Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அரசமாளிகையில் இருந்து வெளியேறுகிறார் மஹிந்த!

1778256177.jpg

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, கொழும்பு விஜேராம மாவத்தையிலுள்ள அரசமாளிகையில் இருந்து இன்று வெளியேறவுள்ளார் என நம்பகரமான வட்டாரங்களிலிருந்து அறியமுடிகின்றது.

அரசமாளிகையில் இருந்து தங்காலையிலுள்ள தனது கால்டன் இல்லத்தில்-மஹிந்த குடியேறவுள்ளார் எனவும், இதற்குரிய ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன எனவும் தெரியவருகின்றது. 

முன்னாள் ஜனாதிபதிகளுக்குரிய சிறப்புரிமைகள் அனைத்தும் நீக்கப்படும் என்று தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் அறிவித்திருந்தது. 

இதற்கமைய அரச மாளிகையில் இருந்து வெளியேறுமாறு மஹிந்த ராஜபக்சவுக்கு ஊடக சந்திப்புகள் மூலம் வலியுறுத்தப்பட்டது. 

எனினும், தனக்கு சட்டப்பூர்வமாக அறிவித்தால் மட்டுமே அது தொடர்பில் பரிசீலிக்க முடியும் என மஹிந்த ராஜபக்ச தெரிவித்திருந்தார். 

இதனால் இந்த மாளிகை தொடர்பான விவகாரம் அரசியல் ரீதியில் பெரியளவு பேசுபொருளானது.

இவ்வாறான பின்னணியில், ஜனாதிபதிகளுக்குரிய உரித்துரிமைகளை நீக்கு தற்குரிய சட்டமூலம் நேற்று நிறைவேற் றப்பட்டுள்ளது. 

இதனை சபாநாயகர் சான்றுரைப்படுத்தியுள்ளதால் சட்டம் நேற்று முதல் அமுலுக்கு வந்துள்ளது.

இதனையடுத்தே அரச மாளிகையில் இருந்து இன்று வெளியேறுவதற்கு மஹிந்த ராஜபக்ச திட்டமிட்டுள்ளார்.

அம்பாந்தோட்டை மாவட்டத்தின் தங்காலையே ராஜபக்சக்களின் பூர்வீகம். 

அரசியல் கோட்டை,அங்கிருந்தே மஹிந்தவின் அரசியல் பயணம் கூட ஆரம்பமானது என்பதும் குறிப்பிடத்தக்கது.[ஒ]

https://newuthayan.com/article/அரசமாளிகையில்_இருந்து_வெளியேறுகிறார்_மஹிந்த!

  • கருத்துக்கள உறவுகள்

New-Project-144.jpg?resize=750%2C375&ssl

புதிய சட்டத்தின் கீழ் உத்தியோகப்பூர்வ இல்லங்களை இழக்கவுள்ள முன்னாள் ஜனாதிபதிகள்!

“ஜனாதிபதிகளின் சிறப்புரிமைகளை நீக்குதல் சட்டத்தின்” விதிகளின்படி, முன்னாள் ஜனாதிபதிகளுக்கு வழங்கப்பட்ட உத்தியோகப்பூர்வ இல்லங்களை அரசாங்கத்திடம் திருப்பித் தர வேண்டி ஏற்பட்டுள்ளது.

முன்னாள் ஜனாதிபதிகளான மஹிந்த ராஜபக்ஷ, மைத்திரிபால சிறிசேன மற்றும் சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க ஆகியோர் உத்தியோகபூர்வ இல்லங்களை பயன்படுத்தி வருகின்றனர்.

நேற்று (10) நிறைவேற்றப்பட்ட சட்டமூலத்தின்படி, அவர்கள் அந்த சலுகையை இழந்துள்ளனர்.

அதன்படி, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று (11) உத்தியோகபூர்வ இல்லத்தை விட்டு வெளியேற உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும், முன்னாள் ஜனாதிபதிகளான மைத்திரிபால சிறிசேன மற்றும் சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க ஆகியோரும் தங்கள் உத்தியோகபூர்வ இல்லங்களை அரசாங்கத்திடம் ஒப்படைப்பார்கள் என்று அரசியல் வட்டாரங்கள் தெரிவித்தன.

சம்பந்தப்பட்ட உத்தியோகபூர்வ இல்லங்கள் ஒப்படைக்கப்படாவிட்டால், எழுத்துப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்று பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு தெரிவித்துள்ளது.

இதற்கிடையில், “ஜனாதிபதி சிறப்புரிமைகளை நீக்குதல்” சட்டத்தின் விதிகளின்படி எதிர்காலத்தில் செயல்பட எதிர்பார்ப்பதாக பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு கூறுகிறது.

ஜனாதிபதியின் சிறப்புரிமைகளை நீக்குவதற்கான சட்டமூலத்தின் இரண்டாவது வாசிப்பு மீதான விவாதம் நேற்று நாடாளுமன்றத்தில் நடைபெற்றது, தொடர்புடைய வாக்கெடுப்பில், ஆதரவாக 151 வாக்குகளும் எதிராக ஒரு வாக்கும் அளிக்கப்பட்டன.

ஜனாதிதிபதிகளின் சிறப்புரிமைகளை நீக்குதல் சட்டமூலம் 150 மேலதிக வாக்குகளால் நேற்று (10) நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.

வாக்கெடுப்பில் சட்டமூலத்திற்கு ஆதரவாக 151 வாக்குகளும், எதிராக ஒரு வாக்கும் பதிவாகின.

நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சரினால் 2025 ஓகஸ்ட் 07ஆம் திகதி நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட இந்தச் சட்டமூலம் 1986ஆம் ஆண்டின் 4ஆம் இலக்க சனாதிபதிகளின் உரித்துரிமைகள் சட்டத்தை நீக்குவதற்கான சட்டமூலமாகும்.

நீக்கப்பட்ட சட்டத்தின் 2 ஆம் பிரிவின் ஏற்பாடுகளின் நியதிகளின்படி முன்னாள் சனாதிபதிக்கு அல்லது முன்னாள் ஜனாதிபதியின் கைம்பெண்ணுக்கு வழங்கப்பட்ட ஏதேனும் வதிவிடம் அல்லது செலுத்தப்பட்ட மாதாந்த படி, நீக்கப்பட்ட சட்டத்தின் 3 ஆம் பிரிவின் ஏற்பாடுகளின் நியதிகளின்படி முன்னாள் ஜனாதிபதிக்கு அல்லது முன்னாள் ஜனாதிபதியின் கைம்பெண்ணுக்கு செலுத்தப்பட்ட மாதாந்த செயலகப் படித்தொகை, வழங்கப்பட்ட அலுவலக போக்குவரத்து மற்றும் அத்தகைய வேறு வசதிகள், நீக்கப்பட்ட சட்டத்தின் 4 ஆம் பிரிவின் ஏற்பாடுகளின் நியதிகளின்படி முன்னாள் ஜனாதிபதியின் கைம்பெண்ணுக்கு செலுத்தப்பட்ட மாதாந்த ஓய்வூதியம் என்பன இரத்துச் செய்யப்படும்.

அத்துடன், “ஜனாதிபதிகளின் சிறப்பு ரிமைகள் நீக்குதல்” சட்டமூலத்தில் சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன நேற்று பிற்பகல் தனது கையொப்பத்தையிட்டு சான்றுரைப்படுத்தினார்.

இதற்கு அமைய குறித்த சட்டமூலம் 2025 ஆம் ஆண்டின் 18 ஆம் இலக்க ஜனாதிபதிகளின் சிறப்பு ரிமைகள் (நீக்குதல்) சட்டமாக நடைமுறைக்குவரும்.

https://athavannews.com/2025/1446719

  • கருத்துக்கள உறவுகள்

Screenshot-2025-09-11-121504.jpg?resize=

உத்தியோகபூர்வ இல்லத்தைவிட்டு வெளியேறினார் சந்திரிக்கா!

முன்னாள் ஜனாதிபதிகளின் வரப்பிரசாதங்களை ரத்து செய்யும் சட்டம் நிறைவேற்றப்பட்டதை தொடர்ந்து முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தான் பயன்படுத்திவந்த உத்தியோகபூர்வ இல்லத்தை விட்டு வெளியேறியுள்ளார்.

நேற்று (10) நாடாளுமன்றில் ஜனாதிபதிகளின் வரப்பிரசாதங்களை ரத்து செய்யும் சட்டமூலம் நிறைவேற்றப்பட்ட நிலையில், அதனை சபாநாயகர் நேற்றைய தினமே சான்றுரைப் படுத்தியிருந்தார்.

இதன்படி குறித்த சட்டம் நேற்றுமுதல் அமுலுக்கு வந்த நிலையில் முன்னாள் ஜனாதிபதிகளான மைத்திரிபால சிறிசேன சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க ஆகியோர் இல்லங்களை விட்டு வெளியேறியுள்ள நிலையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் உத்தியோகபூர்வ இல்லத்தைவிட்டு வெளியேறவுள்ளார்.

https://athavannews.com/2025/1446792

  • கருத்துக்கள உறவுகள்

New-Project-151.jpg?resize=750%2C375&ssl

உத்தியோகபூர்வ இல்லத்தை காலி செய்தார் மைத்திரி!

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கொழும்பு ஹெக்டர் கொப்பேகடுவ மாவத்தையில் உள்ள தனது உத்தியோகபூர்வ இல்லத்தை காலி செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

நாடாளுமன்றத்தில் நேற்று (10) ஜனாதிபதிகளின் சிறப்பு உரிமைகளை நீக்குதல் சட்டம் மூலம் நிறைவேற்றப்பட்டதன் பின்னணியில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சரினால் 2025 ஓகஸ்ட் 07ஆம் திகதி நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட இந்தச் சட்டமூலம் 1986ஆம் ஆண்டின் 4ஆம் இலக்க ஜனாதிபதிகளின் உரித்துரிமைகள் சட்டத்தை நீக்குவதற்கான சட்டமூலமாகும்.

நீக்கப்பட்ட சட்டத்தின் 2 ஆம் பிரிவின் ஏற்பாடுகளின் நியதிகளின்படி முன்னாள் ஜனாதிபதிக்கு அல்லது முன்னாள் ஜனாதிபதியின் கைம்பெண்ணுக்கு வழங்கப்பட்ட ஏதேனும் வதிவிடம் அல்லது செலுத்தப்பட்ட மாதாந்த படி, நீக்கப்பட்ட சட்டத்தின் 3 ஆம் பிரிவின் ஏற்பாடுகளின் நியதிகளின்படி முன்னாள் ஜனாதிபதிக்கு அல்லது முன்னாள் ஜனாதிபதியின் கைம்பெண்ணுக்கு செலுத்தப்பட்ட மாதாந்த செயலகப் படித்தொகை, வழங்கப்பட்ட அலுவலக போக்குவரத்து மற்றும் அத்தகைய வேறு வசதிகள், நீக்கப்பட்ட சட்டத்தின் 4 ஆம் பிரிவின் ஏற்பாடுகளின் நியதிகளின்படி முன்னாள் ஜனாதிபதியின் கைம்பெண்ணுக்கு செலுத்தப்பட்ட மாதாந்த ஓய்வூதியம் என்பன இரத்துச் செய்யப்படும்.

https://athavannews.com/2025/1446773

  • கருத்துக்கள உறவுகள்

sampanthan3-300x160.jpg images?q=tbn:ANd9GcQN6aKd46Ob4Yh4AoUvxIk

சம்பந்தன் இப்ப உயிருடன் இருந்திருந்தாலும்....

இப்போ... அரச மாளிகையை விட்டு வில்லங்கமாக வெளியேற்றப் பட்டிருப்பார்.

எதிர்க்கட்சி தலைவர் பதவி பறி போன பின்பும்...

ஏழு, எட்டு வருசமாக அடாத்தாக அரச மாளிகையில் இருந்து

அனுபவித்து விட்டுத்தான் செத்துப் போன ஆள்.

  • கருத்துக்கள உறவுகள்

மஹிந்த உத்தியோகபூர்வ இல்லத்திலிருந்து வெளியேறினார்

Published By: Digital Desk 3

11 Sep, 2025 | 02:24 PM

image

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச கொழும்பிலுள்ள விஜேராம வீதியில் அமைந்துள்ள அவரது உத்தியோகபூர்வ இல்லத்திலிருந்து சற்று முன் வெளியேறினார்.

கொழும்பு, விஜேராம வீதியில் உள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் உத்தியோகபூர்வ இல்லத்திற்கு அரசியல்வாதிகள்,வெளிநாட்டு இராஜதந்திரிகள் மற்றும் ஆதரவாளர்கள் என பல்லேறு தரப்பினர் வியாழக்கிழமை (11) காலை முதல் வருகை தந்திருந்தனர். 

இன்றைய தினம் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச அவரது உத்தியோகபூர்வ இல்லத்திலிருந்து வெளியேறவுள்ளதாக வெளியான தகவலையடுத்து அனைவரும் அங்கு சென்றனர்.

சீனத்தூதுவர் உள்ளிட்ட பல இராஜதந்திரிகள், அரசியல்வாதிகள் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் உத்தியோகபூர்வ இல்லத்திற்கு வருகை தந்தனர்.

546408345_1264297962406297_2278618409285

முன்னாள் ஜனாதிபதிகளின் உரித்துரிமைகள் (நீக்குதல்) சட்டமூலம் புதன்கிழமை (9) பாராளுமன்றத்தில் 150 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டதை அடுத்து, ஜனாதிபதிகளின் உரித்துரிமைகள் (நீக்குதல்) சட்டமூலத்தில்  சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன தனது கையொப்பத்தையிட்டு நேற்றையதினம் சான்றுரைப்படுத்தினார். 

இதற்கமைய குறித்த சட்டமூலம் 2025ஆம் ஆண்டின் 18ஆம் இலக்க ஜனாதிபதிகளின் உரித்துரிமைகள் (நீக்குதல்) சட்டமாக நடைமுறைக்குவந்துள்ள நிலையில், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உத்தியோகபூர்வ இல்லத்திலிருந்து இன்று வெளியேறுவார் என்ற தகவல் வெளியான நிலையிலேயே அரசியல்வாதிகளும் இராஜதந்திரிகளும் ஆதரவாகளர்களும் அசரைச் சந்தித்து நலம் விசாரித்து வந்தனர்.

இந்நிலையில், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச கொழும்பிலுள்ள விஜேராம வீதியில் அமைந்துள்ள அவரது உத்தியோகபூர்வ இல்லத்திலிருந்து சற்று முன் வெளியேறினார்.

இதேவேளை, கொழும்பு, ஹெக்டர் கொப்பேகடுவ மாவத்தையில் உள்ள தனது உத்தியோகபூர்வ இல்லத்திலிருந்து முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வெளியேறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://www.virakesari.lk/article/224815

  • கருத்துக்கள உறவுகள்

rajapaksha-fe.jpg?resize=750%2C375&ssl=1

அரசியலை ஒருபோதும் கைவிடமாட்டேன்! -மஹிந்த ராஜபக்ச

நாட்டு மக்களுக்காக தனது அரசியலை ஒருபோதும் கைவிடப்போவதில்லை என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, விஜேராம இல்லத்தில் இருந்து வெளியேறும் போது ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.

முன்னாள் ஜனாதிபதிகளுக்கு கடந்த காலத்தில் அளவிற்கு அதிகமாக வரப்பிரசாதங்களை தேசிய மக்கள் சக்தி தலைமையிலான அரசாங்கம் குறைத்து புதிய சட்டம் ஒன்றை நேற்று நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியிருந்தது.

இப் புதிய சட்டம் நேற்றில் இருந்து அமுலுக்கு வந்த நிலையில் அரச இல்லங்களை இன்று வரை பயன்படுத்தியிருந்த மகிந்த ராஜபக்ச, மைத்திரிபால சிறிசேன மற்றும் சந்திரிக்கா ஆகியோர் இன்று அங்கிருந்து வெளியேறியுள்ளனர்.

அந்தவகையில் கொழும்பு, விஜேராம வீதியில் அமைந்துள்ள இல்லத்தில் இருந்து முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தனது மனைவியுடன் தங்கல்லையில் அமைந்துள்ள கால்டன் வீட்டுக்கு சென்றார்

இதன்போது அவரது ஆதரவாளர்கள் மகிந்தவின் வாகனத்தை முற்றுகையிட்டு ஆரவாரம் செய்திருந்தனர்.

இது குறித்து கருத்துத் தெரிவித்த  முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ”
அரசியலை ஒருபோதும் கைவிடமாட்டேன். அரசியல் நடவடிக்கைகள் தொடரும்
நாட்டுமக்களுக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.
எம்மை உத்தியோகப்பூர்வ இல்லத்தில் இருந்து வெளியேறசொன்னார்கள்
அதனால் இங்கிருந்து செல்கிறோம்” எனத் தெரிவித்துள்ளார்.

முன்னதாக இன்று காலை உத்தியோகபூர்வ இல்லத்திற்கு அரசியல்வாதிகள், வெளிநாட்டு இராஜதந்திரிகள் மற்றும் ஆதரவாளர்கள் என பல்லேறு தரப்பினர் வருகை தந்திருந்தனர்.
குறிப்பாக இலங்கைக்கான சீனத்தூதுவர் கீ சென்ஹொங் உள்ளிட்ட பல இராஜதந்திரிகளும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் உத்தியோகபூர்வ இல்லத்திற்கு வருகை தந்திருந்தனர்.

இந்நிலையில் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் உயிரோடு இருந்திருந்தால் மிகவும் மகிழ்ச்சியடைந்திருப்பார்” என மகிந்தவின் ஊடகப் பேச்சாளர் சட்டத்தரணி மனோஜ் கமகே இதன்போது தெரிவித்திருந்தார்.

இது குறித்து  மகிந்தவின் ஊடகப் பேச்சாளர் சட்டத்தரணி மனோஜ் கமகே கருத்துத் தெரிவிக்கையில்  பிரபாகரன் உயிருடன் இருந்திருந்தால் இன்றைய நாள் அவருக்கு மிகவும் மகிழ்ச்சியான ஒருநாளாக இருந்திருக்கும்.

இன்றைய நாள் அரசாங்கத்திற்கு மிகவும் சந்தோசமான நாள். அத்தோடு தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்களான டயஸ்போராக்களுக்கு சந்தோசமாக இருக்கும் என நினைக்கிறேன்.

சட்டத்திற்கு மதிப்பளித்து மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் 24 மணிநேரத்திற்குள் உத்தியோகப்பூர்வ இல்லத்தில் இருந்து வெளியேறியுள்ளார். ஒரு வாரத்திற்குள் இந்த வீடு உத்தியோகப்பூர்வமாக கையளிக்கப்படும்.

30வருடகால யுத்தத்தினை நிறைவுக்கு கொண்டுவந்து நாட்டில் அமைதியை ஏற்படுத்திய தலைவருக்கு அரசாங்கம் கௌரவமளிக்கும் விதத்தினை நாட்டு மக்கள் இன்று கண்முன்பார்க்கக்கூடியதாக இருந்தது.

சிங்கம் எங்கிருந்தாலும் சிங்கம்தான். தங்காலையில் அவருக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் காணப்படுமாயின் அதற்கான பொறுப்பினை அரசாங்கம் ஏற்றுக்கொள்ள வேண்டும்.

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் உயிரோடு இருந்திருந்தால் மிகவும் மகிழ்ச்சியடைந்திருப்பார்” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

https://athavannews.com/2025/1446859

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, தமிழ் சிறி said:

சிங்கம் எங்கிருந்தாலும் சிங்கம்தான். தங்காலையில் அவருக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் காணப்படுமாயின் அதற்கான பொறுப்பினை அரசாங்கம் ஏற்றுக்கொள்ள வேண்டும்

இதென்னடா இப்படி முன்னுக்குப்பின் முரணான கதை. பாதுகாப்பு கேட்கிற சிங்கம். இது அசிங்கம்.

  • கருத்துக்கள உறவுகள்

546377227_1235436595265863_8292834416441

545847352_1235439181932271_6658943728873

546569304_1235439188598937_2063189521778

547515308_1235438521932337_3796225474918

547356939_1235438525265670_8560073136324

547526992_1235438578598998_4413885481357

🔴 தினமும் பல லட்சம், ஆண்டுதோறும் பல மில்லியன் முன்னாள் ஜனாதிபதிகளுக்கு செலவு, ஏன் விஷேட சலுகை தள்ளுபடி முக்கியம்?
நாடாளுமன்றத்தில் உரையாற்றிய அமைச்சர் விஷேட சலுகைகள் நீக்கப்படும் சட்டமூலம் மற்றும் அவர்களுக்கான பாதுகாப்பு நடவடிக்கை குறித்து கூறுகையில், முன்னாள் அரச தலைவர்களுக்கான பாதுகாப்பு தனியாக நிர்வகிக்கப்பட்டு வருவதாகவும், அது அப்படியே தொடரும் எனவும் வலியுறுத்தினார்.
தமது பாதுகாப்புக் குறித்து கவலை கொண்ட எவரும், பாதுகாப்புக் இடர் குழுவிடம் கோரிக்கை சமர்ப்பிக்க முடியும் எனவும், அக்குழுவே தேவையான பாதுகாப்பை வழங்குவதற்கு பொறுப்பானது எனவும் அவர் தெரிவித்தார்.
முன்னாள் ஜனாதிபதிகளுக்கு வழங்கப்பட்ட விரிவான பணியாளர்கள் குறித்தும் இதன்போது அமைச்சர் விஜேபால விவரித்தார்.
அதன்படி விஷேடமாக, மஹிந்த ராஜபக்சவுக்கு 111 பணியாளர்கள் வழங்கப்பட்டுள்ளனர்.
அவர்களில்,
9 மருத்துவ ஊழியர்கள்
8 சாரதிகள்
2 எழுதுபவர்கள்
5 இயந்திரப் பணியாளர்கள்
1 கடற்படை உதவியாளர்
46 சிறப்பு நடவடிக்கைப் பணியாளர்கள்
16 சமையல்காரர்கள்
26 மின்சார வல்லுநர்கள்
4 சிவில் பொறியியலாளர்கள்
4 தொழில்நுட்ப பொறியியலாளர்கள்
2 களஞ்சிய காவலர்கள்
3 உடற்பயிற்சி பயிற்றுவிப்பாளர்கள்
1 தச்சர்
1 நாய் பராமரிப்பாளர்

ஆகியோர் அடங்குவதாக அவர் கூறினார்.
மேலும், கோட்டாபய ராஜபக்சவுக்கு 60 க்கும் மேற்பட்ட பணியாளர்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும்,
அவர்களில்:
3 மருத்துவ உதவியாளர்கள்
1 பராமரிப்பு தொழில்நுட்ப வல்லுநர்
6 சாரதிகள்
5 எழுதுபவர்கள்
8 பாதுகாப்பு அதிகாரிகள்
13 ஆதரவு பணியாளர்கள்
8 சமையல்காரர்கள்
3 தொழில்நுட்ப வல்லுநர்கள்
1 உடற்பயிற்சி பயிற்றுவிப்பாளர்
6 சிறப்பு நிபுணர்கள்
1 நாய் பராமரிப்பாளர்
ஆகியோர் உள்ளடங்குவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
சலுகைகள் சட்டத்தின் கீழ், ஓய்வுபெற்ற ஜனாதிபதிகளுக்கும் அவர்களது விதவைகளுக்கும் 2024 ஆம் ஆண்டில் அரசாங்கம் ரூபா 98.5 மில்லியன் செலவழித்ததாக அமைச்சர் தெரிவித்தார்.
அதன் விபரம்:
ஹேமா பிரேமதாச – ரூபா 2.687 மில்லியன்
சந்திரிகா குமாரதுங்க – ரூபா 16.43 மில்லியன்
மஹிந்த ராஜபக்ச – ரூபா 54.62 மில்லியன்
மைத்திரிபால சிறிசேன – ரூபா 15.77 மில்லியன்
கோட்டாபய ராஜபக்ச – ரூபா 12.28 மில்லியன்
ரணில் விக்கிரமசிங்க – ரூபா 3.49 மில்லியன்
இவ்வாறு பொதுப்பணத்தை குறிப்பிட்ட அரசியல் தலைவர்களுக்கு அதிகபட்சமாக செலவளிப்பதானது நாடு தற்போதுள்ள நிலையில் சிந்திக்கவேண்டியது என்றும் குறிப்பிட்டார்.

Vaanam.lk

  • கருத்துக்கள உறவுகள்

கார்ல்டன் இல்லத்தை அடைந்த மஹிந்த

image?url=https%3A%2F%2Fada-derana-tamil

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ ஹம்பாந்தோட்டையில் உள்ள கார்ல்டன் இல்லத்தை இன்று (11) பிற்பகல் சென்றடைந்துள்ளார்.

இந்நிலையில் அங்கு முன்னாள் ஜனாதிபதியை அவரது ஆதரவாளர்கள் கூடி வரவேற்பதை அவதானிக்க முடிகின்றது.

https://adaderanatamil.lk/news/cmffcu4k100deo29nv7ba43pz

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, தமிழ் சிறி said:

வாக்கெடுப்பில் சட்டமூலத்திற்கு ஆதரவாக 151 வாக்குகளும், எதிராக ஒரு வாக்கும் பதிவாகின.

சம்பந்தன் இப்ப உயிருடன் இருந்திருந்தால் எதிராக இரண்டு வாக்குகள் பதிவாகி, வாக்கு என்ற ஒருமை நீங்கிப் பன்மையாகி, அதற்கொரு மரியாதை கிடைத்திருக்கும். 🤔

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, கிருபன் said:

அரசமாளிகையில் இருந்து வெளியேறுகிறார் மஹிந்த!

large.IMG_9020.jpeg.ebe09fd5eac1d403ae5e

  • கருத்துக்கள உறவுகள்

நாம் வாழும் காலத்திலே இவற்றையெல்லாம் பார்க்க காணக் கண் கோடி வேண்டும். அரசன் அன்று கொல்வான் தெய்வம் நின்று.....கொல்லும். ...இப்போது எல்லாம் சுடச்சுட ....

Edited by நிலாமதி

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, ஏராளன் said:

கார்ல்டன் இல்லத்தை அடைந்த மஹிந்த

image?url=https%3A%2F%2Fada-derana-tamil

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ ஹம்பாந்தோட்டையில் உள்ள கார்ல்டன் இல்லத்தை இன்று (11) பிற்பகல் சென்றடைந்துள்ளார்.

இந்நிலையில் அங்கு முன்னாள் ஜனாதிபதியை அவரது ஆதரவாளர்கள் கூடி வரவேற்பதை அவதானிக்க முடிகின்றது.

https://adaderanatamil.lk/news/cmffcu4k100deo29nv7ba43pz

வரவேற்பை பார்க்க அடுத்த சனாதிபதி நாமல்தான் போல கிடக்கு.. ..நம்ம சனம்தான் அனுரவை தலையில் வைத்து கொண்டாடுது..

  • கருத்துக்கள உறவுகள்

கொழும்பில் மஹிந்தவுக்கு 4 வீடுகள்

Thursday, September 11, 2025 செய்திகள்

images.jpeg


மஹிந்த ராஜபக்‌ஷவுக்கு கொழும்பில் வீடு வழங்க நான்கு பேர் ஏற்கனவே முன்வந்துள்ளதாக  லக்‌ஷ்மன் யாப்பா அபேவர்த்தன தெரிவித்துள்ளார். 


குறித்த 4 வீடுகளில் ஒன்றைப் பார்வையிட வருமாறு அவருக்கு ஏற்கனவே அறிவிக்கப்பட்ட போதும் அவர் அங்கு சென்று பார்வையிடவில்லை.


மஹிந்த ராஜபக்‌ஷவுக்கு வீடு வழங்க முன்வந்தோரில் தமிழர் ஒருவர் அடங்குவதாகவும் லக்‌ஷ்மன் யாப்பா அபேவர்த்தன குறிப்பிட்டார்.

இந்த 4 வீடும் அவருடைய காசில் வாங்கினதுதான் ...இந்த தமிழர் ஆரெண்டு அறிந்தால் ..அவர்தான் கனடானிலை திருமண மண்டபம் நடத்திற ஆளோ தெரியாது..ஒன்றல்ல கன ஆதனங்கள் ...கோட்டாவின்...மகிந்தவின் காசில் ஓடுது..

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, alvayan said:

.நம்ம சனம்தான் அனுரவை தலையில் வைத்து கொண்டாடுது..

அது என்றால் உண்மை தான். அநுரகுமார திசாநாயக்க வை காதலிக்கும் மக்கள் என்று தமிழர் ஒருவர் காணொளி தயாரித்துள்ளார்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
2 hours ago, alvayan said:

வரவேற்பை பார்க்க அடுத்த சனாதிபதி நாமல்தான் போல கிடக்கு.. ..நம்ம சனம்தான் அனுரவை தலையில் வைத்து கொண்டாடுது..

எந்த சிங்கள இனவாத தலைவர்களை ஈழத்தமிழர்கள் கொண்டாடவில்லை?

ஏதோ ஒரு நம்பிக்கை நப்பாசையில் எல்லோரையும் தலைமேல் வைத்து கொண்டாடி விட்டு இன்றும் இலவுகாத்த கிளி போல் காத்திருக்கின்றார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, alvayan said:

வரவேற்பை பார்க்க அடுத்த சனாதிபதி நாமல்தான் போல கிடக்கு.. ..நம்ம சனம்தான் அனுரவை தலையில் வைத்து கொண்டாடுது..

உப்பிடித்தான் 2015 ல ஹெலில போய் இறங்கினவர், 2025 ல கார்ல போயிருக்கிறார்.

  • கருத்துக்கள உறவுகள்

547320111_1207973688034268_8443550305218

  • கருத்துக்கள உறவுகள்

image?url=https%3A%2F%2Fada-derana-tamil

அததெரண கருத்துப்படம்

  • கருத்துக்கள உறவுகள்

உத்தியோகபூர்வ இல்லத்திலிருந்து விடைபெற்ற மஹிந்தவின் பதிவு!

image?url=https%3A%2F%2Fada-derana-tamil

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, விஜேராமவில் உள்ள தனது உத்தியோகபூர்வ இல்லத்திலிருந்து வெளியேறிய பின்னர், அந்த சம்பவம் குறித்து தனது பேஸ்புக் கணக்கில் பதிவொன்றை இட்டுள்ளார்.

அந்தப் பதிவில், ஜனாதிபதிகளுக்கான உரித்துரிமைகளை நீக்கும் சட்டமூலம் சமீபத்தில் நிறைவேற்றப்பட்டதன் மூலம் நடைமுறைக்கு வந்த புதிய சட்ட நிலைமைக்கு மதிப்பளித்து, தான் உத்தியோகபூர்வ இல்லத்திலிருந்து வெளியேறியதாகக் குறிப்பிட்டுள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி தனது பேஸ்புக் கணக்கில் இட்டுள்ள பதிவு பின்வருமாறு,

"ஜனாதிபதிகளுக்கான உரித்துரிமை நீக்க சட்டமூலம் கடந்த 10 ஆம் திகதி பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டதன் மூலம் நடைமுறைக்கு வந்த புதிய சட்ட நிலைமையை மதித்து, எனக்கு சட்டப்பூர்வமாக ஒதுக்கப்பட்ட விஜேராம உத்தியோகபூர்வ இல்லத்திலிருந்து நான் நேற்றைய தினம் (11) வெளியேறினேன்.

விஜேராம உத்தியோகபூர்வ இல்லத்தை விட்டு வெளியேற ஊடகங்களில் சிலர் இதற்கு முன்னர் வௌியிட்ட பல்வேறு கருத்துக்களை நான் அவதானித்தேன்.

மக்களுக்கு எதுவும் செய்ய முடியாது மிகக் குறுகிய காலத்தில் நாளுக்கு நாள் மக்களின் அதிருப்தி சம்பாதித்து வரும் குழு தங்கள் திறமையின்மையை மறைக்க ஊடகங்களில் வெளியிட்ட அந்த கருத்துகளுக்கு கீழ்ப்படிய வேண்டிய அவசியம் எனக்கு ஏற்படவில்லை.

இருப்பினும், பின்னர், அவர்களால் புதிய சட்டங்கள் இயற்றப்பட்டதன் மூலம், 24 மணி நேரத்திற்குள் விஜேராம இல்லத்திற்கு விடைகொடுத்தேன்.

ஏனென்றால் நாம் சட்டத்தை மதிக்க வேண்டும். மஹிந்த ராஜபக்ஷ என்ற நான், சட்டத்தின் முன்பும், என் மக்கள் முன்பும் மட்டும் தான் தலை வணங்குவேன்.

தனிப்பட்ட பழிவாங்கலை நோக்கமாகக் கொண்ட ஒழுக்கமற்ற, தொழில்முறையற்ற அரசியல் பயங்கரவாதத்தை நாம் அனைவரும் எதிர்கொள்ள வேண்டியிருந்தது.

மேலும், கொடூரமான பயங்கரவாதத்தை முடிவுக்குக் கொண்டு வந்ததால், அது தொடர்பாக எழுந்த நிகழ்வுகளின் இலக்காக நான் மாறிவிட்டேன்.

ஆனால் பயங்கரவாதத்தை முடிவுக்குக் கொண்டு வந்ததற்கு நான் ஒருபோதும் வருத்தப்பட மாட்டேன். இந்த தாய்நாட்டில் சுதந்திரமாக சுவாசிக்கும் உரிமைக்காக நான் போராடினேன்.

சுவாசம் நம் அனைவருக்கும் பொதுவானது. இனம் அல்லது மத வேறுபாடு இல்லை. எமது சுவாசத்திற்காக தங்களின் மூச்சை இழந்தவர்கள் இராணுவ வீரர்களே.

அவர்கள் வென்ற ஒரு பெருமைமிக்க தேசத்தின் சுதந்திரத்தை அடையாளப்படுத்தவும், அதற்கு நன்றி தெரிவிக்கவும், நாங்கள் அனைவரும் புனித நகரமான அனுராதபுரத்தில் சந்த ஹிரு சேயவை உருவாக்கினோம்.

சந்திரனும் சூரியனும் இருக்கும் வரை, எங்கள் தாய்நாடு ஒரே நாடாக, ஒரே கொடியின் கீழ் இருக்கும் என்பதை இது குறிக்கிறது.

எனது மூத்த மகன் நாமல் கூறியது போல நான் எல்லாம் தொடங்கிய எனது சொந்த ஊருக்குத் திரும்பிவிட்டேன். நாங்களே கட்டிய தெற்கு அதிவேக நெடுஞ்சாலையிலிருந்து வந்தேன்.

இப்போது கிராமத்தில் புளிப்பு மீன் குழம்பை அனுபவிக்க முடியும். அதை கொழும்புக்கு எடுத்துச் செல்ல வேண்டிய அவசியமில்லை. இருப்பினும், இது அனைத்தும் இந்த பூமியிலிருந்து தொடங்கியது.

மஹிந்த ராஜபக்ஷ என்ற இளைஞன் 1970 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் கிருவாவிலிருந்து போட்டியிட்டார்.

எனக்கு அந்த வாய்ப்பை வழங்கியவர் சிறிமாவோ பண்டாரநாயக்கா. ஒரு இளம் எம்.பி.யாக நான் பின்பற்ற வேண்டிய பாதையை அவர் எனக்குக் காட்டினார்.

அவர் எங்களுக்கு ஒரு தலைவராகவும் தாயாகவும் இருந்தார் என்று சொல்வது உண்மைதான். அரசியலில் சரியான வழிகாட்டுதலை வழங்குவது மிகவும் முக்கியம்.

ருஹுணு எம்.பி.யாக இருந்த எனது மறைந்த அன்புக்குரிய தந்தை, நாட்டின் ஒடுக்கப்பட்ட மக்களை சோசலிசத்தை நோக்கி வழிநடத்திய பண்டாரநாயக்காவின் பின்னால் எப்போதும் இருந்தார்.

ருஹுணு பெலியத்தவில் மக்களின் அபிலாஷைகளை என் தந்தை பிரதிநிதித்துவப்படுத்தினார். இளைய எம்.பி.யாக 1970 இல் மக்கள் அரசாங்கத்தின் முதல் உரைக்கு நன்றி தெரிவிக்கும் பிரேரணை உரையை நான் நிகழ்த்தினேன்.

ருஹுணு பெலியத்தவில் மக்களின் அபிலாஷைகளைப் பற்றிப் பேசியது எனக்கு நினைவிருக்கிறது.

இருண்ட காலங்களில் இருந்த அரசியல் அடக்குமுறை மற்றும் பழிவாங்கல்களைத் தாண்டி, காணாமல் போனவர்களின் சார்பாக ஜெனீவா மனித உரிமைகள் பேரவைக்குச் சென்றவர் இந்த மஹிந்த ராஜபக்ஷதான்.

காணாமல் போதல்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக முன்னிலையாகி சட்ட உதவி வழங்கப்பட்ட இடத்தின் முகவரியான "சட்டத்தரணி மஹிந்த ராஜபக்ஷ, தலைவர் - மனித உரிமைகள் மற்றும் சட்ட உதவி மையம், கார்ல்டன், தங்காலை". என்பதை எனது நண்பர்களுக்கு நான் மீண்டும் நினைப்படுத்த விரும்புகிறேன்.

பாதயாத்திரைகள், பொதுமக்கள் கூக்குரல், மனித சங்கிலி போன்ற அரசாங்க எதிர்ப்புப் போராட்டங்கள் மக்களின் நலனுக்காக ஜனநாயக வழிமுறைகள் மூலம் மேற்கொள்ளப்படும் உண்மையான மக்கள் போராட்டங்களுக்கு எடுத்துக்காட்டுகள்.

யாரும் தங்கள் அரசியல் அழுத்தங்கள் மற்றும் பதட்டங்களை சமாளிக்க ஜனநாயகத்திலிருந்து விலக முடியாது.

தவறான தகவல்களை பிரச்சாரம் செய்து பிரதான எதிர்க்கட்சி சித்தாந்தவாதிகளை அடக்குவதற்கான முயற்சி வருந்தத்தக்கது.

மக்கள் நம் மீது வைத்திருந்த நம்பிக்கைகள் அதிகமாக இருந்தன. அந்த நம்பிக்கைகளின் தீவிரத்தினால்தான் கடந்த காலங்களில் சில சம்பவங்களை நாங்கள் எதிர்கொள்ள வேண்டியிருந்தது.

மஹிந்த ராஜபக்ஷ தனது இதயத்திற்கு ஏற்பவும் நாட்டிற்காகவும் முடிவுகளை எடுத்தார். மக்களின் அன்பையும் பாசத்தையும் விட எனக்கு மதிப்புமிக்கது எதுவுமில்லை.

கடந்த காலத்திலும் இன்றும் நான் பெற்ற அதே மக்களின் அன்பைப் பெறுவது எனது பாக்கியம். அந்த வரப்பிரசாதத்தை யாராலும் என்னிடமிருந்து பறிக்க முடியாது.

எங்கள் மரியாதைக்குரிய மதத்தலைவர்களிடம் இருந்து நான் எப்போதும் பெற்ற ஆசீர்வாதங்கள் பொருள் சலுகைகளுக்கு அப்பாற்பட்டவை.

என் அன்பு மனைவி ஷிராந்தி அரசியலில் ஈடுபடுவதற்குத் தேவையான மன சுதந்திரத்தை எனக்கு வழங்குவதன் மூலம் எப்போதும் எனக்கு பலத்தை அளித்து வருகிறார்.

அன்றும் இன்றும் என் பக்கத்தில் இருந்த, இருக்கும் தலைமைப் பாதுகாப்பு அதிகாரி தலைமையிலான எனது பாதுகாப்பு அதிகாரிகளிடமிருந்து நான் பெறும் பாதுகாப்பு, வேலைக்கு அப்பாற்பட்ட மிகவும் அன்பான பிணைப்பாகும்.

நான் தங்காலையில் இருந்தாலும் விஜேராமவில் இருந்தாலும், மஹிந்த ராஜபக்ஷ மஹிந்த ராஜபக்ஷ தான்.

நான் உயிருடன் இருக்கும் வரை, நாம் அனைவரும் வாழும் சிங்கக் கொடியின் நிழலில் இருக்கும் இந்த ஒன்றுபட்ட தாய்நாட்டை யாராவது காட்டிக் கொடுத்தால், எவ்வளவு துன்புறுத்தல்கள் வந்தாலும் நான் எழுந்து நிற்பேன் என்று அறிவிக்கிறேன்.

அந்த நாள் வந்தால், ஆதரிப்பதற்கு மகா சங்கத்தினருடன் இந்த நாட்டின் அன்பான மக்கள் இருப்பார்கள் என்பதை நான் நன்கு அறிவேன்.

கிருவாப்பத்துவைச் சேர்ந்த மஹிந்த ராஜபக்ஷ அரசியல் அச்சுறுத்தல்கள் மற்றும் கர்ச்சிப்பினை நன்கு அறிந்தவர்." என பதிவிட்டுள்ளார்.

https://adaderanatamil.lk/news/cmfgq82sk00cwqplpmebt7dbn

ராஜபக்சர்கள் மட்டுமல்ல, மைத்திரி, ரணில், சந்திரிக்கா எல்லாரும் அனுர அரசின் நடவடிக்கையால் கடும் சினத்துக்குள்ளாகியுள்ளனர். மகிந்தவை தங்காலையில் வைத்து பலிகொடுத்தாவது (பின் புலம்பெயர் தமிழர்களை காரணம் சொல்லி) தம் பக்கம் காற்று வீச வைக்க முயல்வார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

545595189_1208765751288395_5836038045719

545662638_1208763654621938_2342282434833

548186809_1208764651288505_6155309563395

547414471_1208807654617538_7213688860240

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.