Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பிரித்தானியாவில் ஆரம்பத்தில் கோலிங்கார்ட் வியாபாரம், பின்னர் ஒரு எரிபொருள் நிரப்பு நிலையத்தில் தொடங்கி, நூற்றுக்கணக்கான நிலையங்கள், அதன் அடுத்தபடியாக லிங்கன்ஷேர் பகுதியில் பிரிதானியாவில் இருக்கும் நாலு எண்ணை சுத்தீகரிப்பாலைகளில் ஒன்றை வாங்கி நடத்தியவர் இலங்கை தமிழர்களான வின்சண்ட் சஞ்சீவ்குமார் சூசைபிள்ளை, அவரின் மனைவி ஆரணி சூசைப்பிள்ளை.

இப்போ இவர்கள் நிறுவனம் £1.5 பில்லியன் (ஆயிரத்து ஐநூறு மில்லியன் பவுண்டஸ்) கடனில் திவாலாகியுள்ளது.

இவர்கள் இருவரும் நிதியை முறையாக கையாளாமை, அதீத கடனில் வியாபாரத்தை விரிவாக்கியது என பலதவறுகளை விட்டுள்ளதாக கூறப்படுகிறது.

ஊழியர்களுக்கு பல மில்லியன் சம்பளபாக்கியை வைத்து விட்டு, இவர்கள் இருவரும் மிக அண்மையில் கூட பல மில்லியன்களை கம்பெனியில் இருந்து தமது சொந்த வருமானமாக எடுத்துள்ளனர்.

பிரித்தானிய திறைசேரி, இன்னும் பல நிறுவனக்களுக்கும் இவர்கள் பல மில்லியன் ஆப்பை செருகி உள்ளனர்.

நிறுவனதின் சொத்து 150 மில்லியனை கோர்ட் முடக்கி உள்ளது. ஆனால் இது இவர்களின் கடனில் 10% மட்டுமே.

இவர்களின் நீச்சல்தடாகம், சோனா, ஸ்பா வசதிகளுடனான, வேபிரிஜ் எனும் அதீத செல்வந்தர் வாழும் இடத்தில் உள்ள 5 மில்லியன் பெறுமதியான வீட்டை விற்கபோட்டுள்ளனராம்.

இவர்கள் இலங்கைக்கு தப்பி ஓடி இருக்கலாம் என சந்தேகிக்கபடுகிறது.

(மூலம் - பிரித்தானிய ஊடகங்கள் + யாழ்கள நிருபர் கோஷான் களத்தில் இருந்து🤣 )

https://www.theguardian.com/business/2025/sep/04/uk-court-freezes-150m-of-assets-of-collapsed-prax-lindsey-oil-refinery-owner

https://www.theguardian.com/business/2025/aug/20/loan-irregularities-collapse-prax-lindsey-oil-refinery

https://finance.yahoo.com/news/couple-behind-doomed-oil-refinery-070000350.html?guccounter=1&guce_referrer=aHR0cHM6Ly93d3cuZ29vZ2xlLmNvbS8&guce_referrer_sig=AQAAAEZhFmvvT-Q_g2dpoByQb88U5CLGaHOs6eKHVGfyQG1TemU60KuopVeWlK8Pp3WXx84mkZfOJIrh-0HKWxKKfgRoGpVoDqH6WCvCC4ao7KTBMevyKJB03V1x2Cp9ffzD-DfoN8KWJl9XRKg70LBfxjSEJ1YSS131b2y_Xb6pIJLd

  • Replies 179
  • Views 8.3k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Most Popular Posts

  • Maruthankerny
    Maruthankerny

    உங்கள் உழைப்புக்கு மீறி ஊதியம் பெறுபவர்களும் மறைமுகமாக இன்னொருவர் உழைப்பை சுரண்டுபவர்கள்தான். ஐந்து நூறு டாலருக்கு ஒருவன் அடியாளாக சென்று ஒருவனை அடிப்பதும் ஒரு மருத்துவ கொம்பனி விற்பனைக்காக ஒரு மருத

  • இப்ப என்ன சொல்ல வாறீங்கள்😂? ஒரு உதாரணத்திற்கு, "அமெரிக்காவில் அடிமைகளை வைத்திருப்பது சட்டமாக இருந்தது" ஓம் இருந்தது. 1860 இல் அது சட்ட விரோதமாகி விட்டது, ஆனாலும் 1920 வரை ஏதோ ஒரு விதத்தில் நடைமுறையில

  • குமாரசாமி
    குமாரசாமி

    என் நெஞ்சில் குடியிருக்கும் நீங்கள் கேட்பதனால் சொல்கிறேன். இனியும் இருட்டடி வாங்கும் தென்பு உடலில் இல்லை.😂

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

உறவுகளுக்கு நினைவிருக்கும்…

மேற்படியாரை புலம்பெயர் சமூகத்துக்கு ஒரு முன்மாதிரி என கள உறவு நாதமுனி முன்னர் பிரஸ்தாபித்து இருந்தார்.

யாராவது நாதத்துக்கு ஒரு @ போட்டு விடவும் 🤣

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, goshan_che said:

(மூலம் - பிரித்தானிய ஊடகங்கள் + யாழ்கள நிருபர் கோஷான் களத்தில் இருந்து🤣 )

animiertes-kameramann-bild-0012.gif

யாழ்.கள நிருபர்... அவர்களின் படத்தை எடுத்துப் போடவும். 😂

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, தமிழ் சிறி said:

animiertes-kameramann-bild-0012.gif

யாழ்.கள நிருபர்... அவர்களின் படத்தை எடுத்துப் போடவும். 😂

https://www.ft.com/content/51134511-15a3-4be0-acc3-5c84c10514ba

இதில் இருவரின் படமும் உள்ளது.

தெரிகிறதா?

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, goshan_che said:

https://www.ft.com/content/51134511-15a3-4be0-acc3-5c84c10514ba

இதில் இருவரின் படமும் உள்ளது.

தெரிகிறதா?

ஓம். கண்டு கொண்டேன். 👍 🙂

  • கருத்துக்கள உறவுகள்
No image preview

The quiet couple from Weybridge behind £1.7bn Prax Petroleum

There is nothing remarkable about Horizon Business Village, a collection of squat redbrick offices off a roundabout in Weybridge, Surrey. Yet it is home to an

2017 இலேயே எச்சரிக்கை மணி அடிக்கப் பட்டிருக்கிறதே? அதன் பிறகா இவர்களை றோல் மொடல்களாகச் சித்தரித்தார்கள்?

  • கருத்துக்கள உறவுகள்

இவர்கள் போன்ற திடீர் வீக்க நபர்கள் மீது எந்த நம்பிக்கையும் இல்லை. Lyca, Lebara உட்பட.

Edited by விசுகு

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Justin said:
No image preview

The quiet couple from Weybridge behind £1.7bn Prax Petroleum

There is nothing remarkable about Horizon Business Village, a collection of squat redbrick offices off a roundabout in Weybridge, Surrey. Yet it is home to an

2017 இலேயே எச்சரிக்கை மணி அடிக்கப் பட்டிருக்கிறதே? அதன் பிறகா இவர்களை றோல் மொடல்களாகச் சித்தரித்தார்கள்?

ஓம்…அப்போதே இந்த கட்டுரையை பகிர்ந்த்தேன்.

ஆனால் அப்போ சில திரிகளில்….எப்படி எண்டாலும் உழைத்தால் போதும்…

உலகில் களவு செய்யாதவன் யார்…

அப்படி இருந்தால் அவன் பிழைக்க தெரியாதவன்….

என்ற ரீதியில் கருத்துக்கள் பதியபட்டு கொண்டிருந்ததல்லவா….

அதில் ஒன்றில்தான் இந்த தம்பதிகள் உதாரண புருசர்களாகினர்.

லைக்காவையும் தலையில் தூக்கி வைத்து ஆடினார்கள். அவர்கள் ஆரம்பம் பற்றி எழுதி - அதற்கும் வாங்கி கட்டிக்கொண்டேன் 🤣.

  • கருத்துக்கள உறவுகள்

உண்மையில், இவர்கள் நடத்தியது நல்ல வியாபாரம்.

UK அரசு ஒப்புதல் இல்லாமல், அந்த சுத்திகரிப்பு ஆலையை (Lindsey oil refinery) இயக்கும் உரிமையை பெற்று இருக்க முடியாது.

(அனால், ஏதோ ஒரு இடத்தில பேராசை தொற்றிவிட்டது.)

ஆனி 2025 இல் இந்த கம்பனி நிர்வாக நிலையை அறிவித்த போது, ஆலையை தற்கலிகமாக மூடினாலும், UK இன் சுத்திகரிக்கப்பட்ட எரிபொருள் விநியோகம் ஆக குறைந்தது 1/5 ஆல் குறைவடைந்து, எரிபொருள் விலை எகிறும் நிலை காணப்பட்டது.

ஆயினும், auditors ம் ஒத்துழையாமல் , இப்படியான தேசிய நலன் / பாதுகாப்புக்கு கேந்திர முக்கியத்துவம், மற்றும் இன்றியமையாத கட்டுமானம் ஒன்றை இப்படி நட்டத்தில் இருந்தால் போல் கொண்டுபோய் நிறுத்துவது மிகக்கடினம்.

தேசிய கேந்திர நலன் இருப்பதாலேயே UK அரசு அந்த சுத்திகரிப்பு ஆலையை தத்ற்காலிகமாக பொறுப்பு எடுத்து, இயக்கும் உரிமையை பெரும் நிறுவனத்தின் indemnity க்கு பொறுப்பு எடுப்பதாகவும் அறிவித்து இருந்தது.

(ஆகவே இந்த வணிகம் ஒன்றும் களவு இல்லை)

நான் றிந்த வரையில், uk வங்கிகள் மட்டும் அல்ல, eu, swiss வங்கிகளும் எண்ணெய் கொள்வனவுக்கு, விற்பனைக்கு ஒவொரு தடவையும் மில்லியன் கணக்கில் நிதி அளித்து உள்ளன. ஏனெனில், பாரிய கொள்தாங்கி கப்பல்களிலேயே மத்திய கிழக்கு மட்டும் அல்ல. மத்திய ஆசியால் இருந்தும் மசகு எண்ணெய், இடை மசகு எண்ணெய் கொள்வனவு செய்துள்ளது நிறுவனம்.

நான் நினைக்கிறன், சிலவேளைகளில், கடன்வாங்கும் போது வட்டி வீதம் மிக குறைவாக இருந்துது இருக்கும். இப்போது வட்டிவீதம் கூடிவிட்டது. அதனால் மீள்நிதியமைப்பு (refinancing) இயலாமல் போய் இருக்கலாம். இப்படி பல நிறுவனங்கள் (பகிரங்கமாக தெரியாமல்) வங்குரோத்தாகி விட்டன.

ஆயினும் இவர்கள் தலைமறைவாகியதே, எதாவது தனிப்பட்ட அடிப்படையில் தரு இளைத்து இருப்பார்கள் என்ற எண்ணத்தை தூண்டுகிறது.

( இவர்களின் கம்பனிக்கு தகவல் தொழில்நுட்ப முகாமையாளராக இருந்தவர் , மொறட்டுவை பல்கலைக்கழக பட்டதாரி (பாலா என்ற அழைப்பு பெயர்) ஒப்பீட்டளவில் இளவயதில் (40 ஆரம்பங்களில்) காலமாகிவிட்ட்டார் .)

Edited by Kadancha

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, விசுகு said:

இவர்கள் போன்ற திடீர் வீக்க நபர்கள் மீது எந்த நம்பிக்கையும் இல்லை. Lyca, Lebara உட்பட.

உங்கள் உழைப்புக்கு மீறி ஊதியம் பெறுபவர்களும் மறைமுகமாக இன்னொருவர் உழைப்பை சுரண்டுபவர்கள்தான்.

ஐந்து நூறு டாலருக்கு ஒருவன் அடியாளாக சென்று ஒருவனை அடிப்பதும்

ஒரு மருத்துவ கொம்பனி விற்பனைக்காக ஒரு மருத்துவருக்கு கொமிசன் கொடுத்து அதை பெறும் மருத்துவருக்கும் பெரிதாக வித்தியாசம் இல்லை.

அடிப்படியில் தொழில் ஒன்றுதான் கவர்ச்சிகரமான ஆடைகளால் அது மறைக்க படுகிறது.

BP ( British Petrolium) செய்யாத ஊழலையா மேலே இருக்கும் இருவரும் செய்து விடடார்கள்?

இப்போதும் இல்லை எப்போதும் BP கொடி கட்டி பறக்கும் காரணம் சடடத்தை எழுதுபவர்களே அவர்க்ளின் அடியாட்கள்தான்.

இங்கு சடடபடி என்று எதுவுமே இல்லை .......

இன்னொரு மனிதனை பிடித்து அடிமையாக வைத்திருக்கலாம் என்பது நான் வாழும் அமெரிக்க நாட்டில் சட்டமாக இருந்த்தது.

மற்ற நாடுகளுக்கு சென்று அங்கு வசிப்பவர்களை கொன்று பொருட்டுகளை கொள்ளையடித்து வருவது நீங்கள் வாழும் நாட்டில் அரச கடமையாக இருந்தது.

உங்கள் வளர்ச்சி கொஞ்சம் கண்ணை குத்தும்படியாக இருந்தால் .... நீங்கள் குற்றவாளி. மற்ற எல்லோரும் சுத்தவாளி

இங்கு நாளும் நாளும் பல நூறு கம்பெனிகள் திவால் ஆகிறது .... அவை அனைத்திலும் பண மோசடி இருக்கிறது. இன்னமும் சொல்லப்போனால் திவால் ஆக்குவதற்கு என்றே நாளும் நாளும் 1௦௦ கம்பெனிகள் வியாபார நிறுவனங்கள் நிறுவ படுகிறது. சட்ட்தில் உள்ள ஓடடைகளும் திமிங்கலங்கள் தமக்காக எழுதிய சட்ட்ங்களும் அதற்கு துணை போகிறது.

எதுக்கும் வக்கில்லாதவர்கள் திண்ணையில் அமர்ந்து நீதிமான் போல பஞ்சாயத்து செய்யவேண்டியதுதான்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சிலருக்கு சுட்டு விட்டது.

அஞ்ஞாதவாசம் கலைக்கும் அளவுக்கு சுட்டு விட்டது.

“அண்டங்காக்காயை சொன்னா, சாதா காக்காயுக்கு கோவத்தை பாரேன்”

-அமரர் விவேக்-

பிகு

இதே ஆட்கள்தான்.

சிறுவர் துஸ்பிரயோகத்தை, ஜெப்ரி இஸ்டீன் செய்யவில்லையா? இளவரசர் அண்டுரூ செய்யவில்லையா ஒரு அப்பாவி தமிழ் பையன் செய்தால் தப்பா என எழுத கூடிய பிரகிருதிகள்.

தாம் கறுப்பாடுகளாய் இருந்து வயிறு வளர்ப்பது மட்டும் இன்றி, அதில் தப்பில்லை என சமூகத்தையே கறுப்பாடுகளாகும் படி வேதம் ஓதும் சாத்தான்கள்.

நல்வழி சொல்பவர்களுக்கு இவர்கள் வைக்கும் பெயர் வக்கில்லாதவர்கள்.

மொள்ளமாரித்தனம் பண்ணி வயிறு வளர்ப்பதற்கு, திண்ணை பேச்சு வீரராய் வாழ்ந்து விட்டு போகலாம்.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, goshan_che said:

ஓம்…அப்போதே இந்த கட்டுரையை பகிர்ந்த்தேன்.

ஆனால் அப்போ சில திரிகளில்….எப்படி எண்டாலும் உழைத்தால் போதும்…

உலகில் களவு செய்யாதவன் யார்…

அப்படி இருந்தால் அவன் பிழைக்க தெரியாதவன்….

என்ற ரீதியில் கருத்துக்கள் பதியபட்டு கொண்டிருந்ததல்லவா….

அதில் ஒன்றில்தான் இந்த தம்பதிகள் உதாரண புருசர்களாகினர்.

லைக்காவையும் தலையில் தூக்கி வைத்து ஆடினார்கள். அவர்கள் ஆரம்பம் பற்றி எழுதி - அதற்கும் வாங்கி கட்டிக்கொண்டேன் 🤣.

நான் lyca, Lebara என்பதை குறிப்பிட்டதற்கு காரணம் அவர்கள் எனக்கு பக்கத்தில் இருந்து வீங்கியவர்கள் என்பதால் மட்டுமே.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Maruthankerny said:

உங்கள் உழைப்புக்கு மீறி ஊதியம் பெறுபவர்களும் மறைமுகமாக இன்னொருவர் உழைப்பை சுரண்டுபவர்கள்தான்.

ஐந்து நூறு டாலருக்கு ஒருவன் அடியாளாக சென்று ஒருவனை அடிப்பதும்

ஒரு மருத்துவ கொம்பனி விற்பனைக்காக ஒரு மருத்துவருக்கு கொமிசன் கொடுத்து அதை பெறும் மருத்துவருக்கும் பெரிதாக வித்தியாசம் இல்லை.

அடிப்படியில் தொழில் ஒன்றுதான் கவர்ச்சிகரமான ஆடைகளால் அது மறைக்க படுகிறது.

BP ( British Petrolium) செய்யாத ஊழலையா மேலே இருக்கும் இருவரும் செய்து விடடார்கள்?

இப்போதும் இல்லை எப்போதும் BP கொடி கட்டி பறக்கும் காரணம் சடடத்தை எழுதுபவர்களே அவர்க்ளின் அடியாட்கள்தான்.

இங்கு சடடபடி என்று எதுவுமே இல்லை .......

இன்னொரு மனிதனை பிடித்து அடிமையாக வைத்திருக்கலாம் என்பது நான் வாழும் அமெரிக்க நாட்டில் சட்டமாக இருந்த்தது.

மற்ற நாடுகளுக்கு சென்று அங்கு வசிப்பவர்களை கொன்று பொருட்டுகளை கொள்ளையடித்து வருவது நீங்கள் வாழும் நாட்டில் அரச கடமையாக இருந்தது.

உங்கள் வளர்ச்சி கொஞ்சம் கண்ணை குத்தும்படியாக இருந்தால் .... நீங்கள் குற்றவாளி. மற்ற எல்லோரும் சுத்தவாளி

இங்கு நாளும் நாளும் பல நூறு கம்பெனிகள் திவால் ஆகிறது .... அவை அனைத்திலும் பண மோசடி இருக்கிறது. இன்னமும் சொல்லப்போனால் திவால் ஆக்குவதற்கு என்றே நாளும் நாளும் 1௦௦ கம்பெனிகள் வியாபார நிறுவனங்கள் நிறுவ படுகிறது. சட்ட்தில் உள்ள ஓடடைகளும் திமிங்கலங்கள் தமக்காக எழுதிய சட்ட்ங்களும் அதற்கு துணை போகிறது.

எதுக்கும் வக்கில்லாதவர்கள் திண்ணையில் அமர்ந்து நீதிமான் போல பஞ்சாயத்து செய்யவேண்டியதுதான்.

இப்ப என்ன சொல்ல வாறீங்கள்😂?

ஒரு உதாரணத்திற்கு, "அமெரிக்காவில் அடிமைகளை வைத்திருப்பது சட்டமாக இருந்தது" ஓம் இருந்தது. 1860 இல் அது சட்ட விரோதமாகி விட்டது, ஆனாலும் 1920 வரை ஏதோ ஒரு விதத்தில் நடைமுறையில் இருந்தது. காரணம் என்ன? உங்களைப் போல "எல்லோரும் செய்தால் அது நோர்மல், நான் ஏன் செய்யக் கூடாது?" என்ற "புத்திசாலித்தனமான பேர்வழிகள்" இருந்தது தான் காரணம்.

இது போன்ற கள்ள வேலைகள், முடிச்சவிக்கி வேலைகளைச் செய்யாமல் இருப்போர் வக்கில்லாமல், வாய்ப்பில்லாமல் செய்யாமல் விடுவதில்லை. அவர்களுக்குள் இருக்கும் அறத்திசை காட்டி செய்யாமல் தடுத்து விடுகிறது. இப்படியாக உள்ளக அறம் உடைய மக்கள் அதிகமாக இருக்கும் நாடுகள் ஊழல் குறைந்த நாடுகளாக இருக்கின்றன. அப்படியில்லாமல் உங்களைப் போல "அறமாவது மண்ணாங்கட்டியாவது" என்போர் அதிகமாக வாழும் நாடுகள் ஊழலில் தேங்கிப் போய் முன்னேற இயலாமல் தவிக்கின்றன.

  • கருத்துக்கள உறவுகள்

கஸ்ரப்பட்டு ஓவர்ரைம் அடித்து உழைத்த காசே நிலைக்குதில்லை.மோசடி செய்த காசு எப்படி நிலைக்கும். கொஞ்சகாலம் .ஆடாத ஆட்டம் ஆடுவார்கள். ஒருநாள் அடங்கிவிடுவார்கள்.பெரிய பெரியகார் எடுத்து பகட்டாக ஓடித்திரிவார்கள். ஆனால் வங்கியில் மாதம் மாதம் பெரிய தொகை சம்பளத்தில் இருந்து போகும். புதுக்கார் கொஞ்சம் உரஞ்சுப்பட்டாலே அவ்வளவுதான் அதன் மதிப்பு குறைந்து விடும்.

அதை விட சில வேளைகளில் விபத்து நடந்து காரைக்கைவிடும்நிலை வந்தால் கொம்பனிக்கு முழுக்காசும்கட்டத்தான் வேண்டும்.காப்புறுதி செய்தாலும் அதுக்குக்கட்டும்காசும் அதிகம் அதைவி ஓரளவு பழைய காரை குறைந்த விலையில் முழுப்பணத்தையும் செலுத்தி வாங்கினால் சின்ன உராய்வுகள் வந்தாலும் வைச்சு ஓடலாம் கவலையும்படத்தேவையில்லை.போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
26 minutes ago, விசுகு said:

நான் lyca, Lebara என்பதை குறிப்பிட்டதற்கு காரணம் அவர்கள் எனக்கு பக்கத்தில் இருந்து வீங்கியவர்கள் என்பதால் மட்டுமே.

ஓ…அப்போ சிறு தூள், மன்னிக்கவும் துகள் பெரு வெள்ளம் ஆகியது என்பது உங்களுக்கும் தெரிந்திருக்கும்🤣.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
2 hours ago, Maruthankerny said:

இங்கு சடடபடி என்று எதுவுமே இல்லை .......

நூறு வீதம் உண்மை.

என்னதான் சகல வழிகளிலும் முன்னேறி இருந்தாலும் பக்காவாக சட்டங்களுக்கு எதிரான நடவடிக்கைகளை செவ்வனே திறம்பட செய்பவர்கள்.

மேற்குலக நாடுகளில் உள்ள அரசியல்வாதிகள் உட்பட பெரிய முதலாளிகள் உட்பட எவ்வளவு சுத்துமாத்து வேலைகளில் ஈடுபட்டு சிக்கி தவிக்கின்றார்கள் என்பது உலகறிந்த விடயம்.

உதாரண அரசியல்வாதிகளையும்,பிரமுகர்களையும் இங்கு குறிப்பட நான் விரும்பவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, goshan_che said:

ஓ…அப்போ சிறு தூள், மன்னிக்கவும் துகள் பெரு வெள்ளம் ஆகியது என்பது உங்களுக்கும் தெரிந்திருக்கும்🤣.

ஓ இரண்டுமே கோலமாவு குமார்களா...? இதில் Lebara ஆள் நமக்கு கொஞ்சம் தூரத்து உறவு. இவருடன் ஒருடலும் ஈருயிருமாய் இருந்த இன்னும் ஒரு உறவு கொஞ்ச காலமாக இலங்கையில் அதிகமாக உலாத்துகிறார். கேள்விப்பட்ட வரை கடும் கடனால் அங்கே வீட்டை விட்டு வெளிய வருவதில்லையாம். மெதுவாக மனிசியுடன் இலங்கையில் நிரந்தரமாக டேரா போடப்போகிறார்களாம்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, அக்னியஷ்த்ரா said:

6 hours ago, அக்னியஷ்த்ரா said:

ஓ இரண்டுமே கோலமாவு குமார்களா...?

கோகிலா விடயம்தான் லிபாராவின் ஆரம்பமுமா என்பது உண்மையில் எனக்கு தெரியாது.

லைக்காவில் வேலை பார்த்த ஆட்கள், சம்பளத்துக்கு வேலை செய்யாமல், தாமே தொடங்கிய வியாபாரம் என ஒரு நம்பகூடிய கதையையாவது backstory யையாவது செட் பண்ணி வைத்துள்ளார்கள்.

ஆனால் லைக்காவின் கதை படையப்பாவில் ரஜனி மலையை பிக்கானால் உடைத்து வித்து பணக்காரன் ஆனது போல் இருக்கும்🤣.

பரிசில் போய் கேட்டால் வேற மாதிரி சொல்வார்கள்.

யூகேயில் இப்படி ஒரு ஐந்து வருடத்தில் சிங்கிள் டீக்கு சிங்கி- அடித்து விட்டு, தீடீரென ஜாவா சுந்தரேசன் ஆகி லம்போவில் வருவோர், தமிழர்கள் மத்தியில் அதிகம்.

கேட்டால் அவர்கள் சொல்லும் கதை விட்டலாச்சார்யா படம் போல இருக்கும்🤣.

11 hours ago, குமாரசாமி said:

உதாரண அரசியல்வாதிகளையும்,பிரமுகர்களையும் இங்கு குறிப்பட நான் விரும்பவில்லை.

ஏன்?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, Justin said:

அப்படியில்லாமல் உங்களைப் போல "அறமாவது மண்ணாங்கட்டியாவது" என்போர் அதிகமாக வாழும் நாடுகள் ஊழலில் தேங்கிப் போய் முன்னேற இயலாமல் தவிக்கின்றன.

இப்படி சொந்த நாடுகளை நாசமறுத்துப்போட்டு, அடைக்கலம் தந்த நாடுகளுக்கும் வந்து இங்கேயும் ஊத்த வேலை செய்வது - ஒட்டுமொத்தமாக இப்போ உள்ளூர்வாசிகள் கலக குரல் எழுப்ப காரணங்களில் ஒன்றாகிறது.

கேட்டால் வெள்ளைகாரன் மட்டும் சுத்தமா என ஒரு கேள்வி.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, goshan_che said:

ஏன்?

என் நெஞ்சில் குடியிருக்கும் நீங்கள் கேட்பதனால் சொல்கிறேன். இனியும் இருட்டடி வாங்கும் தென்பு உடலில் இல்லை.😂

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, Maruthankerny said:

உங்கள் உழைப்புக்கு மீறி ஊதியம் பெறுபவர்களும் மறைமுகமாக இன்னொருவர் உழைப்பை சுரண்டுபவர்கள்தான்.

ஐந்து நூறு டாலருக்கு ஒருவன் அடியாளாக சென்று ஒருவனை அடிப்பதும்

ஒரு மருத்துவ கொம்பனி விற்பனைக்காக ஒரு மருத்துவருக்கு கொமிசன் கொடுத்து அதை பெறும் மருத்துவருக்கும் பெரிதாக வித்தியாசம் இல்லை.

அடிப்படியில் தொழில் ஒன்றுதான் கவர்ச்சிகரமான ஆடைகளால் அது மறைக்க படுகிறது.

BP ( British Petrolium) செய்யாத ஊழலையா மேலே இருக்கும் இருவரும் செய்து விடடார்கள்?

இப்போதும் இல்லை எப்போதும் BP கொடி கட்டி பறக்கும் காரணம் சடடத்தை எழுதுபவர்களே அவர்க்ளின் அடியாட்கள்தான்.

இங்கு சடடபடி என்று எதுவுமே இல்லை .......

இன்னொரு மனிதனை பிடித்து அடிமையாக வைத்திருக்கலாம் என்பது நான் வாழும் அமெரிக்க நாட்டில் சட்டமாக இருந்த்தது.

மற்ற நாடுகளுக்கு சென்று அங்கு வசிப்பவர்களை கொன்று பொருட்டுகளை கொள்ளையடித்து வருவது நீங்கள் வாழும் நாட்டில் அரச கடமையாக இருந்தது.

உங்கள் வளர்ச்சி கொஞ்சம் கண்ணை குத்தும்படியாக இருந்தால் .... நீங்கள் குற்றவாளி. மற்ற எல்லோரும் சுத்தவாளி

இங்கு நாளும் நாளும் பல நூறு கம்பெனிகள் திவால் ஆகிறது .... அவை அனைத்திலும் பண மோசடி இருக்கிறது. இன்னமும் சொல்லப்போனால் திவால் ஆக்குவதற்கு என்றே நாளும் நாளும் 1௦௦ கம்பெனிகள் வியாபார நிறுவனங்கள் நிறுவ படுகிறது. சட்ட்தில் உள்ள ஓடடைகளும் திமிங்கலங்கள் தமக்காக எழுதிய சட்ட்ங்களும் அதற்கு துணை போகிறது.

எதுக்கும் வக்கில்லாதவர்கள் திண்ணையில் அமர்ந்து நீதிமான் போல பஞ்சாயத்து செய்யவேண்டியதுதான்.

வியாபாரம் என்று வந்து விட்டால் எதையும் செய்யலாம் என்று சிலர் முயல்கிறார்கள். அதிஷ்டவசமாக அவர்கள் தான் வெல்கிறார்கள். அநியாயமாக அவர்கள் தான் இவ்வுலகை ஆள்கிறார்கள். இதில் தமிழர்களும் இருந்து விட்டு போகட்டுமே. அவர்களையும் நம் பாதைக்கு கல் போட பயன்படுத்தலாம் என்பது தான் சரியாக இருந்தது. இப்பொழுதும் இருக்கிறது.

ஆனால் கொஞ்சம் தள்ளி வைத்துக் கொள்ள வேண்டும். எப்பொழுதும் வீக்கம் வெடித்து சிதறலாம்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, குமாரசாமி said:

என் நெஞ்சில் குடியிருக்கும் நீங்கள் கேட்பதனால் சொல்கிறேன். இனியும் இருட்டடி வாங்கும் தென்பு உடலில் இல்லை.😂

நான் இருக்க பயமேன்🤣

பிகு

குசா அண்ணை மைன்ட் வாயய்ஸ்: நீங்க இருப்பீங்க….🤣

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, குமாரசாமி said:

என் நெஞ்சில் குடியிருக்கும் நீங்கள் கேட்பதனால் சொல்கிறேன். இனியும் இருட்டடி வாங்கும் தென்பு உடலில் இல்லை.😂

முதலில் யாரைச்சொல்லி நைட்டி வாங்கினீர்கள், அது வரவு செலவு முடிந்த கணக்கு இல்லையா ......அதை சொல்லலாம்தானே ........! 😂

  • கருத்துக்கள உறவுகள்
22 hours ago, புலவர் said:

போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து.

போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து சிறந்த அறிவுரை பழமொழி. செய்தியில் உள்ள மோசடிக்கார தம்பதியினர் போல் அல்லாத நல்ல மக்கள் தங்களுக்கு கிடைக்கின்ற சட்டபூர்வமான முறைபடி வருமானத்தில் புத்தம் புதிய கார் வாங்கி தாராளமாக ஓடலாம். தன்னால் முடிகின்ற பல ஆயிரம் டொலர்களுக்கு புத்தம் புதிய கார் ஒன்று வாங்குவது ஒன்றும் பிரச்சனைக்கு உரியது இல்லை.

தங்கள் சக்திக்கு மீறி பேராசையால் நடிகர் விஐயின் வீடு மாதிரி வீடு வாங்க வேண்டும் என்று பழைய வீட்டை சில மில்லியன் டொலர்களுக்கு வாங்கியே பிரச்சனைபடுகின்றனர்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
8 hours ago, suvy said:

முதலில் யாரைச்சொல்லி நைட்டி வாங்கினீர்கள், அது வரவு செலவு முடிந்த கணக்கு இல்லையா ......அதை சொல்லலாம்தானே ........! 😂

அதை என்னெண்டு என்ரை வாயால சொல்லுவன்....ஒன்றா இரண்டா எழுதி வைத்து சொல்வதற்கு....😂

one-character-actor-one-favorite-role-da

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.