Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சுமந்திரன் சென்ற கூட்டத்தில் கூச்சல் குழப்பம்! வெளியான பகீர் வீடியோ.

கட்சியில் வெற்றி பெற்றவர்களும் வாக்காளர்களும் விரும்பியவர்களை விட சுமந்திரனின் ஆதரவாளர்களை பதவியில் அமர்த்த முற்பட்டவேளை கூட்டம் நுச்சல் குழப்பமாக இருந்தது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தேர்தலில் வென்ற பெண் பேுhராளி தவிசாளராக வரவிருக்கும் நிலையில் பாலத்துக்கு அப்பால் உள்ளவர்கள் வர முடியாது என்று சுமந்திரன் கூறுகிறார்.

  • கருத்துக்கள உறவுகள்

இப்போது தான் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. நிறைய இப்படியான சம்பவங்கள் இடம்பெறும்.

  • கருத்துக்கள உறவுகள்

இப்போ புரிகிறதா மக்கள் ஏன் தென்பகுதி கட்சிகள் பக்கம் திரும்புகின்றனர் என்று? கெஞ்சி கூத்தாடி வாக்கு பெறுவது, பின்னர் ஆதிக்கம் செலுத்துவது. சுமந்திரனுக்கு யாரும் வாக்களிக்கவில்லை, வாக்களித்த மக்களுக்கே தாங்கள் விரும்புவோரை நியமிக்க அதிகாரமிருக்கிறது. சுமந்திரனை கட்சியிலிருந்து வெளியேற்றாவிடின், கட்சி மக்களிடமிருந்து நிராகரிக்கப்படும். 

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, ஈழப்பிரியன் said:

தேர்தலில் வென்ற பெண் பேுhராளி தவிசாளராக வரவிருக்கும் நிலையில் பாலத்துக்கு அப்பால் உள்ளவர்கள் வர முடியாது என்று சுமந்திரன் கூறுகிறார்.

இப்படி சுமந்திரன் கூறியதாக "தமிழரசு" தன் காணொலியில் கூறுகிறார். கூட்டத்தில் இது தான் நடந்தது என்று தமிழரசு சொல்வதை வைத்து நாம் நம்ப முடியுமா தெரியவில்லை. அப்படிப் பட்ட "சுமந்திரன் லவ்வர்" தமிழரசு😎. அவர் உள்ளூரிலும் இல்லை.

இதைப் பற்றி ஏராளன், ஓணாண்டியார் ஏதாவது உள்ளூர் தகவல்கள் தர முடியுமா?

அது சரி, வீடியோவில் "பகீர்" எங்கே வருகிறது😂?

Edited by Justin

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Justin said:

இப்படி சுமந்திரன் கூறியதாக "தமிழரசு" தன் காணொலியில் கூறுகிறார். கூட்டத்தில் இது தான் நடந்தது என்று தமிழரசு சொல்வதை வைத்து நாம் நம்ப முடியுமா தெரியவில்லை. அப்படிப் பட்ட "சுமந்திரன் லவ்வர்" தமிழரசு😎. அவர் உள்ளூரிலும் இல்லை.

ஐரோப்பா வந்த புதிதில் நசனாலிற்றி உள்ள பெண்ணை திருமணம் செய்தால் தான் தனக்கு பாதுகாப்பு என்று தேடி திரிந்த இவர், இன்று விரும்பியபடி வெளிநாட்டில் செற்றில் ஆகியதும் வருமானம் தரும் தாயக ஊடகவியலாளராகி பிழைப்பு நடத்துகிறார். தாயக அரசியல்வாதிகளடையே சிண்டு முடிவதில் இவர் வல்லவர்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தமிழரசு வெளிநாட்டிலிருந்து சொல்வது பொய் பிரட்டு என்பவர்கள்

என்பிபி யோடு சேரந்து ஆட்சியமைக்க முயன்றுவரும் தமிழரசுக்கட்சி.

  • கருத்துக்கள உறவுகள்

தமிழரசுக்கட்சி, ஈ பி டி ஐ தவிர்த்து மற்றைய கட்சிகளோடு இணைந்து கஜேந்திரன் பொன்னம்பலம்செயற்படலாமே? சுமந்திரனை வெளியேற்றாவிட்டால், தமிழரசுக்கட்சி வெகு விரைவில் காணாமல் போய்விடும். தாழுகிற கப்பலில் பயணம் செய்ய ஏன் நினைக்கிறார்?  

  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, Justin said:

இதைப் பற்றி ஏராளன், ஓணாண்டியார் ஏதாவது உள்ளூர் தகவல்கள் தர முடியுமா?

அண்ணை, தமிழரசுக் கட்சியின் ப.பொ.செ அவர்கள் தனக்கு நம்பிக்கையானவர்களுக்கு தவிசாளர் பதவி அளிக்க முனைவது உண்மை. வலி.மேற்கில் முன்னாள் பா.உ உதயன் உரிமையாளரின் வலது கை இப்போ ப.பொ.செ இன் விசுவாசி, அவருக்கு தான் தவிசாளர் பதவி வரும் என அவரின் நட்பு வட்டம் அலப்பறை கிளப்பிறாங்கள். உதயன் உரிமையாளர் திட்டிக்கொண்டு திரிகிறாராம்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, satan said:

தமிழரசுக்கட்சி, ஈ பி டி ஐ தவிர்த்து மற்றைய கட்சிகளோடு இணைந்து கஜேந்திரன் பொன்னம்பலம்செயற்படலாமே? சுமந்திரனை வெளியேற்றாவிட்டால், தமிழரசுக்கட்சி வெகு விரைவில் காணாமல் போய்விடும். தாழுகிற கப்பலில் பயணம் செய்ய ஏன் நினைக்கிறார்?  

மற்றைய கட்சிகள் போதுமான வெற்றியைப் பெறவில்லை.

ஜனநாயக கூட்டமைப்பு பலத்த அடி வாங்கியதால் அடுத்த தேர்தலில் பழையபடி வீட்டுடன் கை கோர்ப்பதற்காக இப்போதே தங்கள் ஆதரவுகளை தெரிவித்து வீட்டினுள் நுழைய முயல்கிறார்கள்.

இவர்களுடன் ஈபிடிபியின் முக்கியஸ்தர் ஒருவர் சேர்ந்து இவர்களை வழி நடாத்துகிறார்.தமிழரசுடனும் நெருக்கமான கூட்டு வைத்துள்ளார்.

இவர் உண்மையிலேயே ஈபிடிபியில் இருந்து பிரிந்தாரா?அல்லது டக்ளசால் அனுப்பப்பட்ட இரட்டை ஏஜென்டா தெரியவில்லை.

சகலரும் இப்போது கூட பதவிக்காகவே அடிபடுகிறார்கள்.மக்களுக்கு சேவை செய்து தமது ஊர்களுக்கு நல்லது செய்யும் எண்ணம் இல்லை.

தவிசாளர் என்ற பதவியை நோக்கியே எல்லோரும் படை எடுக்கிறார்கள்.

தவிசாளர் என்றால் என்ன?இவருக்குள்ள அதிகாரங்கள் என்ன என்பதை யாராவது விளக்க முடியுமா?

1 hour ago, ஏராளன் said:

அண்ணை, தமிழரசுக் கட்சியின் ப.பொ.செ அவர்கள் தனக்கு நம்பிக்கையானவர்களுக்கு தவிசாளர் பதவி அளிக்க முனைவது உண்மை. வலி.மேற்கில் முன்னாள் பா.உ உதயன் உரிமையாளரின் வலது கை இப்போ ப.பொ.செ இன் விசுவாசி, அவருக்கு தான் தவிசாளர் பதவி வரும் என அவரின் நட்பு வட்டம் அலப்பறை கிளப்பிறாங்கள். உதயன் உரிமையாளர் திட்டிக்கொண்டு திரிகிறாராம்.

ஏராளன் பக்க சார்பில்லாமல் கட்சிகள் செய்யும் அநிஞாயங்களை எழுதுங்கள்.

அப்போது தான் வெளியில் இருக்கும் நாமும் ஊரில் நடக்கும் உண்மைகளை அறிந்து கொள்ளலாம்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஈழப்பிரியன் said:

தவிசாளர் என்ற பதவியை நோக்கியே எல்லோரும் படை எடுக்கிறார்கள்.

தவிசாளர் என்றால் என்ன?இவருக்குள்ள அதிகாரங்கள் என்ன என்பதை யாராவது விளக்க முடியுமா?

கீழே உள்ள 1987 இன் பிரதேசச் சபைகள் சட்டத்தின் படி தவிசாளர் தான் "தலை". நிறைவேற்று அதிகாரி - executive officer என்று சொல்கிறார்கள்.

இது தான் இந்த அடிபாடு. ஒரு பிரதேச சபையின் அலுவல்களை தவிசாளர் தான் நிறைவேற்றுவார். சம்பளத்திற்கு மேலதிகமாக மேசைக்குக் கீழால் "கிம்பளம்" வாங்கிக் கொண்டு வேலைகளுக்கு ரென்டர் கொடுக்கும் வேலை முதல், தனக்குப் பிடிக்காத ஏரியாவில் வீதியைத் திருத்தாமல் தள்ளிப் போடுவதை வரை தவிசாளரால் செய்ய முடியும். இதைச் செய்திருக்கிறார்கள்.

https://citizenslanka.org/wp-content/uploads/2016/02/Pradeshiya-Sabhas-Act-No-15-of-1987-T.pdf

  • கருத்துக்கள உறவுகள்

496922739_1065795948697146_3272804290733

மண்டையன் குழுவும், சுமந்திரன் குழுவும் ஒன்றுக்குள் ஒன்று சங்கமமாகியது.

முன்னர் இவர்களை மண்டையன் குழு / ஆயுதக்குழு என விமர்சித்த... சுமத்தின் குழு இப்போது மீண்டும் அவர்களுடன். அது கூட பறவாயில்லை அரசியலில் இது சாதாரணம்!
ஆனால் பிரிந்ததுக்கு ஒரு காரணம் சொல்கிறார்கள் பாருங்க 🤣😂🤣😂🤣😂 ஒற்றுமையாக பிரிந்து கேட்டதால் தான் அதிக ஆசனம் இரண்டு கட்சியும் பெற்றன என்று🤣😂
😜

K J Arun Kumar

  • கருத்துக்கள உறவுகள்

சங்கு சின்னத்தில்... இவர்கள் போட்டியிட்டதற்கு, விளக்கம் கேட்டு எப்போ சுமந்திரன் கடிதம் அனுப்பப் போகிறார். நீங்களும், உங்கடை சுத்துமாத்து அரசியலும். 😂

உங்களுக்கு வெள்ளை அடிக்கவும்.. "நட்டு கழண்டதுகள்" இருக்கிறாதாலை தான் இந்தப் பிரச்சினை. 🤣

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, ஈழப்பிரியன் said:

தமிழரசு வெளிநாட்டிலிருந்து சொல்வது பொய் பிரட்டு என்பவர்கள்

என்பிபி யோடு சேரந்து ஆட்சியமைக்க முயன்றுவரும் தமிழரசுக்கட்சி.

இது கிட்டத் தட்ட ட்ரம்ப் அணியின் பரப்புரை போல இருக்கிறது😂: ஒரு புரளியை தமிழரசு சீரியசான செய்தி போல, ஒரு தரவும் இல்லாமல், போடுகிறார். அதன் உண்மைத் தன்மை என்னவென்று நான் கேட்கிறேன். அதற்குப் பதில் தராமல் இன்னொரு முகநூல் பதிவரின் யூ ரியூப் அலட்டலை இன்னொரு விடயப் பரப்பில் இருந்து போடுகிறீர்கள். இந்த முகநூல் "ஊடகவியலாளர்" தானே சுமந்திரன் தோற்ற நாள் முதல் "இந்தா சுமந்திரன் பா.உ ஆகிறார்" என்று யூ ரியூபில் கரடி விட்டுக் கொண்டிருப்பவர்? ஏதாவது உண்மையாக இருந்திருக்கிறதா இந்த யு ரீயூப் அலட்டல்களின் கரடிகள்?

இவற்றைப் பார்த்து உங்கள் நேரத்தையும் வீணாக்கி, இங்கே இணைத்து ஏனையோரின் நேரத்தையும் வீணடிக்கிறீர்கள் என நினைக்கிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Justin said:

ஒரு பிரதேச சபையின் அலுவல்களை தவிசாளர் தான் நிறைவேற்றுவார். சம்பளத்திற்கு மேலதிகமாக மேசைக்குக் கீழால் "கிம்பளம்" வாங்கிக் கொண்டு வேலைகளுக்கு ரென்டர் கொடுக்கும் வேலை முதல், தனக்குப் பிடிக்காத ஏரியாவில் வீதியைத் திருத்தாமல் தள்ளிப் போடுவதை வரை தவிசாளரால் செய்ய முடியும். இதைச் செய்திருக்கிறார்கள்.

https://citizenslanka.org/wp-content/uploads/2016/02/Pradeshiya-Sabhas-Act-No-15-of-1987-T.pdf

இது உண்மைதான். எங்கள் ஊரிலும் நடந்தது. மந்திகை சந்தியிலிருந்து ஆனைவிழுந்தான் சந்திவரை செல்லும் பிரதானவீதி ஆறுவருடங்களுக்கு மேலாக திருத்தப்படாமல் கிடப்பில் போட்டுள்ளார்கள்! முன்பு நாகர்கோவில், தாளையடி போகும் பஸ்கள் எல்லாம் இந்தவீதியால்தான் சென்றன. இப்போ மற்றய தேவை குறைந்த வீதிகளையெல்லாம் திருத்திவிட்டார்கள். இதைத்தவிர!!

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Justin said:

கீழே உள்ள 1987 இன் பிரதேசச் சபைகள் சட்டத்தின் படி தவிசாளர் தான் "தலை". நிறைவேற்று அதிகாரி - executive officer என்று சொல்கிறார்கள்.

இது தான் இந்த அடிபாடு. ஒரு பிரதேச சபையின் அலுவல்களை தவிசாளர் தான் நிறைவேற்றுவார். சம்பளத்திற்கு மேலதிகமாக மேசைக்குக் கீழால் "கிம்பளம்" வாங்கிக் கொண்டு வேலைகளுக்கு ரென்டர் கொடுக்கும் வேலை முதல், தனக்குப் பிடிக்காத ஏரியாவில் வீதியைத் திருத்தாமல் தள்ளிப் போடுவதை வரை தவிசாளரால் செய்ய முடியும். இதைச் செய்திருக்கிறார்கள்.

https://citizenslanka.org/wp-content/uploads/2016/02/Pradeshiya-Sabhas-Act-No-15-of-1987-T.pdf

அண்ணை, இனிமேல் அவ்வாறு செய்வது கடினம்(ஏற்கனவே இறுக்கிவிட்டார்கள்). தரமாக வீதிகள், கட்டடங்கள் அமைக்காவிடில் மக்களே இப்போது இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவிற்கு 1954 அழைத்து முறையிடுகிறார்கள். அங்கு முறையிடப்பட்டால் வேலை இழக்கப்படும் அபாயமும் உள்ளது.

இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு

https://tamil.ciaboc.gov.lk/

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, ஏராளன் said:

ஆளுநர் ஏற்கனவே பலரைத் தூக்கிவிட்டாராமே?

12 hours ago, Justin said:

கீழே உள்ள 1987 இன் பிரதேசச் சபைகள் சட்டத்தின் படி தவிசாளர் தான் "தலை". நிறைவேற்று அதிகாரி - executive officer என்று சொல்கிறார்கள்.

இது தான் இந்த அடிபாடு. ஒரு பிரதேச சபையின் அலுவல்களை தவிசாளர் தான் நிறைவேற்றுவார். சம்பளத்திற்கு மேலதிகமாக மேசைக்குக் கீழால் "கிம்பளம்" வாங்கிக் கொண்டு வேலைகளுக்கு ரென்டர் கொடுக்கும் வேலை முதல், தனக்குப் பிடிக்காத ஏரியாவில் வீதியைத் திருத்தாமல் தள்ளிப் போடுவதை வரை தவிசாளரால் செய்ய முடியும். இதைச் செய்திருக்கிறார்கள்.

https://citizenslanka.org/wp-content/uploads/2016/02/Pradeshiya-Sabhas-Act-No-15-of-1987-T.pdf

தகவல்களுக்கு நன்றி.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, Justin said:

இது கிட்டத் தட்ட ட்ரம்ப் அணியின் பரப்புரை போல இருக்கிறது😂: ஒரு புரளியை தமிழரசு சீரியசான செய்தி போல, ஒரு தரவும் இல்லாமல், போடுகிறார். அதன் உண்மைத் தன்மை என்னவென்று நான் கேட்கிறேன். அதற்குப் பதில் தராமல் இன்னொரு முகநூல் பதிவரின் யூ ரியூப் அலட்டலை இன்னொரு விடயப் பரப்பில் இருந்து போடுகிறீர்கள். இந்த முகநூல் "ஊடகவியலாளர்" தானே சுமந்திரன் தோற்ற நாள் முதல் "இந்தா சுமந்திரன் பா.உ ஆகிறார்" என்று யூ ரியூபில் கரடி விட்டுக் கொண்டிருப்பவர்? ஏதாவது உண்மையாக இருந்திருக்கிறதா இந்த யு ரீயூப் அலட்டல்களின் கரடிகள்?

இவற்றைப் பார்த்து உங்கள் நேரத்தையும் வீணாக்கி, இங்கே இணைத்து ஏனையோரின் நேரத்தையும் வீணடிக்கிறீர்கள் என நினைக்கிறேன்.

ஊரில் பலதரப்பினரிடம் பேசியபோது பல கட்சிகளையும் குறை கூறுகிறார்கள்.

முக்கியமாக இந்த காணொளிகளில் கூறியவாறே அவர் செயல்படுவதாக சொல்கிறார்கள்.

அதனாலேயே இங்கே இணைத்தேன்.கூடுதலாக பத்திரிகைகளில் வரும் செய்திகளும் நாளாந்தம் புதிய புதிய செய்தியாக சொல்கிறார்கள்.

இங்கே எந்த செய்தியையும் காணொளிகளையும் இணைக்கும் போது எவரும் அவைகள் உண்மையா பொய்யா என்று ஆராய்வதில்லை.

தெரிவிப்பது நாங்கள் தீர்மானிப்பது நீங்கள்.

நேரமிருக்கும் போது ஊரில் உள்ளவர்களிடம் உரையாடுங்கள்.

நீங்களும் தெரிந்து கொள்ளலாம்.எமக்கும் தெரிவிக்கலாம்.

மயூதரன் என்ற ஊடகவியலாளர் பிழைவிடும் சகலரையுமே கிழித்து தொங்க விடுகிறார்.

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, ஏராளன் said:

அண்ணை, இனிமேல் அவ்வாறு செய்வது கடினம்(ஏற்கனவே இறுக்கிவிட்டார்கள்). தரமாக வீதிகள், கட்டடங்கள் அமைக்காவிடில் மக்களே இப்போது இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவிற்கு 1954 அழைத்து முறையிடுகிறார்கள். அங்கு முறையிடப்பட்டால் வேலை இழக்கப்படும் அபாயமும் உள்ளது.

இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு

https://tamil.ciaboc.gov.lk/

லஞ்ச ஊழலை தடுப்பதற்கு ஒவ்வொரு உள்ளூராட்சி சபையிலும் புலனாய்வு அதிகாரிகள் நியமிக்கப்படுவார்களாமே? இது இவர்களுக்கு தெரிய வரவில்லையா? அல்லது அவர்களுக்கும் லஞ்சம் கொடுப்போம், வாங்குவோம் என்கிறார்களா.

12 hours ago, Justin said:

இவற்றைப் பார்த்து உங்கள் நேரத்தையும் வீணாக்கி, இங்கே இணைத்து ஏனையோரின் நேரத்தையும் வீணடிக்நீங்கள் இவற்றைப்பார்த்து பதில் எழுதி ஏன் நேரத்தை வீணடிக்கிறீர்கள் என்பதே எனது ஆச்சரியம்  சுமந்திரனை விட திறமைசாலி இல்லை, அவர் அரிச்சந்திரனுக்கு அடுத்த ஆள்  என நினைப்பவர்கள் உண்மையை ஏற்றுக்கொள்ள மறுப்பவர்கள்கிறீர்கள் என நினைக்கிறேன்.

நீங்கள் நேரம் மினைக்கெட்டு இவற்றைப்பார்த்து பதில் எழுதி ஏன் நேரத்தை வீணடிக்கிறீர்கள் என்பதே எனது ஆச்சரியம்?  சுமந்திரனை விட திறமைசாலி இல்லை, அவர் அரிச்சந்திரனுக்கு அடுத்த ஆள்  என நினைப்பவர்கள் உண்மையை ஏற்றுக்கொள்ள மறுப்பவர்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, ஈழப்பிரியன் said:

மற்றைய கட்சிகள் போதுமான வெற்றியைப் பெறவில்லை.

ஜனநாயக கூட்டமைப்பு பலத்த அடி வாங்கியதால் அடுத்த தேர்தலில் பழையபடி வீட்டுடன் கை கோர்ப்பதற்காக இப்போதே தங்கள் ஆதரவுகளை தெரிவித்து வீட்டினுள் நுழைய முயல்கிறார்கள்.

இவர்களுடன் ஈபிடிபியின் முக்கியஸ்தர் ஒருவர் சேர்ந்து இவர்களை வழி நடாத்துகிறார்.தமிழரசுடனும் நெருக்கமான கூட்டு வைத்துள்ளார்.

இவர் உண்மையிலேயே ஈபிடிபியில் இருந்து பிரிந்தாரா?அல்லது டக்ளசால் அனுப்பப்பட்ட இரட்டை ஏஜென்டா தெரியவில்லை.

சகலரும் இப்போது கூட பதவிக்காகவே அடிபடுகிறார்கள்.மக்களுக்கு சேவை செய்து தமது ஊர்களுக்கு நல்லது செய்யும் எண்ணம் இல்லை.

தவிசாளர் என்ற பதவியை நோக்கியே எல்லோரும் படை எடுக்கிறார்கள்.

தவிசாளர் என்றால் என்ன?இவருக்குள்ள அதிகாரங்கள் என்ன என்பதை யாராவது விளக்க முடியுமா?

ஏராளன் பக்க சார்பில்லாமல் கட்சிகள் செய்யும் அநிஞாயங்களை எழுதுங்கள்.

அப்போது தான் வெளியில் இருக்கும் நாமும் ஊரில் நடக்கும் உண்மைகளை அறிந்து கொள்ளலாம்.

சுமந்திரன் முதலொரு தடவை ஆர்னோல்ட்க்கு எதிராக மணிவண்ணனை பாவித்தார். இப்போ, இவரை சிறிதரனுக்கு எதிராக இறக்கி குடைச்சல் கொடுக்க விழைகிறார். பாராளுமன்றத்தேர்தலின்போது பரப்புரைகளில், கொலைகாரர், ஆயுதக்காரர் என்று சுமந்திரன் இவர்களை விமர்ச்சித்திருந்தார். டக்கிளசுக்கும் தூது விட்டவர் சுமந்திரன். இவர் தனது நன்மைக்காக எந்த மட்டத்திற்கும் இறங்குவார். கொள்கை, நேர்மை இல்லாதவர். நான் ஆயுதப்போரை ஆதரிக்கவில்லை என்றவர், இப்போ யாரோடு கூட்டுச்சேர்ந்துள்ளார். கட்சிக்குள்ளேயே இருந்துகொண்டு குழி பறிக்கும் ஓநாய் இவர்.   

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, Justin said:

இந்த முகநூல் "ஊடகவியலாளர்" தானே சுமந்திரன் தோற்ற நாள் முதல் "இந்தா சுமந்திரன் பா.உ ஆகிறார்" என்று யூ ரியூபில் கரடி விட்டுக் கொண்டிருப்பவர்? ஏதாவது உண்மையாக இருந்திருக்கிறதா இந்த யு ரீயூப் அலட்டல்களின் கரடிகள்?

இந்த தமிழ் யுரியுப் கரடிகள் சுவையான பொய்களை வைத்து எவ்வளவிற்கு நேரத்தை இழுத்து சப்பி கொண்டிருக்கிறார்களோ அவ்வளவிற்கு அவர்களுக்கு பணம் கிடைக்கின்றது

  • கருத்துக்கள உறவுகள்

சுமந்திரன் எதற்காக தமிழரசுக் கட்சிக்குள் நுழைந்தாரோ அதற்கான வேலையை அவர் கனகச்சிதமாக முடித்து அதில் வெற்றியும் அடைந்து விட்டார். அவர் ஒரு கொழுத்த பூனை, அவருக்கு மணிகட்ட எண்ணும் எலிகள் எல்லாம் மண்கவ்வுவது நிச்சயம்.🤔

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
10 hours ago, Paanch said:

சுமந்திரன் எதற்காக தமிழரசுக் கட்சிக்குள் நுழைந்தாரோ அதற்கான வேலையை அவர் கனகச்சிதமாக முடித்து அதில் வெற்றியும் அடைந்து விட்டார். அவர் ஒரு கொழுத்த பூனை, அவருக்கு மணிகட்ட எண்ணும் எலிகள் எல்லாம் மண்கவ்வுவது நிச்சயம்.🤔

சிங்கள இனவாத அரசுகள் சுமந்திரனுக்கு வெளிவிவகார அமைச்சர் பதவியை கொடுப்பார்களேயானால்...... அவர்கள் நிம்மதியாக நித்திரை கொள்ளலாம்.

ஏனென்றால் சுமந்திரன் தமிழர்களை பயங்கரவாதிகளாக படம் போட்டு காட்டாமல் ஓய மாட்டார்.

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, குமாரசாமி said:

சிங்கள இனவாத அரசுகள் சுமந்திரனுக்கு வெளிவிவகார அமைச்சர் பதவியை கொடுப்பார்களேயானால்...... அவர்கள் நிம்மதியாக நித்திரை கொள்ளலாம்.

ஏனென்றால் சுமந்திரன் தமிழர்களை பயங்கரவாதிகளாக படம் போட்டு காட்டாமல் ஓய மாட்டார்.

சின்னக் கதிர்காமர் என்ற பட்டமும் சுமந்திரனுக்கு உண்டு.

கொடுத்த பட்டத்தை காப்பாற்ற வேண்டும் என்றால்,

சொந்த இனத்திற்கு குழி பறித்துக் கொண்டு இருக்க வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்
On 16/5/2025 at 23:25, satan said:

நீங்கள் நேரம் மினைக்கெட்டு இவற்றைப்பார்த்து பதில் எழுதி ஏன் நேரத்தை வீணடிக்கிறீர்கள் என்பதே எனது ஆச்சரியம்?  சுமந்திரனை விட திறமைசாலி இல்லை, அவர் அரிச்சந்திரனுக்கு அடுத்த ஆள்  என நினைப்பவர்கள் உண்மையை ஏற்றுக்கொள்ள மறுப்பவர்கள்.

பொய்ச் செய்திகள், புனைவுகள், ஊதிப் பெருப்பிக்கப் பட்ட செய்திகள், இவை காரணமாக மிகவும் பாதிக்கப் பட்ட நாட்டில் இருந்து எழுதுகிறேன். இதே நிலை நோக்கி "சுமந்திரன் லவ்வர்சும்"😎 தாயக நிலையைக் கொண்டு செல்லாமலிருக்கும் படி கேள்விக்குட்படுத்தி எழுதுவது நேர விரயம் அல்ல என்பது கருத்து!

போலித் தகவல்களை காழ்ப்புணர்வு அடிப்படையில் பரப்புவது "மிகவும் பயனுள்ள நேரச் செலவு" என்பது உங்கள் அபிப்பிராயம் என ஊகிக்கிறேன்!

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.