Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, nunavilan said:

கூதிகளுடன் டீலுக்கு போக வேண்டியதன் (US)அர்த்தம் என்ன??

முழு ஊடகமும் ஈரானை நோக்கி உள்ளது. ஆனால் அணுக்கதிர் வீச்சால் இறந்தவர்கள் பற்றி ஏன் தெரிவிக்கவில்லை. அப்படி ஒன்று நடந்ததா? இல்லை உலக செய்தி ஸ்தாபனங்களை கட்டுப்படுத்தும் இஸ்ரேலியர்கள் கோட்டை விட்டார்களா?

உண்மையில் இஸ்ரேல் ஈரானில் தாக்கியிருந்தால் அதனால் மக்கள் கதிர் வீச்சால் இறந்திருப்பர், அப்படியெதுவும் நடக்காமையால் தாக்குதல் பொய் என்கிறீர்கள்??

இந்த வீடியோக்களைப் பார்த்து விடயங்களை அரை குறையாகப் புரிந்து கொள்வதை விட, இங்கே இணைக்கப் பட்டிருக்கும் பிபிசி செய்திகளைப் பார்த்தால் விடயம் தெளிவாகும் என நினைக்கிறேன். IAEA என்ற அமைப்பு கதிர் வீச்சு ஈரானில் தாக்குதல் நடந்த இடங்களில் அதிகரித்திருக்கிறதா என கண்காணித்து வருகிறது (இதே கண்காணிப்பு உக்ரைனிலும் நடந்தது). அழிக்கப் பட்ட இடங்களில் வெளியே கதிரியக்கம் அதிகரிக்கவில்லை. கட்டிடங்களின் உள்ளே அதிகரிப்பு இருப்பதாக செய்தியில் இருக்கிறது.

அணு ஆயுதம் இங்கே அழிக்கப் படவில்லை. அணு ஆயுதத்தைத் தயாரிக்க அவசியமான யுரேனியத்தை செறிவு படுத்தும் நிலையங்கள் தான் தாக்கப் பட்டிருக்கின்றன. இந்த இடங்களில் கூட 60% செறிவான யுரேனியம் பெரும் தொகையில் இருந்திருக்க வாய்ப்பில்லை. அப்படிச் சுத்திகரித்த யுரேனியத்தை மலைக்குக் கீழே தான் பதுக்கியிருப்பர், ஏனெனில் அது போனால் அணுவாயுதக் கனவும் போய் விடும்.

எனவே, அணுவாயுதம் அழிக்கப் பட்டது, அணு வாயுதம் தயாரிக்கும் இடம் அழிக்கப் பட்டது என்ற உங்கள் புரிதல் தவறு. யுரேனியம் செறிவாக்கும் மைய நீக்க சுழலிகள் (centrifuges) என்ற உபகரணங்கள் தான் இலக்கு என்பதை வெளிப்படையாக செய்திகளில் காண்கிறோம். இதைக் காணாமல் எங்கேயோ மூலையில் இருக்கும் வீடியோவை நம்பி நீங்கள் கருத்துரைப்பது ஆச்சரியம் தான்!

  • Replies 454
  • Views 18.8k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Most Popular Posts

  • கிருபன்
    கிருபன்

    மக்களாட்சி மீது நம்பிக்கை குறைந்து வருவதனால், அதிக பணமும், பலமும் உள்ளவர்கள் அதிகாரத்தைக் கையில் வைத்துள்ளனர். இது ஏகாதிபத்ய அரசுகளுக்கு வழி கோலுகின்றது. அரபு நாடுகளில் ஜனநாயகத் தேர்தல்கள் மூலம் ஆட்சி

  • எமது தாயகத்தில் நிகழ்ந்தது போல பொருளாதார தடையினை நீண்ட காலமாக சந்தித்து வரும் நாடு ஈரான், கோவிட் காலத்தில் அதற்கான சரியான் தடுப்பூசிகூட கிடைக்காத நிலை காணப்பட்டது. பெரியவர்களே ஒரு காயம் எற்பட்டு

  • புரட்சிகர தமிழ்தேசியன்
    புரட்சிகர தமிழ்தேசியன்

    டிரம்ப் சீற்றம் கமெனி காட்டம் இடியை இறக்கிய இஸ்ரேல் .. ஈரான் சரவெடி .. இஸ்ரெல் அதிரடி.. இறங்கி அடிக்கும் ஈரான்.. சண்டை பிடிப்பவர்களை விட இவர்கள் "தலைப்பு" இம்சை தாங்கல சாமீ..

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நான் என்ன செய்வேன் என்று யாருக்கும் தெரியாது

- ஈரானுக்கு எதிரான இராணுவ நடவடிக்கை குறித்து ட்ரம்ப்

PrashahiniJune 19, 2025

இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையிலான மோதலில் ஈரானுக்கு எதிராக அமெரிக்க இராணுவம் களமிறங்குமா என்ற கேள்விக்கு அமெரிக்க ஜனாதிபதி டொனல்ட் ட்ரம்ப் பதில் அளித்துள்ளார்.

கடந்த 13ஆம் திகதி ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதலை மேற்கொண்டது. அணுகுண்டு தயாரிப்பில் தீவிரம் காட்டுவதாக கூறி ‘ஆபரேஷன் ரைசிங் லயன்’ என்ற பெயரில் இந்த தாக்குதலை இஸ்ரேல் முன்னெடுத்தது. இதற்கு ஈரானும் பதில் தாக்குதல் நடத்தியது. ஈரானுக்கு ஆதரவாக ஹவுதி கிளர்ச்சி படை உள்ளது.

இஸ்ரேல் – ஈரான் மோதல் குறித்த அமெரிக்க ஜனாதிபதி டொனல்ட் ட்ரம்ப் தொடர்ந்து தனது கருத்தை தெரிவித்து வந்தார். இந்நிலையில், ஈரானுக்கு எதிராக அமெரிக்க இராணுவம் களமிறங்குமா என பத்திரிகையாளர்கள் அவரிடம் கேள்வி எழுப்பினர்.

“அதை நான் செய்யலாம். செய்யாமலும் போகலாம். ஆனால், நான் என்ன செய்வேன் என்று யாருக்கும் தெரியாது. நான் அந்த கேள்விக்கு பதில் அளிப்பேன் என நீங்கள் எண்ணியிருக்க வாய்ப்பு இல்லை.

ஈரானுக்கு நிறைய பிரச்சினைகள் எழுந்துள்ளன. அவர்கள் எங்களுடன் பேச்சுவார்த்தை நடத்த முயற்சித்தார்கள். நீங்கள் ஏன் இரண்டு வாரத்துக்கு முன்பு இதை செய்யவில்லை என கேட்டேன். நீங்கள் அதை செய்திருக்கலாம். உங்கள் தேசம் இருந்திருக்கும் என சொன்னேன்” என சிரித்தபடி ட்ரம்ப் தெரிவித்தார்.

அவரது இந்த கருத்து மூலம் அமெரிக்க இராணுவம் ஈரானுக்கு எதிராக களம் இறங்குமா? இறங்காதா? என்ற யூகத்தை உலக நாடுகளின் இடையே எழுப்பியுள்ளார் ட்ரம்ப்.

https://www.thinakaran.lk/2025/06/19/breaking-news/136324/நான்-என்ன-செய்வேன்-என்று/#google_vignette

  • கருத்துக்கள உறவுகள்

New-Project-255.jpg?resize=750%2C375&ssl

ஈரான் மீதான தாக்குதலுக்கு ட்ரம்ப் ஒப்புதல்; தெஹ்ரானை கைவிட மாட்டோம் என்கிறார் கிம்!

இஸ்ரேல்-ஈரான் மோதல் வியாழக்கிழமை (19) ஏழாவது நாளை எட்டியுள்ள நிலையில், ஈரானிய அணுசக்தி தளங்கள் மீதான இஸ்ரேலின் குண்டுவீச்சுத் தாக்குதலில் அமெரிக்கா இணையுமா என்பது குறித்து உலகை ஊகிக்க வைத்துள்ளார் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்.

ஈரான் மீதான தாக்குதல் திட்டங்களுக்கு ஒப்புதல் அளித்துள்ளதாகவும், ஆனால் தெஹ்ரான் அதன் அணுசக்தி திட்டத்தை கைவிடுமா என்பதைப் பார்க்க இறுதி உத்தரவை வழங்குவதில் தாமதம் செய்துள்ளதாகவும் அவர் தனது நிர்வாகத்தின் மூத்த அதிகாரிகளிடம் கூறியுள்ளதாக தி வால் ஸ்ட்ரீட் ஜர்னல் (The Wall Street Journal) செய்தி வெளியிட்டுள்ளது.

வெள்ளை மாளிகைக்கு வெளியே செய்தியாளர்களிடம் பேசிய அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்,

இஸ்ரேலின் தாக்குதலில் இணையலாமா அல்லது வேண்டாமா என்பது குறித்து ஏதேனும் முடிவு எடுத்துள்ளாரா என்பதை உறுதியாகக் கூற மறுத்துவிட்டார்.

அதேநேரம், ஈரான் தனது அணுசக்தித் திட்டங்களை எந்த நிபந்தனையும் இல்லாமல் முழுமையாகக் கைவிட வேண்டும் என்றும் அவர் மீண்டும் கூறினார்.

அமெரிக்காவிற்கு ஒரு சாத்தியமான இலக்கு ஈரானின் ஃபோர்டோ அணு செறிவூட்டல் நிலையமாகும்.

இது நிலத்தடியில் ஆழமாக கட்டப்பட்டுள்ளது மற்றும் அழிக்க மிகவும் கடினம்.

மிகவும் சக்திவாய்ந்த குண்டுகள் மட்டுமே அதை அடைய முடியும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

இது இவ்வாறு இருக்க முன்னதாக ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி, தனது நாடு சரணடையாது என்று கூறினார்.

எந்தவொரு இராணுவ நடவடிக்கையும் கடுமையான விளைவுகளுக்கு வழிவகுக்கும் என்று அவர் அமெரிக்காவை எச்சரித்தார்.

சர்வதேச தலைவர்கள் தெஹ்ரான் பிரதிநிதிகளுடன் சந்திப்பு

ஈரான் தனது அணுசக்தி திட்டத்தை பொதுமக்கள் நோக்கங்களுக்காக மட்டுமே பயன்படுத்தும் என்று உறுதியாக உத்தரவாதம் அளிக்கும்படி தெஹ்ரானை வற்புறுத்துவதை நோக்கமாகக் கொண்டு, ஜெர்மனி, பிரான்ஸ் மற்றும் பிரிட்டனின் வெளிவிவகார அமைச்சர்கள் வெள்ளிக்கிழமை (19) ஜெனீவாவில் தங்கள் ஈரானிய பிரதிநிதியுடன் அணுசக்தி பேச்சுவார்த்தைகளை நடத்த திட்டமிட்டுள்ளதாக ஜெர்மன் தூதரக வட்டாரம் தெரிவித்துள்ளது.

ஆனால், ராஜதந்திர முயற்சிகள் தொடர்ந்தாலும், 10 மில்லியன் மக்கள் வசிக்கும் தெஹ்ரானில் வசிக்கும் சிலர் புதன்கிழமை நகரத்திற்கு வெளியே நெடுஞ்சாலைகளை மறித்து, இஸ்ரேலிய வான்வழித் தாக்குதல்களில் இருந்து தப்பிக்க முயன்றனர்.

மத்திய கிழக்கில் குவிக்கப்படும் அமெரிக்க இராணுவப் படைகள்

அண்மைய நாட்களில் அமெரிக்கா மத்திய கிழக்கிற்கு அதிக இராணுவப் படைகளை நகர்த்தி வருகிறது.

மூன்றாவது கடற்படை அழிப்புக் கப்பல் கிழக்கு மத்தியதரைக் கடலில் நுழைந்துள்ளது.

மேலும் மற்றொரு விமானம் தாங்கிக் கப்பல் குழு அரபிக் கடலுக்குச் சென்று கொண்டிருக்கிறது என்று தி வால் ஸ்ட்ரீட் ஜர்னல் தெரிவித்துள்ளது.

இது ஒரு தற்காப்பு நடவடிக்கை மட்டுமே என்றும், இஸ்ரேல் ஈரானைத் தாக்கினால் அமெரிக்காவுடன் இணையும் திறனையும் இது வழங்குகிறது என்றும் பென்டகன் தெரிவித்துள்ளது.

GtmGIrVXgAAcXms?format=jpg&name=medium

தெஹ்ரான் தனியாக இல்லை

மத்திய கிழக்கில் அதிகரித்து வரும் பதற்றத்திற்கு மத்தியில், வட கொரிய தலைவர் கிம் ஜாங்-உன் சர்வதேச சமூகத்தின் கவனத்தை ஈர்த்த ஒரு அறிக்கையை வெளியிட்டார்.

ஈரானுக்கு எதிரான தற்போதைய இராணுவ நடவடிக்கைகள் குறித்து அவர் கடுமையான அதிருப்தியை வெளிப்படுத்தினார்.

இந்த மோதலில் தெஹ்ரான் “தனியாக இல்லை” என்பதை வலியுறுத்தினார்.

இந்தப் போரில் ஈரான் தனியாக இல்லை.

வட கொரிய இராணுவம் மிக உயர்ந்த போர் தயார்நிலைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

கடினமான காலங்களில் நாங்கள் எங்கள் நண்பர்களை கைவிட மாட்டோம்.

நாங்கள் ஈரானை முழுமையாக ஆதரிக்கிறோம்.

அமெரிக்காவின் இராணுவ ஆக்கிரமிப்பு மற்றும் அழுத்தக் கொள்கை எங்களுக்கு நன்கு தெரியும்.

நாங்கள் எங்கள் நண்பர்களுடன் பக்கபலமாக நிற்கிறோம் என கிம் ஜாங்-உன் தனது அதிகாரப்பூர்வ உரையில் அறிவித்தார்.

எவ்வாறெனினும் மத்திய கிழக்கின் நிலைமை மோசமடைந்து வருகிறது.

அண்மைய தாக்குதல்களால் ஈரானில் 450 க்கும் மேற்பட்டோர் இறந்துள்ளதாகவும், ஈரானிய தாக்குதல்களால் இஸ்ரேலில் 24 பேர் இறந்துள்ளதாகவும் மனித உரிமைகள் குழு தெரிவித்துள்ளது.

Um7ir4qY6KajOnbiZbwzdge24DHAULWX6VRjk9WN

https://athavannews.com/2025/1436216

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, nunavilan said:

உங்களின் உலகப்போர் என்பதன் அர்த்தம் வேறாகலாம். அமெரிக்காவை தாக்க பலர் தருணம் காத்திருக்கிறார்கள். இதோ தருணம் வந்து விட்டது. இரானின் சகாக்கள் யார் எனில் ரஸ்யா,சீனா, வடகொரியா. உதிரிகள் கிஸ்புல்லா மற்றும் குழுக்கள்.

இராணுவத்தை இறக்கிய ஆப்கானிஸ்தானில் நிலை என்ன(அமெரிக்காவின்)

ஈரானில் குண்டு மழை பொழிய நிறைய வாய்ப்புகள் உள்ளன. மக்கள் அழிய நிறைய வாய்ப்புகள் உள்ளன.

சதாம் அல்லது கடாபி போல அழிந்து நாட்டை பிடிக்கும் வாய்ப்பு ஏற்படுமா?

ஏன் இஸ்ரேலின் அழிவுகள் பற்றி மேற்கு ஊடகங்கள் தெரிவிக்க மறுக்கின்றன

ஈரானின் பக்கத்தில் உள்ள இஸ்லாமிய நாடுகள் ஈரானின் இஸ்ரேல் நோக்கி ஏவப்படும் ஏவுகணைகளை தமது நாட்டுக்கு மேலாக செல்வதாக கூறி தாக்கியழிக்கிறார்களாம் ஆனால் அவர்களின் நாட்டிற்கு மேலாக செல்லும் இஸ்ரேல் தாக்குதல் விமானங்களை எதுவும் செய்வதில்லை, சிரியாவின் ஒரு பரந்த வெளியின் மேலாக சில மீற்றர் உயரத்தில் மிக தாழ்வாக இஸ்ரேல் போர் விமானம் பறந்து செல்கிற காணொளி ஒன்று இணையத்தில் பார்த்தேன்.

பக்கத்தில் உள்ள இஸ்லமிய நாடுகளே ஈரானுக்கு உதவவில்லை, ரஸ்சியாவினால் தற்போதய சூழ்நிலையில் ஆயுத உதவி செய்ய முடியுமா என தெரியவில்லை, சீனா ராடார் சாதனங்களை வழங்கியதாக செய்தி வந்திருந்தது, இந்த இரு நாடுகளும் ஈரானுடன் ஏதோ ஒரு பாதுகாப்பு ஒப்பந்தம் செய்துள்ளன என கருதுகிறேன்.

தகவல் தொடர்பு உதவிகளை ஈரானால் பெறமுடிகிறது என கருதுகிறேன், இரண்டு காணொளிகளில் விமான எதிர்ப்பு ஏவுகனை பகுதியினை அண்டிய பகுதியில் ஏவுகணைத்தாக்குதல் நடந்ததை அக்காணொளியில் காண முடிகிறது.

இவ்வாறான மட்டுப்படுத்தப்பட்ட உதவிகளையே சீனாவும் இரஸ்சியாவும் செய்யக்கூடும் என கருதுகிறேன்.

அத்துடன் இந்த போர் நீண்டகால அடிப்படையில் நிகழாது என கருதுகிறேன், இஸ்ரேல் தனது தாக்குதல் விமானங்களில் ஏறத்தாழ 50 விமானங்களை பயன்படுத்துகிறது, அதனடிப்படையில் மொத்தமாக உள்ள 280 விமானத்தில் 168 விமானங்களை பயன்படுத்துகிறது (40% ரிசர்வ் மற்றும் திருத்த மாற்றீடாக 112 விமானங்கள்) அதில் 50 விமானங்கள் எனும்போது 30% சுழற்சியினை பயன்படுத்துகிறது, இது இஸ்ரேல் ஈரான் தொடர்பான திட்டமிடல் மதிப்பீட்டினை காட்டுகிறது, அதாவது ஈரானின் பதில் தாக்குதல் அல்லது ஈரானை பலவீனம் பற்றிய முழுமையான புரிதல்.

இஸ்ரேல் தனது விமானப்படையில் 20 விமானங்களை இழந்தால் இஸ்ரேலின் தாக்குதல் அணியில் தாக்குதலை தொடரமுடியாமல் அழுத்தம் ஏற்படும், ஆனால் அவர்கள் ஈரானின் படை பலம் அல்லது அதற்கான மாற்றீட்டினை சரியாக கொண்டுள்ளதால் ஈரானால் எதுவும் செய்ய முடியவில்லை, ஆனால் தாக்குதலை 2 - 3 கிழமைக்கு மேல் தொடர முடியாது என கருதுகிறேன், இந்த போர் ஒரு மட்டுப்படுத்தப்பட்ட போராகவே இருக்கும் என கருதுகிறேன் அல்லது அமெரிக்கா களமிறங்கினால் நிலமை மாறலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

'400 நொடிகளில் டெல் அவிவ்' - இஸ்ரேல் மீது ஹைப்பர்சோனிக் ஏவுகணைகளை ஏவியதா இரான்?

இஸ்ரேல் மீது ஹைப்பர்சோனிக் ஏவுகணைகளை ஏவியதா இரான்?

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,கோப்புப்படம்

ஒரு மணி நேரத்துக்கு முன்னர்

ஜூன் 18 புதன்கிழமை அன்று இஸ்ரேல் மீது தாக்குதலை நடத்திய இரான் அதிக பாதிப்புகளை ஏற்படுத்தும் ஹைப்பர்சோனிக் ஃபடா ஏவுகணைகளை பயன்படுத்தியதாகக் கூறியுள்ளது.

இரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படை (ஐ.ஆர்.ஜி.சி.) இந்த ஏவுகணைகளை இஸ்ரேலின் தலைநகரான டெல் அவிவை நோக்கி ஏவியதாக குறிப்பிட்டுள்ளது.

இரானின் அரசு ஊடக முகமையான மெஹர் மற்றும் அரசு தொலைக்காட்சியான பிரஸ் டிவி, ஃபடா 1 ஏவுகணைகள் இஸ்ரேலை நோக்கி ஏவப்பட்டதாக ஐ.ஆர்.ஜி.சி. கூறியதாக தங்களின் செய்திகளில் குறிப்பிட்டுள்ளது.

பிரஸ் டிவியின் செய்தியில், "தாக்குதலின் சமீபத்திய கட்டமானது முக்கிய திருப்புமுனையாக அமைந்துள்ளது என்று ஐ.ஆர்.ஜி.சி. கூறியுள்ளது. தாக்குதலில் பயன்படுத்தப்பட்டுள்ள முதல் தலைமுறை ஃபடா ஏவுகணைகள், இஸ்ரேலின் ஏவுகணை தடுப்பு அமைப்புகளின் முடிவுக்கு தொடக்கமாக அமைந்துள்ளது," என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

மத்திய கிழக்கில் இரான் மற்றும் இஸ்ரேலுக்கு இடையே கடந்த வெள்ளிக்கிழமை முதல் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.

இஸ்ரேல், இரானில் தாக்குதல்கள் நடத்துகிறது. மற்றொருபுறம், இரான் டெல் அவிவ் மற்றும் ஹைஃபா துறைமுகம் போன்ற இஸ்ரேலின் முக்கியமான பகுதிகளில் மீது ஏவுகணைகளை ஏவி வருகிறது.

இரான், இஸ்ரேல் மோதல், அமெரிக்கா, மத்திய கிழக்கு, தலைப்புச் செய்திகள், செய்திகள்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, இஸ்ரேலில் இரானின் ஹைப்பர்சோனிக் ஏவுகணை

இதற்கும் முன்னதாக ஃபடா-1 ரக ஏவுகணைகளை இரான் பயன்படுத்தியுள்ளது. கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 1-ஆம் தேதி அன்று இஸ்ரேல் மீது ஒரு டஜன் ஃபடா-1 ரக ஏவுகணைகளை ஏவியது.

ஆனால் தற்போது நடைபெற்று வரும் மோதலின் போது, இந்த ஏவுகணைகள் பயன்படுத்தப்படுவது இதுவே முதல்முறை.

2023-ஆம் ஆண்டு இந்த ஃபடா ஏவுகணைகள் குறித்த தகவல்கள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டன. இந்த ரக ஏவுகணைகளுக்கு இரானின் அதி உயர் தலைவர் அலி காமனெயியின் பெயர் சூட்டப்பட்டுள்ளது. ஐ.ஆர்.ஜி.சி. அமைப்பினர் இந்த ஏவுகணைகளை 'இஸ்ரேல் ஸ்ட்ரைக்கர்' என்று அழைக்கின்றனர்.

இந்த ஏவுகணைகள் அறிமுகம் செய்து வைக்கப்பட்ட போது பெரிய அளவிலான பேனர்கள் ஆங்காங்கே வைக்கப்பட்டன. ஹீப்ரூ மொழியில் அச்சிடப்பட்ட அந்த பேனர்களில், "400 நொடிகளில் டெல் - அவிவ்," என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.

ஐ.ஆர்.ஜி.சி. படையினர் இந்த ஏவுகணைகளை ஹைப்பர்சோனிக் ஏவுகணைகள் என்று அழைக்கின்றனர். ஆனால் பாதுகாப்புத்துறை நிபுணர்கள், உண்மையாகவே இந்த ஏவுகணைகளுக்கு ஹைப்பர்சோனிக் தொழில்நுட்ப செயல்திறன் இருக்கிறதா என்று சந்தேகிக்கின்றனர்.

இரான், இஸ்ரேல் மோதல், அமெரிக்கா, மத்திய கிழக்கு, தலைப்புச் செய்திகள், செய்திகள்

பட மூலாதாரம்,NEWS ONLINE

படக்குறிப்பு, ஹீப்ரு மொழியில் அச்சிடப்பட்ட பேனர்கள்

ஃபடா ஏவுகணைகளின் சிறப்பம்சங்கள்

ஒலியின் வேகத்தைக் காட்டிலும் 5 முதல் 25 மடங்கு அதிக வேகத்தில் செல்லக் கூடியவை ஹைப்பர்சோனிக் ஆயுதங்கள் என்று அழைக்கப்படுகின்றன.

இரான் ஃபடா ஏவுகணைகளை ஹைப்பர்சோனிக் ஏவுகணைகள் என்று பாலிஸ்டிக் மற்றும் க்ரூஸ் பிரிவுகளில் இணைத்தது.

அல்-ஃபடா ஹைப்பர்சோனிக் ஏவுகணைகள் 1,400 கி.மீ. வரை சென்று தாக்குதல் நடத்தும் தன்மை கொண்டவை என்று கூறப்படுகிறது. ஏவுகணை பாதுகாப்பு அமைப்புகளின் கண்காணிப்பில் சிக்காமல், அவற்றையே அழிக்கும் தன்மை கொண்டது என்று ஐ.ஆர்.ஜி.சி. கூறுகிறது.

அல்-ஃபடா ஏவுகணைகள் இலக்குகளை தாக்கி அழிப்பதற்கு முன்பு 13 முதல் 15 'மெக்' வேகத்தில் செல்லும். மெக் 15 என்பது ஒரு நொடிக்கு 5 கி.மீ என்ற வேகத்தில் செல்வதை குறிப்பதாகும்.

"இந்த ஏவுகணைகள் மிகவும் வேகமாக செல்லக் கூடியது. வளிமண்டலத்திற்கு உள்ளும் வெளியும் பயணிக்கக் கூடியது. வேறெந்த ஏவுகணைகளாலும் ஃபடாவை அழிக்க இயலாது," என்று இந்த ஏவுகணைகளின் அறிமுக நிகழ்வன்று, புரட்சிகர காவல்படையின் விண்வெளி அமைப்புத் தளபதி அமீர் அலி ஹஜிஸேதா தெரிவித்தார்.

இஸ்ரேலின் முன்னாள் பாதுகாப்புத் துறை அமைச்சர் யோவ் கேலண்ட், இந்த ஏவுகணைகள் குறித்து, "நம்முடைய எதிரிகள் அவர்கள் உருவாக்கிய ஆயுதங்கள் குறித்து பெருமை பேசி வருகின்றனர். நீர், நிலம் மற்றும் ஆகாயம் என எந்த இடத்திலும் எத்தகைய தொழில்நுட்பத்துக்கும் (மூலமாக தாக்குதல் நடத்தப்பட்டாலும்) சரியான பதில் நம்மிடம் உள்ளது," என்று தெரிவித்தார்.

அல்-ஃபடா 1 பாலிஸ்டிக் ஏவுகணைகள் அறிமுகம் செய்யப்பட்ட நான்கு மாதங்கள் கழித்து புரட்சிகர காவல்படையினர் அல்-ஃபடா 2 என்ற புதிய தலைமுறை க்ரூஸ் ஏவுகணைகளை அறிமுகம் செய்தனர். அது 1500 கி.மீ வரை பயணித்து இலக்குகளை தாக்கி அழிக்கும்.

இரானிய ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்திகளின் அடிப்படையில், அல்-ஃபடா 2 குறைவான உயரத்தில் பறக்கும் தன்மை கொண்டது. மேலும் ஒன்றுக்கும் மேற்பட்ட முறை தன்னுடைய பாதையை மாற்றி அமைத்துக் கொள்ளும் செயல்திறனும் அதனிடம் உள்ளது.

ஐ.ஆர்.ஜி.சி.யின் கீழ் செயல்படும் அஷூரா விண்வெளி அறிவியல் மற்றும் தொழில்நுட்பப் பல்கலைக்கழகதிற்கு இரானின் அதி உயர் தலைவர் அலி காமனெயி வருகை தந்த போது அல்-ஃபடா க்ரூஸ் ஏவுகணைகள் அறிமுகம் செய்யப்பட்டன. அப்போது அது பயணிக்கும் தூரத்தின் திறன் குறித்து எந்த தகவலும் வெளியிப்படவில்லை.

இஸ்ரேலின் தாக்குதல்களுக்கு பதில் தாக்குதல் நடத்தும் வகையில் இரான் ஃபடா ஏவுகணைகளை அறிமுகம் செய்திருந்தாலும், இந்த ஆண்டு ஏப்ரல் 13 தாக்குதலின் போதும், கடந்த ஆண்டு அக்டோபர் 1 தாக்குதலின் போதும் அல்-ஃபடா 2 ரக ஏவுகணைகள் பயன்படுத்தப்படவில்லை.

இரான், இஸ்ரேல் மோதல், அமெரிக்கா, மத்திய கிழக்கு, தலைப்புச் செய்திகள், செய்திகள்

பட மூலாதாரம்,I.M.A.

இரானின் கைவசம் உள்ள ஏவுகணை வகைகள்

கடந்த அக்டோபர் 7 அன்று இரானின் ஏவுகணைகள் திட்டம் குறித்து ஒரு செய்தியை வெளியிட்டிருந்தது பிபிசி. அதன்படி,

  • ராக்கெட்

  • க்ரூஸ் ஏவுகணைகள்

  • பாலிஸ்டிக் ஏவுகணைகள்

  • ஹைப்பர்சோனிக் ஏவுகணைகள்

இந்த நான்கு வகை ஏவுகணைகளே இரானால் உருவாக்கப்பட்டவை. இவற்றில் நிலத்தில் இருந்து நிலத்தில் மற்றும் நிலத்தில் இருந்து கடலில் உள்ள இலக்குகளை தாக்கி அழிக்கும் திறன் கொண்ட ஏவுகணைகளும் உள்ளன.

இதுமட்டுமின்றி இரானின் ஆயுதக்கிடங்கில், பாதுகாப்பு அமைப்பில் செயல்படுத்தப்படும் ஏவுகணைகளும் உள்ளன. சில ரஷ்யா மற்றும் சீனாவால் உருவாக்கப்பட்டவை. சில இரானின் பாதுகாப்புப் படையினரால் உருவாக்கப்பட்டவை. அது இங்கே பட்டியலிடப்படவில்லை.

ஏப்ரல் 2024 தாக்குதலின் போது 'இமாத் 3' பாலிஸ்டிக் ஏவுகணைகள், 'பாவேஹ்' க்ரூஸ் ஏவுகணைகள் மற்றும் 'ஷாஹித் 136' வகை டிரோன்களையும் இரான் பயன்படுத்தியது. ஆனால் 'கைபர் ஷிகான்' என்ற பாலிஸ்டிக் ஏவுகணைகளையும் இரான் பயன்படுத்தியதாக அரசு செய்தி முகமை தெரிவித்தது.

'இமாத்' பாலிஸ்டிக் ஏவுகணை ஒரு மிட்-ரேஞ்ச் (medium-range) ஆயுதமாகும். ஆனால் 1700 கி.மீ வரை பயணித்து இலக்குகளை அழிக்கும் என்று கூறப்படுகிறது.

இதன் நீளம் 15 மீட்டர்கள். அதன் வெடிபொருள் நிரப்பப்பட்டிருக்கும் பகுதியான வெடிப்பு முனையின் (warhead) எடையானது 750 கிலோ கிராம். இது 2015-ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. இமாத் ஏவுகணைகள், அல் கதார் (Al Qadr) பாலிஸ்டிக் ஏவுகணைகளின் மேம்படுத்தப்பட்ட வடிவமாகும்.

'பாவேஹ்' என்பது மீடியம்-ரேஞ்ச் க்ரூஸ் ஏவுகணைகள். இது 1650 கி.மீக்கு அப்பால் உள்ள இலக்குகளை தாக்கக் கூடிய செயல்திறன் கொண்டவை. இலக்கை அடைவதற்கு பல்வேறு பாதைகளை தேர்வு செய்யக் கூடிய ஏவுகணைகளின் முதல் தலைமுறை ஏவுகணைகள் என்று 'பாவேஹ்' அழைக்கப்பட்டது.

'பாவேஹ்' ரக ஏவுகணைகள் குழுவாக சென்று தாக்கக் கூடிய திறன் கொண்டவை. ஒன்றுக்கொன்று தொடர்பில் இருந்து இணைந்து செயல்படும் தன்மை கொண்டவை. இதனால் கூட இந்த ஏவுகணைகள் இஸ்ரேல் மீதான தாக்குதலுக்காக தேர்வு செய்யப்பட்டிருக்கலாம்.

'பாவேஹ்' 2023 பிப்ரவரியில் அறிமுகம் செய்யப்பட்டது. இது இஸ்ரேல் வரை சென்று தாக்குதலை நடத்தக் கூடும் என்று இரான் தெரிவித்தது. அது ஏப்ரல் 13 தாக்குதலின் போது நிரூபிக்கப்பட்டது.

இரானின் சமீபத்திய ஏவுகணைகள் அதிகபட்சமாக 2000 - 2500 கி.மீக்கு அப்பால் உள்ள இலக்குகளை தாக்கி அழிக்கும் திறனுடையவை. ஆனால் ஐரோப்பிய நாடுகளை தாக்கி அழிக்கும் அளவுக்கான திறன் கொண்ட ஏவுகணைகள் அதனிடம் இல்லை.

இரானின் அதி உயர் தலைவர் அலி காமனெயி, தற்போதைக்கு 2 ஆயிரம் கி.மீ வரை இலக்குகளை தாக்கி அழிக்கும் ஏவுகணைகளை மட்டும் உருவாக்கினால் போதும் என்ற கட்டளையைப் பிறப்பித்ததாக இரானின் ராணுவப்படையினர் தெரிவிக்கின்றனர்.

அதனால்தான் நீண்ட தூரத்தை இலக்காகக் கொண்டு தாக்குதலை நடத்தும் லாங்க்-ரேஞ்ச் ஏவுகணைகளை உருவாக்கும் பணிகள் கைவிடப்பட்டன.

காமனெயி, இந்த உத்தரவுக்குப் பின்னால் ஒரு காரணம் இருக்கிறது என்று கூறினார். ஆனால் அது என்ன காரணம் என்று தெரிவிக்கவில்லை.

இந்த ஏவுகணைகள் மட்டுமின்றி, 'ஜுல்ஃபிகர்' என்ற குறைந்த தூர இலக்கை தாக்கி அழிக்கும் ஷார்ட் - ரேஞ்ச் (700) பாலிஸ்டிக் ஏவுகணைகள் இரானிடம் உள்ளன. 2017 மற்றும் 2018 காலகட்டங்களில் ஐ.எஸ்.ஐ.எஸின் டாயிஷ் இலக்குகளை தாக்கி அழிக்க பயன்படுத்தப்பட்டன இவை.

இதன் மொத்த நீளம் 10 மீட்டர். 'மொபைல் லாஞ்ச்' தளம் உள்ளது. ரேடார் கண்காணிப்பில் இருந்து தப்பிச் செல்லும் செயல்திறன் கொண்டதாக கூறப்படுகிறது.

'ஃபடா 110' ஏவுகணைகளின் மேம்படுத்தப்பட்ட வடிவமே 'ஜுல்ஃபிகர்'. இதன் வெடிப்புமுனையின் எடை 450 கிலோ.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/c5yg3j596q4o

  • கருத்துக்கள உறவுகள்

508698830_1138024088362562_8413470455544

493520676_1138023451695959_7525567315061

508829056_1138067605024877_1575592055768

508630727_1137372535094384_1036275554997

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, விளங்க நினைப்பவன் said:

உண்மை நிலைமையை தெரிவித்துள்ளீர்கள்

ஆனால் தமிழ் யுரியுப்பர்கள் பெரும் தொகையானோரை கவருவதற்காக உங்கள் மீது இரக்கம் காட்ட இனி இடமில்லை சமரசத்துக்கு வாய்ப்பில்லை ராசா என்று கொமேனி இஸ்ரேல அமெரிக்காவிடம் உறுதியாக தெரிவித்துவிட்டார் இனி தான் ஈரானின் அதிர்ச்சியூட்டும் ரகசியங்கள் பொக்கிஷங்கள் வெளிவர போகின்றது என்று அடித்துவிட்டு கொண்டே இருப்பார்கள்

1954 மக்களால் தெரிவு செய்யப்பட்ட ஆட்சியினை கலைத்து சா மன்னராட்சியினை ஏற்படுத்திய அமெரிக்க மற்றும் பிரித்தானிய உளவுத்துறைகள் அதற்கான காரணமாக கூறப்பட்ட காரணம் எண்ணெய் வளத்தினை தேசியமயப்படுத்தல் என கூறப்படுகிறது, பின்னர் அந்த மன்னராட்சியினை கோமேனி கலைத்தார் அப்போது அந்த கோமேனிக்கு ஆதரவாக இருந்தவர் தற்போதுள்ள அலி கோமேனி, இவருடைய ஆட்சிக்கு இந்த ஆண்டு முடிவு வரலாம், அதனால் இதுவரை காலமும் அல்லலுறும் மக்களுக்கு ஒரு விடிவு ஏற்படலாம் (நடக்காமலும் போகலாம்), ஆனால் ஈராக் போல 1 மில்லியன் உயிரிழப்பு ஏற்படுமா எனத்தெரியவில்லை ஆனால் பல இலட்சம் அப்பாவி பொதுமக்கள் கொல்லப்படுவார்கள் என கருதுகிறேன்.

ஆனால்இதற்கு எண்ணெய் வளம் முக்கியமாக காரனமாக இருக்கலாம், 1975 இல் அமெரிக்க மற்றும் பிரித்தானிய உளவுத்துறைகளால் அவுஸ்ரேலிய பிரதமர் ஒருவரும் ஆட்சியில் இருந்து கவிழ்க்கப்பட்டார், அதற்கு வளங்களை தேசிய மயப்படுத்தல் மற்றும் அவுஸ்ரேலிய ஒரு குடியுரிமை கொண்ட சுதந்திர நாடாக அதன் விருப்பின் படி செயற்பட வேண்டும் என விரும்பியிருந்தார் என வேறு சில காரணங்கள் உள்ளடங்கலாக.

  • கருத்துக்கள உறவுகள்

வல்லரசையே கதிகலங்க வைக்கும் போர் யுக்தி! உலகின் முதலாவது நாடாக ஈரான் படைத்துள்ள சாதனை

மேற்கு ஈரானின் தப்ரிஸ் அருகே நான்காவது F-35 ஜெட் சுட்டு வீழ்த்தப்பட்டு, விமானி கைது செய்யப்பட்டதாகவும் ஐந்தாம் தலைமுறை போர் விமானத்தை சுட்டு வீழ்த்திய உலகின் முதலாவது நாடு ஈரான் என்றும் ஈரானின் அரசு செய்தி நிறுவனமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இஸ்ரேலிய பாதுகாப்புப் படைகள் இந்த கூற்றை மறுத்தாலும், வரலாற்றில் மிகவும் விலையுயர்ந்த ஆயுதத் திட்டமான F-35 இலிருந்து அமெரிக்கா பின்வாங்கும் முடிவை எடுத்துள்ளது.

சாதனை

இஸ்ரேலின் நான்காவது F-35 போர் விமானத்தை ஈரான் சுட்டு வீழ்த்தியதாக அறிவித்ததைத் தொடர்ந்து, அமெரிக்கா புதிய F-35 போர் விமானங்களுக்கான உத்தரவை பாதியாகக் குறைத்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

வல்லரசையே கதிகலங்க வைக்கும் போர் யுக்தி! உலகின் முதலாவது நாடாக ஈரான் படைத்துள்ள சாதனை | Iran Is Shoot Down 5Th Generation Fighter Jet F 35

போர் விமான உற்பத்தி நிறுவனமான லாக்ஹீட் மார்ட்டினுக்கு 48 ஜெட் விமானங்களுக்கான உத்தரவை 24 ஆகக் குறைத்து திருத்தப்பட்ட உத்தரவை பென்டகன் பிறப்பித்துள்ளது.

இதனை தொடர்ந்து, ஈரான்-இஸ்ரேல் போர், அமெரிக்க விமானப்படையின் ஐந்தாம் தலைமுறை போர் விமானமான F-35 இன் பலவீனங்களை வெளிப்படுத்தியதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.

விமர்சனம் 

இதன்படி, F-35 விமானத்தின் பயணத் திறன் 2025 ஆம் ஆண்டளவில் 51.5 சதவீதமாகக் குறைந்துள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

வல்லரசையே கதிகலங்க வைக்கும் போர் யுக்தி! உலகின் முதலாவது நாடாக ஈரான் படைத்துள்ள சாதனை | Iran Is Shoot Down 5Th Generation Fighter Jet F 35

பாகங்களைப் பெறுவதில் உள்ள சிரமம், சிக்கலான பராமரிப்பு மற்றும் அதிக விலை ஆகியவை இந்த விமானத்தின் முக்கிய குறைபாடுகளாக கூறப்படுகின்றன.

ட்ரோன் போர் அதிகரித்துள்ள காலகட்டத்தில் F-35 காலாவதியானது என்று எலான் மஸ்க் உட்பட பலர் விமர்சித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://tamilwin.com/article/iran-is-shoot-down-5th-generation-fighter-jet-f-35-1750213555

செய்தியின் உண்மைத்தன்மை பற்றி யான் அறிந்திலேன்.

  • கருத்துக்கள உறவுகள்

509419220_4042267062770451_7142535645688

இஸ்ரேலுக்கு ராணுவ உதவி வழங்க வேண்டாம்.

அமெரிக்காவுக்கு, ரஷ்யா எச்சரிக்கை.

AB Amam

  • கருத்துக்கள உறவுகள்

502474591_1166346335508223_8423050382003

509271771_1166346312174892_9098304432223

509102306_1166346512174872_3238690737219

509979007_1166346622174861_5575180730328

502376452_1166346542174869_4865572420935

509598435_1166346065508250_2009335575838

502572925_1166346682174855_6759217371279

இஸ்ரேலின் மிகப்பெரிய வைத்தியசாலையை குறிவைத்த ஈரானின் ஏவுகணைகள், இலங்கையரும் காயம்!

தெற்கு இஸ்ரேலில் உள்ள சொரோகா மருத்துவ மனையை இன்று வியாழக்கிழமை அதிகாலை ஈரானிய ஏவுகணை தாக்கியதில் சேதமடைந்துள்ளது.

இதில் இலங்கை தாதி ஒருவர் காயமடைந்துள்ளதாக கூறப்படுகிறது.

ஊழியர்கள் நோயாளர்கள் பலர் காயம் என சொரோகா மருத்துவ மையத்தின் இயக்குநர் ஜெனரல் பேராசிரியர் ஷ்லோமி கோடேஷ் தெரிவித்துள்ளார்.

இதேவேளை ‘குறித்த ஏவுகணை தாக்குதல் பொதுமக்கள் மீது இடம்பெற்றுள்ளது. இத்தாக்குதலுக்கு ஈரான் பெரும் விலையை செலுத்த வேண்டியிருக்கும், தெஹ்ரானில் உள்ளவர்களை நாங்கள் பெரும் விலையை செலுத்தச் செய்வோம்' என்று இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார் என தகவல்!

Vaanam.lk

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
2 hours ago, தமிழ் சிறி said:

இஸ்ரேலுக்கு ராணுவ உதவி வழங்க வேண்டாம்.

அமெரிக்காவுக்கு, ரஷ்யா எச்சரிக்கை.

இஸ்ரேலுக்கு யார் ஆயுதம் குடுத்தாலும் குடுக்காட்டிலும்...... ஈரானுக்கு சீனா இருக்க பயமேன்? 😂

219564750.webp

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

493482168_1136479575176143_6513552812301

காஸாவிலும் அயல்நாடுகளிலும் மருத்துவமனைகளை குறிவைத்து தாக்கும் போது எங்கு போனது தர்ம புத்தி?

  • கருத்துக்கள உறவுகள்
24 minutes ago, குமாரசாமி said:

இஸ்ரேலுக்கு யார் ஆயுதம் குடுத்தாலும் குடுக்காட்டிலும்...... ஈரானுக்கு சீனா இருக்க பயமேன்? 😂

219564750.webp

உலகப் பெரும் சண்டியர்கள் எல்லோரும், நேருக்கு நேர் மோதும் காலம் வெகு தொலைவில் இல்லைப் போல் உள்ளது. அப்படி ஒரு நிலை ஏற்பட்டு... பெரும் உலக யுத்தம் வெடித்தால், முழுக் காரணமும் அமெரிக்காவையும், இஸ்ரேலையுமே சாரும்.

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, vasee said:

இறப்பது பொதுமக்கள்தான்.

நிச்சயமாக 3 ஆம் உலக போர் நிகழாது என கருதுகிறேன், தோற்கும் அணியினை (ஈரானை) எவரும் ஆதரிக்கமாட்டார்கள் ஆனால் ஈரானில் ஏற்பட போகும் மனித பேரழிவினை உலகம் வாய் மூடி பார்த்துக்கொண்டிருக்கும், இந்த அழிவிற்கு ஈரானிற்கு அருகில் உள்ள மற்ற இஸ்லாமிய நாடுகளும் உடந்தையாக இருக்கும்.

இதுதான் நடக்கும் போல இருக்கு போகிற போக்கை பார்த்தால்

  • கருத்துக்கள உறவுகள்

கமேனி தொடர்ந்தும் உயிருடன் இருக்ககூடாது - இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சர்

19 JUN, 2025 | 04:00 PM

image

இஸ்ரேலின் ஆன்மீக தலைவர் ஆயத்தொல்ல கமேனி தொடர்ந்தும் உயிர்வாழ்வதற்கு அனுமதிக்க முடியாது என இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் கட்ஸ் தெரிவித்துள்ளார்.

ஈரானின் இன்றைய ஏவுகணைகளை தாக்குதலை தொடர்ந்தே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

ஈரான் போன்ற ஒரு நாட்டிற்கு தலைமை தாங்கி இஸ்ரேலை அழிப்பதை தனது பணியாகக் கொண்ட காமெனி போன்ற ஒரு சர்வாதிகாரி தொடர்ந்து இருக்க முடியாது. ”என அவர் தெரிவித்துள்ளார்

இஸ்ரேலிய இராணுவத்திற்கு "அறிவுறுத்தப்பட்டுள்ளது" என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார் மேலும் "அதன் அனைத்து இலக்குகளையும் அடைய இந்த மனிதன் தொடர்ந்து இருக்கக்கூடாது" என்பதை இராணுவம் .அறியும் என அவர் தெரிவித்துள்ளார்.

https://www.virakesari.lk/article/217924

  • கருத்துக்கள உறவுகள்

இத்தனை அழிவுகளை பார்க்கிறோம். ஆனால் 32 பேருக்கு காயம் மட்டுமே என்று????

Edited by விசுகு
எழுத்துப்பிழை

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, ஏராளன் said:

செய்தியின் உண்மைத்தன்மை பற்றி யான் அறிந்திலேன்.

இந்தியாவின் சில "கொப்பியடி" ஊடகங்கள் இருக்கின்றன. Economic Times, Hindustan Times அவற்றுள் இரண்டு. யூ ரியூப் வதந்திகளில் இருந்து கொப்பி செய்து, தங்கள் நிருபர் நேராகச் சென்று பார்த்த கணக்காக எழுதுவார்கள்😂.

தமிழ்வின் இந்த இரண்டு ஊடகங்களிலும் வரும் இது போன்ற செய்திகளை மீளக் கொப்பி செய்து தன் செய்தி போலப் போடுவதை முன்னரும் சுட்டிக் காட்டியிருக்கிறேன்.

ஆனால் உண்மைத் தன்மை என்ன?

F-35 இனை சுட்டு வீழ்த்துவது என்பது மிகப் பெரிய டீல். இந்தியா ரபேலை இழந்த போது உருவான பரபரப்பை நாம் பார்த்தோம். அதை விடப் பல மடங்கு பிரபலமாக F-35 வீழ்த்தப் படுவது செய்தியாகும்.

அடுத்த சந்தேகம்: தன் எல்லையினுள் வரும் எந்த விமானத்தையும் எதிர் கொள்ள இயலாமல் இஸ்ரேலினால் முடக்கப் பட்ட நிலையில் இருக்கும் ஈரானின் படையமைப்பு, F-35 இனை வீழ்த்துவது என்பது சாத்தியமில்லாத ஒன்று.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
3 hours ago, தமிழ் சிறி said:

உலகப் பெரும் சண்டியர்கள் எல்லோரும், நேருக்கு நேர் மோதும் காலம் வெகு தொலைவில் இல்லைப் போல் உள்ளது. அப்படி ஒரு நிலை ஏற்பட்டு... பெரும் உலக யுத்தம் வெடித்தால், முழுக் காரணமும் அமெரிக்காவையும், இஸ்ரேலையுமே சாரும்.

இஸ்ரேலுக்கு பேதி மருந்து ஈரானிட்ட தான் இருக்கு போல....

  • கருத்துக்கள உறவுகள்
23 minutes ago, குமாரசாமி said:

இஸ்ரேலுக்கு பேதி மருந்து ஈரானிட்ட தான் இருக்கு போல....

இஸ்ரேலின் உலகநாயகன் பிம்பத்தை ஈரான் உடைத்து காட்டியிருக்கிறது என்பது உண்மை தான். ஆனால் முக்கிய நகரங்கள் மற்றும் மக்கள் குடியிருப்புகள் தாக்கப்பட்ட போதும் வெறும் காயம் மட்டுமே என்பது உண்மையாக இருக்குமானால் இது திட்டமிட்டு ஈரானை அழிக்க அனுமதிக்கப்பட்ட தாக்குதலாகவே தெரிகிறது. அதிலும் வைத்தியசாலை அடிக்கடி காட்சிப் பொருளாக வெளிக்கொண்டு வரும் போதெல்லாம் நெஞ்சில் ஏதோ தைக்குமாப்போல் இருக்கிறது..

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Justin said:

இந்தியாவின் சில "கொப்பியடி" ஊடகங்கள் இருக்கின்றன. Economic Times, Hindustan Times அவற்றுள் இரண்டு. யூ ரியூப் வதந்திகளில் இருந்து கொப்பி செய்து, தங்கள் நிருபர் நேராகச் சென்று பார்த்த கணக்காக எழுதுவார்கள்😂.

தமிழ்வின் இந்த இரண்டு ஊடகங்களிலும் வரும் இது போன்ற செய்திகளை மீளக் கொப்பி செய்து தன் செய்தி போலப் போடுவதை முன்னரும் சுட்டிக் காட்டியிருக்கிறேன்.

ஆனால் உண்மைத் தன்மை என்ன?

F-35 இனை சுட்டு வீழ்த்துவது என்பது மிகப் பெரிய டீல். இந்தியா ரபேலை இழந்த போது உருவான பரபரப்பை நாம் பார்த்தோம். அதை விடப் பல மடங்கு பிரபலமாக F-35 வீழ்த்தப் படுவது செய்தியாகும்.

அடுத்த சந்தேகம்: தன் எல்லையினுள் வரும் எந்த விமானத்தையும் எதிர் கொள்ள இயலாமல் இஸ்ரேலினால் முடக்கப் பட்ட நிலையில் இருக்கும் ஈரானின் படையமைப்பு, F-35 இனை வீழ்த்துவது என்பது சாத்தியமில்லாத ஒன்று.

நான் நினைக்கின்றேன் ஸ்புட்னிக் செய்திகளின் அடிப்படையில் இவ்வாறான கருத்துக்கள் வைக்கப்படுகின்றன. ஸ்புட்னிக் செய்தி தளம் ஈரான் சார்பு நிலையை கடைப்பிடிக்கின்றது. எந்தவொரு விமானமும் விழுத்தப்பட முடியாத ஒன்று அல்ல. ஆனால், உண்மையில் விழுந்தால் அதை ஈரான் காட்சிப்படுத்தும். இதுவரை அப்படியொரு காணொளி வந்ததாக தெரியவில்லை. இஸ்ரேல் டிரோன் ஒன்றை வீழ்த்திய காணொளி ஒன்று நேற்று பார்த்தேன்.

நியூ யோர்க் டைம்ஸ் கட்டுரை ஒன்றின் பிரகாரம் பூமியை அதிக ஆழம் ஊடுருவி செல்லும் குண்டை போடக்கூடிய விமானம் சுட்டு வீழ்த்தப்படக்கூடிய சாத்தியம் அறவே இல்லாமல் இல்லை என கூறப்படுகின்றது.

அதிகார, ஆணவ, மற்றும் பழிவாங்கள் போட்டிகளின் மத்தியில் மக்கள் அவலங்கள் அனைத்து தரப்பிலும் தொடரப்போகின்றது.

  • கருத்துக்கள உறவுகள்
32 minutes ago, நியாயம் said:

நான் நினைக்கின்றேன் ஸ்புட்னிக் செய்திகளின் அடிப்படையில் இவ்வாறான கருத்துக்கள் வைக்கப்படுகின்றன. ஸ்புட்னிக் செய்தி தளம் ஈரான் சார்பு நிலையை கடைப்பிடிக்கின்றது. எந்தவொரு விமானமும் விழுத்தப்பட முடியாத ஒன்று அல்ல. ஆனால், உண்மையில் விழுந்தால் அதை ஈரான் காட்சிப்படுத்தும். இதுவரை அப்படியொரு காணொளி வந்ததாக தெரியவில்லை. இஸ்ரேல் டிரோன் ஒன்றை வீழ்த்திய காணொளி ஒன்று நேற்று பார்த்தேன்.

நியூ யோர்க் டைம்ஸ் கட்டுரை ஒன்றின் பிரகாரம் பூமியை அதிக ஆழம் ஊடுருவி செல்லும் குண்டை போடக்கூடிய விமானம் சுட்டு வீழ்த்தப்படக்கூடிய சாத்தியம் அறவே இல்லாமல் இல்லை என கூறப்படுகின்றது.

அதிகார, ஆணவ, மற்றும் பழிவாங்கள் போட்டிகளின் மத்தியில் மக்கள் அவலங்கள் அனைத்து தரப்பிலும் தொடரப்போகின்றது.

உண்மை, அறவே வீழ்த்தப் பட முடியாத விமானம் என்று ஒன்று இல்லை. ஆனால், வீழ்த்தப் படக்கூடிய நிகழ்தகவு மட்டும் தான் சில போர் விமானங்களுக்குக் குறைவு. உதாரணமாக, F-35 இன் வேகம் 1.6 Mach. இதனோடு ஏவுகணை எதிர்ப்பு தொழில் நுட்பத்தையும் சேர்த்து, அது சுடப் படக்கூடிய நிகழ்தகவை குறைக்க மட்டுமே முடியும். இந்தப் பாதுகாப்புக்களை மீறி அதை வீழ்த்தும் ஆயுதம் ஈரானிடம் இல்லையென நினைக்கிறேன். ஏனெனில், பழைய F-16, F-18 இனையே அவர்கள் வீழ்த்தியதாக செய்திகள் இல்லை.

B-2 Spirit Bomber ஒலியை விட குறைவான வேகம் (0.9 Mach) கொண்ட, ஆனால் நெடுந்தூரம்/நேரம் (long-range) பறக்கக் கூடிய விமானம் . எனவே இலகுவாக சுடப் படலாம். இதற்காகவே ரேடாரில் தெரியாத வகையில் வடிவமைத்து, 50,000 அடிகள் உயரத்தில் பறக்கக் கூடியதாகச் செய்திருக்கிறார்கள். இதன் ஒரே சிறப்பு, 300,000 இறாத்தல்கள் நிறையுடன் மேலெழக் கூடிய வேக விமானமாக இருப்பது தான். இரண்டு 30,000 lbs குண்டுகளை தாங்கிச் சென்று வீசக் கூடிய இயலுமை கொண்ட ஒரேயொரு அமெரிக்க விமானம்.

  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்காவை இழுத்து விடுவதில் நெத்தன்யாகு ரொம்பவும் முயற்சி செய்கிறார்.

அவரது வலைக்குள் ரம் விழுவார் போல தெரிகிறது.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ஈழப்பிரியன் said:

அமெரிக்காவை இழுத்து விடுவதில் நெத்தன்யாகு ரொம்பவும் முயற்சி செய்கிறார்.

அவரது வலைக்குள் ரம் விழுவார் போல தெரிகிறது.

அப்ப உங்களுக்கும் கண்டம் இருக்குபோல....கோச்சுக்காதீங்க...பவுடிக்குத்தான்

  • கருத்துக்கள உறவுகள்

நேற்று இரவு நியூஸ் 18 இல் ஈரானின் அணு ஆராய்ச்சி நிலையங்கள் இருக்கும் இடங்கள் பற்றிய ஒரு சிறிய செய்தி தொகுப்பொன்று போய்க் கொண்டிருந்தது. அதில் மலையைக் குடைந்து அமைக்கப்பட்டிருக்கும் Fordo Plant குறித்த தகவல்கள் பிழையானவை போன்று தெரிந்தது. இந்த ஆராய்ச்சி நிலையத்தில் தான் செறிவூட்டப்பட்ட யுரேனியம் 60 கிலோகிராம் வரையில் சேமிக்கப்பட்டிருக்கின்றது. ஆனால் இதன் மேற்கூரை மேற்பரப்பிலிருந்து 90 அடிகள் கீழே இருக்கின்றது என்று செய்தியில் சொன்னார்கள். இவை 90 அடிகள் அல்ல, 90 மீட்டர்கள் கீழே என்பதே சரியானது என்று வேறு தகவல்கள் சொல்லுகின்றன.

பி - 2 விமானத்தின், ஜிபியூ - 57 இராட்சதக் குண்டின் ஆழத்தாக்கு திறன் பற்றியும் அவர்களின் தகவல்கள் சரியானது அல்ல. இந்த ராட்சத குண்டுகள் 200 அடிகள் வரை உள்ளே போய், பின்னர் அங்கே வெடிக்கும் திறன் வாய்ந்தவை. 60 அடிகள் என்றே செய்தியில் சொன்னார்கள்.

இதை முடிப்பது தான் அமெரிக்காவினதும், இஸ்ரேலினதும் முடிவு என்றால், இரண்டு பாரிய தாக்கங்கள் நிகழக்கூடும். முதலாவது, அங்கிருக்கும் செறிவூட்டப்பட்ட யுரேனியம் தாக்கமுற்று அதனால் அந்தப் பிரதேசம் முழுவதும் ஏற்படப் போகும் கதிர்வீச்சு. அந்தப் பிரதேசமே 50 வருடங்களுக்கு மேலே மனிதர்கள் வசிக்க முடியாத வெறும் நிலம் ஆகிவிடும்.

இரண்டாவது, இந்தப் பிரதேசத்தில் அந்த மலையின் கீழே போய்க் கொண்டிருக்கும் fault lines. மிகவும் ஆழத்தில் ஒரு நெருக்கப்பட்ட இடத்தில் சில இராட்சத குண்டுகள் வெடிக்கும் போது, அவற்றின் வீரியம் இன்னும் அதிகமாக, கூர்மையாக இருக்கும். இந்த வீரியத்தால் fault lines அசையக்கூடும். அது பெரிய பூகம்பங்களை அந்தப் பகுதியிலும், சுற்றுப் பிரதேசங்களிலும் ஏற்படுத்தவும் கூடும்.

ஈரான் அணு ஆயுதங்களை உற்பத்தி செய்யாது என்று தான் உறுதிமொழி கொடுக்கின்றேன் என்று ரஷ்ய அதிபர் புடின் இன்று சொல்லியிருக்கின்றார். இங்கே சிரிப்பு வந்தால், சிரித்துக் கொள்ளலாம். இது நல்ல ஒரு நகைச்சுவையே.

தற்போதைக்கு ஈரானுக்கு உண்மையில் என்ன தெரிவுகள் இருக்கின்றன............ ஒரே ஒரு தெரிவாக அணு ஆயுத திட்டத்தை தற்காலிகமாகவேனும் நிற்பாட்டிக் கொள்வது தான் உள்ளது. ஒரே ஒரு அணு மின்நிலையமே நாட்டில் இருக்கும் போது, 2000 க்கும் மேற்பட்ட கருவிகளில் யுரேனியத்தை செறிவூட்டும் ஈரானின் நோக்கம் வெளிப்படையே.

  • கருத்துக்கள உறவுகள்
On 13/6/2025 at 07:51, கிருபன் said:

இஸ்ரேல் பெருமளவு அணுசக்தி அணுவாயுத இலக்குகளையும் இராணுவ இலக்குகளையும் தாக்குவதாக இஸ்ரேலிய அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.

ஈரானை அணுகுண்டுத் தயாரிப்புக்கு நெருங்கிவிட்டதாகக்கூறி இஸ்ரேல் தாக்குகிறது. ஆனால் இஸ்ரேல் அணுகுண்டை வைத்திருக்கிறது. இது என்ன நியாயம். ஏன் உலக வல்லாதிக்க சக்திகள் இஸ்ரேலைக் கேட்கவில்லை அல்லது தாக்கவில்லை.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.