Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அவுஸ்திரேலியாவில் இன்று பொதுத் தேர்தல்

ballot-box-780x470.jpg

அவுஸ்திரேலியாவில் இன்று சனிக்கிழமை (03.05.2025) பொதுத் தேர்தல் நடைபெறுகிறது.

பிரதமர் அந்தோணி அல்பனீஸ் தலைமையிலான தொழிலாளர் கட்சியின் ஆட்சிக்காலம் முடிவுக்கு வந்த நிலையில் பிரதமரைத் தெரிவு செய்வதற்காக தேர்தல் இடம்பெறுகிறது.

முன்னதாக பிரதமர் அந்தோணி அல்பனீஸ், வீட்டுவசதி பற்றாக்குறையை சமாளிக்க அடுத்த 5 ஆண்டுகளில் 12 இலட்சம் வீடுகள் கட்டப்படும் என கடந்த 2023 ஆம் ஆண்டு உறுதியளித்தார். ஆனால் அது தொடர்பான நடவடிக்கைகள் வேகமாக மேற்கொள்ளப்படவில்லை.

எனவே ஆளும் கட்சியான தொழிலாளர் கட்சிக்கு இந்த தேர்தல் பெரும் சவாலாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனிடையே திர்க்கட்சித் தலைவர் பீட்டர் டட்டன் தலைமையிலான கன்சர்வேடிவ் கட்சி கூட்டணிக்கு ஆதரவு அதிகரித்துள்ளதாக அரசியல் விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர்.

கடந்த 2022 ஆம் ஆண்டு தேர்தலில் ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சியை ஆதரிக்காத 19 எம்.பி.க்கள் அவுஸ்திரேலிய நாடாளுமன்றத்திற்கு தெரிவாகினர்.

இந்நிலையில், இந்த ஆண்டு பொதுத்தேர்தல் முடிவுகளை தீர்மானிப்பதில் அணிசேரா எம்.பி.க்கள் முக்கிய பக்கு வகிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

அவுஸ்திரேலியாவில் , விலைவாசி உயர்வு மற்றும் வீட்டுவசதி பற்றாக்குறை உள்ளிட்ட பிரச்சினைகள் ஆளும் கட்சிக்கான ஆதரவை பாதிக்கும் என கூறப்படுகிறது.

https://akkinikkunchu.com/?p=323161

  • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, கிருபன் said:

அவுஸ்திரேலியாவில் இன்று பொதுத் தேர்தல்

ballot-box-780x470.jpg

அவுஸ்திரேலியாவில் இன்று சனிக்கிழமை (03.05.2025) பொதுத் தேர்தல் நடைபெறுகிறது.

பிரதமர் அந்தோணி அல்பனீஸ் தலைமையிலான தொழிலாளர் கட்சியின் ஆட்சிக்காலம் முடிவுக்கு வந்த நிலையில் பிரதமரைத் தெரிவு செய்வதற்காக தேர்தல் இடம்பெறுகிறது.

முன்னதாக பிரதமர் அந்தோணி அல்பனீஸ், வீட்டுவசதி பற்றாக்குறையை சமாளிக்க அடுத்த 5 ஆண்டுகளில் 12 இலட்சம் வீடுகள் கட்டப்படும் என கடந்த 2023 ஆம் ஆண்டு உறுதியளித்தார். ஆனால் அது தொடர்பான நடவடிக்கைகள் வேகமாக மேற்கொள்ளப்படவில்லை.

எனவே ஆளும் கட்சியான தொழிலாளர் கட்சிக்கு இந்த தேர்தல் பெரும் சவாலாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனிடையே திர்க்கட்சித் தலைவர் பீட்டர் டட்டன் தலைமையிலான கன்சர்வேடிவ் கட்சி கூட்டணிக்கு ஆதரவு அதிகரித்துள்ளதாக அரசியல் விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர்.

கடந்த 2022 ஆம் ஆண்டு தேர்தலில் ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சியை ஆதரிக்காத 19 எம்.பி.க்கள் அவுஸ்திரேலிய நாடாளுமன்றத்திற்கு தெரிவாகினர்.

இந்நிலையில், இந்த ஆண்டு பொதுத்தேர்தல் முடிவுகளை தீர்மானிப்பதில் அணிசேரா எம்.பி.க்கள் முக்கிய பக்கு வகிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

அவுஸ்திரேலியாவில் , விலைவாசி உயர்வு மற்றும் வீட்டுவசதி பற்றாக்குறை உள்ளிட்ட பிரச்சினைகள் ஆளும் கட்சிக்கான ஆதரவை பாதிக்கும் என கூறப்படுகிறது.

https://akkinikkunchu.com/?p=323161

தமிழர்கள் போட்டியில் இருக்கிறார்களா?? அல்லது சிங்களவரகள்.??

  • கருத்துக்கள உறவுகள்

அவுஸ்ரேலியா தேர்தலில் ஆளும் தொழில் கட்சி வெற்றி பெற்றுள்ளதாக முன்னறிவிக்கப்பட்டுள்ளது.

கனடாவில் நடந்தது போல் அச்செட் டாக அங்கேயும் நடந்தேறியுள்ளது. எதிர் கட்சி தலைவர் தனது தொகுதியில் தோல்வி அடைந்துள்ளார்.

https://www.theguardian.com/australia-news/live/2025/may/03/australian-federal-election-2025-live-news-today-anthony-albanese-labor-peter-dutton-liberal-coalition-greens-polls-vote-odds-results-politics-latest-updates


  • கருத்துக்கள உறவுகள்

தெல்லிப்பழை யூனியன் கல்லூரியின் முன்னாள் ஆசிரியரும், யூனியன் கல்லூரிக் கீதத்தை எழுதியவரும் ஆன கவிஞர் அம்பி அம்பிகைபாகர் அவர்களின் பேத்தி அஷ்வினி அம்பிகைபாகர் அவுஸ்திரேலியா நாடாளுமன்ற தேர்தலில் பார்டன் தொகுதியில் ஆளும் தொழிற்கட்சி சார்பாக வெற்றி பெற்று பாராளுமன்ற அங்கத்தவர் ஆகத் தெரிவாகி உள்ளார்.

  • கருத்துக்கள உறவுகள்

அண்மை வரை அவுசில் வலதுசாரிகள்தான் முன்லையில் நின்றனர்.

ஜஸ்டீன் அண்ணாவின் “தம்பு”வின் புண்ணியத்தில் - இடதுசாரி தொழிற்கட்சி அமோக வெற்றி.

தம்பு வாழ்க😂

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, கந்தப்பு said:

தெல்லிப்பழை யூனியன் கல்லூரியின் முன்னாள் ஆசிரியரும், யூனியன் கல்லூரிக் கீதத்தை எழுதியவரும் ஆன கவிஞர் அம்பி அம்பிகைபாகர் அவர்களின் பேத்தி அஷ்வினி அம்பிகைபாகர் அவுஸ்திரேலியா நாடாளுமன்ற தேர்தலில் பார்டன் தொகுதியில் ஆளும் தொழிற்கட்சி சார்பாக வெற்றி பெற்று பாராளுமன்ற அங்கத்தவர் ஆகத் தெரிவாகி உள்ளார்.

மிக்க மகிழ்ச்சி.

எனது நீண்டநாள் கோரிக்கையான, கனவான Ealam-Tamil Origin Elected Representatives Forum ETOERF உருவாக வேண்டும் .

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, கந்தப்பு said:

தெல்லிப்பழை யூனியன் கல்லூரியின் முன்னாள் ஆசிரியரும், யூனியன் கல்லூரிக் கீதத்தை எழுதியவரும் ஆன கவிஞர் அம்பி அம்பிகைபாகர் அவர்களின் பேத்தி அஷ்வினி அம்பிகைபாகர் அவுஸ்திரேலியா நாடாளுமன்ற தேர்தலில் பார்டன் தொகுதியில் ஆளும் தொழிற்கட்சி சார்பாக வெற்றி பெற்று பாராளுமன்ற அங்கத்தவர் ஆகத் தெரிவாகி உள்ளார்.

ஆமாம் கந்தப்பு அண்ணை இவர் நாவற்குழியை சேர்ந்தவர் எனது அயற் கிராமம்

ஆசி. கந்தராசா அண்ணா பதிந்து இருந்தார். நன்றி வாழ்த்துக்கள் 🙏

  • கருத்துக்கள உறவுகள்

அவுசில் தேர்தல்களில் வாக்கு போடாவிட்டால் தண்டப் பணம் கட்ட வேண்டுமாமே?

வெளிநாடுகளில் இருந்தால்க் கூட கணனி ஊடாக வாக்குகளை செலுத்தலாம் என்கிறார்கள்.

இப்படியான முறையை அமெரிக்காவிலும் கொண்டு வரவேண்டும்.

இங்கு வாக்களிப்பு நிலையத்தில் இளையோர்களைக் காண்பது அரிது.

  • கருத்துக்கள உறவுகள்

495340859_24172869922347194_276049797808

ஆஸ்திரேலியாவில்... அஷ்வினி அம்பிகைபாகர்,

முதல் தமிழ் பாராளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டார்.

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of 2 people

Theivigan Panchalingam 

9h  ·

ஆஸ்திரேலியாவின் 48 ஆவது நாடாளுமன்றத்தைக் கைப்பற்றியுள்ள லேபர் கட்சியின் பெருவெற்றியானது பல அதிசயங்களை நிகழ்த்தியிருந்தாலும், ஆளும் கட்சியின் இமாலய வெற்றியின் நட்சத்திர நாயகி அலி பிரான்ஸ் என்பவர்தான். லிபரல் கட்சியின் முதன்மை வேட்பாளர் பீற்றர் டட்டன் என்ற இரும்பு மனிதன் சுமார் 24 வருடங்களாகத் தக்கவைத்திருந்த அவரது சொந்தத் தொகுதியின் வெற்றியைத் தட்டிப்பறித்து, அவரை நாடாளுமன்றத்திலிருந்தே வெளியேற்றியிருக்கிறார் அலி பிரான்ஸ் என்ற 51 வயதுப் பெண்மணி. அதாவது, பிரதமர் பதவிக்கான வேட்பாளரோ - நடப்பு அமைச்சரவையில் அங்கம் வகிப்பவர்களோ - தங்களது சொந்தத் தொகுதியிலேயே தோல்வியடைந்தால், அவர்கள் அடுத்த நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட முடியாது என்ற ஆஸ்திரேலியத் தேர்தல் விதியின் பிரகாரம் தூக்கியெறியப்பட்டிருக்கிறார் பீற்றர் டட்டன்.

பீற்றர் டட்டனைத் தோற்கடித்துப் பெற்றுள்ள வெற்றியும் அரசியல் பயணமும் தனிப்பட்ட வாழ்க்கையும் அலி பிரான்ஸிற்கு இலகுவாக அமைந்துவிடவில்லை. தொடர்ச்சியான தோல்விகளும் தனிப்பட்ட வாழ்வில் பெரிய காயங்களும் சாவுகளும் நிறைந்த வாழ்வு அலி பிரான்ஸினுடையது.

2011 ஆம் ஆண்டு பிறிஸ்பன் அங்காடியொன்றில் பொருட்களை வாங்கிக்கொண்டு தனது மகனைப் பிறாமில் தள்ளிக்கொண்டு வெளியே வந்தபோது, அங்காடிக்கு வெளியே 88 வயது முதியவர் ஓட்டிவந்த கார் கட்டுப்பாட்டை இழந்து, அலி பிரான்ஸ் மீது பாய, தான் அடியுண்டாலும் பரவாயில்லை, தனது மகனைக் காப்பாற்றிவிடவேண்டும் என்று மகனிருந்த பிறாமைத் தூரத் தள்ளிவிட்டார். வேகமாக வந்த கார் அலி பிரான்ஸ் மீது பாய்ந்து, அவரைச் சுவர் ஒன்றோடு சேர்த்து அறைந்தது. அவரது இடது காலின் நாடி அறுந்து ரத்த வெள்ளத்தில் கிடந்தார். தக்க சமயத்தில் அங்கு ஓடிவந்த இருவர், தங்களது சேர்ட்டைக் கழற்றிக் கிழித்துக் காயத்துக்குக் கட்டுப்போட்டதால் உயிர் தப்பினார். மயிரிழையில் உயிர் தப்பிய அவரது மகன் ஸக், தொலைவில் பிராமோடு சென்று கவிழ்ந்து, நிறுத்திவைக்கப்பட்டிருந்த கார் ஒன்றிற்கு அடியில் சென்று அகப்பட்டுக்கொண்டார். விபத்தை நேரடியாகக் கண்ட தாயொருவர், தனது கைக்குழந்தையை நிலத்தில் கிடத்திவிட்டு, காருக்கு அடியிலிருந்து ஸக்கை இழுத்தெடுத்து காப்பாற்றினார். ஸக் எந்தக் காயமுமின்றி உயிர் தப்பிக்கொண்டார். இந்த விபத்தில் படுகாயமடைந்த அலி பிரான்ஸின் இடது கால் முற்றாக அகற்றப்பட்டது.

அலி பிரான்ஸ் தென்னாபிரிக்காவில் பிறந்து ஆஸ்திரேலியாவுக்கு வந்து, கல்வி கற்று, ஊடகவியலாளராகப் பணியாற்றியவர். அரசியல் என்பது அவரது தகப்பன் வழியாகவும் தொழில் வழியாகவும் அவருக்குள் ஊறிக்கிடந்தது. 2019 ஆம் ஆண்டு, முதல் கணவரிடமிருந்து விவகாரத்தானபோது, அலி பிரான்ஸ் நேரடி அரசியலுக்குள் நுழைய முடிவெடுத்தார். குவீன்ஸ்லாந்து மாநிலத்தில் பீற்றர் டட்டனின் டிக்ஸன் தொகுதியில் லேபர் கட்சி சார்பில் களமிறங்கினார். முதலாவது தேர்தலில் தோல்வியடைந்தார். 2022 ஆம் ஆண்டு தேர்தலிலும் டட்டனுக்கு எதிரான போட்டியில் டிக்ஸன் தொகுதியில் தோல்வியடைந்தார்.

பத்து வருடங்களுக்கு முன்னர் விபத்தில் காலைக் காவுகொண்டதோடு சற்று ஓய்வெடுத்த அவரது விதி, 2022 இல் மீண்டும் கலையாடத் தொடங்கியது.

மூத்த மகன் ஹென்றியை புற்றுநோய் தாக்கியது. சம நேரத்தில் முன்னாள் கணவரும் புற்றுநோயினால் பாதிக்கப்பட்டார். 2023 ஆம் ஆண்டு அலி பிரான்ஸின் முன்னாள் கணவர் புற்றுநோயினால் காலமானார்.

கடந்த வருடம் மகன் ஹென்றியும் புற்றுநோயால் காலமானார்.

ஆறு மாத இடைவெளியில் முன்னாள் கணவரையும் மகனையும் இழந்த வலியும் விரக்தியும் தன்னைச் சூழ்ந்து கிடந்தாலும், 2025 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் மூன்றாவது தடவையாக பீற்றர் டட்டனை எதிர்த்துப் போட்டியிடுவதற்கு அலி பிரான்ஸ் உறுதியோடு எழுந்தார். ஒற்றைக் காலோடும் ஓர்மத்தோடும் டிக்ஸன் தொகுதியெங்கும் பிரச்சாரத்திற்காக ஏறி இறங்கினார். கிட்டத்தட்டக் கால் நூற்றாண்டு காலமாக தனது சொந்தத் தொகுதியில் கோலோச்சிக்கொண்டிருந்த லிபரல் கட்சியின் அதி சக்தி வாய்ந்த பீற்றர் டட்டனை வீழ்த்துவது என்பது லேசான காரியமல்ல என்பது லேபர் கட்சியனருக்கும் தெரிந்ததுதான். இம்முறைத் தேர்தல் என்பது லேபருக்கு அநேக இடங்களில் வெற்றியை ஈட்டிக்கொடுக்கும் என்பது முன்னரே ஊகிக்கக்கூடியதாயிருந்தபோதும், பீற்றர் டட்டன் என்ற ஆஸ்திரேலியாவின் இரும்பு மனிதனை தோற்கடிப்பது என்பதெல்லாம் அவ்வளவு எளிதாகியிருக்கவில்லை.

ஆனால், அலி பிரான்ஸ் ஆஸ்திரேலிய அரசியலில் தனது வெற்றியினால் மாத்திரமல்லாமல், எதிரிக்கு இழைத்த தோல்வியின் மூலமும் அழிக்கமுடியாத வெற்றித்தடத்தைப் பதித்தார். தேர்தல் முடிவுகள் வெளியாகிக்கொண்டிருந்த ஒரு மணி நேரத்திலேயே டட்டனின் தோல்வி தொலைக்காட்சியில் மின்னத் தொடங்கியது. தேசிய நாயகியாக அலி பிரான்ஸின் பெயர் திரையெங்கும் பளிச்சிடத்தொடங்கியது.

அலி பிரான்ஸ், ஆறு வருடப்போராட்டத்தினால் கிடைத்த சாதனை வெற்றியை இரு கைகளில் ஏந்திக்கொண்டு எதிர்வரும் ஒன்பதாம் திகதி கன்பரா நாடாளுமன்றத்திற்குள் நுழையப்போகிறார்.

ஆஸ்திரேலிய அரசியல் வரலாற்றில் பிரதமர் பதவிக்காகப் போட்டியிட்டவர்கள் தங்களது சொந்தத் தொகுதியிலேயே தோல்வியடைந்தது, இதுவரை மூன்று தடவைகளே இடம்பெற்றிருக்கின்றன. முதன் முதலாக 1929 இல் இடம்பெற்றது. அதன் பின்னர் 2007 இல் முன்னாள் பிரதமர் ஜோன் ஹவாடிற்கு ஏற்பட்ட படுதோல்வியுடன் அவர் அரசியலில் இருந்தே விலகினார். தற்போது பீற்றர் டட்டனுக்கு ஏற்பட்டுள்ளது.

சாதனை நாயகிக்கு வாழ்த்துகள்


  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, யாயினி said:

தங்களது சொந்தத் தொகுதியிலேயே தோல்வியடைந்தால், அவர்கள் அடுத்த நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட முடியாது என்ற ஆஸ்திரேலியத் தேர்தல் விதியின் பிரகாரம் தூக்கியெறியப்பட்டிருக்கிறார் பீற்றர் டட்டன்.

அட இது நல்லாயிருக்கே.

இலங்கையிலும் இப்படி சட்டத்மை அமுல் படுத்த வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

ஆஸ்திரேலியாவில் ஆண்டனி அல்பனீசி அலை - தேர்தலில் அபார வெற்றி

ஆஸ்திரேலியா

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,ஆண்டனி அல்பனீசி

4 மே 2025, 02:37 GMT

புதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர்

ஆஸ்திரேலியாவின் பொதுத்தேர்தலில், பாரிய பெரும்பான்மையுடன் தொழிலாளர் கட்சியை சேர்ந்த ஆண்டனி அல்பனீசி மீண்டும் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

கடந்த 20 ஆண்டுகளில், அடுத்தடுத்த பொதுத்தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியமைக்கும் முதல் பிரதமராக ஆண்டனி அல்பனீசி உள்ளார்.

"பிரதமராக பணியாற்றுவது எனது வாழ்வின் மிகப்பெரிய பெருமை. இந்த பூமியின் சிறந்த நாட்டிற்கு தொடர்ந்து சேவை செய்வதற்கான வாய்ப்பளித்த ஆஸ்திரேலிய மக்களுக்கு நன்றி", என்று தனது வெற்றி உரையில் ஆண்டனி அல்பனீசி கூறினார்.

அதிகாரப்பூர்வ வாக்கு எண்ணிக்கை இன்னும் முடியடையவில்லை, ஆனாலும் அல்பனீசி தலைமையிலான தொழிலாளர் கட்சி அதிக இடங்களில் வெற்றி பெற்று பெரும்பான்மையை பெற்றுள்ளது. அதே நேரத்தில் லிபரல்- தேசிய கூட்டணி நாடு முழுவதும் படுதோல்வி அடைந்துள்ளது.

ஏபிசி செய்திகளின் கணிப்புகளின்படி, தொழிலாளர் கட்சி 85 இடங்களிலும், லிபரல்-தேசிய கூட்டணி 41 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன. தற்போது வரை 65 சதவீத வாக்குகள் எண்ணப்பட்டுள்ளன.

கடந்த மூன்று ஆண்டுகளாக உலக பொருளாதார நெருக்கடி, மற்றும் அந்நாட்டில் அரசாங்கத்திற்கு எதிராக அதிகரித்து வந்த அதிருப்திக்குப் பிறகு, இந்த பொதுத் தேர்தலில் அல்பனீசி வெற்றி பெற்றிருப்பது முக்கிய திருப்புமுனையாக உள்ளது.

ஆஸ்திரேலியா

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,பீட்டர் டட்டன்

சனிக்கிழமை (மே 3) அன்று, தனது வெற்றி உரையில் ஆண்டனி அல்பனீசி, தனது தேர்தல் பிரசாரத்தில் பேசப்பட்ட சில முக்கியமான விஷயங்களை குறிப்பிட்டார். அவற்றில் புலம்பெயர்வு, காலநிலை மாற்றம், எரிசக்தி ஆகியவை அடங்கும்.

அப்போது அவர் தேர்தல் வாக்குறுதிகளை மீண்டும் குறிப்பிட்டார்

"சுகாதாரப் பராமரிப்பு செலவுகளைக் குறைப்பேன், குறிப்பாக பொது மருத்துவரை பார்ப்பது குறைந்த செலவில் இருக்க ஏற்பாடுகள் செய்து தருவேன். ஆஸ்திரேலிய மக்கள் பலர் சொந்தமாக வீடு வாங்குவதை எளிதாக்குவேன். காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ளவும் சுற்றுச்சூழலைப் பாதுகாக்கவும் இன்னும் தீவிரமாக வேலை செய்வேன்", என்று அவர் உறுதியளித்தார்.

ஆஸ்திரேலியாவின் பூர்வகுடி மக்களுடன் நல்லிணக்கத்தை மேம்படுத்த உறுதியளித்தார்.

"பூர்வகுடி ஆஸ்திரேலிய மக்களுக்கும் மற்ற ஆஸ்திரேலிய மக்களுக்கும் இடையிலான இடைவெளியை குறைக்கும்போது நாம் ஒரு வலிமையான நாடாக இருக்க முடியும்", என்று அவர் கூறினார்.

ஆல்பனீசியின் மிக முக்கியமான முன்னெடுப்புகளில் ஒன்றாக "தி வாய்ஸ்" என்பது பூர்வகுடி மக்களின் கருத்துக்களை அரசாங்கத்திற்கு கொண்டு செல்லும் ஒரு அமைப்பு.

ஆனால், பல மாதங்களாக நடந்த கடுமையான மற்றும் பிளவுபடுத்தும் தேசிய விவாதத்திற்குப் பிறகு, அது அந்நாட்டின் மக்களால் பெருமளவில் நிராகரிக்கப்பட்டது. இது அவருக்கு ஏற்பட்ட குறிப்பிடத்தக்க பின்னடைவாகும்.

தேர்தல் நெருங்கும் நேரத்தில், ஆல்பனீசிக்கு மக்கள் மத்தியில் ஆதரவு குறையத் தொடங்கியது. இதனால் அவர் இந்த தேர்தலில் தோல்வியடைய வாய்ப்புள்ளதாக கருதப்பட்டது.

எதிர்கட்சி கூட்டணியாக லிபரல் - தேசிய கூட்டணியின் தலைவரான பீட்டர் டட்டன் இந்த பொதுத் தேர்தலில், தான் போட்டியிட்ட தொகுதியியான டிக்சனில் தோல்வியடைந்தது எதிர்கட்சிக்கு ஒரு மிகப்பெரிய பின்னடைவாக இருக்கிறது.

"நான் இந்த நாட்டை நேசிக்கிறேன், அதற்காக கடுமையாகப் போராடியிருக்கிறேன்," என்று பிரிஸ்பேனில் ஆதரவாளர்களிடம் பேசிய பீட்டர் டட்டன் தனது தோல்வியை ஒப்புக்கொண்டார்.

''நம்மை எதிர்த்து போட்டியிட்டவர்கள், இந்த தேர்தலில் நம்மை பற்றி குறிப்பிட்டது உண்மையல்ல. ஆனால், நாம் மீண்டும் தொடங்கி கட்டியெழுப்புவோம். நாங்கள் இதை செய்வோம்,ஏனெனில் எங்களின் கொள்கைகள் மற்றும் நம்பிக்கைகள் குறித்து எங்களுக்கு தெரியும்.நாங்கள் தொடந்து அதில் உறுதியாக இருப்போம்''என்று அவர் தெரிவித்தார்

பிரசாரத்தில், பீட்டர் டட்டன் செய்த சில தவறுகள் குழப்பத்தை ஏற்படுத்தின. குறிப்பாக, சில கொள்கைகளை மாற்றி மாற்றி சொன்னது, விலை வாசி போன்ற முக்கிய விஷயங்களை பேசும்போது தவறு செய்தது போன்றவற்றை குழப்பத்தை ஏற்படுத்தின. குறிப்பாக ஆஸ்திரேலியன் ஃபுட்பல் லீக் (AFL) போட்டி ஒன்றில் பந்தை கேமராமேனின் தலையில் அடித்தது போன்ற சம்பவங்கள் அவரது பிரசாரத்திற்கு பின்னடைவாக அமைந்தன.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.

https://www.bbc.com/tamil/articles/cly10zd5nwxo

  • கருத்துக்கள உறவுகள்

495041700_704284332272071_69137537590439

495176439_704279338939237_84386476684518

அவுஸ்திரேலிய பிரதமர் அன்டனி அல்பனீஸ் உடன் அஷ்வினி அம்பிகைபாகர்.

பிரிட்டன், கனடாவைத் தொடர்ந்து அவுஸ்ரேலியாவிலும் ஈழத்தமிழர் ஒருவர்

தேர்தலில் வெற்றி பெற்றுள்ளார். அவருக்கு பாராட்டுகளும் வாழ்த்துகளும்.

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர் ஒருவர் அவுஸ்திரேலிய பாராளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப் பட்டமைக்கு, அவுஸ்திரேயாவில் வாழும் சிங்களவருக்கு ஒரே வயித்தெரிச்ச்சலாக இருந்திருக்குமே.... 😂

எரியட்டும் , எரியட்டும்... நல்லாய் எரியட்டும். 🤣

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, ஈழப்பிரியன் said:

அவுசில் தேர்தல்களில் வாக்கு போடாவிட்டால் தண்டப் பணம் கட்ட வேண்டுமாமே?

வெளிநாடுகளில் இருந்தால்க் கூட கணனி ஊடாக வாக்குகளை செலுத்தலாம் என்கிறார்கள்.

இப்படியான முறையை அமெரிக்காவிலும் கொண்டு வரவேண்டும்.

இங்கு வாக்களிப்பு நிலையத்தில் இளையோர்களைக் காண்பது அரிது.

தேர்தலில் 80 வயதுக்காரர் போட்டியாளர்கள் என்றால் இளைஞர்கள் வாக்கு போடுவார்களா?? 🤪😂. வயோதிபர்கள். வாக்கையும். போடாட்டுமென்று விலகி இருக்கிறார்கள் ஒரு இருபது வயது பெண்ணை களமிறங்கிப். பாருங்கள் இளைஞர்கள் வாக்குப் பலத்தை அறிய முடியும்

16 hours ago, தமிழ் சிறி said:

495340859_24172869922347194_276049797808

ஆஸ்திரேலியாவில்... அஷ்வினி அம்பிகைபாகர்,

முதல் தமிழ் பாராளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டார்.

இவர் சசி வர்ணத்தின். ஊர்காரி ....சசி எட்டிக்கூட. பார்க்கவில்லை ஒரு வாழ்த்துகூட. சொல்லவில்லை

10 hours ago, ஈழப்பிரியன் said:

அட இது நல்லாயிருக்கே.

இலங்கையிலும் இப்படி சட்டத்மை அமுல் படுத்த வேண்டும்.

நம்ம சுமத்திரனுக்கு அப்பு வைக்கும் பிளான். போல் இருக்கிறது ....அமுல் செய்தால் அர்ச்சுனாக்கள் எண்ணிக்கை கூடும் பிறகு நீங்கள் அழுவீர்கள் 🤣

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, Kandiah57 said:

இவர் சசி வர்ணத்தின். ஊர்காரி ....சசி எட்டிக்கூட. பார்க்கவில்லை ஒரு வாழ்த்துகூட. சொல்லவில்லை

@Sasi_varnam animiertes-gefuehl-smilies-bild-0145.gif எங்கிருந்தாலும் உடனடியாக மேடைக்கு வரும்படி அழைக்கின்றோம். animiertes-gefuehl-smilies-bild-0145.gif

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
15 hours ago, தமிழ் சிறி said:

அவுஸ்திரேலிய பிரதமர் அன்டனி அல்பனீஸ் உடன் அஷ்வினி அம்பிகைபாகர்.

பிரிட்டன், கனடாவைத் தொடர்ந்து அவுஸ்ரேலியாவிலும் ஈழத்தமிழர் ஒருவர்

தேர்தலில் வெற்றி பெற்றுள்ளார். அவருக்கு பாராட்டுகளும் வாழ்த்துகளும்.

தமிழ் இனத்தை சேர்ந்தவர்கள் என பெருமைப்படலாமே தவிர வேறேதும் இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்

சிங்கலவர்கள் யாழ்பாணத்தை ஜேவிபி கைப்பற்றிய மகிழ்ச்சியில் ஐஸ்கிறீம் குடித்து கொண்டிருக்கிறார்கள்.அவர்களுக்கு அவுஸ்ரேலியாவில் ஆஷ் அம்பிகைபாகரோ அல்லது பியோனா டுஸ்கோ அல்லது மனால் பஹ்சா யார் வென்றால் தான் என்ன

  • கருத்துக்கள உறவுகள்
On 4/5/2025 at 08:22, தமிழ் சிறி said:

@Sasi_varnam animiertes-gefuehl-smilies-bild-0145.gif எங்கிருந்தாலும் உடனடியாக மேடைக்கு வரும்படி அழைக்கின்றோம். animiertes-gefuehl-smilies-bild-0145.gif

வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்

கவிஞர் அம்பிகைபாகர்பற்றி கேள்விப்பட்டிருக்கிறேன். சந்தித்ததில்லை. ரெட்டிப்பு சந்தோசம். ❤️

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.