Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Russia-fe.jpg?resize=696%2C375&ssl=1

ரஷ்யாவிலுள்ள அணுமின் நிலையம் மீது உக்ரேன் ட்ரோன் தாக்குதல்!

உக்ரேனின் 34வது சுதந்திர தினம் நேற்றையதினம் கொண்டாடப்பட்ட நிலையில் ரஷ்யாவிலுள்ள அணுமின் நிலையம் மீது உக்ரேன் ட்ரோன் தாக்குதல்களை மேற்கொண்டுள்ளது.

இதேவேளை இதற்கு முன்பு உக்ரேன் இராணுவம், தெற்கு ரஷ்யாவிலுள்ள எண்ணெய் சுத்தீகரிப்பு நிலையம் மீது தாக்குதல் நடத்தியிருந்த நிலையில் கடந்த 3 நாட்களாக தீயானது தொடர்ந்து எரிந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக முன்னெடுக்கப்படுகின்ற உக்ரேன்-ரஷ்யப்  போரை முடிவுக்கு கொண்டு வருவதற்கு அமெரிக்காவின் முயற்சிகள் தொடர் தோல்வியை சந்தித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

இதேவேளை நேற்றையதினம் உக்ரேனின் 34வது சுதந்திர தினம் கொண்டாடப்பட்ட நிலையிலேயே ரஷ்ய அணு மின் நிலையம் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
ரஷ்யாவின் குர்ஷ்க் பகுதியில் உள்ள அணு மின் நிலையம் மீது உக்ரேன் ட்ரோன் தாக்குதல் நடத்தியுள்ளது.

இந்த தாக்குதலில் அணு மின் நிலையத்தின் ஒரு பகுதி எரிந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவ இடத்துக்கு விரைந்த தீயணைப்புத்துறையினர் தீயை அணைப்பதற்கு போராடி வருகின்றனர்.

இத் தாக்குதலில் எவருக்கும் காணம் ஏற்படவில்லை ரஷ்ய இராணுவம் தெரிவித்துள்ளது.
ஏற்கனவே தெற்கு ரஷ்யாவில் எண்ணெய் சுத்தீகரிப்பு நிலையம் மீது, உக்ரேன் டிரோன் தாக்குதல் காரணமாக கடந்த 3 நாட்களாக தீபற்றி எரிந்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

Athavan News
No image preview

ரஷ்யாவிலுள்ள அணுமின் நிலையம் மீது உக்ரேன் ட்ரோன் தாக்குதல்!

உக்ரேனின் 34வது சுதந்திர தினம் நேற்றையதினம் கொண்டாடப்பட்ட நிலையில் ரஷ்யாவிலுள்ள அணுமின் நிலையம் மீது உக்ரேன் ட்ரோன் தாக்குதல்களை மேற்கொண்டுள்ளது. இதேவேளை இதற்கு முன்பு உக்ரேன் இராணுவம், தெற்கு ரஷ்யாவ
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

உக்ரைனுக்கு இந்தக் கிழமை நல்ல சாத்து, சாத்தப்படும் என்று...

அரசியல் ஆய்வாளர்கள் அடித்து சொல்கிறார்கள். 😂

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
10 hours ago, தமிழ் சிறி said:

உக்ரைனுக்கு இந்தக் கிழமை நல்ல சாத்து, சாத்தப்படும் என்று...

அரசியல் ஆய்வாளர்கள் அடித்து சொல்கிறார்கள். 😂

உக்ரேனுக்கு சாத்துப்படி டெய்லி தானே நடக்குது. 😎

ஆனால் ஒன்று மேற்குலகம் காசாவில் செய்யும் அழிவுகளை போல் ரஷ்யா உக்ரேனுக்கு செய்யவில்லை. செய்யவும் நினைக்கவில்லை.மக்களை எலும்பும் தோலுமாக அலைய விடவுமில்லை.

ஒரே நேரத்தில் இரண்டு அழிவுப்போர்கள் நடக்கின்றன. அதில் எது மோசமானது எனவும் எது எதற்காக போராடுகின்றார்கள் எனவும் யார் பின்னணியில் இருக்கின்றார்கள் எனவும் கவனித்து பாருங்கள்.ஒன்று பலஸ்தீனம் மற்றது உக்ரேன்.

ஒரு உக்ரேனியனுக்கும் பட்டினி என்றால் என்னவென்றே தெரியாது. எல்லோரும் சொர்க்கக்தில் இருப்பது போல் இருக்கின்றார்கள்.இப்படியொரு காட்சியை உக்ரேன் யுத்தங்களில் கண்டிருக்கின்றீர்களா? 👇

unicef-zunehmende-mangelernaehrung-bei-k

படத்திற்கு நன்றி யுனிசெப்.

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, குமாரசாமி said:

உக்ரேனியர்களுக்கு ஒரே இனமாக இல்லாத அயலவர்கள் உதவுவதும் பாலஸ்தீனத்தின் ஒரே இனமான அயலவர்கள் வேடிக்கை பார்ப்பதும் தான் காரணம்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, விசுகு said:

உக்ரேனியர்களுக்கு ஒரே இனமாக இல்லாத அயலவர்கள் உதவுவதும்

உக்ரேனுக்கு உதவுவது அயலவர்கள் அல்ல ரசியாவை குறிவைத்து நேட்டோ நாடுகள் உதவுது.

1 hour ago, விசுகு said:

பாலஸ்தீனத்தின் ஒரே இனமான அயலவர்கள் வேடிக்கை பார்ப்பதும்

இஸ்ரேலுக்கு பின்னால் அமெரிக்கா உள்ளபடியால் அரபுநாடுகள் மட்டுமல்ல உலக நாடுகளே வேடிக்கை பார்ப்பது மட்டுமல்ல இஸ்ரேலுக்கு உதவுகிறார்கள்.(இந்தியா உட்பட)

34 minutes ago, ஈழப்பிரியன் said:

உக்ரேனுக்கு உதவுவது அயலவர்கள் அல்ல ரசியாவை குறிவைத்து நேட்டோ நாடுகள் உதவுது.

இஸ்ரேலுக்கு பின்னால் அமெரிக்கா உள்ளபடியால் அரபுநாடுகள் மட்டுமல்ல உலக நாடுகளே வேடிக்கை பார்ப்பது மட்டுமல்ல இஸ்ரேலுக்கு உதவுகிறார்கள்.(இந்தியா உட்பட)

நேட்டோவில் இல்லாத நாடுகளும் உதவுகின்றன. உதாரணமாக ஆஜண்டீனா போர் விமானங்களை வழங்கியிருந்தது. அவுஸ்திரேலியா ஆயுதங்களை வழங்கியிருந்தது.

பலஸ்தீனுக்கு இஸ்லாமிய நாடுகள் இராணுவ உதவிதான் செய்ய வேண்டும் என்பதில்லை. மனிதாபிமான உதவிகள் செய்யாவிட்டாலும் குறைந்தபட்சம் அகதிகளையாவது உள்வாங்கியிருகலாம் அல்லவா ?

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, குமாரசாமி said:

உக்ரேனுக்கு சாத்துப்படி டெய்லி தானே நடக்குது. 😎

ஆனால் ஒன்று மேற்குலகம் காசாவில் செய்யும் அழிவுகளை போல் ரஷ்யா உக்ரேனுக்கு செய்யவில்லை. செய்யவும் நினைக்கவில்லை.மக்களை எலும்பும் தோலுமாக அலைய விடவுமில்லை.

ஒரே நேரத்தில் இரண்டு அழிவுப்போர்கள் நடக்கின்றன. அதில் எது மோசமானது எனவும் எது எதற்காக போராடுகின்றார்கள் எனவும் யார் பின்னணியில் இருக்கின்றார்கள் எனவும் கவனித்து பாருங்கள்.ஒன்று பலஸ்தீனம் மற்றது உக்ரேன்.

ஒரு உக்ரேனியனுக்கும் பட்டினி என்றால் என்னவென்றே தெரியாது. எல்லோரும் சொர்க்கக்தில் இருப்பது போல் இருக்கின்றார்கள்.இப்படியொரு காட்சியை உக்ரேன் யுத்தங்களில் கண்டிருக்கின்றீர்களா? 👇

unicef-zunehmende-mangelernaehrung-bei-k

படத்திற்கு நன்றி யுனிசெப்.

பலஸ்தீனர்களின் பட்டினி பற்றி நீங்கள் "உண்மையாக" கவலைப் படுகிறீர்களா?😂 அப்படியானால் ட்ரம்பின் மீதல்லவா உங்கள் தீவிரமான கோபம் வெளிவர வேண்டும்? இப்படியொரு நிலை வராமல் இருக்க சில நடவடிக்கைகளையாவது எடுத்த பைடன் தோற்க வேண்டும் என்று விரும்பிய அதே ஆளா நீங்கள்??😎

  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, இணையவன் said:

பலஸ்தீனுக்கு இஸ்லாமிய நாடுகள் இராணுவ உதவிதான் செய்ய வேண்டும் என்பதில்லை. மனிதாபிமான உதவிகள் செய்யாவிட்டாலும் குறைந்தபட்சம் அகதிகளையாவது உள்வாங்கியிருகலாம் அல்லவா ?

இவர்களை உள்வாங்கினால் இஸ்ரேலின் எண்ணம் சுலபமாக நிறைவேறாதா?

24 minutes ago, இணையவன் said:

நேட்டோவில் இல்லாத நாடுகளும் உதவுகின்றன. உதாரணமாக ஆஜண்டீனா போர் விமானங்களை வழங்கியிருந்தது. அவுஸ்திரேலியா ஆயுதங்களை வழங்கியிருந்தது.

ஓரிரு நாடுகள் தமது நன்மை கருதி நண்பர்களுக்கு தோள்கொடுக்கிறோம் என்றே உதவுகின்றன.

தென்னாபிரிகா இஸ்ரேலுக்கு எதிராக செயல்படுவதற்கு அரபு நாடுகள் பின்னால் நிற்கின்றன.

தாங்களால் நேரே செய்ய முடியாததை இன்னொரு நாட்டை வைத்து முயற்சி செய்கிறது.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ஈழப்பிரியன் said:

இவர்களை உள்வாங்கினால் இஸ்ரேலின் எண்ணம் சுலபமாக நிறைவேறாதா?

அயல் அரபு நாடுகள் பலஸ்தீன அகதிகளை உள்வாங்காமல் இருக்க இது ஒரு காரணம்.

ஆனால், இதை விட முதன்மையான காரணம், அகதிகள் முகாம்களில் ஹமாஸ் போன்ற பலஸ்தீன அமைப்புகள் மக்களோடு மக்களாக டோரா போட்டு, ஆட்சேர்த்து, அந்த நாடுகளிலேயே இஸ்ரேல் வந்து குண்டு போடும் அளவுக்கு வைத்து விடுவார்கள் என்ற பயம். இது பல தசாப்தங்களாக நடந்து வரும் ஒரு போக்கு.

அயல் நாடான ஜோர்தானில் (ஜோர்தான் நதியின்) கிழக்குக் கரை -East Bank இருக்கிறது. அங்கே இஸ்ரேல் உருவாக்கப் பட்ட போது குடிபெயர்ந்த பலஸ்தீனர்கள் இன்றும் வாழ்கிறார்கள், அவர்களோடு அரபாத்திற்கும் இடம் கொடுத்திருந்தார்கள். 70 களில் என நினைக்கிறேன், ஒரு பயணிகள் விமானத்தை அரபாத்தின் கீழிருந்த போராளிகள் கடத்திச் சென்று அம்மானில் தரையிறக்கி வைத்திருந்தார்கள். விமானத்தை தங்களிடம் ஒப்படைக்க வேண்டுமென்று கேட்ட ஜோர்தான் படைகளுக்கு அடி தான் பதிலாகக் கிடைத்தது😂. ஒரு பெரும் நடவடிக்கை மூலம் அப்போதைய ஜோர்தான் மன்னர், அரபாத்தின் படைகளை வேட்டையாட ஆரம்பித்தார். அரபாத் ஒரு முஸ்லிம் பெண் போல உடையணிந்து தப்பிச் சென்று சிரியா சேர்ந்தார். சிரியாவிலும் அதே கதை, ரணகளம். அங்கிருந்து ஒரு கட்டத்தில் லெபனான் சென்றார்கள் பலஸ்தீனப் போராளிகள். ஷியா, சுனி, முஸ்லிம்களும், கிறிஸ்தவர்களும் கூட்டாட்சி செய்த லெபனானில், ஷியாக்கள் அதிக பங்கு கோரிப் போராட ஆரம்பித்த போது, அகதிகளாக வந்த பலஸ்தீனர்களும், அமைப்புகளும் ஷியாக்களை ஆதரித்தார்கள். லெபனானும் ரணகளமாகியது.

இப்படி மீள மீள நடக்கும் போது, பலஸ்தீன அகதிகளை எந்த முஸ்லிம் நாடு ஏற்றுக் கொள்ளும்?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
8 hours ago, விசுகு said:

உக்ரேனியர்களுக்கு ஒரே இனமாக இல்லாத அயலவர்கள் உதவுவதும் பாலஸ்தீனத்தின் ஒரே இனமான அயலவர்கள் வேடிக்கை பார்ப்பதும் தான் காரணம்.

உக்ரேனின் மீது உள்ள மனிதாபிமானத்திற்காக/உரிமைக்காக ஐரோப்பிய ஒன்றியமும் அமெரிக்காவும் உதவுகின்றது என விசுகர் நினைத்தால் குமாரசாமி ஆகிய நான் விழுந்து உருண்டு பிரண்டு சிரிப்பதை தவிர எனக்கு வேறு வழி தெரியவில்லை.

ஆக்கிரமிப்பு என்பதன் அர்த்தம் எல்லா இடங்களிலும் ஒன்றுதான். ஆனால் பிராந்திய அரசியல் என ஒன்று வரும்போது அதன் வடிவங்களும் அர்த்தங்களும் வேறுபடும்.

எம்மவர்கள் பலர் இன்றும் ஹிந்தியாவை திட்டிக்கொண்டிருக்கின்றார்கள். ஏன்?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
6 hours ago, ஈழப்பிரியன் said:

இஸ்ரேலுக்கு பின்னால் அமெரிக்கா உள்ளபடியால் அரபுநாடுகள் மட்டுமல்ல உலக நாடுகளே வேடிக்கை பார்ப்பது மட்டுமல்ல இஸ்ரேலுக்கு உதவுகிறார்கள்.(இந்தியா உட்பட)

Gysn-ALe-XEAEGNQi.jpg

அமெரிக்காவை மீறி எதையும் செய்ய வலிமை உள்ள ஐரோப்பாவிற்கே தைரியம் இல்லை என்பதற்கு இந்த புகைப்படம் நல்ல சாட்சி.

அமெரிக்காவினதும் ஐரோப்பாவினதும் தொழில்நுட்பங்களை பயன்படுத்தி வளர்ந்த அரபுநாடுகள் எப்படி மேற்குலகின் செல்லப்பிள்ளை இஸ்ரேலின் அஜாரகங்களை எதிர்ப்பார்கள்?எண்ணைக் குழாய்களில் அடைப்பு வந்தால் கூட அந்த அடைப்பை எடுக்க அமெரிக்கர்களும் ஐரோப்பியர்களுமே தேவை. நிலமை இப்படி இருக்க....?

ஆனால் உலக நாடுகளின் பிரச்சனையை தீர்க்கும் வல்லமையும் அமெரிக்காவிடம் இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

ஆனால் உலக நாடுகளின் பிரச்சனையை தீர்க்கும் வல்லமையும் அமெரிக்காவிடம் இல்லை.

உலகத்தில்அமைதி ஏற்பட்டால் அமெரிக்கா ஐரோப்பா எப்படியாம் பிழைத்துக் கொள்வது?

வல்லரசுகளின் ஆதரவு இல்லாமல் உலகத்தில் ஏதாவது யுத்தம் நடந்ததா?

இல்லை என்று தான் எண்ணுகிறேன்.

அரபு நாடுகளை பொறுத்தவரை வாகனம் உள்ளது.

ஆனால் ஓட்டத் தெரியாது.

9 hours ago, குமாரசாமி said:

உக்ரேனின் மீது உள்ள மனிதாபிமானத்திற்காக/உரிமைக்காக ஐரோப்பிய ஒன்றியமும் அமெரிக்காவும் உதவுகின்றது என விசுகர் நினைத்தால் குமாரசாமி ஆகிய நான் விழுந்து உருண்டு பிரண்டு சிரிப்பதை தவிர எனக்கு வேறு வழி தெரியவில்லை.

அமெரிக்க தேர்தலின்போது ட்றம்ப் உலகில் அமைதியையும் சமாதானத்தை ஏற்படுத்துவார் என்று யாழில் எழுதிய ஒரே நபர் நீங்கள்தான். அதனையே ஜஸ்ரின் மேலே சுட்டிக் காட்டியுள்ளார். உங்களுக்கக எழுதப்படும் பதில்களை வாசித்திருந்தால் உங்களைப் பார்த்து நீங்களே உருண்டு பிரண்டு சிரித்திருக்க வேண்டி வந்திராது.

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, ஈழப்பிரியன் said:

உக்ரேனுக்கு உதவுவது அயலவர்கள் அல்ல ரசியாவை குறிவைத்து நேட்டோ நாடுகள் உதவுது.

ஐரோப்பிய ஒன்றியம் ஆரம்பிக்கப்பட்ட போது அது உருக்கு மற்றும் நிலக்கரி வர்த்தகத்தினை பேணும் நோக்கத்தில் ஆரம்பிக்கப்பட்டதாக கூறுகிறார்கள், காலப்போக்கில் அதற்கென ஓரு சட்டம் உருவாக்கி தற்போது அந்த சட்டம் அதில் அங்கத்துவ நாடுகளிலும் அந்த சட்டம் தாக்கத்தினை உருவாக்குகிறது, இந்த ஐரோப்பிய ஆணையம் தனக்கு தேவையான ஆட்சியினை தீர்மானிக்கு சக்தியாகவும் இருந்து வருவதாக குற்றம் சாட்டப்படுகிறது.

இரஸ்சியாவில் சர்வாதிகார ஆட்சி நடத்துகிறார்கள் என கவலைப்படும் அதே நேரம் இன்னொரு புறம் தேர்தல் அற்ற தான் தோன்றித்தனமான ஆட்சி நடத்தும் செலன்ஸ்கியினை ஆதரிக்கிறார்கள்.

செலன்ஸ்கியின் ஆட்சியின் மூலம் தமக்கு வேண்டிய விடயங்களை நிறைவேற்றிக்கொள்கிறார்கள், ஐரோப்பிய ஒன்றியத்திற்குள் இருந்து கலகம் செய்யும் கங்கேரி, ஸ்லோவாக்கியா மீது அதன் பொருளாதாரத்தின் மீதான அழுத்தத்தின் பின்னணியாக இரஸ்சியாவிலிருந்து வரும் எரிபொருள் வழங்கி மீதான தாக்குதலில் செலன்ஸ்கியின் ஆணவமான பதில்கள் ஐரோப்பிய ஒன்றியத்தின் வேண்டுகோளுடனேயே இது நடத்தப்பட்டிருக்கலாமோ என சந்தேகிக்க வைக்கிறது, ஐரோப்பிய ஒன்றைய நாட்டினது எரிபொருள் வழங்கள் மீதான தாக்குதலை மன்னிக்க முடியாத அதற்கான பிரதிபலனை செய்தவர்கள் எதிர்கொள்ள நேரிடும் என நோர்ட்ஸ்ரிம் 2 தாக்குதலை இரஸ்சியா மேற்கொண்டது எனும் அடிப்படையில் ஐரோப்பிய ஒன்றியம் கண்டித்தது, தற்போது நேரடியாகவே செலன்ஸ்கி இந்த தாக்குதலை தாமே நிகழ்த்தியதாக கூறியிருந்தும் இது தொடர்பில் எந்த வித கருத்து தெரிவிக்காமல் இருக்கும் ஐரோப்பிய ஒன்றியத்தின் அமைதி ஐரோப்பிய ஒன்றியத்தின் ஆசீர்வாதத்தினனுடனேயே இது நிகழ்ந்திருக்கலாமோ என தோன்றுகிறது,.

ஐரோப்பிய ஒன்றியத்தின் அதிகாரத்திற்கு சவாலாக இருக்கும் விடயங்களை முளையிலேயே களையநினைக்கிறார்கள், பெரும்பான்மை மக்கள் ஆதரவு கொண்ட தேசிய எண்ணம் கொண்ட கட்சிகளுக்கெதிராக அந்தந்த நாடுகளின் சட்டத்தினை பயன்படுத்தி இல்லாமல் செய்து தமது அதிகாரத்தினை பேணுகிறார்கள்.

ஆனால் அதே செலன்ஸ்கியின் மீது தமது பிடியினை இறுக்குவதற்கு அதே சமயம் வேறு வழி வகைகளையும் கைக்கொள்ளுகிறார்கள், அவரது பலவீனமான ஊழலலே அது.

அண்மையில் தன்னிச்சையாக இயங்கிய ஊழல் ஒழிப்பு துறையினை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததிற்கெதிராக உடனடியாக நடத்தப்பட்ட எதிர்ப்பார்பாட்டமும், ஐரோப்பிய ஒன்றியத்தின் கண்டனத்திற்கு பின் செலன்ஸ்கி அந்த சட்டத்தினை கொண்டு வந்த கையோடே அதனை குப்பையில் மிக வேகமாக போட்டது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் எப்போதும் உக்கிரேன் விடுமுறை பயணம் போவது போல போகும் ஐரோப்பிய ஒன்றிய தலைவர்கள் உக்கிரேனிய ஊழல் ஒழிப்புத்துறையினை பிரசெல்ஸிற்கு அழைத்து சந்தித்துள்ளது செலன்ஸ்கின் மீதான அழுத்தம் அதிகரித்து வருவதனை காட்டுகிறது.

இதனிடையே சிறப்பாக களத்தில் செயற்பட்ட உக்கிரேனிய முன்னாள் தளபதியினை செலன்ஸ்கி அவரது பதவியினை பறித்து இங்கிலாந்து தூதுவராக நியமித்த சலூஸ்னியினை கடந்த வருடம் கார்த்திகை மாதத்தில் சந்தித்த செலன்ஸ்கியின் ஆலோசகர் வேண்டுகோளான எதிர்காலத்தில் நிகழும் தேர்தலில் செலன்ஸ்கியிற்கு ஆதரவாக இருக்குமாறு கோரிய கோரிக்க்கையினை மறூத்த செய்தியினை தற்போது மேற்கு ஊடகங்கள் வெளிப்படுத்துகின்றன.

எப்படி ஒரு பிராண்ட்டினை வர்த்தகத்தில் உருவாக்குவார்களோ அதே போல உருவாக்கிய ஒருவரை அவர்களின் விருப்பத்திற்கு மாறாக போனால் அதனை விட மோசமான தேசத்துரோகியாக்கி மக்களை கொண்டு அடித்து விரட்டுவார்கள்.

இந்த போரில் சிக்குண்டுள்ள இரஸ்சியாவும் உக்கிரேனும் மிக நீண்டகாலத்திற்கு பொருளாதார ரீதியாக பாதிப்புள்ளாகப்போகிறார்கள், அதே வேளை இந்த போரை அனையவிடாமல் காக்கும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளும் அதே பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ளார்கள்.

பலவீனமான கூட்டணி ஆட்சிகளை உருவாக்கி தமது அதிகாரத்தினை பேணுகிறார்கள், இல்லாவிட்டால் ஆட்சிகளை கவிழ்க்கிறார்கள், ஐரோப்பாவின் எதிர்காலம் ஒரு அழிவுப்பாதையினை நோக்கி நகர்கிறது.

Edited by vasee

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, vasee said:

ஐரோப்பிய ஒன்றியம் ஆரம்பிக்கப்பட்ட போது அது உருக்கு மற்றும் நிலக்கரி வர்த்தகத்தினை பேணும் நோக்கத்தில் ஆரம்பிக்கப்பட்டதாக கூறுகிறார்கள்,

ஐரோப்பிய ஒன்றியம் ஆரம்பிக்கப்பட்டு

யூரோ நாணயம் வந்த போது

டாலரை வீழ்த்தவே என்று பேசிக் கொண்டார்கள்.

இதை நம்பி ஈராக் ஜனாதிபதியும் யூரோவில் வியாபாரம் செய்யப் போய்

ஆளும் இல்லை நாடும் இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, vasee said:

"பல்துருவ உலகம்" பற்றி எல்லோரும் பேசுகிறார்கள். அத்தகைய பல்துருவ உலகிற்கு நானும் ஆதரவு😎.

ஆனால், ஒட்டு மொத்த சமூகத்திற்கும், எங்கள் மண்ணிறத் தோல் கொண்டு உலாவரப் போகும் அடுத்த சந்ததிக்கும் எதிரான திட்டங்களை வகுக்கும் ஜேர்மன் AfD நவநாசிகள், பெண்களை இரண்டாம் தரப் பிரஜைகளாக வைத்திருக்க திட்டமிடும் ஹங்கேரி, போலந்து, ரஷ்யா ஆகிய நாடுகளின் அதி வலதுசாரிகள் - இந்த தரப்புகள் ஒரு துருவமாக இருக்கவே கூடாது. வலதுசாரிகளாக மாறி விட்ட அமெரிக்காவிற்கு எதிரான துருவமாக முற்போக்கான ஐரோப்பிய ஒன்றியம் இருக்க வேண்டும். இது தான் நான் எதிர்பார்க்கும் "பல்துருவ" உலகு.

என் அவதானிப்பின் படி, ஐரோப்பிய ஒன்றியம் சரியான திசையில் நகர்கிறது. உக்ரைனில் ஊழலை ஒழிக்க முயலும் அதே வேளை, போலந்தில் நீதித் துறையை வலதுசாரிகள் முடக்கி விடாமலிருக்கவும் ஐரோப்பிய ஒன்றியம் வேலை செய்கிறது. பிரான்சிலும், ஜேர்மனியிலும் குடியேறிகளுக்கெதிரான கட்சிகள் ஆட்சிக்கு வர முயலும் போது, அந்த நாடுகளின் மிதவாத சக்திகளோடு சேர்ந்து ஐரோப்பிய ஒன்றிய அமைப்புகள் அவர்களை ஆட்சிக்கு வர முடியாமல் முடக்கியிருக்கின்றன.

இதை நீங்கள் "மக்களின் தேசிய விருப்பிற்கெதிரான நகர்வுகள்" என்று கண்டிப்பது போலத் தெரிகிறது. இப்படி 33% வீத மக்களின் தேசிய விருப்பின் படி தான் நாசிகள் ஆட்சிக்கு வந்தார்கள் - வரலாற்றில் அதனால் நிகழ்ந்த அழிவுகளை யூ ரியூபிலாவது தேடிப் பார்த்து அறிந்தால், இதைக் கண்டிப்பீர்களா தெரியவில்லை!

  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, குமாரசாமி said:

1- உக்ரேனின் மீது உள்ள மனிதாபிமானத்திற்காக/உரிமைக்காக ஐரோப்பிய ஒன்றியமும் அமெரிக்காவும் உதவுகின்றது என விசுகர் நினைத்தால் குமாரசாமி ஆகிய நான் விழுந்து உருண்டு பிரண்டு சிரிப்பதை தவிர எனக்கு வேறு வழி தெரியவில்லை.

ஆக்கிரமிப்பு என்பதன் அர்த்தம் எல்லா இடங்களிலும் ஒன்றுதான். ஆனால் பிராந்திய அரசியல் என ஒன்று வரும்போது அதன் வடிவங்களும் அர்த்தங்களும் வேறுபடும்.

2- எம்மவர்கள் பலர் இன்றும் ஹிந்தியாவை திட்டிக்கொண்டிருக்கின்றார்கள். ஏன்?

1- மனிதாபிமானம் அல்லது உரிமை சார்ந்த சந்தேகங்கள் ஒருபுறம் இருக்க பக்கத்து வீட்டு கதவு தானே உடைக்கப்படுகிறது என்று தூங்காத அவர்களை பார்த்து சிரிக்க முடிந்தால் தாராளமாக சிரியுங்கள். ஏனெனில் அதற்குள் தான் நம் வீட்டுக்கதவும் இருக்கிறது.

2- கிந்தியா என்ற யானை எமக்கு எப்படியோ அவ்வாறு தான் உக்ரைனுக்கு ரசியா.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
9 hours ago, vasee said:

ஐரோப்பிய ஒன்றியம் ஆரம்பிக்கப்பட்ட போது அது உருக்கு மற்றும் நிலக்கரி வர்த்தகத்தினை பேணும் நோக்கத்தில் ஆரம்பிக்கப்பட்டதாக கூறுகிறார்கள், காலப்போக்கில் அதற்கென ஓரு சட்டம் உருவாக்கி தற்போது அந்த சட்டம் அதில் அங்கத்துவ நாடுகளிலும் அந்த சட்டம் தாக்கத்தினை உருவாக்குகிறது, இந்த ஐரோப்பிய ஆணையம் தனக்கு தேவையான ஆட்சியினை தீர்மானிக்கு சக்தியாகவும் இருந்து வருவதாக குற்றம் சாட்டப்படுகிறது.

இரஸ்சியாவில் சர்வாதிகார ஆட்சி நடத்துகிறார்கள் என கவலைப்படும் அதே நேரம் இன்னொரு புறம் தேர்தல் அற்ற தான் தோன்றித்தனமான ஆட்சி நடத்தும் செலன்ஸ்கியினை ஆதரிக்கிறார்கள்.

செலன்ஸ்கியின் ஆட்சியின் மூலம் தமக்கு வேண்டிய விடயங்களை நிறைவேற்றிக்கொள்கிறார்கள், ஐரோப்பிய ஒன்றியத்திற்குள் இருந்து கலகம் செய்யும் கங்கேரி, ஸ்லோவாக்கியா மீது அதன் பொருளாதாரத்தின் மீதான அழுத்தத்தின் பின்னணியாக இரஸ்சியாவிலிருந்து வரும் எரிபொருள் வழங்கி மீதான தாக்குதலில் செலன்ஸ்கியின் ஆணவமான பதில்கள் ஐரோப்பிய ஒன்றியத்தின் வேண்டுகோளுடனேயே இது நடத்தப்பட்டிருக்கலாமோ என சந்தேகிக்க வைக்கிறது, ஐரோப்பிய ஒன்றைய நாட்டினது எரிபொருள் வழங்கள் மீதான தாக்குதலை மன்னிக்க முடியாத அதற்கான பிரதிபலனை செய்தவர்கள் எதிர்கொள்ள நேரிடும் என நோர்ட்ஸ்ரிம் 2 தாக்குதலை இரஸ்சியா மேற்கொண்டது எனும் அடிப்படையில் ஐரோப்பிய ஒன்றியம் கண்டித்தது, தற்போது நேரடியாகவே செலன்ஸ்கி இந்த தாக்குதலை தாமே நிகழ்த்தியதாக கூறியிருந்தும் இது தொடர்பில் எந்த வித கருத்து தெரிவிக்காமல் இருக்கும் ஐரோப்பிய ஒன்றியத்தின் அமைதி ஐரோப்பிய ஒன்றியத்தின் ஆசீர்வாதத்தினனுடனேயே இது நிகழ்ந்திருக்கலாமோ என தோன்றுகிறது,.

ஐரோப்பிய ஒன்றியத்தின் அதிகாரத்திற்கு சவாலாக இருக்கும் விடயங்களை முளையிலேயே களையநினைக்கிறார்கள், பெரும்பான்மை மக்கள் ஆதரவு கொண்ட தேசிய எண்ணம் கொண்ட கட்சிகளுக்கெதிராக அந்தந்த நாடுகளின் சட்டத்தினை பயன்படுத்தி இல்லாமல் செய்து தமது அதிகாரத்தினை பேணுகிறார்கள்.

ஆனால் அதே செலன்ஸ்கியின் மீது தமது பிடியினை இறுக்குவதற்கு அதே சமயம் வேறு வழி வகைகளையும் கைக்கொள்ளுகிறார்கள், அவரது பலவீனமான ஊழலலே அது.

அண்மையில் தன்னிச்சையாக இயங்கிய ஊழல் ஒழிப்பு துறையினை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததிற்கெதிராக உடனடியாக நடத்தப்பட்ட எதிர்ப்பார்பாட்டமும், ஐரோப்பிய ஒன்றியத்தின் கண்டனத்திற்கு பின் செலன்ஸ்கி அந்த சட்டத்தினை கொண்டு வந்த கையோடே அதனை குப்பையில் மிக வேகமாக போட்டது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் எப்போதும் உக்கிரேன் விடுமுறை பயணம் போவது போல போகும் ஐரோப்பிய ஒன்றிய தலைவர்கள் உக்கிரேனிய ஊழல் ஒழிப்புத்துறையினை பிரசெல்ஸிற்கு அழைத்து சந்தித்துள்ளது செலன்ஸ்கின் மீதான அழுத்தம் அதிகரித்து வருவதனை காட்டுகிறது.

இதனிடையே சிறப்பாக களத்தில் செயற்பட்ட உக்கிரேனிய முன்னாள் தளபதியினை செலன்ஸ்கி அவரது பதவியினை பறித்து இங்கிலாந்து தூதுவராக நியமித்த சலூஸ்னியினை கடந்த வருடம் கார்த்திகை மாதத்தில் சந்தித்த செலன்ஸ்கியின் ஆலோசகர் வேண்டுகோளான எதிர்காலத்தில் நிகழும் தேர்தலில் செலன்ஸ்கியிற்கு ஆதரவாக இருக்குமாறு கோரிய கோரிக்க்கையினை மறூத்த செய்தியினை தற்போது மேற்கு ஊடகங்கள் வெளிப்படுத்துகின்றன.

எப்படி ஒரு பிராண்ட்டினை வர்த்தகத்தில் உருவாக்குவார்களோ அதே போல உருவாக்கிய ஒருவரை அவர்களின் விருப்பத்திற்கு மாறாக போனால் அதனை விட மோசமான தேசத்துரோகியாக்கி மக்களை கொண்டு அடித்து விரட்டுவார்கள்.

இந்த போரில் சிக்குண்டுள்ள இரஸ்சியாவும் உக்கிரேனும் மிக நீண்டகாலத்திற்கு பொருளாதார ரீதியாக பாதிப்புள்ளாகப்போகிறார்கள், அதே வேளை இந்த போரை அனையவிடாமல் காக்கும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளும் அதே பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ளார்கள்.

பலவீனமான கூட்டணி ஆட்சிகளை உருவாக்கி தமது அதிகாரத்தினை பேணுகிறார்கள், இல்லாவிட்டால் ஆட்சிகளை கவிழ்க்கிறார்கள், ஐரோப்பாவின் எதிர்காலம் ஒரு அழிவுப்பாதையினை நோக்கி நகர்கிறது.

மிகச்சிறந்த கண்ணோட்டம் வசி!

நீங்கள் எழுதியதும் அத்தனையும் உண்மையே.

ஐரோப்பிய ஒன்றியமும் நேட்டோ அமைப்புகளும் விரிவடைய வேண்டுமாம். ஆனால் ரஷ்யா கூனிக்குறுகி நிற்க வேண்டுமாம்.

ஐரோப்பிய ஒன்றியத்தின் இன்றைய மனநிலை இப்படித்தான்.

Gz-B-BSAWg-AEJ4-Pq.jpg

42 minutes ago, விசுகு said:

1- மனிதாபிமானம் அல்லது உரிமை சார்ந்த சந்தேகங்கள் ஒருபுறம் இருக்க பக்கத்து வீட்டு கதவு தானே உடைக்கப்படுகிறது என்று தூங்காத அவர்களை பார்த்து சிரிக்க முடிந்தால் தாராளமாக சிரியுங்கள். ஏனெனில் அதற்குள் தான் நம் வீட்டுக்கதவும் இருக்கிறது.

2- கிந்தியா என்ற யானை எமக்கு எப்படியோ அவ்வாறு தான் உக்ரைனுக்கு ரசியா.

உக்ரேனுக்கு நேட்டோ ஆசையும் ஐரோப்பிய ஒன்றிய ஆசையும் வருவதற்கு முதல் ஒழுங்காகத்தான் அந்த நாடு இருந்தது.

ஐரோப்பாவிற்கும் அமெரிக்காவிற்கும் இந்தியா அதி முக்கிய பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்த நாடாகி விட்டது.எனவே மேற்குலகில் இருந்து ஈழத்தமிழர்களுக்காக கதவும் திறக்காது படலையும் திறக்காது என்பது என் கணிப்பு.

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, Justin said:

என் அவதானிப்பின் படி, ஐரோப்பிய ஒன்றியம் சரியான திசையில் நகர்கிறது.

👍

ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் சுவீடன் பின்லண்ட் எல்லாம் மிகச் சரியான திசையிலேயே நகர்கிறன.

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, Justin said:

"பல்துருவ உலகம்" பற்றி எல்லோரும் பேசுகிறார்கள். அத்தகைய பல்துருவ உலகிற்கு நானும் ஆதரவு😎.

ஆனால், ஒட்டு மொத்த சமூகத்திற்கும், எங்கள் மண்ணிறத் தோல் கொண்டு உலாவரப் போகும் அடுத்த சந்ததிக்கும் எதிரான திட்டங்களை வகுக்கும் ஜேர்மன் AfD நவநாசிகள், பெண்களை இரண்டாம் தரப் பிரஜைகளாக வைத்திருக்க திட்டமிடும் ஹங்கேரி, போலந்து, ரஷ்யா ஆகிய நாடுகளின் அதி வலதுசாரிகள் - இந்த தரப்புகள் ஒரு துருவமாக இருக்கவே கூடாது. வலதுசாரிகளாக மாறி விட்ட அமெரிக்காவிற்கு எதிரான துருவமாக முற்போக்கான ஐரோப்பிய ஒன்றியம் இருக்க வேண்டும். இது தான் நான் எதிர்பார்க்கும் "பல்துருவ" உலகு.

என் அவதானிப்பின் படி, ஐரோப்பிய ஒன்றியம் சரியான திசையில் நகர்கிறது. உக்ரைனில் ஊழலை ஒழிக்க முயலும் அதே வேளை, போலந்தில் நீதித் துறையை வலதுசாரிகள் முடக்கி விடாமலிருக்கவும் ஐரோப்பிய ஒன்றியம் வேலை செய்கிறது. பிரான்சிலும், ஜேர்மனியிலும் குடியேறிகளுக்கெதிரான கட்சிகள் ஆட்சிக்கு வர முயலும் போது, அந்த நாடுகளின் மிதவாத சக்திகளோடு சேர்ந்து ஐரோப்பிய ஒன்றிய அமைப்புகள் அவர்களை ஆட்சிக்கு வர முடியாமல் முடக்கியிருக்கின்றன.

இதை நீங்கள் "மக்களின் தேசிய விருப்பிற்கெதிரான நகர்வுகள்" என்று கண்டிப்பது போலத் தெரிகிறது. இப்படி 33% வீத மக்களின் தேசிய விருப்பின் படி தான் நாசிகள் ஆட்சிக்கு வந்தார்கள் - வரலாற்றில் அதனால் நிகழ்ந்த அழிவுகளை யூ ரியூபிலாவது தேடிப் பார்த்து அறிந்தால், இதைக் கண்டிப்பீர்களா தெரியவில்லை!

அமெரிக்காவில் எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் ஆயுத விற்பனை தடை செய்யப்படாது, அதனால் இறக்கும் அப்பாவி மக்களின் இறப்பும் நிற்காது, மக்கள் நலனா அல்லது நிறுவனங்களின் நலனா என வரும் போது நிறுவனங்களின் நலனே முன்னிலைப்படுத்தப்படுகிறது, அதே விளைவையே ஐரோப்பிய ஒன்றியம் உருவாக்குகிறது.

நிறுவனங்களின் நலனை முன்னிறுத்துவது தவறல்ல, ஆனால் அதனால் மக்கள் இறக்காமலிருந்தால் நல்லது.

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, ஈழப்பிரியன் said:

ஐரோப்பிய ஒன்றியம் ஆரம்பிக்கப்பட்டு

யூரோ நாணயம் வந்த போது

டாலரை வீழ்த்தவே என்று பேசிக் கொண்டார்கள்.

இதை நம்பி ஈராக் ஜனாதிபதியும் யூரோவில் வியாபாரம் செய்யப் போய்

ஆளும் இல்லை நாடும் இல்லை.

ஆனால் அமெரிக்காவிற்கு இலவச எரிபொருள் கிடைக்கிறது🤣, தற்போது அமெரிக்க நிறுவனமான எக்சன் மொபில் இரஸ்சியாவிலும் இரஸ்சிய ஆதரவுடன் வடதுருவத்தில் எரிபொருள் எடுக்கவுள்ளார்கள் என செய்திகள் கூறுகின்றனவே?

  • கருத்துக்கள உறவுகள்
58 minutes ago, vasee said:

ஆனால் அமெரிக்காவிற்கு இலவச எரிபொருள் கிடைக்கிறது🤣, தற்போது அமெரிக்க நிறுவனமான எக்சன் மொபில் இரஸ்சியாவிலும் இரஸ்சிய ஆதரவுடன் வடதுருவத்தில் எரிபொருள் எடுக்கவுள்ளார்கள் என செய்திகள் கூறுகின்றனவே?

Here’s the current situation: Yes, Exxon Mobil is exploring a potential re-entry into Russia’s Sakhalin-1 oil and gas project, but no official deal is in place yet. These discussions are contingent on evolving geopolitical conditions and regulatory approvals. Here’s what’s happening in more detail:

What’s Going On

1.Confidential Talks with Rosneft

Exxon Mobil has conducted back-channel negotiations with Russia’s state oil giant Rosneft about possibly returning to the Sakhalin-1 project. These talks hinge on a potential peace process progress in Ukraine and would require approvals from both U.S. and Russian governments.

2.

Legal and Political Conditions

  • U.S. licenses from the Treasury Department allow Exxon to discuss “stranded assets” with Russian counterparts.

  • Any formal re-entry would need U.S. government approval amid existing sanctions.

3.

Russian Legal Framework

On August 15, 2025, Russian President Putin signed a decree that conditionally reopens the Sakhalin-1 project to foreign investors—including Exxon—provided they:

  • Supply foreign-made equipment,

  • Assist in lifting Western sanctions, and

  • Invest capital into the project.

Russia also extended the deadline to 2026 for Exxon to claim its unclaimed stake in the project.

4.

Strategic and Market Considerations

  • Sanctions remain a significant obstacle, complicating any return even though Sakhalin-1 itself isn’t directly sanctioned.

  • U.S. officials and the Trump administration have floated this as part of broader diplomatic incentives in Ukraine peace talks.

On the other hand, some industry experts doubt a full-scale U.S. return, citing tremendous past losses and unstable political risks.

ஆம் என்று தான் சாட் ஜிபிரியும் சொல்கிறது.

இது தான் இந்தியாவின் குற்றச்சாட்டும்.

அமெரிக்கா ரசியாவுடன் எத்தனையோ வியாபாரங்களை இப்போதும் செய்கிறது.

ஆனால் எங்களை செய்விடாமல் தடுக்கிறது.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஈழப்பிரியன் said:

அமெரிக்கா ரசியாவுடன் எத்தனையோ வியாபாரங்களை இப்போதும் செய்கிறது.

ஆனால் எங்களை செய்விடாமல் தடுக்கிறது.

🤣

  • கருத்துக்கள உறவுகள்

மேலே அந்த படத்தில் உள்ள முன்நோக்கி ஓடுவதாக பேய் காட்டுகின்ற நாடுகளோடு சேர்ந்து ஓடுவதற்கு பொருத்தமானவர் தான் டொனால்ட் ரம்ப். அந்த நாடுகளின் வண்டவாளங்களை கற்று தெளிந்து அதில் கலாநிதி பட்டம் பெற்றவர்கள் மேற்குலகில் வாழ்கின்ற ஈழ தமிழர்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, vasee said:

அமெரிக்காவில் எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் ஆயுத விற்பனை தடை செய்யப்படாது, அதனால் இறக்கும் அப்பாவி மக்களின் இறப்பும் நிற்காது, மக்கள் நலனா அல்லது நிறுவனங்களின் நலனா என வரும் போது நிறுவனங்களின் நலனே முன்னிலைப்படுத்தப்படுகிறது, அதே விளைவையே ஐரோப்பிய ஒன்றியம் உருவாக்குகிறது.

நிறுவனங்களின் நலனை முன்னிறுத்துவது தவறல்ல, ஆனால் அதனால் மக்கள் இறக்காமலிருந்தால் நல்லது.

"மக்கள் இறக்காமல் இருந்தால் நல்லது" என்பதில் யார் முரண்பட முடியும்? ஆனால், மக்கள் இறப்பையும் மோதலையும் யார் தொடங்கியது, யார் கையில் தடுக்கும் வழி இருக்கிறது என்பதில் அல்லவா நீங்களும் "புரின் புரியன்மாரும்"😎 குழம்பி நிற்கிறீர்கள்? உக்ரைன் சரணடைந்து விட்டால் புரின் சும்மா சுருட்டிக் கொண்டு இருந்து விடுவாரா? 2014 இல் கிரிமியாவை சத்தமில்லாமல் கைப்பற்றிய பின்னர் புரின் சும்மா இருந்தாரா?

உக்ரைன் பிரச்சினையில் நிலையெடுத்திருக்கும் சிலருக்கு வரலாறு துண்டறத் தெரியாது. அந்த வெறுமையில் இருந்து அபிப்பிராயங்களை உருவாக்குகிறார்கள் என்பது மீள மீள நிரூபிக்கப் பட்டிருகிறது. உங்களுக்கு அந்தப் பிரச்சினை இல்லை. ஆனாலும் குழப்பம் தீரவில்லை.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.