Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

Hello @Justin are you okay?

கார் ஓடும் நெடுஞ்சாலையில்

ஆறு ஓடுகிறது.

  • கருத்துக்கள உறவுகள்
25 minutes ago, ஈழப்பிரியன் said:

Hello @Justin are you okay?

கார் ஓடும் நெடுஞ்சாலையில்

ஆறு ஓடுகிறது.

நாலைந்து புத்தகங்களை தலையில் தூக்கிவைத்துக்கொண்டு சாரக்கட்டுடன் ஒருவர் வெள்ளத்தில் நடந்து செல்லும் காணொளி ஒன்று பார்த்தேன்.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ஈழப்பிரியன் said:

கார் ஓடும் நெடுஞ்சாலையில்

ஆறு ஓடுகிறது.

இது என்ன ஈழப்பிரியன், காட்டு வெள்ளம் மாதிரி... வெள்ளம் ஓடுகின்றது.

நீங்கள் இப்போ நியூயோர்க்கிலா நிற்கிறீர்கள். பாதுகாப்பாக இருக்கவும்.

  • கருத்துக்கள உறவுகள்
  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, தமிழ் சிறி said:

பிரியன் சார் ...பாதுகாப்பு முக்கியம் சாரே.....கவனமாக இருங்க...என்ன சாரே போற இடமெல்லாம் தண்ணியும் ..காற்றும் ...நெருப்புமாக இருக்கே... கவனம் கவனம்

ஆமாம் வீட்டிலே தான்.

22ம் திகதிவரை நிற்பேன்.

ஜஸ்ரினின் ஊரில் மிக மோசமான வெள்ளம்.

10 minutes ago, alvayan said:

பிரியன் சார் ...பாதுகாப்பு முக்கியம் சாரே.....கவனமாக இருங்க...என்ன சாரே போற இடமெல்லாம் தண்ணியும் ..காற்றும் ...நெருப்புமாக இருக்கே... கவனம் கவனம்

வாழ்க்கையில் போராட்டமா?

போராட்டமே வாழ்க்கையா?

இப்போ தான் ரெக்சாஸ் மாநிலத்தில் 120 பேர் இறந்து

இன்னும் பலரைக் காணவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
43 minutes ago, ஈழப்பிரியன் said:

ஆமாம் வீட்டிலே தான்.

22ம் திகதிவரை நிற்பேன்.

ஜஸ்ரினின் ஊரில் மிக மோசமான வெள்ளம்.

வாழ்க்கையில் போராட்டமா?

போராட்டமே வாழ்க்கையா?

இப்போ தான் ரெக்சாஸ் மாநிலத்தில் 120 பேர் இறந்து

இன்னும் பலரைக் காணவில்லை.

நம்ம ட்ரம்ருக்கு..கனடாவில் உள்ள சிவன்கோவிலுக்கு வந்து எள்ளெண்ணை எரிக்கச் சொல்லவும்...

ஜஸ்டிசார் ..கவனமாய்ருப்பாரே...சுழியோடி...கப்பலே வைத்திருப்பார்...அவசரத்துக்கு தொடர்பு..கொள்ளவும்..ரசோ..நில்மினி..மற்றும் பெயர் மறந்த அமெரிக்கவாழ் உறவுகள் அனைவரும் பாதுகாப்பாக இருக்கவும்

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, ஈழப்பிரியன் said:

Hello @Justin are you okay?

கார் ஓடும் நெடுஞ்சாலையில்

ஆறு ஓடுகிறது.

விசாரித்தமைக்கு நன்றி!

வெள்ளம் வரமுதலே இடர் வானிலை பற்றிய எச்சரிக்கைகள் தொலைபேசியில் சில தடவைகள் வந்ததால், எல்லோரும் வீட்டுக்குப் போய் ஒதுங்கிக் கொண்டோம், அதன் பிறகு தான் ஒரு சீசனில் பெய்ய வேண்டிய மழை இரு மணி நேரங்களில் கொட்டித் தள்ளியது. வீதிகள், கார் தரிப்பிடங்களில் வாகனங்கள் சில இடங்களில் வெள்ளத்தில் மாட்டிக் கொண்டிருக்கின்றன. அதிர்ஷ்டவசமாக உயிர் இழப்புகள் இல்லை. ரெஸ்லா போன்ற மின்சாரக் கார்கள் மட்டும் தான் தண்ணீர் மேவிச் சென்றாலும் ஓடக்கூடிய அளவுக்குத் தப்பியிருக்கின்றன. Exhaust pipe இல்லாதது தான் காரணம் என்கிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஈழப்பிரியன் said:

ஆமாம் வீட்டிலே தான்.

22ம் திகதிவரை நிற்பேன்.

ஈழப்பிரியரே உங்கள் பிரசன்னம் மனதிற்கு ஆறுதல் தருகிறது.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, alvayan said:

ஜஸ்டிசார் ..கவனமாய்ருப்பாரே...சுழியோடி...கப்பலே வைத்திருப்பார்...அவசரத்துக்கு தொடர்பு..கொள்ளவும்..ரசோ..நில்மினி..மற்றும் பெயர் மறந்த அமெரிக்கவாழ் உறவுகள் அனைவரும் பாதுகாப்பாக இருக்கவும்

நான் இருப்பது மேற்குக்கரையில், அல்வாயன். இங்கு வெள்ளம் வருவது குறைவு அல்லது இல்லை, ஆனால் நெருப்பு எரியும். அநேகமாக ஈழப்பிரியன் அண்ணா இங்கு கலிஃபோர்னியா வரும் போது நெருப்பு எரியும் என்று நினைக்கின்றேன்...............😜.

  • கருத்துக்கள உறவுகள்
46 minutes ago, ரசோதரன் said:

நான் இருப்பது மேற்குக்கரையில், அல்வாயன். இங்கு வெள்ளம் வருவது குறைவு அல்லது இல்லை, ஆனால் நெருப்பு எரியும். அநேகமாக ஈழப்பிரியன் அண்ணா இங்கு கலிஃபோர்னியா வரும் போது நெருப்பு எரியும் என்று நினைக்கின்றேன்...............😜.

இனி நெருப்புடன் விளையாடாதீங்க ரசோ சார்..🤣

22 minutes ago, alvayan said:

இனி நெருப்புடன் விளையாடாதீங்க ரசோ சார்..🤣

அவர் நெருப்புடன் விளையாட மாட்டார். ஆனால் நெருப்பு வந்தால் பூனைக்குட்டிகள் என்ன பாடுபடும் என நினைத்து கவலைப்பட தொடங்கி விடுவார்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, alvayan said:

இனி நெருப்புடன் விளையாடாதீங்க ரசோ சார்..🤣

அவருக்கு நெருப்பு தண்ணி பூனைக்குட்டி எல்லாமே ஒன்று தான்.

பிரச்சனை என்றால் நேய் நேய் என்று குரல் கொடுத்தால் காப்பாற்ற ஆள்வரும்.

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, ஈழப்பிரியன் said:

ஆமாம் வீட்டிலே தான்.

22ம் திகதிவரை நிற்பேன்.

ஜஸ்ரினின் ஊரில் மிக மோசமான வெள்ளம்.

வாழ்க்கையில் போராட்டமா?

போராட்டமே வாழ்க்கையா?

இப்போ தான் ரெக்சாஸ் மாநிலத்தில் 120 பேர் இறந்து

இன்னும் பலரைக் காணவில்லை.

5 hours ago, Justin said:

விசாரித்தமைக்கு நன்றி!

வெள்ளம் வரமுதலே இடர் வானிலை பற்றிய எச்சரிக்கைகள் தொலைபேசியில் சில தடவைகள் வந்ததால், எல்லோரும் வீட்டுக்குப் போய் ஒதுங்கிக் கொண்டோம், அதன் பிறகு தான் ஒரு சீசனில் பெய்ய வேண்டிய மழை இரு மணி நேரங்களில் கொட்டித் தள்ளியது. வீதிகள், கார் தரிப்பிடங்களில் வாகனங்கள் சில இடங்களில் வெள்ளத்தில் மாட்டிக் கொண்டிருக்கின்றன. அதிர்ஷ்டவசமாக உயிர் இழப்புகள் இல்லை. ரெஸ்லா போன்ற மின்சாரக் கார்கள் மட்டும் தான் தண்ணீர் மேவிச் சென்றாலும் ஓடக்கூடிய அளவுக்குத் தப்பியிருக்கின்றன. Exhaust pipe இல்லாதது தான் காரணம் என்கிறார்கள்.

இருவரும் நலம் என்பதில் ஆறுதல்.

ஏனையவர்களும் நலமாய் இருக்கட்டும்.

புவி வெப்பமயமாதலை கேள்விக்கு உள்ளாக்கும் நாட்டில் இப்படி அடிக்கடி சேதம் வருவது துன்பியல்-நகைச்சுவை (tragic-comedy).

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, goshan_che said:

இருவரும் நலம் என்பதில் ஆறுதல்.

ஏனையவர்களும் நலமாய் இருக்கட்டும்.

புவி வெப்பமயமாதலை கேள்விக்கு உள்ளாக்கும் நாட்டில் இப்படி அடிக்கடி சேதம் வருவது துன்பியல்-நகைச்சுவை (tragic-comedy).

நன்றி

ரம் இப்படி ஒன்றே இல்லை என்கிறார்.

  • கருத்துக்கள உறவுகள்

கார் ஓடும் வீதியில் காட்டாறு பாய்கிறது . ....... இவ்வளவு வளம் மிகுந்த அமெரிக்காவையே ஒரு வெள்ளம் ஸ்தம்பிக்க வைக்குது என்றால் , மற்ற நாடுகள் பற்றி என்னத்தை சொல்ல .........!

நீங்கள் பாதுகாப்பாக இருக்கவும் பிரியன் . .......... !

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, நியாயம் said:

நாலைந்து புத்தகங்களை தலையில் தூக்கிவைத்துக்கொண்டு சாரக்கட்டுடன் ஒருவர் வெள்ளத்தில் நடந்து செல்லும் காணொளி ஒன்று பார்த்தேன்.

8 hours ago, Justin said:

விசாரித்தமைக்கு நன்றி!

வெள்ளம் வரமுதலே இடர் வானிலை பற்றிய எச்சரிக்கைகள் தொலைபேசியில் சில தடவைகள் வந்ததால், எல்லோரும் வீட்டுக்குப் போய் ஒதுங்கிக் கொண்டோம்.

நியாயம் வெள்லம் வர முன்னரே தயாராக இருந்தமையால் எல்லோரும் வீட்டிற்குள் பாதுகாப்பாக இருந்த்தாக ஜஸ்ரின் கூறியுள்ளார்!

நான் நினைக்கிறேன் நீங்கள் பார்த்த நபர் வீட்டில் இருந்தபோதே புத்தகத்திற்குள் இருந்த பூச்சி கடித்து கீழே உள்ள காணொளியில் உள்ளதனை போல கீழே விழுந்திருப்பாரோ?🤣

https://www.youtube.com/watch?v=_UueYngVdXI

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, Justin said:

விசாரித்தமைக்கு நன்றி!

வெள்ளம் வரமுதலே இடர் வானிலை பற்றிய எச்சரிக்கைகள் தொலைபேசியில் சில தடவைகள் வந்ததால், எல்லோரும் வீட்டுக்குப் போய் ஒதுங்கிக் கொண்டோம், அதன் பிறகு தான் ஒரு சீசனில் பெய்ய வேண்டிய மழை இரு மணி நேரங்களில் கொட்டித் தள்ளியது. வீதிகள், கார் தரிப்பிடங்களில் வாகனங்கள் சில இடங்களில் வெள்ளத்தில் மாட்டிக் கொண்டிருக்கின்றன. அதிர்ஷ்டவசமாக உயிர் இழப்புகள் இல்லை. ரெஸ்லா போன்ற மின்சாரக் கார்கள் மட்டும் தான் தண்ணீர் மேவிச் சென்றாலும் ஓடக்கூடிய அளவுக்குத் தப்பியிருக்கின்றன. Exhaust pipe இல்லாதது தான் காரணம் என்கிறார்கள்.

கார்கள் தண்ணீரில் மிதக்க ஆரம்பித்துவிடும் அதுதான் பிரச்சினையாகிவிடும், ஒரு தடவை இப்படி மழை பெய்து வெள்ளம் வந்த போது எனக்கு முன்னால் பக்கத்து வீதியில் சென்ற ஒரு SUV தண்ணீரில் (ஒரு அடி உயரமளவில்) மாட்டுப்பட அந்த வாகன ஓட்டுனர் பதட்டத்தில் என கருதுகிறேன் கார் கதவினை திறந்து விட்டார், தண்ணீர் காருக்குள் சென்றதனை பார்த்தேன், அவர் சிறிது மெதுவாக போனதால் அப்படி மாட்டி கொண்ட்டார் என ஊகித்து எனது காரின் வேகத்தினை அதிகப்படுத்தி கடக்க முயன்றேன் (எனது கார் சிறிய 4 இருக்கை கொண்ட கார்) கார் மிதக்க தொடங்கியது துரிதமாக காரினை வீதியினை பிரிக்கும் உயரமான பகுதியில் ஏற்றியதால் சேதம் இல்லாமல் தப்பித்தேன்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, alvayan said:

நம்ம ட்ரம்ருக்கு..கனடாவில் உள்ள சிவன்கோவிலுக்கு வந்து எள்ளெண்ணை எரிக்கச் சொல்லவும்...

4 hours ago, goshan_che said:

புவி வெப்பமயமாதலை கேள்விக்கு உள்ளாக்கும் நாட்டில் இப்படி அடிக்கடி சேதம் வருவது துன்பியல்-நகைச்சுவை (tragic-comedy).

எல்லாம் பாரீஸ் ஒப்பந்தத்தை கிழித்து சுக்கு நூறாக்கி போட்டதின் சாபம். ஆகாய கங்கை இன்னும் பொழியுமாம்.🤣

குப்பனோடு விளையாடு....சுப்பனோடு விளையாடு.... ஏன் புட்டினோடு கூட விளையாடு. ஆனால் இயற்கையோடு விளையாடாதே. வைச்சு சாதிக்கும்.😎

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, vasee said:

கார்கள் தண்ணீரில் மிதக்க ஆரம்பித்துவிடும் அதுதான் பிரச்சினையாகிவிடும், ஒரு தடவை இப்படி மழை பெய்து வெள்ளம் வந்த போது எனக்கு முன்னால் பக்கத்து வீதியில் சென்ற ஒரு SUV தண்ணீரில் (ஒரு அடி உயரமளவில்) மாட்டுப்பட அந்த வாகன ஓட்டுனர் பதட்டத்தில் என கருதுகிறேன் கார் கதவினை திறந்து விட்டார், தண்ணீர் காருக்குள் சென்றதனை பார்த்தேன், அவர் சிறிது மெதுவாக போனதால் அப்படி மாட்டி கொண்ட்டார் என ஊகித்து எனது காரின் வேகத்தினை அதிகப்படுத்தி கடக்க முயன்றேன் (எனது கார் சிறிய 4 இருக்கை கொண்ட கார்) கார் மிதக்க தொடங்கியது துரிதமாக காரினை வீதியினை பிரிக்கும் உயரமான பகுதியில் ஏற்றியதால் சேதம் இல்லாமல் தப்பித்தேன்.

தோணி வடிவில், படகு வடிவில் வாகனங்கள் தயாரிப்பதற்கு, வாகனங்கள் தயாரிக்கும் நிறுவனங்களுக்கு ஆலோசனை கொடுக்கப்பட்டுள்ளது.

வரும் காலங்களில் “நீர் உயர வாகனங்கள் உயரும்”🤪

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Paanch said:

தோணி வடிவில், படகு வடிவில் வாகனங்கள் தயாரிப்பதற்கு, வாகனங்கள் தயாரிக்கும் நிறுவனங்களுக்கு ஆலோசனை கொடுக்கப்பட்டுள்ளது.

வரும் காலங்களில் “நீர் உயர வாகனங்கள் உயரும்”🤪

காரில் இதற்கான பாதுகாப்பு பொறிமுறை உள்ளது, ஆரம்பத்தில் வெள்ளத்தில் மிதக்கும் கார் பின்னர் கார் மூழ்க ஆரம்பிக்கும் உள்ளிருந்து காரின் கதவினை திறக்க முடியாது யன்னல் ஊடாக வெளியேறலாம், ஆனால் காரின் முன் பாகம் தண்ணீரில் முதலில் மூழ்கும், எஞ்ஞின் எடை காரணமாக, அதனால் காரின் பின் பகுதி தண்ணீருக்கு மேல் இருக்கும் போது காரின் பின் பகுதிக்கு சென்று காரின் பின் கதவினை அவசரகாலத்தில் திறப்பதற்கான ஆழியின் துணையால் திறந்து வெளியேறலாம்.

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, குமாரசாமி said:

எல்லாம் பாரீஸ் ஒப்பந்தத்தை கிழித்து சுக்கு நூறாக்கி போட்டதின் சாபம். ஆகாய கங்கை இன்னும் பொழியுமாம்.🤣

குப்பனோடு விளையாடு....சுப்பனோடு விளையாடு.... ஏன் புட்டினோடு கூட விளையாடு. ஆனால் இயற்கையோடு விளையாடாதே. வைச்சு சாதிக்கும்.😎

யூகேயிலும் இப்போ சுருதி மாற தொடங்கிவிட்டது.

  1. உலக அளவில் 1% க்கும் குறைவாக உலகவெப்பமாதலுக்கு காரணமான நாம் என்ன செய்தாலும் ஒன்றும் ஆகாது.

  2. பணத்தை மீள் உருவாக கூடிய சக்திகளில் பாவிப்பதை விட வெள்ளம், அதீத வெப்பத்தில் இருந்து பாதுகாக்கும் விடயங்களில் செலவிட வேண்டும்.

இப்படியான கதைகள் மெதுவாக வலுபெற்ய்லுகிறன.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

Torrential rain swept across New York City and New Jersey overnight, killing two people after drowning entire neighborhoods with floodwater, swamping NYC’s subway system and knocking out power for thousands across the tristate area.

The deaths occurred in the suburb of Plainfield on Monday, after intense flooding swept a vehicle into the small waterway of Cedar Brook at the peak of the storm around 8 p.m. Both people inside were pronounced dead on the scene, said Gov. Phil Murphy, who declared a state of emergency amid the deadly weather.

Their deaths marked the third and fourth caused by severe storms in the city this month.

“All of Plainfield grieves this latest loss,” Mayor Adrian Mapp said in a statement. “To lose four residents in a short span of time is unimaginable. We mourn with the families and remain committed to doing all we can to strengthen our emergency response systems and protect our residents from future harm.”

Nearby in North Plainfield, a home caught fire and exploded shortly after the family inside had fled the rising floodwaters, authorities said. No injuries were reported.

https://www.nydailynews.com/2025/07/15/thunderstorms-flooding-new-york-city-new-jersey-deaths/

நியூயேர்சியில் ஜஸ்ரின் ஊருக்கு அண்மையில் உள்ள ஊரில் இருவர் இறந்துள்ளனர்.

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, ஈழப்பிரியன் said:

ஆம். நான் யாரும் இறக்கவில்லை என்று எழுதிய போது இந்த தகவல்கள் வெளிவந்திருக்கவில்லை.

பொதுவாகவே வெள்ளத்தை நகரங்களில் வசிக்கும் மக்கள் குறைத்து எடை போடுவது வழமை. ஆனால், வேகமாக நகரும் மூன்றடி ஆழ வெள்ளமே ஆளை இழுத்துச் சென்று மீள முடியாத கான்களுக்குள் முடக்கிக் கொன்று விடும் சக்தி வாய்ந்தது. இங்கே நாம் இவ்வளவு கவனமாக இருக்கிறோம். கிளிநொச்சிக் குளம் நிரம்பி உருத்திர புரம், கனகபுரம், ஜெயந்தி நகர் எல்லாம் வீதிகளில் இடுப்பளவு வெள்ளம் ஓடிய ஒரு தருணத்தில் அதற்கூடாக நடந்து போன முட்டாள் தனத்தை இப்போது நினைத்துப் பார்க்கிறேன்😂

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.