குரலில் எடுத்துக் கூறியுள்ளனர்.

இந்த சந்திப்பு தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் சிறீதரன் தினக்குரலுக்கு கருத்து தெரிவிக்கையில்;

புதிய அரசியல் சாசனம் ஒன்றை உருவாக்கப்போவதாக ஆட்சியாளர்கள் கூறி வருகிறார்கள். அவ்வாறு ஒரு அரசியல் சாசனம் உருவாக்கப்பட்டால் அதில் இணைந்த வடக்கு – கிழக்கில் சமஷ்டி அடிப்படையிலான நிரந்தரமான ஒரு அரசியல் தீர்வு  தமிழ் மக்களுக்கு வழங்கப்பட வேண்டுமென்பதே எங்களுடைய எதிர்பார்ப்பும் கோரிக்கையும் ஆகும். நாங்கள் கோரி நிற்கும் சமஷ்டி அடிப்படையிலான தீர்வு என்பது நாட்டை பிரிக்கும் நோக்கம் கொண்டதல்ல. உலகின் பல நாடுகளில் இருக்கின்ற மிக உன்னதமான அதிகாரப்பகிர்வு இந்த சமஷ்டி முறைமையாகும். ஆகவே,ஒரே நாட்டுக்குள் ஒற்றுமையாக; இனங்களுக்கிடையில் ஒற்றுமை பலப்பட்டு சுதந்திரமாக அனைத்து இன மக்களும் வாழவேண்டுமாகவிருந்தால் சமஷ்டி அடிப்படையிலான தீர்வொன்று அவசியமாகும். அந்த அடிப்படையில் புதிய அரசியல் சாசனம் ஒன்று நாட்டில் உருவாகும்பொழுது மேற்படி தீர்வொன்றுக்கு அரசாங்கம் நகர்வதற்கு அமெரிக்கா அழுத்தம் கொடுக்கவேண்டுமென எடுத்துக்கூறினோம்.

அதேபோல்,பொறுப்புக்கூறல் விவகாரத்தில் அமெரிக்காதான் ஜெனீவாவில் ஒரு தீர்மானத்தை கொண்டுவந்திருந்தது. ஆனால்,அத்தீர்மானம் அடுத்த கட்டத்துக்கு நகராமல் இருப்பது பாதிக்கப்பட்ட மக்களுக்கு பெரும் பின்னடைவாக.எனவே ஜெனீவா தீர்மானத்தை அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்வதற்கு அமெரிக்கா கூடியளவில் கரிசனை கொள்ளவேண்டும் என்றும் தூதுவரிடம் எடுத்துக்கூறினோம்.

70 வருடங்களாக மாறி மாறி வந்த அரசுகளினால் துன்பங்களை அனுபவித்த இனமாக தமிழர்கள் இருக்கிறார்கள். நாங்கள் (தமிழர்கள்) தான் பசியோடு இருக்கின்றோம்.ஏற்கனவே ஆட்சிக்கு வந்த அரசாங்கங்களுடன் பேசி – பேசி தொடர்ந்து ஏமாற்றப்பட்டு வந்துள்ளோம். ஆகவே தமிழர்களுக்கான அரசியல் தீர்வு என்பது சமஷ்டி அடிப்படையிலான தீர்வாக இருக்கவேண்டும் என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கின்றோம். அதேபோல் வழங்கப்படும் அதிகாரங்கள் மீளப்பறிக்கப்பட கூடாததாக இருக்கவேண்டும். அவ்வாறானதொரு தீர்வு ஏற்படும்பொழுதுதான் இந்த நாட்டில் அனைத்து சமூகங்களும் ஒற்றுமையாக-சுதந்திரமாக வாழும் சூழல் ஏற்படும்.இதற்கு பல நாடுகள் உதாரணங்களாக இருக்கின்றன என்பதனையும் தூதுவரிடத்தில் சுட்டிக்காட்டினோம்.

அர்த்தபுஷ்டியான -கௌரவமான -நீடித்து நிலைத்துநிற்கக்கூடிய அரசியல் தீர்வு என்பது உலகத்தில் சமஷ்டி அடிப்படையில்தான் பகிரப்பட்டிருக்கிறது. ஆகவே தமிழர்களுக்கும் அந்த அடிப்படையில் ஒரு அரசியல் தீர்வு வழங்கப்படவேண்டுமென்பதில் நாங்கள் உறுதியாக இருக்கின்றோம்.அதற்கு அமெரிக்காவும் இயன்ற ஒத்துழைப்பை வழங்க வேண்டுமென கேட்டுக்கொண்டோம் என சிறீரீதரன் தெரிவித்தார்.

https://thinakkural.lk/article/314504

  • கருத்துக்கள உறவுகள்

2009ம் ஆண்டு புலிகளை அழிக்க போகிறோம்.

அதன் பின் தமிழர்களுக்கு ஒரு தீர்வு பெற்று தருவோம்.

அதுவரை கொஞ்சம் பொத்திக் கொண்டிருங்கள் என்று சொல்லி

வருடம் 15 ஆகிவிட்டதே அமெரிக்கா 

இன்னும் எவ்வளவு காலம்தான் பொறுத்திருக்கணும்?

பொறுமைக்கும் ஒரு எல்லை இல்லையா என்று ஒருவரும் கேட்கலையோ?

  • கருத்துக்கள உறவுகள்
49 minutes ago, ஏராளன் said:

கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதை. 

தமிழீழம் பெற வேண்டும் என்று உசுப்பேற்றி ரத்தத் திலகமிட்ட தமிழ் அரசியல் வியாதிகள் தற்போது இருக்கும் கோவணத்துக்காக அடிபடும் நிலையில்,...😏

7 hours ago, தமிழ் சிறி said:

கசங்கின சிவப்பு சேர்ட்டு... வாழ்க்கையில் மறக்க முடியாத படம் அது.  😂 🤣

சனாதிபதி சட்டத்தரணி,  அதுவும் தமிழ் அரசியல் வியாதிகளிடையே மிகவும் கம்பீரமாக உடையுடுத்தும் ஓரிருவருள்  சுமந்திரனும் ஒருவர். அவருக்கு உடையணியத்தெரியாது என்கிற ரீதியில் கருத்துரைப்பது சிறியரின் அறியாமையாகக் கொள்ளலாமா???????

(கவனமாக உற்றுப்பாருங்கள். அந்த Shirt  Summer season ல் பொதுவாக அணியப்படும் Cotton shirt ஆக இருக்க வாய்ப்புகள் அதிகம் )

  • கருத்துக்கள உறவுகள்
30 minutes ago, ஈழப்பிரியன் said:

2009ம் ஆண்டு புலிகளை அழிக்க போகிறோம்.

அதன் பின் தமிழர்களுக்கு ஒரு தீர்வு பெற்று தருவோம்.

அதுவரை கொஞ்சம் பொத்திக் கொண்டிருங்கள் என்று சொல்லி

வருடம் 15 ஆகிவிட்டதே அமெரிக்கா 

இன்னும் எவ்வளவு காலம்தான் பொறுத்திருக்கணும்?

பொறுமைக்கும் ஒரு எல்லை இல்லையா என்று ஒருவரும் கேட்கலையோ?

இன்னும் குறைந்தது 4 வருடங்கள் பொறுக்க வேண்டும். ட்ரம்ப் ஆட்சியில் இலங்கை, தமிழர், இனப்படுகொலை, யுத்தக் குற்றம், எல்லாக் கோப்புகளும் அடியில் போய் விடும்! 4 வருடம் கழித்து ஆட்சி மாறினால் தூசி தட்டி எடுத்துக் கொள்ளலாம், ஆனால் இலங்கையில் இருப்போரே மறந்து கடந்து போய் விடுவர், பிறகேன் எடுப்பான்?

அமெரிக்காவை யார் கேட்பினம்? எங்கள் ஆட்களுக்கு கழுவித்தானே பழக்கம். 

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, Justin said:

தாய்வான் பிரச்சனை இறுகினால் காலூன்ற இலங்கையை நாடலாம்.

அதுகூட இலங்கை அரசுக்கே வாய்ப்பாக அமையும்.

1 minute ago, Kapithan said:

அமெரிக்காவை யார் கேட்பினம்? எங்கள் ஆட்களுக்கு கழுவித்தானே பழக்கம். 

அவர்கள் சொன்னதை அவர்கள் கேட்டுப் பார்ப்பதில் தவறில்லைத் தானே?

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, Kapithan said:

(கவனமாக உற்றுப்பாருங்கள். அந்த Shirt  Summer season ல் பொதுவாக அணியப்படும் Cotton shirt ஆக இருக்க வாய்ப்புகள் அதிகம் )

image

நீளக் கை வைத்த சேர்ட் உங்களுக்கு,  Summer Shirt ? 😂

யாழ்ப்பாண வெக்கைக்குள்... கோட்டு, சூட்டுடன் திரியும்... 
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன்,
ஒரு வெளி நாட்டு அதிகாரியை சந்திக்கப் போகும் போது
வெளியில் இழுத்து விடப்பட்ட கசங்கிய சட்டையும்,
அவரின் உடல் மொழியும்... சாணக்கியனின்  கார்ச் சாரதியாக போயிருப்பார் 
என்ற சந்தேகத்தை இங்கு பலருக்கும் ஏற்படுத்தியுள்ளது.   😎

உங்களுக்கு அது தெரிய வாய்ப்பு இல்லை.
நீங்கள் அதுக்கு,  வெள்ளையடிக்கப் பார்க்கிறீர்கள்.  🤣

போட்ட சேர்ட்டின் நிறத்தையும் கவனிக்கவும். கொள்ளையிலை  போன ராஜதந்திரமோ.... 😂 🤣

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, தமிழ் சிறி said:

image

நீளக் கை வைத்த சேர்ட் உங்களுக்கு,  Summer Shirt ? 😂

யாழ்ப்பாண வெக்கைக்குள்... கோட்டு, சூட்டுடன் திரியும்... 
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன்,
ஒரு வெளி நாட்டு அதிகாரியை சந்த்திக்கப் போகும் போது
வெளியில் இழுத்து விடப்பட்ட கசங்கிய சட்டையும்,
அவரின் உடல் மொழியும்... சாணக்கியனின்  கார்ச் சாரதியாக போயிருப்பார் 
என்ற சந்தேகத்தை இங்கு பலருக்கும் ஏற்படுத்தியுள்ளது.   😎

உங்களுக்கு அது தெரிய வாய்ப்பு இல்லை.
நீங்கள் அதுக்கு,  வெள்ளையடிக்கப் பார்க்கிறீர்கள்.  🤣

உடை உடுத்துதல் தொடர்பான விடயங்களில் (Dress code) உங்களுக்குப் பரிட்சயம் இல்லை என்பதை உறுதிப்படுத்தியதற்கு நன்றி சிறியர். 

😁

Edited by Kapithan

  • கருத்துக்கள உறவுகள்
On 8/1/2025 at 08:20, ஏராளன் said:

இலங்கையில் நிரந்தரமான அரசியல் தீர்வு ஏற்பட அமெரிக்காவின் தொடர்சியான பங்களிப்பின் முக்கியத்துவம் தேவையென எடுத்துரைக்கப்பட்டது.

'நாங்கள் இங்கே மிஷனரி பணிகளுக்காக வரவில்லை.................' என்று Henry Kissinger சொன்னதை உலகில் உள்ள பல நாடுகளின் பாராளுமன்றங்களில் ஒட்டிவைக்க வேண்டும். அவர்களின் தேவைகளும், காரியங்களும் முடிந்தவுடன் கழன்றுவிடுவார்கள் அமெரிக்காவும், எந்த வல்லரசும்.

வெளியில் இருந்து வந்து எவரும் தீர்வு எதுவும் தரப்போவதில்லை. நாங்களே ஒரு தீர்வை எட்டினால் தான் உண்டு. இல்லாவிட்டால் முக்குளித்து முக்குளித்து மரியான அகழி வரை நாடு போகும்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.