Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ரணிலின் புண்ணியத்தினால் பார் லைசன்ஸ் எடுத்து பினாமிகளை வைத்து பார் நடாத்தி செல்வந்தராக உள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள் நடாளுமன்றில் ரணிலின் சிறப்புரிமை மீறல் குறித்து குரல்கொடுக்க வேண்டும்.

மக்களின் வயிற்றில் அடித்ததுதான் போகட்டும், கடைசி செஞ்சோற்றுக்கடன் செய்த புண்ணியமாவது கிடைக்கும்! 😁

  • Replies 99
  • Views 4.5k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Most Popular Posts

  • தமிழ் சிறி
    தமிழ் சிறி

    இலங்கையின் வரலாற்றிலேயே... முதன் முதலாக தேசியப்பட்டியல் ஊடாகப் பாராளுமன்ற உறுப்பினராகி, பிரதமராகி, ஜனாதிபதியாகி, பொருளாதார மீட்பராகி, கைதாகி, பிணையாகி.... எல்லாப் பிறப்பும் பிறந்திளைத்த எம்பெருமானார்.

  • ஈழப்பிரியன்
    ஈழப்பிரியன்

    கைதாவார்கள் என்று எதிர்பார்த்திருந்த ராஜபக்கச குடும்பம் தப்ப எதிர்பாராமல் ரணில் கைதாகியுள்ளார். அடுத்த தேர்தலில் வெல்ல இது ஒன்றே போதும்.

  • தமிழ் சிறி
    தமிழ் சிறி

    ஆஹா.... இந்தப் படங்களைப் பார்க்க அளவில்லாத மகிழ்ச்சியாக உள்ளது. 👍 மகிந்த, கோத்தா.... ஆகியோர், "உச்சா" போகும் நிலையில் உள்ளதாக சொல்கிறார்கள். 😂

  • கருத்துக்கள உறவுகள்

ஊழல் வாதிகளுக்கு தோள்கொடுத்து அடைக்கலம் கொடுத்து காப்பாற்றி வைத்தவர் இவர்தான். ஏன் இவர் ஊழல்வாதிகளை காப்பாற்ற வேண்டும்? சட்டத்தின்முன் ஏன் நிறுத்தவில்லை? இப்போ; ராஜபக்ச குடும்பத்தினருக்கு உளறல் எடுத்திருக்கும். முன்னே அவர்களுக்கு தெரியும் தங்கள் கைது செய்யப்படுவோம் என்று. அதனாலேயே வீடற்றவராக காண்பித்து மக்களிடம் பிச்சை எடுக்கிறார்கள். எந்த மக்களை சுரண்டினார்களோ ஏமாற்றினார்களோ அந்த மக்களை தமது சுயநலத்திற்காக பாவிக்கிறார்கள். இவர்களின் ஊழலால் தெருவுக்கு வந்து பிச்சை எடுக்கிறார்கள், இவர்களின் செல்வாக்கிற்காக போர் செய்து அவயவங்களை இழந்து, உறவுகளை இழந்து நீதிக்காய் உண்மைகளை வெளியிட்டவர்களை கொலை செய்து தனித்தவர்களுக்கு இந்த மக்கள் உணவும் வீடும் கொடுப்பார்களா? மக்களை எந்த விதத்திலும் ஏமாற்றி, கலவரத்தை தூண்டி தங்கள் நலனை பாதுகாப்பதில் இவர்கள் பலே கில்லாடிகள். இப்போ சட்டம் செய்ய வேண்டியது; இவர்களது ஊழல்கள் எல்லாவற்றையும் விசாரித்து உடனுக்குடன் மக்களுக்கு தெளிவுபடுத்தி நாட்டில் எவ்வளவு சுரண்டினார்கள், அதை என்ன செய்தார்கள், யாரெல்லாம் உடந்தை என்பதை வெளிச்சமாக வெளியிடவேண்டும். இவர்களால் கொலை செய்யப்பட்டவர்களை வெளியிட வேண்டும். இவர்களால் நாட்டிற்கு ஏற்பட்ட இழப்புகளை வெளியிட வேண்டும். இல்லையேல் நாட்டில் கலவரம் ஏற்பட்டு கொலைகள் நடப்பதை தவிர்க்க முடியாது. இதனால் தமிழர்மேலேயே வன்முறைகள் திரும்பும். அனுமதியற்ற, தேவையற்ற விகாரைகளை யார் கட்டினார்கள், எங்கிருந்து பணம் வந்தது, எதற்காக கட்டினார்கள் என்கிற சட்ட விசாரணை செய்து தண்டிக்கப்பட வேண்டும். நிஞாயமான முறையில் விசாரணைகள் நடைபெறாமை, சட்டத்தை தமக்கு சார்பாக வளைத்தமையே இப்படிப்பட்டவர்கள் கைது செய்யப்படும்போது அரசியல் பழிவாங்கல் என்று தப்பிப்பதும், மக்களை தூண்டி விடுவதும் நடைபெறுகிறது. சட்டம் தன் வேலையை செய்திருந்தால், தப்பு செய்பவர் தண்டனை பெறுவார் என்கிற மனநிலை மக்கள் மனதில் நிலைத்திருக்கும். சாட்சியத்தின் விசாரணைகளின் பெயரிலேயே இவர்களுக்கு தண்டனை என்பதை மக்கள் உணரச்செய்ய வேண்டும். பாவம் மக்கள், தொடர்ந்து ஏமாற்றப்படுகிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

ஊழல் விசாரணை வருகிற வரையும் ஊடகவியலாளர் சந்திப்பு, அறிக்கை, கூட்டம், வெளிநாட்டுப்பயணம் என பிசியாக இருக்கும் அரசியல்வாதிகள் விசாரணை என்றவுடன் உலகத்தில் இல்லாத நோய்கள் எல்லாம் வந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு விடுகிறார்கள். இதிலிருந்து விளங்குவது என்ன? ஏன் மக்கள் அதை உணர்கிறார்கள் இல்லை? இவரது கைதுக்கு சரியான விளக்கம் கொடுக்கப்பட்டு மக்கள் யதார்த்தத்தை உணர்ந்து, நீதிமன்றத்தின் மேல் நம்பிக்கை வைக்கச் செய்தால் செய்தால் மட்டுமே அடுத்து வரும் பெரிய தலைகளை இலகுவாக கைது செய்ய முடியும். இப்பவே தங்கள் கைதுகளை தடுக்கும் வழிமுறைகளை தயார் செய்ய தொடங்கி விடுவார்கள் ராஜ பாக்ஸர்கள். இன்றைக்கே மஹிந்தா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. ஊழல்வாதிகளை சட்டத்தின் முன் நிறுத்துவேன் என்பதே ஜனாதிபதியின் தேர்தல் வாக்குறுதி அதையே செய்வதாக விளக்க வேண்டும். ஆம், அவர்கள் புலிகளை கொலை செய்வதற்கு மக்கள் வாக்களித்தார்கள் என்று சர்வதேசத்திலும் நாட்டிலும் கூறி தமிழ் மக்களை அழித்து சாதித்தார்கள் யாரும் தட்டிக்கேட்கவில்லை. ஊழல்வாதிகளை கைது செய்தவுடன் நாடும் சர்வதேசமும் ஏதோ தியாகியை கைது செய்வதுபோல் கொந்தளிக்கிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, தமிழ் சிறி said:

Ranil-Wickremesinghe.jpg

இலங்கையின் வரலாற்றிலேயே... முதன் முதலாக தேசியப்பட்டியல் ஊடாகப் பாராளுமன்ற உறுப்பினராகி, பிரதமராகி, ஜனாதிபதியாகி, பொருளாதார மீட்பராகி, கைதாகி, பிணையாகி....

எல்லாப் பிறப்பும் பிறந்திளைத்த எம்பெருமானார். 😂 🤣

Anusha Nadarajah

நாங்களும் ஏதாவது செய்தோம் என்று அனுராவுக்கும் ஒரு பதிவு தேவை அல்லவா??

  • கருத்துக்கள உறவுகள்

ரணில் ஏன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்?

விளக்கமறியலில் வைக்கப்பட்ட முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, உயர் இரத்த அழுத்தம் மற்றும் அதிகரித்த சர்க்கரை அளவு காரணமாக வைத்திய  ஆலோசனையின் பேரில் நேற்று (22) இரவு சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் விளக்கமறியலைத் தொடர்ந்து, நேற்று (22) இரவு பல அரசியல்வாதிகள் சிறைச்சாலைக்குச் சென்றனர்.

முன்னாள் அமைச்சர்கள் துமிந்த திசாநாயக்க மற்றும் பிரசன்ன ரணதுங்க, பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் உள்ளிட்டோர் ஆதரவாளர்கள் குழுவுடன் சிறைச்சாலைக்கு வந்தனர்.

இருப்பினும், அவர்கள் உள்ளே நுழைய அனுமதிக்கப்படவில்லை, பின்னர் வெளியே காத்திருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

https://www.tamilmirror.lk/செய்திகள்/ரணில்-ஏன்-வைத்தியசாலையில்-அனுமதிக்கப்பட்டார்/175-363333

  • கருத்துக்கள உறவுகள்

image_0a7cea9ffa.jpg?resize=630%2C355&ss

விளக்கமறியலில் வைக்கப்பட்ட ரணில் விக்ரமசிங்க சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதி!

எதிர்வரும் 26ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்ட முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

உயர் இரத்த அழுத்தம் மற்றும் இரத்தத்தில் சீனியின் அளவு அதிகரித்ததன் காரணமாக வைத்திய ஆலோசனையின் பேரில் முன்னாள் ஜனாதிபதி சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

வெளிநாட்டுப் பயணத்தின் போது அரசாங்க நிதியை முறைகேடாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நேற்று (22) மதியம் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்டார்.

இந்தக் குற்றச்சாட்டு தொடர்பாக விசாரணை நடத்துவதற்காக அவர் திணைக்களத்திற்கு அழைக்கப்பட்டபோது இவ்வாறு கைது செய்யப்பட்டார்.

அதன்படி, ரணில் விக்ரமசிங்க நேற்றையதினம் பிற்பகல் 03.00 மணியளவில் கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தனது பதவிக் காலத்தில், 2023 செப்டம்பர் 22 மற்றும் 23 ஆகிய திகதிகளில் ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் கலந்து கொள்வதற்காக அமெரிக்காவின் நியூயோர்க்கிற்குச் சென்றிருந்த நிலையில் சுற்றுப்பயணத்தை முடித்து நாட்டிற்குத் திரும்புவதற்கு முன்பு, முன்னாள் ஜனாதிபதி தனது மனைவி மைத்ரி விக்ரமசிங்கவின் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்ள இங்கிலாந்து சென்றிருந்தார்.

இங்கிலாந்தின் வோல்வர்ஹாம்டன் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பேராசிரியர் ஜான் ராஃப்டர், லண்டனில் உள்ள இலங்கை உயர் ஸ்தானிகராலயம் மூலம் முன்னாள் ஜனாதிபதி மற்றும் அவரது மனைவிக்கு அதிகாரப்பூர்வமாக அழைப்பிதழ் வழங்கியிருந்தார்.

இருப்பினும், முன்னாள் ஜனாதிபதி சம்பந்தப்பட்ட சுற்றுப்பயணத்தின் போது அரசாங்க நிதியைத் தவறாகப் பயன்படுத்தியதாகக் கூறி ஒரு நபர் சமீபத்தில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முறைப்பாடு அளித்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அதன்படி, விசாரணை தொடங்கப்பட்டு, முன்னாள் ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏகநாயக்க மற்றும் விக்ரமசிங்கவின் தனிப்பட்ட உதவியாளர் சாண்ட்ரா பெரேரா ஆகியோரிடமிருந்து சமீபத்தில் அந்தத் திணைக்களம் வாக்குமூலங்களைப் பதிவு செய்தது.

அதைத் தொடர்ந்து, விக்ரமசிங்கவை நேற்று குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் ஆஜராகுமாறு அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் அவர் நேற்று காலை 9.00 மணியளவில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் ஆஜரானார்.

சுமார் 4 மணி நேரம் வாக்குமூலங்களைப் பதிவு செய்த பின்னர், முன்னாள் ஜனாதிபதி பிற்பகல் 1.15 மணியளவில் கைது செய்யப்பட்டார்.

இந்நிலையில் நேற்று (22) இரவு முன்னாள் அமைச்சர்கள் துமிந்த திசாநாயக்க, பிரசன்ன ரணதுங்க மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் உள்ளிட்டோர் ரணில் விக்கிரமசிங்கவை சந்திக்க மகசின் சிறைச்சாலைக்கு சென்றுள்ளனர்.

ஆனால், அவர்கள் சிறைச்சாலையை அடைந்த போதிலும் உள்ளே செல்ல அனுமதிக்கப்படவில்லை என கூறப்படுகிறது.

இலங்கை வரலாற்றில் முன்னாள் ஜனாதிபதி ஒருவர் கைது செய்யப்படுவது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2025/1444334

  • கருத்துக்கள உறவுகள்

articles2Fzwc8vmvGdeBUWOSEDj5i.webp?resi

சிறைச்சாலை வைத்தியசாலையில் உள்ள ரணிலை சந்திக்க சஜித் வருகை!

சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்திப்பதற்காக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச வருகை தந்துள்ளார்.

இதேவேளை, இன்று (23) காலை 9.30 மணியளவில், சஜித் பிரேமதாச மற்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார ஆகியோர் மெகசின் சிறைச்சாலைக்கு வந்திருந்தனமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, நேற்று (22) இரவு முன்னாள் அமைச்சர்கள் துமிந்த திசாநாயக்க, பிரசன்ன ரணதுங்க மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் உள்ளிட்டோர் ரணில் விக்கிரமசிங்கவை சந்திக்க மகசின் சிறைச்சாலைக்கு சென்றுள்ளனர்.

ஆனால், அவர்கள் சிறைச்சாலையை அடைந்த போதிலும் உள்ளே செல்ல அனுமதிக்கப்படவில்லை என கூறப்படுகிறது.

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை எதிர்வரும் 26 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் நேற்று (22) உத்தரவிட்டது.

அதன்படி, விளக்கமறியலில் வைக்கப்பட்ட முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, மருத்துவ ஆலோசனைக்கு அமைய சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Athavan News
No image preview

சிறைச்சாலை வைத்தியசாலையில் உள்ள ரணிலை சந்திக்க சஜித் வருகை!

சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்திப்பதற்காக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச வருகை தந்துள்ளார். இதேவேளை, இன்று (23) காலை 9.30 மணியளவில், சஜ
  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, குமாரசாமி said:

மகிந்த,கோத்தாவில் நினைத்தபடி கை வைக்க மாட்டார்கள் என நினக்கின்றேன்.ஏனென்றால் பெரிய அரச பதவிகளிலும் இராணுவ,போலிஸ் துறைகளிலும் மகிந்த,கோத்தா ஆதரவாளர்களும் விசுவாசிகளும் நிறையவே இருக்கின்றார்கள்.

அப்படி அவர்களை கைது செய்தால் ஆட்சி கவிழ்ப்புக்கு நிறைய சந்தர்ப்பங்கள் உண்டு.

ஆம்.... மகிந்த, கோத்தா எல்லாம் பேட்டை ரவுடிகள்.

அவர்களில் கை வைப்பது.... சொந்த செலவில் சூனியம் வைப்பதற்கு சமன் என்று அனுரா தரப்பு ஏற்கெனவே கணக்குப் போட்டு வைத்திருக்கும் என்றே நினைக்கின்றேன். ஆக மிஞ்சினால் ... மைத்திரியையும் ஈஸ்ட்டர் தாக்குதல் சம்பந்தமாக உள்ளே தூக்கி வைத்து.... அந்தப் பயத்தில் மகிந்த, கோத்தாவை நுனிக் கதிரையில் உட்கார வைக்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, விசுகு said:

நாங்களும் ஏதாவது செய்தோம் என்று அனுராவுக்கும் ஒரு பதிவு தேவை அல்லவா??

ஜே. ஆர். ஜெயவர்தனவின் மருமகனும், கை சுத்தமானவர் என்று போலி பிம்பத்துடன் வலம் வந்த ரணிலை கையில் விலங்கிட்டு கைது செய்ததன் மூலம்... முன்னாள் அதி உத்தம ஜனாதிபதியை சிறைக் கட்டிலில் படுக்க வைத்ததை அனுரா அரசு தனது சாதனையாக கருதலாம். இந்தச் சம்பவம் இலங்கை வரலாற்றில் என்றும் நினைவில் கொள்ளக் கூடிய சம்பவமாகவே இருக்கும்.

ரணிலின் வாழ்க்கையில் பல வெற்றிகள், பதவிகள் போன்றவவை அவர் எதிர்பார்க்காத அளவிற்கு ஆச்சரியமூட்டும் வகையிலேயே அமைந்து இருந்தது. அதே போல் இந்தக் கைதும்.. அவருக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

அனுரா... இந்தக் கைதின் மூலம் நடைபெற இருக்கும் மாகாண சபைத் தேர்தல் வெற்றிக்கு (வாக்கு) மூலதனம் இட்டுள்ளார் என்றே நான் நினைக்கின்றேன்.

  • கருத்துக்கள உறவுகள்

ஊழலை ஒழிக்க வேண்டும். அதில் மாற்றுக் கருத்தில்லை. ஆனால், ரணிலைவிடப் பெரும் ஊழல்வாதிகள் சுனாமி நிதியிலிருந்து போர்விமானக் கொள்வனவு என்று இதனைச் சுட்டிய ஊடகவியலாளர் ல.விக்ரமதுங்க போன்றவர்களையே கொலைசெய்தவர்களெனப் பலர் வெளியே. தையிட்டி முதல் மட்டக்களப்பு மேய்சல்தரை வரையான பல்கிப்பெருகியதும் அவசரமாகத் தீர்வுகாண வேண்டிய விடயங்கள் குறித்து அனுர அரசுக்கு அக்கறையில்லை. ரணிலின் கைதுசெய்து அதனை ஒரு பேசுபொருளாக்கி உலகிடம் தானொரு உழலற்ற அரசை நடாத்துவதாகப் படம் காட்டும் அடையாள நடவடிக்கைகள். அனுர அரசிடம் நேர்மையிருந்தால் செம்மணியை அனைத்துலக நிபுணர்களை அழைத்து விசாரணை செய்துகாட்ட முடியுமா? எனவே, சிங்கள அரசியல்வதிகள் தமக்கிடையே குத்துப்பட்டாலும் இனமென்று வந்தால் ஒன்றாகி நிற்பவர்கள். தமிழினத்தை அழிப்பதில் மாற்றுக்கருத்தற்றோர். இந்தக் கைதால் தமிழருக்கு எந்த நன்மையாவது உண்டா? இனப்படுகொலையின் பங்காளிகள் ஒருவன் ஊழலுக்காகக் கைது செய்யப்பட்டுள்ளான்.

நட்பார்ந்த நன்றியுடன்

நொச்சி

  • கருத்துக்கள உறவுகள்

New-Project-215.jpg?resize=600%2C300&ssl

ரணிலை சந்திக்க வருகை தந்த மஹிந்த ராஜபக்ஷ!

சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்திப்பதற்காக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவு சற்று முன்னர் சிறைச்சாலைக்கு வருகை தந்துள்ளார்.

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தால் நேற்றையதினம் (22) கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை எதிர்வரும் 26 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்நிலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்ட முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க,
மருத்துவ ஆலோசனைக்கு அமைய சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் பல முக்கிய அரசியல் பிரமுகர்களும் சிறைச்சாலைக்கு சென்று அவரை சந்தித்து வருகின்றனர்.

https://athavannews.com/2025/1444344

  • கருத்துக்கள உறவுகள்

New-Project-1-11.jpg?resize=600%2C300&ss

ரணிலை சந்தித்த சஜித் ஊடகங்களுக்கு கருது தெரிவித்தார்!

சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்திப்பதற்காக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச வருகை தந்திருந்த நிலையில் ஊடகங்களுக்கு இவ்வாறு கருத்து தெரிவித்தார்.

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் கைது தொடர்பில் மூன்றாம் தரப்பினர் ஒருவர் முன்கூட்டியே கணித்திருக்கின்றமை நாட்டின் ஜனநாயகத்தையும் நீதித்துறை மீது மக்கள் கொண்டுள்ள நம்பிக்கையையும் கேள்விக்குள்ளாக்கியுள்ளது.

சட்டத்தை அமுல்படுத்துவது தொடர்பாக சமூக ஊடகங்களில் ஒருவர் கணிப்புகளை வெளியிட்டு நீதிமன்றத்தை அவமதிப்பு செய்துள்ளார்.

இது மிகவும் ஆபத்தான சூழ்நிலை, ஜனநாயகத்தைப் பாதுகாக்க வேண்டும் என்றால், சட்டத்தை அமுல்படுத்தும் முறை சரியானது என்று நாட்டு மக்கள் நம்ப வேண்டும்.

சட்டத்தை அமுல்படுத்துவதும், அது குறித்து மக்கள் கொண்டுள்ள புரிதலும் மிகவும் முக்கியம்.

சமூக ஊடகங்களில் ஒருவர் கணிப்புகளை வெளியிடுவதால் குறித்த செயல்பாட்டில் ஒரு தீவிரமான சூழ்நிலை உருவாகியுள்ளது.

நாட்டின் சட்டத்தை அமுல்படுத்துவது வெளிப்படையானதாகவும், அரசியல் சாராததாகவும் மேற்கொள்ளப்பட வேண்டும், அது அதே முறையில் செய்யப்பட வேண்டும். இல்லையெனில், மூன்றாம் தரப்பினர் வெளியே வந்து இதுதான் நடக்கிறது என்று கூறுவது உண்மையில் சட்டவிரோதமானது.

அதன் மீது உடனடியாக நடவடிக்கை எடுப்பது முக்கியம். நான் அவரைச் சந்தித்தேன். அவர் நலமாக இருக்கிறார். மேலும், அவரது உடல்நிலை பாதுகாக்கப்பட வேண்டும். மருந்துகள் வழங்கப்படும் என்று நாங்கள் நம்புகிறோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இன்று காலை 9.30 மணியளவில், சஜித் பிரேமதாசவுடன் இணைந்து ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார ஆகியோர் வெலிக்கடை மெகசின் சிறைச்சாலைக்கு சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2025/1444350

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, தமிழ் சிறி said:

New-Project-215.jpg?resize=600%2C300&ssl

ரணிலை சந்திக்க வருகை தந்த மஹிந்த ராஜபக்ஷ!

உந்தக்கார் இஞ்சை ஜேர்மனியிலையே நாய் பேய் விலை.அதுசரி கொள்ளை அடிச்ச காசு இருக்க பயமேன்.😂

  • கருத்துக்கள உறவுகள்

image_0a7cea9ffa.jpg?resize=630%2C355&ss

கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார் ரணில்!

சிறைச்சாலை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றுமாறு பரிந்திரைக்கப்பட்டுள்ளது.

அவரது நோய் நிலையை பரிசோதித்த சிறைச்சாலை வைத்தியர்கள் வழங்கிய பரிந்துரைக்கு அமைய அவர் மாற்றப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

https://athavannews.com/2025/1444376

  • கருத்துக்கள உறவுகள்

537258038_1345835650441566_5066097937640

அரசியல் வாதிகள் செய்யும் சிறிய குற்றங்களுக்காக அவர்களை சிறையில் அடைப்பது தவறு - மகிந்த

சிறைச்சாலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை பார்வையிட முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சென்றிருந்தார். இதன்போது ஊடகங்களுக்கு கருத்துவெளியிட்ட மகிந்த ராஜபக்ஷ

சிறிய குற்றங்களுக்காக அரசியல் தலைவர்களை சிறையில் அடைப்பது குறித்து வருத்தப்படுவதாகவும், அரசாங்கத்தின் நடவடிக்கைகள் குறித்து மக்களுக்கு நல்ல புரிதல் இருப்பதாகவும், இதுபோன்ற செயல்கள் பழிவாங்கும் நடவடிக்கையே தவிர வேறில்லை என்றும் கூறிய மஹிந்த ராஜபக்ஷ, மக்கள் இன்னும் தன்னை நேசிக்கிறார்கள் என்றும் கூறினார்.

"நாங்கள் மக்களை நேசிக்கிறோம். அதனால், மக்கள் நம்மை நேசிக்கிறார்கள்... என கூறினார்.

நம்ம யாழ்ப்பாணம்

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, தமிழ் சிறி said:

அரசியல் வாதிகள் செய்யும் சிறிய குற்றங்களுக்காக அவர்களை சிறையில் அடைப்பது தவறு -

அப்போ ரணில் தவறு செய்தார் என்பதை ஏற்றுக்கொள்கிறார் இவர். அப்போ மக்கள் சிறிய தவறு செய்தாலும் வாழ்நாள் எல்லாம் சிறையில் வைத்து கண்ணை பிடுங்கி அடித்து சித்திரவதை செய்யலாமென்கிறார் இப்போ ரணிலை வைத்து இவர்கள் கைது செய்யப்படலாம். அனுரா அரசியல் பழிவாங்கல் செய்கிறார் என்றால்; இவர்களும் பழிவாங்கியவர்கள் என்பதை ஒத்துக்கொள்கிறார். சரி.... அவர் அரசியல் பழிவாங்கல் செய்தால், அவருக்கு எதிராக வழக்குத்தாக்கல் செய்யுங்கள் நீதிமன்றத்தில் நம்பிக்கை இருந்தால். இல்லையென்றால், இந்த நீதிமன்றத்தில் தானே போர்க்குற்ற விசாரணை செய்வோமென எப்படி அடம் பிடித்தீர்கள்?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ரணிலுக்கு வீட்டு உணவுகளை கொடுக்க அனுமதி - சிறைச்சாலை ஊடகப் பேச்சாளர்

23 AUG, 2025 | 03:10 PM

image

சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு, வீட்டிலிருந்து கொண்டுவரப்படும் உணவுகளை கொடுப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை ஊடகப் பேச்சாளர் ஜகத் வீரசிங்க தெரிவித்துள்ளார்.

ரணில் விக்ரமசிங்க முன்வைத்த கோரிக்கைக்கு இணங்க, இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாக இருந்த காலத்தில், தனது மனைவியான பேராசிரியர் மைத்ரி விக்ரமசிங்கவின் பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்வதற்காக லண்டனுக்கு தனிப்பட்ட விஜயம் செய்வதற்காக அரச நிதியை தவறாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டில் குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளால் வெள்ளிக்கிழமை  (22) பிற்பகல் கைது செய்யப்பட்ட நிலையில் கொழும்பு கோட்டை நீதிவான்  நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் அவரை எதிர்வரும் 26 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டது. 

இதனையடுத்து, உயர் இரத்த அழுத்தம் மற்றும் அதிக சர்க்கரை அளவு காரணமாக மருத்துவ ஆலோசனையின் பேரில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

உடல்நலக்குறைவு காரணமாக ரணில் விக்ரமசிங்கவுக்கு வீட்டிலிருந்து கொண்டுவரப்படும் உணவுகளை கொடுப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டதாக  சிறைச்சாலை ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார்.

https://www.virakesari.lk/article/223192

  • கருத்துக்கள உறவுகள்

ரணில் விக்ரமசிங்க கொழும்பு தேசிய வைத்தியசாலையின் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி

சிறைச்சாலை வைத்தியசாலையில் இருந்து கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாக இருந்த காலத்தில், தனது மனைவியான பேராசிரியர் மைத்ரி விக்ரமசிங்கவின் பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்வதற்காக லண்டனுக்கு தனிப்பட்ட விஜயம் செய்வதற்காக அரச நிதியை தவறாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டில் குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளால் வெள்ளிக்கிழமை (22) பிற்பகல் கைது செய்யப்பட்ட நிலையில் கொழும்பு கோட்டை நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் அவரை எதிர்வரும் 26 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதனையடுத்து, உயர் இரத்த அழுத்தம் மற்றும் அதிக சர்க்கரை அளவு காரணமாக மருத்துவ ஆலோசனையின் பேரில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

உடல்நலக்குறைவு காரணமாக ரணில் விக்ரமசிங்கவுக்கு வீட்டிலிருந்து கொண்டுவரப்படும் உணவுகளை வழங்குவதற்கு அனுமதி வழங்கப்பட்டது.

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் உடல் நிலையை கருத்தில் கொண்டு அவரை கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றுவதற்கு சிறைச்சாலை வைத்தியர்கள் தீர்மானித்தனர்.

இதனையடுத்து, சிறைச்சாலை தலைமையகத்தின் அனுமதியுடன் ரணில் விக்ரமசிங்க, கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு தற்போது மாற்றப்பட்டார்.

கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தற்போது தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Kalmunaiwin


  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, alvayan said:

அட இதுக்காக கொழும்பு போக ரெடியாகின்னான் ..பிழைச்சுப் போச்சு..

உங்கள் ஆவல் புரிந்து கொள்ள முடிகிறது...😝

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ரணிலை கைதுசெய்து பிணை வழங்குவதை எதிர்த்தமையானது முறையான ஆலோசனை அற்றதாகவே தோன்றுகிறது : எம்.ஏ.சுமந்திரன்

23 AUG, 2025 | 04:34 PM

image

பாரிய குற்றங்களுக்காக அரச தலைவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். எவரும் சட்டத்திற்கு மேலானவர்கள் இல்லை என இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். 

ஆனால் நீதிமன்றில் முன்வைத்த குற்றத்துக்காக  ரணில் விக்ரமசிங்கவை ஒரு வெள்ளிக்கிழமை கைது செய்து பிணை வழங்குவதை எதிர்த்தமை என்பது, முறையான ஆலோசனை அற்றதாகவே தோன்றுகிறது என்றும்  எம்.ஏ.சுமந்திரன் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

ரணில் விக்கிரமசிங்கவின் கைது தொடர்பில் தனது உத்தியோகபூர்வ எக்ஸ் பக்கத்திலேயே இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

535266362_4058854414337414_4803705766336

https://www.virakesari.lk/article/223206

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, தமிழ் சிறி said:

சிறிய குற்றங்களுக்காக அரசியல் தலைவர்களை சிறையில் அடைப்பது குறித்து வருத்தப்படுவதாகவும்

3 hours ago, ஏராளன் said:

பாரிய குற்றங்களுக்காக அரச தலைவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்

சிறிய குற்றம் என்கிறார் மகி, பெரிய குற்றம் என்கிறார் சுமி. இருவரும்கதைத்து ஒரு முடிவுக்கு வாங்க. வெள்ளிக்கிழமை விசாரிக்க கூப்பிடிறானுகள் , உள்ளுக்குள்ள அள்ளிப்போட்டாலும் இரெண்டு நாளைக்கு மல்லாக்கக் கிடக்கனும் , திங்கள் கிழமை வாறன் என்று சொல்ல குள்ள நரியின் கள்ளப் புத்திக்கு தெரியலயே. குள்ள நரிக்கும் மெல்ல அடி சறுக்கும் போல.

Edited by நந்தி

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, விசுகு said:

உங்கள் ஆவல் புரிந்து கொள்ள முடிகிறது...😝

கொழும்புக் காத்தை சுவாசித்தவர்களுக்கு புரிவது புதிதல்லவே...😄

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
10 hours ago, தமிழ் சிறி said:

அவரது நோய் நிலையை பரிசோதித்த சிறைச்சாலை வைத்தியர்கள் வழங்கிய பரிந்துரைக்கு அமைய அவர் மாற்றப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

உப்பிடி எல்லா அரசியல்வாதிகளையும் தூக்கி உள்ளுக்கு போட அவைக்குள்ள வருத்தங்கள் எல்லாம் ஓட்டமெற்றிக்காய் வெளியிலை வரும் போல கிடக்கு....😂

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, ஏராளன் said:

ரணிலை கைதுசெய்து பிணை வழங்குவதை எதிர்த்தமையானது முறையான ஆலோசனை அற்றதாகவே தோன்றுகிறது : எம்.ஏ.சுமந்திரன்

23 AUG, 2025 | 04:34 PM

image

பாரிய குற்றங்களுக்காக அரச தலைவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். எவரும் சட்டத்திற்கு மேலானவர்கள் இல்லை என இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். 

ஆனால் நீதிமன்றில் முன்வைத்த குற்றத்துக்காக  ரணில் விக்ரமசிங்கவை ஒரு வெள்ளிக்கிழமை கைது செய்து பிணை வழங்குவதை எதிர்த்தமை என்பது, முறையான ஆலோசனை அற்றதாகவே தோன்றுகிறது என்றும்  எம்.ஏ.சுமந்திரன் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

ரணில் விக்கிரமசிங்கவின் கைது தொடர்பில் தனது உத்தியோகபூர்வ எக்ஸ் பக்கத்திலேயே இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

535266362_4058854414337414_4803705766336

https://www.virakesari.lk/article/223206

இலங்கை போலிசார் பிணை வழங்க மறுப்பது வழமையாக நடைபெறும் விடயம்தான். சாதாரண குடிமக்களுக்கும் இதுதான் இலங்கையில் வழமையான நடைமுறை.

இலங்கையின் முன்னாள் அதிபர் என்பதற்காக இங்கு விலக்கு அளிக்கப்படவேண்டும் என்றால் இலங்கையில் சாதாரண பொதுமக்கள் முறைகேடாக தண்டிக்கப்படுவதை ஏற்கலாமா? சாதாரண பொதுமக்களுக்கும் இவ்விடயத்தில் விலக்கு அளிக்கலாமே!

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, தமிழ் சிறி said:

ஜே. ஆர். ஜெயவர்தனவின் மருமகனும், கை சுத்தமானவர் என்று போலி பிம்பத்துடன் வலம் வந்த ரணிலை கையில் விலங்கிட்டு கைது செய்ததன் மூலம்... முன்னாள் அதி உத்தம ஜனாதிபதியை சிறைக் கட்டிலில் படுக்க வைத்ததை அனுரா அரசு தனது சாதனையாக கருதலாம். இந்தச் சம்பவம் இலங்கை வரலாற்றில் என்றும் நினைவில் கொள்ளக் கூடிய சம்பவமாகவே இருக்கும்.

ரணிலின் வாழ்க்கையில் பல வெற்றிகள், பதவிகள் போன்றவவை அவர் எதிர்பார்க்காத அளவிற்கு ஆச்சரியமூட்டும் வகையிலேயே அமைந்து இருந்தது. அதே போல் இந்தக் கைதும்.. அவருக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

அனுரா... இந்தக் கைதின் மூலம் நடைபெற இருக்கும் மாகாண சபைத் தேர்தல் வெற்றிக்கு (வாக்கு) மூலதனம் இட்டுள்ளார் என்றே நான் நினைக்கின்றேன்.

அவர் பற்றி இன்னமும் அறியாத தகவல்கள்...

கொழும்பு CRFC மைதானத்துக்கு அவ்வப்போது வரும் அவர் , அந்த மைதானத்தின் Pavilion மாடியில் அமைந்திருக்கும் மதுபானச்சாலையில் அமர்ந்து மது அருந்தியபடி அங்கே ரக்பி விளையாடிக்கொண்டிருக்கும் பதின்ம வயது மற்றும் இருபதின் ஆரம்ப இளைஞர்களை கவனித்துக்கொண்டிருப்பார். அதில் பிருஷ்டம் பெரிதான சிறார்களை/இளையோரை குறிவைத்து கீழே இறங்கி, " வீட்டுக்கு வருகிறாயா? இலங்கை அணியில் வாய்ப்பு வாங்கி தருகிறேன் " என்பார்.

இவ்வாறாக அவர் இலங்கையை " தூக்கி நிறுத்தினார் "

ithuvum facebook prathithaan

மிஸ்டர் கிளீன் பற்றி எப்படியெல்லாம் எழுதுறாங்க..

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.