Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அவர்களே ‘திராவிட’ புலிகள் தான்!

Jan 21, 2025
FotoJet-2025-01-21T200629.526.jpg

ப.திருமாவேலன்

கொழுப்பெடுத்த கூமுட்டை ஒன்று, தான் பிரபாகரனைச் சந்திப்பதற்கு முன்பு ‘திராவிடம்’ பேசியதாகவும், பிரபாகரன் தான் ‘திராவிட’ மாயையை உடைத்தார் என்றும் உளறித் திரிகிறது. அதைக் கேட்ட போது ‘ஆமைக் கறி’ நாற்றத்தை விடக் கேவலமாக இருந்தது. அவர்களே ‘திராவிட’ புலிகள் என்பது இந்த குணக்கேடனுக்குத் தெரியாது.

‘தமிழர்கள்'( திராவிடர்கள்)

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் 1976 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. அதன் பிறகு 1978 ஆம் ஆண்டு கியூபாவில் உலகம் முழுக்க இருக்கும் விடுதலைப் போராட்ட அமைப்புகள் கலந்து கொண்ட மாநாட்டில் புலிகள் பங்கெடுத்தார்கள்.

11TH WORLD FESTIVAL YOUTH AND STUDENTS – IN CUBA – 1978 என்று அந்த மாநாட்டுக்குப் பெயர். We “LIBERATION TIGERS OF THAMIL EALAM” என்ற அறிமுகத்துடன் நான்கு பக்க அறிக்கையை அப்போது புலிகள் அங்கு தாக்கல் செய்தார்கள்.

அந்த அறிக்கையில் WHO ARE THAMILS ( DRAVIDIANS) என்ற தலைப்பில் இரண்டாவது பாரா உள்ளது. அதில், ”The Thamils have ancient culture and speak Thamil language which is one of the oldest languages of India that formed the Dravidian family spoken today in Thamil Nadu of india, Thamil Ealam of Ceylon, Singapore, Malaysia, Fiji Islands, South Africa and in other countries by more than 65 million people. In Ceylon Thamils are 3 million in number” – என்று குறிப்பிட்டுள்ளார்கள். ( அந்த அறிக்கையில் TAMILS என்பதில் ‘H’ இடம்பெற்றுள்ளது)

புலிச்சின்னத்தைத் தேர்ந்தெடுத்தது ஏன்?

PULI-KODI.png

1976 ஆம் ஆண்டு புலிச்சின்னம் தேர்ந்தெடுக்கப்பட்டது. புலிச்சின்னம் தேர்வு செய்யப்பட்டதற்கான அதிகாரப்பூர்வ விளக்கம் விடுதலைப் புலிகளின் அதிகாரப்பூர்வ இதழான ‘விடுதலைப்புலிகள்’ இதழில் 1991 பங்குனி மாதம் வெளியாகி உள்ளது.

”புலிச்சின்னத்தை தமிழீழத்தின் தேசியச் சின்னமாக பிரபாகரன் தேர்ந்தெடுத்ததற்கு காரணமுண்டு. புலிச் சின்னம் திராவிடர் நாகரிகத்தில் வேரூன்றி நிற்கும் ஒரு படிமம். தமிழரின் வீர வரலாற்றையும் தேசிய எழுச்சியையும் சித்தரிக்கும் ஒரு குறியீடு” ( பக்கம் 3) என்று அறிவிக்கப்பட்டது.

தனது போராட்டத்துக்கு அடித்தளம் தமிழார்வம் தான் என்று விடுதலைப்புலிகள் இயக்கம் அறிவித்தது. “அறிவுசார் மானிடத்தின் பொதுமூதாதை மொழி தொல் திராவிட மொழியாகத்தான் இருத்தல் வேண்டும் என்ற கருதுகோள்களின் படி தமிழார்வம் முகிழ்ந்துள்ளது. எமது விடுதலைப் போரும் தமிழார்வத்துக்கு இன்னுமோர் காரணமாகலாம்” ( விடுதலைப்புலிகள், 2007 பங்குனி சித்திரை) என்று அதிகாரப்பூர்வமான அமைப்பின் இதழ் எழுதியது.

திராவிடத் தமிழ் இராச்சியங்கள்

விடுதலைப் புலிகள் இயக்கத்தின் அரசியல் அறிஞரான அன்ரன் பாலசிங்கம் அவர்கள், ‘போரும் சமாதானமும்’ என்ற நூலை எழுதி இருக்கிறார். அதில் திராவிட ( தமிழ்) குடியிருப்புகள் என்றே முந்தைய இலங்கையைக் குறிப்பிடுகிறார்.

porum-samathanamum.jpg

”இலங்கைத் தீவானது தொன்மை வாய்ந்த இரு நாகரிகங்களின் வரலாற்றுத் தாயகமாகும். வேறுபட்ட மொழிகள், பாரம்பர்யங்கள், பண்பாடுகள், வேறுபட்ட நிலப்பரப்புகள், வெவ்வேறான வரலாறுகளைக் கொண்ட இரு தனித்துவமான தேசிய இனங்களாக அது விளங்குகிறது. இத்தீவில் வதியும் தமிழ் மக்களது வரலாறானது பண்டைய யுகம் வரை வேரோடிச் செல்கிறது. சிங்கள மக்களின் மூதாதையர் கி.மு. ஆறாம் நூற்றாண்டில் வங்காளத்திலிருந்து தமது இளவரசன் விஜயனுடன் இத்தீவை வந்தடைந்த போது – தொன்மை வாய்ந்த திராவிட ( தமிழ்) குடியிருப்புகள் இங்கிருக்கக் கண்டார்கள்.

இலங்கைத் தீவில் சிங்களக் குடியேற்றம் நிகழ்வதற்கு முந்திய காலத்தில் நாகர், இயக்கர் என்ற திராவிடத் தமிழ் இராச்சியங்கள் நிலைபெற்றிருந்ததாக சிங்கள வரலாற்றுப் பதிவேடுகளான தீபவம்சமும் மகாவம்சமும் எடுத்தியம்புகின்றன… இத்தீவின் பூர்வீகக் குடிகளாகத் திராவிடத் தமிழர்களே இருந்திருக்க வேண்டும் என்பது தெளிவு( பக்கம் 14) என்று குறிப்பிடுகிறார் அன்ரன் பாலசிங்கம்.

பூர்வீகக் குடிகளான திராவிடத் தமிழர்களின் திராவிடத் தமிழ் இராச்சியங்களை சிங்களவர்களிடம் இருந்து மீட்கவே விடுதலைப்புலிகள் ஆயுதங்களை எடுத்தார்கள். இவர்களை திராவிடத் தமிழர்கள் என்று தான் பாலசிங்கம் அழைக்கிறார். விடுதலைப் புலிகள் அமைப்பின் முழு வரலாற்றுப் புத்தகத்திலேயே இது இருக்கிறது.

சின்னத்தில் ‘கருப்பு’ ஏன்?

விடுதலைப்புலிகள் மக்கள் முன்னணியின் சின்னமாக மஞ்சள், சிவப்பு, கருப்பு ஆகிய நிறங்கள் தேர்வு செய்யப்பட்டன. தமது வழிவழித் தாயகத்தில் சுயநிர்ணய உரிமையை நிலைநாட்ட மஞ்சளும், சமுதாயத்தை மாற்றியமைப்பதற்கு புரட்சிகரப் போராட்டத்தின் நிறமாக சிவப்பும், மக்களின் மன உறுதியைக் குறிக்க கருப்பும் தேர்வு செய்ததாக தலைமை அறிவித்தது. ( விடுதலைப் புலிகள் 1990 வைகாசி)

சோசலிசப் பாதையே தனது அரசியல் பாதையாக பிரபாகரன் அறிவித்தார். ( 1986 இந்து இதழுக்கு அளித்த பேட்டி.) புரட்சிகரமான சமதர்ம சமுதாயத்தை கட்டி எழுப்புவதை தமது விடுதலை இயக்கத்தின் இலட்சியமாகச் சொன்னார். வர்க்கம், சாதி என்ற சுரண்டல் முறைகள் ஒழிக்கப்பட்டு பெண் ஒடுக்குமுறை போன்ற சமூக அநீதிகள் அழிக்கப்பட்டு உழைக்கும் பாட்டாளி மக்களின் சுவர்க்க பூமியாக சோசலிச தமிழீழம் திகழும்( விடுதலைப்புலிகள் 1986 நவம்பர்) என்று சொன்னார்.

prabakaran-speech-1024x770.jpg

மனுவை எதிர்த்த பிரபாகரன்

”பழமைவாதத்திலும் மூடநம்பிக்கைகளிலும் ஊறிப்போன எமது சமூக அமைப்பில் நீண்ட நெடுங்காலமாக பெண்ணினம் ஒடுக்கப்பட்டு வருகிறது. எமது, வேதாந்தங்களையும் மத சித்தாந்தங்களையும் மனுநீதி சாஸ்திரங்களையும் அந்தக் காலங்கொண்டே பெண் அடிமைத்தனத்தை நியாயப்படுத்தி வந்திருக்கின்றன. ஆணாதிக்கம், சாதியம், சீதனம் என்று பல்வேறு பரிமாணங்களில் இந்த ஒடுக்கு முறையானது பெண்ணினத்தின் வாழ்க்கையை ஊடுருவி நிற்கிறது. அவர்களது வாழ்க்கையைச் சிதைத்து வருகிறது” என்று உலக மகளிர் தினச் செய்தியாக பிரபாகரன் வெளியிட்டார்.( விடுதலைப்புலிகள் 1991 பங்குனி)

”பெண்ணடிமை வாதம் என்பது மூடநம்பிக்கைகளின் பிறப்பிடம். கருத்துலகம். பழமைவாதக் கருத்துகள் பெண்மையின் தன்மை பற்றிய பொய்மையை புனைந்து விட்டுள்ளது. தலைவிதி என்றும், கர்மவினை என்றும் தனக்காக விதிக்கப்பட்ட மனுநீதி என்றும் பழைமை என்றும் பண்பாட்டுக் கோலமென்று காலங்காலமாக மறைமுக இருளுக்குள் முடங்கிக் கிடந்த பெண்ணினம் விழித்தெழ வேண்டும்” ( விடுதலைப்புலிகள் 1992 பங்குனி) என்றும் பிரபாகரன் எழுதி இருக்கிறார்.

பிரபாகரன் தனது இறுதி மாவீரர் உரையில், ” சுதந்திரமும் சமத்துவமும் கூடிக் குலவும் ஒரு வாழ்வை அவன் கண்டு கொண்டான். சாதி,சமய, பேதங்கள் ஒழிந்த – அநீதியும் அட்டூழியங்களும் அகன்ற – சூழ்ச்சிகளும் சுரண்டல்களும் நீங்கிய ஓர் உன்னத வாழ்வை கற்பிதம் செய்தான்” ( விடுதலைப்புலிகள் ஐப்பசி,கார்த்திகை) என்றே தனது கனவுகளை அறிவித்தார்.

மதச்சார்புக் கொள்கை

”தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கம் மதச்சார்பற்ற நிலைப்பாட்டைக் கடைப்பிடிக்கும். விடுதலைப் புலிகள் இயக்கம் மதச்சார்பற்றது. தமிழ் இன ஒருமைப்பாட்டையும் தேசிய சுதந்திரத்தையும் லட்சியமாக வரித்துக் கொண்ட ஒரு விடுதலை இயக்கம் மதச்சார்புடைய கொள்கையைக் கடைப்பிடிப்பது தவறானதாகும். இந்தக் குறுகிய மதவாதப் போக்கு தமிழ் இனஒற்றுமைக்கும் தமிழ்த்தேசிய ஒருமைப்பாட்டுக்கும் பெரும் முட்டுக்கட்டையாக அமையும். வழிபடுவதும் வழிபடாமல் விடுவதும் அவரவர்க்கே உரித்தான தனிமனித சுதந்திரமாகும். வழிபாட்டு உரிமையானது, மனிதனின் சிந்தனைச் சுதந்திரம் சார்ந்தது. இதை எமது இயக்கம் தடுக்காது” ( விடுதலைப்புலிகள் 1992 ஆடி,ஆவணி) என்று தமது இயக்கத்தின் கொள்கைத் திட்டமாக அறிவித்திருந்தார் பிரபாகரன்.

பிரபாகரன் கண்டித்த பார்ப்பனீயம் 

1983 திம்பு பேச்சுவார்த்தையின் போது இந்திய அரசு சொல்வதை பிரபாகரன் ஏற்க வேண்டும் என்று ரா உளவுப் பிரிவு அதிகாரியான சுந்தரம் கடுமையாக நிர்பந்தம் செய்தார். அதனை பிரபாகரன் கடுமையாக எதிர்த்தார். இந்த சுந்தரம், ஒரு பார்ப்பனர். இது தொடர்பாக கொளத்தூர் மணியிடம் பேசிய பிரபாகரன், ”திராவிட இயக்கத்தின் பிராமண எதிர்ப்பை நமது முகாம்களில் சில புலிகள் கிண்டல் செய்வது உண்டு. திராவிட இயக்கத்தினர் பிராமணர்களை ஏன் இப்படி தீவிரமாக எதிர்க்கிறார்கள் என்ற கேள்வி எனக்கு இருந்தது. இந்த சுந்தரம் போன்றவர்களைப் பார்க்கும் போதுதான் எனக்குப் புரிகிறது. திராவிட இயக்கத்தவர்களின் பிராமண எதிர்ப்பில் நியாயம் புரிகிறது” ( பக்கம் 578, வேலுப்பிள்ளை பிரபாகரன் விடுதலைப் போராட்ட வரலாறு, செம்பூர் ஜெயராஜ், இலையூர் பிள்ளை) என்று சொல்லி இருக்கிறார்.

‘ஆரிய’ ஜெயவர்த்தனாவும் ‘திராவிட’ பிரபாகரனும்

FotoJet-2025-01-21T204103.345-1024x768.j

ஈழத்தமிழர்களை 1980 களின் தொடக்கத்தில் படுகொலை செய்த ஜே.ஆர்.ஜெயவர்த்தனா தன்னை ஆரியராகவே சொல்லிக் கொண்டார். தமிழர்களை திராவிடர்களாக அடையாளப்படுத்தினார்.
1983 ஆம் ஆண்டு வங்காளத்தைச் சேர்ந்த அமிர்தபஜார் இதழில் நிருபர் அதிபர் ஜெயவர்த்தனாவை பேட்டி காணச் சென்றார். அவரிடம் ஜெயவர்த்தனா சொன்னார். ”நீங்கள் சிங்களவர்களின் மூதாதையர்கள் வாழ்ந்த பூமியில் இருந்து வந்திருக்கிறீர்கள். எனவே சிங்களவர்களுக்குள்ள ஆரிய இனத் தொடர்பை நீங்கள் பெற்றிருக்கிறீர்கள். இங்கே உள்ள சிறுபான்மையினர் (தமிழர்கள்) திராவிட இனத் தொடர்பு உள்ளவர்கள். சிங்களவர்களின் ஆரிய இனத்தைச் சார்ந்த வங்காளியான உங்களை வாழ்த்தி வரவேற்கிறேன்” என்றார் ஜெயவர்த்தனா.

இதை குறிப்பிட்டு ‘இந்து’ ஆங்கில நாளேட்டில் அன்றைய இந்தியத் தூதர் எஸ்.பார்த்தசாரதி, ”சிங்கள வரலாற்றாசிரியர்கள் தமிழர் சிங்களவர் போராட்டத்தை ஆரிய – திராவிட போராட்டமாகவே கூறுகிறார்கள்” என்று எழுதினார். ( 31.8.1983 இந்து) இதற்கு பதிலளித்து ‘விடுதலை’ எழுதி தலையங்கம், ‘இது ஒரு ஆரிய திராவிடப் போர்’ என்று தலைப்பிட்டது.( விடுதலை 14.9.1983)

இதே கருத்தை மையமாக வைத்து புலிகளின் அதிகாரப்பூர்வமான ‘புலிகளின் குரல்’ வானொலியில் ‘இலங்கை மண்’ என்ற தொடரை கலை இலக்கியவாதியும் பகுத்தறிவாளருமான பொன்.கணேசமூர்த்தி தயாரித்து ஒலிபரப்பினார். இதற்கு எதிர்ப்பு வந்தபோது, இந்த நாடகத்தை இரண்டாவது முறையும் ஒலிபரப்பச் சொன்னார் பிரபாகரன். இந்த நூலுக்கு அணிந்துரை வழங்கிய பிரபாகரன் எழுதுகிறார்:

“மனிதகுல வரலாற்றில் மனிதர் அனைவரும் ஒன்று சேர்த்து, ஒத்திசைவாக ஒரு போதும் இருந்ததில்லை. மனிதன் குடும்பமாக, குழுவாக, இனக் குழுவாக வாழ்ந்த நாளிலிருந்து அவனுக்குள் முரண்பாடுகள் தலைதூக்கின. அவை முற்றி, மோதல்களாக வெடித்தன. அனைத்தையும் ஆள வேண்டும் என்ற ஆசை அவனிடம் பிறந்தது. மனிதனே மனிதனுக்கு விரோதியாக மாறும் விந்தை நிகழ்ந்தது.

தான் சாராத பிறரை எதிரியாகக் கண்டான். அவர்களைத் தீண்டத்தகாதோராக விலக்கிவைக்க முயற்சித்தான். மனிதகுல விரோதியாக, கொடியோராக, கொடுமைக்காரராக, மனிதரே அல்லாத ‘அரக்கராக’ முத்திரை குத்திப் பொய்யான கதைகள் கட்டினான். காலம் காலமாகக் கட்டியெழுப்பப்பட்ட அவர்களது வாழ்க்கை முறைகளையும் பண்பாட்டுக் கோலங்களையும் ஈவிரக்கமின்றிச் சாடினான். அவர்களை அடியோடு அழிப்பதே தர்மம் என்று போதனை வேறு செய்தான்.

கடவுட் கோட்பாட்டைத் துணைக்கு அழைத்துத் தன்னைத் தெய்வ அவதாரமாகக் காட்டிக் கொண்டான். பொய்யான விளக்கங்களை வியாக்கியானங்களைக் கொடுத்தான். தான் வாழ்ந்தாற் போதும் என்ற சுயநலத்துடன் தனது எதிரிகள் மீது ஈவிரக்கமின்றிப் போர் தொடுத்தான். இப்படியாக ஒருவரது அழிவில், இன்னொருவரது வெற்றியிற் புதிய வரலாறு எழுதப்பட்டது. உண்மை வரலாற்றைக் குழி தோண்டிப் புதைத்துவிட்டு, பொய்களையும், புழுகுகளையும் புகுத்திப் புதிய வரலாறு, வெற்றி பெற்ற மனிதனுக்குச் சார்பாக எழுதப்பட்டது. சூதுகளையும், சூழ்ச்சிகளையும் செய்து, கோழைத்தனமாக, வஞ்சகமாக எதிரியைக் கொன்ற அசிங்கம் அதில் சொல்லப்படவில்லை. உண்மை வரலாறு இறந்தவர்களின் புதைகுழிகளின் இருளுக்குள் அப்படியே அடங்கிப் போனது.

இதே கதிதான் இலங்கை மண்ணை ஆதியில் ஆண்ட தமிழ் மன்னனான இராவணனுக்கும் நிகழ்ந்தது. அன்றைய போர் விதிமுறைகளுக்கு மாறாக, மிகவும் கபடமான வழியில் தமிழ் மன்னனான இராவணனைக் கொன்றுவிட்டு, உண்மைக்குப் புறம்பான முற்றிலும் பொய்யான ஒரு வரலாறு எழுதப்பட்டது. மிகவும் நுட்பமாகச் செய்யப்பட்ட இந்த வரலாற்றுத் திரியில் தமிழரின் பண்டைய வரலாறு இருட்டடிப்பு செய்யப்பட்டது” என்றார் பிரபாகரன்.
இவை எதுவும் இன்றைய கூமுட்டைகளுக்குத் தெரியாது.

திராவிடம் வளர்த்ததே ஈழம் தான்!

தந்தை பெரியார் அரசியலுக்கு வருவதற்கு முன்னால், அவருக்கு இருபது வயது இருக்கும் போதே ஈழத்தில் ‘திராவிடக் குரல்’ எழுந்துவிட்டது. 1899 ஆம் ஆண்டு சபாபதி நாவலர் தனது மொழியியல் நூலுக்கு ‘ திராவிடப் பிரகாசிகை’ என்று பெயர் சூட்டினார். 1903 ஆம் ஆண்டு இலங்கைச் சரித்திர சூசனம் என்ற நூலை ஆ.முத்துத்தம்பி பிள்ளை எழுதினார். இலங்கையை திராவிட நாட்டார் (அதாவது தமிழ்நாட்டவர்) சிங்களத் தீவு என்று அழைத்ததாகத் தான் அந்தப் புத்தகத்தை தொடங்குகிறார். திராவிட மொழித் தொடர்புகள் குறித்து வி.கனகசபை ( 1800 ஆண்டுகளுக்கு முற்பட்ட தமிழகம்) விரிவாக எழுதி இருக்கிறார்.

2fhNwvpM-image-44.png

இலங்கையின் கி.மு. 2 ஆம் நூற்றாண்டு முதல் கி.பி. 2 ஆம் நூற்றாண்டு வரை இருக்கும் கல்வெட்டில் பெருமகன், வேலு,மருமகன், ஆசிரியன், வணிகன், திராவிடன் ஆகிய சொற்கள் இருப்பதாக இலங்கை நான்காவது உலகத் தமிழ்மாநாட்டு மலர் (1970) கூறுகிறது.

யாழ்ப்பாணம் திருநெல்வேலி வளர்ச்சிக் கழகத்தின் நான்காம் தமிழ் விழாவில் (1951) பேசிய தனிநாயகம் அடிகள், ‘இந்தியப் பண்பு, இந்திய நாகரிகம், இந்தியக் கலைகள், இந்திய மொழிகள் என்று மொழிவதெல்லாம் திராவிடப் பண்பு, திராவிடநாகரிகம், திராவிட கலைகள் இவற்றை அடிப்படையாகக் கொண்டதே’ என்று பேசினார். (உலகத்தமிழாய்வில் தனிநாயகம்) இந்த நோக்கத்துக்காகத் தான் அனைத்துலக தமிழாராய்ச்சி நிறுவனத்தை அவர் தொடக்கினார். இதுவே உலகத் தமிழ் மாநாடு நடத்தத் தொடங்கியது. 1974 ஆம் ஆண்டு நடைபெற்ற நான்காம் உலகத் தமிழ்மாநாட்டில் பச்சைப் படுகொலைகளை அரங்கேற்றியது சிங்களம். அதைப் பார்த்து கொந்தளித்தே புலிகள் உள்ளிட்ட போராளிகள் ஆயுதம் தூக்கத் தொடங்கினார்கள்.

குருமூர்த்தியால் வளர்க்கப்பட்ட பிள்ளைகள் இதனை அறிய மாட்டார்கள்.

நன்றி: முரசொலி

கட்டுரையாளர் குறிப்பு:

thiruma.avif

ப.திருமாவேலன் மூத்த பத்திரிகையாளர், கலைஞர் தொலைக்காட்சி’யின் ஆசிரியர். ‘ 

https://minnambalam.com/featured-article/dravidian-tigers-velupillai-prabakaran-and-dravidam/

  • Replies 228
  • Views 9.9k
  • Created
  • Last Reply

Most Popular Posts

  • ரசோதரன்
    ரசோதரன்

    திராவிடம் என்னும் பதம் வியாசரின் காலத்திலேயே இருந்தது. பீஷ்மர் மூன்று அரசகுமாரிகளையும் சுயம்வரத்தில் இருந்து கவர்ந்து கொண்டு போகும் போது, பீஷ்மரை வெல்ல முடியாது என்று தெரிந்திருந்தும், தங்களின் மரியாத

  • கிருபன்
    கிருபன்

    2004 இல் சீமான் ஒரு திரைப்பட இயக்குநர். தமிழீழப் போராட்டத்தின் தீவிர ஆதரவாளர். அப்போது பெரியாரின் சிந்தனைகளை ஆதரித்தவராகவும் இருந்தார். அரசியலில் ஈடுபடவும் இல்லை. 2004 இல் சீமானின் கட்டுரை எழுத அ

  • இந்த கேள்வியே அபத்தமானது. ஹோமோ சேப்பியன்ஸ் இல் இருந்து பல்லாயிரம் ஆண்டுகால மரபணுத்திரிபுகள்,  பரிணாம வளர்சசி மூலம் பல்வேறு மரபு இனங்கள் உருவாகியுள்ளன. இது  டிஎன்ஏ பரிசோதனைகள் மூலம் தெளிவாக கண்டறியப்பட

கனதியான, அறிந்திடாத பல விடயங்களை உள்ளடக்கிய நல்லதொரு கட்டுரை.

தலைவரின், புலிகளின் அறிக்கைகளில் இருக்கும் தெளிவு, பெண்ணியம் தொடர்பானபுரிதல், மூட நம்பிக்கைகள் மீதான விமர்சனம், மதசார்பின்மையின் அவசியம் என்பனவற்றை மீண்டும் அறியும் போது, எத்தனை தெளிவாக தம் கோட்பாடுகளில் இருந்திருக்கின்றார்கள் என்பது புலனாகின்றது.

தாயகத்தின் இன்றைய நிலவரமும், போக்கும் புலிகளின் கொள்கைகளில் இருந்து முற்றாக விலகி ஓடுகின்றது.. மக்கள் எல்லாவற்றையும் மறந்து விட்டனர்
 
  • கருத்துக்கள உறவுகள்

எங்கப்பா கனதியான ஆட்களின் (heavy weights) அசுமாத்தங்களைக் காணவில்லை இந்தப் பக்கம்? #தொண்டையில முள்ளு😎

  • கருத்துக்கள உறவுகள்

2009ம் ஆண்டே திராவிட‌த்தை குழி தோண்டி புதைச்சாச்சு..............முர‌சொலி க‌ரு நாக‌ம் க‌ருணாநிதி ஆர‌ம்பிச்சு வைச்ச‌ ப‌த்திரிகை சொல்ல‌ என்ன‌ இருக்கு..............................

  • கருத்துக்கள உறவுகள்
39 minutes ago, வீரப் பையன்26 said:

2009ம் ஆண்டே திராவிட‌த்தை குழி தோண்டி புதைச்சாச்சு..............முர‌சொலி க‌ரு நாக‌ம் க‌ருணாநிதி ஆர‌ம்பிச்சு வைச்ச‌ ப‌த்திரிகை சொல்ல‌ என்ன‌ இருக்கு..............................

"விடுதலைப் புலிகள்" யாருடைய பத்திரிகை😂?

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, Justin said:

"விடுதலைப் புலிகள்" யாருடைய பத்திரிகை😂?

நீங்க தப்பான ஆளை கூப்பிட்டிட்டீங்க

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, Justin said:

"விடுதலைப் புலிகள்" யாருடைய பத்திரிகை😂?

விடுத‌லைப்புலிக‌ள் ப‌ல‌ ப‌த்திரைகை வைத்து ந‌ட‌த்தின‌வை

புலிகளின் குரல் வானொலி (ஒன்று ம‌ட்டுமே ) 

சீமானை தாக்கி எழுதும் போது நாமும் ப‌ழ‌சை நோண்ட‌ வேண்டி இருக்கு😉

எம் போராட்ட‌ வ‌ர‌லாறு தெரிய‌ வேண்டிய‌தை தெரிந்து வைத்து இருக்கிறேன்.................

  • கருத்துக்கள உறவுகள்

திராவிட‌ வ‌ழி வ‌ந்த‌ எம் ஜி ஆருக்கு ஈழ‌ ம‌ண்ணில் சிலை வைத்தார்க‌ள் கார‌ன‌ம் எம் போராட்ட‌த்தை அடி ம‌ன‌தில் இருந்து நேசித்த‌வ‌ர் கோடிக‌ளை அள்ளிக் கொடுத்தார்

ம‌ற்ற‌ திராவிட‌ கோமாளிக‌ளுக்கு ஈழ‌ ம‌ண்ணில் நினைவு சின்ன‌ம் வைக்க‌ப் ப‌ட்ட‌தா...................அன்ர‌ன் பால‌சிங்க‌ம் ஜ‌யா 2010 ம‌ட்டும் உயிருட‌ன் இருந்து இருந்தால் தெரிந்து இருக்கும் திராவிட‌ம் என்ற‌து சேர்ந்து ப‌ழ‌கி விட்டு க‌ழுத்தை கொத்தும் ந‌ச்சு பாம்பு என‌..........................

  • கருத்துக்கள உறவுகள்
39 minutes ago, வீரப் பையன்26 said:

திராவிட‌ வ‌ழி வ‌ந்த‌ எம் ஜி ஆருக்கு ஈழ‌ ம‌ண்ணில் சிலை வைத்தார்க‌ள்

உறவே,   அவருக்கு  தமிழ்பட  நடிகர் என்ற காரணத்தால் அவரின் பழைய இரசிகர்கள் சிலை வைத்திருக்க வேண்டும். ரஜனிகாந் விஜய்க்கும் அவர்களின் இரசிகர்கள் வைப்பார்கள். ஆனால்  இப்போது அவர்களுக்கு சிலைகள் வைப்பதில் ஆர்வம் இல்லை.அது ஒரு வீண் வேலை.

  • கருத்துக்கள உறவுகள்
40 minutes ago, விளங்க நினைப்பவன் said:

உறவே,   அவருக்கு  தமிழ்பட  நடிகர் என்ற காரணத்தால் அவரின் பழைய இரசிகர்கள் சிலை வைத்திருக்க வேண்டும். ரஜனிகாந் விஜய்க்கும் அவர்களின் இரசிகர்கள் வைப்பார்கள். ஆனால்  இப்போது அவர்களுக்கு சிலைகள் வைப்பதில் ஆர்வம் இல்லை.அது ஒரு வீண் வேலை.

உற‌வே எம் ஜீ ஆருக்கு 

த‌லைவ‌ரின் விருப்ப‌த்துக்கு இன‌ங்க‌ சிலை வைக்க‌ப் ப‌ட்ட‌து

பெரியார் என்ர‌ ந‌ப‌ர் த‌மிழில் உள்ள‌ கெட்ட‌ வார்த்தைக‌ளில் பேசின‌ ஆடியோக்க‌ள் இப்ப‌வும் சோச‌ல் மீடியாக்க‌ளில் இருக்கு முன்னுக்கு பின் முர‌னாக‌ அங் ஒன்றும் இங் ஒன்றும் பேசின‌ பெரியாரிக்கு ஈழ‌ ம‌ண்ணில் ஏதும் அடையாள‌ம் இருக்கா

திருக்குறள என்ன‌த்தோடு ஒப்பிட்டார் தெரியுமா...................

பெரியார் என்ர‌ போலி விம்ப‌ம் உடை ப‌ட‌ த‌ங்க‌ட‌ அர‌சிய‌ல் எதிர் கால‌ம் என்ன‌வாகி விடுமோ என‌ திருட்டு கும்ப‌ல் இப்ப‌வே க‌த‌ற‌ல்

பெரியார் போற்ற‌க் கூடிய‌ நப‌ராய் இருந்தால் ஈழ‌ ம‌ண்ணில் அவ‌ருக்கு பேரும் புக‌ழும் நிலைத்து இருந்து இருக்க‌னுமே😉

ஒரு இட‌த்தில் கூட‌ கோமாளி பெரியாருக்கு நினைவு சின்ன‌ம் இல்லை என்ப‌தே உண்மை வ‌ர‌லாறு.....................

2009க்கு பின் ஈழ‌ ம‌ண்ணில் ஈழ‌த்து இளைஞ‌ர்க‌ள் கூத்தாடிக‌ளை த‌லையில் தூக்கி வைச்சு கொண்டாடுகின‌ம்..................எங்க‌ட‌ சிறுவ‌ய‌தில் த‌மிழ் திரைப் ப‌ட‌ம் ஒரு சில‌ ப‌ட‌ங்க‌ள் தான் பார்த்து இருக்கிறோம்.............

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, கிருபன் said:

அவர்களே ‘திராவிட’ புலிகள் தான்!

Jan 21, 2025
FotoJet-2025-01-21T200629.526.jpg

ப.திருமாவேலன்

கொழுப்பெடுத்த கூமுட்டை ஒன்று, தான் பிரபாகரனைச் சந்திப்பதற்கு முன்பு ‘திராவிடம்’ பேசியதாகவும், பிரபாகரன் தான் ‘திராவிட’ மாயையை உடைத்தார் என்றும் உளறித் திரிகிறது. அதைக் கேட்ட போது ‘ஆமைக் கறி’ நாற்றத்தை விடக் கேவலமாக இருந்தது. அவர்களே ‘திராவிட’ புலிகள் என்பது இந்த குணக்கேடனுக்குத் தெரியாது.

‘தமிழர்கள்'( திராவிடர்கள்)

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் 1976 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. அதன் பிறகு 1978 ஆம் ஆண்டு கியூபாவில் உலகம் முழுக்க இருக்கும் விடுதலைப் போராட்ட அமைப்புகள் கலந்து கொண்ட மாநாட்டில் புலிகள் பங்கெடுத்தார்கள்.

11TH WORLD FESTIVAL YOUTH AND STUDENTS – IN CUBA – 1978 என்று அந்த மாநாட்டுக்குப் பெயர். We “LIBERATION TIGERS OF THAMIL EALAM” என்ற அறிமுகத்துடன் நான்கு பக்க அறிக்கையை அப்போது புலிகள் அங்கு தாக்கல் செய்தார்கள்.

அந்த அறிக்கையில் WHO ARE THAMILS ( DRAVIDIANS) என்ற தலைப்பில் இரண்டாவது பாரா உள்ளது. அதில், ”The Thamils have ancient culture and speak Thamil language which is one of the oldest languages of India that formed the Dravidian family spoken today in Thamil Nadu of india, Thamil Ealam of Ceylon, Singapore, Malaysia, Fiji Islands, South Africa and in other countries by more than 65 million people. In Ceylon Thamils are 3 million in number” – என்று குறிப்பிட்டுள்ளார்கள். ( அந்த அறிக்கையில் TAMILS என்பதில் ‘H’ இடம்பெற்றுள்ளது)

புலிச்சின்னத்தைத் தேர்ந்தெடுத்தது ஏன்?

PULI-KODI.png

1976 ஆம் ஆண்டு புலிச்சின்னம் தேர்ந்தெடுக்கப்பட்டது. புலிச்சின்னம் தேர்வு செய்யப்பட்டதற்கான அதிகாரப்பூர்வ விளக்கம் விடுதலைப் புலிகளின் அதிகாரப்பூர்வ இதழான ‘விடுதலைப்புலிகள்’ இதழில் 1991 பங்குனி மாதம் வெளியாகி உள்ளது.

”புலிச்சின்னத்தை தமிழீழத்தின் தேசியச் சின்னமாக பிரபாகரன் தேர்ந்தெடுத்ததற்கு காரணமுண்டு. புலிச் சின்னம் திராவிடர் நாகரிகத்தில் வேரூன்றி நிற்கும் ஒரு படிமம். தமிழரின் வீர வரலாற்றையும் தேசிய எழுச்சியையும் சித்தரிக்கும் ஒரு குறியீடு” ( பக்கம் 3) என்று அறிவிக்கப்பட்டது.

தனது போராட்டத்துக்கு அடித்தளம் தமிழார்வம் தான் என்று விடுதலைப்புலிகள் இயக்கம் அறிவித்தது. “அறிவுசார் மானிடத்தின் பொதுமூதாதை மொழி தொல் திராவிட மொழியாகத்தான் இருத்தல் வேண்டும் என்ற கருதுகோள்களின் படி தமிழார்வம் முகிழ்ந்துள்ளது. எமது விடுதலைப் போரும் தமிழார்வத்துக்கு இன்னுமோர் காரணமாகலாம்” ( விடுதலைப்புலிகள், 2007 பங்குனி சித்திரை) என்று அதிகாரப்பூர்வமான அமைப்பின் இதழ் எழுதியது.

திராவிடத் தமிழ் இராச்சியங்கள்

விடுதலைப் புலிகள் இயக்கத்தின் அரசியல் அறிஞரான அன்ரன் பாலசிங்கம் அவர்கள், ‘போரும் சமாதானமும்’ என்ற நூலை எழுதி இருக்கிறார். அதில் திராவிட ( தமிழ்) குடியிருப்புகள் என்றே முந்தைய இலங்கையைக் குறிப்பிடுகிறார்.

porum-samathanamum.jpg

”இலங்கைத் தீவானது தொன்மை வாய்ந்த இரு நாகரிகங்களின் வரலாற்றுத் தாயகமாகும். வேறுபட்ட மொழிகள், பாரம்பர்யங்கள், பண்பாடுகள், வேறுபட்ட நிலப்பரப்புகள், வெவ்வேறான வரலாறுகளைக் கொண்ட இரு தனித்துவமான தேசிய இனங்களாக அது விளங்குகிறது. இத்தீவில் வதியும் தமிழ் மக்களது வரலாறானது பண்டைய யுகம் வரை வேரோடிச் செல்கிறது. சிங்கள மக்களின் மூதாதையர் கி.மு. ஆறாம் நூற்றாண்டில் வங்காளத்திலிருந்து தமது இளவரசன் விஜயனுடன் இத்தீவை வந்தடைந்த போது – தொன்மை வாய்ந்த திராவிட ( தமிழ்) குடியிருப்புகள் இங்கிருக்கக் கண்டார்கள்.

இலங்கைத் தீவில் சிங்களக் குடியேற்றம் நிகழ்வதற்கு முந்திய காலத்தில் நாகர், இயக்கர் என்ற திராவிடத் தமிழ் இராச்சியங்கள் நிலைபெற்றிருந்ததாக சிங்கள வரலாற்றுப் பதிவேடுகளான தீபவம்சமும் மகாவம்சமும் எடுத்தியம்புகின்றன… இத்தீவின் பூர்வீகக் குடிகளாகத் திராவிடத் தமிழர்களே இருந்திருக்க வேண்டும் என்பது தெளிவு( பக்கம் 14) என்று குறிப்பிடுகிறார் அன்ரன் பாலசிங்கம்.

பூர்வீகக் குடிகளான திராவிடத் தமிழர்களின் திராவிடத் தமிழ் இராச்சியங்களை சிங்களவர்களிடம் இருந்து மீட்கவே விடுதலைப்புலிகள் ஆயுதங்களை எடுத்தார்கள். இவர்களை திராவிடத் தமிழர்கள் என்று தான் பாலசிங்கம் அழைக்கிறார். விடுதலைப் புலிகள் அமைப்பின் முழு வரலாற்றுப் புத்தகத்திலேயே இது இருக்கிறது.

சின்னத்தில் ‘கருப்பு’ ஏன்?

விடுதலைப்புலிகள் மக்கள் முன்னணியின் சின்னமாக மஞ்சள், சிவப்பு, கருப்பு ஆகிய நிறங்கள் தேர்வு செய்யப்பட்டன. தமது வழிவழித் தாயகத்தில் சுயநிர்ணய உரிமையை நிலைநாட்ட மஞ்சளும், சமுதாயத்தை மாற்றியமைப்பதற்கு புரட்சிகரப் போராட்டத்தின் நிறமாக சிவப்பும், மக்களின் மன உறுதியைக் குறிக்க கருப்பும் தேர்வு செய்ததாக தலைமை அறிவித்தது. ( விடுதலைப் புலிகள் 1990 வைகாசி)

சோசலிசப் பாதையே தனது அரசியல் பாதையாக பிரபாகரன் அறிவித்தார். ( 1986 இந்து இதழுக்கு அளித்த பேட்டி.) புரட்சிகரமான சமதர்ம சமுதாயத்தை கட்டி எழுப்புவதை தமது விடுதலை இயக்கத்தின் இலட்சியமாகச் சொன்னார். வர்க்கம், சாதி என்ற சுரண்டல் முறைகள் ஒழிக்கப்பட்டு பெண் ஒடுக்குமுறை போன்ற சமூக அநீதிகள் அழிக்கப்பட்டு உழைக்கும் பாட்டாளி மக்களின் சுவர்க்க பூமியாக சோசலிச தமிழீழம் திகழும்( விடுதலைப்புலிகள் 1986 நவம்பர்) என்று சொன்னார்.

prabakaran-speech-1024x770.jpg

மனுவை எதிர்த்த பிரபாகரன்

”பழமைவாதத்திலும் மூடநம்பிக்கைகளிலும் ஊறிப்போன எமது சமூக அமைப்பில் நீண்ட நெடுங்காலமாக பெண்ணினம் ஒடுக்கப்பட்டு வருகிறது. எமது, வேதாந்தங்களையும் மத சித்தாந்தங்களையும் மனுநீதி சாஸ்திரங்களையும் அந்தக் காலங்கொண்டே பெண் அடிமைத்தனத்தை நியாயப்படுத்தி வந்திருக்கின்றன. ஆணாதிக்கம், சாதியம், சீதனம் என்று பல்வேறு பரிமாணங்களில் இந்த ஒடுக்கு முறையானது பெண்ணினத்தின் வாழ்க்கையை ஊடுருவி நிற்கிறது. அவர்களது வாழ்க்கையைச் சிதைத்து வருகிறது” என்று உலக மகளிர் தினச் செய்தியாக பிரபாகரன் வெளியிட்டார்.( விடுதலைப்புலிகள் 1991 பங்குனி)

”பெண்ணடிமை வாதம் என்பது மூடநம்பிக்கைகளின் பிறப்பிடம். கருத்துலகம். பழமைவாதக் கருத்துகள் பெண்மையின் தன்மை பற்றிய பொய்மையை புனைந்து விட்டுள்ளது. தலைவிதி என்றும், கர்மவினை என்றும் தனக்காக விதிக்கப்பட்ட மனுநீதி என்றும் பழைமை என்றும் பண்பாட்டுக் கோலமென்று காலங்காலமாக மறைமுக இருளுக்குள் முடங்கிக் கிடந்த பெண்ணினம் விழித்தெழ வேண்டும்” ( விடுதலைப்புலிகள் 1992 பங்குனி) என்றும் பிரபாகரன் எழுதி இருக்கிறார்.

பிரபாகரன் தனது இறுதி மாவீரர் உரையில், ” சுதந்திரமும் சமத்துவமும் கூடிக் குலவும் ஒரு வாழ்வை அவன் கண்டு கொண்டான். சாதி,சமய, பேதங்கள் ஒழிந்த – அநீதியும் அட்டூழியங்களும் அகன்ற – சூழ்ச்சிகளும் சுரண்டல்களும் நீங்கிய ஓர் உன்னத வாழ்வை கற்பிதம் செய்தான்” ( விடுதலைப்புலிகள் ஐப்பசி,கார்த்திகை) என்றே தனது கனவுகளை அறிவித்தார்.

மதச்சார்புக் கொள்கை

”தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கம் மதச்சார்பற்ற நிலைப்பாட்டைக் கடைப்பிடிக்கும். விடுதலைப் புலிகள் இயக்கம் மதச்சார்பற்றது. தமிழ் இன ஒருமைப்பாட்டையும் தேசிய சுதந்திரத்தையும் லட்சியமாக வரித்துக் கொண்ட ஒரு விடுதலை இயக்கம் மதச்சார்புடைய கொள்கையைக் கடைப்பிடிப்பது தவறானதாகும். இந்தக் குறுகிய மதவாதப் போக்கு தமிழ் இனஒற்றுமைக்கும் தமிழ்த்தேசிய ஒருமைப்பாட்டுக்கும் பெரும் முட்டுக்கட்டையாக அமையும். வழிபடுவதும் வழிபடாமல் விடுவதும் அவரவர்க்கே உரித்தான தனிமனித சுதந்திரமாகும். வழிபாட்டு உரிமையானது, மனிதனின் சிந்தனைச் சுதந்திரம் சார்ந்தது. இதை எமது இயக்கம் தடுக்காது” ( விடுதலைப்புலிகள் 1992 ஆடி,ஆவணி) என்று தமது இயக்கத்தின் கொள்கைத் திட்டமாக அறிவித்திருந்தார் பிரபாகரன்.

பிரபாகரன் கண்டித்த பார்ப்பனீயம் 

1983 திம்பு பேச்சுவார்த்தையின் போது இந்திய அரசு சொல்வதை பிரபாகரன் ஏற்க வேண்டும் என்று ரா உளவுப் பிரிவு அதிகாரியான சுந்தரம் கடுமையாக நிர்பந்தம் செய்தார். அதனை பிரபாகரன் கடுமையாக எதிர்த்தார். இந்த சுந்தரம், ஒரு பார்ப்பனர். இது தொடர்பாக கொளத்தூர் மணியிடம் பேசிய பிரபாகரன், ”திராவிட இயக்கத்தின் பிராமண எதிர்ப்பை நமது முகாம்களில் சில புலிகள் கிண்டல் செய்வது உண்டு. திராவிட இயக்கத்தினர் பிராமணர்களை ஏன் இப்படி தீவிரமாக எதிர்க்கிறார்கள் என்ற கேள்வி எனக்கு இருந்தது. இந்த சுந்தரம் போன்றவர்களைப் பார்க்கும் போதுதான் எனக்குப் புரிகிறது. திராவிட இயக்கத்தவர்களின் பிராமண எதிர்ப்பில் நியாயம் புரிகிறது” ( பக்கம் 578, வேலுப்பிள்ளை பிரபாகரன் விடுதலைப் போராட்ட வரலாறு, செம்பூர் ஜெயராஜ், இலையூர் பிள்ளை) என்று சொல்லி இருக்கிறார்.

‘ஆரிய’ ஜெயவர்த்தனாவும் ‘திராவிட’ பிரபாகரனும்

FotoJet-2025-01-21T204103.345-1024x768.j

ஈழத்தமிழர்களை 1980 களின் தொடக்கத்தில் படுகொலை செய்த ஜே.ஆர்.ஜெயவர்த்தனா தன்னை ஆரியராகவே சொல்லிக் கொண்டார். தமிழர்களை திராவிடர்களாக அடையாளப்படுத்தினார்.
1983 ஆம் ஆண்டு வங்காளத்தைச் சேர்ந்த அமிர்தபஜார் இதழில் நிருபர் அதிபர் ஜெயவர்த்தனாவை பேட்டி காணச் சென்றார். அவரிடம் ஜெயவர்த்தனா சொன்னார். ”நீங்கள் சிங்களவர்களின் மூதாதையர்கள் வாழ்ந்த பூமியில் இருந்து வந்திருக்கிறீர்கள். எனவே சிங்களவர்களுக்குள்ள ஆரிய இனத் தொடர்பை நீங்கள் பெற்றிருக்கிறீர்கள். இங்கே உள்ள சிறுபான்மையினர் (தமிழர்கள்) திராவிட இனத் தொடர்பு உள்ளவர்கள். சிங்களவர்களின் ஆரிய இனத்தைச் சார்ந்த வங்காளியான உங்களை வாழ்த்தி வரவேற்கிறேன்” என்றார் ஜெயவர்த்தனா.

இதை குறிப்பிட்டு ‘இந்து’ ஆங்கில நாளேட்டில் அன்றைய இந்தியத் தூதர் எஸ்.பார்த்தசாரதி, ”சிங்கள வரலாற்றாசிரியர்கள் தமிழர் சிங்களவர் போராட்டத்தை ஆரிய – திராவிட போராட்டமாகவே கூறுகிறார்கள்” என்று எழுதினார். ( 31.8.1983 இந்து) இதற்கு பதிலளித்து ‘விடுதலை’ எழுதி தலையங்கம், ‘இது ஒரு ஆரிய திராவிடப் போர்’ என்று தலைப்பிட்டது.( விடுதலை 14.9.1983)

இதே கருத்தை மையமாக வைத்து புலிகளின் அதிகாரப்பூர்வமான ‘புலிகளின் குரல்’ வானொலியில் ‘இலங்கை மண்’ என்ற தொடரை கலை இலக்கியவாதியும் பகுத்தறிவாளருமான பொன்.கணேசமூர்த்தி தயாரித்து ஒலிபரப்பினார். இதற்கு எதிர்ப்பு வந்தபோது, இந்த நாடகத்தை இரண்டாவது முறையும் ஒலிபரப்பச் சொன்னார் பிரபாகரன். இந்த நூலுக்கு அணிந்துரை வழங்கிய பிரபாகரன் எழுதுகிறார்:

“மனிதகுல வரலாற்றில் மனிதர் அனைவரும் ஒன்று சேர்த்து, ஒத்திசைவாக ஒரு போதும் இருந்ததில்லை. மனிதன் குடும்பமாக, குழுவாக, இனக் குழுவாக வாழ்ந்த நாளிலிருந்து அவனுக்குள் முரண்பாடுகள் தலைதூக்கின. அவை முற்றி, மோதல்களாக வெடித்தன. அனைத்தையும் ஆள வேண்டும் என்ற ஆசை அவனிடம் பிறந்தது. மனிதனே மனிதனுக்கு விரோதியாக மாறும் விந்தை நிகழ்ந்தது.

தான் சாராத பிறரை எதிரியாகக் கண்டான். அவர்களைத் தீண்டத்தகாதோராக விலக்கிவைக்க முயற்சித்தான். மனிதகுல விரோதியாக, கொடியோராக, கொடுமைக்காரராக, மனிதரே அல்லாத ‘அரக்கராக’ முத்திரை குத்திப் பொய்யான கதைகள் கட்டினான். காலம் காலமாகக் கட்டியெழுப்பப்பட்ட அவர்களது வாழ்க்கை முறைகளையும் பண்பாட்டுக் கோலங்களையும் ஈவிரக்கமின்றிச் சாடினான். அவர்களை அடியோடு அழிப்பதே தர்மம் என்று போதனை வேறு செய்தான்.

கடவுட் கோட்பாட்டைத் துணைக்கு அழைத்துத் தன்னைத் தெய்வ அவதாரமாகக் காட்டிக் கொண்டான். பொய்யான விளக்கங்களை வியாக்கியானங்களைக் கொடுத்தான். தான் வாழ்ந்தாற் போதும் என்ற சுயநலத்துடன் தனது எதிரிகள் மீது ஈவிரக்கமின்றிப் போர் தொடுத்தான். இப்படியாக ஒருவரது அழிவில், இன்னொருவரது வெற்றியிற் புதிய வரலாறு எழுதப்பட்டது. உண்மை வரலாற்றைக் குழி தோண்டிப் புதைத்துவிட்டு, பொய்களையும், புழுகுகளையும் புகுத்திப் புதிய வரலாறு, வெற்றி பெற்ற மனிதனுக்குச் சார்பாக எழுதப்பட்டது. சூதுகளையும், சூழ்ச்சிகளையும் செய்து, கோழைத்தனமாக, வஞ்சகமாக எதிரியைக் கொன்ற அசிங்கம் அதில் சொல்லப்படவில்லை. உண்மை வரலாறு இறந்தவர்களின் புதைகுழிகளின் இருளுக்குள் அப்படியே அடங்கிப் போனது.

இதே கதிதான் இலங்கை மண்ணை ஆதியில் ஆண்ட தமிழ் மன்னனான இராவணனுக்கும் நிகழ்ந்தது. அன்றைய போர் விதிமுறைகளுக்கு மாறாக, மிகவும் கபடமான வழியில் தமிழ் மன்னனான இராவணனைக் கொன்றுவிட்டு, உண்மைக்குப் புறம்பான முற்றிலும் பொய்யான ஒரு வரலாறு எழுதப்பட்டது. மிகவும் நுட்பமாகச் செய்யப்பட்ட இந்த வரலாற்றுத் திரியில் தமிழரின் பண்டைய வரலாறு இருட்டடிப்பு செய்யப்பட்டது” என்றார் பிரபாகரன்.
இவை எதுவும் இன்றைய கூமுட்டைகளுக்குத் தெரியாது.

திராவிடம் வளர்த்ததே ஈழம் தான்!

தந்தை பெரியார் அரசியலுக்கு வருவதற்கு முன்னால், அவருக்கு இருபது வயது இருக்கும் போதே ஈழத்தில் ‘திராவிடக் குரல்’ எழுந்துவிட்டது. 1899 ஆம் ஆண்டு சபாபதி நாவலர் தனது மொழியியல் நூலுக்கு ‘ திராவிடப் பிரகாசிகை’ என்று பெயர் சூட்டினார். 1903 ஆம் ஆண்டு இலங்கைச் சரித்திர சூசனம் என்ற நூலை ஆ.முத்துத்தம்பி பிள்ளை எழுதினார். இலங்கையை திராவிட நாட்டார் (அதாவது தமிழ்நாட்டவர்) சிங்களத் தீவு என்று அழைத்ததாகத் தான் அந்தப் புத்தகத்தை தொடங்குகிறார். திராவிட மொழித் தொடர்புகள் குறித்து வி.கனகசபை ( 1800 ஆண்டுகளுக்கு முற்பட்ட தமிழகம்) விரிவாக எழுதி இருக்கிறார்.

2fhNwvpM-image-44.png

இலங்கையின் கி.மு. 2 ஆம் நூற்றாண்டு முதல் கி.பி. 2 ஆம் நூற்றாண்டு வரை இருக்கும் கல்வெட்டில் பெருமகன், வேலு,மருமகன், ஆசிரியன், வணிகன், திராவிடன் ஆகிய சொற்கள் இருப்பதாக இலங்கை நான்காவது உலகத் தமிழ்மாநாட்டு மலர் (1970) கூறுகிறது.

யாழ்ப்பாணம் திருநெல்வேலி வளர்ச்சிக் கழகத்தின் நான்காம் தமிழ் விழாவில் (1951) பேசிய தனிநாயகம் அடிகள், ‘இந்தியப் பண்பு, இந்திய நாகரிகம், இந்தியக் கலைகள், இந்திய மொழிகள் என்று மொழிவதெல்லாம் திராவிடப் பண்பு, திராவிடநாகரிகம், திராவிட கலைகள் இவற்றை அடிப்படையாகக் கொண்டதே’ என்று பேசினார். (உலகத்தமிழாய்வில் தனிநாயகம்) இந்த நோக்கத்துக்காகத் தான் அனைத்துலக தமிழாராய்ச்சி நிறுவனத்தை அவர் தொடக்கினார். இதுவே உலகத் தமிழ் மாநாடு நடத்தத் தொடங்கியது. 1974 ஆம் ஆண்டு நடைபெற்ற நான்காம் உலகத் தமிழ்மாநாட்டில் பச்சைப் படுகொலைகளை அரங்கேற்றியது சிங்களம். அதைப் பார்த்து கொந்தளித்தே புலிகள் உள்ளிட்ட போராளிகள் ஆயுதம் தூக்கத் தொடங்கினார்கள்.

குருமூர்த்தியால் வளர்க்கப்பட்ட பிள்ளைகள் இதனை அறிய மாட்டார்கள்.

நன்றி: முரசொலி

கட்டுரையாளர் குறிப்பு:

thiruma.avif

ப.திருமாவேலன் மூத்த பத்திரிகையாளர், கலைஞர் தொலைக்காட்சி’யின் ஆசிரியர். ‘ 

https://minnambalam.com/featured-article/dravidian-tigers-velupillai-prabakaran-and-dravidam/

@நன்னிச் சோழன் உங்கள் மேலான கவனத்துக்கு.

புலிகளின் அரசியல் கோட்பாட்டு நிலை பற்றிய ஒரு ஆவணக்கட்டுக்கு உதவலாம்.

2 hours ago, நந்தன் said:

நீங்க தப்பான ஆளை கூப்பிட்டிட்டீங்க

அவசரத்தில் “கனதியான” என்ற அடைமொழியை வாசிக்காமல் அவராகவே வந்து விட்டார் என நினைக்கிறேன். 

  • கருத்துக்கள உறவுகள்+
2 hours ago, goshan_che said:

@நன்னிச் சோழன் உங்கள் மேலான கவனத்துக்கு.

புலிகளின் அரசியல் கோட்பாட்டு நிலை பற்றிய ஒரு ஆவணக்கட்டுக்கு உதவலாம்.

நன்றி கோசான்.

முற்றாக வாசித்தேன். முன்னர் அறிந்திராத பல விடையங்களை அறிந்து கொண்டேன். 

  • கருத்துக்கள உறவுகள்

எல்லாம் சரி, அப்போ இப்போதைய சென்னைக்கு திராவிட நாடு என்றல்லவா பெயர் வைத்திருக்க வேண்டும். ஏன் தமிழ்நாடு என்று பெயரிட்டார்கள்?

அந்த 4 பக்க அறிக்கையை யாராவது இணைக்க முடியுமா?

Edited by Eppothum Thamizhan

  • கருத்துக்கள உறவுகள்
51 minutes ago, Eppothum Thamizhan said:

எல்லாம் சரி, அப்போ இப்போதைய சென்னைக்கு திராவிட நாடு என்றல்லவா பெயர் வைத்திருக்க வேண்டும். ஏன் தமிழ்நாடு என்று பெயரிட்டார்கள்?

அந்த 4 பக்க அறிக்கையை யாராவது இணைக்க முடியுமா?

திராவிட என்பது மரபு இனம். தமிழர் என்பது தேசிய இனம். ஐரோப்பாவில் பல தேசிய இனங்களை கொண்ட லத்தீன் மொழிக்குடும்ப மக்கள் ஜேர்மானிய மொழிக்ககுடும்ப மக்கள், ஸலாவிய மொழிக்குடும்ப மக்கள் உள்ளது போல் தான் இதுவும். இவ்வாறான மரபு இனங்களும  அதற்குள் பல தேசிய இனங்களும் உலகம் முழுவதும் உள்ளன. 

 நீங்கள் பரீட்சித்து பார்கக விரும்பினால் உங்கள் டிஎன்ஏ மாதிரியை அனுப்பி பரீட்சிக்கலாம். உங்கள் மரபு இன  பிரதேசங்களாக இலங்கையில் தொடங்கி  கிட்டதட்ட தென்னிந்தியா முழுவதும் என்று வரைபடத்தில் அடையாளமிடப்பட்டு  காட்டப்பட்டிருப்பதை தரவுகள் தெரிவிக்கும்.  

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
Quote

புலிச் சின்னத்தைத் தமிழீழத்தின் தேசிய சின்னமாகப் பிரபாகரன் தேர்ந்தெடுத்ததற்குக் காரணமுண்டு. புலிச்சின்னம் திராவிடர் நாகரீகத்தில் வேரூன்றி நிற்கும் ஒரு படிமம். தமிழரின் வீர வரலாற்றையும், தேசிய எழுச்சியையும் சித்தரித்துக் காட்டும் குறியீடு. வலிமையையும், வீரத்தையும், தன்னம்பிக்கையையும் குறித்துக் காட்டும் சின்னம். அன்று வீரவரலாறு படைத்த சோழ மன்னர்களும், புலிக்கொடியின் கீழ் தமிழனை எழுச்சி கொள்ளச் செய்தனர். தமிழுணர்வை, இன உணர்வை, தேசியப் பற்றுணர்வை, பகைவனுக்கு அஞ்சாத வீரவுணர்வைப் பிரதிபலிக்கும் ஆழமான, அற்புதமான குறியீடாகத் திகழ்கிறது புலிச்சின்னம்

மதியுரைஞர் அன்ரன் பாலசிங்கம் அவர்களுக்கான உத்தியோகபூர்வமான தளத்தில் இருந்து..

https://antonbalasingham.com/archives/205

  • கருத்துக்கள உறவுகள்

இதுதான் அந்த 4 பக்க அறிக்கை!! 👇

Annex: The Struggle for Tamil Eelam and the Liberation Tigers

This political pamphlet attempts to sketch a brief outline of the Tamil National Independence struggle in Sri Lanka and the revolutionary armed struggle advanced for that cause by the Liberation Tigers of Tamil Eelam. As a liberation movement the Tigers constitute themselves as the authentic revolutionary vanguard of the struggling masses, who, by their deep dedication and commitment to the revolutionary tasks of national emancipation and socialist revolution have earned the name of freedom fighters of the people.

The movement emerged at the peak of national oppression as the militant expression of the determined will of our people to fight the oppressive bourgeois state machinery with armed struggle, which Lenin taught us, is the highest expression of revolutionary political practice. We wish to introduce our revolutionary organization with its historical genesis, its militant struggles and its aims and objectives with a brief historical note on the national struggle of the masses of Tamil Eelam.

Historical background

The Tamil national question in Sri Lanka is the burning political issue and the most crucial national problem confronted by the present dictatorship in that country. The Tamil nation as a whole is agitating for political independence on the basis of a universal democratic principle, on the basis of a nation’s sacred right, that is, the right to self-determination, the right to secede and form an independent sovereign state. The Tamil speaking nation was forced into this inevitable political choice as a consequence of nearly 30 years of violent and brutal oppression practiced by the successive chauvinists ruling classes of the Sinhala nation. Years of peaceful struggle to gain the very basic human rights were met with vicious forms of suppression and the national friction between two nations became the major contradiction leading to the demand for secession by the oppressed.

The island, formerly called Ceylon is the traditional homeland of two nations: Tamil Eelam and Sri Lanka: two distinct social formations with distinct culture and language; having their own unique historical past. The Tamils have been living in the island from pre-historic times long before the arrival of the Sinhalese people from Northern India in the 6th century BC. The Sinhalese historical chronicles, ‘Mahawamsa’ and ‘Culavamsa’ record the turbulent historical past of the island, of centuries of violent power struggles ands wars between Tamil and Sinhalese kings for political hegemony. The island was ruled by both Tamil and Sinhalese kings.

From the 13th century onwards, until the penetration of Portuguese colonialism, Tamil Eelam lived as a stable national entity ruled by its own kings. The Portuguese annexed the Tamil Kingdom yet ruled it as a separate national formation, as the traditional homelands of the Tamil speaking people. Dutch colonialism too, did not violate the territorial integrity of the Tamil Kingdom until British imperialism in the 19th century brought about a unified state structure amalgamating the two kingdoms irrespective of ethnic differences laying the foundation for the present national conflict.

National oppression and demand for secession

The Sinhala chauvinist oppression against the Tamil nation began to unfold in its devious forms soon after the so-called national independence in 1948 when the state power was transferred to the Sinhala national bourgeoisie. The first major assault of the notorious racialist program was directed at the Tamil plantation workers through a legislation in 1949 which disenfranchised more than a million people, reduced them to statelessness and debased them without any civic rights. This infamous act of inhumanity marked the beginning of a 30-year history of national oppression, a planned systematic oppression, that seriously undermined the very foundation of the social, political, economic and cultural life of Tamil speaking masses.

The oppression penetrated into various spheres of the conditions of social existence of our people and threatened the very survival of our nation. The gradual annexation of the traditional Tamil lands by Sinhala colonization aided by the state; the forceful imposition of the Sinhala language on the Tamil speaking people; blatant discrimination and injustice practiced against the Tamil youth in the sphere of education and employment; planned economic strangulation of Tamil areas-all these vicious forms of national oppression practiced by all successive governments aggravated the national conflict.

The worst of all is the state inspired racial conflagrations, which unleashed its terror against the Tamil speaking masses (particularly in 1958 and 1977) with mass murder, looting, arson and rape, with abominable crimes of genocide in which the State police openly colluded with the vandals. Such racial holocaust aimed at the annihilation of our national identity made unitary existence a political and social impossibility.

At the height of national oppression, when the struggle for political independence became the inevitable alternative, the Tamil political parties converged into a single national movement with the formation of the Tamil Untied Liberation Front in 1976. Confronted with steadily mounting national oppression, frustrated with the failure of political agitations demanding basic human rights, the Tamil nationalist movement resolved to fight for political independence on the basis of the nation’s right to self-determination. It was primarily a decision to secede and form an independent sovereign state over which the 1977 elections were fought and endorsed overwhelmingly by the Tamil speaking masses. Thus, it was the intolerable national oppression and the emergence of national conflict as the major contradiction that led to this inevitable political demand to secede which opened a new era in Tamil politics, a new historical epoch to launch a revolutionary struggle for national independence.

The birth of the Tamil Tigers 

The Tamil Liberation Tigers are the historical product of the Sinhala chauvinist oppression. They were the product of a revolutionary situation generated by the contradictions of national conflict. Caught up at the peak of national oppression, constantly victimized by the police brutality for political actions, the revolutionary ardor of the militant Tamil youth sought concrete political expression to register their protest. Disenchantment with the political strategy of the nonviolence, confronted with the demand for revolutionary political practice, the Tiger Movement gave its historical birth in 1972, as the armed resistance movement of the people. Structured as an urban guerrilla force, disciplined with an iron will to fight for the cause of national freedom, the Tigers launched a series of attacks against the armed forces of the oppressive regime.

The Government became alarmed at the growth and strength of the movement, angered at the success of its military operations on the Government property and personnel, and above all, horrified of its growing support among the wider sections of the Tamil masses. On April this year (1978), when the Liberation Tigers launched a tactical attack of self-defense and destroyed a party of police personnel which was in hot pursuit to track them down, the ruling bourgeois dictatorship utilized the situation to intensify its policy of national suppression. A repressive legislation was rushed through the Parliament which proscribed the Tiger Movement. At the same time, the Government dispatched large contingents of Military personnel to Tamil areas to keep Tamil Eelam under constant military surveillance and domination. Even with the intensification of the military and the tight screen of surveillance the Freedom Fights continue with their armed struggle, launch occasional strikes at chosen targets and evade all possible tactics to hunt them down. Though confronted with all odds, and obstacle, the Tiger Movement grows in its strength as the armed vanguard of the mass struggle, grows as the authentic national liberation movement to advance the cause of national freedom through armed struggle.

Aims and objectives

The revolutionary political objectives of the Liberation Tigers of Tamil Eelam express the profound aspirations for the Tamil speaking masses to gain political independence from the autocratic domination and oppression of the Sinhala chauvinist regime. As a liberation movement we are pledged to the tasks of national emancipation and socialist revolution. Our fundamental objectives are:

Total independence of Tamil Eelam. The establishment of a sovereign, socialist democratic people’s government.

Abolition of all forms of exploitation of man by man and the establishment of a socialist mode of production ensuring that the means of production and exchange of our country becomes the ownership of our people.

To achieve these revolutionary tasks we firmly uphold that armed revolutionary struggle is the only viable and effective path open to us to liberate our homeland. The armed revolutionary struggle advanced by our movement is the extension of the political struggle for liberation. Our guerrilla warfare, which is the mode of armed revolutionary struggle suited our situation, will be gradually and systematically transformed into a genuine people’s war of liberation. To this end, our liberation movement is working persistently to mobilize and organize the broad masses to actively participate in the national struggle.

The Liberation Tigers of Tamil Eelam has resolved to work in solidarity with the world national liberation movements, socialists states, international working class parties. We uphold an anti-imperialist policy and therefore, we pledge our militant solidarity with the oppressed humankind in the Third World in their struggle against imperialism, neo-colonialists, Zionism, racism and other forces of reaction.

Note: This document was released by the political committee of the Liberation Tigers of Tamil Eelam in November 1978 and was published in “Towards Liberation”, which contained also selected political documents of the Liberation Tigers of Tamil Eelam.

https://sangam.org/sri-lanka-the-untold-story-chapter-25/

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Eppothum Thamizhan said:

அந்த 4 பக்க அறிக்கையை யாராவது இணைக்க முடியுமா?

நான்கு பக்கமும் கிடைக்கவில்லை.. ஆனால் கிடைத்த ஒருபக்கம் போதும்..

large.IMG_9886.jpeg.70662bcca4177b0703e873595cf99a7f.jpeg

Edited by கிருபன்

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, கிருபன் said:

நான்கு பக்கமும் கிடைக்கவில்லை.. ஆனால் கிடைத்த ஒருபக்கம் போதும்..

large.IMG_9886.jpeg.6c360d8b0f06be9c0f7e348885d85524.jpeg

ஒரு அறிக்கை வெளியிடும்போது புலிகளின் சின்னம் இல்லாமலா இருக்கும்??

  • கருத்துக்கள உறவுகள்
24 minutes ago, island said:

திராவிட என்பது மரபு இனம். தமிழர் என்பது தேசிய இனம். ஐரோப்பாவில் பல தேசிய இனங்களை கொண்ட லத்தீன் மொழிக்குடும்ப மக்கள் ஜேர்மானிய மொழிக்ககுடும்ப மக்கள், ஸலாவிய மொழிக்குடும்ப மக்கள் உள்ளது போல் தான் இதுவும். இவ்வாறான மரபு இனங்களும  அதற்குள் பல தேசிய இனங்களும் உலகம் முழுவதும் உள்ளன. 

 நீங்கள் பரீட்சித்து பார்கக விரும்பினால் உங்கள் டிஎன்ஏ மாதிரியை அனுப்பி பரீட்சிக்கலாம். உங்கள் மரபு இன  பிரதேசங்களாக இலங்கையில் தொடங்கி  கிட்டதட்ட தென்னிந்தியா முழுவதும் என்று வரைபடத்தில் அடையாளமிடப்பட்டு  காட்டப்பட்டிருப்பதை தரவுகள் தெரிவிக்கும்.  

உலகில் உள்ள எல்லோரும் முதலில் ஆப்பிரிக்காவில் இருந்துதான் இடம்பெயந்தார்கள் என்று கூறுகிறார்கள். அதற்காக எல்லோரையும் ஆப்பிரிக்கர்கள் என்று கூற முடியுமா?

  • கருத்துக்கள உறவுகள்

இவை எல்லாம் திரும்பத் திரும்ப சொல்லப்பட்டு நன்றாகவே வெளியே தெரிந்த தகவல்கள் தான், 

 ஆனால் தமிழ் win,லங்காஸ்ரீ, youtube பார்த்தே வளர்ந்த ஆழ்ந்த வாசிப்பு அற்ற தலைமுறைக்கு தேவையான கட்டுரை 

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Eppothum Thamizhan said:

உலகில் உள்ள எல்லோரும் முதலில் ஆப்பிரிக்காவில் இருந்துதான் இடம்பெயந்தார்கள் என்று கூறுகிறார்கள். அதற்காக எல்லோரையும் ஆப்பிரிக்கர்கள் என்று கூற முடியுமா?

இந்த கேள்வியே அபத்தமானது. ஹோமோ சேப்பியன்ஸ் இல் இருந்து பல்லாயிரம் ஆண்டுகால மரபணுத்திரிபுகள்,  பரிணாம வளர்சசி மூலம் பல்வேறு மரபு இனங்கள் உருவாகியுள்ளன. இது  டிஎன்ஏ பரிசோதனைகள் மூலம் தெளிவாக கண்டறியப்பட்டுள்ளது. இந்த டிஎன்ஏ பரிசோதனைகள் ஒரு குறிப்பிட்ட பிரதேசத்தில் வாழும் மக்களின் மரபு இனங்களை துல்லியமாக  இனங்காட்டும். ஆனால் அந்த மரபு இனங்களில் இருந்து பிரிந்த  தேசிய இனங்களை அடையாளம் காட்டாது.  

எடுத்துக்காட்டாக உங்களது அல்லது எனது டிஎன்ஏயும்  ஒரு  தெலுங்கு, கன்னட அல்லது  மலையாள இனத்தில்  பிறந்த  ஒருவரது டிஎன்ஏ எல்லாமே எம்மை  ஒரே இனக்கூட்டாகவே  அடையாளம் காட்டும். உங்களையோ என்னையோ தமிழ் தேசிய இனத்தை சேர்ந்தவர் என்று பிரித்தோ தெலுங்கு, கன்னட, மலையாளத்தவரை பிரித்தோ அடையாளம் காட்டாது.  அதாவது  மரபு இனங்களை அடையாளம் காட்டும் டிஎன்ஏ,  தேசிய இனங்களை அடையாளம் காட்டாது. வட இந்தியர் ஒருவரது டிஎன்ஏ,  அவரை Indo- Aryan  என்ற வகை மரபு இனமாக அடையாளம் காட்டுமே தவிர,  இவர் குஜராத்தியர்,  இவர் பஞ்சாபியர் என்று தனித்து அடையாளம் காட்டாது. 

Edited by island
சொற்றொடர் திருத்தம்.

  • கருத்துக்கள உறவுகள்
48 minutes ago, island said:

எடுத்துக்காட்டாக உங்களது அல்லது எனது டிஎன்ஏயும்  ஒரு  தெலுங்கு, கன்னட அல்லது  மலையாள இனத்தில்  பிறந்த  ஒருவரது டிஎன்ஏ எல்லாமே எம்மை  ஒரே இனக்கூட்டாகவே  அடையாளம் காட்டும். உங்களையோ என்னையோ தமிழ் தேசிய இனத்தை சேர்ந்தவர் என்று பிரித்தோ தெலுங்கு, கன்னட, மலையாளத்தவரை பிரித்தோ அடையாளம் காட்டாது.  

அப்போ ஒரு மலையாளியோ, தெலுங்கரோ, கன்னடரோ திராவிடத்தை பற்றி அதிகம் அலட்டிக்கொள்ளாதபோது தமிழ் காட்சிகள் மாத்திரம் ஏன் திராவிடத்தை காவித்திருக்கிறார்கள்?

  • கருத்துக்கள உறவுகள்

ஒரே ஒரு அறிக்கையை வச்சுக்கொண்டு பெரியாரை தலைவராகவோ அல்லது பெரியாரிசத்தை தமது ஒரேகொள்கையாகவோ புலிகள் ஏற்றுக்கொண்டதாக உருட்டவேண்டாம்..

இந்த கட்டுரையும் 1978 இல் அன்ரன் பாலசிங்கம் எழுதியது.. பின்னாட்களில் எந்த இடத்திலும் புலிகள் திராவிட இயக்க கொள்கையை பின்பற்றுவதாக சொல்லவில்லை.. நாங்களும் சிறுவயதில் இருந்து புலிகள் இயக்கம் வளர அவர்களோடு நாங்களும் வளர்ந்தவர்கதான்.. அன்ரன் பாலசிங்கமும் திராவிடம் என்பதை மரபினம் என்ற புரிதலிலேயே பயன்படுத்தி இருக்கிறார் இந்த கட்டுரையில்.. இதற்கும் பெரியாருக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.. கார்ல் மாக்ஸ்,ஸ்டாலின், லெனின் போல பெரியாரையும் அன்ரன்பாலசிங்கமும் அரசியல் துறையினரும் படித்திருக்கலாம்.. அவற்றில் இருக்கும் முற்போக்குகொள்கைகளை எடுத்திருக்கலாம்..

ஆரம்பிச்ச காலத்தில இயக்கத்தில சில சித்தார்ந்தங்கள் உள்வாங்கப்பட்டும் இருந்தது… மாக்சிசம் உட்பட... ஆரம்பகால இயக்கப் பெயர்கள் கம்யூனிச பெயர்களாக இருக்கும்... பிறகு தான் தமிழ் தேசியம் எண்ட வீச்சு பெருமெடுப்பில ஆரம்பிச்சா பிறகு " தமிழ் தேசிய அரசியல் " முழு வீச்சானது... இந்த அறிக்கை அடையாளமற்று இருந்த நேரத்தில ஆர் எண்டு பிரதேச குறிப்பு காட்டுறதுக்காக " தென்னிந்திய மொழிக்குடும்பம் " என்கிற பதத்தை சுட்ட பயன்படுத்தப்பட்டது... எங்க, விடுதலைப் புலிகளின் இலட்சிணை பொறிக்கப்பட்ட இன்னொரு  உத்தியேகபூர்வ கடிதத்திலோ, அல்லது தலைவரோ தம்மை திராவிடர் எண்டு சொன்னதை காட்டுங்க பாப்பம்..?

புலிகள் தங்களை தமிழ் தேசிய இனமாகத்தான் முன்னிறுத்தினார்கள்... திராவிடர்களாக அல்ல... ஈழத்தில் இப்போது எஞ்சியிருக்கும் ஒருவருக்கும் இது தெரியும்....

இதில சுந்தரவள்ளி வேற ஒரு உருட்டு ஒண்டு உருட்டுது.. அதாவது புலிகள் தமிழர்கள் என்று போட்டுவிட்டு அடைப்புக்குறிக்குள் திராவிடர்கள் என்று போடுபவர்களாம்..

தமிழ்நாட்டில இப்ப நடந்துகொண்டிருக்கிற பிரச்சினை இரண்டு கட்சிக்கு இடையானது.. ஆனா, சந்தடி சாக்குல எம்மாம் பெரிசா காதில செஞ்சுவிட்டிருக்கு இந்தம்மா ! புலிகள் பிராக்கெட்ல திராவிடர்கள் எண்டு போடுவாங்களாம்ல... பனியா அவங்களுக்கு.. ?

தட் நாங்க எதுக்குடா நடுராத்திரி சுடுகாட்டுக்குப் போறோம் மொமண்டுகள் இதெல்லாம்..

நாம வேற ஏதோ புலிகள்ட ஆட்சில இருந்திருக்கிறம் போல எண்டு டவுட்டா இருக்கு..

பக்கத்துல உசிரோட நாங்க இருக்கத்தக்கதாவே சொந்த ஆதாயத்துக்கு எவளோ manipulation பண்றாங்க..

Edited by பாலபத்ர ஓணாண்டி

  • கருத்துக்கள உறவுகள்

DRAVIDIAN:

  • FIRST USAGE: The word "Dravidian" originates from the Sanskrit word "Dravida", which was used to refer to people and languages in the southern part of the Indian subcontinent. The term was first systematically used by the linguist Robert Caldwell in the mid-19th century, when he identified and grouped the languages of South India under the "Dravidian family."
  • MEANING IN ANCIENT TEXTS: In ancient Indian texts, the term "Dravida" referred to a geographical and linguistic region. For example, Adi Shankaracharya (8th century CE), a prominent philosopher, referred to himself as "Dravida Shishu" (child of the Dravida land) when explaining the origin of his knowledge. The term was primarily a geographical marker for Southern India rather than an ethnic or racial distinction.
  • MODERN CONTEXT: The term "Dravidian" has been used more broadly in the modern era to refer to the languages (like Tamil, Telugu, Kannada, Malayalam) and people of South India, distinct from those associated with Indo-Aryan languages in the north.
  • கருத்துக்கள உறவுகள்

சேர,சோழ பாண்டியர்களை யாரும் திராவிடர்கள் என்று அழைப்பதில்லையே! தமிழ் மன்னர்கள் அல்லது அரசர்கள் என்றுதானே கூறுகிறார்கள்! திராவிடத்தை தமிழ் நாட்டிற்குள் கொண்டுவந்ததே பெரியார்தான்!!

Edited by Eppothum Thamizhan

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.