Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

New-Project-352.jpg?resize=750%2C375&ssl

கனேடிய தேர்தலில் மார்க் கார்னியின் லிபரல் கட்சி வெற்றி பெற்றதாக கணிப்பு!

ஏப்ரல் 28 ஆம் திகதி நடைபெற்ற கனடாவின் பொதுத் தேர்தலில் பிரதமர் மார்க் கார்னியின் லிபரல் கட்சி வெற்றி பெற்றதாக கனேடியன் CTV மற்றும் CBC செய்திகள் செவ்வாயன்று (29) கணித்துள்ளன.

இருப்பினும், அவர்கள் பெரும்பான்மை அரசாங்கத்தை அமைப்பார்களா அல்லது சிறுபான்மை அரசாங்கத்தை அமைப்பார்களா என்று இன்னும் சொல்ல முடியாது.

பெரும்பான்மைக்குத் தேவையான 343 தேர்தல் இடங்களில் 172 இடங்களை லிபரல் கட்சி இன்னும் பெறவில்லை என்று CBC தெரிவித்துள்ளது.

லிபரல்கள் 133 இடங்களுடன் முன்னிலை வகித்தனர்.

கன்சர்வேடிவ்கள் 93 இடங்களைப் பெற்றனர்.

இந்த ஆண்டு ஜனவரியில் முன்னாள் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ இராஜினாமா செய்வதற்கு முன்பு மக்கள் செல்வாக்கு குறைந்திருந்த லிபரல்களுக்கு இது மீண்டும் ஒரு மீள் வருகையை இந்த தேர்தல் எடுத்துக் காட்டுகின்றது.

அதேநேரம், இந்த வெற்றி கார்னியின் பொருளாதார அனுபவம் மற்றும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பிற்கு எதிரான எதிர்ப்பால் தூண்டப்பட்ட ஒரு வியத்தகு அரசியல் திருப்பத்தைக் குறிக்கிறது.

கனடாவை இணைப்பதற்கான ட்ரம்பின் அச்சுறுத்தல்கள் மற்றும் தொடர்ச்சியான வர்த்தக விரோதங்கள், குறிப்பாக தேர்தல் நாளில் சமூக ஊடகங்கள் மூலம் அந்த அச்சுறுத்தல்களை அவர் மீண்டும் பற்றவைத்த பின்னர் மையப் பிரச்சாரப் பிரச்சினையாக மாறியது.

கனடா மற்றும் இங்கிலாந்து இரண்டிலும் முன்னாள் மத்திய வங்கி ஆளுநரான கார்னி, தனது பொருளாதாரச் சான்றுகளைப் பயன்படுத்தி நாட்டைப் பாதுகாக்கத் தான் சிறந்த முறையில் தயாராக இருப்பதாக கூறியுள்ளார்.

அமெரிக்காவிற்கு அப்பால் வர்த்தகத்தை விரிவுபடுத்துவதாக அவர் உறுதியளித்தார், மேலும் அமெரிக்க ஆக்கிரமிப்புக்கு எதிராக கடுமையாக எச்சரித்தார்.

https://athavannews.com/2025/1429841

  • Replies 82
  • Views 3.6k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Most Popular Posts

  • goshan_che
    goshan_che

    பிக்கரிங் இல் ஜுனித்தா நாதன் எனும் தமிழ் பெண்ணும் வெற்றி. டிரம்பின் புண்ணியத்தில் மீண்டும் ஆட்சியில் அமர்கிறது லிபரல் கட்சி. நிழலி, வாலி செம அப்செட்டில் இருப்பார்கள் என நினைக்கிறேன்🤣. ரிருடோ வைவிட கா

  • "தம்புவின்" ஆட்சியில் 100 வது நாள் நிறைவுக்கான பரிசு, கனடாவிடமிருந்து😂!

  • நிழலி
    நிழலி

    லிபரல் தான் ஆட்சிக்கு வருவார்கள் என தெரியும். இதனை நான் மார்ச் 16 இலேயே எழுதியிருந்தேன். இந்த திரியில் நான் எழுதிய ஒரு விடயத்தை மட்டும் இறுதி நேரத்தில் செய்யவில்லை. அதாவது பழமைவாத கட்சிக்கு வாக்களிக்க

  • கருத்துக்கள உறவுகள்

canada-1.jpg

கனடா நாடாளுமன்றத் தேர்தல் நேற்று நடைபெற்றது. இதையடுத்து இன்று அதிகாலை முதல் வாக்கு எண்ணிக்கை நடந்து வருகிறது. இந்தத் தேர்தலில் லிபரல் கட்சியைச் சேர்ந்த மார்க் கார்னி மற்றும் கன்சர்வேட்டிவ் கட்சியைச் சேர்ந்த பியர் பொய்லிவ்ரே ஆகியோர் போட்டியில் உள்ளனர். இந்த நிலையில், வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. இதில் ஆளும் லிபரல் கட்சி பல இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது.

2015 ஆம் ஆண்டு முதல் கனடாவின் பிரதமராகப் பதவி வகித்து வந்த ஜஸ்டின் ரூடோ கடந்த ஜனவரி மாதம் தனது பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து, லிபரல் கட்சி ஆட்சியில் இருந்த நிலையில், கனடா மத்திய வங்கி முன்னாள் தலைவரும், லிபரல் கட்சியைச் சேர்ந்த மார்க் கார்னி புதிய பிரதமராகத் தேர்வு செய்யப்பட்டார். 24வது பிரதமராகப் பதவி ஏற்ற நிலையில் அக்டோபர் மாதம் வரை கனடா நாடாளுமன்றத்தின் பதவிக்காலம் இருக்கிறது. இருப்பினும், தேர்தல் நடத்தத் திட்டமிட்டு கார்னி நாடாளுமன்றத்தைக் கலைத்தார். இதைத் தொடர்ந்து, கடந்த 28ம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற்றது.

இதில் லிபரல் கட்சி சார்பில் மார்க் கார்னியும், கன்சர்வேட்டிவ் கட்சி சார்பில் பியர் பொய்லிவ்ரே உள்ளிட்டோர் போட்டியிட்டனர். மொத்தம் 343 எம்.பி.க்களுக்கான தேர்தல் நடைபெற்றது. இந்த நிலையில் 172 இடங்களில் வெற்றி வாகை சூடுபவர்கள் ஆட்சி அமைப்பார்கள்.

https://thinakkural.lk/article/317381

  • கருத்துக்கள உறவுகள்

கனடா தேர்தல் - வெற்றிபெற்றது லிபரல் கட்சி தொடர்ந்து நான்காவது முறையாக ஆட்சி அமைக்கின்றது

29 APR, 2025 | 10:55 AM

image

கனடா தேர்தலில் மைக்கார்னியின் லிபரல் கட்சி வெற்றிபெற்றுள்ளது.

லிபரல் கட்சி 144 ஆசனங்களை கைப்பற்றியுள்ளது 21 இடங்களில் முன்னனியில் உள்ளது என சிபிசி தெரிவித்துள்ளது.

கென்சவேர்ட்டிவ் கட்சி  121 ஆசனங்களை கைப்பற்றியுள்ளது 26  இடங்களில் முன்னிலை வகிக்கின்றது.

லிபரல் கட்சிக்கு 43 வீத வாக்குகளும்  கென்சவேர்ட்டிவ் கட்சிக்கு 41 .7 வீத வாக்குகளும் கிடைத்துள்ளதாக சிபிசி தெரிவித்துள்ளது.

https://www.virakesari.lk/article/213229

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, ஏராளன் said:

canada-1.jpg

கனடா நாடாளுமன்றத் தேர்தல் நேற்று நடைபெற்றது. இதையடுத்து இன்று அதிகாலை முதல் வாக்கு எண்ணிக்கை நடந்து வருகிறது. இந்தத் தேர்தலில் லிபரல் கட்சியைச் சேர்ந்த மார்க் கார்னி மற்றும் கன்சர்வேட்டிவ் கட்சியைச் சேர்ந்த பியர் பொய்லிவ்ரே ஆகியோர் போட்டியில் உள்ளனர். இந்த நிலையில், வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. இதில் ஆளும் லிபரல் கட்சி பல இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது.

2015 ஆம் ஆண்டு முதல் கனடாவின் பிரதமராகப் பதவி வகித்து வந்த ஜஸ்டின் ரூடோ கடந்த ஜனவரி மாதம் தனது பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து, லிபரல் கட்சி ஆட்சியில் இருந்த நிலையில், கனடா மத்திய வங்கி முன்னாள் தலைவரும், லிபரல் கட்சியைச் சேர்ந்த மார்க் கார்னி புதிய பிரதமராகத் தேர்வு செய்யப்பட்டார். 24வது பிரதமராகப் பதவி ஏற்ற நிலையில் அக்டோபர் மாதம் வரை கனடா நாடாளுமன்றத்தின் பதவிக்காலம் இருக்கிறது. இருப்பினும், தேர்தல் நடத்தத் திட்டமிட்டு கார்னி நாடாளுமன்றத்தைக் கலைத்தார். இதைத் தொடர்ந்து, கடந்த 28ம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற்றது.

இதில் லிபரல் கட்சி சார்பில் மார்க் கார்னியும், கன்சர்வேட்டிவ் கட்சி சார்பில் பியர் பொய்லிவ்ரே உள்ளிட்டோர் போட்டியிட்டனர். மொத்தம் 343 எம்.பி.க்களுக்கான தேர்தல் நடைபெற்றது. இந்த நிலையில் 172 இடங்களில் வெற்றி வாகை சூடுபவர்கள் ஆட்சி அமைப்பார்கள்.

https://thinakkural.lk/article/317381

நல்லது மீண்டும் கரி. அமைச்சர் ஆவார் இல்லையா??? கனடா மத்திய அரசில். அவர் கரி. ஆனந்தசங்கரி அங்கம் வகிக்கிறது சிறப்பு ஆகும்

  • கருத்துக்கள உறவுகள்
39 minutes ago, Kandiah57 said:

நல்லது மீண்டும் கரி. அமைச்சர் ஆவார் இல்லையா??? கனடா மத்திய அரசில். அவர் கரி. ஆனந்தசங்கரி அங்கம் வகிக்கிறது சிறப்பு ஆகும்

பிக்கரிங் இல் ஜுனித்தா நாதன் எனும் தமிழ் பெண்ணும் வெற்றி.

டிரம்பின் புண்ணியத்தில் மீண்டும் ஆட்சியில் அமர்கிறது லிபரல் கட்சி.

நிழலி, வாலி செம அப்செட்டில் இருப்பார்கள் என நினைக்கிறேன்🤣.

ரிருடோ வைவிட கார்னி கெட்டிக்காரன் நாட்டை வளப்படுத்துவார் என நினைக்கிறேன்.

இங்கிலாந்து வங்கியின் ஆளுனரக இருந்த போது நன்றாக செயல்பட்டார்.

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, goshan_che said:

ரிருடோ வைவிட கார்னி கெட்டிக்காரன் நாட்டை வளப்படுத்துவார் என நினைக்கிறேன்.

ஆமாம் அவர் கெட்டிக்காரன். தான் மற்றும் ஜேர்மனி பிரித்தானியா பிரான்ஸ்,......போன்ற நாடுகளுடன். இணைத்து செயல்படுவார் .......

  • கருத்துக்கள உறவுகள்

கன்சர்வேட்டிவ் கட்சி தலைவர் பியர் பொய்லிவ்ரே தனது தேர்தல் தொகுதியில் தோல்வி அடைந்துள்ளார்.

வருங்காலத்தில் கன்சர்வேட்டிவ் கட்சி டக் போர்ட் (Doug Ford) போன்ற மிதவாத தலைவரை தேர்வு செய்து வெற்றிக்கு வழி வகுக்க வேண்டும். ஒரே கட்சி நீண்ட காலம் ஆட்சியில் இருப்பது ஜனநாயகத்துக்கு உகந்தது அல்ல.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, goshan_che said:

பிக்கரிங் இல் ஜுனித்தா நாதன் எனும் தமிழ் பெண்ணும் வெற்றி.

டிரம்பின் புண்ணியத்தில் மீண்டும் ஆட்சியில் அமர்கிறது லிபரல் கட்சி.

நிழலி, வாலி செம அப்செட்டில் இருப்பார்கள் என நினைக்கிறேன்🤣.

ரிருடோ வைவிட கார்னி கெட்டிக்காரன் நாட்டை வளப்படுத்துவார் என நினைக்கிறேன்.

இங்கிலாந்து வங்கியின் ஆளுனரக இருந்த போது நன்றாக செயல்பட்டார்.

ரம் தேர்தல் நடக்கும் நேரத்தில் கூட கன்சவேர்டிக்கு வாக்குப் போட்டு கனடாவை அமெரிக்காவின் மாநிலமாக மாற்றுங்கள் என்று சொல்லி லிபரல் வருவதற்கு உதவியுள்ளார்.

  • கருத்துக்கள உறவுகள்

"தம்புவின்" ஆட்சியில் 100 வது நாள் நிறைவுக்கான பரிசு, கனடாவிடமிருந்து😂!

4 hours ago, goshan_che said:

நிழலி, வாலி செம அப்செட்டில் இருப்பார்கள் என நினைக்கிறேன்🤣.

லிபரல் தான் ஆட்சிக்கு வருவார்கள் என தெரியும். இதனை நான் மார்ச் 16 இலேயே எழுதியிருந்தேன்.

இந்த திரியில் நான் எழுதிய ஒரு விடயத்தை மட்டும் இறுதி நேரத்தில் செய்யவில்லை. அதாவது பழமைவாத கட்சிக்கு வாக்களிக்கவில்லை. நானும் தாரளவாத கட்சிக்கே வாக்களித்தேன். காரணம், பக்கத்து நாட்டில் இருக்கும் வலதுசாரி பைத்தியகாரனை சமாளிக்கும் வல்லமை கார்னேக்கு அதிகம் இருக்கலாம் எனும் நம்பிக்கையில்.

  • கருத்துக்கள உறவுகள்

"டிரம்ப் எங்களை சிதைக்க முயல்கின்றார், அமெரிக்காவுடனான பழைய உறவு முடிவிற்கு வந்துவிட்டது" - கனடாவின் புதிய பிரதமராக தெரிவு செய்யப்பட்டுள்ள மார்க் கார்னி

Published By: RAJEEBAN

29 APR, 2025 | 12:34 PM

image

அமெரிக்காவுடனான பழைய உறவுகள் முடிவிற்கு வந்துவிட்டதாக கனடாவின் புதிய பிரதமராக தெரிவு செய்யப்பட்டுள்ள மார்க் கார்னி தெரிவித்துள்ளார்.

canada_liberal_1.jpg

அமெரிக்க ஜனாதிபதி எங்களை சிதைக்கப்பார்க்கின்றார், அதன் மூலம் அமெரிக்கா எங்களை உரிமையாக்கலாம் என அவர் கருதுகின்றார் என தெரிவித்துள்ள மார்க் கார்னி இது ஒருபோதும் நடக்காது என தெரிவித்துள்ளார்.

அமெரிக்கா எங்கள் வளங்களை நாட்டை தனதாக்கிக்கொள்ள முயல்கின்றது என நான் பல மாதங்களாக எச்சரித்து வந்தேன் என அவர் தெரிவித்துள்ளார்.

கனடா தற்போது வரலாற்றின் மிக முக்கியமான தருணத்தில் உள்ளது, அமெரிக்காவுடான எங்களின் பழைய உறவு முடிவிற்கு வந்துவிட்டது என தெரிவித்துள்ள அவர் இது பெரும் துன்பியல் நிகழ்வு என குறிப்பிட்டுள்ளார்.

mark_carney2.jpg

அமெரிக்காவின் துரோகத்தினால் நாங்கள் அதிர்ச்சியடைந்துள்ளோம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இரண்டு சுதந்திர, இறைமையுள்ள தேசங்களின் எதிர்காலம் குறித்து நான் விரைவில் அமெரிக்க ஜனாதிபதியுடன் பேசுவேன். உலகிற்கான தலைமைத்துவத்தின் முன்னணியில் இருப்பதற்கு அமெரிக்கா விரும்பாவிட்டால் கனடா அதனை செய்யும் நாங்கள் வலுசக்தி வல்லரசாக மாறுவோம் எனவும் கனடாவின் புதிய பிரதமராக தெரிவு செய்யப்பட்டுள்ள கார்னி தெரிவித்துள்ளார்.

canada_liberals.jpg

https://www.virakesari.lk/article/213241

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, ஈழப்பிரியன் said:

ரம் தேர்தல் நடக்கும் நேரத்தில் கூட கன்சவேர்டிக்கு வாக்குப் போட்டு கனடாவை அமெரிக்காவின் மாநிலமாக மாற்றுங்கள் என்று சொல்லி லிபரல் வருவதற்கு உதவியுள்ளார்.

ஓம்…கனேடியன் கன்சேவேடிவ் கட்சியை ஒரு கைபார்ப்பார் போலத்தான் இருக்கு.

இத்தனைக்கும் கனேடியன் கன்சேவேடிவ் கூட 51ம் மாநில கூத்துக்கு எதிர்ப்புத்தான்.

  • கருத்துக்கள உறவுகள்

"தம்பு" அமெரிக்காவில் பதவிக்கு வந்தமையால் ஏற்பட்ட நன்மைகள் எவையென்று கேட்டால் கஷ்ட பட்டுத் தேடித் தான் பொறுக்கியெடுக்க வேண்டும். ஆனால், கனடாவிலும், ஐரோப்பாவிலும் இருந்து உருவாகும் டீசண்டான தலைவர்கள் தான் இந்த இருண்ட அத்தியாயத்தின் silver lining என்று கருதுகிறேன்.

புதிய வரவுகளாக பிரிட்டனின் ஸ்ராமர், ஜேர்மனியின் மெர்ஸ், தற்போது கனடாவின் கார்னி, இப்படியான "நட்டு லூசாகாத" தலைவர்களை நோக்கி உலகத்தின் மரியாதை நகர்வது இயல்பானது.

"பல் துருவ உலகு உருவாகிறது" என்று புரின் யுத்தம் ஆரம்பித்து டசின் கணக்கான ஆபிரிக்க நாடுகளை தன் வசம் இழுத்த போது எழுதினார்கள். பல துருவங்கள் உருவானால், இப்படியான முன்னேற்றகரமான, அமெரிக்காவிற்கு மாற்றான துருவங்கள் தான் உருவாக வேண்டும்.

புரினும் ட்ரம்பும் வேண்டுமானால் இனி அலாஸ்காவின் வழியாக நிலங்களை இணைத்து விட்டு "தனித்துருவமாக" நடந்து கொள்ளலாம்😂!

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, நிழலி said:

லிபரல் தான் ஆட்சிக்கு வருவார்கள் என தெரியும். இதனை நான் மார்ச் 16 இலேயே எழுதியிருந்தேன்.

இந்த திரியில் நான் எழுதிய ஒரு விடயத்தை மட்டும் இறுதி நேரத்தில் செய்யவில்லை. அதாவது பழமைவாத கட்சிக்கு வாக்களிக்கவில்லை. நானும் தாரளவாத கட்சிக்கே வாக்களித்தேன். காரணம், பக்கத்து நாட்டில் இருக்கும் வலதுசாரி பைத்தியகாரனை சமாளிக்கும் வல்லமை கார்னேக்கு அதிகம் இருக்கலாம் எனும் நம்பிக்கையில்.

உங்களை போல டுருடோ காலத்தில் மிக கடுமையாக லிபரலை எதிர்த்த பலர், டிரம்பின் வருகை, கோமாளித்தனத்தின் பின் அதற்கு கானி ஆற்றிய எதிர்வினையின் பின் மாறி வாக்கு போட்டுள்ளனர் என்பதைதான் கடந்த மாதங்களில் ஏபட்ட கருத்துகணிப்பு, நேற்றைய தேர்தல் முடிவுகள் காட்டுகிறன.

ஜி 7 நாடுகளி கார்னியும், மேர்ஸும் டிரம்ப்பை டீல் பண்ணும் விதமே சரியானது.

மெக்ரொனும் கொஞ்சம் இந்த வழிக்கு வருகிறார்.

ஸ்டாமர் கழுவிற நீரில் நழுவுற மீனாய் இருந்து சாதிக்க முயல்கிறார். ஆனால் டிரம்ப் ஒரு playground bully. அவரது மட்டையை வாங்கி அவருக்கே மண்டையில் ஒண்டு போட்டால்தான், எதிராளியை மதிப்பார்.

பழைய உறவு ஓவர் என துணிந்து மேர்சை, கார்னியை போல சொன்னால்தான் டிரம்புக்கு உறைக்கும்.

புத்தி கூர்மை வேறு, எந்த விதத்திலும் கார்னிக்கு கிட்டவும் நிற்க முடியாத ஆள் டிரம்ப். கார்னியை கையாள டிரம்ப் கஸ்டப்படுவா.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Justin said:

"தம்பு" அமெரிக்காவில் பதவிக்கு வந்தமையால் ஏற்பட்ட நன்மைகள் எவையென்று கேட்டால் கஷ்ட பட்டுத் தேடித் தான் பொறுக்கியெடுக்க வேண்டும். ஆனால், கனடாவிலும், ஐரோப்பாவிலும் இருந்து உருவாகும் டீசண்டான தலைவர்கள் தான் இந்த இருண்ட அத்தியாயத்தின் silver lining என்று கருதுகிறேன்.

புதிய வரவுகளாக பிரிட்டனின் ஸ்ராமர், ஜேர்மனியின் மெர்ஸ், தற்போது கனடாவின் கார்னி, இப்படியான "நட்டு லூசாகாத" தலைவர்களை நோக்கி உலகத்தின் மரியாதை நகர்வது இயல்பானது.

"பல் துருவ உலகு உருவாகிறது" என்று புரின் யுத்தம் ஆரம்பித்து டசின் கணக்கான ஆபிரிக்க நாடுகளை தன் வசம் இழுத்த போது எழுதினார்கள். பல துருவங்கள் உருவானால், இப்படியான முன்னேற்றகரமான, அமெரிக்காவிற்கு மாற்றான துருவங்கள் தான் உருவாக வேண்டும்.

புரினும் ட்ரம்பும் வேண்டுமானால் இனி அலாஸ்காவின் வழியாக நிலங்களை இணைத்து விட்டு "தனித்துருவமாக" நடந்து கொள்ளலாம்😂!

குறைகள் இல்லாத ஆட்சி இல்லை. ஆனால், டிரம்ப் ஐயா வந்த பின்னர்தான் பலருக்கு சுயபுத்தி வேலை செய்கின்றது.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, நியாயம் said:

குறைகள் இல்லாத ஆட்சி இல்லை. ஆனால், டிரம்ப் ஐயா வந்த பின்னர்தான் பலருக்கு சுயபுத்தி வேலை செய்கின்றது.

"குறைகள் இல்லாத ஆட்சிகள் இல்லை" என்பது சரி. ஆனால், குறையே மையக்கருவாகக் கொண்ட ஆட்சியை அல்லவா ட்ரம்ப் "ஐயா" தருகிறார்?😂

"என்ன பெரிதாக நடந்து விட்டது 100 நாட்கள் கழிந்த பின்னர்?" எனத் தேடிப்பார்த்தால், ஆவணங்கள் இல்லாத குடியேறிகளை "டமாரம்" அடித்து விளம்பரம் செய்து நாடு கடத்தியது மட்டும் தான்! இதை விடச்சிறப்பாக ஒபாமா குற்றவாளிகளான சட்ட விரோதக் குடியேறிகளை நாடு கடத்திய சாதனையைக் கூட எண்ணிக்கையளவில் ட்ரம்ப் இன்னும் முறியடிக்கவில்லை!

  • கருத்துக்கள உறவுகள்

மார்க் கானி, பல சந்ததிகள் கடந்த இங்கிலாந்து அரச குடும்ப இரத்த உறவு நீட்சி தானே.

உரியவருக்கு தான் ஆட்சி கையில் வந்துள்ளது, முடி வழியாக அன்றி சனநாயகம் வழியாக.

Edited by Kadancha
தவறு திருத்தப்பட்டு உள்ளது .

  • கருத்துக்கள உறவுகள்

Canadians give Liberals 4th mandate

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Kadancha said:

மார்க் கானி, பல சந்ததிகள் கடந்த இங்கிலாந்து அரச குடும்ப இரத்த உறவு நீட்சி தானே.

உரியவருக்கு தான் ஆட்சி கையில் வந்துள்ளது, முடி வழியாக அன்றி சனநாயகம் வழியாக.

இது புதிய தகவலாக உள்ளது. உறுதிப்படுத்த முடியுமா?

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, vaasi said:

இது புதிய தகவலாக உள்ளது. உறுதிப்படுத்த முடியுமா?

தமிழ்நாட்டில் ஒருவர் பச்சை இரத்தம் மஞ்சள் இரத்தம் பரிசோதனை நடத்தும் கட்சி வைத்திருக்கின்றார் அவரை தான் அணுக வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, vaasi said:

இது புதிய தகவலாக உள்ளது. உறுதிப்படுத்த முடியுமா?

முதலில், இதை நம்புவது, நம்பாதது உங்களின் விருப்பம்.

நேரடியாக அல்ல, அந்த நேரத்தில் பகிரங்கம் என்று சொல்ல முடியாது, நம்பிக்கை உள்ள துறைசார் இதழ், சஞ்சிகை போன்ற ஊடகத்தின் அச்சு பதிவின் வழியாக நான் அறிந்தது.

  • கருத்துக்கள உறவுகள்

தேர்தல் வெற்றியை உற்சாகமாக நடனமாடி கொண்டாடிய கனடா பிரதமர் மார்க் கார்னி

5 மணி நேரங்களுக்கு முன்னர்

கனடாவின் அரசு செய்தி ஊடகமான சிபிசி நியூஸின் கூற்றுப்படி, மார்க் கார்னியின் லிபரல் கட்சி நாட்டின் பொதுத் தேர்தலில் வெற்றி பெற்றுள்ளது.

மார்க் கார்னி, தனது வெற்றியை நடனமாடி கொண்டாடியதை இந்தக் காணொளியில் பார்க்கலாம்.

மார்க் கார்னி தமது வெற்றி உரையில், "நம் மீது ஆதிக்கம் செலுத்தும் வகையில் அமெரிக்க அதிபர் டிரம்ப் நம்மை உடைக்க முயற்சிக்கிறார். அது ஒருபோதும் நடக்காது" என்று கூறினார் .

மேலும் "அமெரிக்காவுடனான எங்கள் பழைய உறவு இப்போது முடிந்துவிட்டது. அமெரிக்கா செய்த துரோகத்தினால் ஏற்பட்ட அதிர்ச்சியை நாங்கள் கடந்துவிட்டோம்" என்றார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.

https://www.bbc.com/tamil/articles/cgenwr57j1vo

  • கருத்துக்கள உறவுகள்

Canada Election: ஜஸ்டின் ட்ரூடோ ஆட்சியில் கடும் சவால்களை சந்தித்த Liberal மீண்டும் வென்றது எப்படி?

Canada-வில் திங்கட்கிழமை நடைபெற்ற தேர்தலில், மூன்றாவது முறையாக லிபரல் கட்சி வெற்றி பெற்றுள்ளதாக CBC செய்தி முகமை தெரிவித்துள்ளது.

முடிவுகள் முழுமையாக வெளியாகாத நிலையில், பத்து ஆண்டுகளாக ஆட்சி செய்து வரும் Liberal Party முன்னிலையில் உள்ளது. சில நாட்களுக்கு முன் அரசியல் ரீதியான பின்தங்கி இருந்த லிபரல் கட்சியின் குறிப்பிடத்தக்க வெற்றி இதுவாகும்.

#MarkCarney #Canada #DonaldTrump

இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
On 29/4/2025 at 09:31, Kandiah57 said:

நல்லது மீண்டும் கரி. அமைச்சர் ஆவார் இல்லையா??? கனடா மத்திய அரசில். அவர் கரி. ஆனந்தசங்கரி அங்கம் வகிக்கிறது சிறப்பு ஆகும்

ஹரி ஆனந்தசங்கரி நாட்டுப் பற்று உள்ளவர். அத்துடன் திறமைசாலி.

அவர் மீண்டும் அமைச்சராக வர வேண்டும் என்பதே எனது விருப்பம்.

  • கருத்துக்கள உறவுகள்
28 minutes ago, தமிழ் சிறி said:

ஹரி ஆனந்தசங்கரி நாட்டுப் பற்று உள்ளவர். அத்துடன் திறமைசாலி.

அவர் மீண்டும் அமைச்சராக வர வேண்டும் என்பதே எனது விருப்பம்.

நம்புவது நம்பாதது உங்கள் விருப்பம்.

ஹரி ஆனந்தசங்கரி சோழ அரச வம்ச வாரிசு.

ஓலைசுவடியில் நான் படித்து அறிந்தது.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.