Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

யாழ். நல்லூருக்கு செல்வோருக்கு பொலிஸார் விடுத்துள்ள அறிவிப்பு

Published By: DIGITAL DESK 2

08 AUG, 2025 | 07:43 PM

image

யாழ். நல்லூர் திருவிழாவில் நகைகளை களவாட இலங்கையின் பல பாகங்களில் இருந்தும் திருடர்கள் நல்லூர் ஆலயத்திற்கு வருகை தந்துள்ளமையால், ஆலயத்திற்கு செல்லும் பக்தர்கள் அவதானமாக செல்லுமாறு யாழ்ப்பாண பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர். 

ஆலய சூழலில் திருடர்களின் நடமாட்டம் காணப்படுவதால், ஆலயத்திற்கு தங்க நகைகளை அணிந்து வருவதை தவிர்க்குமாறும், அணிந்துள்ள தங்க நகைகளில் கவனம் செலுத்துமாறும் பொலிஸார் கோரியுள்ளனர். 

அத்துடன், பொலிஸ் சீருடை மற்றும் சிவில் உடைகளில் பொலிஸார் ஆலய சூழல்களில் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் எனவும், அருகில் உள்ளவர்கள் தொடர்பில் சந்தேகங்கள் எழுந்தால், பொலிஸாருக்கு உடன் அறிவிக்குமாறும் பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.

அதேவேளை ஆலய சூழல்களில் கண்காணிப்பு கமராக்கள் பொருத்தப்பட்டு, அனைவரும் கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

https://www.virakesari.lk/article/222119

(இல்லாத) இறைவனை வழிபட போகும் போது ஏன் தங்க நகைகளை அணிந்து செல்ல வேண்டும்?

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, நிழலி said:

(இல்லாத) இறைவனை வழிபட போகும் போது ஏன் தங்க நகைகளை அணிந்து செல்ல வேண்டும்?

நகைகளை காட்டுவதற்காக கோயிலுக்கு போகக்கூடும், ஆனால் ஆண்களின் சட்டைகளை உருவுகிறார்கள் ஒரு புறம், மறுபுறம் திருடர்கள் நகைகளை உருவுகிறார்கள்.🤣

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ஏராளன் said:

இலங்கையின் பல பாகங்களில் இருந்தும் திருடர்கள் நல்லூர் ஆலயத்திற்கு வருகை தந்துள்ளமையால், ஆலயத்திற்கு செல்லும் பக்தர்கள் அவதானமாக செல்லுமாறு யாழ்ப்பாண பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர். 

அரசியல் வாதிகள் (முக்கியமா ஜெ.வி.பியினர்) மட்டும் சிறிலங்கா தேசியம் பேச வேணும் என்ற சட்டம் இல்லை தானே...

திருடர்களும் ஒன்றுபட்ட இலங்கைய விரும்புகின்றனர் சிறிலங்கா தேசியத்தை வளர்க்க அவர்கள் இலங்கையின் பல பாகங்களிலிருந்து நல்லூருக்கு வந்து திருடி அதை தங்கள் பகுதியில் விற்பனை செய்து சிறிலங்கா தேசியத்துக்கு மேலும் பலம் சேர்க்கின்றனர்...

தமிழ் தேசியத்தை சிங்கள தேசியவாதிகள் திருட,நகை திருடர்கள் நகைகளை திருடுகிறார்கள் ...வாழ்க திருடர் தேசியம்..

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, நிழலி said:

(இல்லாத) இறைவனை வழிபட போகும் போது ஏன் தங்க நகைகளை அணிந்து செல்ல வேண்டும்?

ஒருவருக்கு இல்லாத இறைவன் மற்றவருக்கு இருப்பார் ,

சந்திரா (அமைச்சர் சந்திர சேகரா)முதல் பிரதமர் ஹரணி வரை,ஜனாதிபதி அனுரா முதல் யாழ் மாவட்ட ஜெ.வி.பி உறுப்பினர்கள் வரை இன்று நல்லூரான் திருவடியை நாடி வருகின்றனர் ...அன்று விபூதி வேண்டாம் என சொல்லியவர்கள் இன்று தரிசனம் செய்கின்றனர் ...

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, vasee said:

நகைகளை காட்டுவதற்காக கோயிலுக்கு போகக்கூடும், ஆனால் ஆண்களின் சட்டைகளை உருவுகிறார்கள் ஒரு புறம், மறுபுறம் திருடர்கள் நகைகளை உருவுகிறார்கள்.🤣

கடந்த வாரம் கனடாவிலிருந்து நல்லூர் திருவிழாவிற்கு சென்றவராகத் தான் இருக்க வேணும்.கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் போகும் வழியில் இயற்கை கடன் கழிக்க போனவரை அடித்து, காயப்படுத்தி விட்டு 5 பவுண் நகை களற்றி எடுக்கபட்டதாக அறிந்தேன்.

2 hours ago, putthan said:

ஒருவருக்கு இல்லாத இறைவன் மற்றவருக்கு இருப்பார் ,

சந்திரா (அமைச்சர் சந்திர சேகரா)முதல் பிரதமர் ஹரணி வரை,ஜனாதிபதி அனுரா முதல் யாழ் மாவட்ட ஜெ.வி.பி உறுப்பினர்கள் வரை இன்று நல்லூரான் திருவடியை நாடி வருகின்றனர் ...அன்று விபூதி வேண்டாம் என சொல்லியவர்கள் இன்று தரிசனம் செய்கின்றனர் ...

இவர்களாலானும் சரி, மற்றவர்களானாலும் சரி, ஏன் நகைகள் அணிந்து செல்ல வேண்டும்?

இல்லாத இறைவன் இருக்கின்றார் எனில் தன்னை காண ஓடிவரும் பக்தர்களின் நகைக்களை கூட காப்பாற்ற முடியாதவரா அவர்?

  • கருத்துக்கள உறவுகள்
50 minutes ago, நிழலி said:

இவர்களாலானும் சரி, மற்றவர்களானாலும் சரி, ஏன் நகைகள் அணிந்து செல்ல வேண்டும்?

இல்லாத இறைவன் இருக்கின்றார் எனில் தன்னை காண ஓடிவரும் பக்தர்களின் நகைக்களை கூட காப்பாற்ற முடியாதவரா அவர்?

இறைவன் ரொம்பவும் பிசி பாஸ்.

கள்வருக்கு பின்னால் எல்லாம் ஓட அவருக்கு நேரமில்லை.

எவ்வளவு பிகருகளெல்லாம் வந்து குவியும் போது அவர் பொறுமையாக இருந்து ரசிக்க வேண்டாமோ?

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, நிழலி said:

இவர்களாலானும் சரி, மற்றவர்களானாலும் சரி, ஏன் நகைகள் அணிந்து செல்ல வேண்டும்?

இல்லாத இறைவன் இருக்கின்றார் எனில் தன்னை காண ஓடிவரும் பக்தர்களின் நகைக்களை கூட காப்பாற்ற முடியாதவரா அவர்?

இறைவனே அலங்காரத்துடன் ஜெகஜோதிய காட்சியளிக்கும் பொழுது பக்தர்கள் ஆண்டியாக செல்ல முடியுமா? அதுவும் அலங்கார கந்தனிடன்...🤣

திருடர்கள் பிழைப்புக்கு திருடுகிறார்கள் நாட்டின் அமைச்சரவை ஏன் இந்த திருடர்களை நல்வழிப்படுத்த முடியாது ? என் அடுத்த கேள்வியை முருகன் கேட்கலாம் 😄

உங்களது கேள்வி, 1979 களில் சில தமிழ் புரட்சிகர இளைஞர்கள் கேட்டடதை ஞாபகப்படுத்துகின்றது. 😍..இன்னும் இப்படியான கேள்வி இருக்கின்றது...இந்த கேள்வி தொடரும் ஆனால் அதைவிட பக்தர்கள் எண்ணிக்கை பல மடங்கு பெருகும் ...நகைளை அணிந்து செல்வார்கள்

நாட்டின் பொருளாதாரம் வளர்ச்சியடையும் ,திருடர்கள் வாழ வழிகிடைக்கும் ,பொலிசார் வேலை செய்வார்கள் ...

பக்தர்கள் நகை அணிய வேண்டும் ....திருடர்களுக்கு வேலை வாய்ப்பை அரசு தேடிக் கொடுத்து புரட்சிகரமான சக்தியாக மாற்ற வேண்டும் ...அரசர்கள் எவ்ழியோ மக்கள் அவ்வழி என்ற நிலைக்கு புர🤭ட்சி செய்ய வேண்டும் ...

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
On 8/8/2025 at 19:05, ஏராளன் said:

யாழ். நல்லூர் திருவிழாவில் நகைகளை களவாட இலங்கையின் பல பாகங்களில் இருந்தும் திருடர்கள் நல்லூர் ஆலயத்திற்கு வருகை தந்துள்ளமையால், ஆலயத்திற்கு செல்லும் பக்தர்கள் அவதானமாக செல்லுமாறு யாழ்ப்பாண பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர். 

இலங்கை இந்தியா போன்ற நாடுகளில் திருவிழாக்கள் என்பது ஒரு களியாட்டம் மாதிரி. இதை விட்டால் அந்த நாட்டு மக்களுக்கு என்ன ஒன்று கூடல் இருக்கின்றது? பிரிந்த உறவுகள் ,குடும்ப உறவுகள் ஒன்று கூடலாகவும் இதை பார்க்கலாம்.ஒவ்வொரு நாடுகளுக்கும் களியாட்டங்கள் வேறுபடும்.ஐரோப்பிய நாடுகளில் இப்படியான கொண்டாட்டங்கள் மத ரீதியாக இல்லாமல் மது தளம்ப ஊர் கொண்டாட்டங்கள் நடைபெறும். அங்கேயும் கள்ளர் காடையர் ஆக்கினைகள் நிறைய இருக்கும்.காவல் துறையும் அளவிற்கதிகமாக குவிக்கப்பட்டிருப்பர். அப்படியான கொண்டாட்டங்களை யாரும் குறை சொல்வதில்லை.

இந்த உலகு களவில்லாத உலகமா? இல்லையே!

  • கருத்துக்கள உறவுகள்

நகைகள் அணிந்து கோயிலுக்கு செல்வது வாழ்க்கை முறை. தாலிக்கொடியை கோயிலுக்கும் அணியாவிட்டால் அதை ஏன் கழுத்தில் கட்டவேண்டும்? கோயிலுக்குள் நுழையும் ஆண்கள் மேலாடையை நீக்க வேண்டும் என கடவுள் பணித்ததாக தெரியவில்லை. ஆனால், அது ஆலயங்களில் விதிமுறையாக உள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்
On 9/8/2025 at 00:33, யாயினி said:

கடந்த வாரம் கனடாவிலிருந்து நல்லூர் திருவிழாவிற்கு சென்றவராகத் தான் இருக்க வேணும்.கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் போகும் வழியில் இயற்கை கடன் கழிக்க போனவரை அடித்து, காயப்படுத்தி விட்டு 5 பவுண் நகை களற்றி எடுக்கபட்டதாக அறிந்தேன்.

கட்டண கழிப்பிடத்தில்…. காசு கொடுத்து, சிறுநீர் கழிக்க மனமில்லாமல், காட்டுப் பக்கம் ஒதுங்கியவருக்கு.. ஐந்து பவுண் சங்கிலியை பறி கொடுக்க வேண்டி வந்து விட்டது. 😂

பிற்குறிப்பு: இலங்கையில் ஒரு பவுண் (270,000) இரண்டு லட்சத்து எழுபதினாயிரம் ரூபாய்.

5 * 270,000 = 13,50000 பதின்மூன்று லட்சத்து ஐம்பதினாயிரம் ரூபாய் நட்டம். 🤔

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

நல்லூர் திருவிழாவில் நகைகளை களவாட இலங்கையின் பல பாகங்களில் இருந்தும் திருடர்கள் - பொலிஸார் எச்சரிக்கை

உலகின் பல நாடுகளில் உள்ள தமிழர் வித்தியாசம் வித்தியாசமான நகையுடன் போகினம் ...அப்ப பல பாகங்களில் இருந்து வருன் திருடர்கள்...வந்தால்தானே அந்த நாகரீகங்கள் பல இடமும் பரவும்...

44 minutes ago, தமிழ் சிறி said:

கட்டண கழிப்பிடத்தில்…. காசு கொடுத்து, சிறுநீர் கழிக்க மனமில்லாமல், காட்டுப் பக்கம் ஒதுங்கியவருக்கு.. ஐந்து பவுண் சங்கிலியை பறி கொடுக்க வேண்டி வந்து விட்டது. 😂

பிற்குறிப்பு: இலங்கையில் ஒரு பவுண் (270,000) இரண்டு லட்சத்து எழுபதினாயிரம் ரூபாய்.

5 * 270,000 = 13,50000 பதின்மூன்று லட்சத்து ஐம்பதினாயிரம் ரூபாய் நட்டம். 🤔

கட்டண பகுதிக்கு..போக வாடகை வான்சாரதி விடமாட்டார் ...அவர் தனக்கு கமிசன் உள்ள் ஊத்தைக் கடயில்தான் நிறுத்துவார்..அந்த கக்கூசுகளுக்குள் போறவேளை காடு சுகாதாரம் ...நானும் அனுபவப்பட்டனான்

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, alvayan said:

கட்டண பகுதிக்கு..போக வாடகை வான்சாரதி விடமாட்டார் ...அவர் தனக்கு கமிசன் உள்ள் ஊத்தைக் கடயில்தான் நிறுத்துவார்..அந்த கக்கூசுகளுக்குள் போறவேளை காடு சுகாதாரம் ...நானும் அனுபவப்பட்டனான்

கொழும்பு - யாழ்ப்பாணம் பேரூந்துகளில் போகும் போது.. கூடுமானவரை தண்ணீரை குறைத்து அருந்தி பிரயாணம் செய்வது நல்லது. அதிக நீர் அருந்தினால்... அடிக்கடி ஒன்றுக்கு போக வேண்டி வரும். பேரூந்து சாரதி நிறுத்தும் சில மலசல கூடங்களுக்குப் போனால், இல்லாத வியாதிகளையும் வாங்கிக் கொண்டு வரவேண்டி வரலாம்.

காட்டுப் பக்கம் ஒதுங்கினால்... தவிச்ச முயல் அடிப்பதற்கு என்றே... பல கள்வர்கள் பதுங்கி இருப்பார்கள் போலுள்ளது. 😂

  • கருத்துக்கள உறவுகள்

உண்டென்றால் அது உண்டு , இல்லையென்றால் அது இல்லை . .......... ! 😇

  • கருத்துக்கள உறவுகள்
On 8/8/2025 at 10:05, ஏராளன் said:

யாழ். நல்லூர் திருவிழாவில் நகைகளை களவாட இலங்கையின் பல பாகங்களில் இருந்தும் திருடர்கள் நல்லூர் ஆலயத்திற்கு வருகை தந்துள்ளமையால், ஆலயத்திற்கு செல்லும் பக்தர்கள் அவதானமாக செல்லுமாறு யாழ்ப்பாண பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.

உலகின் பல நாடுகளில் இருந்தும் என்று

தலைப்பு வந்திருக்க வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்
On 8/8/2025 at 16:22, நிழலி said:

இவர்களாலானும் சரி, மற்றவர்களானாலும் சரி, ஏன் நகைகள் அணிந்து செல்ல வேண்டும்?

70 களின் கடைசியில் இருந்தே சிறிய சங்கிலி ஒன்று இப்போதுவரை அணிந்துள்ளேன்.

யாராவது அறுத்தால் அதன் பின் அணியமாட்டேன்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
25 minutes ago, suvy said:

உண்டென்றால் அது உண்டு , இல்லையென்றால் அது இல்லை . .......... ! 😇

அட நீங்கள் வேற....🙂

பொது மேடைகளில் கடவுள் இல்லை என்பவர்களின் தனிப்பட்ட வாழ்க்கையை காண நேரிட்டால் மயங்கி வீழ்ந்து விடுவீர்கள்😄. செவ்வாய்,வெள்ளி விரத நாட்களுக்கென்று தனிப்பாத்திரம் வைத்து சமைப்பார்கள். அவ்வளவிற்கு சுத்த பத்தமானவர்கள்.அதை விட கொடுமை என்னவென்றால் இவர்களின் திருமணமோ அனைத்து கிரக,ராசி,யோனி பொருத்தங்களும் பார்த்து பெற்றோரால் நிச்சயிக்கப்பட்ட திருமணமாக இருக்கும். வைரவர்,காளி,சனீஸ்வரன் என்றால் தசை நடுங்குபவர்களாக இருப்பர்.

இது நான் கண்ட அனுபவம்.

உண்மையை தவிர வேறேதும் எழுதவில்லை.🙏

கடவுள் இல்லையென வாதாடுபவர்கள் பெரும்பாலோர் இந்துக்களாகவே இருப்பர். கிறிஸ்தவர்களும் முஸ்லீம்களும் நாத்தீக விடயத்தில் கொஞ்சம் விலகியே இருப்பர்.

உலக பொருளாதாரத்தில் தங்கத்தின் பங்கு எப்படியோ அது போல் தான் யாழ்ப்பாணத்தானுக்கும் தங்கம் முக்கியம். தமிழர்களின் பொருளாதாரத்தை சிங்களம் அழிக்க முடியாமல் இருப்பதற்கு அவர்கள் சேமித்து வைத்திருந்த தங்கமும் ஒரு காரணம் என்பார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஈழப்பிரியன் said:

70 களின் கடைசியில் இருந்தே சிறிய சங்கிலி ஒன்று இப்போதுவரை அணிந்துள்ளேன்.

யாராவது அறுத்தால் அதன் பின் அணியமாட்டேன்.

நான் ஊரு போனநேரம்....கண்ட சிலபேர் ...கேட்டது...என்ன தம்பி கையிலை ..கழுத்திலை ஒண்டையும் காணவில்லை ...எந்த நாடு....ஆ ஆ... கனடாவே ...அப்ப சரி.....இதுக்கு என்ன சொல்லப் போறீயள்... பிரியன் ....35 வருடம் மாடாய் உழைத்தும் கனடாவுக்கு அவப்பெயர் ஏற்படுத்திவிட்டேன்......என்னுடைய கையில் திருமண மோதிரம் தவிர வேறு இல்லை...மனைவியின் ஆக்கினைக்கு சிலவேளை..ஒரு சின்ன சங்கிலி போடுவதுண்டு..

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, ஈழப்பிரியன் said:

உலகின் பல நாடுகளில் இருந்தும் என்று

தலைப்பு வந்திருக்க வேண்டும்.

ஆமா ..சுவிஸ் முருகன் கோவிலில் இரண்டு யாழ்ப்பாண இளம் பெண்கள்..சங்கிலித் திருட்டில் ஈடுபட்டதாக ரீல் ஒன்றில் அவர்களை தேடுவதாகவும் கூறப்பட்டதே...அப்ப நீங்க சொல்வது சரி

Edited by alvayan

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, alvayan said:

ஆமா ..சுவிஸ் முருகன் கோவிலில் இரண்டு யாழ்ப்பாண இளம் பெண்கள்..சங்கிலித் திருட்டில் ஈடுபட்டதாக ரீல் ஒன்றில் அவர்களை தேடுவதாகவும் கூறப்பட்டதே...அப்ப நீங்க சொல்வது சரி

இதில் இரண்டு சிறு பிள்ளைகளின் கழுத்தை நெருத்து சங்கிலியை திருடியிருப்பதாக தந்தை பதிவொன்றை வெளியிட்டு இருக்கிறார்.ஜேர்மனை சேர்ந்த 3 பெண்கள் இதில் சம்பந்த பட்டிருக்கிறார்கள்..

  • கருத்துக்கள உறவுகள்
On 9/8/2025 at 01:22, நிழலி said:

இவர்களாலானும் சரி, மற்றவர்களானாலும் சரி, ஏன் நகைகள் அணிந்து செல்ல வேண்டும்?

இல்லாத இறைவன் இருக்கின்றார் எனில் தன்னை காண ஓடிவரும் பக்தர்களின் நகைக்களை கூட காப்பாற்ற முடியாதவரா அவர்?

இது ஒரு இறைவனின் சமூகத் தொண்டாக பார்க்கலாமே?

இன்று பவுண் விற்கும் விலையில் பணக்காரர்களிடமிருந்து எடுத்து (பறித்து) சில லட்சாதிபதிகளை அவர் உருவாக்குகிறார் தானே???😅

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.