Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Home > செய்திகள் > குருக்கள் மடத்தில் வெட்டியும், சுட்டும் கொல்லப்பட்ட முஸ்லிம்களின் புதைகுழி வழக்கில் நகர்த்தல் பத்திரம்

குருக்கள் மடத்தில் வெட்டியும், சுட்டும் கொல்லப்பட்ட முஸ்லிம்களின் புதைகுழி வழக்கில் நகர்த்தல் பத்திரம்

Friday, July 11, 2025 செய்திகள்

police-station.jpg


குருக்கள் மடத்தில் வெட்டியும், சுட்டும் படுகொலை செய்யப்பட்ட நூற்றுக்கும் மேற்பட்ட முஸ்லிம்களின் மனிதப் புதைகுழி தொடர்பான வழக்கு, இன்று (11) வெள்ளிக்கிழமை மீண்டும் களுவாஞ்சிக்குடி நீதிவான் நீதிமன்றில் நகர்த்தல் பத்திரம் மூலம் அழைக்கப்பட்டுள்ளது.


இதன்போது  சட்டமா அதிபருக்கும், காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகத்திற்கும், களுவாஞ்சிக்குடி பொலிசாருக்கும் அடுத்த தவணையில் மன்றில் முன்னிலையாகுமாறு அறிவித்தல் பிறப்பிக்கப்பட்டுள்ளது.


5 வருடங்களாக இந்த வழக்கு கிடப்பில் போடப்பட்டிருந்துள்ளது.


குரல்கள் இயக்க அமைப்பின் சட்டத்தரணிகள் நீதிமன்றில் இதன்போது சென்றிருந்தனர்.

ஆமா அனுர செம்மணிக்கு காசு கொடுக்கிறாரா...... அல்லது அமைச்சர் பதவிக்கு அச்சாரம் போடுகினமோ

  • கருத்துக்கள உறவுகள்

பரவாயில்லை, நாட்டிலுள்ள எல்லா புதைகுழிகளையும் தோண்டுங்கள், அதற்கான காரணத்தையும் கர்த்தாக்களையும் கண்டு பிடியுங்கள். எல்லா கொலைகளுக்கும் பின்னால் இருப்பது, சிங்கள இனவாதமே. விடுதலைபோரின் எதிராளிகள், இனவாதிகளும் அரசுமேயொழிய சாதாரண மக்களலல்ல. சாதாரண மக்களை தாக்கியது கொன்றது அரசும் அதன் கைக்கூலிகளுமே. அவர்களை இனங்கண்டு தண்டியுங்கள். ஆனால் அதை செய்ய மாட்டார்கள். தன்னை யாரும் தண்டிப்பதில்லை. அவர்களுக்கு பதவிகளும், பதவி உயர்வுகளும் கிடைக்கும். அதைத்தான் பார்த்துக்கொண்டிருக்கிறோமே!

  • நியானி changed the title to குருக்கள் மடத்தில் வெட்டியும், சுட்டும் கொல்லப்பட்ட முஸ்லிம்களின் புதைகுழி வழக்கில் நகர்த்தல் பத்திரம்
  • கருத்துக்கள உறவுகள்

குருக்கள்மடம் மனிதப் புதைகுழி வழக்கு : காணாமல்போனோர் தொடர்பான அலுவலகம்,  சட்டமா அதிபரை நீதிமன்றில் ஆஜராகுமாறு உத்தரவு     

12 JUL, 2025 | 10:09 AM

image

கடந்த 1990.07.12 ஆந் திகதி புனித ஹஜ் கடமையை நிறைவு செய்து வீடு திரும்பிய யாத்திரிகர்கள் மற்றும் வியாபாரிகள் கல்முனை - மட்டக்களப்பு வீதியில் குருக்கள்மடம் எனும் இடத்தில் கடத்திக் காணாமலாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டு புதைக்கப்படட்டமை தொடர்பில் பாதிக்கப்பட்ட அப்துல் மஜீத் அப்துல் ரவூப் என்பவரால் களுவாஞ்சிக்குடி பொலிஸாருக்கு முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டிருந்தது.

அதனடிப்படையில் கடந்த 2014 ஆம் ஆண்டு  களுவாஞ்சிக்குடி சுற்றுலா நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில்  நீதிவான்  குறித்த சந்தேகத்திற்கிடமான மனிதப்புதைகுழி அமைந்துள்ளதாக நியாயமாக சந்தேகிக்கப்படும் இடத்தைத் தோண்டுவதற்கான பூர்வாங்க நடவடிக்கைகளை மேற்கொண்டு நீதிமன்றுக்கு அறிக்கையிடுமாறு உரிய அரச திணைக்களங்கள் மற்றும் நிறுவனங்களுக்கு கட்டளையிட்டார். 

அதனடிப்படையில் நில அளவைத் திணைக்களம், புவிச்சரிதவியல் அளவை மற்றும் சுரங்கங்கள் பணியகம், தொல்லியல் திணைக்களம், காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகம், தடயவியல் மருத்துவம் மற்றும் நஞ்சியல் நிறுவகம் என்பன தமது ஆய்வுகளை மேற்கொண்டு குறித்த சந்தேகத்திற்கிடமான மனிதப் புதைகுழி அமைந்துள்ளதாக நியாயமாகச் சந்தேகிக்கப்படும் இடத்தைத் தோண்டுவதற்கான பூர்வாங்க நடவடிக்கைகளை முடிவுறுத்தி  மன்றுக்கு திட்ட வரைபையும் சமர்ப்பித்திருந்தனர்.

இந்நிலையில்,  மன்றுக்கு சமர்ப்பணங்களை மேற்கொண்டிருந்த களுவாஞ்சிக்குடி பொலிஸார் குறித்த விடயம் தொடர்பில்   சட்டமா அதிபரின் ஆலோசனையைப் பெற்று அதனை   நீதிமன்றுக்கு அறிவிப்பதற்குத் தவணையொன்றை வழங்குமாறு   மன்றுக்குத் தெரிவித்திருந்தனர். அதன் பிரகாரம், 04.10.2020 இல்   சட்டமா அதிபரினால் களுவாஞ்சிக்குடி பொலிஸாருக்கு வழங்கப்பட்ட ஆலோசனைக்கு அமைவாக குறித்த வழக்கானது கிடப்பிலிடப்பட்டிருந்தது.

இப்பின்னணியிலேயே இவ்வழக்கின் முறைப்பாட்டாளரின் அறிவுறுத்தலுக்கு அமைவாக 11.07.2025 ஆந் திகதியாகிய இன்று குரல்கள் இயக்கத்தின் சட்டத்தரணியால் களுவாஞ்சிக்குடி நீதிவான் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட நகர்த்தல் பத்திரம் மூலம் குறித்த வழக்கானது திறந்த மன்றில் அழைக்கப்பட்டது. 

இதன்போது முறைப்பாட்டாளர் சார்பில் மன்றில் முன்னிலையாகி இருந்த சட்டத்தரணிகளின் சமர்ப்பணம் மற்றும் வழக்கேட்டை மிக நுணுக்கமாக ஆராய்ந்த  நீதிமன்றமானது முறைப்பாட்டாளரின் முறைப்பாடானது நீதிமுறையாக அணுகப்படாமல் நிலுவையாக உள்ளமையானது நீதியின்பாற்பட்டதல்ல எனும் அடிப்படையில் குறித்த வழக்கை எதிர்வரும் 21.07.2025 க்கு தவணையிடுவதாகவும் குறித்த தினத்தில்  மன்றில் முன்னிலையாகுமாறு   சட்டமா அதிபருக்கும், காணாமல்போன ஆட்கள் பற்றிய அலுவலகத்துக்கும் களுவாஞ்சிக்குடி பொலிசாருக்கும் அறிவித்தல் அனுப்புமாறு கட்டளை ஆக்கியுள்ளார்.

குறித்த இவ்வழக்கில் முறைப்பாட்டாளர் சார்பில் குரல்கள் இயக்கத்தின் சட்டத்தரணிகளான முஹைமீன் காலித், முபாறக் முஅஸ்ஸம் ஆகியோர் மன்றில் பிரசன்னமாகியிருந்தனர். 

https://www.virakesari.lk/article/219782

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, satan said:

சாதாரண மக்களை தாக்கியது கொன்றது அரசும் அதன் கைக்கூலிகளுமே.

அப்படி எண்டால் இவர்களை கொண்டது யார்?

இலங்கை அரசா?

அல்லது ஜிகாத் குழுவா?

அல்லது ஈபிடிபி போன்ற ஒட்டு குழுவா?

கருணா, பிள்ளையான் குழுவாக இருக்க வாய்ப்பில்லை, இது நடந்த போது அவர்கள் புலிகளில் இருந்தார்கள்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, goshan_che said:

அப்படி எண்டால் இவர்களை கொண்டது யார்?

இலங்கை அரசா?

அல்லது ஜிகாத் குழுவா?

அல்லது ஈபிடிபி போன்ற ஒட்டு குழுவா?

கருணா, பிள்ளையான் குழுவாக இருக்க வாய்ப்பில்லை, இது நடந்த போது அவர்கள் புலிகளில் இருந்தார்கள்.

எந்தக்குழு செய்தாலும் அவைக்கு பிரச்சினை இல்லை ...இப்ப செம்மணி உண்மை வெளியில் வந்து ..தமிழருக்கு நீதி கிடைக்கக் கூடாது...இந்த நேரத்தில் அரசுக்கு உதவி செய்தால் ...அளப்பரிய வரப்பிரசாதம் கிடைக்கும்...

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, satan said:

சாதாரண மக்களை தாக்கியது கொன்றது அரசும் அதன் கைக்கூலிகளுமே.

அவர்கள் செம்மணி புதைகுழியின் குற்றவாளிகளை மறைக்க, காக்க இதை இப்போ கையிலெடுக்கிறார்கள். அவர்கள் யாரையோ குறிவைத்தே, இதை செய்து தடுக்கும் முயற்சியில் இறங்கியிருக்கிறார்கள். அவர்களுக்கு தெரியும் யார் இதன் சூத்திரதாரிகள் என்பது. எல்லா புதைகுழிகளின் பின்னாலும் ஒரே நிறுவனம்.

5 hours ago, goshan_che said:

அப்படி எண்டால் இவர்களை கொண்டது யார்?

நீங்களே தெரிவிப்பது இவர்களை கொன்றது யாரென்பதை. இலங்கை அரசும் அதனோடு ஒட்டியிருந்த பல உண்ணிகூட்டங்களில் ஒன்றும். எதற்கு அப்போது தமிழ் முஸ்லிம்களிடையே பிளவை ஏற்படுத்தி குளிர் காய வேண்டியிருந்ததோ அதுவே காரணம்.

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, alvayan said:

எந்தக்குழு செய்தாலும் அவைக்கு பிரச்சினை இல்லை ...இப்ப செம்மணி உண்மை வெளியில் வந்து ..தமிழருக்கு நீதி கிடைக்கக் கூடாது...இந்த நேரத்தில் அரசுக்கு உதவி செய்தால் ...அளப்பரிய வரப்பிரசாதம் கிடைக்கும்...

அப்போ இதை செய்தது புலிகள்.

இப்போ என் கேள்வியின் அர்த்தம் என்ன என்றால்.

நாம் செம்மணியை கையில் எடுப்பின் அவர்கள் இப்படி சிலதை எடுப்பார்கள்.

இதை செய்வார்கள் என நான் செம்மணி விவகாரம் சூடு பிடிக்கும் முன்பே ஊகித்தேன்.

கேள்வி - நாம் இதை எப்படி கையாளப்போகிறோம்?

6 hours ago, satan said:

நீங்களே தெரிவிப்பது இவர்களை கொன்றது யாரென்பதை. இலங்கை அரசும் அதனோடு ஒட்டியிருந்த பல உண்ணிகூட்டங்களில் ஒன்றும். எதற்கு அப்போது தமிழ் முஸ்லிம்களிடையே பிளவை ஏற்படுத்தி குளிர் காய வேண்டியிருந்ததோ அதுவே காரணம்.

இந்த முழுப் பூசணியை சோற்றில் மறைத்து விடலாம் என்றா நினைக்கிறீர்கள்?

  • கருத்துக்கள உறவுகள்

பாஸீர் கலீலுர் ரஹ்மான் இயக்கத்தில் உருவான குருக்கள் மடம் படுகொலைகள் (‘பயணிகளைக் கொல்லுதல்) என்ற ஆவணப்படம் வெளியாகிறது.

இது குருக்கள் மடம் படுகொலைகள் (‘பயணிகளைக் கொல்லுதல்’ என்ற ஆங்கிலத் தலைப்பில்) ஆவணப்படத்தின் முன்னோட்டக் காணொளி.

இலங்கையின் போரின் போது காத்தான்குடிக்கு செல்லும் பாதைகளில் பயணிகள் கடத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட நிகழ்வுகளை இது வெளிச்சத்திற்கு கொண்டுவருகிறது.

1990 ஜூலை 12 ஆம் தேதி குறுக்கள் மடம் பிரதேசத்தில் வலிந்து காணாமலாக்கப்பட்ட ஒருவரினதும் அதுபோன்ற ஒரு படுகொலை முயற்சியில் இருந்து உயிர் தப்பிய ஒருவரினதும் கதைகளை மையமாகக் கொண்டு இப்படம் தயாரிக்கப்பட்டிருக்கிறது.

அத்தினத்தில், ஹஜ் பயணத்திலிருந்து திரும்பியவர்கள் உட்பட 72 அப்பாவிப் பொதுமக்கள் ஆயுதக் குழுக்களால் கொல்லப்பட்டு புதைக்கப்பட்டனர்.

இந்த ஆவணப்படம் பாஸீர் கலீலுர் ரஹ்மான் அவர்களால் இயக்கப்பட்டு எமது அமைப்பினால் விரைவில் வெளியியடப்படவுள்ளது.

This is the trailer for the documentary Killing the Travellers | Kurukkalmadam Massacre, which exposes the abductions of travellers on roads to and from Kattankudy during the Sri Lankan civil war.

It highlights the massacre that took place in Kurukkalmadam on 12th July 1990, where 72 innocent people – including returning Hajj pilgrims – were killed and buried by armed groups.

The documentary is produced by Activists Without Borders and directed by Baazir Kaleelur Rahman.

https://madawalaenews.com/24518.html

  • கருத்துக்கள உறவுகள்
35 minutes ago, goshan_che said:

இந்த முழுப் பூசணியை சோற்றில் மறைத்து விடலாம் என்றா நினைக்கிறீர்கள்?

இல்லை. அருண் சித்த்தார்த், நேரத்து ஒரு பெயர் பட்டியலோடு அலைகிறார். தான் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிஞாயமும், சம்பந்தப்பட்டவர்களுக்கு தண்டனையும் வாங்கிக்கொடுக்கப்போகிறாராம், அதற்காக காத்திருக்கலாமென நினைக்கிறன்.

  • கருத்துக்கள உறவுகள்

இதில் குற்றம் சொன்ன ஒருவரை சாதி பெயர் ? சொல்லி முகநூலில் ஏசுகிறார்கள்.அந்த shot பார்த்தேன் மோசமான செயல்

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, satan said:

இல்லை. அருண் சித்த்தார்த், நேரத்து ஒரு பெயர் பட்டியலோடு அலைகிறார். தான் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிஞாயமும், சம்பந்தப்பட்டவர்களுக்கு தண்டனையும் வாங்கிக்கொடுக்கப்போகிறாராம், அதற்காக காத்திருக்கலாமென நினைக்கிறன்.

ம்ம்ம்…

கேள்விக்கு பதில் இல்லை …

அருண், வருண் என்ந் திசை திருப்ப மட்டுமே முடிகிறது.

கேள்வி மீண்டும் ஒரு தரம்

5 hours ago, goshan_che said:

நாம் செம்மணியை கையில் எடுப்பின் அவர்கள் இப்படி சிலதை எடுப்பார்கள்.

இதை செய்வார்கள் என நான் செம்மணி விவகாரம் சூடு பிடிக்கும் முன்பே ஊகித்தேன்.

கேள்வி - நாம் இதை எப்படி கையாளப்போகிறோம்?

  • கருத்துக்கள உறவுகள்

அவர்களும் கையில் எடுக்கட்டும். நமகென்ன பயம்? நாம் என்ன இல்லாததையா கிளறுகிறோம்? அன்று தொடங்கி இன்றுவரை இடையறாமல் இதற்காக குரல் கொடுத்தோம் போராடினோம். அவர்களும் தங்களால் இயன்றதை செய்யட்டும். அவர்கள்; மக்கள் புலிகள் இல்லையாம், தமிழ் மக்களின் சனத்தொகையில் இருபத்தைந்து வீதமே புலிகளாம், புலிகளுக்கு மக்கள் மத்தியில் செல்வாக்கு இல்லையாம். மக்கள் செல்வாக்கு இல்லாமலா முப்பது ஆண்டுகள் புலிகள் நிர்வாகம் நடத்தினர்? வெள்ளைவத்தை வரை முள்ளிவாய்க்கால் நினைவு கூருகிறார்கள்? மக்கள் புலிகள் இல்லை என்றால் இருபத்தைந்து சதவீத புலிகளையா சிங்களம் கொன்றது? அப்போ ஏன் தமிழ் மக்களை வயது வேறுபாடின்றி வகைதொகையின்றி கொன்றது? எதற்கு வெள்ளைவத்தையில் முள்ளிவாய்க்கால் நினைவு கூருகிறார்கள்? என கேள்வி எழுப்புது ஒன்று. நாங்கள் எங்கை வேண்டுமானாலும் செய்வோம் அதற்கு இவருக்கு ஏன் வயிறு எரியுது? இவ்வளவு நாளும் கிண்டாத செம்மணியை இப்போ ஏன் கிண்டவேண்டுமென்று வேறு கேள்வி? எப்போ வேண்டுமானாலும் கிளறலாம். அங்கே தமிழரின் உடல்கள் கொன்று புதைக்கப்படுள்ளது. மக்கள் வேறு புலிகள் வேறு என்பவர் பொதுமக்களின் உடலையே தாம் புதைத்ததாக அடையாளம் காட்டியுள்ளனர். இப்போ என்னவென்றால்; தென்பகுதியில் முள்ளிவாய்க்கால் நினைவு கூரல் இடம்பெற்றுள்ளது, சிங்கள சட்டத்தரணி இசைப்பிரியா, பாலச்சந்திரனுக்கு நீதி வேண்டி முறையிட்டிருக்கிறார், இப்படியே போனால் சிங்கள, தமிழ் மக்கள் ஒன்றிணைந்தால் தமக்கு அரசியல் செய்ய ஏதுமில்லை, அதோடு அடித்தே கொன்று போட்டாலும் போடுவார்கள் என்றொரு பகுதி பதைபதைக்குது, அவர்களுக்கு கால் கழுவி, ஏவல் வேலை செய்து பிழைக்கும் கூட்டம் பிழைப்பு போகுதே என கூக்குரலிடுகுது. அனுரா உண்மையில் சமாதானத்தை, நாட்டின் முன்னேற்றத்தை விரும்பினால் இதய சுத்தியோடு நீதி விசாரணை நடத்தி ராஜபக்ச குடும்பத்தை சர்வதேச நீதிமன்றத்தில் கையளிக்க வேண்டும். அப்போ இந்த ஏவல் கூட்டம் ஓடி ஒதுங்கும். அனுரா ஆட்சியேற்றவுடன் சவால் விட்டவர்கள் இப்போ, ஒருவர் ஒருவராக ஓடி மறைக்கின்றனர், நோயாளிகளாகின்றனர். அவ்வளவு சுமையை தாங்கி நாட்டை ஏமாற்றிக்கொண்டு வாழ்ந்திருக்கின்றனர். இது உங்களுக்கான பதிலல்ல, பலபேர் காண முடிவதால் எழுதுகிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்
On 13/7/2025 at 16:01, goshan_che said:

அப்போ இதை செய்தது புலிகள்.

இப்போ என் கேள்வியின் அர்த்தம் என்ன என்றால்.

நாம் செம்மணியை கையில் எடுப்பின் அவர்கள் இப்படி சிலதை எடுப்பார்கள்.

இதை செய்வார்கள் என நான் செம்மணி விவகாரம் சூடு பிடிக்கும் முன்பே ஊகித்தேன்.

கேள்வி - நாம் இதை எப்படி கையாளப்போகிறோம்?

முஸ்லீம்கள் மீதான தாக்குதல்கள் கிழக்கு மாகாணத்தில் நடந்தன என்பது உண்மைதானே. அவற்றினை அப்போது புலிகளின் கிழக்கு மாகாணத் தளபதியாக இருந்த கருணாவே செய்வித்திருந்தாலும், அவர் அப்போது புலிகளுடந்தான் இருந்தார். நிச்சயமாகத் தலைமைக்குத் தெரிந்தே இவை நடந்திருந்தன. ஒருமுறை என்றால் பரவாயில்லை, பலமுறை முஸ்லீம்கள் மீது தாக்குதல்கள் நடத்தப்பட்டனவே? ஆகவே அதனைச் செய்தது கிழக்கு மாகாணத்திலிருந்த புலிகள் என்றாலும், அதனைச் செய்தது புலிகள்தான்.

ஆகவே செம்மணியை நாம் விசாரிக்கக் கோரும்போது முஸ்லீம்கள் தாமாகவோ அல்லது சிங்கள அரசுகளால் ஊக்குவிக்கப்பட்டோ தமது கொலைகளுக்கான விசாரணைகளைக் கோருவது தவிர்க்க முடியாதது. இதனை எதிர்கொள்வதற்கு எமக்கிருக்கும் ஒரே வழி அவ்விசாரணைகளை நாமும் ஏற்றுக்கொள்வதுதான்.

செம்மணியையும் விசாரியுங்கள், குருக்கள் மடத்தையும் விசாரியுங்கள். சம்பந்தப்பட்ட அனைவருக்கும் நீதியின் தண்டனையினைப் பெற்றுக்கொடுங்கள் என்பதே நாம் முன்வைக்க வேண்டிய கோரிக்கை.

ஏனென்றால், முஸ்லீம்கள் குருக்கள்மடக் கொலைகளை விசாரிக்கக் கோருகிறார்கள் என்பதற்காக செம்மணிக்கான விசாரணைகளை நாம் கைவிடமுடியாது அல்லவா?

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, ரஞ்சித் said:

முஸ்லீம்கள் மீதான தாக்குதல்கள் கிழக்கு மாகாணத்தில் நடந்தன என்பது உண்மைதானே. அவற்றினை அப்போது புலிகளின் கிழக்கு மாகாணத் தளபதியாக இருந்த கருணாவே செய்வித்திருந்தாலும், அவர் அப்போது புலிகளுடந்தான் இருந்தார். நிச்சயமாகத் தலைமைக்குத் தெரிந்தே இவை நடந்திருந்தன. ஒருமுறை என்றால் பரவாயில்லை, பலமுறை முஸ்லீம்கள் மீது தாக்குதல்கள் நடத்தப்பட்டனவே? ஆகவே அதனைச் செய்தது கிழக்கு மாகாணத்திலிருந்த புலிகள் என்றாலும், அதனைச் செய்தது புலிகள்தான்.

ஆகவே செம்மணியை நாம் விசாரிக்கக் கோரும்போது முஸ்லீம்கள் தாமாகவோ அல்லது சிங்கள அரசுகளால் ஊக்குவிக்கப்பட்டோ தமது கொலைகளுக்கான விசாரணைகளைக் கோருவது தவிர்க்க முடியாதது. இதனை எதிர்கொள்வதற்கு எமக்கிருக்கும் ஒரே வழி அவ்விசாரணைகளை நாமும் ஏற்றுக்கொள்வதுதான்.

செம்மணியையும் விசாரியுங்கள், குருக்கள் மடத்தையும் விசாரியுங்கள். சம்பந்தப்பட்ட அனைவருக்கும் நீதியின் தண்டனையினைப் பெற்றுக்கொடுங்கள் என்பதே நாம் முன்வைக்க வேண்டிய கோரிக்கை.

ஏனென்றால், முஸ்லீம்கள் குருக்கள்மடக் கொலைகளை விசாரிக்கக் கோருகிறார்கள் என்பதற்காக செம்மணிக்கான விசாரணைகளை நாம் கைவிடமுடியாது அல்லவா?

மிக சரியான பதில்.

இப்போ….

இப்படி ஒரு பதிலை சுமந்திரன் அல்லது சாணக்கியன் சொல்லி இருப்பின் எதிர்வினை எப்படி இருக்கும் என கொஞ்சம் நினைத்துப்பாருங்கள்.

கஜனோ, விக்கியோ, லுச்சா டொக்டரோ, மாம்பழமோ இப்படி சொல்லமாட்டார்கள். சொன்னால் என்ன நடக்கும் என அவர்களுக்கு தெரியும்.

16 வருடமாக ஏன் ஒரே இடத்தில் நின்று சுத்துகிறோம் என்பதற்கான விடை இதுவே.

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, goshan_che said:

இப்படி ஒரு பதிலை சுமந்திரன் அல்லது சாணக்கியன் சொல்லி இருப்பின் எதிர்வினை எப்படி இருக்கும் என கொஞ்சம் நினைத்துப்பாருங்கள்.

ஏன் சுமந்திரன், சாணக்கியனுக்குப் போவான்? இதை ஜஸ்ரினோ, ஐலண்டோ, கோசானோ சொல்லி விட்டு திட்டு வாங்காமல் போய் விட முடியுமா😂? அது தான் நிலைமை! இத்தனைக்கும் திட்டுவோர் பெரும்பான்மை கூடக் கிடையாது! A disproportionately loud minority!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
On 13/7/2025 at 02:14, colomban said:

பாஸீர் கலீலுர் ரஹ்மான் இயக்கத்தில் உருவான குருக்கள் மடம் படுகொலைகள் (‘பயணிகளைக் கொல்லுதல்) என்ற ஆவணப்படம் வெளியாகிறது.

இது குருக்கள் மடம் படுகொலைகள் (‘பயணிகளைக் கொல்லுதல்’ என்ற ஆங்கிலத் தலைப்பில்) ஆவணப்படத்தின் முன்னோட்டக் காணொளி.

இலங்கையின் போரின் போது காத்தான்குடிக்கு செல்லும் பாதைகளில் பயணிகள் கடத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட நிகழ்வுகளை இது வெளிச்சத்திற்கு கொண்டுவருகிறது.

1990 ஜூலை 12 ஆம் தேதி குறுக்கள் மடம் பிரதேசத்தில் வலிந்து காணாமலாக்கப்பட்ட ஒருவரினதும் அதுபோன்ற ஒரு படுகொலை முயற்சியில் இருந்து உயிர் தப்பிய ஒருவரினதும் கதைகளை மையமாகக் கொண்டு இப்படம் தயாரிக்கப்பட்டிருக்கிறது.

அத்தினத்தில், ஹஜ் பயணத்திலிருந்து திரும்பியவர்கள் உட்பட 72 அப்பாவிப் பொதுமக்கள் ஆயுதக் குழுக்களால் கொல்லப்பட்டு புதைக்கப்பட்டனர்.

இந்த ஆவணப்படம் பாஸீர் கலீலுர் ரஹ்மான் அவர்களால் இயக்கப்பட்டு எமது அமைப்பினால் விரைவில் வெளியியடப்படவுள்ளது.

This is the trailer for the documentary Killing the Travellers | Kurukkalmadam Massacre, which exposes the abductions of travellers on roads to and from Kattankudy during the Sri Lankan civil war.

It highlights the massacre that took place in Kurukkalmadam on 12th July 1990, where 72 innocent people – including returning Hajj pilgrims – were killed and buried by armed groups.

The documentary is produced by Activists Without Borders and directed by Baazir Kaleelur Rahman.

https://madawalaenews.com/24518.html

இப்படிப் படமெடுத்த மிரட்டலை சிங்கள ..முசுலிமிடம் எப்பவோ பார்த்துவிட்டோம்...இது என்ன நமக்குப் புதிசா

  • கருத்துக்கள உறவுகள்

அதே போல கிழக்கு மாகாணத்தில் முஸ்லீம் ஜிகாத் குழு , ஊர்காவல் படையால் கொல்லப்பட்டு புதைக்கப்பட்ட தமிழ‌ர்களுக்கு பாராளுமன்றத்தில் எந்த தமிழ் அரசியல் வாதிகளும் வாய் திறப்பதில்லை. வீரமுனை, திராய்க்கேணி ,கொக்கட்டிச்சோலை ,சம்மாந்துறை, போன்ற பகுதிகளில் நடந்த மனித உரிமை மீறல்கள் டயர் எரிப்பு மற்றும் வெட்டப்பட்ட தமிழ்ர்கள்

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தனிக்காட்டு ராஜா said:

அதே போல கிழக்கு மாகாணத்தில் முஸ்லீம் ஜிகாத் குழு , ஊர்காவல் படையால் கொல்லப்பட்டு புதைக்கப்பட்ட தமிழ‌ர்களுக்கு பாராளுமன்றத்தில் எந்த தமிழ் அரசியல் வாதிகளும் வாய் திறப்பதில்லை.

அது தான் மத நல்லிணக்க தமிழ் அரசியல். இனி போகின்ற போக்கில் மார்க்கத்தின் அடிப்படையில் அவர்களை திருப்திபடுத்த யூதர்களையும் தாக்கி பேசுவார்கள்

Edited by விளங்க நினைப்பவன்

  • கருத்துக்கள உறவுகள்

குருக்கள்மடம் படுகொலை புதைகுழியை தோண்டவும்


photo-22-750x430.jpg

எம்.எஸ்.எம்.நூர்தீன்)
மட்­டக்­க­ளப்பு மாவட்­டத்தின் குருக்கள் மடம் பகு­தியில் தமி­ழீழ விடு­தலைப் புலி­க­ளினால் கடத்­தப்­பட்டு படுகொலை செய்­யப்­பட்டு புதைக்­கப்­பட்­டுள்ள நூற்­றுக்கும் மேற்­பட்ட முஸ்­லிம்­களின் ஜனா­ஸாக்­களை தோண்டி எடுத்து இஸ்­லா­மிய முறைப்­படி அடக்கம் செய்ய தற்­போ­தைய தேசிய மக்கள் சக்தி அர­சாங்கம் முன் வர­வேண்டும் என கிழக்கு மாகாண சபை முன்னாள் உறுப்­பினர் பொறி­யி­ய­லாளர் சிப்லி பாறூக் வேண்­டுகோள் விடுத்­துள்ளார்.

இது தொடர்­பாக அவர் விடுத்­துள்ள அறிக்­கையில் 12.07.1990 ம் ஆண்டு ஹஜ் கட­மையை முடித்துக் கொண்டு வந்த முஸ்லிம் சகோ­த­ரர்கள் மற்றும் இன்னும் சில முஸ்லிம் சகோ­த­ரர்கள் குருக்கள் மடம் பகு­தியில் வைத்து தமி­ழீழ விடு­தலைப் புலி பயங்­க­ர­வா­தி­களால் கடத்தப்பட்டு படு கொலை செய்­யப்­பட்டு புதைக்­கப்­பட்­டார்கள்.

இதில் அதி­க­மான முஸ்­லிம்கள் காத்­தான்­கு­டியைச் சேர்ந்­த­வர்­க­ள். இதில் 167 பேர் கொல்­லப்­பட்­டனர். ஆனால் இன்னும் அவர்­களின் ஜனா­ஸாக்கள் தோண்­டப்­பட வில்லை.
தற்­போது செம்­மணி புதை­குழி தோண்­டப்­ப­டு­கி­றது. இதே போன்று குருக்கள் மடத்தில் புதைக்­கப்­பட்­டுள்ள முஸ்­லிம்­களின் சட­லங்­களும் ஜனா­ஸாக்­களும் தோண்டி எடுக்­கப்­பட்டு இஸ்­லா­மிய முறைப்­படி அடக்கம் செய்­யப்­படல் வேண்டும்.

இது தொடர்­பாக நீதி­மன்றம் சென்று தோண்டி எடுப்­ப­தற்­கான நட­வ­டிக்கை எடுக்­கப்­பட்டு நீதி­மன்ற உத்­த­ரவை 2014 ஒக்­டோபரில் பெற்ற போதிலும் இது வரை தோண்­டப்­பட வில்லை.

இலங்­கையில் இடம்­பெற்ற யுத்­தத்­தினால் முஸ்லிம் மக்­களும் பாதிக்­கப்­பட்­டார்கள் என்­பது வர­லாற்று உண்­மை­யாகும்.

எனவே குருக்கள் மடத்தில் கடத்­தப்­பட்டு புதைக்­கப்­பட்­டுள்ள முஸ்­லிம்­களின் ஜனா­ஸாக்­க­ளையும் தோண்டி எடுத்து இஸ்­லா­மிய முறைப்­படி அடக்கம் செய்ய நட­வ­டிக்கை எடுக்குமாறு வேண்டு கோள் விடுகிறேன் என கிழக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் பொறியியலாளர் சிப்லி பாறூக் மேலும் தெரிவித்துள்ளார்.- Vidivelli

https://www.vidivelli.lk/article/19594

  • கருத்துக்கள உறவுகள்
On 15/7/2025 at 13:43, விளங்க நினைப்பவன் said:

அது தான் மத நல்லிணக்க தமிழ் அரசியல். இனி போகின்ற போக்கில் மார்க்கத்தின் அடிப்படையில் அவர்களை திருப்திபடுத்த யூதர்களையும் தாக்கி பேசுவார்கள்

அவரிகளுடன் சேர்ந்து ஆட்சியும் அமைப்பார்கள் அவர்கள் இனம் சார்ந்து பேசுவார்கள் நடப்பார்கள் நம்மவர்கள் அரசியல் கதிரைக்காக பேசுவார்கள்

  • கருத்துக்கள உறவுகள்+

ஈழத் தமிழர்கள் மீதான இலங்கை முஸ்லிம்களின் அட்டூழியங்கள் | ஆவணக்கட்டு

முஸ்லிம்களால் செய்யப்பட்ட படுகொலைகள் தொடர்பில் என்னுடைய பாரிய ஆவணக்கட்டை நீங்கள் மேலே வாசிக்கலாம்

கீழே முஸ்லிம்களால் செய்யப்பட்ட வீரமுனை படுகொலை தொடர்பில் மக்களின் வாக்குமூலங்கள்:

அம்பாறை மாவட்டம் வீரமுனை கிராமத்தில் தமிழ் மக்கள் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்த பாதிக்கப்பட்டவர்களின் சாட்சியம். தமிழர் தகவல் நடுவத்தின்

  • கருத்துக்கள உறவுகள்

செம்மணி போன்று கிழக்கிலும் ஜிகாத் அமைப்பினரால் மேற்கொள்ளப்பட்ட படுகொலைகளும் தோண்டப்படல் வேண்டும் - நாம் தமிழர் சமூகசேவை ஒன்றியம்.

  • கருத்துக்கள உறவுகள்

thumb_large_naam.png

செம்மணி போன்று கிழக்கிலும் ஜிகாத் அமைப்பினரால் மேற்கொள்ளப்பட்ட படுகொலைகளும் தோண்டப்படல் வேண்டும் - நாம் தமிழர் சமூகசேவை ஒன்றியம்.

யாழ்ப்பாணம் செம்மணி படுகொலை தொடர்பில் அரசின் கவனம் திரும்பியிருக்கின்றது. தோண்ட தோண்ட வெளிவரும் பச்சிளம் பாலகர்களின் மண்டை ஓடுகள், எலும்புக்கூடுகளும், அதிகமான உடல்கள் இருப்பதாகவும், புதைக்கப்பட்டிருப்பதாகவும், தோண்டப்பட்டுக் கொண்டிருக்கின்றன. வடமாகணத்திலே தமிழர்களின் ஆதரவைப் பெற்ற தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் குறிப்பாக மூன்று பாராளுமன்ற உறுப்பினர்களைக் கொண்டுள்ள இந்த அரசாங்கம் இருக்கின்றது. இந்த நிலையில் செம்மணி புதைகுழி விடயம் கவனம் செலுத்தப்பட்டு கொண்டிருக்கிறது இது வரவேற்கத்தக்கது இதற்கு நிச்சயமாக நீதி நிலைநாட்டப்பட வேண்டும்.

இவற்றைப்போல் கிழக்கிலும் இன்றும் கண்டுகொள்ளப்படாத படுகொலைகள், தோண்டப்பட வேண்டிய பல புதைகுழிகள் உள்ளன. அவற்றுக்கு நீதியை வேண்டித்தான் எமது நாம் தமிழர் சமூக சேவை ஒன்றியம் இன்று இந்த பத்திரிகையாளர் சந்திப்பினை நடத்துகின்றோம்.

என நாம் தமிழர சமூக சேவை ஒன்றியத்தின் பொதுச் செயலாளர் கோபாலன் பிரசாத் தெரிவித்துள்ளார். புதன்கிழமை (16.07.2025) மாலை களுவாஞ்சிகுடியில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்….

குறிப்பாக 1990, 1991 ஆம் ஆண்டு காலப்பகுதியில் முஸ்லிம் ஜிகாத் எனும் அமைப்பினால் பல படுகொலைகள் திட்டமிட்டு செய்யப்பட்டிருக்கின்றன. குறிப்பாக இந்த செய்தியை சர்வதேசத்திற்கும் தேசிய அரசாங்கத்திற்கும் சர்வதேச அரங்கிக்கிற்கும், கொண்டு வருவதற்காகவே நாம் இந்த ஊடக சந்திப்பை செய்கின்றோம்.

குறிப்பாக 20.06.1990 ஆம் ஆண்டு வீரமுனை பிள்ளையார் கோயில் படுகொலை இதன் போது 60 தமிழர்கள் கொலை செய்யப்பட்டார்கள்

அதேபோன்று 05.07.1990 ஆம் ஆண்டு வீரமுனையில் 13 தமிழர்கள் கொலை செய்யப்பட்டிருக்கின்றார்கள் 10.07.1990 ஆம் ஆண்டு வீரமுணையில் 15 தமிழர்கள் கொலை செய்யப்பட்டிருக்கின்றார்கள்.

16.07.1990 ஆம் ஆண்டு மல்வத்தை இராணுவத்தினரும் முஸ்லிம் ஊர்காவல் படையினருமாக 30 பேர் 8 பெண்களை பாலியல் பலாத்காரம் செய்து படுகொலை செய்தனர்.

அதேபோன்று 26.07.1990ஆம் ஆண்டு வீரமுனையில் 23 சிறுவர்கள் உட்பட 32 இளைஞர்கள் முஸ்லிம் ஊர்கால் படையினரால் மிகவும் கொடூரமான முறையில் கைது செய்யப்பட்டு காணாமல் செய்து படுகொலை செய்து இருக்கின்றார்கள்.

29.07.1990 ஆம் ஆண்டு ஆசிரியர் ஒருவர் குடும்பத்தினருடன் வெளியேறிக் கொண்டிருந்தபொழுது கடத்திச் செல்லப்பட்டு காணாமல் செய்யப்பட்டிருக்கின்றார்.

01.08.1990 ஆம் ஆண்டு சவளக்கடையில் 18 பேர் கைது செய்யப்பட்டு காணாமல் செய்யப்பட்டிருக்கின்றார்கள்.

அதேபோன்று 12.08.1990 ஆம் ஆண்டு வீரமுரையில் அகதி முகாமில் புகுந்து முஸ்லிம் ஊர்காவல் படையினர் வாளால் வெட்டி தாக்குதல் நடத்தியதோடு, அதில் ஆலய தர்மாகத்தா உட்பட குறிப்பாக தம்பி முத்து சின்னத்துரை உட்பட 14 பேர் கொல்லப்பட்டிருக்கின்றார்கள். அதில் பலர் காயமடைந்து இருக்கிறார்கள். வீரமுனையிலே 600; வீடுகளும், சம்மாந்துறை, மல்லிகைதீவு, வளத்தாப்பிட்டி, கணபதிபுரம், மல்வத்தை, ஆகிய கிராமங்களில் இருந்து 1352 தமிழர்களின் வீடுகள் முஸ்லிம்களால் முற்றாக தீக்கிரியாக்கப்பட்டிருக்கின்றன.

20.06.1990 ஆம் ஆண்டிற்கும் 15.08.1990 ஆண்டுக்கும் இடைப்பட்ட காலப்பகுதியில் வீரமுனையில் மாத்திரம் 232 தமிழர்கள் கொல்லப்பட்டிருக்கின்றார்கள். 1600 க்கும் அதிகமான வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டிருக்கின்றன.

அயல் கிராமங்களான சம்மாந்துறை முஸ்லிம்கள் சிங்கள இராணுவத்தினரின் உதவியுடன் தமிழர்களை படுகொலை செய்திருக்கின்றார்கள்.

கிழக்கு மாகாணத்தில் மிகவும் மோசமான தாக்குதலுக்கு உள்ளான கிராமங்களான வாழைச்சேனை, செங்கலடி, ஆரையம்பதி நீலாவணை பாண்டிருப்பு போன்ற பல கிராமங்கள் காணப்படுகின்றன.

அம்பாறை மாவட்டத்தில் நிகழ்த்தப்பட்ட இந்த முஸ்லிம் ஜிகாத் அமைப்பினரின் தாக்குதல்களால் பல தமிழர்கள் கொல்லப்பட்டிருக்கின்றார்கள் இதற்கு நிச்சயமாக இந்த அரசாங்கத்தில் நீதி நிலைநாட்டப்பட வேண்டும். கொலை செய்யப்பட்ட மக்களுக்கு நீதி பெற்றுக் கொடுக்க வேண்டும். கொலையாளிகள் தண்டிக்கப்பட வேண்டும். என்பதுதான் எமது கோரிக்கையாகும்.

பரம்பரை பரம்பரையாக தமிழர்கள் வாழ்ந்து வந்த கிராமங்கள் முஸ்லிம்களால் சூறையாடப்பட்டுக் கொண்டிருக்கின்றன. அவ்வாறு தற்போதுவரையில் சிதைவிக்குள்ளான கிராமங்களாக பாலமுனை, பாணமை, மீனோடக்கட்டு, ஒலுவில் நிந்தவூர், சம்மாந்துறை, கரவாகு, தீகபாவி, மாந்தோட்டம், கொண்டவட்டுவான், ஊரணி, செம்மணிக்குளம், தங்கவேலாயுதபுரம், உடும்பன்குளம், போன்ற பவகிராமங்கள் இருக்கின்றன.

குறிப்பாக தமிழர்கள் பூர்விகமாகக் கொண்ட கிராமங்கள் இன்று முஸ்லிம் காடையர்களால் துடைத்தழிக்கப்பட்டு அந்த தமிழ் கிராமங்கள் முஸ்லிம் கிராமங்களாக மாறி இருக்கின்றன. இந்த சூழலில்தான் அம்பாறை மாவட்டத்தில் படிப்படியாக முஸ்லிம் ஆக்கிரமிப்புக்கு உள்ளான தமிழ் கிராமங்களாக அட்டைப்பள்ளம், சவளைக்கடை, வீரச்சோலை, போன்ற கிராமங்கள் உள்ளன. கூறலாம்.

இவை அனைத்து படுகொலைகளையும் ஊர்காவல்படை என்ற பெயரில் இராணுவத்துடன் சேர்ந்து இயங்கிய ஜிகாத் முஸ்லிம் ஆயுத குழுக்களே இந்த படுகொலைகளை நடத்தி இருந்தார்கள். அவர்களுக்கான தண்டனைகள் வழங்கப்பட வேண்டும். புதைகுழிகள் தோண்டப்பட வேண்டும். முஸ்லிம் புதை புலிகள் தோண்டப்படுவதற்கும் மக்களின் வாக்குமூலங்களை செய்கின்ற அதே வேளை முஸ்லிம் ஜிகாத் குழு என்று சொல்லப்படுகின்ற இந்த அமைப்பினர் அந்த அமைப்பின் பெயரில் இயங்கிய முஸ்லிம் காடையர்களையும் தேடி கண்டுபிடித்து இந்த அரசாங்கம் அவர்களை விசாரணை செய்வதோடு, அவர்களை தண்டிப்பதற்கும் குற்றவாளிகளை தண்டிப்பதற்கும் ஊர்காவல்படை என்ற பெயரில் அரசாங்கத்தில் சம்பள பட்டியலில் இருந்தவர்கள் இன்றும் அந்தந்த கிராமங்களில் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள் அவர்கள் கைது செய்யப்பட வேண்டும்.

அவர்கள் எங்கும் தப்பியோட முடியாது அவர்கள் விசாரித்து பொறுப்பானவர்களும் குற்றவாளிகளும் தண்டிக்கப்பட வேண்டும். என்பதுதான் எமது கோரிக்கையாகும். இந்த கோரிக்கையை கிழக்கு மாகாணத்தில் இருக்கின்ற குறிப்பாக பாராளுமன்ற உறுப்பினர்கள் சாணக்கியன், கோடீஸ்வரன், சிறிநேசன் சிறிநாத், போன்றவர்கள் பாராளுமன்றத்தில் நிச்சயமாக பேசவேண்டும். இதற்கு மட்டக்களப்பு மாவட்டத்தில் இருக்கின்ற சட்டத்தரணிகள் சங்கமும் பொது அமைப்புகளும் இதற்கு ஒரு பொதுநல வழக்கை தாக்கல் செய்ய வேண்டும். அதற்கு நீதியை நிலை நாட்டுவதற்கு அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

அது மாத்திரமன்றி ஜிகாத் அமைப்பினரின் பின்னணியில் உடைக்கப்பட்ட ஓட்டமாவடி காளி கோயிலுக்கு நீதி நிச்சயமாக வழங்கப்பட வேண்டும்.

நானே அந்தக் காளி கோயிலை உடைத்தேன் அதற்கு எதிராக இருந்த நீதிபதியை மாற்றினேன் அது மாத்திரமன்றி காளி கோயிலை உடைத்து மீன் சந்தையை கட்டி அதுவும் காளி கோயில் அமைந்திருந்த கருவறையில் மூலஸ்தானத்தில் மாட்டு இறைச்சிக் கடையை போட்டு இருக்கின்றேன், என முன்னாள் அமைச்சர், முன்னாள் ஆளுநர், தற்போதைய பாராளுமன்ற உறுப்பினர், எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா அவர்கள் ஒப்புதல் வாக்குமூலம் வழங்கி இருக்கின்றார்.

எனவே இதனை இந்த அரசாங்கமும் பாராளுமன்ற சபாநாயகர் அவர்களும் விசாரணை செய்ய வேண்டும்.

எனவே தற்போதைய பாராளுமன்ற உறுப்பினராக இருக்கின்ற எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா அவர்கள் பின்னணியில் உடைக்கப்பட்ட  எங்களுடைய காளி கோயிலை மீண்டும் அதே இடத்தில் நிறுவப்பட வேண்டும். அவர் தற்போது பாராளுமன்ற உறுப்பினராக இருக்கின்றார் அவர் நீதித்துறை இவ்வாறு பயன்படுத்தி இருக்கின்றார், அவர் மாவட்ட அபிவித்துக் குழு தலைவர் என்ற பதவியை பயன்படுத்தி செய்திருக்கின்றார், இதற்கு நிச்சயமாக நீதி வழங்கப்பட வேண்டும். நிச்சயமாக இந்த அரசாங்க நீதி வழங்கும் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கின்றது.

எனினும் செம்மொழி புதைகுழி தோண்டப்படுகின்றது ஆங்காங்கே தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு விசாரணைகள் நடைபெறுகின்ற இந்த நேரத்தில் இந்த ஜிகாத் அமைப்பின் பேரில் தமிழ் மக்களை கொன்றளித்த இந்த முஸ்லிம் காடையர்களை நிச்சயம் விசாரிக்கப்பட்டு அவர்கள் இன்றும் கிராமங்களில் வாழ்கின்றார்கள். அவர்களுக்குரிய தண்டனை வழங்கப்பட வேண்டும். என்பதே எமது கோரிக்கை இந்த காளி கோயில் விடயத்திலும் எமது மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் சாணக்கியன், சிறிநேசன், சிறிநாத், போன்றவர்கள் பாராளுமன்றத்திலே பேச வேண்டும். அந்த காளி கோயிலை உரிய இடத்தில் அமைப்பதற்கு நிச்சயமாக பாராளுமன்றத்தில் பேச வேண்டும் என்பது எனது கோரிக்கை.

அது மாத்திரமன்றி இது தொடர்பில் ஒரு பொது நல வழக்கு ஒன்றை சிவில் அமைப்புகள் தமிழ் உணர்வாளர்கள் தமிழ் சட்டத்தரணிகள் ஒன்றிணைந்து இந்த வழக்கை தாக்கல் செய்ய வேண்டும். எனது என்பது எனது பணிவான வேண்டுகோள். இதற்கு யாரும் முன்வராத பட்சத்தில் எமது நாம் தமிழர் சமூக சேவை ஒன்றியத்தினராகிய ஆகிய நாம் இதற்காக பொதுநல வழக்கொன்றை நிச்சயமாக நாங்கள் வழக்கு தாக்கல் செய்து நீதியை நிலைநாட்டுவதற்கு நாங்கள் இந்த அரசாங்கத்திடம் முனைவோம். என அவர் இதன்போது தெரிவித்தார்.

https://www.virakesari.lk/article/220180

  • கருத்துக்கள உறவுகள்

பொதுவாக போதகர் நிராஜ் டேவிட்டின் காணொளிகளை அவற்றின் தலைப்பை பார்த்தவுடன் ஸ்கிப்பண்ணிப் போய்விடுவேன். இஸ்லாமியப் பயங்கரவாதம் 1990 களில் எவ்வாறு இருந்தது என போதகர் இங்கு விவரிக்கின்றார். இதற்குப் பதிலடியாகவே வடக்கில் இருந்து முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டார்கள்! இந்த வெளியேற்றப்பட்ட நிகழ்வுக்கு நான் ஆதரவு இல்லை என்றாலும், அந்த நேரத்தின் உணர்ச்சி மிக்க தருணங்கள் இந்த துன்பியல் நிகழ்வுக்கு உடனடிக் காரணமாக அமைந்துவிட்டன.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.