Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, Kadancha said:

ஆம் இதை அறிந்துள்ளேன்.

ருசியா எதை உடனடியாக மேற்கு, us, இஸ்ரேல் ஐ உறுத்தக் கூடியதாக செய்து இருக்க முடியும் என்பதை சிந்திப்பதத்திற்கு எந்தஒரு விடயமும் இல்லை. அல்லது (நான்) அறியாமல் இருக்கலாம்

அனால் சீனா, அருமை உலோக உற்பத்தி கிட்டத்தட்ட ஏகபோக பிடியால், மேற்கு, us, இஸ்ரேல் க்கு boiling the frog போல வெளியே தெரியாமல் ஆயுதம் செய்வதை குறைப்பதுக்கு ஒன்றும் சொல்லாமல் ஒழுங்குகளை (regulations) ஐ இறுக்கி (சர்வசாதாரணமாக ஏற்றுமதி அனுமதி விண்ணப்பம் - அனுமதி நாட்களை கூட்டலாம்) செய்யலாம்.

ஏனெனில் இந்த அருமை உலோகங்கள் மிக உணர்திறன் (அதிஉயர் வெப்ப, காந்த, ராடாரை விலத்துவது, உறுஞ்சுவது போன்ற பிரயோகங்களுக்கு) ஆயுத உடற்பதியில் இன்றியமையாதது.

(அருமை உலோகங்கள் உண்மையில் அருமை ஏனெனில் இயற்றுகை உலோக தாதுக்களில் அவற்றின் மிக செறிவு குறைவு, வேறு பொதுபவன உலோகங்களை உடற்பத்தி செய்யும் போது பக்கவிளைவை கொண்டு பெறவேண்டி இருப்பதால்.)

இன்னும் பத்து வருடங்களுக்குள் நானிருக்குமிடத்தில் இதை உற்பத்தி செய்ய தொடங்கிவிடுவார்கள், இந்த Project இல் நானுமிருக்கின்றேன்

  • Replies 454
  • Views 18.8k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Most Popular Posts

  • கிருபன்
    கிருபன்

    மக்களாட்சி மீது நம்பிக்கை குறைந்து வருவதனால், அதிக பணமும், பலமும் உள்ளவர்கள் அதிகாரத்தைக் கையில் வைத்துள்ளனர். இது ஏகாதிபத்ய அரசுகளுக்கு வழி கோலுகின்றது. அரபு நாடுகளில் ஜனநாயகத் தேர்தல்கள் மூலம் ஆட்சி

  • எமது தாயகத்தில் நிகழ்ந்தது போல பொருளாதார தடையினை நீண்ட காலமாக சந்தித்து வரும் நாடு ஈரான், கோவிட் காலத்தில் அதற்கான சரியான் தடுப்பூசிகூட கிடைக்காத நிலை காணப்பட்டது. பெரியவர்களே ஒரு காயம் எற்பட்டு

  • புரட்சிகர தமிழ்தேசியன்
    புரட்சிகர தமிழ்தேசியன்

    டிரம்ப் சீற்றம் கமெனி காட்டம் இடியை இறக்கிய இஸ்ரேல் .. ஈரான் சரவெடி .. இஸ்ரெல் அதிரடி.. இறங்கி அடிக்கும் ஈரான்.. சண்டை பிடிப்பவர்களை விட இவர்கள் "தலைப்பு" இம்சை தாங்கல சாமீ..

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, நியாயம் said:

ஆறாம் நூற்றாண்டுக்கு எந்த பெண்களையும், மக்களையும் முல்லாக்கள் கொண்டு சென்றார்கள்? தமிழ் பெண்களையா? தமிழ் மக்களையா?

ஆப்கானிஸ்தான், ஈராக் நாடுகளில் அமெரிக்கா சாதித்தது என்ன என்று கூறுங்கள்? அங்கே உள்ள பெண்கள், மக்கள் அமெரிக்க அரசின் போர் தொடுப்பின் பின் சுதந்திரமாக, மகிழ்ச்சியாக முல்லாக்களின் கட்டுப்பாடுகள் இல்லாமல் இப்போது வாழ்கின்றார்களா?

இங்கு சிலர் கூட்டமாக சேர்ந்து முல்லாக்கள் என்று ஈரானியர்களை வகைப்படுத்தி கும்மி அடிக்கிறார்கள். சவுதி அரேபியாவைவிட ஈரானில் பெண்கள் அடிமைப்படுத்தப்படுவதில்லை! அது அமெரிக்காவின் அடிவருடி என்பதால் அதைப்பற்றி கதைக்க மாட்டார்கள். எதோ தாங்கள்தான் அரசியல் விண்ணர்கள் என்று பக்கம்பக்கமாக எழுதுவதும், இஸ்ரேலுக்கு ஈரானை தாக்க எல்லா உரிமையும் இருப்பதுபோலவும், அங்கங்கே நாலைந்து ஆங்கில வார்த்தைகளையும் எழுதி பந்தா காட்டுகிறார்கள். இஸ்ரேலுக்கு அணு ஆயுதத்தை வைத்திருக்க முடியுமென்றால் ஈரான் வைத்திருப்பதில் என்ன தவறென்று கேட்டால் அவர்களுக்கு பல இயக்கங்களுடன் தொடர்பிருப்பதால் அவர்களுக்கும் கொடுத்துவிடுவார்கள் என்று கதை அளப்பது! எல்லாம் அமெரிக்காவிற்கும்,அதன் அடிவருடிகளுக்கும் செம்புத்தூக்கும் கூட்டம். எல்லாவற்றையும்விட தங்களை ஜனநாயகவாதிகள் என்று பீற்றிக்கொள்வதுவேற!

  • கருத்துக்கள உறவுகள்

ஈரானில் தலை மூடாத பெண்களையும் வீட்டுக்குள் ரகசியமாக புத்தகம் வாசித்த ஆயிர கணக்கான பெண்களையும் முல்லாக்கள் கைது செய்து சித்திரவதை செய்து கொடூரமாக கொல்லும் வீடியோ காடசிகள்

பலவீனமான இதயம் கொண்ட யாழ் கள கருத்தாளர்கள் பார்ப்பதை தவிர்த்து கொள்ளுங்கள்

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, island said:

நம்ம தமிழ் ஆயுத இயக்கங்களிடம் அணுவாயுதம் இருந்திருந்தால் தமிழர் பிரச்சனை ஒட்டுமொத்தமாக இருந்த இடம் தெரியாத அளவுக்கு தீர்ந்திருக்கும். 😂

நானா இதுக்குள்ள ஏன் தமிழ் இயக்கங்களை இழுக்கிறீர்கள்! பின்னங்கால் சும்மா இருக்க விடுதில்லைபோல!!

  • கருத்துக்கள உறவுகள்
34 minutes ago, உடையார் said:

இன்னும் பத்து வருடங்களுக்குள் நானிருக்குமிடத்தில் இதை உற்பத்தி செய்ய தொடங்கிவிடுவார்கள், இந்த Project இல் நானுமிருக்கின்றேன்

சரியாப்போச்சு. இனி நீங்கள் அமெரிக்காவின் 52 ஆவது மாநிலமாக வரப்போறியள் போல!!

  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, உடையார் said:

இன்னும் பத்து வருடங்களுக்குள் நானிருக்குமிடத்தில் இதை உற்பத்தி செய்ய தொடங்கிவிடுவார்கள், இந்த Project இல் நானுமிருக்கின்றேன்

இந்த வீடியோ நான் முன்பே பார்த்து விடடேன்

உண்மையிலேயே ஏதும் இருக்கிறதா அல்லது பங்கு சந்தையில் பணம் பறிக்க பீலா விடுகிறார்களா?

நான் கொஞ்ச பங்குகள் ( Northern Minerals) நொர்தேன் மினெரல்ஸ் இல் $.2௦ சத்தத்திற்கு வாங்கி இருக்கிறேன் இப்படி பல மைனிங் கொம்பனிகளில் வாங்கி கோவில் உண்டியலில் போடட கதைதான் நடந்திருக்கிறது

ஏதாவது உள் செய்திகள் தெரிந்தால் பகிர்ந்துகொள்ளுங்கள்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
3 hours ago, goshan_che said:

இஸ்ரேல்-ஈரான் யுத்தம் ஈரானிய மக்களின், குறிப்பாக பெண்களின் சுதந்திரத்துக்கான போர் என நான் எங்கும் எழுதவில்லை. அது இஸ்ரேலின் பாதுகாப்பு, நெதன்யாஹுவின் அரசியல் இருப்பு சம்பந்தமானது.

ஆனால் ஈரானியர் நீங்கள் நினைப்பது போல் பிற்போக்குத்தனத்தை கலாச்சாரமாக கொண்டவர்கள் அல்ல.

மேலே துருக்கி, மலேசியா என இரு உதாரணங்களை தந்துள்ளேன். இவை இரெண்டும் அமேரிக்க அடிவருடிகள் அல்ல. ஆனால் முற்போக்காக மிதவாத இஸ்லாமிய நாடுகள். இப்படித்தான் முல்லாக்கள் பதவிக்கு வரமுன் ஈரானும் இருந்தது.

அதே நிலைக்கு திரும்பவே மீண்டும், மீண்டும் போராடி மடிகிறார்கள் ஒவ்வொரு தலைமுறையிலும் ஈரானிய இளையவர்கள்.

நம்மை போல “வெளியேறும் சுதந்திரத்தை” பாவித்து மேற்கு நாட்டுக்கு ஓடி வராமல் 🤣, தமது நாட்டில் தம் சுதந்திரவாழ்வுக்காக அவர்கள் போராடி மடிகிறார்கள், நீங்கள் சொல்வது போல் ஆடைகளையும் ஆசையில் அல்ல.

ஈரான் மீது போர் தொடுப்பதை விட அங்கு மக்கள் ஒடுக்கப்படுகின்றார்கள்.மக்கள் அவதிப்படுகின்றார்கள் தனிமனித சுதந்திரம் இல்லை எனவும் ஊடகங்கள் இரண்டாம் செய்தியாக பிரசுரிக்கின்றன. அதற்காகத்தான் நான் எழுதினேன் அங்குள்ள மக்கள் வெளியேறுவதற்கு சுதந்திரம் உள்ளது என...

3 hours ago, goshan_che said:

நம்மை போல “வெளியேறும் சுதந்திரத்தை” பாவித்து மேற்கு நாட்டுக்கு ஓடி வராமல் 🤣,

👉 விட்டுட்டு ஓடி வந்தவர்களினால் தான் இன்றும் இன விடுதலை எனும் மரம் விருட்சமாக மாறி நிற்கின்றது. 👈

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Maruthankerny said:

இந்த வீடியோ நான் முன்பே பார்த்து விடடேன்

உண்மையிலேயே ஏதும் இருக்கிறதா அல்லது பங்கு சந்தையில் பணம் பறிக்க பீலா விடுகிறார்களா?

நான் கொஞ்ச பங்குகள் ( Northern Minerals) நொர்தேன் மினெரல்ஸ் இல் $.2௦ சத்தத்திற்கு வாங்கி இருக்கிறேன் இப்படி பல மைனிங் கொம்பனிகளில் வாங்கி கோவில் உண்டியலில் போடட கதைதான் நடந்திருக்கிறது

ஏதாவது உள் செய்திகள் தெரிந்தால் பகிர்ந்துகொள்ளுங்கள்

இல்லை இது உண்மை, அரசாங்கம் AUD 1.2 Bn கடன் கொடுத்து தொடங்க சொல்லிவிட்டார்கள், earthworks போய்கிட்டிருக்கு,

https://www.abc.net.au/news/2024-12-06/rare-earths-refinery-government-funding/104695754

1 hour ago, Maruthankerny said:

பலவீனமான இதயம் கொண்ட யாழ் கள கருத்தாளர்கள் பார்ப்பதை தவிர்த்து கொள்ளுங்கள்

இதயம் பலவீனமல்ல மூளைதான்😉

  • கருத்துக்கள உறவுகள்

ஈரான் பற்றி கதைப்வவர்களுக்கு ஈரானை பற்றி என்ன தெரியும்.

எந்த வித சரி பார்த்தல், தேடுதல், சிந்தனை இல்லாமல் சும்மா மேற்கின் பிரச்சாரத்தை தூக்கி வந்து, துதி பாடுவது, ஒப்புவிப்பது (சிலரின் கைவந்த கலை இங்கு, இல்லாவிட்டால் பரிகாசம், இதை தவிர வேறு இல்லை ).

ஈரானில், Zoroastrian, யூத மதம், கிறிஸ்தவம் யாப்பால் பாதுகாப்பு அளிக்கப்பட்ட மதங்களும், மத சிறுபன்மையும்.

பாராளுமன்றத்தில் இவர்களின் பிரதிநிதிதுவத்துக்கு பிரத்தியேக இடம் ஒதுக்கியுள்ளது இரான் அரசு.

இரான் யாப்பு படி எல்லா மக்களும் சமம், சம உரிமை...

சட்டத்தில் சமம் என்றாலும் சமுகத்தில் வேறுபாடு இருக்கிறது (எங்களுக்கு சாதி போல, அதுவும் ஒரே இனத்தில்).

இது தான் யதார்த்தம்.

1979 இல் Fatwa கூட கொமேனி உருவாக்கியது, இரானில் யூதர் பாதுகாக்கப்படுவார்கள் என்று.

எந்த யூதரையும் இரான் ஒரு போதும் கலைக்கவில்லை, இஸ்ரேல் nakba இல் பலஸ்தீனியரை கலைத்து நிலத்தை திருடியது போல (இப்படி zionist அல்லாதவர்களை அழிக்கப்பட வேண்டும், அவர்களின் சொத்துக்கள் அபரிக்கப்பட வேண்டும் .. என்று தத்துவமாக வகுத்து வைத்து இருக்கிறது TALMUD என்ற அதன் போதனையில். இதை சொன்னால்,, மேற்கில் அது anti-semitism)

ஆனல் இஸ்ரேல் இன் தூண்டுதலால், யூதர் இஸ்ரேலுக்கு கணிசமான அளவு குடிபெயர்ந்து விட்டனர். இவர்களை கொண்டே இஸ்ரேல் ஈரானில் ஊடுருவுகிறது.

30 minutes ago, Maruthankerny said:

ஈரானில் தலை மூடாத பெண்களையும் வீட்டுக்குள் ரகசியமாக புத்தகம் வாசித்த ஆயிர கணக்கான பெண்களையும் முல்லாக்கள் கைது செய்து சித்திரவதை செய்து கொடூரமாக கொல்லும் வீடியோ காடசிகள்

பலவீனமான இதயம் கொண்ட யாழ் கள கருத்தாளர்கள் பார்ப்பதை தவிர்த்து கொள்ளுங்கள்

மேற்கு ஈரானில் சுதந்திரம் இல்லை என்று சொல்வதன நோக்கம் ஆட்சிமாற்றத்துக்கே தவிர, இரான் மக்களின் அக்கரையில் இல்லை.

இங்கே சிலர் அது காவுவது , சிலருக்கு சொந்த சிந்தனை இல்லை.

இந்த முல்லாக்கள் என்று சொல்வதே மேற்கு ஊடகங்கள் தான்.

அனால் சிலர் வேண்டும் என்றே agenda ஐ உருவாக்க.

ஏன் மேற்கு ஊடகங்களில் மட்டும் இப்படி வருகிறது? வேறு ஊடகங்களில் இது இல்லை என்றே சொல்லலாம்.

மற்றது, மேற்கத்தைய கலாசாரம் இரானில் வருவதே சுதந்திரம் என்று மேற்கு ஊடகங்கள் பிம்பத்தை காட்டி எழுப்புகின்றன.

எல்லாவற்றுக்கும் அடிப்படை, இங்கே agenda ஐ உருவாக்க எத்தனிப்பவர்கள் உட்பட, ஈரானில் மேற்கு , us இஸ்ரேல் சொல்கேட்கும் அரசாங்கம் வரவேண்டும். (இவர்களின்) முல்லாக்கள் ஒருபோதும் அதற்கு உடன்பட மாட்டார்கள்

1 hour ago, உடையார் said:

இன்னும் பத்து வருடங்களுக்குள் நானிருக்குமிடத்தில் இதை உற்பத்தி செய்ய தொடங்கிவிடுவார்கள், இந்த Project இல் நானுமிருக்கின்றேன்

ஆம், இப்பொது மேற்கு தொடங்க எத்தனிகிறது. இதை நான் அறிவேன் ஆஸ்திரேலியாவில் தொடங்க எத்தனிக்கப்படுகிறது என்று, அனால் எந்த பிரதேசம் என்று குறிப்பாக தெரியாது.

சீன போல செய்ய முடியாது, சீன இதில் சிறப்பு தேர்ச்சி பெற்றுவிட்டது, புதிய தொழிநுட்பத்தையும் வளர்த்து உள்ளது.

கிட்டத்தட்ட 15 வருட காலம் தொழில்நுட்பத்தில் முன்னிலையில் உள்ளது

அத்துடன் சீன் கிட்டத்தட்ட எல்லா அருமை உலோகங்களையும் மிகப்பெரிய (scale) இல் செய்வது, அதுக்கு சந்தையை வளைப்பதற்கு ஒப்பீட்டளவில் இலகு.

அதாவது, பொருளாதார தக்க வைக்கும் (economic viability) வாய்ப்பு மேற்கில் குறைவு. அல்லது மேற்கு / ஆஸ்திரேலிய அரசாங்கம் மானியம் வழங்க வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Maruthankerny said:

ஈரானில் தலை மூடாத பெண்களையும் வீட்டுக்குள் ரகசியமாக புத்தகம் வாசித்த ஆயிர கணக்கான பெண்களையும் முல்லாக்கள் கைது செய்து சித்திரவதை செய்து கொடூரமாக கொல்லும் வீடியோ காடசிகள்

பலவீனமான இதயம் கொண்ட யாழ் கள கருத்தாளர்கள் பார்ப்பதை தவிர்த்து கொள்ளுங்கள்

ந‌ல‌மா அண்ணா🙏👍

மீண்டும் யாழில் க‌ண்ட‌து ம‌கிழ்ச்சி🥰

ந‌ல்ல‌ க‌ருத்தோட‌ வ‌ந்து இருக்கிறீங்க‌ள் தொட‌ர்ந்து எழுதுங்கோ👍.....................உங்க‌ளை நினைப்ப‌து உண்டு....................பெரிசா யார் கூட‌வும் முன்பு போல் எழுதுவ‌தில்லை போனில் இருந்து...............பிள்ளைக‌ள் அண்ணி ந‌ல‌மாய் இருப்பின‌ம் என‌ ந‌ம்புகிறேன்👍......................தொட‌ர்ந்து எழுதுங்க‌ள் , உங்க‌ளின் எழுத்துக்கு நான் ர‌சிக‌ன்👍..................................

  • கருத்துக்கள உறவுகள்

இரான், இஸ்ரேல் சண்டையில் நடந்த 8 சம்பவங்கள் : 24 மணி நேரத்தில் நடந்த அதிரடி திருப்பங்கள்

டிரம்ப்

பட மூலாதாரம்,EPA

படக்குறிப்பு,அதிபர் டிரம்ப்

கட்டுரை தகவல்

  • எழுதியவர், சீன் செடன்

  • பதவி, பிபிசி செய்திகள்

  • ஒரு மணி நேரத்துக்கு முன்னர்

ஜூன் 13 முதல், இஸ்ரேல் இரானின் ராணுவ உள்கட்டமைப்பில் பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது, இரானிய ஏவுகணைகள் இஸ்ரேலின் பாதுகாப்பு அமைப்புகளைப் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளன.

அதே நேரத்தில், அமெரிக்கா இரானின் அணுசக்தி திட்டத்திற்கு எதிராக தாக்குதல்களை நடத்தியுள்ளது.

திங்கட்கிழமை தொடங்கி அடுத்து 24 மணி நேரத்தில், இன்னும் வேகமாக பல நிகழ்வுகள் நடைபெறத் தொடங்கின.

ஒரு அமெரிக்க விமானப்படைத் தளம் தாக்குதலுக்கு உள்ளானது. அமெரிக்கா இரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையே சண்டை நிறுத்தத்தை மத்தியஸ்தம் செய்தது. ஆனால், அந்த ஒப்பந்தம் முறிந்து விடும் நிலையில் இருந்தது.

இப்படித்தான் அந்த நாள் முழுதும் நிலையற்ற சூழல் காணப்பட்டது.

' பாதுகாப்பாக இருங்கள் '

கத்தாரில் உள்ள அல்-உதெய்த் அமெரிக்க ராணுவத் தளத்தின் புகைப்படம் .

பட மூலாதாரம்,USAF

படக்குறிப்பு, கத்தாரில் உள்ள அல்-உதெய்த் அமெரிக்க ராணுவத் தளத்தின் புகைப்படம். இந்தப் புகைப்படம் 2004 ஆம் ஆண்டு எடுக்கப்பட்டது.

23 ஜூன் 07:00 வாஷிங்டன் டிசி / 12:00 லண்டன் / 14:00 டெல் அவிவ் / 14:30 டெஹ்ரான்

மத்திய கிழக்கை பாதிப்புக்கு உள்ளாக்கும் மோதல் வளைகுடாவிற்கும் விரைவில் பரவலாம் என்பதற்கான முதல் அறிகுறியாக, கத்தாரில் உள்ள அமெரிக்க குடிமக்களுக்கு, அமைதியான மொழியில் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

அமெரிக்க அரசு, "நீங்கள் இருக்கும் இடத்திலேயே தங்குங்கள்" என பரிந்துரை செய்தது. இது "அதிக எச்சரிக்கைக்காக" எடுக்கப்பட்ட நடவடிக்கை எனவும், அச்சம் கொள்ள வேண்டியதில்லை எனவும் உறுதிப்படுத்தப்பட்டது.

இந்த செய்தி வெளியான சிறிது நேரத்தில், பிரிட்டனும் இதே போன்ற அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது.

கத்தாரில் அமெரிக்கா மீது பதிலடி கொடுப்பதற்கான வாய்ப்பு, இரானுக்கு எப்போதும் இருந்துள்ளது. கத்தாரின் தலைநகர் தோஹாவிற்கு வெளியே அமைந்துள்ள பெரிய அளவிலான அல்-உதெய்த் ராணுவத் தளத்தில் ஆயிரக்கணக்கான அமெரிக்க வீரர்கள் தங்கி உள்ளனர். மத்திய கிழக்கில் அமெரிக்காவின் விமான நடவடிக்கைகள் அங்கிருந்தே திட்டமிடப்படுகின்றன.

மலைக்கு அடியில் அமைந்துள்ள இரானின் மதிப்புமிக்க ஃபோர்டோ செறிவூட்டல் தளம் உட்பட, இரானின் மூன்று அணுசக்தி நிலையங்கள் மீது, கடந்த வார இறுதியில், இதற்கு முன்பு இல்லாத வகையில் அமெரிக்கா நடத்திய தாக்குதல்களுக்கு பதிலடி கொடுக்கப்படும் என இரானில் உள்ள தலைவர்கள் அச்சுறுத்தியிருந்தனர்.

இரானுக்கு எதிராக இஸ்ரேல் ராணுவ நடவடிக்கையைத் தொடங்கியதிலிருந்து, இரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமனெயி பதுங்கு குழியில் தங்கியிருக்கிறார் எனக் கூறப்படுகிறது. அங்கிருந்து, பிராந்தியத்தில் அமெரிக்காவின் மிக முக்கியமான மூலோபாயத் தளங்களில் ஒன்றைத் தாக்க வேண்டும் என்று அவர் ஒரு உத்தரவை வெளியிட்டதாகத் தெரிகிறது.

'உண்மையான அச்சுறுத்தல்'

12:00 வாஷிங்டன் டிசி / 17:00 லண்டன் / 19:00 டெல் அவிவ் / 19:30 டெஹ்ரான்

கத்தாரின் வான்வெளி மூடப்பட்டுள்ளதாக அதன் அரசாங்கம் அறிவித்தது.

தோஹாவில் உள்ள விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டாளர்கள் பயணிகள் விமானங்களை அவசரமாகத் திருப்பி அனுப்பத் தொடங்கினர். மேலும் உலகின் மிகவும் பரபரப்பான விமான நிலையங்களில் ஒன்றிற்குச் செல்லும் விமானங்கள் வளைகுடாவின் வேறு இடங்களில் தரையிறங்கத் தொடங்கின.

பின்னர் அல்-உதெய்த் விமானத் தளத்தின் மீது இரானின் ஏவுகணை தாக்குதல் நடைபெறலாம் என்று ஒரு "உண்மையான அச்சுறுத்தல்" இருப்பதாக பிபிசி அறிந்து கொண்டது.

கத்தார் திசையை நோக்கி ஏவுகணைகள் குறிவைத்து வருவதைக் கண்டதாக, பெயர் குறிப்பிட விரும்பாத அமெரிக்க அதிகாரிகள் அமெரிக்க ஊடகங்களுக்குத் தெரிவித்தனர்.

அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் பீட் ஹெக்செத்தும் அவரது மூத்த ஜெனரலும் நிலைமையைக் கண்காணிக்க வெள்ளை மாளிகைக்குச் சென்றனர்.

ஒரு மணி நேரத்திற்குள் தோஹாவில் வெடிச்சத்தங்கள் கேட்டன. அதன் ஆடம்பரமான வானளாவிய கட்டிடங்களுக்கு மேலே உள்ள வானம், இரானிய ஆயுதங்களை இடைமறித்துத் தாக்கிய வான் பாதுகாப்பு ஏவுகணைகளால் உருவான ஒளிப்பாதைகளால் நிரம்பியிருந்தது.

'பலம் அல்ல, பலவீனம்'

13:00 வாஷிங்டன் டிசி / 18:00 லண்டன் / 20:00 டெல் அவிவ் / 20:30 டெஹ்ரான்

இரான் பழிவாங்கும் நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக இரானின் அரசு ஊடகங்கள் தெரிவித்தன. சிறிது நேரத்தில், இரானின் புரட்சிகர காவலர் படையும் அச்செய்தியை உறுதிப்படுத்தியது.

"இந்தப் பகுதியில் உள்ள அமெரிக்கத் தளங்கள் பலம் அல்ல, மாறாக பலவீனங்கள்" என அது தெரிவித்தது. ஆனால் அந்த தாக்குதல் விரைவில் முடிவடைந்தது.

அமெரிக்காவிற்கு முன்பாக, கத்தார் அந்தத் தாக்குதல்களுக்கு எதிர்வினையாற்றியது. தாக்குதலின் இலக்கு அதன் மண்ணில் உள்ள அமெரிக்க தளம் தான் என்றாலும், அதன் இறையாண்மை இந்த "தீவிரமான தாக்குதல்" மூலம் மீறப்பட்டுள்ளது என்று அரசாங்கம் கடுமையான கண்டனத்தை வெளியிட்டது.

ஆனால் முக்கியமாக, தோஹாவில் ஏவப்பட்ட ஏவுகணைகள் இடைமறிக்கப்பட்டதாக உறுதிசெய்யப்பட்டது. தாக்குதல் தொடங்குவதற்கு முன்பே அந்தத் தளம் காலி செய்யப்பட்டதால், தாக்குதலில் யாரும் உயிரிழக்கவோ காயமடையவோ இல்லை.

அதே நேரத்தில், இரான் உச்ச தலைவரின் எக்ஸ் தளப்பதிவில், ஒரு சர்ச்சைக்குரிய படம் பகிரப்பட்டது. அந்தப் படம், ஒரு அமெரிக்க ராணுவ தளத்தின் மீது ஏவுகணைகள் வீசப்படுவதும், ஒரு கிழிந்த அமெரிக்கக் கொடி எரிவதையும் சித்தரித்தது.

இருப்பினும், அழிவைப் பற்றி எந்த அறிவிப்பையும் கொடுக்காமல், "நாங்கள் யாருக்கும் தீங்கு செய்யவில்லை" என்று அவர் பதிவிட்டார்.

அதனையடுத்து, இரான் தாக்குதல் நடத்த திட்டமிடப்பட்டிருப்பது குறித்து அமெரிக்காவும் கத்தாரும் முன்கூட்டியே அறிந்திருந்திருக்கலாம் எனத் தோன்றியது.

வெளிப்புற ஆய்வாளர்களின் கண்ணோட்டத்தில், இந்தத் தாக்குதல் இரான் தலைவர்கள் தங்களின் மரியாதையைப் பாதுகாத்துக்கொள்ளவும், ஆனால் மோதலைத் தவிர்க்கவும் வடிவமைக்கப்பட்டதாகத் தோன்றியது.

அமெரிக்கர்களுக்கு எதிராக தாங்கள் பழிவாங்கியதாக தங்களது மக்களிடம் கூற இரானுக்கு வாய்ப்பு இருந்தது. ஆனால், மிகவும் சக்திவாய்ந்த எதிரியை நேரடியாகச் சண்டைக்கு இழுக்கும் அபாயத்தைத் தவிர்க்கும் வகையில், அவர்கள் பெரிய இழப்புகளை ஏற்படுத்தாமல் அந்த தாக்குதலை மேற்கொண்டனர்.

பிறகு பதற்றம் தணிவதற்கான சூழல் உருவாவதைப் பார்க்க முடிந்தது. அதே நேரத்தில், அமெரிக்க அதிபர் சமூக ஊடகங்களில் எப்போது தோன்றுவார் என்பதை எதிர்பார்த்து உலகம் காத்திருந்தது.

'அமைதிக்கான நேரம்'

இரான் முழுவதும் உள்ள ராணுவ, பாதுகாப்பு மற்றும் எரிசக்தி இலக்குகளை இஸ்ரேல் தாக்கியது.

பட மூலாதாரம்,REUTERS

படக்குறிப்பு, ஜூன் 15 அன்று டெஹ்ரானுக்கு அருகிலுள்ள ஷரன் எண்ணெய் கிடங்கு உட்பட இரான் முழுவதும் உள்ள ராணுவ, பாதுகாப்பு மற்றும் எரிசக்தி இலக்குகளை இஸ்ரேல் தாக்கியது.

16:00 வாஷிங்டன் டிசி / 21:00 லண்டன் / 23:00 டெல் அவிவ் / 23:30 டெஹ்ரான்

"பலவீனமானது." "எதிர்பார்க்கப்பட்டது." "திறம்பட எதிர்கொள்ளப்பட்டது."

இரானின் தாக்குதலை டொனால்ட் டிரம்ப் இப்படித்தான் விவரித்தார். ஆனால் அதன் பிறகு அவர் வெளியிட்ட செய்திகளில் சமரசத்துக்கான தொனி காணப்பட்டது.

தாக்குதல் குறித்து "எங்களுக்கு முன்கூட்டியே அறிவித்ததற்காக" நன்றி என, இரானுக்கு நன்றி தெரிவித்த அதிபர் டிரம்ப், "அவர்கள் தங்களது கோபத்தை வெளியிட்டுவிட்டனர்" என்று கூறினார்.

"ஒருவேளை இரான் இப்போது பிராந்தியத்தில் அமைதி மற்றும் நல்லிணக்கத்தை நோக்கி நகரலாம். இஸ்ரேலும் அவ்வாறே செய்ய நான் உற்சாகமாக ஊக்குவிப்பேன்" என்றும் டிரம்ப் குறிப்பிட்டார்.

அதற்கு இரண்டு மணி நேரத்திற்கு முன்பு, இரான் அமெரிக்க விமானத் தளத்தைத் தாக்கியது. அதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பு, டிரம்ப் இரானுக்கு எதிராக இதற்கு முன்பு இல்லாத வகையில் தாக்குதல் நடத்த வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தார்.

கடந்த காலங்களில் உலகிற்கு மிகப்பெரிய ஆபத்தாகவும், தீய சக்தியாகவும் அந்த நாட்டை விவரித்திருந்த டிரம்ப், சண்டை நிறுத்தம் குறித்து, அதன் தலைவர்களிடம் அமைதி மற்றும் நல்லிணக்கத்துக்கான எண்ணத்தை வெளிப்படுத்திக் கொண்டிருந்தார்.

பார்வையாளர்களைக் குழப்பத்தில் ஆழ்த்தும் வகையில் வெளியிட்ட தொடர் பதிவுகளை நிறுத்திவிட்டு, "உலகிற்கு வாழ்த்துக்கள், இது அமைதிக்கான நேரம்!" என்று பின்னர் பதிவிட்டார் டிரம்ப்.

'12 நாள் போர்'

ஃபோர்டோ அணுசக்தி தளம்

பட மூலாதாரம்,MAXAR

படக்குறிப்பு, சனிக்கிழமை இரவு ஃபோர்டோ அணுசக்தி தளத்தைத் தாக்கிய பின்னர், மோதலை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான ஒரு ஒப்பந்தத்திற்கு வெள்ளை மாளிகை அழுத்தம் கொடுத்தது.

18:00 வாஷிங்டன் டிசி / 23:00 லண்டன் / 01:00 டெல் அவிவ் / 01:30 டெஹ்ரான்

அமெரிக்கா, இரான், இஸ்ரேல் மற்றும் கத்தார் ஆகிய நாடுகள் திரைக்குப் பின்னால் பரபரப்பான பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டிருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இரான் உடன் நடைபெற்ற மோதலில் சிறிது காலம் இணைந்திருந்த அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், தனது நெருங்கிய கூட்டாளியான இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவிடம் நேரடியாகப் பேசினார். இந்த உரையாடல் தனிப்பட்ட முறையில் நடந்தாலும், சண்டையை முடிக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது என்பது தான் அதன் செய்தி எனத் தெளிவாக தெரிந்தது.

இதற்கிடையில், டிரம்பின் துணை அதிபர் ஜே.டி. வான்ஸும், அவரது தலைமை சர்வதேச பேச்சுவார்த்தையாளர் ஸ்டீவ் விட்காஃப்பும், இரானியர்களை நேரடியாகவும் ரகசிய ராஜ்ஜீய வழிகளிலும் அணுகினர்.

மத்திய கிழக்கில் எளிதில் கிடைக்காத ஒன்றாக இருந்தாலும், டிரம்ப் மிகவும் மதிக்கும் ஒப்பந்தத்தை உருவாக்க, அமெரிக்காவில் இருந்து அவரது குழு அவசரமாக செயல்பட்டது.

அந்த ஒப்பந்தம் வெற்றி பெற்றுவிட்டது என்ற தகவல்களும் அதற்கெதிரான மறுப்புகளும் பரவத் தொடங்கின. ஆனால் மெதுவாகவும் உறுதியாகவும், அதில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என்ற செய்திகள் வெளிவந்தவுடன், நிலைமை முன்னேறத் தொடங்கியது.

பின்னர், பிஎஸ்டி நேரப்படி காலை 11:00 மணிக்குப் பிறகு, அதிபர் மீண்டும் சமூக ஊடகத்தில் பதிவிட்டார். "அனைவருக்கும் வாழ்த்துக்கள்" என்று அவரது செய்தி தொடங்கியது.

இரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையில் முழுமையான சண்டை நிறுத்தம் ஒப்புக் கொள்ளப்பட்டதாக அதிபர் டிரம்ப் குறிப்பிட்டார். "செயல்பாட்டில் உள்ள இறுதிப் பணிகள் "நிறைவடைய ஒரு சலுகை காலம் வழங்கப்படும், அதன் பின்னர், அந்த ஒப்பந்தம் ஆறு மணி நேரத்தில் அமலுக்கு வரும்.

இனி, இந்த மோதல் "12 நாள் போர்" என்று அழைக்கப்பட வேண்டும் என்று டிரம்ப் குறிப்பிட்டார்.

அங்கிருந்து ஆறாயிரம் மைல்கள் தொலைவில் உள்ள மத்திய கிழக்கில், அடுத்த நாள் விடியத் தொடங்கியது.

'ஏவுகணைத் தாக்குதல்களின் கடைசி சுற்று'

இஸ்ரேலின் பீர்ஷெபா

பட மூலாதாரம்,EPA

படக்குறிப்பு, இஸ்ரேலின் பீர்ஷெபாவில் செவ்வாய்க்கிழமை காலை ஒரு குடியிருப்பு கட்டிடம் இடிந்து விழுந்தது.

22:00 வாஷிங்டன் டிசி / 03:00 லண்டன் / 05:00 டெல் அவிவ் / 05:30 டெஹ்ரான்

இஸ்ரேல் முழுவதும் சைரன்கள் ஒலிக்கத் தொடங்கின. பாதுகாப்பான தங்குமிடங்களுக்குச் செல்ல மக்கள் உத்தரவிடப்பட்டனர். இரானிலிருந்து ஏவுகணைகள் வந்துகொண்டிருந்ததாக இஸ்ரேல் பாதுகாப்புப் படைகள் எச்சரித்தன.

60 நிமிடங்களுக்குள், இரான் மூன்று சுற்றுகளாக ஏவுகணைகளை ஏவியதாக இஸ்ரேல் தெரிவித்தது. காலைக்குப் பிறகு, மேலும் பல ஏவுகணைகள் பாய்ந்ததாக இஸ்ரேலிய ராணுவம் கூறியது.

பீர்ஷெபாவில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடத்தில் இரானிய ஏவுகணை நேரடியாக தாக்கியது. பாதுகாப்பு அறையில் தஞ்சம் புகுந்திருந்த மூன்று பேர் உட்பட, நால்வர் அந்தத் தாக்குதலில் உயிரிழந்தனர்.

இரான், தங்களின் மிக சக்திவாய்ந்த ஏவுகணைகளில் ஒன்றை குடியிருப்புகள் மீது பயன்படுத்தியதாக இஸ்ரேலின் பிரதமர் குற்றம் சாட்டினார்.

அதே நேரத்தில், இரானிய ஊடகங்கள், வடக்கு நகரமான அஸ்தானே-யே அஷ்ரஃபியேவில் இஸ்ரேல் இரவு முழுவதும் நடத்திய கடுமையான தாக்குதல்களில் ஒன்பது பேர் உயிரிழந்ததாக தெரிவித்தன. உயிரிழந்தவர்களில் அணு விஞ்ஞானி முகமது ரெசா செடிகி சபேரியும் இருப்பதாக கூறப்படுகிறது.

நான்கு அடுக்குமாடி குடியிருப்புகள் "முற்றிலும் அழிக்கப்பட்டன. அங்கு ஏற்பட்ட வெடிப்பால் சுற்றியுள்ள வீடுகளும் பல சேதமடைந்தன" என்று பிராந்திய துணை ஆளுநர் கூறினார். சம்பவ இடத்திலிருந்து எடுக்கப்பட்ட படங்களில், வீடுகளால் சூழப்பட்ட ஒரு தெருவில் சிதறிக் கிடந்த இடிபாடுகள் தெளிவாகக் காணப்பட்டன.

வடக்கு இரானின் காட்சி.

பட மூலாதாரம்,BBC PERSIAN

படக்குறிப்பு, இஸ்ரேலிய ஏவுகணைத் தாக்குதலுக்குப் பிறகு வடக்கு இரானின் காட்சி.

சண்டை நிறுத்தம் அமலுக்கு வருவதற்குமுன், இஸ்ரேல் 'கடைசி சுற்று' ஏவுகணைகளை ஏவியதாக இரான் குற்றம் சாட்டியது."

இஸ்ரேலிய ராணுவம் இரவு முழுவதும் தாக்குதல்கள் மேற்கொண்டதாக பின்னர் உறுதிப்படுத்தியது. அதே நேரத்தில், இராக் அரசு, டிரோன்கள் தங்கள் நாட்டில் உள்ள தளங்களைக் குறிவைத்ததாகக் கூறியது. இரானிய ஆதரவு கொண்ட ஆயுதக் குழுக்கள் இராக்கில் செயல்பட்டு வருகின்றன. எந்த தளங்கள் குறிவைக்கப்பட்டன என்பது தெளிவாகத் தெரியவில்லை.

ஆனால், கடைசி நிமிடம் வரை மோதல் தொடர்ந்து நடைபெற்றது என்பது மட்டும் தெளிவாகத் தெரிந்தது.

' சண்டை நிறுத்தம் இப்போது அமலில் உள்ளது'

இஸ்ரேலை நோக்கி ஏவப்பட்ட ஏவுகணைகள்

பட மூலாதாரம்,REUTERS

படக்குறிப்பு, இஸ்ரேலை நோக்கி ஏவப்பட்ட ஏவுகணைகள் திங்கட்கிழமை இரவு படம்பிடிக்கப்பட்டன.

01:00 வாஷிங்டன் டிசி / 06:00 லண்டன் / 08:00 டெல் அவிவ் / 08:30 டெஹ்ரான்

"சண்டை நிறுத்தம் இப்போது அமலில் உள்ளது. தயவுசெய்து அதை மீறாதீர்கள்!' என டிரம்ப் சமூக ஊடகத்தில் பதிவிட்டார்.

அந்த அறிவிப்பு வெளியான சிறிது நேரத்திலேயே, இஸ்ரேலிய அரசாங்கம் சண்டை நிறுத்த ஏற்பாடுகளை முறையாக ஏற்றுக்கொண்டது.

இரானின் அணு மற்றும் பாலிஸ்டிக் ஏவுகணை திறன்களை அழித்ததன் மூலம், இஸ்ரேல் தனது நோக்கங்களை நிறைவேற்றியதாகவும், இப்போது அது 'உலக வல்லரசுகளின்' வரிசையில் இணைந்துவிட்டதாகவும் இஸ்ரேல் வெளியிட்ட அறிக்கை கூறுகிறது.

டிரம்ப் முன்மொழிந்த சண்டை நிறுத்தத்தை ஏற்க இரான் தயாராக உள்ளதாக இரானின் வெளியுறவு அமைச்சர் சையது அப்பாஸ் அரக்சி, நள்ளிரவு நேரத்தில் குறிப்பிட்டிருந்தார். இஸ்ரேல் தனது தாக்குதல்களை உள்ளூர் நேரப்படி அதிகாலை 04:00 மணிக்குள் நிறுத்தினால், "அதற்குப் பிறகு எங்கள் பதிலடியை தொடர எங்களுக்கு எந்தவித எண்ணமும் இல்லை" என்று அவர் தெரிவித்தார்.

ஆனால் அந்த சண்டை நிறுத்தம் ஆபத்தில் இருப்பது போல் தோன்ற அதிக நேரம் ஆகவில்லை.

இரானிலிருந்து ஏவுகணை பாய்ந்ததையடுத்து, தனது வான் பாதுகாப்பு அமைப்புகள் செயல்படுத்தப்பட்டதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்தது.

இரான் அந்த கூற்றுகளை மறுத்தபோதிலும், டெஹ்ரானின் மையத்தில் உள்ள ஆட்சியின் இலக்குகளுக்கு எதிராக தீவிர தாக்குதல்களுக்கு" உத்தரவிட்டதாக இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்தார். அதே நேரத்தில், "தெஹ்ரான் அதிர்ச்சியடையும்" என்று எச்சரித்தார் வலதுசாரி அமைச்சரான பெசலெல் ஸ்மோட்ரிச்.

அதனையடுத்து, சண்டை நிறுத்தம் அமலுக்கு வந்த சில மணி நேரங்களுக்குள், டிரம்ப் விரைவாக ஏற்படுத்திய ஒப்பந்தம் சீர்குலையத் தொடங்கியது போல் தோன்றியது.

இஸ்ரேலிய ஜெட் விமானங்கள் இரானின் தலைநகரை நோக்கிச் சென்ற நிலையில், "அந்த குண்டுகளை வீசாதீர்கள். நீங்கள் வீசினால், அது ஒரு பெரிய ஒப்பந்த மீறலாகும். உங்கள் விமானிகளை உடனே நாட்டுக்கு அழைத்து வாருங்கள்!" என்று டிரம்ப் மீண்டும் பதிவிட்டார்.

' இஸ்ரேலும் இரானும் அமைதியடைய வேண்டும்'

டிரம்ப்

பட மூலாதாரம்,EPA

படக்குறிப்பு, அமெரிக்க அதிபர் டிரம்ப்

07:00 வாஷிங்டன் டிசி / 12:00 லண்டன் / 14:00 டெல் அவிவ் / 14:30 டெஹ்ரான்

வாஷிங்டன் டிசியில் மறுநாள் காலைப் பொழுது விடிந்ததும், அமெரிக்க அதிபர் வெள்ளை மாளிகையின் புல்வெளியில் நடந்து வந்தார். அங்கு ஒரு ஹெலிகாப்டர் அவரை நேட்டோ உச்சிமாநாட்டிற்கு அழைத்துச் செல்ல காத்திருந்தது.

அறிவிப்புகள், கூற்றுகள் மற்றும் மறுப்புகளால் குழப்பமடைந்த இரவிற்குப் பிறகு, அதிபர் டிரம்ப் என்ன சொல்லப் போகிறார் என்பதைக் கேட்க செய்தியாளர்களும் ஆர்வத்துடன் காத்திருந்தனர்.

இஸ்ரேலும் இரானும் சண்டை நிறுத்தத்தை மீறிவிட்டதாக டிரம்ப் அவர்களிடம் கூறினார். ஆனால் ஒப்பந்தம் இன்னும் நடைமுறையில் இருப்பதாகவும் அவர் வலியுறுத்தினார்.

ஜெட் விமானங்களைத் திரும்ப அழைக்குமாறு நெதன்யாகுவிடம் வலியுறுத்தியதைக் குறிப்பிட்ட டிரம்ப், "ஒரு [இரானிய] ஏவுகணை இருந்தது, அது காலக்கெடுவுக்குப் பிறகு கடலில் ஏவப்பட்டதாக நான் நினைக்கிறேன். இப்போது இஸ்ரேல் பதில் நடவடிக்கை எடுக்கச் செல்கிறது. இவர்கள் அமைதியாக இருக்க வேண்டும்" எனக் கூறினார்.

இரானிய ஏவுகணை "ஒருவேளை தவறுதலாக" ஏவப்பட்டிருக்கலாம் என்றும், அது "தரையிறங்கவில்லை" என்றும் டிரம்ப் கூறினார்.

அதிபர் டிரம்ப் கோபமாகக் காணப்பட்டார்.

ஒப்பந்தம் ஏற்றுக்கொள்ளப்பட்டவுடன், "நான் இதற்கு முன்பு பார்த்திராத" அளவிலான தாக்குதல்களை நடத்தியதற்காக, "இஸ்ரேலிடம் நான் மிகவும் அதிருப்தியடைந்துள்ளேன்" என்று அவர் தெரிவித்தார்.

"இரானைக் குறித்தும் நான் மகிழ்ச்சியடையவில்லை," என்றும் டிரம்ப் கூறினார்.

டிரம்ப் திரும்பி நடக்கத் தொடங்கியபோது, இஸ்ரேல் மற்றும் இரான் மீதான தனது விரக்தியை வெளிப்படுத்தினார். 'இவர்கள் இவ்வளவு நாட்களாக சண்டையிட்டு வருகிறார்கள். இப்போது அவர்கள் என்ன செய்கிறார்கள் என்பதே அவர்களுக்குத் தெரியவில்லை' என்று அவர்களைக் கடுமையாகச் சாடினார்.

நெதர்லாந்தில் நடைபெறும் உச்சிமாநாட்டிற்குச் செல்ல ஹெலிகாப்டர் மூலம் மேரிலாந்தில் உள்ள ராணுவத் தளத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட அவர், அங்கிருந்து ஏர் ஃபோர்ஸ் ஒன்னில் பயணிக்கவிருந்தார்.

விமானத்தில் ஏறிய பிறகு, டிரம்ப் நெதன்யாகுவை அழைத்தார். அந்த உரையாடல் மிகவும் பதற்றமாக இருந்ததாகத் தெரிகிறது.

இஸ்ரேலிய பிரதமருடன் அதிபர் "மிகுந்த உறுதியுடனும் நேரடியாகவும்" பேசியதாக வெள்ளை மாளிகை வட்டாரம் சிபிஎஸ் செய்தியிடம் தெரிவித்தது. நெதன்யாகு, சூழ்நிலையின் தீவிரத்தையும் அதிபர் டிரம்ப் வெளிப்படுத்திய கவலைகளையும் புரிந்து கொண்டார்" எனக் கூறப்பட்டது.

இரானைத் தாக்க தயாராக இருந்த இஸ்ரேலிய விமானங்களை திரும்ப அழைக்குமாறு நெதன்யாகுவிடம் கூறியதாக, விமானப் பயணத்தின் போது டிரம்ப் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாக அறியப்படுகிறது.

இரானில் உள்ள தலைவர்களைப் பொறுத்தவரை, அணு ஆயுதத்தை உருவாக்குவது, இப்போது அவர்களின் மனதில் "கடைசி விஷயமாக"இருக்கும் என்று கூறினார் டிரம்ப்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/c3en488x5dko

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, ரசோதரன் said:

என்ன கடஞ்சா நீங்கள்.................. மற்றவர்களுக்கு பரந்த சிந்தனை, அகண்ட பார்வை கிடையாது என்று சொல்லுகின்ற நீங்கள் எழுமானமாகவே தொடர்புகளை உண்டாக்குகின்றீர்கள்.

(இது பொதுவானதும் கூட)

எனது விளக்கம் ஏலவே இருக்கிறது.

இந்த இணைப்பை வசித்து பார்க்கவும்.

இதை தான் அமெரிக்கா தவிர்க்க முனைகிறது (அதனால் காலம் செல்ல இஸ்ரேல் தனியே மாட்டப்படும் வாய்ப்பு இருக்கிறது).

எனது விளக்கம், என் சொந்த அரசியல், வரலாறு ..., அறிவு, ஆய்வும், சிந்தனை, புரிவும். இந்த இணைப்பை அடிப்படையாக கொண்டது அல்ல.

Asia Times
No image preview

Why China's sitting on the Iran war sidelines - Asia Times

On a visit to Shanghai some years ago, I asked a leading Chinese strategist how Beijing would view a war between the US and Iran, which even back then

Edited by Kadancha

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, Maruthankerny said:

உலக அரசியல் பூவியல் உளவியல் விஞ்ஞான அறிஞர்கள் யாழில் பந்தி பந்தியாக எழுதும் கருத்துக்களை கடந்த 20 வருசமாக வாசித்து வந்தும் உங்களால் எப்படித்தான் இப்படி எழுத முடிகிறதோ தெரியவில்லை.

செப்டம்பர் 11/2001 தாக்குதலுக்கு முன்பு ராம்போக்களாக கோலிவூட் சினிமா தொடங்கி அமெரிக்க அரசியல் தலைவர்கள் சிவப்பு கம்பளம் விரித்து வரேவேற்ற உலக முஸ்லிம்கள். எப்படி அதி தீவிர பயங்கரவாதிகள் ஆனார்கள்? 2014 இல் சிரியாவின் 6௦ வீத எண்ணையையும் ஈராக்கின் 4௦ வீத எண்ணையையும் விற்று ஒரு நாளுக்கு 3 மில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு மேலாக பணம் ஈட்டி உலகின் பணக்கார தீவிரவாத அமைப்பாக இருந்த ஐஸ்ஐஸ் இன்று எங்கே? அவர்கள் பணம் தலைவர்கள் எல்லோரும் எங்கே? அவர்கள் கொன்று குவித்தது மூன்று லடசத்திற்குக்கும் மேலான இசுலாமியர்களை. இன்று சிரியாவை கைப்பற்றிய தீவிரவாதிகள் திடீரெனெ இவ்வளவு ஆயுத பலத்துடன் எங்கிருந்து வந்தார்கள்? அமரிக்காவின் தேடல் பட்டியலில் முதலாம் இரண்டாம் இடத்தில இருந்தவர்களுக்கு இன்று அமரிக்க ஜனாதிபதி வாழ்த்து தெரிவிக்கிறார்.

மேற்குலகின் பிரச்சார மூளைசலவைக்கு உள்ளாகி உலகில் என்ன நடக்கிறது என்றே தெரியாமல் கிணற்று தவளைகள் போல் இருந்து கொண்டு பந்தி பந்தியாக யாழில் எழுதிக்கொண்டிருக்கும் உலக அரசியலை வாசித்தும் உங்களால் எப்படி இப்படி எழுத கேள்வி கேட்க முடிகிறது?

வெறும் பத்து நாட்கள் முன்பு தலையில் முடடாக்கு அணியாது ஈரானின் தலைநகரில் திரிந்த்த ஆயிரக்கணக்கான பெண்களை பிடித்து எவ்வளவு சித்தரவதை செய்து கொல்கிறார்கள் என்பதை தயவு செய்து கீழ் இருக்கும் வீடியோவில் ஒருமுறை பார்த்தாவது உங்கள் நிலைபாடடை கொஞ்சம் மாற்றுங்கள். ஈரானில் யாழ்கள அறிஞர்கள் போல படித்து அறிவு பெறுவதற்கு பெண்களுக்கு 1979 இல் இருந்து தடை விதித்து வந்துள்ளார்கள் பெண்கள் புத்தகத்தை தொடடால் கையை வெட்டி எறிவார்கள் யூனிவர்சிட்டி என்பதே ஈரானில் இல்லை....... தலையை மூடாமல் பெண்கள் வெளியே வந்தால் வீதியிலே தலைவெட்டு

அண்ணளவாக ஈழத்தில் தமிழகத்தில் இன்று இருக்கும் நிலைதான் சேலை இன்றி பெண்கள் வெளியில் வந்தால் வெட்ட படுவார்கள் பொட்டு வைக்காது வெளியில் வந்தால் கொல்லபடுவார்கள் எனும் அச்சத்தில்தான் இன்று ஈழத்திலும் இந்தியாவிலும் பெண்கள் சேலை கட்டி வருகிறார்கள் பொட்டு வைத்துக்கொண்டு வெளியில் வருகிறார்கள்

இது போன்ற ஈரான் பெண்களுக்கு இருக்கும் சவால்களையும் அனுபவங்களையும் சிறுமை செய்யும் பிரச்சார வீடியோக்கள் பல இருக்கின்றன (அவற்றுள் பல கணணித் திரைக்குள் தலையைப் புதைத்துக் கொண்டு, மிச்ச எல்லாவற்றையும் மறந்து விட்ட இந்திய ஐ.ரி துறை சார்ந்தவர்களால் பரப்பப் படுகின்றன என்றும் அறிவேன்).

இதைப் பார்க்கும் மாஷா அமினி போன்ற பெண்களின் குடும்பத்தினர் புண்ணில் புளி தடவியது போல மேலும் துன்புறுவர். ஆனால், இப்படியான பிரச்சார வீடியோக்களை முல்லாக்கள் ரீம் மட்டுமா வெளியிட்டிருக்கின்றன?

ஈரானில் இருந்து சில ஆயிரம் மைல்கள் கடந்து இருக்கும் சிறி லங்காவில், உங்கள் உயிருக்கு பாதுகாப்பு இல்லையென்று நீங்கள் வெளியேறிய காலம் 90 கள்? அந்த நேரம் சிறி லங்கா "பூலோக சொர்க்கமாக இருக்கிறது" என்று கூறும் வீடியோக்கள் இன்னும் இணைய வெளியில் இருக்கின்றன. ஒன்றை சாம்பிளுக்கு கீழே இணைத்திருக்கிறேன்.

இதைப் பார்க்கையில், "பூலோக சொர்க்கத்தை" விட்டு வெளியேறிய உங்களுக்கு உருவாகும் மன அழுத்தத்திற்கு வருந்துகிறேன்😎!

  • கருத்துக்கள உறவுகள்

🙏🙏🙏🥰🥰🥰

ஈரானிய‌ பெண்க‌ள் இவ‌ரை எப்ப‌டி நேசிக்கின‌ம்...................

Edited by வீரப் பையன்26

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, வீரப் பையன்26 said:

🙏🙏🙏🥰🥰🥰

ஈரானிய‌ பெண்க‌ள் இவ‌ரை எப்ப‌டி நேசிக்கின‌ம்...................

யாழ்கள அறிஞர்கள் .......

இந்திய இராணுவம் இலங்கை வந்தபோது அதை தமிழர்கள் வரவேற்ற விடியோவை போட்டு மனம்வருந்த போகிறார்கள்

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, வீரப் பையன்26 said:

🙏🙏🙏🥰🥰🥰

ஈரானிய‌ பெண்க‌ள் இவ‌ரை எப்ப‌டி நேசிக்கின‌ம்...................

😂 கடைசியில் இப்பிடித் தான் எங்கையாவது ஆப்பு வைப்பாங்கள் மொசாட் காரர்.

மோதிரத்தை வாங்கிக் கொண்டு போய் டி.என்.ஏயை எடுத்து sequence செய்து, தலைக்கு என்னென்ன நோய் இருக்கெண்டு ஆராய்ச்சி செய்த பின்னர், எடுக்கும் மருந்துகளை இடை மறித்து எதையாவது போட்டு அனுப்பி வைப்பாங்கள். ஹிஸ்புல்லா உறுப்பினர்களுக்கு பேஜர் வெடிச்சது போல இருக்கும்!

அதுவா முக்கியம் நமக்கு? "புளகாங்கிதம்" தான் முக்கியம்😎!

  • கருத்துக்கள உறவுகள்

vadivelu-po-po.png

-----அடுத்த பஞ்சாயத்து வரும் போது வாங்கப்பா----

  • கருத்துக்கள உறவுகள்

ayatollah ali khamenei நீ இருக்கும் இட‌ம் தெரியும் என‌ ர‌ம்ப் வாயால் வ‌டை சுட்டார் , அதே போல் தான் இங்கை ஒரு த‌ர் மோதிர‌த்தை வைத்து மொசாட்டை இழுக்கிறார்..................நினைவில் வைத்து இருக்க‌வும் மொசாட்டால் khameneiயின் கால் முடிய‌ கூட‌ தொட‌ முடியாது , khameneiயின் மெய்பாதுகாவலர்க‌ள் அவ‌ரின் பாதுகாப்பில் எப்ப‌டி எல்லாம் செய‌ல் ப‌டுகின‌ம் என‌ காணொளியில் பார்த்தேன் , khamenei எப்ப‌வும் அவ‌ருக்கு ந‌ம்பிக்கையான‌வ‌ர்க‌ளை தான் அருகில் வைத்து இருப்பார் என‌ வ‌ர‌லாற்றில் தெரிந்து கொண்டேன்.........................எதிரின்ட‌ கையால் அவ‌ர் சாக‌ போவ‌து கிடையாது , இப்போது 86வ‌ய‌து , 94வ‌ய‌து வ‌ரை வாழுவார் , இது என‌து ந‌ம்பிக்கை..........................ஈரானில் மொசாட் இவ‌ள‌வு கொடுமைக‌ளை செய்த‌ பின்பும் , இனி khamenei கிட்ட‌ யாரையும் நெருங்க‌ விட‌ மாட்டின‌ம்....................அவ‌ரின் ஆலோச‌க‌ர்க‌ள் ந‌ம்ம‌ல‌ மாதிரி கூ முட்டைக‌ள் கிடையாது , மொசாட்டின் இந்த‌ செய‌லுக்கு பின் விழித்து விட்டின‌ம் , ப‌ழைய‌ ப‌டி ஈரான் ப‌ழைய‌ நிலைக்கு திரும்பி விட்ட‌து , ஈரான் த‌லை ந‌க‌ர‌த்தில் நேற்று ஒரே கொண்டாட்ட‌ம்......................இந்த‌ போரில் அவ‌மான‌ ப‌ட்ட‌து இஸ்ரேலும் அமெரிக்காவும் தான் , ஈரான்ட‌ காலில‌ விழுந்து போரை நிறுத்துங்கோ என‌ பெரிய‌ அண்ண‌ன் அமெரிக்கா கெஞ்சின‌து ஹா ஹா.....................

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, வீரப் பையன்26 said:

ந‌ம்ம‌ல‌ மாதிரி கூ முட்டைக‌ள் கிடையாது ,

பையன் சார், நன்றி! கடைசியாக ஒத்துக் கொண்டிருக்கிறீர்கள் ஒரு உண்மைத் தகவலை😂!

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு காலத்தில் இலங்கையில் உள்ள யூதர்களை வெளியேற்ற போராட்டங்கள் நடந்தாலும் நடக்கலாம்.

கிழக்கு மாகாணத்தில் அறுகம்பே என்ற இடத்தில் சுற்றுலா விசாவில் வரும் இஸ்ரேல்காரர்கள் கோவில் குளம் எல்லாம் கட்டி நீண்டகால இருப்புக்கு ஆயத்தமாகிறார்கள்.

இஸ்ரேலிய புலனாய்வுப்பிரிவே கூடுதலாக இங்கே வந்து தங்குவதாக உறுதிப்படுத்த முடியாத தகவல்கள் கூறுகின்றன.

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Kadancha said:

இதை தான் அமெரிக்கா தவிர்க்க முனைகிறது (அதனால் காலம் செல்ல இஸ்ரேல் தனியே மாட்டப்படும் வாய்ப்பு இருக்கிறது).

கடஞ்சா,

சைனா மத்திய கிழக்கில் நடக்கும் சண்டைகள் என்று மட்டும் இல்லை, எந்தச் சண்டைகளிலுமே பங்குபற்றுவதில்லை. உலகில் இரு நாடுகளைத் தவிர வேறு எந்த நாடுகளுமே தங்கள் மேல் தீவிரமாக, தவிர்க்க முடியாமல் ஒரு சண்டை திணிக்கப்பட்டாலே அன்றி சண்டைகளில் ஈடுபடுவதில்லை. இன்றைய காலத்தில் ஒரு பத்து நாட்கள் நடக்கும் யுத்தமே ஒரு நாட்டை மிக இலகுவாக சில வருடங்கள் பின்னோக்கி கொண்டு சென்று விடும் என்ற தெளிவு எல்லா நாடுகளிடமுமே இருக்கின்றது.

மிக அண்மையில் இந்தியாவையும் பாகிஸ்தானையும் பார்த்தோம். ஒருவரின் வான்வெளிக்குள் அடுத்தவரின் யுத்த விமானங்களே பறக்கவில்லை. தங்கள் தங்கள் வான்வெளிகளிலேயே இரண்டு நாட்கள் சுற்றிப் பறந்து விட்டு இறங்கினார்கள். பின்னர் சமாதானம் என்றார்கள்.

அமெரிக்காவும் இஸ்ரேலும் மட்டுமே தொடர்ச்சியாக உலகெங்கும் சண்டைகளில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றார்கள். இஸ்ரேல் அதன் இருப்பிற்காக அங்கு பலருடன் போராடுகின்றது. அமெரிக்கா அதன் மதிப்பிற்காகவும், அதற்கு பொறுப்புகள் இருக்கின்றது என்றும் பல இடங்களுக்கும் போய் வருகின்றது.

அமெரிக்கா வல்லரசே இல்லை, அமெரிக்காவிற்கு கேந்திர முக்கியத்துவமே கிடையாது என்று 25 வருடங்களாக வாசித்துக் கொண்டேயிருக்கின்றேன். அமெரிக்க டாலரே மூழ்கிவிட்டது என்பதையும் பல வருடங்களாக வாசித்துக் கொண்டேயிருக்கின்றேன். சீனா முன்னே போய்விட்டது என்றும் தான். கோவிட் காலத்தில் அமெரிக்க வல்லமை அற்றது என்று வந்த செய்திகள் ஏராளம்.

அடுத்த 25 வருடங்களுக்கும் இதே செய்திகள் வரும். ஆனால் அமெரிக்கா இருக்கும் இடத்திலேயே இருக்கும், அமெரிக்க டாலரும் அங்கேயே இருக்கும். அப்படியே நான் போய்ச் சேர்ந்து விடுவேன்............ வேற யாராவது வந்து இதைப் போல யாழில் எழுதுவார்கள்....................🤣.

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, ஈழப்பிரியன் said:

ஒரு காலத்தில் இலங்கையில் உள்ள யூதர்களை வெளியேற்ற போராட்டங்கள் நடந்தாலும் நடக்கலாம்.

கிழக்கு மாகாணத்தில் அறுகம்பே என்ற இடத்தில் சுற்றுலா விசாவில் வரும் இஸ்ரேல்காரர்கள் கோவில் குளம் எல்லாம் கட்டி நீண்டகால இருப்புக்கு ஆயத்தமாகிறார்கள்.

இஸ்ரேலிய புலனாய்வுப்பிரிவே கூடுதலாக இங்கே வந்து தங்குவதாக உறுதிப்படுத்த முடியாத தகவல்கள் கூறுகின்றன.

ஓம் அண்ணா இதையும் நானும் அறிந்தேன் , இது பெருத்த‌ ஆவ‌த்தில் போய் முடியும் , இல‌ங்கைய‌ர்க‌ள் இப்ப‌வே விழிக்க‌னும் இல்லையேன் பைப்பிலை காட்டி இல‌ங்கை தீவையும் ஆட்டைய‌ போட்டு விடுவாங்க‌ள்.................2000வ‌ருட‌த்துக்கு முத‌ல் யூத‌ர்க‌ள் இங்கு தான் வாழ்ந்தார்க‌ள் என‌ த‌ங்க‌ட‌ ப‌ழைய‌ பைப்பில்ல‌ போட்டு இருக்கு என‌......................

யாழ்பாண‌ம் சின்ன‌ சின்ன‌ குட்டி தீவுக‌ளை கொண்ட‌ அழ‌கான‌ இட‌ம் , யூத‌ர்க‌ளுக்கு எங்க‌ட‌ நாட்டின் மேல் கூட‌ ஆசை வ‌ர‌க் கூடும்...........................................

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, வீரப் பையன்26 said:

ஓம் அண்ணா இதையும் நானும் அறிந்தேன் , இது பெருத்த‌ ஆவ‌த்தில் போய் முடியும் , இல‌ங்கைய‌ர்க‌ள் இப்ப‌வே விழிக்க‌னும் இல்லையேன் பைப்பிலை காட்டி இல‌ங்கை தீவையும் ஆட்டைய‌ போட்டு விடுவாங்க‌ள்.................2000வ‌ருட‌த்துக்கு முத‌ல் யூத‌ர்க‌ள் இங்கு தான் வாழ்ந்தார்க‌ள் என‌ த‌ங்க‌ட‌ ப‌ழைய‌ பைப்பில்ல‌ போட்டு இருக்கு என‌......................

யாழ்பாண‌ம் சின்ன‌ சின்ன‌ குட்டி தீவுக‌ளை கொண்ட‌ அழ‌கான‌ இட‌ம் , யூத‌ர்க‌ளுக்கு எங்க‌ட‌ நாட்டின் மேல் கூட‌ ஆசை வ‌ர‌க் கூடும்...........................................

தமிழர்களின் ஆயுதப் போராட்டம் தொடங்க முதலிருந்தே

இஸ்ரேலியர்களின் ஆலோசனைப்படியே இலங்கை நகர்ந்து கொண்டிருக்கிறது.

இப்போதும் அப்படியாகவே இருக்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்
40 minutes ago, ரசோதரன் said:

அடுத்த 25 வருடங்களுக்கும் இதே செய்திகள் வரும். ஆனால் அமெரிக்கா இருக்கும் இடத்திலேயே இருக்கும், அமெரிக்க டாலரும் அங்கேயே இருக்கும். அப்படியே நான் போய்ச் சேர்ந்து விடுவேன்............ வேற யாராவது வந்து இதைப் போல யாழில் எழுதுவார்கள்

அப்போது ஏன் சீனா எல்லா கோளங்களிலும் அச்சறுத்தல் என்று அமெரிக்கா பார்க்கிறது?

சீனாவை, சோவியத்தை போல தனிமைப்படுத்தி உடைக்க முயல்கிறது?

(இவற்றை நன்கு அவதானித்தே சீனாவும் அதன் நகர்வுகள், அதை தடுப்பதை நோக்கமாக கொண்டே அமெரிக்கா நகர்வுகள். )

இது போன்றவற்றை நீங்கள் அறிந்து இருப்பீர்கள் என்று நினைத்தேன். உங்களுக்கு எத்தனை கோளங்களில் சீன, அமெரிக்கா (ஆயுதம் இல்லாமல்) மோதுகிறது தெரியாது இருக்கிறது. கடலுக்கு அடியேயும் மோதுகின்றன.

ஏன் அமெரிக்கா பில்லியன் கணக்கில் சீனாவை பற்றி பூச்சாண்டி காட்டும் பிரச்சாரத்துக்கு உத்தியோகப்பூர்வமாக செலவிடுகிறது?

இப்படி பல அமெரிக்கா செய்வது, சொல்வது உங்களின் புரிவு பிம்பத்துக்கு எதிர்மாறாக இருக்கிறது.

இதில் முக்கியமானது ஒன்று தொடங்கி விட்டது, credit rating விழுந்தது.

நீங்கள் எதிர்பார்ப்பது மற்ற அமெரிக்கர்களும், இன்று கதைத்தால், நாளை விளைவுகள் என்பது.

அனால் சீனாவும், அமெரிக்கா (கூட), மேற்கு, மற்ற நட்டுகள் அவ்வாறு அப்படியான காலத்தில். நோக்கவில்லை.

(அனல், இதில் குறிப்பாக சீனா ஒன்றும் செய்ய தேவை இல்லை, முன்பே சொன்ன யுக உற்பதி அரிதான உலோக பிடி சீனாவிடம் உள்ளது. வேண்டுமாயின் அது பாவிக்கும்.)

  • கருத்துக்கள உறவுகள்
50 minutes ago, ஈழப்பிரியன் said:

இஸ்ரேலிய புலனாய்வுப்பிரிவே கூடுதலாக இங்கே வந்து தங்குவதாக உறுதிப்படுத்த முடியாத தகவல்கள் கூறுகின்றன.

அங்கு வருவது பெரும்பாலும், இஸ்ரேல் இளம் சமூகத்துக்கு கட்டாய இராணுவ சேவையில் உருவாகும் அழுத்தத்தை குறைபதத்திற்கு.

இவர்களில் கணிசமானோர் புலனாய்வு, உளவுத்துறைக்கு உள்வாங்கப்பட்டு இருப்பார்கள்.

இப்படி இந்தியாவில் ஹிமாச்சல் பிரதேசதிலும் நடக்கிறது.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.