Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, island said:
10 hours ago, Kavi arunasalam said:

இது ஒரு தவறான கருத்து.

77இல், “இலங்கையில் தமிழர்கள் சிங்களவர்களால் தாக்கப் படுகிறார்களே” என்று ஒரு நிருபர் எம்ஜிஆரைக் கேட்டபோது, “இலங்கையில் எனக்குச் சிங்கள ரசிகர்களும் இருக்கிறார்கள்” என்று சொன்னவர்தான் எம்ஜிஆர்.

கருணாநிதி ரெலோவுக்கு ஆதரவு கொடுத்ததால், எம்ஜிஆர் புலிகளைத் தேர்ந்தெடுத்தார். கோடிகளை அள்ளிக் கொடுத்ததெல்லாம் அவரது வாக்கு அரசிலுக்குத்தான். தன்னை தமிழனாகக் காட்டிக் கொள்ளத்தான். 

Expand  

அத்துடன் 1981 ஜனவரி மாதம் மதுரை தமிழாராய்சசி மகாநாட்டு இறுதியில் எம்ஜிஆர் இன்பேச்சை கண்டித்து யாழ்பாணம் முழுவதும் எம்ஜிஆர்  அவர்களுன் கொடும்பாவியை எரித்து இளைஞர்கள் போராடியதையும் ஞாபகப்படுத்துகிறேன்.

தெரியாத தகவல்கள் இருவருக்கும் நன்றி

9 hours ago, island said:

வைரவரின் வாகனம் என்ன?  BMW? Mercedes? Porche? Jaguar? 

LADA 😂

3 hours ago, goshan_che said:

வாசிச்ச எனக்கே மனசு கேட்கவில்லை, வாழும் உங்களின் தவிப்பு எப்படி இருக்கும்.

தவறை உணர்ந்ததே பெரிய விசயம்தான் தல, மருக வேண்டாம்.

தான் செய்தது கறுமம் என்பதை கூட உணராமல் - நாந்தான் ஆளை கொண்டு போய் சேர்த்து விட்டேன் - இருக்கிறாரரோ இல்லையோ என தெரியாது என யாழில் எழுதிய வெளிநாட்டில் பேரப்பிள்ளை கண்ட தாத்தாக்கள் மத்தியில் நீ ஒரு படி மேலதான் தல❤️.

தவறை பெருமையாக கதைக்கும் பலர் உள்ள எம்மவர்கள் மத்தியில் பாலபத்ர ஓணாண்டி சொல்லியதை படித்து அவர் மீது மதிப்பு அதிகரித்தது.

  • Replies 228
  • Views 9.9k
  • Created
  • Last Reply

Most Popular Posts

  • ரசோதரன்
    ரசோதரன்

    திராவிடம் என்னும் பதம் வியாசரின் காலத்திலேயே இருந்தது. பீஷ்மர் மூன்று அரசகுமாரிகளையும் சுயம்வரத்தில் இருந்து கவர்ந்து கொண்டு போகும் போது, பீஷ்மரை வெல்ல முடியாது என்று தெரிந்திருந்தும், தங்களின் மரியாத

  • கிருபன்
    கிருபன்

    2004 இல் சீமான் ஒரு திரைப்பட இயக்குநர். தமிழீழப் போராட்டத்தின் தீவிர ஆதரவாளர். அப்போது பெரியாரின் சிந்தனைகளை ஆதரித்தவராகவும் இருந்தார். அரசியலில் ஈடுபடவும் இல்லை. 2004 இல் சீமானின் கட்டுரை எழுத அ

  • இந்த கேள்வியே அபத்தமானது. ஹோமோ சேப்பியன்ஸ் இல் இருந்து பல்லாயிரம் ஆண்டுகால மரபணுத்திரிபுகள்,  பரிணாம வளர்சசி மூலம் பல்வேறு மரபு இனங்கள் உருவாகியுள்ளன. இது  டிஎன்ஏ பரிசோதனைகள் மூலம் தெளிவாக கண்டறியப்பட

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, ரசோதரன் said:

அடிப்படையே கருணாநிதி மீதான அந்தக் கோபம் தான். இது எங்களில் பலருக்கும் அணையாமல் அப்படியே இருக்கின்றது. அந்தக் கோபம் வேறு இடங்களுக்கு ஆதரவாக மாறிவிடுகின்றது..............

 கருணாநிதியின் சக்திக்கு அப்பாற்பட்டது  போரை நிறுத்துவது  அதற்காக கோபமா 🤣

போரையே  நடத்த வேண்டும் என்று நின்ற அநுரகுமார திசாநாயக்க கட்சியையே தமிழர் பாதுகாப்பு கட்சியாக   ஏற்றுக்கொண்டு ஆகிவிட்டதே. நீதிபதி இளஞ்செழியன் பாரபட்ச பிரச்சனையால் இப்போ பாட்டு இசை சத்தம் சில நாட்களாக  காணவில்லை.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
On 23/1/2025 at 03:01, நன்னிச் சோழன் said:

நன்றி கோசான்.

முற்றாக வாசித்தேன். முன்னர் அறிந்திராத பல விடையங்களை அறிந்து கொண்டேன். 

பல ஆவணங்கள் தமிழீழ ஆவணக்காப்பகம்  இணையத்தில் உள்ளன.

https://tamileelamarchive.com

On 23/1/2025 at 06:17, கிருபன் said:

மதியுரைஞர் அன்ரன் பாலசிங்கம் அவர்களுக்கான உத்தியோகபூர்வமான தளத்தில் இருந்து..

https://antonbalasingham.com/archives/205

விடுதலைப் புலிகள் பத்திரிகை இணைப்பு

https://tamileelamarchive.com/article_pdf/article_603a5d3c689251d2d3de9131b8e2f59d.pdf

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, ரசோதரன் said:

திராவிடம் என்னும் பதம் வியாசரின் காலத்திலேயே இருந்தது. பீஷ்மர் மூன்று அரசகுமாரிகளையும் சுயம்வரத்தில் இருந்து கவர்ந்து கொண்டு போகும் போது, பீஷ்மரை வெல்ல முடியாது என்று தெரிந்திருந்தும், தங்களின் மரியாதையைக் காப்பாற்றும் முகமாக பீஷ்மரின் பின்னால் ஓடிய அன்றைய பாரததேச அரசர்களில் ஒரு அரசன் திராவிட அரசன் என்று வாசித்ததாக ஞாபகம். பீஷ்மரின் அம்பு பட்டு ஒரு ஓரமாக இவர் விழுந்தார் என்றும் ஞாபகம்.

இதற்கு முன்னரேயே இன்னொரு அரசனின், சித்ராங்கதன், தேவைகளுக்காக ஆண்கள் பல இடங்களில் இருந்தும் அவருடைய அரண்மனைக்கு கொண்டு செல்லப்பட்டார்கள் என்றும் வருகின்றது. பழுப்பு நிறத்தில் இருந்த யவனர்களும், கருமையான நிறத்தில் இருந்த திராவிடர்களும் கொண்டு செல்லப்பட்டார்கள் என்றும் அங்கே இருந்தது என்று நினைக்கின்றேன்.

மேலே ஆரியம், கீழே திராவிடம் என்று தான் ஆரியர்களின் வருகையின் பின்னர் பாரததேசம் இருந்தது போல.

ஆரியத்தையும், அதன் ஊடகமான பிராமணியத்தையும், தேவபாசை என்று அவர்களே சொல்லிக் கொள்ளும் சமஸ்கிருதத்தையும், ஆட்சி மொழி என்று சொல்லிக் கொள்ளும் ஹிந்தி மொழியையும் ஒரே குடையின் கீழ் நின்று எதிர்த்துப் போராடுவோம் என்று தென்னிந்திய மக்களை ஒற்றுமைப்படுத்த இதே கருதுகோளை பின்னாட்களில் சிலர் கையில் எடுத்தனர். அதில் ஒருவர் பெரியார்.

ஆனாலும், தமிழர்கள் தவிர மற்ற தென்னிந்தியர்கள் ஏன் இந்த திராவிட ஒற்றுமையை முன்வைப்பதில்லை என்ற கேள்வி சரியானதே. திராவிட மொழிகளின் மூலமொழி தமிழ் என்றும், தமிழில் இருந்தே தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகள் வந்தன என்றும், தமிழர்கள் ஒரு முன்னோடிகள் என்றும் மீண்டும் மீண்டும் சொல்லப்படும் விடயங்களை வேறு எந்த தென்னிந்திய மக்களும் ஏற்கத் தயாராகவில்லை. இது அவர்களை காயப்படுத்துகின்றது, அந்நியப்படுத்துகின்றது. சமஸ்கிருதம் தான் ஆதிமொழி என்பது எப்படி எங்களை வட இந்திய மக்களிடம் இருந்து அந்நியப்படுத்துகின்றதோ, அது போலவே தான் தமிழ் மொழி தான் ஆதிமொழி என்பதும் மற்றைய தென்னிந்திய மக்களை அந்நியப்படுத்துகின்றது. அதனால் தான் அவர்கள் திராவிடம் என்னும் குடையின் கீழ் வருவதில்லை.

இதை விட்டு விட்டால், தமிழ்நாட்டில் எல்லா அரசியல்வாதிகளும், அரசியல் கட்சிகளும், மிகச் சாதாரண அரசியல் செய்பவர்களே. சிலர் திராவிடம் என்னும் பெயரில் அரசியல் செய்கின்றார்கள். இன்னும் சிலர் தமிழ் தேசியம் என்னும் பெயரில் அரசியல் செய்கின்றார்கள். தங்களினதும், தங்கள் குடும்பங்களின் நலன்களையும் தவிர, இவர்களில் மிகப் பெரும்பான்மையானவர்களுக்கு திராவிடம் மீதோ அல்லது தமிழ் மீதோ எந்தப் பற்றும் அறவே கிடையாது. சீமானுக்கும் பற்றில்லை, உதயநிதிக்கும் பற்றில்லை, விஜய்க்கும் பற்றில்லை...........................

சீமானின் அரசியல் பரபரப்பு சார்ந்தது. ஈழத்து மருத்துவரின் அரசியலும் அதுவே. ஆனால் இவை பொருளற்றவை.

திமுகவிற்கு அவர்களின் கொள்கைத் தலைவரை சீமான் எப்படி இப்படிச் சொல்லலாம் என்பது ஒரு தன்மானப் பிரச்சனை. அதனால் திமுகவினர் சில நடவடிக்கைகளை ஆரம்பித்திருக்கின்றனர். அதில் ஒன்று தான் இந்த ஆராய்ச்சிக் கட்டுரை.

ஈழத்தில் எங்களுக்கு தமிழர் என்னும் அடையாளமே எங்களின் நோக்கத்திற்கு, எங்கள் எல்லோரையும் ஒரு குடையின் கீழ் கொண்டு வருவதற்கு, போதுமானதாக இருந்தது. நாங்கள் திராவிடம் என்பதையும், தமிழ் தேசியம் என்பதையும் தமிழ்நாட்டு அரசியல்வாதிகள் தங்களின் நலன்களுக்கு ஏற்ப ஆக்கிக் கொண்டதைப் போல ஆக்கவும் இல்லை, அதற்கான தேவைகளும் எங்களுக்கு இருக்கவில்லை. நாங்கள் ஒன்றில் இருந்து இன்னொன்றுக்கு மாறவும் இல்லை.    

மண்ணின் மைந்தர்கள்தான் தமிழ்நாட்டினை ஆட்சி செய்ய வேண்டும் என வலியுறுத்துபவர்கள் மற்ற மொழி பேசும் மக்களுகெதிராக அரசியல் செய்வதற்காக தமிழ்தேசியத்தினை முன்னிருத்த வேறு மொழி பின்புலம் கொண்டவர்கள் தமிழ்நாட்டில் அரசியல் செய்வதற்கு அனைத்தும் திராவிடம் எனும் போர்வையில் திராவிட அரசியல் செய்யவதற்கு வசதியாக பிராமணர்கள்தான் அனைவருக்கும் எதிரிகள் எனும் நிலையினை உருவாக்கி அதன் அடிப்படையில் அனைவரையும் தமக்கு சார்ப்பார்க்க முயன்றவர்களுக்கு போட்டியாக திராவிட கொள்கைக்கு எதிராக தற்போது தமிழ்தேசியம் அவர்கள் இருப்பிற்கு அச்சுருத்தலாகி உள்ளதால் கடைசியாக புலிகளையும் திராவிட புலிகளாக்கி உள்ளார்கள்.

யானை இருந்தாலும் ஆயிரம் பொன் இறந்தாலும் ஆயிரம் பொன். 

இவர்களுக்குள் உள்ள புடுங்குபாட்டிற்கு இங்கு நாம் ஏன் முரண்பட வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, vasee said:

ஒரே பந்தி.. இந்த ஒட்டு மொத்த பிரச்சினையின் ஆணிவேரையே எழுதிவிட்டிருக்கிறீர்கள்.. இதிதான் 100%%%%% உண்மை..

  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, vasee said:

இவர்களுக்குள் உள்ள புடுங்குபாட்டிற்கு இங்கு நாம் ஏன் முரண்பட வேண்டும்.

நாம் எப்போதாவது அதிமுக-திமுக, பாமக-விசிக, கம்யுனிஸ்ட்கள் தமக்குள் அடிபடுவதில், விடயங்களில் தலையிடுகிறோமா?

இல்லையே.

சீமான் புலிகளை இழுத்து போவதால்தான் பிரச்சனையே வருகிறது.

சீமான் தனது பிழைப்புக்காக தமிழ் நாட்டு மக்களில் ஒரு பெரும் பகுதிக்கும் எமக்கும் வலிந்து முரணை உருவாக்கும் போது நாம் சும்மா இருக்க முடியாதே?

இதை எத்தனை தரம் எழுதினாலும், நீங்களும், @பாலபத்ர ஓணாண்டி  ஓணாண்டி போன்றவர்களும் மீண்டும் ஒரே கேள்வியை ஏதோ புதிய கண்டுபிடிப்பு போல கேட்கிறீர்கள்🤣.

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, Sasi_varnam said:

நிறைய எழுதுவதாலோ என்னவோ உங்களுக்கு மற்றவர்கள் சிந்தனைகள், எழுத்துக்கள்  குறித்து தீர்ப்பு சொல்லும் அதிகாரம் அதிகமாக கிடைத்து விடுகிறது. 

சில வேளை பலமாதம் வராமல் விட்டு விட்டு, பின் யாழுக்கு வந்த கையோடு,

ஆங்கில கெட்ட வார்த்தையை அதன் முழு அர்த்தம் தொனிக்கும் வகையில் முதல் எழுத்தை மட்டும் எழுதி பகிரும் அதிகாரம் உங்களுக்கு கிடைத்திருப்பது போல எனக்கு கிடைத்திருக்கலாம்🤣.

8 hours ago, Sasi_varnam said:

Your Opinion 👎

Unless I identify them as facts , everything  else I write here is my opinion.

The clue is in the name - கருத்துக்களம், தரவுக்களம் அல்ல.

ஆத்தலான திரியில் சந்திப்போம்.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, vasee said:

மண்ணின் மைந்தர்கள்தான் தமிழ்நாட்டினை ஆட்சி செய்ய வேண்டும் என வலியுறுத்துபவர்கள் மற்ற மொழி பேசும் மக்களுகெதிராக அரசியல் செய்வதற்காக தமிழ்தேசியத்தினை முன்னிருத்த வேறு மொழி பின்புலம் கொண்டவர்கள் தமிழ்நாட்டில் அரசியல் செய்வதற்கு அனைத்தும் திராவிடம் எனும் போர்வையில் திராவிட அரசியல் செய்யவதற்கு வசதியாக பிராமணர்கள்தான் அனைவருக்கும் எதிரிகள் எனும் நிலையினை உருவாக்கி அதன் அடிப்படையில் அனைவரையும் தமக்கு சார்ப்பார்க்க முயன்றவர்களுக்கு போட்டியாக திராவிட கொள்கைக்கு எதிராக தற்போது தமிழ்தேசியம் அவர்கள் இருப்பிற்கு அச்சுருத்தலாகி உள்ளதால் கடைசியாக புலிகளையும் திராவிட புலிகளாக்கி உள்ளார்கள்.

யானை இருந்தாலும் ஆயிரம் பொன் இறந்தாலும் ஆயிரம் பொன். 

இவர்களுக்குள் உள்ள புடுங்குபாட்டிற்கு இங்கு நாம் ஏன் முரண்பட வேண்டும்.

தமிழ் நாட்டில் இதுவரை முதலமைச்சர்களாக இருந்தவர்கள் அனைவருமே அந்த மண்ணின் மைந்தர்களே.  

  • கருத்துக்கள உறவுகள்

2016 தேர்தல் காலகட்டம்.

“நாம் தமிழர் கட்சியையும் உங்கள் கருத்துக் கணிப்புகளில் சேருங்களேன்”
 - இது கோரிக்கை

“கருத்துக் கணிப்புகளில் சேர்ப்பதுக்கு நீங்க பெரிய ஆளா?” - இது திருமாவேலன்

இதுதான் காலச் சுழற்சி 😊

  • கருத்துக்கள உறவுகள்
28 minutes ago, island said:

தமிழ் நாட்டில் இதுவரை முதலமைச்சர்களாக இருந்தவர்கள் அனைவருமே அந்த மண்ணின் மைந்தர்களே.  

நாங்கள் இலண்டன் ரிட்டர்ன், அவுஸ்ரேலியன் ரெசிடெண்ட்ஸ் - ஆகவே “தமிழ் வழி அல்லாமல், ஏனைய வழி சாதியில் பிறந்தவர்” என சொல்லுவது கொஞ்சம் சங்கோஜமாய் இருக்கிறது.

ஆகவேதான் மண்ணின் மைந்தர் என்கிறோம்🤣

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் நாட்டில் ஒரு தமிழ் தேசியம் பேசும் கட்சிக்கு ஒரு தேவை இருக்கிறதா என்று கேட்டால் பதில் ஆம், அதற்க்கான தேவை உண்டு 

காரணம் இங்கே பெரியார், திராவிடம் என்று சொல்லி தமிழ் மொழி வழி மக்களை சற்றே ஒதுங்கி விட்டு தாம் அவர்களுக்கும் தலைவர் ஆகும் நிலை தெலுங்கு பேசும் ஆனால் தமிழ் நாட்டில் தமிழராக வாழும் மக்களிடம் உள்ளது. இவர்களை ஓரளவுக்கு அடக்கி வைக்க வேண்டிய தேவை அங்கு உள்ள தமிழர்களால் உணரப்பட்டு உள்ளது.

ஆனால் அதற்காக ஈவேரா மற்றும் திராவிட சித்தாந்தம் முற்றிலும் பிழை என்ற கருத்துக்கு வர முடியாது, அதே நேரம் தமிழ் நாட்டில் தமிழராக வாழ விரும்பும் 600 வருடங்களுக்கு முன் குடியேறிய திராவிட இன மக்களையும் முற்றிலும் எதிர்க்கவும் கூடாது 

ஆகவே சீமான் போன்றவர்கள் ஜனநாயக வெளியில் தேவையானவர்கள் தான். ஆனாலும் தேர்தல் முறையில் இவர்கள் தோற்கடிக்கப்பட வேண்டியவர்கள். 

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, இசைக்கலைஞன் said:

2016 தேர்தல் காலகட்டம்.

“நாம் தமிழர் கட்சியையும் உங்கள் கருத்துக் கணிப்புகளில் சேருங்களேன்”
 - இது கோரிக்கை

“கருத்துக் கணிப்புகளில் சேர்ப்பதுக்கு நீங்க பெரிய ஆளா?” - இது திருமாவேலன்

இதுதான் காலச் சுழற்சி 😊

வணக்கம் இசை.

2016 தேர்தல் காலகட்டம்.

நா த க ஒரு சீட்டை தன்னும் இந்த தேர்தலில் வெல்லாவிடில் நான் யாழுக்கு வரவேன்மாட்டேன் என்றார் ஒருவர்.

2024 இன்னும் ஒரு சீட்டை தன்னும் நாதக வெல்லவில்லை.

ஆனால் அவரும் இடைக்கிடை வந்துதான் போகிறார்.

இதுவும் காலச்சுழற்சியே 🤣.

பிகு

கண்டது சந்தோசம்.

9 minutes ago, பகிடி said:

அருமை. 

இதை சீமான் கையில் எடுத்தால் நாந்தான் அவரின் முதல் ஆதரவாளராக இருப்பேன்.

விஜை இந்த நிலைப்பாட்டைத்தான் எடுக்கிறார்.

ஏன் சீமானல் இது முடியவில்லை?

அவர் பிஜேபியால் பிஜேபி-எதிர் வாக்கை பிரிக்க அனுப்பபட்டவர்.

விஜையின் அரசியல் அவர் வெல்ல.

சீமானின் அரசியல் - பிஜேபி வெல்ல.

Edited by goshan_che

  • கருத்துக்கள உறவுகள்

மண்ணின் மைந்தன்

கட்டாயம் தமிழ்-வழி சாதியில் பிறந்த ஒருவர்தான் ஆழவேண்டும் என்பதில் எனக்கு கொள்கை உடன்பாடு இல்லை.

என்னை பொறுத்தமட்டில் மொழிவழி மாநில பிரிப்பில் தமிழ்நாட்டில் தங்கிய அனைவரும் தமிழரே.

இல்லை என்றாலும்….

சீமான் மண்ணின் மைந்தன் அல்ல. அவர் ஒரு மலையாளி.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

மண்ணின் மைந்தன்

கட்டாயம் தமிழ்-வழி சாதியில் பிறந்த ஒருவர்தான் ஆழவேண்டும் என்பதில் எனக்கு கொள்கை உடன்பாடு இல்லை.

என்னை பொறுத்தமட்டில் மொழிவழி மாநில பிரிப்பில் தமிழ்நாட்டில் தங்கிய அனைவரும் தமிழரே.

இல்லை என்றாலும்….

சீமான் மண்ணின் மைந்தன் அல்ல. அவர் ஒரு மலையாளி.

உங்கள் கருத்து முழுக்க முழுக்க சரியானதே! இனவாதத்தால்  பாதிக்கப்பட்டதாக மாய்மாலம் கொட்டி  மூக்கால் அழுது  அடுத்தவன் நாட்டில் புகலிடம்  பெற்று அங்கு சந்ததியை பெருக்கி வாழ்ந்துவரும் ஈழத்தமிழர்கள் எப்படி தமிழ் நாட்டில் இனவாதத்தை கக்குகிறார்கள் என்பதை என்னால் புரிந்து  கொள்ள முடியவில்லை.

சீமானின் ரோல்மொடல் பிரபாகரன் அல்ல. சிங்கள இனவாதிகள் தான் அவரது ரோல்மொடல்.  ஈழப்பிரச்சனையில் சீமான் கற்றுக்கொண்டது சிங்கள அரசியல்வாதிகள் எப்படி தமது அரசியல் இலாபத்திற்காக இனவாதத்தை கையில் எடுக்கிறார்களோ அதைப்போல தமிழ்நாட்டில் இல்லாத இனவாத நஞ்சை விதைத்து அரசியல் இலாபம் பெறலாம் என்று படாத பாடுபடுகிறார். 

டென்மார்க்கில் இருக்கும் தலைவர் பிரபாகரனின் அண்ணள் மகன்  கார்ததிக்கை இன்று    தே …. மகன் என்று பத்திரிகையாளரிடர்  திட்டிய காணொளி பார்ததேன். 

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, Justin said:

😂🤣திரி மாறி வந்து விட்டீர்களா? இந்தத் திரியில் தானே சீமானின் உருட்டைப் பற்றி வந்த கட்டுரை பற்றிப் பேசுக் கொண்டிருக்கிறோம்?

விடுதலைப் புலிகள் யாருடைய அதிகார பூர்வமான பத்திரிகை? சீமான் தமிழ்நாட்டுத் தமிழருக்குத் தான் காதில் பூ வைக்கிறார் என்றால் ஈழத்தவரான உங்களுக்கும் வைத்திருக்கிறாரா?

எல்லோரும் இந்தத்திரியின் தலைப்புபற்றியும் அதிலுள்ள இணைப்புகள் பற்றியும் கருத்தெழுதும்போது சீமானை இத்திரிக்குள் கொண்டுவந்தது கோஷானும் நீங்களுமே. இது சீமானின் உருட்டு கட்டுரையில்லை. சீமான் சொன்னதாகக்கூறும் ஒன்றுக்கு DMK அடிவருடியின் உருட்டு மட்டுமே.

எழுத்தாளரின் எந்த இணைப்பும் விடுதலைப்புலிகள் பத்திரிகையில் வந்ததில்லையே!

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, Eppothum Thamizhan said:

எல்லோரும் இந்தத்திரியின் தலைப்புபற்றியும் அதிலுள்ள இணைப்புகள் பற்றியும் கருத்தெழுதும்போது சீமானை இத்திரிக்குள் கொண்டுவந்தது கோஷானும் நீங்களுமே. இது சீமானின் உருட்டு கட்டுரையில்லை. சீமான் சொன்னதாகக்கூறும் ஒன்றுக்கு DMK அடிவருடியின் உருட்டு மட்டுமே.

எழுத்தாளரின் எந்த இணைப்பும் விடுதலைப்புலிகள் பத்திரிகையில் வந்ததில்லையே!

😅உங்களுடனான உரையாடல் எப்போதுமே நேர விரயம் தான்! 

சீமானின் உருட்டை தனது முதல் வரியில் கட்டுரையாளர் சுட்டிக் காட்டியதை வாசிக்காமல் நாம் சீமானை இழுத்து வந்தோம் என்கிறீர்கள்.

"கட்டுரையின் மேற்கோள் எதுவும் உத்தியோக பூர்வம் இல்லை" என்றீர்கள். இப்போது விடுதலைப் புலிகள் இதழில் வரவில்லை என்கிறீர்கள்.

கிருபன் 7 மணி நேரங்கள் முன்னரே இணைப்பைத் தந்ததையும் கவனிக்காமல்.

7 hours ago, கிருபன் said:

பல ஆவணங்கள் தமிழீழ ஆவணக்காப்பகம்  இணையத்தில் உள்ளன.

https://tamileelamarchive.com

விடுதலைப் புலிகள் பத்திரிகை இணைப்பு

https://tamileelamarchive.com/article_pdf/article_603a5d3c689251d2d3de9131b8e2f59d.pdf

எப்படித் தான்  ஏனையோர் தரும் ஆதாரங்கள், கருத்துக்களை வாசிக்காமல் கருத்தெழுதும் போது கூட ஒரு தெனாவட்டோடு எழுத முடிகிறது உங்களுக்கு😂?  

  • கருத்துக்கள உறவுகள்
50 minutes ago, island said:

டென்மார்க்கில் இருக்கும் தலைவர் பிரபாகரனின் அண்ணள் மகன்  கார்ததிக்கை இன்று    தே …. மகன் என்று பத்திரிகையாளரிடர்  திட்டிய காணொளி பார்ததேன். 

அவரவர் தங்களுக்கு தேவையானதை மட்டும் எடுக்கிறார்கள்.. இதில் படித்தவர் படிக்காதவர் எண்ட வித்தியாசம் இல்லை.. பிக்காளிப்பயல் என்று சீமான் சொன்னத தே.. மகன் என்று நீங்கள் சொல்வதுபோல்..

12 minutes ago, Justin said:

எப்படித் தான்  ஏனையோர் தரும் ஆதாரங்கள், கருத்துக்களை வாசிக்காமல் கருத்தெழுதும் போது கூட ஒரு தெனாவட்டோடு எழுத முடிகிறது உங்களுக்கு😂?  

👆 மேல சீமானை புடிக்காத பகிடி ஒரு தெனாவட்டோடு பிக்காளிப்பயல் என்று சொன்னத தேடிப்பால்காமலே திமுகா ஜடிவிங் மாத்தி டப்பிங் செய்த வீடியோவ கேட்டிட்டு தே.. மகன் என்று சொல்லியது போலத்தான்..

Edited by பாலபத்ர ஓணாண்டி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
3 hours ago, இசைக்கலைஞன் said:

2016 தேர்தல் காலகட்டம்.

“நாம் தமிழர் கட்சியையும் உங்கள் கருத்துக் கணிப்புகளில் சேருங்களேன்”
 - இது கோரிக்கை

“கருத்துக் கணிப்புகளில் சேர்ப்பதுக்கு நீங்க பெரிய ஆளா?” - இது திருமாவேலன்

இதுதான் காலச் சுழற்சி 😊

வணக்கம் இசைக்கலைஞன் 🙏 உங்களை மீண்டும் கண்டதில் மிக்க சந்தோசம் 👍 

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, இசைக்கலைஞன் said:

2016 தேர்தல் காலகட்டம்.

“நாம் தமிழர் கட்சியையும் உங்கள் கருத்துக் கணிப்புகளில் சேருங்களேன்”
 - இது கோரிக்கை

“கருத்துக் கணிப்புகளில் சேர்ப்பதுக்கு நீங்க பெரிய ஆளா?” - இது திருமாவேலன்

இதுதான் காலச் சுழற்சி 😊

நீண்ட‌ நாளுக்கு பிற‌க்கு க‌ண்ட‌து ம‌கிழ்ச்சி அண்ணா🙏👍..............

ஜ‌ ல‌வ் யு அண்ணா🙏🥰.........................

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, பாலபத்ர ஓணாண்டி said:

👆 மேல சீமானை புடிக்காத பகிடி ஒரு தெனாவட்டோடு பிக்காளிப்பயல் என்று சொன்னத தேடிப்பால்காமலே திமுகா ஜடிவிங் மாத்தி டப்பிங் செய்த வீடியோவ கேட்டிட்டு தே.. மகன் என்று சொல்லியது போலத்தான்..

ஒப்பீடு தவறு👎. மாற்றி டப்பிங் செய்த வீடியோவைக் கேட்டு ஒருவர் ஏமாறுவது வேறு. எ.தவின்  பிரச்சினை வேறு.

நான் அவதானித்த வரையில், அவர் திரியில் ஒரிஜினல் பதிவையும் வாசிப்பதில்லை, திரியின் "கருப்பொருள்" விளங்கிக் கொள்ளாமல் தடுமாறுவார். உதாரணமாகப் பாருங்கள்: கட்டுரையே சீமானின் கருத்துக்கு எதிர் வினையாக இருக்கிறது என்ற பொருள் விளங்காமல், நாம் தான் சீமானை இழுத்து வந்திருக்கிறோமென்று குற்றஞ் சாட்டுகிறார்.

இவ்வளவு விளக்கக் குறைவையும் வைத்துக் கொண்டு, எதிர் கருத்தாளரை, "நாய்" என்று மறைமுகமாக விளிக்கும் presence of mind வைத்திருப்பார்😂

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, goshan_che said:

தயவு செய்து இந்த பொய் பித்தலாட்டத்தை நிப்பாட்டுங்கோ.

சீமான் திராவிட அரசியலை புடுங்கி எறிவேன் என்கிறார்.

விஜை இரெண்டும் இரு கண்கள் எண்டால் நஞ்சும் மருந்தும் எப்படி ஒன்றாக முடியும் என்கிறார்.

நாங்கள் ஈழத்தமிழர் என சொல்லியபடி சீமானினை ஆதரிப்பதாக சொல்பவர்கள் இந்த நஞ்சை ஆதரிப்பவர்களே.

சீமானை ஆதரித்து கொண்டு எமக்கு திராவிட கட்சி/ கொள்கை ஆதரவுதளத்துடன் வாய்க்கால் தகறாறு இல்லை என்பது உச்ச பட்ச பைத்தியக்காரத்தனம்.

இந்த வகையில் இப்படி மாய்மாலம் போடாமல் சீமானை ஆதரிக்கும் பையன் போன்றோர் எவ்வளவோ திறம்.

யார் என்ன உருட்டினாலும் புலிகளின் திராவிட கொள்கை சார்ந்த நிலைப்பாடு இதுதான்👇

👆இதை மறுதலித்து - புலிகள்/ தமிழ் தேசியம் திராவிட கொள்கைக்கு எதிரி என சீமான் என்ற நச்சு பாம்பு கக்குவது விசம்.

அந்த விசத்தை கக்கும் பாம்புக்கு பால் ஊத்தும் நீங்களும் இந்த இனத்தின் வாழ்வில் நஞ்சை கலப்பவரே.

நான் சீமானை ஆதரிப்பதால் ஈழத்தமிழருக்கு ஒன்றும் ஆகப்போவதில்லை.. நான் இந்திய இணையங்களிலும் ரிக்டாக்கிலும் முகநூலிலும் சீமானுக்கு களமாடி மற்ற இந்தியக்கட்சிகளை எதிர்த்து அரசியல் பந்திகள் எழுதிக்கொண்டு திரியவில்லை..

எனக்கு திமுக அதிமுக நாம் தமிழர் உட்பட எந்த கட்சியும் ஈழத்தமிழர் நமக்கு எதையும் செய்யமுடியாது என்பதில் தெளிவு இருக்கு..

என்னுடைய ஆதரவு வெளியில் நின்று பார்க்கும் ஒருவனாக அங்கு இருக்கும் நிலம்சார் சமூக பொருளாதார பிரச்சினைகளில் சீமானின் ஸ்ராண்ட் சரியாக இருப்பதாக படுவதால் ஒரு உளப்பூர்வமான ஆதரவு.. அத்தோட எனக்கு பிடிச்ச தமிழ்தேசியத்தையும் பேசுவதால்..

இது என்னுடைய தனிப்பட்ட விருப்பம்.. என் தனிப்பட்ட அரசியல் சொய்ஸ்களுக்கும் என் இனத்துக்கும் சம்பந்தம் இல்லை..

சிலவேளை பையன் போன்றவர்கள் சீமானை ஆதரிப்பதற்கும் நான் சீமானை ஆதரிப்பதற்கும் வித்தியாசம் இருக்கலாம்.. பையன் NTK இற்கு களமாடியதாக எங்கோ எழுதிய ஞாபகம்..

என் எழுத்து யாழில் ஏதாவது சீமான் குறித்து பிழையான தகவல்கள் போலி செய்திகள் வந்தால் அது தவறு எனில் அதை எழுதுவதோடு சரி..

அதாலை நீங்கள் பொரிஞ்சு தள்ளி இருப்பதுபோல் இனம், பாய்சன், பாம்புக்கு மிக்சிங் எல்லாம் இல்லை சார்.. நான் அந்தளவுக்கு ஒர்த் இல்ல சார்..😂😂 ரெம்ப எமோசன் ஆகாதிங்க..😂

Edited by பாலபத்ர ஓணாண்டி

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, ஈழப்பிரியன் said:

அத்தோடு விடவில்லையே.சாதாரண படம் ஓடுவதாக இருந்தாலும் அவர்கள் பச்சைக்கொடி காட்டினால்த் தான் ஓடும்.

அண்மையில் நடிகர் சித்தார்த்தை எந்தவித காரணமும் இல்லாமல் இடைநடுவில் கூட்டத்தைக் குழப்பி விரட்டுகிறார்கள்.

ஏன் தமிழ்நாட்டிலேயே நாங்க தாண்டா தமிழ்நாட்டையே ஆழுகிறோம்.உன்னால் என்ன புடுங்க முடியுமோ அதைப் புடுங்கு என்கிறார்கள்.

சிங்கள தேசத்தில் தமிழர் நாம் எப்படி கூனிக்குறுகி இருந்தோமோ எப்படியே தமிழன் திராவிடம் என்ற போர்வைக்குள் ஒழிந்திருக்கிறான்.

அடுத்து டாக்ரர் அருச்சுனாவை விசரன் என்று நீங்களும் பலரும் சொல்லிவருகிறீர்கள்.எனக்கும் சிலவேளைகளில் அப்படித் தான் தோன்றும்.

ஆனால் மாபியாக்களின் கையில் இருந்த சாவகச்சேரி வைத்தியசாலையை உலகத்துக்கு அறியத்தந்தவர்.அத்துடன் இன்று அந்த அவலநிலை குறைந்துள்ளது என எண்ணுகிறேன்.

அந்த ஒரு செயலுக்காகவே அவரைப்  போற்றுகிறேன்.

எனக்கோ உங்களுக்கோ இங்கே சிலருக்கோ அந்த வைத்தியசாலையைப் பற்றி கவலை இல்லை.தென்மராட்சி மக்கள் இன்றும் அர்ச்சுனாவைக் கும்பிடுகிறார்கள்.

எல்லோரும் தமிழ்மக்களையே பைத்தியக்காரர் என்று சொல்வது வேதனையாக உள்ளது.

அதே போல 2009க்குப் பின் எல்லோரும் பின்வாங்கியிருக்க இன்றும் எமது தலைவரை உயிர்ப்புடன் வைத்திருப்பவர் சீமான் ஒருத்தன் தான்.

அதற்காக சீமான் மேல் இன்னும் ஒரு மரியாதை உள்ளது.

இன்று சீமானை ஏசுபவர்களில் சிலர் எமது தலைவனையும் இதே மாதிரியே கிண்டலடித்தார்கள்.

இந்தியாவின் எதுவித மாற்றமும் எமது மாற்றமல்ல.

எங்க‌டைய‌ல் யாரை விட்டு வைச்ச‌துக‌ள் எப்ப‌ பார்த்தாலும் யாரோ ஒருவ‌ரை வ‌சை பாடுவ‌தே வேலையா போச்சு

2004க்கு பிற‌க்கு இண்டைக்கு தான் த‌லைவ‌ரின் அண்ண‌ன் ம‌க‌ன் கார்த்திக் கூட‌ தொலைபேசியில் அர‌ ம‌ணித்தியால‌ம் க‌தைச்சேன்

அவ‌ர் சீமானுக்கு எதிராக‌ பேட்டி கொடுத்து இருக்கிறார் இர‌ண்டு பேரும் ம‌ரியாதையா ப‌ழைய‌ அண்போடு க‌தைச்சோம் 

நான் சீமான் செய்த‌ ந‌ல்லதுக‌ளை சொன்னேன்............த‌லைவ‌ரின் அண்ண‌ன் ம‌க‌ன் சீமான் ப‌ற்றிய‌ ஒரு சில‌ குறைக‌ளை சொல்லிட்டு இருந்தார்..............நான் சொன்னேன் எல்லாம் ஆண்ட‌வ‌னுக்கு தான் வெளிச்ச‌ம் அண்ணா என‌..............த‌ன‌து வ‌ட்சாப் குருப்பில் என்னை இணைத்தார் அதில் யாழ்க‌ள‌ அக்காவும் அந்த‌ குருப்பில்  இருக்கிறா..............

அப்ப‌டி ஒவ்வொருத‌ருக்கு ஒவ்வொரு சில‌ முர‌ன்க‌ள் இருக்கு கார்த்திக்கின் விவாத‌ம் அண்ண‌ன் சீமான் அருணா அன்ரி கூட‌ ந‌ல்ல‌ தொட‌ர்வில் இருக்கிறார் அவ‌ர்க‌ளுட‌ன் சேர்ந்து போலி துவார‌கா மேட்ட‌ருக்கு துனை போவ‌தாக‌ தான் அறிந்த‌தாக‌ சொன்னார்

அப்ப‌டியே அர‌சிய‌ல் க‌தைப்ப‌தை நிறுத்தி விட்டு

அவ‌ரின் வேலைக‌ள் ப‌ற்றி விசாரிச்சேன் தான் பிள்ளைக‌ளுக்கு ப‌டிப்பிக்கிறேன் த‌ம்பி என்றார்.................இவ‌ர் அந்த‌க் கால‌ம் தொட்டே என்ர‌ சொந்த‌ங்க‌ளுட‌ன் ந‌ல்ல‌ மாதிரி

துவார‌கா மேட்ட‌ரில் சீமான் வாய் திற‌க்க‌ வில்லை சீமானை தொட‌ர்வு கொண்ட‌வ‌ர்க‌ளும் இப்ப‌டி அறிக்கை விட‌ சொல்லியும் சீமான் விட‌ வில்லை அதை ம‌றுத்து விட்டார்

த‌லைவ‌ரின் ம‌க‌ன் ஒரு சில‌ விடைய‌ங்க‌ளில் சீமானை ச‌ரியாக‌ புரிந்து கொள்ள‌ வில்லை என‌ நினைக்கிறேன்.............ஒன்று இர‌ண்டு ச‌ம்ப‌வ‌ங்க‌ளை சொல்லி புரிய‌ வைச்சேன்🙏👍........................

  • கருத்துக்கள உறவுகள்
37 minutes ago, வீரப் பையன்26 said:

துவார‌கா மேட்ட‌ரில் சீமான் வாய் திற‌க்க‌ வில்லை சீமானை தொட‌ர்வு கொண்ட‌வ‌ர்க‌ளும் இப்ப‌டி அறிக்கை விட‌ சொல்லியும் சீமான் விட‌ வில்லை அதை ம‌றுத்து விட்டார்

துவாராக மேட்டர் மட்டுமில்ல ஈழத்தமிழர் தமக்குள் பிரச்சினைப்படும் எந்த விடயத்திலும் சீமான் தலையிடாமல் இருப்பதுதான் நல்லது அவரது அரசியலுக்கு.. அதைத்தான் அவர் செய்துவருகிறார் என்று நடக்கும் சம்பவங்களை பார்க்கும்போது தெரிகிறது..👍

இன்று கூட தலைவரின் அண்ணன் மகன் பேட்டி குறித்து கேட்டபோது தான் பதில் சொல்லாமல் உலகம் எங்கும் இருக்கும் ஈழத்தமிழர்கள் பதில் சொல்லுவார்கள் என்று சொன்னார்.. அதே போல் ஈழத்தமிழர்கள் வீடியோக்களில் தமது எதிர்க்கருத்துக்களை வைத்து வருகின்றனர்..

திமுகாவும் இதத்தான் செய்யும்.. முஸ்லீம்கள் குறித்து ஏதும் பிரச்சினை என்றால் திமுக தலைமை பதில் சொல்லாமல் தனது கட்சியில் இருக்கும் முஸ்லீம் தலைவரைக்கொண்டு பதில் சொல்லவைக்கும்.. அதே போல் கிறிஸ்த்தவர், தாழ்த்தப்பட்ட மக்கள் என்று எல்லாத்துக்கும்..

இந்தியாவில் அரசியல் அப்படித்தான் செய்யமுடியும்.. இல்லாட்டி விஜயகாந் ஆக்கி புதச்சுடுவாங்கள்.. சீமான் இந்த விடயத்தில் சுதாகரிச்சதுபோல் தெரியுது..

ஆனாலும் சீமான் ஆரம்பத்தில் கூறிய பலமிகைப்படுத்தல்கள் இன்று சீமான் கேட்டர்களுக்கு சீமான் பேசும் எல்லாவற்றையும் எடிற்பண்ண வசதியாகிவிட்டது..

ஆனால் விஜயகாந்துக்கு இல்லாத ஒண்டு சீமானுக்கு இருப்பதால் சீமான் தொடர்ந்து போராடக்கூடியதாக இருக்கு.. அதுதான் இணைய சப்போட்..

இண்டைக்கு கூட இணையம் இல்லாவிட்டால் சீமான் தலைவர் அண்ணண் மகனை தே.. மகன் என்று சொன்னதாக நம்பவைத்திருப்பார்கள் என்னையே.. இணையத்தின் உதவியால் ஒரிஜினல் கிடைச்சது.. எப்படி சீமானின் மிகைப்படுத்தல்களால் சீமானை புழுகுபவர் என்று பிரச்சாரம் திமுகாவால் பண்ணமுடியுதோ அதேபோல் திமுக செய்யும் பொய்களையும் இணையம் காட்டிகுடுப்பதால் நாம்தமிழராலும் திமுகாவை எதிர்த்து பிரச்சாரம் செய்து மக்களிடம் உண்மையை கொண்டு சேர்க்ககூடியதாக இருக்கு..கிடைத்ததோடு சந்தோசப்படாமல் அளவுக்கு மிஞ்சி ஆசைப்பட்டு இருந்ததும் இல்லாமல் போட்டுது எண்டு சொல்வதுபோல் சீமான் சொன்ன மிகைப்படுத்தல்களை மட்டும் பிரச்சாரம் செய்யாமல் சொல்வதை எல்லாத்தையும் வெட்டியும் ஒட்டியும் பொய் என்றும் சொல்ல வெளிக்கிட்டதில் அவை அம்பலப்பட்டபோது சீமானை ஆதரிக்கும் மக்கள் மிச்சம் எதையும் நம்பாமல் போய்விட்டார்கள்.. இதுக்குத்தான் அளவுக்கு மிஞ்சி ஆசைப்படக்குடா எண்டுறது..

உ+ம்

ஏகே 74 இல்லை எண்டது திமுக ஆனா இருந்தது

வெற்றிமாறன் படப்பாட்டு பொய் எண்டது பின் உண்மையானது

தலைவரை சந்திக்கவே இல்லை எண்டு பேந்து பத்து நிமிசம் எண்டது

படம் பொய் எண்டது 

இண்டைக்கு பிக்காளிப்பயல் எண்டு சொன்னதை வெட்டி தே.. மகன் எண்டு சொன்னது

இன்னும் நாலஞ்சு இருக்கு டக்கெண்டு நாபகம் வருதில்ல

Edited by பாலபத்ர ஓணாண்டி

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, goshan_che said:

வணக்கம் இசை.

2016 தேர்தல் காலகட்டம்.

நா த க ஒரு சீட்டை தன்னும் இந்த தேர்தலில் வெல்லாவிடில் நான் யாழுக்கு வரவேன்மாட்டேன் என்றார் ஒருவர்.

2024 இன்னும் ஒரு சீட்டை தன்னும் நாதக வெல்லவில்லை.

ஆனால் அவரும் இடைக்கிடை வந்துதான் போகிறார்.

இதுவும் காலச்சுழற்சியே 🤣.

பிகு

கண்டது சந்தோசம்.

அருமை. 

இதை சீமான் கையில் எடுத்தால் நாந்தான் அவரின் முதல் ஆதரவாளராக இருப்பேன்.

விஜை இந்த நிலைப்பாட்டைத்தான் எடுக்கிறார்.

ஏன் சீமானல் இது முடியவில்லை?

அவர் பிஜேபியால் பிஜேபி-எதிர் வாக்கை பிரிக்க அனுப்பபட்டவர்.

விஜையின் அரசியல் அவர் வெல்ல.

சீமானின் அரசியல் - பிஜேபி வெல்ல.

2016 ல் நல்ல தாக்கத்தை ஏற்படுத்துவார்கள் என எண்ணி ஏமாந்தவர்களுள் நானும் ஒரு நபர். அதைச் சொல்வதில் எந்தத் தயக்கமும் இல்லை.

அண்ணன் சீமான் ஈவெராவை வழிகாட்டி என சொன்னபோது எனக்கு உடன்பாடு இருந்ததில்லை. இன்று சரியான நிலைப்பாட்டுக்கு வந்துள்ளார். அரசியலில் எந்தத் துரும்பை எப்போது எடுப்பது என்பதைக் களமும் காலமும்தான் தீர்மானிக்கும்.

பாதை கடினமாக இருந்தாலும் இலக்கை அடைய முடியும் என மிகுந்த நம்பிக்கை உள்ளது.

மற்றும்படி, நாம் தமிழர் பெட்டியை வாங்கிக் கொண்டு கூட்டணிக்குப் போய்விடுவார்கள் என்ற அவதூறை வீசினார்கள். அது வடிகட்டிய பொய் என்பதை காலம் உணர்த்தியது. இப்போது பாஜகவின் B team என்கிறார்கள். நாம் தமிழர் தொடங்கிய காலத்தில் (2010) பாஐக ஒரு ஆளே இல்லை. தமிழகத்தில் காங்கிரஸ் மற்றும் திமுக மற்றும் அதிமுக தான்.

இந்த அவதூற்றையும் காலம் மாற்றி எழுதிவிடும்! அதை வெறும் வாயை மெல்லும் நபர்கள் தள்ளிப்போட வேண்டுமானால் செய்யலாம். 😅

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, பாலபத்ர ஓணாண்டி said:

துவாராக மேட்டர் மட்டுமில்ல ஈழத்தமிழர் தமக்குள் பிரச்சினைப்படும் எந்த விடயத்திலும் சீமான் தலையிடாமல் இருப்பதுதான் நல்லது அவரது அரசியலுக்கு.. அதைத்தான் அவர் செய்துவருகிறார் என்று நடக்கும் சம்பவங்களை பார்க்கும்போது தெரிகிறது..👍

இன்று கூட தலைவரின் அண்ணன் மகன் பேட்டி குறித்து கேட்டபோது தான் பதில் சொல்லாமல் உலகம் எங்கும் இருக்கும் ஈழத்தமிழர்கள் பதில் சொல்லுவார்கள் என்று சொன்னார்.. அதே போல் ஈழத்தமிழர்கள் வீடியோக்களில் தமது எதிர்க்கர்த்துக்களை வைத்து வருகின்றனர்..

திமுகாவும் இதத்தான் செய்யும்.. முஸ்லீம்கள் குறித்து ஏதும் பிரச்சினை என்றால் திமுக தலைமை பதில் சொல்லாமல் தனது கட்சியில் இருக்கும் முஸ்லீம் தலைவரைக்கொண்டு பதில் சொல்லவ்சிக்கும்.. அதே போல் கிறிஸ்த்தவர், தாழ்த்தப்பட்ட மக்கள் என்று எல்லாத்துக்கும்..

இந்தியாவில் அரசியல் அப்படித்தான் செய்யமுடியும்.. இல்லாட்டி விஜயகாந் ஆக்கி புதச்சுடுவாங்கள்.. சீமான் இந்த விடயத்தில் சுதாகரிச்சதுபோல் தெரியுது..

ஆனாலும் சீமான் ஆரம்பத்தில் கூறிய பலமிகைப்படுத்தல்கள் இன்று சீமான் கேட்டர்களுக்கு சீமான் பேசும் எல்லாவற்றையும் எடிற்பண்ண வசதியாகிவிட்டது..

ஆனால் விஜயகாந்துக்கு இல்லாத ஒண்டு சீமானுக்கு இருப்பதால் சீமான் தொடர்ந்து போராடக்கூடியதாக இருக்கு.. அதுதான் இணைய சப்போட்..

இண்டைக்கு கூட இணையம் இல்லாவிட்டால் சீமான் தலைவர் அண்ணண் மகனை தே.. மகன் என்று சொன்னதாக நம்பவைத்திருப்பார்கள் என்னையே.. இணையத்தின் உதவியால் ஒரிஜினல் கிடைச்சது.. எப்படி சீமானின் மிகைப்படுத்தல்களால் சீமானை புழுகுபவர் என்று பிரச்சாரம் திமுகாவால் பண்ணமுடியுதோ அதேபோல் திமுக செய்யும் பொய்களையும் இணையம் காட்டிகுடுப்பதால் நாம்தமிழராலும் திமுகாவை எதிர்த்து பிரச்சாரம் செய்து மக்களிடம் உண்மையை கொண்டு சேர்க்ககூடியதாக இருக்கு..கிடைத்ததோடு சந்தோசப்படாமல் அளவுக்கு மிஞ்சி ஆசைப்பட்டு இருந்ததும் இல்லாமல் போட்டுது எண்டு சொல்வதுபோல் சீமான் சொன்ன மிகைப்படுத்தல்களை மட்டும் பிரச்சாரம் செய்யாமல் சொல்வதை எல்லாத்தையும் வெட்டியும் ஒட்டியும் பொய் எம்றும் சொல்ல வெளிக்கிட்டதில் அவை அம்பலப்பட்டபோது சீமானை ஆதரிக்கும் மக்கள் மிச்சம் எதையும் நம்பாமல் போய்விட்டார்கள்..

உ+ம்

ஏகே 74 இல்லை எண்டது திமுக ஆனா இருந்தது

வெற்றிமாறன் படப்பாட்டு பொய் எண்டது பின் உண்மையானது

தலைவரை சந்திக்கவே இல்லை எண்டு பேந்து பத்து நிமிசம் எண்டது

படம் பொய் எண்டது 

இன்னும் நாலஞ்சு இருக்கு டக்கெண்டு நாபகம் வருதில்ல

திமுக்கா எத‌ற்காக‌ 200ரூபாய் கொடுத்து இணைய‌கைகூலிக‌ளை வைச்சு ஒருக்கு

த‌லைவ‌ர் ம‌க‌ன் விடைய‌த்தில் சீமான் சொல்லாத‌தை சொன்ன‌து என்று போலி காணொளி த‌யாரிச்சின‌ம் 

க‌ட்சி பெடிய‌ங்க‌ள் உண்மை எது பொய் எது என‌ உட‌ன‌ நிருபித்து காட்டி விட்டின‌ம் ஏன் இந்த‌ மான‌ம் கெட்ட‌ பிழைப்பு திமுக்காவுக்கு................

உண்மை தான் ஓணாண்டி துவார‌கா மேட்ட‌ரில் சீமான் மூக்கை நுழைக்க‌ வில்லை

ஆனால் த‌லைவ‌ரின் அண்ண‌ன் ம‌க‌னின் குற்ற‌ச்சாட்டு சீமானும் உட‌ந்தையாக‌ இருப்ப‌தாக‌

த‌லைவ‌ரின் ம‌க‌ன் என‌து அக்கா குடும்ப‌த்தோட‌ ந‌ல்ல‌ மாதிரி சின்ன‌னில் என்னோடும் ந‌ல்ல‌ மாதிரி அவ‌ர் கூட‌ முர‌ன் ப‌ட‌ நான் விரும்ப‌ வில்லை....................த‌லைவ‌ர் ம‌க‌ன் வைக்கும் ஒரு சில‌ குற்ற‌ சாட்டை ம‌றுக்க‌ முடியாது ஓணாண்டி ஆனால் கால‌ப் போக்கில் சீமான் திருந்துவார் என‌ ந‌ம்புவோம்🙏👍...............................

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.