Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பகிடிவதை உச்சம் – தென்கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் ஒன்பது பேர் வைத்தியசாலையில் அனுமதி

July 15, 2025 11:27 am

பகிடிவதை உச்சம் – தென்கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் ஒன்பது பேர் வைத்தியசாலையில் அனுமதி

ஒலுவில் தென்கிழக்கு பல்கலைக்கழக பொறியியல் பீட முதலாம் வருட மாணவர்கள் மீது சிரேஷ்ட மாணவர்கள் மேற்கொண்ட தாக்குதலில் ஒன்பது மாணவர்கள் இருவேறு வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

செவ்வாய்க்கிழமை (14) இரவு அம்பாறை மாவட்டம் ஒலுவில் பகுதியில் உள்ள தென்கிழக்கு வளாகத்தில் கல்வி கற்கும் மாணவர்கள் மீது இத்தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணையில் இருந்து தெரியவந்துள்ளது.

இதன் போது காயமடைந்த ஐந்து மாணவர்கள் ஒலுவில் பிரதேச வைத்தியசாலையிலும் ஏனைய நான்கு மாணவர்கள் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையிலும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் கடந்த மாதமும் முதலாமாண்டு மாணவர்களை பகிடிவதை செய்த குற்றச்சாட்டின் அடிப்படையில் ஒலுவில் பல்கலைக்கழக பொறியியல் பீடத்தைச் சேர்ந்த 22 மாணவர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக பல்கலைக்கழகத்தின் நிர்வாகம் தெரிவித்திருந்தது.

இதே வேளை இலங்கை தென் கிழக்குப் பல்கலைக்கழகத்தின் முதலாமாண்டு மாணவர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட கடுமையான பகிடிவதை தொடர்பான காணொளி ஒன்றும் சமூக வலைத்தளங்களில் வெளியாகி இருந்தது.

இதில் தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் மூன்றாம் ஆண்டில் பயிலும் மாணவர்கள் குழுவொன்று முதலாமாண்டு மாணவர்களின் அறைகளுக்குள் நுழைந்து முழந்தாளிடச் செய்து கடுமையாக துன்புறுத்தி தாக்கும் வகையிலான காணொளி அமைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

https://oruvan.com/ragging-peak-nine-southeastern-university-students-admitted-to-hospital/

  • கருத்துக்கள உறவுகள்

vvv-3.jpeg?resize=750%2C375&ssl=1

ஒலுவில் தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் பகிடிவதை: ஐவர் வைத்தியசாலையில் அனுமதி!

ஒலுவில் தென்கிழக்கு பல்கலைக்கழக பொறியியல் பீட 1ம் வருட மாணவர்கள் மீது சிரேஷ்ட மாணவர்கள் மேற்கொண்ட தாக்குதலில் 4 மாணவர்கள் உட்பட ஐவர் வைத்தியசாலை சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

நேற்று (14) இரவு அம்பாறை மாவட்டம் ஒலுவில் பகுதியில் உள்ள தென்கிழக்கு வளாகத்தில் கல்வி கற்கும் மாணவர்கள் மீது இத்தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணையில் இருந்து தெரியவந்துள்ளது.

இதன் போது காயமடைந்த 4 மாணவர்கள் உட்பட சாரதி ஒருவரும் ஒலுவில் பிரதேச வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் கடந்த மாதமும் முதலாம் ஆண்டு மாணவர்களை பகிடிவதை செய்த குற்றச்சாட்டின் அடிப்படையில் ஒலுவில் பல்கலைக்கழக பொறியியல் பீடத்தைச் சேர்ந்த 22 மாணவர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக குறித்த பல்கலைக்கழகத்தின் நிர்வாகம் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதே வேளை இலங்கை தென் கிழக்குப் பல்கலைக்கழகத்தின் முதலாமாண்டு மாணவர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட கடுமையான பகிடிவதை தொடர்பான காணொளி ஒன்றும் சமூக வலைத்தளங்களில் வெளியாகி இருந்தது.

இதில் தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் மூன்றாம் ஆண்டில் பயிலும் மாணவர்கள் குழுவொன்று முதலாமாண்டு மாணவர்களின் அறைகளுக்குள் நுழைந்து முழந்தாளிடச் செய்து கடுமையாகத்  துன்புறுத்தி தாக்கும் வகையில் அக்காணொளி அமைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2025/1439241

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, தமிழ் சிறி said:

அபச்சாரம் ..அபச்சாரம்...உலகத்திலேயே ...சுத்தமான...மதபபற்றுள்ள நற்குடிகள் வாழும் படிக்கும் பல்கலையில் இது நடக்கலாமா...சிறியர் ..பெயர்ப்பலகை வடிவம் என்னை கொஞசம் ...உணர்ச்சி வசப் படுத்திவிட்டது ...மன்னிக்கவும் ..

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, alvayan said:

அபச்சாரம் ..அபச்சாரம்...உலகத்திலேயே ...சுத்தமான...மதபபற்றுள்ள நற்குடிகள் வாழும் படிக்கும் பல்கலையில் இது நடக்கலாமா...சிறியர் ..பெயர்ப்பலகை வடிவம் என்னை கொஞசம் ...உணர்ச்சி வசப் படுத்திவிட்டது ...மன்னிக்கவும் ..

அல்வாயான், தென் கிழக்கு பல்கலைக்கழகம் என்றால்... மகிந்த ராஜபக்சவின் ஊர்.

அரசன் எவ்வழியோ... குடிகளும் அவ்வழியே. 😂

அதுக்காக.. மற்ற சிங்களப் பகுதிகள் திறம் என்று நினைக்கப் படாது. 🤣

34 minutes ago, தமிழ் சிறி said:

அல்வாயான், தென் கிழக்கு பல்கலைக்கழகம் என்றால்... மகிந்த ராஜபக்சவின் ஊர்.

அரசன் எவ்வழியோ... குடிகளும் அவ்வழியே. 😂

அதுக்காக.. மற்ற சிங்களப் பகுதிகள் திறம் என்று நினைக்கப் படாது. 🤣

தமிழ் சிறி,

மஹிந்தவின் ஊர் அம்பாந்தோட்டை. தென் கிழக்கு பல்கலைக்கழகம் அம்பாறை மாவட்டத்தில் ஒலுவிலில் அமைந்திருக்கு. இங்கு முஸ்லிம், தமிழ் மற்றும் சிங்கள மாணவர்கள் என மூவினமும் கல்வி கற்கின்றனர். முஸ்லிம் மாணவர்களின் எண்ணிக்கை இங்கு அதிகம்.

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, நிழலி said:

தமிழ் சிறி,

மஹிந்தவின் ஊர் அம்பாந்தோட்டை. தென் கிழக்கு பல்கலைக்கழகம் அம்பாறை மாவட்டத்தில் ஒலுவிலில் அமைந்திருக்கு. இங்கு முஸ்லிம், தமிழ் மற்றும் சிங்கள மாணவர்கள் என மூவினமும் கல்வி கற்கின்றனர். முஸ்லிம் மாணவர்களின் எண்ணிக்கை இங்கு அதிகம்.

தகவலுக்கு நன்றி நிழலி. 🙂

  • கருத்துக்கள உறவுகள்
36 minutes ago, தமிழ் சிறி said:

அல்வாயான், தென் கிழக்கு பல்கலைக்கழகம் என்றால்... மகிந்த ராஜபக்சவின் ஊர்.

இது உண்மையா....நான் ஒலுவில் பகுதியில் அமைந்த பல்கலைக்கழம் என்று கருவிட்டேன் ...எதுக்கும் உங்கள் கருத்தையும் மீளாய்வு செய்க ...என் தவறெனில் சாரி...

நன்றி நிழலி....இங்கு இசுலாமியக் கோட்பாடு கடுமையாக கடைப்பிடிக்கப்படுவதாக அறிந்தேன்.

Edited by alvayan

  • கருத்துக்கள உறவுகள்
Just now, alvayan said:

இது உண்மையா....நான் ஒலுவில் பகுதியில் அமைந்த பல்கலைக்கழம் என்று கருவிட்டேன் ...எதுக்கும் உங்கள் கருத்தையும் மீளாய்வு செய்க ...என் தவறெனில் சாரி...

4 minutes ago, நிழலி said:

தமிழ் சிறி,

மஹிந்தவின் ஊர் அம்பாந்தோட்டை. தென் கிழக்கு பல்கலைக்கழகம் அம்பாறை மாவட்டத்தில் ஒலுவிலில் அமைந்திருக்கு. இங்கு முஸ்லிம், தமிழ் மற்றும் சிங்கள மாணவர்கள் என மூவினமும் கல்வி கற்கின்றனர். முஸ்லிம் மாணவர்களின் எண்ணிக்கை இங்கு அதிகம்.

மன்னிக்கவும் அல்வாயன். நான்தான் தவறான தகவலை வழங்கி விட்டேன்.

மேலே நீங்களும், நிழலியும் கூறியதே சரியான தகவல்.

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, alvayan said:

இது உண்மையா....நான் ஒலுவில் பகுதியில் அமைந்த பல்கலைக்கழம் என்று கருவிட்டேன் ...எதுக்கும் உங்கள் கருத்தையும் மீளாய்வு செய்க ...என் தவறெனில் சாரி...

நன்றி நிழலி....இங்கு இசுலாமியக் கோட்பாடு கடுமையாக கடைப்பிடிக்கப்படுவதாக அறிந்தேன்.

யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தில் முக்கிய பதவிகள் பரமேஸ்வரன் கோவிலில் சென்று வழிபட்டு திருநீறு அணியக் கூடிய சைவர்களுக்குத் தான் கிடைக்கும். ஏனையோர் குதிரைக் கொம்பு போல அரிது! அதே டிசைனில் முஸ்லிம்களுக்கு என்று உருவான பல்கலை தான் தென்கிழக்குப் பல்கலை. இது இலங்கையில் சாதாரணமான போக்கு.

ஆனால், நீங்கள் சொல்வது போல இஸ்லாமியப் பாணி கட்டுபாடுகள் கடுமையென்பது பொய்க்கதை. இலங்கையின் ஏனைய அரச பல்கலைகள் போலவே இங்கேயும் பள்ளிவாசலுக்கு மேலதிகமாக சைவக் கோவில், கிறிஸ்தவ ஆலயம், பௌத்த விகாரை என்பன இருக்கின்றன.

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, Justin said:

அய்யா என்னுடைய உறவு ஒன்று ..அனுபவித்தையே எழுதினேன்....புதிதாக எதையும் கண்டுபிடிக்கவில்லை ..அவ்வளவுதான்..

எந்த இடத்தில் என்ன நடக்கும் என்பதையே இப்போதைய நிகழ்வுகள் ...சொல்கின்றன...எதற்கும் அவதானமாக இருப்பது...நல்லது

Edited by alvayan

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ், சிங்கள, இஸ்லாமிய மாணவர்கள் என்ற பேதங்கள் இல்லாமல், மூவினங்களிலிருந்தும் சில மனநோய்க் கூறுகளைக் கொண்டவர்களால் இலங்கையில் உள்ள சகல பல்கலைக்கழகங்களிலும் இந்த எல்லை மீறிய பகிடிவதை நடத்தப்பட்டுக் கொண்டிருக்கின்றது.

1997ம் ஆண்டில் வரப்பிரகாஷ் என்னும் மாணவன் பேராதனை பொறியியல் பீடத்தில் இப்படியான ஒரு பகிடிவதையால் இறந்து போனது பெரும் அதிர்ச்சியை ஏறப்டுத்தி இருந்தாலும், அதன் பின்னரும் இந்தப் பகிடிவதை இதே வகைகளில் தொடர்ந்து கொண்டேயிருக்கின்றது.

பகிடிவதையின் அடிப்படையே புதிய மாணவர்களும், ஏற்கனவே அங்கிருக்கும் மாணவர்களும் கலந்து பழகும் ஒரு சூழ்நிலையை ஏற்படுத்திக் கொடுப்பது என்று சொல்லப்பட்டாலும், அத்துமீறிய பகிடிவதைகளைச் செய்வோர்களில் மிகப் பெரும்பாலானோர் பகிடிவதைக் காலத்தின் பின் பழகுவதும் இல்லை, புதிய மாணவர்களும் அவர்களைத் திரும்பிப் பார்ப்பதும் இல்லை.

Edited by ரசோதரன்

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, தமிழ் சிறி said:

அல்வாயான், தென் கிழக்கு பல்கலைக்கழகம் என்றால்... மகிந்த ராஜபக்சவின் ஊர்.

எரோபிளேன் எல்லாம் ஓட்டத்தெரியும், ஆனால் கூகிள் மேப் பார்க்க தெரியாதோ🤣

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ரசோதரன் said:

பகிடிவதையின் அடிப்படையே புதிய மாணவர்களும், ஏற்கனவே அங்கிருக்கும் மாணவர்களும் கலந்து பழகும் ஒரு சூழ்நிலையை ஏற்படுத்திக் கொடுப்பது என்று சொல்லப்பட்டாலும்

இப்படி சொல்லபடுவதே மோசமான கோமாளிதனம்.

இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழகம் அம்பாறை ஒலுவிலில் படிப்பவர்கள் பெற்று கொள்ளும் நன்மைகள் 👇

கடினமான பாடங்களைப் பயிலுவோர் தென்கிழக்கு திசையில் அமர்ந்து படித்தால் எளிதில் கிரகிக்க முடியும். விஷயங்களைக் கிரகிக்க தென் மேற்கு திசையான நிருத்தி திசையும் வாய்ப்பாடு, சூத்திரங்கள் போன்றவற்றை மனப்பாடம் செய்ய தென் கிழக்கு திசையும் மாணவர்களுக்கு உதவும் திசைகளாகும். ருத்ரம், சமகம், அக்னி மந்திரங்கள், மேதா சூக்தம், சரஸ்வதி துதிகள், ஹயக்ரீவர் தோத்திரம் போன்றவற்றை தென் கிழக்கு திசையில் அமர்ந்து ஒதினால் அவற்றின் பலன்கள் பத்து மடங்காய்ப் பெருகும்.

https://shorturl.at/uk59L

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, விளங்க நினைப்பவன் said:

இப்படி சொல்லபடுவதே மோசமான கோமாளிதனம்.

👍..........................

இது ஒரு மோசமான ஏமாற்று வேலை என்று சொல்வது இன்னும் பொருத்தமாக இருக்கும்.

எந்தப் புள்ளியிலும் எல்லாத் திசைகளும் இருக்கின்றது தானே.................... இலங்கையின் தென் கிழக்கே போய்த்தான் அங்கிருந்து தென்கிழக்கை பார்க்க வேண்டுமா............... அப்படியே உட்கார்ந்தாலும் வந்து விடும் படிப்பு................🫣.

  • கருத்துக்கள உறவுகள்

தென்கிழக்கு பல்கலைக்கழக மாணவர்களை விடுதியிலிருந்து வெளியேறுமாறு அறிவுறுத்தல்

16 JUL, 2025 | 03:36 PM

image

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீடத்தைச் சேர்ந்த முதலாமாண்டு மாணவர்கள் நால்வர்  அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையிலும்  ஒலுவில் பிரதேச  வைத்தியசாலையில் மாணவர் உட்பட  பல்கலைக்கழக சாரதி  என ஆறு பேர் தற்போது வரை  சிகிச்சை பெற்று வருவதாக  தென்கிழக்கு பல்கலைக்கழகப்   பதிவாளர் எம்.ஐ. நௌபர் தெரிவித்தார்.

இதேவேளை இரவு விடுதியில் தங்கி கல்வி கற்றுவரும் 1 ஆம் வருட பொறியியல் பீட மாணவர்கள்  அனைவரும் மறு அறிவித்தல் வரை உடனடியாக  விடுதிகளை விட்டு வெளியேறுமாறு செவ்வாய்க்கிழமை (15)  பல்கலைக்கழக நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. இதற்கமைய அனைத்து மாணவர்களும் வெளியெறி உள்ளதாக பல்கலைக்கழக தகவல்கள் தெரிவித்துள்ளன.

சிரேஸ்ட மாணவர்களின்  கல்வி செயற்பாடுகள் வழமை போன்று நடைபெற்று வருவதுடன்,  குறித்த மோதலானது ஒரே வகுப்பினை சேர்ந்த 1 ஆம் வருட மாணவர்களின்  இரு குழுக்களுக்கிடையே விடுதியில் ஏற்பட்டதாக பல்கலைக்கழக நிர்வாகம் குறிப்பிட்டுள்ளது.

இதனால் அம்பாறை   ஒலுவில்  தென்கிழக்கு பல்கலைக்கழக பொறியியல் பீடத்தின் முதலாம் வருட மாணவர்களை நேற்று இரவு 8 மணியுடன்  விடுதிகளிலிருந்து வெளியேறுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், பல்கலைக்கழகத்தில் இன்று நடைபெறவிருந்த பரீட்சையும் பிற்போடப்பட்டுள்ளதாக தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் நிர்வாகம் தெரிவித்துள்ளது. தென்கிழக்கு பல்கலைக்கழக பொறியியல் பீடத்தின் முதலாம் வருட மாணவர்கள் இடையே  நேற்று  ஏற்பட்ட   மோதலை அடிப்படையாகக் கொண்டு இந்த அறிவிப்புகள் விடுக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில் நேற்றைய தினம்  இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் ஆரம்பக்கட்ட விசாரணைகள் நடத்தப்படுவதாக  தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் தெரிவித்துள்ளார்.

செய்தி பின்னணி

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீடத்தைச் சேர்ந்த முதலாமாண்டு மாணவர்கள் ஐவர்  மற்றும் பல்கலைக்கழக சாரதியொருவர் - தாக்குதலுக்குள்ளான நிலையில் செவ்வாய்க்கிழமை  (15)  வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அதன்  பின்னர் குறித்த தாக்குதலின் காரணமாக  ஒலுவில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 5  மாணவர்களில் நால்வர்  விசேட வைத்திய நிபுணரின் ஆலோசனையைப் பெறுவதற்காக  அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக  மாற்றப்பட்டுள்ளதாக  தென்கிழக்கு பல்கலைக்கழகப்   பதிவாளர் எம்.ஐ. நௌபர்  குறிப்பிட்டார்.

இதேவேளை  ஒலுவில் வைத்தியசாலையில் இருந்து அனுப்பி வைக்கப்பட்ட 4 மாணவர்களும்  அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக  அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் டொக்டர் ஐ.எம். ஜவாஹிர் தெரிவித்தார்.

மேலும் தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீட  1 ஆம் வருட  மாணவர்கள் இரண்டு குழுக்களாக பிரிந்து ஏற்பட்ட மோதல் காரணமாக இச்சம்பவம் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

https://www.virakesari.lk/article/220139

  • கருத்துக்கள உறவுகள்
23 hours ago, ரசோதரன் said:
On 15/7/2025 at 21:49, விளங்க நினைப்பவன் said:

இப்படி சொல்லபடுவதே மோசமான கோமாளிதனம்.

👍..........................

இது ஒரு மோசமான ஏமாற்று வேலை என்று சொல்வது இன்னும் பொருத்தமாக இருக்கும்.

💯

23 hours ago, ரசோதரன் said:

எந்தப் புள்ளியிலும் எல்லாத் திசைகளும் இருக்கின்றது தானே.................... இலங்கையின் தென் கிழக்கே போய்த்தான் அங்கிருந்து தென்கிழக்கை பார்க்க வேண்டுமா............... அப்படியே உட்கார்ந்தாலும் வந்து விடும் படிப்பு................🫣.

🤣

நன்றி அண்ணா

  • கருத்துக்கள உறவுகள்
On 16/7/2025 at 03:43, ரசோதரன் said:

பகிடிவதையின் அடிப்படையே புதிய மாணவர்களும், ஏற்கனவே அங்கிருக்கும் மாணவர்களும் கலந்து பழகும் ஒரு சூழ்நிலையை ஏற்படுத்திக் கொடுப்பது என்று சொல்லப்பட்டாலும், அத்துமீறிய பகிடிவதைகளைச் செய்வோர்களில் மிகப் பெரும்பாலானோர் பகிடிவதைக் காலத்தின் பின் பழகுவதும் இல்லை, புதிய மாணவர்களும் அவர்களைத் திரும்பிப் பார்ப்பதும் இல்லை.

புதிய மாணவர்களுக்கு உதவி நிச்சயமாக தேவைப்படும் என கருதுகிறேன், அவ்வாறு உதவினாலே புதிய மாணவர்களும் பழைய மாணவர்களும் இயல்பாக பழகலாம், பகிடி வதை என்பது குரூர புத்தி கொண்ட சிலரது வக்கிரங்களுக்கு வடிகாலாக இருப்பதலாலேயே சிலர் இதனை விரும்பி செய்கிறார்கள் என கருதுகிறேன், உடைந்து போன ஒரு சமூகத்தில் இருக்கும் பொதுவான அம்சம் (வர்க்க, மத, சாதி வேறுபாடுகள்) இது என கருதுகிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, vasee said:

இவை சிலருக்கு ஒரு வடிகால்களே என்பதில் மற்றுக்கருத்து கிடையவே கிடையாது. இதில் சிலரை பல்கலைக் கழகம் முடிந்து பல வருடங்கள் பின்னரும் நான் அறிந்து இருக்கின்றேன். இந்த நடவடிக்கைகள் வேறு ஏதோ வகைகளில் அவர்களிடமிருந்து வெளிப்பட்டுக் கொண்டேயிருக்கின்றன.

புதிய மாணவர்களுக்கு நிறைய உதவிகள் தேவையே. செய்யப்படும் சின்ன உதவிகளைக் கூட பலரும் வாழ்நாளில் மறப்பதில்லை. 'மெய்யழகன்' படத்தில் வரும் அந்த சைக்கிள் கதை போல நெகிழ்ந்து சொல்லுகின்றார்கள். இப்படி வரும் பிணைப்பும், நட்பும் என்றும் அழியாமல் நிற்கின்றது........👍.

  • கருத்துக்கள உறவுகள்
On 15/7/2025 at 16:32, கிருபன் said:

கடந்த மாதமும் முதலாமாண்டு மாணவர்களை பகிடிவதை செய்த குற்றச்சாட்டின் அடிப்படையில் ஒலுவில் பல்கலைக்கழக பொறியியல் பீடத்தைச் சேர்ந்த 22 மாணவர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக பல்கலைக்கழகத்தின் நிர்வாகம் தெரிவித்திருந்தது.

On 16/7/2025 at 03:43, ரசோதரன் said:

1997ம் ஆண்டில் வரப்பிரகாஷ் என்னும் மாணவன் பேராதனை பொறியியல் பீடத்தில் இப்படியான ஒரு பகிடிவதையால் இறந்து போனது பெரும் அதிர்ச்சியை ஏறப்டுத்தி இருந்தாலும், அதன் பின்னரும் இந்தப் பகிடிவதை இதே வகைகளில் தொடர்ந்து கொண்டேயிருக்கின்றது.

இது வருடாவருடம் நடக்கும் சம்பவம். எத்தனை கஸ்ரப்பட்டு படித்து முன்னுக்கு வருகிறார்கள், இது சாதாரண மாணவர்கள் செய்யும் வேலையல்ல. நாளைய சமுதாயத்தை வழிநடத்த வேண்டியவர்கள். இவர்களாக பார்த்து திருந்தாவிட்டால் இவர்களை திருத்த முடியாது. பிறரின் துன்பத்தில் மகிழும்மன நிலை பாதிக்கப்பட்டவர்களாக இருக்கும்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.