Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த இரங்கல்கள்!

  • Replies 70
  • Views 3.2k
  • Created
  • Last Reply

Most Popular Posts

  • goshan_che
    goshan_che

    சம்பந்தருக்கு சற்றும் சளைக்காத கள்ளந்தான் மாவை. தன் மகனுக்கு சீட் கேட்டு கட்சியை சீரழிச்சதும், மாவிட்டபுரத்தில் மாட மாளிகை கட்டியதும், மட்டும் அல்லாது சாகும் வயசிலும் பதவி ஆசையில் நொடிக்கு ஒரு கத

  • கிருபன்
    கிருபன்

    எல்லோருக்கும் தலைவராக வர விருப்பம் இருக்கும். அரசியலில் தலைவராக வருவது இலகுவானதல்ல. ஜனவசியம் இருக்கவும் வேண்டும். முடிவுகளை உறுதியாககவும், சரியாகவும்,  வேகமாகவும் எடுக்கவும் வேண்டும். அதிகாரத்தைப் பாவ

  • பெருமாள்
    பெருமாள்

    சம்பந்தர் மற்றவர்கள் போல் நெருக்கடியான கால கட்டத்தில் இறக்கவில்லை . அதை முதலில் புரிந்து கொள்ளுங்க இயல்பான நாளில் இறந்த ஒரு அரசியல் தலைவரை மக்களே இல்லாமல் அநாதை பிணம் போல் தகனம் செய்தார்கள் அதுதா

  • கருத்துக்கள உறவுகள்

மாவை சேனாதிராஜாவின் பூதவுடலுக்கு ஜீவன் இறுதி அஞ்சலி!

இறைபதமடைந்த இலங்கை தமிழரசுக் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜாவின் பூதவுடலுக்கு இ.தொ.கா பொதுச் செயலாளரும், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமான் இறுதி அஞ்சலி செலுத்தியுள்ளார்.

காங்கேசந்துறையில் அமைந்துள்ள அவரது இல்லத்திற்கு இன்று முற்பகல் சென்று மாவை சேனாதிராஜாவின் பூதவுடலுக்கு மலர் மாலை அணிவித்து இறுதி அஞ்சலி செலுத்திய ஜீவன் தொண்டமான், அவரது குடும்பத்தினருக்கும் உறவினர்களுக்கும் அனுதாபங்களையும் தெரிவித்துக்கொண்டார்.

https://athavannews.com/2025/1419326

  • கருத்துக்கள உறவுகள்

மாவையின் பூதவுடலுக்கு பல  அரசியல் தலைவர்கள்  வந்து வணக்கம் செலுதத்தியிருக்கிறார்கள். சம்பந்தரைப்போல் அநாதைப் பிணமாகப் போகவில்லை. அனைவரையும் அரவணைத்துச் செல்லும் பக்குவம் மாவையிடம் இருந்தது. இதனால்; தலைவர் அதிகாரத்தை இறுக்கமாகக் கடைப்பிடிக்கவில்லை. இதனால் துரோகிகள் உள்ளே வந்து கடைசியில் மாவைையரை ஓரங்கட்டி வைத்து விட்டார்கள். அவர்காலமானதினத்துக்கு முதல்நாள். சிவஞானம்>சத்தியலிங்கம் ஆகியோர் அவரைப்பதவி விலகச்சொன்னதாகவும் கட்சியில் உள்ள பல உறுப்பினர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அழுத்தம் கொடுத்ததாகவும். மாவை அதற்கு உடன்;படாமல் கடும் மன அழுத்தத்துடன் அதற்கு எதிராக சட்டநடவடிக்கை எடுப்பதற்கு இருந்ததாகவும் தகவல்கள் சொல்கின்றன. எது எப்படியோ சம்பந்தரைப் போல் அநாதைப் பிணமாகப் போகவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, புலவர் said:

சம்பந்தரின் ஆவி.... 
மாவையரின் செத்த வீட்டுக்கு வந்த பிரபலங்களையும், 
மக்களையும் பார்த்து பொறாமை பட்டிருக்கும்.

அதுகும்  சம்பந்தரின் பூதவுடல் தந்தை செல்வா கலையரங்கில் வைக்கப் பட்டிருந்த போது 50 பேருக்கும் குறைவானவர்களே வந்திருந்தார்கள். இரவில்... அந்தப் பிணத்தின் அருகே 5 பேர் கூட நிற்கவில்லையாம்.

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of 5 people and temple

மாவையரின் பூதவுடலுக்கு அஞ்சலி செலுத்திய நாமல் ராஜபக்ச.

  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, புலவர் said:

எனக்குத் தெரிந்த ஒரு குடும்பத்தில் ஒருவர் இருந்தார். அந்த வீட்டில் ஒவ்வொரு கல்யாண வீடு, செத்த வீடு, சாமத்திய வீடு நடக்கும் போதெல்லாம், தன் முன்பகையைத் தீர்த்துக் கொள்ளும் வகையில் நடந்து கொள்வார். அவரின் முதுகுக்குப் பின்னால் அவரை "கேன்சர்" என்று நகைச்சுவையாக அழைப்போம்.

அதே போல இருக்கிறார்கள் யாழ் களத்திலும், முகநூலிலும் எழுதும் உங்களைப் போன்ற தீவிர தேசியர்கள். மரண வீட்டில் கூட தமக்குப் பிடிக்காதவன் மீதான பகை தான் முன்னுக்கு நிற்கிறதேயொழிய ஒரு மரியாதை நிமிர்த்தம் பேண வேண்டிய மௌனம் இல்லை!

இதே "கார தேசிக்காய்" குழு, அமரர் மாவை உயிருடன் இருக்கும் போது அவர் பற்றிய படங்களை இணைத்து அவரை ஊழல் அரசியல்வாதியாகக் காட்டிக் கொண்டிருந்ததை அவர்களே மறந்து விட்டார்கள்😂!  

  • கருத்துக்கள உறவுகள்

இது சுமத்திரனின் கையாள் சமத்திரன் சார்பில் இலங்கைத் தமிழரசுக்கட்சியின் தலைவர் தெரிவு தொடர்பாக வழக்குப் போட்டவரின்பதிவு.மாவையின் இறுதிச்சடங்குக்கு வரக்கூடாது என்று மாவையின் இறுதிச்சடங்கில் கட்டப்பட்ட பதாகையில் இவர் பெயரும் இடம் பெற்றிருந்தது. சபை நாகாரீகத்தை சுமத்தின் தரப்புக்கு டபோதியுங்கள். மாவை சுமத்திரனின் ஆட்டத்திற்கு கடிவாளம் போடத காரணத்தாலேயே விமர்சிக்கப்பட்டார். கால் கடந்தே மாவை அதை உணர்ந்து கொண்டார்.May be an image of 6 people and text that says "… Antony Jeyanathan Peter Ilancheliyan is with இலங்கைத் தமிழரசுக் கட்சி கரைதுறைப்பற்று and அ. .ஜெ. பீற்றர் இளஞ்செழியன். 1h "பெருந்தலைவர்" மாவை சேனாதிராஜா தீயுடன் சங்கமம் அகினார் இலங்கைக் தமிழ் அரசுக் கட்சி இனி மிளிரும்..!"

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, புலவர் said:

முகநூலில் நான் இருந்தால் இதைப் போதித்திருப்பேன், ஆனால் நீங்கள் தானே இந்தக் குப்பைகளையும், உங்கள் சார்புக் கருத்துடையோரின் குப்பைகளோடு சேர்ந்து  காவி வந்து இங்கே நிற்கிறீர்கள்? எனவே உங்களிடம் சுட்டிக் காட்டியிருக்கிறேன். 

  • கருத்துக்கள உறவுகள்

 மாவைசேனாதிராஜாவின் வீட்டிற்கு பிரபல அரசியல்வாதிகள் வருகை

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, Justin said:

எனக்குத் தெரிந்த ஒரு குடும்பத்தில் ஒருவர் இருந்தார். அந்த வீட்டில் ஒவ்வொரு கல்யாண வீடு, செத்த வீடு, சாமத்திய வீடு நடக்கும் போதெல்லாம், தன் முன்பகையைத் தீர்த்துக் கொள்ளும் வகையில் நடந்து கொள்வார். அவரின் முதுகுக்குப் பின்னால் அவரை "கேன்சர்" என்று நகைச்சுவையாக அழைப்போம்.

அதே போல இருக்கிறார்கள் யாழ் களத்திலும், முகநூலிலும் எழுதும் உங்களைப் போன்ற தீவிர தேசியர்கள். மரண வீட்டில் கூட தமக்குப் பிடிக்காதவன் மீதான பகை தான் முன்னுக்கு நிற்கிறதேயொழிய ஒரு மரியாதை நிமிர்த்தம் பேண வேண்டிய மௌனம் இல்லை!

இதே "கார தேசிக்காய்" குழு, அமரர் மாவை உயிருடன் இருக்கும் போது அவர் பற்றிய படங்களை இணைத்து அவரை ஊழல் அரசியல்வாதியாகக் காட்டிக் கொண்டிருந்ததை அவர்களே மறந்து விட்டார்கள்😂!  

வடகிழக்கு தமிழர் களுக்காக 7 வருடத்துக்கு மேல் சிறையில்  இருந்த ஒரு தமிழ் அரசியல்வாதியை உங்களால் சுட்டி காட்ட முடியுமா ?

அனாதை பிணமாக சம்மந்தர் போனது போலத்தான் சுமத்திரன் இறந்தாலும் என்ன கொஞ்ச சிங்கள இனவெறியர்கள் சுமத்திரன் பிணத்துக்கு காவல் காப்பார்கள் அவ்வளவுதான் 😀

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
5 hours ago, தமிழ் சிறி said:

சம்பந்தரின் ஆவி.... 
மாவையரின் செத்த வீட்டுக்கு வந்த பிரபலங்களையும், 
மக்களையும் பார்த்து பொறாமை பட்டிருக்கும்.

அதுகும்  சம்பந்தரின் பூதவுடல் தந்தை செல்வா கலையரங்கில் வைக்கப் பட்டிருந்த போது 50 பேருக்கும் குறைவானவர்களே வந்திருந்தார்கள். இரவில்... அந்தப் பிணத்தின் அருகே 5 பேர் கூட நிற்கவில்லையாம்.

நான் மாவையை பல தடவைகள் திட்டியிருக்கின்றேன்.அது அவர் விட்ட தவறுகளுக்காக மட்டுமே. ஆனால் சம்பந்தன் தமிழர் சம்பந்தமாக தட்டிக்கழித்த செயல்கள் அளவில் அடங்காதது.
அதற்கு அவர் மரணச்சடங்கு நிகழ்வுகளே நல்ல உதாரணம்.

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, தமிழ் சிறி said:

May be an image of 5 people and temple

மாவையரின் பூதவுடலுக்கு அஞ்சலி செலுத்திய நாமல் ராஜபக்ச.

கூடவே நிற்பது பார் ஆளு மன்ற உறுப்பினர் சிறியா?

யோக்கியனுக்கு நாமலோட என்ன வேலை?

  • கருத்துக்கள உறவுகள்

சம்பந்தருக்கு சற்றும் சளைக்காத கள்ளந்தான் மாவை.

தன் மகனுக்கு சீட் கேட்டு கட்சியை சீரழிச்சதும், மாவிட்டபுரத்தில் மாட மாளிகை கட்டியதும், மட்டும் அல்லாது சாகும் வயசிலும் பதவி ஆசையில் நொடிக்கு ஒரு கதை, நொடிக்கு ஒரு பக்கம் தாவி, தமிழரசு கட்சியை நாசம் பண்ணியதில் மாவையின் பங்கு மிக பெரியது.

மாவை இந்தியாவில் பல சொத்துக்களை உடையவர் அதனால் இந்தியா கிழித்த கோட்டை தாண்டதவர் என்பதும் உண்மையே.

இங்கே சுமந்திரனை (பார் சிறி சார்பாக) தாக்குவதற்காக பார் சிறி அடிபொடிகள் மாவையை ஏதோ மாமனிதர் ரேஞ்சுக்கு உயத்தினம்🤣.

இதே ஆட்கள் இதே யாழில் மாவையை பற்றி எழுதினதை தூக்கி போட்டால் - ஊர் சிரிக்கும்.

பிகு

அடிப்படை மாண்பு கருதி மாவையின் சாவு வீட்டின் பின்பே அவர் பற்றிய விமர்சனம் எழுதப்படுகிறது.

சம்பந்தன் சாவு பற்றிய திரியிலேயே வந்து கிரியை செய்த சவகிரிகை குருக்கள்கள்மார் எவரும் எனக்கு அட்வைஸ் பண்ண நினைக்க வேண்டாம் 🙏

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, பெருமாள் said:

வடகிழக்கு தமிழர் களுக்காக 7 வருடத்துக்கு மேல் சிறையில்  இருந்த ஒரு தமிழ் அரசியல்வாதியை உங்களால் சுட்டி காட்ட முடியுமா ?

அனாதை பிணமாக சம்மந்தர் போனது போலத்தான் சுமத்திரன் இறந்தாலும் என்ன கொஞ்ச சிங்கள இனவெறியர்கள் சுமத்திரன் பிணத்துக்கு காவல் காப்பார்கள் அவ்வளவுதான் 😀

பாரதியார் மரணமடைந்த பொழுது சாவு வீட்டில் இருந்தவர்கள் எத்தனை?

பிரபாகரன் இறந்த பொழுது அவரின் மரண நிகழ்வு எப்படி நிகழ்ந்தது?

மரண வீட்டுக்கு எத்தனை பேர் வந்தார்கள் என்றெல்லாம் கணக்கு எழுதி வரலாறு ஆட்களை ஞாபகம் வைப்பதில்லை 

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, பகிடி said:

பாரதியார் மரணமடைந்த பொழுது சாவு வீட்டில் இருந்தவர்கள் எத்தனை?

பிரபாகரன் இறந்த பொழுது அவரின் மரண நிகழ்வு எப்படி நிகழ்ந்தது?

மரண வீட்டுக்கு எத்தனை பேர் வந்தார்கள் என்றெல்லாம் கணக்கு எழுதி வரலாறு ஆட்களை ஞாபகம் வைப்பதில்லை 

சம்பந்தர் மற்றவர்கள் போல் நெருக்கடியான கால கட்டத்தில் இறக்கவில்லை .

அதை முதலில் புரிந்து கொள்ளுங்க இயல்பான நாளில் இறந்த ஒரு அரசியல் தலைவரை மக்களே இல்லாமல் அநாதை பிணம் போல் தகனம் செய்தார்கள் அதுதான் அவருக்கு கொடுக்கப்பட்ட தமிழ் மக்களின் இறுதி மரியாதையும் பழி வாங்கலும் .

ஆனால் அதே கட்சி தான் மாவையருக்கு  தமிழ் மக்கள் கொடுத்த இறுதி  மரியாதை  பார்த்தீர்கள் தானே ?

ஒரு மனிதன் எப்படி வாழ்ந்தான் என்றதை அவனின் இழவு வீடு சொல்லிவிடும் .

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, குமாரசாமி said:

நான் மாவையை பல தடவைகள் திட்டியிருக்கின்றேன்.அது அவர் விட்ட தவறுகளுக்காக மட்டுமே. ஆனால் சம்பந்தன் தமிழர் சம்பந்தமாக தட்டிக்கழித்த செயல்கள் அளவில் அடங்காதது.
அதற்கு அவர் மரணச்சடங்கு நிகழ்வுகளே நல்ல உதாரணம்.

சரியாக சொன்னீர்கள் குமாரசாமி அண்ணை. 👍🏽
தலையை மண்ணில் புதைக்கும்… தீக்கோழிகளுக்கு இது புரியாது. 🤣

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, குமாரசாமி said:

நான் மாவையை பல தடவைகள் திட்டியிருக்கின்றேன்.அது அவர் விட்ட தவறுகளுக்காக மட்டுமே. ஆனால் சம்பந்தன் தமிழர் சம்பந்தமாக தட்டிக்கழித்த செயல்கள் அளவில் அடங்காதது.
அதற்கு அவர் மரணச்சடங்கு நிகழ்வுகளே நல்ல உதாரணம்.

நானும் மாவையை விமர்சித்திருக்கிறேன்.அது சம்பந்தர்>சுமத்திரனின் ஆட்டத்திற்கு தலையாட்டிய காரணத்தால் மட்டுமே. மேலும் மாவை எல்லோரையும் அனுசரித்துப் போகக் கூடிய தலைவராக இருந்தார். 70 களில் தமிழர் விடுதலை சம்பந்தமாக பல பேராட்டங்களில் கலந்து கொண்டவர். இன்றைய அரசியல் தலைவர்களில் அதிக காலம் சிறையில் இருந்தவர் அவர் மட்டுமே. விடுதலைப் போராட்டத்தின் ஒவ்வொரு காலகட்டத்திலும் அவருடைய பங்களிப்பு இருந்தது.சம்பந்தரைப்போல் எடுத்த எடுப்பிலேயே எம்பியாகவில்லை. அல்லது சுமத்திரன் போல் பேராட்டம் முடிவுக்குப் வந்தபின்னர்  பின்கதவால் அரசியலுக்குள் நுழைந்தவருமல்ல. தமிழர் விடுதலைக்கூட்டணியின் உருவாக்கத்தின் பின் செயலற்ற நிலையில் இருந்த தமிழருச்கட்சியின் பதிவைத் தொடந்து பேணிவந்தவர் அதனால்தான் சமபந்தர் உதயசூரியன் சின்னத்தை முடக்கிய பொழுது புதிய சின்னத்திற்கு கால அவகாசம் கிடைக்காத நிலையில் தமிழரசுக்கட்சியை தூசுதட்டி எடுத்து தமித்தேசியக் கூட்டமைப்பின் சின்னமாகப் பயன்படுத்தினார்கள்.அப்படித் தமிழரசுக்கட்சியை கட்சியை கட்டிக்காத்த மாவையை தூக்கி எறிந்து விட்டு கட்சியைும் வழக்கில் மாட்டிவிட்ட சுமத்திரனின் துரோகத்தை தமிழர்கள் இலகுவில் மறக்க மாட்டார்கள். தமிழ்மக்கள் அமைதியாக எல்லாவற்றையும்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் யார்யாரை எந்த இடத்தில் வைக்க வேண்டும் என்பதை அவர்கள் செயலில் காட்டுவார்கள். சம்பந்தர் மாவை இருவரினதும் இறுதிச்சடங்கை அவதானித்தாலே எல்லாம் புரியும். 

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, goshan_che said:

அடிப்படை மாண்பு கருதி மாவையின் சாவு வீட்டின் பின்பே அவர் பற்றிய விமர்சனம் எழுதப்படுகிறது.

சம்பந்தன் சாவு பற்றிய திரியிலேயே வந்து கிரியை செய்த சவகிரிகை குருக்கள்கள்மார் எவரும் எனக்கு அட்வைஸ் பண்ண நினைக்க வேண்டாம் 🙏

சம்பந்தர் அய்யா இறப்பு திரியில்  சவகிரிகைகள் செய்த இந்த குருக்கள்கள் இறப்பில் எத்தனை பேர் கலந்து கொள்ள வேண்டும் சிறிலங்கா ஜனாதிபதி மந்திரி கலந்து கொள்ள வேண்டும் என்று நிபந்தனைகள் வைத்திருக்கின்றனர்.

  • கருத்துக்கள உறவுகள்

சம்பந்தருக்கு அவரின் ஊரில் தக்க மரியாதை கிடைத்தது.

மாவைக்கு அவரின் ஊரில் தக்க மரியாதை கிடைத்தது.

ஒருக்கால் மாவையின் சடலத்தை கிழக்கில் வச்சு பார்த்திருந்தால் நிலமை தெரியும்.

தமது வசதிக்கு ஏற்ப்ப செத்த வீட்டு கணக்கை காட்டி மொட்டந்தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு போடுகிறார்கள் சிலர்.

பிகு

1. 1994 தேர்தல் என நினைக்கிறேன் (88 ஆகவும் இருக்கலாம்) வடக்கில் எலக்சன் கேட்டால் புலிகள் சுடுவார்கள் என கூறி, அம்பாறையில் கேட்டு தமிழ் பிரதிநிதிதுவத்தை கெடுத்த சுயநலமிதான் மாவை

2. மாவை சிறை இருந்ததால் புனிதர் என்றால் - சிறை உடைத்து மாவையை மீட்ட டக்கிளஸ்?

3. அதே போல் சிறை இருந்த நிர்மலா நித்தியானந்தா?

4. ஊரில் ஒன்று சொல்லுவார்கள். முகத்துக்கு அஞ்சி விலைமாது ஆகக்கூடாது என. அப்படி எல்லாருக்கும் நல்ல பிள்ளையாக இருக்கும் நசியல் அரசியல் மாவையுடையது. இப்படி நசிந்தது தன் சுயநலத்துக்காக.  இன நலனுக்காக அல்ல.

33 minutes ago, விளங்க நினைப்பவன் said:

சம்பந்தர் அய்யா இறப்பு திரியில்  சவகிரிகைகள் செய்த இந்த குருக்கள்கள் இறப்பில் எத்தனை பேர் கலந்து கொள்ள வேண்டும் சிறிலங்கா ஜனாதிபதி மந்திரி கலந்து கொள்ள வேண்டும் என்று நிபந்தனைகள் வைத்திருக்கின்றனர்.

  • கருத்துக்கள உறவுகள்

 @goshan_che  தெரிந்திராத  பல தகவல்கள்களுக்கு நன்றி👍

7 minutes ago, goshan_che said:

மாவை சிறை இருந்ததால் புனிதர் என்றால் - சிறை உடைத்து மாவையை மீட்ட டக்கிளஸ்?

👌

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, புலவர் said:

நானும் மாவையை விமர்சித்திருக்கிறேன்.அது சம்பந்தர்>சுமத்திரனின் ஆட்டத்திற்கு தலையாட்டிய காரணத்தால் மட்டுமே. மேலும் மாவை எல்லோரையும் அனுசரித்துப் போகக் கூடிய தலைவராக இருந்தார். 70 களில் தமிழர் விடுதலை சம்பந்தமாக பல பேராட்டங்களில் கலந்து கொண்டவர். இன்றைய அரசியல் தலைவர்களில் அதிக காலம் சிறையில் இருந்தவர் அவர் மட்டுமே. விடுதலைப் போராட்டத்தின் ஒவ்வொரு காலகட்டத்திலும் அவருடைய பங்களிப்பு இருந்தது.சம்பந்தரைப்போல் எடுத்த எடுப்பிலேயே எம்பியாகவில்லை. அல்லது சுமத்திரன் போல் பேராட்டம் முடிவுக்குப் வந்தபின்னர்  பின்கதவால் அரசியலுக்குள் நுழைந்தவருமல்ல. தமிழர் விடுதலைக்கூட்டணியின் உருவாக்கத்தின் பின் செயலற்ற நிலையில் இருந்த தமிழருச்கட்சியின் பதிவைத் தொடந்து பேணிவந்தவர் அதனால்தான் சமபந்தர் உதயசூரியன் சின்னத்தை முடக்கிய பொழுது புதிய சின்னத்திற்கு கால அவகாசம் கிடைக்காத நிலையில் தமிழரசுக்கட்சியை தூசுதட்டி எடுத்து தமித்தேசியக் கூட்டமைப்பின் சின்னமாகப் பயன்படுத்தினார்கள்.அப்படித் தமிழரசுக்கட்சியை கட்சியை கட்டிக்காத்த மாவையை தூக்கி எறிந்து விட்டு கட்சியைும் வழக்கில் மாட்டிவிட்ட சுமத்திரனின் துரோகத்தை தமிழர்கள் இலகுவில் மறக்க மாட்டார்கள். தமிழ்மக்கள் அமைதியாக எல்லாவற்றையும்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் யார்யாரை எந்த இடத்தில் வைக்க வேண்டும் என்பதை அவர்கள் செயலில் காட்டுவார்கள். சம்பந்தர் மாவை இருவரினதும் இறுதிச்சடங்கை அவதானித்தாலே எல்லாம் புரியும். 

மாவை சேனாதிராசா,காசி ஆனந்தன்,வண்ணை ஆனந்தன் போன்றோர் ஈழ விடுதலைக்கான அதிரடி பேச்சாளர்களாக இருந்தார்கள். அது மட்டுமல்ல சிறிமாவின் சிங்கள அஜாரக அரசால் சிறை வைக்கப்பட்டு  சித்திரவதைகளுக்கு உட்படுத்தப்பட்டவர்கள்.இவர்கள் உண்ணாவிரதம் இருந்த போது கூட சைக்கிள் ரியூப்பை தொண்டைக்குள் செலுத்தி பால் ஊற்றி சித்திரவதைக்கு உள்ளானவர்கள்.

மாவை சேனாதிராசா பல தடவைகள் அரசியல் பேச்சுக்களுக்காக சிறைவாசம் செய்தவர்.பௌத்த சாசன அரசியலுடன் தமிழ்மக்கள் சேர்ந்து வாழமுடியாது என பல ஆதாரங்களை சமர்ப்பித்தவர் மாவை சேனாதிராசா.70,73 களில் ஈழத்தமிழர்களுக்கு விடுதலை உணர்வை ஊட்டியதில் மாவையின் பங்கு அளப்பெரியது.

அவரின் இறுதிகால அரசியல் போக்கு  கசப்பை தந்தாலும் அவர் முன்னாடி நின்ற பலம் வாய்ந்த தலைவர்களின் அரசியல் போக்குகளையும் நாம் கவனிக்க வேண்டும்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.