Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, இணையவன் said:

முதலாவது ரடார்களில் படாதவாறு மிகத் தாழ்வாக தரையோரமாகப் பறந்து சென்று தாக்குவது.

cruise missile பயணிக்கும் முறை, நிலம் அல்லது நீர்மட்டத்தோடு ஒற்றி.

எந்த மின்காந்த அலைகளும் (ரேடார், laser ..) அப்படி நிலம் அல்லது நீர்மட்டத்தோடு ஒற்றி, சக்தி இழக்காது பிரயாணிக்க முடியாது. (ஒப்பீடு, இடி, மின்னலையே, அதாவது அவ்வளவு சக்தியை நிலம், நீர் உறுஞ்சி விடுகிறது )

அது தான் மிக கடினம் cruise missile ஐ அடையாளம் காண்பது

அப்படி, நில, நீர்பரப்பை தன்மையை (உ.ம். மலைப்பாங்கில் கடினம்) பொறுத்து, போர்விமானகளும் பயணிக்க முடியும்.

மிகச் சிறந்த வரலாற்று உதாரணம், இஸ்ரேல் போர்விமானங்கள் , அப்படி சினாய் (எகிப்து) இல் இருந்து தாழ்ந்து நிலத்தோடு ஒற்றி பறந்து , எகிப்த்தின் ரேடார் இல் விழாமல் , எகிப்து போர்விமான தரிப்பு இடத்தை அடைந்து, எகிப்தின் விமான படையின் எல்லா போர் வினங்களையும் ஒரே தடவையில் அழித்தது.

(அனால், எகிப்தின் சிந்திக்காத விமானப்படைக்கு, ஏன் போர் விமானங்களை?, எந்த படையாவது எல்லா போர் விமானங்களையும் ஓர் இடத்தில திறந்த வெளியில் தரித்து வைக்குமா?, சிந்தித்து இருந்தால்)

பாகிஸ்தான் விமானப்படையில் தெரிவது இஸ்ரேல் இன் சிந்தித்து, நிதானித்து, திட்டம் தீட்டி, பொறிவைத்து அடிக்கும் போக்கு.

  • Replies 575
  • Views 23.1k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Most Popular Posts

  • நிழலி
    நிழலி

    ஒரு காலத்தில் எந்த நாட்டு கிரிக்கெட் அணியுடன் விளையாடினாலும், கண்ணை மூடிக் கொண்டு இந்தியாவை ஆதரித்த ஈழத்தமிழினம், இன்று போரின் போது கூட இந்தியா மோசமாக அடி வாங்க வேண்டும் என்று நினைக்கும் வன்ம மனநிலை எ

  • vasee
    vasee

    தமது அரசியல் இலாபங்களுக்காக உயிர்களை பலியிடும் அரசியல்வாதிகளை விடவா மோசமாகியுள்ளோம், இரண்டு நாட்டு முட்டாள் அரசியல்வாதிகளும் அவர்களை தெரிவு செய்த முட்டாள்களும்தான் இந்த போருக்கு எண்ணெய் ஊற்றி கொழு

  • நிழலி
    நிழலி

    இந்தியா சொன்ன மாதிரி பாகிஸ்தானை தாக்கிவிட்டது. பாகிஸ்தான் அணுகுண்டு எல்லாம் தங்களிடம் உள்ளது, அவற்றால் திருப்பி தாக்குவோம் என்ற மாதிரி சொன்ன கதையை எப்போது செய்து காட்டப் போகின்றார்கள்?

  • கருத்துக்கள உறவுகள்

495198731_706131061903494_29122168450610

  • கருத்துக்கள உறவுகள்
25 minutes ago, ரசோதரன் said:

👍...............

2020ம் ஆண்டு இந்தியா வல்லரசாகும் இந்திய அரசியல்வாதிகளும், அவர்களை நம்பிய இந்திய மக்களும் ஒரு காலத்தில் சொல்லிக் கொண்டிருந்தார்கள். அந்தக் காலகட்டத்திலேயே என்னுடைய சில இந்திய நண்பர்கள் 3020ம் ஆண்டில் கூட தாங்கள் ஒரு வல்லரசாக வர முடியாது என்ற உண்மையை தெளிவாக காரணங்களுடன் சொல்லுவார்கள். சில மதிய இடைவேளைகளில் இரண்டாகப் பிரிந்து நின்று வாக்குவாதப்படுவார்கள்.

வட இந்தியா, தென் இந்தியா என்று உள்நாட்டில் இருக்கும் அபிவிருத்தி இடைவெளி ஒரு காரணம் என்றால், அபிவிருத்தி அடைந்ததாக சொல்லிக்கொள்ளும் தென் இந்திய மாநிலங்களில் இருக்கும் சமூகநீதியின் சீர்கேடான நிலைமை அவர்களை மேலே செல்ல விடாமல் தடுத்துக் கொண்டிருக்கின்றது.

உதாரணமாக, தமிழ்நாட்டில் ஓரிரு மாதங்களின் முன் மோட்டார் சைக்கிள் ஓடினார் என்பதற்காக பட்டிலியன இளைஞர் ஒருவரின் கைகள் அதே ஊரைச் சேர்ந்த வேறு சிலரால் வெட்டப்பட்டன. தமிழ்நாட்டிலேயே தினமும் இப்படியான கொடுமைகள் நடந்து கொண்டிருக்கின்றது. மற்றைய மாநிலங்களின் நிலை இதைவிடக் கொடுமை. இந்தியாவில் ஒரு சமச்சீரான முன்னேற்றம் வரும் என்ற நம்பிக்கை முற்றுமுழுதாக அற்றுப் போய்விட்டது.

நேபாளத்தையும், இலங்கையையும், மாலதீவையும், பூட்டானையும் சுற்றிவர வைத்துக் கொண்டு இந்தியா அதன் வலிமை இது என்று நினைக்கின்றது. ஒன்றுமேயில்லாதா பாகிஸ்தானுடன் கூட ஒரு திட்டவட்டமான நடவடிக்கையை இந்தியாவால் நடத்த முடியாது. இந்த யுத்தத்தாலும், உடனேயே வந்த யுத்த நிறுத்தத்தாலும் இந்தியாவிற்கு கிடைத்ததோ அல்லது இந்தியா சாதித்ததோ ஒன்றுமேயில்லை. மாறாக, இன்னும் சில காலத்தில் பாகிஸ்தான் ஆதரவு பெற்ற தீவிரவாதிகள் மீண்டும் இந்தியாவிற்குள் புகுந்து இன்னொரு தாக்குதலை நடத்துவதைக் கூட இந்தச் சம்பவங்கள் எந்த வகையிலும் தடுக்கப் போவதுமில்லை.

ஓம் ஒம் இந்த‌ வ‌ல்ல‌ர‌சு பூச்சாண்டி க‌தை என‌க்கு தெரிந்து 2002 அந்த‌க் கால‌ ப‌குதியில் உருட்ட‌ தொட‌ங்கின‌வை இப்ப‌ 2025ம் ஆண்டு

உண்மை தான் குரு இந்திய‌ர்க‌ள் ஒற்றுமை இல்லை...................சில‌ வ‌ருட‌ங்க‌ளுக்கு முத‌ல்

த‌மிழ் நாட்டில் இருந்து டெல்லிக்கு விளையாட்டு ப‌யிற்ச்சிக்கு போன‌ பிள்ளைக‌ளுக்கு அங்கு வைச்சு முர‌ட்டு த‌ன‌மாய் அடி விழுந்த‌து..................ப‌யிற்ச்சிக்கு போன‌ பிள்ளைக‌ள் க‌ட‌சியில் அடி வேண்டி கொண்டு த‌மிழ் நாடு திரும்பின‌வை...................

இந்தியா காற்றுப் போன‌ ப‌லூன் என்று ப‌ல‌ருக்கு தெரிந்த‌ விடைய‌ம் , ஒரு க‌தைக்கு எங்க‌ட‌ போராளிக‌ளிட‌ம் ச‌ம‌ ப‌ல‌ ஆயுத‌ம் இருந்து இருக்க‌னும் இந்திய‌னால் எங்க‌ட‌ போராளிக‌ளை கூட‌ வென்று இருக்க‌ மாட்டின‌ம்👍.....................2009க‌ளில் இந்தியா செய்த‌ ச‌தி வேலைக‌ள் நீங்க‌ள் அறிந்து இருப்பிங்க‌ள்......................இந்தியா முன்னாள் பிர‌த‌ம‌ர் வாஜ்பாய் ஆட்சியில் இருந்த‌ போது ஆனையிற‌வு ச‌ம‌ருக்கு தேவையான‌ ஆயுத‌ங்க‌ள் எல்லாம் வ‌ன்னிக்கு ச‌ரியான‌ நேர‌த்தில் வ‌ந்து சேர்ந்த‌து................அப்போது இந்திய‌ அர‌சு எங்க‌ட‌ போராட்ட‌த்துக்கை மூக்கை நுழைக்க‌ வில்லை அத‌னால் சிர‌ம‌ம் இல்லாம‌ எல்லா ஆயுத‌ க‌ப்ப‌லும் வ‌ந்த‌து................2004க‌ளில் காங்கிர‌ஸ் மீண்டும் ஆட்சிக்கு வ‌ந்த‌ கையோட‌ எம்மவ‌ர்ளின் ஆயுத‌ க‌ப்ப‌ல்க‌ளை சிங்க‌ள‌ நேவியுட‌ன் சேர்ந்து க‌ட‌லில் வைச்சு மூழ்க‌டித்த‌வை......................

க‌ட‌சியில் எல்லா ப‌க்க‌த்தையும் மூடி விட்டு தானே எம்ம‌வ‌ர்க‌ளை உல‌கில் த‌டை செய்ய‌ப் ப‌ட்ட‌ குண்டுக‌ளை போட்டு அழித்த‌வை....................

இந்தியா இந்த‌ நூற்றாண்டில் வ‌ல்ல‌ர‌சு ஆக‌ போவ‌து கிடையாது சும்மா வாயால் வ‌டை சுட்டு கால‌த்தை ஓட்ட‌ ச‌ரி.....................வைக்கோ சொன்ன‌து போல் 100வ‌து சுத‌ந்திர‌ தின‌த்தின் போது இந்தியா என்ர‌ நாடே இருக்காது என்றார்....................ஜ‌யா வைக்கோவின் இந்த‌ விருப்ப‌ம் நிறைவேற‌ட்டும் குரு🙏👍...................................

  • கருத்துக்கள உறவுகள்
44 minutes ago, ரசோதரன் said:

சில மதிய இடைவேளைகளில் இரண்டாகப் பிரிந்து நின்று வாக்குவாதப்படுவார்கள்.

ஆகா நல்ல ரேஸ்ற் கிடைத்திருக்கு.

மதியநேரத்தை ஒரு மாதத்திற்கென்றாலும் ஒரு மணிநேரம் கூட்டித் தர விண்ணப்பிக்க வேண்டும்.

6 minutes ago, தமிழ் சிறி said:

495198731_706131061903494_29122168450610

மாணவிகளையே பிய்த்து உதறித் தள்ளுகிறார்களே ஐயாவுக்கு தெரியாதோ?

சிலவேளை நம்ம நாட்டான் எதுவும் செய்யலாம்.

அடுத்த நாட்டான் தொடக் கூடாது என்கிறாரோ?

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, ஈழப்பிரியன் said:

மாணவிகளையே பிய்த்து உதறித் தள்ளுகிறார்களே ஐயாவுக்கு தெரியாதோ?

சிலவேளை நம்ம நாட்டான் எதுவும் செய்யலாம்.

அடுத்த நாட்டான் தொடக் கூடாது என்கிறாரோ?

காசா... பணமா... சும்மா அடித்து விடுவதுதானே, கண்டுக்க கூடாது.

இந்த உருட்டு... அடுத்த தேர்தலில் வெல்ல போதுமானது.

இந்தியர்கள்... கண்ணை மூடிக் கொண்டு, மோடிக்கு வாக்களிப்பார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, தமிழ் சிறி said:

காசா... பணமா... சும்மா அடித்து விடுவதுதானே, கண்டுக்க கூடாது.

இந்த உருட்டு... அடுத்த தேர்தலில் வெல்ல போதுமானது.

இந்தியர்கள்... கண்ணை மூடிக் கொண்டு, மோடிக்கு வாக்களிப்பார்கள்.

அதுக்கு இன்னும் 4வ‌ருட‌ம் இருக்கு பாராள‌ ம‌ன்ற‌ தேர்த‌ல் நாட‌க‌த்துக்கு...................காற்றுப் போன‌ ப‌லூன வாய் இல்லாட்டி நாய் க‌வ்விட்டு போய் விடும்.............................

  • கருத்துக்கள உறவுகள்

தலைவர் பேரணி நடத்துன ஒரு மணி நேரத்துலயே போரை நிறுத்திட்டாங்க..

அவங்க அப்பனையே மிஞ்சிட்டான் பாரேன் இந்த பய...

12 hours ago, ஏராளன் said:

நாம் தற்போது போர்ச் சூழலில் இருக்கிறோம். இழப்புகள் என்பது போர்ச்சூழலில் பொதுவானது

எங்கப்பன் குதிருக்குள் இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, தமிழ் சிறி said:

இந்தியா… இலங்கையில் அப்பாவி பொது மக்களையும், மாணவர்களையும் சுட்டுக் கொன்றுவிட்டு, பயங்கரவாதிகளை அழித்தோம் என்று அறிக்கைகள் விட்டதை நேரில் பார்த்தோமே.

இந்தியா கூறும் தகவல்கள் வடித்து எடுத்த பொய் மூட்டைகள்.

மோதி என்ன கூறுகிறார்

  • கருத்துக்கள உறவுகள்
31 minutes ago, புலவர் said:

தலைவர் பேரணி நடத்துன ஒரு மணி நேரத்துலயே போரை நிறுத்திட்டாங்க..

அவங்க அப்பனையே மிஞ்சிட்டான் பாரேன் இந்த பய...

எங்கப்பன் குதிருக்குள் இல்லை.

க‌ருனாஸ் வேர‌ ஓவ‌ரா கூவிகிறார்

இதை தான் சொல்ர‌து கால‌க் கொடுமை..........................இதையும் ந‌ம்ப‌ சில‌ கூ முட்டைக‌ள் த‌மிழ் நாட்டில் இருக்கு..................................

19 minutes ago, nunavilan said:

மோதி என்ன கூறுகிறார்

ஏதோ ஹிந்தியில் தெரு நாய் மாதிரி குரைக்கிறார்

காற்றுப் போன‌ ப‌லூனால் இப்ப‌டி அறிக்கை விட்டு சொந்த‌ நாட்டு ம‌க்க‌ளை ஏமாற்ற‌ ந‌ல்லா க‌ற்றுக் கிட்டார்................2014ம் ஆண்டு அர‌பி நாட்டு ப‌ட‌ங்க‌ளை எடுத்து , இது மோடி குஜ‌ராத்தை க‌ட்டி எழுப்பின‌ இட‌ங்க‌ள் என்று இணைய‌த்தில் ப‌ர‌ப்பி அதில் இவ‌ர் வெற்றியும் க‌ண்ட‌வ‌ர்😁............................

  • கருத்துக்கள உறவுகள்

33 minutes ago, வீரப் பையன்26 said:

ஏதோ ஹிந்தியில் தெரு நாய் மாதிரி குரைக்கிறார்

காணொளியின் கீழ் தமிழாக்கம் எழுத்தில் வருகிறது பையா..

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, nunavilan said:

காணொளியின் கீழ் தமிழாக்கம் எழுத்தில் வருகிறது பையா..

ஓம் அண்ணா

த‌மிழில் கீழ‌ வ‌ருது

அவ‌ர் சொல்வ‌து ப‌ச்சை பொய் என்று வெளிப்ப‌டையாய் தெரியுது

ஆர‌ம்ப‌த்தில் நாங்க‌ள் பாக்கிஸ்தான் மீது போர் தொடுக்க‌ வில்லை பாக்கிஸ்தான் தீவிர‌ வாதிக‌ள் மீது தான் போர் தொடுத்தோம்................இப்போது பாக்கிஸ்தான் எங்க‌ட‌ தாக்குத‌ல க‌ண்டு ப‌ய‌ந்து விட்ட‌து போல் சொல்லுகிறார்........................வின்ன‌ர் ப‌ட‌க் காமெடி அடிச்ச‌ கைப்புள்ளைக்கே இவ‌ள‌வு காய‌ம் என்றால் அடி வேண்டின‌வ‌ன் உயிரோட‌ இருப்பான‌ என்ன‌ ஹா ஹா😁................................நாட்டு ம‌க்க‌ளை ஏமாற்ற‌ இந்த‌ வெட்டி பேச்சு👎...................இந்திரா காந்தி அம்மையாரை இந்தியாவில் புகழ் பாட‌ தொட‌ங்கிட்டின‌ம்🙏🥰...................பிஜேப்பிக்கு அது செம‌ க‌டுப்பாய் இருக்கும்...................அந்த‌ மூதாட்டி அந்த‌க் கால‌த்திலே அமெரிக்க‌ன்ட‌ த‌லையிட்டை வெளிப்ப‌டையாய் எதிர்த்த‌வா....................இந்த‌ காற்றுப் போன‌ ப‌லூன் அமெரிக்காவுக்கு அடி ப‌ணிந்து விட்டார்😁.............................

  • கருத்துக்கள உறவுகள்
On 11/5/2025 at 17:44, Kadancha said:

இந்தியா, பாக்கிஸ்தான் நிறுத்தியது (அமெரிக்காவால் நிறுத்தவைக்கப்பட்டது), சீன தொழில்நுட்பம் உண்மையில் விஞ்சியது மட்டும் காரணம் இல்லை.

(பாரிய பொருளாதார, போர்விமான / ஏவுகணை தொழில்நுட்பம் பொருளாதாரத்தையம் கடந்து, மறுவளமாக, இந்தியா ஓங்கி இருந்தால், அமெரிக்கா, மேற்கும் பெரிய முயற்சி எடுத்து இருக்காது)

இந்த விடயத்தில், மேற்கு மற்றும் இந்திய ஆய்வாளராது, சளப்பும் கதையான, tactics ஆல் நடத்து இருக்கலாம் என்பது.

சீன பாகிஸ்தானுக்கு tactics இல் மேற்கு அளவு போர்விமான வான் (நாய்ச்)சண்டையில் (dog fighting) அனுபவம், புடம் போடப்பட்டது இல்லை.

இந்தியாவின் போர்விமான வான் (நாய்ச்)சண்டை (dog fighting) பயிற்சி, tactics மேற்கில் இருந்து; இந்தியா மேலும் களத்துக்கு ஏற்ப மாற்றங்கள், அதன் பார்வையில் மெருகூட்டுதல் செய்து இருக்கலாம்.

எனவே, சீனா, பாகிஸ்தானுக்கு பயிற்றுவித்த போர்விமான வான் (நாய்ச்)சண்டை (dog fighting) கோட்பாடுகள், tactics இல் புதுமைத்துவதை சீன செய்து இருக்கிறது, தொழிநுட்ப புதுமைத்துவதுடன்.

இதில், முக்கிய அம்சம், பாகிஸ்தானிடம் இருக்கும் போர்விமானம், ஆகாய-ஆகாய ஏவுகணைகள், tactics சீன அதுக்கு வைத்து இருபதின் மட்டுப்படுத்தப்பட்ட வினைத்திறனும், தொழில்நுட்ப மெருகும். (சரவதே ஆயுத, தொழில்நுட்ப வர்தகத்தில் விற்கும் நாடுகள் சாதாரணமாக செய்வது).

ஆயினும், பாகிஸ்தான், இந்தியா களம் சிறிது.

இது பாரிய சண்டையில், சீன, மற்றும் அது பயிற்றுவிக்கும் அணிகளுக்கு, systemic risk அல்லது advantage ஆக இருக்குமா என்பது தெரியாது.

இதில் அலட்டாமல் இருக்கும் தரப்பு (சீன) எதுவென்று பார்த்தல் புரியும், ஒப்பீட்டளவில் எவரின் மேலாண்மை ஓங்கி இருக்கிறது என்று. பொதுவாக சர்வதேச ராஜதந்திரத்தில் செய்யப்படுவதும், தரப்பின் மேலாண்மை ஓங்கினால் அது அமைதியாக இருக்கும். அதாவது, காரியத்தில் கண்ணாய் இருப்பது.

இதில் இன்னொன்று இந்தியா தன்னை அணியாக கருதுவது, சொல்வதுக்கும், அதன யதார்த்தத்தை மற்றவர்கள் அங்கீகரிப்பதும்.

தனி அணியானதன் மிக குறைந்த தகுதி, சொந்த இராணுவ தொழில் நுட்பம்.

(இதே போலவே, மேற்கு சொல்கிறது சீனாவுக்கு கடல் சண்டையில் அனுபவம் இல்லை என்று.

அனால், மேற்கின் 80 - 90 வருட அணு சக்தி அல்லாத விமானந்தாங்கி இயக்கும் அனுபவத்தை, சீன 20 வருடங்களில் அடைந்துள்ளது என்பதும்.

ஆயினும் 2024 ஆடியில் வெளியில் தெரிந்தது ( நடந்தது 2023 கடைசி / 2024 தொடக்கம்). தென்சீன கடலில் சீன - அமெரிக்கா கடல் அணிகள் (carrier fleet) ஒன்றோடு ஒன்று எதிர்கொண்டு, அமெரிக்கா இயலாமல் அதுவாக விலத்த வேண்டி வந்ததும். அதில் நடந்தது, இலத்திரனியல் போர்முறை ஊடக, கொலை வலையில் சிக்குண்டு, ஏறத்தாழ அமெரிக்கா அணி முடக்கப்பட்டது. அமெரிக்கா அணியின் தளபதி உடனடியாக பணி நிறுத்தப்பட்டதும் (https://interestingengineering.com/military/china-ai-radar-defeat-us-growlers)

ஆனால், ஒவ்வொரு அம்சமாக அல்லாமல், சீன முழு (போர் கள) விளையாட்டையும் மாற்றி வைத்து இருப்பதும்.

இவைகள், இப்போதும் சீன கடற்படையை ஆழ்சமுத்திர கடற்படை (Blue Water Navy) தன்மையை உடைய கடற்படையாக உருவாக்கவில்லை என்பதும்.

ஆனால், சீன Brown Water Navy (ஒப்பீட்டளவில் மிக குறைந்த ஆழம் கடலில் இயங்கும் கடற் படை) தன்மையை கடந்து, Blue water navy தன்மையை நோக்கி வளர்ந்து கொண்டு இருக்கிறது என்பதும்.

இதில் மிக முக்கியம், சீனாவின் Blue water navy க்கான வளர்த்தி பாதை மேற்கை ஒத்ததாக இருக்க வேண்டியது என்பது கட்டாயம் இல்லை.

இதை சொல்வட்டன் காரணம்,சீனாவின் வளர்த்தி, அதனுடன் கேந்திர, தந்திரோபாய அடிப்படையில் (சீனாவுக்கு allies இல்லை, அப்படி இருக்க கூடாது என்பதே இதுவரையில் கொள்கை) ஒத்தியங்கும் விமான, கடற் படைகளுக்கு தொற்றும், பல விடயங்களில் மேற்கு, மற்றும் அதன் சார்பு, ஒற்றிய விமானப்படைக்கு என்றும் எதிர்பாராத, பயிற்றுவிக்கப்படாத, புதிய நிலைகள் உருவாகும் சந்தர்ப்பங்கள் கூட; சண்டை, யுத்தத்தில் அழிவும் கூடவாக இருக்கும் சந்தர்ப்பங்கள் கூட).

என‌க்கு இப்ப‌வும் ந‌ல்லா நினைவு இருக்கு 2007ம் ஆண்டு என்று நினைக்கிறேன்

சிங்க‌ள‌ அர‌சிய‌ல் வாதி இந்தியா இல‌ங்கைக்கு கொடுத்த‌ ரேட‌ர‌ ம‌ண் வெட்டி செய்ய‌ தான் லாய்க்கு என்று இந்தியா கொடுத்த‌ ரேட‌ர‌ கேவ‌ல‌ப் ப‌டுத்தின‌வ‌ர்.........................

இந்தியான்ட‌ த‌யாரிப்ப‌ பார்த்து சிங்க‌ள‌வ‌னே சிரிக்கும் போது சொல்ல‌ என்ன‌ இருக்கு...................................முன்பை விட‌ இப்ப‌ சிறு முன்னேற்ற‌ம் க‌ண்டு இருப்பின‌ம்

சீன‌னின் கால் தூசி அள‌வுக்கு இந்தியா வ‌ள‌ர‌ வில்லை சீன‌ன்ட‌ தொழிநுட்ப‌ம் அமோக‌ வ‌ள‌ர்ச்சி........................

அருனாச்ச‌ல‌ பிர‌தேச‌த்தில் இந்திய‌ன் ஆமிக்கு சீன‌ன் ஆமி அடிக்கும் போது அமைதியாய் பொத்தி கொண்டு இருந்த‌வ‌ர் தான் மோடி என்ர‌ காற்றுப் போன‌ ப‌லூன்........................இதே பாக்கிஸ்தான் என்றால் கூட‌ துள்ள‌ல்..........................

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, வீரப் பையன்26 said:

என‌க்கு இப்ப‌வும் ந‌ல்லா நினைவு இருக்கு 2007ம் ஆண்டு என்று நினைக்கிறேன்

சிங்க‌ள‌ அர‌சிய‌ல் வாதி இந்தியா இல‌ங்கைக்கு கொடுத்த‌ ரேட‌ர‌ ம‌ண் வெட்டி செய்ய‌ தான் லாய்க்கு என்று இந்தியா கொடுத்த‌ ரேட‌ர‌ கேவ‌ல‌ப் ப‌டுத்தின‌வ‌ர்.........................

இந்தியான்ட‌ த‌யாரிப்ப‌ பார்த்து சிங்க‌ள‌வ‌னே சிரிக்கும் போது சொல்ல‌ என்ன‌ இருக்கு...................................முன்பை விட‌ இப்ப‌ சிறு முன்னேற்ற‌ம் க‌ண்டு இருப்பின‌ம்

சீன‌னின் கால் தூசி அள‌வுக்கு இந்தியா வ‌ள‌ர‌ வில்லை சீன‌ன்ட‌ தொழிநுட்ப‌ம் அமோக‌ வ‌ள‌ர்ச்சி........................

அருனாச்ச‌ல‌ பிர‌தேச‌த்தில் இந்திய‌ன் ஆமிக்கு சீன‌ன் ஆமி அடிக்கும் போது அமைதியாய் பொத்தி கொண்டு இருந்த‌வ‌ர் தான் மோடி என்ர‌ காற்றுப் போன‌ ப‌லூன்........................இதே பாக்கிஸ்தான் என்றால் கூட‌ துள்ள‌ல்..........................

எதை சொன்னாலும் அவர்கள் ஒரு அரசு.

அதற்கான கெளரவம் எங்கும் இருக்கிறது.

பாகிஸ்தான் கூட இந்தியா மீது அப்படியான மரியாதை வைத்து இருக்கிறது.

அப்படியே அதன் தலைமைகளுக்கும் கெளரவம் எங்கும் இருக்கிறது.

இவை இரண்டும் அடிபடும், ஒன்றுக்கு ஒன்று சம நிலையில் அரசுக்களாக.

(அனால் எமை அவர்கள் அரசாக, ஏன் மக்களாக கூட ஏற்றுக்கொள்ளவில்லை.)

அதை மறந்து விடாதீர்கள்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, தமிழ் சிறி said:

495198731_706131061903494_29122168450610

என்ன நடக்கும்….

எக்ஸ்ராவா மூணு ரபேலையும் சேர்த்தே கொடுப்போம்…ஆங்🤣

3 hours ago, தமிழ் சிறி said:

இந்த உருட்டு... அடுத்த தேர்தலில் வெல்ல போதுமானது.

இந்தியர்கள்... கண்ணை மூடிக் கொண்டு, மோடிக்கு வாக்களிப்பார்கள்.

ஏற்கனவே இரெண்டு முறைக்கு அப்பால் ஒருவர் பிரதமராக கூடாது என ஆர் எஸ் எஸ் மோடிக்கு சொல்லி விட்டதாம்.

அமித்தை அடுத்த பிரதமர் என மோடி முன் தள்ள அதையும் ஆர் எஸ் எஸ் ரசிக்கவில்லையாம்.

தளபதி பட வில்லன் போல இருக்கும் யோகி ஆதிநாத்தை விரைவில் பட்டாபிஷேகத்துக்கு தயாராக்கிறரதாம் கான்பூர்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, புலவர் said:

தலைவர் பேரணி நடத்துன ஒரு மணி நேரத்துலயே போரை நிறுத்திட்டாங்க..

அவங்க அப்பனையே மிஞ்சிட்டான் பாரேன் இந்த பய...

நான் அறிந்தவரை நெய்தல் படையணி கராச்சி துறைமுகத்தை முற்றுகைக்கு உள்ளாக்கி விட்டதாம். அடுத்த அரைமணியில் பாகிஸ்தானை உலக மேப்பில் இருந்து அழிக்கவே போகிறார்கள் என்பதை அறிந்து, பாகிஸ்தான் டிரம்பை கெஞ்சி, டிரம் அண்ணனின் காலை பிடித்து அதன் பிந்தான் போர் நிறுத்த அறிவிப்பு வந்ததாம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கிந்தியா போன்ற மனித நேயம் இல்லாத ஒரு நாட்டிற்கு அருகில் உலக பலம் மிக்க சீனா இருப்பதும் நல்ல விடயம் தான்.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, குமாரசாமி said:

கிந்தியா போன்ற மனித நேயம் இல்லாத ஒரு நாட்டிற்கு அருகில் உலக பலம் மிக்க சீனா இருப்பதும் நல்ல விடயம் தான்.

சரி மாற்றி யோசித்துப் பார்ப்போம் இது ஒரு கற்பனை தான்,.....அதாவது இந்தியா இருக்கும் இடத்தில் சீனா இருக்கிறது ...சீனா இருக்கும் இடத்தில் இந்தியா உண்டு என்று கற்பனை செய்யுங்கள்,......என்ன மாற்றங்கள் நடந்து இருக்கும் ??

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, வீரப் பையன்26 said:

இந்தியான்ட‌ த‌யாரிப்ப‌ பார்த்து சிங்க‌ள‌வ‌னே சிரிக்கும் போது சொல்ல‌ என்ன‌ இருக்கு...................................முன்பை விட‌ இப்ப‌ சிறு முன்னேற்ற‌ம் க‌ண்டு இருப்பின‌ம்

சீன‌னின் கால் தூசி அள‌வுக்கு இந்தியா வ‌ள‌ர‌ வில்லை சீன‌ன்ட‌ தொழிநுட்ப‌ம் அமோக‌ வ‌ள‌ர்ச்சி........................

சிங்க‌ள‌வ‌ர்கள் விரும்பாவிட்டால் என்ன இலங்கையில் உள்ள தமிழர்கள் மேற்குலகநாட்டு தயாரிப்புகளுக்கு அடுத்தபடியாக விரும்புவது இந்திய பொருட்களை அவர்கள் சீன பொருட்களை விரும்புவது இல்லை. மேற்குலகில் குடியேறிய ஈழ தமிழர்கள் அதற்கும் மேலே யப்பான் Sony ரிவி யை சீனாவில் தயாரித்துவிட்டார்களே என்ற கவலையில் கொரியாவிலோ வேறு நாட்டிலோ நேரடியாக தயாரிக்கும் ரிவி வாங்குபவர்கள்

1 hour ago, Kandiah57 said:

சரி மாற்றி யோசித்துப் பார்ப்போம் இது ஒரு கற்பனை தான்,.....அதாவது இந்தியா இருக்கும் இடத்தில் சீனா இருக்கிறது ...சீனா இருக்கும் இடத்தில் இந்தியா உண்டு என்று கற்பனை செய்யுங்கள்,......என்ன மாற்றங்கள் நடந்து இருக்கும் ??

இலங்கையின் வடக்கில் பிரசித்திபெற்ற முக்கியமான இடங்களாக தையிட்டி, வெடுக்குநாறி விகாரைகள் இருக்கும்.

Edited by விளங்க நினைப்பவன்

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, Kadancha said:

அப்படியே அதன் தலைமைகளுக்கும் கெளரவம் எங்கும் இருக்கிறது.

சில நாட்களாக இலங்கை தமிழர்களிடம் புகழ் அடைந்துள்ள கனடா பிரம்டன் மேயர் Patrick Brown கூட மோடி தன்னை தம்பி என்று அன்பாக அழைப்பார் என்று சொல்லி பெருமைபடுபவர் தான்

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, goshan_che said:

தளபதி பட வில்லன் போல இருக்கும் யோகி ஆதிநாத்தை விரைவில் பட்டாபிஷேகத்துக்கு தயாராக்கிறரதாம் கான்பூர்.

495965600_1653655895356146_2940454340503

ஒரு வருடத்திற்கு 100 பிரமோஸ் ஏவுகணைகளை தயாரிக்க கூடிய ஆலையை லக்னோவில் இன்று திறந்து வைத்தார் முதல்வர் யோகி ஆதித்யநாத்..!!

பாகிஸ்தானுக்கான... Future பிளானா இருக்குமோ.

Sarathy Ravichandran

  • கருத்துக்கள உறவுகள்
  • கருத்துக்கள உறவுகள்

இந்தியா எதிர் பாகிஸ்தான்... புளுகு போட்டி. 😂

1. ஒரு நாட்டின் அணு ஆயுதக் கிடங்கின் அருகே துல்லியமாகத் தாக்குதல் நடத்திய ஒரே நாடு நாம் மட்டுமே

2. இந்த உலகிலே சர்ஜிகல் ஸ்ட்ரைக் மூலம் போரை வென்ற முதல் நாடும் நாம் மட்டுமே. புதிய போர் யுக்தியை இவ்வுலகிற்குக் கற்றுக் கொடுத்துள்ளோம்.

3. நாம் நமது மொத்த விமானங்களில் போரில் 2% மட்டுமே உபயோகித்துள்ளோம்.

4. நமது மொத்த ஏவுகனைகளில் 7% மட்டுமே உபயோகித்துள்ளோம்.

5. நாம் நமது வான் தற்காப்பு சாதனங்களை வைத்து பாக்கிஸ்தானின் 99.7% ஏவுகனைகள் மற்றும் ட்ரோன் வீழ்த்தியுள்ளோம்.

6. பாக்கிஸ்தானின் 11 விமானத் தளங்களை முழுமையாகத் தகர்த்துள்ளோம்.

7. நாம் நமது படை வீரர்களில் போருக்கு வெறும் 15% பேரை மட்டுமே பயண்படுத்தியுள்ளோம்.

8. உலக யுத்த வரலாற்றிலேயே முதல் முறையாக 3 விலை மதிப்பில்லா இராணுவ வீரர்களை மட்டுமே இழந்துள்ளோம்.

9. உலக யுத்த வரலாற்றிலேயே முதல் முறையாக யுத்தம் ஆரம்பித்த பின் இதுவரை நமது ஒரு இராணுவ வீரரைக் கூட பாக்கிஸ்தான் சிறை பிடிக்கவில்லை.

10. பாக்கிஸ்தான் இராணுவம் எவ்வளவு முயன்றும் கூட நமது எல்லைக்குள் நுழைய முடியவில்லை.

11. உலக யுத்த வரலாற்றில் முதல் முறையாக எதிரியின் வான் பாதுகாப்பு அமைப்பை 100% முற்றிலுமாக சரி செய்ய முடியாதளவிற்கு சேதப்படுத்திவிட்டோம்.

12. 15 இடங்களில் அமைக்கப்பட்ட தீவிரவாத முகாம்களை தரைமட்டம் ஆக்கிவிட்டோம்.

13. பாக்கிஸ்தான் தலை நகரமான இஸ்லாமாபாத்தை முதல் முறையாக மிக எளிமையாகத் தாக்கிவிட்டோம்.

14. முதல் முறையாக ஒரு எல்லையில் போர் நடக்கும் போது மற்ற நாடுகளுடனான எல்லைகளை 100% பாதுகாத்துவிட்டோம்.

15. முதல் முறையாக தற்சார்பு முறையில் இந்தியாவிலேயே தயாரான ஆயுதங்களைக் கொண்டே 78% தாக்குதல்களை நடத்தி நாம் தற்சார்பு நாடாகிவிட்டோம் என்பதை இந்த உலகிற்கு எடுத்துக் கூறியுள்ளோம்.

16. அமெரிக்க சீன ஆயுதக் கட்டமைப்புகளை உடைத்து நொறுக்கியுள்ளோம்.

17. சீன, துர்க்கிய, அமெரிக்க ஆயுதங்களை முழுமையாக அழித்து அவர்களது ஆயுத மார்க்கெட்டை ஆட்டம் காண வைத்துள்ளோம்.

18. முதல்முறையாக எந்த நாட்டின் உதவியும் இல்லாமல் முழுமையாகப் போரில் வெற்றி பெற்றுள்ளோம்.

19. INS விக்கிராந்தை நாம் வெறும் 8% மட்டுமே பயண்படுத்தியுள்ளோம்.

20. 100% துல்லியமானத் தாக்குதல் நடத்தி நமது உளவுத்துறையின் 100% வெற்றியை பதிவு செய்துள்ளோம்.

21. நாம் உதவி கேட்டோ போரை நிறுத்தக் கூறியோ எந்த நாட்டிடமும் கேட்கவில்லை.

22. போரை நிறுத்த சொல்லி வந்த அறிவுறைகளையும் கண்டு கொள்ளாமல் குப்பையில் வீசினோம்.

23. முதல் முறையாக சிந்து நதி ஒப்பந்தத்தை ரத்து செய்துள்ளோம்.

24. முதல்முறையாக இராஜாங்க ரீதியாக பாக்கிஸ்தான் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுத்துள்ளோம்.

25. பாக்கிஸ்தான் அணு ஆயுத நாடு என்ற பிம்பத்தைத் தகர்த்தெரிந்துள்ளோம்.

26. பிரதமரோ இராணுவத் தளபதிகளோ எந்த இடத்திலும் அமெரிக்கா சீனா என கூறவில்லை. இதுவே அந்நாடுகளுக்குப் பெரிய அசிங்கம்.

இதற்கு எல்லாவற்ருக்கும் ஆதாரங்கள் செயள்கைக்கோள் படங்கள் வாயிலாக உறுதிப்படுத்தியுள்ளோம்.

அதே வேளையில்,

1. பாக்கிஸ்தான் தனது புருடாக்கள் எதற்கும் ஆதாரங்களை சமர்பிக்கவில்லை.

2. போரின் இரண்டாவது நாளிலேயே அமைதிப் பேச்சிவார்த்தை என அனத்த ஆரம்பித்துவிட்டது.

3. அனத்திப் பார்த்து எந்தப் பிரயோஜனமும் இல்லை எனத் தெரிந்ததும் நேரடியாக பாக்கிஸ்தான் DGMO போன் போட்டுக் காலில் விழுந்தான்.

4. பத்தும் பத்தாததற்கு சீனா அமெரிக்கா, இங்கிலாந்து, துர்க்கி என உலக நாடுகளிடமும் கெஞ்சிக் கூத்தாடினான்.

5. போர் முடிந்ததும் பாக்கிஸ்தான் பிரதமர் தனது உரையில் அமெரிக்காவிற்கு நன்றி, துர்க்கிக்கு நன்றி, சீனாவிற்கு நன்றி என நெஞ்சம் நக்கினான்.

இவ்வளவையும் பார்த்துவிட்டு பாக் பஃன்றிகளும் அங்க உள்ள பஃன்றிகளுக்கு மண்டி போடும் இங்குள்ள பஃன்றிகள் இந்தியா தோத்துவிட்டதா எழுதித் தீர்ப்பானுக.

Sarathy Ravichandran  ·

######################## #######################

496626408_3045423355613406_5675506261085

Mohmed Rizwan

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, விளங்க நினைப்பவன் said:

சிங்க‌ள‌வ‌ர்கள் விரும்பாவிட்டால் என்ன இலங்கையில் உள்ள தமிழர்கள் மேற்குலகநாட்டு தயாரிப்புகளுக்கு அடுத்தபடியாக விரும்புவது இந்திய பொருட்களை அவர்கள் சீன பொருட்களை விரும்புவது இல்லை. மேற்குலகில் குடியேறிய ஈழ தமிழர்கள் அதற்கும் மேலே யப்பான் Sony ரிவி யை சீனாவில் தயாரித்துவிட்டார்களே என்ற கவலையில் கொரியாவிலோ வேறு நாட்டிலோ நேரடியாக தயாரிக்கும் ரிவி வாங்குபவர்கள்

இலங்கையின் வடக்கில் பிரசித்திபெற்ற முக்கியமான இடங்களாக தையிட்டி, வெடுக்குநாறி விகாரைகள் இருக்கும்.

உற‌வே நான் சொல்ல‌ வ‌ந்த‌து இந்தியா எம்மை அழிக்க‌ சிங்க‌ள‌வ‌னுக்கு கொடுத்த‌ ரேட‌ர‌ ப‌ற்றி

இந்தியா கொடுத்த‌ ரேட‌ர‌ சிங்க‌ள‌வ‌ன் சொல்லுகிறார் அது ம‌ண் வெட்டி செய்ய‌ தான் லாய்க்கு என்று...................

இந்தியாவில் இருந்து வ‌ரும் உடைக‌ளை தான் எம்ம‌வ‌ர்க‌ள் கொண்டாட்ட‌ங்க‌ளுக்கு அதிக‌ம் வேண்டி போடுகின‌ம்.........................அன்று தொட்டு இப்ப‌ வ‌ரை மாருதி வாக‌ன‌ம் ம‌ற்றும் ஆட்டோ இந்த‌ இர‌ண்டையும் தான் இந்தியா தயாரிக்குது.....................சீனான் தொழில்நுட்ப‌த்தில் எவ‌ள‌வ‌த்தை க‌ண்டு பிடித்து விட்டான் ஆசியாவில் சீன‌னின் ஆதிக்க‌ம் தான் கூட‌............................

  • கருத்துக்கள உறவுகள்

https://www.youtube.com/watch?v=wEJTr_oj420

எப்படியெல்லாம் உருட்டுகிறார்கள் என்று பாருங்கள்!

  • கருத்துக்கள உறவுகள்
31 minutes ago, Eppothum Thamizhan said:

https://www.youtube.com/watch?v=wEJTr_oj420

எப்படியெல்லாம் உருட்டுகிறார்கள் என்று பாருங்கள்!

ந‌ண்பா

இந்தியா பாக்கிஸ்தானின் முழு அணுயுத‌த்தை அழித்து விட்டின‌ம் என்று உறுதி செய்ய‌ப் ப‌ட்ட‌து என்று அந்த‌ யூடுப் விசுக்கோத்து சொன்ன‌ கையோட‌ நிப்பாட்டி விட்டேன்..................அவ‌ர் சொல்லுவ‌தை கேட்க்க‌ என‌க்கு பொறுமை காணாது😁......................

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.