Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, nunavilan said:

முதலாவது முல்லாக்கள் பற்றி எழதும் போது கடந்த உலக க கிண்ண போட்டியில் ஐக்கிய அரபு ராட்சியத்தில் கொல்லப்பட்டவர்களில் எண்ணிக்கையை ஏன் மறைக்க வேண்டும்? இதற்கு மேற்கு நாடுகள் மிண்டு கொடுத்தன. இதைப்பற்றி அற்ப அறிவு கூட இல்லாமல் மற்றவர்களை தாக்க மட்டும் லாயக்கான *************** டாக்டர் என கூறி அமர்கிறேன்.

சில *************** எப்படி சொன்னாலும் விளங்கவே விளங்காது.🙃

இதை உங்களுக்கு நியாபகப்படுத்த வேண்டி உள்ளது. அப்படி ஒரு ************

எமிராற்றிகள் செய்வது சரியென்று யார் இங்கே சொன்னார்கள்? ஈரான் தவறென்று யாரும் சொன்னால் பக்கத்தில் கொண்டு வந்து எமிராற்றி, சவூதி என்று நிறுத்தி வைத்தால் ஈரான் நல்ல நாடாகி விடும் என்ற அதே குழந்தை பிள்ளைத் தனமான அலட்டலை எல்லா இடமும் பிரயோகிப்பீர்கள் போல! "சதாமை, ஹிற்லரை, ஆங்கிலேயரை விட மகிந்த ஒன்றும் பெரிசாக செய்யவில்லை!" என சிங்களவனும் தான் சொல்லித் திரிகிறான், ஏற்றுக் கொண்டு பேசாமல் இருப்பீர்கள் போல உங்கள் போன்ற புத்திசாலிகள்😂!

நாடுகள், தலைவர்கள், அமைப்புகள் பற்றிப் பேசிக் கொண்டிருக்கிறோம். என்னைப் பற்றியும் உங்களைப் பற்றியும் அல்ல, துணிவிருந்தால் அந்த ****** இனுள் மறைந்திருக்கும் சொற்களை இங்கேயே வெளிப்படையாக எழுதுங்கள்.

  • Replies 454
  • Views 18.8k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Most Popular Posts

  • கிருபன்
    கிருபன்

    மக்களாட்சி மீது நம்பிக்கை குறைந்து வருவதனால், அதிக பணமும், பலமும் உள்ளவர்கள் அதிகாரத்தைக் கையில் வைத்துள்ளனர். இது ஏகாதிபத்ய அரசுகளுக்கு வழி கோலுகின்றது. அரபு நாடுகளில் ஜனநாயகத் தேர்தல்கள் மூலம் ஆட்சி

  • எமது தாயகத்தில் நிகழ்ந்தது போல பொருளாதார தடையினை நீண்ட காலமாக சந்தித்து வரும் நாடு ஈரான், கோவிட் காலத்தில் அதற்கான சரியான் தடுப்பூசிகூட கிடைக்காத நிலை காணப்பட்டது. பெரியவர்களே ஒரு காயம் எற்பட்டு

  • புரட்சிகர தமிழ்தேசியன்
    புரட்சிகர தமிழ்தேசியன்

    டிரம்ப் சீற்றம் கமெனி காட்டம் இடியை இறக்கிய இஸ்ரேல் .. ஈரான் சரவெடி .. இஸ்ரெல் அதிரடி.. இறங்கி அடிக்கும் ஈரான்.. சண்டை பிடிப்பவர்களை விட இவர்கள் "தலைப்பு" இம்சை தாங்கல சாமீ..

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, goshan_che said:

புட்டினுக்கு மண் சுமந்ததை கூட மன்னித்து விடலாம், ஆனால் முல்லாக்களுக்கு முதுகுசொறியும் அளவுக்கு, சில தமிழ் உள்ளங்கள் சீழ் கட்டி இருப்பது மிகவும் கவலைக்குரியது.

Just now, goshan_che said:

ஆகவேதான் தாலிபான், சல்மான், சேக்குகள் மீது இல்லாத வெறுப்பு ஈரானிய முல்லாக்கள் மீது.

முதலில் நாங்கள் சிறப்பாக இருந்து மற்றவர்களை விமர்சிக்க வேண்டும். 550000 பலஸ்தீனியர்களை கொன்றவர்களை விட்டு ஈரானியர்களை ஏன் ஆதரிக்க வேண்டும்???

Just now, Justin said:

எமிராற்றிகள் செய்வது சரியென்று யார் இங்கே சொன்னார்கள்? ஈரான் தவறென்று யாரும் சொன்னால் பக்கத்தில் கொண்டு வந்து எமிராற்றி, சவூதி என்று நிறுத்தி வைத்தால் ஈரான் நல்ல நாடாகி விடும் என்ற அதே குழந்தை பிள்ளைத் தனமான அலட்டலை எல்லா இடமும் பிரயோகிப்பீர்கள் போல! "சதாமை, ஹிற்லரை, ஆங்கிலேயரை விட மகிந்த ஒன்றும் பெரிசாக செய்யவில்லை!" என சிங்களவனும் தான் சொல்லித் திரிகிறான், ஏற்றுக் கொண்டு பேசாமல் இருப்பீர்கள் போல உங்கள் போன்ற புத்திசாலிகள்😂!

நாடுகள், தலைவர்கள், அமைப்புகள் பற்றிப் பேசிக் கொண்டிருக்கிறோம். என்னைப் பற்றியும் உங்களைப் பற்றியும் அல்ல, துணிவிருந்தால் அந்த ****** இனுள் மறைந்திருக்கும் சொற்களை இங்கேயே வெளிப்படையாக எழுதுங்கள்.

அவை மறைக்கப்பட வேண்டியவை. நீங்கள் புரியப்பட வேண்டியவை. 😁

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, nunavilan said:

இதில் சிலர் தாங்கள் சேகுவராக்கள் என்பது தான் ***** ல் சிரிக்கும் நகைச்சுவை.

நீங்கள் வெளுத்ததெல்லாம் பால் என நம்பும் அப்பாவியாக தெரிகிறது.

சே எனக்கு பிடித்த தலைவர்தான்.

ஆனால் நான் கம்யூனிஸ்டும் இல்லை, என் பெயரில் உள்ள சே அவரும் இல்லை.

ஒரு கண்ணியமான தளத்தில், வரம்புக்கு உட்பட்டு உரையாடல் நடக்கும் போது ஒரு நிர்வாகியே இப்படி கண்ணிய குறைவாக எழுதலாமா?

அண்மையில் ஒருமுறை உங்கள் சார்பில், நீங்கள் என்னிடம் நடந்து கொண்ட முறைக்கு நிர்வாகம் மன்னிப்பு கேட்டது.

அதை தொடர்ந்து மிக அண்மையில் நீங்களாகவே ஜஸ்டின் அண்ணாவுக்கு ஒருமன்னிப்பு கடிதம் எழுதி இருந்தீர்கள்.

இப்படி பல இடங்களில் நடந்துள்ளது.

ஏன் இப்படி நீங்களும் அவமானப்பட்டு, நிர்வாகத்தையும் தர்மசங்கடத்துக்கு ஆக்குகிறீர்கள்?

வீரப்பையன் போன்றோரை பார்த்தாவது கண்ணியமாக எழுத பழகலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

Mr Trump laid down the rules of the ceasefire, in which all sides will remain “peaceful and respectful”.

“On the assumption that everything works as it should, which it will, I would like to congratulate both Countries, Israel and Iran, on having the Stamina, Courage, and Intelligence to end, what should be called, ‘THE 12 DAY WAR’.”

“This is a War that could have gone on for years, and destroyed the entire Middle East, but it didn’t, and never will! God bless Israel, God bless Iran, God bless the Middle East, God bless the United States of America, and GOD BLESS THE WORLD!”

திரு. டிரம்ப் போர் நிறுத்த விதிகளை வகுத்தார், அதில் அனைத்து தரப்பினரும் "அமைதியாகவும் மரியாதையுடனும்" இருப்பார்கள்.

"எல்லாம் சரியாக நடக்கும் என்ற அனுமானத்தின் அடிப்படையில், இஸ்ரேல் மற்றும் ஈரான் ஆகிய இரு நாடுகளுக்கும், '12 நாள் போர்' என்று அழைக்கப்பட வேண்டிய சகிப்புத்தன்மை, தைரியம் மற்றும் உளவுத்துறை முடிவுக்கு வந்ததற்கு நான் வாழ்த்துக்களைத் தெரிவிக்க விரும்புகிறேன்."

"இது பல ஆண்டுகளாக நீடித்து, முழு மத்திய கிழக்கையும் அழித்திருக்கக்கூடிய ஒரு போர், ஆனால் அது நடக்கவில்லை, ஒருபோதும் செய்யாது! கடவுள் இஸ்ரேலை ஆசீர்வதிப்பாராக, கடவுள் ஈரானை ஆசீர்வதிப்பாராக, கடவுள் மத்திய கிழக்கை ஆசீர்வதிப்பாராக, கடவுள் அமெரிக்காவை ஆசீர்வதிப்பாராக, கடவுள் உலகை ஆசீர்வதிப்பாராக!"

இஸ்ரேலின் காதிற்குள் வீண் கூவ வைத்துவிட்டார்கள்🤣

PerthNow
No image preview

Trump announces ‘complete, total’ Israel-Iran ceasefire

The ceasefire will begin early Tuesday morning and last 12 hours, and the ‘12-day war’ would then be ‘considered ended’, US President Donald Trump has declared.

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, Kadancha said:

சிந்தனை இல்லாத கதை.

பயண விமான தொழில் நுட்பம் வாங்கலாம். தடை வந்தது மேற்கின் பொம்மையாக வைத்து இருக்கும் எண்ணத்தால். தடை அகன்ற பின் வாங்கலாம்.

தடை அகன்றாலும் இவற்றை மேட்ற்கு ஈரானுக்கு கொடுக்காது.

எது அரசுக்கு முக்கியம் என்று கருதுகிறது அதுக்கே செலவு செய்யும்.

ஏவுகணை தொழில்நுட்பம் அதுவக்க வளர்த்து கொண்டது. ஏனெனில், இராக்கில் அது அடைந்த அனுபவத்தால், எவரிடமும் பணம் கொட்டுத்தும் வாங்க முடியாமல் போனதால்.

அதே இரான், சிறு செய்மதி ஏவும் தொழிநுட்பத்தை கூட வளர்த்து உள்ள

ஆம் ருசியா நிர்வகிப்பது ராஜதந்திர காரணங்களுக்கு , மற்றும் வெளிப்படை தன்மைக்கு.

அப்போது என் மேட்ற்கு இவ்வ்ளவு துள்ள வேண்டும்?

இஸ்ரேல் ஏன் இதனை விஞ்ஞானிகளை போட்டு தள்ள வேண்டும்.

அணு துறையில், பல உபதுறைகள், இப்பொது இஸ்ரேல் போட்டு தள்ளிய விஞ்ஞானிகள் பலர் உபதுறை, நேரடியாக அணுத்துறைக்கு சம்பந்தப்படாதது.

இரானிடம் அணுத்துறைக்கே என்றே ஆராய்ச்சி மையங்கள் இருக்கிறது. இதனால தான் இஸ்ரேல் இன் கொலைசெய்யும் திட்டம் மத்திம, நீண்ட காலப்போக்கில் சரிவராது என துரைசார் நிபுணர்கள் சொல்லுவது

சும்மா மேற்கின் பிரச்சாரத்தை சிந்தனை இல்லாமல் வாசிப்பது.

இங்கே வந்த அளப்பது.

அதென்ன ராசதந்திர காரணம்? அணு உலைக்கு வேண்டிய max 20% தூய யுரேனியம், அதன் கழிவுகள் இவற்றைக் கூட ஈரானிடம் நம்பிக் கையளிக்காமல் ரஷ்யாவுக்கு ராசதந்திரக் காரணம் என்ன இருக்கிறது? ஈரானின் உள்ளக பாதுகாப்புப் பற்றிய புரிதல் தான் காரணம். இதை ஒரு treaty இல் வந்து சொல்லும் வரை நீங்கள் நம்ப மாட்டீர்கள் போல, அல்லது treaty இல் எழுதாத ரெக்னிகல் டெரெய்ல்சில் ஒளிந்திருந்தால் மட்டும் தான் உங்களுக்குத் தெரியும் போல😂!

உங்கள் "எருமை மாடு பறக்கும்" கதையை எத்தனை ஏரியாக்களில் பார்த்து யாழ் வாசகர்கள் Alex Jones Channel போல கடந்து போய்க் கொண்டிருக்கிறார்கள்! நீங்களோ இன்னும் சளைக்காமல் புதிதாக பொங்கல் வைத்துக் கொண்டேயிருக்கிறீர்கள்!

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, nunavilan said:

முதலில் நாங்கள் சிறப்பாக இருந்து மற்றவர்களை விமர்சிக்க வேண்டும்.

நாங்கள் என்றால்?

நான் என்ன யூதனா, டிரம்பா, நெத்ந்ன்யாஹுவா?

நான் ஒரு புலம்பெயர் ஈழத்தமிழன்.

நான் 550K பலஸ்தீனியரை கொல்லவில்லை,

ஆகவே தன் மக்களை அடக்கி ஆளும் ஈரானிய, அடிப்படைவாத முல்லாக்களை நான் வெறுக்கிறேன்.

அவர்களுக்கு விழும் ஒவ்வொரு அடியையும் ரசிக்கிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, goshan_che said:

நாங்கள் என்றால்?

நான் என்ன யூதனா, டிரம்பா, நெத்ந்ன்யாஹுவா?

நான் ஒரு புலம்பெயர் ஈழத்தமிழன்.

நான் 550K பலஸ்தீனியரை கொல்லவில்லை,

ஆகவே தன் மக்களை அடக்கி ஆளும் ஈரானிய, அடிப்படைவாத முல்லாக்களை நான் வெறுக்கிறேன்.

அவர்களுக்கு விழும் ஒவ்வொரு அடியையும் ரசிக்கிறேன்.

நான் நேட்டோ என நடித்து களவெடுக்கும் கூட்டத்தை வெறுக்கிறேன்.

நடிப்பவர்களை வெறுப்பவர்களில் நானும் ஒருவன்.

புலிகள் காலத்தில் ஒரு கதை. யுக்ரேனியன் போரில் ஒரு கதை. ஈரான் ஈஸ்ரேல் போரில் ஒரு கதை . கொல்ப்படும் பலஸ்தீனியர்கள் பற்றி ஆயிரம் தடவை கேட்டும் பதில் இல்லை. அப்படி ஒரு நியாயவாதி.

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, nunavilan said:

நான் நேட்டோ என நடித்து களவெடுக்கும் கூட்டத்தை வெறுக்கிறேன்.

என்ன செய்வது…நேட்டோ நாட்டில் வந்து குடி ஏறி - சாலை முதல், மருத்துவம் வரை இந்த களவில் வந்த சுகத்தை அனுபவித்து கொண்டே…அதாவது கள்ள சோத்தை சாப்பிட்டு கொண்டே, களவை, கள்வனை வெறுப்பதாக என்னால் virtue signaling மாய்மாலம் போட முடிவதில்லை.

14 minutes ago, nunavilan said:

நடிப்பவர்களை வெறுப்பவர்களில் நானும் ஒருவன்.

இருந்துட்டு போங்க 🤣

15 minutes ago, nunavilan said:

புலிகள் காலத்தில் ஒரு கதை.

2013 க்கு முன் நான் யாழில் எழுதவில்லை.

16 minutes ago, nunavilan said:

யுக்ரேனியன் போரில் ஒரு கதை.

உக்ரேனுக்கு, ஒரு தேசிய இனத்தின் சுயநிர்ணய போருக்கு ஆதரவு

17 minutes ago, nunavilan said:

ஈரான் ஈஸ்ரேல் போரில் ஒரு கதை .

சொந்த மக்களை அடக்கும் முல்லாக்களுக்கு இஸ்ரேல் அடிக்க முன்பே நான் எதிர்ப்பு.

18 minutes ago, nunavilan said:

கொல்ப்படும் பலஸ்தீனியர்கள் பற்றி ஆயிரம் தடவை கேட்டும் பதில் இல்லை

ஹமாசை சாட்டி, இஸ்ரேல் இனப்படுகொலை செய்கிறது என நீங்கள் கேட்க முன்பே எழுதி விட்டேன்.

ஆனால் நீங்கள் உடைந்த ரெக்கோர்ட் போல அதையே ஆயிரம் தடவை கேட்டால் என்ன செய்ய முடியும்?

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, vasee said:

நல்ல விடயம் போர் முடிவுக்கு வருகிறது, ஆனால் யாழில் கொஞ்சம் காலம் ஆகும் போர் நிறுத்தத்திற்கு🤣.

ess than 1 min ago

Sirens sound in Israel as military says it has identified missiles launched from Iran

The Israeli military said it has identified missiles launched toward Israel from Iran, and that its defensive systems were activated.

“A short while ago, sirens sounded in several areas across Israel following the identification of missiles launched from Iran toward the State of Israel,” the Israel Defense Forces said.
“At this time, the IAF (Israeli Air Force) is operating to intercept and strike where necessary to eliminate the threat.”

The alert comes after Iran’s Foreign Minister hinted hostilities may have ended, and that Iran would halt its military response if Israel stopped its strikes on Iran by 4 a.m. local time in Tehran.

It is now shortly before 6 a.m in Iran.

https://www.cnn.com/world/live-news/israel-iran-us-strikes-06-23-25-intl-hnk#cmc9w52ah000o3b6nffycne9w

  • கருத்துக்கள உறவுகள்

ட்ரம்பின் அறிவிப்பு முற்றிலும் தவறு.. போர் நிறுத்தத்தை மறுத்த ஈரான்.

போர் நிறுத்தம் அல்லது இராணுவ நடவடிக்கைகளை நிறுத்துவது குறித்து தற்போது ஈரானுக்கு உடன்பாடு இல்லை என ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராச்சி(Seyed Abbas Araghchi) கூறியுள்ளார்.

அவர் தனது எக்ஸ் தளத்தில் இது தொடர்பில் பதிவிட்டுள்ளார்.

இராணுவ நடவடிக்கை

அந்த பதிவில்,தெஹ்ரான் நேரப்படி அதிகாலை 4 மணிக்குள் ஈரானிய மக்களுக்கு எதிரான தனது சட்டவிரோத ஆக்கிரமிப்பை இஸ்ரேலிய ஆட்சி நிறுத்தினால், அதற்கு பிறகும் எங்கள் பதிலைத் தொடர நாங்கள் விரும்பவில்லை.

ட்ரம்பின் அறிவிப்பு முற்றிலும் தவறு.. போர் நிறுத்தத்தை மறுத்த ஈரான் | Iran Does Not Agree To Cease Fire

இருப்பினும், எமது இராணுவ நடவடிக்கைகளை நிறுத்துவது குறித்து பின்னர் இறுதி முடிவு எடுக்கப்படும் என பதிவிட்டுள்ளார்.

மேலும், 'போர் நிறுத்தம்' தொடர்பில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் வெளியிட்ட கருத்தை ஈரானின் செய்தி தளங்கள் முற்றிலும் மறுத்துள்ளன. 

ட்ரம்ப், போர் நிறுத்தம் தொடர்பான அறிவிப்பை வெளியிடுவதற்கு முறையான அல்லது முறைசாரா போர் நிறுத்த முன்மொழிவு எதனையும் ஈரானிடமிருந்து அவர் பெற்றுக்கொள்ளவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ட்ரம்பின் அறிவிப்பு முற்றிலும் தவறு.. போர் நிறுத்தத்தை மறுத்த ஈரான் | Iran Does Not Agree To Cease Fire

இரு வாரங்களாக நடைபெறும் ஈரான்-இஸ்ரேல் போரில் அமெரிக்கா களமிறங்கி, ஈரான் மீது தாக்குதலை மேற்கொண்டது.

இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், ஈரான் முதலில் ஹார்முஸ் நீரிணையை மூடுவதற்கான நடவடிக்கையை எடுத்ததுடன் கட்டார் மற்றும் ஈராக்கில் உள்ள அமெரிக்க தளங்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தியது.

இதனை தொடர்ந்து, டொனால்ட் ட்ரம்ப், ஈரான்-இஸ்ரேல் போர் நிறுத்தத்தை அறிவித்த சிறிது நேரத்திலேயே ஈரான் மற்றும் இஸ்ரேலில் தாக்குதல்கள் ஆரம்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.  

Tamilwin
No image preview

ட்ரம்பின் அறிவிப்பு முற்றிலும் தவறு.. போர் நிறுத்தத்தை மற...

போர் நிறுத்தம் அல்லது இராணுவ நடவடிக்கைகளை நிறுத்துவது குறித்து தற்போது ஈரானுக்கு உடன்பாடு இல்லை என ஈரானின் வெளியுறவு அமை...

  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, ஈழப்பிரியன் said:

ess than 1 min ago

Sirens sound in Israel as military says it has identified missiles launched from Iran

The Israeli military said it has identified missiles launched toward Israel from Iran, and that its defensive systems were activated.

“A short while ago, sirens sounded in several areas across Israel following the identification of missiles launched from Iran toward the State of Israel,” the Israel Defense Forces said.
“At this time, the IAF (Israeli Air Force) is operating to intercept and strike where necessary to eliminate the threat.”

The alert comes after Iran’s Foreign Minister hinted hostilities may have ended, and that Iran would halt its military response if Israel stopped its strikes on Iran by 4 a.m. local time in Tehran.

It is now shortly before 6 a.m in Iran.

https://www.cnn.com/world/live-news/israel-iran-us-strikes-06-23-25-intl-hnk#cmc9w52ah000o3b6nffycne9w

போரினை தொடரும் நிலை சம்பந்தப்பட்ட தரப்புக்களிடம் அதற்கான வசதிகள் இல்லை என கருதுகிறேன், ஈரானிடமும் இல்லை, இரண்டு வார போரில் இஸ்ரேல், ஈரான் இரு தரப்பிற்கும் சேதம் ஏற்பட்டுள்ளது பெரிதாக உயிரிழப்புக்கள் இல்லை, அணு நிலைகளில் கூட பெரிதாக எந்த அணுக்கசிவுகளும் ஏற்படவில்லை, இத்துடன் போரினை முடித்து கொண்டால் இருதரப்பும் தமது கவுரவத்தினை இழக்க வேண்டிய நிலை இல்லாததால் போரினை முடித்து கொள்வார்கள்.

https://www.politico.com/news/2025/06/21/iran-says-strikes-did-not-cause-nuclear-contamination-00416469

Bulletin of the Atomic Scientists
No image preview

The radiation risks of Iran’s nuclear program, with or wi...

Israel’s attacks create significant risks at Iran's nuclear sites. What could go wrong?

https://www.samaa.tv/index.php/2087335313-iaea-reports-no-rise-in-radiation-after-us-strikes-on-iran-nuclear-sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, vasee said:

நல்ல விடயம் போர் முடிவுக்கு வருகிறது, ஆனால் யாழில் கொஞ்சம் காலம் ஆகும் போர் நிறுத்தத்திற்கு🤣.

🤣 யாழ்களத்தில் உள்ள முல்லாக்களின் குரல் தரவல்ல அதிகாரிகளின் நிலைபாடுகளை கவனத்தில் எடுத்து கொண்டே ஈரானிய வெளியுறவு அமைச்சர் எமது இராணுவ நடவடிக்கைகளை நிறுத்துவது குறித்த இறுதி முடிவு பின்னர் தான் எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்

  • கருத்துக்கள உறவுகள்

New-Project-314.jpg?resize=750%2C375&ssl

ஈரான் – இஸ்ரேல் முழுமையான போர் நிறுத்தம்; தெஹ்ரான் மறுப்பு!

இஸ்ரேலும் ஈரானும் திங்களன்று (23) ‘முழுமையான போர்நிறுத்த’ ஒப்பந்தத்தை எட்டியுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.

இதன் மூலம் மில்லியன் கணக்கான மக்கள் தெஹ்ரானில் இருந்து வெளியேறிய 12 நாள் போரை முடிவுக்குக் கொண்டுவர முடிந்தது.

எனினும், அமெரிக்க ஜனாதிபதியின் கூற்றுக்களை ஈரான் முற்றிலுமாக மறுத்துள்ளதுடன் போர்நிறுத்தம் குறித்த எந்த ஒப்பந்தமும் எட்டப்படவில்லை என்றும் அது கூறியுள்ளது.

போர் நிறுத்தம் குறித்து ட்ரம்ப் தனது ட்ரூத் சமூக ஊடகப் பதிவில்,

அனைவருக்கும் வாழ்த்துக்கள்! இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையே முழுமையான போர்நிறுத்தம் ஏற்படும் என்று முழுமையாக ஒப்புக் கொள்ளப்பட்டுள்ளது – என்று பதிவிட்டுள்ளார்.

அமெரிக்க ஜனாதிபதியின் கூற்றுப்படி, ஈரான் முதல் கட்ட நடவடிக்கையாக போர்நிறுத்தத்தில் ஈடுபடும். தொடர்ந்து இஸ்ரேலும் 12-வது மணிநேரத்தில் போர்நிறுத்தம் மேற்கொள்ளும். அடுத்த 24 மணிநேரத்தில், முற்றிலும் போரானது நிறுத்தப்படும்.

12 நாள் போரானது அதிகாரப்பூர்வ முறையில் உலகம் வணங்கும் வகையிலான ஒரு முடிவுக்கு வரும்.

இந்த போர்நிறுத்த காலகட்டத்தில், இரு நாடுகளும் அமைதியாகவும், மதிப்புடனும் நடந்து கொள்ள வேண்டும் என்றும் அவர் தெரிவித்து உள்ளார்.

இரு தரப்பினரும் புதிய தாக்குதல்களை அச்சுறுத்திய சில நிமிடங்களுக்குப் பின்னர் ட்ரம்ப் போர் நிறுத்தத்தை அறிவித்தார்.

கட்டார் மற்றும் ஈராக்கில் உள்ள அமெரிக்க இராணுவத் தளங்கள் மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதல்களை நடத்திய பின்னர் இது வருகிறது.

போர் நிறுத்தத்தை மறுத்த தெஹ்ரான்.

ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையே திங்களன்று போர் நிறுத்தம் எட்டப்பட்டதாக அமெரிக்க ட்ரம்ப் கூறிய நிலையில், தெஹ்ரான் அந்தக் கூற்றை மறுத்துள்ளது.

அமெரிக்காவிடமிருந்து போர் நிறுத்தம் கோரும் எந்த போர் நிறுத்த முன்மொழிவையும் பெறவில்லை என்றும் அது கூறியுள்ளது.

இதற்கிடையில், போர் நிறுத்தக் கோரிக்கை குறித்து இஸ்ரேல் அமைதியாக உள்ளது மற்றும் அதன் செயல்படுத்தல் குறித்து இன்னும் கருத்து தெரிவிக்கவில்லை என்றும் கூறியது.

எக்ஸில் இது தொடர்பில் பதிவிட்டுள்ள ஈரானிய வெளிவிவகார அமைச்சர் சையத் அப்பாஸ் அரக்சி,

தற்போது வரை, போர் நிறுத்தம் அல்லது இராணுவ நடவடிக்கைகளை நிறுத்துவது குறித்து எந்த “உடன்பாடும்” இல்லை.

எனினும், இஸ்ரேலிய ஆட்சி ஈரானிய மக்களுக்கு எதிரான சட்டவிரோத ஆக்கிரமிப்பை தெஹ்ரான் நேரப்படி அதிகாலை 4.00 (செவ்வாய்) மணிக்குள் நிறுத்தினால், எங்கள் இராணுவ நடவடிக்கைகளை நிறுத்துவது குறித்த இறுதி முடிவு பின்னர் எடுக்கப்படும் – என்றார்.

images?q=tbn:ANd9GcSX5spC1BNFix--mLAwiiX

எண்ணெய் விலை வீழ்ச்சி

ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி கூறியதால், செவ்வாய்க்கிழமை எண்ணெய் விலைகள் ஒரு வாரத்திற்கும் மேலாக மிகக் குறைந்த அளவிற்கு சரிந்தன.

இது அப்பகுதியில் விநியோக இடையூறு குறித்த கவலைகளைத் தணித்தது.

பிரெண்ட் மசகு எண்ணெய் விலை 0006 GMT மணியளவில் ஒரு பீப்பாய்க்கு $2.69 அல்லது 3.76% குறைந்து $68.79 ஆக இருந்தது.

ஜூன் 11 க்குப் பின்னர் அதன் விலை சரிந்த சந்தர்ப்பமாகும் இது.

அமெரிக்க மேற்கு டெக்சாஸ் இடைநிலை மசகு எண்ணெய் பீப்பாய்க்கு $2.7 அல்லது 3.94% சரிந்து $65.46 ஆக இருந்தது.

இது ஜூன் 09 க்குப் பின்னர் அதன் விலை சரிந்த சந்தர்ப்பமாகும்.

ஈரான் OPEC இன் மூன்றாவது பெரிய மசகு எண்ணெய் உற்பத்தியாளராக உள்ளது.

மேலும் பதட்டங்களைத் தளர்த்துவது அதிக எண்ணெயை ஏற்றுமதி செய்ய அனுமதிக்கும் மற்றும் விநியோக இடையூறுகளைத் தடுக்கும், இது அண்மைய நாட்களில் எண்ணெய் விலைகள் அதிகரிப்பதற்கு ஒரு முக்கிய காரணியாகும்.

1749024532842?e=2147483647&v=beta&t=GIN5

அமெரிக்காவுக்கு ஈரான் பதிலடி

அமெரிக்காவிற்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஈரான் திங்களன்று நடவடிக்கை எடுத்தது.

கட்டாரில் உள்ள அமெரிக்க அல் உதெய்த் விமானத் தளத்தை குறிவைத்து குறுகிய மற்றும் நடுத்தர தூர ஏவுகணைகளை ஏவியது.

எனினும் ஏவுகணைகள் இடைமறிக்கப்பட்டதாகவும், எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை என்றும் கட்டார் அரசாங்கம் கூறியதாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்தனர்.

வார இறுதியில் மூன்று ஈரானிய அணுசக்தி தளங்களை குறிவைத்து அமெரிக்கா நடத்திய தாக்குதல்களுக்கு பதிலடியாக ஈரான் தனது ஏவுகணைகளை ஏவியது.

இந்த நடவடிக்கை குறித்தும் பதிவிட்டுள்ள ட்ரம்ப்,

இந்த தாக்குதல் பலவீனமானது மற்றும் எதிர்பார்க்கப்பட்டது என்று அழைத்தார்.

அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகளால் ஈரானிய அணுசக்தி நிலையங்கள் “அழிக்கப்பட்டதை” தொடர்ந்து ஈரான் 14 ஏவுகணைகளை ஏவியதாக ட்ரம்ப் உறுதிப்படுத்தினார்.

அவற்றில் 13 இடைமறிக்கப்பட்டன என்றார்.

GuJUxIlaAAAoew_?format=jpg&name=900x900

https://athavannews.com/2025/1436783

  • கருத்துக்கள உறவுகள்

1231603.jpg?resize=750%2C375&ssl=1

போர்நிறுத்ததை அறிவித்துள்ளது ஈரான்!

இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையிலான 12 நாள் நீடித்த போரை முடிவுக்குக் கொண்டுவரும் வகையில் முழு போர் நிறுத்தத்தை ஈரான் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

கட்டாரில் உள்ள அமெரிக்க இராணுவத் தளமான அல் உதெய்த் விமானத் தளத்தின் மீது நேற்று இரவு(23) ஈரான் பல ஏவுகணைகளை ஏவி தாக்கியுள்ளது.

அமெரிக்கா ஈரானின் அணுசக்தி நிலையங்கள் மீது நடத்திய தாக்குதலுக்குப் பதிலடியாக இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாக ஈரான் தெரிவித்துள்ளது.

இருப்பினும் ஈரானின் ஏவுகணைகளை இடைமறித்து அழித்ததாக கட்டாரும், அமெரிக்காவும் தெரிவித்துள்ளது.

கடந்த ஜூன் 13 அன்று ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதை தொடர்ந்து இரு நாடுகளுக்கும் இடையே மோதல் நடந்து வந்தது.

அமெரிக்காவின் தலையீடு நிலைமையை மேலும் மோசமாக்கியது. இந்நிலையில் ஈரானும், இஸ்ரேலும் போர் நிறுத்தத்திற்கு சம்மதம் தெரிவித்துள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் தனது சமூக வலைதள பக்கத்தில் தெரிவித்தார்.

ஆனால் போர்நிறுத்தம் தொடர்பாக டிரம்ப் அறிவிப்பை ஈரான் வெளியுறவு அமைச்சர் சையத் அப்பாஸ் அரக்சி மறுத்தார்.

இந்நிலையில், இஸ்ரேல் உடனான சண்டையில் போர் நிறுத்தம் ஏற்பட்டுள்ளதாக ஈரான் அரசு ஊடகம் அறிவித்துள்ளது.

முதலில் போர் நிறுத்தம் இல்லை என்று கூறிய ஈரான் தற்போது போர் நிறுத்தத்தை அறிவித்துள்ளது.

https://athavannews.com/2025/1436811

  • கருத்துக்கள உறவுகள்

509341879_1141919981306306_8869990853981

512517923_1141212258043745_8202743653711

510519812_1141993557965615_8174036256588

512410101_1141746554656982_6509355442327

511303855_1141917441306560_1583612662444

510804018_1141747757990195_5923857375074

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

யுத்த நிறுத்தம் நடைமுறைக்கு வந்துள்ளது - டிரம்ப்

24 JUN, 2025 | 11:01 AM

image

இஸ்ரேல் ஈரான் இடையில் யுத்தநிறுத்தம் தற்போது நடைமுறைக்கு வந்துள்ளதாக   அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்தனது சமூக ஊடகத்தில் தெரிவித்துள்ளார்.

தயவுசெய்து அதனை மீறாதீர்கள் என அவர் தெரிவித்துள்ளார்.இஸ்ரேலுடனான யுத்தநிறுத்தம் தற்போது ஆரம்பமாகியுள்ளது என ஈரானின் அரச ஊடகம் தெரிவித்துள்ளது.

https://www.virakesari.lk/article/218296

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, விளங்க நினைப்பவன் said:

🤣 யாழ்களத்தில் உள்ள முல்லாக்களின் குரல் தரவல்ல அதிகாரிகளின் நிலைபாடுகளை கவனத்தில் எடுத்து கொண்டே ஈரானிய வெளியுறவு அமைச்சர் எமது இராணுவ நடவடிக்கைகளை நிறுத்துவது குறித்த இறுதி முடிவு பின்னர் தான் எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்

சவூதியின் முல்லாக்களும் இதில் அடங்குகிறார்களா?

  • கருத்துக்கள உறவுகள்

'டிரம்ப் கெஞ்சினார்' : இரான் - இஸ்ரேல் சண்டை நிறுத்தத்திற்கு முதலில் அழைத்தது யார்?

இஸ்ரேல் - இரான் சண்டை நிறுத்தம், அமெரிக்கா, டிரம்ப், கத்தார், மத்திய கிழக்கு

பட மூலாதாரம்,GETTY IMAGES

24 ஜூன் 2025, 01:28 GMT

புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர்

இஸ்ரேலும் இரானும் முழுமையான சண்டை நிறுத்தத்துக்கு ஒப்புக் கொண்டிருப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். இஸ்ரேலும் இரானும் கிட்டத்தட்ட ஒரே நேரத்தில் தன்னிடம் வந்து, 'சமாதானம்' வேண்டி நின்றதாக அவர் கூறியுள்ளார்.

அதேநேரத்தில், இரான் அரசுத் தொலைக்காட்சியோ, சண்டை நிறுத்தத்துக்காக டிரம்ப் தங்களிடம் கெஞ்சியதாக கூறியுள்ளது.

எந்தவொரு சண்டை நிறுத்தம் அல்லது இராணுவ நடவடிக்கைகளை நிறுத்துவது குறித்து எந்த "ஒப்பந்தமும்" இல்லை என்று கூறியுள்ள இரான் வெளியுறவு அமைச்சர் சையத் அப்பாஸ், இஸ்ரேல் தாக்குதல்களை நிறுத்தினால், 'எங்களுக்கு பதிலடி கொடுக்கும் திட்டம் இல்லை' என்று தெரிவித்துள்ளார்.

சண்டை நிறுத்தம் எட்டப்பட்டுள்ளதா என்று இஸ்ரேலும் இரானும் இன்னும் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தவில்லை. மத்திய கிழக்கில் என்ன நடக்கிறது? சண்டை நிறுத்தத்துக்கு முதலில் அழைத்தது யார்?

சண்டை நிறுத்தத்துக்கு முதலில் அழைத்தது யார்?

இஸ்ரேலும் இரானும் கிட்டத்தட்ட ஒரே நேரத்தில் தன்னிடம் வந்து, 'சமாதானம்' ஏற்பட வேண்டும் என்று கூறியதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். அந்த கட்டத்தில், "அதற்கான நேரம் இது என்று எனக்குத் தெரியும்" என்று அவர் தனது ட்ரூத் சமூக ஊடக பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

முன்பே அறிவித்த சண்டை நிறுத்தத்தைப் பற்றிக் குறிப்பிட்டுள்ள அவர், "உலகமும் மத்திய கிழக்கு நாடுகளும் உண்மையான வெற்றியாளர்கள். இரு நாடுகளும் தங்கள் எதிர்காலத்தில் மிகப்பெரிய அன்பு, அமைதி மற்றும் செழிப்பைக் காணும்" என்று தெரிவித்துள்ளார்.

இரானும் இஸ்ரேலும் சண்டை நிறுத்தத்தை பகிரங்கமாக இன்னும் ஏற்றுக்கொள்ளவில்லை, இருப்பினும் இஸ்ரேல் தாக்குதலை நிறுத்தினால் தாங்களும் சண்டையை நிறுத்துவோம் என்று இரான் சமிக்ஞை செய்தது.

"இரு நாடுகளும் பெறுவதற்கு நிறைய இருக்கிறது, ஆனால், நீதி மற்றும் உண்மையின் பாதையில் இருந்து விலகிச் சென்றால் இழக்க நிறைய இருக்கிறது" என்றும், இஸ்ரேல் மற்றும் இரானின் எதிர்காலம் "வரம்பற்றது மற்றும் பெரிய வாக்குறுதிகளால் நிரம்பியுள்ளது. கடவுள் உங்கள் இருவரையும் ஆசீர்வதிப்பாராக!" என்றும் டிரம்ப் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

இஸ்ரேல் - இரான் சண்டை நிறுத்தம், அமெரிக்கா, டிரம்ப், கத்தார், மத்திய கிழக்கு

பட மூலாதாரம்,REUTERS

'சமாதானம் வேண்டி டிரம்ப் கெஞ்சினார்'

இரான் அரசு தொலைக்காட்சி செய்தி சேனலான ஐ.ஆர்.ஐ.என்.என். (IRINN) சண்டை நிறுத்தம் குறித்து செய்தி வெளியிட்டுள்ளது.

கத்தாரில் உள்ள அமெரிக்க ராணுவ தளத்தின் மீதான "வெற்றிகரமான" தாக்குதலைத் தொடர்ந்து இஸ்ரேல் மீது சண்டை நிறுத்தம் திணிக்கப்பட்டிருப்பதாகவும், இரானின் தாக்குதலைத் தொடர்ந்து டிரம்ப் சண்டை நிறுத்தத்துக்காக "கெஞ்சினார்" என்றும் அரசு தொலைக்காட்சி ஒரு செய்தி அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இந்த குறிப்பிட்ட அறிக்கையை தொகுப்பாளர் சத்தமாக வாசித்தார்.

இரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படை (IRGC) மற்றும் இராணுவத்தை இந்த அறிக்கை பாராட்டியதுடன் இரானியர்களின் "எதிர்ப்பையும்" பாராட்டியது.

'சண்டை நிறுத்தம்' - டிரம்ப் அறிவிப்பு

இஸ்ரேல் - இரான் சண்டை நிறுத்தம், அமெரிக்கா, டிரம்ப், கத்தார், மத்திய கிழக்கு

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,இஸ்ரேல் தாக்குதலில் டெஹ்ரானில் கட்டடம் தீப்பிடித்து கரும்புகை எழுந்த காட்சி.

இஸ்ரேலுக்கும் இரானுக்கும் முழுமையான சண்டை நிறுத்தத்துக்கு ஒப்புக் கொண்டிருப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

"இப்போதிலிருந்து சுமார் ஆறு மணி நேரத்தில்" சண்டை நிறுத்தம் தொடங்கும் என்று அவர் தனது சமூக ஊடக பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

டிரம்ப் அறிவிப்பில் பரஸ்பர பகைமை குறித்த தகவல்கள் இருந்தாலும், "24 வது மணி நேரத்தில்" மோதல் அதிகாரப்பூர்வமாக முடிவடையும் என்று கூறப்பட்டுள்ளது.

"எல்லாம் சரியாக நடக்கும் என்ற அனுமானத்தின் அடிப்படையில், இரு நாடுகளையும் நான் வாழ்த்த விரும்புகிறேன்." என்று கூறியுள்ள டிரம்ப், இந்த இஸ்ரேல்-இரான் மோதலை "12 நாள் போர்" என்று குறிப்பிட்டுள்ளார்.

"இது பல ஆண்டுகள் நீடித்து, முழு மத்திய கிழக்கு பிராந்தியத்திலும் பேரழிவை ஏற்படுத்தியிருக்கக் கூடிய ஒரு போர், ஆனால் அது நடக்கவில்லை, ஒருபோதும் நடக்காது!" என்று டிரம்ப் தனது பதிவில் தெரிவித்துள்ளார்.

சண்டை நிறுத்தம் எட்டப்பட்டுள்ளதா என்று இஸ்ரேலும் இரானும் இன்னும் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தவில்லை.

இஸ்ரேல் - இரான் சண்டை நிறுத்தம், அமெரிக்கா, டிரம்ப், கத்தார், மத்திய கிழக்கு

பட மூலாதாரம்,GETTY IMAGES

'சண்டை நிறுத்தத்துக்கு கத்தார் உதவியது'

கத்தார் பிரதமர் ஷேக் முகமது பின் அப்துல்ரஹ்மான் அல் தானி, இரான் - இஸ்ரேல் இடையே சண்டை நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட உதவினார் என்று பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்ட அதிகாரிகள் அமெரிக்க ஊடகங்களிடம் தெரிவித்தனர்.

பெயர் குறிப்பிடப்படாத அதிகாரிகளின் கூற்றுப்படி, கத்தார் உட்பட பிராந்தியத்தில் உள்ள அமெரிக்க இராணுவ தளங்களை இரான் தாக்கிய பின்னர், இரானிய அதிகாரிகளுடன் தொலைபேசியில் பேசிய போது சண்டை நிறுத்தம் பற்றி அமெரிக்கா தரப்பில் முன்மொழியப்பட்டது. இதில் கத்தாரும் முக்கிய பங்கு வகித்தது.

சண்டை நிறுத்தம் - வெள்ளை மாளிகை அதிகாரி தகவல்

இஸ்ரேலும் இரானும் போர் நிறுத்தத்துக்கு ஒப்புக்கொண்டதாக பிபிசியின் அமெரிக்க செய்தி கூட்டாளியான சிபிஎஸ்ஸிடம் வெள்ளை மாளிகையின் மூத்த அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.

ஆனால் இரு தரப்பினரும் முறையான அல்லது பொது பதிலை வெளியிடவில்லை.

அவரது கூற்றுப்படி, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை டிரம்ப் நேரடியாக தொடர்பு கொண்டார். இரான் இனிமேல் தாக்குதல் நடத்தாத பட்சத்தில் சண்டை நிறுத்தத்துக்கு தயார் என்று நெதன்யாகு ஒப்புக் கொண்டார் என்று சிபிஎஸ் செய்தி கூறுகிறது.

அந்த செய்தியின் படி, இரான் சண்டை நிறுத்தத்துக்கு ஒப்புக்கொண்டதாக மூத்த இரானிய அதிகாரிகளும் உறுதிப்படுத்தியுள்ளனர்.

அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ், வெளியுறவுச் செயலாளர் மார்கோ ரூபியோ மற்றும் சிறப்பு தூதர் ஸ்டீவ் விட்காஃப் ஆகியோர் இரானியர்களுடன் நேரடி மற்றும் மறைமுக வழிகள் மூலம் தொடர்பு கொண்ட பிறகு சண்டை நிறுத்தம் ஏற்பட்டதாக அந்த மூத்த அதிகாரி கூறியுள்ளார்.

இஸ்ரேல் - இரான் சண்டை நிறுத்தம், அமெரிக்கா, டிரம்ப், கத்தார், மத்திய கிழக்கு

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,இரான் வெளியுறவு அமைச்சர் சையத் அப்பாஸ்

இரான் வெளியுறவு அமைச்சர் கூறியது என்ன?

இஸ்ரேல் தாக்குதல்களை நிறுத்தினால், 'எங்களுக்கு பதிலடி கொடுக்கும் திட்டம் இல்லை' என்று இரான் வெளியுறவு அமைச்சர் சையத் அப்பாஸ் கூறியுள்ளார். அவர் தனது எக்ஸ் பக்கத்தில், "இஸ்ரேல் தனது "சட்டவிரோத ராணுவ நடவடிக்கைகளை" இப்போது நிறுத்தினால், இரான் பதிலடியைத் தொடர எந்த நோக்கமும் இல்லை" என்று பதிவிட்டுள்ளார்.

உள்ளூர் நேரப்படி அதிகாலை 4 மணிக்குள் இஸ்ரேல் தாக்குதல்களை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று அவர் கூறியுள்ளார். அந்த நேரம் ஏற்கெனவே கடந்துவிட்டது:

"இரான் பலமுறை தெளிவுபடுத்தியது போல, இஸ்ரேல்தான் இரான் மீது போரை தொடங்கியது, மாறாக நாங்கள் அல்ல. தற்போது, எந்தவொரு சண்டை நிறுத்தம் அல்லது இராணுவ நடவடிக்கைகளை நிறுத்துவது குறித்து எந்த "ஒப்பந்தமும்" இல்லை. இருப்பினும், இஸ்ரேலிய ஆட்சி இரானிய மக்களுக்கு எதிரான அதன் சட்டவிரோத ராணுவ நடவடிக்கைகளை டெஹ்ரான் நேரப்படி அதிகாலை 4 மணிக்குள் நிறுத்தினால், அதன் பிறகு எங்கள் பதிலடியைத் தொடர எங்களுக்கு எந்த நோக்கமும் இல்லை. எங்கள் இராணுவ நடவடிக்கைகளை நிறுத்துவது குறித்த இறுதி முடிவு பின்னர் எடுக்கப்படும்." என்று சையத் அப்பாஸ் தெரிவித்துள்ளார்.

"இஸ்ரேலுக்கு பதிலடி கொடுக்க நமது சக்தி வாய்ந்த ஆயுதப் படைகளின் இராணுவ நடவடிக்கைகள் கடைசி நிமிடம் வரை, அதாவது அதிகாலை 4 மணி வரை தொடர்ந்தன," என்று சையத் அப்பாஸ் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

(இந்த செய்தி தொடர்ந்து புதுப்பிக்கப்பட்டு வருகிறது)

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/c5ypepk0l1qo

  • கருத்துக்கள உறவுகள்

முல்லாக்களின் கொட்டதை அடக்கியாச்சாம். அடுத்து வட கொரியாவின் கிம் தான் என பேசிக்கொள்கிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, nunavilan said:

முல்லாக்களின் கொட்டதை அடக்கியாச்சாம். அடுத்து வட கொரியாவின் கிம் தான் என பேசிக்கொள்கிறார்கள்.

Greeland பிடித்த பின்தான் கிம்😁

  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்கத் தாக்குதல்களுக்குப் பிறகு ஈரானின் அணுசக்தி தளங்களுக்கு ஏற்பட்ட சேதத்தை என்ன செயற்கைக்கோள் படங்கள் காட்டுகின்றன?

ஆசிரியர்

மெக் கெல்லி, ஜாய்ஸ் சோஹ்யுன் லீ, நிலோ டாப்ரிஸி, இவான் ஹில், டிலான் மோரியார்டி - வாஷிங்டன் போஸ்ட் ,

வெளியீட்டு தேதி

திங்கள், 23 ஜூன் 2025, காலை 11:01 மணி

வாஷிங்டன் போஸ்ட் காட்சி பகுப்பாய்வு மற்றும் பல நிபுணர்களின் கூற்றுப்படி, இன்று எடுக்கப்பட்ட செயற்கைக்கோள் படங்கள் ஈரானின் முக்கிய ஃபோர்டோ யுரேனியம் செறிவூட்டல் நிலையத்தில் குறைந்தது ஆறு வெளிப்படையான வெடிகுண்டு நுழைவு புள்ளிகளைக் காட்டுகின்றன.

நேற்று அமெரிக்க குண்டுவீச்சு விமானங்கள் ஈரானின் முக்கிய அணுசக்தி நிலையங்களில் ஒன்றின் மீதும் மற்ற இரண்டு நிலையங்கள் மீதும் தாக்குதல் நடத்திய பின்னர் ஏற்பட்ட சேதத்தின் முதல் பார்வையே இந்தப் படங்கள்.

இந்தத் தாக்குதல்கள் ஈரானின் ஃபோர்டோ, இஸ்ஃபஹான் மற்றும் நடான்ஸ் ஆகிய மூன்று முக்கிய அணுசக்தி நிலையங்களை "முற்றிலும் முற்றிலுமாக அழித்துவிட்டன" என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறினார்.

இந்தப் படங்களின் கலவையானது ஜூன் 16, 2025 அன்று ஈரானின் இஸ்ஃபஹான் அணு செறிவூட்டல் நிலையத்தையும் (மேலே), அமெரிக்கத் தாக்குதல்களுக்குப் பிறகு மத்திய ஈரானில் உள்ள ஈரானின் இஸ்ஃபஹான் அணு செறிவூட்டல் நிலையத்தையும் காட்டுகிறது. புகைப்படம் / AFP
இந்தப் படங்களின் கலவையானது ஜூன் 16, 2025 அன்று ஈரானின் இஸ்ஃபஹான் அணு செறிவூட்டல் நிலையத்தையும் (மேலே), அமெரிக்கத் தாக்குதல்களுக்குப் பிறகு மத்திய ஈரானில் உள்ள ஈரானின் இஸ்ஃபஹான் அணு செறிவூட்டல் நிலையத்தையும் காட்டுகிறது. புகைப்படம் / AFP

பென்டகன் தலைவர்கள் ஒரு செய்தி மாநாட்டில் மிகவும் அளவிடப்பட்ட விளக்கத்தைப் பயன்படுத்தினர், அனைத்து தளங்களும் "மிகவும் கடுமையான சேதத்தை" சந்தித்ததாகவும், ஃபோர்டோவில் "திறன்களை அழிப்பதை" அடைந்துவிட்டதாக அவர்கள் நம்புவதாகவும் கூறினர்.

இஸ்ஃபஹானில் உள்ள அணுசக்தி தளம் "அழிக்கப்பட்டுவிட்டது" என்றும், ஃபோர்டோ மற்றும் நடான்ஸில் உள்ள அணுசக்தி நிலையங்கள் "கடுமையாக சேதமடைந்துள்ளன" என்றும் ஆரம்ப மதிப்பீட்டில் காட்டப்பட்டுள்ளதாக மூத்த இஸ்ரேலிய அதிகாரி ஒருவர் வாஷிங்டன் போஸ்ட்டிடம் தெரிவித்தார்.

வெடிப்பின் ஆழம் மற்றும் சுற்றியுள்ள புவியியல் உள்ளிட்ட பல்வேறு காரணிகளைப் பொறுத்து நிலத்தடி தாக்கங்கள் சார்ந்து இருப்பதால், மிக விரைவாக முடிவுகளை எடுப்பதைத் தவிர்க்குமாறு குண்டு வெடிப்பு ஆய்வாளர்கள் எச்சரித்தனர்.

அமெரிக்கத் தாக்குதல்களுக்கு முன்னர் ஈரானில் உள்ள ஃபோர்டோ நிலத்தடி அணுசக்தி நிலையத்தை மேக்சர் டெக்னாலஜிஸ் எடுத்த செயற்கைக்கோள் படம் காட்டுகிறது. புகைப்படம் / மேக்சர் டெக்னாலஜிஸ்
அமெரிக்கத் தாக்குதல்களுக்கு முன்னர் ஈரானில் உள்ள ஃபோர்டோ நிலத்தடி அணுசக்தி நிலையத்தை மேக்சர் டெக்னாலஜிஸ் எடுத்த செயற்கைக்கோள் படம் காட்டுகிறது. புகைப்படம் / மேக்சர் டெக்னாலஜிஸ்

அமெரிக்காவிற்குப் பிறகு ஈரானில் உள்ள ஃபோர்டோ நிலத்தடி அணுசக்தி நிலையத்தை மேக்சர் டெக்னாலஜிஸ் செயற்கைக்கோள் படம் காட்டுகிறது. மேக்சர் டெக்னாலஜிஸ்அமெரிக்கத் தாக்குதல்களுக்குப் பிறகு ஈரானில் உள்ள ஃபோர்டோ நிலத்தடி அணுசக்தி நிலையத்தை மேக்சர் டெக்னாலஜிஸ் எடுத்த செயற்கைக்கோள் படம் காட்டுகிறது. புகைப்படம் / மேக்சர் டெக்னாலஜிஸ்

உள்ளூர் நேரப்படி அதிகாலை 1.45 மணி முதல் 2.30 மணி வரை, உலகம் முழுவதும் தீ மற்றும் கடுமையான வானிலையைக் கண்டறியப் பயன்படுத்தப்படும் செயற்கைக்கோள்கள், ஃபோர்டோ தளத்திற்கு அருகில் குறிப்பிடத்தக்க வெப்பம் தொடர்பான நிகழ்வுகளைக் கண்டறிந்ததாகத் தெரிகிறது.

அந்த இடத்தில் வான் பாதுகாப்புக்காகப் பயன்படுத்தப்பட்டதாக நிபுணர்கள் கூறிய இடத்தில் வெப்பக் கையொப்பங்கள் பிடிக்கப்பட்டன.

கூட்டுப் படைத் தலைவர்களின் தலைவரான ஜெனரல் டான் கெய்ன், பதுங்கு குழிகளை உடைக்கும் பாரிய ஆயுத ஊடுருவல் விமானங்களை சுமந்து செல்லும் B-2 ஸ்டெல்த் குண்டுவீச்சு விமானங்கள் ஃபோர்டோ மற்றும் நடான்ஸை நெருங்கியபோது, அமெரிக்கப் படைகள் ஈரானிய தரையிலிருந்து வான் அச்சுறுத்தல்களுக்கு எதிராக "அடக்குமுறை ஆயுதங்களை" நிலைநிறுத்தியதாகக் கூறினார்.

அமெரிக்கத் தாக்குதல்களுக்குப் பிறகு ஈரானில் உள்ள ஃபோர்டோ நிலத்தடி வளாகத்தில் உள்ள முகட்டில் உள்ள பள்ளங்கள் மற்றும் சாம்பலைக் காட்டும் மாக்சர் டெக்னாலஜிஸின் செயற்கைக்கோள் புகைப்படம். புகைப்படம் / மாக்சர் டெக்னாலஜிஸ்
 அமெரிக்கத் தாக்குதல்களுக்குப் பிறகு ஈரானில் உள்ள ஃபோர்டோ நிலத்தடி வளாகத்தில் உள்ள முகட்டில் உள்ள பள்ளங்கள் மற்றும் சாம்பலைக் காட்டும் மாக்சர் டெக்னாலஜிஸின் செயற்கைக்கோள் புகைப்படம் . புகைப்படம் / மாக்சர் டெக்னாலஜிஸ்

இறுதியில், ஈரானின் வான் பாதுகாப்பு அமைப்புகள் அமெரிக்க விமானங்கள் ஈரானிய வான்வெளிக்குள் நுழைந்து வெளியேறும் போது அவற்றை நோக்கிச் சுடவில்லை என்று பென்டகன் அதிகாரிகள் தெரிவித்தனர்.

உள்ளூர் நேரப்படி அதிகாலை 2.10 மணியளவில், முன்னணி B-2 குண்டுவீச்சு விமானம் முதல் இரண்டு GBU-57 MOPகளை ஃபோர்டோ வசதியில் வீழ்த்தியதாக கெய்ன் கூறினார்.

13,610 கிமீ துல்லிய வழிகாட்டும் குண்டுகள் நிலத்தடி இலக்குகளை அழிக்க வடிவமைக்கப்பட்டுள்ளன. மொத்தத்தில், ஏழு B-2 கள் ஃபோர்டோ மற்றும் நடான்ஸில் 14 குண்டுகளை வீசியதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஃபோர்டோ வசதிக்கு மேலே உள்ள முகட்டில் மூன்று நுழைவுப் புள்ளிகளைக் கொண்ட இரண்டு கொத்துக்களை செயற்கைக்கோள் படங்கள் காட்டுகின்றன என்று, அதன் பின்விளைவுகளின் படங்களை மதிப்பாய்வு செய்த நிபுணர்கள் தெரிவித்தனர்.

அமெரிக்கத் தாக்குதல்களுக்குப் பிறகு ஈரானில் உள்ள நடான்ஸ் அணுசக்தி நிலையத்தை மேக்சர் டெக்னாலஜிஸ் எடுத்த செயற்கைக்கோள் படம் காட்டுகிறது. புகைப்படம் / மேக்சர் டெக்னாலஜிஸ்
அமெரிக்கத் தாக்குதல்களுக்குப் பிறகு ஈரானில் உள்ள நடான்ஸ் அணுசக்தி நிலையத்தை மேக்சர் டெக்னாலஜிஸ் எடுத்த செயற்கைக்கோள் படம் காட்டுகிறது. புகைப்படம் / மேக்சர் டெக்னாலஜிஸ்

மையவிலக்குகள் அமைந்துள்ள வசதியின் முக்கிய பகுதியான 250 மீட்டர் நீளமுள்ள அடுக்கு மண்டபத்தை இந்த தாக்குதல்கள் குறிவைத்ததாக ஆய்வாளர்கள் தெரிவித்தனர். இது மலையில் கட்டப்பட்டு பின்னர் மூடப்பட்டது.

தாக்கப்படும் ஒரே இடத்தைச் சுற்றி பல வெடிமருந்துகளை குவிப்பது பதுங்கு குழிகள் மற்றும் நன்கு கடினப்படுத்தப்பட்ட கட்டமைப்புகளை அழிப்பதற்கான பொதுவான இலக்கு முறையாகும் என்று பென்டகனின் சிவில் பாதுகாப்பு மையத்தின் முன்னாள் சிவில் தீங்கு மதிப்பீடுகளின் தலைவரான வெஸ் பிரையன்ட் கூறினார்.

அமெரிக்க தாக்குதலுக்கு முந்தைய நாட்களில் எடுக்கப்பட்ட செயற்கைக்கோள் படங்கள் ஃபோர்டோவில் "வழக்கத்திற்கு மாறான லாரி மற்றும் வாகன செயல்பாட்டை" காட்டியதாக செயற்கைக்கோள் நிறுவனமான மேக்சர் டெக்னாலஜிஸின் மூத்த ஆய்வாளர் ஒருவர் தெரிவித்தார்.

வெள்ளிக்கிழமை NZT அன்று, நிலத்தடி இராணுவ வளாகத்திற்குச் செல்லும் அணுகல் சாலையில் 16 சரக்கு லாரிகள் இருந்தன.

பகுப்பாய்வின்படி, மறுநாள் எடுக்கப்பட்ட படங்கள், பெரும்பாலான லாரிகள் அந்த வசதியிலிருந்து வடமேற்கே ஒரு கிலோமீட்டருக்கும் சற்று அதிகமாக நகர்ந்திருப்பதைக் காட்டுகின்றன. மற்ற லாரிகள் மற்றும் புல்டோசர்கள் தளத்தின் நுழைவாயிலுக்கு அருகில் நிலைநிறுத்தப்பட்டன, அதில் ஒரு லாரி அதற்கு நேர் அருகில் இருந்தது.

தாக்குதல்களுக்கு முன்னர் வார இறுதியில் எடுக்கப்பட்ட படத்தை மதிப்பாய்வு செய்த அறிவியல் மற்றும் சர்வதேச பாதுகாப்பு நிறுவனத்தின் மூத்த ஆராய்ச்சியாளரான ஸ்பென்சர் ஃபராகஸ்ஸோ, பிற காரணங்களுக்கிடையில், ஆபத்தான பொருட்கள் பரவுவதைத் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஈரானியர்கள் சுரங்கப்பாதைகளை மீண்டும் நிரப்பியிருக்கலாம் என்று கூறினார்.

"அவர்கள் அநேகமாக விஷயங்களை மூடிவிட்டு, தங்களால் முடிந்ததை அகற்றிவிட்டு, பின்னர் அதை மூடிவிட்டார்கள்," என்று மிடில்பரி நிறுவனத்தின் ஜேம்ஸ் மார்ட்டின் அணு ஆயுத பரவல் தடை ஆய்வு மையத்தின் கிழக்கு ஆசிய அணு ஆயுத பரவல் தடை திட்டத்தின் இயக்குனர் ஜெஃப்ரி லூயிஸ் ஒரு செய்தியில் கூறினார், இது வாஷிங்டனையும் ஜெருசலேமையும் "ஈரானுடன் மோல்" விளையாட விட்டுவிடுகிறது.

இப்போது, லாரிகள் காணப்பட்ட இடத்திற்கு அருகிலுள்ள சுரங்கப்பாதை நுழைவாயில்கள் குண்டுவெடிப்பின் அதிர்ச்சி அலை அல்லது முந்தைய ஈரானிய நடவடிக்கைகளிலிருந்து அழுக்குகளால் நிரப்பப்பட்டதாகத் தெரிகிறது.

வசதியின் குப்பைகளால் ஆன சாம்பல்-நீல சாம்பல் பூச்சு மணலின் குறுக்கே உள்ளது.

- இந்த அறிக்கைக்கு ஜொனாதன் பரன், அலெக்ஸ் ஹார்டன் மற்றும் சவுத் மெக்கென்னெட் ஆகியோர் பங்களித்தனர்.

https://www.newstalkzb.co.nz/news/world/what-satellite-images-show-of-damage-to-iran-s-nuclear-sites-after-us-strikes/

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, விளங்க நினைப்பவன் said:

🤣 யாழ்களத்தில் உள்ள முல்லாக்களின் குரல் தரவல்ல அதிகாரிகளின் நிலைபாடுகளை கவனத்தில் எடுத்து கொண்டே ஈரானிய வெளியுறவு அமைச்சர் எமது இராணுவ நடவடிக்கைகளை நிறுத்துவது குறித்த இறுதி முடிவு பின்னர் தான் எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்

இந்த போர் ஒரு தேவையற்ற போர் இதனால் ஏற்பட்ட அரசியல் இராணுவ ஆதாயங்கள் பற்றிய கருத்துக்கள் இப்போதே தெரிவிக்க முடியாவிட்டாலும், இது ஒரு தேவையில்லாத ஆணி என சம்பந்தப்பட்ட தரப்புக்களே உணர்ந்துள்ளதாக தெரிகிறது, அனைவருக்கும் இந்த போரில் இருந்து வெளியேற வேண்டிய தேவை , ஆனால் இது இஸ்ரேலிற்கு ஒரு தோல்வி என கருத இடம் உண்டு, அமெரிக்கா இதில் வேண்டா வெறுப்பாகவே ஈடுபட்டுள்ளதாக என கருதுகிறேன், இஸ்ரேலால் தொடர்ந்து இந்த வான் தாக்குதலை தொடர முடியாது, ஆனால் இந்த தாக்குதலிலால் பெரியளவில் ஈரானில் அணுக்கசிவு ஏற்பட்டு மக்கள் பெருமளவில் பாதிக்காமல் அனைத்து தரப்பும் தங்களுக்கே வெற்றி என கூறிகொண்டு இதற்கு ஒரு முடிவு கட்டியுள்ளார்கள், அதுவே போதும்.

Edited by vasee

  • கருத்துக்கள உறவுகள்

ayatollah ali khameneiயின் துணிவு உண்மையில் பாராட்ட‌ த‌க்க‌து🙏👍....................ம‌னுஷ‌ன் சொன்ன‌ எல்லாத்தையும் செய்து விட்டார் , போர் நிறுத்த‌ நாட‌க‌த்தில் ஈரான் விழிப்புட‌ன் இருக்க‌னும்...........................

  • கருத்துக்கள உறவுகள்

1 hour ago, Justin said:

அதென்ன ராசதந்திர காரணம்? அணு உலைக்கு வேண்டிய max 20% தூய யுரேனியம், அதன் கழிவுகள் இவற்றைக் கூட ஈரானிடம் நம்பிக் கையளிக்காமல் ரஷ்யாவுக்கு ராசதந்திரக் காரணம் என்ன இருக்கிறது? ஈரானின் உள்ளக பாதுகாப்புப் பற்றிய புரிதல் தான் காரணம்.

ராஜதந்திர உறவுகளை வளர்ப்பது என்ன உங்களின் வாசிப்பு போன்றதா?

இப்படித்தான் கட்டி எழுப்புவது. ரஷ்யாவின் நடத்தையும் அறியக் கூடியதாக இருப்பது. சிரியாவில் இரான் விமான எதிர்ப்பு விடயத்தில் ருசியா உடன் பெட்ரா அனுபவத்தை வைத்து.

ரஷ்யாவுக்கு உழைப்பு அதுவாக அவ்வளவு இலகுவில் விட்டு கொடுக்காது, ஈரானுக்கு (அது தனியே நிற்கும் போது), மேற்கு சும்மாவே தடுக்க முனைகிறது, உரசல்கள் வராது.

(அமெரிக்காவே அடிபட்ட இராக்கின் எண்ணெய் வருவாயை தடைகள் மூலம் மறைமுகமாக தடுத்து, இரானில் இருந்து வர்த்தகம் , மின்சக்தி போன்றவற்றை இரானிடம் இருந்து ஈராக் வாங்குவதை தடுப்பது போல, ரஷ்யாவுக்கும் இது ஒரு பிடி இரானிடம் இருந்து வேறு பொருளாதார நமைகளை பெறுவதற்கு.)

முறித்தால் தேவை இல்லாத பிரச்சனைகள் வரும்.

ஈரானின் கணிப்பில் வேறு அம்சங்களும் இருக்கலாம். (உ.ம். ருசியா இடம் இருந்து போர்விமானங்களை பெறுவது, விமான எதிர்ப்பு அமைப்பை பெறுவது போன்றவை. இரான் 90 நடுப்பகுதியில் முனைய சோவியத் இல் இருந்த சில நாடுகளிடம் போர்விமானங்களை வாங்க தெண்டித்தது. அதை அமெரிக்கா தடுத்து விட்டது. பகிரங்கமாக இணைய தளத்தில் இருக்கிறது. https://www.armscontrol.org/act/1997-10/press-releases/us-buys-moldovan-aircraft-prevent-acquisition-iran#:~:text=Moldova%20informed%20the%20United%20States,agreement%20authorizing%20future%20cooperative%20activities.)

(இது பல மேற்கு / us குறுக்கீடு. தடுப்புக்கு உட்பட்டே கட்டப்பட்டது. இறுதியில் ருசிய பாவிக்கப்பட்ட எரிபொருளை அகற்றும் (ககிஸ்ஸிங்யர் ஷாவுக்கு சொன்னது போலவே) என்ற உடன்பாட்டுக்கு கீழே அனுமதிக்கப்பட்டது. அப்போது இரான் மீது தடைகளும் கொண்டு வரப்பட்டு விட்டது.)

அந்த நேரத்தில்,, இதில் ரஷ்யா (பிரான்ஸ் உம் எப்போதும் ) தடைகளுக்கு ஆமோதிப்பதன் ஒரு பகுதி காரணம், அதன் அணு உலை / சிறப்புத்தேர்ச்சி வர்த்தகத்துக்காக.

(ஆனால், இப்படித்தான் எந்த மிகஉயர் தொழில் நுட்பம் விற்கப்படுவது - அது எப்போதுமே rentier transaction.)

இதனாலேயே இரான் சொந்த செறிவூட்டல் வேண்டும் என்று நிற்பது, வெளியாரிடம் தங்காமல் இருக்க. அது மேற்கு / இஸ்ரேல் க்கு பொறுக்கமல், வெப்பியாரத்தில் எரிகிறது.

ஏனெனில், எவர் கொடுத்தாலும் மேற்கு / us தடுக்கும். இப்போது வெளிப்படையாகவே ஈரானை அன்ஹா உரிமையை விடும்படி கேட்கிறது மேற்கு / us.

மேற்கின் பிரகாரத்தை ஒப்புவிக்கும் கதை உங்களுடையது; ஒன்றில் அந்த நிலைக்கு ஆதரவால் அல்லது சிந்தனை இல்லாததால்.

1 hour ago, Justin said:

இதை ஒரு treaty இல் வந்து சொல்லும் வரை நீங்கள் நம்ப மாட்டீர்கள் போல, அல்லது treaty இல் எழுதாத ரெக்னிகல் டெரெய்ல்சில் ஒளிந்திருந்தால் மட்டும் தான் உங்களுக்குத் தெரியும் போல😂!

உங்கள் "எருமை மாடு பறக்கும்" கதையை எத்தனை ஏரியாக்களில் பார்த்து யாழ் வாசகர்கள் Alex Jones Channel போல கடந்து போய்க் கொண்டிருக்கிறார்கள்! நீங்களோ இன்னும் சளைக்காமல் புதிதாக பொங்கல் வைத்துக் கொண்டேயிருக்கிறீர்கள்!

இதில் கூட சொல்வது அவளையும் செய்து இருப்பது நீங்கள் நானல்ல.

அதுக்கு முதல் பரந்த சிந்திப்பு இருக்க வேண்டும்.

எந்த நாடாவது சொந்தமாக மின் அணு ஆலையை இயக்குவதை வேறு எந்த நாட்டிடமும் பொறுப்பு கொடுக்க விரும்புமா, வேறு எந்த நன்மைகளும் இல்லாமல், அதில் அச்சுறுத்தல் பிரச்சனைகளும் வெளியாரால் (மேற்கு) இல்லாது இருந்தால்.

அதுவும் இரான் போன்ற துறை சார் அனுபவம் உள்ளவர்களை கொண்டு இருக்கும் போது?

மற்றவை , உங்களின் விடயம், சிந்தனை இல்லாத அரைகுறை வெற்றுக் கதை.

Edited by Kadancha

  • கருத்துக்கள உறவுகள்

Screenshot-20250624-103553-Chrome.jpg

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.