Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

GettyImages-1237976141.webp?resize=750%2

திருமண உறவில் குறுக்கிடும் 3ஆம் நபரிடம் நஷ்டஈடு கோரலாம்!

திருமண உறவில் குறுக்கிடும் மூன்றாவது நபரிடம் நஷ்டஈடு கோரி, பாதிக்கப்பட்ட வாழ்க்கைத் துணைவர் வழக்குத் தொடரலாம் என டெல்லி உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

டெல்லியில் தனது கணவரின் நிறுவனத்தில் பணிபுரியும் பெண் ஒருவர், தங்கள் திருமண வாழ்வில் தெரிந்தே தலையிட்டதாகக் கூறி, பெண் ஒருவர் தனது கணவரின் சக ஊழியரிடம் இருந்து 4 கோடி ரூபாய் நஷ்டஈடு கோரி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

ஏற்கனவே தம்பதிகளுக்கு இடையே விவாகரத்து வழக்குகள் குடும்ப நல நீதிமன்றத்தில் நடைபெற்றுக் கொண்டிருந்தாலும், இதுபோன்ற நஷ்டஈடு கோரும் தனி உரிமையியல் வழக்கை தனியாகத் தொடரலாம் என்று சட்டத்தில் இடம் இருப்பதால், பாதிக்கப்பட்ட மனைவி உயர் நீதிமன்றத்தை நாடினார்.

இவ்வழக்கில் டெல்லி உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பில், ‘கணவன் அல்லது மனைவியின் திருமணத்திற்கு அப்பாற்பட்ட உறவில் ஈடுபடும் மூன்றாவது நபர் மீது, பாதிக்கப்பட்ட வாழ்க்கைத் துணைவர் (கணவர் அல்லது மனைவி) நஷ்டஈடு கோரி உரிமையியல் வழக்குத் தொடரலாம் எனத் தீர்பளித்துள்ளது.

திருமணத்திற்கு அப்பாற்பட்ட உறவு என்பது குற்றச் செயல் அல்ல என உச்ச நீதிமன்றம் கடந்த 2018ம் ஆண்டு தீர்ப்பளித்திருந்தது. தற்போது, அது குற்றமாகாது என்றாலும், அதுவே தம்பதிகளுக்கு இடையிலான திருமண முறிவுக்கு காரணமாக அமையும் பட்சத்தில், அதனால் ஏற்படும் சட்டரீதியான பாதிப்புகளுக்கு இழப்பீடு கோர முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் திருமண உறவில் வேண்டுமென்றே, தவறான நோக்குடன் தலையிடும் மூன்றாவது நபருக்கு அவ்வாறு செய்யாமல் இருக்க வேண்டிய கடமை உள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவரது செயலால் திருமணம் முறிந்தால், நஷ்டஈடு கோருவது செல்லும். அதே சமயம், திருமணத்திற்கு அப்பாற்பட்ட உறவில் ஈடுபட்ட கணவன் அல்லது மனைவியின் செயல்பாடு, எந்தவித வற்புறுத்தலும் இன்றி முற்றிலும் தன்னிச்சையானதாக இருந்தால், மூன்றாவது நபர் மீது நஷ்டஈடு கோர முடியாது’ என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

விவாகரத்து வழக்குகளில், திருமணத்திற்கு அப்பாற்பட்ட உறவை நிரூபிக்க, கணவன் மற்றும் அவருடன் தொடர்பில் இருந்த பெண்ணின் தொலைபேசி அழைப்பு விவரங்கள் மற்றும் இருப்பிடத் தகவல்களை மனைவி கோரலாம் என டெல்லி உயர் நீதிமன்றம் கடந்த ஓகஸ்ட் மாதம் தீர்ப்பளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2025/1448085

  • Replies 93
  • Views 4.6k
  • Created
  • Last Reply

Most Popular Posts

  • goshan_che
    goshan_che

    மேலே சிறி அண்ணாவிடம் கேட்டது உங்களுக்கும் சேர்த்தே. அந்த திரியில் பல ஆதாரங்களோடு உங்கள் இருவருக்கும் இது பச்சை பொய் என விளக்கி எழுதினேன். அதன் பின்னும் ஏன் ஒரு குடும்ப பெண்ணை பற்றி பொதுவெளியில் இப்படி

  • நிழலி
    நிழலி

    தமிழ் சிறி, வேண்டும் என்றே தவறான தகவல்களை பரப்புவது யாழ் கள விதிகளுக்கு மட்டுமல்ல, பொதுவான ஊடக தர்மத்துக்கும், ஊடக விதிகளுகும் முரணாணது.

  • goshan_che
    goshan_che

    இது மிகவும் தவறான வதந்தி ஆகும். இதை நீங்களும் குமாரசாமி அண்ணையும் தெரிந்து கொண்டே மீள, மீள பரப்புகிறீர்கள். இன்னொரு திரியில் உங்கள் இருவருக்கும் செந்தாமரை மனைவியும், கருணாநிதி மனைவியும் வேறு வேறு ஆட்க

  • கருத்துக்கள உறவுகள்

தொலைந்தது கள்ளத்தொடர்பு! அது சரி, சிறியர் ஏன் இதை இங்கு இணைத்தார்?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, satan said:

தொலைந்தது கள்ளத்தொடர்பு! அது சரி, சிறியர் ஏன் இதை இங்கு இணைத்தார்?

அடுத்தவன் குடும்பத்தில் தலையிட்டால்… கோடிக் கணக்கில் நஷ்டஈடு கொடுக்க வேண்டும் என்ற செய்தியை… எல்லோரும் அறிய வேண்டும் என இணைத்தேன் சாத்தான். 😁

அரசியல்வாதிகளும், சினிமா நடிகர்களும் இனி எச்சரிக்கையாக இருப்பார்கள் என எதிர்பார்க்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, தமிழ் சிறி said:

அடுத்தவன் குடும்பத்தில் தலையிட்டால்… கோடிக் கணக்கில் நஷ்டஈடு கொடுக்க வேண்டும் என்ற செய்தியை… எல்லோரும் அறிய வேண்டும் என இணைத்தேன் சாத்தான். 😁

அரசியல்வாதிகளும், சினிமா நடிகர்களும் இனி எச்சரிக்கையாக இருப்பார்கள் என எதிர்பார்க்கலாம்.

அப்படியென்றால் அதே இந்தியாவில் கருணாநிதி எப்படி மூன்று பெண்டாட்டியை. வைத்திருந்தார் ????

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, Kandiah57 said:

அப்படியென்றால் அதே இந்தியாவில் கருணாநிதி எப்படி மூன்று பெண்டாட்டியை. வைத்திருந்தார் ????

சட்டம் இப்பதானே… வந்தது. கருணாநிதி கில்லாடி, முந்தி விட்டார். 😎

  • கருத்துக்கள உறவுகள்

பெண்டாட்டி தெய்வானை இருக்க யானையை விட்டு துரத்தி துரத்தி வள்ளியை கரெட்க் பண்ணிய முருகன் காலத்தில் இந்த சட்டம் இல்லை. 😂ஆனால் அந்த தமிழ் கடவுளின் முன்மாதிரியை பின்பற்றுபவர்களுக்கு தான் இந்த சட்டம். 😂

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, தமிழ் சிறி said:

அடுத்தவன் குடும்பத்தில் தலையிட்டால்… கோடிக் கணக்கில் நஷ்டஈடு கொடுக்க வேண்டும் என்ற செய்தியை… எல்லோரும் அறிய வேண்டும் என இணைத்தேன் சாத்தான்.

16 hours ago, தமிழ் சிறி said:

திருமணத்திற்கு அப்பாற்பட்ட உறவில் ஈடுபட்ட கணவன் அல்லது மனைவியின் செயல்பாடு, எந்தவித வற்புறுத்தலும் இன்றி முற்றிலும் தன்னிச்சையானதாக இருந்தால், மூன்றாவது நபர் மீது நஷ்டஈடு கோர முடியாது’ என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

இதுகளையெல்லாம் சட்டம் போட்டு திருத்த முடியாது, அதுகளாய் திருந்தினாலொழிய. சட்ட ஓட்டைகளுக்குள் புகுந்து விளையாடுங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, Kandiah57 said:

அப்படியென்றால் அதே இந்தியாவில் கருணாநிதி எப்படி மூன்று பெண்டாட்டியை. வைத்திருந்தார் ????

மூவரும், கருணாநிதியின் முதல் மனைவி பத்மாவதி, அவர் இறந்த பின் இரெண்டாம் தாரம் தயாளு, மூன்றாவது துணைவி இராஜாத்தி.

இந்த 3 வரில் ஒருவரும் இன்னொரு மனிதனின் மனைவி அல்ல.

ஆகவே நஸ்ட ஈடு என்ர கதைக்கு இடமில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, goshan_che said:

மூவரும், கருணாநிதியின் முதல் மனைவி பத்மாவதி, அவர் இறந்த பின் இரெண்டாம் தாரம் தயாளு, மூன்றாவது துணைவி இராஜாத்தி.

இந்த 3 வரில் ஒருவரும் இன்னொரு மனிதனின் மனைவி அல்ல.

ஆகவே நஸ்ட ஈடு என்ர கதைக்கு இடமில்லை.

உண்மை தான் மூவரும் கன்னிப் பெண்கள் சட்டமும். இப்ப தான் வந்தது என்று செய்தியை இணைத்தவர். சொல்லுகிறார். ...எனவே… கருணாநிதி சட்டத்தை மீறவில்லை 😂😂

எனது கருத்து இந்த சட்டம் செய்யாதே என்று சொல்லவில்லை .....செய்தால் 4 கோடி பணத்தை செலுத்துங்கள் என்கிறது,....ஆகவே பணக்காரர் செய்யலாம்,...ஏழைகள். செய்ய முடியாது

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, Kandiah57 said:

எனது கருத்து இந்த சட்டம் செய்யாதே என்று சொல்லவில்லை .....செய்தால் 4 கோடி பணத்தை செலுத்துங்கள் என்கிறது,....ஆகவே பணக்காரர் செய்யலாம்,...ஏழைகள். செய்ய முடியாது

உண்மைதான்.

சீமான் வழக்கு திரிகளில் பலமுறை எழுதியதுதான்.

மேற்கு நாட்டு சட்டம் போல அல்ல இந்திய சட்டம்.

அங்கே திருமணம் செய்வதாக ஏமாற்றி உறவு வைத்தால் அது ரேப் ஆக முடியகூடும். மேற்கில் அப்படி அல்ல.

இன்னொருவரின் கணவன்/மனைவியோடு தொடர்பில் இருந்தால் மேற்கில் அபராதம் ஏதும் செலுத்த வேண்டியதில்லை. ஆனால் இந்தியாவில் இப்படி.

  • கருத்துக்கள உறவுகள்

இனி வில்லன் அல்லது வில்லி இருந்தால் சந்தோஷமாக காசு பார்க்கலாம் 🤣

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, goshan_che said:

மூவரும், கருணாநிதியின் முதல் மனைவி பத்மாவதி, அவர் இறந்த பின் இரெண்டாம் தாரம் தயாளு, மூன்றாவது துணைவி இராஜாத்தி.

இந்த 3 வரில் ஒருவரும் இன்னொரு மனிதனின் மனைவி அல்ல.

ஆகவே நஸ்ட ஈடு என்ர கதைக்கு இடமில்லை.

senthamarai-1680873426.jpg

Actor-Senthamarai.jpg

கருணாநிதி.... நாடகங்களில் நடித்துக் கொண்டு இருந்த ராஜாத்தியுடன் கள்ளத் தொடர்பை ஏற்படுத்தும் போது, ராஜாத்தி... (மேலே படத்தில் உள்ள) செந்தாமரை என்பவரின் மனைவி. ராஜாத்தி தனது கையை விட்டுப் போனதை.... தாங்க முடியாமல் மீண்டும் இணைந்து வாழ செந்தாமரை எவ்வளவோ முயற்சித்தும்.... கருணாநிதி தனது ரவுடியிச செல்வாக்கை வைத்து... ராஜாத்தியை நிரந்தரமாக தனதாக்கிக் கொண்டார். ராஜாத்தியின் மகள் தான்... கனிமொழி.

கோசான்..... நாங்கள் எல்லாம், கருணாநிதியின் வாழ்க்கை சரித்திரத்தை கரைத்து குடித்து விட்டுத்தான்... யாழ்.களத்திலேயே இணைந்தனாங்கள். இராஜாத்தி... இன்னொருத்தரின் மனைவி அல்ல என்று கருணாநிதிக்கு வெள்ளை அடிக்கிற கதை, கம்பி கட்டுற கதை போன்ற பொய் செய்தி எல்லாத்தையும் @Kandiah57 அண்ணை போன்ற ஆட்களுக்கு சொன்னால் அவர்கள் நம்பலாம். ஆனால் எங்களிடம் உங்கள் பருப்பு வேகவே, வேகாது. 😂

செந்தாமரை... பின்னாளில், தமிழ் திரையுலகத்தில் பிரபலமாக பேசப் பட்ட குணசித்திர நடிகர் ஆவார்.

ஸ்ராலின் அவர்கள்... தனது தந்தை செய்த அருவருப்பான செயலுக்கு பிராயச்சித்தம் செய்யும் விதமாக... தனது மகளுக்கு செந்தாமரை என பெயர் சூட்டியுள்ளார் என்றே கருத இடம் உள்ளது.

ஆக.... கருணாநிதியின் குடும்பத்தில்... உதயநிதியின் சகோதரியாக இப்போதும் செந்தாமரை வாழ்ந்து கொண்டுதான் இருக்கின்றார். 🙂

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்
53 minutes ago, தமிழ் சிறி said:

இது நான் முன்பும் படித்தது தான் ஆனாலும் மறந்து விட்டேன் ...என்ன இதே நினைப்பில் இருக்க முடியுமா???? ...🤣 இவ்வளவு ஞாபகத்தில் வைத்து அறியத் தந்ததிற்க்கு மிக்க நன்றிகள் தமிழ் சிறி. ஐயா

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
3 hours ago, தமிழ் சிறி said:

கருணாநிதி.... நாடகங்களில் நடித்துக் கொண்டு இருந்த ராஜாத்தியுடன் கள்ளத் தொடர்பை ஏற்படுத்தும் போது, ராஜாத்தி... (மேலே படத்தில் உள்ள) செந்தாமரை என்பவரின் மனைவி. ராஜாத்தி தனது கையை விட்டுப் போனதை.... தாங்க முடியாமல் மீண்டும் இணைந்து வாழ செந்தாமரை எவ்வளவோ முயற்சித்தும்.... கருணாநிதி தனது ரவுடியிச செல்வாக்கை வைத்து... ராஜாத்தியை நிரந்தரமாக தனதாக்கிக் கொண்டார். ராஜாத்தியின் மகள் தான்... கனிமொழி.

கோசான்..... நாங்கள் எல்லாம், கருணாநிதியின் வாழ்க்கை சரித்திரத்தை கரைத்து குடித்து விட்டுத்தான்... யாழ்.களத்திலேயே இணைந்தனாங்கள்.

கோசானின் அந்த புதுக்கதையை நேற்றிரவு வாசித்து எனக்கு நானே கொடுப்புக்குள் ஜாடைமாடையாக சிரித்து விட்டு நிம்மதி பெரு மூச்சுடன் நித்திரைக்கு சென்று விட்டேன்.😃

நடிகர் செந்தாமரையின் மனைவி கௌசல்யா கூட இதை ஒப்புக்கொண்டுள்ளார். ராஜாத்தி அம்மாள்- கருணாநிதி விடயத்தை காந்தர்வ திருமணம் என இன்றும் சொல்வார்கள்.😎

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, தமிழ் சிறி said:

senthamarai-1680873426.jpg

Actor-Senthamarai.jpg

கருணாநிதி.... நாடகங்களில் நடித்துக் கொண்டு இருந்த ராஜாத்தியுடன் கள்ளத் தொடர்பை ஏற்படுத்தும் போது, ராஜாத்தி... (மேலே படத்தில் உள்ள) செந்தாமரை என்பவரின் மனைவி. ராஜாத்தி தனது கையை விட்டுப் போனதை.... தாங்க முடியாமல் மீண்டும் இணைந்து வாழ செந்தாமரை எவ்வளவோ முயற்சித்தும்.... கருணாநிதி தனது ரவுடியிச செல்வாக்கை வைத்து... ராஜாத்தியை நிரந்தரமாக தனதாக்கிக் கொண்டார். ராஜாத்தியின் மகள் தான்... கனிமொழி.

கோசான்..... நாங்கள் எல்லாம், கருணாநிதியின் வாழ்க்கை சரித்திரத்தை கரைத்து குடித்து விட்டுத்தான்... யாழ்.களத்திலேயே இணைந்தனாங்கள். இராஜாத்தி... இன்னொருத்தரின் மனைவி அல்ல என்று கருணாநிதிக்கு வெள்ளை அடிக்கிற கதை, கம்பி கட்டுற கதை போன்ற பொய் செய்தி எல்லாத்தையும் @Kandiah57 அண்ணை போன்ற ஆட்களுக்கு சொன்னால் அவர்கள் நம்பலாம். ஆனால் எங்களிடம் உங்கள் பருப்பு வேகவே, வேகாது. 😂

செந்தாமரை... பின்னாளில், தமிழ் திரையுலகத்தில் பிரபலமாக பேசப் பட்ட குணசித்திர நடிகர் ஆவார்.

ஸ்ராலின் அவர்கள்... தனது தந்தை செய்த அருவருப்பான செயலுக்கு பிராயச்சித்தம் செய்யும் விதமாக... தனது மகளுக்கு செந்தாமரை என பெயர் சூட்டியுள்ளார் என்றே கருத இடம் உள்ளது.

ஆக.... கருணாநிதியின் குடும்பத்தில்... உதயநிதியின் சகோதரியாக இப்போதும் செந்தாமரை வாழ்ந்து கொண்டுதான் இருக்கின்றார். 🙂

இது மிகவும் தவறான வதந்தி ஆகும்.

இதை நீங்களும் குமாரசாமி அண்ணையும் தெரிந்து கொண்டே மீள, மீள பரப்புகிறீர்கள்.

இன்னொரு திரியில் உங்கள் இருவருக்கும் செந்தாமரை மனைவியும், கருணாநிதி மனைவியும் வேறு வேறு ஆட்கள் என ஐயத்துக்கு அப்பலானா தரவுகள் மூலம் நான் நிரூபித்து இனி இப்படி எழுத வேண்டாம் எனவும் கேட்டு கொண்டேன்.

அங்கே நழுவி ஓடி விட்டு - அதே அழுக்கை இங்கே மீள காவி வருகிறீர்கள்.

இதில் நீங்கள் கருணாநிதியை நக்கல் அடிப்பதாக எண்ணினாலும், உண்மையில் அநியாயமாக வசவுக்கு உள்ளாக்குவது, கணவன், குடும்பம், வளர்ந்த பிள்ளைகள், பேரப்பிள்ளைகள் என வாழும் ஒரு அப்பாவி பெண்ணை.

உங்களுக்கு இப்படி எழுத. வெட்கமாக இல்லையா?

நீங்களும் ஒரு பெண்பிள்ளையின் தந்தை அல்லவா?

உங்களதோ, எனதோ மனைவியை பற்றி இப்படி ஒரு பச்சை அபாண்டத்தை யாரும் எழுதினால் நம் மனநிலை எப்படி இருக்கும்?

Edited by goshan_che

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

கோசானின் அந்த புதுக்கதையை நேற்றிரவு வாசித்து எனக்கு நானே கொடுப்புக்குள் ஜாடைமாடையாக சிரித்து விட்டு நிம்மதி பெரு மூச்சுடன் நித்திரைக்கு சென்று விட்டேன்.😃

நடிகர் செந்தாமரையின் மனைவி கௌசல்யா கூட இதை ஒப்புக்கொண்டுள்ளார். ராஜாத்தி அம்மாள்- கருணாநிதி விடயத்தை காந்தர்வ திருமணம் என இன்றும் சொல்வார்கள்.😎

மேலே சிறி அண்ணாவிடம் கேட்டது உங்களுக்கும் சேர்த்தே.

அந்த திரியில் பல ஆதாரங்களோடு உங்கள் இருவருக்கும் இது பச்சை பொய் என விளக்கி எழுதினேன்.

அதன் பின்னும் ஏன் ஒரு குடும்ப பெண்ணை பற்றி பொதுவெளியில் இப்படி அசிங்கமாக எழுதுகிறீர்கள்?

ஆதாரம் (இதன் அடியில் - sources என மேலதிக ஆதாரங்களும் குறிப்பிட படுகிறன).

banner_image

தமிழகத்தின் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மூன்றாம் மனைவி ராசாத்தி அம்மாள் நடிகர் செந்தாமரையின் மனைவி என்று கூறி புகைப்படம் ஒன்று சமூக ஊடகங்களில் பரவி வருகிறது.

ராசாத்தி அம்மாள் நடிகர் செந்தாமரையின் மனைவி என்று பரவும் படம்.

Post Link | Archive Link

Post Link

சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் அதுக்குறித்து ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.

Also Read: சிவராத்திரி அன்று புலிகளுக்கு அசைவ உணவு கொடுத்த Zoo மீது ABVP சங்கிகள் தாக்குதல் என்ற செய்தி உண்மையா?

Fact Check/Verification

ராசாத்தி அம்மாள் நடிகர் செந்தாமரையின் மனைவி என்று கூறி புகைப்படம் ஒன்று பரவியதை தொடர்ந்து, ராசாத்தி அம்மாளின் இளவயது படம் குறித்து தேடினோம்.

இத்தேடலில் ஏசியா நெட் நியூஸ் தமிழ் இணையத்தளம் வெளியிட்டிருந்த செய்தி ஒன்றில் கருணாநிதி, ராசாத்தி அம்மாள், மற்றும் கனிமொழி (சிறுமியாக) இருக்கும் பழைய படம் ஒன்று பயன்படுத்தப்பட்டிருந்ததை காண முடிந்தது.

இப்படத்தில் இருக்கும் இளவயது ராசாத்தியம்மாளின் முகத்தோற்றத்தை வைரலாகும் படத்திலிருக்கும் பெண்மணி முகத்தோற்றத்துடன் ஒப்பிட்டு பார்க்கையில், வைரலாகும் படத்திலிருக்கும் பெண் ராசாத்தி அம்மாள் அல்ல என உறுதியானது.

இதனையடுத்து வைரலாகும் அப்படத்தை கூகுள் லென்ஸ் மூலம்  ரிவர்ஸ் சர்ச் செய்து பார்க்கையில் “‘நடிகர் செந்தாமரை பொண்டாட்டியை ரோட்டுல விட்டுட்டார்’னு யாரும் சொல்லிடக்கூடாது!நடிகை கெளசல்யா” என்று தலைப்பிட்டு ஏப்ரல் 21, 2018 அன்று விகடன் எக்ஸ் பக்கத்தில் வெளியிடப்பட்டிருந்த பதிவில் வைரலாகும் படம் பயன்படுத்தப்பட்டிருந்ததை காண முடிந்தது.

இப்பதிவுடன் கட்டுரை ஒன்றின் லிங்கும் தரப்பட்டிருந்தது. அக்கட்டுரையை வாசித்தபின் வைரலாகும் படத்திலிருக்கும் பெண்ணின் பெயர் கௌசல்யா என்பதும், அவர் நடிகர் செந்தாமரையின் மனைவி என்பதும் தெரிய வந்தது. சிறுவயதில் நாடக நடிகராக இருந்த கௌசல்யா, தற்போது தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வருவதாகவும் அறிய முடிந்தது.

தொடர்ந்து ‘கௌசல்யா செந்தாமரை’ என்று குறிப்பிட்டு கூகுளில் தேடும்போது இவர் குறித்த பல நேர்காணல்கள் நமக்கு கிடைத்தது.  

அதில் ஒன்றாக கௌசல்யாவும் அவரது மகளும் பிஹைண்ட்வுட்ஸ் ஊடகத்திற்கு கொடுத்த பேட்டியின் சிறுபகுதி அந்த ஊடகத்தின் ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிடப்பட்டிருந்ததை காண முடிந்தது.

அதில் செந்தாமரை மற்றும் கௌசல்யா தம்பதியின் மகள், “என் அப்பாவுக்கு 4 பசங்க, 2 பொண்டாட்டி. என் அப்பாவின் முதல் மனைவியின் பெயர் லட்சுமி, அவர்களுக்கு 3 பசங்க. இரண்டாவது மனைவி சாட்சாத் இவங்கதான் வேறு யாரும் கிடையாது. எங்க அப்பாவுக்கு எக்ஸ்ராலாம் கிடையவே கிடையாது. எங்க அப்பா ரொம்ப நல்ல மனுஷன். அவங்களுக்கு பிறந்த ஒரே பொண்ணு நான். ஆக, என் அப்பாவுக்கு 4 பசங்க, 2 பொண்டாட்டி. தயவு செஞ்சு போடுங்க. ஏன்னா எடிட்ல நீங்க கட் பண்ணிடுவீங்க. இந்த விஷயம் மக்களுக்கு போய் சேரணும்னு நான் நினைக்கிறேன்” என்று பேசி இருப்பதை காண முடிந்தது.

கிடைத்த ஆதாரங்களின்படி பார்க்கையில் வைரலாகும் படத்திலிருப்பது ராசாத்தி அம்மாள் அல்ல; அது நடிகை கௌசல்யா செந்தாமரை என தெளிவாகின்றது.

அதேபோல் மறைந்த நடிகர் செந்தாமரைக்கு லட்சுமி, கௌசல்யா என இரண்டு மனைவிகள் மட்டுமே இருந்துள்ளனர் எனவும் அறிய முடிகின்றது.

Also Read: ஆ.ராசா பெண் ஒருவரை கட்டியணைத்ததாக பரவும் படம் உண்மையானதா?

Conclusion

ராசாத்தி அம்மாள் மறைந்த நடிகர் செந்தாமரையின் மனைவி என்று கூறி பரப்பப்படும் படம் தவறானதாகும். அப்படத்தில் செந்தாமரையுடன் இருப்பவர் தொலைக்காட்சி நடிகை கௌசல்யா செந்தாமரை ஆவார்.

இந்த உண்மையானது கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது. ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.

Sources
Report from Asianet News Tamil, dated October 29, 2019
X post from Vikatan, dated April 21, 2018
Report from Vikatan, dated April 21, 2018
Facebook post from Behindwoods, dated January 15, 2025
Self Analysis

https://newschecker.in/ta/fact-check-ta/rasathi-senthamarai-wife-false

பிகு

எத்தனை பெரிய மனிதருக்கு எத்தனை சிறிய மனமிருக்கு.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

இது மிகவும் தவறான வதந்தி ஆகும்.

இதை நீங்களும் குமாரசாமி அண்ணையும் தெரிந்து கொண்டே மீள, மீள பரப்புகிறீர்கள்.

இன்னொரு திரியில் உங்கள் இருவருக்கும் செந்தாமரை மனைவியும், கருணாநிதி மனைவியும் வேறு வேறு ஆட்கள் என ஐயத்துக்கு அப்பலானா தரவுகள் மூலம் நான் நிரூபித்து இனி இப்படி எழுத வேண்டாம் எனவும் கேட்டு கொண்டேன்.

அங்கே நழுவி ஓடி விட்டு - அதே அழுக்கை இங்கே மீள காவி வருகிறீர்கள்.

இதில் நீங்கள் கருணாநிதியை நக்கல் அடிப்பதாக எண்ணினாலும், உண்மையில் அநியாயமாக வசவுக்கு உள்ளாக்குவது, கணவன், குடும்பம், வளர்ந்த பிள்ளைகள், பேரப்பிள்ளைகள் என வாழும் ஒரு அப்பாவி பெண்ணை.

உங்களுக்கு இப்படி எழுத. வெட்கமாக இல்லையா?

நீங்களும் ஒரு பெண்பிள்ளையின் தந்தை அல்லவா?

உங்களதோ, எனதோ மனைவியை பற்றி இப்படி ஒரு பச்சை அபாண்டத்தை யாரும் எழுதினால் நம் மனநிலை எப்படி இருக்கும்?

தமிழ்சிறியிடமிருந்து பதிலையும் எதிர்பார்க்கிறேன். மேலும் நன்றி கோஷான். விளக்கத்திற்கு 🙏

55 minutes ago, goshan_che said:

மேலே சிறி அண்ணாவிடம் கேட்டது உங்களுக்கும் சேர்த்தே.

அந்த திரியில் பல ஆதாரங்களோடு உங்கள் இருவருக்கும் இது பச்சை பொய் என விளக்கி எழுதினேன்.

அதன் பின்னும் ஏன் ஒரு குடும்ப பெண்ணை பற்றி பொதுவெளியில் இப்படி அசிங்கமாக எழுதுகிறீர்கள்?

ஆதாரம் (இதன் அடியில் - sources என மேலதிக ஆதாரங்களும் குறிப்பிட படுகிறன).

banner_image

தமிழகத்தின் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மூன்றாம் மனைவி ராசாத்தி அம்மாள் நடிகர் செந்தாமரையின் மனைவி என்று கூறி புகைப்படம் ஒன்று சமூக ஊடகங்களில் பரவி வருகிறது.

ராசாத்தி அம்மாள் நடிகர் செந்தாமரையின் மனைவி என்று பரவும் படம்.

Post Link | Archive Link

ராசாத்தி அம்மாள் நடிகர் செந்தாமரையின் மனைவி என்று பரவும் படம்.

Post Link

ராசாத்தி அம்மாள் நடிகர் செந்தாமரையின் மனைவி என்று பரவும் படம்.

Post Link

சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் அதுக்குறித்து ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.

Also Read: சிவராத்திரி அன்று புலிகளுக்கு அசைவ உணவு கொடுத்த Zoo மீது ABVP சங்கிகள் தாக்குதல் என்ற செய்தி உண்மையா?

Fact Check/Verification

ராசாத்தி அம்மாள் நடிகர் செந்தாமரையின் மனைவி என்று கூறி புகைப்படம் ஒன்று பரவியதை தொடர்ந்து, ராசாத்தி அம்மாளின் இளவயது படம் குறித்து தேடினோம்.

இத்தேடலில் ஏசியா நெட் நியூஸ் தமிழ் இணையத்தளம் வெளியிட்டிருந்த செய்தி ஒன்றில் கருணாநிதி, ராசாத்தி அம்மாள், மற்றும் கனிமொழி (சிறுமியாக) இருக்கும் பழைய படம் ஒன்று பயன்படுத்தப்பட்டிருந்ததை காண முடிந்தது.

ராசாத்தி அம்மாள் நடிகர் செந்தாமரையின் மனைவி என்று பரவும் படம்.

இப்படத்தில் இருக்கும் இளவயது ராசாத்தியம்மாளின் முகத்தோற்றத்தை வைரலாகும் படத்திலிருக்கும் பெண்மணி முகத்தோற்றத்துடன் ஒப்பிட்டு பார்க்கையில், வைரலாகும் படத்திலிருக்கும் பெண் ராசாத்தி அம்மாள் அல்ல என உறுதியானது.

ராசாத்தி அம்மாள் நடிகர் செந்தாமரையின் மனைவி என்று பரவும் படம்.

இதனையடுத்து வைரலாகும் அப்படத்தை கூகுள் லென்ஸ் மூலம்  ரிவர்ஸ் சர்ச் செய்து பார்க்கையில் “‘நடிகர் செந்தாமரை பொண்டாட்டியை ரோட்டுல விட்டுட்டார்’னு யாரும் சொல்லிடக்கூடாது!நடிகை கெளசல்யா” என்று தலைப்பிட்டு ஏப்ரல் 21, 2018 அன்று விகடன் எக்ஸ் பக்கத்தில் வெளியிடப்பட்டிருந்த பதிவில் வைரலாகும் படம் பயன்படுத்தப்பட்டிருந்ததை காண முடிந்தது.

ராசாத்தி அம்மாள் நடிகர் செந்தாமரையின் மனைவி என்று பரவும் படம்.

இப்பதிவுடன் கட்டுரை ஒன்றின் லிங்கும் தரப்பட்டிருந்தது. அக்கட்டுரையை வாசித்தபின் வைரலாகும் படத்திலிருக்கும் பெண்ணின் பெயர் கௌசல்யா என்பதும், அவர் நடிகர் செந்தாமரையின் மனைவி என்பதும் தெரிய வந்தது. சிறுவயதில் நாடக நடிகராக இருந்த கௌசல்யா, தற்போது தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வருவதாகவும் அறிய முடிந்தது.

தொடர்ந்து ‘கௌசல்யா செந்தாமரை’ என்று குறிப்பிட்டு கூகுளில் தேடும்போது இவர் குறித்த பல நேர்காணல்கள் நமக்கு கிடைத்தது.  

அதில் ஒன்றாக கௌசல்யாவும் அவரது மகளும் பிஹைண்ட்வுட்ஸ் ஊடகத்திற்கு கொடுத்த பேட்டியின் சிறுபகுதி அந்த ஊடகத்தின் ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிடப்பட்டிருந்ததை காண முடிந்தது.

அதில் செந்தாமரை மற்றும் கௌசல்யா தம்பதியின் மகள், “என் அப்பாவுக்கு 4 பசங்க, 2 பொண்டாட்டி. என் அப்பாவின் முதல் மனைவியின் பெயர் லட்சுமி, அவர்களுக்கு 3 பசங்க. இரண்டாவது மனைவி சாட்சாத் இவங்கதான் வேறு யாரும் கிடையாது. எங்க அப்பாவுக்கு எக்ஸ்ராலாம் கிடையவே கிடையாது. எங்க அப்பா ரொம்ப நல்ல மனுஷன். அவங்களுக்கு பிறந்த ஒரே பொண்ணு நான். ஆக, என் அப்பாவுக்கு 4 பசங்க, 2 பொண்டாட்டி. தயவு செஞ்சு போடுங்க. ஏன்னா எடிட்ல நீங்க கட் பண்ணிடுவீங்க. இந்த விஷயம் மக்களுக்கு போய் சேரணும்னு நான் நினைக்கிறேன்” என்று பேசி இருப்பதை காண முடிந்தது.

கிடைத்த ஆதாரங்களின்படி பார்க்கையில் வைரலாகும் படத்திலிருப்பது ராசாத்தி அம்மாள் அல்ல; அது நடிகை கௌசல்யா செந்தாமரை என தெளிவாகின்றது.

அதேபோல் மறைந்த நடிகர் செந்தாமரைக்கு லட்சுமி, கௌசல்யா என இரண்டு மனைவிகள் மட்டுமே இருந்துள்ளனர் எனவும் அறிய முடிகின்றது.

Also Read: ஆ.ராசா பெண் ஒருவரை கட்டியணைத்ததாக பரவும் படம் உண்மையானதா?

Conclusion

ராசாத்தி அம்மாள் மறைந்த நடிகர் செந்தாமரையின் மனைவி என்று கூறி பரப்பப்படும் படம் தவறானதாகும். அப்படத்தில் செந்தாமரையுடன் இருப்பவர் தொலைக்காட்சி நடிகை கௌசல்யா செந்தாமரை ஆவார்.

இந்த உண்மையானது கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது. ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.

Sources
Report from Asianet News Tamil, dated October 29, 2019
X post from Vikatan, dated April 21, 2018
Report from Vikatan, dated April 21, 2018
Facebook post from Behindwoods, dated January 15, 2025
Self Analysis

https://newschecker.in/ta/fact-check-ta/rasathi-senthamarai-wife-false

பிகு

எத்தனை பெரிய மனிதருக்கு எத்தனை சிறிய மனமிருக்கு.

அருமையான விளக்கங்களுடன் கூடிய பதில்கள் நன்றி விரிவான பதிலுக்கு

தமிழ் சிறி, வேண்டும் என்றே தவறான தகவல்களை பரப்புவது யாழ் கள விதிகளுக்கு மட்டுமல்ல, பொதுவான ஊடக தர்மத்துக்கும், ஊடக விதிகளுகும் முரணாணது.

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, goshan_che said:

அதன் பின்னும் ஏன் ஒரு குடும்ப பெண்ணை பற்றி பொதுவெளியில் இப்படி அசிங்கமாக எழுதுகிறீர்கள்?

ராசாத்தி அம்மாள், கவிஞர் வாலியுடன் நாடகங்களில் நடித்தவர்.

நடிகர் செந்தாமரையின் மனைவி கௌசல்யா எம்ஜிஆரின் நாடகக்குழுவில் இருந்தவர். எம்ஜிஆர் படங்களிலும் அவ்வப்போது தலை காட்டுவார்.

நடிகர் செந்தாமரை கலைஞருடன் நல்ல உறவில் இருந்தவர். செந்தாமரையின் மனைவி கௌசல்யா வழங்கிய பேட்டி ஒன்று இங்கே இருக்கின்றது.

மீண்டும் கோசான் வீட்டைச் சுத்தி அடை மழை😊

  • கருத்துக்கள உறவுகள்

250px-M.K.Thyagaraja_Bhagavathar.jpg

அண்ணாத்துரை - பான்மதியாள்

ராமசந்திரன் - ரேவதியாள் / அம்பிகை & ராதை / முன்னாள் முதல்வரும் அடக்கம்

கருணாநிதி - ? உத்தமர்

ஸ்டாலின் - செய்தி வாசிப்பாளர்

உதயநிதி - நிவேத நடிகை & 9 தார நடிகை

கார்த்திக் சிதம்பரம் / சரவணா செல்வரத்னம் - நட்பு (சினேக) நடிகை

சீமான் / கன்னட நடிகர் - விசயலட்சுமி

விசய் - கீர்த்தனம் & 3 சா நடிகை

சி.வி சண்முகம் - அமல மில்க் நடிகை

ராஜகண்ணப்பர் - சுகன்யம் நடிகை

திருமா / பூவை/புதுவை முதல்வர் - மீனம்

....

இதெல்லாம் ஊகங்களே..!

இன்னும் பல ஊகங்கள் தியாகராஜபாகவதர் காலத்தில் இருந்தே உண்டு பாகவதரின் அந்தபுரத்தை பற்றி எழுத போக .. உத்தமரான பாகவதர் லட்சுமிகாந்தனின் எழவுக்கு ஏற்பாடு செய்துவிட்டார் என்று தாத்தா காலத்திலேயே கதைப்பார்கள் .

சந்தி சிரிக்காத வரைக்கும் எல்லாரும் ராமர்கள்தான் அப்படித்தான் நம்ப வேண்டும். சினிமாவுக்கும் அரசியலுக்கும் பெரிய தொடர்ப்பு உண்டு?

அதிகார துஷ்பிரயோகம் ( வருமானவரி தொந்தரவு மற்றும் பல பல ) / காடையர்கள் தொந்தரவில் இருந்து தப்பிக்க ./ சம்பாதித்த சொத்துக்களை பாதுக்காக்க..

டிஸ்கி :

பல் ( பணம் ) இருக்குறவன் பக்கோடோ சாப்பிடுறான் .. இல்லாதவன் கோசிப்பு கதைக்குறான் விடுங்கப்பா

தான் இன்னாருடைய ஆள் என்று ஒரு பாதுகாப்பு வளையத்தை உருவாக்குகிறார்கள் அவ்வளவுதான் ..

Edited by புரட்சிகர தமிழ்தேசியன்

  • கருத்துக்கள உறவுகள்

19 hours ago, Kandiah57 said:

தமிழ்சிறியிடமிருந்து பதிலையும் எதிர்பார்க்கிறேன். மேலும் நன்றி கோஷான். விளக்கத்திற்கு 🙏

சீமான் தான் கூறிய கிலோ கணக்கான போய்களை அவை படு பொய்கள் என்று ஆதாரபூர்வமாக நிருபிக்கப்பட்ட பின்பு கூட வருத்தம் தெரிவிப்பதில்லை அதற்கு பதில் கூட கருத்தியல் ரீதியாக தெரிவிப்பதில்லை. நைசாக நழுவி விடுவார். பின்னர் சில காலத்தின் பின்னர் அதே பொய்யை மீண்டும் வெட்கமில்லாமல் மீண்டும் கூறுவார். அண்ணன் எவ்வழி தம்பி அதே வழி. இருந்து பாருங்கள், இதே பொய்யை தமிழ் சிறீ சில காலத்தின் பின்னர் மீண்டும் வெட்கமில்லாமல் இணைப்பார். தமிழ் சிறி பொய்செய்திகளை பரப்புவது இது முதல் முறையுமல்ல.

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

அண்ணாத்துரை - பான்மதியாள்

ராமசந்திரன் - ரேவதியாள் / அம்பிகை & ராதை / முன்னாள் முதல்வரும் அடக்கம்

கருணாநிதி - ? உத்தமர்

ஸ்டாலின் - செய்தி வாசிப்பாளர்

உதயநிதி - நிவேத நடிகை & 9 தார நடிகை

கார்த்திக் சிதம்பரம் / சரவணா செல்வரத்னம் - நட்பு (சினேக) நடிகை

சீமான் / கன்னட நடிகர் - விசயலட்சுமி

விசய் - கீர்த்தனம் & 3 சா நடிகை

சி.வி சண்முகம் - அமல மில்க் நடிகை

ராஜகண்ணப்பர் - சுகன்யம் நடிகை

திருமா / பூவை/புதுவை முதல்வர் - மீனம்

....

இதெல்லாம் ஊகங்களே..!

இன்னும் பல ஊகங்கள் தியாகராஜபாகவதர் காலத்தில் இருந்தே உண்டு பாகவதரின் அந்தபுரத்தை பற்றி எழுத போக .. உத்தமரான பாகவதர் லட்சுமிகாந்தனின் எழவுக்கு ஏற்பாடு செய்துவிட்டார் என்று தாத்தா காலத்திலேயே கதைப்பார்கள் .

சந்தி சிரிக்காத வரைக்கும் எல்லாரும் ராமர்கள்தான் அப்படித்தான் நம்ப வேண்டும். சினிமாவுக்கும் அரசியலுக்கும் பெரிய தொடர்ப்பு உண்டு?

அதிகார துஷ்பிரயோகம் ( வருமானவரி தொந்தரவு மற்றும் பல பல ) / காடையர்கள் தொந்தரவில் இருந்து தப்பிக்க ./ சம்பாதித்த சொத்துக்களை பாதுக்காக்க..

டிஸ்கி :

பல் ( பணம் ) இருக்குறவன் பக்கோடோ சாப்பிடுறான் .. இல்லாதவன் கோசிப்பு கதைக்குறான் விடுங்கப்பா

தான் இன்னாருடைய ஆள் என்று ஒரு பாதுகாப்பு வளையத்தை உருவாக்குகிறார்கள் அவ்வளவுதான் ..

5 hours ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

250px-M.K.Thyagaraja_Bhagavathar.jpg

அண்ணாத்துரை - பான்மதியாள்

ராமசந்திரன் - ரேவதியாள் / அம்பிகை & ராதை / முன்னாள் முதல்வரும் அடக்கம்

கருணாநிதி - ? உத்தமர்

ஸ்டாலின் - செய்தி வாசிப்பாளர்

உதயநிதி - நிவேத நடிகை & 9 தார நடிகை

கார்த்திக் சிதம்பரம் / சரவணா செல்வரத்னம் - நட்பு (சினேக) நடிகை

சீமான் / கன்னட நடிகர் - விசயலட்சுமி

விசய் - கீர்த்தனம் & 3 சா நடிகை

சி.வி சண்முகம் - அமல மில்க் நடிகை

ராஜகண்ணப்பர் - சுகன்யம் நடிகை

திருமா / பூவை/புதுவை முதல்வர் - மீனம்

....

இதெல்லாம் ஊகங்களே..!

இன்னும் பல ஊகங்கள் தியாகராஜபாகவதர் காலத்தில் இருந்தே உண்டு பாகவதரின் அந்தபுரத்தை பற்றி எழுத போக .. உத்தமரான பாகவதர் லட்சுமிகாந்தனின் எழவுக்கு ஏற்பாடு செய்துவிட்டார் என்று தாத்தா காலத்திலேயே கதைப்பார்கள் .

சந்தி சிரிக்காத வரைக்கும் எல்லாரும் ராமர்கள்தான் அப்படித்தான் நம்ப வேண்டும். சினிமாவுக்கும் அரசியலுக்கும் பெரிய தொடர்ப்பு உண்டு?

அதிகார துஷ்பிரயோகம் ( வருமானவரி தொந்தரவு மற்றும் பல பல ) / காடையர்கள் தொந்தரவில் இருந்து தப்பிக்க ./ சம்பாதித்த சொத்துக்களை பாதுக்காக்க..

டிஸ்கி :

பல் ( பணம் ) இருக்குறவன் பக்கோடோ சாப்பிடுறான் .. இல்லாதவன் கோசிப்பு கதைக்குறான் விடுங்கப்பா

தான் இன்னாருடைய ஆள் என்று ஒரு பாதுகாப்பு வளையத்தை உருவாக்குகிறார்கள் அவ்வளவுதான் ..

ஊகங்களுக்கும் கிசு கிசு களுக்கும் உலக சினிமாவும், உலக அரசியலும் கூட விதிவிலக்கல்ல.

அண்மையில் பிரெஞ் அதிபர் தன் மனைவி(அவரின் முன்னாள் ஆசிரியை) ஒரு ஆணாக இருந்து மாறிய பெண் அல்ல என அமெரிக்க நீதிமன்றில் பிரமாணபத்திரம் தாக்கல் செய்தார்.

இதே போல் மிஷேல் ஒரு ஆண், ஒபாமா ஓரினசேர்க்கையாளர், ஹிலரி கிளிண்டன் ஏலியன் என பல பக்கோடாக்கள் இன்றளவும் விற்பனையில் உண்டு.

ஆனால் இவற்றை எண்ணத்தில் சிறியோர் பேசி/எழுதி இன்புற்றாலும், எண்ணத்தில் பெரியோர் வெறும் ஊகங்கள் என கடந்து போவதே வழமை.

இதுவும் ஒரு வயது முதிர்ந்த மூதாட்டியை பற்றி, அவரின் தனிமனித ஒழுக்கம் பற்றி அவதூறு எழுதலும் ஒன்றல்ல.

பிகு

நீங்கள் கூட ஸ்டாலின்- செய்தி வாசிப்பாளர் என்ற கதையை காவி திரிகிறீர்கள்.

குறிப்பிட்ட செய்தி வாசிப்பாளர், ஜெயிற்கு நெருக்கமானவர், பகிரங்கமாக இப்படி எதுவும் நடக்கவில்லை என மறுத்த போதும்.

Edited by goshan_che

  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, island said:

தமிழ் சிறி பொய்செய்திகளை பரப்புவது இது முதல் முறையுமல்ல

தகவலுக்கு நன்றிகள் பல. எனக்கு இது தெரியாது அவர் தான் இணைத்தது உண்மை என்றும் இணைத்து இருக்க வாய்ப்புகள் உண்டு .....ஆனால் இப்போது பொய் என்று தெரிந்த பின்னர் அதை அது பொய் என்று எற்றுக்கொண்டு வாபஸ் பெற வேண்டும் இது யாழ் களத்தின். வளர்ச்சிக்கும். அவரது வளர்ச்சிகும். அவசியமாகும் 🙏

  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, நிழலி said:

தமிழ் சிறி, வேண்டும் என்றே தவறான தகவல்களை பரப்புவது யாழ் கள விதிகளுக்கு மட்டுமல்ல, பொதுவான ஊடக தர்மத்துக்கும், ஊடக விதிகளுகும் முரணாணது.

நீங்களும் தவறான பொய்யான தகவல்களை யாழ் களத்தில் பரப்புவதை அனுமதிக்க கூடாது. நான் 90 வீதமான தமிழர்கள் தகவல்களை யாழ் களத்தில் படித்து தான் அறிந்து கொள்கிறேன்.

Edited by விளங்க நினைப்பவன்

2 hours ago, விளங்க நினைப்பவன் said:

நீங்களும் தவறான பொய்யான தகவல்களை யாழ் களத்தில் பரப்புவதை அனுமதிக்க கூடாது. நான் 90 வீதமான தமிழர்கள் தகவல்களை யாழ் களத்தில் படித்து தான் அறிந்து கொள்கிறேன்.

இத் திரியில் எனது கவனக் குறைவால் ஏற்பட்ட தவறுதலாலேயே சில பதிவுகள் தணிக்கை செய்யப்படவில்லை.

வாசகர்களுக்கும் கருத்துப் பகிர்பவர்களுக்கும் அதுவே அவதூறுத் தகவல்கள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தியிருக்கும் என நம்புகிறேன்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.