Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

984034865.jpg

யாழ்ப்பாணம் 9 மணி நேரம் முன்

தமிழில் பட்டப்படிப்பின் டிப்ளோமா கற்றுத் தேர்ந்த பௌத்த துறவி!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் தமிழில் பட்டப்படிப்பின் டிப்ளோமாவைப் பயின்று பௌத்த துறவி ஒருவர் பட்டம் பெற்றுள்ளார்.

யாழ். பல்கலைக்கழகத்தில் 21 ஆம் திகதி வெள்ளிக்கிழமை இடம்பெற்ற  பட்டமளிப்பு விழாவின் மூன்றாம் நாள், முதலாவது அமர்வின் போது சன்னாஸ்கம இந்திரானந்த தேரர் என்ற பெயருடைய பௌத்த துறவியே, உயர்பட்டப்படிப்புகள் பீடத்தினால் நடாத்தப்பட்ட தமிழில் பட்டப்பின் தகைமைக் கற்கை நெறியைப் பூர்த்தி செய்து, பட்டம் பெற்றுள்ளார்.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் சி.சிறிசற்குணராஜாவினால் சம்பிரதாய பூர்வமாக இவரது பட்டம் கையளிக்கப்பட்டது.  

தமிழில் பட்டப்படிப்பின் டிப்ளோமா கற்றுத் தேர்ந்த பௌத்த துறவி!

  • கருத்துக்கள உறவுகள்

துறவிக்கு வாழ்த்து சொல்லுவோம் ...

சிங்கள துறவி தமிழ் படித்து பட்டம் பெற்று விட்டார் ஏன் தமிழர்கள் சிங்களம் படித்து சிங்களவராக கூடாது என இனி கருத்து வரும்..

துறவி அடுத்த மாகாணசபை தேர்தலில் ஜெ.வி.பி கட்சி சார்பில் தமிழில் பிரச்சாரம் செய்வார்,தமிழ் தேச பந்துக்கள் காலில் விழுந்து ஆசீர்வாதம் பெற்று உருண்டு விளையாடி வாக்கு கேட்பினம் ...

  • கருத்துக்கள உறவுகள்

அண்மையில் ஒரு பௌத்த பிக்கு தமிழில் ஒரு பேட்டியளித்திருந்தார். அதாவது திஸ்ஸ மகா விகாரை பிரச்சனைக்கு தன்னால் தீர்வு காண முடியுமென்றும், வடக்குமக்கள்பௌத்தத்தை ஏற்க வேண்டும் என்றும் கூறியிருந்தார். இன்னொரு பிக்கு  கூறியிருந்தார், திஸ்ஸ மகா விகாரையை தமிழ் பௌத்த அமைச்சிடம் கையளிப்போம் என்று. இவர்கள் தமிழ் பௌத்த மதத்திற்கு மக்களை மாற்றி, பரப்ப போகிறார்கள். உண்மையை எடுத்துரைக்க மாட்டார்கள், நாட்டில் அமைதியை ஏற்பட விடமாட்டார்கள்.  

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, putthan said:

துறவிக்கு வாழ்த்து சொல்லுவோம் ...

சிங்கள துறவி தமிழ் படித்து பட்டம் பெற்று விட்டார் ஏன் தமிழர்கள் சிங்களம் படித்து சிங்களவராக கூடாது என இனி கருத்து வரும்..

துறவி அடுத்த மாகாணசபை தேர்தலில் ஜெ.வி.பி கட்சி சார்பில் தமிழில் பிரச்சாரம் செய்வார்,தமிழ் தேச பந்துக்கள் காலில் விழுந்து ஆசீர்வாதம் பெற்று உருண்டு விளையாடி வாக்கு கேட்பினம் ..

பத்தாயிரம் பிக்குகள் தமிழ் படித்தால் பிரச்சினை சுமுகமாய் தீருமோ ...பார்ப்பம்

3 hours ago, satan said:

அண்மையில் ஒரு பௌத்த பிக்கு தமிழில் ஒரு பேட்டியளித்திருந்தார். அதாவது திஸ்ஸ மகா விகாரை பிரச்சனைக்கு தன்னால் தீர்வு காண முடியுமென்றும், வடக்குமக்கள்பௌத்தத்தை ஏற்க வேண்டும் என்றும் கூறியிருந்தார். இன்னொரு பிக்கு  கூறியிருந்தார், திஸ்ஸ மகா விகாரையை தமிழ் பௌத்த அமைச்சிடம் கையளிப்போம் என்று. இவர்கள் தமிழ் பௌத்த மதத்திற்கு மக்களை மாற்றி, பரப்ப போகிறார்கள். உண்மையை எடுத்துரைக்க மாட்டார்கள், நாட்டில் அமைதியை ஏற்பட விடமாட்டார்கள்.  

அட இப்படியும் ஒரு பிரச்சினை கிடக்கா...நம்ம மொழி நம்முடனே இருக்கட்டும்

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, alvayan said:

பத்தாயிரம் பிக்குகள் தமிழ் படித்தால் பிரச்சினை சுமுகமாய் தீருமோ ...பார்ப்பம்

சந்திரசேகர என்ற தமிழ் அமைச்சர் தமிழ் படிச்சதனால் தமிழர்கள் அனுபவிக்கிற துன்பம் காணாது என்று இன்னும் பத்தாயிரம் பிக்குகளா தாங்காதடா சாமி ...

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, satan said:

அண்மையில் ஒரு பௌத்த பிக்கு தமிழில் ஒரு பேட்டியளித்திருந்தார். அதாவது திஸ்ஸ மகா விகாரை பிரச்சனைக்கு தன்னால் தீர்வு காண முடியுமென்றும், வடக்குமக்கள்பௌத்தத்தை ஏற்க வேண்டும் என்றும் கூறியிருந்தார். இன்னொரு பிக்கு  கூறியிருந்தார், திஸ்ஸ மகா விகாரையை தமிழ் பௌத்த அமைச்சிடம் கையளிப்போம் என்று. இவர்கள் தமிழ் பௌத்த மதத்திற்கு மக்களை மாற்றி, பரப்ப போகிறார்கள். உண்மையை எடுத்துரைக்க மாட்டார்கள், நாட்டில் அமைதியை ஏற்பட விடமாட்

"திஸ்ச" விகாரையை பிரபல ப்டுத்துவதின் முக்கிய நோக்கம்...

அண்மையில் ஒர் வீடியோ கிளிப் பார்த்தேன் அம்பாறையில் கண்டு எடுக்கப்பட்ட கல்வெட்டு ஒன்றில் தமிழில் (பழங்கால தமிழ்)திஸ்ஸ என எழுதப்பட்டுள்ளதாம் அதை சிங்கள ஆய்வாளர்கள் இராவணின் பெயர் என சொல்லி கொண்டு திரிகின்றனர் ..அது தான் இராவணனை சிங்களவனாக்கி ....தமிழர் பிரதேசத்தில் பெள்த்தம் இருந்தது என சொல்ல வருகின்றனர்...."திஸ்ஸ" என்பது தீவிரமாக மக்கள் மத்தியில் பரப்பப்டுகிறது ,,,,

புத்தரை ஒர் வாழ்க்கை குருவாக ஏற்க தயார் ஆனால் சிங்கள் ஆக்கிரமிப்புக்கு புத்தரை பயன்படுத்துவதை ஏற்க முடியாது ...

20 minutes ago, putthan said:

சந்திரசேகர என்ற தமிழ் அமைச்சர் தமிழ் படிச்சதனால் தமிழர்கள் அனுபவிக்கிற துன்பம் காணாது என்று இன்னும் பத்தாயிரம் பிக்குகளா தாங்காதடா சாமி ...

மலையகத்தை சேர்ந்த, இந்திய வம்சாவளி தமிழரான இவரால் என்ன துன்பத்தை தமிழ் மக்கள் அனுபவிக்கின்றனர் என அறியத் தர முடியுமா?

நன்றி

  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, நிழலி said:

மலையகத்தை சேர்ந்த, இந்திய வம்சாவளி தமிழரான இவரால் என்ன துன்பத்தை தமிழ் மக்கள் அனுபவிக்கின்றனர் என அறியத் தர முடியுமா?

நன்றி

தமிழ் தேசியத்தை இல்லாது பண்ண ஜெ.வி.பி யினரால் உள்வாங்கப்பட்ட ஒர் டமிழர் ...இன்று தமிழர் பகுதியில் இவர் பிரச்சாரம் செய்வது தமிழர் நிலத்தை படிப்படியாக இல்லாமல் பண்ணும் முயற்சி என நான் கருதுகிறேன்.தையிட்டி விகாரை விவகாரத்திலும் அவரின் நிலப்பாடு

நேற்றைய பாராளுமன்ற உரையிலும் யாழ் நூலக எரிப்பு,பழைய இனக்கலவரங்களை பேசி ஐ.தே.க கட்சியினரை குற்றம் சாட்டுகிறார் ...இவை யாவற்றையும் விட "தமிழ் இன அழிப்பு" "இன படுகொலை" மிகவும் பாரதூரமானது அது பற்றி அவர் பேச வில்லை...இதுவரை காலமும்...

தையிட்டி விகாரை விவகாரத்திலும் அவரின் நிலப்பாடு பக்கசார்பாக உள்ளது...

சில நுனி நாக்கு ஆங்கில தமிழ் அரசியல்வாதிகள் செய்த செயலை ,இவர் நுனி நாக்கு சிங்கள தமிழ் அரசியல்வாதியாக செய்யப்போகின்றார்

  • கருத்துக்கள உறவுகள்

நாங்கள் எந்த நாட்டிலும் கோயில்களைக் கட்டுவோம். வாழும் நாடுகளில் பாராளுமன்றத் தேர்தல்களிலும் பங்கு பற்றுவோம். எங்களிடம் எந்தவித உள் நோக்கங்களும் கிடையாது. நாங்கள் எல்லாவற்றிலும் சமரசம் காண்பவர்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
56 minutes ago, நிழலி said:

மலையகத்தை சேர்ந்த, இந்திய வம்சாவளி தமிழரான இவரால் என்ன துன்பத்தை தமிழ் மக்கள் அனுபவிக்கின்றனர் என அறியத் தர முடியுமா?

நன்றி

வடக்கு கிழக்கை சேர்ந்த குமாரசூரியர் (சுதந்திரகட்சி)

தேவநாயகம்,மகேஸ்வரன், (ஐ.தே.க)

வியாழேந்திரன்,பிள்ளையான்,கருணா(மகிந்தா அணி)

டக்கிளஸ் (சகல கட்சிகளிலும்)

அந்த வரிசையில் இந்த அமைச்சரும் ஜெ.வி.பி யினரினால் உள் வாங்கப்பட்டுள்ளார் ....இவரும் அபிவிருத்தி அபிவிருத்தி என காலத்தை ஓட்டி சிங்கள ஆக்கிரமிப்பை ஊக்கப்படுத்துவார்

12 minutes ago, Kavi arunasalam said:

நாங்கள் எந்த நாட்டிலும் கோயில்களைக் கட்டுவோம். வாழும் நாடுகளில் பாராளுமன்றத் தேர்தல்களிலும் பங்கு பற்றுவோம். எங்களிடம் எந்தவித உள் நோக்கங்களும் கிடையாது. நாங்கள் எல்லாவற்றிலும் சமரசம் காண்பவர்கள்.

வாழும் நாட்டில் அனுமதி பெற்றுத்தான் கோவில் கட்டுவோமல்ல🤣 .அனுமதி பெறாமல் கட்டினால் வந்து உடைத்து போடுவாங்கள் சட்டம் இருக்கு......நாம் வாழும் நாடுகளில் தேர்தலில் நிற்க விடுகிறார்கள் நிற்கின்றோம்😅

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, putthan said:

வடக்கு கிழக்கை சேர்ந்த குமாரசூரியர் (சுதந்திரகட்சி)

தேவநாயகம்,மகேஸ்வரன், (ஐ.தே.க)

வியாழேந்திரன்,பிள்ளையான்,கருணா(மகிந்தா அணி)

டக்கிளஸ் (சகல கட்சிகளிலும்)

அந்த வரிசையில் இந்த அமைச்சரும் ஜெ.வி.பி யினரினால் உள் வாங்கப்பட்டுள்ளார் ....இவரும் அபிவிருத்தி அபிவிருத்தி என காலத்தை ஓட்டி சிங்கள ஆக்கிரமிப்பை ஊக்கப்படுத்துவார்

ஐங்கரன் ராமநாதன் சுதந்திரக் கட்சி

புத்தர் மறந்தாலும் நாங்கள் எடுத்துக் கொடுப்பம்

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, Kavi arunasalam said:

நாங்கள் எந்த நாட்டிலும் கோயில்களைக் கட்டுவோம். வாழும் நாடுகளில் பாராளுமன்றத் தேர்தல்களிலும் பங்கு பற்றுவோம். எங்களிடம் எந்தவித உள் நோக்கங்களும் கிடையாது. நாங்கள் எல்லாவற்றிலும் சமரசம் காண்பவர்கள்.

எங்களுக்கு வழிபடுவதற்கு ஆலயம் தேவை. எங்கள் உழைப்பில், பணத்தில், அனுமதிபெற்று, சட்டத்திற்கு அமைவாக காணி வாங்கி, கட்டுகிறோம், கும்பிடுகிறோம். யாரின் ஆலயங்களையும் இடித்து, வழிபாடுகளை தடுத்து, மக்களின் காணிகளில் கட்டவில்லை, அதிகாரம் காட்டவில்லை, குழப்பங்களை உருவாக்கவில்லை. உங்களுக்கு ஏன் இப்படி யோசனை போகிறதென யோசிக்கிறேன்.

7 hours ago, putthan said:

இராவணனை சிங்களவனாக்கி ....தமிழர் பிரதேசத்தில் பெள்த்தம் இருந்தது என சொல்ல வருகின்றனர்..

இராவணன் ஒரு தீவிர சிவபக்தன். சிவனிடம் தியானம் செய்தே பலம் பெற்றதாக செய்திகள் கூறுகின்றன. அதுசரி, சரித்திரத்தை மாற்றி தங்களுக்கு சாதகமாக எழுதி நாடு பிடிப்பதுதான் அவர்களின் சரித்திரம்.

16 hours ago, putthan said:

தமிழ் தேசியத்தை இல்லாது பண்ண ஜெ.வி.பி யினரால் உள்வாங்கப்பட்ட ஒர் டமிழர் ...இன்று தமிழர் பகுதியில் இவர் பிரச்சாரம் செய்வது தமிழர் நிலத்தை படிப்படியாக இல்லாமல் பண்ணும் முயற்சி என நான் கருதுகிறேன்.தையிட்டி விகாரை விவகாரத்திலும் அவரின் நிலப்பாடு

நேற்றைய பாராளுமன்ற உரையிலும் யாழ் நூலக எரிப்பு,பழைய இனக்கலவரங்களை பேசி ஐ.தே.க கட்சியினரை குற்றம் சாட்டுகிறார் ...இவை யாவற்றையும் விட "தமிழ் இன அழிப்பு" "இன படுகொலை" மிகவும் பாரதூரமானது அது பற்றி அவர் பேச வில்லை...இதுவரை காலமும்...

தையிட்டி விகாரை விவகாரத்திலும் அவரின் நிலப்பாடு பக்கசார்பாக உள்ளது...

சில நுனி நாக்கு ஆங்கில தமிழ் அரசியல்வாதிகள் செய்த செயலை ,இவர் நுனி நாக்கு சிங்கள தமிழ் அரசியல்வாதியாக செய்யப்போகின்றார் த

சந்திரசேகரர் இன்று நேற்று அல்ல ஜேவிபி யில் இணைந்து, எனக்கு தெரிந்தே இவர் கடந்த 30 வருடங்களாக இருக்கின்றார். மலையக தமிழரான இவர் பல ஜேவிபி சார்பான நூற்றுக்கணக்கான போராட்டங்களில் ஈடுபட்டவர்.

ஜேவிபி ஒரு கடும் இனவாதக் கட்சி என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. இதனால் தான் சங்குக்கு வாக்களிப்பதன் மூலம் ஜேவிபியிற்கு வெற்றி வாய்ப்புகள் அதிகரிக்கும், ஈற்றில் தமிழ் தேசிய கட்சிகளை மக்கள் நிராகரிப்பர் என கடந்த ஆண்டு பெப்ரவரியில் இருந்து எழுதி வந்தேன்.

ஆனால் இன்று இவர் வடக்கில் செய்யும் பல விடயங்கள், முக்கியமாக இந்திய கடல் கொள்ளைக்கு எதிரான நிலைப்பாடு மற்றும் நடவடிக்கைகள் பாராட்டப்பட வேண்டியவை. வடக்கு தமிழனான டக்கிளஸை விட பல மடங்கு சிறப்பாக உள்ளார்.

இவர் மட்டுமல்ல, எந்த தேசியக் கட்சிகளும், அரசுகளும் இனப்படுகொலை பற்றி பேசப்போவதில்லை. போர்க் குற்றம் புரிந்ததாக ஏற்றுக் கொள்ளப் போவதில்லை. இது தான் யதார்த்தம். இதனை அங்குள்ள தமிழ் மக்களும் நன்கு புரிந்து கொண்டமையால் தான் தேசியக் கட்சிகளுக்கு ஆதரவு கொடுக்க தொடங்கி உள்ளனர்.

ஆனால் இந்த யதார்த்தை புரிந்து கொள்ளாமல் வெறுமனே சந்திரசேகரனை குறிப்பிட்டு திட்டுவது அவர் மலையகத்தமிழர் என நன்கு தெரிந்த பின்னும் சந்திரசேகர என்று சிங்கள பெயர் சூட்டி விமர்சிப்பது யாழ்பாணிகளின் மலையக தமிழர் மீதான வழக்கமான குறும் பார்வையின் அம்சமாகவே தெரிகின்றது.

மற்றது, தையிட்டி விவகாரம், அங்கே பெளத்த வழிபாடு போன்றவை எப்போது தொடங்கியது என்று தெரியுமா உங்களுக்கு?

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, putthan said:

"திஸ்ச" விகாரையை பிரபல ப்டுத்துவதின் முக்கிய நோக்கம்...

அண்மையில் ஒர் வீடியோ கிளிப் பார்த்தேன் அம்பாறையில் கண்டு எடுக்கப்பட்ட கல்வெட்டு ஒன்றில் தமிழில் (பழங்கால தமிழ்)திஸ்ஸ என எழுதப்பட்டுள்ளதாம் அதை சிங்கள ஆய்வாளர்கள் இராவணின் பெயர் என சொல்லி கொண்டு திரிகின்றனர் ..அது தான் இராவணனை சிங்களவனாக்கி ....தமிழர் பிரதேசத்தில் பெள்த்தம் இருந்தது என சொல்ல வருகின்றனர்...."திஸ்ஸ" என்பது தீவிரமாக மக்கள் மத்தியில் பரப்பப்டுகிறது ,,,,

புத்தரை ஒர் வாழ்க்கை குருவாக ஏற்க தயார் ஆனால் சிங்கள் ஆக்கிரமிப்புக்கு புத்தரை பயன்படுத்துவதை ஏற்க முடியாது ...

அரசியல் காரணங்களுக்காக உதாசீனம் செய்யப் படும் பல்வேறு தரவுகள், தகவல்கள் வெளியே பிரபலமாக்கப் படாமல் மூலையில் கிடக்கின்றன. உதாரணமாக வடக்கின் கந்தரோடையில் விகாரைகள் போன்ற சிறு அமைப்புகள் இருக்கின்றன. அந்தப் பகுதி வடக்கில் கிமு 600 அளவில் இருந்தே மக்கள் குடியேறி வாழ்ந்த பகுதி என்று கார்பன் 14 பரிசோதனையில் நிரூபித்திருக்கிறார்கள். பௌத்தம் தமிழரிடையே இருந்த காலமொன்று இருந்திருக்கிறது, இது அதிசயமல்ல. இனியும் அப்படியொரு காலம் உருவாகாது என்றும் உறுதி செய்ய முடியாது.

  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, நிழலி said:

மலையகத்தை சேர்ந்த, இந்திய வம்சாவளி தமிழரான இவரால் என்ன துன்பத்தை தமிழ் மக்கள் அனுபவிக்கின்றனர் என அறியத் தர முடியுமா?

நன்றி

அவர் எங்கட யாழ்ப்பாணத்து தமிழ் பேசவில்லை. அப்ப அவர் எங்கட ஆள் இல்லை தானே! கேட்டிய கிளி இதுவும் ஒரு கேள்வியாம்! 😂

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்பாணத்தின் வரலாறு கூறும் நூலான “யாழ்பாண வைபவமாலை” என்னும் நூலில் புத்த கோவில்களை எல்லாம் இடித்து சிங்களவரை துரத்திய வரலாறு உள்ளது. மதம் மாறினார்கள் என்பதற்காக ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என்று பாராது அனைவரையும் சங்கிலியன் வெட்டி கொலை செய்த வரலாறும் உள்ளது. ஆகவே இனவாத விடயத்தில் நாமும் சிங்களவர்களுக்கு சற்றும் சளைத்தவர்கள் அல்லர்.

இற்றைக்கு 250 வருடங்களுக்கு முன்பு 1750 களில் இந்நூல் எழுதப்பட்டது.

large.IMG_9332.jpeg

Edited by island

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, satan said:

யாரின் ஆலயங்களையும் இடித்து, வழிபாடுகளை தடுத்து, மக்களின் காணிகளில் கட்டவில்லை, அதிகாரம் காட்டவில்லை, குழப்பங்களை உருவாக்கவில்லை. உங்களுக்கு ஏன் இப்படி யோசனை போகிறதென யோசிக்கிறேன்.

சில உண்மைகள் கசக்கத்தான் செய்யும். தமிழரும், சிங்களவரும் இலங்கையை ஆண்டிருக்கின்றார்கள் என்பதுதானே உண்மை. மற்றைய இடங்களை விட்டு நான் பிறந்து வளர்ந்த இடத்தைச் சுற்றியுள்ள இடங்களைப் பார்க்கிறேன்.

புலோலி என்றொரு பிரதேசம். புல்எலிய என்பதே பின்னாளில் புலோலி ஆனது. பின்னாளில் புலவர் கந்த முருகேசனார் அவர்கள், “புலவர்கள் குரல்கள் ஓயாமல் எப்பொழுதும் கேட்பதால் இந்த இடம் “புலவர்கள் ஒலி’ என்று அழைக்கப்பட்டு அது மருவி ‘புலோலி’ ஆகிவிட்டது” என விளக்கம் கொடுத்தார்.

பருத்தித்துறை, நெல்லியடி இரண்டுக்கும் இடையில் மாலிசந்தி என்றொரு இடம் இருக்கின்றது. பருத்தித்துறை, இன்பருட்டி, பொலிகண்டி, வல்வெட்டித்துறை ஆகிய இடங்களில் உள்ள கடலில் பிடிக்கப்படும் மீன்களை சந்தைப்படுத்தும் மையப் பகுதியாக மாலிசந்தி என்ற இடமே இருந்தது. அப்பொழுது அந்த இடம் ‘மாலு சந்த’ என்றே அழைக்கப்பட்டிருந்தது.

அடுத்து வல்லிபுரக் குறிச்சி. இந்த இடத்தில்தான் சைவருக்குச் சம்பந்தமில்லாத வல்லிபுர ஆழ்வார் கோவில் இருக்கின்றது. கிருஸ்ணருக்கு ஆந்திராவிலேயே வல்லிபுரம் என்ற பெயர் இல்லை. மண் நிறைந்த பகுதி. நாங்கள் மணற்காடு என்று சொல்வோம். மண்-வலி (சிங்களத்தில்). சிங்களத்தில் ‘வலிபுர’ என அழைக்கப்பட்டு வல்லிபுரமானது. இப்படி தும்பள, திகிரி என நான் வாழ்ந்த பகுதியில் நிறையவே இருக்கின்றன.

சட்டப்படி சீட்டு நடத்தும் ஒருவர் ஊரில் இருந்தார். அவரது காணியின் அடி உறுதியில், காணியின் பெயர் புத்தர் கோயில் என்றிருக்கிறது. அந்த அடி உறுதி நிச்சயமாக பருத்தித்துறை காணி பதிவு அலுவலகத்தில் இருக்கும்.

நாங்கள் ஒரு வட்டத்துக்குள்ளேயே சுற்றிச் சுற்றி வந்து கொண்டு வெளியே வர மறுக்கிறோம். நேற்று புலம் பெயர்ந்து வந்தோம். இன்று போய்ப் பார்த்தால், யாரோ ஒரு முகம் தெரியாத தமிழன் காணியை அபகரித்து அங்கே குடும்பமாக இருக்கிறான். அபகரிப்பு என்பது இரண்டு பக்கமும் இருக்கத்தான் செய்கின்றன.

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, நிழலி said:

இவர் மட்டுமல்ல, எந்த தேசியக் கட்சிகளும், அரசுகளும் இனப்படுகொலை பற்றி பேசப்போவதில்லை. போர்க் குற்றம் புரிந்ததாக ஏற்றுக் கொள்ளப் போவதில்லை. இது தான் யதார்த்தம். இதனை அங்குள்ள தமிழ் மக்களும் நன்கு புரிந்து கொண்டமையால் தான் தேசியக் கட்சிகளுக்கு ஆதரவு கொடுக்க தொடங்கி உள்ளனர்.

பட்டிலந்த விவகாரம் பேச முடியும் என்றால்,சிங்கள பயங்கரவாத ஜெ.வி.பி யினரின் செயல்களை அங்கிகரிக்க முடியும் என்றால் இனஅழிப்பும் பேசப்பட வேண்டும்...இவற்றை பேசாமல் பக்க சார்பாக பேசுவது என்பது சிங்கள அதிகார வர்க்கத்தின் அதிகார போக்கு ... எனது பார்வையில் ...இடதுசாரிகள் செய்தால் சரி மற்றவர் செய்வது எல்லாம் பிழை என வாதாட வேண்டிய வசியமில்லை...

மலையக தமிழர்,சாதி வேறுபாடு,வர்க்க வித்தியாசம் என கூறுவது முப்போக்கு என இலங்கை கொம்னிஸ்ட் கட்சி காலத்திலிருந்து இன்று வரை சொல்லிகொண்டே இருக்கின்றோம் ..ஆனால் இன சுத்திகரிப்பில் எந்த வித மாற்றமும் இல்லை ...

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, நிழலி said:

மலையகத்தமிழர் என நன்கு தெரிந்த பின்னும் சந்திரசேகர என்று சிங்கள பெயர் சூட்டி விமர்சிப்பது யாழ்பாணிகளின் மலையக தமிழர் மீதான வழக்கமான குறும் பார்வையின் அம்சமாகவே தெரிகின்றது.

அப்படியாயின் யாழ்ப்பாணிகள் என நீங்கள் விழிப்பது இடதுசாரிகளின் ,அல்லது உங்கள் கருத்தாதிக்க சிந்தனை ,யாழ்ப்பாணிகள் மீது உள்ள வெறுப்பு என எடுத்து கொள்ள முடியுமா?...நிச்சயமாக அப்படி இருக்காது என நினைக்கிரேன் ....சந்திர சேகர நீண்ட காலம் ஜெ.வி.பியில் இருக்கின்றார் நுனி நாக்கு சிங்களம் பேசுவார் மதங்களை மதிக்க தெரியாதவர்,பெளத்த மதத்தை தவிர....(இடதுசாரிகள் மதங்களை மதிக்காதவர்கள் என கூறுவார்கள் ) இது எனது பார்வை ...

அதிகார வர்க்கம் குமாரசூரியர் முதல் சந்திர சேகரர் வரை

7 hours ago, நிழலி said:

இந்திய கடல் கொள்ளைக்கு எதிரான நிலைப்பாடு மற்றும் நடவடிக்கைகள் பாராட்டப்பட வேண்டியவை. வடக்கு தமிழனான டக்கிளஸை விட பல மடங்கு சிறப்பாக உள்ளார்

எந்த மைச்சர் வந்தாலும் இந்திய எல்லை தான்டும் பிரச்சனை தீர்க்க முடியாது ...

6 hours ago, Justin said:

அரசியல் காரணங்களுக்காக உதாசீனம் செய்யப் படும் பல்வேறு தரவுகள், தகவல்கள் வெளியே பிரபலமாக்கப் படாமல் மூலையில் கிடக்கின்றன. உதாரணமாக வடக்கின் கந்தரோடையில் விகாரைகள் போன்ற சிறு அமைப்புகள் இருக்கின்றன. அந்தப் பகுதி வடக்கில் கிமு 600 அளவில் இருந்தே மக்கள் குடியேறி வாழ்ந்த பகுதி என்று கார்பன் 14 பரிசோதனையில் நிரூபித்திருக்கிறார்கள். பௌத்தம் தமிழரிடையே இருந்த காலமொன்று இருந்திருக்கிறது, இது அதிசயமல்ல. இனியும் அப்படியொரு காலம் உருவாகாது என்றும் உறுதி செய்ய முடியாது.

அது ஏற்று கொள்ளப்பட வேணும் தமிழ் பெளத்தர்கள் என்பது ஏற்று கொள்ளப்பட வேண்டிய விடயம் இதில் மாற்று கருத்து இல்லை ...சிங்கள பெளத்தம் என்பதில் தான் சிக்கலே...பெளத்த விகாரை இருப்பதால் அது சிங்கள பிரதேசம் என உரிமை கூற முடியாது அத்துடன் சிங்கள குடியேற்றமும் செய்ய முடியாது..

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, island said:

யாழ்பாணத்தின் வரலாறு கூறும் நூலான “யாழ்பாண வைபவமாலை” என்னும் நூலில் புத்த கோவில்களை எல்லாம் இடித்து சிங்களவரை துரத்திய வரலாறு உள்ளது. மதம் மாறினார்கள் என்பதற்காக ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என்று பாராது அனைவரையும் சங்கிலியன் வெட்டி கொலை செய்த வரலாறும் உள்ளது. ஆகவே இனவாத விடயத்தில் நாமும் சிங்களவர்களுக்கு சற்றும் சளைத்தவர்கள் அல்லர்.

இற்றைக்கு 250 வருடங்களுக்கு முன்பு 1750 களில் இந்நூல் எழுதப்பட்டது.

large.IMG_9332.jpeg

அப்படி பார்த்தால் இஸ்ரேல்காரன் ஹாசாவை அடிக்கிறது பலஸ்தீனத்தை அடிக்கிறது சரிதான் (3500 வருடங்களுக்கு முன்பு மத்திய கிழக்கு முழுவதும் தங்கன்ட இடமாம்)

2 hours ago, Kavi arunasalam said:

நாங்கள் ஒரு வட்டத்துக்குள்ளேயே சுற்றிச் சுற்றி வந்து கொண்டு வெளியே வர மறுக்கிறோம். நேற்று புலம் பெயர்ந்து வந்தோம். இன்று போய்ப் பார்த்தால், யாரோ ஒரு முகம் தெரியாத தமிழன் காணியை அபகரித்து அங்கே குடும்பமாக இருக்கிறான். அபகரிப்பு என்பது இரண்டு பக்கமும் இருக்கத்தான் செய்கின்றன.

அரச ஆயுத படைகளின் உதவியுடன் அபகரிப்பு செய்வது வேறு ...நீங்கள் கூறும் அபகரிப்பு வேறு ....அது உங்களுக்கு நன்றாகவே தெரியும்...இருந்தும் உங்கள் கருத்துக்கு பதில் கருத்து எழுதுகிறேன்..

எங்களுடைய மதங்களுக்கு உள்ளே சத்தமில்லாமல் பல புது கருத்துக்களும்,வழிபாட்டு முறைகளும் ,தெய்வங்களும் உள்நுழைந்து உள்ளது ஆனால் எதிர் கேள்வி கேட்காமல் வர வேற்கின்றோம்..அது ஆகிரமிப்பு போல தெரியவில்லை ஆனால் அது சுத்த ஆக்கிரமிப்பு

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, Kavi arunasalam said:

சில உண்மைகள் கசக்கத்தான் செய்யும். தமிழரும், சிங்களவரும் இலங்கையை ஆண்டிருக்கின்றார்கள் என்பதுதானே உண்மை. மற்றைய இடங்களை விட்டு நான் பிறந்து வளர்ந்த இடத்தைச் சுற்றியுள்ள இடங்களைப் பார்க்கிறேன்.

புலோலி என்றொரு பிரதேசம். புல்எலிய என்பதே பின்னாளில் புலோலி ஆனது. பின்னாளில் புலவர் கந்த முருகேசனார் அவர்கள், “புலவர்கள் குரல்கள் ஓயாமல் எப்பொழுதும் கேட்பதால் இந்த இடம் “புலவர்கள் ஒலி’ என்று அழைக்கப்பட்டு அது மருவி ‘புலோலி’ ஆகிவிட்டது” என விளக்கம் கொடுத்தார்.

பருத்தித்துறை, நெல்லியடி இரண்டுக்கும் இடையில் மாலிசந்தி என்றொரு இடம் இருக்கின்றது. பருத்தித்துறை, இன்பருட்டி, பொலிகண்டி, வல்வெட்டித்துறை ஆகிய இடங்களில் உள்ள கடலில் பிடிக்கப்படும் மீன்களை சந்தைப்படுத்தும் மையப் பகுதியாக மாலிசந்தி என்ற இடமே இருந்தது. அப்பொழுது அந்த இடம் ‘மாலு சந்த’ என்றே அழைக்கப்பட்டிருந்தது.

அடுத்து வல்லிபுரக் குறிச்சி. இந்த இடத்தில்தான் சைவருக்குச் சம்பந்தமில்லாத வல்லிபுர ஆழ்வார் கோவில் இருக்கின்றது. கிருஸ்ணருக்கு ஆந்திராவிலேயே வல்லிபுரம் என்ற பெயர் இல்லை. மண் நிறைந்த பகுதி. நாங்கள் மணற்காடு என்று சொல்வோம். மண்-வலி (சிங்களத்தில்). சிங்களத்தில் ‘வலிபுர’ என அழைக்கப்பட்டு வல்லிபுரமானது. இப்படி தும்பள, திகிரி என நான் வாழ்ந்த பகுதியில் நிறையவே இருக்கின்றன.

வரலாறுகள் சரியாக இருந்தாலும் ஏன் இப்போது விகாரைகளை கட்டி சிங்கள குடியேற்றங்களை செய்கின்றார்கள்?

இலங்கையின் கிழக்கு பகுதிகளில் தமிழர் பிரதேசங்களாக இருந்த கந்தளாய் திருகோணமலை பறி போவதைப்பற்றி யாரும் மூச்சு விடுவதில்லை.

கோண்டாவில கோண்டாவில் ஆக மாறியது

கொக்குவில கொக்குவில் ஆக மாறியது

இணுவில இணுவில் ஆக மாறியது

யாப்பன யாழ்ப்பாணம் ஆக மாறியது

கொடிகாம கொடிகாமம் ஆக மாறியது

மிருசுவில மிருசுவில் ஆக மாறியது....இப்பிடியே சொல்லிக்கொண்டு போக வேண்டியதுதான்.🤣

கனக்க வேண்டாம் சும்மா இருந்த கதிர்காமத்தை எப்படி மாற்றி விட்டார்கள் என பாருங்கள்?

சிங்களம் ஒரு சேர்ந்து வாழக்கூடிய இனமும் அல்ல. அதன் அரசியல் போக்கும் சேர்ந்து வாழ நினைக்கவில்லை.

விட்டுக் கொடுத்த இராமநாதன் குணம் கொண்டவர்கள் இனியும் விட்டுக் கொடுத்துக்கொண்டே தான் இருக்கப்போகின்றார்கள்.(

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Kavi arunasalam said:

சில உண்மைகள் கசக்கத்தான் செய்யும்.

இலங்கைப் பூர்வகுடிப் பெண்ணான குவேனி அன்றொரு காலம்...

இலங்கை வந்த விஜயனுக்கு அடைக்கலம் கொடுத்துப் பின்னர் காதல் வசப்பட்டு ..அதன் பின்னர் கைவிடப்பட்ட நிலையில்..... தற்கொலை செய்ய முன்னர்... ஒன்பது சாபங்களை சிங் ஹெல சமூகத்திற்கே விட்டுச் சென்றாள்.

அதில் ஒன்று கடலில் தத்தளிக்கும் மரக்கட்டைகள் அலைகளில் சிக்கி அடிபட்டு எந்தத் திசை செல்வது என்று தெரியாமல் கடலிலேயே மூழ்கி விடுவது போல எந்தக் கொள்கையும் இலக்கும் இல்லாத மக்கள் கூட்டம் இலங்கையில் உருவாகி சீரழியட்டும் என்பதாகும்

அது தான் இப்போது நடக்கின்றது

வரலாறு மாறாது... திரிவுபடுத்தப்படலாம்

  • கருத்துக்கள உறவுகள்

செய்திகள் கூறுகின்றன 🤣 👇

இராவணன் ஒரு தீவிர சிவபக்தன்

சிவனிடம் தியானம் செய்தே பலம் பெற்றதாக

இந்த புராணண கற்பனை எந்த செய்தி பத்திரிக்கையில் செய்தியாக வந்தது ?

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, Kavi arunasalam said:

சில உண்மைகள் கசக்கத்தான் செய்யும். தமிழரும், சிங்களவரும் இலங்கையை ஆண்டிருக்கின்றார்கள் என்பதுதானே உண்மை. மற்றைய இடங்களை விட்டு நான் பிறந்து வளர்ந்த இடத்தைச் சுற்றியுள்ள இடங்களைப் பார்க்கிறேன்.

புலோலி என்றொரு பிரதேசம். புல்எலிய என்பதே பின்னாளில் புலோலி ஆனது. பின்னாளில் புலவர் கந்த முருகேசனார் அவர்கள், “புலவர்கள் குரல்கள் ஓயாமல் எப்பொழுதும் கேட்பதால் இந்த இடம் “புலவர்கள் ஒலி’ என்று அழைக்கப்பட்டு அது மருவி ‘புலோலி’ ஆகிவிட்டது” என விளக்கம் கொடுத்தார்.

பருத்தித்துறை, நெல்லியடி இரண்டுக்கும் இடையில் மாலிசந்தி என்றொரு இடம் இருக்கின்றது. பருத்தித்துறை, இன்பருட்டி, பொலிகண்டி, வல்வெட்டித்துறை ஆகிய இடங்களில் உள்ள கடலில் பிடிக்கப்படும் மீன்களை சந்தைப்படுத்தும் மையப் பகுதியாக மாலிசந்தி என்ற இடமே இருந்தது. அப்பொழுது அந்த இடம் ‘மாலு சந்த’ என்றே அழைக்கப்பட்டிருந்தது.

அடுத்து வல்லிபுரக் குறிச்சி. இந்த இடத்தில்தான் சைவருக்குச் சம்பந்தமில்லாத வல்லிபுர ஆழ்வார் கோவில் இருக்கின்றது. கிருஸ்ணருக்கு ஆந்திராவிலேயே வல்லிபுரம் என்ற பெயர் இல்லை. மண் நிறைந்த பகுதி. நாங்கள் மணற்காடு என்று சொல்வோம். மண்-வலி (சிங்களத்தில்). சிங்களத்தில் ‘வலிபுர’ என அழைக்கப்பட்டு வல்லிபுரமானது. இப்படி தும்பள, திகிரி என நான் வாழ்ந்த பகுதியில் நிறையவே இருக்கின்றன.

சட்டப்படி சீட்டு நடத்தும் ஒருவர் ஊரில் இருந்தார். அவரது காணியின் அடி உறுதியில், காணியின் பெயர் புத்தர் கோயில் என்றிருக்கிறது. அந்த அடி உறுதி நிச்சயமாக பருத்தித்துறை காணி பதிவு அலுவலகத்தில் இருக்கும்.

நாங்கள் ஒரு வட்டத்துக்குள்ளேயே சுற்றிச் சுற்றி வந்து கொண்டு வெளியே வர மறுக்கிறோம். நேற்று புலம் பெயர்ந்து வந்தோம். இன்று போய்ப் பார்த்தால், யாரோ ஒரு முகம் தெரியாத தமிழன் காணியை அபகரித்து அங்கே குடும்பமாக இருக்கிறான். அபகரிப்பு என்பது இரண்டு பக்கமும் இருக்கத்தான் செய்கின்றன.

ஓவியரே, இப்போது நாங்கள் என்னதான் செய்யவேண்டும்? பழசை எல்லாம் மறக்கலாம், மன்னிக்கலாம் ஒன்றாக கைகோர்த்து நடக்கலாமா?

24 minutes ago, விளங்க நினைப்பவன் said:

செய்திகள் கூறுகின்றன 🤣 👇

இராவணன் ஒரு தீவிர சிவபக்தன்

சிவனிடம் தியானம் செய்தே பலம் பெற்றதாக

இந்த புராணண கற்பனை எந்த செய்தி பத்திரிக்கையில் செய்தியாக வந்தது ?

சைவ சமய பாடத்தில் ஒவ்வொரு வகுப்பிலும் ஆரம்பம் தொட்டு இப்படி கதைகள் கூறித்தானே மண்டையை கழுவினார்கள்? எங்கள் கலாச்சாரம், வாழ்க்கை முறை அறிவை விட அதிகம் உணர்ச்சி - பற்றின் பாற்பட்டது. பக்தி வழிமுறையின் மூலம் கடவுளையே அடையலாம் என்று கற்பிக்கப்பட்டதே.

  • கருத்துக்கள உறவுகள்
31 minutes ago, நியாயம் said:

ஒன்றாக கைகோர்த்து நடக்கலாமா?

கை மட்டுமல்ல சகலதையும் கோர்த்து நடக்கலாம்🤣

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.