Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

முன்னாள் முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன், சிறிது நேரத்துக்கு முன்பு குற்றப்புலனாய்வுத்துறை (CID) அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார் என்று காவல்துறை தெரிவித்துள்ளது.

https://www.dailymirror.lk/top-story/Pilleyan-arrested/155-306328#

ஈஸ்டர் குண்டு வெடிப்பு சம்பந்தமாகவே கைது செய்யப்பட்டுள்ளார் என அறிய முடிகின்றது

Edited by zuma

  • Replies 59
  • Views 3.3k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Most Popular Posts

  • nunavilan
    nunavilan

    இனமொன்றின் குரல் 8h  · பிள்ளையான் கைது செய்து தண்டிக்கப்பட வேண்டிய மிக மோசமான கிரிமினல் குற்றவாளி என்பதில் யாருக்கும் மாற்று கருத்திருக்க முடியாது ஆனால் பிள்ளையான் தென்னிலங்கை பயன்படுத்திய வெறும் கர

  • விசுகு
    விசுகு

    உள் நோக்கத்தை கேள்வி கேட்கக் கூடாது... பகடைக் காய்களின் கதி இறுதியில் இது தான். இனத்தையும் விற்று தம்மையும் இழந்து......?

  • ஈழப்பிரியன்
    ஈழப்பிரியன்

    நம்மை போட்டுக் கொடுத்துடாதே என்று கெளரவமாக போய் சொல்ல வேண்டாமோ?

  • கருத்துக்கள உறவுகள்

பிள்ளையான் கைது!

Published By: VISHNU 08 APR, 2025 | 08:57 PM

image

முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவனேசத்துரை சந்திரகாந்தன் ( பிள்ளையான்) குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் இன்று செவ்வாய்க்கிழமை  (08) மாலை கைது செய்யப்பட்டுள்ளார்.

தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் தலைவரான அவர் மட்டக்களப்பில் உள்ள கட்சியின் தலைமை காரியாலயத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

கொழும்பிலிருந்து சென்ற குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

https://www.virakesari.lk/article/211540

  • கருத்துக்கள உறவுகள்

விடுதலைப் புலிகள் முன்னாள் போராளி பிள்ளையான் கைது - இலங்கையில் நடப்பது என்ன?

இலங்கை, விடுதலைப் புலிகள், தமிழீழ விடுதலைப் புலிகள் , பிள்ளையான், சிவநேசத்துரை சந்திரகாந்தன், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி

படக்குறிப்பு,

8 ஏப்ரல் 2025, 16:02 GMT

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் போராளியும், இலங்கையின் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான பிள்ளையான் என்றழைக்கப்படும் சிவநேசத்துரை சந்திரகாந்தன் கைது செய்யப்பட்டுள்ளார்.

மட்டக்களப்பு பகுதியிலுள்ள தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைமை அலுவலகத்தில் வைத்து இன்றிரவு (ஏப்ரல் 8) போலீஸாரினால் பிள்ளையான் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த கைது சம்பவத்தை தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் உறுப்பினர்கள் பிபிசி தமிழிடம் உறுதி செய்தனர்.

கைது செய்யப்பட்டமைக்கான காரணம் கூறப்படாத நிலையில், பிள்ளையான் கொழும்புக்கு அழைத்து செல்லப்படவுள்ளதாகவும் பாதுகாப்பு பிரிவினர் கட்சியினருக்கு அறிவித்துள்ளனர்.

சிவில் ஆடைகளில் வேன் ஒன்றில் வருகைத் தந்த பாதுகாப்பு அதிகாரிகளே இவ்வாறு பிள்ளையானை கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கத்தின் படுகொலை மற்றும் ஈஸ்டர் குண்டுத் தாக்குதல் உள்ளிட்ட சில சம்பவங்கள் தொடர்பில் பிள்ளையான் மீது குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு வந்தன.

இவ்வாறு முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்களை, பிபிசி தமிழுக்கு சில தினங்களுக்கு முன்னர் வழங்கிய பேட்டியில், பிள்ளையான் மறுத்திருந்தார். இந்த நிலையில், காரணங்கள் குறிப்பிடப்படாது பிள்ளையான் கைது செய்யப்பட்டுள்ளதாக கட்சியின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

யார் இந்த பிள்ளையான்?

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் போராளியாக சிவநேசத்துரை சந்திரகாந்தன் செயற்பட்டிருந்தார்.

விடுதலைப் புலிகள் அமைப்பில் சிவநேசத்துரை சந்திரகாந்தன், பிள்ளையான் என அழைக்கப்பட்டார்.

1990ம் ஆண்டு தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் தனது 16வது வயதில் இணைந்த பிள்ளையான், முக்கிய தாக்குதல்களில் முன்னிலை வகித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த நிலையில், தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் முக்கிய தளபதியாக விளங்கிய கருணா அம்மான் என அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரனுடன் கைகோர்த்து 2004ம் ஆண்டு புலிகள் அமைப்பிலிருந்து பிரிந்த பிள்ளையான், இலங்கை அரசாங்கத்துடன் இணைந்திருந்தார்.

இவ்வாறு விடுதலைப் புலிகள் அமைப்பிலிருந்து வெளியேறிய நிலையில், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியை ஆரம்பித்து அதனை இன்று வரை செயற்படுத்தி வருகின்றார்.

வடகிழக்கு மாகாணங்கள் பிரிக்கப்பட்டதன் பின்னர், கிழக்கு மாகாணத்திற்காக நடத்தப்பட்ட முதலாவது மாகாண சபைத் தேர்தலில் முதலாவது கிழக்கு மாகாண முதலமைச்சராக பிள்ளையான் 2008ம் ஆண்டு தெரிவு செய்யப்பட்டிருந்தார்.

அதனைத் தொடர்ந்து ஜோசப் பரராஜசிங்கத்தின் கொலை தொடர்பான குற்றச்சாட்டுக்கள் பிள்ளையான் மீது முன்வைக்கப்பட்டு வந்த நிலையில், அவர் 2015ம் ஆண்டு கைது செய்யப்பட்டு சிறை வைக்கப்பட்டார்.

2020ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் சிறைச்சாலையில் இருந்தவாறே போட்டியிட்ட பிள்ளையான், மட்டக்களப்பு மாவட்டத்தில் அதிகூடிய விருப்பு வாக்குகளை பெற்று நாடாளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டார்.

அதன்பின்னர் 2020ம் ஆண்டு நீதிமன்றத்தினால் பிள்ளையான் விடுதலை செய்யப்பட்டிருந்தார். இவ்வாறான நிலையிலேயே, தற்போது மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார்.

-இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/c2kvg7xzk9eo

  • கருத்துக்கள உறவுகள்

pillaiyaan.png?resize=600%2C375&ssl=1

சிவனேசதுரை சந்திரகாந்தன் சற்று முன்னர் கைது!

தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் தலைவரும் முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சருமான சிவனேசதுரை சந்திரகாந்தன் அவர்கள் இன்று  கட்சியின் தலைமை காரியாலயத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

கைதுக்கான காரணங்கள் ஏதும் வெளிப்படுத்தப்படாமல் கொழும்பிலிருந்து வருகை தந்த குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

https://athavannews.com/2025/1427973

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ஏராளன் said:

முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவனேசத்துரை சந்திரகாந்தன் ( பிள்ளையான்) குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் இன்று செவ்வாய்க்கிழமை  (08) மாலை கைது செய்யப்பட்டுள்ளார்.

large.IMG_8255.jpeg.f31aa8dfba08e3e3d7e5

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, ஏராளன் said:

காரணங்கள் குறிப்பிடப்படாது பிள்ளையான் கைது செய்யப்பட்டுள்ளதாக கட்சியின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அவர்கள் காரணம் ஏதும் தெரிவிக்க விட்ட்டாலும், கைது செய்யப்பட்டவருக்கு தெரியும் காரணம். ஏற்கெனவே விநாயக மூர்த்தி முரளிதரன் தனது விசாரணையில் எல்லாவற்றையும் கூறிவிட்டார். இனி இவர் தன் பங்குக்கு அவரை காட்டிக்கொடுக்கட்டும். தான் விட்டெறிந்த பந்து திரும்பி வந்து தன்னை தாக்குமென்று தெரியாதவர்களா இவர்கள்?  

  • கருத்துக்கள உறவுகள்
இனமொன்றின் குரல்

8h  ·

பிள்ளையான் கைது செய்து தண்டிக்கப்பட வேண்டிய மிக மோசமான கிரிமினல் குற்றவாளி என்பதில் யாருக்கும் மாற்று கருத்திருக்க முடியாது

ஆனால் பிள்ளையான் தென்னிலங்கை பயன்படுத்திய வெறும் கருவி மட்டுமே என்பதை நாங்கள் நினைவில் வைத்திருக்க வேண்டும்

பிள்ளையானை குற்றசெயல்களில் ஈடுபடுத்திய கோட்டாபய ராஜபக்சேவின் "Triploli Platoon" என்கிற புலனாய்வு வலையமைப்பிற்கு பொறுப்பாகவிருந்த மேஜர் பிரபாத் புலத்வத்தே இன்றுவரை பாதுகாக்கப்படுகின்றார்

விசேடமாக பிள்ளையானுக்கு அடைக்கலம் வழங்கி ராஜபக்சே குடும்பத்தின் நலன்களுக்காக இயக்கிய மேஜர் ஜெனரல் கபில ஹெந்தவிதாரண முதல் பிரிகேடியர் அமல் கருணாசேன வரையான பிரதானிகள் பாதுகாக்கப்படுகின்றார்கள்

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்களின் பிரதான சூத்திரதாரியாக அடையாளம் காணப்படும் மேஜர் ஜெனரல் சுரேஷ் சாலே சுதந்திரமாக நடமாடுகின்றார்

ஈஸ்டர் குண்டுத்தாக்குதலுடன் தொடர்புடையவர்கள் என கத்தோலிக்க திருச்சபை அடையாளம் காட்டியுள்ள பிரிகேடியர் சூலா கொடிதுவாக்கு, கேணல் அன்சார், கேணல் கெலும் மத்துமகே உட்பட்ட பிரதானிகள் என யாரும் இதுவரை விசாரணை வலயத்திற்குள் கொண்டுவரப்படவில்லை

தேசபந்து தென்னகோனின் உத்தரவின் பேரில் தெற்கு அதிவேக நெடுஞ்சாலை நுழைவாயில் ஒன்றில் ஈஸ்டர் தாக்குதலுடன் தொடர்புடைய லொறியொன்றை தடுக்காது விடுவித்தது தொடர்பாக அவரிடம் விசாரிக்கப்படவில்லை

இந்த லொறியானது கோட்டாபய ராஜபக்சவிற்கு மிக நெருக்கமான அவன்ட் கார்ட் பாதுகாப்பு சேவைக்கு சொந்தமானதாக இருந்ததாக அடையாளம் காணப்பட்டு இருந்தது தொடர்பாக நிஸ்ஸங்க சேனாதிபதியிடம் விசாரிக்கவில்லை

இதற்கிடையில் பாதுகாப்பு அமைச்சின் துணைப்படையாக மாதம்தோறும் 35 லட்சம் பிள்ளையானுக்கு அரச பொது நிதியிலிருந்து கொடுக்கப்பட்டிருக்கின்றது

கிழக்கின் இராணுவ முகாம்களான கபரண இராணுவ முகாம் , இருதயபுரம் இராணுவ முகாம் , வெலிங்கந்த இராணுவ முகாம் உட்பட பல முகாம்களிலிருந்து செயற்பட பிள்ளையானுக்கு அனுமதி வழங்கப்பட்டிருகின்றது

தமிழ் வர்த்தகர்கள் உட்பட பொதுமக்களை கடத்தி பணம் வசூலிக்க கோட்டாபய ராஜபக்சே அவர்கள் பிள்ளையான் உட்பட்டவர்களுக்கு அனுமதி வழங்கியமையை அமெரிக்கா தூதுவராலயம் அம்பலப்படுத்திருக்கின்றது

அதே போல கபரண உட்பட்ட இராணுவ முகாம்களில் இந்த பணம் இராணுவ அதிகாரிகளுக்கு மத்தியில் பகிரப்பட்டத்திற்கும் ஆதாரம் இருக்கின்றது

விசேடமாக 'கன்சைட்-Gun Site’ வதை முகாம் பொறுப்பதிகாரியாக இருந்த சுமித் ரணசிங்க அவர்களுக்கு தமிழ் பெண்களை கடத்தி பிள்ளையான் வைத்த விருந்து வரை பொதுவெளியில் தரவுகள் உண்டு

இது தவிர வெளிநாடுகளிருந்து இராணுவ புலனாய்வாளர்களுக்கு பணியாற்றும் புளொட் அமைப்பை சேர்ந்த ஸ்டாலின் ஞானம் உட்பட்ட இந்தியன் இராணுவ காலத்தின் ஒட்டு குழுக்களும் பிள்ளையானை பயன்படுத்திருக்கின்றன

அதாவது இராணுவம் செய்ய முடியாத வேலைகளை செய்து முடிப்பதற்கு கோட்டாபய ராஜபக்சவின் ஒழுங்கமைப்பில் இராணுவ புலனாய்வு கட்டமைப்பு பிள்ளையானை பயன்படுத்திருக்கின்றது

ஆனால் எந்த கிரிமினல் குற்ற செயல்கள் தொடர்பாகவும் கோட்டாபய ராஜபக்சே முதல் இராணுவ புலனாய்வு கட்டமைப்புயை சேர்ந்த யாரிடமும் வாக்கு மூலம் கூட பதிவு செய்யப்படவில்லை

ஆனால் தேர்தலை முன்னிட்டு மிக தெளிவாக பிள்ளையான் பேரில் சகல கணக்குகளையும் எழுதி முடிக்க தென்னிலங்கை தயாராகி விட்டது

சொந்த இலாபங்களுக்காக வேறு தரப்புகளிடம் தங்கள் சொந்த இனத்தை விலை பேசியவர்கள் அந்த தரப்புகளின் தேவைகள் முடிவடைய அவர்களாலேயே பலியிடப்படுவார்கள் என்பதற்கு பிள்ளையான் நவீன சான்றாகி இருக்கின்றார்

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, ஏராளன் said:

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் போராளியும், இலங்கையின் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான பிள்ளையான் என்றழைக்கப்படும் சிவநேசத்துரை சந்திரகாந்தன் கைது செய்யப்பட்டுள்ளார்.

விடுதலைப்புலிகளின் முன்னாள் போராளி ...

பி.பி.சி நன்றாக தலையங்கம் போடுயினம் ...உள் நோக்கம் என்னவோ

45 minutes ago, nunavilan said:

இனமொன்றின் குரல்

8h  ·

சொந்த இலாபங்களுக்காக வேறு தரப்புகளிடம் தங்கள் சொந்த இனத்தை விலை பேசியவர்கள் அந்த தரப்புகளின் தேவைகள் முடிவடைய அவர்களாலேயே பலியிடப்படுவார்கள் என்பதற்கு பிள்ளையான் நவீன சான்றாகி இருக்கின்றார்

இந்த நிலை சிவப்பு கட்சியினருக்கும் வருமோ?

  • கருத்துக்கள உறவுகள்

அனுர திசநாயகக்க… ஜானாதிபதி தேர்தலில் போட்டியிடும் போது, கிழக்கு மாகாணத்தில் நடந்த பிரச்சார கூட்டம் ஒன்றில்… பிள்ளையானிடம் சட்ட விரோத ஆயுதங்கள் உள்ளதாகவும் அதனை வைத்து மற்றவர்களை அச்சுறுத்தி அரசியல் செய்கின்றார் என்றும், தாம் ஆட்சிக்கு வந்தால் பிள்ளையான் கைது செய்யப்பட்டு விசாரணை செய்யப்படுவார் என்றும் முன்பே கடுமையான தொனியில் கூறி இருந்தார். அந்தச் செய்தி யாழ். களத்திலும் வந்திருந்தது.

ஜனாதிபதி தேர்தலில் அனுர வென்ற பின்…. பிள்ளையான் தலைமறைவாகி இருந்தமையும், அவர் நாட்டை விட்டு தப்பி ஓடிவிட்டார் என்றும்… சில செய்திகள் வந்திருந்தது.

பின் பிள்ளையான் அசட்டு துணிச்சலில் வெளியே தலை காட்ட ஆரம்பித்து, அண்மையில் “கிழக்கு மாகாண தமிழ் கூட்டமைப்பு” என்ற கட்சி ஒன்றை… கருணா, வியாழேந்திரன் ஆகியோருடன் ஆரம்பித்து உள்ளூராட்சி தேர்தலுக்கு ஆயத்தமாகி வந்த நிலையில் பிள்ளையான் கைது செய்யப் பட்டுள்ளார்.

வியாழேந்திரன் ஏற்கெனவே கைது செய்யப் பட்டு விளக்க மறியலில் உள்ளார். தொடர்ச்சியாக கருணாவும் கைது செய்யப்படலாம்.

இப்போ… பிள்ளையானுக்கு ஏழரை ஆரம்பித்துள்ளது என்றுதான் கூற வேண்டும்.

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

pillaiyaan.jpg?resize=750%2C375&ssl=1

சிவநேசத்துரை சந்திரகாந்தன் கைது! வெளியான முக்கிய தகவல்.

கிழக்கு மாகாண பல்கலைக்கழகத்தின் உபவேந்தரான பேராசிரியர் சிவசுப்ரமணியம் ரவீந்திரநாத் கடத்தப்பட்டு காணாமலாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக பிள்ளையான் என்றழைக்கப்படும் முன்னாள் முதலமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் நேற்று கைதுசெய்யப்பட்டுள்ளார்.

குற்றப் புலனாய்வு திணைக்களத்தினரால் நேற்றிரவு 8 மணியளவில் அவரது கட்சி அலுவலத்திலேயே இவர் கைது செய்யப்பட்டார்.

கொழும்பில் நடைபெற்ற வருடாந்த மாநாடு ஒன்றில் கலந்துகொள்வதற்காக சென்றிருந்த கிழக்கு மாகாண பல்கலைக்கழகத்தின் உபவேந்தரான பேராசிரியர் சிவசுப்ரமணியம் ரவீந்திரநாத கடந்த 2006 ஆம் ஆண்டு டிசம்பர் 15ஆம் திகதி காணாமலாக்கப்பட்டிருந்தார்.

இந்தச் சம்பவத்தின் பிரதான சந்தேக நபரான பிள்ளையான் சுமார் 18 வருடங்களுக்குப் பின்னர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கிழக்கு பல்கலைக்கழகத்தின் கலைப்பீடத்துக்கான தலைவரான மு. பால சுகுமாரை கடந்த 2006 ஆம் ஆண்டு செப்டெம்பர் 30 ஆம் திகதி கடத்திய ஆயுதக் கும்பல், சிவசுப்ரமணியம் ரவீந்திரனாத்தை உபவேந்தர் பதவியிலிருந்து உடனடியாக விலகுமாறு அச்சுறுத்தியது.

அதற்கமைய, உபவேந்தர் ரவீந்திரநாத் தனது இராஜினாமா கடிதத்தை எழுத்துப்பூர்வமாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவருக்கு அறிவித்திருந்தார். எனினும், அவரது இராஜினாமாக் கடிதத்தை ஏற்றுக்கொள்ளாது அவரை கொழும்பில் இருந்து தமது கடமைகளை செய்யுமாறு அறிவிக்கப்பட்டிருந்தது.

உபவேந்தருக்கு உயிரச்சுறுத்தல் இருந்தமையால் கொழும்பு, தெஹிவளையில் உள்ள அவரது மகளின் வீட்டிலேயே வசித்து வந்ததுடன், சில தேவைகளுக்காக வெளியில் செல்வதாக இருந்தால் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவுக்கு அறிவித்துவிட்டு வெளியில் செல்வதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.

எனினும், 2006 ஆம் ஆண்டு டிசம்பர் 15 ஆம் திகதி கொழும்பில் நடைபெற்ற மாநாட்டுக்கு சென்றுவிட்டு மதிய உணவுக்காக வீட்டுக்கு வருவதாகக் கூறியிருந்த உபவேந்தர் காணமலாக்கப்பட்டிருந்தார். பேராசிரியர் பற்றிய தகவல்கள் எதுவும் கிடைக்கவில்லை என்பதால் இது பற்றி பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவுக்கும் அன்றைய தினம் மாலை 7 மணியளவில் தெஹிவளை பொலிஸ் நிலையத்திலும் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.

இதனையடுத்து குறித்த விசாரணை குற்றப்புலனாய்வு பிரிவுக்கு மாற்றப்பட்டு விசாரணை முன்னெடுக்கப்பட்ட போது, பிள்ளையானின் ஆதரவாளர்கள் என சந்தேகிக்கப்படுவோரினாலேயே குறித்த பேராசிரியர் கடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

அதற்கிணங்க, தொடர்;ந்து முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளுக்கு அமைய கிடைக்கப்பெற்ற சாட்சியங்களின் அடிப்படையிலேயே நேற்று இரவு பிள்ளையான் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த நிலையில், பிள்ளையான் எனப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தன் கைது செய்யப்பட்டமைக்கு மட்டக்களப்பு களுவாஞ்சிகுடி பகுதியில் பட்டாசு கொழுத்தி மக்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர்.

அதன்படி, களுவாஞ்சிகுடி பொலிஸ் நிலையத்திற்கு அருகில் இளைஞர்களினால் நேற்றிரவு பட்டாசு கொழுத்தப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

https://athavannews.com/2025/1427995

  • கருத்துக்கள உறவுகள்

488929815_668148392291043_50733132211839

2006 டிசம்பர் 15 இல், கிழக்கு பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் சுப்பிரமணியம் ரவீந்திரநாத், கொழும்பில் விஞ்ஞான முன்னேற்றச் சங்கம் கூட்டத்தில் கலந்து கொண்டு மட்டக்களப்புக்குத் திரும்பிக் கொண்டிருந்தபோது, அடையாளம் தெரியாத ஆயுததாரிகளால் கடத்தப்பட்டார்.

இந்தக் கடத்தல் தொடர்பாகவே இன்று பிள்ளையான் கைது செய்யப்பட்டிருக்கின்றார்.

பிள்ளையான் குழு 2006-2009 காலப்பகுதிகளில் அரசின் தேவைகளுக்காக எப்படியெல்லாம் பயன்படுத்தப்பட்டது என்பதை நாம் அறிவோம்.

திருகோணமலையில் வர்ஷா என்கிற 6 வயதுக் குழந்தையின் கொடூர மரணம் இன்னும் நினைவிருக்கிறது.

2009 மார்ச் 11ஆம் திகதி திருகோணமலை புனித மேரிஸ் ஆரம்ப பாடசாலையில் கல்வி கற்று வந்த வர்ஷா ஜுட் ரிஜி என்ற ஆறு வயதுடைய முதலாம் ஆண்டில் கல்வி கற்கும் சிறுமி கப்பம் கோரப்பட்டு கடத்திச் செல்லப்படுகிறார்.

30 மில்லியன் ரூபாய் கப்பம் கோரப்பட்டு கடத்திச் செல்லப்பட்ட பின்னர் மார்ச் மாதம் 13 ஆம் திகதி கண்கள், வாய், கைகள் கட்டப்பட்ட நிலையில் பையொன்றில் கட்டப்பட்ட நிலையில் அவரது சடலம் கண்டெடுக்கப்படுகிறது.

ஆறு வயது சிறுமியை கடத்திச் சென்று இவ்வாறு கொலை செய்யப்பட்ட வழக்கின் பின்புலத்தில் செயற்பட்டதாக சந்தேகத்தின் பேரில் தமிழ் மக்கள் விடுதலை புலிகள் அமைப்பின் திருகோணமலை மாவட்ட பொறுப்பாளராக செயற்பட்ட மேர்வின் என்ற நபர் கைது செய்யப்படுகின்றார் இவருடன் தமிழ் மக்கள் விடுதலை புலிகள் அமைப்பின் திருகோணமலை மாவட்ட உப செயலளார் வரதராஜா ஜனார்த்தனன் இவர் நிசாந்தன் மற்றும் ரெஜினோல்ட் ஆகியோர் பொலிஸாரால் கைது செய்யப்படுகின்றனர்.

இவர்கள் அனைவரும் பொலீசாரால் கொல்லப்படுகின்றார்கள், இவர்களின் பூரணமான விசாரனை நடத்தியிருந்தால் இதன் சூத்திரதாரியை அன்றே கைது செய்திருக்க முடியும்.

பிள்ளையானை இலங்கையில் புலனாய்வு துறையினால் செயற்படுத்தப்பட்ட டிரிபோலி பிளாட்டூன் (Tripoli Platoon) இயக்கியது என்பதை சனல் 4 உறுதிப்படுத்தியது.

பல கொலைகள் அந்தக் காலத்தில் சர்வ சாதாரணமாக நிகழ்ந்தன.

ஆனால் இவற்றை இயக்கிய இதன் பின்னணியில் இருந்த மஹிந்த தரப்பு இது தொடர்பாக விசாரிக்கப்படுமா? அதே போல் இன்று கைது செய்த குற்றம் இடம்பெறும் போது மஹிந்தவோடு JVP அரசில் அங்கம் வகித்தது. அதற்கான பொறுப்புக்கூறலை நேர்மையாக செய்ய முடியுமா ?

எங்களால் என்றுமே மறக்க முடியாத வர்ஷாவின் உடல் கண் கொண்டு பார்க்க முடியாத நிலையில் பார்த்த இடம் இதுவே.

Malaravan Uthayaseelan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
4 hours ago, தமிழ் சிறி said:

இந்த நிலையில், பிள்ளையான் எனப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தன் கைது செய்யப்பட்டமைக்கு மட்டக்களப்பு களுவாஞ்சிகுடி பகுதியில் பட்டாசு கொழுத்தி மக்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர்.

அதன்படி, களுவாஞ்சிகுடி பொலிஸ் நிலையத்திற்கு அருகில் இளைஞர்களினால் நேற்றிரவு பட்டாசு கொழுத்தப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

பிள்ளையான் முஸ்லீம்களுக்கு சிம்மசொப்பனமாக இருப்பவர் என சொல்லப்படுகின்றது. 😂

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, குமாரசாமி said:

பிள்ளையான் முஸ்லீம்களுக்கு சிம்மசொப்பனமாக இருப்பவர் என சொல்லப்படுகின்றது.

எனக்கு கிழக்கு மாகாணம் அவ்வளவு பரிச்சயம் இல்லை.

காத்தான்குடி முஸ்லீம் மக்களை அதிகமாக கொண்டது என்று அறிந்தேன்.

களுவாஞ்சிக்குடி... தமிழர் பகுதியா முஸ்லீம்கள் பகுதியா என தெரியவில்லை.

பிள்ளையான் கைதிற்கு, களுவாஞ்சிக்குடியில் வெடி கொளுத்தியது யார் என்று அறிய ஆவல்.

  • கருத்துக்கள உறவுகள்

489813306_1080071464163855_1469377070635

பிள்ளையான் கைது செய்யப்பட்டமை வரவேற்கத்தக்கது - சாணக்கியன்.

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, putthan said:

விடுதலைப்புலிகளின் முன்னாள் போராளி ...

பி.பி.சி நன்றாக தலையங்கம் போடுயினம் ...உள் நோக்கம் என்னவோ

இந்த நிலை சிவப்பு கட்சியினருக்கும் வருமோ?

இல்லை என நினைக்கிறேன். எத்தனையோ சிங்களவர்கள் கைது செய்யப்பட வேண்டிய நிலையில் வியாழேந்திரனும் பிள்ளையானும் தான் கைது செய்யப்பட்டுள்ளனர்.

  • கருத்துக்கள உறவுகள்
On 9/4/2025 at 03:35, putthan said:

விடுதலைப்புலிகளின் முன்னாள் போராளி ...

பி.பி.சி நன்றாக தலையங்கம் போடுயினம் ...உள் நோக்கம் என்னவோ

இந்த நிலை சிவப்பு கட்சியினருக்கும் வருமோ?

உள் நோக்கத்தை கேள்வி கேட்கக் கூடாது...

பகடைக் காய்களின் கதி இறுதியில் இது தான். இனத்தையும் விற்று தம்மையும் இழந்து......?

  • கருத்துக்கள உறவுகள்

ஈஸ்டர் தாக்குதல் இரகசியங்களை அம்பலப்படுத்திய பிள்ளையான் - பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் !

ShanaApril 11, 2025

07%20(1).jpg

சி.ஐ.டியினர் மேற்கொண்ட விசாரணையில் சிவனேசத்துறை சந்திரகாந்தனிடம் (பிள்ளையான்) உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் சில விடயங்கள் அம்பலமாகியுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் 10ஆம் திகதி வியாழக்கிழமை கருத்து தெரிவிக்கும்போதே பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால இதனை கூறியுள்ளார்.

அங்கு அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது;

எந்த ஒரு குற்றச்செயல்களையும் எமது அரசாங்கம் மறைக்கபோவதில்லை.

அண்மையில் கைது செய்யப்பட்ட முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவனேசத்துறை சந்திரகாந்தனிடம் பல்வேறு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்ட போது உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் சில விடயங்கள் அம்பலமாகின என்றார்.

மேலும் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரகுமான் குறிப்பிட்டது போல கைது செய்யப்பட்ட இளைஞனிடம் பல விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டன.

அவரது சமூக பதிவுகள் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டது. அவர் தொலைபேசி அழைப்புக்களை மேற்கொண்ட நபர்கள் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டது. அதில் குறிப்பாக சிலர் உயிர்த்தஞாயிறு தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய நபர்களாக இருந்துள்ளனர். இதனடிப்படையிலேயே அவரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது என தெரிவித்துள்ளார்.

https://www.battinews.com/2025/04/blog-post_720.html

  • கருத்துக்கள உறவுகள்

pillaiyan.jpg?resize=650%2C375&ssl=1

ஈஸ்டர் தாக்குதலில் பிள்ளையானுக்குத் தொடர்பு! -பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் தெரிவிப்பு.

கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் இராஜங்க அமைச்சர் பிள்ளையானிடம் மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணைகளில், ஈஸ்டர் தாக்குதல் தொடர்பாக பல விடயங்கள் தெரியவந்துள்ளதாக பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேயபால நேற்று சபையில் தெரிவித்தார்.

படலந்த வதைமுகாம் தொடர்பான விசாரணை அறிக்கை மீதான நேற்றைய விவாதத்தின்போதே அவர் இத் தகவல்களை வழங்கினார்.

இதன்போது குறித்த தாக்குதலுக்கும் பிள்ளையானுக்கும்  தொடர்பு உள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளதாகவும் அமைச்சர் ஆனந்த விஜேயபால தெரிவித்துள்ளார்.

அத்துடன் குறித்த விசாரணையை தாம் ஒருபோதும் மூடி மறைக்கப் போவதில்லை எனவும், இதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் தாம் முன்னெடுத்து வருவதாகவும் அமைச்சர் ஆனந்த விஜேயபால மேலும் தெரிவித்துள்ளார்.

https://athavannews.com/2025/1428306

  • கருத்துக்கள உறவுகள்

பிள்ளையானை தடுத்து வைத்து விசாரணை செய்ய அனுமதி

12 APR, 2025 | 10:31 AM

image

முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவனேசத்துரை சந்திரகாந்தனை (பிள்ளையான்) 90 நாட்கள் தடுப்பு காவலில் வைத்து விசாரணை செய்ய குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

2006 ஆம் ஆண்டில் கிழக்கு மாகாண பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் காணாமல்போன சம்பவம் தொடர்பில் பிள்ளையான் கடந்த செவ்வாய்க்கிழமை (08) மாலை மட்டக்களப்பு பிரதேசத்தில் வைத்து  குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டிருந்தார்.

இதனையடுத்து, கைதுசெய்யப்பட்ட பிள்ளையான் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் 72 மணிநேரம் தடுப்பு காவலில் வைக்கப்பட்டு விசாரணைக்குட்படுத்தப்பட்டிருந்தார்.

இந்நிலையில், பிள்ளையானை மேலும் 90 நாட்கள் தடுப்பு காவலில் வைத்து விசாரணை செய்ய குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

https://www.virakesari.lk/article/211862

  • கருத்துக்கள உறவுகள்

pillaiyan.jpg?resize=650%2C375&ssl=1

சிவனேசதுரை சந்திரகாந்தனுக்கு 90 நாட்கள் தடுப்புக்காவல்!

குற்றப் புலனாய்வு திணைக்களம் தொடர்ந்தும் விசாரணைகளை மேற்கொள்வதற்காக சிவனேசதுரை சந்திரகாந்தனை 90 நாட்கள் தடுப்புக்காவலில் வைப்பதற்கான உத்தரவைப் பெற்றுள்ளது

இதேவேளை கிழக்கு பல்கலைக்கழக முன்னாள் உபவேந்தர் பேராசிரியர் சுப்பிரமணியம் ரவீந்திரநாத் கடத்தப்பட்டு காணாமல் போன சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் அடிப்படையில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான ‘பிள்ளையான்’ கடந்த 8 ஆம் திகதி கைது செய்யப்பட்டிருந்தார்.

2006 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 15 ஆம் திகதி கிழக்கு பல்கலைக்கழக முன்னாள் உபவேந்தர் பேராசிரியர் சுப்பிரமணியம் ரவீந்திரநாத் கொழும்பில் இருந்து மட்டக்களப்பு நோக்கி வாகனத்தில் பயணித்த நிலையில், அவர் கொழும்பில் வைத்து கடத்தப்பட்டு காணாமல் போயிருந்தமை குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2025/1428392

  • கருத்துக்கள உறவுகள்

பிள்ளையானுடன் கலந்துரையாட விடுக்கப்பட்ட கோரிக்கை நிராகரிப்பு

தடுப்புக்காவல் உத்தரவின் கீழ் குற்றப் புலனாய்வுத் திணைக்கள காவலில் உள்ள 'பிள்ளையான்' எனும் சிவநேசதுரை சந்திரகாந்தனுடன் கலந்துரையாட முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க விடுத்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது. 

தற்போது தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள சிவநேசதுரை சந்திரகாந்தனுடன் கலந்துரையாடுவதற்கு ஒரு வாய்ப்பை வழங்குமாறு முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திடம் கோரியதாக, பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார். 

இந்நிலையில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பாதுகாப்பு அதிகாரி, குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளை அழைத்து, உரிய வாய்ப்பை கோரியுள்ளதாகக் தெரிவிக்கப்படுகின்றது. 

தடுப்புக்காவலில் உள்ள ஒரு சந்தேக நபருடன் தொலைபேசியில் கலந்துரையாடுவது சட்டவிரோதமானது என்பதால், அந்தக் கோரிக்கைக்கு அனுமதி வழங்கப்படவில்லை என்று பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார். 

இருப்பினும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பிலவுக்கு சிவநேசதுரை சந்திரகாந்தனை சந்தித்து கலந்துரையாட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. 

சந்தேக நபரின் வழக்கறிஞராகச் செயல்படும் உதய கம்மன்பில, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திடம் இந்த விவகாரம் குறித்து விவாதிக்க விரும்புவதாகக் கூறி கோரிக்கை விடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது. 

அதன்படி, உதய கம்மன்பிலவுக்கு சமீபத்தில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு சென்று பிள்ளையான் எனப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தனுடன் கலந்துரையாட வாய்ப்பு வழங்கப்பட்டதாக அமைச்சர் ஆனந்த விஜேபால மேலும் தெரிவித்தார். 

குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் முன்னிலையிலும் இந்தக் கலந்துரையாடல் இடம்பெற்றதாகவும் அமைச்சர் ஆனந்த விஜேபால மேலும் தெரிவித்தார்.

https://adaderanatamil.lk/news/cm9i25f2o00cnhyg39tp5hgrh

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, கிருபன் said:

பிள்ளையானுடன் கலந்துரையாட விடுக்கப்பட்ட கோரிக்கை நிராகரிப்பு

தடுப்புக்காவல் உத்தரவின் கீழ் குற்றப் புலனாய்வுத் திணைக்கள காவலில் உள்ள 'பிள்ளையான்' எனும் சிவநேசதுரை சந்திரகாந்தனுடன் கலந்துரையாட முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க விடுத்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது. 
---- இருப்பினும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பிலவுக்கு சிவநேசதுரை சந்திரகாந்தனை சந்தித்து கலந்துரையாட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. 

490810530_1084942820343386_9034334452144

கம்மன்(பிள்ளை)யான். 🤣

முன்னைநாள் அரசியல் தலைவர்களுக்கு பிள்ளையான் ஒரு பயங்கரவாதி. அப்படிப்பட்ட பயங்கரவாதியை ஒரு முன்நாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கா ஏன் சந்திக்க வேணும் ? எதற்காக ? ஒரு குற்றவாளி என நிரூபணமாகாத குற்றவாளி என சந்தேகத்தில் தடுத்து வைத்திருக்கும் ஒரு கைதி தான் பிள்ளையின். இவருக்கு ஏன் இந்த முன்னைநாள் அரசியல் தலைவர்கள் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.இப்போது புரிகிறதா எமது நாட்டில் ஏன் இந்த நிலைமை என்று. இவர்களுக்கு எல்லாம் மரண தண்டனை கொடுக்க வேண்டும்.

Rajen N Rajen

  • கருத்துக்கள உறவுகள்
30 minutes ago, தமிழ் சிறி said:

490810530_1084942820343386_9034334452144

கம்மன்(பிள்ளை)யான். 🤣

முன்னைநாள் அரசியல் தலைவர்களுக்கு பிள்ளையான் ஒரு பயங்கரவாதி. அப்படிப்பட்ட பயங்கரவாதியை ஒரு முன்நாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கா ஏன் சந்திக்க வேணும் ? எதற்காக ? ஒரு குற்றவாளி என நிரூபணமாகாத குற்றவாளி என சந்தேகத்தில் தடுத்து வைத்திருக்கும் ஒரு கைதி தான் பிள்ளையின். இவருக்கு ஏன் இந்த முன்னைநாள் அரசியல் தலைவர்கள் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.இப்போது புரிகிறதா எமது நாட்டில் ஏன் இந்த நிலைமை என்று. இவர்களுக்கு எல்லாம் மரண தண்டனை கொடுக்க வேண்டும்.

Rajen N Rajen

நம்மை போட்டுக் கொடுத்துடாதே என்று கெளரவமாக போய் சொல்ல வேண்டாமோ?

  • கருத்துக்கள உறவுகள்

491197273_673106148461934_25463482286492

பிள்ளையானுக்கு சட்டத்தரணியாக... உதய கம்மன்பில.

தமிழ் மக்களுக்கு எவ்வளவோ எதிர்ப்பான ஒரு இனவாதி உதய கம்மன்பில, பிள்ளையானுக்காக வாதாட வருகின்றார் என்றால்... பிள்ளையான் எவ்வளவு சீரழிவை தமிழனுக்கு ஏற்படுத்தி இருப்பார் என்று ஊகிக்கலாம்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.